ஊர் பெயரகராதி

தமிழகம் ஊரும் பேரும் – சேதுப்பிள்ளை.ரா.பி, இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் I – ஆளவந்தார்.ஆர், II – பகவதி.கே. தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு – கு.பகவதி. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி – தா.வே.வீராசாமி. தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – மெய்.சந்திரசேகரன். கெடிலக்கரை நாகரிகம் ஊர்கள் – பேரா.சுந்தரசண்முகனார். செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – நாகராசன்.கரு


87

48

47

6

15

6

18

11

4

8

4
க்
99
கா
32
கி
3
கீ
1
கு
61
கூ
10
கெ
1
கே
3
கை
3
கொ
24
கோ
39
கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
10
சா
9
சி
21
சீ சு
2
சூ செ
17
சே
8
சை சொ சோ
9
சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
23
தா
1
தி
22
தீ து
11
தூ
4
தெ
7
தே
4
தை தொ
5
தோ தௌ
ந்
31
நா
24
நி
6
நீ
11
நு நூ நெ
22
நே
5
நை நொ
1
நோ நௌ
ப்
43
பா
33
பி
7
பீ பு
39
பூ
10
பெ
11
பே
7
பை
2
பொ
7
போ
6
பௌ
ம்
40
மா
25
மி
3
மீ
2
மு
28
மூ
4
மெ
1
மே
1
மை
5
மொ மோ
6
மௌ
ய்
2
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
40
வா
20
வி
25
வீ
6
வு வூ வெ
27
வே
24
வை
7
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
அகத்தியான் பள்ளி

இப்பெயர் சங்க இலக்கியத்துள் இடம் பெறவில்லை. அகத்தியான் பள்ளி என்ற பெயரை நோக்க, அகத்தியனோடு தொடர்பு கொண்டதொரு பெயர் என்பது மேம்போக்காக நோக்கத் தெரிகிறது. வேதாரணியத்திற்குத் தெற்கில் உள்ள ஊராகிய இது, அகத்தியர் சுவாமியின் திருமணக் கோலத்தைத் தரிசிக்கும் பொருட்டுத் தங்கி வழிபட்ட தலம் என்பர். எனினும் இதற்குச் சரியான சான்று இல்லை. அகத்திய பக்த விலாசம் என்றதொரு நூலினை, சிவனடியார்கள் சரிதையை வடமொழியிற் கூறும் நூலினை அபிதான சிந்தாமணி சுட்டு எனவே இங்கு அகத்தியன் சிவனுக்குரிய தாரு பெயராக அமையக் காணலாம். இந்நிலையில் பக்தி இலக்கியங்களில் இடம் பெற்ற இவ்வூர்ப்பெயர் சிவன் உறையும் இடம் என்ற பொருளில் தோன்றியிருக்கவும் வாய்ப்புண்டு. ஆலயத்தில் அகத்தியர் உருவம் உள்ளமையினால் அகத்தியரோடு பொருத்தி இவ்வூர்ப் பெயரைக் குறித்திருக்கலாம். என்பது இன்றும் இப்பெயராலேயே குறிக்கப்படும் இவ்வூர் திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் இருவராலும் பாடப்பட்ட சிறப்புப் பொருந்தியது. இன்றைய வேதாரண்யத்திற்குப் பக்கத் தில் கடல் உள்ளது. எனவே அகத்தியான் பள்ளிக்கு அருகில் உள்ள கடலைப் பற்றிய குறிப்பு கிடைப்பது உண்மை விளக்கமாக அமைகிறது. திருநாவுக்கரசர் அகத்தியான் பள்ளி அமர்ந்த ( 239-6 ) நிலையைக் கூற, ஞானசம்பந்தர் தனியாகப் பதிகமே பாடியுள்ளார்.
பெரிய புராணத்தில் சேக்கிழார் ,
தெண் திரை சூழ் கடற்கானல் திருவகத்தியான் பள்ளி
அண்டர்பிரான் கழல் வணங்கி ( 622 )
ஞானசம்பந்தர் சென்றதைப் பாடுகின்றார்.

அகத்தியான் பள்ளி

இப்பெயர் சங்க இலக்கியத்துள் இடம் பெறவில்லை. அகத்தியான் பள்ளி என்ற பெயரை நோக்க, அகத்தியனோடு தொடர்பு கொண்டதொரு பெயர் என்பது மேம்போக்காக நோக்கத் தெரிகிறது. வேதாரணியத்திற்குத் தெற்கில் உள்ள ஊராகிய இது, அகத்தியர் சுவாமியின் திருமணக் கோலத்தைத் தரிசிக்கும் பொருட்டுத் தங்கி வழிபட்ட தலம் என்பர். எனினும் இதற்குச் சரியான சான்று இல்லை. அகத்திய பக்த விலாசம் என்றதொரு நூலினை, சிவனடியார்கள் சரிதையை வடமொழியிற் கூறும் நூலினை அபிதான சிந்தாமணி சுட்டு எனவே இங்கு அகத்தியன் சிவனுக்குரிய தாரு பெயராக அமையக் காணலாம். இந்நிலையில் பக்தி இலக்கியங்களில் இடம் பெற்ற இவ்வூர்ப்பெயர் சிவன் உறையும் இடம் என்ற பொருளில் தோன்றியிருக்கவும் வாய்ப்புண்டு. ஆலயத்தில் அகத்தியர் உருவம் உள்ளமையினால் அகத்தியரோடு பொருத்தி இவ்வூர்ப் பெயரைக் குறித்திருக்கலாம். என்பது இன்றும் இப்பெயராலேயே குறிக்கப்படும் இவ்வூர் திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் இருவராலும் பாடப்பட்ட சிறப்புப் பொருந்தியது. இன்றைய வேதாரண்யத்திற்குப் பக்கத் தில் கடல் உள்ளது. எனவே அகத்தியான் பள்ளிக்கு அருகில் உள்ள கடலைப் பற்றிய குறிப்பு கிடைப்பது உண்மை விளக்கமாக அமைகிறது. திருநாவுக்கரசர் அகத்தியான் பள்ளி அமர்ந்த ( 239-6 ) நிலையைக் கூற, ஞானசம்பந்தர் தனியாகப் பதிகமே பாடியுள்ளார்.
பெரிய புராணத்தில் சேக்கிழார் ,
தெண் திரை சூழ் கடற்கானல் திருவகத்தியான் பள்ளி
அண்டர்பிரான் கழல் வணங்கி ( 622 )
ஞானசம்பந்தர் சென்றதைப் பாடுகின்றார்.

அகத்தியான்பள்ளி

தேவாரத் திருத்தலங்கள்

அகத்தீச்சுரம் 

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில்
உள்ள ஊர் இது. குமரியிலிருந்து 3 மைல் தூரத்தில் உள்ளது சங்க இலக்கியம் சுட்டாத
இவ்வூர்ப் பெயர் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் இடம் பெற்றுள்ளது. இறைவன்
உறை சுரம் பலவும் இயம்பு வோம் ( பதி, 285-8 ) என்ற நிலையில் பல சுரங்களை
யியம்பும் இவர் அவற்றுள் அகத்தீச்சுரத்தையும் ஒன்றெனக் குறிப்பிடுகின்றார்.
திருநாவுக்கரசு சுவாமிகளின் இப்பாடற் குறிப்பு இரண்டு பொருளை விளங்க வைத்து
இவ்வூர்ப் பெயருண்மையை விளக்குகின்றது. முதலில் இவர் இறைவன் உறையும் சுரம்
கூறும் நிலையில் இவன் அகத்தியன் என்பது சிவனைக் குறிக்கிறது என்பது
தெளிவுபடுகிறது. அடுத்து சுரம் என்ற கூறு காடு என்னும் பொருளில் அமைந்து முதலில்
இறைவன் எழுந்தருளிய பகுதி அல்லது இறைவனை எழுந்தருளச் செய்த பின்னர் மாறியது
என்பதும் விளக்கம் பெறுகிறது. கோயிற் பெயர் ஊருக்கு அமைந்த நிலை தெளிவுபடுகிறது.
அகத்தியர் பூசித்த தலம் என்ற எண்ணமும் அமைகிறது. இதனைப் போன்றே பிற அயனீச்சுரம்.
அக்கீச்சுரம், இராமேச் சுரம் போன்றனவும் சுரம் காரணமாகப் பெயர் பெற்றவையாகும்.
உராக

அகத்தீச்சுரம்

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊர் இது. குமரியிலிருந்து 3 மைல் தூரத்தில் உள்ளது சங்க இலக்கியம் சுட்டாத இவ்வூர்ப் பெயர் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் இடம் பெற்றுள்ளது. இறைவன் உறை சுரம் பலவும் இயம்பு வோம் ( பதி, 285-8 ) என்ற நிலையில் பல சுரங்களை யியம்பும் இவர் அவற்றுள் அகத்தீச்சுரத்தையும் ஒன்றெனக் குறிப்பிடுகின்றார். திருநாவுக்கரசு சுவாமிகளின் இப்பாடற் குறிப்பு இரண்டு பொருளை விளங்க வைத்து இவ்வூர்ப் பெயருண்மையை விளக்குகின்றது. முதலில் இவர் இறைவன் உறையும் சுரம் கூறும் நிலையில் இவன் அகத்தியன் என்பது சிவனைக் குறிக்கிறது என்பது தெளிவுபடுகிறது. அடுத்து சுரம் என்ற கூறு காடு என்னும் பொருளில் அமைந்து முதலில் இறைவன் எழுந்தருளிய பகுதி அல்லது இறைவனை எழுந்தருளச் செய்த பின்னர் மாறியது என்பதும் விளக்கம் பெறுகிறது. கோயிற் பெயர் ஊருக்கு அமைந்த நிலை தெளிவுபடுகிறது. அகத்தியர் பூசித்த தலம் என்ற எண்ணமும் அமைகிறது. இதனைப் போன்றே பிற அயனீச்சுரம். அக்கீச்சுரம், இராமேச் சுரம் போன்றனவும் சுரம் காரணமாகப் பெயர் பெற்றவையாகும். உராக

அகப்பா

சங்க கால ஊர்கள்

அகுதை கூடல்

சங்க கால ஊர்கள்

அக்கரை 

சங்க காலத்தில் அறிய இயலாத இவ்வூர், தேவாரப் பாடல் பெற்றது. மா.
இராசமாணிக்கம் சம்பந்தப் பெருமான் பாடல் பெற்றது ஆகையால் இது கி.பி. 7 ஆம்
நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பதில் ஐயமில்லை என்பார் கண்ட இவ்வூர்ப் பெயரே அதன்
காரணத்தைச் சொல்லுமாறு அமைகிறது. அந்தக்கரை என்ற குறிப்பினை நாம் இதனுள்
காண்கின்றோம். மேலும் மேற்குறித்த அறிஞர், தான் சென்று இவ்வூர்ப் பற்றி
எழுதும்போதே இப்பெயர்க்கான உண்மையையும் அறிய இயலுகிறது. வண்டி வழியில் இரண்டு
சிற்றாறுகளைக் கடந்து ஆற்றங்கரை மீது நின்றது. நாங்கள் ஆற்றைக் கடந்து
அக்கரையில் உள்ள திருவக்கரையை அடைந்தோம் என்னும் இவர், மேலும் திருவக்கரை மிகச்
சிறிய கிராமம். அங்கு நான்கு அல்லது ஐந்து தெருக்களே உண்டு. ஆற்றைக் கடந்து
கோயிலை அடையும் பாதை நெடுக அழிந்த கற்சிலைகளின் பகுதிகளும் கற்பாறைகளும்,
கற்சிலைகளும், மரம் கற்பாறைகளும் சிதறிக் கிடக்கும் காட்சி திருவக்கரை
பழைமையும், பெருமையும் பெற்றிருந்த சிவ தளி என்பதை அறிவிப்பது போல் காரணப்பட்டது
என்று கூறிச் செல்லும் நிலை, இவ்வூரின் சிறப்பை விளக்க வல்லது. மட்டு மன்றி,
ஆற்றுக்கு அந்தப் பக்கம் காரணமாக அக்கரை என்று சொல்லும் வழக்கம் முதலிலேயே
இருந்திருக்கலாம். பின்னர், பக்தி இயக்க காலத்தில் அங்கு ஏற்கெனவே இருந்த அல்லது
அக்காலத்தில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் பெருமை பெற. இவ்வூர்ப் பெயர் சிவத்
தலமாக விளக்கம் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும் இவ்வறிஞர்
காட்சியறிவின் படி, இத்தலம் சிவன் கோயிலுடன் பிற தெய்வ வணங்கங்களும் கொண்டு
திகழ்ந்திருக்கிறது என்பதையும் அறிய இயலுகிறது. ஆற்றுக்கு அந்தப்பக்கம் என்ற
பொருளில் அக்கரை என்று ஊர்ப்பெயரை வைத்தல் தமிழரிடம் மரபாகத் திகழ்ந்த ஒன்று
என்பதுடன் இன்றும் அவ்வழக்கினைச் சுசீந்திரம் ஊரில் உள்ள அக்கரை ( சுசீந்திரம்
ஊரில் ஆற்றிற்கு அந்தப் பக்கம் உள்ள ஊர் ) யால் உணரலாம்., பல வகைப்பட்ட
சிற்பங்கள், கோயில்கள் கொண்டு இதனைச் சிறந்த சிற்பக் கூடம் என்பர்.1 பெரிய
புராணத்தில் திருஞான சம்பந்தர் திருவக்கரையை அடைந்த தன்மையைச் சேக்கிழார் பாட,
(திருஞா. 963, 964) ஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் ( பதிகம் -318) இவ்வூர்
சிறப்பினைத் தருகின்றது. அவர் காலத்தில் இத்தலத்தில் உள்ள மற்ற தெய்வங்களைவிட,
சிவனே மிகவும் பெருமையுடன் திகழ்ந்து இருக்கலாம் என்ற எண்ணத்தையும் நாம் இங்குப்
பெறுகின்றோம். சோழ நாட்டு ஊரான இது ? இன்று தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்ததாக
அமைகிறது. கறையணி மாமிடற்றான் கரிகாடரங் காவுடையான் பிறையணி கொன்றையினான்
ஒருபாகமும் பெண்ண மர்ந்தான் மறையவன தன் தலையில் பலிகொள்பவன் வக்கரையில் உறைபவன்
எங்கள் பிரான் ஒலியார் கழல் உள்குதுமே திருஞா. பா -1 திருவக்கரை என்றே.
இப்பெயரினையே எல்லோரும் சுட்டினாலும் இப்பெயராய்வினைச் செய்யும்போது திரு +
அக்கரையே இணைந்து திருவக்கரை ஆகியிருக்க வேண்டும் என்பது தெளிவுறுகிறது.

அக்கரை

சங்க காலத்தில் அறிய இயலாத இவ்வூர், தேவாரப் பாடல் பெற்றது. மா. இராசமாணிக்கம் சம்பந்தப் பெருமான் பாடல் பெற்றது ஆகையால் இது கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பதில் ஐயமில்லை என்பார் கண்ட இவ்வூர்ப் பெயரே அதன் காரணத்தைச் சொல்லுமாறு அமைகிறது. அந்தக்கரை என்ற குறிப்பினை நாம் இதனுள் காண்கின்றோம். மேலும் மேற்குறித்த அறிஞர், தான் சென்று இவ்வூர்ப் பற்றி எழுதும்போதே இப்பெயர்க்கான உண்மையையும் அறிய இயலுகிறது. வண்டி வழியில் இரண்டு சிற்றாறுகளைக் கடந்து ஆற்றங்கரை மீது நின்றது. நாங்கள் ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள திருவக்கரையை அடைந்தோம் என்னும் இவர், மேலும் திருவக்கரை மிகச் சிறிய கிராமம். அங்கு நான்கு அல்லது ஐந்து தெருக்களே உண்டு. ஆற்றைக் கடந்து கோயிலை அடையும் பாதை நெடுக அழிந்த கற்சிலைகளின் பகுதிகளும் கற்பாறைகளும், கற்சிலைகளும், மரம் கற்பாறைகளும் சிதறிக் கிடக்கும் காட்சி திருவக்கரை பழைமையும், பெருமையும் பெற்றிருந்த சிவ தளி என்பதை அறிவிப்பது போல் காரணப்பட்டது என்று கூறிச் செல்லும் நிலை, இவ்வூரின் சிறப்பை விளக்க வல்லது. மட்டு மன்றி, ஆற்றுக்கு அந்தப் பக்கம் காரணமாக அக்கரை என்று சொல்லும் வழக்கம் முதலிலேயே இருந்திருக்கலாம். பின்னர், பக்தி இயக்க காலத்தில் அங்கு ஏற்கெனவே இருந்த அல்லது அக்காலத்தில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் பெருமை பெற. இவ்வூர்ப் பெயர் சிவத் தலமாக விளக்கம் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும் இவ்வறிஞர் காட்சியறிவின் படி, இத்தலம் சிவன் கோயிலுடன் பிற தெய்வ வணங்கங்களும் கொண்டு திகழ்ந்திருக்கிறது என்பதையும் அறிய இயலுகிறது. ஆற்றுக்கு அந்தப்பக்கம் என்ற பொருளில் அக்கரை என்று ஊர்ப்பெயரை வைத்தல் தமிழரிடம் மரபாகத் திகழ்ந்த ஒன்று என்பதுடன் இன்றும் அவ்வழக்கினைச் சுசீந்திரம் ஊரில் உள்ள அக்கரை ( சுசீந்திரம் ஊரில் ஆற்றிற்கு அந்தப் பக்கம் உள்ள ஊர் ) யால் உணரலாம்., பல வகைப்பட்ட சிற்பங்கள், கோயில்கள் கொண்டு இதனைச் சிறந்த சிற்பக் கூடம் என்பர்.1 பெரிய புராணத்தில் திருஞான சம்பந்தர் திருவக்கரையை அடைந்த தன்மையைச் சேக்கிழார் பாட, (திருஞா. 963, 964) ஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் ( பதிகம் -318) இவ்வூர் சிறப்பினைத் தருகின்றது. அவர் காலத்தில் இத்தலத்தில் உள்ள மற்ற தெய்வங்களைவிட, சிவனே மிகவும் பெருமையுடன் திகழ்ந்து இருக்கலாம் என்ற எண்ணத்தையும் நாம் இங்குப் பெறுகின்றோம். சோழ நாட்டு ஊரான இது ? இன்று தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்ததாக அமைகிறது. கறையணி மாமிடற்றான் கரிகாடரங் காவுடையான் பிறையணி கொன்றையினான் ஒருபாகமும் பெண்ண மர்ந்தான் மறையவன தன் தலையில் பலிகொள்பவன் வக்கரையில் உறைபவன் எங்கள் பிரான் ஒலியார் கழல் உள்குதுமே திருஞா. பா -1 திருவக்கரை என்றே. இப்பெயரினையே எல்லோரும் சுட்டினாலும் இப்பெயராய்வினைச் செய்யும்போது திரு + அக்கரையே இணைந்து திருவக்கரை ஆகியிருக்க வேண்டும் என்பது தெளிவுறுகிறது.

