ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சக்கரக்கோட்டம் | கலிங்கத்துப் பரணியில் காட்டப்படும் ஊர். விருதராச பயங்கரன் முன்னோர் நாள் வென்ற சக்கரக் கோட்டத்திடை – கலிங் -147 எனினும் ஊர்ப்பெயர் விளக்கம் தெரியவில்லை. |
சக்கரப்பள்ளி | தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த ஊர். தற்போதைய ஊர்ப் பெயர் ஐயம்பேட்டை, சம்பந்தர் பாடல் பெற்ற தலம் (பதி -285). |
சக்கரப்பள்ளி(இது தஞ்சாவூர் ஐயம்பேட்டை) | தேவாரத் திருத்தலங்கள் |
சங்ககாலம் | சங்க கால ஊர்கள் |
சங்கமங்கை | சேக்கிழார் பாடலில் இடம்பெறும் தலம். சாக்கிய நாயனார் புராணத்தில், |
சண்டியூர் | சேக்கிழாரின் பெரிய புராணம் காட்டும் ஒரு ஊர். கழறிற்றறி வார் புராணத்தில் அமைகிறது. |
சண்பை | ஒருவகை கோரைப் புல்லைக்குறிக்கும் சொல் சண்பை என்பது. அப்புல் நிரைந்த பகுதியில் அமைந்த நகர் சண்பை எனப் பெயர் பெற்றது போலும். சண்பை நகர் அங்க நாட்டிலுள்ள பெரிய நகரம் மிக்க வளமுள்ளது. விசயவரன் என்பவனால் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நகரில் மித்திரகாமன் என்னும் வணிகர் பெருமான் வீட்டில் யூகி, வாசவதத்தை, காஞ்சன மாலை சரங்கியத்தாய் ஆகிய நால்வரும் வேற்று வடிவங்கொண்டு தங்கியிருந்தனர். |
சத்திமுற்றம் | தேவாரத் திருத்தலங்கள் |
சம்புத்தீவு | நாவல் எனப் பொருள்படுவது சம்பு என்னும் சொல். தாவரத்தால் பெற்ற பெயர் சம்புத்தீவு (சம்பங் கோரை என்ற புல்வகையும் சம்பு எனப்படும்) நாவலந்தீவையே சம்புத்தீவு என்றனர். தமிழகம் அதில் ஒரு பிரிவு, சம்புத் தீவை நான்கு பெரிய தீவுகளில் ஒன்று என்பர். |
சயந்தி | சிற்றகத்தி என்னும் செடிவகையைக் குறிக்கும் சயந்தி என்னும் சொல் அவ்வகைச் செடிகள் அமைந்த பகுதியில் அமைந்த ஊருக்குப் பெயராய் அமைந்தது போலும். சயந்தி உதயணனுடைய ஆட்சிக்குட்பட்டதொரு பெரிய நகரம். இதனை உருமணணுவா பாதுகாத்து வந்தனன். உதயணனுக்கும் வாசவதத்தைக்கும் இந்நகரத்திலேதான் விவாகம் நடந்தது. மருதநில வளத்தால் சிறந்தது. இதன் பக்கத்தே அழகிய மலை யொன்றுண்டு. இதுவும் வேறுசில இடங்களும் உருமண்ணுவாவுக்கு உதயணனால் சீவிதமாக அளிக்கப்பெற்றன. |
சாத்தங்குடி | சாத்தங்குடி என்ற ஊர். திருநாவுக்கரசர் தேவாரம் சுட்டும் ஊர். சேக்கிழாரும் குறிப்பிடுகின்றார். |
சாத்தமங்கை | திருச்சீயாத்த மங்கை என்று மக்களால் வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. |
சாத்தமங்கை | தேவாரத் திருத்தலங்கள் |
சாந்தம்புத்தூர் | திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சுட்டும் ஊர்ப்பெயர் இது. |
சாய்க்காடு | சங்க கால ஊர்கள் |
சாய்க்காடு | தேவாரத் திருத்தலங்கள் |
சாய்க்கானம் | சங்க கால ஊர்கள் |
