ஊர் பெயரகராதி

தமிழகம் ஊரும் பேரும் – சேதுப்பிள்ளை.ரா.பி, இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் I – ஆளவந்தார்.ஆர், II – பகவதி.கே. தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு – கு.பகவதி. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி – தா.வே.வீராசாமி. தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – மெய்.சந்திரசேகரன். கெடிலக்கரை நாகரிகம் ஊர்கள் – பேரா.சுந்தரசண்முகனார். செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – நாகராசன்.கரு


87

48

47

6

15

6

18

11

4

8

4
க்
99
கா
32
கி
3
கீ
1
கு
61
கூ
10
கெ
1
கே
3
கை
3
கொ
24
கோ
39
கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
10
சா
9
சி
21
சீ சு
2
சூ செ
17
சே
8
சை சொ சோ
9
சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
23
தா
1
தி
22
தீ து
11
தூ
4
தெ
7
தே
4
தை தொ
5
தோ தௌ
ந்
31
நா
24
நி
6
நீ
11
நு நூ நெ
22
நே
5
நை நொ
1
நோ நௌ
ப்
43
பா
33
பி
7
பீ பு
39
பூ
10
பெ
11
பே
7
பை
2
பொ
7
போ
6
பௌ
ம்
40
மா
25
மி
3
மீ
2
மு
28
மூ
4
மெ
1
மே
1
மை
5
மொ மோ
6
மௌ
ய்
2
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
40
வா
20
வி
25
வீ
6
வு வூ வெ
27
வே
24
வை
7
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ஏடகம்

இன்று திருவேடகம் என்று சுட்டப்பட்டு வரும் இவ்வூர் மதுரை மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது. ஞானசம்பந்தர் சமணர்களோடு செய்த புனல் வாதத்தில் அவர் வைகையில் இட்ட வாழ்க அந்தணர் என்னும் தேவாரப் பதிகம் எழுதிய ஏடு நீரை எதிர்த்துச் செல்ல, நாயனார் வன்னியும் மத்தமும் என்ற திருப்பதிகம் பாடியவுடன் அவ்வேடு ஒதுங்கி நின்ற தலம். இதனால் ஊரின் பெயர் ஏடகம் ஆயிற்று, என்னும் கருத்து இவ்வூர் பற்றி அமைகிறது. திருஞானசம்பந்தரே தம் தேவாரத்தில்.
கோடு சந்தனம் அகில் கொண்டு இழி
வைகை நேர் ஏடு சென்று அணைதரும்
ஏடகத்து ஒருவன் எனக் குறிப்பிடுகின் றார்.
வைகையின் வடகரையில் உள்ள தலம் இது.

ஏடகம்

தேவாரத் திருத்தலங்கள்

ஏணிச்சேரி:

யவனர்‌ சேரி என்ற தொடர்‌ நாளடைவில்‌ ஏணிச்‌ சேரி எனத்‌ திரிந்து அமைந்திருக்கலாம்‌. தலைநகராகிய. உறையூரை யடுத்து யவனர்கள்‌ தங்க இருந்த பகுதியாகக்‌ கருகுலாம்‌. மூடமோசியார்‌ என்ற சங்ககாலப்‌ புலவர்‌ இவ்வூரினர்‌. ஆகவே ஏணிச்சேரி முடமோசியார்‌ எனப்‌ பெற்றார்‌. ஏணிச்சேரி உறையூரை ஒட்டி இருந்ததாக வேண்டும்‌. மதுரை மாநகரின்‌ புறஞ்சேரி போல உறையூர்‌ ஏணிச்சேரி அமைந்திருந்ததாகக்‌ கருத வேண்டும்‌. உறையூரின்‌ ஏணிச்சேரி என்று கூறப்‌ பெற்றமையால்‌ இது தெளிவாகிறது. புறநானூற்றில்‌ 13, 127 135, 241, 374, 375 ஆகிய பாடல்கள்‌ உறையூர்‌ ஏணிச்சேரி முடமோசியார்‌ பாடியவை.

ஏமப்பேறூர்

வையம் புரக்கும் தனிச்செங்கோல் வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம்பணையும் செழுநீர்த் தடமும் புடையுடைத்தாய்ப்
பொய்தீர் வாய்மை அருமறை நூல் புரிந்த சீலப் புகழதனால்
எய்தும் பெருமை எண்டிசையும் ஏறூர் ஏமப் பேறூரால்
என்ற சேக்கிழார் பாடல் (பெரிய.33-1) சோழநாட்டு, மிகவும் செழிப்பு, மிக்கதொரு ஊர் எனக் காட்டுகின்றது இச்செழிப்பு மக்கள் வாழ்க்கையைச் சீரியதாக இருக்கச் செய்த நிலையில் இது ஏமப்பேறூர் எனத்திகழ்ந்திருத்தல் திண்ணம். இன்பம் தரும் சிறப்புபெற்ற ஊர் என்ற நிலையில் இவ்வூர் பொருள் அமைகிறது. நம்பியாண்டாரின் திருத்தொண்டத் தொகை இவ்வூரை எழில் ஏமப்பேறூர்’ ( 31 ) எனக் குறிக். கின்றது.

