ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ஆக்கூர் | இன்றும் ஆக்கூர் என்று வழங்கப்படும் இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. மாடக்கோயில் கொண்ட இத்தலம் சைவர் பலராலும் பாடல் பெற்ற சிறப்புடன் திகழ்கிறது. ( திருநா – 255-6, 272-3, 283-7, திருஞான 178. பெரிய -திருஞா-536, திருநா -248 ) இவர்களின் பாடல்கள், இவ்வூர் வளத் தையும், சிறப்பையும் அறியத் துணைபுரிகின்றன. அவனியில் கீர்த்தித்தென் ஆக்கூர் என நம்பியாண்டார் நம்பி, தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் ( 42 ) சிறப்புலி நாயனார் பிறந்த ஊர்பற்றி பேசும் போது குறிப்பிடுகின்றார். தேர் மன்னும் மணிவீதிகளையுடையது இவ்வூர் என்பது சேக்கிழார் கூற்று ( 27-248-4 ). மேலும் தான் தோன்றி மாடம் வழங்கப்படும் இக்கோயிலின் இறைவன் சுயம்புலிங்கமாகக் கருதப்படுகின்றார். இக்கோயிலின் தொன்மையினை, தொல் கோயில் ( பதி -178-2 ) என்று சுட்டும் ஞானசம்பந்தர் குறிப்பும் தருகின்றது. மேலும், என்று |
ஆக்கூர்த் | தேவாரத் திருத்தலங்கள் |
ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில் | தேவாரத் திருத்தலங்கள் |
ஆடானை | திருவாடானை என்று வழங்கப்படும் இவ்வூர் பாண்டிய நாட்டைச் சார்ந்து இராமநாதபுர மாவட்டத்தில் அமைகிறது. வருணனின் புதல்வர் துருவாச முனிவரை அவமதித்தமையின் ஆட்டுத் தலையும், யானை உடலும் அடையும்படி அவர் இட்ட சாபம் இத்தலத்தில் தீர்ந்தது. இறைவனுக்கு இதனால் ஆடானை நாதர் என்று பெயர். என்ற புராணக் கதை நம்பிக்கையில் இவ்வூர்ப் பெயர் எழுந்துள்ளது என்ற எண்ணம் முதலில் இறைப் பெயராக அமைந்த இப்பெயரை மக்கள் இவ்வூருக்கு வழங்கியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது. ( பதி 248 ) |
ஆடானை | தேவாரத் திருத்தலங்கள் |
ஆடுதுறை | ஆடுதுறை என்ற ஊர்ப்பெயர் மாசாத்தனார் என்ற சங்க காலப் புலவர் பெயரோடு சேர்த்துக் கூறப்பட்டுள்ள து. சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை, அவன் இறந்த பொழுது வருந்தி ஆடுதுறை மாசாத்தனார் (புறம், 227 பாடியுள்ளார். காவிரியாற்றின் வடக்கிலொன்றும், தெற்கி லொன்றும் வடவெள்ளாற்றங் கரையிலொன்றும் ஆக மூன்று ஊர்கள் ஆடுதுறை என்னும் பெயருடன் இருக்கின்றன. ஆறுகளில் மக்கள் இறங்கி நீராடுதற்கேற்ற இடமாகிய துறை என்னும்பெயரை, ஆற்றையடுத்துள்ள ஊர்கள் பெற்றிருப்பதற்கு ஆடுதுறை என்னும் ஊர்ப்பெயர் ஒரு சான்று. |
ஆதனூர் | நாவார் புகழ்த் தில்லை அம்பலத்தான் அருள் பெற்று நாளைப் |
ஆனைக்கா | தேவாரத் திருத்தலங்கள் |