அக்கீச்சுரம் 

ஆழ்வார்குறிச்சியை அடுத்தமையும் இத்தலம், அப்பரால்
சுட்டப்படுகிறது. வன்னிக்கரந்தை இன்னொரு பெயர். அக்கினி தேவர் பூசித்தமையின்
பெயர் பெற்றது என்ற கருத்து உண்டு. கோயில் பெயராக இருந்து இன்று
ஊர்ப்பெயராயிற்று எனத் தெரிகிறது.

அக்கீச்சுரம்

ஆழ்வார்குறிச்சியை அடுத்தமையும் இத்தலம், அப்பரால் சுட்டப்படுகிறது. வன்னிக்கரந்தை இன்னொரு பெயர். அக்கினி தேவர் பூசித்தமையின் பெயர் பெற்றது என்ற கருத்து உண்டு. கோயில் பெயராக இருந்து இன்று ஊர்ப்பெயராயிற்று எனத் தெரிகிறது.

அங்கநாடு

விசயவரன்‌ என்னும்‌ அரசனுடைய நாடு அங்க நாடு. சண்பை என்னும்‌
வளமுள்ள நகரைத்‌ தலைநகராகக்‌ கொண்டது, கங்கை நதியால்‌ வளம்‌ பெறும்‌ நாடு,
மணிமேகலையின்‌ முற்பிறவியில்‌ தவ்வையராகய தாரை, வீரை என்பவர்களை, அங்க நாட்டின்‌
கச்சயத்தை ஆண்ட துச்சயன்‌ என்பவன்‌ மணந்தான்‌ என்பது மணிமேகலைச்‌ செய்தி.
“இன்னும்‌ கேளாய்‌ இலக்குமி! நீ; நின்‌
தவ்வையர்‌ ஆவோர்‌, தாரையும்‌ வீரையும்‌
ஆங்கு அவர்தம்மை அங்கநாட்டு அகவயின்‌
கச்சயம்‌ ஆளும்‌, கழல்கால்‌ வேந்தன்‌,
துச்சயன்‌ என்போன்‌ ஒருவன்‌ கொண்டனன்‌” (மணிமே, 10; 50 54)
“உருமண்‌ ஹுவாவின்‌ பெருமுது குரவன்‌
அவிமில்‌ சூழ்ச்சித்‌ தவறில்‌ தோழன்‌
பெரும்புனற்‌ கங்கை பெருவளங்‌ கொடுக்கும்‌
அங்கரன்னாட்டு அணிபெற விருந்தது
எங்குநிகரில்ல தெழிற்கிடங்கணிந்தது
பொங்குமலர்‌ நறுந்தார்‌ புனைமுடிப்‌ பொங்கழல்‌
விச்சாதரருங்‌ தேவகுமரரும்‌
அச்சங்‌ கொள்ள வாடுகொடி. நுடங்கிச்‌
சக்திக்‌ குடத்தொடு தத்துற லோம்பி
விளங்குபு துளங்கும்‌ வென்றித்தாகி
அளந்து வரம்பறியா வரும்படை யடங்கும்‌
வாயிலும்‌ வனப்பும்‌ மேவி வீற்றிருந்து
மதிலணி தெருவிற்றாக மற்றோர்க்‌
கெதிரில்‌ போக மியல்பமை மரபொடு
குதிரையுங்‌ களிறும்‌ கொடுஞ்சித்‌ தேரும்‌
அடுதிறன்‌ மன்னரும்‌ வடுவின்று காப்ப
நெடுமுடி மன்னருண்‌ மன்ன னேரார்‌
கடுமுரண ழித்த காய்சின நெடுவேற்‌
படுமணி யானைப்‌ பைந்தார்‌ வெண்குடை
உக்கிர குலத்துளரசருளரசன்‌
விற்றிறற்றானை விசயவர னென்னும்‌
நற்‌றிறன்‌ மன்னனாளுங்‌ காக்கும்‌
சண்பை பெருநகர்ச்‌ சால்பொடும்‌ விளங்கிய” (பெருங்‌,2;20; 103 125)

அங்கநாடு

விசயவரன்‌ என்னும்‌ அரசனுடைய நாடு அங்க நாடு. சண்பை என்னும்‌ வளமுள்ள நகரைத்‌ தலைநகராகக்‌ கொண்டது, கங்கை நதியால்‌ வளம்‌ பெறும்‌ நாடு, மணிமேகலையின்‌ முற்பிறவியில்‌ தவ்வையராகய தாரை, வீரை என்பவர்களை, அங்க நாட்டின்‌ கச்சயத்தை ஆண்ட துச்சயன்‌ என்பவன்‌ மணந்தான்‌ என்பது மணிமேகலைச்‌ செய்தி.
“இன்னும்‌ கேளாய்‌ இலக்குமி! நீ; நின்‌
தவ்வையர்‌ ஆவோர்‌, தாரையும்‌ வீரையும்‌
ஆங்கு அவர்தம்மை அங்கநாட்டு அகவயின்‌
கச்சயம்‌ ஆளும்‌, கழல்கால்‌ வேந்தன்‌,
துச்சயன்‌ என்போன்‌ ஒருவன்‌ கொண்டனன்‌” (மணிமே, 10; 50 54)
“உருமண்‌ ஹுவாவின்‌ பெருமுது குரவன்‌
அவிமில்‌ சூழ்ச்சித்‌ தவறில்‌ தோழன்‌
பெரும்புனற்‌ கங்கை பெருவளங்‌ கொடுக்கும்‌
அங்கரன்னாட்டு அணிபெற விருந்தது
எங்குநிகரில்ல தெழிற்கிடங்கணிந்தது
பொங்குமலர்‌ நறுந்தார்‌ புனைமுடிப்‌ பொங்கழல்‌
விச்சாதரருங்‌ தேவகுமரரும்‌
அச்சங்‌ கொள்ள வாடுகொடி. நுடங்கிச்‌
சக்திக்‌ குடத்தொடு தத்துற லோம்பி
விளங்குபு துளங்கும்‌ வென்றித்தாகி
அளந்து வரம்பறியா வரும்படை யடங்கும்‌
வாயிலும்‌ வனப்பும்‌ மேவி வீற்றிருந்து
மதிலணி தெருவிற்றாக மற்றோர்க்‌
கெதிரில்‌ போக மியல்பமை மரபொடு
குதிரையுங்‌ களிறும்‌ கொடுஞ்சித்‌ தேரும்‌
அடுதிறன்‌ மன்னரும்‌ வடுவின்று காப்ப
நெடுமுடி மன்னருண்‌ மன்ன னேரார்‌
கடுமுரண ழித்த காய்சின நெடுவேற்‌
படுமணி யானைப்‌ பைந்தார்‌ வெண்குடை
உக்கிர குலத்துளரசருளரசன்‌
விற்றிறற்றானை விசயவர னென்னும்‌
நற்‌றிறன்‌ மன்னனாளுங்‌ காக்கும்‌
சண்பை பெருநகர்ச்‌ சால்பொடும்‌ விளங்கிய” (பெருங்‌,2;20; 103 125)

அசோதரம்

அசோதரம்‌ கடலால்‌ சூழப்‌ பெற்றிருந்தது. அந்நகரில்‌ அக்‌கடலொலி
எப்பொழுதும்‌ கேட்கும்படி அமைந்திருந்தது. இரவிவன்மன்‌ என்னும்‌ மன்னன்‌ அதை
ஆண்டான்‌. அவன்‌ மனைவி அமுதவதி அவர்கள்‌ இருவருக்கும்‌ இலக்குமி என்னும்‌
பெயரோடு மகளாக மணிமேகலை முற்பிறப்பில்‌ பிறந்திருக்‌கிறாள்‌.
அரவக்‌ கடலொலி அசோதரம்‌ ஆளும்‌
இரவிவன்மன்‌ ஒருபெருந்தேவி அமுதபதி வயிற்று
இலக்குமி யென்னும்‌ பெயர்‌ பெற்றுப்‌ பிறந்தேன்‌” (மணிமே. 9;38 41)
அடவி நாடுகள்‌.
முனையூர்‌ என்னும்‌ காரை உள்ளடக்கிய ஐம்பதும்‌ அடவி நாடுகள்‌ எனப்படும்‌. இவை
இடவகனுக்குச்‌ சீவிதமாக அளிக்கப்‌ பெற்றவை,
இடவகற்‌ இருந்த முனையூருள்ளிட்‌
டடவி ஈன்னாடைம்பது கொடுத்து
விறற்போர்‌ மன்னரிறுக்குந்‌ துறைதொறும்‌
புறப்பது வாரமொடு சிறப்புப்‌ பல செய்து
புட்பகம்புக்கு நின்னட்‌ புடனிருந்து
விளித்தபின்‌ வாவவென வளித்தவற்‌ போக்கி” (பெருங்‌. 4;9;28 33)

அசோதரம்

அசோதரம்‌ கடலால்‌ சூழப்‌ பெற்றிருந்தது. அந்நகரில்‌ அக்‌கடலொலி எப்பொழுதும்‌ கேட்கும்படி அமைந்திருந்தது. இரவிவன்மன்‌ என்னும்‌ மன்னன்‌ அதை ஆண்டான்‌. அவன்‌ மனைவி அமுதவதி அவர்கள்‌ இருவருக்கும்‌ இலக்குமி என்னும்‌ பெயரோடு மகளாக மணிமேகலை முற்பிறப்பில்‌ பிறந்திருக்‌கிறாள்‌.
அரவக்‌ கடலொலி அசோதரம்‌ ஆளும்‌
இரவிவன்மன்‌ ஒருபெருந்தேவி அமுதபதி வயிற்று
இலக்குமி யென்னும்‌ பெயர்‌ பெற்றுப்‌ பிறந்தேன்‌” (மணிமே. 9;38 41)
அடவி நாடுகள்‌.
முனையூர்‌ என்னும்‌ காரை உள்ளடக்கிய ஐம்பதும்‌ அடவி நாடுகள்‌ எனப்படும்‌. இவை இடவகனுக்குச்‌ சீவிதமாக அளிக்கப்‌ பெற்றவை,
இடவகற்‌ இருந்த முனையூருள்ளிட்‌
டடவி ஈன்னாடைம்பது கொடுத்து
விறற்போர்‌ மன்னரிறுக்குந்‌ துறைதொறும்‌
புறப்பது வாரமொடு சிறப்புப்‌ பல செய்து
புட்பகம்புக்கு நின்னட்‌ புடனிருந்து
விளித்தபின்‌ வாவவென வளித்தவற்‌ போக்கி” (பெருங்‌. 4;9;28 33)

அச்சிறுபாக்கம் 

தேவாரப் பாடல் பெற்ற இவ்வூர் பற்றிய எண்ணம் சங்க இலக்கியங்களில்
இல்லை. 1. இத்தலம் கன்னியாகுமரியில் கன்னியாயுள்ள பகவதியைத் தரிசிக்க விரும்பிய
அகத்தியர் தாம் தனிமையிற் செல்வது தகாதெனக் கருதி, தமது பத்தினியார் உலோப
முத்திரையாருடன் செல்லுகையில் பூசித்தது. சுவாமி பெயர் அகத்தீச்சுரர். அம்பிகை
அமுதவல்லி. அச்சு + இறு + பாக்கம் – அச்சிறு பாக்கம். விநாயகரை வணங்காது
திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனது அச்சு முறிந்த இடம் என்பர் இன்று செங்கற்பட்டு
மாவட்டத்தில் உள்ள இத்தலம். அச்சரப்பாக்கம் என்று வழங்குகிறது. அந்த அல்லது அழகிய
சிறு பாக்கம் என்ற பொருளில் பெயர் பெற்றிருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது.
மேலும் சேக்கிழார் கூற்று இவ்வூர் பெயரைச் சுட்டிய போதிலும் (திருஞான -1132 )
ஞானசம்பந்தர் இத்தலம் குறித்து பாடிய போதிலும் ( பதி 77, 175 ), இவ்வூர் பற்றிய
விளக்கங்களையோ, ஊர்ப்பெயர் பற்றியோ நாம் எதனையும் அறிந்து கொள்ள இயலவில்லை.

அச்சிறுபாக்கம்

தேவாரத் திருத்தலங்கள்

அச்சிறுபாக்கம்

தேவாரப் பாடல் பெற்ற இவ்வூர் பற்றிய எண்ணம் சங்க இலக்கியங்களில் இல்லை. 1. இத்தலம் கன்னியாகுமரியில் கன்னியாயுள்ள பகவதியைத் தரிசிக்க விரும்பிய அகத்தியர் தாம் தனிமையிற் செல்வது தகாதெனக் கருதி, தமது பத்தினியார் உலோப முத்திரையாருடன் செல்லுகையில் பூசித்தது. சுவாமி பெயர் அகத்தீச்சுரர். அம்பிகை அமுதவல்லி. அச்சு + இறு + பாக்கம் – அச்சிறு பாக்கம். விநாயகரை வணங்காது திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனது அச்சு முறிந்த இடம் என்பர் இன்று செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள இத்தலம். அச்சரப்பாக்கம் என்று வழங்குகிறது. அந்த அல்லது அழகிய சிறு பாக்கம் என்ற பொருளில் பெயர் பெற்றிருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது. மேலும் சேக்கிழார் கூற்று இவ்வூர் பெயரைச் சுட்டிய போதிலும் (திருஞான -1132 ) ஞானசம்பந்தர் இத்தலம் குறித்து பாடிய போதிலும் ( பதி 77, 175 ), இவ்வூர் பற்றிய விளக்கங்களையோ, ஊர்ப்பெயர் பற்றியோ நாம் எதனையும் அறிந்து கொள்ள இயலவில்லை.