சாலியூர் (நெல்லின் ஊர்) | தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்” நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ’ என்று சங்க இலக்கியத்தில் கூறப்பெற்றுள்ளான். இதற்குப் பொருள் எழுதிய நச்சினார்க்கனி௰ர் “நெல்லின் பெயரை”ப் பெற்ற சாலி யூரை௫* கொண்ட உயர்ந்த வெற்றியையுடையவன்” என்று கூறினார். மேலும் அவரே “நெல்லின் என்பதிலுள்ள இன்னை அசையாக்கி ‘நெல்லூர்’ என்பாரும் உளர் என்றார். நெல்லூர் அல்லது சாலியூர் என்று சங்க இலக்கியத்தில் கூறப் பெற்ற இன்றைய ஆந்திர நாட்டைச் சேர்ந்த நெல்லூர்தான் என்பதில் ஐயமில்லை. ஆந்திர நாட்டு அப்பகுதி வரை அன்றைய தொண்டைமண்டலம் அதாவது தமிழகம் பரவி இருந்தது என்று கருதவேண்டும் தமிழகத்தின் எல்லை அவ்வூர் வரை விரிவடைநீ இருந்தது என்பதையும் சிறப்புற்றிருந்தது என்பதையும் சங்க இலக்கியத்தின் மூலம் உணரமுடிகிறது. சங்க காலத்தில் அவ்வூரின் பெயர் சாலியூர் என வழங்கியதா அல்லது நெல்லூர் என வழங்கியதா என்பதும் ஆய்வுக்குரியதே. சாலி என்பது ஒருவகை நெல்லின் பெயர்: என்பதை “சாலி நெல்லின்” என்ற சங்க இலக்கியத்தொடர் மூலம் உணர முடிகிறது. ஆகவே “நெல்லின் ஊர்“ என்ற தொடர் சாலியூர் என்ற பெயரையே குறிப்பதாகக் கொள்ளுவதில் தவாறொன்றுமில்லை. அப்பெயரே அவ்வூர் தமிழர் ஆட்சியில் இருந்த காலத்திலேயே “நெல்லின் ஊர்” போன்ற புலவர் குறிப்புகளால் நெல்லூர் என்றே திரிந்து வழங்கியிருக்கலாம் என எண்ணுவதிலும் தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு திரிந்து வழங்கிய பெயர் இன்றளவும் வழக்கில் நிலைத்து விட்டிருக்கலாம். |
சாவகநாடு | சாவகம் என்பது ஜாவா என்பதாகும். யவனத் தீவு என்றும் கூறப் பெறுவது. ஆபுத்திரனிடம் சாவக நாட்டிலே மழையில்லை. மக்கள் பசியால் வாடுகின்றனர் என்று மரக்கலத்தில் வந்தவர் கூற ஆபுத்திரன் அந்நாட்டிற்கு கப்பலில் சென்றான் என்று மணிமேகலை கூறுவதால் கப்பலில் சென்று சேர வேண்டிய ஒருநாடு சாவகநாடு எனத் தெரிகிறது. வழியில் மணிபல்லவத்தில் கப்பல் தங்கிய செய்தியும் கூறப்படுவதால் மணிபல்லவத்தைக் கடந்தே சாவக நாட்டிற்குச் செல்ல வேண்டும் எளவும் தெரிகிறது. |
சிக்கற்பள்ளி | சங்க கால ஊர்கள் |
சிக்கற்பள்ளி | சேரமான் செல்வக் கடுங்கோவாழியாதன் சிக்கற்பள்ளியில் துஞ்சியதாகத் தெரிகிறது. சேரமான் சிக்கற்பள்ளி துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன்மீது குண்டுகட் பாலியாதன் என்ற புலவர் பாடிய சங்க இலக்கியப் பாடல் (புறம் 387) ஒன்று உள்ளது. இவ்வூரைப் பற்றிய பிற செய்திகள் ஒன்றும் அறிய முடியவில்லை. |
சிக்கல் | இன்றும் சிக்கல் எனச் சுட்டப்படும் பெயர் சம்பந்தர் பாடல் பெற்றது. வசிட்டர் காமதேனுவின் வெண்ணையினால் சிவ லிங்கம் அமைத்து வழிபட்டார். பூசை முடிவில் அதை எடுக்க முயன்றபோது முடியாமல் சிக்கிக் கொண்டமையால் சிக்கல் எனப் பெயர் பெற்றது என்ற எண்ணம் இவ்வூர்ப் பெயர் பற்றி அமைகின்றது. ஞானசம்பந்தர் இத்தலத்தின் மிகுந்த செழுப்பினைப் பாடுகின்றார். |
சிக்கல் | தேவாரத் திருத்தலங்கள் |
சிங்கபுரம் | பார்க்க அரிபுரம் |
