ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
குடநாடு | கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன்று. தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி திசைப்பெயருடன் இணைந்து குடநாடு என்னும் பெயர் பெற்றது. அந்நாட்டு மன்னன் சேரன் குடவர்கோ எனப் பெயர் பெற்றான். எருமை என்ற ஒரு மன்னன் குடநாட்டை ஆண்டுள்ளான். இவன் சேர மரபினனாக ஆகியிருக்க வேண்டும். |
குடநாடு | சங்க கால ஊர்கள் |
குடந்தை | சங்க கால ஊர்கள் |
குடந்தை / குடவாயில் | குடந்தைவாயில் என்றும், குடந்தை என்றும், குடவாயில் என்றும் கூறப்படுவன எல்லாம் ஓரே ஊரின் பெயரே. சோழர் குடந்தை என்று கூறப்படுவதால் இவ்வூர் சோழனுக்குரியதாக இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி. உ. வே. சாமிநாதையர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், பெருமழைப்புலவர் சோமசுந்தரனார் போன்றோர் சங்க இலக்கியப்பாடல்களுக்கு உரை எழுதும் போது குடந்தை ஏன்ற சொல்லுக்குக் குடவாயில் என்றே பொருள் கூறுகின்றனர். குடந்தை என்றும், குடந்தை வாயில் என்றும், குடவாயில் என்றும் குறிக்கப்பெற்ற ஊரே இன்று குடவாசல் என்று வழங்கும் ஊராகும். இவ்வூர் தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்திலுள்ளது. இல்லின் வாய் அல்லது வீட்டின் வாய் என்று பொருள்படும் வாயில் என்ற சொல்லுடன் வழங்கப்பெறும் சில ஊர்ப் பெயர்களில் குடந்தைவாயில் அல்லது குடவாயில் என்னும் இந்த ஊரும் ஒன்று. ஊர்கள் அமைந்துள்ள திசையை அவற்றின் பெயர் உணர்த்தும் நிலையும் இப்பெயரில் அமைகின்றது. முற்காலத்தில் சிறந்து விளங்கிய ஒரு பெருநகரின் மேலவாசலாக அமைந்த இடம் நாளடைவில் ஓர் ஊராக அமைந்து குடவாசல் என்று பெயரி பெற்றிருக்க வேண்டும். (கோச் செங்கட் சோழன் தன்னோடு போர் செய்து தோல்வியுற்ற சேர மன்னனைக் குடவாயிற் கோட்டம் என்னும் சிறைக் கோட்டத்தில் அடைத்து வைத்திருந்தான் என்ற செய்தி, குடவாயிலில் ஒரு சிறைக் கோட்டம் அமைந்து இருந்த நிலையை நமக்கு உணர்த்துகின்ற குடவாசலில் அமைந்திருந்த பழைய கோட்டை மதில்கள் பற்றிய செய்தியைத் தேவாரமும் உணர்த்துகிறது. குடந்தை என்று நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்களிலும் தேவாரப் பாடல்களிலும் குறிக்கப்படும் ஊர் இன்றைய கும்பகோணமாகும். இது குடமூக்கு என்றும் குறிக்கப்படுகிறது. சங்க இலக்கியத்தில் கூறப்பெற்ற குடந்தை, குடந்தைவாயில் குடவாயில் என்பது தற்காலத்திய குடவாசல் என்ற ஊராக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஓர் ஊரின் பெயர் காலப் போக்கில் பின்னர் வேறொரு பெயராகத் திரிதலும், இப்பெயரே பிறிதோர் ஊர்க்குப் பெயராக அமைதலும் ஆகிய தன்மையை நாம் காண முடிகிறது. நற்றிணையில் 27, 212, 379 ஆகிய பாடல்களையும், குறுந் தொகையில் 281, 369 ஆகிய பாடல்களையும், அகநானூற்றில் 35, 44, 60, 79, 119, 129, 287, 315, 345, 366, 385 ஆகிய பாடல்களையும், புறநானூற்றில் 242ஆம் பாடலையும் பாடிய ரத்தனார் என்ற புலவரும், குறுந்தொகையில் 79ஆம் பாடலைப் பாடிய கீரனக்கன் என்ற புலவரும் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். |
