ஊர் பெயரகராதி

தமிழகம் ஊரும் பேரும் – சேதுப்பிள்ளை.ரா.பி, இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் I – ஆளவந்தார்.ஆர், II – பகவதி.கே. தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு – கு.பகவதி. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி – தா.வே.வீராசாமி. தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – மெய்.சந்திரசேகரன். கெடிலக்கரை நாகரிகம் ஊர்கள் – பேரா.சுந்தரசண்முகனார். செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – நாகராசன்.கரு


87

48

47

6

15

6

18

11

4

8

4
க்
99
கா
32
கி
3
கீ
1
கு
61
கூ
10
கெ
1
கே
3
கை
3
கொ
24
கோ
39
கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
10
சா
9
சி
21
சீ சு
2
சூ செ
17
சே
8
சை சொ சோ
9
சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
23
தா
1
தி
22
தீ து
11
தூ
4
தெ
7
தே
4
தை தொ
5
தோ தௌ
ந்
31
நா
24
நி
6
நீ
11
நு நூ நெ
22
நே
5
நை நொ
1
நோ நௌ
ப்
43
பா
33
பி
7
பீ பு
39
பூ
10
பெ
11
பே
7
பை
2
பொ
7
போ
6
பௌ
ம்
40
மா
25
மி
3
மீ
2
மு
28
மூ
4
மெ
1
மே
1
மை
5
மொ மோ
6
மௌ
ய்
2
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
40
வா
20
வி
25
வீ
6
வு வூ வெ
27
வே
24
வை
7
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
சிக்கற்பள்ளி

சேரமான்‌ செல்வக்‌ கடுங்கோவாழியாதன்‌ சிக்கற்பள்ளியில்‌ துஞ்சியதாகத்‌ தெரிகிறது. சேரமான்‌ சிக்கற்பள்ளி துஞ்சிய செல்வக்‌ கடுங்கோ வாழியாதன்மீது குண்டுகட்‌ பாலியாதன்‌ என்ற புலவர்‌ பாடிய சங்க இலக்கியப்‌ பாடல்‌ (புறம்‌ 387) ஒன்று உள்ளது. இவ்வூரைப்‌ பற்றிய பிற செய்திகள்‌ ஒன்றும்‌ அறிய முடியவில்லை.

சிக்கற்பள்ளி

சங்க கால ஊர்கள்

சிக்கல்

இன்றும் சிக்கல் எனச் சுட்டப்படும் பெயர் சம்பந்தர் பாடல் பெற்றது. வசிட்டர் காமதேனுவின் வெண்ணையினால் சிவ லிங்கம் அமைத்து வழிபட்டார். பூசை முடிவில் அதை எடுக்க முயன்றபோது முடியாமல் சிக்கிக் கொண்டமையால் சிக்கல் எனப் பெயர் பெற்றது என்ற எண்ணம் இவ்வூர்ப் பெயர் பற்றி அமைகின்றது. ஞானசம்பந்தர் இத்தலத்தின் மிகுந்த செழுப்பினைப் பாடுகின்றார்.
மடங்கொள் வாளை குதிகொள்ளுமணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொண் மாமறையோரவர் மல்கிய சிக்கல் 144-2
நீல நெய் தன்னிலவம் மலருஞ் சுனை நீடிய
சேலும் மாலுங்கழனிவ் வளமல்கிய சிக்கல் 144-3
இப்பாடல்களை நோக்க வளங்கள் சிக்கிக் கிடக்கும் தன்மை காரணமாக இப்பெயர் பெற்ததோ என எண்ணத் தோன்றுகிறது.