சித்திபுரம் | சித்தி என்றால் ஒரு வகை மரம் அல்லது கொடி போன்ற தாவரத்தைக் குறிக்கும் பெயராகும். ஆகவே சித்திபுரம் என்பது தாவரத்தால் பெற்ற பெயர் எனக் கொள்ளலாம். மணிமேகலை பழம்பிறப்பில் இலக்குமி என்னும் பெயருடை யவள், இராகுலன் என்பவன் அவள் கணவன். அவன் சித்தி புரத்தை ஆண்ட சீதரன் என்ற மன்னனுடைய மகளாகிய நீலபதியின் வயிற்றில் பிறந்தவள் என்பது மணிமேகலை கூறும் செய்தி. |
சித்திரமாடம் | சங்க கால ஊர்கள் |
சித்திரமாடம் | பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனாரால் பாடப்பெற்றான் (புறம். 59) என்ற செய்தியால் நாம் அறியும் பெயர் சத்திர மாடம் என்பது. பெரும்பாலும் ஊர்ப் பெயராகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ண முடிகிறது. ஆயினும் அரண்மனையின் மேல்மாடம் எனக்கூறுவதே பொருத்தமுடையதாகத் தெரிகிறது. |
சிராப்பள்ளி | சங்க காலத்தில் உறையூர் மிகப் புகழ்பெற்றிருந்த நிலையைக் காண்கின்றோம், இடையில் சிராப்பள்ளிக் கோயில் நிலையில் புகழ்பெற, இன்று உறந்தை புகழ் மறைந்து திருச்சிராப்பள்ளி மிகுந்த புகழுடன் அமையும் நிலை அமைகிறது. உறைவதற்கு ஏற்ற இடம் என்ற நிலையில் காவிரிக்கரையில் மிக்க புகழுடன் இருந்த நிலையைச் சங்க இலக்கியம் காட்டும், அரசியல் நிலையிலும், மன்னர் வாழ்விடமாக இது அமைந்தது. 1. சிராப்பள்ளி என்ற பெயர் இன்று திருச்சிராப்பள்ளி என்றுவழங்கினாலும் திருச்சி என்ற குறுக்கமே பெரும்வழக்காக அமைகிறது. பள்ளி பொதுவாக வாழ்விடம் குறித்து அமையி னும், இப்பெயரோடு தொடர்புடை வரலாறுகளைக் காண சமணர் தொடர்புடையதாகவே து அமைந்திருக்கலாம் எனத் துணியலாம். மூன்று தலைகளைப் பெற்று இருந்த அசுரன் வழிபட்டமை யால் திருச்சிராப்பள்ளி என்று பெயர் பெற்றது என்பர். போன்ற பலஎண்ணங்கள் இது குறித்து வழங்கின எனினும், இவ்வூர் பற்றிய தோற்றம் நோக்க தெளிவு கிடைக்கின்றது. முதலில் பழமை நிலையில் காணலாம். சிராப்பள்ளி என்ற பெயர் பண்டு இல்லை. உறந்தை என்ற பெயரே முதலில் இருந்தது. உறந்தையைச் சார்ந்த இன்று அமையும் மலைப் பகுதியைக் குறிக்கும் அக நானூற்றுப் பாடல், கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது நெடும் பெரும் குன்றத்து என இக்குன்றம் பற்றி இயம்பு எனவே இப்பெயரின்மை உறுதிப்படுகின்றது. கின்றது. சிராப்பள்ளியைப் பற்றிய ஆய்வு செய்யும் தி. வை. சதாசிவப் பண்டாரத்தார். இவ்வூர்ப் பின்னணியை நன்கு ஆய்கின்றார். இவ்வாய்வில் இவர், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குன்றின் மேல் சில சமண முனிவர்கள் தங்கித் தவம் புரிந்துக் கொண்டிருந்தனர் என்பது நன்கு தெரியப்படும். அவர்களுள் சிரா என்ற முனிவர் ஒருவர் இருந்தமை அங்குள்ள கல்வெட்டுகளால் அறியப்படுகிறது அம்முனிவர் அத்தவப்பள்ளியின் தலைவராயிருந்தமை பற்றி அது சிராப்பள்ளி என்று முதலில் வழங்கத் தொடங்கி, அவர் காலத் திற்குப் பின்னரும் அப்பெயரோடு நின்று நிலவுவதாயிற்று என சுட்டிச் செல்வது இப்பெயரைப்பற்றிய தெளிவைத் தருமாறு