அஞ்சில்

சங்க கால ஊர்கள்

அஞ்சைக்களம்

தேவாரத் திருத்தலங்கள்

அட்ட வாயில்

சங்க கால ஊர்கள்

அட்டவாயில்‌

அட்டவாயில்‌
இரு பெரு மன்னர்‌ போரிட்ட இடம்‌ என்பதைக்‌ குறிக்கும்‌ அட்டவாயில்‌ என்பது பின்னர்‌ ஊருக்குப்‌ பெயராய்‌ அமைந்தது என எண்ண வாய்ப்பு உள்ளது. இவ்வூர்ப்‌
பெயர்‌ அகநானூற்றுப்‌ பாடல்‌ ஒன்றில்‌ இடம்‌ பெற்றுள்ளது. பெருங்கொடி அசைந்து
பறக்கும்‌ ஊர்‌ என்றும்‌, அங்குள்ள கழனிகள்‌ பசுங்கதிர்களைத்‌ தாங்கப்‌ பெருங்‌
கவினுடையன என்றும்‌ அக்‌கவினையொத்தக்‌ கவினுடையவன்‌ தலைவி என்றும்‌ கூறி,
தலைவியின்‌ நலம்‌ பாராட்டப்‌ பெற்றுள்ளது. அகப்பெருள்‌ பற்றிக்‌ கூறும்‌
இலக்கியப்‌ பாடல்களில்‌ கர்ப்‌ பெயர்கள்‌ இடம்‌ பெற்றிருப்பதை நோக்கும்பொழுது
ஓர்‌ உண்மை புலப்படும்‌. தலைவியின்‌ நலம்‌ பாராட்டப்பெறும்‌ இடங்‌களில்‌
ஊர்ப்பெயர்கள்‌ பல இடம்‌ பெற்றிருக்கின்றன. ஊரின்‌ வளமும்‌ பெயரும்‌ கூறி
அப்பெருங்கவின்‌ ஒத்த நலமுடையான்‌ எனத்‌ தலைவியின்‌ நலம்‌ பாராட்டப்‌
பெற்றுள்ளது. இதன்‌ மூலம்‌ அக்‌ குறிப்பிட்ட நகரின்‌ வளமும்‌ நமக்குத்‌
தெரிகிறது.
பெருங்‌ கொடி நுடங்கும்‌ அட்டவாயில்‌
இருங்கதிர்க்‌ கழனிப்‌ பெருங்கவின்‌ அன்ன
நலம்பாராட்டி, நடை எழில்‌ பொலிந்து
விழவில்‌ செலீஇயர்‌ வேண்டும்‌……” (அகம்‌. 326:5 8)

அட்டவாயில்‌

அட்டவாயில்‌
இரு பெரு மன்னர்‌ போரிட்ட இடம்‌ என்பதைக்‌ குறிக்கும்‌ அட்டவாயில்‌ என்பது பின்னர்‌ ஊருக்குப்‌ பெயராய்‌ அமைந்தது என எண்ண வாய்ப்பு உள்ளது. இவ்வூர்ப்‌ பெயர்‌ அகநானூற்றுப்‌ பாடல்‌ ஒன்றில்‌ இடம்‌ பெற்றுள்ளது. பெருங்கொடி அசைந்து பறக்கும்‌ ஊர்‌ என்றும்‌, அங்குள்ள கழனிகள்‌ பசுங்கதிர்களைத்‌ தாங்கப்‌ பெருங்‌ கவினுடையன என்றும்‌ அக்‌கவினையொத்தக்‌ கவினுடையவன்‌ தலைவி என்றும்‌ கூறி, தலைவியின்‌ நலம்‌ பாராட்டப்‌ பெற்றுள்ளது. அகப்பெருள்‌ பற்றிக்‌ கூறும்‌ இலக்கியப்‌ பாடல்களில்‌ கர்ப்‌ பெயர்கள்‌ இடம்‌ பெற்றிருப்பதை நோக்கும்பொழுது ஓர்‌ உண்மை புலப்படும்‌. தலைவியின்‌ நலம்‌ பாராட்டப்பெறும்‌ இடங்‌களில்‌ ஊர்ப்பெயர்கள்‌ பல இடம்‌ பெற்றிருக்கின்றன. ஊரின்‌ வளமும்‌ பெயரும்‌ கூறி அப்பெருங்கவின்‌ ஒத்த நலமுடையான்‌ எனத்‌ தலைவியின்‌ நலம்‌ பாராட்டப்‌ பெற்றுள்ளது. இதன்‌ மூலம்‌ அக்‌ குறிப்பிட்ட நகரின்‌ வளமும்‌ நமக்குத்‌ தெரிகிறது.
பெருங்‌ கொடி நுடங்கும்‌ அட்டவாயில்‌
இருங்கதிர்க்‌ கழனிப்‌ பெருங்கவின்‌ அன்ன
நலம்பாராட்டி, நடை எழில்‌ பொலிந்து
விழவில்‌ செலீஇயர்‌ வேண்டும்‌……” (அகம்‌. 326:5 8)

அண்ணாமலை 

இடைக்காலத்தில் பெரும் புகழ்பெற்ற இவ்வூர் பற்றிய எண்ணங்கள்
இதற்கு முன்பு இல்லை. திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்,
சேக்கிழார், போன்றோரால் பாடப்பட்டப் பெருஞ்சிறப்பு டைய இத்தலம் இன்று வரை பெருமை
குன்றாது சிறப்புடன் திகழ்கின்றது. ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள இவ்வூர்,
உயர்ந்ததொரு மலையையும் கோயிலையும் தன்னுட் கொண்டு திகழ்கிறது. வட பிரம்மாவும்,
விஷ்ணுவும் அடி முடி காண இயலாத நிலையில், அழலுருவாக நிற்கின்றான் சிவன், விஷ்ணு
தன் தோல்வியை ஒப்புக் கொண்டதை மெச்சி அவருக்குத் தன் அடியையும் முடியையும்
காட்டுகிறார். அதற்காக அழல் உருவில் இருந்த இறைவன் மலையுருவில் குறுகுகிறார்.
அப்படிப் பொங்கழல் உருவினனாக இருந்த இறைவனே அண்ணாமலையானாக மாறி நிற்கிறார் என்று
தலபுராணம் கூறும் வரலாறு அண்ணாமலை இறைவன் மேற்கொண்ட பக்தியின் வெளிப்படை சான்றாக
அமைகிறது. இதனைத் தவிர்த்து, இங்குள்ள உயர்ந்த மலையையும் கோயிலையும் கொண்டு
மேலும் இப்பெயரை ஆராயின், அண்ணன் – உயர்ந்தோன் என்ற நிலையில் உயர்ந்தவனாகிய
றைவன் மலை இருக்கும் மலை என்ற பொருளையும், ( அண்ணாந்து ) உயர்ந்து பார்க்கும்
அளவிற்கு உயரிய என்ற பொருளையும் கொண்டு நோக்க உயர்ந்த மலை காரணமாகவும், உயர்ந்த
மலையினை இடமாகக் கொண்டிருப்பவன் என்ற நிலையிலும் இப்பெயர்த் தோற்றம்
பொருத்தமுறும் போல் தோன்றுகிறது. சேக்கிழார் தம் பெரிய புராணத்தில்,
அண்ணாமலை அங்கு அமரர் பிரான்
வடிவு போல் தோன்றுதலும் ( 34-970 )
என்று இறைவனின் உயர்வுக்கு ஒப்பிடுகின்றார் ; மேற் சுட்டிய புராணக்கதை
இக்கருத்தினின்றும் புனையப்பட்டதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. மேலும் அருணாசல
புராணம். அருணைக்கலம்பகம் என்ற நூற்பெயர்களில் அருணாசலம் இம்மலை குறித்து
வழங்குவதே. அண்ணாமலைக்குரிய வடமொழிப் பெயர்ப்பாக அருணாசலம் அமைகிறது. இவ்வூர்
பற்றிய எண்ணங்களை இவ்வூர்க் கோயில் கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன. முதல்
இராஜேந்திரன் காலத்தில் ( 1038 ) திருவண்ணாமலை என்று குறிப்பிடப்பட்ட இவ்வூர்
பின்னர் இராஜராஜ தேவர் காலத்தில் அண்ணா நாட்டுத் தளியூர் என்று வழங்கப்பட்டு
உள்ளதைக் காணுகின்றோம். அண்ணாமலை என்னும் பெயர் மக்கள் தொகை அதிகரித்து பெரும்
ஊராக மாறியது காரணமாக அண்ணா நாடு என்று சுட்டினரோ எனத் தோன்றுகிறது. மேலும்
அரசியல் காரணமாக அரசனால் சூட்டப்பட்ட இப்பெயர் மக்கள் மத்தியில் மிகுந்த
செல்வாக்கினைப் பெறவில்லை என்ற எண்ணம், அண்ணாமலை என்ற பெயரே இன்றுவரை
செல்வாக்குடன் திகழும் நிலையைக் காண எழும் ஒன்றாக அமைகிறது.

அண்ணாமலை

தேவாரத் திருத்தலங்கள்

அண்ணாமலை

இடைக்காலத்தில் பெரும் புகழ்பெற்ற இவ்வூர் பற்றிய எண்ணங்கள் இதற்கு முன்பு இல்லை. திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சேக்கிழார், போன்றோரால் பாடப்பட்டப் பெருஞ்சிறப்பு டைய இத்தலம் இன்று வரை பெருமை குன்றாது சிறப்புடன் திகழ்கின்றது. ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள இவ்வூர், உயர்ந்ததொரு மலையையும் கோயிலையும் தன்னுட் கொண்டு திகழ்கிறது. வட பிரம்மாவும், விஷ்ணுவும் அடி முடி காண இயலாத நிலையில், அழலுருவாக நிற்கின்றான் சிவன், விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக் கொண்டதை மெச்சி அவருக்குத் தன் அடியையும் முடியையும் காட்டுகிறார். அதற்காக அழல் உருவில் இருந்த இறைவன் மலையுருவில் குறுகுகிறார். அப்படிப் பொங்கழல் உருவினனாக இருந்த இறைவனே அண்ணாமலையானாக மாறி நிற்கிறார் என்று தலபுராணம் கூறும் வரலாறு அண்ணாமலை இறைவன் மேற்கொண்ட பக்தியின் வெளிப்படை சான்றாக அமைகிறது. இதனைத் தவிர்த்து, இங்குள்ள உயர்ந்த மலையையும் கோயிலையும் கொண்டு மேலும் இப்பெயரை ஆராயின், அண்ணன் – உயர்ந்தோன் என்ற நிலையில் உயர்ந்தவனாகிய றைவன் மலை இருக்கும் மலை என்ற பொருளையும், ( அண்ணாந்து ) உயர்ந்து பார்க்கும் அளவிற்கு உயரிய என்ற பொருளையும் கொண்டு நோக்க உயர்ந்த மலை காரணமாகவும், உயர்ந்த மலையினை இடமாகக் கொண்டிருப்பவன் என்ற நிலையிலும் இப்பெயர்த் தோற்றம் பொருத்தமுறும் போல் தோன்றுகிறது. சேக்கிழார் தம் பெரிய புராணத்தில்,
அண்ணாமலை அங்கு அமரர் பிரான்
வடிவு போல் தோன்றுதலும் ( 34-970 )
என்று இறைவனின் உயர்வுக்கு ஒப்பிடுகின்றார் ; மேற் சுட்டிய புராணக்கதை இக்கருத்தினின்றும் புனையப்பட்டதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. மேலும் அருணாசல புராணம். அருணைக்கலம்பகம் என்ற நூற்பெயர்களில் அருணாசலம் இம்மலை குறித்து வழங்குவதே. அண்ணாமலைக்குரிய வடமொழிப் பெயர்ப்பாக அருணாசலம் அமைகிறது. இவ்வூர் பற்றிய எண்ணங்களை இவ்வூர்க் கோயில் கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன. முதல் இராஜேந்திரன் காலத்தில் ( 1038 ) திருவண்ணாமலை என்று குறிப்பிடப்பட்ட இவ்வூர் பின்னர் இராஜராஜ தேவர் காலத்தில் அண்ணா நாட்டுத் தளியூர் என்று வழங்கப்பட்டு உள்ளதைக் காணுகின்றோம். அண்ணாமலை என்னும் பெயர் மக்கள் தொகை அதிகரித்து பெரும் ஊராக மாறியது காரணமாக அண்ணா நாடு என்று சுட்டினரோ எனத் தோன்றுகிறது. மேலும் அரசியல் காரணமாக அரசனால் சூட்டப்பட்ட இப்பெயர் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கினைப் பெறவில்லை என்ற எண்ணம், அண்ணாமலை என்ற பெயரே இன்றுவரை செல்வாக்குடன் திகழும் நிலையைக் காண எழும் ஒன்றாக அமைகிறது.

அதங்கோடு

அதங்கோடு என்னும்‌ ஊரில்‌ வாழ்ந்த ஆசான்‌ அதங்கோட்‌டாசான்‌ எனப்‌
பெயர்‌ பெற்றார்‌. பிறந்து வாழ்ந்த ஊரால்‌ பெயர்‌ பெற்றவர்கள்‌ சங்க காலப்‌
புலவர்களில்‌ பலர்‌, தொல்‌காப்பியர்‌ தம்‌ நூலை நிலந்தரு திருவிற்‌ பாண்டியன்‌
அவைக்‌ களத்தில்‌ அதங்கோட்டாசானுக்கு ஐயந்திரிபறத்‌ தெரிவித்தார்‌ என்று
பனம்பாரனார்‌ இயற்றியறப்புப்பாயிரம்‌ கூறுகிறது. கன்னியாகுமரியிலிருந்து
திருவனந்தபுரம்‌ செல்லும்‌ பெரு வழியில்‌ உள்ள கல்குளம்‌ வட்டத்தைச்‌ சார்ந்த
இருவிதாங்கோடு தான்‌ இந்த அதங்கோடு என்றும்‌, அதங்கோடு என்ற ஊர்ப்‌ பெயரே இரு
என்ற சிறப்படையுடன்‌ திருவதங்கோடு என வழங்கப்‌ பெற்றதாகவும்‌, இருவதங்கோடு
நாளடைவில்‌ இருவிதாங்கோடு என்று மெல்ல மெல்ல மாற்றம்‌ பெற்றதாகவும்‌
கருதுகின்‌றனர்‌. இருவிதாங்கோடு என்று திரிந்த பெயரே நாட்டின்‌ பெயராகவும்‌
வழங்குகின்றது ஆசிரியரை ஆசான்‌ என்று வழங்கும்‌ முறையை இன்றும்‌ கொண்டுள்ள
கன்னியாகுமரி மாவட்டத்தைச்‌ ‘ சேர்ந்ததே இவ்வூர்‌ என்ற கருத்தும்‌ உள்ளது.
அதங்கோடு என்ற ஊர்‌ பண்டைக்‌ காலத்தில்‌ சிறப்புடைய பேரூராய்‌ விளங்கியது
என்பதற்குரிய அடையாளமாக அவ்வூரில்‌ பழைய கோட்டை, மதில்‌ முதலியன ததைந்த
நிலையில்‌ உள்ளன. அதங்கோடு என்ற பெயருடன்‌ விளவங்கோடு வட்டத்திலும்‌ ஓர்‌ ஊர்‌
உள்ளது. “கோடு’ என்னும்‌ பொதுக்கூறு உச்சி என்ற ஒரு பொருளை “அதவம்‌’ என்பது ஒரு
மரப்பெயர்‌ என்று பொருள்‌ தரும்‌ சொல்‌. குறுந்தொகைப்‌ பாட்டொன்றால்‌ தெரிகிறது
அதவங்கோடு என்ற ஊர்ப்பெயர்‌, விளவங்கோடு என்பது போல மரப்பெயரால்‌ பெற்ற ஓர்‌
ஊர்ப்பெயர்‌. அல்லது அதுவமரங்கள்‌ நிறைந்த மலைப்பகுதி என்னும்‌ பொருளில்‌ பெற்ற
பெயர்‌, எனக்‌ கருத இடம்‌ உள்ளது. ஆகையால்‌ அதவங்கோடு என்ற பெயரே அதங்கோடு என ஆக
இருக்க வேண்டும்‌.
“நிலந்தரு இருவிற்‌ பாண்டியன்‌ அவையத்து
அறங்கரை நாவின்‌ தான்மறை முற்றிய
அதங்கோட்‌ டாசா.ற்‌ கறில்தபத்‌ தெரிந்து”
(தொல்‌. சிறப்புப்பாயிரம்‌)
“ஆற்று அயல்‌எழுத்த வெண்கோட்டு அதவத்து
எழுகுளிறு மிதித்த ஒரு பழம்போலக்‌
குழைய கொடியோர்‌ நாவே” (குறுந்‌. 24, 3 5)‌

