ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
கச்சி | கச்சி, காஞ்சி, காஞ்சீபுரம், கஞ்சிபுரம், ஏகம்பம் போன்ற பல பெயர்கள் காஞ்சியைக் குறித்து அமைகின்றன. இன்று செங்கற்பட்டு மாவட்டத்தைச் சார்ந்து அமைவது இவ்வூர். தமிழர் வரலாற்றுக் காலம் தொட்டு, இன்று வரைத் தன் புகழில் மாற்றமின்றித் திகழும் ஊர் இது. சமயக் குரவர்களாலும் அரசியல் வல்லுநராலும் போற்றப்பட்ட ஊர் இன்று தமிழரின் பண்பாட்டு மேன்மை உலகு எங்கும் போற்றப்படும் நிலையில் பட்டு உற்பத்தியில் முன்னிற்கின்ற ஊர் இது. தாண்டை நாட்டின் கண் எனத் திகழும்பதி என்றியம்பும் நிலை இதன் சிறப்பை எடுத்தியம்பும். வஞ்சி மரங்களால் பெயர் பெற்ற வஞ்சி மாநகரம் போன்று காஞ்சி மாங்களால் பெயர் பெற்றது. காஞ்சி காஞ்சனபுரம் என்பதே காஞ்சிபுரம் என மருவிற்று போன்றபிற பல எண்ணங்களும் உண்டு. இதனுள் அமைந்த பல கோயில்கள் மேலும் பல பெயர்களையும் இதற்கு வழங்கியிருக்கக் காண்கின்றோம். ஏகம்பம் ஏகம்பர நாதர் கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் கோயில் நிலையில் எழுந்த பெயர் இங்கு தலமரம் மா. தலவிருஷமாகிய மாவடியின் கீழ் எழுந்த பிரான். ஏகம் + ஆம்ரம் — மாமரம் = ஏகாம்ரம் – ஏகாம்ர நாதர் – ஏகாம்பரநாதர் என்றா யிற்று என்று ஏகம்பம் என்ற பெயர்க் காரணம் குறிப்பர். |
கச்சி | சங்க கால ஊர்கள் |
கச்சி / கச்சிப்பேடு | கச்சி என்ற பெயரையே சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. பின்னர்தான் காஞ்சி என்ற பெயரையேக் காண்கின்றோம். கச்சி என்ற பெயர் (சீந்தில் என்பது பொருள்) தாவரப் பெயரே. காஞ்சி என்ற பிற்காலப் பெயரும் தாவரப் பெயர் அடிப்படையில் அமைந்ததே, எனவ கச்சி, காஞ்சி, என்ற இரண்டு பெயருமே தாவரப் பெயர் அடிப்படையில் அமைந்தனவே எனக் கூறுவதில் தவறொன்றுமில்லை, செங்கற்பட்டு மாவட்டத்தின் பழைய நகரம் கச்சி, கச்சி என்ற நகரமும் காஞ்சி என்ற நகரமும் ஒன்று என்றும், இரண்டும் வெவ்வேறான தனித்தனி இரு நகரங்கள் என்றும் இருவேறு வகையான கருத்து உள்ளது. இன்றுள்ள காஞ்சி நகரத்திற்குக் கிழக்கிலுள்ள நிலப் பரப்பிலேயே சங்க காலக் காஞ்சி மாநகர் அமைந்திருந்தது என்றும் கருதுன்றனர். கச்சி மாநகரம் ஏகாம்பரேசுவரர் கோயில், கச்சபேசர் கோயில், உலகளந்த பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்குக் கிழக்கிலும், யதோத்தகாரி கோயிலுள்ள பகுதிக்கும் திருக்காலி மேட்டுக்கும் வடக்கிலும் அமைந்து இருந்திருக்க வேண்டும் என்று கருதுவது பொருத்தமாகும். கச்சி மாநகரம் தாமரை மலர் போன்ற அமைப்புடையதாக இருந்தது. அதனைச் சுற்றிலும் அகழி இருந்தது. அகழியைச் சுற்றிக் காவற்காடு இருந்தது. கச்சியில் சேலைகள் இருந்தன. கச்சிப்பேடு என்பது கச்சியின் புறநகர் என்று பொருள்படும். பெரும்பாணாற்றுப்படை பாடப்பெற்ற சங்க காலத்திலும் இக் கச்சிப்பேடு இருந்தது என்பதைக் கச்சிப்பேட்டு நன்னாகையார், கச்சிப் பேட்டு இளந்தச்சனார், கச்சிப் பேட்டுப் பெருந்தச்சனார் போன்ற வழக்காறு கொண்டு நன்கு அறியலாம். திருவெஃகாக் கோயிலுள்ள இடம் முதற் பராந்தகன் காலத் தில் (கி.பி. 907..953) கச்சிப்பேடு என வழங்கப் பெற்றிருக்கிறது. பேடு என்பது நகரத்தின் வெளிப்பகுதியை (புறநகர்ப் பகுதி)க் குறிப்பதாகும். பேடு என்னும் இச்சொல்லே காலப்போக்கில் பேட்டை என மாறியதுபோலும். சிறிய காஞ்சீபுரத்துக்குக் கிழக்கில் நாசரத்துப் பேட்டை, ஐயன் பேட்டை, நாயக்கன் பேட்டை என்பனவும் பெரிய காஞ்சிபுரத்துக்கு வடக்கிலும் வட மேற்கிலும் பஞ்சுப்பேட்டை, ஒலிமுகமது பேட்டை என்பனவும் ஒப்புநோக்கத்தக்கன. (சென்னையைச் சுற்றி இந்தாதிரிப் பேட்டை, முத்தியாலு பேட்டை, செளகார் பேட்டை முதலிய. பேட்டைகளும் இவை போன்றனவே) இன்றைய காஞ்சிபுரம் பெரிய காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் அட்க்ஸன் (Hodgson) பேட்டை, சிறிய காஞ்சிபுரம் எனப் பலப் பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. அட்க்ஸ்ன் பேட்டைப் பகுதியிலேதான் திருவெஃகா அமைந்துள்ளது. பெரிய காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரேசுவரர் கோயில், முதலாம் ஆதித்த சோழன். காலத்தில் (கி.பி.850 907) கச்சிப்பேட்டில் அமைந்திருந்தது. பெரிய காஞ்சபுரத்துப் புத்தேரி தெருவில் உள்ள கச்சபேசுவரர் கோயில் கச்சிப்பேட்டை சேர்ந்தது என்று முதலாம் இராசராசன் (இ.பி. 985 1012) காலத்துக் கல்வெட்டு ஓன்று தெரிவிக்கின்றது. அதற்குச் சிறிது வடகிழக்கில் உள்ள உலகளந்த பெருமான் கோயில் (ஊரகம்)எஏன்பதும் கச்சிப்பேட்டைச்சேர்ந்தது என்பதும் உத்தம சோழன் (இ.பி. 969 985) கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. முதற் பராந்தகன் (இ.பி. 907 955) காலத்தில் கயிலாசநாதர் கோயில் கச்சிப்பேட்டு பெரிய திருக்கற்றளி எனப் பெற்றது. முதலாம் இராசராசன் மகனான முதலாம் இராசேந்திரன் (கி,பி. 1012 1044) வெளியிட்ட திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் இக் கச்சிப்பேடு “எயிற்கோட்டத்து எயில் நாட்டு நகரம் கச்சிப்பேடு” என்று குறிக்கப் பெற்றுள்ளது. உத்தம சோழன் காலத்தில் சோழர் அரண்மனை கச்சிப்பேட்டிலேதான் இருந்திருக்கிறது. சிறிய காஞ்சிபுரம் சோழர்காலத்தில் அத்தியூர் என வழங்கப் பெற்றது. அது “எயிற்கோட்டத்து எயில்நாட்டு அத்தியூர் என வழங்கப் பெற்றது. அது அக் காலத்தில் காஞ்சிநகரத்தின் பகுதி யன்று எனவும் தெரிகிறது. மணிமேகலைக் காலத்தில் தொண்டை நாட்டின் தலைநகரமாகக் காஞ்சிநகர் விளங்கியது. தேவலோகந்தான் மண்ணுலகில் வந்து கிடந்ததோ என்று மதிக்கும்படியாக இருந்தது காஞ்சு” என்று மணிமேகலை புகழ்கிறது. காஞ்சி என்பது பொன். காஞ்சி நகர் பொன்னகர் இப்பெயர் காஞ்சியின் அழகையும் வளத்தையும் குறிக்கிறது. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு சோழமன்னர்கள் ஆண்டு வந்தனர். அந்த நகரத்தில் தவம்புரிவோர், சமயவாதிகள் பலர் “இருந்தனர். இதனால் “தொண்டைநாடு சான்றோர் உடைத்து” என்னும் பெருமை பெற்றது. பதினெட்டு மொழிகளைப் பேசும், பலநாட்டு மக்களும் அந்நகரத்தில் இருந்தனர், அந்நகரின் நடுவில் புத்தர் கோயில் இருந்தது. நகரின் தென் மேற்கில் ஒரு பூஞ்சோலை, குளம், சோலையில் புத்தபீடிகை இவை அமைக்கப்பட்டிருந்தன. இச்செய்திகள் மணிமேகலை நூல் தருவன. காஞ்சி என்ற ஊர்ப்பெயர் மரப்பெயரால் பெயர் பெற்றது பிற்காலத்தில் புரம் என்ற பின் ஒட்டுடன் இணைந்து காஞ்சிபுர மாயிற்று. இன்று மக்கள் பேச்சு வழக்கில் காஞ்சி என்றும் கஞ் புரம் என்றும் வழங்குகின்றனர். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாகிய இரண்டாம் இராசாதிராசனின் கல்வெட்டு ஒன்றில் காஞ்சி என்றே இவ்வூர் குறிக்கப்பெற்றுள்ளது. சங்ககாலத்தில் கச்சி என வழங்கப்பெற்று, காலப் போக்கில் காஞ்சி என்ற பெயர் நிலைத்ததோ என்று எண்ணவும் இடமளிக் கிறது. நற்றிணையில் 123ஆம் பாடல் காஞ்சிப் புலவனார் பாடியது. 144 மற்றும் 213 ஆம்பாடல்கள் கச்சிப் பேட்டுப் பெருஞ்சாத்தனார் பாடியவை. 266 ஆம் பாடல் கச்சிப் பேட்டு இளந்தத்தனார் பாடியது. குறுந்தொகையில் 30, 172, 180, 192, 197, 287 ஆகிய பாடல் கள் கச்சிப்பேட்டு நன்னாகையார் பாடியவை. 213 மற்றும் 216 ஆகிய பாடல்கள் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன் பாடியவை. |
கச்சி அனேகதங்காவதம்(கச்சி என்பது பழம்பெயர். காஞ்சி என்பது பிற்காலப் பெயர்) | தேவாரத் திருத்தலங்கள் |
கச்சி ஏகம்பம் | தேவாரத் திருத்தலங்கள் |
கச்சி மேற்றளி | தேவாரத் திருத்தலங்கள் |
கச்சிநெறிக் காரைக்காடு | தேவாரத் திருத்தலங்கள் |
கச்சூர் | திருக்கச்சூர் என்று இன்று சுட்டப்படும் இத்தலம் செங்கற் பட்டு மாவட்டத்தில் அமைகிறது. சுந்தரர் பாடல் பெற்ற தலம். சேக்கிழாராலும் சுட்டப்படுகிறது ( ஏயர் 174, 177). கச்சூரில் உள்ள கோயில் ஆலக் கோயில் எனச் சுட்டப்படுகிறது. மாலை மதியே மலைமேல் மருந்தே மறவேனடியேன் வயல் சூழ்ந்த ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயிலம்மானே எனப் பாடுகின்றார் சுந்தரர் ( 41-5 ) * திருமால் அமுதம் வேண்டி ஆமையாயிருந்து பூசித்த காரணத்தாலும் ஆலமரம் இத் தலத்துக்குரிய விருட்சமாக இருத்தலாலும் இப்பெயர் பெற்றது. ( கச்சபம் – ஆமை ) கச்சப ஊர் கச்சூர் என்றாயது போலும் என்பர் திரு. சதாசிவச் செட்டியாரவர்கள் இதனை நோக்க முதலில், ஆலமரங்களின் மிகுதி காரணமாகக் கோயில் ஆலக் கோயில் என்ற பெயர் பெற்று, பின்னர் இறை செல்வாக்கு பெற்று. புராணக்கதை காரணமாக, கச்சப ஊர் என வழங்கப்பட்டு, பின்னர் கச்சூர் என்று வழக்கில் அமைந்தது போல் தோன்றுகிறது. |
கச்சூர் ஆலக்கோயில் | தேவாரத் திருத்தலங்கள் |
கஞ்சனூர் | கஞ்சனூர் என்றே இன்றும் வழங்கப்படும் இவ்வூர் இன்று தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. அப்பர் பாடல் பெற்றது இத்தலம். கஞ்சன் பிரமன் வழிப்பட்டதால் இப் பெயர் என்பர். பெரிய புராணத்திலும் இவ்வூர் குறிப்பிடப் படுகிறது ( 34, 292-4 ). |
கஞ்சனூர் | தேவாரத் திருத்தலங்கள் |
கஞ்சாறூர் | மலை செய் மதிற் கஞ்சை மானக் கஞ்சாறன் என்னும் வள்ளல் ( நம்பி – திருத்தொண்டர்-13 ) |
கடந்தை | பெண்ணாகடம் என்றும் பிறிதொரு பெயரைக் கொண்டு திருக்கடந்தை என, இன்று தென்னார்க்காடு மாவட்டத்தில் அமையும் ஊர் இது. அப்பர், சம்பந்தர் பாடியுள்ள தூங்கானை மாடமாகிய, சிவன் கோயிலைக் கொண்ட ஊர் |
கடம்பந்துறை | இன்று குழித்தலை என்று வழங்கப்படும் இவ்வூர் திருச்சி மாவட்டத்தில் அமைகிறது. கோயில் கடம்பர் கோயில் என்று வழங்கப்படுகிறது. அப்பர் பாடல் பெற்றுத்தலம் கடப்ப மரங்கள் நிறைந்த நீர்த்துறை என்ற பொருளில் பெயர் கொண்ட தன்மையை இவ்வூர்ப் பெயரே காட்டுகின்றது. தவமரம் கடம்பு என்பதும் இணைத்து நோக்கத்தக்கது. கோயிலின் சிறப்பு காரணமாகக் கடம்பர் கோயில் என்ற வழக்கு அமைந்தது எனத் தோன்றுகிறது. இதனை,. |
கடம்பந்துறை | தேவாரத் திருத்தலங்கள் |
கடம்பனூர் | கடம்பன் என்னும் சொல் ஒரு பழைய குடியையும், முருடன் என்ற பொருளையும் குறிக்கும் சொல். முரட்டுத் தன்மை வாய்ந்த ஒரு பழைய குடியைச் சார்ந்தவனின் களர் என்.ற பொருளில் இவ்வூரின்பெயர் அமைந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. சாண்டில்யன் என்ற சங்ககாலப் பூலவா் இவ்வூரினர். ஆகவே கடம்பனூர்ச் சாண்டில்யன் எனப் பெயர் பெற்றார். குறுந்தொகை 307 ஆம்பாடல் கடம்பனூர்ச் சாண்டில்யன் பாடியது. |
கடம்பின் பெருவாயில் | கண்ணகை பைவ் _ கடம்பு என்று மரவகை நிறைந்த பகுதியாய் இருந்து இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று எண்ணவாய்ப்பு இருக்கிறது. பதிற்றுப்பத்தில் நான்சாம் பத்தின் பதிகத்தில் கடம்பின் பெருவாயில் என்ற ஓர் ஊர்ப் பெயர் குறிக்கப் பெற்றுள்ளது. சேரமன்னன் நார்முடிச்சேரல் என்பவன் இவ்வூரில் நன்னனை வென்று, அவன் கரவல் மரமாகிய வாகையைத் தடிந்து வெற்றி கொண்டான் என்பது செய்தி. கடம்பர்களின் நாட்டின் நகர் கடம்பின் பெருவாயில் போலும். நன்னன் பாழியில் நிறுச்தியிருந்த சேனையுடன் போர் புரிந்தான் என்று யூகிக்க முடிகிறது, பாழி நன்னனின் ஏழில் குன்றத்தைச் சார்ந்தது. அதையடுத்தே கடம்பின் பெருவாயில் என்ற ஊர் இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றுகிறது. |
கடம்பின் பெருவாயில் | சங்க கால ஊர்கள் |
கடம்பின் பெருவாயில் | சங்க கால ஊர்கள் |
கடம்பூர் | இன்று மேலைக் கடம்பூர் எனச் சுட்டப்படுகின்ற இத் தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. ஞானசம்பந்தராலும், அப்பராலும் பாடல் பெற்ற தலம் இது. இத்தலமும் கடப்ப மரங்கள் நிறைந்த தன்மையால் பெயர் பெற்றிருக்கலாம் என்பது இவ்வூர்ப் பெயரைப் பார்க்கத் தோன்றுகிறது. கடம்பு + ஊர் – கடம்பூர். கடம்பூரில் உள்ள கோயில் கரக் கோயில் என்று சுட்டப்படுகிறது. கடம்பூர் கரக் கோயில் ( சுந் – தே 2-5 ). கரக் கோயில் என்பதற்குப்பல காரணம் கூறினாலும் . சக்கரக் கோயில் என்ற கி,நாச்சிமுத்து அவர்களின் கருத்தே பொருத்தமானதாகத் தோன்றுகிறது. ஏனெனில் கோயில் கர்ப்ப இல்லின் அடிப்பாகம் இரத வடிவில் குதிரைகள் பூட்டிய நிலையில் உள்ளது. எண்ணத்தைக் காணும்போது இரதத்தின் மேல் கோயில் அமைந்த காரணம் கருதி, சக்கரக் கோயில் எனப்பட்டு. கரக் கோயில் என நின்றிருக்கலாம். மேலும் இரதக் கோயில் என்பது கரக் கோயிலாகத் திரிந்திருக்குமோ என்பதும் ஆய்வுக்குரியது. எனவே இதுவும் காவிரிக் கரையில் உள்ள தொரு ஊர். கடப்ப மரங்கள் நிறைந்த பிற ஊர்ப் பெயரினின்றும் இதனைப் பிரித்துணர்த்த இதனைக் கடம்பூர் என்றும், முன் குறிப்பிட்டதனைக் கடம்பந்துறை எனவும் பெயர் சுட்டி வழங்கினரோ எனவும் எண்ணக் கூடுகிறது. |
கடம்பூர் | தேவாரத் திருத்தலங்கள் |
கடவூர் | திருக்கடவூர் திருமெய்ஞ்ஞானம் என்று இன்று இரண்டு பெயரிலும் சுட்டப்படும் இவ்வூர் மூவர் பாடலும் பெற்றதாக அமைகிறது. இவ்விலக்கியக் குறிப்புகள் கடவூர் வீராட்டானத்தையும், கடவூர் மயானத்தையும் தெரிவிக்கின்றன. எனவே கடவூரில் அமைந்திருந்த இரண்டு கோயில்கள் இவை எனத் தெரிகின்றன. இன்று கடவூர் வீரட்டம் என்பது கடவூர் என்று நின்க, கடவூர் மயானம் என்பது மெய்ஞ்ஞானம் என்று சுட்டப்படும் தன்மையைக் காண்கின்றோம். இரண்டும் 13 கிலோமீட்டர் தொலைவி லேயே இருப்பதால் இரண்டும் முதலில் ஒரே ஊராகத்தான் இருந்திருக்க வேண்டும் ; அதற்காகத்தான் வீரட்டானம், மயானம் என்று தனித்து குறிப்பிட்டிருக்கின்றனர் எண்ணம் என்ற வெளிப்படையானது. மேலும் மயானம் என்ற சொல்லை நோக்க அன்றும் மக்கள் இதனுள் வசித்திருக்க மாட்டார்களோ கோயில் மட்டுமே இங்கு அமைந்திருக்கக் கூடுமோ என்று எண்ணத்தோன்றுகிறது. மேலும் சுந்தரர் பாடலைக் கொண்டு நோக்கவும் இவ்வெண்ணம் உறுதிப்படுகிறது. |
கடவூர் மயானம் | தேவாரத் திருத்தலங்கள் |
கடவூர் வீரட்டம்(திருக்கடையூர்) | தேவாரத் திருத்தலங்கள் |
கடிகை | வைணவர் போற்றும் திருமால் கோயில் தலம். சோளங்கிபுரம் எனச் சுட்டப்படுகிறது. |
கடிக்குளம் | இன்று கற்பகனார் கோயில் என்றும் கற்பகனார் குலம் என்றும் சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து மைகிறது. இன்றைய இப்பெயர் சிவனின் பெயரான கற்பகேஸ்வரர் என்பதன் செல்வாக்குக் காரணமாக ஏற்பட்டது என்பது தெளிவான ஒன்று. கடிக்குளம் என்பது மணம் கொண்ட குளம் காரணமாக எழுந்தது என்பது சம்பந்தர் பாடல் வழிப் புலனாகின்றது |
கடிக்குளம் (கற்பகனார் குளம்) | தேவாரத் திருத்தலங்கள் |
