ஊர் பெயரகராதி

தமிழகம் ஊரும் பேரும் – சேதுப்பிள்ளை.ரா.பி, இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் I – ஆளவந்தார்.ஆர், II – பகவதி.கே. தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு – கு.பகவதி. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி – தா.வே.வீராசாமி. தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – மெய்.சந்திரசேகரன். கெடிலக்கரை நாகரிகம் ஊர்கள் – பேரா.சுந்தரசண்முகனார். செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – நாகராசன்.கரு


87

48

47

6

15

6

18

11

4

8

4
க்
99
கா
32
கி
3
கீ
1
கு
61
கூ
10
கெ
1
கே
3
கை
3
கொ
24
கோ
39
கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
10
சா
9
சி
21
சீ சு
2
சூ செ
17
சே
8
சை சொ சோ
9
சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
23
தா
1
தி
22
தீ து
11
தூ
4
தெ
7
தே
4
தை தொ
5
தோ தௌ
ந்
31
நா
24
நி
6
நீ
11
நு நூ நெ
22
நே
5
நை நொ
1
நோ நௌ
ப்
43
பா
33
பி
7
பீ பு
39
பூ
10
பெ
11
பே
7
பை
2
பொ
7
போ
6
பௌ
ம்
40
மா
25
மி
3
மீ
2
மு
28
மூ
4
மெ
1
மே
1
மை
5
மொ மோ
6
மௌ
ய்
2
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
40
வா
20
வி
25
வீ
6
வு வூ வெ
27
வே
24
வை
7
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
கோகரணம்

தேவாரத் திருத்தலங்கள்

கோகழி

கோகழி யாண்ட குருமணியைத் தம் திருவாசகத்தில் மிகுதியாகப் போற்றிப் பாடுகின்றார் மாணிக்கவாசகர். கோகழியாண்ட கோவே போற்றி எனப் போற்றித் திரு அகவலில் பாடுகின்றார். (157) கோகழி என்ற ஊர் திருப்பெருந்துறை என்ற பெயரையும் உடையது.
சீரார் பெருந்துறை – திரு.சிவ -15
திருவார் பெருந்துறை — திரு – கீர்த் – 54-55
தென்னன் பெருந்துறை – திரு -திருபொற்-9.2
தன்னன் பெருந்துறை என்ற சொற்றொடர், இது பாண்டி நாட்டைச் சார்ந்தது என்பதைத் தெரிவிக்கும். ஆவுடையார் கோயில் என்றும் காளையார் கோயில் என்றும் சுட்டப்படும் தலம் மாயவரம்-காரைக்குடி புகை வண்டிப் பாதையில் உள்ள அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இருந்து ஒன்பது மைல் தூரத்தில் விளங்குகின்றது. மாணிக்கவாசகர் இதனைச் சிவபுரம் எனவும் குறிப்பிடுகின் றார். இதற்கு, மேலும் அநாதி மூர்த்தி தலம், ஆதி கயிலாயம், உபதேசத் தலம், குருந்த வனம், சதுர் வேத புரம், ஞானபுரம், திரிமூர்த்திபுரம், தட்சிணக் கயிலைபுரம், தென்கயிலை, யோகவனம், யோகபீடபுரம் எனப் பிற பெயர்களும் அமைகின்றன. மாணிக்கவாசகர் பல இடங்களில் குறிப்பிடும் கோகழி என்பது திருப்பெருந் துறையையே என்பது மு.அருணாசலம் அவர்கள் கருத்து. இவர் பிறர் கூறும் பல பொருள்களையும் ஆய்ந்து இம் முடிவினை வழங்குகின்றார். பெருந்துறை ஊரைக் குறிப்பது என்பதும் அங்குள்ள கோயிலே கோகழி என்பதும், குருந்த மரத்தின் கீழ் சிவன் என்ற பொருள் இதற்கு என்பதும் இவரது எண்ணங்கள்.