அதங்கோடு

அதங்கோடு என்னும்‌ ஊரில்‌ வாழ்ந்த ஆசான்‌ அதங்கோட்‌டாசான்‌ எனப்‌ பெயர்‌ பெற்றார்‌. பிறந்து வாழ்ந்த ஊரால்‌ பெயர்‌ பெற்றவர்கள்‌ சங்க காலப்‌ புலவர்களில்‌ பலர்‌, தொல்‌காப்பியர்‌ தம்‌ நூலை நிலந்தரு திருவிற்‌ பாண்டியன்‌ அவைக்‌ களத்தில்‌ அதங்கோட்டாசானுக்கு ஐயந்திரிபறத்‌ தெரிவித்தார்‌ என்று பனம்பாரனார்‌ இயற்றியறப்புப்பாயிரம்‌ கூறுகிறது. கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம்‌ செல்லும்‌ பெரு வழியில்‌ உள்ள கல்குளம்‌ வட்டத்தைச்‌ சார்ந்த இருவிதாங்கோடு தான்‌ இந்த அதங்கோடு என்றும்‌, அதங்கோடு என்ற ஊர்ப்‌ பெயரே இரு என்ற சிறப்படையுடன்‌ திருவதங்கோடு என வழங்கப்‌ பெற்றதாகவும்‌, இருவதங்கோடு நாளடைவில்‌ இருவிதாங்கோடு என்று மெல்ல மெல்ல மாற்றம்‌ பெற்றதாகவும்‌ கருதுகின்‌றனர்‌. இருவிதாங்கோடு என்று திரிந்த பெயரே நாட்டின்‌ பெயராகவும்‌ வழங்குகின்றது ஆசிரியரை ஆசான்‌ என்று வழங்கும்‌ முறையை இன்றும்‌ கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச்‌ ‘ சேர்ந்ததே இவ்வூர்‌ என்ற கருத்தும்‌ உள்ளது. அதங்கோடு என்ற ஊர்‌ பண்டைக்‌ காலத்தில்‌ சிறப்புடைய பேரூராய்‌ விளங்கியது என்பதற்குரிய அடையாளமாக அவ்வூரில்‌ பழைய கோட்டை, மதில்‌ முதலியன ததைந்த நிலையில்‌ உள்ளன. அதங்கோடு என்ற பெயருடன்‌ விளவங்கோடு வட்டத்திலும்‌ ஓர்‌ ஊர்‌ உள்ளது. “கோடு’ என்னும்‌ பொதுக்கூறு உச்சி என்ற ஒரு பொருளை “அதவம்‌’ என்பது ஒரு மரப்பெயர்‌ என்று பொருள்‌ தரும்‌ சொல்‌. குறுந்தொகைப்‌ பாட்டொன்றால்‌ தெரிகிறது அதவங்கோடு என்ற ஊர்ப்பெயர்‌, விளவங்கோடு என்பது போல மரப்பெயரால்‌ பெற்ற ஓர்‌ ஊர்ப்பெயர்‌. அல்லது அதுவமரங்கள்‌ நிறைந்த மலைப்பகுதி என்னும்‌ பொருளில்‌ பெற்ற பெயர்‌, எனக்‌ கருத இடம்‌ உள்ளது. ஆகையால்‌ அதவங்கோடு என்ற பெயரே அதங்கோடு என ஆக இருக்க வேண்டும்‌.
“நிலந்தரு இருவிற்‌ பாண்டியன்‌ அவையத்து
அறங்கரை நாவின்‌ தான்மறை முற்றிய
அதங்கோட்‌ டாசா.ற்‌ கறில்தபத்‌ தெரிந்து”
(தொல்‌. சிறப்புப்பாயிரம்‌)
“ஆற்று அயல்‌எழுத்த வெண்கோட்டு அதவத்து
எழுகுளிறு மிதித்த ஒரு பழம்போலக்‌
குழைய கொடியோர்‌ நாவே” (குறுந்‌. 24, 3 5)‌

அதிகை 

திருவதிகை என தென்னார்க்காடு மாவட்டத்தில் அமையும் ஊர். இது
திருவதி என்றும் திருவீதி என்றும் கூட வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு அருகில்
உள்ளது. அதிகமான் தொடர்பு காரணமாக அமைந்த ஊர் என்பது பெயரில் மட்டும் அல்லாது
பிற சான்றுகளாலும் தெளிவுபடுகிறது. அடியார்கள் பலரின் மனத்தையும் கவர்ந்தது
இவ்வூர் என்பது பலரும் இங்குள்ள இறையைப் பரவும் தன்மை உணர்த் தும் நிலை.
ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் பாடிய தேவாரப்பதிகங்களுடன் பெரிய
புராணத்திலும் பதினோராம் திருமுறையிலும் கலிங்கத்துப் பரணியிலும் ( 299 )
இவ்வூர் பற்றிய எண்ணங்கள் அமைகின்றன. அதிகை எனவே பல இலக்கிய வழக்குகளிலும் அமைய.
நாவுக்கரசர் அதியரையமங்கை அமர்ந்தானை எனப்பாடும் நிலை அமைகிறது. ( பதி 217.296 )
சிவபெருமான் திரு விரட்டை மணி மாலை அதிகை மங்கை என்ற பெயரைத் தருகிறது ( 12 ).
கல் வெட்டுகளில் இப்பெயர் அதியரைய மங்கலம். அதிராச மங்கலம் அதிராச மங்கலியபுரம்
என வழங்கப்பட்ட நிலையையும் காண்கிறோம். மணவிற் கூத்தனான காலிங்கராயன்
இக்கோலுக்குப் பொன் வேய்ந்து இறைவியார் எழுந்தருளி இருக்கும் கோயிலையும்
கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. இவற்றை நோக்க அதியரையமங்கலம் என்ற
பெயரே இதன் பழம் பெயர். பின்னர் அது எளிமைப்படுத்தப்பட்டு, அதியரைய மங்கை,
அதிமங்கை என்றாகி அதிகை என்று நிலைபெற்றதோ எனத் தோன்றுகிறது. மங்கலம் என்ற
பொதுக் கூறு பற்றிப் பேசும்போது கி. நாச்சிமுத்து, இது குடியிருப்பினை
உணர்த்தும் சொல் ; வடமொழிச் சொல் எனக் குறிப்பிடுவர். அதியமான் பெயர்த்தொடர்பாக,
அம்மன்னர் மரபுத் தொடர்பாக அமைந்தது இப்பெயர் என்பதற்குப் பிறர் பலரின்
கருத்தும் அரணாக அமைகிறது. அதிக சங்க காலத்தில் பெரிய வீரனும், ஒளவை முதலியோர்
அருமையாகப் பாராட்டப் பெற்றவனுமாகிய மான் நெடுமான் அஞ்சி என்ற வள்ளலின் வரலாறு
பலரும் நன்கு அறிவர். இவ்வதிகமான் வமிசத்தவர்களைப் பற்றிய சாசனங்கள் சில
நமக்குக் கிடைத்துள்ளன. சேலம் மாவட்டம் திருச்செங்கோட்டுத் தாலுகாவில் உள்ள
தர்மபுரி என்றுள்ள ஊரே இவரது தலைநகரம். இத்தர்மபுரியை அடுத்துள்ள அதமன் கோட்டை
அதியமான் கோட்டையாகும். இவரை அதிராசன், அதியரையன் அதியேந்திரன் எழினியவனிகா
என்று சாசனங்கள் வழங்கும் எனவும், திருமுனைப்பாடி நாட்டில் உள்ளதும்
அதிராசமங்கலம் அதியரையன் மங்கலம் என்பதன் மரூஉவாய்ச் சாசனங்களில் வழங்குவதுமாகிய
அதிகை என்ற தலம் இவ்வரசர்களால் பெயர் பெற்ற மலரேயாகும் எனவும் கூறுகின்றார் மு.
இராகவையங்கார். அதிகமான் வாழ்ந்த இடமே இவ்வூர் என்பது தொ. மு. பாஸ்கரத்
தொண்டைமான் எண்ணம். எனவே அதியமான் என்ற பெயர்த்தொடர்பாகத் தோற்றம் பெற்ற
ஊர்ப்பெயர் இது என்பது தெளிவு. இலக்கியப் பயிற்சிகள் அனைத்தும் இங்குள்ள இறையைப்
புகழ்வதுடன், இவ்வூர் பற்றிய சில எண்ணங்களையும் தருகின்றன. கொடில நதிபாயும் இதன்
சிறப்பை, கெடில வடகரைத்தே யெந்தை வீரட்டமே என்று இயம்புகின்றார் நாவுக்கரசர் (
105 ) மேலும் தென்றிசைக் கெங்கை எனவும் இந்நதி சுட்டப்படுகிறது ( திருஞா பதி 10-
2 ). சேக்கிழார், செய்தவ மாதவர் வாழும் திருவதிகை என்ற நிலையில் இங்குப்
பிறத்தல் சிறப்பு என்பதைச் சுட்டுகின்றார். மேலும் அதிகை மூதூர் (திருநா. பதி
15-3 ), அதிகை மாநகர் என்ற எண்ணங்கள் இவ்வூரின் பழமையையும், பெருமையையும் எடுத்
தியம்பும் நிலையில் அமைகின்றன.

அதிகை

திருவதிகை என தென்னார்க்காடு மாவட்டத்தில் அமையும் ஊர். இது திருவதி என்றும் திருவீதி என்றும் கூட வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு அருகில் உள்ளது. அதிகமான் தொடர்பு காரணமாக அமைந்த ஊர் என்பது பெயரில் மட்டும் அல்லாது பிற சான்றுகளாலும் தெளிவுபடுகிறது. அடியார்கள் பலரின் மனத்தையும் கவர்ந்தது இவ்வூர் என்பது பலரும் இங்குள்ள இறையைப் பரவும் தன்மை உணர்த் தும் நிலை. ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் பாடிய தேவாரப்பதிகங்களுடன் பெரிய புராணத்திலும் பதினோராம் திருமுறையிலும் கலிங்கத்துப் பரணியிலும் ( 299 ) இவ்வூர் பற்றிய எண்ணங்கள் அமைகின்றன. அதிகை எனவே பல இலக்கிய வழக்குகளிலும் அமைய. நாவுக்கரசர் அதியரையமங்கை அமர்ந்தானை எனப்பாடும் நிலை அமைகிறது. ( பதி 217.296 ) சிவபெருமான் திரு விரட்டை மணி மாலை அதிகை மங்கை என்ற பெயரைத் தருகிறது ( 12 ). கல் வெட்டுகளில் இப்பெயர் அதியரைய மங்கலம். அதிராச மங்கலம் அதிராச மங்கலியபுரம் என வழங்கப்பட்ட நிலையையும் காண்கிறோம். மணவிற் கூத்தனான காலிங்கராயன் இக்கோலுக்குப் பொன் வேய்ந்து இறைவியார் எழுந்தருளி இருக்கும் கோயிலையும் கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. இவற்றை நோக்க அதியரையமங்கலம் என்ற பெயரே இதன் பழம் பெயர். பின்னர் அது எளிமைப்படுத்தப்பட்டு, அதியரைய மங்கை, அதிமங்கை என்றாகி அதிகை என்று நிலைபெற்றதோ எனத் தோன்றுகிறது. மங்கலம் என்ற பொதுக் கூறு பற்றிப் பேசும்போது கி. நாச்சிமுத்து, இது குடியிருப்பினை உணர்த்தும் சொல் ; வடமொழிச் சொல் எனக் குறிப்பிடுவர். அதியமான் பெயர்த்தொடர்பாக, அம்மன்னர் மரபுத் தொடர்பாக அமைந்தது இப்பெயர் என்பதற்குப் பிறர் பலரின் கருத்தும் அரணாக அமைகிறது. அதிக சங்க காலத்தில் பெரிய வீரனும், ஒளவை முதலியோர் அருமையாகப் பாராட்டப் பெற்றவனுமாகிய மான் நெடுமான் அஞ்சி என்ற வள்ளலின் வரலாறு பலரும் நன்கு அறிவர். இவ்வதிகமான் வமிசத்தவர்களைப் பற்றிய சாசனங்கள் சில நமக்குக் கிடைத்துள்ளன. சேலம் மாவட்டம் திருச்செங்கோட்டுத் தாலுகாவில் உள்ள தர்மபுரி என்றுள்ள ஊரே இவரது தலைநகரம். இத்தர்மபுரியை அடுத்துள்ள அதமன் கோட்டை அதியமான் கோட்டையாகும். இவரை அதிராசன், அதியரையன் அதியேந்திரன் எழினியவனிகா என்று சாசனங்கள் வழங்கும் எனவும், திருமுனைப்பாடி நாட்டில் உள்ளதும் அதிராசமங்கலம் அதியரையன் மங்கலம் என்பதன் மரூஉவாய்ச் சாசனங்களில் வழங்குவதுமாகிய அதிகை என்ற தலம் இவ்வரசர்களால் பெயர் பெற்ற மலரேயாகும் எனவும் கூறுகின்றார் மு. இராகவையங்கார். அதிகமான் வாழ்ந்த இடமே இவ்வூர் என்பது தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எண்ணம். எனவே அதியமான் என்ற பெயர்த்தொடர்பாகத் தோற்றம் பெற்ற ஊர்ப்பெயர் இது என்பது தெளிவு. இலக்கியப் பயிற்சிகள் அனைத்தும் இங்குள்ள இறையைப் புகழ்வதுடன், இவ்வூர் பற்றிய சில எண்ணங்களையும் தருகின்றன. கொடில நதிபாயும் இதன் சிறப்பை, கெடில வடகரைத்தே யெந்தை வீரட்டமே என்று இயம்புகின்றார் நாவுக்கரசர் ( 105 ) மேலும் தென்றிசைக் கெங்கை எனவும் இந்நதி சுட்டப்படுகிறது ( திருஞா பதி 10- 2 ). சேக்கிழார், செய்தவ மாதவர் வாழும் திருவதிகை என்ற நிலையில் இங்குப் பிறத்தல் சிறப்பு என்பதைச் சுட்டுகின்றார். மேலும் அதிகை மூதூர் (திருநா. பதி 15-3 ), அதிகை மாநகர் என்ற எண்ணங்கள் இவ்வூரின் பழமையையும், பெருமையையும் எடுத் தியம்பும் நிலையில் அமைகின்றன.

அதிகை வீரட்டானம்

தேவாரத் திருத்தலங்கள்

அத்தங்குடி

திருஞானசம்பந்தர் பாடல் மூலம் அறியப்படுகின்ற ஊர் அத்தங்குடி. ஞானசம்பந்தர் இறைவன் குடிகொண்டிருக்கின்ற பல ஊர்ப்பெயர்களைச் சொல்லிப்போகும் நிலையில் இதனையும் மருவும் அத்தங்குடி ( பதி 175-10 ) எனச் சுட்டுகின்றார். அத்தன் இறையைச் சுட்டி, இறை குடியிருக்குமிடம் என்ற பொருளில் அத்தங்குடி தோற்றம் பெற்றிருக்கலாம்.

அத்தினபுரம்‌

எலிச்செவி யரசனுக்கு உரியதாக இருந்த ஒரு நகரம்‌. தருசகனோடு போர்‌ செய்ய வந்த எலிச்செவியரசனின்‌ முன்னோர்‌ இரவோடு இரவாகத்‌ தோற்று ஓடினர்‌.
“அத்தினபுரத்தினரசருளரிமான்‌
வேண்டியதுமுடிக்கும்‌ வென்றித்தானை
ஈண்டிய வாற்றலெவிச்‌ செவியரசனும்‌” (பெருங்.8 10)

அத்தீச்சுரம்

இறைவன் உறைகின்ற சுரங்கள் பலவற்றையும் தொகுத்துக் கூறும் திருநாவுக்கரசர், அத்தீச்சுரத்தையும் ஒன்றாகக் குறிப்பிடுகின்றார். ( பதி 285-8 ). அத்தனாகிய இறைவன் தங்கியிருக்கும் சுரம் என்ற பெயரில், அமைந்த கோயிற் பெயர். பின்னர் ஊர்ப் பெயராக அமைந்திருக்க வாய்ப்புண்டு. பொதிய மலையின் தொடர்பில் உள்ளது சிவசைலம் என வழங்குகிறது. ஈண்டு அத்திரிமுனிவர் பூசித்துப் பேறு பெற்றமையானும் அத்திரி முனிவர் ஆசிரமம் அம்மலையில் இருத்தலானும் அத்தீச்சுரம் எனலாயிற்று எனத்தேவாரலைப்புத் தல விளக்கம் ( பக் -17) இதற்குப் புராணச் சார்பு காட்டுகிறது.

அந்தியூர்

கோயம்புத்தூர் மாவட்டம்
உடுமலைப்பேட்டை வட்டத்திலும், தென்னாற்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி
வட்டத்திலும் என இரண்டு இடங்களில் இவ்வூர்ப்பெயர் அமைந்திருத்தலை
அறியமுடிகிறது.  சுவடியில்,
“கோயம்புத்தூர் ஜில்லா அந்தியூர்” (2877-கீ) என்றிருப்பதைக்
காணும்போது, இங்குக் குறிப்பிட்ட ஊர் முதலில் குறிப்பிட்ட இடத்தையே சாரும்
என்பது தெளிவுபடும்.

