ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ஒகந்தூர் | சங்க கால ஊர்கள் |
ஒக்கூர் | ஓக்கூர் என்பது பாண்டி நாட்டில் திருக்கோட்டியூர் பக்கத்தே உள்ள ஓரூர், எக்கூர் என்பதே இவ்வூர் என்று கருத்தும் உள்ளது. அகநானூற்றில் 14 ஆம் பாடலையும், புறநானூற்றில் 248. ஆம் பாடலையும் பாடிய மாசாக்கனார் என்ற புலவரும், குறுந்தொகையில் [.6. 139, 186, 20, 275 ஆகிய பாடல்களையும் அகநானூற்றில் 324, 384 ஆகிய பாடல்களையும், புறநானூற்றில் 29 ஆம் பாடலையும் பாடிய மாசாத்தியார் என்ற புலவரும் ஒக்கூரைச் சேர்ந்தவர்கள். |
ஒத்தூர் | திருவத்தூர் என்றும் திருவத்திபுரம் என்றும் செய்யாறு என்றும் சுட்டப்படும் இவ்வூர் இன்று வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலத்தில் ஆண்பனை பெண்பனையாயிற்று. ஒத்து – வேதம் இறைவன் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடம் என்ற கருத்து ஊர்ப்பெயர்க் காரணமாக அமைகிறது. திருவோத்தூர் என்ற பெயர், மக்கள் மொழி எளிமை கருதி மருவிய நிலையில் திருவத்தூர் எனவும், திருவத்தி புரம் எனவும் மாறி அமைகிறது. கல்வெட்டுகளிலும் ஓத்தூர் என்றே சுட்டப்படுகிறது. சேயாற்றங்கரையில் உள்ளமையால் செய்யாறு எனப் பெயர் வழக்கு அமைகிறது. ஓதக்கூடிய அந்தணர் வாழ்ந்த இடமாகவும் ஓத்தூர் இருக்கலாம். தொண்டைத் திருநாட்டில் திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூர் ( 34-973 ) என சேக்கிழார் பாடல் அமைகிறது. |
ஒய்மாநாடு | உறுபுலி துப்பின் ஓவியர் பெருமகன்! (பத்துப். சிறுபாண் 122) என்று நல்லியக் கோடன் என்ற வள்ளல் கூறப் பெற்றுள்ளான். ஓவியர் குடியிற் பிறந்த பெருமகன் ஆகிய ஓவியர் பெருமகன் என்ற பெயர் “ஒய்மான்” என மருவி, அவன் ஆண்ட நாடு ஒய்மாநாடு எனப் பெயர் பெற்றது போலும், ஒய்மாநாடு திண்டிவனத்திற்கு வடக்கிலுள்ள மா விலங்கையை வட வெல்லையாகவும், கடலைத் தென் எல்லையாகவும், சூணாம்பேடு என்னும் ஊரையடுத்த வில்லிப் பாக்கத்தைக் கிழக்கு எல்லையாகவும் கொண்டது. மேற்கில் ஏறத்தாழ விழுப்புரம் வரையில் பரவியிருந்ததாகவும் தெரிகிறது. இந்நான்கு எல்லைகளுக்குள்ளேயே எயிற்பட்டினம் இருந்தது. இந்நாட்டைச் சேர்ந்தனவாக இலக்கியங்கள் கூறும் வேலூர், ஆமூர் என்னும் ஊர்கள் இன்னும் இருக்கின்றன. “புறநானூற்றில் 176 ஆம் பாடலால் புறத்திணை நன்னாகனார் ஒய்மான் நல்லியக் கோடனைப் பாடியுள்ளார். |
ஒற்றியூர் | திருவொற்றியூர் எனும் பெயராக, செங்கற்பட்டு மாவட்டத் தில் உள்ளது இவ்வூர். ” தேவார மூவராலும் பாடல் பெற்ற தலம் இது. கடற்கரை அருகேயுள்ள ஊர் இது என்பதனை, |
ஒற்றியூர்(சென்னை) | தேவாரத் திருத்தலங்கள் |
ஒல்லையூர் | சங்க கால ஊர்கள் |
ஒல்லையூர் | ஒல்லை என்ற சொல் பழமை என்ற பொருளையுணர்த்தும். ஊரின் பழமை குறித்து ஒல்லையூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒலிமங்கலம் என்று அழைக்கப்படும் ஊரே ஒல்லையூர். ஒலியமங்கலம் என்ற ஊரே இது என்று தெரிகறது. திருமெய்யத்துக்குப் பக்கத்தில் இப்பெயரோடு ஓரூர் உள்ளது. |