குடந்தை குடமூக்கு | இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் எனச் சுட்டப்படும் ஊர். அன்று இவ்விரு பெயர்களாலும் வழங்கப்பட்டதாகத் செரிகிறது. குடமூக்கின் வடமொழிப் பெயர் மாற்றமே கும்பகோணமாயிற்று. அதுவே இன்று செல்வாக்குடன் திகழ்கின்றது. வைணவக் கோயில்களும் சைவக் கோயில்களும் நிறைந்த இடம். கோயில் பெருத்தது கும்பகோணம் என்பது பழமொழி. இங்குள்ள மூன்று கோயில்கள் தேவாரப்பாடல் பெற்றவையாக அமைகின்றன. ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற கும்பகோணம் கும்பேசுவர சுவாமி கோயில் (சுவாமி கும்பம் போன்றவர்) குடந்தைக் காரோணத்தில் உள்ள விசுவநாதர் கோயில் (சம்பந்தர்) குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் உள்ள கும்பகோணம் நாகேஸ்வர ஸ்வாமி கோயில் (அப்பர்) என்பன அவை. காசி குடந்தை கீழ்க் கோட்டம் ஐயடிகள் காடவர் கோன் இறைவன் பற்றி, |
குடந்தைக் கீழ்க்கோட்டம் | தேவாரத் திருத்தலங்கள் |
குடந்தைக்காரோணம் – காசிவிசுவநாதர் கோயில் | தேவாரத் திருத்தலங்கள் |
குடபுலம் | சங்க கால ஊர்கள் |
குடப்பாச்சில் | குடப்பாச்சில் உறைகின்ற சிவன் பற்றிய எண்ணம் தேவாரத்தில் அமைகிறது. |
குடமூக்கு கும்பகோணம் | தேவாரத் திருத்தலங்கள் |
குடவரை | சங்க கால ஊர்கள் |
குடவாயிற் கோட்டம் | சங்க கால ஊர்கள் |
குடவாயில் | இன்று குடவாசல் எனத் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது (பதி 158, 194). இன்று கும்பகோணம்-திருவாரூர் நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து பத்து மைல் தொலைவில் உள்ளது என்ற எண்ணம் இது தொடர்பானது. குடவாயில் இன்று குடவாசல் என்று வழங்கப் படினும் சங்ககாலம் தொட்டே வழங்கிய பெயர்களாகக் குட வாயிலுடன் குடந்தைவாயில் குடந்தை என்பனவும் அமைகின்றன. திருணபிந்து முனிவர் வழிபட இறைவன் குடத்தில் இருந்து வெளிப்பட்டு அவருடைய நோயைத் தீர்த்தருளிய தலம். எனவே குடவாயில் எனப் பெயர் பெற்றது என்ற எண்ணம். அமைகிறது குடந்தை, குடந்தை வாயில், குடவாயில் என்ற ஊர்ப்பெயர் பற்றிய எண்ணங்களுடன் குடந்தை குடமூக்கு கும்பகோணம் பற்றிய எண்ணங்களையும் இணைத்து நோக்கின் சில எண்ணங்கள் தோன்றுகின்றன. இன்றைய குடவாயில் கும்பகோணத்தில் (குடமூக்கில்) இருந்து 10 மைல் தூரத்தில் உள்ளது ஒரு நிலை. அடுத்து இரண்டும் குடந்தை என்ற பெயர் பெறுகின்றன. சங்க இலக்கியத்தில் அமைவது குடந்தை. குடந்தை வாயில் எனவும் சுட்டப்பட்ட குடவாயில் உரையாசிரியர் அனைவரும் குடந்தை என்ற சொல்லுக்குக் குடவாயில் என்றே பொருள் கூறுகின்றார். குடமூக்கு அல்லது