அமைகிறது. மகேந்திரவர்மன் சிராப்பள்ளி பெருங்குன்றைக் குடைந்து அங்கே சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைத்தவன் என்பது ஆராய்ச்சியில் பெறப்படுகிறது என்றும் இவர் குறிப்பிடுகின்றார். சிராப்பள்ளி கோயிலைப் பாடியவர்கள் சம்பந்தர், அப்பர், சென்றடையாத திருவுடையானைச் சிராப் பள்ளி குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிருமே (98-1) என்கிறார் சம்பந்தர். |
சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி | தேவாரத் திருத்தலங்கள் |
சிரீவரமங்கை | இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. நாங்குநேரி, வானமாமலை என்று பிற பெயர்கள் இருப்பினும், நாங்குநேரியே செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது. திருமால் கோயில் கொண்ட நிலையில் ஸ்ரீ என்ற அடையுடன் கொண்ட மங்கலம் என்ற பெயர் பின்னர் சிரீவரமங்கை ஆகியிருக்கலாம் எனத் தோன்று மலை, ஏரி பிற இரண்டின் காரணங்களாக அமையலாமெனத் தோன்றுகிறது. நம்மாழ்வார் இத்தலத்திலுள்ள திருமாலைப் புகழ்கின்றார். |
சிறுகுடி | சங்க கால ஊர்கள் |
சிறுகுடி | தேவாரத் திருத்தலங்கள் |
சிறுகுடி | தஞ்சை மாவட்டத்தில் பேரளத்துக்கு அருகே சிறுகுடி என்ற பெயருடன் ஓர் ஊர் உள்ளது. மதுரை மாவட்டத்தில் நத்தத்துக்கு அருகேயும் இப்பெயருடன் ஓர் ஊர் உள்ளது. குடி என்னும் சொல் ஊர்ப் பெயர்களில் அமைந்து குடியிருப்பை உணர்த்துவதாகும். உறவு முறையையுடைய பல குடும்பத்தார் ஒரு குடியினராகக் கருதப்படுவர். இத்தகைய குடியினர் சேர்ந்து வாழும் இடம் குடியிருப்பு என்றும், குடி என்றும் சொல்லப்படும். அத்தகைய குடியிருப்புகள் பரப்பின் சிறுமையால் சிறுகுடி எனப் பெயர் பெற்றிருக்கலாம். (சென்னையை அடுத்துள்ள பெருங்குடி என்னும் ஊர்ப் பெயா் ஒப்பு நோக்கத்தக்கது) குறிஞ்சி நிலத்து ஊர் சிறுகுடி எனப் பெயர் பெறும். கடற்கரை ஊரும் அப்பெயர் பெறுகின்றது. இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஊரைக் குறிப்பன அல்ல. பண்ணன் என்ற வள்ளலுக்குரியது சிறுகுடி என்று சங்க இலக்கியம் கூறுகிறது, ஆகவ சிறுகுடி கிழான் பண்ணன் என்னும் பெயர் பெற்றான். |
சிறுகுடி | தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து இன்றும் இப்பெயரிலேயே அமைகிறது. சிறுகுடி என்பது சிறிய குடியிருப்புப் பகுதியைக் குறித்து அமைகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலமுடையது. |
சிறுபுலியூர் | தஞ்சை மாவட்டத்தில் சிறுபுலியூர் என்றே இன்றும் சுட்டப் படும் இடம் இது. மாயூரம் ரயில் நிலையத்திலிருந்து எட்டு மைல் தொலைவில் உள்ள இடம். இடப்பெயர் சிறுபுலியூர் என அமைய, திருமால் கோயில் பெயர் சலசயனம் எனச் சுட்டப் பெறுகிறது. எம் பெருமான் புலிக்கால் முனிவருக்கு, பாலசயனமாய்ச் சேவை சாதித்த தலமாதல் பற்றி இவ்வூர் சிறுபுலியூர் என வழங்கப் பெற்றதாகக் கூறுவர்.. இதன் சிறப்பை ஆழ்வார் பாடல்கள் சிறப்பாக இயம்புகின்றன. |