ஆனைக்கா | காவிரிக் கரையில் காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் உள்ள தலம். ஸ்ரீரங்கம் பக்கத்தில் உள்ளது திருவானைக் காவல் என்ற பெயருடன் இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ளது. ஆனை + கா என்பதற்குப் பொருள் ஆனைகள் நிறைந்த சோலை என்பது. இப்பெயர் பின்னர் இங்குள்ள இறைச் சிறப்பும் கோயில் சிறப்பும் செல்வாக்கு பெற, பிறிதொரு பெயர்க் காரணத்தையும் கொள்கிறது. இங்கு முத்தி பெற்ற யானையின் ஞாபகார்த்த மாகவே இத்தலம் ஆனைக்கா ஆகிறது. சிலந்தி மறுப்பிறப்பில் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கிறது. அந்தப் பிறவியிலும் யானை மீது கொண்டு இருந்த பகையை மறக்காமல் யானைமீ. ஏற்இயலாதமாடக் கோயில்களாக எழுபது கட்டுகிறான். மேலும் இக்கோயில் தல மரமாகிய வெண் நாவல் காரணமாக தலத்தை ஜம்புகேஸ்வரம் என்றும் சுட்டுகின்றனர். ( ஐம்பு – நாவல் ) சம்பந்தர்சுந்தரர் பாடலும் இத்தலத்திற்கு உண்டு. மேலும் இங்குள்ள கோயிலின் பழமையைத் திருநாவுக்கரசரின் |
ஆப்பனூர் | ஆப்புடையார் கோயில் எனச் சுட்டப்படும் இவ்வூர் இன்று மதுரை மாவட்டத்தில் அமைகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் வைகையாற்றின் அண்மையில் உள்ளது என்ற குறிப்பு. புராணக்கதை அடிப்படையில் சிவன் பெயர் ஊர்ப்பெயராகி இருக்கிறது என்ற எண்ணத்தை உணர்த்துவதாக சோழாந்தகன் என்ற பாண்டியன் பொருட்டு ஓர் ஆப்பினிடத் தில் இறைவன் தோன்றிய தலம் என்ற கருத்து ” இதனை யுரைக்கிறது. சேக்கிழாரும் சம்பந்தர் அணி. ஆப்பனூர் அணைந்த செய்தியைப் ( 885 ) பாடுகின்றார். மதுரையின் ஒரு பகுதியாக இருந்தவிடம், கோயிலால் இன்று கட்டப்படுவது இதனின்றும் தெரிகிறது. உள்ளது. |
ஆப்பனூர்(இது மதுரையின் ஒரு பகுதியான செல்லூர்) | தேவாரத் திருத்தலங்கள் |
ஆப்பாடி | பாடி என்ற பொதுக் கூற்றுடன் முடியும் இவ்வூர் இன்று திருவாப்பாடி என்று அழைக்கப்படுகிறது. அப்பர் பாடல் பெற்றது இத்தலம். ஆப்பாடியார் என்று அப்பர் தம் பாடலுள் குறித்துச் செல்ல, ஐயடிகள் காடவர் கோனும் தம் பாடலில் ( ஷேத்திரத் திருவெண்பா -19) |
ஆப்பாடி(திருப்பனந்தாள் அருகில் மண்ணி ஆற்றங்கரையில் உள்ளது) | தேவாரத் திருத்தலங்கள் |
ஆமாத்தூர் | திருவாமாத்தூர் என்ற பெயரில் தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். விழுப்புரத்திற்கு மேற்கே நான்கு கல் தாலைவில் உள்ள இவ்வூர் பெயர்க் காரணத்திற்குப் புராணத்தைச் சுட்டுகின்றனர் முன்னோர். காமதேனு நந்தி பசுக்கள் எல்லாம் மற்ற விலங்குகளின் தாக்குதலை எதிர்க்க வேண்டி இறைவனைப் பல வருஷங்கள் தவம் கிடந்து கொம்பு பெற்றன என்று கூறும் தலபுராணம். அதனால் தான் இந்த தலத்துக்குத் தாயூர் என்றும் ஆமாத்தூர் என்றும் பெயர் வழங்கியிருக்கிறது. இதனையே கோமாதுருபுரம் எனப் புராணம் விவரித்துக் கூறுகிறது என்றும் கேள்விப்படுகின்றோம். உயிர் களுக்கு, பசுச்களுக்குத் தாயாக இறைவன் அருளும் தலம் என் கூற்றும் உண்டு. எனவே புராணக்கதைகளும் பல வழங்குகின்றதைப் பார்த்தால், இவ்வூர்ப் பெயருக்கு அவரவர் சமய விருப்பம் போன்று பெயர்க்காரணம் சுட்டுகின்றனரே தவிர, உண்மைக் காரணம் வேறாகத்தான் இருக்கவேண்டும் என்பதையுணர இயலுகிறது. ஆமா பசுக்கள் நிறைந்த இடம் என்ற நிலையிலும் இப்பெயர் வந்திருக்கலாம் ஆமா + ஊர் – ஆமாவூர் – ஆமாத் தூர்.தேவார மூவர்களாலும் பாடல் பெற்ற சிறப்புடையது இவ்வூர். இங்குள்ள சிவன் கோயில் பழமையும், சிறப்பும் பொருந்தியது என்பதனை அறியும்போது ஊரும் பழமை கொண்டது என்பதை உணர முடிகின்றது. |