சிக்கல்

தேவாரத் திருத்தலங்கள்

சிங்கபுரம்

பார்க்க அரிபுரம்‌

சித்திபுரம்

சித்தி என்றால்‌ ஒரு வகை மரம்‌ அல்லது கொடி போன்ற தாவரத்தைக்‌ குறிக்கும்‌ பெயராகும்‌. ஆகவே சித்திபுரம்‌ என்பது தாவரத்தால்‌ பெற்ற பெயர்‌ எனக்‌ கொள்ளலாம்‌. மணிமேகலை பழம்பிறப்பில்‌ இலக்குமி என்னும்‌ பெயருடை யவள்‌, இராகுலன்‌ என்பவன்‌ அவள்‌ கணவன்‌. அவன்‌ சித்தி புரத்தை ஆண்ட சீதரன்‌ என்ற மன்னனுடைய மகளாகிய நீலபதியின்‌ வயிற்றில்‌ பிறந்தவள்‌ என்பது மணிமேகலை கூறும்‌ செய்தி.
“இலக்குமி யென்னும்‌ பெயர்‌ பெற்றுப்பிறந்தேன்‌
அத்திபதி யெனும்‌ அரசன்‌ பெருந்தேவி
சித்திபுரம்‌ ஆளுஞ்‌ சீதரன்‌ திருமகள்‌
நீலபதி யெனும்‌ நேரிழை வயிற்றில்‌
காலை ஞாயிற்றுக்‌ கதிர்‌ போற்றோன்றிய
இராகுலன்‌ தனக்குப்புக்கேன்‌” (மணிமே. 6:41 4)

சித்திரமாடம்

சங்க கால ஊர்கள்

சித்திரமாடம்‌

பாண்டியன்‌ சித்திரமாடத்துத்‌ துஞ்சிய நன்மாறன்‌, மதுரைக்‌ கூலவாணிகன்‌ சீத்தலைச்சாத்தனாரால்‌ பாடப்பெற்றான்‌ (புறம்‌. 59) என்ற செய்தியால்‌ நாம்‌ அறியும்‌ பெயர்‌ சத்திர மாடம்‌ என்பது. பெரும்பாலும்‌ ஊர்ப்‌ பெயராகத்தான்‌ இருக்க வேண்டும்‌ என்று எண்ண முடிகிறது. ஆயினும்‌ அரண்மனையின்‌ மேல்மாடம்‌ எனக்கூறுவதே பொருத்தமுடையதாகத்‌ தெரிகிறது.

சிராப்பள்ளி

சங்க காலத்தில் உறையூர் மிகப் புகழ்பெற்றிருந்த நிலையைக் காண்கின்றோம், இடையில் சிராப்பள்ளிக் கோயில் நிலையில் புகழ்பெற, இன்று உறந்தை புகழ் மறைந்து திருச்சிராப்பள்ளி மிகுந்த புகழுடன் அமையும் நிலை அமைகிறது. உறைவதற்கு ஏற்ற இடம் என்ற நிலையில் காவிரிக்கரையில் மிக்க புகழுடன் இருந்த நிலையைச் சங்க இலக்கியம் காட்டும், அரசியல் நிலையிலும், மன்னர் வாழ்விடமாக இது அமைந்தது. 1. சிராப்பள்ளி என்ற பெயர் இன்று திருச்சிராப்பள்ளி என்றுவழங்கினாலும் திருச்சி என்ற குறுக்கமே பெரும்வழக்காக அமைகிறது. பள்ளி பொதுவாக வாழ்விடம் குறித்து அமையி னும், இப்பெயரோடு தொடர்புடை வரலாறுகளைக் காண சமணர் தொடர்புடையதாகவே து அமைந்திருக்கலாம் எனத் துணியலாம். மூன்று தலைகளைப் பெற்று இருந்த அசுரன் வழிபட்டமை யால் திருச்சிராப்பள்ளி என்று பெயர் பெற்றது என்பர். போன்ற பலஎண்ணங்கள் இது குறித்து வழங்கின எனினும், இவ்வூர் பற்றிய தோற்றம் நோக்க தெளிவு கிடைக்கின்றது. முதலில் பழமை நிலையில் காணலாம். சிராப்பள்ளி என்ற பெயர் பண்டு இல்லை. உறந்தை என்ற பெயரே முதலில் இருந்தது. உறந்தையைச் சார்ந்த இன்று அமையும் மலைப் பகுதியைக் குறிக்கும் அக நானூற்றுப் பாடல், கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது நெடும் பெரும் குன்றத்து என இக்குன்றம் பற்றி இயம்பு எனவே இப்பெயரின்மை உறுதிப்படுகின்றது. கின்றது. சிராப்பள்ளியைப் பற்றிய ஆய்வு செய்யும் தி. வை. சதாசிவப் பண்டாரத்தார். இவ்வூர்ப் பின்னணியை நன்கு ஆய்கின்றார். இவ்வாய்வில் இவர், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குன்றின் மேல் சில சமண முனிவர்கள் தங்கித் தவம் புரிந்துக் கொண்டிருந்தனர் என்பது நன்கு தெரியப்படும். அவர்களுள் சிரா என்ற முனிவர் ஒருவர் இருந்தமை அங்குள்ள கல்வெட்டுகளால் அறியப்படுகிறது அம்முனிவர் அத்தவப்பள்ளியின் தலைவராயிருந்தமை பற்றி அது சிராப்பள்ளி என்று முதலில் வழங்கத் தொடங்கி, அவர் காலத் திற்குப் பின்னரும் அப்பெயரோடு நின்று நிலவுவதாயிற்று என சுட்டிச் செல்வது இப்பெயரைப்பற்றிய தெளிவைத் தருமாறு அமைகிறது. மகேந்திரவர்மன் சிராப்பள்ளி பெருங்குன்றைக் குடைந்து அங்கே சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைத்தவன் என்பது ஆராய்ச்சியில் பெறப்படுகிறது என்றும் இவர் குறிப்பிடுகின்றார். சிராப்பள்ளி கோயிலைப் பாடியவர்கள் சம்பந்தர், அப்பர், சென்றடையாத திருவுடையானைச் சிராப் பள்ளி குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிருமே (98-1) என்கிறார் சம்பந்தர்.

சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி

தேவாரத் திருத்தலங்கள்

சிரீவரமங்கை

இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. நாங்குநேரி, வானமாமலை என்று பிற பெயர்கள் இருப்பினும், நாங்குநேரியே செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது. திருமால் கோயில் கொண்ட நிலையில் ஸ்ரீ என்ற அடையுடன் கொண்ட மங்கலம் என்ற பெயர் பின்னர் சிரீவரமங்கை ஆகியிருக்கலாம் எனத் தோன்று மலை, ஏரி பிற இரண்டின் காரணங்களாக அமையலாமெனத் தோன்றுகிறது. நம்மாழ்வார் இத்தலத்திலுள்ள திருமாலைப் புகழ்கின்றார்.
சேற்றுத் தாமரை. செந்நெலூடு மலர்
சிரீவர மங்கல நகர் (நாலா -2590)
திங்கள் சேர் மணிமாடம் நீடு
சிரீவர மங்கல நகர் (நாலா -2591)
போன்றன இந்நகரின் பெருமைக்குரிய சில சான்றுகள்.

சிறுகுடி

சங்க கால ஊர்கள்

சிறுகுடி

தேவாரத் திருத்தலங்கள்

சிறுகுடி

தஞ்சை மாவட்டத்தில்‌ பேரளத்துக்கு அருகே சிறுகுடி என்ற பெயருடன்‌ ஓர்‌ ஊர்‌ உள்ளது. மதுரை மாவட்டத்தில்‌ நத்தத்துக்கு அருகேயும்‌ இப்பெயருடன்‌ ஓர்‌ ஊர்‌ உள்ளது. குடி என்னும்‌ சொல்‌ ஊர்ப்‌ பெயர்களில்‌ அமைந்து குடியிருப்பை உணர்த்துவதாகும்‌. உறவு முறையையுடைய பல குடும்பத்தார்‌ ஒரு குடியினராகக்‌ கருதப்படுவர்‌. இத்தகைய குடியினர்‌ சேர்ந்து வாழும்‌ இடம்‌ குடியிருப்பு என்றும்‌, குடி என்றும்‌ சொல்லப்படும்‌. அத்தகைய குடியிருப்புகள்‌ பரப்பின்‌ சிறுமையால்‌ சிறுகுடி எனப்‌ பெயர்‌ பெற்றிருக்கலாம்‌. (சென்னையை அடுத்துள்ள பெருங்குடி என்னும்‌ ஊர்ப்‌ பெயா்‌ ஒப்பு நோக்கத்தக்கது) குறிஞ்சி நிலத்து ஊர்‌ சிறுகுடி எனப்‌ பெயர்‌ பெறும்‌. கடற்‌கரை ஊரும்‌ அப்பெயர்‌ பெறுகின்றது. இவையெல்லாம்‌ ஒரு குறிப்பிட்ட ஊரைக்‌ குறிப்பன அல்ல. பண்ணன்‌ என்ற வள்ளலுக்குரியது சிறுகுடி என்று சங்க இலக்கியம்‌ கூறுகிறது, ஆகவ சிறுகுடி கிழான்‌ பண்ணன்‌ என்னும்‌ பெயர்‌ பெற்றான்‌.
“வாணன்‌ சிறுகுடி அன்ன” (நற்‌. 34029)
“மூதில்‌ அருமன்‌ பேரிசைச்‌ சிறுகுடி” (௸. 367:6)
“தனக்கென வாழப்‌ பிறர்க்கு உரியாளன்‌
பண்ணன்‌ சிறுகுடிப்‌ படப்பை நுண்‌ இலைப்‌
புன்காழ்‌ நெல்லிப்‌ பைங்காய்‌ தின்றவர்‌
நீர்குடி சுவையின்‌ தீவிய மிழற்றி” (அகம்‌. 54: 14 17)
“நெடுங்‌ கால்‌ மாஅத்து ஊழுறு வெண்‌ பழம்‌