கோசம்பி

கோசம்பி வடஇந்தியாவில்‌ உத்தரப்பிரதேசத்தில்‌ அலகபாத்‌ மாவட்டத்தில்‌ யமுனையாற்றங்கரையில்‌ உள்ள ஓர்‌ ஊர்‌. ‘கெளசாம்பி’ என்ற பண்டைப்‌ புகழ்பெற்ற நகரம்‌ இங்கு புதை உண்டு இடைப்பதாகச்‌ சொல்லப்படுகிறது. சிதைந்த பெரிய கோட்டை ஒன்று இங்கு உள்ளது. நான்கு மைல்‌ சுற்றளவு
௨ள்‌ளது. உயரம்‌ 30 35 அடி. மத்தியில்‌ நவீன ஜைனக்‌ கோயில்‌ ஒன்று உள்ளது. அதன்‌ அருகில்‌ 11 ஆம்‌ நூற்றாண்டில்‌ ஜைனச்‌ சிற்பங்கள்‌ பல தோண்டியெடுக்கப்பட்டன. ஒரு பக்கத்தில்‌ சிதைந்த செங்கல்‌ மேடையில்‌ ஒரே கல்லாலான பெரிய உருவம்‌ ஓன்று உள்ளது. அதில்‌ 3 அல்லது 6 ஆம்‌ நூற்றாண்டுக்‌ கல்வெட்டுகள்‌ உள்ளன. அருகிலே சுட்டமண்‌ உருவங்களும்‌, சிற்பங்களும்‌, நாணயங்களும்‌ கண்டெடுக்கப்பட்டுள்ளன. நாணயங்களில்‌ கி.மு. இரண்டு அல்லது முதல்‌ நூற்றாண்டில்‌ ஆண்ட அரசர்‌களின்‌ பெயர்கள்‌ காணப்படுகின்றன. கோட்டைக்கு வடமேற்கே மூன்று மைல்‌ தொலைவில்‌ பாபோசா (pabhosa) என்ற குன்று உள்ளது. அதன்‌ மேலுள்ள குகையில்‌ முக்கியமான கல்வெட்டுகள்‌ உள்ளன. கோசம்பி நகரம்‌ ஆதியில்‌ குசாம்பன்‌ என்னும்‌ அரசனால்‌ உண்டாக்கப்பட்டதென்பர்‌. உதயணனின்‌ தலைநகர்‌ இங்கே அரசு புரிந்த உதயணன்‌ சிறைப்பட்டு உஞ்சை நகர்க்குச்‌ சென்ற பொழுது பகைவனாகிய பாஞ்சால நாட்டு மன்னனால்‌ இந்நகர்‌ கைக்கொள்ளப்பட்டது. மீண்டும்‌ உதயணனால்‌ கைப்பற்றப்‌ பட்டது.
“கொடிக்‌ கோசம்பிக்‌ கோமகனாகிய
வடித்‌ தோர்த்தானைவத்தவன்‌”. (மணிமே.151:61 62)
“கோணை நீண்மதிற்‌ கொடிக்‌ கோசம்பி
நகைத்துணை யாய மெதிற்கொள (பெருங்‌. 1:48:69 70)
“குடிகெழு வளமனை குழீஇய செல்வத்துக்‌
கன்னி நன்மதிற்‌ கடிக்கோசம்பி” (௸,28:149 150)

கோசலநாடு

கோசலம்‌ வட இந்தியாவில்‌ சுமார்‌ கி.மு. 550இல்‌ விளங்கிய ஒரு நாடு. ஐம்பத்தாறு நாடுகளில்‌ ஒன்று இது என்றும்‌, இந்‌நாட்டின்‌ தலைநகரம்‌ அயோத்தியென்றும்‌ நூல்கள்‌ கூறும்‌, இப்‌போது இப்பகுதி அயோத்தி என வழங்கப்‌ பெறுகிறது. இது புத்தர்‌ காலத்தில்‌ முக்கிய நாடாக இருந்தது. இந்த நாட்டை ஆண்டவர்கள்‌ சூரிய வமிச அரசர்கள்‌. ஓவியத்தொழிலர்‌ உறைந்தநாடு என்று இலக்கியம்‌ கூறுகிறது.
“கோசலத்தி யன்ற வோவியத்‌ தொழிலரும்‌
வத்தநாட்டு வண்ணக்‌ கம்மரும்‌
தத்தற்கோண்மேற்றங்‌ கைத்தொழில்‌ தோன்ற” (பெருங்‌. 1:58 43 45)

