ஊர் பெயரகராதி

தமிழகம் ஊரும் பேரும் – சேதுப்பிள்ளை.ரா.பி, இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் I – ஆளவந்தார்.ஆர், II – பகவதி.கே. தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு – கு.பகவதி. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி – தா.வே.வீராசாமி. தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – மெய்.சந்திரசேகரன். கெடிலக்கரை நாகரிகம் ஊர்கள் – பேரா.சுந்தரசண்முகனார். செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – நாகராசன்.கரு


87

48

47

6

15

6

18

11

4

8

4
க்
99
கா
32
கி
3
கீ
1
கு
61
கூ
10
கெ
1
கே
3
கை
3
கொ
24
கோ
39
கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
10
சா
9
சி
21
சீ சு
2
சூ செ
17
சே
8
சை சொ சோ
9
சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
23
தா
1
தி
22
தீ து
11
தூ
4
தெ
7
தே
4
தை தொ
5
தோ தௌ
ந்
31
நா
24
நி
6
நீ
11
நு நூ நெ
22
நே
5
நை நொ
1
நோ நௌ
ப்
43
பா
33
பி
7
பீ பு
39
பூ
10
பெ
11
பே
7
பை
2
பொ
7
போ
6
பௌ
ம்
40
மா
25
மி
3
மீ
2
மு
28
மூ
4
மெ
1
மே
1
மை
5
மொ மோ
6
மௌ
ய்
2
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
40
வா
20
வி
25
வீ
6
வு வூ வெ
27
வே
24
வை
7
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
இடவயம்

நாகநல்நாடு நானூறு யோசனை பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்‌ இதன்பால்‌ ஒழிக என அத்திபதியிடம்‌ பிரமதரும முனிவர்‌ கூறியதும்‌, அவன்‌ ‘இடவயம்‌’ என்ற பதிநீங்கதி வடக்கே அவந்தி நகர்ச்‌ சென்றான்‌ என்று மணிமேகலை கூறுவதால்‌; இட வயம்‌, என்னும்‌ ஊர்‌ நாக நாட்டகத்தது என உணரலாம்‌,
“அத்திபதி எனும்‌ அரசாள்‌ வேந்தன்‌
மைத்துனன்‌ ஆகிய பிரமதருமன்‌
ஆங்கு அவன்‌ தன்பால்‌ அணைந்து அறன்‌ உரைப்போய்‌..
தீம்கனி நாவல்‌ ஓங்குமித்‌ தீவிடை
இன்று ஏழ்நாளில்‌ இருநிலமாக்கள்‌
நின்று நடுக்கெய்த நீள்நில வேந்தே
பூமி நடுக்குறூஉம்‌ போழ்தத்து, இந்நகர்‌
வியன்‌ பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்‌
இதன்பால்‌ ஒழிக என இருநில வேந்தனும்‌
மாபெரும்‌ பேரூர்‌ மக்கட்கு எல்லாம்‌
ஆவும்‌ மாவும்‌ கொண்டு ஒழிக என்றே
பறையின்‌ சாற்‌றி, நிறை அருந்‌ தானையோடு
இடவயம்‌ என்னும்‌ இரும்பதி நீங்கி
வடவயின்‌ அவந்தி மாநகர்ச்‌ செல்வோன்‌” (மணிமே. 9: 14 28)

இடும்பாவனம்

இன்று வரை இப்பெயரிலேயே வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற இவ்வூர் சேக்கிழாராலும் ( 34-623 ) சுட்டப்படு இடும்பன் வழிபட்ட தலம் என்பது எண்ணம். காரைக்குடி மயிலாடுதுறை இருப்புப்பாதையில் கடிகுளத்திற்குப் பக்கத்கிறது. தில் இன்று இருப்பதாகத் தெரியவரும் இவ்வூர் அன்று மலைக் குன்றில் மேல் அமர்ந்த கோயிலை மட்டும் சுட்டி இன்று பக்கத்தில் உள்ள இடத்தையும் குறிக்கும் நிலைக்குச் செல்வாக்குப் பெற்றிருக்குமோ என்ற எண்ணம், ஞானசம்பந்தர் தம் பதிக்கத்தின் பல பாடல்களில் குன்றில் மேல் இடும்பாவனம் எனப் பாடும் நிலையால் எழும்புகின்றது.
சினமார் தரு திறல் வாளெயிற் றரக்கன் மிகு குன்றில்
இனமாதவ ரிறைவர்க்கிட மிடும்பாவனமிதுவே 17-1
கலையார் தரு புலவோரவர் காலன் மிகு குன்றில்
இலையார் தரு பொழில் சூழ்தரு மிடும்பாவனமிதுவே 17-2
கொந்தார் மலர் புன்னை மகிழ் குரவங்கமழ் குன்றில்
எழிலார் தரு மிறைவர்க் கிடம் இடும்பாவனமே 18- 5
இடும்பன் – முருகனின் கணத்தலைவன் என்ற பொருளைக் காண்கின்றோம். இடும்பாவன வனம் + இடும்பன் வனம் அல்லது இடும்பு வனம் என்ற நிலையில் ணைந்தது. இடும்பு என்பதற் குரிய பொருட்கள் இவண் பொருத்தமாகவில்லை. இறைச் சிறந்த காரணமாக. பக்திக் கதை அடிப்படையில் இவ்வனம் பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

இடும்பாவனம்

தேவாரத் திருத்தலங்கள்

இடும்பில்

சங்க கால ஊர்கள்

இடைக்கழி நாடு

சங்க கால ஊர்கள்

இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

சங்க கால ஊர்கள்

இடைக்கழிநாடு

ஓய்மான்‌ நாட்டு நல்லியக்‌ கோடன்‌ மீது சிறுபாணாற்றுப்‌ படை என்னும்‌ நூலை இடைக்கழிநாட்டு நல்‌லூர்‌ நத்தத்தனார்‌ பாடியுள்ளார்‌. இடைக்கழிநாடு இப்போது எடக்குநாடு என்று வழங்கப்‌ பெறுகிறது.இடைக்கழிநாடு என்பதன் திரிபே எடக்குநாடு என்பது.இந்த இடைக்கழிநாடாகிய எடக்குநாடு செங்கற்பட்டு மாவட்டத்‌தில்‌ மதுராந்தகம்‌ வட்டத்தில்‌ இருந்தது. இந்த எடக்கு (இடைக்‌ கழி) நாட்டிலே இப்போதும்‌ நல்லூர்‌ என்னும்‌ சிற்றூர்‌ ஒன்று இருக்கிறது. நத்தத்தனார்‌ என்ற புலவர்‌ இந்த இடைக்கழி நாட்டு நல்லூரிலே வாழ்ந்தவராதல்‌ வேண்டும்‌. நல்லியக்‌ கோடனுடைய ஓய்மாநாடு இடைக்கழிநாட்டுக்கு அண்மையில்‌ தெற்குப்‌ பக்கத்தில்‌ இருந்தது. இடைக்கழி நாடு செய்யூருக்குக்‌ கிழக்கிலும்‌ தென்கிழக்கலும்‌ தெற்கிலும்‌ கடற்கரையோரத்தில்‌ பரவியுள்ளது. இந்‌நாட்டின்‌ இடையில்‌ கழிவெளிகள்‌ நீண்டு கடக்கின்றன. இதுபற்றியே இந்‌நாடு இடைக்கழிதாடு எனப்‌ பெயர்‌ பெற்றது போலும்‌.

