ஊர் பெயரகராதி

தமிழகம் ஊரும் பேரும் – சேதுப்பிள்ளை.ரா.பி, இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் I – ஆளவந்தார்.ஆர், II – பகவதி.கே. தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு – கு.பகவதி. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி – தா.வே.வீராசாமி. தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – மெய்.சந்திரசேகரன். கெடிலக்கரை நாகரிகம் ஊர்கள் – பேரா.சுந்தரசண்முகனார். செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – நாகராசன்.கரு


87

48

47

6

15

6

18

11

4

8

4
க்
99
கா
32
கி
3
கீ
1
கு
61
கூ
10
கெ
1
கே
3
கை
3
கொ
24
கோ
39
கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
10
சா
9
சி
21
சீ சு
2
சூ செ
17
சே
8
சை சொ சோ
9
சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
23
தா
1
தி
22
தீ து
11
தூ
4
தெ
7
தே
4
தை தொ
5
தோ தௌ
ந்
31
நா
24
நி
6
நீ
11
நு நூ நெ
22
நே
5
நை நொ
1
நோ நௌ
ப்
43
பா
33
பி
7
பீ பு
39
பூ
10
பெ
11
பே
7
பை
2
பொ
7
போ
6
பௌ
ம்
40
மா
25
மி
3
மீ
2
மு
28
மூ
4
மெ
1
மே
1
மை
5
மொ மோ
6
மௌ
ய்
2
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
40
வா
20
வி
25
வீ
6
வு வூ வெ
27
வே
24
வை
7
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ஊணூர்‌

சங்கப்‌ பாடல்களிலிருந்து நாம்‌ அறியும்‌ பெயர்களுள்‌ ஊணூர்‌ என்ற ஊர்ப்பெயரும்‌ ஓன்று. ஊனூர்‌ தழும்பன்‌ என்ற ஒரு வள்ளலுக்குரியதாக இருந்தது. (போரில்‌ பெற்‌ற தழும்பால்‌ பெயர்‌ பெற்றவன்‌ தழும்பன்‌), இவ்‌வூர்‌ கடிமதில்‌ வரைப்பினையுடையது. பழைய பல்வேறு நெற்‌கூடுகளையுடையது. தழும்பனுக்கு உரிய ஊர்‌ ஆதலின்‌ தழும்பனூர்‌ என்றும்‌ ஊணூரா்‌ கூறப்பெற்றது. ஊணூர்‌ என்பது மருங்கூர்ப்பட்டினத்தின்‌ அருகில்‌ உள்ளது எனத்‌ தெரிகிறது.
“இரும்பாண்‌ ஒக்கல்‌ தலைவன்‌! பெரும்புண்‌
ஏஎர்‌ தழும்பன்‌ ஊணூர்‌ ஆங்கண்‌ பிச்சைசூழ்‌ பெருங்களிறு போல, எம்‌
அட்டில்‌ ஓலை தொட்டனை நின்மே” (ந.ற்‌.300:9 12)
“பழும்பல்‌ நெல்லின்‌ ஊணூராங்கண்‌” (அகம்‌.220:13)
“பிடிமிதி வழுதுணைப்‌ பெரும்பெயர்த்‌ தழும்பன்‌
கடிமதில்‌ வரைப்பின்‌ ஊணூர்‌ உம்பர்‌” (௸. 227:17 18)
“வாய்‌ மொழித்‌ தழும்பன்‌ ஊணூரன்ன
குவளை உண்கண்‌ இவளை……” (புறம்‌:348:5 6) (வாய்மொழித்‌ தழும்பனூர்‌ அன்ன” என்ற பாட வேறுபாடு உள்ளது)

ஊணூர்

சங்க கால ஊர்கள்

ஊர்

ஊர் என்பது மக்களின் குடியிருப்பினைச் சுட்டும் தொன்மை வடிவமாகும். தொல்காப்பியம் மற்றும் சங்க நூல்களில் “”ஊர்”” என்ற சொல் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது. மருதநிலம் சார்ந்துள்ள இடத்தை ஊர் என்ற சொல்லால் குறிபிட்டு வந்தனர்.

அகூர் அழகு + ஊர் =அழகு நிறைந்த ஊர்
ஆசு +ஊர் = ஆசூர் = குற்றமில்லாத ஊர்
ஆத்தூர் = ஆற்று + ஊர்
எந்தூர் = ஏந்து + ஊர்
எரையனுரர் = ஏரையான் + ஊர்
ஏவளுர் = ஏவள் + ஊர்
கர்ணாவூர் = கர்ணன் + ஆவூர்
கருப்பூர் = கருப்பு + ஊர்
கீழ் சித்தாமூர் = கீழ் + சின்ன + ஆமூர்
கீழ்கூடலூர் = கீழ் + கூடல் + ஊர்
கீழ்சேவூர் = கீழ் + செம்மை + ஊர்
குளத்தூர் = குளம் + ஊர் (அத்து) சாரியை
குறள் + ஊர் =கொரளுர்
சாத்தனூர் = சாத்தன் + ஊர்
சிங்கனூர் = சிங்கன் + ஊர்
செண்டு + ஊர் =செண்டூர்
தேவன் + ஊர் = தீவனூர், தேவர்கள் வந்து தங்கும் ஊர்
நல்லாத்தூர் = நல் + ஆற்று + ஊர்
நல்லூர் = நன்மை + ஊர்
நன்மை + ஆம் + ஊர் = நல்லாமூர்
நெடிமொழியன் ஊர் = நெடிமோழியனூர்
பாதி + இரா + புலி + ஊர் =பாதி இரவில் புலி புகுந்த ஊர் + பாதிராப்புலியூர்
புலியூர் = புலி + ஊர்
புளியனூர் = புளியன் + ஊர்
மலையனூர் = மலையன் + ஊர்
மானூர் =மான் + ஊர்
முன்னூர் = முன் + ஊர்
மேலாதனூர் = மேல் + ஆதன் + ஊர்
ராயநல்லூர் = ராயன் + நன்மை + ஊர்
கல்லல் = கல் + அல் = கல்லல்
வெளியன் + ஊர் = வெளியனூர்