கோடி

சங்க கால ஊர்கள்

கோடி

குழகர் கோயில் என்று இன்று சுட்டப்படும் இத்தலம் தஞ்சா வூர் மாவட்டத்தில் அமைகிறது. கோடிக் குழகர் என்ற சுந்த ரர் பாடல் நிலையினின்றும் கோடி’, என்பது இடம் என்பதும் குழகர்’ என்பது சிவன் பெயர் என்பதும் தெளிவாக அமைகிறது. எனவே குழகர் என்ற இறைச்சிறப்பே குழகர் கோயில் என்ற இன்றைய பெயருக்குக் காரணமாக அமைகிறது எனலாம். கோடிக்கரை என்ற இத்தலம் கடற்கரை ஓரமாக அமைந்த காரணமே கரை ஓரம் என்ற பொருளில் ஊர்ப் பெயர் எழக் காரணமாக அமைந்திருக்கிறது.
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல்
குடிதான் அயலே இருந்தாற் குற்றமாமோ சுந் – 32-1
என்ற பாடல் கடற்கரை சார்ந்த இவ்விடம் பற்றிய எண்ணம் தருகிறது.

கோடி

இன்றைய இராமேசுரத்துக்கு அருகில்‌ கோடிக்கரை என்று ஓர்‌ ஊர்‌ இருக்கிறது. “தொன்முதுகோடி”’ என்று சங்க இலக்‌ கியம்‌ குறிப்பது இந்தக்‌ கோடிக்‌கரை என்னும்‌ ஊரையேயாகும்‌. கடலுட்‌ செல்லும்‌ தரைமுனை எனப்பொருள்படும்‌ கோடி என்ற சொல்லே இவ்வூர்‌ கடற்கரையில்‌ அமைந்த ஊர்‌ என்பதைக்‌ காட்டுகின்றது. கோடிக்‌ கரையைப்‌ பற்றிச்‌ சங்க நூல்களில்‌ அகநானூற்றில்‌ ஒரே ஒரு செய்தி வருகின்றது. அகநானூறு 70ஆம்‌ பாடலில்‌ “தொன்முதுகோடி” என்று அழைக்கப்படும்‌ கோடிக்கரைப்‌ பாண்டிய மன்னருக்கு உரியதாகக்‌ கூறப்பெற்றுள்ளது. இங்கு ஓசையிட்டுக்‌ கொண்டிருந்த பறவைகளின்‌ ஒலியை இராமன்‌ நிறுத்தினான்‌ என்று அகப்பாட்டு கூறுகிறது. கோடிக்கரையில்‌ பறவைகள்‌ நிறைய இருந்தனவாக அகநானூறு கூறும்‌ செய்தி மிகவும்‌ சிறப்பானதாகும்‌. இரண்டாயிரம்‌ ஆண்டுகட்கு முன்னர்‌ கோடிக்‌ கரையில்‌ பறவைகள்‌ மிகுதியாக இருந்தமை பற்றி அகநானூறு கூறிய செய்தி இன்றும்‌ உண்மையாக இருப்பது மிகவும்‌ வியப்பான செய்தியாகும்‌. தமிழ்நாட்டில்‌ பறவைகளை மிகுதியாகக்‌ காண வேடந்தாங்‌கல்‌ செல்லுவதைப்போல கோடிக்கரைக்கும்‌ செல்லலாம்‌, அங்கே பலவகைப்‌ பறவை இனங்களைக்‌ காணலாம்‌. ஆகவேதான்‌ கோடிக்‌ கரையைப்‌ பறவைகள்‌ புகலிடமாகத்‌ (Bird sanctuary) தமிழக அரசுநிறுயுவிள்ளது. இந்தப்பறவைகள் புகலிடம்‌ இரண்டாயிரம்‌ ஆண்டு வரலாற்றுச்‌ சிறப்புடையது என்பதை அகநானூறு தெரிவிக்கிறது. கோடிக்கரை முற்காலத்திலே தமிழ்நாட்டின்‌ கன்றுளைலிருந்து இலங்கைக்குச்‌ செல்லக்‌ குறுக்கு வழியாக இருந்ததாகத்‌ தெரிகிறது. கோடிக்‌ கரை முனைக்கும்‌ (point cahmere) இலங்கையிலுள்ள பேட்பே முனைக்கும்‌ (point Pedro) 40 மைல்‌ தூரம்‌ உள்ளது.
வென்வேற்‌ கவுரியர்‌ தொன்முது கோடி
முழங்கிரும்‌ பெளவம்‌ இரங்கும்‌ முன்‌ துறை,
வெல்‌ போர்‌ இராமன்‌ அருமறைக்கு அவித்த
பல்வீழ்‌ ஆலம்‌ போல
ஒலி அவிந்தன்று இவ்‌ அழுங்கல்‌ ஊரே“, (அகம்‌. 70 : 13 17)