ஆமாத்தூர் | தேவாரத் திருத்தலங்கள் |
ஆமூர் | சங்க கால ஊர்கள் |
ஆமூர் | சிறுபாணாற்றுப்படை, ஐங்குறு நூறு ,அகநானூறு, புறநானூறு ,ஆகிய சங்க இலக்கியங்கள் நமக்கு உணர்த்தும் ஊர்ப் பெயர்களுள் ஆமூர் என்பதும் ஒன்று. அழகிய குளிர்ந்த கிடங்கினையும், அரிய காவலையும், அகன்ற அகங்களையும். நிறைந்த அந்தணர்களையும் உடையது ஆமூர் என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. சோழரின் ஆமூர் அன்ன நலமுடையவள் தலைவி எனத் தலைவியின் நலம் பாராட்டுகிறது ஐங்குறு நூறு. கொடுமுடி என்னும் மன்னனால் பாதுகாக்கப் பெறுவதும் நெடுந் தொலைவிலும் விளங்கித் தோன்றுவதும் ஆகிய இறப்பினையுடையது ஆமூர் என்று அகநானூறு கூறுகிறது. இந்த ஆமூர் குறும்பொறை மலையின் கீழ்ப்பாலுள்ள பாலை நிலத்தது. கவுதமன் சாதேவனார் என்ற என்ற சங்க காலப் புலவர் இவ்வூரினர். ஆகவே ஆமூர்க் கவுதமன் சாதேவனார் எனப் பெயா் பெற்றார். ஆமூரைச் சேர்ந்த மல்லன் ஒருவனைச் சோழன் போர்வைக் கோப் பெருநற்கிள்ளி வென்ற பொழுது சாத்தந்தையார் என்ற புலவர் பாடியபாடல் ஒன்று புறநானூற்றில் இடம்பெற்றுள்ள து. “முக்காவனாட்டு ஆமூர் மல்லன்” என்ற கூற்று “ஆமூர்” முக்கா வனாட்டைச் சேர்ந்தது என்பதைத் தெரிவிக்கிறது. இன்றைய மாமல்லபுரம் இருக்கும் பகுதி அமூர் நாடாக இருந்திருக்க வேண்டும், வேலூரிலிருந்து கிடங்கலை நோக்கச் செல்லும் வழியில் ஆமூர் இருப்பதாகச் சிறுபாணாற்றுப் படையில் கூறப் பெற்றுள்ளது. ஆயினும் ஆமூர் என்னும் பெயர் கொண்ட ஊர் திண்டிவனம் வட்டத்தில் இல்லை. எனினும் வேலூருக்கு வட மேற்கில் ஏறத்தாழ நான்கரைமைல் தொலைவில் “கொண் டாமூர்” என்றும், அதற்கு வடமேற்கில் மூன்றரை மைல் தொலை வில் சிற்றாமூர் என்றும், அதற்கும் வடமேற்கில் மூன்று மைல் தொலைவில் “நல்லாமூர்’” என்றும் மூன்று ஊர்கள் உள்ளன. நல்லாமூருக்குச் சிறிது வடகிழக்கில் ஆறு மைல் தொலைவில் கிடங்கில் அமைந்துவன து. “ஆமூர்” என்று பெயருடன் ஊர் இல்லாமையாலும் சிறுபாணன் கூறியபடி இந்த நல்லாமூரே கிடங்கலுக்கு அண்மையில் இருப்பதாலும், அந்தப் பாணன் கூற்றுப்படி, வேலூருக்கும் இந்த நல்லாமூருக்கும் இடையில் மருதவளம் காணப்படுவதாலும் இந்த நல்லாமூரே சங்ககால ஆமூராய் இருந்திருக்கலாம். என்று கொள்வது பொருத்தமாகும். ஆமூர் முதலி என்ற ஒரு வள்ளல் இவ்வூரினா் என்றும், இவரைக்.காளமேகப் புலவர் பாடினார் என்றும், அவ்வாறு பாடும்பொழுது பாதி வெண்பா பாடிய உடனேயே அவ்வள்ளல் பரிசளித்தார் என்றும் ஒரு செய்தி கூறப் பெறுகிறது. |
ஆமூர் | சங்ககாலத்தில் இருந்தே தெரியவரும் ஊர்ப்பெயர்களுள் ஒன்று ஆமூர். வளம் பெண்ணையாற்று பெருகிய திருமுனைப்பாடி நாட்டுள் உள்ள ஊர்களுள் ஒன்று ஆமூர் என்பது பெரிய புராணம் சுட்டும் செய்தி. இங்கு. திருநாவுக்கரசர் பிறந்த செய்தியையும் சேக்கிழார் உரைக்கின்றார். இவ்வூர்ச் சிறப்பை அவர், இவ்வகைய திருநாட்டில் எனைப் பலவூர்களும் என்றும் மெய்வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் சைவ நெறி ஏழுலகும் பாலிக்கும் தன்மையினால் தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர்( 12 ) எனவே என்கின்றார். பண்டு தொட்டே இருந்து வந்த இவ்வூர், இடைக்காலத்தில் சைவ சமயம் மலர்ச்சி பெற்றதொரு ஊராகவும் இருந்தது என்பது தெரியவருகிறது. |