இடைக்காடு

இவ்வூரைச்‌ சார்ந்தவரான ஒரு சங்கப்‌ புலவர்‌ இடைக்‌ காடனார்‌ எனப்‌ பெற்றார்‌. ஊர்‌ அமைப்பு முறையில்‌ “இடை” என்னும்‌ அடைமொழியுடன்‌ அமைந்த ஊர்ப்பெயர்‌ இடைக்காடு. தஞ்சாவூர்‌ மாவட்டம்‌ பட்டுக்கோட்டை வட்டத்தில்‌ இடைக்‌காடு என்று ஓர்‌ ஊர்‌ உள்ளது. இடைக்காடு என்ற ஊர்‌ மலையாளப் பகுதியைச்‌ சார்ந்தது என்ற, கருத்தும்‌ உள்ளது. நற்றிணையில்‌ 142, 221, 316 ஆகிய பாடல்களும்‌, குறுந்‌ தொகையில்‌ 251 ஆம்‌ பாடலும்‌, அகநானூற்றில்‌ 139, 194, 274, 284, 304, 374 ஆகிய பாடல்களும்‌, புறநானூற்றில்‌ 42ஆம்‌ பாடலும்‌ இவ்வூர்ப்‌ புலவர்‌ பாடியவை.

இடைக்குன்றூர்‌

இவ்வூரைச்‌ சேர்ந்த சங்கப்புலவர்‌ இடைக்குன்றூர்‌ கிழார்‌ எனப்பெற்றார்‌. ‌பாண்டியன்‌ தலையாலங்கானத்துச்‌ செருவென்ற நெடுஞ்‌செழியனை இவர்‌ பாடிய பாடல்கள்‌ 70, 77, 78, 79 புத நானூற்றில்‌ உள்ளன.

இடைக்குளம்

எனவே சிவன் கோயில் கொண்ட ஆறு, குளம், களம், கா பெயர் கள் இடம்பெற்ற பெயர்களுள் ஒன்றாக இதனைத் திருநாவுக் கரசர் குறிப்பிடுகின்றார் ( 285-10 ) நடுவில் அமைந்த குளம் என்ற நிலையில், ஏற்பட்ட பெயராக அமையலாம். பின்னர் இவ்விடத்தில் கோயில் ஏற்பட்டு இருக்கலாம். இடைக்குளம் என்பது தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணம் தாலுகாவில் உள்ள மருத்துவக்குடி என்பதாகும். எண்ணத்தை இராக வையங்கார் தருகின்றார்.

இடைச்சுரம்

என்ற திருவிடைச்சுரம் என வழங்கப்படும் இவ்வூர் இன்று செங்கற்பட்டு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. காட்டின் இடையில் அமைந்த கோயில் காரணமாகக் கோயில் இடைச்சுரமெனப் பெயர் பெற்று, ஊரும் இப்பெயர் அடைந்ததோ என்ற எண்ணம்,
வரிவளரவிரொளி யரவரதாழ வார்சடை முடிமிசை வளர் மதிசூடிக்
கரிவளர் தருகழல் கால்வவனேந்திக் கனலெரியாடுவர் காடரங்காக
விரிவளர் தருபொழி லிள மயிலால வெண்ணிறத் தருவிகடி ண்ணென வீழும்
எரிவளரினமணி புனமணி சார லிடைச் சுரமேவிய
விவர் வணமென்னே – திருஞா- 78-1
போன்ற இவரது பாடலைக் காண ஏற்படுகிறது. அரங்கமாகக் காட்டைக் கொண்டிருந்தவர் என்பது இப்பெயர்க் காரணத்தை யுணர்த்தும் நிலையில் அமைகிறது. சேக்கிழாரும் இவ்வூரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார் ( பெரிய 34–1125, 1126 ).
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமு நல்
லிடைக் குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம் வேட்கள நெல்லிக்கா
கோலக்கா வானைக்கா வியன் கோடிகா
கள்ளார்ந்த கொற்றையானின் றவாறுங்
குளங்களங்காவென அனைத்தும் கூறுவோமே.

இடைச்சுரம்

தேவாரத் திருத்தலங்கள்

இடைப்பள்ளி

ஞானசம்பந்தர், வெள்ளச் சடையான் விரும்பும் இடைப் பள்ளி ( ஞான-1-75-4) என இத்தலம் பற்றிக் குறிப்பிடுகின்றார். பிற எண்ணங்கள் தெளிவுறவில்லை. இரண்டு ஊர்களுக்கு இடைப்பட்ட ஊராக இருக்கலாம்.