கடித்தானம் | மலையாள நம்மாழ்வாரால் பாடப்பட்ட தலம். இன்று நாட்டைச் சார்ந்து அமைகிறது. செங்கணாச் சேரியிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ளது. பதினொரு பாசுரங்களில் திருமாலைப் பரவுகின்றார் ஆழ்வார். செல்வர்கள் வாழும் திருக் கடித்தானம் (2909) பூத்த பொழில் தண் திருக்கடித்தானம் (2914 என இவர் இவ்வூரின் சிறப்பு காட்டுகின்றார். மணத்தையுடைய இடம் எனப் பொருட்படும் இவ்வூர்ப் பெயர் என்கின்ற கருத்து ஏற்புடையது. |
கடியலூர் | உருத்திரங்கண்ணனார் என்ற சங்க காலப் புலவர் இவ் வூரினர். ஆகவே கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனப் பெற்றார். கடியலூர் பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஊர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது. குறுந்தொகையில் 352 ஆம் பாடலும், அகநானூரற்றில் 167 ஆம் பாடலும் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியவை, |
கடியலூர் | சங்க கால ஊர்கள் |
கடுவாய்க்கரைப்புத்தூர் | இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டார் கோயில், ஆண்டாங் கோயில் என்று அழைக்கப்படுகின்றது இவ்வூர். திருநாவுக்கரசர் இத்தலத்து இறை பற்றிப் பாடிய ஒரு பதிகம் தேவாரத்துக்கு அமைகிறது. இப்பெயர்க் காரணத்தை ஓரளவு ஊகிக்கும் தன்மையில் இப்பாடல்கள் அமைகின்றன. |
கடுவாய்க்கரைப்புத்தூர் | தேவாரத் திருத்தலங்கள் |
கடைமுடி | தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற கடைமுடி குறித்து இரண்டு வழக்குகள் அமைகின்றன. சோழ நாட்டில் அமையும் கீழூர், கீழையூர் என்பதே இது என்பர் ஒரு சாரார். ஆயின் மு. இராகவையங்கார் முடி கீழூர் இல்லை என மறுக்கின்றார். தஞ்சாவூரிலேயே இருக்கிறது என்று இவரும் குறிப்பிட்டாலும் கோவிலடி என வழங்கும் பேரூருக்குப் பக்கத்தில் கிழக்கே 11/2 மைலில் உள்ள சென்னப் பூண்டியே என்கிறார் இவர். இந்நிலையில் பெயர் பற்றிய விளக்கம் தெளிவாகவில்லை. சம்பந்தர், |
கடைமுடி | தேவாரத் திருத்தலங்கள் |
கடையக்குடி | திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகம் என்னும் பகுதியுள் (தே -285) சிவத்தலங்களுள் போற்ற இடர் போகும் தலங்களாகக் குடி என்ற பொதுக் கூறு கொண்ட தலங்களைக் குறிப்பிடுகின்றார். |
கட்டிடம் போன்றவற்றை ஒட்டியன | செயற்கையாக உருவாக்கப்படும் கட்டிடம் போன்றவற்றைக் குறித்து வரும் சொற்கள் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக வந்துள்ளன. ஆசிரமம், ஆலை, கொட்டம், கொட்டாரம், கோட்டை, கோயில், சத்திரம், சாவடி, பங்களா, பழஞ்சி, பள்ளி, மடம், மந்தை, ரோடு, வீடு, ஸ்டேசன் ஆகிய வடிவங்கள் ஊர்ப்பெயர்கலின் பொதுக்கூறுகளாக வந்துள்ளன. |
கட்டூர் | சங்க கால ஊர்கள் |
கண மங்கலம் | முத்தி நாயனார் பிறந்த ஊரான இ. இன்று கணமங்கலத் திடல் என வழங்கப்படுகிறது. திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற திருத்தண்டலை நீணெறி என்ற சிவன் கோயில் தலத்தைப் பக்கத்தில் கொண்ட ஊர். இன்று இக்கோயிற் பகுதி தண்டலைச் சேரி என வழங்கப்படுகிறது. |
கண்டமங்கலம் | தென் ஆற்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டத்திலும், தஞ்சாவூர் |
கண்டியூர் | திருக் கண்டியூர் என வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர். மாவட்டத்தில் அமைகிறது திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் இருவராலும் பாடல் பெற்ற தலம் கண்டியூர் என்றால் வல்வினை போம் என்பது நாவுக்கரசர் கூற்று (307-7). இதன் செழிப்பினைச் செங்கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திருக்கண்டியூர் என்கின்றார் சேக்கிழார் (பெரிய 34 351-4). பாடல்களினின்றும் இவ்வூர்ப் பெயர்க் காரணம் விளங்கவில்லை. எனினும், கண்டி என்பதற்கு மந்தை என்றும் எழுபத்தைந்து ஏக்கருள்ள ஒரு நில அளவை என்றும் தமிழ் லெக்ஸிகன் குறிப் பதைக் காண மந்தை வெளியாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. (vol [ [ pa | பக் 689) சிவபெருமான் பிரமாவின் தலையைக் கொய்த இடம் ஆதலால் பெற்ற பெயர் என்பர். திருமங்கையாழ்வார் பாடலும் இவ்வூர் பற்றி. இங்கு திருமால் குடி கொண்டு இருக்கும் நிலை பற்றி பேசுகிறது. (திருக்குறுந் -19) |
கண்டியூர் | தேவாரத் திருத்தலங்கள் |
கண்டியூர் வீரட்டம் | தேவாரத் திருத்தலங்கள் |
கண்டீரம் | கண்டீரம் என்ற சொல் சதுரக்கள்ளி என்ற பொருளையுடையது. இது மலைப்பகுதியில் காணும் தரவர வகை, இவ் வகைத் தாவரம் நிறைந்த பகுதி என்னும் பொருளில் கண்டீரம் என இவ்வூர் பெயர் பெற்றிருக்க வாய்ப்பு உண்டு, பெருநள்ளி என்ற வள்ளல் கண்டீரம் என்ற ஊரின் தலைவன். எனவே கண்டீரக் கோப் பெருநள்ளி எனப் பெற்றான். இவனை வன்பரணர் பாடிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய கண்டீரக்கோப் பெருநள்ளி தோட்டி என்னும் மலைக்கும் அதைச் சார்ந்த மலை நாட்டுக்கும் தலைவன் எனத் தெரிவதால் கண்டீரம் என்பது தோட்டி, மலைப்பகுதியைப் சார்ந்ததாக இருக்குமோ என்று எண்ணச் தோன்றுகிறது. புறநானூற்றில் 148 முதல் 151 வரையுள்ள பாடல்கள் வன் பரணர் கண்டீரக்கோப் பெருநள்ளியைப் பாடியவை. |
கண்டீரம் | சங்க கால ஊர்கள் |
கண்ணங்குடி | திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற தலம் திருக் கண்ணங் குடி |
கண்ணபுரம் | திருக்கண்ணபுரம் என்று வழங்கப்படும் ஊர் தஞ்சையைச் சார்ந்து அமைகிறது. ஐந்து கிருஷ்ணன் கோயில் தலங்களுள் இதுவும் ஒன்று. இவ்வூர் வைணவ மக்கள் மனத்தைப் பெரிதும் கவர்ந்தது என்பதும், இங்குள்ள திருமால் பெருஞ்சிறப்புடை யவனாகக் கருதப்பட்டான் என்பதும் இதைப் பற்றிக காணப்படும் மிகுதியானப் பாடல்கள் சுட்டும் நிலையாகக் கொள்ளலாம். பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகரப்பெருமாள். திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் இத்தலமும் சுட்டப்படு கணபுர நகர் என்றும் (நாச்சி -535) கணபுரம் என்றும் (குல -719) கண்ணபுரம் என்றும் (திருமங் (1648) இவ்வூர் பல நிலைகளில் சுட்டப்படுகிறது. கன்னி மாமதிள் புடை சூழ் கண்ணபுரம் (1650) கார்வானம் நின்றதிரும் கண்ணபுரம் (1651) கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரம், (1652) கற்ற நூல் மறையாளர் கண்ணபுரம் (1655) போன்ற பல பாடலடிகள் கண்ணபுரத்தின் சிறப்பு சுட்டும் சில சான்றுகள். கிருஷ்ணன் காரணமாகப் பெயர் பெற்ற ஊர் இது என்பது கண்ண (ன்) புரம் என்ற பெயரிலேயே தெரிகிறது. கண்ணன் மிகமிக மகிழ்ந்து நித்திய வாசம் செய்யத் தேர்ந்தெடுத்த தலம் ஆனதால் இதற்குக் கண்ணபுரம் என்று பெயர் எனவும், கிருஷ்ண ரண்ய ஷேத்திரம். அஷ்டாஷர மகாமந்திர. சித்தி ஷேத்திரம் எனப் பிறப்பல பெயர்கள் உடையது எனவும் அறிகின்றோம். |
கண்ணார் கோயில் | குறுமாணக் குடி என்ற பெயரில் இன்று தஞ்சை மாவட்டத்தில் அமைகிறது இவ்வூர். வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது. இந்திரன் சாபம் நீங்கப் பெற்றத் தலம். இறைவன் கண்ணாயிர நாதர். தீர்த்தம், இந்திரதீர்த்தம் போன்ற எண்ணங்கள் இத்தலத்துடன் இந்திரனுக்குரிய தொடர்பு காட்டும் நிலையில் அமைகிறது. மேலும் மாவலிபால் சென்று மூவடி மண் கேட்ட வாமன மூர்த்தி ஆகிய குருமானி வழிபட்டமையால் பெற்ற பெயர் என்றும் அறிகின்றோம்.. இதனை நோக்க திருக் கண்ணார் கோயில் என்பது இங்குள்ள சிவன் கோயில் சிறப்பு நிலையில் கோயிற் பெயரால் ஊர்ப்பெயர் சுட்டும் நிலையில் அமைந்தது எனினும் இதன் பழம்பெயர் இப்போதைய பெயரே எனத் தோன்றுகிறது. இப்பெயர் பற்றி நோக்கும் போது இன்று குருமாணக் குடி எனச் சுட்டப்படினும், கல்வெட்டில் குரு வாணியக்குடி பெயர் காணப்படுவதை நோக்க வாணியர் கள் நிறைந்த இடம் என்ற பெயரில் அமைந்த வாணியக் குடி என்ற பெயர், சிறு கிராமத்தைக் குறிக்கும் நிலையில் வாணியக் குடி என்றழைக்கப்பட்டு, இன்று குறுமாணக் குடி என்று திரிந்து வழங்கப்படுகிறது எனல் பொருந்தும். * 3 என்ற – ஞானசம்பந்தரும், |
கண்ணார்கோயில் | தேவாரத் திருத்தலங்கள் |
கன்றாப்பூர் | கண்ணாப்பூர் என்று வழங்கப்படும் இவ்வூர் இன்று தஞ்சை மாவட்டத்தில் அமைகிறது. திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலம் இது (275) இவரின் பாடல்களினின்றும் இவ்வூர்ப் பெயர் விளக்கம் தெரியவில்லை. சேக்கிழார் வழியில் சிவத்தலங்கள் நூலாசிரியர் (பக் 203) சைவப் பெண் ஒருத்தி வைணவனுக்கு வாழ்க்கைப்பட்டு மாமியார் வீட்டார் காணாதபடி கன்றுக்குட்டி கட்டி இருந்த முளை (ஆப்பு) யைச் சிவமாகப் பாவித்து வழிபட்டு வந்தாள். ஒரு நாள் கணவன் அதைக் கண்டு, கோடாரியால் வெட்ட அதிலிருந்து சுவாமி வெளிப்பட்டார். அதனால் கன்றாப் பூர் என்று பெயர் பெற்றது என்கின்றார். பிற எண்ணங்கள் தெளிவுறவில்லை. |
கன்றாப்பூர் | தேவாரத் திருத்தலங்கள் |
கபிலநெடுநகர் | சங்க கால ஊர்கள் |
கயத்தூர் | கயத்தார் என்பது நீர்நிலை காரணமாக உண்டாகிய பெயர். கயம் என்ற சொல் குளம் என்னும் நீர்நிலையைக் குறிக்கும் கிழான் என்ற சங்க காலப் புலவர் இவ்வூரினர். ஆகவே கயத்தூர் கிழான் எனப் பெயர் பெற்றார். குறுந்தொகை 354 ஆம் பாடல் இவர் பாடியது. கயத்தூர் சோழ நாட்டிலுள்ளது. |
கயிலாயம் | தேவாரத் திருத்தலங்கள் |
கரம்பனூர் | கரம்பனூர் உத்தமன் என, திருமாலை, திருமங்கையாழ்வார் பாடும் நிலையில் இவ்வூர் பற்றி அறிகின்றோம். உத்தமன் கோயில் என்ற பெயரையும் இதற்குக் காண்கின்றோம். இதனை நோக்க, கரம்பனூர் ஊர்ப்பெயர் என்பது தெரிகிறது. |
கரவீரம் | கரவீரம்’ என்பது கரையபுரம்’ என்று வழங்கப்பட்டு, தஞ்சை மாவட்டத்தில் இன்று அமைகிறது. கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒரு மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. இன்றும் கரவீரம் கோயிலில் பொன்னலரியே தலவிருட்சமாகப் போற்றப்படுகின்றது என்ற எண்ணத்தை இப்பெயர் குறித்துத் தருகின்றார் ரா.பி,சேதுப்பிள்ளை. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலத்தைப் பற்றி (58) திருநாவுக்கரசரும் குறிப்பிடுகின்றார் (265-6). |
கரவீரம் | தேவாரத் திருத்தலங்கள் |
கருகாவூர் | கருகாவூர் இன்று காளாவூர் எனச் சுட்டப்படுகிறது. தஞ்சையைச் சார்ந்தது. ஞானசம்பந்தர் அப்பர் பாடல் பெற்றது இத் தலம் (304, 229). ஆதரவில்லாத பெண்ணுக்கு இறைவி மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததனால் இத்தலம் கருகாவூர் எனப் பெயர் பெற்றது என்பர் என்ற எண்ணத்தைக் கேட்கின் றோம். இலக்கியப் பாடல்களின் நிலையில் இப்பெயர்க் காரணம் தெளிவாகவில்லை. |
கருகாவூர் | தேவாரத் திருத்தலங்கள் |
கருக்குடி | ஞான மருதாந்த நல்லூர் என இன்றுச் சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் (279). மஞ்சுறு பொழில் வளர் மலி கருக்குடி என இதன் வளத்தை. நாம் உணருகிறோமே தவிர, பெயரின் பொருள் தெளிவு றவில்லை. மருதாந்த நல்லூர் மருத நிலம் அல்லது மருதமரம் காரணமாக ஏற்பட்டதாக இருக்கலாம் |
கருங்குடி(மருதாசலநல்லூர்) | தேவாரத் திருத்தலங்கள் |
கருநாடகம் | சிலப்பதிகாரத்தில் இளவேனில் வந்தபொழுது மன்னர் முன் தோன்றியவர்களைப் பற்றிக் கூறும்பொழுது கருநாடகக் கூத்தரும் தோன்றினர் எனக் கூறப்பெற்றுள்ளது. கருநாடகம் என்பது ஆதியில் கிழக்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கேயுள்ள பீடபூமியைக் குறித்தது. இப்பொழுது மைசூர் இராச்சியமே பண்டைக் கருநாடகமாகும். சென்னை இராச்சியம் முழுமையும் ஆங்கிலேயர் வசமான போது அவர்கள் கிழக்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்கே குமரி முதல் குண்டூர் வளை தாம் அடைந்த பகுதி முழுவதையும் கருநரடகம் என்றழைத்தனர். |
கருந்திட்டைக்குடி | குடி என்று முடியும் ஊர்ப்பெயர் வரிசையில் அமைகிறது இப்பெயர் (திரு நா – 285-3). |
கருப்பறியலூர் | இன்று, மேலைக் காழி என்றும் தலைஞாயிறு என்றும் அழைக்கப்படும் இந்த ஊர் தஞ்சையில் உள்ளது. ஞான சம்பந்தராலும், (167) சுந்தரராலும் பாடல் பெற்ற தலம் இது. கருப்பறியலூர்க் கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட. மயிலாடும் கொகுடிக் கோயில் என சுந்தரர் பாடும் பாடல் (30-1) கருப்பறியலூர் ஊர்ப்பெயர் என்பதையும் கொகுடிக் கோயில் என்பது சிவன் கோயிலைக் குறித்தது என்பதையும் தெளிவாகத் தருகிறது. மேலும் இவர், |
கருப்பறியலூர்(தலைஞாயிறு) | தேவாரத் திருத்தலங்கள் |
கரும்பனூர் | கரும்பு என்ற தாவரப் பெயருக்கும் இவ்வூர்ப் பெயர்க்கும் உள்ள கொடர்பு ஆய்ந்தால் ஏதாவது தோன்றலாம். கரும்பனூர் கிழான் என்ற சங்க கால வள்ளல் வேங்கட நாட்டைச் சார்ந்தவன் என்று நன்னர்கனார் கூறுவதால் கரும்பனூர் என்பது வேங்கட மலையைச் சார்ந்த நாட்டைச் சார்ந்தது என்று எண்ண இடமளிக்கிறது. புறநானூற்றில் 381 மற்றும் 384 ஆகிய இரண்டு பாடல்களும் கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடியவை. |
கரும்பனூர் | சங்க கால ஊர்கள் |
கருவிலி | இப்பெயராலேயே இன்றும் வழங்கப்படும் இவ்வூர் தஞ்சையில் அமைகிறது. அப்பரால் பாடல் பெற்ற இத்தலம் (183) கருவிலி என்றும் கொட்டிட்டை எனவும் சுட்டப்படுகிறது. கருவிலிக் கோலவார் பொழிற் கொட்டிட்டை – 183-2 கருவில் பிறவாதவன் என்ற பெயரில் சிவன் பெயரே இவ்வூர்ப் பெயருக்குக் காரணமா என்பது ஆய்வுக்குரியது. கல்வெட்டிலும் இப்பெயரே காணப்படுகிறது,. |
கருவிலிக்கொட்டிடை | தேவாரத் திருத்தலங்கள் |
கருவூர் | மன்னனுக்கு எல்லா வகையிலும் கருவாக (முக்கியமாக) அமைந்த ஊர் எனப் பொருள்படும்படி அமைந்த ஊராகக் கருத இடமுண்டு. தமிழ் நாட்டில் பண்டை நாளில் சிறந்து விளங்கிய நகரங்கள் பலவற்றுள் கருவூரும் ஒன்று, தற்காலத்தில் கரூர் என வழங்கப் பெறுகிறது. சங்க இலக்கியப் பாடல்கள் கருவூரின் பெருமையை எடுத்தியம்புகின்றன. அந்நகரின் செழிப்பையும், பண்டைப் பெருமையையும் விளக்குகின் றன. ஆன்பொருநை என்னும் ஆம்பிராவதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கருவூர் பண்டைச் சோழமன்னர் முடிபுனைந்து கொண்ட ஐந்து நகரங்களுள் ஒன்று என்பர். இருப்பினும் சேரனின் தலைநகரே கருவூர். ஓதஞானி, கதப்பிள்ளை, கிழார், கீரன், எயிற்றியனார், சேரமான்சாத்தன், பவுத்திரன், கண்ணம்பாளனார், கண்ணம் புல்லனார், கலிங்கத்தார், நன்மார்பன், பூதஞ்சாத்தனார்,பெருஞ்சதுக்கப் பூதநாதனார் ஆகிய புலமை சான்றோர் இவ்வூரினர். நற்றிணையில் 343 ஆம் பாடலும், குறுந்தொகையில் 64, 265, 380 ஆகிய பாடல்களும், அகநானூற்றில் 309. ஆம் பாடலும், புறநானூற்றில் 380 ஆம் பாடலும், 168 ஆம் பாடலும் கருவூர்த் கதப்பிள்ளைச் சாத்தனார் அல்லது கருவூர்க் கதப் பிள்ளைப் பாடியவை. நற்றிணையில் 281, 312 அகியபாடல்கள் கருவூர்க் கீரன் எயிற்றியனார் பாடியவை, குறுந்தொகையில் 71 ஆம் பாடல் கருவூர் ஓதஞானிபாடியது. 170 ஆம் பாடல் கருவூர் கிழார் பாடியது. கருவூர்ச் சேரமான் சாத்தன் பாடியது, 102 பவுத்திரன் பாடியது. அகநானூற்றில் 180, 263 ஆகிய பாடல்கள் கருவூர்க்கண்ணம் பாளனார். பாடியது. 63 ஆம் பாடல் கருவூர்க் சுண்ணம் புல்லனார் பாடியது. 183 அம் பரடல் கருவூர்க் கலிங்கத்தார் பாடியது..277 ஆம் பாடல் கருவூர் நன்மார்பன் பாடியது. 50 ஆம் பாடல் கருவூர்ப் பூதஞ்சாத்தனார் பாடியது. புறநானூற்றில் 219 ஆம் பாடல் கருவூர்ப் பெருஞ்சதுக்கப் பதனார் பாடியது. |
