ஊர் பெயரகராதி

தமிழகம் ஊரும் பேரும் – சேதுப்பிள்ளை.ரா.பி, இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் I – ஆளவந்தார்.ஆர், II – பகவதி.கே. தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு – கு.பகவதி. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி – தா.வே.வீராசாமி. தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – மெய்.சந்திரசேகரன். கெடிலக்கரை நாகரிகம் ஊர்கள் – பேரா.சுந்தரசண்முகனார். செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – நாகராசன்.கரு


87

48

47

6

15

6

18

11

4

8

4
க்
99
கா
32
கி
3
கீ
1
கு
61
கூ
10
கெ
1
கே
3
கை
3
கொ
24
கோ
39
கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
10
சா
9
சி
21
சீ சு
2
சூ செ
17
சே
8
சை சொ சோ
9
சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
23
தா
1
தி
22
தீ து
11
தூ
4
தெ
7
தே
4
தை தொ
5
தோ தௌ
ந்
31
நா
24
நி
6
நீ
11
நு நூ நெ
22
நே
5
நை நொ
1
நோ நௌ
ப்
43
பா
33
பி
7
பீ பு
39
பூ
10
பெ
11
பே
7
பை
2
பொ
7
போ
6
பௌ
ம்
40
மா
25
மி
3
மீ
2
மு
28
மூ
4
மெ
1
மே
1
மை
5
மொ மோ
6
மௌ
ய்
2
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
40
வா
20
வி
25
வீ
6
வு வூ வெ
27
வே
24
வை
7
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
சாத்தங்குடி

சாத்தங்குடி என்ற ஊர். திருநாவுக்கரசர் தேவாரம் சுட்டும் ஊர். சேக்கிழாரும் குறிப்பிடுகின்றார்.
எல்லாரும் தளிச் சாத்தங் குடியிற் காண
இறைப்பொழுதிற் திருவாரூர் புக்கார் தாமே
என்கின்ற அடியைக் காணும் போது தளி என்பதைக் கோயில் என்ற பொருளில் காண்கின்றோம். சாத்தங்குடியில் உள்ள கோயில் என்ற பொருளில் தளிச்சாத்தங்குடி என்ற பெயர் அமைந்திருக்கலாம். சாத்தர் என்ற சொல் வணிகரைக் குறிப்பதை. அதர் கெடுத்தலறிய சாத்தரொடாங்கு என அகநானூறு (39) தருகிறது. எனவே வணிகர்கள் சேர்ந்து வாழ்ந்த குடியிருப்பு என்ற நிலையில் சாத்தங்குடி என்ற பெயர் அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