ஏமம்

தேவாரத் திருத்தலங்கள்

ஏரகம்‌

ஏரகம்‌ அல்லது திரு ஏரகம்‌ என்பது முருகனது படை, வீடுகளில்‌ ஒன்று. வீடு என்னும்‌ பொருள்படும்‌ அகம்‌ என்ற சொல்‌ சில ஊர்ப்‌ பெயர்களில்‌ அமைந்திருக்கிறது. முதலில்‌ வீட்டைக்‌ குறித்த அகம்‌ என்ற சொல்‌ நாளடைவில்‌ வீடுகளையுடைய ஊரைக்‌ குறித்தது போலும்‌. சோழ நாட்டில்‌ தஞ்சையையடுக்த சுவாமி மலையே ஏரகம்‌ என்பர்‌. ஆனால்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ கருத்து அது தவது என்பது. திநமுருகாற்றுப்படையில்‌ ஏரகத்தைப்‌ பற்றிக்‌ கூறப்‌படும்‌ குறிப்புகளின்‌ அடிப்படையிலும்‌, நச்சினார்க்கினியா்‌ உரையைக்‌ கொண்டும்‌ ஏரகம்‌ என்பது சுவாமி மலையின்‌ வேறாகிய ஓர்‌ ஊர்‌ எனக்‌ கருத இடமளிக்கிறது. ஏரகத்து முருகன்‌ கோயிலில்‌ நாற்பத்தெட்டு ஆண்டு பிரம சரிய விரதம்‌ காத்த வேதியர்‌ மந்திரங்கள்‌ கூற. ஈர உடையணிந்த அருச்சகர்‌ முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தைக்‌ கூறி அருச்சனை செய்தனர்‌ என்று திருமுருகாற்றுப்படை. கூறுகிறது. தென்‌ கன்னட மாவட்டத்தில்‌ புத்தரர்‌ வட்டத்தில்‌ கிழக்கே அமைத்துள்ள மேற்கு மலைத்தொடரின்‌ மேற்கு பக்கத்து மலைப்‌ பகுதியைச்‌ சேர்ந்த துளு நாட்டில்‌ குமாரக்ஷேத்திரம்‌ அல்லது சுப்பிரமண்ய க்ஷேத்திரம்‌ என்ற ஒரு சிற்றூர்‌ உள்ளது. இங்கே உள்ள கோயிலில்‌ முருகனுக்கு நடைபெறும்‌ பூசைகளின்போது அருச்சகர்‌ நீராடி ஈர ஆடையுடன்‌ இருந்தே அருச்சனை புரிதல்‌ வழக்கம்‌, அவரும்‌ அவருடடைய உதவியாளரும்‌ நீராடிய பின்பே ஈர ஆடையுடன்‌ கருவறையுள்‌ நுழைவர்‌. உதவியாளர்‌ மந்திரங்களைக்‌ கூற அருச்சகர்‌ அருச்சனை புரிவர்‌, (ஸ்ரீசுப்பிர மணிய க்ஷேத்திரம்‌, ஆங்கில நூல்‌ பக்‌. 5 8) ஏரகத்து முருகன்‌ கோயிலைப்‌ பற்றித்‌ திருமுருகாற்றுப்‌ படை கூறும்‌ செய்தியையும்‌, ‘ஏரகம்‌ மலை நாட்டகத்‌ தொரு திருப்பதி’ எனக்‌ கூறும்‌ நச்சினார்க்கினியரின்‌ கூற்றையும்‌ கொண்டு, துளுநாட்டைச்‌ சேர்ந்த குமார ஷேத்திரமே திருமுருகாற்றுப்படை குறிக்கும்‌ ஏரகம்‌ என்று கருத வேண்டும்‌ என்பது ஆராய்ச்சியாளர்‌ கருத்து.