ஆய்குடி | ஆய் என்ற குலத்தில் வந்த ஆய் அண்டிரன் என்னும் வள்ளலின் ஊரே ஆய்குடி என்பது. இவ்வூர் பொதிய மலை நாட்டைச் சார்ந்தது. பொதிய மலைச் சாரலில் இன்றும் இவ்வூர் உள்ளது. தெற்கில். ஆய்குடி என்ற ஒன்று இல்லையாயின் இந்தப் பரந்த உலகமே கீழ் மேலதாகி நிலைகுலையும் என்கிறார் முடமோசியார் என்ற புலவர். ஆய் அண்டிரன் ஆண்டநாடு மலைநாடு என்பதை “ஆஅய் நல்நாட்டு அணங்குடைச் சிலம்பில்” (அகம்.198/14), “வழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன், குன்றம் பாடின கொல்லோ” (புறம்.131:2 3) என்ற அடிகளாலும் அம் மலைப் பொதியிலே என்பதை, “கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்” (புறம். 128:5) என்ற அடி.யாலும் தெளிவாக உணரலாம்.ஆய் அண்டிரன் காலத்தில் சிறந்திருந்த ஓர் ஊர் ஆய்குடி எனத் தெரிகிறது. அண்டிரன் ஆயர்குடியினன். இவனுடைய குலத்தினராகிய ஆயர்கள் வாழ்ந்த பகுதியாக இது இருந்திருக்கலாம். எனவே ஆயர்குடி என்பது ஆய்குடி என்ற் பெயரைப் பெற்றிருக்கலாம். |
ஆய்ப்பாடி | ஆர்வ நன் மொழி ஆய்’ எனச் சிறுபாணாற்றுப் படையில் ஆய் என்ற கடையேழு வள்ளலுள் ஒருவனைக் காண்கின் றோம். மேலும், ஆய் என்பது இடையர்களையும் குறிக்கும். எனவே ஆயர்கள் வாழ்ந்த இடம் ஆய்ப்பாடி என்பது பொருத்தமாக அமைகிறது. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் ஆழ்வார்கள் இதனைப் பாடுகின்றனர். |
ஆரூர் | திருவாரூர் என தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. ஆர் என்ற மலரைப்பற்றி ஆத்திமாலையைப் பற்றித் தொண்டு தொட்டே கண்டாலும், இவ்வூரின் பெருஞ்சிறப்பை இடைக் காலத்தேதான் காண்கின்றோம், திருவாரூரை மனுநீதிச் சோழன் ஆண்டான் என்றக் குறிப்பு, சங்க காலத்தே இவ்வூர் சிறப்புடன் திகழ்ந்துள்ளது என்பதையுணர்த்தும். ஆரூர் என்ற இப் பெயரைக் காண இது ஆத்திமரங்கள் நிறைந்த ஊராக இருக்கலாம் எனவே தோன்றுகிறது. பிற பெயர்க்காரணங்களைக் காட்டிலும் இதுவே பொருத்தமாகவும் அமைகிறது சோழ மன்னர் களால் பெருஞ்சிறப்பாகக் கருதப்பட்ட, இவ்வூரின் சிறப்பு காட்டும் நம் இலக்கியச் சான்றும் மிகுதியாக அமைகின்றன. கல்வெட்டிலும் திருவாரூர் என்றே இத்தலம் பெயர்படும். தேவார மூவர் களால் மட்டுமல்லாது சேக்கிழாராலும் மாணிக்கவாசகர், நம்பியாண்டார் நம்பியாலும். பரணதேவ நாயனார், ஐயடிகள் காடவர்கோன், கபில் தேவ நாயனார். சேரமான் பெருமாள் நாயனார் போன்ற பலராலும் பாடப்படும் தன்மை இதன் மதிப்பினைத் தெளிவாக்கும். அல்லல் நோய் தீர்க்கும் அரு மருந்தாக இங்குள்ள சிவனை மக்கள் கருதிய நிலையும் (சிவபெருமான் திருவந்தாதி -20 ) சிவபுரியென அதனைக் கருதிய நிலையும் ( பெரிய கழற்- 2 ) தேனமர்ச் சோலையுடன் இது திகழ்ந் தமையினையும் ( திரு கீர்த்தி 73-4 ) செம்பொற் புரிசையுடன் காணப்பட்டமையினையும் (சிவபெருமான் திருவந்தாதி- 98 ) நோக்க, இவ்வூர் பற்றிய மக்கள் மனநிலையும் வெளிப்படும். இவ்வூர்ப் பழமையையும், சிறப்பையும் |