கும்பகோணம் என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் இல்லை. ஆயின் குடவாயிலைக் குறித்து குடந்தை என்ற பெயர் குடமூக்குக்கு உண்டு. மேலும் குடவாயில் என்பது ஒரு ஊரின் எல்லை போன்று அமைகிறது. எனவே அன்றைய நிலையில் கேர் சோழர்வண் குடந்தை வாயில் (நற் 379) என்ற எண்ணம் சோழ ரின் குடந்தைக்குரிய வாயில் என்ற நிலையில் குடந்தை ஒரு பெரிய நகரமாகவும் அதன் வாயில் சிறப்புடன் திகழ்ந்தமையின் அது குடந்தை வாயில் என்றும் குடவாயில் என்றும் அழைக்கப்பட்டு இருக்கக் கூடும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. பின்னர், குடந்தையில் தனியே சிறந்த கோயில்கள் பல தோன்ற, குடந்தை யின் ஒரு பகுதி குடமூக்கு என்று சுட்டப்பட்டு பின்னர் கும்ப கோணமாகி விட்டது என்றும், குடந்தையின் வாயிற் பகுதி குட வாயில் குடவாசலாக இன்று திகழ்கிறது எனவும் கருத இட மேற்படுகிறது. மேற்கு வாசல் பகுதி என்பது குடவாசலுக்குரிய பொருளாக அமைய, குடந்தையின் மேற்கு என்ற திசைப்பெயர் அடிப்படையில் பிறந்த ஊர் என்பது மட்டும் உறுதிப்படுகிறது. குடவாயில் என்பதற்கு வரையார் மதில் சூழ் குடவாயில் என்று சம்பந்தர் பாடும் நிலை சிறப்பாகப் பொருத்தம் காட்டுகிறது. (158-8) மேலும் தேர் வண் சோழர் குடந்தை (நற் – 379-7-9) என்று சோழரின் குடந்தையாகச் சுட்டும் நிலையிலும் கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடு தரு நிதியினும் செறிய அருங் கடிப் படுக்குவள் ; (அகம் 60-13-15) ; தண் குடவாயில் அன்னோள் (அகம் 44-17-19) போன்று குடந்தையுடன் தலைவியை உவமிக் கும் நிலையிலும் குடந்தை மிகச் சிறப்பானதொரு, பெரியதொரு நகரமாகத் திகழ்ந்திருக்கும் வாய்ப்பு அமையும் நிலையிலும், குடந்தை பெரியதொரு நகரமாகத் திகழ்ந்திருக்கும் வாய்ப்பு அமைகிறது. பின்னர் இதன் ஒரு பகுதி கோயில் சிறப்பால் குட மூக்கு என பெருமை பெற்றது என்பது பொருத்தமாகிறது. |
குடவாயில் | சங்க கால ஊர்கள் |
குடவாயில் | தேவாரத் திருத்தலங்கள் |
குடி | மக்களின் உட்குழுக்களைச் சுட்டிய “குடி” என்ற வடிவம், மக்களின் இருப்பிடங்களையும் சங்ககாலத்தில் சுட்டியிருக்கின்றது. சங்ககால ஊர்ப்பெயர்களில் பல “குடி” என்று முடிகின்றன. |
குடுமி | சங்க கால ஊர்கள் |
குடுமியான்மலை | சங்க கால ஊர்கள் |
குணவாயிற் கோட்டம் | சேரன் செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோ துறவறம் பூண்டு அருந்தவம்புரிந்த இடம் குணவாயிற் கோட்டம் என்பது. இது வஞ்ரிமாநகரின் கிழக்குத் இசையில் அமைதந்திருந்தமையால் ஊர்கள் அமைந்திருந்த திசையால் பெயர்பெற்ற குடவாயில் போன்றே இவ்வூரும் குணவாயில் என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். இளங்கோ தவம்புரிந்த கோட்டம் அமைந்திருந்த வஞ்சிமாநகரின் குணவாயில் பகுதி பிற்காலத்தில் அப்பெயருடன் ஓர் ஊராயிற்று போலும். “குணவாயில் கோட்டம்” என்ற சிலப்பதிகாரப் பதிகத்தின் அடிக்குப் பொருள் எழுதிய அரும்பத உரை’யாசிரியரும், அடி யார்க்கு நல்லாரும் குணவாயில் என்பதற்குத் திருக்குண வாயில் என்று கூறினர். திருக்குணவாயில் என்பது ஓரூர் என்றும், அது வஞ்சியின் கீழ்த்திசையின்கண் உள்ளதென்றும் அடியார்க்கு நல்லார் கூறினர், |