இடைமருது

தேவாரத் திருத்தலங்கள்

இடைமருதூர்

திருவிடை மருதூர் எனச் சுட்டப்படும் இவ்வூர், இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் தேவாரம் பாடப்பட்ட சிறப்புடையது. மருதமரங்கள் காரணமாகப் பெயர் பெற்ற ஊர். இக்கோயில் தலமரமும் மருதமரமே. ஸ்ரீசைலம் – மல்லிகார் ஜூனம். நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள தாமிரவருணி ஆற்றங்கரையில் திருப்புடார்ஜீனம் உள்ளது. மத்திய அர்ஜீனம் இடைமருது என்ற எண்ணத் துடன், சிவபெருமானுடன் இத்தலத்தின் தொடர்பு பற்றிய எண்ணம் மேலும் பிறவும் அமைகின்றன. இவ்வெண்ணங் களை நோக்க, மருத மரம் அடிப்படையில் பெயர் பெற்ற ஊர் பல இருந்தமையும் அவற்றைக் குறிப்பிட்டுக் காட்டும் பொருட்டு அவற்றை இடம் நோக்கி குறித்தனர் என்பதும் புலனாகும். மேலும் மருதூர் என்றே முதலில் வழங்கிய பெயர் பின்னர் மேலும் விளக்கத்திற்காக அடைசேர்க்கப்பட்டு இடை மருதூர் என்று ஆகி, பின்னர் தலச்சிறப்பு காரணமாக திருவிடை மருதூர் என்றாயிற்று என்பதும் தெள்ளிதின் விளங்கும். இன்றும் ஊரைச் சுற்றிலும் மருத மரங்கள் சூழப்பெற்ற இயற்கை அமைப்பினையுடையது என்ற எண்ணம் அங்கு மருத மரச் செழிப்பை உணர வல்லதாக அமைகிறது. காவிரியின் தென்கரைத் தலமாகிய இவ்வூரை இன்று திருவிடமருதூர் என் ரயில்வே காரர்கள் குறித்திருப்பதை நோக்க, இப்பெயர் இன்று வழங்கும் வழக்கு புரிகிறது. மக்கள் எளிமை கருதி திருவிடை மருதூர் என்பதற்குப் பதில் திருவிடமருதூர் என்று சுட்டும் நிலையே இதற்குக் காரணமாகும். 1.சேக்கிழார் வழியில் சிவத்தலங்கள் – பக் -42 4. 2. சிவ பெருமானுக்கு விருப்பமான மருத மரத்துடன் கூடிய மூன்று தலங்கள் தென்னாட்டில் உள்ளன என்றும், அனவ வடக்கே சிருட்டிணை ஆற்றின் கரையில் இருப்பது “ஸ்ரீமல்லிகார்ச்சுனம் தெற்கே தாமிரபருணி ஆற்றின் கரையில் உள்ள திருப்புடை மருதூர்” ( புடார்ச்சனம் ) அம்பா சமுத்திரத்தின் அருகேயுள்ளது. இவ்விரண்டின் இடையில் இருப்பதால், இடைமருதூர் எனப்பட்டு திரு எனும் அடைமொழி சேர்க்கப்பட்டு இப்பெயர் பெற்றது.தஞ்சாவூர் மாவட்ட ஊர்ப்பெயர்கள் – பக் -47 மருதமலர்கள் நிறைந்த சோலை நடுவே இறைவன் தோன்றி உரோமச முனிவருக்கு ஜோதிர்லிங்கமாகக் காட்சி கொடுத்ததால் இடைமருதூர் எனப்பெயர் பெற்றது என்பர். வேங்கடம் முதல் பொன்னியின் கரையிலே பக் -263 குமரி — 3. தஞ்சாவூர் மாவட்ட ஊர்ப்பெயர்கள் – பக்.47,48. அரசியல் நிலையில் இவ்வூருக்கு வீரசோழபுரம் என்ற பெயர் இருந்தது எனத் தெரிகிறது எனினும் இன்றில்லை. மாசில் வீணை மாலைமதியம் போன்றவற்றின் தன்மையை ஒத்தது ஈசன் எந்தை இணையடி நீழல் என்று பாடிய அப்பர், அவன் எவ்வாறு இனிமையுடையவன் என்பதையும்,
கனியினும் கட்டிப்பட்ட கரும்பினும்
பனிமலர் குழல் பாவை நல்லாரினும்
தனிமுடி கவித்து ஆழும் அரசினும்
இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதன்
எனப்பாடும் முறை இவ்விறைச் சிறப்பை யுணர்த்தவல்லது. காவிரியின் அருகில் இருக்கும் நிலையை,
எறிபுனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப்பொன்னி
இடைமருதைச் சென்றெய்தி என்ற சேக்கிழார் வாக்கு (திருஞா 192) உணர்த்துகிறது. திருவிடை மருதூர் மணிக் கோவையில் பட்டினத்தார் இவ்விறைச் சிறப்பைத் தருகின்றார் (பதினோராய் -28 ). மருதிடம் கொண்ட ஒரு தனிக் கடவுளாக இவர் அமைவதை இயம்புகின்றார் ( 70 ). கருவூர்த் தேவர் பாடலும் இதற்கு உண்டு. பல சிற்றிலக்கியங்களும் இக்கோயிற் தொடர்பாக எழுந்துள்ளன. அனைத்தும் இவ்விறைச் சிறப்புடன், ஊர்ச் சிறப்பையும் இயம்ப வல்லனவாக அமைகின்றன. இச்செல்வாக்கினை. அரசர்களும் பல பணிகள் செய்திருப்பதன் மூலம் தெரிய வருகின்றோம்,

இடையாறு

சங்க கால ஊர்கள்

இடையாறு

இடையாறு என்னும்‌ இவ்வூர்‌ தென்‌ ஆர்க்காடு மாவட்டத்‌தில்‌ திருக்கோயிலரர்‌ வட்டத்தில்‌ உள்ளது. இப்பொழுது இடையார்‌ என வழங்கப்‌ பெறுகிறது. ஊர்‌ அமைப்பால்‌ இடை என்ற அடைமொழியுடன்‌ வழங்கும்‌ ஊர்ப்பெயர்களில்‌ இடையாறு என்ப தும்‌ ஒன்று. கி.பி. ஒன்பதாம்‌ நூற்றாண்டைச்சேர்ந்த பராந்தக வீரநாராயணனின்‌ தளவாய்ப்புரச்‌ செப்பேட்டிலும்‌ “இடையாறு” என்றே வழங்கி வந்துள்ளது. இதற்கும்‌ பிற்காலத்தில் தான்‌ இடையார்‌ என வழங்க ஆரம்பித்திருக்க வேண்டும்‌.
“செல்குடி நிறுத்த பெரும்பெயர்க்‌ கரிகால்‌
வெல்போர்ச்‌ சோழன்‌ இடையாற்று அன்ன
நல்‌ இசை வெறுக்கை தருமார்‌…” (அகம்‌, 141722 24)

இடையாறு

தேவாரத் திருத்தலங்கள்

இந்தளூர்

திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இடம், இன்றைய சோழ நாட்டைச் சார்ந்தது. மாயூரம் நகரின் வடக்கு முனை யில் உள்ளது இத்திவ்விய தேசம் என்ற குறிப்பு அமைகிறது. எனவே தஞ்சாவூர் மாவட்டம் சார்ந்தது என்பது தெரிகிறது. இவ்வூர்ப் பெயருக்கு விளக்கம் சொல்வோர், இந்திரன் சாப விமோசனம் ஆனதால் ஊருக்கு இந்தளூர் எனப்பெயர் உண்டாயிற்று எனச் சுட்டுகின்றனர். “மயிலாடுதுறை என்ற ஊரின் அருகேயுள்ள இவ்வூர் திருமால் கோயில். சிறப்பு காரணமாக புராணக்கதை தொடர்பாக இப்பெயரால் செல்வாக்கு பெற்றதா அல்லது,
“நாடுதும் வாநெஞ்சமே ! நாராயணன் பதிகள்
கூடுதும் வா மெய்யடியார் கூட்டங்கள் – சூடுதும் வா
வீதியிந்தளத் தகிலின் வீசு புகை வாசம் எழும்
ஆதியிந்தளூரான் அடி”
என்ற பாடல் கருத்து தரும் இந்தளப் புகை நிரம்பிய அடி என்று குறிக்கு மாற்றான் இந்தள மரங்கள் நிரம்பிய காடு என்ற நிலையில் இந்தளூர் எனச் சுட்டப்பட்டு, திருமால் கோயில் சிறப்புடன், புராணக் கதையை இதனுடன் இணைத்து விட்டனரா என்று நோக்கின், தாவரப்பெயர் காரணமாக பெயர் தோன்றியிருக்கக்கூடும் என்பதே பொருத்தமாக அமைகிறது. புராணக்கதை சார்பாக இங்குள்ள குளத்தை இந்து புட்கரணி என்று அழைக்கின்றனர். மேலும் வாசனை மரம் மிகுந்த இடம் என்பதற்கு ஏற்றாற் போன்று. சுகந்தாரணிய க்ஷேத்திரம் என்ற வடமொழிப் பெயரும் அரணாகின்றது. எனினும் இதற்கும் புராணக் கதையையே சுட்டுகின்றனர்..