கொடுந்‌ தாள்‌ யாமை பார்ப்பொடு கவரும்‌
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்‌
வாணன்‌ சிறுகுடி வடாஅது
தீம்நீர்க்‌ கான்யாற்று அவிர்‌ அறல்‌ போன்றே (டி 117 ; 15.19)
“வெண்ணெல்‌ அரிநர்‌ மடிவாய்த்‌ தண்ணுமை
பல்மலர்ப்‌ பொய்கைப்‌ படுபுள்‌ ஒப்பும்‌
காய்‌ நெல்‌ படப்பை வாணன்‌ சிறுகுடி (௸ 204: 10 12)
“வாணன்‌ சிறுகுடி வணங்குகதிர்‌ நெல்லின்‌
யாணர்த்‌ தண்பணைப்‌ போது வாய்‌ அவிழ்ந்த
ஒண்‌ செங்கழுநீர்‌ அன்ன……… ” (௸. 269 : 22 24)
“கிள்ளி வளவன்‌ நல்‌இசை உள்ளி,
நாற்ற நாட்டத்து அறுகாற்‌ பறவை
சிறுவெள்‌ ஆம்பல்‌ ஞாங்கர்‌ ஊதும்‌
கைவள்‌ ஈகைப்‌ பண்ணன்‌ சிறுகுடி” (புறம்‌ 70 : 10 13)

சிறுகுடி

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து இன்றும் இப்பெயரிலேயே அமைகிறது. சிறுகுடி என்பது சிறிய குடியிருப்புப் பகுதியைக் குறித்து அமைகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலமுடையது.
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறி கமழ் சடை முடியீரே
வெறி கமழ் சடைமுடியீருமை விரும்பி மெய்ந்
நெறியுணர் வோருயர்ந்தோரே (355-7)

சிறுபுலியூர்

தஞ்சை மாவட்டத்தில் சிறுபுலியூர் என்றே இன்றும் சுட்டப் படும் இடம் இது. மாயூரம் ரயில் நிலையத்திலிருந்து எட்டு மைல் தொலைவில் உள்ள இடம். இடப்பெயர் சிறுபுலியூர் என அமைய, திருமால் கோயில் பெயர் சலசயனம் எனச் சுட்டப் பெறுகிறது. எம் பெருமான் புலிக்கால் முனிவருக்கு, பாலசயனமாய்ச் சேவை சாதித்த தலமாதல் பற்றி இவ்வூர் சிறுபுலியூர் என வழங்கப் பெற்றதாகக் கூறுவர்.. இதன் சிறப்பை ஆழ்வார் பாடல்கள் சிறப்பாக இயம்புகின்றன.
வெள்ளம் முது பரவைத்திரை விரிய கரை எங்கும்
தெள்ளும்மணி திகழும் சிறுபுலியூர்
என்கின்றார் திருமங்கையாழ்வார்.
முழு நீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவார் அவர் கண் வாய் முகம் மலரும்
செழுநீர் வயல் தழுவும் சிறுபுலியூர்
புலியூர் என்ற ஊர்ப்பெயர் மிகுதியாக அமையும் போது அனைத்து இடங்களிலும் இப்பெயர்க் காரணமே சுட்டப்படுகிறது. புலித் தோலையுடைய சிவன் இருக்கும் ஊர் என எண்ணின், இங்கு திருமால் கோயிலே சிறப்பாக உள்ளதாக அறிகிறோம். எனவே இப்பெயர்க்குரிய காரணம் தெளிவு பெறவில்லை. இயல்பாக விலங்குப் பெயர்க் காரணம் பொருத்தமாக அமையலாம்.