கருவூர் | கரூர் எனச் சுட்டப்படும் இவ்வூர் திருச்சி மாவட்டத்தில் உள்ளது.எறிபத்தர், புகழ்ச்சோழர், கருவூர்த் தேவர் பிறப்பிடம். இக்கருவூர் ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். மேலும் இவ்விலக்கியங்கள் இதனை மணிமதிற் கருவூர் (பெரிய – புகழ்ச் -12) என்றும், எயில் சூழ் கருவூர் (நம் பி – திருத் -9) என்றும் சுட்டுவதை நோக்கவும், சோழ மன்னர்கள் முடி சூட்டிக் கொள்ளும் ஐந்து தலங்களுள் ஒன்றாக இதனைச் சுட்டுவதையும் நோக்க, இக்கருவூர் அரசியல் நிலையிலும் முக்கியத்துவம் பெற்றி ருந்தது எனத் தெரிகிறது. மேலும் பல கல்வெட்டுகளும் இவ்வூரில் அமைகின்றன. கற்பம் தோறும் தவம் செய்த பிரமன் படைப்புத் தொழில் செய்யக் கரு உற்பத்தி செய்த இடம் ஆதலின் ஊர் கருவூர் எனப்பெயர் பெற்றிருக்கிறது என்பர்… இங்குச் சுட்டப்பட்ட கருவூரே, சேரர்களின் தலைநகரான வஞ்சி என்பது பலர் எண்ணமாக அமைகிறது. இக்கருவூர்ப் பகுதி வஞ்சி மரங்கள் அடர்ந்த காடாய் இருந்ததால் வஞ்சுளா ரண்யம் என்று வழங்கப் பெற்றது. நகரமான பின் வஞ்சி மா நகரம் என்ற பெயர் வந்தது என்பர். 1. இரண்டாம் இராசாதிராசன் காலத்து நான்காம் ஆண்டு கல்வெட்டு இவ்வூரை உய்யக் கொண்டார் வள நாட்டு வெண்ணாட்டுக் குலோத்துங்கச் சோழ நல்லூராகிய கருவிலிக் கொட்டிட்டை என்று குறிப்பிட்டுள்ளது. திருநாவுக்கரசு நாயனார் அருளிச் செய்த தேவார திருப்பதிகங்கள் ஐந்தாம் திருமறை- பக். 3. 2. காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், சேய் ஞலூர் என்பன பிற – வேங்கடம் முதல் குமரி வரை (III) பக். 237. 3. வேங்கடம் முதல் குமரி வரை III பக். 237 4. கருவூரே வஞ்சி – பக். 46 5. கொங்கு நாட்டுக் கோயில்கள் – பக், 212 மேலும் இவ்வூர்க் கோயில். இறைச் சிறப்பு காரணமாகப் பசு பதீச்சரம், பாஸ்கரபுரம், கருவூர்த் திருவானிலை என்றெல்லாம் சுட்டப்படுகிறது. |
கருவூர் | சங்க கால ஊர்கள் |
கருவூர் ஆனிலை | தேவாரத் திருத்தலங்கள் |
கறைச்காடு | கறைக்காட்டுக் கண்டனார் என சிவன் கோயில் தலமாகச் சுட்டப்படுவது இவ்வூர் (திருஞா. (265-7). காரைக்காடு என்பது கறைக்காடாக மாறியிருக்க வாய்ப்புண்டு. |
கற்குடி | இன்று உய்யக் கொண்டான் மலை என்ற பெயரில் அமையும் இத்தலம் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. கோயில் மலையின் மீது உள்ளது. மூவர் பாடலும் பெற்ற தலம் இது. மலைத்தலம் என்பதனை ஞானசம்பந்தர் பாடல் விளக்கங்கள் காட்டுகின்றன. |
கற்குடி | தேவாரத் திருத்தலங்கள் |
கலய நல்லூர் | சாக்கோட்டை என்று சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சுந்தரர் பாடல் பெற்ற தலம் இது. அரிசிலாற்றின் தென் கரையில் உள்ள இவ்வூரின் இயற்கை வளம் சுந்தரர் பாடல்கள் மூலம் சிறப்பாகத் தெரிய வருகிறது. |
கலயநல்லூர்(சாக்கோட்டை) | தேவாரத் திருத்தலங்கள் |
கலிக்காமூர் | இன்று அன்னப்பன் பேட்டை எனச் சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்றது இத்தலம். கடற்கரையைச் சார்ந்து அமைந்திருக்கிற தன்மையை இவர் பாடல்கள் விளக்குகின்றன. |
கலிக்காமூர்(அன்னப்பன்பேட்டை) | தேவாரத் திருத்தலங்கள் |
கலிங்கம் | கலிங்கம் தென்னிந்தியாலில் கிழக்குக் கடற்கரையை அடுத்திருந்த பண்டைய நாடுகளுள் ஒன்று. இது கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் கடலுக்கும் இடையே தெற்கில் கோதாவரி ஆறுமுதல் வடக்கில் ஒரிஸ்ஸா வரையில் பரவியிருந்தது. இது இக்கால ஒரிஸ்ஸாவும் கஞ்சமும் சேர்ந்த ஒரு நாடாகும். கஞ்சம் மாவட்டத்திலுள்ள முகலிங்கம் என்ற நகரம் இதன் தலை நகரம். நந்த அரசர் காலத்தில் கலிங்கம் மகத நரட்டோடு சேர்க்கப் பட்டிருந்தது. முதல் இராசேந்திர சோழர் கலிங்கத்தின் வழியாகக் கங்கை வரையில் படையெடுத்துச் சென்று வெற்றி கொண்டு கங்கை கொண்ட சோழர் என்ற பெயர் பெற்றார். கலிங்கத்தில் நடந்த போரில் குலோத்துங்கனின் படைத் தலைவன் தொண்டைமான் அடைந்த வெற்றியைக் கூறுவது கலிங்கத்துப் பரணி. கலிங்க நாட்டு மன்னன் யூகியுடன் போர் செய்த பொழுது யானைக் கொம்பால் அவன் மார்பைக் குத்தியதாகப் பெருங் கதை கூறுகிறது. |
கல் | கல் என்பதை குன்றைக் குறிப்பிடவும் பயன்படுத்தினர். கல்லின் அமைப்பைக் கொண்டு ஊர்களுக்குப் பெயர் வைத்தனர். எடுத்துக்காட்டாக; |
கல்லாடம் | சங்க கால ஊர்கள் |
களந்தை | சுந்தரர் பாடல் உணர்த்தும் ஊர்ப்யெராக இது அமைகிறது. ஆர் கொண்ட வேற் கூற்றன் களந்தைக் கோன் அடியேன் (39-6). இவ்வூர் மரூஉப் பெயர் போன்று தோன்றுகிறது. இன்று களத்தூர் என்றதொரு பெயரைக் காண்கின்றபோது களந்தையும் களத்தூர் போன்றதொரு ஊர்ப்பெயர்த் திரிபாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. |
களர் | திருக்களர் என்று சுட்டப்படும் இவ்வூர் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். சேக்கிழாரும் சிறப்பாக இவ்வூரைச் சித்திரிக்கின்றார். கோங்குலா மலர்ச்சோலை வண்டினங் கிண்டி மாமதுவுண்டிசை செயத் தெங்கு பைங்கமுகம் புடைசூழ்ந்த திருக்களர்.டய என்பது சம்பந்தர் பாடல் (188 – 5). களர் நிலத்தில் அமைந்த கோயிலை ஊராதலின் திருக்களர் என்னும் பெயர் எய்திற்று என்பர். தலவிருட்சம் பாரிஜாதம் காரணமாகப் பாரிஜாத வனம் என்னும் பெயர் உண்டு. ! |
களர் – பாரிசாதவனம் | தேவாரத் திருத்தலங்கள் |
கள்ளில் | ஆத்திரையன் என்ற சங்ககாலப் புலவர் கள்ளில் என்னும் ஊரைச் சேர்ந்தவர் ஆதலின் கள்ளில் ஆத்திரையன் எனப்பெயர் பெற்றார். பெரும்பாலும் மக்கள் வாழும் வீட்டைக் குறிக்கும் ‘இல்’ என்பது சில பழமையான ஊர்ப்பெயர்களில் சேர்ந்திருக்கிறது, திருச்சி மாவட்டத்தில் உள்ள அன்பில் என்ற ஊர்ப்பெயர் ஒப்பு நோக்கத்தக்கது, கள்ளில் என்ற பெயருடன் தொண்டை நாட்டில் ஓர் ஊர் உள்ளது.. குறுந்தொகையில் 293ஆம் பாடலும், புறநானூற்றில் 175, 389 ஆலய பாடல்களும் கள்ளில் ஆத்திரையன் பாடியவை. [அடுத்து வரும் கள்ளூர் என்ற ஊர்ப்பெயரும் இக் கள்ளில் என்ற ஊர்ப்பெயரும் ஒரே ஊரைக் குறிக்கன்றனவா அல்லது வெவ்வேறு ஊரா என்பது ஆய்ந்து முடிவு காண வேண்டிய ஒன்று.] |
கள்ளில் | திருக்கள்ளம், திருக்கண்டலம் எனச் சுட்டப்படும் நிலையில் இன்று அமையும் இவ்வூர் செங்கற்பட்டு மாவட்டம் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது. |
கள்ளில்(சங்ககாலப் புலவர் கள்ளில் ஆத்திரையனார்) | தேவாரத் திருத்தலங்கள் |
கள்ளூர் | மது கிடைக்கும் இடம் அல்லது விற்கும் இடம் நாளடைவில் குடியிருப்பாகி ஊராக அமைந்து கள்ளூர் என்ற பெயரைப் பெற்றிருக்கலாம். சங்ககாலப் பாடல்கள் மூலம் நமக்குக் கடைக்கும் ஊர்ப் பெயர்களுள் கள்ளூர் என்பது ஒன்று. பெண்ணின் அணிநலத்திற்கு உவமையாகவே கூறப்பெற்றுள்ளது. |
கள்ளூர் என்னும் கள்ளில் | சங்க கால ஊர்கள் |
கழாஅர், | கழாஅர் என்னும் ஊர் மத்து என்னும் மன்னனுக்குரியது. நிலவளம் நீர்வளம் மிக்கது என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கீரன் எயிற்றி என்றும் கீரன் எயிற்றியன் என்றும் வழங்கப் பெற்ற சங்க காலப்புலவர் இவ்வூரினர். ஆகவே கழார்க்கீரன் எயிற்றி என்றோ கழார்க்கீரன் எயிற்றியன் என்றோ பெயா் பெற்றார். குறுந்தொகையில் 35, 261, 330 ஆகிய பாடல்களும், அ௧நானூற்றில் 163, 217, 235, 2914 ஆகிய பாடல்களும் இப்புலவர் பாடியவை. |
கழார் | சங்க கால ஊர்கள் |
கழிப்பாலை | தென் ஆற்காடு – மாவட்டத்தைச் சார்ந்து கழிப்பாலை என்ற ஊர் அமைகிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலம் இது.1. சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகள். பக். 12. 2. வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதம் கானிடை நீழலிற் கண்டல் வாழும் கழிசூழ் கலிக்காமூர் -திருஞா- 363- இதனைப் பாலை என்று சுட்டிப்பாடுகின்றார் மாணிக்கவாசகர். அந்தரத்திழிந்து வந்தழகமர் பாலையும். சுந்தரத் தன்மை யொடு துதைந்திருந்தருளியும் (கீர்த்தி – 98-99) என இவர் அழகு வாய்ந்த ஊராக இதனைக் குறிக்கின்றார். திருநாவுக்கரசர். கறங்கோத மல்கும் கழிப்பாலை (6-3) கழியுலாம் சூழ்ந்த கழிப் பாலை (6-5) கண்ணன் பூஞ்சோலை கழிப்பாலை (6-6) கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை (6-7) கைதைமடற் புல்குதென் கழிப்பாலை (107-1) தாட்பட்ட தாமரைப் பொய்கை யந்தண் கழிப்பாலை (107-3) போன்று பலவாறு சித்திரிக்கின்றார். சுந்தரர். கடற் சாரும் கழனிக் கழிப்பாலை என்கின்றார் (23-8). ஞானசம்பந்தர், கடல் சூழ் கழிப்பாலை (175-1) – லங்கள் வந்துல வும் கழிப்பாலை (302-8) பாய்புனல் சூழ் கழிப்பாலை (302-11) கடல் நண்ணும் கழிப்பதி (157-5) கடியார் பொழில் சூழ் (157,2) என்கிறார். சேக்கிழாரும், கன்னாரும் எயில் புடை சூழ் கழிப் பாலை (பெரிய – ஏயர் – 166) என்கிறார். உள்ளது. இவற்றை நோக்க கடல் பக்கம் அமைந்த ஊராக இது இருந்திருக்கும்போல் தோன்றுகிறது. எனினும், இவ்வூர் பற்றி பேசும்போது. தில்லையிலிருந்து 5 கி.மீ. உள்ள திருநெல்வாயில் என்னும் சிவபுரிக் கோயிலுக்கு மிகவும் அருகில் தனி ஆலயமாக பாடல் காலத்திலிருந்த பழைய கோயில் தில்லைக்குத் தென் கிழக்கில் 11 கி.மீ. தொலைவில் திருக்கழிப்பாலை என்எற இடத்தில் இருந்ததாகவும் அது கொள்ளிட நதியால் கொள்ளப் பட்டபையால் அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது என்ற எண்ணம் அமைகிறது. மேலும் இது முன்பு கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் காரைமேடு என்னும் இடத்தில் இருந்தது. அங்கு இருந்தபொழுது கொள்ளிடத்தின் வெள்ளப் பெருக்குத் திருக்கோயிலை முற்றிலும் பாழ் படுத்திவிட்டது. படுகை முதலியார் குடும்பத்தில் திரு பழனியப்ப முதலியார் என்பவர் சிவபுரிக்குத் தெற்கில் கோயில் கட்டி அதில் கழி. பாலை இறைவரையும் இறைவியாரையும் ஏனைய பரிவாரத் தேவதைகளையும் எழுந்தருளிவித்துள்ளனர். இது சிதம்பரத்திற்குத் தென்கிழக்கு சுமார் 3 மைல் தூரத்தில் இருக்கிறது சுருத்தும் இதனோடு தொடர்புடையதாக அமைகிறது. எனவே இடைக்காலத்தில் சுட்டப்படும் கழிப்பாலை என்ற ஊர் இன்று இருக்கும் ஊர் அன்று என்பது தெரியவருகிறது. மேலும் கடற்கரைத் தலமாக இலக்கியங்கள் சுட்டும் இவ்வூரினைக் கொள்ளிட ஆற்றின் கரையில் இருந்தது என்று கூறும் தன்மையும் ஆராய்தற் குரியது. எனினும் ஊர்ப்பெயர் கழி யுடன் தொடர்புடையது என்பது திண்ணமாக விளங்கி நிற்கிறது. எனினும் பாலை என்பதற்குரிய பொருள் விளக்கம் பெறவில்லை. |
கழிப்பாலை(சிவபுரி), | தேவாரத் திருத்தலங்கள் |
கழுக்குன்றம் | திருக்கழுக்குன்றம் என்று வழங்கப்படும் இவ்வூர் செங்கல் பட்டு மாவட்டத்தில் அமைகிறது. கழுகு காரணமாகப் பெற்ற பெயர். இரண்டு கழுகுகள் பூசித்துப் பேறு பெற்றமையின் கழுக் குன்றமாயிற்று என்பர். வேதமே மலையாக நின்றலின் வேதகிரி எனவும் அழைப்பர். மூவராலும் பாடல் பெற்ற ஊர் இது. மாணிக்கவாசகரும் தம் போற்றித் திருவகவலில் திருக்கழுக்குன்றிற் செல்வா போற்றி எனப் பாடுகின்றார். (191) கழுகு பற்றிய எண்ணத்தைத் திருப் புகழ் தருகிறது (கழுகு தொழு வேதகிரி – திருப் -325). |
கழுக்குன்றம் | தேவாரத் திருத்தலங்கள் |
கழுமலம் | சங்க கால ஊர்கள் |
கழுமலம் | கழுமலம் என்னும் பெயருடைய ஒரூர் சேரமன்னன் குட்டுவன் என்பவனுக்குரியது என்று சங்க இலக்கியம் கூறுகிறது. பெரும்பூட் சென்னி என்ற மன்னனின் வரலாற்றோடு இக் கழுமலம் என்ற ஊர் கொடர்புடையது என்றும் கூறுகிறது. சேரனுக்குரிய கழுமலம் என்னும் ஊரை முற்றி, அதன் கண்ணிருந்த கணையன் என்னும் தலைமைப் படைத்தலைவனுட் பட அவ்வூரைக் கைப்பற்றித் தன் நாட்டோடு கூட்டியவன் பெரும்பூட்சென்னி என்னும் சோழமன்னன். பழையன் சோழ மன்னனுடைய படைத்தலைவன். இவன் நன்னன் முதலிய ஆறு படைத்தலைவர்களும் தத்தம் படையோடு கூடியிருந்த பாசறையைப் படை கொண்டு தாக்கப் பெரும்பாலோரைக் கொன்று வீழ்த்திப் பின்னர் அப்பகைவர் படைக் கலனால் விழுப்புண் பட்டு மாய்ந்தனன். இக்களம் கண்டு பெரும் பூட்சென்னி என்னும் சோழ மன்னன் வெகுண்டு எழுந்து கழுமலம் என்னும் ஊரைத்தாக்கி ஆங்கிருந்த கணையன் என்னும் சேரமன்னனுடைய படைத் தலைவர்க்குந் தலைவனாகிய மறவனையும் அக்கழுமலம் என்னும் ஊரையும் கைப்பற்றினன் என்பது வரலாறு) சோழ வளநாட்டில் திருக்கழுமல வளநாடு என்று ஒன்று இருந்ததாகவும் அதன் தலைநகரமே கழுமலம் என்றும் கூறப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தின் சீர்காழி வட்டத்தின் தலைநகரமாகய சீர்காழிக்குக் கழுமலம் என்ற ஒரு பெயரும் இருந்தது என்று கருதப்படுகிறது. இவ்வூர் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்திருப்பதால் சோழர்களின் பட்டத்து யானையை இங்கே கட்டியிருப்பது வழக்கம் என்றும், ‘*கழுமலத்தியாத்த களிறு” என்ற பழமொழிப் பாட்டுத் தொடர் இதையே குறிக்கிறது என்றும் கருதுகின்றனர். சோழநாட்டுக் கழுமலம் ஒரு காலத்தில் சேரர் ஆட்சியில் இருந்து பெரும்பூட் சென்னியால் மீட்கப்பட்டது என்று கருத இடமளிப்பதாகத் தோன்றுகிறது. சோழ நாட்டின் திருக்கழுமல வளநாட்டின் தலைநகராகப் பண்டைக் காலத்தில் விளங்கியது இவ்வூர். |
கழுமலம் | தேவாரத் திருத்தலங்கள் |
