அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
வீடூரான், வீடூரமுதலி

இவன் தொண்டை நாட்டு வீடூர்க்கிறைவனாகிய ஒரு வேளாளப்பிரபு. இவன் தமிழ்ப் புலவர்க்குத் தாதாவென்று தன்வாயிலிற் கொடியுயர்த்தித் தன்பால்வரும் புலவர்க்கெல்லாம் பெருநிதி வழங்கி வருநாளில், ஒரு புலவன்போய்த் தனது நுண்புலமை நிலைநாட்ட, இவன் அவனைப் புகழ்ந்து மெச்சி வேண்டுவதைக் கேட்டருளுமென்ன, புலவன் உன்பிரியநாயகியைத் தருதல் வேண்டுமென்றான். அதுகேட்ட இப்பிரபு சிறிதும்மனங்கோணாமல் தனது கற்பிற்சிறந்த மனையாளை யழைத்து உன்னை இப்புலவர் பெருமானுக் கீந்து விட்டேன் இன்றுமுதலா நீயெனக்கு மாதாவாயினை என்றான். அதுகேட்ட புலவன் நெஞ்சந்துணுக்குற்றுப் புருஷோத்தமனே, உன்மனக் கிடைக்கையைப் பரீக்ஷிக்குமாறு கேட்டதைப் பொறுத்து நான் கேட்குமுன்னே என்மனத்திலே என் புத்திரியாகப் புத்திபண்ணப்பட்ட இவ்வுத்தமியை மீளவும் அங்கீகரித்து என்னை மாமனாகக் கொண்டு இன்றுமுதல் அக்கேண்மை பாராட்டிவரக்கடவை, அதுவே எனக்குப்பெரியதோரூபகாரமும் பரிசிலுமாகுகவென்றான். பிரபுவும் புலவன் சொல்லை மறாது அங்கீகரித்தான். இவ்வுண்மை, போதாருந்தண் பொழில் வீடூரதிபன்புலவர்க்கெல்லாந் தாதாவெனக்கோடி கட்டுதலா லவன்றன்மனையை, நீதாவென வொருபாவாணன் கேட்பவந்நேரிழையை, மாதாவெனவழைத் தானென்கொலாந்தொண்டை மண்டலமே என்னுந் தொண்டை மண்டல சதகத்தாற் பெறப்படும்

வீட்டுமன், வீஷ்மன்

கங்கை வயிற்றிலே சந்தனுவுக்குப் பிறந்த புத்திரன். சந்தனு கிழப்பருவத்தை அடைந்தபொழுது அதிரூபவதியாகிய ஒரு கன்னிகையைக்கண்டு அவள் மேற்காதலு டையனாகி அவளுடைய தந்தையாரிடத்தில் தூதனுப்பித் தனக்கு மணம் பேசுவித்தான். அவர்கள் வீஷ்மன் பட்டத்துக்குரிய புத்திரனாயிருத்தலினாலவள் வயிற்றிற் பிறக்கும் புத்திரன் பட்டத்துக்குரியனாகானென மறுத்தார்கள். அதனைக் கேள்வியுற்ற வீஷமன் தந்தையினுடைய அவாவைத் தீர்க்கும் பொருட்டு அக்கன்னிகையினுடைய அவாவைத் தீர்க்கும் பொருட்டு அக்கன்னிகையினுடைய தந்தையாரிடஞ் சென்று தனக்கு அரசுரிமையும், விவாகமும் வேண்டுவதில்லை யெனச்சத்தியஞ் செய்து கொடுத்தான். அவ்வாறே சந்தனு அவளை மணம்புரிந்து, அவள் வயிற்றிற் பிறந்த விசித்திரவீரியனுக்கு அரசுரிமையீந்தான். வீஷ்மன் விசித்திரவீரியனையும் அவன் புத்திரனையும் சத்தியந்தவறாத அன்போடு பாதுகாத்து வந்தான். இவன் பாரதயுத்தத்திலே அர்ச்சுனனுக்குத் தோற்று நெடுங்காலந் தவஞ் செய்திருந்திறந்தான்