சிறைக்குடி

சங்க கால ஊர்கள்

சிறைக்குடி

நற்றிணையில்‌ 16 ஆம்‌ பாட,லையும்‌ குறுந்தொகையில்‌ 56,57,,132,168,222,273,300 ஆகிய பாடல்களையும்‌ பாடிய ஆந்தையார்‌ என்ற சங்ககாலப்‌ புலவர்‌ சிறைக்குடி என்னும்‌ ஊரினர்‌. ஆகவே சிறைக்குடி ஆந்தையார்‌ எனப்‌ பெற்றார்‌.

சிற்றேமம்

சிற்றாய்மூர், சிற்றாம்பூர், எழிலூர், நேமம் எனப் பவாறாக வழங்கப்படுகின்ற இவ்வூர் தஞ்சை மாவட்டம் சார்ந்தது என்பர். ஆயின் தம் ஆராய்ச்சித் தொகுதியில் மு.இராகவையங்கார் இக் கோயிலிலுள்ள சாசனங்கள் இதனைச் சிற்றாய்மூர் என்றேவழங்கு கின்ற காரணத்தால் தேவாரம் குறிக்கும் ஊர் இதுவன்று என்றும் இம்மாவட்டத்திலேயே உள்ள திருச்சிற்றம்பலம் என்ற தலமே சிற்றேமம் எனவும் சுட்டுகின்றார். எனினும் பெயர்க் காரண புரியவில்லை. சிறை வண்டியாழ் செய்பைம் பொழிற் பழனஞ் சூழ் சிற்றேமத் தான் 300-1 எனவும், படு வண்டியாழ் செய்பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத் தான் 300 – 3 எனவும் இதன் வளம் சுட்டுகின்றார் சம்பந்தர்.

சிவபுரம்

சிவபுரம் என்ற பெயரிலேயே இன்றும் சுட்டப்படும் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. திருமால் வராகமாய் உருக்கொண்டு இறைவனைப் பூசித்ததலம் இது. ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. சிவன் கோயில் காரணமாகச் சிவபுரம் எனப் பெயர் பெற்று இருக்கலாம்.
பதும நன்மலரது மருவிய சிவனது சிவபுரம் நினைபவர் திருஞான 21-2
மேலும் நதிக்கரையில் இதன் இருப்பிடத்தை,
இன் குரலிசைக் கெழும் யாழ் முரலத்
தன் கர மருவிய சதுரனகர்
பொன்கரை பொரு பழங் காவிரியின்
றென் கரை மருவிய சிவபுரமே திருஞான 112-1
மலைமகண் மறுகிய மதகரியைக்
கொலை மல்க உரி செய்த குழகனகர்
அலை மல்கு மரிசிலின தனயலே திருஞான 112 – 3
சிலைமல்கு மதிளணி சிவபுரமே எனப்பாடுகிறார். சிவனவன் காண் சிவபுரத் தெஞ் செல்வன் றானே எனப் பாடுகின்றார் அப்பர் (301 – 1). மேலும் சிவபுர நகர் என ஞானசம்பந்தர் (21) சுட்டும் நிலை இவ்வூர் சிறந்து விளங்கியதொரு தன்மைக்குச் சான்று.

சிவபுரம் – சண்பகவனம்

தேவாரத் திருத்தலங்கள்