இந்திரநீலப் பருப்பதம்

தேவாரத் திருத்தலங்கள்

இன்னம்பர்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த ஊர் இன்னம்பர். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஊர் குறித்து சம்பந்தர், அப்பர் பாடல்கள் அமைகின்றன. இன்று இன்னம்பர் என்றே இவ்வூர் அழைக்கப்படுகிறது. அம்பர் என்ற பிற ஊர்ப் பெயரினின்றும் தனித்தறிய இன்’ என்ற அடையைச் சேர்த்தனர் எனலாம். சம்பந்தர் அப்பர் பாடல் பெற்ற தலம். சேக்கிழாரும் தவிர சுந்தரரும் இவ்வூரைக் குறிப்பிடுகின்றார் இப்பாடல்களில் பெரும்பாலும் இன்னம்பர் ஈசர் புகழ்பாடுதல் இருக்கின்றதே தவிர ஞானசம்பந்தரின் ஒரு சில பாடல்களிலேயே இன்னம் பரை புகழும் நிலையைக் காண்கின்றோம். இப் புகழ்ச்சியும் ஒரு சில நிலையிலேயே அமைகிறது..
எண்டிசைக்கும் புகழ் இன்னம்பர் – 353-1
இடி குரல் இசைமுரல் இன்னம்பர் ( 353-4 )
எழி றிகழும் பொழில் இன்னம்பர் – 353-7
ஏத்தரும் புகழணி இன்னம்பர் 353-8
ஏரமர் பொழிலணி யின்னம்பர் 353-10
இவை பொழில் சூழ்ந்த செழிப்பான இடம் என்ற ஒரே ஒரு சிறப்பையே காட்டுகின்றன. நம் தமிழ் நாட்டில், அம்பர். இன்னம்பர் நல்லம்பர் என்ற ஊர்கள் இருத்தலைப் பலர், அறிந்திருத்தல் கூடும் எனக் கூறும் அறிஞர் கருத்தில் பல ஊர்கள் இருப்பதை அறிகின்ற போது அப்பு – நீர் இதனின்றும் அம்பர் என்ற சொல் பிறந்திருக்குமோ எனத் தோன்றுகிறது.

இரணிய முட்டம்

சங்க கால ஊர்கள்

இரத்தின தீவம்‌

இரத்தின தீவம்‌ என்பது இலங்கையையே குறிப்பதாகத்‌ தெரிகிறது. மணிபல்லவத்திற்கருகில்‌ இரத்தின தீவம்‌ இருப்பதாகவும்‌, இரத்தின தீவத்தில்‌ சமந்தம்‌ என்ற மலை இருப்பதாகவும்‌, சாது சக்கரன்‌ என்பவன்‌ இரத்தின தீவம்‌ சென்று தருமசக்கரம்‌ உருட்டி வந்துள்ளதாகவும்‌ மணிமேகலை கூறுகிறது. சமந்தம்‌ என்பது இலங்கையிலுள்ள “ஆடம்ஸ்பீக்‌” என்று ஆங்கிலத்தில்‌ வழங்கும்‌ மலையையே குறிக்கும்‌ என்ற கருத்துப்‌ பொருத்தமாகத்‌ தோன்றுகிறது.
“சாது சக்கரன்‌ மீவிசும்பு திரிவோன்‌
தெருமர லொழித்தாங்‌ கிரத்தினத்‌ தீவத்துத்‌
தருமசக்கரம்‌ உருட்டினன்‌ வருவோன்‌” (மணிமே (10: 24 29)
இலங்கைத்‌ தீவின்‌ மேன்மாகாணத்தில்‌ தென்கீழ்ப்‌ பிரிவில்‌ இரத்தினபுரி என்ற ஓரிடமும்‌, சிலராற்‌ சமந்த கூடமென்றும்‌ சிலராற்‌ சமனெலைவென்றும்‌ சொல்லப்‌ பட்டுள்ள மலையொன்றும்‌ உள்ளன என்று யாழ்ப்‌ பாணம்‌ வட்டுக்கோட்டை. வே. சதாசிவம்‌ பிள்ளை யென்பவரால்‌ கி.பி, 1884இல்‌ பதிக்கப்பட்டுள்ள இலங்கை பூமி சாஸ்திர சங்கரகமென்னும்‌ புத்தகத்தால்‌ தெரிகின்றன. மணிபல்லவம்‌ காவிரிபூம்பட்டினத்திற்குத்‌ தெற்கே ஆறைந்து யோசனை தூரத்துள்ளதென்றும்‌ அதன்‌ அயலிலுள்ளது இரத்தின தீவம்‌ என்றும்‌ முன்பு கூறியதற்கு “ஆடம்ஸ்பிக்‌” காவிரிப்பூம்பட்டினத்திற்குத்‌ தெற்கே சற்றேறக்குறைய முப்பது காத தூரத்தில்‌ இருத்தலும்‌, அம்மலை பண்டைகாலத்துச்‌ சமந்த மென்றும்‌ சமனொளியென்றும்‌ கூறப்பட்டு வந்தது என்பதற்கு இக்காலத்து அது “சமந்தகூடம்‌” “சமனெலை” என்று கூறப்படுதலும்‌, அம்மலை இரத்தின தீவத்துள்ள தென்பதற்கு அதனைச்‌ சார்ந்த ஓரிடம்‌ ‘இரத்தினபுரி’ என்று பெயர்‌ பெற்றிருத்தலும்‌, சமனொளியென்பது இலங்கா தீவத்து உள்ளதென்பதற்கு அஃது இலங்கைத்‌ தீவில்‌ இருத்தலும்‌ சான்றாதல்‌ அறிக. (மணிமேகலை ௨.வே.சா. அடிக்குறிப்பு பக்‌, 98 பதிப்பு 1898).
“தீவதிலகை செவ்வன முரைக்கும்‌
ஈங்கித னயலகத்து இரத்தின தீவத்து
ஓங்குயர்‌ சமந்தத்துச்சி மீமிசை” (௸.11:20 22)

இரத்தினபுரம்

காந்தார நாட்டிலுள்ள ஒரு நகரம்‌ என்று மணிமேகலை கூறுகிறது.
“கண்டார்‌ புகழுங்‌ கலக்கமில்‌ சிறப்பிற்‌
காந்தாரமென்னு மாய்நீத நாட்டகத்து
ஈண்டிய பல்புகழ்‌ இரத்தினபுரத்துள்‌” (பெருங்‌. 3:6;190 192)