சாத்தமங்கை

தேவாரத் திருத்தலங்கள்

சாத்தமங்கை

திருச்சீயாத்த மங்கை என்று மக்களால் வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது.
பூத்த பங்கயப் பொகுட்டின் மேற் பொருகயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடுசூழ் காவிரி நாட்டுச்
சாத்த மங்கை என்று உலகெலாம் புகழ்வுறுத் தகைத்தாய்
வாய்த்த மங்கல மறையவர் முதற் பதி வனப்பு
என சேக்கிழார் இத்தலச் சிறப்பு சுட்டுகின்றார் (திருநீல -1). திருஞான சம்பந்தரும், சங்கையில்லா மறையோர் அவர் தாம் தொழும் சாத்தமங்கை (316-10) என்று பாடும் நிலையைக் காண, மறையவர் நிறைந்த இடம் இது என்பது தெரிகிறது. எனினும், சாத்தமங்கை என்ற பெயரைக்காண, இதுவும் சாத்தங்குடி போன்று வணிகர் நிறை பகுதி காரணமாகச் சாத்த மங்கலம் எனப் பெயர் பெற்ற பின்னர் சாத்தமங்கையாகியிருக் கலாம் எனத் தோன்றுகிறது. மட்டுமல்லாது இது உலகெலாம் புகழ்வுறு தகைத்தால் எனச் சேக்கிழார் சுட்டும் தன்மையில் மூதூராக இருந்திருக்கும் வாய்ப்பு அமைகிறது. சிறப்புடைய ஊராக இருந்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. எனவே முதலில் வணிகர் பதியாயிருந்த சாத்தமங்கை பின்னர் கோயிற் சிறப்புக் காரணமாக மறையவர் பதியாகவும் திகழ்ந்தது எனக் கூறல் பொருத்தமாக அமையும். மேலும் சாத்தமங்கையும் சாத்தை என்று வழங்கிய வழக்கை நம்பியாண்டார் திருத் தொண்டர் தொகை (30) காட்டுகிறது. நீதித் திகழ் சாத்தை நீலநக்கன் எனும் வேதியனே இன்றுசீயாத்த மங்கை எனத் திரிந்து வழங்கும் நிலை அமைய மங்கலம் என்ற பொதுக்கூறு குடியிருப்புப் பகுதி எனவும் பார்ப்பனக் குடியிருப்பு எனவும் சங்க இலக்கிய நிலையில் நின்று விளக்கும் நிலை கி.நாச்சிமுத்துவிடம் தெரிகிறது. இந்நிலையில் பார்க்க அன்பளிப்பாக அளிக்கப்பட்ட பகுதி கள் மங்கலம் என முதலில் பெயர் சூட்டப்பட்டன. முதலில் மறையவர்க்கும் பின்னர் பிறருக்கும் அளிக்கப்பட்டன. பின்னர் யாவரும் வசிக்கும் ஊர்ப்பொதுச் கூறாக அமைந்தது எனத் தோன்றுகிறது. இந்நிலையில் வணிகர்க்கு அளிக்கப்பட்ட இடம் அல்லது வணிகர் குடியிருப்பு பகுதி என்ற நிலையில் இப்பெயர் அமைந்திருக்கலாமா ? என்பது மேலும் சிந்திக்கத்தக்கது. இங்குள்ள கோயில் அயவந்தி எனச் சுட்டப்பட்டது. திருநாவுக்கரசர் தம் பாடலில் (265-8, 301-3) அயவந்தி ஈசனைப் புகழ்கின்றார். மயிலை சீனிவேங்கடசாமி திருத்துறைபூண்டி பற்றி கூறும் இவ்வூரில் மருந்தீச்சுரர் கோயிலின் மண்டபத்தி லுள்ள திரிபுவன சக்கரவர்த்தி இராசராசத் தேவர் III உடைய 11 – வது ஆண்டில் (கி.பி. 1227 மே 15) எழுதப்பட்ட சாசனத்தில் சாத்தமங்கலத்தைச்சார்ந்த பள்ளிச் சந்தம் குறிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வூருக்கருகில் இருந்த சாத்தமங்கலத் தில் சமண கோயிற்குரித்தான நிலங்கள் இருந்த செய்தி அறியப் படுகிறது என்கின்ற போது இரண்டும் ஒன்றாக இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.,

சாந்தம்புத்தூர்

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சுட்டும் ஊர்ப்பெயர் இது.
தர்ப்பண மதனிற் சாந்தம் புத்தூர்
விற்பொரு வேடற் (திரு. கீர்த்தித் – 31-32)
சாந்தம் புத்தூர் என்ற பெயரை நோக்க, சந்தனம் நிறைந்த காட்டில் அமைந்த புதிய குடியிருப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் அமைகிறது.

சாய்க்காடு

சங்க கால ஊர்கள்

சாய்க்காடு

தேவாரத் திருத்தலங்கள்

சாய்க்கானம்

சங்க கால ஊர்கள்

சாலியூர்‌ (நெல்லின்‌ ஊர்‌)