காகந்தி | சோழனின் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்திற்குக் காகந்தி என்று ஒருபெயர் இருந்ததாகத் தெரிகிறது. இன்று இப்பெயர் வழக்கில் இல்லை. சோழ மன்னனுக்குக் கணிகை வயிற்றுதித்த ககந்தன் என்பவன், பரசுராமனுக்கு அஞ்சிப் புகார் நகரை விடுத்துச் செல்லலுற்ற தன் தந்தையின் கட்டளையால் அப்பதியைக் காத்தான். ககந்தனால் காக்கப்படுதலின் காகந்தி எனப் பெயரிட்டுச் சென்றான் சோழமன்னன் என்று மணிமேகலைமூலம் தெரிகிறது. நீலகேசியில் வேதவாகச் சருக்கத்தில் “காதம் பலவுங் கடந்த பின் காகந்திக் கடிநகருள்” என இப்பெயருள்ள நகரமொன்று கூறப்பட்டிருக்கிறது. ( உ.வே, சாமிநாதையர் மணிமேகலை முதற்பதிப்பு 1898 அபிதான விளக்கம் பக். 6) “பவ்வத்திரிக் கோட்டத்துக் காகந்தி நகரில் உள்ள பண்டரி கீசுரம், “இராசேந்திர சோழ மண்டலத்தப் பவ்வத்திரி” என்ற கல்வெட்டுத் தொடர்கள் மூலம் நெல்லூர் மாவட்டத்துக் கூடூர் வட்டத்து ரெட்டிப் பாளையம் பகுதியும், அதனையடுத்த பண்ட ரங்கம் என்ற பகுதியும் காகந்து எனப் பெயர் பெற்றிருந்தது எனத் தெரிகிறது. நெல்லூர் மாவட்டப் பகுதியை வென்ற கரிகாலனே தனது வளமார்ந்த தலைநகரின் பெயர்களுள் ஒன்றை புதிய நாட்டுக்கு இட்டான் எனக் கொள்ளலாம். |
காஞ்சளபுரம் | பொன் எனப் பொருள்படும் காஞ்சனம் என்ற சொல்லடி யாய்ப் பெயர் பெற்றுள்ள ஊர் காஞ்சனபுரம். பொன்னுலகை (விண்ணுலகை)ச் சேர்ந்தது போலும். வெள்ளிமலையிலுள்ள “சேடி” என்ற வித்தியாதரருலகில் உள்ளது காஞ்சனபுரம் என்று இலக்கியம் கூறுகிறது. “வடதிசை விஞ்சைமாநகர்த் தோன் றி” (மணிமே, 15:81) (வடதிசை விஞ்சைமாநகர் வடதிசையிலுள்ள வித்தியாதர நகரமாகிய காஞ்சனபுரம்) |
காட்கரை | நம்மாழ்வாரால் பாடல் பெற்ற வைணவத் தலம். கேரளத்தில், எர்ணாகுளத்திலிருந்து பத்து கல் தொலைவில் உள்ளது இவ்வூர். காவிகமழ் திருக்காட்கரை என்றும் (நாலா 301) சுனை சொள் பூஞ்சோலைத் தென் காட்கரை (நாலா 3020) என்றும், இயற்கைவளம் நிரம்பிய இடம் என்பது மட்டும் சிறப்பாக இவர் பாடலில் விளக்கம் பெறுகின்றது. காவிக்கரை காட்கரை என்றாயிற்றோ அல்லது கழுநீர்க்கரை. காட்கரை என்றாயிற்றோ என்றுதான் எண்ணம் தோன்றுகிறதே தவிர, பிற எண்ணங்கள் இவ்வூர் பற்றி அறியக் கூடவில்லை. |
காட்டுப்பள்ளி | என்ற காட்டுப்பள்ளி என்று தேவாரம் சுட்டும் தலத்தை, இன்று இரண்டு ஊராகச் சுட்டுகின்றனர். மேலைத் திருக்காட்டுப்பள்ளி கீழைத் திருக்காட்டுப்பள்ளி என ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற நிலையில் காட்டுப்பள்ளி என்ற குறிப்பும், அங்குள்ள சிவன் கோயில் சிறப்பும் மட்டுமே விளக்கம் பெறுகின்றன. சேக்கிழார் வழியில் சிவத்தலங்கள் நூலாசிரியர், இன்றைய நிலையில் மேலைத் திருக்காட்டுப் பள்ளி, கீழைத்திருக் காட்டுப்பள்ளி என இரண்டு கோயில்களையும் சுட்டி. அவை திருக்காட்டுப்பள்ளி, ஆரணியேசுரர் கோயில் என்ற இரண்டு ஊர்களாக, தஞ்சையில் அமைந்திருக்கும் நிலையையும் விளக்கு கின்றார். குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ளது முதல் தலம். சம்பந்தர் அப்பர் பாடல் பெற்றது. இரண்டாவது தலம், திருவெண் காட்டுக்கு அருகில் உள்ள தலம் என்கின்றார். ! ஆயின் ஞானசம்பந்தர் பாடல் பெற்ற பதிகள் கீழைத் திருக்காட்டுப்பள்ளி (5) மேலைத் திருக்காட்டுப்பள்ளி (287) எனத் தொகுத்தோர் குறிப்பிட்டாலும் பாடலில் காட்டுப்பள்ளி என்றே இரண்டு பதிகங்களிலும் அமைவதும் காவிரியின் வளம், காவிரிக் கரையில் இது அமைந்திருந்த தன்மை இவற்றை இரு பதிகங்களும் சுட்டுவதும், அன்று காட்டுப்பள்ளி என்று பாடல் பெற்ற தலம் இன்று குட முருட்டி ஆற்றின் கரையில் இருந்ததாகத் தான் இருந்திருக்கவேண்டும். பின்னர், கீழைத் திருக் காட்டுப்பள்ளி சிறப்பு பெற. இதனைத் தொகுப்பாசிரியர்கள் இரண்டாகச் சுட்டியிருக்க வேண்டும் எனவும் கருதலாம். மேலும், சான்றுகள் வழிதனை ஆராயின் உண்மை தெளிவாகும். மேலைத் திருக்காட்டுப் பள்ளி என்ற காவிரிக் கரைத்தலமே இன்றும் திருக்காட்டுப் பள்ளி என்று சுட்டப்பட, கீழைத்திருக் காட்டுப்பள்ளி ஆரணியேசுவரர் கோயில் என்று சுட்டப்படும் தன்மை ஆரணியேசுவரர் கோயிலே கீழைத்திருக் காட்டுப்பள்ளி எனச் சிலரால் குறிப்பிடப்பட்டு இருக்கவேண்டும். எனினும் செல்வாக்கின்மை ஆரணியேசுவரர் கோயிலே வழக்கில் அமைந்தது எனவும் நினைக்கத் தோன்றுகிறது. காட் டில் பள்ளி கொண்ட நிலையிலேயே இப்பெயர் பொருத்தம் அமைய வல்லது. |
காட்டுப்பள்ளி – கீழைத்திருக்காட்டுப்பள்ளி, | தேவாரத் திருத்தலங்கள் |
காட்டுப்பள்ளி – மேலைத்திருக்காட்டுப்பள்ளி | தேவாரத் திருத்தலங்கள் |
காட்டூர் | ஊர் என்று முடியும் சிவன் கோயில் தலம் இது. இதனை ஞான சம்பந்தர் திருவூர்க் கோவையுள் சுட்டுகின்றார் (175-7). காட்டுப் பகுதியில் அமைந்த ஊர் என்ற நிலையில் இப்பெயர் அமைந் திருக்கலாம். |
காந்தாரநாடு | காந்தார நாடு என்பது இரத்தினபுரம் என்னும் ஒரு நகரத்தை யுடையது. சிறந்த குதிரைகள் பிறக்கும் இடங்களுள் ஒன்று எனத் தெரிகிறது. இந்தியாவில் வடமேற் கெல்லைப்புறத்தில் காபுல் நதி பாயும் தாழ்வானப் பள்ளத்தாக்கில் இருந்த ஒரு நாடு காந்தார நாடு. பண்டைய 56 நாடுகளில் ஓன்று. இது இன்றைய பாகிஸ் தானிலுள்ள பிஷாவார் (புருஷபுரம்), ராவல் பிண்டி ஆகிய மாவட்டங்கள் சேர்ந்த பகுதியாகும். காந்தார நாடும் உரோமமும் பெயர் பெற்றவை என்று ரிக்வேதம் கூறுகிறது. காந்தாரம் இசைக்கும், நாட்டியத்திற்கும் புகழ் பெற்ற நாடாக இருந்தது. காந்தாரத்தைப் பற்றிய குறிப்புகள் வால்மீகி இராமாயணத்திலும் காணப்படுகிறது. ஒரு சமயம் வரலாற்றுப் புகழ் மிக்க தட்சிலம் காந்தாரத்தில் சேர்ந்திருந்தது. தாலமி என்ற மேனாட்டு ஆரியர் காந்தாரியாய் (Gandar ioi) என்று குறித்தார். |
கானப்பேரெயில் | சங்க கால ஊர்கள் |
கானப்பேரெயில், | பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கானப்பேரெயிலைக் கைப்பற்றியவனே என்று சங்க இலக்கியத்தில் கூறப்பெற்றிருக்கிறது. அதனால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி எனப் பெயர் பெற்றான். அவனை ஐயூர் மூலங்கிழார் பாடியபாடல் மூலம் அக்கோட்டையின் அகழியின் ஆழம், மதிலின் உயரம், மதிலின் மேல் அமைத்து ஞாயில், கரவற்காடு ஆகியவற்றைப் பற்றி அறிகின்றோம். (புறம். 21) கானப்பேர் எனற இடத்தில் அமைந்தமையால் கானப் பேரெயில் என்று அக்கோட்டையைக் குறித்துக்கூறினா் போலும். அக்கோட்டையின் தலைவனாக வேங்கைமார்பன் என்ற வீரன் இருந்தான். அவனைத்தான் உக்கிரப்பெருவழுதி என்ற பாண்டியன் வென்று கைப்பற்றினான். இராமநாதபுரம் மாவட்டத்தில் மானாமதுரைக்குப் பக்கத்தில் உன்ள காளையார் கோயில்தான் கானப்பேர் என்று கருதுகின்றனர். “கானப்பேர் உறைகாளை” என்று தேவாரத்தில் அவ்வூர் ஈசன் குறிக்கப் பெற்றுள்ளதால் அவ்வூரின் பெயர் கானப்பேர் என்றுதான் இருந்திருக்க வேண்டும். பழைய ஊர்ப் பெயர்கள் மறைந்து கோயில் பெயர்களால் பிற்காலத்தில் வழங்கும் ஊர்களும் உண்டு. அம்முறையில் காளையார் அமர்ந்தருளும் கோயில் காளையார் கோயில் என ஆகி நாளடைவில் அக்கோயிற்பெயர் ஊர்ப்பெயராக, பழைய பெயர் மறைந்தது போலும், சங்ககாலத்தில் கானப்பேர் என்றிருந்த பெயர் தேவார காலத்திற்குப் பிறகு காளையார் கோயில் என ஆகியிருக்க வேண்டும். |
கானப்பேர் | இன்று காளையார் கோயில் என்று சுட்டப்படும் ஊர், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. மதுரையிலிருந்து ஒன்பது மைல் தூரத்தில் உள்ளது. ஞானசம்பந்தராலும் சுந்தரராலும் பாடல் பெற்றது இத்தலம். கானப்பேரூர், கானப்பேர் என்ற இரண்டு வடிவிலும் அமையும் ஊர்ப்பெயர். பின்னர் கோயில் சிறப்பு சைவப்பற்று காரணமாகப் புராணக்கதை தொடர்பாகக் காளையார் கோயில் என்று அழைக்கப்பட்டு, பின்னர் ஊர்ப்பெயரே அவ்வாறாயிற்று என்பது தெரிகிறது காட்டுப்பகுதியில் அமைந்த ஊராக இது இருந்ததனைக் கானப் பேர் என்ற பெயர் சுட்டுகிறது. மேலும் பண்டு தொட்டே இதன் சிறப்பு, சங்க இலக்கியச் சான்றுகள் வழி தெளிவுறுகிறது இவ்வூர் சிறப்பாக அன்று காணப்பட்டது என்பதனைக் கற்றார்கள் தொழுதேத்தும் கானப்பேர் என்ற சேக்கிழாரின் கூற்று தெளிவாக்கும் (பெரிய -திருஞா-886). காவார்ந்த பொழிற்சோலை கானப்பேர் என்பது திருஞானசம்பந்தர் கூற்று (313-7). கார் வயல் சூழ் கானப்பேர் உறைகாளையே என்பது சுந்தரர் பாடல் (84-1). மேலும் சிவபெருமான் திருவந்தாதியிலும் (51) இவ்வூர் சுட்டப்படுகிறது. |
கானப்பேர் காளையார்கோயில் | தேவாரத் திருத்தலங்கள் |
கானலம்பெருந்துறை | சங்க கால ஊர்கள் |
கானாட்டு முள்ளூர் | சுந்தரர் பாடல் பெற்ற இவ்வூர் இன்று கானாட்டம் புலியூர் என வழங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இருக்கிறது. கல்வெட்டில் இவ்வூரின் பெயர். விருதராச பயங்கர வளநாட்டு கீழ்க் கானாட்டு முள்ளூராகிய திருச்சிற்றம்பலச் சதுர்வேதி மங்கலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. சுந்தரர் பதிகம் (40) இவ்வூரின் வளத்தை ஒவ்வொரு பாடலிலும் சுட்டுகின்றது. |
கானூர் | திருக்கானூர் என்ற பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது இவ்வூர். சம்பந்தர் (பதி 73) அப்பர் (பதி 190) பாடல் பெற்ற ஊர் இது. கொள்ளிடக் கரையில் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள ஊர் இது என்பதனை நோக்க, காட்டுப்பகுதியில் அமைந்த ஊர் என்பது வெளிப்படையாக அமைகிறது. |
கானூர் | தேவாரத் திருத்தலங்கள் |
காமூர் | சங்க கால ஊர்கள் |
காம்பீலி | பார்வளர் புகழின் மிக்க பழம்பதி மதி தோய் நெற்றிக் கார்வளர் சிகரமாடக் காம்பீலி (நேச -1) எனப்பெரிய புராணம் குறிப்பிடும் சாம்பீலி பற்றிய எண்ணங்கள் தெளிவு பெறவில்லை. பிற 1. திரைகளெல்லா மலருஞ் சுமந்து செழுமணி முத்தொடு பொன் வரன்றிக் கரைகளெல்லா மணி சேர்ந்துரிஞ்சிக் காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி திருஞான – கிழைத் திருக்காட்டுப் பள்ளி பதி. 5-2 வரையுலாஞ் சந்தொடு வந்திழி காவிரிக் கரையுலாமிகு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி திருஞான – மேலைத் திருக்காட்டுப் பள்ளி பதி 287-5 |
காம்போசம் | காம்போசம் என்பது 56 தேசங்களுள் ஒன்று சிறந்த குதிரைகள் பிறக்கும் தேயங்களுள் ஒன்று என்றும் தெரிகிறது. கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடமேற்கில் தற்போதைய பிஷாவருக்கு வடமேற்கில் இப்பொழுது இருக்கும், நிலப்பகுதியின் பண்டைய பெயரே காம்போஜம் என்பது. தென் கிழக்கு ஆசியாவிலுள்ள கம்போடியா என்ற நாட்டுக்கும் முன்பு காம்போஜம் என்ற பெயர் வழங்கியது. |
காரிக்கரை | வடதிசை மேல் வழிக் கொள்ளும் நிலையில், திருக்காளத் திக்கு முன்பாகத் திருநாவுக்கரசர் சென்ற இடமாகக் காரிக்கரை அமைகிறது. எனவே திருக்காளத்திக்கு முன்னர் இவ்வூர் அமைந்திருக்கக் காண்கின்றோம். சிவன் கோயில் தலம் என்பது மட்டும் தெரிகிறது. கரை என்று வரும் தன்மையால் காரி என்பது ஆறாக இருக்கலாம். காரியாற்றங்கரையில் உள்ள தலம் என்ற நிலையில் காரிக்கரை எனப் பெயர் பெற்றிருக்கலாம். திரு. நாச்சிமுத்து ஆற்றின் நீரின் கறுப்பு நிறத்தால் பெயர் பெற்ற ஆறுஒன்று காரியாறு எனச் சுட்டப்படுகிறது என்கின்றார். எனவே காரிக்கரையும் இதனைப் போன்று பெயர் பெற்றிருக்க வாய்ப்பு அமைகிறது. சங்க இலக்கியத்திலும் காரியாறு என்ற ஒரு இடம் அமைகிறது. |
காரியாறு | காரியாறு பாய்ந்து வளஞ் செய்த பகுதி காரியாறு எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்ற எண்ணம் இப்பெயர் ஆற்றுப் பெயரால் பெயர் பெற்றதை வலியுறுத்தும். காரியாறு என்னும் ஊரில் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற சோழ மன்னன் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி எனப் பெற்றான். சோழன் நலங்கிள்ளி யுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத் தன் என்ற புலவனைச் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்று வந்தானென்று கொல்லப்புக்குமி கோவூர் இழார் பாடி உய்யக் கொண்டார் என்று தெரிகிறது. (புறம். 47) காரி என்ற வள்ளலின் பெயருக்கும் இவ்வூர்ப் பெயருக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது அறிய வேண்டும். சேலம் மாவட்டத்திலுள்ள காரிமங்கலம் என்னும் ஊர். காரி என்ற வள்ளலின் பெயரோடும், கோவை மாவட்டத்திலுள்ள ஓரி சேரி என்னும் ஊர் ஓரி என்ற வள்ளலின் பெயரோடும் தொடர் புடையதாக கருதப்படுகிறது. ஏழிற் குன்றத்திற்கு அருகில் செருவத்தூர் என்று ஓர் ஊர் இருப்பதாகவும், காரி என்றும் ஓரி என்றும் பெயர்கொண்ட. இரு பகுதிகளாக அவ்வூர் அமைந்தது என்றும், காரி, ஓரி என்ற வள்ளல்களின் பெயரால் அமைந்தது போலும் என்று கருதப் படுகறது.” காவிரிப்பூம்பட்டினம். காவிரியாறு கடலோடு கலக்குமிடத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர் துலைநகராகச் சிறந்து விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். பூம்புகார் நகரம் என்றும், பூம்பட்டினம் என்றும் இவ்வூரைப் புலவர்கள் அழைத்தனர். காவிரிப்பூம்பட்டினம் சோழநாட்டின் சிறந்த துறைமுக நகரமாகும். கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளில் தமிழகத்து வாணிகத்தைப் பற்றி யெழுதிய பிளைனி போன்றவர் இந்நகர வாணிகத்தைப் பற்றித் தம் நூல்களில் குறித்துள்ளனர். புத்த. சாதக் கதைகளில் இந்நகரத்தைப் பற்றிய குறிப்பு இருப்பதால் முற்பட்ட காலத்திலிருந்தே சிறப்புற்ற துறைமுக நகரமாக இருந்திருக்க வேண்டும். இங்கு கிடைத்த புதை பொருள்களைக் கொண்டு இந்நகரம் கிறிஸ்துவுக்கு முற்பட்ட வாழ்க்கையையுடைய தென்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இவ்வூர் மருவூர்ப்பாக்கம் (புறநகர்) பட்டினப்பாக்கம் (அக நகர்) என்னும் இரு பிரிவுகளைப் பெற்றிருந்தது. இவ்வூர் கடலில் புகுமிடத்தில் இருந்ததால் புகார் என்றும் அழைக்கப்பெற்றது. காவிரிப்பூம்பட்டினம் என்பதும் அதே காரணத்தால் அமைந்த பெயர். கந்தரதத்தன், காரிக் கண்ணன், சேந்தன் கண்ணன் ஆகியோர் இவ்வூரினர். குறுந்தொகையில் 342 ஆம் பாடல் காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரதத்தனார் பாடியது. 297 ஆம் பாடல் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணன் பாடியது. 34) ஆம் பாடல் காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன் பாடியது. அகநானூற்றில் 107, 123, 285 ஆகிய பாடல்கள் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியவை, 10%, 271 ஆகிய பாடல்கள் காவிரிப்பூம்பட்டினத்துக் கண்ணனார் பாடியவை. புறநானூற்றில் 57, 58, 169, 171, 353 ஆகிய பாடல்கள் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியவை. |
காரியாறு | சங்க கால ஊர்கள் |
காரூர் | காரூர் களிவண்டறையான்’ எனச் சிவனைப்பாடும் சுந்தரர் வாக்கு காரூர் என்ற பெயரைத் தருகிறது. ஆரூரன் உரைத்தன நற்றமிழின் மிகுமாரை லை யொர்பத்திவை கற்றுவல்லார் காரூர் களிவண்டறை யானை மன்னவராகி யொர் விண் முழுதாள்பவரே. சுந் -3-10 |