குண்டையூர் | சேக்கிழாரின் பெரிய புராணம் சுட்டும் ஊர் இது (ஏயர் கோன் 10, 17, 18). |
குதிரை | சங்க கால ஊர்கள் |
குத்தாலம் – திருத்துருத்தி | தேவாரத் திருத்தலங்கள் |
குன்றம் குன்று | குன்றம் என்பதும் குன்று என்பதும் மலை என்னும் பொருளையுடையனவே. குன்றம் என்ற சொல் வேங்கடமலையைக் குறிக்கவும் ஆளப் பட்டிருக்கிறது சங்க இலக்கியத்தில். வேங்கடமலை புல்லி என்ப வனுக்கு உரியதாக இருந்தது. பரிபாடலில் 9, 18 ஆகிய பாடல்களைப் பாடிய பூதனார் என்ற புலவர் குன்றத்தைச் சேர்ந்தவராதலின் குன்றம் பூதனார் எனப் பெயர் பெற்றார். |
குன்றியூர் | ஞானசம்பந்தரின் திருவூர்க் கோவையுள் இடம்பெறும் ஒரு ஊர். (175) சிவன் கோயில் தலம் என்பது வெளிப்படை. நீரூர் வயனின்றியூர் குன்றியூரும் என இவர் இவ்வூரைக் குறிப்பிடுகின் றார். குன்றி மரம் காரணமாகப் பெற்ற பெயராக இருக்கலாம். |
குன்றூர் | குன்றை அடுத்துள்ள ஊர் என்ற நிலையில் குன்றூர் என்ற ஊர்ப்பெயர் தோற்றம் பெற்றிருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. இப்பெயருடன் ஊர்கள் ஒன்றற்கு மேற்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. வேளிர்கள் வாழும் நகரமாகிய கீழ்கடற்கரையிலுள்ள குன்றூரும் ஒன்று, நீலகிரி மலையில் இப்பொழுது குன்னூர் என்ற பெயருடன் வழங்கும் ஊரும் ஒருகாலத்தில் குன்றூர் என்ற பெயருடன் வழங்கியதே. கிழார் என்னும் புலவரும் அவர் மகன் கண்ணனாரும் இவ் வூரினர் ஆகையால்தான், குன்றூர் கிழார் என்றும் குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் என்றும்பெயா் பெற்றிருந்தனர். நற்றிணையில் 382 ஆம் பாடல் கண்ணத்தனாரும், புறநானூற்றில் 338ஆம் பாடல் ஓழாரும் பாடிய பாடல்களாகும். தொன்றுமுதிர் வேளிர் என்றும், குன்றூர் குணாது தண் பெரும் பெளவம் என்றும் இலக்கியங் கூறுவதை நோக்கும் பொழுது கீழ்க்கடற்கரையை அடுத்த குன்றூரே சங்ககாலக் குன்றூர் என்று எண்ண இடமளிக்கிறது. |
குப்பம் | கூட்டமாகச் சேர்ந்து வாழுமிடம் குப்பம். சமுதாயத்தில் பின்தங்கிய,பொருளாதரத்தில் பின்தங்கிய மக்கள் வாழுமிடமாகக் குப்பம் அமைந்துள்ளது. |
குமட்டூர் | சங்க கால ஊர்கள் |
குமரி | சங்க கால ஊர்கள் |
குமுழிஞாழல் இவ்வூரில் வாழ்ந்த சங்ககாலப் பெண்பாற்புலவர் குமுழி ஞாழலார் நப்பசலையார் | சங்க கால ஊர்கள் |
குரக்குக்கா | இன்றும் குரக்குக்கா என்றே சுட்டப்படும் இவ்வூர். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. காவிரியின் கரையில் உள்ள தலம் இது என்பதனை அப்பர் பாடல்கள் (பதி 189) சுட்டுகின்றன. |