கோடிகா

திருக்கோடிகா என்று வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. சோலையின் இறுதி அல்லது இறுதியில் உள்ள சோலை என்ற பொருளில் இப்பெயர் அமைந்திருக்கலாம். சம்பந்தரும், திருநாவுக்கரசரும் இங்குள்ளக் கோயில் இறையைப் பரவுகின்றனர். கோடிகாவுடைய கோவே எனத் திருநாவுக்கரசர் பாட (51) கொந்தணிகுளிர் பொழிற் கோடிகா என (235-10) சம்பந்தர் பாடுகின்றார். திருவிடை மருதூருக்கு அப்பால் ஆற்றுக்கு அப்பால் உள்ளது என்ற எண்ணம் தன் செழிப்பையும் சோலையையும் நம் கண்முன் கொணர்கிறது.
பருக்கோடி மூடிப்பலர் அழா முனம்
திருக்கோடிகா அடை நீ சென்று (6)
என்பது ஷேத்திரக் கோவை வெண்பா. கல்வெட்டுகள் கோடிகா என்ற பெயரைக் குறிப்பிடுகின்றன. மேலும் திருக்கோடிகாவாகிய கண்ணமங்கை என்ற குறிப்பு, கண்ணமங்கை என்ற பெயரையும் சுட்டுகிறது. கண்ண கண்ண கிருஷ்ணர் கோயில் கொண்ட எட்டு ஊர்களுள் ஒன்று திருக் கண்ண மங்கை. திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற தலம் இது.
கழுநீர் மலரும் வயல் கண்ணமங்கை. (1643)
கருநெல் சூழ் கண்ணமங்கை (1848)
போன்ற பல எண்ணங்கள் மங்கையின் செழிப்பு பற்றி அமைகின்றன. மேலும் மங்கை நகராளன் (2008) கணமங்கை (3775-71) என, பிற, பெயர மைப்புகளும் தெரிய வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் திருவா ரூருக்கு அருகில் இருக்கும் இத்தலம், திருக்கண்ணமங்கை என்று வழங்கப்படுகிறது என்ற எண்ணம் து தொடர்பானது. மங்கலம் என்ற பெயர் விகுதியை, பொதுக் கூற்றினைச் சங்க இலக்கியம் முதற்கொண்டே காண்கின்றோம். மங்கலம் என்ற கூறு, மங்கை என்று மருவி வழங்கும் நிலையை அதி யரைய மங்கலம் அதியரை மங்கை என்றாகிப் பின்னர், அப்பெய ரும் மருவி அதிகை என மருவியதில் கண்டோம். அந்நிலையில் இப்பெயரும் கண்ணமங்கலம் என்றிருந்து பின்னர் கண்ண மங்கை என்று திரிந்திருக்க வாய்ப்பு அமைகிறது. மேலும், மங்கலம் என்று மட்டும் பெயர் வைத்தல் காணப்படவில்லை. எனவே கண்ணன் கோயில் கருதி கண்ணன் மங்கலம் என்று பெயர் சூட்டிய பின்னர். இடைக்காலத்திலேயே கண்ணமங்கை என்று மருவி இருக்கலாம் எனத் தோன்றுகிறது இந்நிலையில் கோடிகா, கண்ணமங்கலம் இரண்டும் ஒரே ஊர்க்குரிய பெயர்களாக அமைகின்எறன.