ஆரூர் | தேவாரத் திருத்தலங்கள் |
ஆரூர் அரநெறி | தேவாரத் திருத்தலங்கள் |
ஆரூர் பரவையுண் மண்டளி | தேவாரத் திருத்தலங்கள் |
ஆர்க்காடு | சங்க கால ஊர்கள் |
ஆர்க்காடு | ஆர்க்காடு என்னும் ஊர் சோழ மன்னன் சேந்தன் தந்தையாகிய அழிசி என்பவனுக்கு உரியது என்று நற்றிணையும் குறுந்தொகையும் கூறுகின்றன.அகப்பொருள் பற்றிக் கூறும் இவ்விலக்கியங்கள் தலைவியின் நலம் பற்றிக் கூறும் பொழுது ஆர்க்காடு அன்ன நலம் எனப் புகழ்ந்து உரைக்கும் நிலையிலயே ஆர்க்காடு என்ற ஊரைக் குறித்துக் கூறியுள்ளன; ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் என்ற புலவர் பாடிய பாடலொன்று (அகம். 64) சங்க இலக்கியத் தில் உள்ளது. வெள்ளைச் கண்ணத்தனார் என்ற புலவரின் தந்தை ஆர்க்காடு கிழார் என்பவர் ஆர்க்காடு என்ற ஊரினர் எனத் தெரிஒறது, சோழ மன்னனுக்குரிய ஆத்தியைக் குறிக்கும் “ஆர்” என்ற மரத்தால் பெயர் பெற்ற ஊர் ஆர்க்காடு என்பது. ஆத்திமரம் திறைந்திருந்த பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது. ஆர்க்காடு என்ற பெயரே இன்று ஊருக்கும், மாவட்டத்திற்கும் பெயராக வழங்குகிறது. ஆர்க்காடு என்ற பெயருடைய மாவட்டம் வட ஆர்க்காடு மாவட்டம், தென் ஆர்க்காடு மாவட்டம் என இரண்டு பிரிவாக உள்ளது. சங்க இலக்கியம் குறிக்கும் ஆர்க்காடு என்ற பெயருடைய இவ்வூர் வட ஆர்க்காடு மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் உள்ளது. இந்த ஆர்க்காடு கருநாடக நவாபுகள் காலத்தில் அவர்களுடைய தலைநகராக இருந்திருக்கிறது. ஆர்க்காடு என்ற இதனை ஆற்காடு என்று கொண்டு ஆல மரக்காடு என்றும் கருதுகின்றனர். ஆறு காடு அங்கு இருந்தன என்று புராணம் கூற,அது வடமொழியில் ஷடாரண்யம் ஆயிற்று. |
ஆறைமேற்றளி | சேக்கிழார் ஏயர்கோன் நாயனார் சென்ற திருத்தலங்களுள் ஒன்றாக திரு ஆறை மேற்றளியைக் குறிப்பிடுகின்றார். |
ஆலங்காடு | இன்று செங்கற்பட்டு மாவட்டத்தில் காணப்படும் ஆலங் காடு, திருவாலங்காடு என்று அழைக்கப்பெறுகிறது பெயரிலேயே ஊர்ப்பெயர்க் காரணத்தை உள்ளடக்கிய இவ்வூர் பழையனூர் பக்கத்தில் இன்றும் உள்ளதைக் காண ? இலக்கியச் சான்றுகள் உரைக்கும் இதனைப் பற்றிய விளக்கம் உணர ஏதுவாகின்றது. இதனைப் பழனமூதூர் நிலவிய ஆலங்காடு ( பெரிய காரைக் -61 ) என்றும் பழையனூர் மேய அத்தா ஆலங்காடா ( சுந்- பதி 52) என்றும் சுட்டுகின்றனர். எனவே பழையனூரின் ஒரு பகுதியாக ஆலங்காடு இருந்தது என்பது தெரிகிறது. பின்னர் இங்குள்ள சிவன் கோயில் சிறப்புற்று, இத்தலம் தனியே திருவாலங்காடு எனச் சிறப்பு பெறும் பெருமை பெற்றது என்பதை யுணரக் கூடுகின் றது. காரைக்காலம் மையாரால் முதலில் சிறப்புற்ற இத்தலம், பின்னர் மேலும் பலரால் சிறப்பிக்கப்படும் பெருமை பெற்றது என்பதையும் காண்கின்றோம். திருவாலங்காட்டு மூத்த திருப் பதிகத்தையே காரைக்காலம்மையார் தந்து இங்குள்ள இறைச் சிறப்பை வெளிப்படுத்தக் காணலாம். |
