ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
உகாய்க்குடி | சங்ககாலப் புலவர் ஒருவர் இவ்வூரினர் உகாய்க்குடிகிழார் எனப் பெற்றார். குறுந்தொகையில் 63ஆம் பாடல் உகாய்க்குடி கிழார் பாடியது. உகா என்ற சொல் ஓமை, உவா மரங்களைக் குறிக்கும். இவ்வகை மரங்கள் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் குறிக்கப் பட்டுள்ளன. இவ்வகை மரங்கள் நிறைந்த பகுதியே +உகாய்க்குடி எனப் பெயர் பெற்றிருக்கலாம்.. |
உசாத்தானம் | இன்று கோயிலூர் என்று வழங்கப்படும் இத்தலம் தஞ்சா வூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. இராமர் இலக்குவர் போன்றோர் வழிபட்ட இத்தலம் சம்பந்தர் பாடல் பெற்றது. |
உடுப்பூர் | கண்ணப்ப நாயனார் புராணத்தில் கண்ணப்பரின் பிறந்த இடம் பற்றிப் பேசுகையில் சேக்கிழார், பொத்தப்பி நாட்டில், |
உத்தரகோசமங்கை | மாணிக்கவாசகர் பாடல் பெற்ற தலம் இது. இன்று இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள இவ்வூர் பற்றிய கதை சுவையாக அமைகிறது. வேதம் படிப்பதற்காகப் பார்வதியைப் பூலோகத்தில் அவதரிக்கச் செய்து. வேதம் படிக்க வைத்து, மீண்டும் வேதப் பொருளை அவருக்கு உபதேசிக்கின்றான். இப்படி வேதத்தில் திரும்பவும் உபதேசம் பெற்ற மங்கை கல்யாண சுந்தரியாகக் கோயில் கொண்டிருக்கும் தலம் தான் உத்தர கோசமங்கை ( உத்தரம் என்றால் திரும்பப் பெறும் விடை ; கோசம் என்றால் வேதம் என்று பொருள் ) |
உத்தராபதி | உத்தராபதியுள்ளோம் (42-40 ) என்று சேக்கிழார் சிவன் வாய் மொழியாக உரைக்கும் நிலையில் இப்பெயர் அமைகிறது. பிற எண்ணங்கள் தெளிவில்லை. |
உம்பற்காடு | சங்க கால ஊர்கள் |
உம்பற்காடு | இளங்கண்ணனார் என்ற சங்ககாலப் புலவர் உம்பற்காடு என்னும் ஊரினர் எனத் தெரிகிறது. ஆகவே அவர் உம்பற்காட்டு இளங்கண்ணனார் எனப் பெற்றார். இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் உம்பற்காட்டில் தன் கோல் நிறீஇ ஆண்டார். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தால் பாடிய பரணர் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றார். உம்பற்காடு சேர நாட்டுப் பகுதியாகும். உம்பல் என்ற சொல் யானையைக் குறிக்கும். எனவே யானைகள் மிகுந்த காடு என்ற பொருளில் இவ்வூர் பெயர் பெற்றிருக்கலாம். அகநானூரற்றில் 264ஆம் பாடல் உம்பற்காட்டு இளங்கண்ண னார் பாடியது. |
உரோடகம் | கந்தரத்தனார் என்ற சங்ககாலப் புலவர் உரோடகம் என்ற ஊரினர். எனவே உரோடகத்துக் கந்தரத்தனார் எனப்பெற்றார். அகநானூற்றில் ஒரோடகத்துக் கந்தரத்தனார் என உரோடகம் என்ற பெயர் ஒரோடகம் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. செங்கற்பட்டு மாவட்டத்தில் உரைகடம் என்ற பெயருடன் மூன்று ஊர்கள் உள்ளன என்றும், அவற்றுள் ஒன்றன் திரிபாக இப்பெயர் இருக்கலாம் என்று கருதும் கருத்து ஆய்ந்து முடிபு காண வேண்டிய ஒன்று. நற்றிணையில் 306ஆம் பாடலும், குறுந்தொகையில் 155ஆம் பாடலும் அகநானூற்றில் 69, 95, 191 ஆகிய பாடல்களும் உரோடகத்துக் கந்தரத்தனார் பாடியவை, |
உறத்தூர் | சங்க கால ஊர்கள் |
உறந்தை | உறந்தை என்னும் இவ்வூர்ப் பெயர் உறையூர் என்றும், கோழி என்றும் வழங்கப்பெற்றுள்ளது.“கோழி உறையூர்” என்பது பிங்கலம். உறப்பு என்ற சொல் செறிவு என்று பொருள்படுவதைக் காணும் பொழுது, மக்கள் நெருங்கி வாழ்ந்த இடமாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. “ஊர் எனப்படுவது உறையூர்” எனப் பாராட்டப் பெற்ற இவ்வூர் இன்று திருச்சிராப்பள்ளி நகரின் ஓரு பகுதியாக இருக்கிறது. பண்டைக் காலத்தில் சிறந்து விளங்கிய நகரங்களும் துறை முகங்களும் ஆற்றையடுத்தே உண்டாயின. சோழ நாட்டின் பண்டைய தலைநகரமாய உறையூர் காவிரியாற்றின் கரையில் அமைந்திருந்தது. அலெக்சாந்திரியா நாட்டு வணிகர் ஒருவர் முதல் நூற்றாண்டில் எழுதிய நூலின் மூலம், சோழநாடு கடற்கரைநாடு, உள்நாடு என இரு நாடுகளாக இருந்தது