வீணை

தபதிநதி

வீதிஹேத்திரன்

தாளஜங்கன் புத்திரன். உ. திருஷ்டகேதன் புத்திரன். பாரவன் தந்தை. ந. இந்திரசேனன் புத்திரன்

வீமன்

பாண்டுவினது இரண்டாம் புத்திரன். வாயுவினது அனுக்கிர கத்தினாற் பிறந்தவன். இவன் மல்யுத்தத்தினும், புஜபலத்தினும், கதாயுதப்போரினும் தனக்கிணையில்லாதவன். ஜராசந்தனை வென்றவனும் திரௌபதியைக் கவர்ந்து சென்றஜயத்திரதனை வென்றவனும், விராடனிடத்திலே மடைப்பள்ளிக்கதிபனாக விருந்தவனும், கீசகனைக் கொன்றவனும், துரியோதனனைப் பாரதயுத்தத்திலே கொன்றவனும், இடிம்பனைக் கொன்று அவன்தங்கையை மணம் புரிந்தவனும் இவனே

வீமபராக்கிரமன்

ஒரு பாண்டியன்

வீமரதன்

ஒரு பாண்டியன்

வீரகன்

விநாயகன்

வீரகவிராயர்

தமிழிலே அரிச்சந்திரபுராணம் பாடிய புலவர். இவர் நல்லூர், நகரத்தில் நானூறு வருஷங்களுக்கு முன்னே விளங்கியவர்

வீரசேனன்

நளன் தந்தை. நளன்மகனும் இப்பெயர் பெறுவன்

வீரசோழியம்

பொன்பற்றியூர்ப் புத்தமித்திரனார் செய்த இலக்கணநூல். வீரசோழன் செய்வித்தது

வீரட்டானேசுவரர்

திருக்கண்டியூர் முதலிய அட்டவீரட்டத்திலும் கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

வீரணன்

ஒரு பிரஜாபதி

வீரநகரம்

தேவிகாநதி தீரத்திலே புலஸ்தியப்பிரமா தவஞ்செய்தவிடம்

வீரபத்தினி

கண்ணகி நெடுஞ்செழியனை வழக்கில் வென்றுமதுரையைத் தன்கற்பால் எரித்தமையின் இவளுக்கு இப்பெயர்

வீரபத்திரர்

சிவகுமாரருளொருவர். தக்ஷன் சிவனையும், உமாதேவியாரையும் அவமதித்தகாரணத்தாற் சிவன் கோபித்துத் தமது நெற்றிக் கண்ணை விழிக்க, அதினின்றும் இவ்வீரபத்திரர் தோற்றினர். வீரபத்திரர் உடனே தக்ஷன்யாகஞ் செய்கின்ற விடத்துக்குச் சென்று அவ்வியாகத்தை அழித்துத் தக்ஷனையுங் கொன்றார். அதுகண்ட தேவர்கள் சிவனைநோக்கி யாம் செய்தபிழையைப் பொறுத்தருளவேண்டு மென்று பிரார்த்திக்க அவர் தக்ஷணையாட்டுத் தலையையுடையனாக வெழுப்பியருளிப் போயினர். வீரபத்திரர் ஆயிரந்தலையும், இரண்டாயிரங்கையும், மூவாயிரம் கண்ணுமுடையவர்

வீரபாண்டியன்

வேட்டையாடும் பொழுது புலியாற் கொல்லப்பட்ட பாண்டியன்

வீரவாகு

விசுவாமித்திரர் வேண்டுகோளுக்கு அரிச்சந்திரனை அடிமை கொள்ளும் பெருட்டுச் சண்டாளனாக அவதரித்த யமன்

வீரவாகுதேவர்

பார்வதியாருடைய காற்சிலம்பினின்றும் சிந்திய நவரத்தினங்களும் நவசத்திகளாகிச் சிவத்தை இச்சித்து நோக்கித் தனித்தனி ஒவ்வொரு புத்திரரை யீன்றார்கள். அவருள் முதற் சததியாகிய ரத்தினகன்னிகையீன்ற புத்திரனார் இவ்வீரவாகுதேவர். இவர் சுப்பிரமணியருடைய சேனாபதியாகிச் சூரசங்காரத்துக்கு உபகாரமாயிருந்தவர்