குரங்கணில் முட்டம் | இன்றும் இப்பெயருடனேயே வழங்கப்படும் ஊர், வட ஆர்க் காடு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்றது இவ்வூர். குரங்கணில் முட்டம் என்ற பெயருக்கு, குரங்கு அணில் முட்டம் என்ற மூன்றும் தரிசித்த தலம் எனப் புராணக் கதை கூறுவர். எனினும் விலங்குப் பெயரால் ஊர்ப்பெயர்கள் அமைவது உண்டு என்ற பொது விதி நோக்கிப் பார்க்க, குரங்கு பெயரால் இவ்வூர், பெயர் பெற்றிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. முட்டம் என்பதற்குத் தமிழ் லெக்ஸிகன் இடம், ஊர், காகம் என்ற முப்பொருட்களையும் தருகிறது. எனவே குரங்குகள் மிகுந்த இடம் என்ற பொருளில் குரங்கணிமுட்டம் பெயர் பின்னர், குரங்கணில் முட்டம் என்று புராணக்கதை செல்வாக் கில் திரிந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும் சம்பந்தரின் தேவாரம் இப்பகுதியை மிகவும் வளப்படுத்தும் சோலைகள் நிறைந்து இருந்ததொரு நிலையில் காட்டுவது. இப்பெயர்க் காரணத்திற்குப் பொருத்தம் தருகிறது. முட்டம் என்பது பிற ஊர்ப்பெயர்களில் பொதுக்கூறாக இருப்பதும் இவண் சுட்டத் தக்கது. (இரணிய முட்டம்). |
குரங்கணில் முட்டம் | தேவாரத் திருத்தலங்கள் |
குரங்காடுதுறை | வட வடகுரங்காடு துறை, தென் குரங்காடு துறை என்ற இரு தலம் பற்றிய பாடல்கள் அமைகின்றன. இன்று தஞ்சை மாவட்டத்தில் காணப்படும் இரு தலங்களும் முறையே குரங்காடு துறை, ஆடுதுறை என இரண்டு பெயர்களால் சுட்டப்படுகின் றன. காவிரியின் தென்கரையில் உள்ளது தென் குரங்காடு துறை. வடகரையில் உள்ளது — குரங்காடு துறை. எனவே குரங்காடு துறை என்பதே இரண்டு ஊர்களுக்குமுரிய முதல் பெயர். பின்னர் தனிப்படுத்தப்பட தென் இணைக்கப்பட்டன என்பது தெளிவு. குரங்குகளின் மிகுதி காரணமாகவே குரங்காடுதுறை என்ற பெயர் அமைந்தது. எனினும் வாலி, போன்றவர்களால் பூசிக்கப்பட்ட தலம் என்ற எண்ணத்தை ஞானசம்பந்தரின் பாடல் தருகிறது. எனவே அவர் காலத்திலேயே இப்புராணக் கதை மக்களிடையே செல்வாக்கு பெற்று, உண்மைக் காரணம் மறைந்துவிட்டது என்பது தெளிகிறது. வட அடைகள் மேலும் இவ்வூரும் மிகச் செழிப்பும், சோலைகளும் சூழ்ந்த ஊராகக் காட்டப்படும் நிலையும் குரங்காடு துறை என்ற பெயருக்குப் பொருத்தமாக அமைகிறது. |
குரங்காடுதுறை – வடகுரங்காடுதுறை | தேவாரத் திருத்தலங்கள் |
குரங்காடுதுறை – தென்குரங்காடுதுறை= ஆடுதுறை | தேவாரத் திருத்தலங்கள் |
குரங்குக்கா | தேவாரத் திருத்தலங்கள் |
குராப்பள்ளி | குராப்பள்ளியில் துஞ்சியதால் சோழன் பெருந்திருமாவளவன் குராப்பள்ளித் துஞ்சிய சோழன் பெருந்திருமாவளவன் எனப் பெயர் பெற்றான். குராப்பள்ளியைப் பற்றிய வேறு செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. புறநானூறு 58, 60 197ஆம் பாடல்கள் குராப்பள்ளியில் துஞ்சிய மன்னனைப் பற்றிப் பாடியவை. குராப்பள்ளி என்பது குராமரங்கள் அடர்ந்த பகுதியால் பெற்ற ஊரர்ப்பெயராக இருக்கலாம். |