சிறைக்குடி | சங்க கால ஊர்கள் |
சிறைக்குடி | நற்றிணையில் 16 ஆம் பாட,லையும் குறுந்தொகையில் 56,57,,132,168,222,273,300 ஆகிய பாடல்களையும் பாடிய ஆந்தையார் என்ற சங்ககாலப் புலவர் சிறைக்குடி என்னும் ஊரினர். ஆகவே சிறைக்குடி ஆந்தையார் எனப் பெற்றார். |
சிற்றேமம் | சிற்றாய்மூர், சிற்றாம்பூர், எழிலூர், நேமம் எனப் பவாறாக வழங்கப்படுகின்ற இவ்வூர் தஞ்சை மாவட்டம் சார்ந்தது என்பர். ஆயின் தம் ஆராய்ச்சித் தொகுதியில் மு.இராகவையங்கார் இக் கோயிலிலுள்ள சாசனங்கள் இதனைச் சிற்றாய்மூர் என்றேவழங்கு கின்ற காரணத்தால் தேவாரம் குறிக்கும் ஊர் இதுவன்று என்றும் இம்மாவட்டத்திலேயே உள்ள திருச்சிற்றம்பலம் என்ற தலமே சிற்றேமம் எனவும் சுட்டுகின்றார். எனினும் பெயர்க் காரண புரியவில்லை. சிறை வண்டியாழ் செய்பைம் பொழிற் பழனஞ் சூழ் சிற்றேமத் தான் 300-1 எனவும், படு வண்டியாழ் செய்பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத் தான் 300 – 3 எனவும் இதன் வளம் சுட்டுகின்றார் சம்பந்தர். |
சிவபுரம் | சிவபுரம் என்ற பெயரிலேயே இன்றும் சுட்டப்படும் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. திருமால் வராகமாய் உருக்கொண்டு இறைவனைப் பூசித்ததலம் இது. ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. சிவன் கோயில் காரணமாகச் சிவபுரம் எனப் பெயர் பெற்று இருக்கலாம். |
சிவபுரம் – சண்பகவனம் | தேவாரத் திருத்தலங்கள் |
சுழியல் | திருச்சுழி என்ற பெயரில் இன்று இராமநாதபுரம் மாவட்டத் தைச் சார்ந்து அமைகிறது இவ்வூர். சுந்தரர் பாடல் பெற்ற தலம். சேக்கிழாரும் இத்தலம் பற்றி பாடுகின்றார். |
சுழியல் | தேவாரத் திருத்தலங்கள் |
செங்கண்மா | சங்க கால ஊர்கள் |
செங்கண்மா | இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் “பெருங் கெளசிகனார் பல்குன்ற கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடிய மலைபடுகடாம்” என்ற தொடர் “செங்கண்மா” என்னும் ஊர் நன்னனுக்கு உரியது என அறிய முடிகிறது. கொண்கானத்து நன்னன்வேறு. செங்கண் மாவைத் தலை நகராகக் கொண்டு பல்குன்ற நாட்டை ஆண்ட நன்னன் வேறு. நன்னன் சேய் நன்னனின் தலைநகராகிய இச்செங்கண் மாநகர் தொண்டைநாட்டைச் சார்ந்தது. வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள சவ்வாது மலைத்தொடரே நன்னனின் ஆட்சியின் கீழ் இருந்த மலைநாடு. அம் மலையின் தெற்கில் “செங்கம்” என்னும் பெயருடன் இன்று விளங்கும் ஊரே நன்னன் காலத்தில் செங்கண்மா என்னும் பெயருடன் பெரிய நகரமாய் விளங்கியது. செங்கண்மா என்றால் சிவப்பான கண்ணையுடைய விலங்கு கரடி எனப்பொருள் காணப்பெறுகிறது. மலைநாட்டுப் பகுதியை சேர்ந்த இவ்வூர் சிவப்பான கண்ணையுடைய விலங்காகிய கரடியுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டு பெயா் பெற்றதோ என எண்ணத் தோன்றுகிறது. இக்கருத்தை வலியுறுத்த சான்று ஒன்றும் இல்லை. மேலும் நடைபெறும் ஆய்வில் இதற்கேற்ற சான்று ஏதாவது கிடைக்கலாம். |
செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் | சங்க கால ஊர்கள் |
செங்காட்டங்குடி | தேவாரத் திருத்தலங்கள் |
செங்காட்டங்குடி | இன்றும் இப்பெயராலேயே தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது இவ்வூர். இத்தலம் பற்றிய புராணக்கதை. கஜமுகா என்பவன் தேவர்களுக்கு இடுக்கண் செய்ய, அவனை ஒழித்துக்கட்ட சிவகுமாரனான விநாயகர் யானை முகத்துடன் அவதரித்து அவனைச் சம்ஹரித்திருக்கிறார். இந்த கஜாமுகா சுரனைச் சம்ஹரித்தபோது அவனது இரத்தம் செங்காடாய்ப் பெருகிய காரணத்தால் செங்காட்டங்குடி என்ற பெயர் நிலைத்திருக்கிறது. இந்தப் பழி நீங்க இத்தலத்தில் இறைவனைக் கணபதி வழிபட்ட காரணத்தால் சணபதீச்சுரம் என்ற பெயர் பெற்றிருக்கிறது என்றடைகிறது. இதனைக் கந்த புராணம், |
செங்குன்றூர் | மலைநாட்டுத் தலம் செங்குன்றூர். கொடிமாடச் செங்குன் றூர் போன்று நிறம் காரணமாகவும், குன்று காரணமாகவும் பெயர் பெற்ற தன்மை அமைகிறது. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற தலம் இது. திருமால் கோயில் சிற்றாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் சிறந்தும், செழித்தும் காணப்பட்டது என்பதனை, நம்மாழ்வார் பாடல் தருகின்றது. |
செங்குன்றூர் – திருக்கொடிமாடச் செங்குன்றூர்கொ | தேவாரத் திருத்தலங்கள் |
செங்கோடு(திருச்செங்கோடு) | தேவாரத் திருத்தலங்கள் |
செந்தில் | சங்க கால ஊர்கள் |
செம்பொன்பள்ளி | செம்பொன்னார் கோயில், செம்பொனார் கோயில் என்றும் சுட்டப்படும் இவ்வூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. அப்பர் சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் (ஞான 25, திருநா 29. 150), முதலில் கோயில் பெயராக அமைந்து, பின்னர் ஊர்ப் பெயராக மாறியிருக்கலாம். செம் பொன்னால் வேயப்பட்ட கோயில் என்ற பொருளில் இப்பெயர் அமையலாம். செம்பொன் பள்ளி என்று தேவாரம் சுட்டிய இவ்வூர்ப் பெயர், கல்வெட்டுகளில், செம்பொன்னார் கோயில், செம்பொன்னாதர் கோயில் எனச் சுட்டப்படும் நிலை, பள்ளியைக் கோயிலாக்கினரோ எண்ணத்தையும் அளிக்கிறது. காவிரியின் கரையில் இருக்கும் இத்தலத் திறையைச் சம்பந்தர், |
செம்பொன்பள்ளி- இக்காலச் செம்பொனார் கோயில் | தேவாரத் திருத்தலங்கள் |
செயற்கையமைப்பை ஒட்டியன | இயற்கையமைப்பையொட்டியவை ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறாகப் பயன்படுவது போன்று கட்டிடங்கள், வணிகமையங்கள் போன்ற செயற்கை அமைப்புகளும் குலப்பெயர்கள், முந்தைய நிகழ்வுகள், முந்தைய ஏற்பாடுகள் போன்றவற்றைக் குறித்து வருமிடங்களும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைகின்றன. |
செயலூர் | இளம்பொன் சாத்தன் கொற்றனார் என்ற புலவர் செயலூர் என்னும் ஊரினர் (அகம் 77) |
செருப்பாழி | சங்க கால ஊர்கள் |
செல்லி | சங்க கால ஊர்கள் |
செல்லுர் | சங்க கால ஊர்கள் |