அனேகதங்காவதம்

தேவாரத் திருத்தலங்கள்

அன்னதானப்பட்டி

“சேலம் அன்னதானப்பட்டி” (1470-த) என்னும் சுவடிக்
குறிப்பில் இருந்து இவ்வூர் சேலம் மாவட்டம் சேலம் வட்டத்தைச் சேர்ந்தது என்பது
தெளிவுபடுகிறது.  இவ்வூர்ப்பெயரில்
எந்தவொரு மாற்றமும் இல்லாத காரணத்தாலும், இடப்பகுதி மாற்றமில்லாத காரணத்தாலும்
இச்சுவடி தற்காலத்துச் சுவடியாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

அன்னியூர்

இன்று பொன்னூர் என்று சுட்டப்படும் தலம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. அன்னிகுடி என்றதொரு ஊர் இம்மாவட்டத்தில் உண்டு. தனை அன்னி என்ற சங்ககாலக் குறுநில மன்னனோடு தொடர்பு படுத்துவர். இப்பெயரைப் போன்று அன்னியூரும் அமைந்திருக்கலாம்.
ஆறுவைத்த சடை யன்னியூரே – திருநா-122-1
மன்னியூரிறை சென்னியார் பிறை
அன்னியூரமர் மன்னு சோதியே – திருஞா- 96-1
எய்தி போந்தன்னியூர் சென்று போற்றி – பெரிய -34-289

அன்னியூர் ச. சங்ககால அரசன் அன்னி மிஞிலி

தேவாரத் திருத்தலங்கள்

அன்பிலாந்துறை (அன்பில்)

தேவாரத் திருத்தலங்கள்

அன்பில் ஆலந்துறை

திருமாலயன் துறை, கீழம்பில், அல் பில் என்றெல்லாம் சுட்டப்படும் ஊர் இது. திருச்சி மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தர் அப்பர் இருவரும் இத்தலத்து இறைவனைப் பாடுகின்றனர்.
பிணைமா மயிலும் குயில் சேர் மடவன்னம்
அணையும் பொழில் அன்பின் ஆலந்துறை யாரே – திருஞா 33.
எனவும்,
நீருண் கயலும் வயல் வாளைவராலோ
டாரும் புனல் அன்பின் ஆலந்துறை யாரே திருஞா – 33-3
எனவும் பல இதன் இயற்கை வளம் பாடும் சம்பந்தர் பாடல்கள் ஊர்ப் பெயர்பற்றிய எந்த விளக்கத்தையும் தரவில்லை. எனினும் அன்பில் ஊர்ப்பெயர் என்பதும் ஆலந்துறை கோயிற் பெயர் என்பதும் தெரிகிறது. எனினும் அன்பில் என்ற ஊர்ப் பெயர்க்குரிய பொருளும் விளங்குமாறு இல்லை. எனவே இதனை மரூஉப் பெயராகக் கொள்ளலாமோ எனத் தோன்றுகிறது. மரூஉ என்றால் இச்சொல்லின் மரூஉவாக எது இருக்கலாம் என்ற கேள்வி எழுகிறது. சங்க இலக்கியத்தில், இடங்களில் அழும்பில் என்ற பலர்ப் பெயர் ஒன்றைக் காண்கின்றோம். ( பத்து 344, அகம் 44, புறம் 283, சிலம்- 25-177 ) இதனை நோக்க அழும்பில் என்பது அம்பில் என்றுத் திரிந்து அன்பில் ஆகியிருக்கக் கூடுமா எனத் தோன்றுகிறது சோழநாட்டைச் சார்ந்தது அழும்பில் என்பது சங்க இலக்கியம் கொண்டு ஆய்வாளர் சுட்டும் உண்மை. இங்கும் அம்பில் திருச்சி மாவட்டத்திலேயே அமைகிறது. அடுத்து, புதுக்கோட்டைச் சீமையில் உள்ள அம்புக் கோயிலே அழும்பில் என்பார் ராபி. சேதுப்பிள்ளை. எனவே மேலும் பல சான்றுகள் கிடைப்பின் இவ்வூர் பற்றிய தெளிவு கிடைக்கலாம்.

அப்பிபாளையம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கரூர் வட்டத்திலும், மதுரை மாவட்டம்
பழனி வட்டத்திலும் இவ்வூர்ப்பெயர் அமைந்திருத்தலை அறியமுடிகிறது.  சுவடியில் “கரூர் தாலுகா அப்பிபாளையங்
கிராமம்”(250-த) என்றிருப்பதைக் காணும்போது, இங்குக் குறிப்பிட்ட ஊர்
முதலில் குறிப்பிட்ட இடத்தையே சாரும் என்பது தெளிவு.  இவ்வூர்ப்பெயர் இடம்பெற்ற ‘வீரகுமார நாடகம்’
(250-த) என்றும் சுவடி, பிங்கள வருடம் வைகாசி மாதம் பதினான்காம் தேதி
ஞாயிற்றுக்கிழமை ஆயில்ய நட்சத்திரத்தன்று (27.5.1917) எழுதப்பட்டதென்று
அறியமுடிகிறது.

அமராபதி

அமராபதி என்னும்‌ ஊர்ப்பெயர்‌ பெருங்கதையில்‌ இடம்‌ பெற்றிருக்கிறது. இந்திரன்‌ உறையும்‌ அமராபதி என்றும்‌, வாச வதத்தை அமராவதியைக்காண வேண்டும்‌ என்று ஆவல்‌ கொண்டாள்‌ எனவும்‌ கூறப்பெற்றுள்ளது. அமராவதி என்ற பெயருடைய ஒருநகர்‌ குண்டூர்‌ மாவட்டத்‌தில்‌ கிருஷ்ணா ஆற்றங்கரையில்‌ உள்ளது, இது சாதவாகன அரசர்‌களின்‌ கீழைத்தலை நகரமாய்‌ இருந்துள்ளது.
“அமையாச்‌ செய்‌ தொழிலவுணர்க்‌ கடந்த
இமையாச்‌ செங்கணிந்திரனுறையும்‌
அமராபதியும்‌ நிகர்‌ தனக்கன்றித்‌
துன்ப நீக்குந்‌ தொழிலிற்றாகி
இன்பங்‌ கலந்த விராசகரிய மென்‌
றெண்டிசை மருங்கனுந்‌ தன்‌ பெயா்‌ பொறித்த
மன்பெருஞ்‌ சிறப்பின்‌ மல்லன்‌ மாநகர்‌” (பெருங்‌. 3;3:110 119)
“கைவைத்‌ தொழியக்‌ கடந்து சென்றுப்‌ பால்‌
அமராபதியு மந்தரத்‌ தெல்லையும்‌
நுகர்‌ பூங்காவு நோக்குபு வருதற்‌
குற்ற தென்மனனு முணர்‌ வினளாகி” (௸.5;1:190 193)

அம்பர்

சங்க கால ஊர்கள்

அம்பர்

தேவாரத் திருத்தலங்கள்

அம்பர்‌

சோழ நாட்டில்‌ அம்பர்‌ என்ற பெயருடன்‌ ஓர்‌ ஊர்‌ உள்ளது. தஞ்சை மாவட்டத்தில்‌ பூந்தோட்டம்‌ புகைவண்டி நிலையத்‌திற்குத்‌ தென்கிழக்கே சுமார்‌ நான்கு கிலோ மீட்டர்‌ தொலைவில்‌ உள்ளது. இவ்வூரை அடுத்து அம்பர்‌ மாகானம்‌ உள்ளது. “அரிசிலம்‌ பொருபுனல்‌ அம்பர்‌ மாநகர்க்‌ குரிசில்‌ செங்கண்‌ ணவன்‌ கோயில்‌ சேர்வரே” என்னும்‌ தேவாரத்தின்மூலம்‌ அரசலாற்றங்கரையில்‌ அம்பர்‌ மாநகர்‌ அமைந்து இருந்தமையை அறிகிறோம்‌. ஆற்றில்‌ அக்‌கரையில்‌ அமைந்த ஊர்‌ என்னும்‌ பொருள்பட அம்பர்‌ என்ற பெயர்‌ அமைந்திருக்கலாம்‌. சுசீந்திரத்‌தில்‌ பழையாற்றின்‌ அக்‌கரையில்‌ அமைந்த ஊர்‌ அக்கரை என்றே பெயர்‌ பெற்றிருப்பது ஒப்பு நோக்கத்தக்கது. அம்பர்‌ என்னும்‌ ஊர்‌ அருவந்தை என்ற வள்ளலுக்கு உரியதாக இருந்தது என்பதை அம்பர் கிழான்‌ அருவந்தையைக்‌ கல்லாடனார்‌ பாடிய புறநானூற்றுப்‌ பாட்டு ஒன்று தெரிவிக்கிறது. புலவர்‌ பெயர்‌ ஊர்ப்பெயருடன்‌ இணைத்துக்‌ கூறப்‌பட்டதை போல வள்ளல்‌ முதலியேரரின்‌ பெயரும்‌ ஊர்ப்பெயருடன்‌ இணைத்துக்கூறப்பட்ட மரபும்‌ இருந்தது என்பதற்கு இது ஒரு சான்று. சோழன்‌ கிள்ளிக்குரிய அம்பரைச்‌ சூழ்ந்து அரிசில்‌ என்னும்‌ ஆறு ஓடியதாக கூறும்‌ சங்க இலக்கியப்‌ பாடலும்‌ அம்பர்‌ என்ற ஊர்‌ சோழ நாட்டினகத்ததே என்ற கருத்தை வலியுறுத்துகிறது. அம்பர்‌ என்ற பெயருடன்‌ மற்றும்‌ ஓர்‌ ஊர்‌ ஜெய்ப்பூர்‌ அரன்‌ தலைநகராக இருந்துள்ளது. இவ்வூர்‌ நம்‌ சங்கஇலக்கியங்‌களில்‌ குறிக்கப்பெற்ற அம்பா்‌ இல்லை,
“ஏந்து கோட்டு யானை இசைவெங்கிள்ளி
வம்பு அணி உயர்கொடி அம்பர்‌ சூழ்ந்த
அரிசில்‌ அம்தண்‌ அறல்‌ அன்ன இவள்‌
விரிஒலி கூந்தல்‌ விட்டு அமைகலனே”
(நற்‌, 141: 9.12)
காவிரி அணையும்‌ தாழ்நீர்ப்‌ படப்பை
நெல்விளை கழனி அம்பர்‌ கிழவோன்‌
நல்‌ அருவந்தை வாழியர்‌……”
(புறம்‌, 385,8 10)

அம்பர்

அம்பர் என்றதொரு ஊர்ப்பெயர் சங்க காலம் தொட்டே தெரிய வருகின்றது. அம்பர் தொடர்பாக இக்காலத்து மூன்று ஊர்ப்பெயர்களைக் காண்கின்றோம். அம்பர், அம்பர் மாகா ளம் இன்னம்பர் என்பன அம்மூன்றும். மூன்றுமே தஞ்சையைச் சார்ந்தன. இவற்றுள் அம்பர், அம்பர் மாகாளம் இரண்டும் அருகருகேயுள்ள ஊர்கள். அம்பர் இன்றும் அம்பர் என்றே வழங்கப்படுகின்றது. தலமரம் புன்னையாக அமையும் இக்கோயில் கோச்செங் கட்சோழன் கட்டிய மாடக்கோயிலாகும். ! என்ற எண்ணம் கோயில் பழமையுணர்த்தும் ஒரு சான்றாகும். எனவே இதனை வைத்து சங்க காலம் சுட்டும் அம்பர் இன்று காணப்படும் அம்பர் இரண்டும் ஒன்றாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்திற்கும் நாம் வரலாம். சங்க காலச் சான்றுகளை நோக்க கோயில் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே, பின்னர் சோழன் கட்டிய கோயில் இங்கு உள்ளது என்பது பொருத்தமாகிறது. அரிசிலாற்றங் கரையில் உள்ள தனை,
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே ( நற் 141 )
காவிரி அணையும் தாழ்நீர் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன் ( புறம் 385 )
எனவும் இப்பாடல் காட்டும் தன்மை அரிசிலாற்றங் கரையில் உள்ளமையை உணர்த்துகின்றன. இதனை நோக்க அம்பர் நீர்த் துறையினுள் அமைந்த இடமாகத் தெரிதலையும், அப்பு நீரைக் குறிக்கும் பெயர் என்பதையும் நோக்க, நீரோடு இப்பெயர்த் தொடர்பு கொண்டமைந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. வண்டு என்பது வண்டர் என்று அமைந்தாற்போன்று, அம்பு என்ற சொல் அம்பர் என்று நின்றதோ எனவும் கருதலாம். இந்நிலையில் வேட்டுவர் தொடர்பானதாக இப்பெயர் அமையும். அம்பர், அம்பர் மாகாளம் என்ற இரு ஊர்களும் அடுத் தடுத்து அமைவதைக் காண, முதலில் அம்பர் என்ற ஊரிலேயே அம்பர் மாகாளமும் அமைந்து, பின்னர் அக்கோயிற் சிறப்பு காரணமாக அதனைத் தனித்து அம்பர் மாகாளம் எனச் சுட்டும் தன்மை அமைந்ததோ என்ற எண்ணமும், எழுகின்றது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது. நாவுக்கரசரும் இவ்விறை வனைக் குறிப்பிடுகின்றார். ( பதி -30 / – 3 ) அம்பர் நகர் என்ற சேக்கிழாரின் கூற்று. ( 34529-4 ) அம்பர் தனிப்பகுதியாகச் சிறந்து விளங்கியது என்பதை யுணர்த்தவல்லது. கல்வெட்டும் அம்பர் நாடு என்று சுட்டுவது இணைத்து நோக்கத்தக்கது.

அம்பர் பெருந்திருக்கோயில்

தேவாரத் திருத்தலங்கள்

அம்பர் மாகாளம்

தேவாரத் திருத்தலங்கள்

அம்பர் மாகாளம்

இன்று கோயில் திருமாகாளம் என்று வழங்கும் இப்பெயர், அம்பர் ” என்ற ஊரில் உள்ள இக்கோயிலைத் தனித்துணர்த்த அம்பர் மாகாளத்தினின்றும், கோயில் மாகாளம் குறிக்கப்பட்டதாக இருக்கலாம். மேலும் இங்குள்ள கோயிற் சிறப்பையும் இப்பெயர் காட்டுகிறது. அம்பன், அம்பாசூரன் என்னும் அசுரர்களைக் கொன்ற பாவம் தீர, காளி இறைவனைப் பூசித்து வழிப்பட்ட தலம் என்ற எண்ணம் மேலும் ஒரு கருத்தை யும் தருகிறது. அதாவது அம்பர் என்ற ஊர்ப்பெயர் மிகப் பழமையான தொன்றாக, அமைய, இப்புராணக்கதை, சமய மலர்ச்சி பெற்ற இக்காலத்து எழுந்ததொரு புராணக்கதை என்பதை இவண் வெளிப்படையாகக் காண்கின்றோம். காளி தொடர்பாக மாகாளம் என்ற பெயர் அல்லது மாகாள ரிஷி பூசித்தமை காரணமாக, மாகாளம் என்ற பெயர் கோயிலுக்கு அமைந்து இருக்கக்கூடும். இத்தலம் முதற் குலோத்துங்கன் காலத்தில் அம்பர் நாட்டு அம்பர் திரு மாகாளம் எனவும், இராகசேசரி வர்மனான குலோத்துங்கள் காலத்து பூபால குலவல்லி வள நாட்டு அம்பர் நாட்டு அம்பர் மாகாளம் எனவும் வழங்கப் பட்டது என அறிகின்றோம் ! எனவே அம்பர் நாட்டின் நடுப்பகுதியாக மாகாளம் இருந்தது தெளிவாகின்றது. தனிப்படுத்தவே கோயிற் மாகாளம் எனப் பின்னர் குறிப்பிடத் தொடங்கினர் என்பதும் தெளிவாகிறது. இரண்டு ஊர்களும் சம்பந்தர் பாடல் பெற்று சிறக்கின்றன. அம்பர் மாகாளம் அரிசிலாற்றங்கரையில் இருக்கும் ஊர் என்பதை ஞானசம்பந்தரின்,
“மல்கு தண்டுறை யரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம்” ( 239-1 ) எனக் காட்டுகிறது.

அயனீச்சுரம்

அகத்தீச்சுரம், அத்தீச்சுரம் போன்று திருநாவுக்கரசரால் சுட்டப்படும் தலம் ( பதி 285-8 ). இறைவன் குடி கொண்ட நிலையில் சிவன் உறை இடத்தைக் குறிப்பிடுகிறது. அயன் வழி பட்ட தலம் என்ற நிலையில் இப்பெயர் தோற்றம் பெற்றதா ? இல்லை, ஐயன் ( சிவன் ) ஈச்சுரம் அயனீச்சுரமாயிற்றா என்பது சிந்திக்கத்தக்கது.

