அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
விகடன்

சுமாலிபுத்திரன்

விகடவிநாயகர்

விஷ்ணு சக்கரத்தைக்கவ்விய கபாலம் அதனை நெகிழ்க்காதாக, விஷ்ணுவிநாயகரை வேண்ட, அவர்விகடக் கூத்தாடுவையேல் அதனை வாங்கித் தருவேனெனக்கூறி அங்ஙனஞ் செய்ய வாங்கிக் கொடுத்தவர்

விகர்ணன்

துரியோதனன் தம்பி

விகிருதி

ஜீமூதன் புத்திரன்

விகுக்ஷி

குக்ஷி புத்திரன். ககுஸ்தன்தந்தை

விக்கிரமார்க்கன்

சந்திரசர்மன் என்னும் பிராமணனுக்கு உச்சைனி புத்திரசனாகிய சுருதகீர்த்தியினது புத்திரியிடத்துப்பிறந்த புத்திரன். இவன் உக்கிரதவங்கள் செய்து காளிகாதேவயினது அநுக்கிரகம் பெற்று அதனால் எக்கருமங்களையும் சாதிக்கும் ஆற்றலுடையனானான். சாகசாங்கன் என்னும் சிறப்புப்பெயர் இவனுக்கு இக்காரணம் பற்றி வந்ததுவேயாம். இவன் நெடுங்காலம் உச்சயினிபுரத்திலே பெரும்புகழோங்க அரசுபுரிந் தீற்றிலே சாலிவாகனனாற் கொல்லப்பட்டவன். இவன் அரசுபுரியத் தொடங்கியகாலம் இற்றைக்கு, கலிருத, ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னருள்ளது

விக்கிரமோர்வசியம்

ஒரு சம்ஸ்கிருதநாடகம். இது காளிதாசனாற் செய்யப்பட்டது. இதிலே புரூரவன் ஊர்வசி மேல் வைத்த காதல் எடுத்துக் கூறப்பட்டது

விசயநாதர்

திருவிசயமங்கையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

விசாகதத்தன்

முத்திராராடிசமென்னும் நாடகஞ் செய்த கவி

விசாரசர்மர்

சண்டேசுரநாயனார் காண்க

விசாலன்

இக்ஷூவாகுதம்பியாகிய நபகன் வமிசத்துத் திருணவிந்து புத்திரன். இவன் புத்திரன் எமசந்திரன், ஹேமசந்திரன்

விசாலம்

கிரிவிரசத்துக்கும் மிதிலைக்கு மிடையேயுள்ள நாடு

விசாலாக்ஷி

காசியிலெழுந்தருளியிருக்கும் அம்மையார் பெயர், உ, திருப்பைஞ் ஞீலியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர், ந, திருப்பாச்சிலாச் சிராமத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

விசித்தரன்

கன்கவிசயருடைய நட்பாளராகிய ஓரரசன்

விசித்திரவீரியன்

திருதராஷ்டிரன் பாண்டு என்போர் தந்தை. இவன் தந்தை சந்தது. தாய் சத்தியவதி. தமையன் சித்திராங்கதன்

விசிரவசு

புலஸ்தியன் புத்திரன். இவன் பாரியர் நால்வர். திருமண விந்து புத்திரியாகிய இளாவிளையிடத்துப் குபேரன் பிறந்தான். சுமாலி மகளாகிய கைகசியிடத்தில் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என மூவர் பிறந்தார்கள். இவள் தங்கை ராகையிடத்துக்கரன், தூஷணன், திரிசிரன் என்போர் பிறந்தார்கள். இவன் விச்சுரவாவு எனவும் படுவன்

விசிருஷ்டன்

கஞ்சன் தம்பி

விசிஷ்டாத்துவைதம்

ராமானுஜமதம். அது பிரமமும் வேறு, ஆன்மாவும் வேறு, பிரமத்துக்கு ஆன்மாக்கள் சரீரமாக விருந்து சந்நிதானவிசேஷத்தால் ஞானங் கைகூடப் பெற்றுப் பிரபஞ்சத்தை முற்றத்துறந்து பிரமத்தினது திருவடிமேல் வைத்த பற்றுடையராய் வைகுண்டஞ் சென்று அங்கே சாரூபம் பெற்றா நந்திக் திருத்தலே முத்தியென்று கூறுவது

விசுவகந்தன்

பிருதன்புத்திரன். சாசுவதன், இந்தன், விசுவகன் அதிசாந்திரன் என்னும் பெயர்களையும் பெறுவன்