கோடிக்கா

தேவாரத் திருத்தலங்கள்

கோடிக்குழகர்

தேவாரத் திருத்தலங்கள்

கோடை

சங்க கால ஊர்கள்

கோட்டம்பலம்

சங்க கால ஊர்கள்

கோட்டம்பலம்‌

கேட்டம்பலம்‌ என்னும்‌ இவ்வூர்‌, சேரமான்‌ மாக்கோதையுடன்‌ தொடர்புடையதாகக்‌ கூறப்பெற்றிருப்பகால்‌ கோடு அதாவது மலையுச்சி அங்கே பலர்‌ கூடும்‌ இடம்‌ அம்பலம்‌ மலையுச்சியில்‌ பலர்‌ கூடும்‌ இடத்திற்குப்‌ பெயராய்‌ முதற்கண்‌ கோட்டம்பலம்‌ என்பது அமைந்து நாளடைவில்‌ அந்த இடம்‌ ஊராய்‌ வளர்ந்த பொழுது அந்த ஊருக்குப்‌ பெயராய்‌ அமைந்ததோ என எண்ணத்‌ தோன்றுவறெது. இவ்வூரில்‌ துஞ்சியதால்‌ சேரமன்னன்‌ சேரமான்‌ கோட்டம்‌ பலத்துத்‌ துஞ்சிய மாக்‌ கோதை எனப்‌ பெயர்‌ பெற்றான்‌. நற்றிணையில்‌ 95ஆம்‌ பாடல்‌ இவ்வூரினராய கோட்டம்பல வளனார்‌ என்னும்‌ புலவர்‌ பாடியது.

கோட்டாறு

தேவாரத் திருத்தலங்கள்

கோட்டாறு

இன்று கொட்டாரம் என்று வழங்கப்படும் ஊர். காவிரியின் தென் கரையில் சிறப்புற்ற ஊர் இது. வெள்ளையானை பூசித்து பேறு பெற்ற தலமாக இதனை, ஞானசம்பந்தர் பாடுகின்றார். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பழையாற்றங்கரையில் உள்ளதொரு இடம் கோட்டாறு’ எனப் பெயர் அமைவது போன்று இதுவும் காவிரிக்கரையில் அமைந்த நிலையில் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

கோட்டியூர்

இராமநாதபுரத்தைச் சார்ந்து அமையும் ஊரான நாலாயிரத் திவ்விய பிரபந்தம் சுட்டுகின்றது. எனவே வைணவ சமயப் புகழ் பெற்றது என்பது தெளிவு. பெரியாழ்வார். திரு மங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை யாழ்வார் பாடல் பெற்றது இத்தலம், ஹிரண்யனை ஒழிப்பதற்குத் தேவர்கள் கோஷ்டியாக ரஹஸ்ய ஆலோசனை செய்த இடம் கோஷ்டியூர் என்ற எண்ணம் அமைகிறது
செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை யைப் (2-10)
பெரியாழ்வார் திருமொழி சுட்டுகிறது. திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி இவ்வூர் வளம் பற்றிக் காட்டுகிறது.
பொங்கு தண்ணருவி பதம் செய்யப்
பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூர் – 1838
நாறு சண்பக மல்லிகை மலர் புல்கி
இன்னிள வண்டு நன்னறுந்
தேறல் வாய் மடுக்கும் கோட்டியூர் -1841
வளம் பாண்டிய நாட்டுத் தலங்களுள் மிகச் சிறந்ததாக இத்தலம் கருதப்படுகிறது. கோடு – கொம்பு என்ற நிலையில் குறித்து எழுந்த பெயராகவும் இது அமையலாம். அல்லது வளைந்த அமைப்பு குறித்தும் பெயர் பெற்றிருக்கலாம்.

கோட்டூர்

தேவாரத் திருத்தலங்கள்

கோட்டூர்

தஞ்சை மாவட்டத்தில் அமையும் ஊர். ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். இரண்டு சிவன் கோயில்கள் கொண்ட ஊர். கருவூர்த் தேவரும் திருவிசைப்பா இது குறித்துப் பாடியுள்ளார்..
துன்று பைம் பொழில்கள் சூழ்ந்த ழகாய
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர் நற் கொழுந்தே
என ஞானசம்பந்தரின் தேவாரப் பாடலைக் காணும் போது அழகிய கொடிகள் படர்ந்த இவ்வூர்ச் செழிப்பு காரணமாகக் கோட்டூர் என்று பெயர் பெற்றிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. சேக்கிழார், செம்பொன் மதில் கோட்டூர் என இதனைச் சுட்டுவர் (34. 574). கல்வெட்டுகளும் இவ்வூரைக் கோட்டூர் என்றே குறிப்பிடுகின்றன.