காரைக்கால் | காரைக்கால் அம்மையார் பிறந்த ஊராக அமைந்த காரணமாகப் பெருஞ்சிறப்பு பெற்று திகழும் ஊர். செழுந்தேன் கொம்பின் உகு காரைக்காலினில் மேயகுல தனமென நம்பியாண்டார் நம்பி தம் திருத்தொண்டர் திருத் தொகையில் சுட்ட (28) சேக்கிழார் இவ்வூர்ச் சிறப்பை மிக் அழகாகத் தருகின்றார். மரு ஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார். பெரிய – 27-343 பல்பதியும் நெடுங்கிரியும் படர்வனமும் சென்றடைவார் செல்கதி முன் அளிப்பார் தந்திருக் காரிக்கரை பணிந்து தொல்கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் மல்கு திருக் காளத்தி மாமலை வந்தெய்தினார் – பெரிய 27, 343 2. தமிழ் இடப்பெயராய்வு- பக். 91 |
காறாயில் | இன்று திருக்காறை வாசல் என அழைக்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். கல்வெட்டுகளும் இத்தலத்தை இப்பெயரிலேயே காட்டு கின்றன. சம்பந்தர் பதிகங்களினின்றும் |
காறாயில் – திருக்காறை வாசல் ச | தேவாரத் திருத்தலங்கள் |
காளத்தி- வேறு கருத்து திருக்காளத்தி | தேவாரத் திருத்தலங்கள் |
காழகம் | சங்க கால ஊர்கள் |
காழி | சீர்காழி என்று இன்று வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. சமய வாதிகளால் மிகவும் பாராட்டப் பெற்ற தலம் இது என்பதனை, இதன் பன்னிரு பெயர் தெளிவுபடுத்தும். ஞானசம்பந்தர் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றமையும் இதன் சிறப்புக்குக் காரணம் எனலாம் (ஞானப் பால் பெற்றமை இங்குள்ள சிவன் கோயில் குளக்கரையில் தான்). இப்பன்னிரு பெயரையும் இலக்கியங்கள் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றன. காவிரியின் கழிமுகப் பகுதியில் இன்று சீர்காழி வட்டமாக’ அமைந்துள்ளது. |
காவிரிப்பூம் பட்டினம் | சங்க கால ஊர்கள் |
காவிரிப்பூம்பட்டினத்துத் திருப்பல்லீச்சரம்]காவிரிப்பூம்பட்டினம் | தேவாரத் திருத்தலங்கள் |
காவிரிப்பூம்பட்டினம் | தமிழர் பழம் பெருமையை நிலை நாட்டிக் சொண்டு இருந்த பெரு நகரங்களுள் காவிரிப்பூம்பட்டினம் ஒன்று. புகார், பூம்புகார் போன்றன பிற பெயர்கள். காவிரி ஆற்றின் கரையில் அமைந்த பட்டினம் காரணமாக, காவிரிபுகும்பட்டினம் காரணமாகக் காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயர் அமைந்ததா அல்லது சோலைகள் நிறைந்த மலர்கள் நிரம்பிய பட்டினம் அருகில் ஓடிய ஆறு காவிரி என்று அழைக்கப்பட்டதா என்பது ஆய்வுக்குரியது. இங்குள்ள சிவன் கோயில் பல்லவன் வழிபட்டதன் காரணமாகப் பல்லவனீச்சரம் என்று சுட்டப்பட்டது என அறிகின்றோம். ஞானசம்பந்தர் பட்டினத்துப் பல்லவனிச்சரம் (65-2) புகாரிற் பல்லவனீச்சரம் (65-9) என்று சுட்டும் தன்மையால் இப்பெயர் கள் தொடர்ந்து இருந்த வழக்கினைத் தெரிய இயலுகிறது. சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயரையும் புகார் என்ற பெயரையும் காண்கின்றோம். சோழநாட்டின் துறை முகப்பட்டினமாகவும் தலைநகராகவும் இருந்தது. இத்தலத்தின் முதல் பெயர் காவிரிப்பூம்பட்டினமாக இருக்கலாம் என்பதனை அப்பெயர் மிகுதி காட்டுகிறது. காவிரிப்பூம்பட்டினம் ஊர்ப் 1. காரை – காட்டுச் செடிவகை. கால் – இடம் – தமிழ் லெக்ஸிகன் vol II பக் 889, 890 2. சேக்கிழார் வழியில் சிவத்தலங்கள் – பக், 259 95 வர்ப்பெயர்கள் ம பெயர் இணைந்த புலவர் பலர் காணப்படுகின்றனர். இதனுடன் புகாஅர் என்ற பெயரும் பழமையானது. பரணரின் அகநானூற் றுப் பாடல் (181) |
கிடங்கில் | நடுநாட்டிலே ஓய்மாநாட்டு நல்லியக்கோடனின் ஆட்சியிலிருந்த ஓரூர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இண்டிவனம் நகரத்தின் அருகில் உள்ளது. கிடங்கல் என இப்பொழுது வழங்கப் பெறுகிறது. இந்த ஊர் மிகப் பழமையானது. இந்நகரத் தெருக்களில் இருந்த புழுதியை யானைகளின் மதநீர் அருவி நனைத்து அடக்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. இவ்வூர் திண்டிவனம் நகரில் உந்து வண்டி நிலையத்தை அடுத்து, பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. அங்கே ஒரு சிவன் கோயிலும், சில தெருக்களும் உள்ளன. அதைச் சுற்றிலும் இடிந்த மதிற்சுவர்கள் காணப்படுகின்றன. அம்மதிற் சுவர்களை சுற்றிலும் அகழி இருந்திருக்க வேண்டும். அகழி இருந்தமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அவ்வூரிலுள்ள சிவன் கோயிலில், கி.பி. 11 மூதல் 15ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்துக் கல்வெட்டுகள் சில உள்ளன. அவை சோழர், சம்புவராயர், விசயநகர வேந்தர்களின் காலக் கல்வெட்டுகள். “ஓய்மானாட்டு இடக்கை நாட்டுக் இடங்கில்” என்னும் ஊரில் அக்கோயில் இருப்பதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இதற்கு ஒரு கிலோ மீட்டர் வடக்கில் உள்ள திண்டிவனத்தில் ஒரு சிவன் கோயில் உள்ளது. அது திண்டீசுரம் என்பது. அக்கோயிலிலுள்ள சோழர்காலத்துக் கல்வெட்டுகள் கி.பி. 1300 காலத்தவை. அக்கல்வெட்டுகள் அக்கோயில் “ஓய்மானாட்டு கடக்கைநாட்டுக் இடங்கலான இராஜேந்திர சோழ நல்லூர்த் திண்டீசுரம்’” என்று குறித்துள்ளன. ஆகவே அதுவும் கிடங்கல் என்னும் ஊரில் இருந்தது என அறியலாம். இன்றைய திண்டி வனம் நகரத்தின் பெரும்பகுதி பண்டையக் கிடங்கிலே என்று கூறலாம். இன்று ‘கிடங்கல்’ என்ற ஊர் நல்லியக்கோடனின் அரண்மனை இருந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும். செஞ்சியில் இருந்த நவாபுவின் ஆட்சிக்குட்பட்ட அம்பர்கான் என்பவர் கி.பி. 1677இல் கிடங்கிற் கோட்டையையும் அகழியையும் சீர்திருத்தி அமைத்தார் என்று தெரிகிறது, முற்காலத்தில் சிறந்து விளங்கிய கிடங்கல் இப்பொழுது திண்டிவனத்தின் ஒரு உட்பகுதியாக அமைந்திருக்கிறது. (அகழி சூழ்ந்தபகுதி பொதுவாகக் கிடங்கில் என்று கூறப் படும்.) கிடங்கில் காவிதி கீரங்கண்ணனார், இடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார், இடங்கில் குலபதி நக்கண்ணனார் ஆகிய சங்கப் புலவர்கள் இவ்வூரினர். நற்றிணையில் 218ஆம் பாடலைக் காவிதி கீரங்கண்ணனாரா் என்ற புலவரும், 364ஆம் பாடலைக் காவிதிப் பெருங்கொற்றன் என்ற புலவரும், குறுந்தொகையில் 252ஆம் பாடலை குலபதி நக்கண்ணன் என்ற புலவரும் பாடியுள்ளனர். |
கிள்ளிமங்கலம் | கிள்ளிமங்கலம் என்ற இவ்வூர் சோழ மரபினரின் கிள்ளி என்ற பெயரைப் பெற்று விளங்குகிறது. கிள்ளிமங்கலம் என்ற இப்பெயர் தற்காலத்தில் கிண்ணிமங்கலம் என்று வழக்கில் உள்ளது. கிண்ணிமங்கலம் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் வட்டத்தில் உள்ளது. கிழார் என்ற புலவரும், அவர் மகனார் சேரகோவனாரும் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். ஆகவே கிள்ளிமங்கலங்கழார் என்றும், கிள்ளிமங்கலங் கிழார் மகனார் சேரகோவனார் என்றும் பெயர் பெற்றனர். நற்றிணையில் 365ஆம் பாடல் கிள்ளிமங்கலங்கழார் மகனார் சேரகேரவனார் பாடியது. குறுந்தொகையில் 76, 110, 152, 181 ஆய பாடல்கள் கிள்ளிமங்கலங்கிழார் பாடியவை. |
கிள்ளியூர் | கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்திலும், தஞ்சாவூர் |
கீழை திருமணஞ்சேரி | |
குடநாடு | சங்க கால ஊர்கள் |
குடநாடு | கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன்று. தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி திசைப்பெயருடன் இணைந்து குடநாடு என்னும் பெயர் பெற்றது. அந்நாட்டு மன்னன் சேரன் குடவர்கோ எனப் பெயர் பெற்றான். எருமை என்ற ஒரு மன்னன் குடநாட்டை ஆண்டுள்ளான். இவன் சேர மரபினனாக ஆகியிருக்க வேண்டும். |
குடந்தை | சங்க கால ஊர்கள் |
குடந்தை / குடவாயில் | குடந்தைவாயில் என்றும், குடந்தை என்றும், குடவாயில் என்றும் கூறப்படுவன எல்லாம் ஓரே ஊரின் பெயரே. சோழர் குடந்தை என்று கூறப்படுவதால் இவ்வூர் சோழனுக்குரியதாக இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி. உ. வே. சாமிநாதையர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், பெருமழைப்புலவர் சோமசுந்தரனார் போன்றோர் சங்க இலக்கியப்பாடல்களுக்கு உரை எழுதும் போது குடந்தை ஏன்ற சொல்லுக்குக் குடவாயில் என்றே பொருள் கூறுகின்றனர். குடந்தை என்றும், குடந்தை வாயில் என்றும், குடவாயில் என்றும் குறிக்கப்பெற்ற ஊரே இன்று குடவாசல் என்று வழங்கும் ஊராகும். இவ்வூர் தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்திலுள்ளது. இல்லின் வாய் அல்லது வீட்டின் வாய் என்று பொருள்படும் வாயில் என்ற சொல்லுடன் வழங்கப்பெறும் சில ஊர்ப் பெயர்களில் குடந்தைவாயில் அல்லது குடவாயில் என்னும் இந்த ஊரும் ஒன்று. ஊர்கள் அமைந்துள்ள திசையை அவற்றின் பெயர் உணர்த்தும் நிலையும் இப்பெயரில் அமைகின்றது. முற்காலத்தில் சிறந்து விளங்கிய ஒரு பெருநகரின் மேலவாசலாக அமைந்த இடம் நாளடைவில் ஓர் ஊராக அமைந்து குடவாசல் என்று பெயரி பெற்றிருக்க வேண்டும். (கோச் செங்கட் சோழன் தன்னோடு போர் செய்து தோல்வியுற்ற சேர மன்னனைக் குடவாயிற் கோட்டம் என்னும் சிறைக் கோட்டத்தில் அடைத்து வைத்திருந்தான் என்ற செய்தி, குடவாயிலில் ஒரு சிறைக் கோட்டம் அமைந்து இருந்த நிலையை நமக்கு உணர்த்துகின்ற குடவாசலில் அமைந்திருந்த பழைய கோட்டை மதில்கள் பற்றிய செய்தியைத் தேவாரமும் உணர்த்துகிறது. குடந்தை என்று நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்களிலும் தேவாரப் பாடல்களிலும் குறிக்கப்படும் ஊர் இன்றைய கும்பகோணமாகும். இது குடமூக்கு என்றும் குறிக்கப்படுகிறது. சங்க இலக்கியத்தில் கூறப்பெற்ற குடந்தை, குடந்தைவாயில் குடவாயில் என்பது தற்காலத்திய குடவாசல் என்ற ஊராக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஓர் ஊரின் பெயர் காலப் போக்கில் பின்னர் வேறொரு பெயராகத் திரிதலும், இப்பெயரே பிறிதோர் ஊர்க்குப் பெயராக அமைதலும் ஆகிய தன்மையை நாம் காண முடிகிறது. நற்றிணையில் 27, 212, 379 ஆகிய பாடல்களையும், குறுந் தொகையில் 281, 369 ஆகிய பாடல்களையும், அகநானூற்றில் 35, 44, 60, 79, 119, 129, 287, 315, 345, 366, 385 ஆகிய பாடல்களையும், புறநானூற்றில் 242ஆம் பாடலையும் பாடிய ரத்தனார் என்ற புலவரும், குறுந்தொகையில் 79ஆம் பாடலைப் பாடிய கீரனக்கன் என்ற புலவரும் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். |
குடந்தை குடமூக்கு | இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் எனச் சுட்டப்படும் ஊர். அன்று இவ்விரு பெயர்களாலும் வழங்கப்பட்டதாகத் செரிகிறது. குடமூக்கின் வடமொழிப் பெயர் மாற்றமே கும்பகோணமாயிற்று. அதுவே இன்று செல்வாக்குடன் திகழ்கின்றது. வைணவக் கோயில்களும் சைவக் கோயில்களும் நிறைந்த இடம். கோயில் பெருத்தது கும்பகோணம் என்பது பழமொழி. இங்குள்ள மூன்று கோயில்கள் தேவாரப்பாடல் பெற்றவையாக அமைகின்றன. ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற கும்பகோணம் கும்பேசுவர சுவாமி கோயில் (சுவாமி கும்பம் போன்றவர்) குடந்தைக் காரோணத்தில் உள்ள விசுவநாதர் கோயில் (சம்பந்தர்) குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் உள்ள கும்பகோணம் நாகேஸ்வர ஸ்வாமி கோயில் (அப்பர்) என்பன அவை. காசி குடந்தை கீழ்க் கோட்டம் ஐயடிகள் காடவர் கோன் இறைவன் பற்றி, |
குடந்தைக் கீழ்க்கோட்டம் | தேவாரத் திருத்தலங்கள் |
குடந்தைக்காரோணம் – காசிவிசுவநாதர் கோயில் | தேவாரத் திருத்தலங்கள் |
குடபுலம் | சங்க கால ஊர்கள் |
குடப்பாச்சில் | குடப்பாச்சில் உறைகின்ற சிவன் பற்றிய எண்ணம் தேவாரத்தில் அமைகிறது. |
குடமூக்கு கும்பகோணம் | தேவாரத் திருத்தலங்கள் |
குடவரை | சங்க கால ஊர்கள் |
குடவாயிற் கோட்டம் | சங்க கால ஊர்கள் |
குடவாயில் | சங்க கால ஊர்கள் |
குடவாயில் | இன்று குடவாசல் எனத் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது (பதி 158, 194). இன்று கும்பகோணம்-திருவாரூர் நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து பத்து மைல் தொலைவில் உள்ளது என்ற எண்ணம் இது தொடர்பானது. குடவாயில் இன்று குடவாசல் என்று வழங்கப் படினும் சங்ககாலம் தொட்டே வழங்கிய பெயர்களாகக் குட வாயிலுடன் குடந்தைவாயில் குடந்தை என்பனவும் அமைகின்றன. திருணபிந்து முனிவர் வழிபட இறைவன் குடத்தில் இருந்து வெளிப்பட்டு அவருடைய நோயைத் தீர்த்தருளிய தலம். எனவே குடவாயில் எனப் பெயர் பெற்றது என்ற எண்ணம். அமைகிறது குடந்தை, குடந்தை வாயில், குடவாயில் என்ற ஊர்ப்பெயர் பற்றிய எண்ணங்களுடன் குடந்தை குடமூக்கு கும்பகோணம் பற்றிய எண்ணங்களையும் இணைத்து நோக்கின் சில எண்ணங்கள் தோன்றுகின்றன. இன்றைய குடவாயில் கும்பகோணத்தில் (குடமூக்கில்) இருந்து 10 மைல் தூரத்தில் உள்ளது ஒரு நிலை. அடுத்து இரண்டும் குடந்தை என்ற பெயர் பெறுகின்றன. சங்க இலக்கியத்தில் அமைவது குடந்தை. குடந்தை வாயில் எனவும் சுட்டப்பட்ட குடவாயில் உரையாசிரியர் அனைவரும் குடந்தை என்ற சொல்லுக்குக் குடவாயில் என்றே பொருள் கூறுகின்றார். குடமூக்கு அல்லது கும்பகோணம் என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் இல்லை. ஆயின் குடவாயிலைக் குறித்து குடந்தை என்ற பெயர் குடமூக்குக்கு உண்டு. மேலும் குடவாயில் என்பது ஒரு ஊரின் எல்லை போன்று அமைகிறது. எனவே அன்றைய நிலையில் கேர் சோழர்வண் குடந்தை வாயில் (நற் 379) என்ற எண்ணம் சோழ ரின் குடந்தைக்குரிய வாயில் என்ற நிலையில் குடந்தை ஒரு பெரிய நகரமாகவும் அதன் வாயில் சிறப்புடன் திகழ்ந்தமையின் அது குடந்தை வாயில் என்றும் குடவாயில் என்றும் அழைக்கப்பட்டு இருக்கக் கூடும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. பின்னர், குடந்தையில் தனியே சிறந்த கோயில்கள் பல தோன்ற, குடந்தை யின் ஒரு பகுதி குடமூக்கு என்று சுட்டப்பட்டு பின்னர் கும்ப கோணமாகி விட்டது என்றும், குடந்தையின் வாயிற் பகுதி குட வாயில் குடவாசலாக இன்று திகழ்கிறது எனவும் கருத இட மேற்படுகிறது. மேற்கு வாசல் பகுதி என்பது குடவாசலுக்குரிய பொருளாக அமைய, குடந்தையின் மேற்கு என்ற திசைப்பெயர் அடிப்படையில் பிறந்த ஊர் என்பது மட்டும் உறுதிப்படுகிறது. குடவாயில் என்பதற்கு வரையார் மதில் சூழ் குடவாயில் என்று சம்பந்தர் பாடும் நிலை சிறப்பாகப் பொருத்தம் காட்டுகிறது. (158-8) மேலும் தேர் வண் சோழர் குடந்தை (நற் – 379-7-9) என்று சோழரின் குடந்தையாகச் சுட்டும் நிலையிலும் கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடு தரு நிதியினும் செறிய அருங் கடிப் படுக்குவள் ; (அகம் 60-13-15) ; தண் குடவாயில் அன்னோள் (அகம் 44-17-19) போன்று குடந்தையுடன் தலைவியை உவமிக் கும் நிலையிலும் குடந்தை மிகச் சிறப்பானதொரு, பெரியதொரு நகரமாகத் திகழ்ந்திருக்கும் வாய்ப்பு அமையும் நிலையிலும், குடந்தை பெரியதொரு நகரமாகத் திகழ்ந்திருக்கும் வாய்ப்பு அமைகிறது. பின்னர் இதன் ஒரு பகுதி கோயில் சிறப்பால் குட மூக்கு என பெருமை பெற்றது என்பது பொருத்தமாகிறது. |