விசுவகன்

விசுவகந்தன், உ, அங்கிரசன் வமிசத்தில் ஒரக்கினி

விசுவகர்மா

பிரபாசனுக்கு யோகசித்தியிடத்திற் பிறந்த புத்திரன். இவன் தேவகம்மியன்

விசுவசகன்

விருத்தசர்மன் புத்திரன். கட்டுவாங்கன் தந்தை

விசுவசித்து

ஜயத்திரதன் புத்திரன். சேனசித்து தந்தை

விசுவதேவர்கள்

சிரார்த்த காலத்திலே அர்ச்சிக்கப்படுகின்ற தேவதைகள். இவர்கள் வசுபந்தர், கிருதுதக்ஷர், காலகாமர், துரிவிரோசனர், புரூரவாத்திரவர் எனப்பதின்மர்

விசுவநாதர், விசுவேசுரன்

காசியிலேயுள்ள சந்திரசேகரசுவாமி. தேவிபெயர் விசாலாக்ஷி. அன்னபூரணி என்பது மற்றொரு தேவிமூர்த்தம்

விசுவன்

விசுவநிகண்டு செய்தவன்

விசுவபதி, விசுவபுக்கு

அங்கிரசன் வமிசத்தோரக்கினி

விசுவம்

ஒரு நிகண்டு. விசுவன் செய்தது

விசுவரூபன்

துவஷ்டாவுக்கு ரசனையிடத்துப் பிறந்த புத்திரன்

விசுவாநரன்

சாண்டிலியவமிசத்துப் பிறந்தவன். இவன் புத்திரன் வைசுவாநரன் என்னும் அக்கினி

விசுவாமித்திரன்

புரூரவன் மூன்றாம் புத்திரனாகிய அமவச வமிசத்துதித்த காதி புத்திரர். இவர் ஜாதியில் டித்திரியர். தமது தபோபலத்தால் பிராமணனாயினார். தம்மைப் பிராமணனாக அங்கீகாரஞ் செய்யாத வசிஷ்டர் மீது கோபமுடையராகி அவருடைய புத்திரர் நூற்றுவரையும் மாள்வித்தார். அதனாலும வசிஷ்டர் சலிக்காதிருந்தனர். திரிசங்குவுக்கு அந்தரசுவர்க்கம் அளித்தவரும் அரிச்சந்திரனைக் கொடியபரீக்ஷையால் சத்திய விரதன் என்னும் பெயரோடு விளக்கச் செய்தவரும் சகுந்தலைக்குத் தந்தையம் இவரே

விசுவாமித்திரை

வைடூரிய பர்வதத்திலுள்ள ஒரு நதி

விசுவாவசு

ஒரு கந்தருவ ராஜன். இவனுக்கு யாஞ்ஞவற் கியமகாரிஷி தத்துவோபதேசம் பண்ணினர்

விசுவை

தடிப்பிரஜாபதி மகள். தருமன்பாரி. இவளிடத்துப் பிறந்த புத்திரர் விசுவதேவர்

விச்சிக்கோன்

கபிலராற் பாடப்பட்ட ஒரு சிற்றரசன். பாரியினது புத்திரிகளை மணத்திற் கொள்ளுக வென்று கபிலர் வேண்டிய வழியுமுடன் படாது மறுத்தோன் இவனே

விஜயநகரம்

கன்னடதேச ராஜதானி. இந்நாளிலும் இது ஆரிய ராஜாவால் ஆளப்பட்டுவருகின்றது

விஜயன்

க. சுதேவன் புத்திரன். உருகன் தந்தை. உ. விஷ்ணு பரிசரருளொருவன். ந. அர்ச்சுனன். ச. அமவசு. ரு. பிருகன்மனசு புத்திரன். சு. ஜயன் புத்திரன்

விஜயமாநகரம்

பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

விஜயாசுவன்

பிருதுசக்கிரவர்த்தி மகன். அந்தர்த்தானன் எனவும் படுவன்

விடகன்

சுமாலி புத்திரன்

விடூரதன்

வற்சப்பிரீதி மாமன். முதாவதி தந்தை. உ. இரண்டாம் பசமானன் புத்திரன்

விததன்

பரத்துவாசன். இவன் ஊதத்தியின் பாரியிடத்தில் பிருஹஸ்பதிக்குப் பிறந்தவன். இவன் பிறந்தலும் தந்தையாரிருவரும் இறந்து போயினர். அப்போது மருத்து இவனை எடுத்துப்போய் சந்தானமின்றிருந்த பூருவமிசத்துப் பரதனுக்குக் கொடுத்தனர். இவன் புத்திரனாகிய புமன்னியனைப் பரதன் தத்த புத்திரனாக்கிக் கொண்டான்

விதர்ப்பன்

சியாமகன் புத்திரன். இவன் அரசுபுரிந்த தேசம் விதர்ப்பமெனப்பெயர் பெறுவதாயிற்று. இவனுக்குக் குசன், கிருதன், ரோமபாதன் என மூவர் புத்திரர்