அயோத்தி

தருசசனுடைய பகை மன்னர்களில்‌ ஒருவனாக அயோத்தி அரசன்‌ குறிக்கப்பெறும்‌ நிலையில்‌ அயோத்தி என்ற ஊர்ப்பெயர்‌ பெருங்கதையில்‌ இடம்‌ பெற்றுள்ளது. ஊரைப்பற்றிய வேறு தகவல்கள்‌ ஒன்றும்‌ விளக்கிக்‌ கூறப்பெறவில்லை, அயோத்தி என்ற ஊர்‌ கோக்ரா நதியின்‌ கரையில்‌ பைஜா பாத்துக்கு அருகில்‌ இருக்கிறது. இராமன்‌ பிறந்த நகரம்‌ இது என்று கருதுகின்றனர்‌. ஒருகாலத்தில்‌ அயோத்தி ஒரு மாகாணமாக இருந்தது. இன்று உத்தரப்பிரதேச இராச்சியத்தில்‌ சேர்ந்‌துள்ளது.
அருந்திறற்‌ சூழ்ச்சி யடல்‌ வேத்றானை
அயிர்த்‌ துணைப்‌ பல்படை யயோத்தி யரசனும்‌ (பெருங்‌, 3: 17:20 21)

அய்யம்பாளையம்

வட ஆற்காடு மாவட்டம் ஆரணி, திருவண்ணாமலை ஆகிய வட்டங்களிலும்,
கோயம்புத்தூர் மாவட்டம் அவனாசி, ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய
வட்டங்களிலும், மதுரை மாவட்டம் திண்டுக்கல், பழனி வட்டங்களிலும்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி, முசிரி வட்டங்களிலும் இவ்வூர்ப் பெயர்
இருப்பதை அறியமுடிகிறது.  சுவடியில்,
“கோயமுத்தூர் ஜில்லா தாராபுரந் தாலுகா அய்யம்பாளையம்” (1144-த)
என்றிருப்பதைக் காணும்போது இங்குக் குறிப்பிட்ட ஊர் மேலே குறிப்பிட்ட
கோயம்புத்தூர் மாவட்டத்து நான்கு வட்டங்களிலும் அன்றி வேறொரு வட்டமான
தாராபுரத்தில் அமைந்திருப்பதைக் குறிப்பிட்டிருப்பதைக் காணும்போது தாராபுரம்
வட்டத்தில் அய்யம்பாளையம் என்றொரு ஊர் இருக்கின்றா? இல்லை, வட்டப் பகுதிகள்
மாற்றமடைந்ததில் மேலே குறிப்பிட்ட நான்கு வட்டங்களில் எந்த வட்டத்தில் இவ்வூர்
இடம்பெற்றுள்ளது? காலத்தை நிர்ணயம் செய்தபின் இவ்வூர் இடம்பெற்ற சுவடியின் சுவடி
எழுந்த காலத்தை ஓரளவுக்குத் தீர்மானிக்கலாம்.

அரங்கம்

பண்டு தொட்டு இன்றுவரை, பேரும் புகழும் பெற்ற வைணவத் தலங்களுள் சிறப்பிடம் பெற்று விளங்குவது அரங்கம், ஸ்ரீரங்கம் என்று இப்போது வழங்கப்படும் இவ்வூர் சிலப்பதி காரத்திலேயே சிறப்பிடம் பெற்ற இடமாக அமைந்தது. (சிலம்பு 10-156 ) இங்குள்ள அரங்கன் பற்றி பல புராணக்கருத்துகள் வழங்குகின்றன. எனினும் மக்கள் மனத்தில் இவன் மிகுந்த இடம்பற்றிக் கொண்டான் என்பதையே இவை அனைத்தும் உணர்த்துகின்றன. மிகப்பெரிய கோயிலையும், ஏழு பிரகாரங்களையும், இருபத்தொரு கோபுரங்களையும் கொண்ட இவ்வரங்கன் மீது ஆழ்வார் பலரும் பாமாலை பொழிந்துள்ளனர். ஆற்றின் நடுவே உள்ள இடைக்குறைக்கு அரங்கம் என்றும் துருத்தி என்றும் பெயர் உள்ளன. ரங்கம் வடமொழிப் பெயர். ( ஊரும் பேரும் பக். 18) அரங்கத்தில் பள்ளி கொண்டமையால் போலும். 1 அரங்க நாதன் என்ற பெயரையும் பெற்றான். இத்திரு அரங்கம் சிறப்பு பெற்று திகழ்ந்தமை ஆழ்வார் பாடல் அனைத் தாலும் தெளிவு பெறுகிறது. இக்கோயிலின் பெயர் பின்னர் அத்தலம் முழுமையும் குறித்து ஊர்ப்பெயராக அமைந்தது என்பது விளக்கமாகத் தெரிகிறது. திருச்சியில் காவிரிக்கும் கொள் ளிடத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ளமையால் இப்பெயர் அமைகிறது. அரங்கத்திற்குரிய போகமண்டபம் பூலோக வைகுண்டம் போன்ற பெயர்களும் இதன் சிறப்பு நோக்கி எழுந்தவை. மேலும், சைவத்தில் கோயில் என்பது தில்லையைக் குறிப்பது போன்று, வைணவத்தில் கோயில் என்றால் திருவரங்கத்தைக் குறிப்பது இதன் பெருஞ்சிறப்பு உணர்த்தும் நிலையாகும். பல கல்வெட்டுகளில் இக்கோயில் பற்றிய பல செய்திகளும், அரசியல் தொடர்புடையச் செய்திகளும், அரசர் செய்த பணிகளும் சுட்டப்படுகின்றன.

அரசிலி

ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம் இன்று ஒழிந்தியாபட்டு என்று வழங்கப்படுகிறது. விரிசடையில் ஆறணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியைச் சென்றடைந்த ஞானசம்பந்தர் பற்றி சேக்கிழார் பாட ( 1134, 1135), ஞானசம்பந்தர் பத்துப் பாடல்களாலும் சிறப்பிக்கின்றமையை அவரது தேவாரப்பாக்கள் இயம்புகின்றன. இப்பெயர் பற்றி ஆயும்போது அரசு இலி என்ற நிலையில் அரசமரத்தின் அடியில் இருக்கும் சிவன் என்ற பொருளைத் தருகிறது. தனக்கு மேலானவன் இல்லாதவன் பொருளையும் தன்மையிலே அமைகிறது. தொண்டை நாட்டுத் தலமாகிய து சிறந்ததொரு ஊர் என்ப ஞானசம்பந்தர் பாக்கள் இயம்புகின் றன. என்ற தரும் தனை அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி என்பது சம்பந்தர் தேவாரம் ( 231–11 ) இன்று அரசிலி என்ற பெயர் மாறி ஒழுந் தியாபட்டு என்ற பெயர் வந்தமைக்குரிய காரணம் தெரியவில்லை. அன்றிருந்த கோயில் செல்வாக்கு இன்று ல்லாமையை யும் காட்டலாம்.

அரசிலிதொண்டைநாடு

தேவாரத் திருத்தலங்கள்

அரதைப்பெரும்பாழி

பாழி என்ற சொல்லாட்சியைப் பண்டு தொட்டே காணி னும் இவ்வூர்ப் பெயரை நாம் இடைக்காலத்தில் தான் காண் கின்றோம். இவ்வூர் சோழநாட்டுத் தலமாகும் ; இதனை இன்று அரித்து வார மங்கலம் என்று அழைக்கின்றனர் பாழி என்பதற்குரியப் பல பொருட்களுள் கோயில், நகரம், மருத நிலத்தூர், குளம் என்பனவும் உள. கோயில் என்று பார்க்கும் போது, பெரும்பாலும் திருமால் தொடர்பாக அமைவதைக் காணலாம். ஆயின் நாயன் மார் பாடும் நிலை சிவன் கோயிற் சிறப்பு காட்டும் நிலையில் அமைகிறது. எனவே இவ்வூர்ப் பெயர், இயற்கைத் தொடர்பான பெயராக இருக்கவே வாய்ப்பு அமைகிறது. அரத்தை என் பதனைத் தமிழ் லெக்ஸிகன், செடிவகை, குறிப்பிடுகிறது எனவே இச்செடிகள் நிறைந்த பெரிய டமாகவோ குளக்கரையாகவோ இருந்திருக்க வாய்ப்பு அமைகிறது. ஆயின் பாழியை த் திருமால் தொடர்பாகக் கொண்டு அரித்துவாரமங்கலம் பெயர் சூட்டினரோ என்னும் எண்ணம் ஏற்படுகிறது. இங்கு விஷ்ணு கோயில் போன்ற கருத்துகள் தெளிவாயின் இவ்வூர்ப்பெயர் மேலும் விளக்கம் பெறலாம். வைணவப்பாடல் பெற்ற தலமில்லாமையும் இங்குக் குறிப்பிடத்தக்கது. ஞானசம் பந்தர் பாடல் பெற்ற இத்தலம் சேக்கிழாராலும் சுட்டப்படுகிறது. பெரும் பாழி என்றே இதனைச் சுட்டினரோ என்ற எண்ணம் ஞானசம்பந்தர் பாடும் நிலையில் அமைகிறது. ” எனவே அரதை ஊர்ப்பெயராகவும் பெரும்பாழி கோயில் சுட்டும் நிலையிலும் அமைந்திருக்க வாய்ப்பு அமைகிறது.

அரத்துறை

தேவாரத் திருத்தலங்கள்

அரிசிற்கரைப்புத்தூர்

சங்க இலக்கியம் அரிசில் என்ற ஊர்ப்பெயரைச் சுட்டுகிறது. பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்தினைப் பாடியவர் அரிசில் கிழார் என்றபுலவர். அரிசில் என்ற ஊர் கொங்கு நாட்டு ஊர் என்பது மயிலைசீனி வேங்கடசாமி கருத்து அரிசிலாறு என்ற ஆறு பற்றிய எண்ணத்தையும் காண்கின்றோம். காவிரியாற்றின் கிளை குடந்தைக் கருகில் பிரியும் நிலையில் இப்பெயர் பெறுகிறது எனக் காணவும் ( தமிழ் இலக்கியத்தில் ஆறு. பக். 2) அரிசிற்றென் கரை அழகார் திருப்புத்தூர் (9 ) என சுந்தரர் பாடலும் இன்று கும்பகோணத்திற்குத் தென் கிழக்கில் இத்தலம் உண்மையையும் உணர. அரிசில், அரிசிற்கரைப் புத்தூர் இரண்டின் நெருக்கம் தெரியவருகிறது. எனவே சங்ககாலத்தில் அரசில் என்று குறிப் பிடப்பட்ட ஆற்றுப் பெயரே ஊர்ப்பெயராக வழங்கிய நிலையில், பின்னர், கரையும், புத்தூரும் இணைந்த ஊர்ப்பெயர் உரு வாகியிருக்கலாம். மட்டுமல்லாது மூவராலும் பாடப்பட்ட இத்தலத்தை புத்தூர், அரிசிற்கரைப் புத்தூர், திருப்புத்தூர், அரிசிற் தென்கரை அழகார் திருப்புத்தூர் என்ற பெயர்களாலும் சுட்டுகின்றனர். திருநாவுக்கரசர் அரிசிலாற்றங்கரையில் உள்ள அரசிற் கரைப்புத்தூர் கூறிய நிலை யினின்றும். அழகார் புத்தூர் என்ற அவரது கூற்றே நிலை பெற்ற வழக்காக அமைகிறது. இவ்வூருக்கு அரிசில் என்ற பெயர் அடிப்படை என்பதை வண் உறுதியாகச் சொல்லலாம். ஆயின், அரிசில் என்ற பெயர் நதிப்பெயரா அல்லது இவ்வூரின் பழம் பெயரா என்பது ஆராயத் தக்கது. அரிசில் பழைய ஊராக அமைய அரசிற் கரைப்புத்தூர், சிவன் கோயில் பக்கத்தில் அமைந்த புதிய ஊராகவும் இருக்கலாம். நதிப்பெயரா யினும், இடப்பெயராயினும் அதன் தொன்மை காணல் முக்கியம். அரிசில் என்பதற்கு மூலம் அரிசியாக இருத்தல் அவ்விடத்தைப் பொறுத்தவரைப் பொருத்தமில்லாது இருக்கின்றது. அரிசிப்புல் என்ற புல்வகையினைத் தமிழ் லெக்ஸிகன் சுட்டுகிறது. (Species of millet – Vol | பக் -126 ) இப்புல் இவ்வாற்றின் கரையில் நிறைந்து வளர்ந்து காணப்பட்டிருக்கலாம். எனவே அரிசிப்புல் அரிசிலுக்கு அடிப்படையாயிற்று எனக் கொள்ளலாம். அடுத்து, தமிழ் இலக்கியத்தில் ஆறு என்ற நூலில் கி. நாச்சிமுத்து அவர்கள், ஆறுகள் பெயர் பெறும் நிலைக்குரிய காரணங் அலசியிருக்கிறார். அவற்றுள் ஆற்றினுள் விளையும் பொருட்களால் பெயர் பெறும் நிலையையும், ஊர்ப்பெயர் காரணமாக ஆறுகள் பெயர் பெறும் நிலையையும் சுட்டுகிறார். இந்நிலையில் அரிசில் என்ற பெயர் காவிரியின் கிளை நதிக்குக் கொடுக்கப்பட்டுள்ளதால், இது கரையில் நின்ற அரிசிப்புற்களால் பெயர் பெற்றிருக்கலாம் அல்லது அந்த இடம் அரிசிப்புல்லால் முதலில் பெயர் பெற்று, பின்னர், அப்பகுதி ஆறும் அப்பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. பல களை அரிசொல் அரிசில் என்றாயிற்று என்றும் விஷணுவின் சொற் படியே இவ்வாறு ஓடியது என்றும் அதனால் பெற்ற பெயர் என்றும் இதனைப் பற்றிய எண்ணமொன்றும் வழங்குகிறது. “திருநாவுக்கரசர் அரிசிற் பெருந்துறை எனவும் இறைவன் தல மொன்றைக் குறிப்பிடுகின்றார். இதனைச் சுட்டும் போது,
அத்தன் காண் புத்தூரில் அமர்ந்தான் கா
ணரிசிற் பெருந்துறையே யாட்சி கொண்ட
சித்தன் காண் சித்தீச்சரத்தான் காண் ( பதி 301-4) என்று பாடுகின்றார். புத்தூர் வேற அரிசிற் பெருந்துறை வேறு என்பது இவண் விளக்கம் பெறுகிறது. ஒருவேளை அரிசிலிற் காணப்பட்ட இன்னொரு சிவன் கோயிலாக இருக்கலாம் அரிசில் பெருந்துறை, சேக்கிழார் வழியில் சிவத்தலங்கள் என்ற நூலிலோ அல்லது தஞ்சாவூர் மாவட்டம் பற்றி ஆய்வு செய்த பிறரோ அரிசிற் பெருந்துறையை ஒரு தலமாகச் சுட்டாததால் அரிசிற் கரை மக்களை முழுமையாகக் கவர்ந்து கொண்ட சித்தன் எனச் சுட்டியிருக்கலாம். மட்டுமல்லாது புத்தூர் பகுதியைச் சார்ந்த இடமாகவே இது இருக்கவேண்டும் என்பதற்கு, அரிசிற்கரைப் புத்தூருக்கு 1 கி மீ. தொலைவில் உள்ள சித்தீச்சரத்தை அடுத்துச் சுட்டுவதை இயம்பலாம். ” அழகா புத்தூர் என்றழைக்கப்படும் அரிசிற் கரைப் புத்தூருக்கு செருவிலி புத்தூர் என்னும் பழம் பெயர் உண்டு என்ற கருத்தும் அமைகிறது.”

அரிசிற்கரைப்புத்தூர்

தேவாரத் திருத்தலங்கள்

அரிசில்

சங்க கால ஊர்கள்

அரிசில்

அரிசில்‌ என்ற ஊர்ப்பெயர்‌ இவ்வூரைச்‌ சேர்ந்த புலவர்‌ பெயருடன்‌ இணைத்துக்‌ கூறப்பட்ட நிலையில்‌ சங்க இலக்கியங்களில்‌ இடம்‌ பெற்றுள்ளது. கொள்ளிடத்தின்‌ வடபாலுள்ள அரியலூர்‌ என்ற ஊர்ப்பெயரின்‌ மரூ௨வே அரிசில்‌ என்ற பெயர்‌ என்ற கருத்து உள்ளது. அரிசில்‌ என்ற பெயரே அரியில்‌ என்றாகி. அரியலூர்‌ என மருவியதாகவும்‌ கருதுகின்றனர்‌. ஆயின்‌ தஞ்சாவூர்‌ மாவட்டத்தில்‌ கும்பகோணத்திற்குத்‌ தென்‌ கிழக்கே நாலரை மைல்‌ தொலைவில்‌ அரிசிலாற்றங்‌ கரையில்‌ அரிசிற்‌ கரைப்புத்தூரர்‌ என்று ஓர்‌ ஊர்‌ உள்ளது. இதற்கும்‌ அரிசில்‌ என்ற ஊர்ப்‌ பெயர்க்‌கும்‌ யாதேனும்‌ தொடர்பு உண்டா என்ற ஆய்வு விளக்கத்தை அளிக்கலாம்‌. நற்‌. 141 இல்‌ அரிசில்‌ ஆறு பற்றி கூறப்படும்‌ கருத்து சோழன்‌ கிள்ளியின்‌ ஊராக அரிசிலைக்‌ காட்டுகிறது. அரிசில்‌ என்பது சோழநாட்டு ஆறு என்பதும்‌ தெரிகிறது. எனவே அரிசில்‌ என்ற ஊர்‌ இன்றைய அரிசிற்கரைபுத்தூராக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஊரைச்‌ சார்ந்த அரிசில்‌ கிழார்‌ பாடியனவாகக்‌ குறுந்‌ தொகை 193 ம்‌ பாடலும்‌, பதிற்றுப்‌ பத்தின்‌ எட்டாம்‌ பத்தும்‌, புறநானூற்று 146, 230, 281, 285, 300, 304, 342 ஆகிய பாடல்‌களும்‌ இடைக்கின்றன.
அரிமண வாயில்‌ உறத்தூர்‌.
வேள்‌ எவ்வியின்‌ பகைவர்களைப்‌ பற்றிக்‌ கூறும்‌ சங்க இலக்‌ கயப்பாடல்‌ ஒன்றில்‌ அரிமண வாயில்‌ உறத்தூர்‌ என்ற ஊர்ப்‌ பெயர்‌ குறிக்கப்பெற்றுள்ளது. அரிஃ கள்‌; உறப்பு செறிவு. கள்ளின்‌ மணம்‌ செறிந்த ஊர்‌ அரிமண வாயில்‌ உறத்தூர்‌ என்று அமைந்திருக்கலாம்‌.
“ வாய்வாள்‌ எவ்வி ஏவல்‌ மேவார்‌
நெடுமிடல்‌ சாய்த்த பசும்பூண்‌ பொருந்தலர்‌
அரிமண வாயில்‌ உறத்தூர்‌ ஆங்கண்‌,
கள்ளுடைப்‌ பெருஞ்சோற்று எல்‌ இமிழ்‌ அன்ன,
கவ்வை ஆஒூன்றால்‌ பெநிதே!….. (அகம்‌. 266:11 15)