குராப்பள்ளி | சங்க கால ஊர்கள் |
குராலம் பறந்தலை | சங்க கால ஊர்கள் |
குருகாவூர் | இன்று திருக்கடாவூர் எனச் சுட்டப்படும் இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. ஞானசம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது இத்தலம். கோயில் பெயர் வெள்ளடை. பொழில்கள் நிறைந்தது இவ்வூர் என்பதை. பல விண்ணமர் பைம்பொழில் (382-1), விரை கமழ் தண்பொழில் (382-2) விளங்கிய தண்பொழில் (382-3) விரி தரு பைம்பொழில் (382-5) தேன் மலர் மேவிய தண்பொழில் (382-6) என்ற அடைகள் விளக்குகின்றன. எனவே குருகுகள் நிறைந்த சோலை என்ற பொருளில் குருகாவூர் எனப் பெயர் அமைந்திருக்கலாம். பொழில்களின் நிறைவைச் சம்பந்தர் தர, சுந்தரர் இங்குள்ள நீர் நிலை அழகையும் காட்டுகின்றார், |
குருகாவூர் | தேவாரத் திருத்தலங்கள் |
குருகூர் | இன்று ஆழ்வார் திருநகரி சுட்டப்படும் தலம். திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. நம்மாழ்வார் பிறந்த இடம். எனவே ஆழ்வார் திருநகரி எனப் பெயர் பெற்றது. நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் இவரது பாடல் இங்குள்ள திருமால் பற்றி அமைகிறது. பாண்டிய நாட்டில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஒன்பது திருமால் கோயில்களில் ஒன்று இக்கோயில். குருகு என்னும் சொல் தமிழில் நாரை கோழி குருக்கத்தி என்பனவற்றைக் குறிக்கும். இங்கே குருகு என்று பெயர் கொண்ட பட்சியின் பெயரால் விளங்கும் ஸ்தலமாகக் கொள்வது ஏற்புடைத்து என்ற எண்ணம் பொருத்தமானது. குருகன் என்ற அரசன் ஆட்சி புரிந்த ஸ்தலம் என்ற குருபரம்பரை வரலாறும் உண்டு. |
குருந்தங்குடி | ஞானசம்பந்தரின் பாடலில் திருவூர்க்கோவை என்ற பதிகத் தில் (175-10) குடி என்ற தலப்பெயர்களைத் தரும் நிலையில் இப்பெயரும் இடம் பெறுகிறது. குருந்து என்ற மரம் சங்க நூல்களிலேயே சுட்டப்படும் ஒன்று. இதன் பூ நறுமணமுடையது. எனவே இதனைத் தலையில் அணியும் நிலையையும் காண்கின்றோம். |
குறிச்சி | குறிஞ்சி நிலத்து ஊர்கள் குறிச்சி எனப்பட்டன.ஆனால் சமவெளிப் பகுதிகளில் உள்ள ஊர்களும் குறிச்சி எனப்படுகின்றன. |
குறுக்கை | குறுக்கைப் பறந்தலையில் அன்னி என்னும் மன்னன் திதிய னோடு போரிட்டு, அவன் காவல் மரமாகிய புன்னையை வெட்டி வீழ்த்தினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. போர் நடை பெற்ற அந்தப்போர்க்களம் அமைந்த ஊர்ப்பெயராகிய குறுக்கை என்பதனோடு இணைந்து குறுக்கைப் பறந்தலை எனப் பெற்றது, வேளாளர் குலத்தனரில் ஒருபிரிவினர் குறுக்கையர் குடியினர். குறுக்கையர் குடியினர் வாழ்ந்த நிலப்பகுதி குறுக்கைஎனப் பெயா் பெற்றிருக்கலாம் என எண்ணுவது பொருத்தமாக இருக்கலாம், குறுக்கை என்னும் பெயருடன் தஞ்சைமாவட்டத்து மாயவரம் வட்டத்தில் ஒன்றும், திருச்சி மாவட்டத்தில் லால்குடி, வட்டத்தில் ஒன்றும் ஆக இரண்டு ஊர்கள் உள்ளன. |