சங்கப்பாடல்களிலிருந்தும் கொளு அல்லது பதிகக் குறிப்புகளிலிருந்தும் கிடைக்கின்ற ஊர்ப் பெயர்களில் பெரும்பான்மையானவை “ஊர்” என்றே முடிகின்றன.
தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களிலும் “ஊர்” என்று முடியும் ஊர்கள் காணப்படுகின்றன
“ஊர்தல்” எனும் வினையினால் “ஊர்” என்ற சொல் தோன்றியது. சிறிது சிறிதாக ஊர்ந்து பரவும் தன்மையினால் ஊரென்பது முதனிலைத் தொழிலாகு பெயராகும் என்று ஞா.தேவநேயன் கருதுகிறார். இக்கருத்தில் இச்சொல்லை அணுகினால் மக்களின் குடிப் பெயர்வுகளினால் புதிதுபுதிதாக ஊர்கள் உண்டாகின.
தொன்மைக் குடிகளின் குடியிருப்புக்கள் குடிகளின் பெயரையேக் கொண்டிருக்கும். குடிகளின் குடிப்பெயர்வு மாற்றங்களுக்கேற்ப இக்குடியிருப்புக்களும் இயங்கிக் கொண்டிருக்கும். இங்கு ஊர்ப்பெயர் என்பது இயல்பான ஊரைக் குறிப்பிடாமல் மக்களின் ஒட்டுமொத்தமான தொகுதியினைக் குறிக்கும்” ஊர் என்பது இயங்கிக் கொண்டிருப்பது என்னும் கருத்துடன் இக்கருத்து பொருந்துவதைக் காணலாம்.
“ஊர்” என்ற பொதுக்கூற்று வடிவம் திராவிட மொழிகள் பலவற்றிலும் சிற்றூர் என்ற பொருளில் வழங்கி வருகின்றது.
ஊர் என்ற வடிவம் திராவிட மொழிகள் வழங்கும் இடங்களிலெல்லாம் காணப்படுகின்றது. இப்பகுதிகளில் “ஊர்” என்ற வடிவத்தின் அடிப்படையில் உண்டாகியுள்ள ஊர்ப் பெயர்களை ஆராய்வதன்வழி திராவிட மக்களின் குடியேற்றத்தை அறியலாம்” என்கிறார் டி.பாலகிருஷ்ணன் நாயர்.
குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை எனும் ஐவகை நிலங்களிலுள்ள மக்கள் குடியிருப்புக்கள் எவ்வெவ்வாறு அழைக்கப்பட்டன என்பதனைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறிப்பிடும் பொழுது மருத நிலத்துக் குடியிருப்புக்கள் “ஊர்” என்று அழைக்கப்பட்டன என்கின்றனர். ஆனால் இவ்வரையறை சங்கவிலக்கியத்தில் பெரும்பாலும் தெளிவாக உருப்பெறவில்லை என்கிறார் கி.நாச்சிமுத்து.
“ஊர்” என்ற இப்பொதுக்கூற்றின் கூட்டு வடிவங்களான புத்தூர், புதூர், முத்தூர், நல்லூர் என்பனவும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூற்று வடிவங்களாக வழங்கி வருகின்றன.

ஊறல்

தக்கோலம் என வழங்கப்படும் இத்தலம், வடஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்து இன்று அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் குறித்துச் சேக்கிழார் சுட்டுகின்றார். ஏயர் கோனும் இங்குச் சென்றதாகக் குறிப்பு கிடைக்கிறது திருவூறல் அமர்ந்திறைஞ்சி ( பெரிய – ஏயர் -28 🙂 நந்தி தீர்த்தம் உள்ளது. பக்கத்தில் கல்லாறு ஓடுகிறது. ஒரு காலத்தில் நந்தி வாயிலிருந்து நீர் வீழ்ந்து கொண்டு இருந்தது என்ற கருத்து நீர் கொண்டிருந்த காரணத்தால் ஊறல் என்ற பெயர் அமைந்ததோ என்ற எண்ணத்திற்கு வழி வகுக்கிறது. இவ்வூர் வளம் குறிக்கும் நிலையில் மிகச் சிறப்பாகச் சம்பந்தர் பாடல்கள் அமைகின்றன.
தேறல் இரும் பொழிலுந் திகழ் செங்கயல் பாய் வயலும் சூழ்ந்த
ஊறல் அமர்ந்த பிரான் 106-1
கொண்டல்கடங்கு பொழிற் குளிர் பொய்கைகள் சூழ்ந்து
நஞ்சையுண்ட பிரான் அமரும் திருஊறல் ( 106-5 )

ஊறல்(தக்கோலம்)

தேவாரத் திருத்தலங்கள்

ஊற்றத்தூர்

திருநாவுக்கரசர் ஊர் என்று முடியும் திருத்தலத் தொகுதி யுள் ஒன்றாக இதனையும் உரைக்கின்றார். உறையூரும் ஒத்தூரும் ஊற்றத்தூரும் ( 285-4 )