குடவாயில் | தேவாரத் திருத்தலங்கள் |
குடி | மக்களின் உட்குழுக்களைச் சுட்டிய “குடி” என்ற வடிவம், மக்களின் இருப்பிடங்களையும் சங்ககாலத்தில் சுட்டியிருக்கின்றது. சங்ககால ஊர்ப்பெயர்களில் பல “குடி” என்று முடிகின்றன. |
குடுமி | சங்க கால ஊர்கள் |
குடுமியான்மலை | சங்க கால ஊர்கள் |
குணவாயிற் கோட்டம் | சேரன் செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோ துறவறம் பூண்டு அருந்தவம்புரிந்த இடம் குணவாயிற் கோட்டம் என்பது. இது வஞ்ரிமாநகரின் கிழக்குத் இசையில் அமைதந்திருந்தமையால் ஊர்கள் அமைந்திருந்த திசையால் பெயர்பெற்ற குடவாயில் போன்றே இவ்வூரும் குணவாயில் என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். இளங்கோ தவம்புரிந்த கோட்டம் அமைந்திருந்த வஞ்சிமாநகரின் குணவாயில் பகுதி பிற்காலத்தில் அப்பெயருடன் ஓர் ஊராயிற்று போலும். “குணவாயில் கோட்டம்” என்ற சிலப்பதிகாரப் பதிகத்தின் அடிக்குப் பொருள் எழுதிய அரும்பத உரை’யாசிரியரும், அடி யார்க்கு நல்லாரும் குணவாயில் என்பதற்குத் திருக்குண வாயில் என்று கூறினர். திருக்குணவாயில் என்பது ஓரூர் என்றும், அது வஞ்சியின் கீழ்த்திசையின்கண் உள்ளதென்றும் அடியார்க்கு நல்லார் கூறினர், |
குண்டையூர் | சேக்கிழாரின் பெரிய புராணம் சுட்டும் ஊர் இது (ஏயர் கோன் 10, 17, 18). |
குதிரை | சங்க கால ஊர்கள் |
குத்தாலம் – திருத்துருத்தி | தேவாரத் திருத்தலங்கள் |
குன்றம் குன்று | குன்றம் என்பதும் குன்று என்பதும் மலை என்னும் பொருளையுடையனவே. குன்றம் என்ற சொல் வேங்கடமலையைக் குறிக்கவும் ஆளப் பட்டிருக்கிறது சங்க இலக்கியத்தில். வேங்கடமலை புல்லி என்ப வனுக்கு உரியதாக இருந்தது. பரிபாடலில் 9, 18 ஆகிய பாடல்களைப் பாடிய பூதனார் என்ற புலவர் குன்றத்தைச் சேர்ந்தவராதலின் குன்றம் பூதனார் எனப் பெயர் பெற்றார். |
குன்றியூர் | ஞானசம்பந்தரின் திருவூர்க் கோவையுள் இடம்பெறும் ஒரு ஊர். (175) சிவன் கோயில் தலம் என்பது வெளிப்படை. நீரூர் வயனின்றியூர் குன்றியூரும் என இவர் இவ்வூரைக் குறிப்பிடுகின் றார். குன்றி மரம் காரணமாகப் பெற்ற பெயராக இருக்கலாம். |
குன்றூர் | குன்றை அடுத்துள்ள ஊர் என்ற நிலையில் குன்றூர் என்ற ஊர்ப்பெயர் தோற்றம் பெற்றிருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. இப்பெயருடன் ஊர்கள் ஒன்றற்கு மேற்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. வேளிர்கள் வாழும் நகரமாகிய கீழ்கடற்கரையிலுள்ள குன்றூரும் ஒன்று, நீலகிரி மலையில் இப்பொழுது குன்னூர் என்ற பெயருடன் வழங்கும் ஊரும் ஒருகாலத்தில் குன்றூர் என்ற பெயருடன் வழங்கியதே. கிழார் என்னும் புலவரும் அவர் மகன் கண்ணனாரும் இவ் வூரினர் ஆகையால்தான், குன்றூர் கிழார் என்றும் குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் என்றும்பெயா் பெற்றிருந்தனர். நற்றிணையில் 382 ஆம் பாடல் கண்ணத்தனாரும், புறநானூற்றில் 338ஆம் பாடல் ஓழாரும் பாடிய பாடல்களாகும். தொன்றுமுதிர் வேளிர் என்றும், குன்றூர் குணாது தண் பெரும் பெளவம் என்றும் இலக்கியங் கூறுவதை நோக்கும் பொழுது கீழ்க்கடற்கரையை அடுத்த குன்றூரே சங்ககாலக் குன்றூர் என்று எண்ண இடமளிக்கிறது. |
குப்பம் | கூட்டமாகச் சேர்ந்து வாழுமிடம் குப்பம். சமுதாயத்தில் பின்தங்கிய,பொருளாதரத்தில் பின்தங்கிய மக்கள் வாழுமிடமாகக் குப்பம் அமைந்துள்ளது. |
குமட்டூர் | சங்க கால ஊர்கள் |
குமரி | சங்க கால ஊர்கள் |
குமுழிஞாழல் இவ்வூரில் வாழ்ந்த சங்ககாலப் பெண்பாற்புலவர் குமுழி ஞாழலார் நப்பசலையார் | சங்க கால ஊர்கள் |
குரக்குக்கா | இன்றும் குரக்குக்கா என்றே சுட்டப்படும் இவ்வூர். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. காவிரியின் கரையில் உள்ள தலம் இது என்பதனை அப்பர் பாடல்கள் (பதி 189) சுட்டுகின்றன. |
குரங்கணில் முட்டம் | இன்றும் இப்பெயருடனேயே வழங்கப்படும் ஊர், வட ஆர்க் காடு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்றது இவ்வூர். குரங்கணில் முட்டம் என்ற பெயருக்கு, குரங்கு அணில் முட்டம் என்ற மூன்றும் தரிசித்த தலம் எனப் புராணக் கதை கூறுவர். எனினும் விலங்குப் பெயரால் ஊர்ப்பெயர்கள் அமைவது உண்டு என்ற பொது விதி நோக்கிப் பார்க்க, குரங்கு பெயரால் இவ்வூர், பெயர் பெற்றிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. முட்டம் என்பதற்குத் தமிழ் லெக்ஸிகன் இடம், ஊர், காகம் என்ற முப்பொருட்களையும் தருகிறது. எனவே குரங்குகள் மிகுந்த இடம் என்ற பொருளில் குரங்கணிமுட்டம் பெயர் பின்னர், குரங்கணில் முட்டம் என்று புராணக்கதை செல்வாக் கில் திரிந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும் சம்பந்தரின் தேவாரம் இப்பகுதியை மிகவும் வளப்படுத்தும் சோலைகள் நிறைந்து இருந்ததொரு நிலையில் காட்டுவது. இப்பெயர்க் காரணத்திற்குப் பொருத்தம் தருகிறது. முட்டம் என்பது பிற ஊர்ப்பெயர்களில் பொதுக்கூறாக இருப்பதும் இவண் சுட்டத் தக்கது. (இரணிய முட்டம்). |
குரங்கணில் முட்டம் | தேவாரத் திருத்தலங்கள் |
குரங்காடுதுறை | வட வடகுரங்காடு துறை, தென் குரங்காடு துறை என்ற இரு தலம் பற்றிய பாடல்கள் அமைகின்றன. இன்று தஞ்சை மாவட்டத்தில் காணப்படும் இரு தலங்களும் முறையே குரங்காடு துறை, ஆடுதுறை என இரண்டு பெயர்களால் சுட்டப்படுகின் றன. காவிரியின் தென்கரையில் உள்ளது தென் குரங்காடு துறை. வடகரையில் உள்ளது — குரங்காடு துறை. எனவே குரங்காடு துறை என்பதே இரண்டு ஊர்களுக்குமுரிய முதல் பெயர். பின்னர் தனிப்படுத்தப்பட தென் இணைக்கப்பட்டன என்பது தெளிவு. குரங்குகளின் மிகுதி காரணமாகவே குரங்காடுதுறை என்ற பெயர் அமைந்தது. எனினும் வாலி, போன்றவர்களால் பூசிக்கப்பட்ட தலம் என்ற எண்ணத்தை ஞானசம்பந்தரின் பாடல் தருகிறது. எனவே அவர் காலத்திலேயே இப்புராணக் கதை மக்களிடையே செல்வாக்கு பெற்று, உண்மைக் காரணம் மறைந்துவிட்டது என்பது தெளிகிறது. வட அடைகள் மேலும் இவ்வூரும் மிகச் செழிப்பும், சோலைகளும் சூழ்ந்த ஊராகக் காட்டப்படும் நிலையும் குரங்காடு துறை என்ற பெயருக்குப் பொருத்தமாக அமைகிறது. |
குரங்காடுதுறை – வடகுரங்காடுதுறை | தேவாரத் திருத்தலங்கள் |
குரங்காடுதுறை – தென்குரங்காடுதுறை= ஆடுதுறை | தேவாரத் திருத்தலங்கள் |
குரங்குக்கா | தேவாரத் திருத்தலங்கள் |
குராப்பள்ளி | சங்க கால ஊர்கள் |
குராப்பள்ளி | குராப்பள்ளியில் துஞ்சியதால் சோழன் பெருந்திருமாவளவன் குராப்பள்ளித் துஞ்சிய சோழன் பெருந்திருமாவளவன் எனப் பெயர் பெற்றான். குராப்பள்ளியைப் பற்றிய வேறு செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. புறநானூறு 58, 60 197ஆம் பாடல்கள் குராப்பள்ளியில் துஞ்சிய மன்னனைப் பற்றிப் பாடியவை. குராப்பள்ளி என்பது குராமரங்கள் அடர்ந்த பகுதியால் பெற்ற ஊரர்ப்பெயராக இருக்கலாம். |
குராலம் பறந்தலை | சங்க கால ஊர்கள் |
குருகாவூர் | இன்று திருக்கடாவூர் எனச் சுட்டப்படும் இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. ஞானசம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது இத்தலம். கோயில் பெயர் வெள்ளடை. பொழில்கள் நிறைந்தது இவ்வூர் என்பதை. பல விண்ணமர் பைம்பொழில் (382-1), விரை கமழ் தண்பொழில் (382-2) விளங்கிய தண்பொழில் (382-3) விரி தரு பைம்பொழில் (382-5) தேன் மலர் மேவிய தண்பொழில் (382-6) என்ற அடைகள் விளக்குகின்றன. எனவே குருகுகள் நிறைந்த சோலை என்ற பொருளில் குருகாவூர் எனப் பெயர் அமைந்திருக்கலாம். பொழில்களின் நிறைவைச் சம்பந்தர் தர, சுந்தரர் இங்குள்ள நீர் நிலை அழகையும் காட்டுகின்றார், |
குருகாவூர் | தேவாரத் திருத்தலங்கள் |
குருகூர் | இன்று ஆழ்வார் திருநகரி சுட்டப்படும் தலம். திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. நம்மாழ்வார் பிறந்த இடம். எனவே ஆழ்வார் திருநகரி எனப் பெயர் பெற்றது. நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் இவரது பாடல் இங்குள்ள திருமால் பற்றி அமைகிறது. பாண்டிய நாட்டில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஒன்பது திருமால் கோயில்களில் ஒன்று இக்கோயில். குருகு என்னும் சொல் தமிழில் நாரை கோழி குருக்கத்தி என்பனவற்றைக் குறிக்கும். இங்கே குருகு என்று பெயர் கொண்ட பட்சியின் பெயரால் விளங்கும் ஸ்தலமாகக் கொள்வது ஏற்புடைத்து என்ற எண்ணம் பொருத்தமானது. குருகன் என்ற அரசன் ஆட்சி புரிந்த ஸ்தலம் என்ற குருபரம்பரை வரலாறும் உண்டு. |
குருந்தங்குடி | ஞானசம்பந்தரின் பாடலில் திருவூர்க்கோவை என்ற பதிகத் தில் (175-10) குடி என்ற தலப்பெயர்களைத் தரும் நிலையில் இப்பெயரும் இடம் பெறுகிறது. குருந்து என்ற மரம் சங்க நூல்களிலேயே சுட்டப்படும் ஒன்று. இதன் பூ நறுமணமுடையது. எனவே இதனைத் தலையில் அணியும் நிலையையும் காண்கின்றோம். |
குறிச்சி | குறிஞ்சி நிலத்து ஊர்கள் குறிச்சி எனப்பட்டன.ஆனால் சமவெளிப் பகுதிகளில் உள்ள ஊர்களும் குறிச்சி எனப்படுகின்றன. |
குறுக்கை | குறுக்கைப் பறந்தலையில் அன்னி என்னும் மன்னன் திதிய னோடு போரிட்டு, அவன் காவல் மரமாகிய புன்னையை வெட்டி வீழ்த்தினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. போர் நடை பெற்ற அந்தப்போர்க்களம் அமைந்த ஊர்ப்பெயராகிய குறுக்கை என்பதனோடு இணைந்து குறுக்கைப் பறந்தலை எனப் பெற்றது, வேளாளர் குலத்தனரில் ஒருபிரிவினர் குறுக்கையர் குடியினர். குறுக்கையர் குடியினர் வாழ்ந்த நிலப்பகுதி குறுக்கைஎனப் பெயா் பெற்றிருக்கலாம் என எண்ணுவது பொருத்தமாக இருக்கலாம், குறுக்கை என்னும் பெயருடன் தஞ்சைமாவட்டத்து மாயவரம் வட்டத்தில் ஒன்றும், திருச்சி மாவட்டத்தில் லால்குடி, வட்டத்தில் ஒன்றும் ஆக இரண்டு ஊர்கள் உள்ளன. |
குறுக்கை | தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து இவ்வூர் அமைகிறது. அட்ட வீரட்டத் தலங்களுள் காமனை எரித்த தலமாதலின் திருக் குறுக்கை வீரட்டம் என்று வழங்குகிறது என்ற எண்ணம் உண்டு. அப்பர் இக்கோயில் இறைவனை அடைவுத் திருத் தாண்டகம் என்ற பகுதியுள் பாடுகின்றார். வீரட்டம் என்ற முடிவு கொண்ட தலப்பெயர்களைச் சுட்டும் போது, குறுக்கை வீரட்டத்தையும் சுட்டுகின்றார். வீரட்டம் கோயில் என்பதும், குறுக்கை என்பதே ஊர்ப்பெயர் என்பதும் தெளிவாகிறது. இதனையே சேக்கிழாரும் குறுக்கைப் பதி என்று அமைக்கின்றனர் குறுக்கைக் குடி என்ற தொரு குடிப் பெயர் அமைகிறது. சங்க இலக்கியத்தில் அதுவே இப்பெயர்க் காரணம் எனலாம் (34-288). குறுக்கை என்னும் ஒரு வகைத் தாவரம் பற்றிய எண்ணம் அதுவே அப்பெயருக்குரிய காரணமோ எண்ணம் எழுப்புகிறது. மேலும், கடுக்கா மரம் தலவிருட்சமாதலின் கடுவனம், இறைவன் அம்மை யாரைப் பிரிந்து யோகஞ் செய்த இடம் காரணமாக யோகீசபுரம், காமனைத் தகித்த இடமாதலின் காமதகனபுரம், இலக்குமி யினது நடுக்கத்தைப் போக்கியதால் கம்பகரபுரம் ; தீர்க்கலாகு முனிவர் இத்தலத்து இறைவனை அபிடேகித்ததற்குக் கங்கா நீரினை விரும்பித் தமது கரங்களை நீட்டக் கரங்கள் நீளாது குறுகினமையால் குறுக்கை எனவும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. |
குறுக்கை குறுக்கை வீரட்டம் | தேவாரத் திருத்தலங்கள் |
குறுக்கைப் பறந்தலை | சங்க கால ஊர்கள் |
குறுங்குடி | குடி என்னும்சொல் ஊர் என்ற பொருளை குறிக்கும், வெகு தொலைவில் இல்லாமல் அருகில் குறுகிய தொலைவில் உள்ள ஊர் குறுங்குடி எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது, இவ்வூரினரான மருதன் என்ற சங்ககாலப் புலவர் குறுங்குடி மருதன் எனப்பெயர் பெற்றார். குறுந்தொகையில் 344ஆம் பாடலும், அகநானூற்றில் 4 ஆம் பாடலும் குறுங்குடி, மருதன் இயற்றியவை. பாண்டிநாட்டில் நெல்லை மாவட்டத்தில் குறுங்குடி என்று ஓர் ஊர் உள்ளது. திருமாலின் வாமனாவதாரத்தோடு தொடர்பு படுத்தி இவ்வூரின் பெயர் திருக்குறுங்குடி, என வந்ததாகப் புராணச் செய்தி கூறுகிறது, |
குறுங்குடி | திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளதொரு ஊர். திருமால் கோயில் சிறப்பு பெற்றது, பெரியாழ்வார், திருமழிசை ஆழ் வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பாடல்கள் பெற்ற தலம் இது. குறளன் தோன்றிய தலம் தான் குறுங்குடி. குறுகிய வடிவினனான வாமனன் பிறந்த குடியே குறுங்குடி என்றாகிறது. வாமன க்ஷேத்திரம் என்று பெயர் பெறுகிறது 1 என்ற எண்ணம் இவ்வூர் பற்றி அமைகிறது. எனினும் இவ்வூரில் வைணவக் கோயில் சிறப்பு பெற்ற பின்பு ஏற்பட்ட புராணக் கதை மூலம் இப்பெயர் பெற்றது இவ்வூர் என்பதை விட, குறுகிய அல்லது சிறிய குடியிருப்பு பகுதி என்று நிலையில் இப்பெயர் அமைந்ததாக இருக்கலாம் என்பது மேலும் ஆய்வுக்குரியது. |
குறுங்கோழியூர் | கிழார் என்ற சங்க காலப் புலவர் குறுங்கோழியூரைச் சேர்ந்தவர். ஆகவே அவா் குறுங்கோழியூர் கிழார் எனப் பெயர் பெற்றார். செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் வட்டத்திலுள்ள கருங்குழியே அன்றைய குறுங்கோழியூர் என்ற கருத்து உள்ளது. தொண்டை. நாட்டைச் சேர்ந்த குறுங்கோழியூர், குறுங் கோழி என்று ஆச, இப்பொழுது கருங்குழி என வழங்கப்பெறு இறது என்பர். (ரா. பி. சேதுப்பிள்ளை, ஊரும் பேரும் பக். 11.) புறநானூற்றிலுள்ள 17, 20, 22 ஆகிய பாடல்கள் குறுங் கோழியூர் கிழார் பாடியவை. |
குறும்பூர் | சங்க கால ஊர்கள் |
குறும்பூர் | குறும்பு என்பது பாலை நிலத்து ஊர். இப்பெயர் அடிப்படையில் குறும்பூர் என்ற ஊர்ப் பெயர் தோற்றம் பெற்றதா என்பது தெரியவில்லை. விச்சியர் கோமகன் பகைவர்களுடன் பொருத பொழுது குறும்பூர் ஆர்த்தது என்று சங்க இலக்கியம் கூறுகிறது. |
குறும்பொறையூர் | சேக்கிழாரின், புகழ்ச் சோழ நாயனார் வரலாற்றின் வழி தெரியவரும் ஊர் குறும்பொறையூர். |