ஆலங்காடு | தேவாரத் திருத்தலங்கள் |
ஆலங்கானம் | சங்க கால ஊர்கள் |
ஆலங்கானம் | சங்க கால ஊர்கள் |
ஆலங்கானம் | ஆலங்கானம் என்ற இவ்வூர்ப்பெயர் மதுரைக் காஞ்சி, அகநானூறு, புறநானூறு ஆகிய சங்க இலக்கங்களில் இடம் பெற்றுள்ளது. ஆலங்கானம் என்றும் தலையாலங்கானம்.. என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.ஊர்களின் அமைப்பு கருதி தலை, இடை, கடை என்ற முன் ஒட்டுகளில் ஒன்று ஊர்ப்பெயர்களோடு இணைத்துக் கூறும் முறையையொட்டி ஆலங்கானம் என்ற ஊர்ப்பெயர்களோடு குலை என்ற அடையடன் தலையானங்கானம் என வழங்கப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் குறிக்கப்பபெற்ற ஆலங்கானம் அல்லது தலையாலங்கானம் (தலையாலங்கானம் என்ற பெயர் தலை யாலங்காடு எனப்பெயர் பெற்றிருந்ததாதத் தேவாரத்தால் (கி.பி. ஏமாம் நூற்றாண்டு) தெரிகிறது.பாண்டியன் நெடுஞ் செழியன் தன்னை இளையன் என எண்ணி இஃழ்ந்து தன் மீது படையெடுத்த சேர சோழர், வேளிர் ஐவர் ஆக எழுவரைப் பொருது வென்ற இடம் ஆகும். இப்போரில் சேர சோழர்கள் கொல்லப்பட்டனர். என்றும் தெரிகிறது. பெற்ற வெற்றியின் காரணமாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெநடுஞ் செழியன் எனப்பட்டான். (அகம், 36, 116, 175, 209; புறம். 371, 372.) பராந்தக வீர நாராயணனின் தளவாய்புரச் செப்பேட்டில் “ஆலங்கானம்” என்றே குறிக்கப்பெற்றிருப்பதால் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலும் சங்ககாலப்பெயர் எவ்வித மாறுபாடுமின்றி வழங்கியதாகத்தெரிகிறது. பெருங்கதையிலும் ஆலங்கானம் என்னும் ஊர்ப்பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால் இது சங்க இலக்கியங்களால் குறிக்கப் பெறும்தமிழ்நாட்டு ஆலங்கானம் அன்று. பெருங்கதையில் இரண்டு இடங்கள் குறிக்கப்பெற்றுள்ளன ஒன்று விபுலகிரியின் பக்கத்தில் மிருகாவதியின் தந்தை தவஞ்செய்து கொண்டிருந்த இடம். மற்றொன்று பூக்கொய்தற்கு வந்த பத்திராபதி என்னும் “தெய்வ மகள் யானையின் சேர்க்கையைக் கண்டு மனம் வேறுபட்டுப் பெண் யானையாகப் பிறக்கும்படி குபேரனால் சாபம் பெற்ற இடம். இது விந்த மலையின் பக்கத்தே நருமதையாற்றங்கரையிலுள்ளது. |
ஆலங்குடி | வங்கனார் என்ற சங்கப் புலவர் பெயருடன் இணைத்து ஆலங்குடி. வங்கனார் என வழங்கப் பெற்றுள்ளதால் “ஆலங்குடி.” என்.ற ஊர்ப்பெயரை நாம் அறிகிறோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து ஒன்பதாவது மைலில் ஆலங்குடி என்னும் பெயருடன் ஒரு சிற்றூர் உள்ளது. இதே பெயருடன் ஒன்றிற்கு மேற்பட்ட ஊர்கள் இருப்பதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் குறிக்கப் பெற்ற ஆலங்குடி எது என்று அறிய இயலவில்லை. நற்றிணையில் 230, 330, 400 ஆகிய பாடல்களும், குறுந்தொகையில் 8, 45 ஆகிய பாடல்களும், அகநானூற்றில் 306 ஆம் பாடலும் புறநானூற் றில் 319 ஆம் பாடலும் ஆலங்குடி வங்கனரர் பாடியவை. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சி புரிந்த முதலாம் இராசராசனின் கல்வெட்டிலும் “ஆலங்குடி” என்ற ஊர்ப் பெயர் காணப்படுகின்றது. |