மந்திரம்‌ ஓதுவோரையும்‌ அருச்சகரையும்‌ தனித்தனியாகப்‌ பெற்ற வேழிமலை (நாகர்‌ கோயிலுக்கு அண்மையிலுள்ள வேள்‌ மலை) யை ஏரகம்‌ எனக்‌ கூறுவோரும்‌ உண்டு. இன்று கோயிலில்‌ நடை பெறும்‌ நடை முறையை வைத்துக்‌ கொண்டு அன்றைய நிகழ்ச்சியோடு தொடர்பு: படுத்தி முடிவு செய்ய இயலுமா என்பதை ஆராய்ந்து முடிவு காண வேண்டும்‌. ஈர ஆடையுடன்‌ ஒருவர்‌ மந்திரம்‌ கூற, மற்றொருவர்‌ அருச்சனை புரிதல்‌ சாதாரண நடை முறையாக இருக்கலாகாதா? ஓதுவார்‌ பாடல்‌ ஓத, அருச்சகர்‌ அருச்சிக்கும்‌ வழக்கும்‌ இன்றும்‌ பலமுருகன்‌ கோயில்களில்‌ நடை முறையில்‌ இருப்பதைக்‌ காணலாம்‌. ஏர்‌ என்றால்‌ அழகு. அகம்‌ என்றால்‌ இடம்‌. அழகிய சோலைகள்‌ நிறைந்த பகுதி என்ற பொருளில்‌ இப்பெயர்‌ “ஏரகம்‌” என அமைந்திருக்கவும்‌ வாய்ப்புண்டு போலும்‌. அறுபடை வீடுகளுள்‌ பிற எல்லாம்‌ மலைப்பகுதிகளாய்‌ அமைந்தமை,போன்று இதுவும்‌ சிறந்த மலைப்பகுதி என்ற நிலையில்‌ அழகிய சோலைகள்‌ நிறைந்த இடமாக அமைய வாய்ப்புண்டு. அழகுணர்ச்சி மிக்க. தமிழர்கள்‌ அழகிய ஊர்ப்‌ பகுதியை ஏரகம்‌ எனப்பெயரிட்டமைத்‌தனர்‌ எனக்‌ கருதுவது பொருத்தமாகத்‌ தோன்றுகிறது. வடமொழியில்‌ ஏரகம்‌ என்றால்‌ கோரைப்புல்‌ என்று பொருளாம்‌. கோரைப்புல்‌ மிகுந்த பகுதி ஏரகம்‌ என்று பெயா்‌ பெற்றிருக்கலாம்‌ என்றும்‌ கருதலாம்‌. இக்கருத்து ஆய்தற்குரியது. காஞ்சி மரங்கள்‌ நிறைந்த இடம்‌ காஞ்சி என்றும்‌, காரைச்‌ செடிகள்‌ நிறைந்த இடம்‌ காரைக்‌ காடு என்றும்‌ வழங்கும்‌ நிலையும்‌ ஒப்பு நோக்கத்தக்கது.
இரு மூன்று எய்திய இயல்பினின்‌ வழாஅது,
இருவர்ச்‌ சுட்டிய பல்வேறு தொல்குடி,
அறு நான்கு இரட்டி இளமை நல்‌ யாண்டு
ஆறினில்‌ கழிப்பிய, அறன்‌ நவில்‌ கொள்கை,
மூன்று வகைக்‌ குறித்த முக்தீச்‌ செல்வத்து
இரு பிறப்பாளர்‌, பொழுது அறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண்‌,
புலராக்‌ காழகம்‌ புலர, உடீஇ,
உச்சிக்‌ கூப்பிய கையினர்‌, தற்புகழ்ந்து,
ஆறு எழுத்து அடக்கிய அருமறைக்‌ கேள்வி
நா இயல்‌ மருங்கில்‌ நவிலப்‌ பாடி,
விரை உறு நறுமலர்‌ ஏந்தி பெரிது உவந்து,
ஏரகத்து உறைதலும்‌ உரியன்‌’” (பத்துப்‌. திருமுருகு. 177 189)
“சீர்‌ கெழு செந்திலும்‌ செங்கோடும்‌ வெண்‌ குன்றும்‌
ஏரகமும்‌ நீங்கா இறைவன்‌ கை வேலன்றே” (சிலப்‌. 24; 8: 1)

