அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
வைகை

வேகவதி யெனப்படுவதாகிய நதி. இது பாண்டிநாட்டிலேயுள்ளது. இதன் கரைக்கண்ணது மதுரைநகரம். வேகமுடையதாதலின் வேகவதி யெனப்படும். மாணிக்கவாசகர் பொருட்டு கரைகடந்து பொருகிய இந்நதியினது கரையினொரு கூற்றைச் சிவபிரான் கூலியாளாகி மண்சுமந்து அடைப்பார் போலத் திருநடம்புரிந்தனர்

வைசம்பாயனர்

விசமபன் என்னும் ரிஷி புத்திரர். இவர் வியாசர் சீடரு ளெருவர். ஜனமேஜயனுக்கு வியாச பாரதத்தைப் பிரசங்கித்தவரும் இவரே

வைசியர்

இவர் மூன்றாம் வருணத்தவர். இவர்க்கு ஓதல், வேட்டல், உழவு, நிரையோம்பல், வாணிகம் என்னு மறுதொழிலும், நூலுமுரியன

வைசிரவணன், வைச்சிரவணன்

விச்சிரன் குமாரனாகிய குபேரன்

வைசுவதேவம்

போசனார்த்தமாக வேனும் சீவஇமிசையாகிய பாவநிவிர்த்தியின் பொருட்டேனும் பிராமணர் தினந்தோறுஞ் செயற்பாலதாகிய கருமம்

வைசுவாநரன்

அங்கிரசன் வமிசத்தனாகிய அக்கிணி. உ. தனுபுத்திரன். இவனுக்கு ஹயசிரை, காலகை, உபதானவி, புலோமையென நால்வர் புத்திரிகள் பிறந்தார்கள். அவர்களுள் உபதானவி, ஹிரண்ணியாடினையும், ஹயசிரை கிருதுவையும், காலகையும், புலோமையும் கசியபனையும் மணம் புரிந்தார்கள்

வைசேஷிகம்

தரிசனங்கள் ஆறனுளொன்று. இது கணாதமதமெனப்படும். கௌதமமதம் திரவியம் பதினாறென இஃது ஏழென்பது. இது தருக்க சாஸ்திர மெனவும்படும். இது பொருணிச்சயம் பண்ணுதற் குபகாரமா யுள்ளதாதலின் மாந்தர் யாவரும் ஒதற்பாலதாகிய வொரு சாஸ்திரம். சமய நூலாராய்ச்சிக்கும் இஃதின்றியமையாததாம்

வைடூரியம்

ஒருமலை. இதுநருமதை, தபதி நதிகளுக்கு இடையேயுள்ளது

வைதரணி

க. யமபுரத்தியாறு. இந்நதியை எளிதிற் கடக்குமாறு கோதானங் கொடுக்கப்படுவது. அந்தியகாலம் வந்தடுத்த பின்னரும் உயிர் சரீரத்தை விட்டு எளிதிற் பிரியவொட்டாமல் அதனைத்தடுத்துநிற்பதாகிய வாசனைக் கெல்லையே வைதரணியென்றுருவகித்துக் கூறுப்பட்டதுபோலும். உ. பிதிர்களுக்குச் சுதையிடத்துப் பிறந்த ஒரு புத்திரி. ந. கலிங்கதேசத்திற் பிரவாகிக்கும் ஏற்றவிடமாகக் கூறுப்பட்டுள்ளது