அரிபுரம்

மணிமேகலையில்‌ கோவலனின்‌ முற்பிறப்பும்‌, அவன்‌ சாபம்‌ பெற்றதும்‌ ஆகிய செய்தி கூறும்‌ நிலையில்‌, சங்கமன்‌ அரிபுரம்‌ சென்று அணிகலன்களை விற்றான்‌ என்று கூறப்பெற்றுள்ளது. இத்நிலையில்‌ அரிபுரம்‌ என்ற ஊர்ப்பெயர்‌ மணிமேகலையில்‌ கூறப்பெற்றுள்ளது. சிங்கபுரம்‌ என்பது வசு என்பவனின்‌ ஆட்சியில்‌ இருந்ததாகக்‌ கூறப்பெற்றுள்ளது. சிங்கபுரத்தைத் தான்‌ மணிமேகலை அரிபுரம்‌ என்றும்‌ கூறியுள்ளதாகக்‌ கருத இடமளிக்கிறது. (அரி என்பதும்‌ சிங்கம்‌ என்பதும்‌ ஒரே பொருளுடையன) இது கலிங்க நாட்டில்‌ இருந்ததாகவும்‌ கூறப்பெற்றுள்ளது.
“காசில்‌ பூம்பொழிற்‌ கலிங்க நன்னாட்டுத்‌
தாயமன்னவர்‌ வசுவுங்‌ குமரனும்‌
சிங்கபுரமுஞ்‌ செழுநீர்க்‌ கபுலையும்‌
அங்காள்‌ இன்றோர்‌ அடற்‌ செருவறு நாள்‌
மூவிருகாவத முன்னு நரின்‌றி.
யாவரும்‌ வழங்கா விடத்திற்‌ பொருள்‌ வேட்டுப்‌
பல்கலன்‌ கொண்டு பலரறியாமல்‌
எல்வளை யாளோ டரிபுர மெய்திப்‌
பண்புக்‌ கலம்‌ பகர்‌ சங்கமன்‌ தன்னை” (மணிமே. 26;15 23)

அரிமண வாயில்

சங்க கால ஊர்கள்

அரிமணவாயில் உறத்தூர்

சங்க கால ஊர்கள்

அரியலூர்

தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலும்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்திலும், தென் ஆற்காடு மாவட்டம்
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் வட்டங்களிலும், செங்கற்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை
வட்டத்திலும் இவ்வூர்ப்பெயர் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.  சுவடியில், “விருத்தாசலம்
அரியலூர்” (551-5-சா) என்றிருப்பதைக் காணும்போது மேலே குறிப்பிட்ட எந்த
வட்டத்திலும் இவ்வூர் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.  ‘விருத்தாசலம் அரியலூர்’ என்றிருப்பதால்
விருத்தாசலம் என்னும் ஊர் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டத்தின் பெயர்
என்பது தெளிவு.  இவ்வட்டத்திற்குட்பட்ட
அரியலூர் என்பது சுவடிச் செய்தி.  ஆனால்
கிராமங்களின் அகரவரிசைப் பட்டியினைக் கொண்டு பார்வையிடும் போது இவ்வூர்ப்பெயர்
விருத்தாசலம் வட்டத்தில் இல்லாது கள்ளக்குறிச்சி வட்டத்திலும் விழுப்புரம்
வட்டத்திலும் என இரண்டு வட்டங்களிலும் இடம்பெற்றுள்ளது.  விருத்தாசலம் வட்டத்திலிருந்து இவ்வூர்
எப்போது இந்த இரு (கள்ளக்குறிச்சி, விழுப்புரம்) வட்டங்களில் இணைந்தது என்பதைக்
காண்போமாயின் ஓரளவிற்குச் சுவடி எழுந்த ஊரையும் காலத்தையும் நிர்ணயம் செய்யலாம்.

அருட்டஈகர்‌

உச்சயினுக்கும்‌ சயந்தி நகர்க்கும்‌ இடையேயுள்ளது அருட்ட நகர்‌. உதயணன்‌ மருதநிலங்‌ கடந்து அருட்ட நகர்‌ அடைந்தான்‌ என்ற செய்தியுடன்‌ தொடர்புபடுத்து அருட்ட நகர்‌ என்ற ஊர்ப்‌ பெயர்‌ கூறப்பெற்றுள்ளது.
“வன்றொழில்‌ வயவர்‌ வலிகெட வகுத்த
படைப்புறக்‌ கிடங்குந்‌ தொடைப்‌ பெருவாயிலும்‌
வாயிற்‌ கமைந்த ஞாயிற்‌ புரிசையும்‌
இட்டமைத்தியற்றிய கட்டளைக்‌ காப்பின்‌
மட்டு மகிழ்நெஞ்சின்‌ மள்ளர்‌ குழீஇய
அருட்டநகரத்து……………… “ (பெருங்‌, 1;148:176 181)

அரையம்

சங்க கால ஊர்கள்

அரையம்‌

அரையம்‌ என்ற ஊர்ப்பெயர்‌ கபிலரால்‌ புறநானூற்றுப்‌ பாடலொன்றில்‌ குறிக்கப்பெற்றுள்ளது. பாரி மகளிரை ஏற்றுக்‌ கொள்ளாத இருங்கோவேளை நோக்கிப்‌ பாடிய பாடல்‌ அது. இரண்டு பகுதியான பெயரையுடையது(சிற்றரையம்‌,பேரரையம்‌, 64 இலக்கியத்தில்‌ ஊர்ப்பெயர்கள்‌ என்றும்‌, புகழ்ந்து பாடிய கழாஅத்தலையாரை இகழ்ந்ததனால்‌ அழிவுற்றது என்றும்‌ அப்பாடலில்‌ கூறப்பெற்றுள்ள து. அரை என்ற மரப்பெயர்‌ (Ripal) காரணமாக இவ்வூர்‌ அரையம்‌ எனப்‌ யெயர்‌ பெற்றிருக்கலாம்‌. :
“இருபால்‌ பெயரிய உருகெழு மூதுரா்‌
கோடிபல அடுக்கிய பொருள்‌ நுமக்கு உதவிய
நீடுநிலை அரையத்துக்‌ கேடும்கேள்‌, இனி!
துந்தை தாயம்‌ நிறைவு.ற எய்திய
ஒலியற்‌ கண்ணிப்‌ புலிகடி மாஅல்‌!
நும்போல்‌ அறிவின்‌ நுமருள்‌ ஒருவன்‌
புகழ்ந்த செய்யுள்‌ கமர அத்தலையை
இகழ்ந்த.தன்‌ பயனே; இயல்‌ தேர்‌ அண்ணல்‌ ” (புறம்‌. 202:6 13)

அறப்பள்ளி

பள்ளி என்ற பொதுக் கூறு கொண்டு முடியும் இவ்வூர்ப் பெயர் திருஞானசம்பந்தர் பாடல் வழி தெரியவருகிறது. சிவன் கோயில் கொண்ட இத்தலத்தை யுணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே என்று பாடுகின்றார் இவர். ( 175-4 ) அறம் + பள்ளி – அறப்பள்ளி ஆகியிருக்கலாம். பள்ளி என்ற பொதுக்கூறு, பொதுவாகக் குடியிருப்புப் பகுதியை யுணர்த்தும் நிலையில் அமைய, சிவன் குடிகொண்ட இடம் காரணமாக, அரன் + பள்ளி – அரன்பள்ளி ஆகி, பின்னர் அரன் பள்ளி அறப்பள்ளியாகத் திரிந்ததோ எனத் தோன்றுகிறது.

அறையணி

நல்லூர் இன்று அரகண்ட நல்லூர் என்று குறிக்கப்படும் இத்தலம் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்ததாக அமைகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம், ( பதி -213) சேக்கிழாராலும் சுட்டப்படுகிறது. இன்று, தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவலூருக்குப் பக்கத்தில் பெண்ணையாற்றின் கரையில் ஒரு சிறிய மலைமேல் கோயில் உள்ளது. என்பதையும்,
கோவில் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரைகழல் பணிந் தேத்தி
ஆலின் ஐந்துகந் தாடுவார் அறையணி நல்லூரை
அணைந்தேத்தி என சேக்கிழார். ஞானசம்பந்தர் ( 34-968 ) சென்ற தலச் சிறப்பு கூறுவதையும் ஒப்பிட கோவலூருக்குப் பக்கத்தில் உள்ளது இவ்வூர் என்பது ஐயமின்றி விளக்கம் பெறுகிறது. மேலும் மலைமேல் இக்கோயில் இருப்பதைக் காண ( அறை – பாறை ) அறையின் மேல் கோயில் அணிபெறும் சிறந்த ஊர் என்ற அடிப்படையில் இப்பெயர் தோன்றியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இன்று அரகண்ட நல்லூர் என்று, அறையணி நல்லூர் திரிந்து வழங்குகிறதா அல்லது இதற்கு அடிப்படைக் காரணம் வேறு ஏதாவது உள்ளதா என்பது விளக்கமாகவில்லை. எனினும் நல்லூர் திரியாது நிற்பதை நோக்க அறையணி நல்லூரே திரிந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

அலைவாய்

சங்க கால ஊர்கள்

அலைவாய்

சங்க கால ஊர்கள்

அலைவாய்‌

திருமுருகாற்று படையிலும்‌, அகநானூற்றிலும்‌ அலைவாய்‌ என்ற ஊர்ப்பெயர்‌ குறிக்கப்பெற்றுள்ளது. புறநானூற்றிலும்‌, சிலப்பதிகாரத்திலும்‌ செந்தில்‌ என்ற பெயரால்‌ இதே ஊரில் குறிக்கப்பெற்றுள்ளது. அலைவாய்‌ என்பது கடற்கரையில்‌ அமைந்த ஊரைக்‌ குறிக்கத்‌ தோன்றியிருக்கலாம்‌. அலைவாய்‌ என்ற ஊர்ப்பெயர்‌ சரலைவாய்‌ அல்லது திருச்‌ சீரலைவாய்‌ என்றும்‌, செந்தில்‌ என்ற ஊர்ப்பெயர்‌ திருச்செந்தில்‌ மற்றும்‌ செந்தூர்‌ அல்லது திருச்செந்தூர்‌ என்றும்‌ வழங்கப்‌ பெறுகின்றன. சீர்‌ அல்லது திரு என்ற முன்‌ ஓட்டுடன்‌ வழங்கப்‌ பெறுவதும்‌, இல்‌ என்ம பின்‌ ஓட்டு ஊர்‌ என மாறி வழடீகப்‌ பெறுவதுமே இத்தகைய வழக்கிற்குக்‌ கரரணமாகும்‌. இவ்வூர்‌ நெல்லை மாவட்டத்தில்‌ கடற்கரையில்‌ காயல்‌ பட்டினத்திற்குத்‌ தெற்கில்‌ மிக அழகரக அமைந்துள்ளது. முருகப்பெருமான்‌ சூரபன்மனோடு போராடி வெற்றி பெற்று ஜயாபிஷேகம்‌ செய்து கொண்ட இடமாதலின்‌ ஜயந்தி என்று. இவ்வூர்‌ பெயர்‌ பெற்றது என்பது புராணம்‌, அதுவே நாளடைவில்‌ செந்து என்று ஆகிப்‌ பிறகு செந்தில்‌, செந்தூர்‌ என வழங்கியது என்பர்‌, செயந்திபுரம்‌ என்றும்‌ வழங்குகின்‌றனர்‌.
“உலகம்‌ புகழ்ந்த ஒங்குயர்‌ விழுச்சீர்‌
அலைவாய்ச்‌ சேறலும்‌ நிலை இய பண்பே” (பத்துப்‌. திருமுருகு, 124 125)
“இருமணி விளக்கின்‌ அலைவாய்ச்‌
செருமிகு சேஎயொடு உற்ற சூளே” (அகம்‌. 266/20 21)
“வெண்டலைப்‌ புணரி யலைக்குஞ்‌ செந்தில்‌
நெடுவேள்‌ நிலைஇய காமர்‌ வியன்துறை” (புறம்‌. 5518 19)
“சீர்கெழு செந்திலுஞ்‌ செங்கோடும்‌ வெண்குன்றும்‌
ஏரகமும்‌ நீங்கா இறைவன்‌ கைவேலன்றே” (சிலப்‌. குன்றக்குரவை, 8)

அல்லிக்குளம்

இராமநாதபுரம் சீமை பள்ளிமடம் தாலுகா அல்லிக்குளம் (880-த) என்ற
குறிப்பிலிருந்து பள்ளிமடத் தாலுகா அல்லிக்குளம் என்றிருப்பதைக் காணும்போது
கிராமங்களின் அகர வரிசைப்பட்டியில் பள்ளிமடமும் அல்லிக்குளமும் அருப்புக்கோட்டை
வட்டத்திற்குள் இருப்பதைக் காணலாம்.
இவ்வூர்ப்பெயரும் மேலே குறிப்பிட்ட ஆய்வு முறைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய
ஒன்றாகும்.

அல்லிக்கேணி

இன்று திருவல்லிக்கேணி என்று அழைக்கப்படும் தலம் இது. அல்லி மலர்கள் மிகுந்த கேணி காரணமாகப் பெயர் பெற்ற இடம். இதற்குத் திருமால் கோயில் பெருமை சேர்க்கும் நிலையில் அமைகிறது. பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ் வார் பாடல்கள் இதன் புகழை யியம்புகின்றன. இப்பதிக்குத் துளசிவனம் என்னும் பெயரும் உண்டு. திருவல்லிக்கேணி மயிலை யுள் அடங்கியிருந்த ஒரு பகுதி என்பர். இங்குள்ள கோயிலின் முன்னேயுள்ள குளம் இன்றும் அல்லி புட் கரணி என்று சுட்டப் படுவது இப்பெயர்த் தோற்றத்தைத் தெளிவாகத் தருகின்றது.
குரவமே கமழும் குளிர் பொழிலூடு
குயிலொடு மயில்கள் நின்றால்
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்
திருவல்லிக்கேணி கண்டேனேய’- நாலா – 1073 என்பது திருமங்கையாழ்வார் கூற்று.