கோணமலை (திருக்கோணமலை)

தேவாரத் திருத்தலங்கள்

கோத்திட்டைக்குடி

கோத்திட்டைக் குடி’ என்ற ஊர் இறைப்பற்றி சுந்தரர், திருநாவுக்கரசர் பாடல் குறிப்பிடுகின்றது.
கோத்திட்டையும் கோவலும் கோயில் கொண்டீர் சுந் – 2-1
கோத்திட்டைக் குடி வீரட்டானம் இவை கூறி திருநா – 285-2
திட்டு என்பது மேட்டைக் குறிக்கும் நிலையில் மண்மேடான பகுதி காரணமாக இப்பெயர் அமைந்திருக்கலாம்.

கோனாடு

இது ‘சோழ நாட்டு’ உள்நாடுகளில்‌ ஒன்று. எறிச்சலூர்‌ இப்‌ பகுதியைச்‌ சேர்ந்தது. வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதி கோனாடு என வழங்கப்‌ பெறுகிறது.

கோனாட்டு எறிச்சலூர்

சங்க கால ஊர்கள்

கோம்பை

மலையடிவாரத்து ஊர்கள் “கோம்பை” எனப்படுகின்றன. சிற்றூர் எனப் பொருள்படும் “கோம்பு” என்ற கன்னடச் சொல்லிம் அடிப்படையில் இச்சொல் தோன்றியிருக்கிறது. இப்பொதுக்கூறு உள்ள ஊர்களில் கன்னட மக்கள் வாழ்ந்து வருவது இக்கருத்துக்கு அரணாக உள்ளது.
உதாரணமாக சில ஊர்கள்: தேனி மாவட்டத்திலுள்ள கோம்பை , புள்ளிமான் கோம்பை

கோயிலூர் – உசாத்தானம்

தேவாரத் திருத்தலங்கள்

கோலக்கா

தேவாரத் திருத்தலங்கள்

கோலக்கா

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமையும் ஊர். சீர்காழிக்கு 1கி.மீ. தொலைவில் உள்ள தலம் எனக் காண கோயில் அமைந்த இடம் கோலக்கா என்று சுட்டப்பட்டது என்பது தெரிகிறது. மேலும் இன்று கோயில் பெயரால் திருத் தாளமுடையார் கோயில் என்றே இவ்விடத்தைக் சுட்டும் தன்மை கோயில் செல்வாக்கு பெற்று திகழ்ந்தமைக்குச் சான்று. அழகிய சோலைகளின் காரணமாக இப்பெயர் அமைந்திருக்கலாம். சேக்கிழார் கூற்றும் இவ்விடத்தின் அழகினைத் தரும் நிலையில் அமைகிறது.
பெருங் கோலிட் டலை பிறங்கும் காவிரி நீர் பிரசமலர் தரளம் சிந்த
வரிக் கோல வண்டாட மாதரார் குடைந்தாடு மணிநீர் வாவித்
திருக் கோலக்கா எய்தி (34-101)
ஞானசம்பந்தர் இத்தலத்தை,
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக்கா (23-1)
எனப்பாடுகின்றார். சுந்தரர், கொங்குலாம் பொழிற் குரவெறிகமழும் கோலக்கா (62-2) என்பார். திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருமுலைப்பால் உண்டருளிய மறு நாள் இத்தலத்திற்கு எழுந்தருளிக்கையினால் தாளமிட்டுப் பாடினார். அப்போது இறைவன் திருவருளால் திருவைந்தெழுத்து எழுதப்பெற்ற பொற்றாளம் இவர் கை வந்தருளப் பெற்றது. திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்கள் – பக் -34