விதர்ப்பம்

அஸ்தினாபுரத்துக்குத் தெற்கின் கணுள்ள தேசம்

விதலம்

கீழுலகங்களுள் இரண்டாவது. இது இருள் சூழ்ந்துள்ளது

விதஸ்தை

சந்திர பாகையிற் பிரியுமோருநதி

விதாதை

தாதை தம்பி. இவன் பாரி நியதி

விதிசை

மாளவதேசத்துள்ள ஒரு நதி. உ. மாளவதேசத்திலுள்ள ஒரு நகரம்

விதுரன்

திருதராஷ்டிரன் மந்திரி. அம்பிகையினது தோழியினிடத்து வியாசருக்குப் பிறந்த புத்திரன். இவன் மாண்டவியர் சாபத்தாற் சூத்திரனாகப் பிறந்த யமன். இவன் மகாதரும சீலன். திருதராஷ்டிரன் பாண்டவர்களை வஞ்சிக்கத் துணிந்த போது அது தகாதென வாதாடினவன். இவன் தருமநெறி சிறிதும் வழுவாதவன். பாண்டவர்களுக்குத் திருதராஷ்டிரனும் அவன் புத்திரரும் சூழ்ந்தவஞ்சனைகளை யெல்லாம் அப்பாண்டவர்களுக்குணர்த்தி அவர்களை அவ்வஞ்சனைக்குத் தப்புவித்தவனும் அரக்கு மாளிகை அமைத்து அதிற்பாண்டவர்களை யிருத்தித் தீக்கொளுவிக் கொல்லத் துரியோதனனெத்தனித்த பொழுது அம்மாளிகையிலே இரசியமாகப் பிலவழியொன் றமைப்பித்து அவ்வழியே புகுந்து பாண்டவர்களை உயிர்பிழைக்கும்படி காத்தவனும் இவ்வுத்தமனே. இவன் யவனபாஷையிலும் வல்லவன். உதிஷ்டிரனும் அவ்யவனபாஷையில் வல்லவன். இவன் திருதராஷ்டிரன் சபையில் நடந்த இரகசியங்களை யெல்லாம் இப்பாஷையினாலேயே உதிஷ்டிரனுக்குப் பிறரறியாவண்ணம் வாய்மொழியாலும் திருமுகமூலமாகவும் உணர்த்திவந்தான்

விதுஷன்

இந்திரனுக்குச் சசிதேவியிடத்துப் பிறந்த மூன்றாம் புத்திரன்

விதூரதன்

சுரதன் புத்திரன்

விதேகன்

நிமிபுத்திரன். மிதிலன். இவன் அரசுபுரிந்தமையின் மிதிலாதேசம் விதேக தேசமெனவும்படும்

வித்தியாதரர்

தேவர்களுளொருபேதம். இவர்கள் மாலிகாஞ்சனாதி வித்தைகளையுடைய மேகவாகனர்கள்

வித்தியாநாதன்

ஐஞ்நூறு வருஷங்களுக்கு முன்னே ஏகசிலாநகரத்தில் விளங்கிய ஒரு சம்ஸ்கிருதாலங்காரகவி. இவர் தமது அபிமானபிரபுவாகிய பிரதாபருத்திரன் மேல் அலங்காரநூல் ஒன்ற செய்து பிரதாபருத்திரீயமெனப் பிரதிஷ்டை செய்தவர்