குறுக்கை | தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து இவ்வூர் அமைகிறது. அட்ட வீரட்டத் தலங்களுள் காமனை எரித்த தலமாதலின் திருக் குறுக்கை வீரட்டம் என்று வழங்குகிறது என்ற எண்ணம் உண்டு. அப்பர் இக்கோயில் இறைவனை அடைவுத் திருத் தாண்டகம் என்ற பகுதியுள் பாடுகின்றார். வீரட்டம் என்ற முடிவு கொண்ட தலப்பெயர்களைச் சுட்டும் போது, குறுக்கை வீரட்டத்தையும் சுட்டுகின்றார். வீரட்டம் கோயில் என்பதும், குறுக்கை என்பதே ஊர்ப்பெயர் என்பதும் தெளிவாகிறது. இதனையே சேக்கிழாரும் குறுக்கைப் பதி என்று அமைக்கின்றனர் குறுக்கைக் குடி என்ற தொரு குடிப் பெயர் அமைகிறது. சங்க இலக்கியத்தில் அதுவே இப்பெயர்க் காரணம் எனலாம் (34-288). குறுக்கை என்னும் ஒரு வகைத் தாவரம் பற்றிய எண்ணம் அதுவே அப்பெயருக்குரிய காரணமோ எண்ணம் எழுப்புகிறது. மேலும், கடுக்கா மரம் தலவிருட்சமாதலின் கடுவனம், இறைவன் அம்மை யாரைப் பிரிந்து யோகஞ் செய்த இடம் காரணமாக யோகீசபுரம், காமனைத் தகித்த இடமாதலின் காமதகனபுரம், இலக்குமி யினது நடுக்கத்தைப் போக்கியதால் கம்பகரபுரம் ; தீர்க்கலாகு முனிவர் இத்தலத்து இறைவனை அபிடேகித்ததற்குக் கங்கா நீரினை விரும்பித் தமது கரங்களை நீட்டக் கரங்கள் நீளாது குறுகினமையால் குறுக்கை எனவும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. |
குறுக்கை குறுக்கை வீரட்டம் | தேவாரத் திருத்தலங்கள் |
குறுக்கைப் பறந்தலை | சங்க கால ஊர்கள் |
குறுங்குடி | குடி என்னும்சொல் ஊர் என்ற பொருளை குறிக்கும், வெகு தொலைவில் இல்லாமல் அருகில் குறுகிய தொலைவில் உள்ள ஊர் குறுங்குடி எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது, இவ்வூரினரான மருதன் என்ற சங்ககாலப் புலவர் குறுங்குடி மருதன் எனப்பெயர் பெற்றார். குறுந்தொகையில் 344ஆம் பாடலும், அகநானூற்றில் 4 ஆம் பாடலும் குறுங்குடி, மருதன் இயற்றியவை. பாண்டிநாட்டில் நெல்லை மாவட்டத்தில் குறுங்குடி என்று ஓர் ஊர் உள்ளது. திருமாலின் வாமனாவதாரத்தோடு தொடர்பு படுத்தி இவ்வூரின் பெயர் திருக்குறுங்குடி, என வந்ததாகப் புராணச் செய்தி கூறுகிறது, |
குறுங்குடி | திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளதொரு ஊர். திருமால் கோயில் சிறப்பு பெற்றது, பெரியாழ்வார், திருமழிசை ஆழ் வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பாடல்கள் பெற்ற தலம் இது. குறளன் தோன்றிய தலம் தான் குறுங்குடி. குறுகிய வடிவினனான வாமனன் பிறந்த குடியே குறுங்குடி என்றாகிறது. வாமன க்ஷேத்திரம் என்று பெயர் பெறுகிறது 1 என்ற எண்ணம் இவ்வூர் பற்றி அமைகிறது. எனினும் இவ்வூரில் வைணவக் கோயில் சிறப்பு பெற்ற பின்பு ஏற்பட்ட புராணக் கதை மூலம் இப்பெயர் பெற்றது இவ்வூர் என்பதை விட, குறுகிய அல்லது சிறிய குடியிருப்பு பகுதி என்று நிலையில் இப்பெயர் அமைந்ததாக இருக்கலாம் என்பது மேலும் ஆய்வுக்குரியது. |