செல்லூர் | செல்லூர் என்னும் பெயருடன் சோழ நாட்டின் கீழைக்கடற் கரையில் ஓரூர் இருந்தது, வைகையாற்றின் வடகரையில் மதுரை நகரையடுத்து ஒரு செல்லூர் இருந்தது. இன்று மதுரைப் பெருநகரின் ஒரு பகுதியாக இணைந்துள்ளது. செல்லூர்க்குணாது பெருங்கடல் முழக்கிற்று ஆகி என்ற சங்க இலக்கியத் தொடர் செல்லூருக்குக் கிழக்கே பெருங்கடல் இருந்த செய்தியை விளக்குவதால் சோழ நாட்டில் கீழைக் கடற் கரையில் இருந்த செல்லூரே சங்க இலக்கியத்தில் குறிக்கப் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது. பரசுராமன் செல்லூரின்கண் வேள்வி செய்து முடித்தான் என்னும் வரலாற்றுச் செய்தியும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றிருப்பதாகக் கருதுகின்றனர். ‘கெடாஅத்தி’ என்ற தொடருக்கு வேள்வித் தீ எனப் பொருள் கண்டார். குறுந்தொகையில் 363 ஆம் பாடலையும், அகநானூற்றில் 66, 250 ஆகிய பாடல்களையும் பாடிய புலவர்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். |
சேய்ஞலூர் | தேவாரத் திருத்தலங்கள் |
சேய்ஞலூர் | தஞ்சாவூர் மாவட்டத்தில் சேங்கனூர் என்று இன்று அழைக்கப்பெறுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் (48). சேயாம் குமரக் கடவுள் தாம் விரும்பி உறைவதற்கு நல்ல ஊர் என்று தேர்ந்து எடுக்கப்பட்ட தலம் அது. சேய் நல் ஊர் தான் சேய்நலூர் என்று பின்னால் பெயர் பெற்றிருக்கிறது என்ற கருத்து இத்தலம் குறித்து அமைகிறது. கொள்ளிடத்திலிருந்து பிரியும் மண்ணியாற்றின் கரையிலே சேய்ஞலூர் அமைகிறது. கோச் செங்கணானுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம் என்பது சம்பந்தர் தேவாரம் சுட்டும் ஒரு எண்ணம். சேக்கிழார் இவ்வூரினை, செய்த்தலை பணில முத்தீனும் சேய்ஞலூர் (34-242) என் றும், சீலம் திகழும் சேய்ஞலூர் (திருக் -58) என்றும் பாராட்டுகின்றார். முருகக் கடவுள் இத்தலத்தில் சிவபெருமானை வழி பட்டுச் சூரசம்ஹாரத்திற்குத் துணையாகச் சர்வ சங்காரப் படைக்கலத்தைப் பெற்றார் என்ற எண்ணமும் இவ்வூர் பற்றி அமைகிறது. முருகன் வழிபட்ட தலமாதலின் சேய்நல்லூர் எனப் பெயர் பெற்ற தலம் இது என்ற எண்ணத்தை நோக்க முருகனுடன் தொடர்புடையதாக இப்பெயர் அமையக் காண்கின்றோம். சேய் என்பது பண்டைத் தமிழ் மக்களிடையே முருகனைக் குறிக்க வழங்கியது என்பது தொல்காப்பியம் சங்க இலக்கியம் காட்டும் நிலை. எனவே முதலில் இது முருகன் தலமாக இருந்து பின்னர் சிவத்தலமாக மாறியதோ என்ற எண்ணம் வண் எழுகின்றது. |
சேரநாட்டுத் துறைமுகம் | சங்க கால ஊர்கள் |
சேரி | மக்கள் சேர்ந்து வாழுமிடம் “சேரி” எனக் காரணப்பெயராக வழங்கியிருக்கிறது. இச்சொல் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் பயின்று வந்துள்ளது. முல்லை நிலத்து ஊர்கள் சேரி எனப்பட்டன என்கிறார் நச்சினார்க்கினியர். ஆனால் ஊரின் புறத்தே உள்ள குடியிருப்புகளையும் சுட்டி வழங்கியிருக்கின்றது. பார்ப்பனச் சேரி, இடையச்சேரி என்றார் போல மக்கட் பிரிவினரின் பெயர்களுடனும் சேர்ந்து சங்க இலக்கியத்திலும் வழங்கியிருக்கின்றது. குளம், நீர்நிலை என்ற பொருள்படும் “செருவு” என்ற தெலுங்குச் சொல் சில இடங்களில் “சேரி” என்று மாறியிருக்கின்றது. இவ்விடங்களில் தெலுங்குச் சொற்களுடன் இணைந்து “சேரி” வந்துள்ளது. “பச்சேரி” என்ற கூட்டு வடிவமும் சில ஊர்களுக்கு வழங்கி வருகின்றது. |