வித்தியாரணியர்

மாதவாசாரியர் இவர் துங்கபத்திரைநதி தீரத்திலுள்ள தாகிய பம்பை யென்னும் கிராமத்திலே இற்றைக்கு ஐஞ்நூறுப் பதினேழு வருஷங்களுக்கு முன்னே வித்தியா நகரத்திலே அரசு வீற்றிருந்த அரிகரராயர் காலத்திலிருந்தவர். இவர் சம்ஸ்கிருதத்திலே ஏறக்குறைய எல்லாச் சாஸ்திரங்களிலும் வல்லுநராய் அவ்வச் சாத்திரங்களிலும் நூல்கள் செய்து விளங்கிய பிரசித்த பண்டிதர். இவர் தந்தைமாயணன். போகநாதர் சாயணாசாரியர் இவர் சகோதரர். இவர் புக்கணன் என்னுமரசனுக்கு மந்திரியாகவுமிருந்தவர். பராசர மாதவீயஞ் செய்தவருமிவரே. இவர் வறிய குடும்பத்திலே பிறந்தவராதலின் இளமையிலேயே செல்வராக வேண்டு மென்னும் பேரவாவோடு கல்விகற்று வந்தார். தம்மெண்ணம் விரைவிலே கைகூடாமையினாலே திருமகளையும் கலைமகளையும் நோக்கித் தவங்கிடக்குமாறு காட்டகத்திற்புகுந் துழலுவாராயினர். ஒருநாள் காட்டகத்தே அரசனுக்குரிய மாடுகளை மேய்த்துத் திரிபவனாகிய புக்கணனென்னு மொருடித்திரியனைக்கண்டு தாமநுபவிக்குங் கஷ்டத்தை யெடுத்துக் கூறினர். புக்கணன் அவர் மீது பேரிரக்க முடையனாகி அவர்க்குத் தினந்தோறும் போதியபால் தருவதாக வாக்களித்தான். அதற்கு அவர் அரசனுக்குரிய பாலை யான் கவர்தல் துரோகமாகுமேயென்ன, புக்கணன்அரசனுக்கு அளவுக்கு மேற்படப் பாலிருத்தலின் அவமே செல்லற் பாலதாகிய கூற்றிலொரு சிறுகூறு தவமேபுரிகின்ற உமக்குப் பயன்படுதல் அவனுக்குப் புண்ணியம் பயக்குமே யென்ன, அவர் உடன்பட்டனர் அவ்வாறே புக்கணன் கொடுக்கும் பாலையுண்டு காலக்கழிவு செய்து வரும் மாதவாசாரியார் அப்புக்கணன் மீது பேரன்புடையராயினார். உண்டிக்கவலை தீர்த்தலும் மாதவர் பேரூக்கங் கொண்டு தவமுயன்றார் நெடுங்காலங் கழிந்தபின்னர்க் கலைமகளுந் திருமகளும் புக்கணனுக்குத் தோன்றி, மாதவர் கருத்து இப்பிறப்பிலே நிறைவேறாதென்று கூறிப்போக, அவன் அதனை அவர்க்குரைத்தான். அவ்வளவிலமையாது அவர் மேன் மேலும் முயன்றார். ஈற்றிலே அவர் கோபமுடையராகித் தாமணிந்த பூணூலைக் கழித்து வீசிவிட்டுச் சந்நியாசியாயினர். அதுகண்டு கலைமகளும் திருமகளும் வெளிப்பட்டு இனியுனக்கு வேண்டுவதைக் கேட்கக் கடவையென்ன, அவர் கலைமகள் அநுக்கிரகமொன்றே வேண்டுவது, திருமகள் அநுக்கிரகமினி வேண்டுவேனல்லேன், ஆயினும் திருமகளநுக்கிரகம் புக்கணனுக் குண்டாகுக, அவனே நும்மருளை யான் பெறுதற்கநு கூலியாயிருந்த பரமோத்தமன் என்றார். அது கேட்டிருதேவியரும் மகிழ்ந்து மறைந்தனர். இது நிகழ்ந்த சின்னாளில் ஹஸ்தினா புரத்தரசனிறக்க, மந்திரிமார் பட்டத்துயானையை அலங்கரித்த அபிஷேகக்குடத்தை அதன் கையிற்கொடுத்து ஓரரசனைக் கொண்டு வருமாறு பரிசனங்களோடு விடுத்தனர். அது பல நாடு காடுகளைக் கடந்து புக்கணனிருக்குங் காட்டை யடைந்தது. புக்கணன் அவ்வமையந் துயில் செய்வானாயினான். யானை அவனை யடுத்துக் கங்கைநீரை அவன் மேற்சொரிய, அவன் துணுக்குற்றெழுந்து பார்க்கஅவன் கழுத்தில் மாலையைச் சூட்டி வணங்கி அவனைத் தூக்கித் தன்முதுகின் மேலுள்ள தவிசின் மீதிட்டுக் கொண்டு சென்று அரசனாகிற்று. நாட்சில கழிந்தபின்னர் மாதவாசாரியர். புக்கணன் தம்மேற் கொண்ட அன்பை அரசனாயிருக்கு நிலையிலும் சாதிப்பவனோ வென்று நிதானிக்குமாறு அவன்பாற் சென்றனர். அவர் வரவை யொற்றராலுணர்ந்த புக்கணன் பண்டையிலும் மிக்க அன்பும், வணக்கமும், அடக்கமும், நட்பு முடையனாய் நடந் தெதிர்கொண்டு தழுவிக் கொண்டாடி அவற்க்குப் பிரியாநண்பனாய், எக்கருமத்திலும் அவரையுசாவி நல்லரசு புரிந்து வருவானாயினான். ஒருநாள் அவன் அவரைப் பார்த்து நம்பெயர் உலகில் நின்று நிலவும் பொருட்டும் எனக்குப் பின்வருமக்கட் பரம்புக் கெல்லாம் பயன்படுமாறும் நூல்களைச் செய்துலகுக்கு பகரித்தல் கடனாகக் கொள்வீரென்ன அவ்வாறே செய்து மெனக்கூறி அவர் எண்ணிறந்த வியாக்கியானங்களை யெழுதிப் பிரகடனம் பண்ணினர். வேதம், உபநிஷதங்கள் சூதசங்கிதை முதலியனவெல்லாம் இவர் அவதாரஞ் செய்திலரேல் பாஷியங்கள் வியாக்கியானங்கள்காணா. இவர் செய்த பாஷியங்களுக்கும் வியாகும், வியாக்கியானங்களுக்குங் கணக்கிடுதல் எளிதன்று. இவர் செய்த சங்கரவிலாசம் நாற்பதினாயிரஞ் சுலோகமுடையது. வித்தியாரண்ணியர் என்னும் பெயர் தீக்ஷாநாமம்