ஆலத்தூர் | ஆலத்தூர் கிழார் பாடியனவாக உள்ள சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் ஆலத்தூர் என்ற ஊர்ப்பெயர் நமக்குக் கிடைக் கப் பெற்றுள்ளது. இப்பெயருடன் ஒன்றிற்கு மேற்பட்ட ஊர்கள் இருப்பதாகத் தெரிகிறது. தென்ஆர்காடு மாவட்டத்தில் மரக்காணம் செல்லும் வழியில் ஆலத்தூர் என்ற பெயருடன் ஓர் ஊர் உள்ளது. குறுந்தொகையில் 112, 350 ஆகிய பாடல்களும், புறநானூற் நில் 34, 36, 69, 225 ஆகிய பாடல்களும்: ஆலத்தூர்கிழார் பாடியவை. |
ஆலமுற்றம் | சங்க கால ஊர்கள் |
ஆலம் பொழில் | திருநாவுக்கரசர் பாடல் பெற்ற இத்தலம் இடைக்காலத்திலேயே தெரியவருகிறது. தாவரப்பெயர் கொண்டு பெயர் வைத்தலில் ஆல் மரமும் தமிழகத்தில் மரபாக வழங்கிய ஒன்று என்பதைப் பண்டு தொட்டே ஆலங்குடி, ஆலத்தூர் போன்ற பெயர்கள் சுட்டுவதனைப் போன்று ஆலங்காடும் ஆலம் பொழிலும் சுட்டுவதை இங்கு காண்கின்றோம். அணிதிரு ஆலம் பொழில் ( பெரிய திருஞா – 351 ) என்று சேக்கிழாரால் போற்றப்படும் இத்தலம் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. |
ஆலம்பேரி | ஆலம்பேரி சாத்தனார் பாடியனவாக உள்ள சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் ஆலம்பேரி என்ற ஊர்ப்பெயர் நமக்குக் கிடைக் கப் பெற்றுள்ளது. நற்றிணையில் 152, 255 ஆகிய பாடல்களும், அகநானூற்றில் 47, 81, 143, 175 ஆகிய பாடல்களும் ஆலம்பேரி சாத்தனார் பாடியவை. |
ஆலம்பொழில் | தேவாரத் திருத்தலங்கள் |
ஆலவாய் | தேவாரத் திருத்தலங்கள் |
ஆலி | திருவாலி என்று அழைக்கப்படும் தலம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள. வைணவக் கோயில் தலம் இது. திருமகள் எம் பெருமானை ஆலிங்கனம் செய்தமையால் ஆலி ஆயிற்று என்பர் ( நாலா – பக். 835 ) ஆலிநகர்க் கதிபதியே ( நாலா-725 ) என குல சேகராழ்வார் இத்தலத்து இறையைப் பாடுகின்றார். |
ஆவடுதுறை | என் ஆவடு தண்டுறை’ எனவும் அழைக்கப்பெறும் இவ்விடம் இன்று திருவாவடுதுறை எனப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத் தில் உள்ள இவ்வூர்ப்பெயர் கோயில் தொடர்பால் ஏற்பட்டது எனத் தோன்றுகிறது. துறை, தண்டுறை போன்றன நீர்த்துறையைக் குறிக்க, துறையில் அமைந்துள்ள கோயிலால் இப்பெயர் வந்திருக்கலாம். அம்பிகை வழிபட்ட தலம்’ எனவும், இதனைச் சுட்டுகின்றனர் எனவே இதனை நோக்க செழிப்பான பகுதி ஆகையால் பசுக்கள் நிறைந்திருக்கலாம். இவை நீர் அருந்தும் துறை என்ற நிலையில் ஆ அருந்தும் துறை பெயர் ஆவடு துறை என மாற்றம் பெற்றிருக்குமோ என்ற எண்ணமும் ஏற்படுகின்றது. திருமூல நாயனாருடன் இத்தலம் தொடர்புடைய அமையும் நிலையும் 2 ஆவோடு இவ்வூரைத் தொடர்புபடுத்த ஏதுவாகிறது. ஆவடுதுறை கோயில் பற்றியுரைக்கும் நிலையில் இது கோயில் பெயர் என்பதும், சாத்தனூர் ஊர்ப் பெயர் என்பதும் தெரிய வருகிறது திருமூலர் பிறந்த இடமாகச் சுட்டப்படும் நிலையில் சாத்தனூர் அமைகிறது. இன்றும் சாத்த னூர் என்ற பெயருடன் அமையும் ஊர் காணப்படுகின்றது. இரண்டும் ஒன்றா என்பதும் ஆய்வுக்குரியது. தாக |