சேறை | தேவாரத் திருத்தலங்கள் |
சேறை | இன்று உடையார் கோவில் என்று சுட்டப்படும் தலம். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது, சைவத் தலமாகவும், வைணவத் தலமாகவும் விளங்கும் பெருமையுடையது. திருமங்கையாழ்வாருடன் சம்பந்தராலும், அப்பராலும் பாடல் பெற்ற தலம் இது. |
சேற்றூர் | திருநாவுக்கரசரின் அடைவு திருத்தாண்டகம் சுட்டும் இறைத் தலங்களுள் ஊர்ப்பொதுக் கூறுடன் திகழும் பெயர்களுள் ஒன்று சேற்றூர். வயல், கழனி சாரணமாகச் சேறு நிறைந்த நிலையில் இப்பெயர் பெற்றிருக்கலாம். பிற விளக்கங்கள் தெளிவாகவில்லை. |
சேலூர் | பெரிய புராணம் சம்பந்தர் வழிபட்ட ஊர்பற்றிய பாடல்களுள், அவரது சேலூர் வழிபாடு பற்றியும் இயம்புகிறது. புள்ளமங்கைப் பதியில் உள்ள ஆலந்துறை கோயிலை அணைந்து. |
சோணாடு | சங்க கால ஊர்கள் |
சோணாட்டுப் பூச்சாற்றூர் | சங்க கால ஊர்கள் |
சோபுரம் | தேவாரத் திருத்தலங்கள் |
சோபுரம் | இப்பொழுது தியாகவல்லி என்ற பெயருடன் அமையும் தலம் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. முதற் குலோத்துங்கன் மனைவி மூவருள் பட்டத்து மனைவியாகிய தியாகவல்லியால் திருப்பணி செய்ய பெற்றமையின் இப்பெயர் பெற்றது என்ற எண்ணம் து சார்பாக அமைகிறது. இங்குள்ள இறைவனின் பெயர் சோபுர நாதர் என அறியும் போது சோபுரநாதரினின்றும் ஊர்ப்பெயர் அமைந்ததா ? அல்லது சோபுரத்திலுள்ள இறைவன் சோபுர நாதர் எனப்பட்டாரா? என்ற எண்ணம் தோன்றுகின்றது. சோழருடன் தொடர்புடைய தியாகவல்லி என்ற பெயரை நோக்க, சோழபுரம் என்ற பெயர் சோபுரம் என்று மருவி, கோயில் சிறப்பு காரணமாக, திருச்சோ புரம் எனப்பட்டதா எனவும் நோக்கலாம். சோழபுரத்தின் மருவிய நிலையே சோபுரம் எனின் இதன் பழமையும் எண்ணத் தக்கது. சம்பந்தர் பாடல் வழி சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம் என்ற ஒரே குறிப்பைத் தவிர (51-1 !) வேறு எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. |
சோற்றுத்துறை | தேவாரத் திருத்தலங்கள் |
சோற்றுத்துறை | திருச்சோற்றுத் துறை என்று வழங்கும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டம் சார்ந்து அமைகிறது. ஆற்றின் கரையில் கோயில் இருக்கிறது. இக்கோயிலைப் பாடியோர் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவருமாவர். காவிரிக் கரையில் உள்ள ஊர் என்பதைப் பாடல் நிலையிலும் நாம் அறிய இயலுகிறது. |
சோழ நன்னாடு | சங்க கால ஊர்கள் |
சோழ நன்னாட்டுப் பிடவூர் | சங்க கால ஊர்கள் |
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி | சங்க கால ஊர்கள் |