இராசகிரியம்‌

மகத நாட்டின்‌ தலைநகர்‌. இராசகரி எனவும்‌ இது வழங்கும்‌. புகழ்பெற்ற மிகப்பழமையானதொரு நகரம்‌. பலவகை நுகர்ச்சி களையுடையமையாலும்‌ அச்சத்தை விளைவித்தலாலும்‌ பவண லோகத்தையும்‌, செல்வ மிகுதியால்‌ அமராவதியையும்‌ ஒப்பது. இதன்‌ புறத்தே யவனச்‌ சேரிகள்‌ நூறும்‌, எறிபடைப்பாடிகள்‌ நூற்று அறுபதும்‌, தமிழ் வீரார்களின்‌ சேரிகள்‌ ஆயிரமும்‌,கொல்லர்‌ சேரிகள்‌ பலவும்‌, மிழலைச்‌ சேரிகள்‌ பலவும்‌ இருந்தன. உதயணன்‌ சிலநாள்‌ இங்கே துங்கி இருந்தான்‌.
“அமராபதியும்‌ நிகர்தனக்கின்‌ றித்‌
துன்ப நீக்குந்‌ தொழிலிற்றாகி
இன்பங்கலந்த இராசகிரியம்‌” (பெருங்‌,3:3:112 114)

இராமனதீச்சரம்(திருக்கண்ணபுரம்)

தேவாரத் திருத்தலங்கள்

இராமனதீச்சுரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர். இராமன் சிவனை வழிபட்டமை காரணமாக உண்டாக்கிய பெயர் இராமனதீச்சரம். இன்று இராமேச்சுரம் என்று வழங்கப்படுகிறது. இராமனது கதைபற்றிய சில செய்திகளைச் சங்க இலக்கியத்தில் காணினும் இவ்வூர் பற்றிய எண்ணம் அவண் இல்லை. எனினும் கம்பராமாயணத்திற்கு முன்னரேயே இவ்வூர், தன் கோயிற் சிறப்பால் பெருமை பெற்று விட்டது என்பதனை, இவ்வூர் பற்றிய இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன. நற்றொண்டருடன் நாளும் போற்றிச் செல்வாராகிய ஞானசம்பந்தர்,
விண்ணவரைச் செற்றுகந்தான், இலங்கை செற்ற மிக்க
பெரும் பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணிய பொற் சிலைத் தடக்கை இராமன் செய்த
திருவிராமேச்சுரத்தைச் சென்று சேர்ந்தார்
கோயில் எனத் தெளிவாகச் சேக்கிழார் சுட்டும் தன்மையிலும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற பல சிவனடியார் பாடல் பெற்ற தன்மையிலும் இதன் பழம்பெருமை விளக்கம் பெறுகிறது. மேலும் இதன் கடற்கரை சார்ந்த நிலையை அந்தண் கானல் இடுதிரை இராமேச்சுரம் என்ற அடி குறிப்பிடுகிறது. (திருநா – 285 – 8 )

இராமேச்சரம்

தேவாரத் திருத்தலங்கள்

இருக்கு வேளூர்

திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெருங்குடி நெருங்கிப்
பெருக்கு வடவெள்ளாற்றுத் தென் கரைப்பால் பிறங்கு பொழில்
வருக்கை நெடுஞ்சுளை பொழிதேன் மடு நிறைத்து வயல் விளைக்கும்
இருக்கு வேளூர் என்பது இவ்வுலகில் விளங்குபதி
பெரிய புராணம் கணம்புல்ல நாயனாரின் ஊர்பற்றிய விளக்கத்தை அளிக்கிறது ( பா.1). வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்த ஊர் என்பது இப்பாடலில் விளக்கம் பெறுகிறது. பெருங்குடிகள் கெழுமிய ஊர் என்ற நிலையில் பழமை பொருந்திய ஊர் எனவும் கொள்ளலாம்.

இருந்தையூர்‌

இறைவன்‌ அடியார்களுக்குக்‌ காட்சி அளிக்கும்‌ திருக்கோலங்‌களால்‌ சில ஊர்கள்‌ பெயா்‌ பெற்றுள்ளன. சென்னைக்கும்‌ அரக்கோணத்திற்கும்‌ இடையில்‌ “நின்றவூர்‌” என்னும்‌ ஊர்‌ உள்ளது. அங்கு திருமால்‌ நின்ற கோலத்தில்‌ காட்சி அளிக்கின்றார்‌. அதனால்‌ அவ்வூர்‌ நின்றவூர்‌ எனப்‌ பெயா்‌ பெற்றது, பாண்டிநாட்டில்‌ வைகைக்‌ கரையில்‌ திருமால்‌ இருந்தருளும்‌ கோலத்தைப்‌ பரிபாடல்‌ கூறுகிறது. இவ்வாறு காட்சியளித்த இடம்‌ “இருந்தவளம்‌” எனப்பெற்றது. சிலப்பதிகாரத்தில்‌ துன்பமாலையில்‌ (அடி, 2 5) மாதரி குரவைக்‌ கூத்து ஆடிய பின்னா்‌ வையைக்‌ கரையிலிருந்த நெடுமாலின்‌ கோவிலுக்கு வழிபடச்‌ சென்றதாகக்‌ கூறப்படுகிறது. “வையை நெடுமால்‌ ஸ்ரீ இருந்தவளம்‌ உடையார்‌” என்று அரும்பத உரையாசிரியர்‌ குறித்துள்ளார்‌. இருந்தவளம்‌ என்பதன்‌ குறுக்கமே இருந்தையென்பது. பரி பாடலில்‌ இடம்பெற்ற ஊரும்‌ இதுவே. பின்னர்‌ நாளடைவில்‌ இருந்தையூர்‌ ஆகியிருக்க வேண்டும்‌, மாதரி வையைக்‌ கரையிலிருந்த நெடுமாலை வழிபடச்‌ சென்றதாகக்‌ கூறப்பட்டுள்ளதால்‌, அந்நெடுமால்‌ கோவில்‌ மதுரைக்கு அண்மையில்‌ இருந்ததாக வேண்டும்‌. திருமால்‌ கிடந்த கோலத்தில்‌ காட்சி அளிக்கும்‌ கோயிலாகக்‌ கூடலழகர்‌ கோயில்‌ இன்றைய மதுரையில்‌ இருக்கிறது. மதுரையில்‌ தெற்கு மாசி வீதியும்‌ மேலை மா? வீதியும்‌ கூடுகின்ற இடத்‌திற்கு அருகில்‌ கூடல்‌ அழகர்‌ கோயில்‌ இருக்கிறது. ஆகவே அந்தப்பகுதியே ‘பரிபாடலில்‌ கூறப்பெற்ற இருந்தையூர்‌ எனக்‌ கருத வேண்டியுள்ளது. இன்று இவ்வூர்ப்பெயர்‌ மறைந்து, தற்‌கால மதுரையில்‌ ஒரு பகுதியாகவே திகழ்கிறது. இருந்தையூரில்‌ கொற்றன்‌ என்ற சங்ககாலப்‌ புலவர்‌ ஒருவர்‌ இருந்துள்ளார்‌. அவர்‌ இருந்தையூர்க்‌ கொற்றன்‌ எனப்பெற்றார்‌. குறுந்தொகை 335 ஆம்‌ பாடல்‌ அவா்‌ பாடியது. தென்‌ ஆர்காடு மாவட்டம்‌ திருக்‌ கோவலூர்‌ வட்டத்திலும்‌ இன்று இருந்தை என்று ஓர்‌ ஊர்‌ உள்ளது.
“மருந்தரடும்‌ இம்நீர்‌ மவிதுறைமேய
இருந்தையூர்‌ அமர்ந்த செல்வ”. (பரி. திரட்டு 1:4 5)
“ஆயர்‌ முதுமக ளாடிய சாயலாள்‌
பூவும்‌ புகையும்‌ புனைசாந்துங்‌ கண்ணியும்‌
நீடுநீர்‌ வையை நெடுமா லடியேத்தத்‌
துரவித்‌ துறைபடி.யப்‌ போயினாள்‌” (சிலப்‌. 1812 5)