வித்தியுத்துருவன்

குபேரன் ஏவலாளருளொருவன். கங்கன் என்னும் பக்ஷியரசனைக் கொன்றமைக்காகக் கந்தரன் என்னும பக்ஷியாற் கொல்லப்பட்டவன்

வித்தியுற்கேசன்

ஹேதி புத்திரன். தாய் பயை

வித்தியுற்சிகுவன்

ராவணன் தூதருளொருவன். மகாமயாவி. சீதை அசோக வனத்திலிருந்து ராவணன் சாலங்களுக்குடன் படாதிருந்தமைகண்ட இவன் ராமலக்ஷூமணர்களுடைய தலைகளைக் கொய்துவந்தேனென்று பொய்த்தலைகள் செய்து அவளுக்குக்காட்டி இனியாயினும் ராவணன் எண்ணத்துக்குடன் பாடாயாவென்று கேட்டவன், உ, சூர்ப்பணகைநாயகன். இவன் காலகேயவமிசத்தவன். ராவணன் திக்குவிசயத்துக்குச் சென்றபோது உடன்சென்ற இவனைக் காலகேய யுத்தத்தலே தனதுமைந்துனனென்றறியாது கொன்று மீண்ட போது தன் செயலையுணர்ந்து சூர்ப்பணகையைத் தேற்றி அதற்காக ஜனஸ்தானத்தை நிருமித்து அங்கே அவளை யிருந்தரசு செய்யமாறு செய்தான்

விநதன்

சீதையைத் தேடிவரும் பொருட்டுச் சுக்கிரீவனால் அனுப்பப்பட்ட தூதரு ளொருவன்

விநதை, வினதை

தடிப்பிரஜாபதிமகள் கசியபன் பாரிகளு ளொருத்தி. இவள் கருடன் தாய்

விநாயகன்

க. விக்கினேசுவரன், உ, கருடன்

விந்தாநுவிந்தர்

ஜயத்சேனனுக்கு வசுதேவன் தங்கையாகிய ராஜாதி தேவியிடத்திற் பிறந்த புத்திரர்

விந்தியபர்வதம்

விந்தமலை. இது தக்ஷிணத்தையும் உத்தரத்தையும் பிரிக்கு மெல்லைமலை. அகத்தியாராற் பாதாலத்தழுத்தப்பட்ட மலை

விந்தியாவளி

பலிசக்கரவர்த்தி பாரி

விபண்டகன்

இவன் பிரமசாரிய விரதத்தை அநுஷ்டித்து வரும் போது ஒருநாள் ஒரு தடாகத்திலே நிராடி நிற்கையில் ஊர்வசிவர அவளைக்கண்டு விரகமுடையனாய் இந்திரியத்தை அத்தடாகத்தில் விட்டான். அதனை ஒரு பெண் மான் நீரோடருந்திக் கருப்பமுற்று இருசியசிருங்கன் என்னுங் குமாரனையீன்றது

விபாசை

இமயத்தின் தென்பாலற் பத்தியாகிச் சதத்துரு நதியிற் சங்கமிக்கின்றநதி. இது புத்திர சோகத்தால் வருந்தியவசிஷ்டரது பாசத்தை விமோசனம்பண்ணினமையின் இப்பெயர் பெற்றது

விபாவசன்

தநுவினது புத்திரருளொருவன், உ, முராசுரன் புத்திரன். இவன் கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன், ந, ஒரு பிராமணன். இவன் தனது தம்பியாற் கூர்மமாகச் சபிக்கப்பட்டுக் கருடனாற் பக்ஷிக்கப்பட்டவன், ச, வசுபுத்திரன்

விபாவசி

மந்தாரன் என்னும் வித்தியாதரன் மகள். இவள் சுவரோசிக்கு மிருகபக்ஷிஜாதிகளுடைய பாஷைகளை உணரும் வித்தையைக் கற்பித்து அவனுக்கு மனைவியாயினவள்