கோளிலி

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்குவளை என்ற பெயருடன் திகழ்கிறது இவ்வூர். மூவர் பாடலும் பெற்ற இவ்வூர்ப் பெயர் குறித்து எண்ணங்கள் தெளிவு றவில்லை. நவகோள்கள் பூசித்துப் பேறு பெற்ற மையால் கோளிலி என வழங்கப் பெறுகிறது என்ற எண்ணம் அமைகிறது. திருஞா னசம்பந்தர்
நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோ மடநெஞ்சே யரனாமம்
கேளாய் நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி யெம் பெருமானே (62-1)
எனப்பாடுகின்றார். எனவே கோளிலி என்ற பெயர் இறைவன் பெயராக அமைந்து பின்னர் ஊர்ப்பெயராக அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும்
முத்தினை முதலாகிய மூர்த்தியை
வித்தினை விளைவாய விகிர்தனைக்
கொத்தலர் பொழில் சூழ்தரு கோளிலி
அத்தனைத் தொழ நீங்கு நம்மல்லலே (170-2)
என்று நாவுக்கரசரும்
எம்பெருமான் உனையே நினைந் தேத்துவன் எப்பொழுதும்
வம்பமருங் குழலா ளொரு பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம் பெருமான்
அன்பது வாயடி யேற்கவையட்டித் தரப்பணியே (20-7)
என்று சுந்தரரும் இவ்விறையைப் பாடுகின்றார். கோளி என்ற சொல்லின் பொருளை நோக்குமிடத்து தமிழ் லெக்ஸிகன், ஆல், அத்தி என்பனவற்றைப் பிங்கல நிகண்டி லிருந்து காட்டி, ” பூவாது காய்க்கும் மரம் என்ற பொருளையும் தருகிறது (vol | பக். 1203). கொழுமென் சினைய கோளியுள்ளும் என்ற நிலையில் கோளி என்ற சொல் பெரும்பாணாற்றுப் படையில் இடம் பெறுகிறது. இதற்கு உரை எழுதும் உ. வே. சா அவர்கள், கொழுவிய மெல்லிய கொம்புகளினிடத்தனவாகிய இழும் என்னும் ஓசையை யுடைய புறவினுடைய திரளுகின்ற சுற்றத் திரட்சியை உடைய பூவாமற் காய்க்கும் மரங்களில் விசேடித்தும் பழத்தின் இனிமையால் மேலாகச் சொல்லும் பலா மரத்தை ஒக்க என்ற பொருள் எழுதுகின்றார். எனவே பூவாது காய்காக்கும் மரங்களுள் பலா சிறப்பாகக்கருதப்பட்டது என்பது தெரிகிறது. இந்நிலையில் இப்பெயரை நோக்கப் பூவாது காய்க்கும் மரத்தின் அடியில் இருந்த நிலையில் இவ்விறையைச் சுட்டும் நிலையில் கோளிலி எனப் பெயர் அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. அரசமரத்தின் அடியில் இருப்பதால் அரசிலி’ என்ற பெயர் அமைந்தது போன்று இப்பெயரும் நோக்கத் தக்கது.

கோளிலி – திருக்குவளை

தேவாரத் திருத்தலங்கள்

கோழம்பம்

கோழம்பம் என்றே இன்றும் சுட்டப்படும் ஊர் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தராலும், அப்ப ராலும் பாடல் பெற்ற தலம் இது. பொழில் சூழ்ந்த கோழம்பத்தின் சிறப்பே இருவராலும் சுட்டப்படுகிறது.
குளிர் பொழில் கோழம்பம் மேவிய ஏற்றானை – திருஞான -149-1
பாடலாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்
கூடலாக்கிடும் குன்றின் மணற்கொடு
கோடல் பூத்தலர் கோழம்பத் துண் மகிழ்ந்தாடும் கூத்தன் திருநாவு – 178-4

கோழம்பம் இக்காலத்தில் திருக்குழம்பியம் என வழங்கப்படுகிறது.