குற்றாலம் | இன்றும் குற்றாலம் என்றே வழங்கப்பட்டு வரும் ஊர் பாண்டிய நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்றது இத்தலம். திருநாவுக்கரசர் மாணிக்கவாசகர் பட்டினத்தார் போன்ற பிறரும் இத்தலத்து இறையைப் புகழ்கின்றனர். குருமணிகள் வெயிலெறிக்கும் குற்றாலம் எனப்பாடுகின்றார் சேக்கிழார் (கழறி-106). சம்பந்தர் தம் ஒவ்வொரு பாடலிலும் குற்றாலத்தின் இயற்கை வளத்தைக் காட்டுகின்றார். இன்றும் இவ்வளத்தை நாம் நேரிடையாகக் காணமுடிகிறது. |
குற்றாலம் – குறும்பலா | தேவாரத் திருத்தலங்கள் |
குளந்தை | நம்மாழ்வார் பாடல் வழித் தெரியவரும் வைணவத்தலம். இன்று பெருங்குளம் என்று அழைக்கப்படும் ஊர். |
குளமுற்றம் | சங்க கால ஊர்கள் |
குளமுற்றம் | குளமுற்றம் என்னும் ஊர் சேர நாட்டிலுள்ளது. (கலைக் களஞ்சியம் ) இந்த ஊரிலே துஞ்சிய சோழ மன்னன் ஒருவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் எனப் பெற்றான். (புறம் 69.) ஊரின் வெளியிடம் எனப் பொருள்படும் முற்றம் என்ற. சொல் அமைந்த ஊர்ப்பெயர்களில் ஒன்று. இது குளம் என்ற நீர் நிலை காரணமாகக் குளமுற்றம் எனப்பெயர் பெற்றது போலும், |
குழுமூர் | சங்க கால ஊர்கள் |
குழுமூர் | உதியன் என்னும் வள்ளல் வாழ்ந்த ஊர் குழுமூர், இவ்வள்ளல் இரவலர்க்கு உணவு அளிப்பதைத் தலையாயக் கடமையாகக் கொண்டிருந்தான். ஆகையால் அவன் அட்டிலில் இரவலரின் ஆரவாரம் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது என்றும் தெரிகிறது. சிறந்த பசுக்களையுடைய நிலப்பரப்பினையுடைய குழுமூர் என்று சங்க இலக்கியம் கூறுவதால், இவ்வூர் நிலப்பரப்பில் பசுக்கள் குழுமியிருந்தன என்று தெரிகிறது. இவ்வாறு குழுமியிருந்த காரணத்தால் குழுமூர் எனப்பெயர் பெற்ற ஊராக எண்ண இடமளிக்கிறது. |
கூடகாரம் | சங்க கால ஊர்கள் |
கூடலூர் | ஆறுகள் கூடும் இடம் கூடல் எனப்பெயர் பெற்று, அங்கே அமைந்த ஊரும் கூடலூர் எனப்பெயர் பெற்றிருக்கலாம். தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள கடலூர் கெடில நதியும், உப்பனாறும் கூடும் இடத்தில் அமைந்துள்ளது. கடலூர் என்றும், இன்று வழங்கப்படுகிறது. இந்த களர் கடல் அருகே அமைந்துள்ள காரணத்தால் கடலூர் எனப் பெயா் பெற்றதாகக் கூறப்படும் கருத்து அவ்வளவு ஏற்புடையதல்ல. கூடலில் அமைந்த ஊர் கூடலூர் எனப் பெயா் பெற்று, அப்பெயரே கடலூர் என மருவி வழக்கில் வந்திருக்க வேண்டும் எனக் கூறுவதே பொருத்தமாகும். கூடலூர் என்ற பெயருடன் மலை நாட்டில் ஒரு கூடலூர் இருந்ததாகத் தெரிகிறது. இன்றைய ஊட்டி மலைத் தொடரில் மைசூர் செல்லும் வழியிலுள்ள கூடலூர் இது போலும். மதுரைக் கூடலூர் கிழார் என்ற தொடர் மதுரையை அடுத்து இருக்கும் கூடலூரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இன்றைய மதுரை மாவட்ட கம்பங் கூடலூர் போலும், நற்றிணையில் 200, 380 ஆய பாடல்களையும், புற தானூற்றில் 299 ஆம் பாடலையும் பாடிய கிழாரும் கூடலூரைச் சேர்ந்தவர்கள். முதுமொழிக் காஞ்சியை இயற்றியவரும் ஜங்குறு நூறு தொகுத்தவருமான கிழார் என்ற புலவர் கூடலுரைச் சேர்ந்தவரே. |
கூடலூர் | ஊர் ஆடுதுறைப் பெருமாள் கோயில் எனச் சுட்டப்படும் தலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. திருமால் கோயில் உள்ள தேவர்கள் கூட்டமாகக் கூடி இத்தலத்து எம்பெருமானை வணங்கி வாழ்த்தியமையால் இத்திருத்தலம் கூடலூர் என்று திருநாமம் பெற்றதாகக் கூறுவோர் பெரியோர்.. திருமங்கை ஆழ்வார் பாடல்கள் இத்தலத்து இயற்கைச் செழிப்பைத் தரு கின் றன. |
கூடலையாற்றூர் | இன்றும் கூடலையாற்றூர் என்றே சுட்டப்படும் இவ்வூர் தன்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது மணி முத்தாறு நதியும், வெள்ளாறும் கூடுமிடத்தில் கோயில் உள்ளது. என்னும் எண்ணம் இப்பெயரின் காரணத்தையும் சுட்டி விடுகின்றது. ஆறுகள் கூடும் இடம் என்ற பொருள் கூட்லை யாற்றூருக்குப் பொருத்தமாக அமைகிறது. |
கூடலையாற்றூர் | தேவாரத் திருத்தலங்கள் |
கூடல் | கூடல் என்றும், நான்மாடக் கூடல் என்றும், மதுரை என்றும் சங்க இலக்கியங்களில் கூறப்பெறும் ஊர்ப்பெயர்கள் ஒரே ஊரைக் குறிப்பனவேயாகும். அதாவது மதுரை என்ற ஊரையே குறிக்கும். ஆலவாய் என்பதும் அதன் பெயர், சங்க இலக்கியங்களில் கூடல் என்ற பெயரே பல இடங்களில் கரணப்படுகறது அடை மொழியுடன் நான்மஈடக்கூடல் எனவும் வழங்கப்படுகிறது. மதுரை என்ற பெயர் அருகியே இடம் பெறுகிறது. கூடி. இருத்தல் என்ற பொருளில் கூடல் எப் பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. சங்கப் புலவர்கள் கூடி இருந்து தமிழாய்ந்தமை நாம் அறிந்ததே. மாடங்களுடன் கூடியது என்ற பொருளில் நான்கு என்ற அடையுடன் நான்மாடக்கூடல் எனவும் பெயர் பெற்றது போலும். “நான்கு மாடங்கூடலின் நான் மாடக்கூடல் என்றாயிற்று. அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கல், திருநடுவூர்” என்பர் நச்சினார்க்கினியர் (கலித்தொகை 92ஆம் பாடலின் உரை) இக்கருத்து சங்க கால அமைப்புக்கு ஏற்றதாய் இல்லை. அடுத்து மதுரை என்ற பெயர் இக்காலத்தில் வழக்கில் அதிகமாக இருந்தாலும், சங்க காலத்தில் அருகியே இருந்தமை தெளிவு. பேச்சு வழக்கில் இன்று காணும் மருதை என்ற பெயரே மதுரை என மருவி வழங்க இருக்க வேண்டும். அதாவது பண்டைக் காலத்தில் மரத்தால் ஊர்ப்பெயர்கள் அமையும் முறையையொட்டி மருத மரங்கள் நிறைந்த மருத நிலத்தின் அடிப்படையில் மருதை என்ற பெயா் தோன்றி, நாளடைவில் மதுரை என மாறி வழங்கியதாகக் கருதவேண்டும். அப்பண்டைய பெயரே இன்றும் பேச்சுவழக்கில் வழங்கிய வருவது கண் கூடு, சங்கு இலக்கியத்தில் யாண்டும் மருதை என்ற பெயர் இடம் பெறவே இல்லை. மருவி வழங்கிய மதுரை என்ற பெயரே இடம் பெற்றுள்ளது. காரணம் இலக்கியங்களில் புலவர்கள் பாட ஆரம்பிப்பதற்கு முன்னமே மருதை என்ற பெயர் மதுரை என மருவி வழங்க ஆரம்பித்து விட்டமையேயாம். வருணன் சினத்தால் பெய்த மழையை, விலக்க இறைவன். கட்டளையால் நான்கு மேகங்கள் மாடங்களாகக் கூடிநகரத்தைக் காத்தமையால் நான்மாடக்கூடல் என்ற பெயர் பெற்றது என் பதோ, நகரின் அழகில் மகிழ்ந்த சிவன் மதுவைத் தெளித்தமையால் மதுரை எனப் பெயர் பெற்றது என்பதோ பொருத்தமாகத் தோன்றவில்லை. நகரின் அமைப்பைக் குறித்துக் காட்ட சிவபெருமான் அனுப்பிய ஆலகால நாகம் தன் தலையையும் வாலையும் கூட்டிப் காண்பித்தது அவ்வாறு வாலும் வாயும் கூடியதால் ஆலவாய் எனப் பெயர் பெற்றது என்பதும் கடம்ப மரங்கள் நிறைந்த கடம்பவனத்தில் ஒரு கடம்ப மரத்தின் கீழ் தேவேந்திரன் சிவலிங்கத்திற்குப் பூசை செய்ய, அதை அறிந்த பாண்டியன் அந்த வனத்தை நகராக்கினான். அதனால் தான் கடம்பவனம் என்ற ஒரு பெயர் மதுரைக்கு உண்டு என்பதும் புராணச் செய்தி. பாண்டியன் தொன்மையான தலைநகராய் அலைவாய்” என்ற பெயரை, அந்நகரின் அழிவுக்குப் பிறகு, சங்ககாலத் தம் தலைநகராய மதுரைக்கும் இட்டனன். அந்த அலைவாய் என்ற பெயரே ஆலவாய் என மாற்றம் பெற்று, அதற்கு ஒரு புராணக் கதையும் உண்டாக்கப்பட்டது என்ற கருத்தும் குறிப்பிடத் தக்கது. வையை ஆற்றை ஒட்டி மதுரைநகர் அமைந்திருந்தது. அதன் நீர்த் துறைகறைகளை ஒட்டிப் பூங்காக்கள் இருந்தன, இடையில் பெரும் பாணர் சேரி இருந்தது. அடுத்து அகழி, அகழியை அடுத்து கோட்டை அமைத்திருந்தன, கோயில் பழமையானது; வலிமை வாய்ந்தது, கோட்டையின் உள்ளே அகன்ற தெருக்களும், நடு நாயகமாய் அரண்மனையும் விளங்கின” இவை மதுரையைப் பற்றிப் பத்துப்பாட்டுத் தரும் செய்தி. இன்றைய மதுரைச் சங்க கால மதுரையல்ல. இன்றைய மதுரைக்குத் தெற்கில் சுமார் மூன்று மைல் ததெரலைவில் அவனியாபுரம் என்ற ஊர் உள்ளது. அங்குள்ள கோயிலில் சிவன் சொக்க நாதர். அம்மை மீனாட்டி, இன்றைய மதுரைக்குத் தெற்கில் சுமார் இரண்டு மைல் தொலைவில் ‘கோவலன் பொட்டல்’ என்று ஒருமேடு உள்ளது, கோவலன் கொல்லப்பட்ட இடம் அது தான் என்பது கர்ணபரம் பரைச் செய்தி, இந்த அவனியாபுரமும் கோவலன் பொட்டலும் இடையிலுள்ள நிலப்பகுதியுமே சங்ககாலக் கூடல் என்று கருதுகின்றனர். நாளடைவில் இன்றுள்ள மதுரை ஒரு புதிய நகரமாகத் தோன்றியது என்றும் எண்ணுகின்றனர். |
கூடல் | சங்க கால ஊர்கள் |
கூடல் | சங்க கால ஊர்கள் |
கூடல், (வெஞ்சமாக்கூடல்) | தேவாரத் திருத்தலங்கள் |
கூரூர் | ஞானசம்பந்தரின் திருவூர்க் கோவை சுட்டும் ஊர்ப்பெயர். நல்ல கூரூர் (175-1) |
கெடிலம்(கடலூர்) | தேவாரத் திருத்தலங்கள் |
கேதாரம் | தேவாரத் திருத்தலங்கள் |
கேதீச்சரம் | தேவாரத் திருத்தலங்கள் |
கேதீச்சரம் ஈழநாட்டில் உள்ள ஊர் | தேவாரத் திருத்தலங்கள் |
கைச்சினம் | கச்சினம் என்று இன்று வழங்கப்படும் ஊர். தஞ்சை மாவட்டத் தில் அமைகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். இந்திரன் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட்டு அதை அப்புறம் எடுத்து வைக்கும் போது அவன் கை அடையாளம் சுவாமி மீது படிந்தது. எனவே கைச்சின்னம் எனப் பெயர் பெற்றது என்பது இப்பெயர் குறித்த எண்ணம். தற்போது கச்சினம் என வழங்கப்படுகிறது என்ற கருத்து இவ்வூர் பற்றி அமையக் காண்கின்றோம். எனினும் இடைக் காலத்திலேயே கச்சினம் என்ற பெயரினைக் கல்வெட்டு கள் காட்டுகின்றன. இக்கோயிலில் அமையும் கல்வெட்டுகள் இவ் வூர்ப்பெயரினை முதலில் கச்சினம் என்றும் பின்னர் கச்சினப்பற்று என்றும் சுட்டுகின்றன எனவே கைச்சினம் என்ற இறைபற்றியன எண்ணம் காரணமாக உண்டான பெயர் பின்னர் கச்சினம் என்று ஆயிற்றா அல்லது கச்சினம் என்ற பழைய பெயர் இடை யில் கைச்சினம் என்று ஆயிற்றா எனப் பார்க்க, எளிமைப்படுத்து தல் மக்கள் வழக்கில் பொதுவான நிலை என்ற நிலையில் காண, கைச்சினமே முதல் பெயர் பின்னர் கச்சினம் என்று ஆயிற்று எனக் கொள்ளலே பொருத்தமாகிறது. கைச்சினம் பற்றிய வேறு காரணங்கள் அறியக் கூடவில்லை. எனவே பிறவிளக்கமும் தெளிவுறவில்லை. கண்ணுதலான் மேவியுறைகின்ற கோயில் கைச்சினம் (181-9) என்பது மட்டுமே சம்பந்தர் பாடல் தரும் விளக்கம். |
கைச்சினம் | தேவாரத் திருத்தலங்கள் |
கைலாயம் | தேவாரத் திருத்தலங்கள் |
கொங்கு | சங்க கால ஊர்கள் |
கொடிமங்கலம் | கொடிமங்கலம் பிடுகிறது. என்ற ஊரினைத் திருவாசகம் குறிப்பிடுகிறது. |
கொடிமாடச்செங்குன்றூர் | இன்று சேலம் மாவட்டத்தைச் சார்ந்து அமையும் தலம். திருச்செங்கோடு என்று வழங்கப் பெறுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது. மலையின் சிவப்பு நிறம் காரணமாக பெயர் அமைந்தது என்பர். |
கொடுகூர் | அக்கரை கண்ணிக்கொடுகூரை எறிந்தான் கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் என்ற செய்தி கொடுகூர் அக்கரையில் இருந்தமையைப் புலப்படுத்துகிறது. ஒடுங்குதல் அல்லது பொருந்துதல் என்னும் பொருளை யுடைய கொடுகு என்ற பகுதியைப் பெற்ற கொடுகூர் என்ற ஊர்ப் பெயர், அக்கரையில் பொருந்தியிருந்தமையால் பெற்ற பெயரோ என எண்ண இடமளிக்கிறது. |
கொடுங்கால் | சங்க கால ஊர்கள் |
கொடுங்குன்றம் | இன்று பிரான் மலை என வழங்கும் பகுதி இராமநாதபுர மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம், பெயரிலேயே காரணத்தையும் கொண்டு அமைகிறது. வளைந்த மலைப்பகுதி காரணமாக இப்பெயர் அமைந்திருக்கக் கூடும். பாரிவள்ளலின் பறம்பு மலையே இது என்பர். பறம்பு மலை என்ற பெயரே பிரான் மலை ஆகிவிட்டதோ எனத் தோன்றுகிறது. பாடல் பெற்ற கோயில் மலையடிவாரத்தில் உள்ளது. மலை மீதும் மற்றொரு கோயில் உள்ளது எனக் காண்கின்றோம். இம்மலையின் சிறப்பு ஞானசம்பந்தர் பாடல்கள் முழுவதும் மணக்கிறது குன்றம் என்ற பகுதியின் வளம் சிறப்பாக இவண் தெரிகிறது. |
கொடுங்குன்றம் | தேவாரத் திருத்தலங்கள் |
கொடுமணம் | சங்க கால ஊர்கள் |
கொடுமுடி – | தேவாரத் திருத்தலங்கள் |
கொடும்பாளூர் | கொழுந்துணர் கோதிக் கொண்டு குயில் நாடு கோனாடு குருகுறங்கும் கோனாட்டுக் கொடிநகரம் கொடும்பாளூர் – 1, என, பெரிய புராணம் இடங்கழி நாயனார் புராணத்தில் இவ்வூர்ப் பெயரைச் சுட்டுகிறது. |
கொடும்பை | இவ்வூர் பாண்டி நாட்டின் கண்ணது. சிலப்பதிகாரக் காலத்lsல் உறையூரிலிருந்து மதுரைக்குச் செல்லும் வழியிலிருந்ததென்று தெரிகிறது. கொடும்பை என்பது குளம் என்னும் பொருளையுடைய சொல்லாதலின் இவ்வூர்ப் பெயர் நீர்நிலையால் பெயா் பெற்றதாகக் கருதலாம். பராந்தக நெடுஞ்செழியன் (கி.பி. 768 815) வேள்விக் குடிச் செப்பேட்டில் கொடும்பாளூர் என்று இவ்வூர் குறிக்கப்பெற்றுள்ளது. புதுக்கோட்டைப் பகுதி குளத்தூர் வட்டத்தில், புதுக்கோட் டைக்கு சுமார் 25 மைல் தொலைவில் இப்பெபருடன் பழைய ஊர் ஒன்று உள்ளது. சோழரோடு உறவு பூண்டிருந்த இருக்கு வேளிர்களின் தலைநகரமாகக் கொடும்பாளூர் இருந்திருக்கிறது. இறுதியில் முஸ்லீம்களால் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது.” இராசசிம்மன் (8. பி. 907 931) சன்னமனூர்ப் பெரிய செப்பேட்டில் கொடும்பைமாநகர் என்று இவ்வூர் குறிக்கப்பெற்றுள்ளது. |
கொடைக்கானல் | சங்க கால ஊர்கள் |
கொட்டையூர் | திருநாவுககரசர் பாடல் பெற்ற தலம். இன்றும் கொட்டையூர் என்றே சுட்டப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. ஆமணக்குச் கொட்டைச் செடியின் கீழ் இலிங்கம் வெளிப்பட்டதனால் ஊர்ப்பெயர் கொட்டையூர் ஆயிற்று. சோழ மன்னனுக்குக் கோடி லிங்கமாகக் காட்சி தந்ததனால் கோடீச்சரம் என்ற பெயர் கோயிலுக்கு அமைகிறது. என்ற எண்ணம் இப்பெயர்க் காரணத்தைத் தருகிறது. இந்த ஊர்ச்செழிப்பையும் மக்கள் வாழ்நிலையையும் தருகின்றார் நாவுக்கரசர். |
கொட்டையூர் | தேவாரத் திருத்தலங்கள் |
கொண்கானம் | கொண்கானத்தின்௧ண் நன்னனின் ஏழில்மலை இருந்ததாக சங்க இலக்கியம் கூறுகிறது. ஏழில்மலை என்பது ஏழுமல என்று இப்பொழுது மலையாளத்தில் கூறப்படுவதே. ஆகவே கொண் கானம் இன்றைய வடமலபார்ப் பகுதியாகும். இந்தக் கொண்கானமே சிலப்பதிகாரத்தில் கொங்கணம் எனக் குறித்துக் கூறப்பெற்ற பகுதி என்பர். காடும் மலையும் நிறைந்த பகுதியாகத் தோன்றுவதால் அந்த மன்னனின் கானம் கோன்கானம் கோனுக்குரியகானம், எனப் பெயர் பெற்று, நாளடைவில் கோன் என்பது கொன் என மருவி கொன்கானம் என்று கொண்கானம் என வழங்கப் பெற்றதோ என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது. |
கொண்டீச்சரம் | தேவாரத் திருத்தலங்கள் |