விபீஷணன்

விசிரவசுவுக்குக் கைகேசியிடத்திலே பிறந்த மூன்றாம் புத்திரன். ராவணன் தம்பி. இவன் சீதையை ராமனிடத்திற் கொண்டு போய் ஒப்புவித்து விடும்படியாகப் பலவாறு போதித்தும் அவன் கேளாமையால் அவனை விடுத்துப் போய் ராமரைச் சரணடைந்தவன். இவனை ராமர் அபயஸ்தம் கொடுத்து ராவணசங்காரதின் பின்னர் இலங்காபதி யாக்கினர். இவன் சிரஞ்சீவி. இவன் பொருட்டாக ஸ்ரீரங்கநாதர் தெற்குமுகமாக அறிதுயில் கொள்ளுகின்றனர் என்பது ஐதிகம்

விபு

க. சத்தியகேதுபுத்திரன். சுரபுதந்தை, உ, ய. பப்பிருபுத்திரன்

விபுலன்

பலராமன்தம்பி, உ, சீவகன் தம்பியருளொருவன், ந, மேரு, ச, இமயம்

விபூதி

சைவசின்னங்களுள் விசிட்டமாகிய திருநீறு. இது ஐசுவரியத்தைத் தருவதும், பாவநாசஞ் செய்வதும், சகலதுக்கங்களையும் நீக்குவதுமாகிய குணங்களையுடையது. இக்காரணம் பற்றி இதுவிபூதி, ரக்ஷை முதலிய நாமங்களைப்பெறும். விபூதி என்பதன் பொருள் அரண், வலி

விப்பிரசித்தி

இவன் கசிபனுக்குத் தனுவினிடத்திற் பிறந்த புத்திரன். திதிபுத்திரியாகிய சிம்மிகை இவன் பாரி. இவன் புத்திரர், ராகு, கேது, நமுசி, வாதாபி, இவ்வலன், நரகன், சுவர்ப்பானன், புலோமன்,வக்திரயோதி முதலியோர்

விப்பிரன்

சிஷ்டிபுத்திரருளொருவன்

விப்பிராஜன்

சுகிருதிபுத்திரன்

வியலூர்

செங்குட்டுவனால் வெல்லப் பட்டவூர்களுளொன்று. வீயலூர் எனவும் வழங்கும், சிலப்

வியாக்கிரபாதர்

மத்தியந்தினமுனிவர் குமாரர். இவர் பூர்வநாமம் பாலமுனிவர். இவர் சிவபூஜையின் பொருட்டுக் கொய்யும் மலர்கள் பகற்காலத்திலே வண்டால் எச்சிற்படுகின்றனவேயென்று வருந்திச் சிவனிடத்திலே புலிகண்ணும் புலிக்காலும் வேண்டிப் பெற்றுத் தில்லைவனத்திலே இரவிற் சென்று மலர்கொய்துவைத்துப் பகல் எல்லாம் பூசைபுரிபவர். இவர் அதுபற்றியே வியாக்கிரபாதர் என்னும் பெயர் பெற்றார். இவர் சிதம்பரத்திலே கனகசபையிலே சிவபெருமான் செய்கின்ற ஆனந்தத்தாண்டவத்தைப் பிரத்தியடிமாகக் கண்டவர்

வியாக்கிரபுரேசர்

திருப்பெரும்புலியூரிற் கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

வியாசர்

கிருஷ்ணத்துவைபாயனர். பராசரர் சத்தியவதியைக் கூடிப் பெற்ற புத்திரர். வேதங்களை வகுத்த காரணத்தால்வியாசர் என்னும் பெயர் பெற்றனர். வேதாந்த சூத்திரஞ் செய்தவரும் மகாபாரதத்தை விநாயகரால் எழுதுவித்தவரும் இவரே. இவர் புத்திரனார்சுகர். இவர் கங்கையின் கண்ணுள்ள தீவிலே பிறந்தமையால் துவைபாயனர் எனப்படுவர். துவீபம்~ தீவு அயனர் ~ அதிற்போந்தவர். இவர் புராணங்களையும் பதினெட்டாக வகுத்தனர். பாண்டு திருதராட்டிரர்களுக்குத் தந்தையுமிவரே

வியாதி

நகுஷன் மகன்

வியுஷ்டி

புஷ்பாரணனுக்குத் தோஷையிடத்துப் பிறந்த புத்திரருளொருவன். இவன் பாரி புஷ்கரிணி. சர்வதேசசு இவன் புத்திரன். பிரதோஷன். நிசீதன் இவன் தமையன்மார்

வியோமன்

சம்சன்சேனாபதி. இவன் ரேபல்லையிலே கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன், உ, தசாருகன் புத்திரன்