இருப்பு

இவ்விடம் இருப்பு என்ற பொருளில் வழங்கியிருக்கிறது.
மதுரை மாவட்டத்திலிருக்கும் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஒரு ஊர் பெயர் கச்சிராயிருப்பு.
ஊர்களைக் குறித்திடும் “இருக்கை” என்ற வடிவம் 11 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்திருக்கிறது. கரை இருக்கை, காஞை இருக்கை போன்ற ஊர்கள் அக்காலத்தில் இருந்திருக்கின்றன. இவ்வடிவமே இருப்பு என்று ஆகியிருக்கலாம்.
இதைத் தவிர குடியிருப்பு என்ற ஒரு கூட்டு வடிவமும் வழங்கி வருகின்றது. குடி, இருப்பு எனும் ஒரே பொருளைத்தரும் இரு சொற்கள் இணைந்த ஒரு பொருட் பன்மொழி குடியிருப்பு ஆகும். குடிகளின் இருப்பிடம் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். காலனி (Colony) என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாகவும் இவ்வடிவம் வழங்குகின்றது.
எடு: பூலாங்குடியிருப்பு
(திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் செங்கோட்டை (நகரம்) அருகில் உள்ள ஒரு ஊர் பெயர் பூலாங்குடியிருப்பு)

இருப்பை

நற்றிணை, ஐங்குறு நூறு ஆகிய சங்க இலக்கியங்கள்‌ மூலம்‌ நாம்‌ அறியும்‌ ஊர்பெயர்களுள்‌. ஒன்று இருப்பை என்பது, இலுப்பை மரங்கள்‌ அடர்ந்த பகுதியில்‌,அமைந்த குடியிருப்பு ஊரா இருப்பை எனப்‌ பெயர்‌ பெற்றிருக்கும்‌. அகப்பொருள்‌ பற்றிக்‌ கூறும்‌ அந்த இலக்கியங்களில்‌ தலைவியின்‌ நலத்திற்கு உவமையாகவே இந்த ஊர்ப்பெயர்‌ இடம்‌ பெற்றுள்ளது. விராஅன்‌ என்ற வள்ளலுக்குரியது இருப்பை எனத்தெரிகிறது.
“தெவ்வர்த்‌ தேய்த்த செவ்வேல்‌ வயவன்‌
மலிபுனல்‌ வாயில்‌ இருப்பை அன்ன..என்‌
ஒலி பல்‌ கூந்தல்‌ நலம்‌ பெறப்‌ புனைந்த.” (நற்‌. 260;6 8)
“விண்டு அன்ன வெண்ணெற்‌ போர்வின்‌
கைவண்‌ விராஅன்‌, இருப்பை அன்ன
இவள்‌ அணங்‌ குற்றனை போறி”?, (ஐங்‌. 58: 1 3)

இரும்பிலி

வட ஆற்காடு மாவட்டம் வந்தவாசி வட்டத்திலும், தென் ஆற்காடு
மாவட்டம் செஞ்சி வட்டத்திலும், செங்கற்பட்டு மாவட்டம் செங்கற்பட்டு
வட்டத்திலும், மதுராந்தகம் வட்டத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம்
வட்டத்திலும் இவ்வூர்ப்பெயர் இருப்பதை அறியமுடிகிறது.  சுவடியில் “தென் ஆற்காடு ஜில்லா செஞ்சி
தாலுகாவைச் சேர்ந்த இரும்பிலி கிராமம்” (1277-சா) என்றிருப்பதைக்
காணும்போது, இங்குக் குறிப்பிட்ட ஊர் செஞ்சி வட்டத்தைச் சேர்ந்ததென்பது வௌ¢ளிடை.

இரும்புதல்

தமது திருத்தாண்டகம் திருநாவுக்கரசர், இரும்புதலார் இரும்பூளையுள்ளார் என இறைவன் உறையுமிடம் சுட்டுகின்றார். இரும்புதல் என்ற தலம் பற்றி தனது ஆய்வில், இரும்புதல் என்பது தஞ்சாவூர் ஜில்லா பாவநாசந் தாலுக்காவில் இரும்புதலை எனவழங்கும் ஊரே என்பது அவ்வூர்ச் சிவாலய லயத்தே முதல் இராஜராஜ சோழன் முதலியோர் காலத்து அமைந்த சாஸனங்களிலே,
மனுகுல சூளாமணிச் சதுர்வேதி மங்கலத்துத்
திரு விரும்புதலுடைய மஹாதேவர்
எனவருந் தொடரால் தெளிவாகின்றது என்று எழுதிச் செல்கின்றார் இராகவையங்கார்.. இரும்புதல் என்ற சொல்லை நோக்க, அடர்ந்த புதற்பகுதியாக இருந்தவிடம், அங்கு சிவன் கோயில் அமைய, குடியிருப்பாக மாறியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

இரும்பூளை

பூளை பூக்களின் மிகுதியால் பெயர்பெற்ற இடம் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமையும் இவ்வூர் சம்பந்தர் பாடல் பெற்று அமைகிறது. சேக்கிழாரும் ( பெரிய 34 – 399 ) நாவுக்கரசரும் இவ்வூரைச் சுட்டுகின்றனர் ( 265 – 6 ). இன்று இவ்வூர் ஆலங்குடி என்று அழைக்கப்படுகிறது. பூளை ச் செடிகளுடன் ஆலமும் நிறைந்திருக்கலாம் என்ற நிலையில் பின்னர் ஆலங்குடி செல்வாக்கு பெற்று திகழ்ந்திருக்கலாம் அல்லது இறையிருந்த கோயில் இரும்பூளை என வழங்கப்பட்டு மக்கள் வசித்த பகுதி ஆலங்குடி என்றே வழங்கப்பட் டிருத்தலும் கூடும். புராணக் கதையும் தொடர்பாக அமைகிறது. கிழக்கே பூளைவள ஆறு உள்ளது என்ற நிலையில் ஆற்றின் பெயரும் பூளை பூக்கள் மிகுதியை இயம்புகிறது.

