ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சேய்ஞலூர் | தஞ்சாவூர் மாவட்டத்தில் சேங்கனூர் என்று இன்று அழைக்கப்பெறுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் (48). சேயாம் குமரக் கடவுள் தாம் விரும்பி உறைவதற்கு நல்ல ஊர் என்று தேர்ந்து எடுக்கப்பட்ட தலம் அது. சேய் நல் ஊர் தான் சேய்நலூர் என்று பின்னால் பெயர் பெற்றிருக்கிறது என்ற கருத்து இத்தலம் குறித்து அமைகிறது. கொள்ளிடத்திலிருந்து பிரியும் மண்ணியாற்றின் கரையிலே சேய்ஞலூர் அமைகிறது. கோச் செங்கணானுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம் என்பது சம்பந்தர் தேவாரம் சுட்டும் ஒரு எண்ணம். சேக்கிழார் இவ்வூரினை, செய்த்தலை பணில முத்தீனும் சேய்ஞலூர் (34-242) என் றும், சீலம் திகழும் சேய்ஞலூர் (திருக் -58) என்றும் பாராட்டுகின்றார். முருகக் கடவுள் இத்தலத்தில் சிவபெருமானை வழி பட்டுச் சூரசம்ஹாரத்திற்குத் துணையாகச் சர்வ சங்காரப் படைக்கலத்தைப் பெற்றார் என்ற எண்ணமும் இவ்வூர் பற்றி அமைகிறது. முருகன் வழிபட்ட தலமாதலின் சேய்நல்லூர் எனப் பெயர் பெற்ற தலம் இது என்ற எண்ணத்தை நோக்க முருகனுடன் தொடர்புடையதாக இப்பெயர் அமையக் காண்கின்றோம். சேய் என்பது பண்டைத் தமிழ் மக்களிடையே முருகனைக் குறிக்க வழங்கியது என்பது தொல்காப்பியம் சங்க இலக்கியம் காட்டும் நிலை. எனவே முதலில் இது முருகன் தலமாக இருந்து பின்னர் சிவத்தலமாக மாறியதோ என்ற எண்ணம் வண் எழுகின்றது. |
சேய்ஞலூர் | தேவாரத் திருத்தலங்கள் |
சேரநாட்டுத் துறைமுகம் | சங்க கால ஊர்கள் |
சேரி | மக்கள் சேர்ந்து வாழுமிடம் “சேரி” எனக் காரணப்பெயராக வழங்கியிருக்கிறது. இச்சொல் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் பயின்று வந்துள்ளது. முல்லை நிலத்து ஊர்கள் சேரி எனப்பட்டன என்கிறார் நச்சினார்க்கினியர். ஆனால் ஊரின் புறத்தே உள்ள குடியிருப்புகளையும் சுட்டி வழங்கியிருக்கின்றது. பார்ப்பனச் சேரி, இடையச்சேரி என்றார் போல மக்கட் பிரிவினரின் பெயர்களுடனும் சேர்ந்து சங்க இலக்கியத்திலும் வழங்கியிருக்கின்றது. குளம், நீர்நிலை என்ற பொருள்படும் “செருவு” என்ற தெலுங்குச் சொல் சில இடங்களில் “சேரி” என்று மாறியிருக்கின்றது. இவ்விடங்களில் தெலுங்குச் சொற்களுடன் இணைந்து “சேரி” வந்துள்ளது. “பச்சேரி” என்ற கூட்டு வடிவமும் சில ஊர்களுக்கு வழங்கி வருகின்றது. |
சேறை | தேவாரத் திருத்தலங்கள் |
சேறை | இன்று உடையார் கோவில் என்று சுட்டப்படும் தலம். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது, சைவத் தலமாகவும், வைணவத் தலமாகவும் விளங்கும் பெருமையுடையது. திருமங்கையாழ்வாருடன் சம்பந்தராலும், அப்பராலும் பாடல் பெற்ற தலம் இது. |
சேற்றூர் | திருநாவுக்கரசரின் அடைவு திருத்தாண்டகம் சுட்டும் இறைத் தலங்களுள் ஊர்ப்பொதுக் கூறுடன் திகழும் பெயர்களுள் ஒன்று சேற்றூர். வயல், கழனி சாரணமாகச் சேறு நிறைந்த நிலையில் இப்பெயர் பெற்றிருக்கலாம். பிற விளக்கங்கள் தெளிவாகவில்லை. |
சேலூர் | பெரிய புராணம் சம்பந்தர் வழிபட்ட ஊர்பற்றிய பாடல்களுள், அவரது சேலூர் வழிபாடு பற்றியும் இயம்புகிறது. புள்ளமங்கைப் பதியில் உள்ள ஆலந்துறை கோயிலை அணைந்து. |