விரகாங்கன்

ஓரரசன். இவன் புத்திரரைவரும் வேதத்திலுள்ள சிலகீதங்களுக்குக் கர்த்தர்

விரஜன்

க. ஜாகர்ணன் சீஷன். உ, பிரி, துவஷ்டா புத்திரன்

விராடன்

மற்சியதேசாதிபதி. இவன் தேசாதிபதி. இவன் தேசத்திலேயே பாண்டவர்கள் தமது அஞ்ஞாதவாச காலத்தைக் கழித்தார்கள். இவன் புத்திரியாகிய உத்தரையை அருச்சுனன் புத்திரனாகிய அபிமன்னியன் பாணிக்கிரகணஞ் செய்தான். பாண்டவர்களுக்குப் பாரதயுத்தத்திலே விடராடராஜன் பெருந்துணையாக நின்றவன்

விராதன்

பூர்வம் தும்புரு என்னும் கந்தருவன் குபேரன் சாபத்தால் ராடிசனாகி இப்பெயர் பெற்றான். இவன் ராமன் தண்டகாரணியஞ் சென்ற போது அவராற் கொண்றொழிக்கப்பட்டவன்

விரிச்சியூர்நன்னாகனார்

புறநானூறு பாடினோருளொருவர்

விரியூர்நசக்கனார்

புறநானூறு பாடினோரு ளொருவர். விரியூர் அங்கனெனப்படுவாரும் இவரேபோலும்

விருகதேசசன், விருகலன்

இவர்கள் சிஷ்டிபுத்திரர்கள்

விருகன்

க. இருகன் புத்திரன். பாகுகன் தந்தை, உ, சுகன் என்னும் தைத்திரியன் புத்திரன், ந, வசுதேவன் தம்பி, ச, வசுதேவன் தம்பியாகிய வற்சகன் புத்திரன்

விருகோதரன்

வீமன்

விருக்கிணன்

கார்த்தவீரியார்ச்சுனன் பௌத்திரன். மதுபுத்திரன். விருஷ்ணி தந்தை

விருஜினவந்தன்

குரோஷ்டு புத்திரன்

விருத்தசர்மன்

தசரதன் புத்திரன். தலீபன் என்றும் பெயர் பெறுவன். இவன் புத்திரன் விசுவசகன்

விருத்தடித்திரன்

ஜயத்திரதன் தந்தை

விருத்திரன்

ஓரசுரன். துவஷ்டாதனது ஜேஷ்டபுத்திரனாகிய விவசுரூபனை இந்திரன் கொன்றானெனக் கோபித்து அவனை ஜயித்தற் பொருட்டுத் தவமிருந்து பெற்ற புத்திரன் இவன். இவ்விருத்திரன் மேகங்களைப்பிடித்துச் சிறையிட்ட போது இந்திரன் நெடுங்காலம் போராடி அவனைக் கொன்றொழித்தான்

விருந்திட்டநாதர்

திருக்கச்சூராலக் கோயிலிலே எழுந்தருளியிருக்கும் சுவாமி பெயர்

விருஷகன்

சகுனிதம்பி

விருஷசேனன்

கர்ணன் புத்திரன். இவன் அருச்சுனனாற் கொல்லப்பட்டவன்

விருஷணன்

கார்த்தவீரியார்ச்சுனன் மூன்றாம் புத்திரன்

விருஷதர்ப்பன்

சிபிமூத்தமகன். உ. சீநரதேசத்தரசன்

விருஷத்திரன்

இக்ஷூவாகு தம்பி. வைவசுவதன் புத்திரன். இவன் குருசாபத்தால் சூத்திரகாகிப் பின்னர்ப் பிராமணனாயினவன்

விருஷன்

சிருஞ்சயன். ராஷ்டிரபாலரிகை வயிற்றிற் பெற்ற புத்திரன்

விருஷபகிரி

தற்காலம் ரத்தினபுரியெனப்படும். இது மகததேசத்திலே வராகபர்வதத்துக்கு அணித்தாயுள்ளது

விருஷபர்வன்

தானவர்க்கதிபதி. சுக்கிரன் சீஷன். இவன் சகியபனுக்குத் தனுவயிற்றிலே பிறந்தோன். இவன் மகளாகிய சர்மிஷ்டை சுக்கிரன் மகளாகிய சர்மிஷ்டை சுக்கிரன் மகளாகிய தேவயானையை அவமதித்துப் பேசினாள். அஃதுணர்ந்த விருஷபர்வன் அச்சர்மிஷ்டையைத் தேவ யானைக்கு ஏவற்பெண்ணாகுக வென்று சபித்தான். அவ்வாறு அவள் அடிமையாயிருக்கும் காலத்தில் யயாதி தேவயானையை மணம் புரிந்தபோது சர்மிஷ்டையையும் உடன் கொண்டு போய்ப் பின்னர் அவளையும் மனைவியாக்கினான்