குறுங்கோழியூர் | கிழார் என்ற சங்க காலப் புலவர் குறுங்கோழியூரைச் சேர்ந்தவர். ஆகவே அவா் குறுங்கோழியூர் கிழார் எனப் பெயர் பெற்றார். செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் வட்டத்திலுள்ள கருங்குழியே அன்றைய குறுங்கோழியூர் என்ற கருத்து உள்ளது. தொண்டை. நாட்டைச் சேர்ந்த குறுங்கோழியூர், குறுங் கோழி என்று ஆச, இப்பொழுது கருங்குழி என வழங்கப்பெறு இறது என்பர். (ரா. பி. சேதுப்பிள்ளை, ஊரும் பேரும் பக். 11.) புறநானூற்றிலுள்ள 17, 20, 22 ஆகிய பாடல்கள் குறுங் கோழியூர் கிழார் பாடியவை. |
குறும்பூர் | சங்க கால ஊர்கள் |
குறும்பூர் | குறும்பு என்பது பாலை நிலத்து ஊர். இப்பெயர் அடிப்படையில் குறும்பூர் என்ற ஊர்ப் பெயர் தோற்றம் பெற்றதா என்பது தெரியவில்லை. விச்சியர் கோமகன் பகைவர்களுடன் பொருத பொழுது குறும்பூர் ஆர்த்தது என்று சங்க இலக்கியம் கூறுகிறது. |
குறும்பொறையூர் | சேக்கிழாரின், புகழ்ச் சோழ நாயனார் வரலாற்றின் வழி தெரியவரும் ஊர் குறும்பொறையூர். |
குற்றாலம் | இன்றும் குற்றாலம் என்றே வழங்கப்பட்டு வரும் ஊர் பாண்டிய நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்றது இத்தலம். திருநாவுக்கரசர் மாணிக்கவாசகர் பட்டினத்தார் போன்ற பிறரும் இத்தலத்து இறையைப் புகழ்கின்றனர். குருமணிகள் வெயிலெறிக்கும் குற்றாலம் எனப்பாடுகின்றார் சேக்கிழார் (கழறி-106). சம்பந்தர் தம் ஒவ்வொரு பாடலிலும் குற்றாலத்தின் இயற்கை வளத்தைக் காட்டுகின்றார். இன்றும் இவ்வளத்தை நாம் நேரிடையாகக் காணமுடிகிறது. |
குற்றாலம் – குறும்பலா | தேவாரத் திருத்தலங்கள் |
குளந்தை | நம்மாழ்வார் பாடல் வழித் தெரியவரும் வைணவத்தலம். இன்று பெருங்குளம் என்று அழைக்கப்படும் ஊர். |
குளமுற்றம் | சங்க கால ஊர்கள் |
குளமுற்றம் | குளமுற்றம் என்னும் ஊர் சேர நாட்டிலுள்ளது. (கலைக் களஞ்சியம் ) இந்த ஊரிலே துஞ்சிய சோழ மன்னன் ஒருவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் எனப் பெற்றான். (புறம் 69.) ஊரின் வெளியிடம் எனப் பொருள்படும் முற்றம் என்ற. சொல் அமைந்த ஊர்ப்பெயர்களில் ஒன்று. இது குளம் என்ற நீர் நிலை காரணமாகக் குளமுற்றம் எனப்பெயர் பெற்றது போலும், |
குழுமூர் | சங்க கால ஊர்கள் |
குழுமூர் | உதியன் என்னும் வள்ளல் வாழ்ந்த ஊர் குழுமூர், இவ்வள்ளல் இரவலர்க்கு உணவு அளிப்பதைத் தலையாயக் கடமையாகக் கொண்டிருந்தான். ஆகையால் அவன் அட்டிலில் இரவலரின் ஆரவாரம் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது என்றும் தெரிகிறது. சிறந்த பசுக்களையுடைய நிலப்பரப்பினையுடைய குழுமூர் என்று சங்க இலக்கியம் கூறுவதால், இவ்வூர் நிலப்பரப்பில் பசுக்கள் குழுமியிருந்தன என்று தெரிகிறது. இவ்வாறு குழுமியிருந்த காரணத்தால் குழுமூர் எனப்பெயர் பெற்ற ஊராக எண்ண இடமளிக்கிறது. |