வைத்தியநாதநாவலர்

இற்றைக்கு இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னே திருவாரூரிலே அபிஷேகத்தார் மரபிலே அவதரித்துத் தமிழ்க்கடல் குடித்துத் தமிழ்பாரி பொழிந்து விளங்கிய பாண்டிதசிகாமணி. இவரே இலக்கண விளக்கஞ் செய்தவர். அந்நூலுக்குரையும் இவர் தாமேயெழுதினர். தொல்காப்பியத்துக்குப் பின்னர்த் தோன்றிய இலக்கண நூல்களுள்ளே இந்நூல் மிகச்சிறந்தது. இவர் காலத்திலே இவரோடு வாதம்புரியும் வன்மையில்லாதவராயிருந்து பின்னர் வன்மை படைத்த சிவஞானமுனிவர் இலக்கணவிளக்கச் சூறாவளியென வொரு நூலியற்றினர். அதனால் அதுமறைந்து தொழியாது இன்னும் ஒளிபெற்று நிலவுகின்றது. சூறாவளி இலக்கண விளக்கத்தைமறுப்படுத்தாமல் தன்னையியற்றிய சிவஞான முனிவரென்னும் கலாசந்திரனுக்கே களங்கமாயிற்று. வைத்தியநாதநாவலர்க்குத் தொண்டைமண்டல சதகம் பாடிய படிக்காசுப்புலவர் மாணாக்கர். ஒரு துறைக்கோவைபாடிய அமிர்தகவிராயர் ஒரு காலத்தவர். வைத்தியநாதநாவலரைச் சுவாமிநாத தேசிகரே தமிழ்க்கிலக்காகிய வைத்தியநாதன் என்று புகழ்வரென்றால் இவர் பெருமைக்கு வேறு சான்று வேண்டா

வைந்நியன்

இவன்வேனன் வாமபாகத்திற் பிறந்தவன்

வைபாடிகன்

மஞ்சளும், சுண்ணாம்புங் கூடிய விடத்து, சிவப்பொன்று தோன்றுமாறு போல, இந்திரியங்கள் கூடியவிட்த்துப் பிரபஞ்சந்தோன்று மென்னுஞ் சமயி