எனவும், கடற்கரை நாட்டைக் காவிரிபூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு மற்றொரு தாயத்தாரும் ஆண்டு வந்தனர் எனவும் தெரிய வருகின்றது. உறந்தை நீதிக்குப் பெயர் போனது. சோழர்களின் ஆட்டக் காலத்தில் மெல்லிய பஞ்சாடைகளின் வாணிகத்திற்குப் பெயர் பெற்றிருந்தது. இன்றைக்கும் உறந்தை (உறையூர்) கைத்தறி ஆடைகளுக்குச் சிறந்த இடமாக உள்ளது. உறந்தை என்ற பெயரே முதலில் அமைந்தது. பின்னரே உறையூர் என்று வழங்கள் என்பதனை இலக்கியச் சான்றுகள் காட்டுகிறன. சங்க இலக்கியத்திலெல்லாம் “உறந்தை என்ற ஆட்சியே மிக்கிருக்க, சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில் ‘உறையூர்’ என்று இளங்கோ ஆண்டிருப்பதும், இவ்வூரைச் சேர்ந்த புலவர்கள் எல்லோருடைய பெயர்களும் “உறையூர்”? என்றே இணைத்துக் கூறப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டில் “உறந்தை” என்றே கூறப் பட்டுள்ளது. இவ்வூருக்குக் கோழி என்றும் ஒரு பெயர் வழங்கியுள்ளது. ஒரு கோழி யானையைப் போரில் வென்ற இடமாதலின் இப் பெயர் பெற்றது எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இந்நகர் பார்வைக்குச் சிறையும் கழுத்துமாக அமைந்திருப்பதால் சிறையையுடைய கோழி எனப் பெயர் பெற்றது என்ற கருத்தும் உள்ளது. பறவையின் பெயர்கள் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருந்தமைக்குக் “கோழி” என்ற இந்த ஊர்ப்பெயர் ஒரு சான்று, வாழ்வும் தாழ்வும் நாட்டிற்கும் நகரத்திற்கும் ஏற்படும் போலும். பண்டைய நாளில் சிறந்திருந்த சில ஊர்கள் இந்நாளில் சிறப்பிழந்து இருக்கின்றன. சங்க காலத்தில் சோழநாட்டின் தலைநகராகச் சிறந்து விளங்கியது உறந்தை, அக்காலத்தில் சிராப்பள்ளி ஒரு சிற்றூராக அதன் அருகில் அமைந்திருந்தது. ஆனால் நாளடைவில் உறந்தையின் சிறப்புக் குறைய சிராப்பள்ளியின் சிறப்பு ஓங்கியது. இன்று தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த நகரமாக விளங்குகிறது. சிராப்பள்ளி மாநகர் நிலையையும் பெறுகின்றது. பழம்பெருமை வாய்ந்த உறந்தை சிறப்பிழந்து உள்ளது. சமணர்கள் மந்திரவலிமையினாலோ, தவ வலிமையினாலோ கல்மழையும் மண்மழையும் பொழியச் செய்து உறையூரை அழித்தார்கள் என்று தக்கயாகப் பரணி கூறுகிறது. |
உறந்தை | சங்க கால ஊர்கள் |
உறந்தை | உறந்தை, உறையூர், கோழியூர் போன்ற பல பெயர் பெற்ற ஊர். பல பெயர்கள் இதன் சிறப்பையும் செல்வாக்கையும் காட்டும், சங்க காலத்திலேயே சோழமன்னர்களின் பெரு மதிப்பினைப் பெற்று, அவர்களின் தலைநகராகத் திகழும் வண்ணம் சிறப்புடன் விளங்கிற்று. சேக்கிழார். சோழனுடன் உறந்தையின் நெருக்கம் கண்டே உறையூர்ச் சோழன் மணியா ரம் சாத்தும் திறத்தை ( ஏயர் -76 ) எனப்பாடிச் செல்கின்றனர். இவ்வூர்ப் பெயர், பண்டு தொட்டே உறந்தை என்றும் உறையூர் என்றும் வழங்கிவருவதால் இடைக்காலத்தும் இவ்விரு பெயர் களையும் புலவர் சுட்டும் நிலை இயல்பாக அமைகிறது. எனினும் உறையூரே முதல் பெயர் உறந்தை மரூஉப் பெயர் என்பதை யும் நாம் அறிகின்றோம். இது காவிரிக் கரையில் உள்ள தொரு ஊர். எனவே அப்பகுதியில் முதலில் மக்கள் உறைவதற்குத் தேர்ந்தெடுத்த ஊர் என்ற நிலையில் மக்கள் உறைவதற்கு ஏற்ற ஊர் என்ற பொருளில் இப்பெயர் தோன்றியிருக்கலாம். உறந்தை என்ற ஊர் மக்களின் சிக்கனம் போன்ற பல காரணங்களால் பின்னர் மருவி வழங்கினும், மக்களிடம் உறையூர் என்ற பெயரும் செல்வாக்கு இழக்க வில்லை என்பதையே இப்பெயரின் வாழ்வு காட்டுகிறது. கோழியூர் சோழன் வரலாறு தொடர் பாக அமைகிறது. இந்த உறந்தை நகரில் விளங்குகின்ற சிராப் பள்ளி எனத் திருநாவுக்கரசர் குறித்த நிலையினைக் ( 15-4 ) காண் கின்றோம். ஆயின் இன்று, திருச்சிராப்பள்ளி செல்வாக்கு பெற, உறையூர் அதனுள் ஒரு பகுதியாக விளங்கக் காண்கின்றோம். முத்தொள்ளாயிரமும், ( 46, 81, 85, 88, 96 ) |
உறையூர் | பார்க்க உறந்தை. |
உறையூர் | சங்க கால ஊர்கள் |
உறையூர் | தேவாரத் திருத்தலங்கள் |