ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
செங்கண்மா | இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் “பெருங் கெளசிகனார் பல்குன்ற கோட்டத்துச் செங்கண் மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடிய மலைபடுகடாம்” என்ற தொடர் “செங்கண்மா” என்னும் ஊர் நன்னனுக்கு உரியது என அறிய முடிகிறது. கொண்கானத்து நன்னன்வேறு. செங்கண் மாவைத் தலை நகராகக் கொண்டு பல்குன்ற நாட்டை ஆண்ட நன்னன் வேறு. நன்னன் சேய் நன்னனின் தலைநகராகிய இச்செங்கண் மாநகர் தொண்டைநாட்டைச் சார்ந்தது. வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள சவ்வாது மலைத்தொடரே நன்னனின் ஆட்சியின் கீழ் இருந்த மலைநாடு. அம் மலையின் தெற்கில் “செங்கம்” என்னும் பெயருடன் இன்று விளங்கும் ஊரே நன்னன் காலத்தில் செங்கண்மா என்னும் பெயருடன் பெரிய நகரமாய் விளங்கியது. செங்கண்மா என்றால் சிவப்பான கண்ணையுடைய விலங்கு கரடி எனப்பொருள் காணப்பெறுகிறது. மலைநாட்டுப் பகுதியை சேர்ந்த இவ்வூர் சிவப்பான கண்ணையுடைய விலங்காகிய கரடியுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டு பெயா் பெற்றதோ என எண்ணத் தோன்றுகிறது. இக்கருத்தை வலியுறுத்த சான்று ஒன்றும் இல்லை. மேலும் நடைபெறும் ஆய்வில் இதற்கேற்ற சான்று ஏதாவது கிடைக்கலாம். |
செங்கண்மா | சங்க கால ஊர்கள் |
செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் | சங்க கால ஊர்கள் |
செங்காட்டங்குடி | இன்றும் இப்பெயராலேயே தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது இவ்வூர். இத்தலம் பற்றிய புராணக்கதை. கஜமுகா என்பவன் தேவர்களுக்கு இடுக்கண் செய்ய, அவனை ஒழித்துக்கட்ட சிவகுமாரனான விநாயகர் யானை முகத்துடன் அவதரித்து அவனைச் சம்ஹரித்திருக்கிறார். இந்த கஜாமுகா சுரனைச் சம்ஹரித்தபோது அவனது இரத்தம் செங்காடாய்ப் பெருகிய காரணத்தால் செங்காட்டங்குடி என்ற பெயர் நிலைத்திருக்கிறது. இந்தப் பழி நீங்க இத்தலத்தில் இறைவனைக் கணபதி வழிபட்ட காரணத்தால் சணபதீச்சுரம் என்ற பெயர் பெற்றிருக்கிறது என்றடைகிறது. இதனைக் கந்த புராணம், |
செங்காட்டங்குடி | தேவாரத் திருத்தலங்கள் |
செங்குன்றூர் | மலைநாட்டுத் தலம் செங்குன்றூர். கொடிமாடச் செங்குன் றூர் போன்று நிறம் காரணமாகவும், குன்று காரணமாகவும் பெயர் பெற்ற தன்மை அமைகிறது. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற தலம் இது. திருமால் கோயில் சிற்றாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் சிறந்தும், செழித்தும் காணப்பட்டது என்பதனை, நம்மாழ்வார் பாடல் தருகின்றது. |
செங்குன்றூர் – திருக்கொடிமாடச் செங்குன்றூர்கொ | தேவாரத் திருத்தலங்கள் |
செங்கோடு(திருச்செங்கோடு) | தேவாரத் திருத்தலங்கள் |
செந்தில் | சங்க கால ஊர்கள் |
செம்பொன்பள்ளி | செம்பொன்னார் கோயில், செம்பொனார் கோயில் என்றும் சுட்டப்படும் இவ்வூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. அப்பர் சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் (ஞான 25, திருநா 29. 150), முதலில் கோயில் பெயராக அமைந்து, பின்னர் ஊர்ப் பெயராக மாறியிருக்கலாம். செம் பொன்னால் வேயப்பட்ட கோயில் என்ற பொருளில் இப்பெயர் அமையலாம். செம்பொன் பள்ளி என்று தேவாரம் சுட்டிய இவ்வூர்ப் பெயர், கல்வெட்டுகளில், செம்பொன்னார் கோயில், செம்பொன்னாதர் கோயில் எனச் சுட்டப்படும் நிலை, பள்ளியைக் கோயிலாக்கினரோ எண்ணத்தையும் அளிக்கிறது. காவிரியின் கரையில் இருக்கும் இத்தலத் திறையைச் சம்பந்தர், |
செம்பொன்பள்ளி- இக்காலச் செம்பொனார் கோயில் | தேவாரத் திருத்தலங்கள் |
செயற்கையமைப்பை ஒட்டியன | இயற்கையமைப்பையொட்டியவை ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறாகப் பயன்படுவது போன்று கட்டிடங்கள், வணிகமையங்கள் போன்ற செயற்கை அமைப்புகளும் குலப்பெயர்கள், முந்தைய நிகழ்வுகள், முந்தைய ஏற்பாடுகள் போன்றவற்றைக் குறித்து வருமிடங்களும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைகின்றன. |
செயலூர் | இளம்பொன் சாத்தன் கொற்றனார் என்ற புலவர் செயலூர் என்னும் ஊரினர் (அகம் 77) |
செருப்பாழி | சங்க கால ஊர்கள் |
செல்லி | சங்க கால ஊர்கள் |
செல்லுர் | சங்க கால ஊர்கள் |
செல்லூர் | செல்லூர் என்னும் பெயருடன் சோழ நாட்டின் கீழைக்கடற் கரையில் ஓரூர் இருந்தது, வைகையாற்றின் வடகரையில் மதுரை நகரையடுத்து ஒரு செல்லூர் இருந்தது. இன்று மதுரைப் பெருநகரின் ஒரு பகுதியாக இணைந்துள்ளது. செல்லூர்க்குணாது பெருங்கடல் முழக்கிற்று ஆகி என்ற சங்க இலக்கியத் தொடர் செல்லூருக்குக் கிழக்கே பெருங்கடல் இருந்த செய்தியை விளக்குவதால் சோழ நாட்டில் கீழைக் கடற் கரையில் இருந்த செல்லூரே சங்க இலக்கியத்தில் குறிக்கப் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது. பரசுராமன் செல்லூரின்கண் வேள்வி செய்து முடித்தான் என்னும் வரலாற்றுச் செய்தியும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றிருப்பதாகக் கருதுகின்றனர். ‘கெடாஅத்தி’ என்ற தொடருக்கு வேள்வித் தீ எனப் பொருள் கண்டார். குறுந்தொகையில் 363 ஆம் பாடலையும், அகநானூற்றில் 66, 250 ஆகிய பாடல்களையும் பாடிய புலவர்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். |