வைப்பிராகை

மேருவுக்கு மேற்கின் கணுள்ள வனம்

வைரம், வயிரம்

வலாசுரன் கொல்லப்பட்டபோது அவனெலும்பானது சிதறிப்பலமலைகளிலும் வீழ்ந்துகிடந்து வயிரமணிகளாயின. ததீசியெலும் பென்பாருமுளர். அவ்வயிரம் ஒளிவேறுபாட்டான் நான்காகும். அந்தணன் வெள்ளையரசன் சிவப்பு, வந்தவை வைசியன் பச்சை சூத்திர,னந்தமில்கருமை யென்றறைந்தனர் புலவர் அவை பிரமவயிரம், டித்திரியவியிரம், வைசியவயிரரம், சூத்திரவயிரமென்பனவாம். வயிரத்திற்குக்குற்றம் : சரைமலங்கீற்றுச் சம்படிபிளத்த, றுளைகரிவந்துகாக பாத, மிருத்துக்கோடிக ளிலாதனமுரித, றாரைமழுங்கறன்னோ, டீராறும் வயிரத்திழிபெனமொழிப என்றபடி பன்னிரண்டாம். அவற்றுள் மிக்க குற்றம் நான்கும் பயனுமாவன: க. காகபாதநாகங் கொல்லும். உ. விந்துசிந்தையிற்சந்தாபங்தரும் ந. மலம்பிரியாதது நிலந்தரு கிளைகெடும். ச. கீற்றுவரலினையேற்றவர் மாய்வர் என்பன. குணமாவன: பலகையெட்டுங் கோணமாறு, மிலகிய தாரையுஞ் சுத்தியுந்தராசமு, மைந்துந் குணமென்றறைந்தணர் புலவ, ரிந்திரசா பத்திக லொளிபெறினே என்பன, இந்திரசாபம் ~ வானவில்,. சிவசாத்திரங் களிலே வயிரம் ஒரு வகைக் கல்வென்று கூறப்படும். வயிரம் மதங்கமலை, இமயமலை, வேணாநதி முதலிய விடங்களிற் படுவனவென்பது ஆரிய நூற்றுணிபு. வயிரத்தைச் சரீரத்தி லணிவதனால் கருப்பதோஷத்தினாற் புத்திரோற்பத்தியில்லாத பெண்களுக்குப் புத்திரப்பேறும், யாவர்க்கும் இடி, விஷ முதலியவற்றுக் கச்சமின்மையுமுண்டாம். வலாசுரன் வயிற்றின் புறத்தைக் கொத்தி விழுங்கிய கருடன் அதனைக்கனைத்துமிழ, அதுவீழ்ந்து பல மலைகளிலுமூறிப்பிறந்தகற்கள் மரகத மெனப்படும். கருடோற்காரமெனப்படுவதுமிதுவே. பச்சைக்கு: நெய்த்தமயிற் கழுத்தொத்தபைம் பயிரிற், பசுத்தல் பொன்மைதன்னுடன் பசுத்தல், வக்கி பாய்தல் பொன்வண்டின்வயி, றொத்துத் தெளிதலொடெட்டுங் குணமே கருதுதல் வெள்ளைகன்மணல் கீற்று, பரிவுதார்சாயையிறுகுதன் மரகதத், தெண்ணிய குற்றமிவையென மொழிப. இனி மாணிக்கம். பதுமராகம், சௌகந்தி, குருவிந்தம், கோவாங்கு என நான்கு: தாமரை கழுநீர் சாதகபுட்கண, கோபமின்மினி கொடுங்கதிர் வினக்கு, மாதுளைப்பூவிதை வன்னியீரைந்து, மோதுசாதுரங்க வொளி யாகும்மே, சாதுரங்கமென்பது ~ பதுமராகம், திலகமுலோந்திரம் செம்பருத்திப்பூக், கவிமலர்குன்றி முயலுதிரம்மே, சிந்துரங்குக்கிற் கண்ணென வெட்டும், எண்ணிய குருவிந்த மன்னியநிறமே கோகிலக்கண்செம்பஞ்சு கொய்மலர்ப்பலாச, மசோகப்பல்லவ மணி மலர்க்குவளை யிலவத்தலர் களெனறாறுகுணமுஞ், சௌகந்திக்குச் சாற்றிய நிறனே கோவைசெங்கல் குராமலர் மஞ்சளெனக். கூறியநான்குங் கோவாங்குநிறனே, கோமேதகம் ~ கோமூத்திரநிறமுடையது, இனிப்புருடராத்தினது குணம் பொன்னையுருக்கி மாசறத்தெளிய வைத்தா லொத்த நிறத்தினையுடைமை. வைடூரியம் தேன்றுளி நிறத்தினை யுடையது. நீலம், வெள்ளை சிவப்புப் பச்சை கருமையென, றெண்ணியநாற்குலத்திலங்கிய நிறமே, கோகிலக்கழுத்துக் குவளை சுரும்ப, ராகுலக்கண்கள விரிச்சாறு, காயாலெனக் குணம்பதி னொன்றாமே எனவருவனவற்றாலே தெளியப்படும். நீலத்திற்குக் குற்றமெட்டு. இது காறுங்கூறியமணிகளெல்லாம் ஒரு முதலிற்றோன்றின. இனிமுத்துக் குரியகுற்றம், காற்றேறு, மணலேறு, கல்லேறு, நீர்நிலை யென்பன. குணம் : சந்திரனிறமும், வெள்ளியினது சோதியும், செவ்வாயினது ஒளியுமென மூன்றாம். எல்லாம் உருண்டனவாதல் வேண்டும். பவளத்தினது குணம் : துளையின்மையும், உருட்சியும், சிந்துரநிறமும், முசுமுசுக்கைக்கனி நிறமுமுடைமை. முத்தினாலே மேகோஷ்ணநீங்கும். இரத்தின பரீக்ஷையென்னு நூலிலும் பிற நூல்களிலும் விரிவுகாண்க