இரும்பூளை(ஆலங்குடி வங்கனார் சங்ககாலப்புலவர்)

தேவாரத் திருத்தலங்கள்

இரும்பை

சங்க கால ஊர்கள்

இரும்பை மாகாளம்

தேவாரத் திருத்தலங்கள்

இரும்பை மாகாளம்

இன்று தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்த இவ்வூர் முன்னைய பெயரிலேயே இன்று வரை வழங்குகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம். மாகாளர் வழிபட்ட தலம் என இதனை இன்று சுட்டினும், சம்பந்தர் பாடல் மேலும் சில விளக்கங்களைத் தருகிறது. இவர் தம் 253 ஆம் பதிகத்தில் 11 பாடல்களில் இத்தலத்து இறைவனைப் பூசிக்கின்றார். எனினும் அனைத்துப் பாடலிலும் இரும்பைதனுள் காணப்படும் மாகாளமே என்றே விளித்துப்பாடுகின்றார். சான்றாக,
எண்டிசையும் புகழ் போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே -1
இட்டமாக இருக்கும் இடம் போலிரும்பை தனுள்
வட்டந் சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே – 8
குரவமாரும் பொழிற் குயில்கள் சேரும் இரும்பை தனுள்
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே – 9
என்பதைக் காட்டலாம். இப்பாடலைப் பயிலும் இரும்பை ஊர்ப்பெயர் என்பதும். மாகாளம் (இறைவன் மாகாளேச்சுவரர் என்பது இறைப்பெயர் அல்லது இறைவன் வீற்றிருக்கும் இடம் குறித்த பெயராக அமைந்து இன்று இறைச் சிறப்பு காரணமாகச் செல்வாக்கு காரணமாக ) இரும்பை மாகாளம் என ஊர் வழங்கப்படத் தொடங்கியிருக்கலாம் எனச் சுட்டலாம். போது என்ற இரும்மை என்ற சொல்லை ஆராயும் போது இருப்பை என்பதன் திரிவுவடிவமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இருப்பை என்பதற்கு இலுப்பை இன்னொரு பெயரும் உண்டு ; இலுப்பை – இலுப்பை மரத்தையும், நெல்வகையையும் குறிக்கும் நிலை ( தமிழ் லெக்ஸிகன் Vol I Part I பக். 331 ) இதுவும் தாவர அடிப்படையில் பெற்ற பெயராக இருக்கலாமோ எண்ணத்தைத் தருகிறது. எனினும் சம்பந்தர் பாடல், என்ற
இடமெழில் கொள் சோலை யிரும்பை ( 254 – 3 )
இரும்பை தனுள்
மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்த அழகாய மாகாளம் ( 254-4 )
குரவமாரும் பொழிற் குயில்கள் சேரும் இரும்பை ( 254-10 )
என்று. சோலைகள் சூழ்ந்த இரும்பையின் வளத்தைச் சுட்டு மாற்றான் இப்பகுதி இலுப்பை மரங்களால் நெருங்கியதாக இருந்திருக்க வாய்ப்பு அமைகிறது. மாகாளன் என்று நோக்க, சிவகணத்தலைவரில் ஒருவன் என தமிழ் லெக்ஸிகன் ( Vol v Part 1 – பக். 3143 ) குறிக்கின்றது. எனவே சிவன் தொடர்பாக மாகாளம் என்ற இச்சொல் இங்கு அமைந்து இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

இலங்காதீவம்

இலங்கையே இலங்காதீவம்‌ எனக்‌ குறிக்கப்‌ பெற்றுள்ளது. இத்தீவு இந்தியாவிற்குத்‌ தெற்கில்‌ உள்ளது. தென்பகுதிலிருந்து பாக்‌ ஜலசந்தியால்‌ பிரிக்கப்படுகிறது. இலங்கையைத்‌ தமிழர்‌ ஈழம்‌ என்கின்றனர்‌. கிரேக்கர்களும்‌ ரோமானியர்களும்‌ தாப்ரோபானெ (தாமிரபரணி) என்று குறித்‌தனர்‌. போர்ச்சுகீஸியர்கள்‌ சிங்களம்‌ என்பதைச்‌ சைலோன்‌ என்‌றழைத்தனர்‌. இதிலிருந்து சிலோன்‌ என்ற தற்காலப்‌ பெயா்‌ வழங்கியது. இந்தியாவுடன்‌ நீங்காத தொடர்புடையது இலங்கை, இலங்கை மன்னன்‌ முதலாம்‌ கயவாகு சேரன்‌ செங்குட்டுவனைச்‌ சந்தித்துள்ளான்‌. ஈழநாட்டில் தான்‌ சிறந்த மணிகள்‌ கிடைத்தனவென்றும்‌, மணிகள்‌ கிடைத்த இவையே மணிமேகலை மணிபல்லவம்‌ என்று அழைத்ததாகவும்‌ தெரிகறது.
“இலங்காதீவத்துச்‌ சமனொளியென்னும்‌
சிலம்பினையெய்தி வலங்‌ கொண்டு மீளும்‌
தரும சாரணர்‌ தங்கிய குணத்தோர்‌” (மணிமே. 28: (07 109)

இலங்கை

சங்க கால ஊர்கள்

இலம்பையங் கோட்டூர்

இப்பெயரிலேயே இன்று செங்கற்பட்டு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது இவ்வூர். சம்பந்தர் பாடல் பெற்றது இத்தலம். இவ்வூர் பற்றிய விளக்கம் தெரியவில்லையாயினும், சிறப்பான, செழிப்புடையதொரு என்பதனைச் சம்பந்தர் பாடல்கள் நிறுவுகின்றன. ஊர் இது
பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் – 76-1
இருமலர்த் தண் பொய்கை யிலம்பையங் கோட்டூர் -76-2
ஏலநாறும் பொழில் இலம்பையங் கோட்டூர் 76-3
புனமெலா மருவிகளிருவி சேர்முத்தம்
பொன்னொடு மணிகொழித் தீண்டிலந்தெங்கும்
இனமெலா மடைகரை யிலம்பையங் கோட்டூர் – 76-7
பண்முரன்னு அஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் 76-7
இவற்றை நோக்க பொழில் சூழ்ந்த தொரு ஊர் என்பது தெளிவு படுகிறது. இச்செழிப்பை கொண்டு, இவ்வூர்ப் பெயரைக் காணின் இலம்பை என்பதற்குத் தரித்திரம், துயர நிலை எனப் பெயர் காணும்போது, அழகிய ஊருக்கு அடையாக இது அமையாது எனத் தோன்றுகிறது. மேலும் ஊருக்குப் பெயர் வைக்கும் போது சிறந்த பெயரை மக்கள் மனம் நாடுமே ஒழிய, துன்பம் தரும் சொற்களால் பெயர் வைப்பர் எதிர்பார்க்க இயலாதது. எனவே இலம் பயம் என்பது மற்றொரு பொருளைத் தருவதாகவே கொள்ளவேண்டியுள்ளது. இலவமலர் என்பதனின் இடைக்குறையாக இலமலர் எனக் காண்கின்றோம். ( இலமல ரன்ன வஞ்செந் நூலின் – அகநா-142 ) எனவே இலவம் இலம் என அமைய வாய்ப்பு அமைகிறது. இந்நிலையில் இலம் பயம் என்பது இலவம் பயன் தரும் அழகிய வளைந்த ஊர் என இவ் வூரைச் சிந்திக்க ஓரளவுக்குப் பொருத்த முறுகிறது. இன்றைய நிலையில் இவ்வூரைக் குறிக்கும் போது இது. திருவிற் கோலம் என்னும் கூவத்திற்குப் பக்கத்தில் உள்ளது. கூவம் ஏரிக்கரை வழியே சென்று இத்தலத்தை அடையலாம். செம்மையான வழி இல்லை என்று கூறும் கருத்துடன் இவ்வூர்ப் பெயர் பொருத்த அமைகிறது. ஆற்றங்கரையில் அமைந்த ஊராகையால் ஆறு வளைந்து செல்லும் நிலை காரணமாக ஊரும் வளைந்து காணப்படும் எனவே ஆறும். பொழில்களும் இப்பொருளையே இவ்வூர்ப் பெயருக்குரிய காரணங்களாகத் தருகின்றன.