ஏரகம்

சங்க கால ஊர்கள்

ஏறை

குறமகள்‌ இளவெயினி என்ற சங்க கரலப்‌ புலவர்‌ ஏறைக்‌ கோனைப்‌ பாடினார்‌ (புறம்‌.1;57) என்ற குறிப்பின்‌ மூலம்‌ நமக்குக்‌ கிடைக்கும்‌ ஊர்ப்பெயர்‌ ஏறை என்பது, இவ்வூரைச்‌ சேர்ந்த வள்ளல்‌ ஏறைக்கோன்‌ எனப்பெற்றார்‌.

ஏறை

சங்க கால ஊர்கள்

ஏழில்‌

தன்னன்‌ என்பவன்‌ ஏழில்‌ குன்றத்திலிருந்து ஆட்சி புரிந்ததாகச்‌ சங்க கால இலக்கியங்கள்‌ கூறுகின்றன. இப்பொழுது மலையாள நாட்டில்‌ ஏழுமலை [Elumala] என்று வழங்கப்‌ பெறும்‌ இடமே அந்த ஏழிற்‌ குன்றம்‌. தற்காலத்திய வட மலபாரைச்‌ சேர்ந்த ஏமில்‌ மலை, கொண்‌ கானம்‌, பூமிநாடு ஆகியவை அடங்கிய பகுதியே நன்னன்‌ ஆட்டக்‌ குட்பட்டிருந்த நாட்டின்‌ பகுதியாகக்‌ கருதப்‌ பெறுகிறது. ஏழில்‌ ஒருமலை. இது நன்னன்‌ என்பவனுக்குரியது. ஏழிலை பாலையென்னும்‌ மரமும்‌ ஆம்‌ என்பர்‌ உ.வே. சாமிநாதையர்‌, இக்குன்றத்தையடுத்த காடுகளில்‌இயற்கையாகவே ஏழிலைப்‌ பாலை என்ற மரம்‌ வளர்வதைத்தான்‌ நேரில்‌ சென்ற பொழுது பார்த்ததாகவும்‌, ஆகவே அம்‌மரத்தின்‌ பெயரால்‌ ‘ஏமில்‌’ என அக்‌குன்று சங்க காலத்தில்‌ பெயர்‌ பெற்றது எனக்‌ கருதுவது சரியே என்றும்‌ கூறப்படுகிறது. காஞ்சி என்பது காஞ்சி என்ற மரப்பெயராலும்‌ வஞ்சி என்பது வஞ்சி என்ற மரப்பெயராலும்‌ கொற்கை என்பது கொற்கு என்ற மரப்பெயராலும்‌ பெயர்‌ பெற்றமையை ஒப்புமையாகக்‌ கூறப்படுகிறது.ஏழில்‌ மரம்‌ கேரளச்‌ சடங்குகளில்‌ இன்றும்‌ மிகமுக்கிய இடம்‌ பெற்றுள்ளது. கிராம மக்களின்‌ தெய்வ வழிபாட்டில்‌ இம்மரம்‌ இடம்‌ பெற்றுள்ளது. பகவதி தேவதையின்‌ மரம்‌ என்று கருதப்‌படுகிறது. பகவதி கோயில்‌ வேண்டுதலை நிறைவேற்றிக்‌ கொள்ள அம்‌மரத்தில்‌ பெரிய ஆணிகள்‌ அடிக்கின்றனர்‌. இவ்வாறெல்லாம்‌ அப்பகுதி மக்களோடு மிக நெருங்கிய தொடர்புடைய மரம்‌ ஏழில்‌. யாழ்‌ போன்று தோற்றம்‌ பெற்றதால்‌ ஏழில்‌ எனப்‌ பெயர்‌ பெற்றது என்ற அவ்வை துரைசாமி அவர்களின்‌ கருத்துப்‌ பொருத்தமற்றது என்றும்‌, இசையொலியைக்‌ குறிக்கும்‌ எழால்‌ என்ற சொல்லோடு இயைபுபடுத்திக்‌ கூறினாரோ என்றும்‌ P.L, சாமி கூறுறொர்‌. தான்‌ நேரில்‌ சென்று பார்த்த பொழுது யாழ்‌ வடிவுத்‌ தோற்றமே இல்லை என்பதை அறிந்ததாகவும்‌ கூறுகிறார்‌. எனவே ஏழில்‌ என்பது மரப்பெயரால்‌ பெற்ற ஊர்ப்பெயரென்று தெரிகிறது.
“பொன்படு கொண்கான நன்னன்‌ நல்நாட்டு
ஏழிற்குன்றம்‌ பெறினும்‌, பொருள்வயின்‌
யாரோ பிரிகிற்பவரே” (நற்‌ 391: 6 8) “
எம்மில்‌ அயலது ஏழில்‌ ௨ம்பர்‌” (குறுந்‌. 138 : 2)
“ஏழில்‌ நெடுவரைப்‌ பாழிச்‌ சிலம்பில்‌
களி மயிற்‌ கலாவத்தன்ன தோளே”. (அகம்‌. 152.: 13 14)
“இன்சனி நறவின்‌ இயல்தேர்‌ நன்னன்‌
விண்பொரு நெடுவரைக்‌ கவாஅன்‌
பொன்படு மருங்கின்‌ மலைஇறந்‌ தோரே” (௸ 173 : 16 18)
“நுணங்கு நுண்‌ பனுவற்புலவன்‌ பாடிய
இளமழை தவமும்‌ ஏழிற்‌ குன்றத்து” (ஷே. 345: 6 7)
“அருங்‌ குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை
சூழாது சுரக்கும்‌ நன்னன்‌ நல்நாட்டு,
ஏழிற்குன்றத்துக்‌ கவாஅன்‌…” (௸ 349 : 7 9)

ஏழெயில்

சங்க கால ஊர்கள்