தலையாலங்‌ கானத்துச்‌ செருவென்ற பாண்டியன்‌ நெடுஞ்‌செழியன்‌” நெல்லின்‌ ஊர்‌ கொண்ட உயர்‌ கொற்றவ’ என்று சங்க இலக்கியத்தில்‌ கூறப்பெற்றுள்ளான்‌. இதற்குப்‌ பொருள்‌ எழுதிய நச்சினார்க்கனி௰ர்‌ “நெல்லின்‌ பெயரை”ப்‌ பெற்ற சாலி யூரை௫* கொண்ட உயர்ந்த வெற்றியையுடையவன்‌” என்று கூறினார்‌. மேலும்‌ அவரே “நெல்லின்‌ என்பதிலுள்ள இன்னை அசையாக்கி ‘நெல்லூர்‌’ என்பாரும்‌ உளர்‌ என்றார்‌. நெல்லூர்‌ அல்லது சாலியூர்‌ என்று சங்க இலக்கியத்தில்‌ கூறப்‌ பெற்ற இன்றைய ஆந்திர நாட்டைச்‌ சேர்ந்த நெல்லூர்தான்‌ என்பதில்‌ ஐயமில்லை. ஆந்திர நாட்டு அப்பகுதி வரை அன்றைய தொண்டைமண்டலம்‌ அதாவது தமிழகம்‌ பரவி இருந்தது என்று கருதவேண்டும்‌ தமிழகத்தின்‌ எல்லை அவ்வூர்‌ வரை விரிவடைநீ இருந்தது என்பதையும்‌ சிறப்புற்றிருந்தது என்பதையும்‌ சங்க இலக்கியத்தின்‌ மூலம்‌ உணரமுடிகிறது. சங்க காலத்தில்‌ அவ்வூரின்‌ பெயர்‌ சாலியூர்‌ என வழங்கியதா அல்லது நெல்லூர்‌ என வழங்கியதா என்பதும்‌ ஆய்வுக்குரியதே. சாலி என்பது ஒருவகை நெல்லின்‌ பெயர்‌: என்பதை “சாலி நெல்லின்‌” என்ற சங்க இலக்கியத்தொடர்‌ மூலம்‌ உணர முடிகிறது. ஆகவே “நெல்லின்‌ ஊர்‌“ என்ற தொடர்‌ சாலியூர்‌ என்ற பெயரையே குறிப்பதாகக்‌ கொள்ளுவதில்‌ தவாறொன்றுமில்லை. அப்பெயரே அவ்வூர்‌ தமிழர்‌ ஆட்சியில்‌ இருந்த காலத்‌திலேயே “நெல்லின்‌ ஊர்‌” போன்ற புலவர்‌ குறிப்புகளால்‌ நெல்லூர்‌ என்றே திரிந்து வழங்கியிருக்கலாம்‌ என எண்ணுவதிலும்‌ தவறு ஒன்றும்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை. அவ்வாறு திரிந்து வழங்கிய பெயர்‌ இன்றளவும்‌ வழக்கில்‌ நிலைத்து விட்டிருக்கலாம்.
“கூனி, குயத்தின்‌ வாய்நெல்‌ அரிந்து
சூடு கோடாகப்‌ பிறக்க, நாள்தொறும்‌,
குன்று எனக்‌ குவைஇய குன்றாக்‌ குப்பை
கடுந்தெற்று மூடையின்‌ இடம்‌ கெடக்‌ கிடக்கும்‌,
சாலிநெல்லின்‌, சிறை கொள்‌ வேலி,
ஆயிரம்‌ விளையுட்டு ஆக,
காவிரி புரக்கும்‌ நாடு கிழவோனே.” (பத்துப்‌. பொருத. 242 248)
“சீர்சான்ற உயர்‌ நெல்லின்‌
ஊர்‌ கொண்ட உயர்‌ கொற்றவ.” (௸. மதுரைக்‌. 87 88)

சாவகநாடு

சாவகம்‌ என்பது ஜாவா என்பதாகும்‌. யவனத்‌ தீவு என்றும்‌ கூறப்‌ பெறுவது. ஆபுத்திரனிடம்‌ சாவக நாட்டிலே மழையில்லை. மக்கள்‌ பசியால்‌ வாடுகின்றனர்‌ என்று மரக்கலத்தில்‌ வந்தவர்‌ கூற ஆபுத்திரன்‌ அந்நாட்டிற்கு கப்பலில்‌ சென்றான்‌ என்று மணிமேகலை கூறுவதால்‌ கப்பலில்‌ சென்று சேர வேண்டிய ஒருநாடு சாவகநாடு எனத்‌ தெரிகிறது. வழியில்‌ மணிபல்லவத்தில்‌ கப்பல்‌ தங்கிய செய்தியும்‌ கூறப்படுவதால்‌ மணிபல்லவத்தைக்‌ கடந்தே சாவக நாட்டிற்குச்‌ செல்ல வேண்டும்‌ எளவும்‌ தெரிகிறது.
“சாவக நன்னா ட்டுத்‌ தண்பெயல்‌ மறுத்தலின்‌
களனுயிர்‌ மடிந்த துரவோய்‌ என்றலும்‌
அமரர்கோன்‌ ஆணையின்‌ அருந்து வோர்ப்‌ பெறாது
குமரி மூத்த என்பாத்திரம்‌ ஏந்தி
அங்கந்‌ நாட்டுப்‌ புகுவதென்‌ கருத்தென
வங்க மாக்களொடு மூழ்வுடனேதுக்‌
கால்விசை கடுகக்‌ கடல்‌ கலக்குறுதலின்‌
மாலிதை மணிபல்லவத்திடை வீழ்ந்துத்‌
தங்கிய தொரு நாள்‌ தானாங்‌ கிழிந்தனன்‌
இழிந்தோன்‌ ஏறினன்‌ என்றிகை எடுத்து
வழங்கு நீர்‌ வங்கம்‌ வல்லிருள்‌ போதலும்‌” (மணிமே. 14: 74 84)