தேவாரத் திருத்தலங்கள்

கோழி

பார்க்க உறந்தை

கோழி

சங்க கால ஊர்கள்

கோவலூர்

சங்க கால ஊர்கள்

கோவலூர்

திருக்கோயிலூர் எனச் சுட்டப்படும் இவ்வூர் இன்று, தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் அப்பர் பாடல் பெற்ற தலம் இது. பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ளது இவ்வூர். ஊர் மேலூர், கீழூர் என்ற இரு பகுதிகளாக அமைகிறது. கீழூரில் சிவன் கோயிலும், மேலூரில் திருமால் கோயிலும் உள்ளன. இவ்வூரின் வளம் குறித்து நாயன்மார் ஆழ்வார் இருவரும் பாடியுள்ளனர். கோவலூர் என்ற ஊர் கோவல் என்ற பழம் பெயரை யுடையது. சங்க இலக்கியம் முதற் காணப்படும் இவ்வூர்ப் பெயர் ஊரின் பழமையையும் தருகின்றது. மலையமான் திருமுடிக்காரி இந்நாட்டை ஆண்டு வந்த தன்மையை அகநானூறு 30 ஆம் பாடல் தருகிறது.
துஞ்சா முழவிற் கோவற் கோமான்
நெடுந்தேர்க்காரி கொடுங்கான் மூன்றுரைப்ப
பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும்’
என்ற பகுதி கோவல் என்ற ஊர்ப்பழமையைச் சுட்டும். புறநானூறு 99 ஆம் பாடல் கோவலூர் நூறிய அதியமானின் வெற்றி சுட்டும். மலையமான் ஆண்ட நிலையில் இந்த நாடு மலையமான் நாடு என்றும் மலாடு என்றும் சுட்டப்பட்டது.கொடிக்குலவும் மதிற் கோவலூர் வீரட்டம்’ என்பது சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை (34) காட்டும் எண்ணம்.
வளங் கொள் பெண்ணை வந்துலா வயல்கள் சூழ்ந்த கோவலூர்
விளங்கு கோவணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே (236-5)
என்பது சம்பந்தர் பாடல்.
கொழித்து வந்து அலைக்கும் தெண்ணீர்க் கோவல் வீரட்டனீரே (69-3)
என்கின்றார் அப்பர் ஆழ்வார் பாடல்களும் இவ்வூரின் வளத்தை சிறப்பாகக் காட்டுகின்றன.
கோங்கு அரும்பு சுர புன்னைக் குரவு ஆர் சோலைக்
குழாம் வரிவண்டு இசை சைபாடும் பாடல் கேட்டுத்
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவலூர்
பெரிய – திருமொழி -2, 4, 10
இவ்வாறு பல எண்ணங்கள் அமையினும் ஊர்ப்பெயர் காரணம் தெளிவு பெறவில்லை. இங்குள்ள பெருமாள் கோயிலில் உள்ள கொடி மரம் சமணருடைய மானஸ்தம்பம் போன்றிருக்கிறது. ஆகையால் இது ஆதியில் சமணக் கோயிலாக இருந்திருக்கக் கூடும் என்று ஐயுறுகின்றனர். இங்கு அரசாண்ட அரசர்களில் பலர் சமணராக இருந்தனர் என்றும் கருதத்தக்கது என்ற எண்ணம் இவ்வூர் தொடர்பானது,

கோவலூர் வீரட்டம் நடுநாடு

தேவாரத் திருத்தலங்கள்

கோவல்

சங்க கால ஊர்கள்

கோவல்‌ (கோவலூர்‌)

இவ்வூர்‌ கோவல்‌ என்றும்‌ கோவலூர் என்றும்‌ சங்க இலக்‌கியங்களில்‌ குறிக்கப்‌ பெற்றுள்ளது. மலையமான்‌ திருமுடிக்காரி முதலியோர்‌ ஆண்ட ஊர்‌, ஒரு காலத்தில்‌ அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சியால்‌ வெல்லப்‌ பட்ட ஊர்‌. தென்னார்க்காடு மாவட்டத்தில்‌ தென்பெண்ணையாற்றின்‌ கரையின்‌ கண்ணுன்ளது.
“துஞ்சா முழவிற்‌ கோவல்‌ கோமான்‌
நெடுந்தேர்க்‌ காமி கொடுல்கால்‌ முன்துறை
பெண்ணை யம்பேரியாற்று துண்‌ அறல்‌ கடுக்கும்‌
நெறி இருங்‌ கதுப்பின்‌ என்‌ பேதைக்கு
அறியாத்‌ தேஎத்து ஆற்றிய துணையே”’ (அகம்‌. 35. 14 18)
“முரண்மிகு கோவலூர்‌ நூறி நின்‌
அரணடு திரி ஏந்திய தோளே” (புறம்‌. 99, 13 14)

கோவூர்

சங்க கால ஊர்கள்

கோவூர்‌

சோழன்‌ நலங்கிள்ளி, கள்ளி வளவன்‌, நெடுங்கள்ளி ஆகிய மன்னர்களைப்‌ பாடியவரும்‌, நற்றிணை 393.ஆம்‌ பாடல்‌, குறுந்‌ தொகை 65ஆம்‌ பாடல்‌,புறநானூறு 31 33, 41, 44 47, 68, 70, 308 373, 382, 386. 400 ஆகிய பாடல்கள்‌ இவற்றைப்‌ பாடியவருமான கிழார்‌ என்னும்‌ புலவர்‌ கோவூரைச்‌ சேர்ந்தவர்‌, ஆகவே கோவூர்‌ கிழார்‌ எனப்‌ பெற்றார்‌.