அளப்பூர்

திருநாவுக்கரசு சுவாமிகளின் பாடலில் இடம் பெற்ற இத்தலம், சிவன் கோயில் பெற்றதொரு ஊர் என்று மட்டுமே தெரிய வருகிறது ஊர் என்ற பொதுக்கூறு கொண்டு முடிவது என்பது, ஊர் பொதுக் கூறுகள் கொண்டு முடியும் பெயருடன் இதனையும் இவர் சுட்டிச் செல்வதால் தெரிய வருகிறது. மேலும் அளம் என்பதற்குத் தமிழ் லெக்ஸிகன் உப்பளம், நெய்தல் நிலம், களர் நிலம், என்று பொருள் கூறுவதை நோக்க இவ்வூர் ( vol | part. 1 பக். 168 ) கடற்கரை சார்ந்த ஊராக அமைந்து அளம் + ஊர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனக்கருத இடமுண்டு.
அண்ணாமலை யமர்ந்தார் ஆரூர் உள்ளார்
அளப்பூரார் திருநா பதி – 265-3
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும் – – 285-4

அள்ளூர்‌

அள்ளூர் என்பது பாண்டி நாட்டில்‌ சிவ கங்கை வட்டத்தி லுள்ள ஓர்‌ ஊர்‌, நன்முல்லையார்‌ என்ற சங்ககாலப்‌ புலவர்‌ ஒருவர்‌ இவ்வூரினராதலின்‌ அள்ளூர்‌ நன்முல்லையார்‌ என ஊராற்‌ பெயர்‌ பெற்றார்‌. இவர்‌ பாடல்கள்‌ குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய சங்க இலக்கியங்களில்‌ இடம்‌ பெற்றன. பாண்டியனின்‌ அள்ளூர்‌ நெற்குவியலையுடையது என்றும்‌ அவ்வூர்‌ போன்ற நலமுடையவள்‌ தலைவி என்றும்‌ பெண்ணின்‌ நலம்‌ பாராட்டப்‌ பெற்றுள்ளது. அள்‌ என்ற சொல்‌ செறிவு என்னும்‌ பொருளது, நெல்‌ செறிந்த ஊர்‌ அள்ளூர்‌ எனப்‌ பெயர்‌ பெற்றிருக்கலாம்‌. “பிண்ட நெல்லின்‌ அள்ளூர்‌’” என்ற சங்க இலக்கியத்‌ தொடர்‌ இதை வலி யுறுத்தும்‌. இதே பெயர்‌ கொண்ட ஊர்‌ ஒன்று சோழநாட்டில்‌ தஞ்சை மாவட்டத்திலும்‌ உள்ளது. குறுந்தொகை 32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237 ஆகிய பாடல்களும்‌, அகநானூற்று 46ஆம்‌ பாடலும்‌ புறநானூற்று 306ஆம்‌ பாடலும்‌ அள்ளூர்‌ நன்முல்லையார்‌ என்ற பெண்பாற்‌ புலவர்‌ பாடியவை.
“ஒளிறுவாள்‌ தானைக்‌ கொற்றச்செழியன்‌
பிண்ட நெல்லின்‌ அள்ளூர்‌ அன்ன என்‌
ஓண்டொடி நெகிழினும்நெகிழ்க” (அகம்‌. 4613 15)

அழுந்தூர்

சங்க கால ஊர்கள்

அழுந்தூர்

சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து வாழும் புகழ்மிகு தலம் அழுந்தூர். மாயவரத்துக்குத் தென்கிழக்கில் இப்பகுதி உள்ளது. தஞ்சாவூர் மாவாட்டத்தைச் சார்ந்தது. மட்டுமன்றி திருமங்கை ஆழ்வாராலும் ஞானசம்பந்தர், நாவுக்கரசர் இருவராலும் பாடல் பெற்ற இத்தலம், அழுந்தை எனவும் வழங்கப்பட்டுள்ளது. சோழ நாட்டு இத்தலத்தைத் தேரழுந்தூர் என்ற பெயராலும் குறித்துள்ளனர். இன்றும் இப்பெயரே அமைகிறது. இப்பெயர்க் காரணத்திற்கு ஒரு புராணக் கதைக் காரணமாக அமைகிறது. எனினும் இப்புராணக்கதைப் பின்னர் எழுந்ததோ என்றதொரு எண்ணம் இப்பெயராய்வில் எழுகின்ற ஒன்று. அழுந்தூர் என்றும் திரு அழுந்தூர் என்றும் இலக்கிய ஆட்சிகள் இவ்வூரைக் குறிக்கின்றறன.
அலைபுனல் திரு அழுந்தூர் மாடக்கோயில் அடைந்தோர்’ (பெரிய-434)
அழுந்தூர் உள்ளார் திருஞா- 265-8
அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மாமாடமன்னியே திருஞா. 156-1
கல்வெட்டிலும் இவ்வூர் செயங்கொண்ட சோழநாட்டுத் திரை மூர் நாட்டு திரு அழுந்தூர் ” என குறிக்கப்படுதலைக் காண்கின் றோம். எனவே முதலில் அழுந்தூர் எனவும் அழுந்தை எனவும் குறிக்கப்பட்ட இவ்வூர், பின்னர் இங்குள்ள கோயில், சிறப்பு பெற்ற பின்னர் திருஅழுந்தூர் என்றாகிப் புராணக் கதையின் செல்வாக்கு காரணமாக, தேர் அழுந்தூர் எனப் பெயர் பெற்றிருக்க வாய்ப்புண்டு. மேலும் சோழநாட்டைச் சார்ந்த இத்தேரழுந்தூர் தான் சங்க கால இலக்கியங்கள், சுட்டும் அழுந்தூர், அழுந்தையா என்பதும் ஆய்வுக்குரியது. இடைக்காலத்தில் காணப்படும் இவ்விரு பெயர்களையும் சங்க கால இலக்கியங்களே சுட்டுகின்றன.
கடுந்தேர் திதியன் அழுந்தை – அகம் -196
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய்வலி அறுத்த ஞான்றை
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் – 246
பிற எண்ணங்கள் இவண் இல்லை. சைவ நிலையில் மட்டு மல்லாது வைணவ நிலையிலும், புராணக் கதை ஒன்று தேர் அழுந்தூர் என்ற ஊர்க்குரிய பெயர்க் காரணமாக கருதப்படுகிறது. உபரி சரவசு என்ற ஓர் அரசன். இவனிடம் இருந்த ஒரு தேர் வானவீதியில் உருண்டோடும் தன்மையது. இவன் தேவர் கட்கும் இருடிகட்கும் இடையில் எழுந்த வழக்கில் ஒரு தலைச் சார்பாகத் தீர்ப்புக் கூறியதில் முனிவர்கள் அவன் தேர் பூமி யில் அமுந்தட்டும் என்ன்று சாபமிட்டனர். அவர்கள் சாபம் இவ்வாறு பலித்தது. ஒரு சமயம் அவன் வானவீதியில் சென்ற பொழுது, இவ்வூர்த் திருமால் திருக்கோயிலுக்கு நேராக இவன் தேர் செல்ல நேர்ந்தது. இதனைச் சிறிதும் பொறுக்க இயலாத பெரிய திருவடி (கருடன் ) தம் மந்திர ஆற்றலால் தேரை இழுத்து பூமியில் அழுந்த வைத்து விடுகின்றார். என்பது அப்புராண வரலாறு. இவ்விரண்டு கதைகளையும் நோக்க தேரழுந்தூர் என்ற பெயருக்கு இணங்க கதையை அமைந்து இருக்கிறார்களே தவிர. அழுந்தூர் என்ற பெயருக்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.

அழுந்தூர் – தேரழுந்தூர்சங்ககாலத்தில் அழுந்தூர்

தேவாரத் திருத்தலங்கள்

அழுந்தை

அழுந்தை திதியன்‌ என்பவனுக்கு உரியதராய்‌ இருந்தது. அகநானூற்றுப்‌ பாடல்‌ ஒன்றில்‌ பெண்ணின்‌ நலம்‌ பாராட்டப்‌ பெறும்பொழுது இவ்வூர்‌ உவமையாகக்‌ கூறப்‌ பெற்றுள்ளது. கழக உரையாசிரியர்‌ இதற்கு அழுந்தூர்‌ என்று பொருள்‌ கூறுவதைக்‌ காணும்பொழுது அமுந்தை என்பது பின்னர்‌ அழுந்தூர்‌ என்று வழங்கியதை உணரலாம்‌. கம்பன்‌ பிறந்த இருவழுந்துரர்‌ எனக்‌ கருதலாம்‌.
கடுந்தோ்த்‌ திதியன்‌ அழுந்தை. கொடுங்குழை
அன்னி மிஞீிலியின்‌ இயலும்‌
நின்‌ நலத்தருவியை முயங்கிய மார்ப. (அகம்‌ 196;11 13)
பதினொரு வேளிரொடு வேந்தர்‌ சாய
மொய்வலி அறுத்த ஞான்றை
தொய்யா அழுந்தூர்‌ ஆர்ப்பினும்‌ பெரிதே” (௸ 246;12 14)

அழும்பில்‌

மதுரைக்‌ காஞ்சி, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம்‌ ஆகிய இலக்கியங்களில்‌ அழும்பில்‌ என்ற ஊர்ப்பெயர்‌ குறிக்கப்‌ பெற்றுள்ளது. மானவிறல்வேள்‌ என்ற குறுநில மன்னனுக்குரியது அழும்பில்‌ என்று மதுரைக்‌ காஞ்சி கூறுகிறது. அழும்பில்‌ ஒழியாத புது வருவாயினையுடயது என்றும்‌ சென்னிக்குரியது என்றும்‌ அகநானூறு கூறுகிறது. “பெரும்பூண்‌ சென்னி அழும்பில்‌” என்று கூறப்பெறுவதால்‌ இவ்வூர்‌ சோழ நாட்டினது எனக்‌ கருத இடமளிக்கிறது. சேர நாட்டிலும்‌ அழும்பில்‌ என்ற பெயருடன்‌ ஓர்‌ ஊர்‌ இருப்பதாகத்‌ தெரிகிறது. புதுக்கோட்டைச்‌ சீமையில்‌ உள்ள அம்புக்‌ கோயில்‌ என்ற ஊரே பழைய அழும்பில்‌ என்ற கருத்தும்‌ உள்ளது. இவ்வூரில்‌ உள்ள சிவன்கோயில்‌ *அழும்பிற்‌ கோவில்‌’ என வழங்கி, அதுவே நாளடைவில்‌ அம்புக்கோயில்‌ என மருவி ஊர்ப்பெயராயிற்று என்பர்‌. “இராசராச வளநாட்டுப்‌ பன்றியூர்நாட்டு அழும்பில்”‌ என்று புதுக்கோட்டை கல்வெட்டொன்று குறிக்கிறது. சங்க இலக்கியப்‌ பாடல்களிலும்‌ சோழநாட்டு ஊராகக்‌ கூறப்‌ பெற்றிருப்பதால்‌ ரா. பி. சேதுப்பிள்ளையின்‌ கருத்து பொருத்த மானதாகத்‌ தோன்றுகிறது.
“விளங்கு பெருந்திருவின்‌ மானவிறல்வேள்‌
அழும்பில்‌ அன்ன நாடிழந்‌ தனரும்‌” (பத்துப்‌. மதுரைக்‌, 344 345)
“பிணையலங்‌ கண்ணி பெரும்பூட்‌ சென்னி
அழும்பில்‌ அன்ன அறா யாணர்‌” (அகம்‌. 44:14.15)
“மாறுகொள்‌ முதலையொடு ஊழ்‌ மாறுபெயரும்‌
அழும்பிலன்‌ அடங்கான்‌ தசையும்‌ என்றும்‌”* புறம்‌. 283:5 6).
“அறைபறையென்றே யழும்பில்‌ வேளுரைப்ப” (சிலப்‌. 25:177)

அவந்தி

சிலப்பதிகாரம்‌, மணிமேகலை, பெருங்கதை ஆகிய நூற்களில்‌, அவந்தி என்றும்‌, அவந்தி நாடு என்றும்‌ குறிக்கப்பெற்றுள்ள ஊர்‌. அவந்தி ஒரு நாடு என்றும்‌, இதன்‌ தலைநகர்‌ உஞ்சேனை என்றும்‌, மன்னன்‌ பிரச்‌ சோதனன்‌ என்றும்‌ தெரிகிறது. அவந்தி என்பதற்கு உச்சைனி நகர்‌ என்றே பொருள்‌ எழுதினார்‌ அடியார்க்கு நல்லார்‌. அவந்தி என்பது மாளவ தேசத்தில்‌ ஒருபட்டணம்‌ என்றும்‌, இங்கே பலராமனும்‌ கண்ணனும்‌ சாந்தீப முனிவரிடம்‌ கல்வி கற்றனர்‌ என்றும்‌ விஷ்ணு புராணம்‌ கூறும்‌. கி.மு, 6ஆம்‌ நூற்நாண்டில்‌ சண்டப்‌ பிரத்தியோதனன்‌ முதலிய வீரர்கள்‌ இந்நாட்டை ஆண்டு வந்ததாகப்‌ பெளத்த நூல்கள்‌ கூறும்‌. கதைகளில்‌ வரும்‌ விக்கிரமாதித்தன்‌ இந்த நாட்டில்‌ அரசு புரிந்தான்‌ என்பார்கள்‌. இது பிற்காலத்தில்‌ மேற்கு மாளவம்‌ என்னும்‌ பகுதியின்‌ பெயராகவும்‌, உச்சயினி தலைநகரின்‌ பெயராகவும்‌ ஆயிற்று. அவந்திக்‌ கொல்லர்‌ புகழ்‌ பெற்றிருந்தனர்‌.
“அவந்தி வேந்தன்‌ உவந்தனன்‌ கொடுத்த
நிவந்தோங்கு மரபில்‌ தோரண வாயிலும்‌” (சிலப்‌. 5 : 103 104)
“செம்பியன்‌ மூதூர்ச்‌ சென்று புக்காங்கு
வச்சிரம்‌ அவந்தி மகதமொடு குழீஇய
சித்திர மண்டபத்திருக்க” (௸. 28 : 85 87)
“வடவயின்‌ அவந்தி மாநகர்ச்‌ செல்வோன்‌”. (மணிமே. 9 : 28)
“மகத வினைஞரும்‌ மராட்டக்‌ கம்மரும்‌
அவந்திக்‌ கொல்லரும்‌ யவனத்‌ தச்சரும்‌
தண்தமிழ்‌ வினைஞர்‌ தம்மொடு கூடிக்‌
கொண்டினிதியற்றிய கண்கவர்‌ செய்வினைப்‌
பவளத்திரள்கால்‌ பல்மணிப்‌ போதகை” (௸. 19: 107 111)
“யுவனத்தச்சரும்‌ அவந்ததிக்‌ கொல்லரும்‌” (பெருங்‌1;58;40)

அவளிவணல்லூர்

சங்ககாலத்துத் தெரியவியலாத இவ்வூர், இன்னும் இப்பெயராலேயே வழங்கப்படுகிறது. புதுமையாக அமையும் இப்பெயர்க் காரணம் தெளிவாக இல்லை. இதனைக் குறித்த புராணக் கதை ஒன்று உள்ளது. எனினும் இப்பெயர், கல்வெட்டில் அவளிவளநல்லூர் என்று குறிப்பிடப்படுமாற்றை நோக்க அவளிவளநல்லூர் என்னும் இப்பெயரமைப்பு வளநல்லூருக்கு சிறப்புக்கூறாக அடையாக அவளி என்ற சொல் அமைந்ததோ என்ற எண்ணத்தை எழுப்புகிறது. அவல் என்பது காளானையும் அவணம் கொட்டைப்பாக்கின் மிகுதியையும் குறிப்பிடும் நிலையில் (தமிழ் லெக்ஸிகன் vol – I Part I பக். 151. 152 ) இப்பொருட்களின் செல்வாக்கில் இவ்வூர் பெயர் பெற்றிருக்கலாமா? என்பது ஆய்வுக்குரியது. எனினும் அவளிவளநல்லூர் என்ற ஊரில் சிவன் கோயில் மிகவும் சிறப்புடன் திகழ்ந்தது என்பது, சம்பந்தர் திருநாவுக் கரசர் பாடல் பெற்ற தலமாக இது விளங்குவதினின்றும் தெரிய இயலுகிறது. (திருஞா. பதி 340, திருநா பதி 59 ), சேக்கிழாரும் அதிர் சிலம்படியார் மகிழ் அவளிவளநல்லூர் என இதனைப் போற்றுகின் றார் ( திருஞான. 373 ).

அவிநாசி

தேவாரத் திருத்தலங்கள்

அவிநாசி

இன்று அவிநாசி என்று அழைக்கப்படும் ஊரின் பழம் பெயர் புக்கொளியூர். கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் நாமமே அவிநாசி. இன்று ஊருக்கே அவ்விறைப்பெயர் அமைந்து வழங்கிவருகிறது. ஊழிக் காலத்தும் விநாசமின்றி இருப்பதால் புக்கொளியூரனுக்கு அவி நாசியப்பர் என்று பெயர். நாசம் எனில் கேடு. விநாசம் எனில் பெருங்கேடு என்று அவிநாசி என்ற ஊர்ப்பெயர் விளக்கம் சொல்கின் றனர் “. கொல்லி நாட்டில் உள்ள இவ்வூரின் பழம் பெயருக்குரிய காரணம் தெரியவில்லை. மேலும், காசி விசுவேசுவரிடம் இருந்து ஒருவேர் கிளைத்து ஓடி அவிநாசியப்பராய் முளைத்ததென்று தலபுராணம் மொழியும் என்றும் திருப்புக் கொளியூர் முதன் முதலில் கோயிலுக்கும், குளத்திற்கும் தென்பால் இருந்தது. மறைந்த அவ்வூரின் பெயர் புக்கொளியூர் நத்தம் இப்போது காணப்படுகிறது. என்ற எண்ணத்தைக் காணும்போது புக்கொளியூர் என்ற பெயர் புக்கொளியூர் நத்தம் என்ற பெயர் அடைந்து, அவ்வூர்ச் சிறப்பு குன்றி, அதன் ஒரு பகுதியாக இருந்த கோயிற் பகுதியே இறைப்பெயரால் செல்வாக்கு பெற்று இன்று திகழ்கின்றது எனக் கருதலாம். மேலும் புக்கொளியூர் என்னும் பகுதி தற்போது வெட்டவெளியாக உள்ளது. அருகில் ஏரி உள்ளது என்ற கூற்றும், இப்பகுதி சிறப்பிழந்து விட்டமையைக் காட்டும் எனினும் புக்கொளியூருக்குரிய தோற்றக் காரணம் தெரியவில்லை. இவ்வூர், தேவார மூவராலும் பாடப்பெற்ற சிறப்புடையது. திருநாவுக்கரசர் அவிநாசி கண்டாய் ( பதி287-7 ) என்று இறைவனைக் குறிப்பிடுவது இப்புராணக் கதையுண்மையைப் புலப்படுத்துகின்றது.