ஆவடுதுறை | தேவாரத் திருத்தலங்கள் |
ஆவினன்குடி | சங்க கால ஊர்கள் |
ஆவினன்குடி | ஆவிக்கோமானின் குடியினர் வாழ்ந்த ஊர் ஆவிகுடி என வழங்கப்பெற்று, நாளடைவில் ஆவிநன்குடி என ஆகியிருக்க வேண்டும். ஆவிக் கோமானுக்குரிய நகர் பொதினி என்று அகநானூற்றுப் பாடல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே அந்த பொதினி நகர்ப் பகுதியே ஆவினன் குடியாக இருக்க வேண்டும் என்ற. கருத்தும் சரியெனத் தோன்றுகிறது. இப்பொதினியே காலப்போக்கில் “பழனி” என்று மாறி வழங்கப் பெறுகிறது என்பர். இன்றுள்ள பழனி என்னும் தலத்தின் மலையடிவாரத்தில் உள்ள கோயிலே ஆவினன்குடி என்னும் ஊரைச் சேர்ந்த பழைய கோயில் என்றும், மலை மீதுள்ள கோயில் பிற்காலத்தது என்றும் கூறப்படுகிறது. (பழனித் தல வரலாறு பழனிதேவஸ்தான வெளியீடு. பக்.14) சித்தன் வாழ்வு என்றும் ஆவினன்குடி. முற்காலத்துப் பெயர் பெற்றிருந்தது எனத் தெரிகிறது. சித்தன் என்பது முருகக் கடவு ளின் பெயர்களுள் ஒன்று. |
ஆவூர் | சங்க கால ஊர்கள் |
ஆவூர் | ஆ என்பது பசுவையும், ஆச்சாமரத்தையும் குறிக்கும் சொல். எனவே விலங்குப் பெயர் அல்லது மரப்பெயர் அடிப் படையில் தோன்றிய ஊராக வேண்டும். சங்கப் புலவர்களின் பெயர்களோடு இணைத்துக் கூறப்படுவ தால் நாம் அறியும் ஊர்ப் பெயர்களுள் அவூரும் ஓன்று. இதே பெயருடன் ஒன்றற்கு மேற்பட்ட ஊர்கள் உள்ளன.” கண்ணனார், காவிதிசள் சாதேவனார், கிழார், மூலங்கிழார், மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் ஆகியோர் இவ்வூரைச் சேர்ந்த புலவர்கள். நற்றிணையில் 265ஆம்பாடலும், அகநானூரற்றில் 13, 24, 156 159, 272, 224 ஆகிய பாடல்களும், புறநானூற்றில் 38, 40, 166, 177, 178, 196, 261, 301, 322 ஆகிய பாடல்களும் அப் புலவர்கள் பாடியவை. |
ஆவூர் | ஆமூர் போன்று பண்டு தொட்டே தெரியவரும் ஊர் ஆவூர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. அங்கணர்க் கிடமாகிய பழம்பதி ஆவூர் ( 34-376-4 ) என்ற சேக்கிழார் கூற்றும் இவ்வூர் பழமையை உணர்த்தும் ஞானசம்பந்தர் பாடல் இங்குள்ள சிவன் கோயில் சிறப்பைச் சுட்டுகின்ற தலம் ( பதி-8 ). மேலும், சிவபெருமான் திருவந்தாதியில் கபில தேவ நாயனாரும் இவ்வூரைச் சுட்டுகின் றார், ( 13 ) ஆ வழிபட்டமையாலும் இறைவன் பெயராலும் ( பசுபதீஸ்வரர் ) பெற்ற பெயர், கோயில் பெயரே ஊருக்கும் வழங்கப்படுகிறது என்ற எண்ணத்தையும் காண்கின்றோம். இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள இவ்வூர்ப் பெயர் பற்றி நம் பண்டை இலக்கியத்திலும் எண்ணங்கள் உண்டு. பழம்பதி என்று சேக்கிழார் கூறும் தன்மை, ஒன்றாக இருக்கலாம் என்ற எண்ணத்தைத் தருகின்றன. இதனைப்பற்றிப் பேசும் போது ஆ என்பது பசுவையும், ஆச்சா மரத்தையும் குறிக்கும் சொல். எனவே விலங்குப் பெயர் அல்லது மரப்பெயர் அடிப்படையில் தோன்றியதாக இருக்கவேண்டும். என்பர். |
ஆவூர்ப் பசுபதீச்சரம்(சங்ககால ஆவூர்கிழார்) | தேவாரத் திருத்தலங்கள் |