கொற்கை | கொற்கை என்பது ஒரு துறைமுக நகரம். பொருநையாறு கடலோடு கலக்குமிடத்தில் விளங்கியது. இத்துறையில் விளைந்த முத்து கடல் கடந்த நாடுகளில் வாணிகப் பொருளாக அமைந்த சிறப்பினது. செங்குட்டுவன் காலத்தில் வெற்றி வேற் செழியன் என்னும் பாண்டியன் கொற்கை நகரைத் தலைநகராகக்கொண்டு அரசாண்டான். இக்கொற்கை இப்பொழுது திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிற்றூராக உள்ளது. கி.பி. 80 இல் நமது நாட்டுக் கடற்கரையைப் பார்வையிட்ட பெரிப்புளுஸ் என்னும் பயணநூலின் ஆசிரியரான கிரேக்கர் “கொற்கை என்பது கன்னியாகுமரிக்கு அப்பாலுள்ள துறைமுகம், அங்கு முத்தெடுக்கும் தொழில் நடைபெறுகிறது. தண்டிக்கப் பெற்ற குற்றவாளிகள் அத்தொழிலைச் செய்கின்றார்கள். கொற்கை பாண்டி நாட்டைச் சேர்ந்தது என்று எழுதியுள்ளமை இந்நகரம் பாண்டி. நாட்டைச் சார்ந்ததே என்ற கருத்தை வலியுறுத்தும். முத்தெடுப்போர் கொற்கையில் ஒரு தனிச்சேரியில் வாழ்ந்தனர். அதைச் சுற்றிலும் மதுக்குடிப்போர் வாழ்ந்த பாக்கம் இருந்தது. திருச்செந்தூர் கல்வெட்டு ஒன்றில் “கொல்கை” என்ற குறிப்பு உள்ளதால் ‘கொல்கை’ என்னும் பெயரே “கொற்கை” ஆகியிருக்கவேண்டும் என்று அறிஞர் கால்டுவெல் எண்ணுகிறார். “கொல் கை” எனப் பிரித்துக் கொலை செய்யும் கை போன்றது என்று பொருள் கொண்டார். தொல் முது மாந்தரின் கொல் கருவி கையாகவே இருந்ததாகலின் அப்பெயர்ப் பொருத்தத்தால் கொற்கையாகி இருக்கவேண்டும் என விளக்கினார். கால்டு வெல் அவர்களின் திருநெல்வேலி வரலாற்று நூலை மொழி பெயர்த்த டாக்டர் ந.சஞ்சீவி, கடற்கரைப்பட்டினமாகிய கொற்கைக்கும் கடல் அலைப்புக்கும் உள்ள தொடர்பை எண்ணி, அலைகள் கொல்லும் (தாக்கும்) இடம்” கொற்கை என்று பொருள் கண்டார். இக்கருத்துப் பொருத்தம் உள்ளதாகத் தோன்றவில்லை. கொல் என்னும் சொல் கொலைத் தொழிலோடு தொடர்பு கொண்டதாகக் கருதுவது பொருந்தவில்லை. “கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொற்சேரி” (ஐந்திணை ஐம்பது 21.) கொற் சேரித் துன்னூசி விற்பவர் இல்” (பழமொழி 51) இத்தொடர்களில் ‘கொற்சேரி’ என்பது கொல்லுச் சேரியைக் குறிக்கும். ஆகவே தொழிலைக் கொண்டு, கொற்கைப் பெயர் பெற்றது எனக் கருதுவதைவிட கொல்லுத் தொழில் கொண்டே கொற்கைப் பெயர் பெற்றிருக்க வேண்டும் என்பர்.” ‘பொன் செய் கொல்லர்’ என்ற சங்க இலக்கியத் தொடர் பொன் கொண்டு பணிசெய்வோர் பொற் கொல்லர் எனப்பட்டதைக் குறிக்கும். படைக்கலம் முதலிய கருவிகள் செய்தல். அணிகலம் உண்கலம் முதலாம் கலங்கள் செய்தல், தெய்வத் திருஉ௫ செய்தல் ஆகியவை பொதுமைக் கொல்லுத் தொழில். “காசு” என்னும் நாணயம் செய்யும் தொழில் தனிமைக் கொல்லுத் தொழில். அரசர் இருந்து கோன்மை செலுத்தும் கோ நகர்க் கண்ணே செய்யப் பெறும் சிறப்புக் கொல்லுத்தொழில். தங்க வேலை நடைபெறும் இடம் அக்கசாலை எனப் பெறும். கொற்கையில் அக்கசாலை விநாயகர் கோயில் என்றே ஒரு கோயில் உள்ளது. அக்கோயில் கல்வெட்டு “மதுரோதைய நல்லூர் அக்கசாலை ஈசுவரமுடையார் கோயில் தானத்திற்காக” என்று குறிக்கிறது. இன்றைக்கும் அந்த விநாயகர் கோயில் நிலைவாயில் மேற்கல்லில் “அக்கசாலை ஈசுவரமுடையார்” என்னும் கல்லெழுத்து விளங்குகிறது. அக்கோயிலைச் சுற்றி தெருக்கள் பதின்மூன்று இருந்தன என்றும், அவையெல்லாம் அக்கசாலைத் தெருக்கள் என்றும் செவிவழிச் செய்தி கூறுகிறது. கோயில் குளத்தின் வடபாலுள்ள ஊர் ‘அக்கசாலை’ என்னும் பெயருடன் இன்றும் விளங்குகிறது. ஆனால், அக்கசாலை, அக்காசாலை ஆகி யுள்ளது. இக்காரணங்களால் கொற்கை என்னும் ஊர்ப்பெயர் கொல்லுத் தொழிலால் பெற்ற பெயர் என்பதே சரியான முடிபு. “கொற்கு” என்பது ஒரு மரப்பெயா் என்றும் அப்பெயர் அடிப்படையில் ‘கொற்கை’ எனப் பெயர் பெற்றது என்றும் ஒரு கருத்து உள்ளது. |
கொற்கை | சங்க கால ஊர்கள் |
கொல்லி | கொல்லி என இலக்கியங்களில் இடம்பெற்ற ஊர்ப்பெயர் மலைப்பகுதி ஊராகும். ஊரின்பெயா் அவ்வூர் அமைந்த மலைப் பகுதிக்கோ. மலைப்பகுதியின் பெயர் அங்கே அமைந்த ஊருக்கோ பெயராக அமைந்திருக்க வேண்டும். கொல்லி மலைப் பகுதியில் அமைந்தது இவ்வூர். கொல்லிமலை ஓரி என்ற வள்ளலுக்குரியது. கொல்லிமலை சேலம் மாவட்டத்தில் நாமக்கல், ஆத்துரர் வட்டத்திலுள்ள ஒரு குன்றுத் தொடர். இம்மலையில் கொல்லிப் பரவை என்று ஒரு தெய்வப்படிமம் செய்து வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு பூதத்தால் அமைக்கப்பட்ட அழகிய பாவை என்று சங்க நூல்கள் கூறுகின்றன. கொல்லிக் கூற்றத்தில் தகடூரெறிந்த பெருஞ் சேரலிரும் பெழை அதிகமானோடு இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று மூரசுங்குடையுங் கலனுங் கொண்டான் என்று பதிற்றுப் பத்து கூறுகிறது. |
கொல்லிக்குடவரை | சங்க கால ஊர்கள் |
கொல்லிக்கூற்றம் | சங்க கால ஊர்கள் |
கொள்ளம்புதூர் | தேவாரத் திருத்தலங்கள் |
கொள்ளம்பூதூர் | இன்றும் இப்பெயரிலேயே தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். ஞான சம்பந்தர் இவ்வூரினை. |
கொள்ளிக்காடு | தேவாரத் திருத்தலங்கள் |
கோகரணம் | தேவாரத் திருத்தலங்கள் |
கோகழி | கோகழி யாண்ட குருமணியைத் தம் திருவாசகத்தில் மிகுதியாகப் போற்றிப் பாடுகின்றார் மாணிக்கவாசகர். கோகழியாண்ட கோவே போற்றி எனப் போற்றித் திரு அகவலில் பாடுகின்றார். (157) கோகழி என்ற ஊர் திருப்பெருந்துறை என்ற பெயரையும் உடையது. |
கோசம்பி | கோசம்பி வடஇந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் அலகபாத் மாவட்டத்தில் யமுனையாற்றங்கரையில் உள்ள ஓர் ஊர். ‘கெளசாம்பி’ என்ற பண்டைப் புகழ்பெற்ற நகரம் இங்கு புதை உண்டு இடைப்பதாகச் சொல்லப்படுகிறது. சிதைந்த பெரிய கோட்டை ஒன்று இங்கு உள்ளது. நான்கு மைல் சுற்றளவு |
கோசலநாடு | கோசலம் வட இந்தியாவில் சுமார் கி.மு. 550இல் விளங்கிய ஒரு நாடு. ஐம்பத்தாறு நாடுகளில் ஒன்று இது என்றும், இந்நாட்டின் தலைநகரம் அயோத்தியென்றும் நூல்கள் கூறும், இப்போது இப்பகுதி அயோத்தி என வழங்கப் பெறுகிறது. இது புத்தர் காலத்தில் முக்கிய நாடாக இருந்தது. இந்த நாட்டை ஆண்டவர்கள் சூரிய வமிச அரசர்கள். ஓவியத்தொழிலர் உறைந்தநாடு என்று இலக்கியம் கூறுகிறது. |
கோடி | சங்க கால ஊர்கள் |
கோடி | குழகர் கோயில் என்று இன்று சுட்டப்படும் இத்தலம் தஞ்சா வூர் மாவட்டத்தில் அமைகிறது. கோடிக் குழகர் என்ற சுந்த ரர் பாடல் நிலையினின்றும் கோடி’, என்பது இடம் என்பதும் குழகர்’ என்பது சிவன் பெயர் என்பதும் தெளிவாக அமைகிறது. எனவே குழகர் என்ற இறைச்சிறப்பே குழகர் கோயில் என்ற இன்றைய பெயருக்குக் காரணமாக அமைகிறது எனலாம். கோடிக்கரை என்ற இத்தலம் கடற்கரை ஓரமாக அமைந்த காரணமே கரை ஓரம் என்ற பொருளில் ஊர்ப் பெயர் எழக் காரணமாக அமைந்திருக்கிறது. |
கோடி | இன்றைய இராமேசுரத்துக்கு அருகில் கோடிக்கரை என்று ஓர் ஊர் இருக்கிறது. “தொன்முதுகோடி”’ என்று சங்க இலக் கியம் குறிப்பது இந்தக் கோடிக்கரை என்னும் ஊரையேயாகும். கடலுட் செல்லும் தரைமுனை எனப்பொருள்படும் கோடி என்ற சொல்லே இவ்வூர் கடற்கரையில் அமைந்த ஊர் என்பதைக் காட்டுகின்றது. கோடிக் கரையைப் பற்றிச் சங்க நூல்களில் அகநானூற்றில் ஒரே ஒரு செய்தி வருகின்றது. அகநானூறு 70ஆம் பாடலில் “தொன்முதுகோடி” என்று அழைக்கப்படும் கோடிக்கரைப் பாண்டிய மன்னருக்கு உரியதாகக் கூறப்பெற்றுள்ளது. இங்கு ஓசையிட்டுக் கொண்டிருந்த பறவைகளின் ஒலியை இராமன் நிறுத்தினான் என்று அகப்பாட்டு கூறுகிறது. கோடிக்கரையில் பறவைகள் நிறைய இருந்தனவாக அகநானூறு கூறும் செய்தி மிகவும் சிறப்பானதாகும். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் கோடிக் கரையில் பறவைகள் மிகுதியாக இருந்தமை பற்றி அகநானூறு கூறிய செய்தி இன்றும் உண்மையாக இருப்பது மிகவும் வியப்பான செய்தியாகும். தமிழ்நாட்டில் பறவைகளை மிகுதியாகக் காண வேடந்தாங்கல் செல்லுவதைப்போல கோடிக்கரைக்கும் செல்லலாம், அங்கே பலவகைப் பறவை இனங்களைக் காணலாம். ஆகவேதான் கோடிக் கரையைப் பறவைகள் புகலிடமாகத் (Bird sanctuary) தமிழக அரசுநிறுயுவிள்ளது. இந்தப்பறவைகள் புகலிடம் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புடையது என்பதை அகநானூறு தெரிவிக்கிறது. கோடிக்கரை முற்காலத்திலே தமிழ்நாட்டின் கன்றுளைலிருந்து இலங்கைக்குச் செல்லக் குறுக்கு வழியாக இருந்ததாகத் தெரிகிறது. கோடிக் கரை முனைக்கும் (point cahmere) இலங்கையிலுள்ள பேட்பே முனைக்கும் (point Pedro) 40 மைல் தூரம் உள்ளது. |
கோடிகா | திருக்கோடிகா என்று வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. சோலையின் இறுதி அல்லது இறுதியில் உள்ள சோலை என்ற பொருளில் இப்பெயர் அமைந்திருக்கலாம். சம்பந்தரும், திருநாவுக்கரசரும் இங்குள்ளக் கோயில் இறையைப் பரவுகின்றனர். கோடிகாவுடைய கோவே எனத் திருநாவுக்கரசர் பாட (51) கொந்தணிகுளிர் பொழிற் கோடிகா என (235-10) சம்பந்தர் பாடுகின்றார். திருவிடை மருதூருக்கு அப்பால் ஆற்றுக்கு அப்பால் உள்ளது என்ற எண்ணம் தன் செழிப்பையும் சோலையையும் நம் கண்முன் கொணர்கிறது. |
கோடிக்கா | தேவாரத் திருத்தலங்கள் |
கோடிக்குழகர் | தேவாரத் திருத்தலங்கள் |
கோடை | சங்க கால ஊர்கள் |
கோட்டம்பலம் | சங்க கால ஊர்கள் |
கோட்டம்பலம் | கேட்டம்பலம் என்னும் இவ்வூர், சேரமான் மாக்கோதையுடன் தொடர்புடையதாகக் கூறப்பெற்றிருப்பகால் கோடு அதாவது மலையுச்சி அங்கே பலர் கூடும் இடம் அம்பலம் மலையுச்சியில் பலர் கூடும் இடத்திற்குப் பெயராய் முதற்கண் கோட்டம்பலம் என்பது அமைந்து நாளடைவில் அந்த இடம் ஊராய் வளர்ந்த பொழுது அந்த ஊருக்குப் பெயராய் அமைந்ததோ என எண்ணத் தோன்றுவறெது. இவ்வூரில் துஞ்சியதால் சேரமன்னன் சேரமான் கோட்டம் பலத்துத் துஞ்சிய மாக் கோதை எனப் பெயர் பெற்றான். நற்றிணையில் 95ஆம் பாடல் இவ்வூரினராய கோட்டம்பல வளனார் என்னும் புலவர் பாடியது. |
கோட்டாறு | தேவாரத் திருத்தலங்கள் |
கோட்டாறு | இன்று கொட்டாரம் என்று வழங்கப்படும் ஊர். காவிரியின் தென் கரையில் சிறப்புற்ற ஊர் இது. வெள்ளையானை பூசித்து பேறு பெற்ற தலமாக இதனை, ஞானசம்பந்தர் பாடுகின்றார். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பழையாற்றங்கரையில் உள்ளதொரு இடம் கோட்டாறு’ எனப் பெயர் அமைவது போன்று இதுவும் காவிரிக்கரையில் அமைந்த நிலையில் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. |
கோட்டியூர் | இராமநாதபுரத்தைச் சார்ந்து அமையும் ஊரான நாலாயிரத் திவ்விய பிரபந்தம் சுட்டுகின்றது. எனவே வைணவ சமயப் புகழ் பெற்றது என்பது தெளிவு. பெரியாழ்வார். திரு மங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை யாழ்வார் பாடல் பெற்றது இத்தலம், ஹிரண்யனை ஒழிப்பதற்குத் தேவர்கள் கோஷ்டியாக ரஹஸ்ய ஆலோசனை செய்த இடம் கோஷ்டியூர் என்ற எண்ணம் அமைகிறது |
கோட்டூர் | தேவாரத் திருத்தலங்கள் |
கோட்டூர் | தஞ்சை மாவட்டத்தில் அமையும் ஊர். ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். இரண்டு சிவன் கோயில்கள் கொண்ட ஊர். கருவூர்த் தேவரும் திருவிசைப்பா இது குறித்துப் பாடியுள்ளார்.. |
கோணமலை (திருக்கோணமலை) | தேவாரத் திருத்தலங்கள் |
கோத்திட்டைக்குடி | கோத்திட்டைக் குடி’ என்ற ஊர் இறைப்பற்றி சுந்தரர், திருநாவுக்கரசர் பாடல் குறிப்பிடுகின்றது. |
கோனாடு | இது ‘சோழ நாட்டு’ உள்நாடுகளில் ஒன்று. எறிச்சலூர் இப் பகுதியைச் சேர்ந்தது. வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதி கோனாடு என வழங்கப் பெறுகிறது. |
கோனாட்டு எறிச்சலூர் | சங்க கால ஊர்கள் |
கோம்பை | மலையடிவாரத்து ஊர்கள் “கோம்பை” எனப்படுகின்றன. சிற்றூர் எனப் பொருள்படும் “கோம்பு” என்ற கன்னடச் சொல்லிம் அடிப்படையில் இச்சொல் தோன்றியிருக்கிறது. இப்பொதுக்கூறு உள்ள ஊர்களில் கன்னட மக்கள் வாழ்ந்து வருவது இக்கருத்துக்கு அரணாக உள்ளது. |
கோயிலூர் – உசாத்தானம் | தேவாரத் திருத்தலங்கள் |
கோலக்கா | தேவாரத் திருத்தலங்கள் |
கோலக்கா | தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமையும் ஊர். சீர்காழிக்கு 1கி.மீ. தொலைவில் உள்ள தலம் எனக் காண கோயில் அமைந்த இடம் கோலக்கா என்று சுட்டப்பட்டது என்பது தெரிகிறது. மேலும் இன்று கோயில் பெயரால் திருத் தாளமுடையார் கோயில் என்றே இவ்விடத்தைக் சுட்டும் தன்மை கோயில் செல்வாக்கு பெற்று திகழ்ந்தமைக்குச் சான்று. அழகிய சோலைகளின் காரணமாக இப்பெயர் அமைந்திருக்கலாம். சேக்கிழார் கூற்றும் இவ்விடத்தின் அழகினைத் தரும் நிலையில் அமைகிறது. |
கோளிலி | தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்குவளை என்ற பெயருடன் திகழ்கிறது இவ்வூர். மூவர் பாடலும் பெற்ற இவ்வூர்ப் பெயர் குறித்து எண்ணங்கள் தெளிவு றவில்லை. நவகோள்கள் பூசித்துப் பேறு பெற்ற மையால் கோளிலி என வழங்கப் பெறுகிறது என்ற எண்ணம் அமைகிறது. திருஞா னசம்பந்தர் |
கோளிலி – திருக்குவளை | தேவாரத் திருத்தலங்கள் |
கோழம்பம் | கோழம்பம் என்றே இன்றும் சுட்டப்படும் ஊர் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தராலும், அப்ப ராலும் பாடல் பெற்ற தலம் இது. பொழில் சூழ்ந்த கோழம்பத்தின் சிறப்பே இருவராலும் சுட்டப்படுகிறது. |
கோழம்பம் இக்காலத்தில் திருக்குழம்பியம் என வழங்கப்படுகிறது. | தேவாரத் திருத்தலங்கள் |
கோழி | பார்க்க உறந்தை |
கோழி | சங்க கால ஊர்கள் |
கோவலூர் | சங்க கால ஊர்கள் |
கோவலூர் | திருக்கோயிலூர் எனச் சுட்டப்படும் இவ்வூர் இன்று, தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் அப்பர் பாடல் பெற்ற தலம் இது. பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ளது இவ்வூர். ஊர் மேலூர், கீழூர் என்ற இரு பகுதிகளாக அமைகிறது. கீழூரில் சிவன் கோயிலும், மேலூரில் திருமால் கோயிலும் உள்ளன. இவ்வூரின் வளம் குறித்து நாயன்மார் ஆழ்வார் இருவரும் பாடியுள்ளனர். கோவலூர் என்ற ஊர் கோவல் என்ற பழம் பெயரை யுடையது. சங்க இலக்கியம் முதற் காணப்படும் இவ்வூர்ப் பெயர் ஊரின் பழமையையும் தருகின்றது. மலையமான் திருமுடிக்காரி இந்நாட்டை ஆண்டு வந்த தன்மையை அகநானூறு 30 ஆம் பாடல் தருகிறது. |
கோவலூர் வீரட்டம் நடுநாடு | தேவாரத் திருத்தலங்கள் |
கோவல் | சங்க கால ஊர்கள் |
கோவல் (கோவலூர்) | இவ்வூர் கோவல் என்றும் கோவலூர் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. மலையமான் திருமுடிக்காரி முதலியோர் ஆண்ட ஊர், ஒரு காலத்தில் அதியமான் நெடுமான் அஞ்சியால் வெல்லப் பட்ட ஊர். தென்னார்க்காடு மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையின் கண்ணுன்ளது. |
கோவூர் | சங்க கால ஊர்கள் |
கோவூர் | சோழன் நலங்கிள்ளி, கள்ளி வளவன், நெடுங்கள்ளி ஆகிய மன்னர்களைப் பாடியவரும், நற்றிணை 393.ஆம் பாடல், குறுந் தொகை 65ஆம் பாடல்,புறநானூறு 31 33, 41, 44 47, 68, 70, 308 373, 382, 386. 400 ஆகிய பாடல்கள் இவற்றைப் பாடியவருமான கிழார் என்னும் புலவர் கோவூரைச் சேர்ந்தவர், ஆகவே கோவூர் கிழார் எனப் பெற்றார். |