வைரவக்கடவுள்

சிவ வடிவங்களுளொன்று. இவர் சிவன் திருக்குமாரருளொருவர். இவர் சிவன் தம்மை மதியாத பிரமனது ஐந்து சிரசுகளிலொன்றைக் கொய்விக்குமாறு தோற்றுவிக்கப்பட்ட மூர்த்தி

வைராக்கியசதகம், வைராக்கியதீபம்

இவ்விரண்டும் சாந்தலிங்கசுவாமிகளாற் செய்யப்பட்ட ஞானநூல். பாட்டாலும் பொருளாலுஞ் சிறந்தன

வைவசுவதமநு

விவசுவதன் புத்திரன். இவன் பாரி சிரத்தை. இவன் புத்திரர் இக்ஷூவாகு, நிருகன், சரயாதி, திஷடன், திருஷ்டன், கரூசன், நரிஷ்யந்தன், விருஷத்திரன், நபகன், கவி எனப் பதின்மர். இவருள் இக்ஷூவாகு வமிசத்தரசர்களுக்கு அயோத்தி ராஜதானியாயிற்று இக்ஷூவாகுவமிசத்தார் காரூசரெனப்படுவர். நபகன் வமிசத்தார்க்குக் கண்டகி தீரதேசமுரியது. சரியாதி வமிசத்தார்க்கு குசஸ்தலி ராஜதானி. இவர்களே வைவசு வதமநுவமிசத் தரசர்கள். வைவசுவதமநு பாரியாகிய சிரத்தை தனக்கு ஒரு புத்திரியும் வேண்டுமென்று பிரார்த்தித்து இளையென்னும் புத்திரியைப் பெற்றாள். அதுகண்ட வைவசுவதன் தனது குருவாகிய விசிஷ்டரை நோக்கி அப்புத்திரியைப் புத்திரனாக்கித் தருகவென்ன, அவரும் அவ்வாறே இளையைச் சுத்தியுமனன் என்னும் புத்திரனாக்க, அவனையும் ஒருதிசைக்கரசனாக்கினான். அப்புத்திரனொரு நாள் வேட்டை மேற் சென்றபோது சரவணப் பொய்கையைக் கண்டு அங்கே தங்கினான். தங்குதலும் பூர்வம் பார்வதிதேவியார் யாவனொருவன் இப் பொய்கையில் வந்து தங்குவானோ அவன் பெண்ணுருப்பெறக் கடவனென்று விதித்தவுண்மையாற் சுத்தியுமனன் மீளவும் இளையென்னும் பெண்ணாயினான். அவ்வடிவத்தைக் கண்ட புதன் மோகித்துக் கூடிப் புரூரனைப் பெற்றான். இப்புரூரவனாலேயே சந்திர வமிசம் பெருகுவதாயிற்று. பின்னர் வசிஷ்டரது முயற்சியால் இளை ஒருமாசம் பெண்ணாகவும் ஒருமாசம் சுத்தியுமனன் என்னும் ஆண்மகனாகவுமிருக்கச் சிவன் அருள் புரிந்தார்

வைஷ்ணவம்

வைதிகசமயம் மூன்றனுளொன்று. மூன்றாவன சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்பன. வைஷ்ணவம் விஷ்ணுவை முதற்கடவுளாகக் கொண்ட சமயம். இது தென்கலை வடகலை யெனயிரண்டாம். தென்கலை நாலாயிரப் பிரபந்தத்தையும் வேதபுராணங்களையும் சமமாகக் கொள்வது. வடகலை நாலாயிரப்பிரபந்தத்தை அங்ஙனங் கொள்ளாதது. ஆழ்வார்களும் ராமானுஜாசாரியருமே இச்சமயத்தை ஸ்தாபித்தவர்கள். வைஷ்ணவர்கள் விசிட்டத்துவைத சித்தாந்தக் கொள்கையினையுடையர்கள்

வைஹயம்

மகததேச ராஜதானியாகிய கிரிவிரசத்துக்குச் சமீபத்துள்ள ஒரு மலை