இலவந்திகைப்பள்ளி

சங்க கால ஊர்கள்

இலவந்திகைப்பள்ளி

பாண்டியன்‌ நன்மாறன்‌ இங்கே இலவந்திகைப்‌ பள்ளியில்‌ இறந்ததாகத்‌ தெரிகிறது. பாண்டியனுக்குரியதாகவும்‌, பாண்டி நாட்டதாகவும்‌. இவ்வூர்‌ இருந்திருக்கவேண்டும்‌ எனக்‌ கருத இடம்‌ உள்ளது. இலவந்திகை என்ற சொல்‌ வாவிசூழ்ந்த பொழிலைக்‌ குறிக்கும்‌. பள்ளி நகரமாக அமைய பொழில்‌ அமைந்த நகர மெனப்‌ பெயர்‌ பெற்றதெனக்‌ கொள்ளலாம்‌. பாண்டியன்‌ இலவந்திகைப்பள்ளித்‌ துஞ்சிய நன்மாறனைப்‌ புறநானூற்றில்‌ 55, 56, 57, 196, 198 ஆகிய பாடல்களில்‌ புலவா்‌ சிலர்‌ பாடியுள்ளனர்‌.

இலாவாணகம்‌

இலாவாணம்‌ என்றும்‌ இது வழங்கும்‌. இலாவாணகம்‌ உதயணனுக்குரிய பெரிய நகர்களுள்‌ ஒன்று. பகைவர்‌ வருதற்கு மிக அஞ்சும்‌ பேரரண்கள்‌ முதலியவற்றையும்‌ இடையே ஓர்‌ அரண்மனையையும்‌ உடையது. இதன்‌ அருகில்‌ வளமுள்ள ஒரு மலையுண்டு. உண்டாட்டுக்குரிய பலவகை மரங்கள்‌ கொடிகளையுடைய பூஞ்‌ சோலைகளும்‌, சுனை முதலிய நீர்நிலை களும்‌ படமாடம்‌ முதலியன அமைத்தற்குரிய இடங்களும்‌ இதன்‌ சாரலில்‌ இருந்தன. விரிசிகையின்‌ வேண்டு கோட்படி பலவகை மலர்களைக்‌ கண்ணி முதலியனவாகக்‌ கட்டி உதயணன்‌ சூடியது இச்சோலைகளுள்‌ ஒன்‌றிலே தான்‌ உதயணனால்‌ உருமண்ணுவாவிற்குக்‌ கொடுக்கப்பெற்ற சீவிதங்களுள்‌ இந்நகரமும்‌ ஒன்று.
“இருங்கடல்‌ வரைப்பினிசையொடு விளங்கிய
சுயந்தியம்‌ பதியும்‌ பயம்படு சாரல்‌ ;
இலாவாண கமும்நிலாவ நிறீஇ” (பெருங்‌ 9:20.22)
உஞ்சேனை.
உஞ்சேனை என்பது உச்சயினி நகரமே. இது அவந்தி என்றும்‌ உஞ்சை எனவும்‌ வழங்கும்‌. அவந்தி நாட்டிலுள்ளது. பிரச்‌ சோதனனின்‌ தலைநகர்‌,
“அமரர்‌ தலைவனை வணங்குவதும்‌ யாமெனச்‌
சிமையத்‌ திமையமும்‌ செழுநீர்க்‌ கங்கையும்‌
உஞ்சையம்‌ பதியும்‌ விஞ்சத்‌ தடவியும்‌” (சிலப்‌ 6:27 29)
“கொடிக்‌ கோசம்பிக்‌ கோமகனாகிய
வடித்தேர்த்தானை வத்தவன்தன்னை
வஞ்சஞ்‌ செய்துழி வான்தளை விடீஇய
உஞ்சையில்‌ தோன்றிய யூகி அந்தணன்‌
உருவுக்கொவ்வாஉறு நோய்‌ கண்டு” (மணிமே.15:61 65)
“நீங்கிய மன்னற்கு நிகழ்ந்தது கூறுவென்‌
சேராமன்னன்‌ உஞ்சேனை யம்பெரும்‌ பதிக்கு“ (பெருங்‌. 1:48;38 40)
கபில்புரம்‌.
கோவலனின்‌ முற்பிறப்பைப்‌ பற்றிக்‌ கூறும்பொழுது கபில புரம்‌ என்ற ஊர்‌ கூறப்பெற்றுள்ளது. குமரன்‌ என்ற மன்னனால்‌ ஆளப்பெற்றது. மணிமேகலையில்‌ இவ்வூர்‌ கபிலை எனக்‌ கூறப்பெற்றுள்ளது. கலிங்க நாட்டினது இவ்வூர்‌.
“கடிபொழி லுடுத்த கலிங்க நன்னாட்டு
வடிவேற்றடக்கை வசுவுங்‌ குமரனும்‌
தீம்புனற்‌ பழனச்‌ சிங்க புரத்தினும்‌
காம்பெழுகானக்‌ கபிலபுரத்தினும்‌
அரசாள்‌ செல்வத்து நிரைதார்‌ வேந்தர்‌” (சிலப்‌ 2:23:138 142)
“காசில்‌ பூம்பொழில்‌ கலிங்க நன்னாட்டுத்‌
தாயமன்னர்‌ வசுவுங்‌ குமரனும்‌
சிங்கபுரமும்‌ செழுநீர்க்‌ கபிலையும்‌
அங்காள்கின்றோ ரடற்செருவுறு நாள்‌” (மணிமே 26;15 18)

இளநகர்

தேவாரத் திருத்தலங்கள்

இளையாங்குடி

சேக்கிழார் இளையான் குடிமாற நாயனார் புராணத்தில் இப்பதி பற்றி குறிப்பிடுகின்றார்.
இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப்பதி மாறனார் ( 10-1 )
இளையாங்குடி என்றதொரு ஊரினை, குலோத்துங்கச் சோழர் கல்வெட்டும் சுட்டுகிறது. இவையிரண்டும் ஒரே ஊராக இருக்கலாம்.