விருஷரதன்

கர்ணன் தம்பி

விருஷ்ணி

விருக்கிணன் புத்திரன், உ, விதர்ப்பன் இரண்டாம் புத்திரனது வமிசத்துச்சாத்தவதன் நான்காம்புத்திரன். இவன் வமிசத்தோர் விருஷ்ணர் எனப்படுவர். சுமித்திரன், யுதாசித்து என இருவர் இவன் புத்திரர், ந, அந்தகன் பௌத்திரன். குகுரன் புத்திரன், ச, பஜமானன் புத்திரருளொருவன்

விரூபன்

இரண்டாம் அம்பரீஷன் மகன்

விரூபாடின்

மாலியவந்தன் புத்திரன். இவன் சுக்கிரீவனாற் கொல்லப்பட்டவன், உ, தநுபுத்திரன்

விரோசனன்

பிரஹலாதன் புத்திரன். பலிச்சக்கர வர்த்தியினது தந்தை

விரோஹணன்

நரன்புத்திரன்

விறன்மீண்டநாயனார்

செங்குன்றுரிலே வேளாண்மரபிலே விளங்கிய ஒரு சிவபக்தர். இவர் சுந்தரமூர்த்திநாயனார் காலத்தவர்

விலோமதநயன்

குகுரன் பௌத்திரனாகிய விருஷ்ணிபுத்திரன்

வில்லவன்கோதை

செய்குட்டுவன் மந்திரி

வில்லிபுத்தூராழ்வார்

தமிழிலே விருத்தப்பாவாற் பாரதம்பாடிய புலவர். இவர் ஆட்கொண்டான் என்னுஞ் சனியூர் அரசனுக்கு அபிமானப்புலவர். இவர் ஆயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளவர். இவர் சரித்திரத்தை வரந்தருவான் என்பதனுட் காண்க

வில்வவனநாதர்

திருக்கொள்ளம் பூதூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

வில்வவனேசர்

திருவைகாவிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

விழியழகர்

திருவீழிமிழலையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

விவசுவதன்

துவாதசாதித்தியருளொருவன். தந்தை கசியபன். தாய் அதிதி. இவன் விசுவகர்மன் புத்திரிகளாகிய சஞ்ஞாதேவி சாயாதேவி என்பவர்களை விவாகம் பண்ணினான். இவ்விவசுவதனுக்கு வைவசுவதமன், யமன், சனி எனமூவர் புத்திரரும், யமுனை, தபதி என இருபுத்திரிகளும் பிறந்தார்கள்

விவிம்சன்

இரண்டாங் கனித்திரன் தந்தை

விஷ்ணு

திரிமூர்த்திகளுளொருவர். இவர் தொழில் திதி. இவர் உலக பரிபாலனத்தின் பொருட்டு எடுத்த அவதாரங்கள் பத்து, அவை மற்சியம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமன், ராமன், கிருஷ்ணன், புத்தன், கற்கி என்பனவாம். விஷ்ணுவுக்குப் பீதாம்பரன், கருடத்துவசன், சக்கராயுதன், லக்ஷூமிபதி முதலியபல நாமங்களுள. இவருக்கு ஆயுதம் சுதரசனமென்னும் சக்கரம், பாஞ்சசன்னியமென்னுஞ் சங்கு, கௌமோதகி யென்னுந் தண்டு, நந்தகம் என்னும் வாள், சார்ங்கமென்னும் வில்லு என ஐந்தாம். இவருடைய ஆவரணம் கௌஸ்துபம், மார்பிலேயுள்ள மற்சம் சீவற்சம், இவர் பாற்கடலிலே சர்ப்பசயனத்திலே துயில்கொள்வர். நாராயணனே விஷ்ணு வென்றும், நாராணனே நிர்க்குணவடிவென்றும் விஷ்ணு சகுணவடிவென்றும் புராணங்கள் பலபடக்கூறும். நாராயணன் காண்க

விஷ்ணுகுப்தன்

சாணக்கியன்

விஷ்ணுசர்மன்

க. வேதநாராயண புரத்தக்கிரகாரத்திலிருந்த ஒரு பிராமணர். இவர் புத்திரன்விக்கிரமார்க்கன் தந்தையாகிய சந்திரசர்மன், உ, பஞ்சதந்திர மென்னும் நூலைச் செய்து சுதரிசனன் என்னும் ராஜாவுடைய புத்திரருக்கு அந்நூலால் ராஜதந்திரம் நீதிசாஸ்திரமுதலியவற்றைக் கற்பித்தவர்

விஷ்ணுபுராணம்

பதினெண்புராணத்தொன்று. பராசரர் அருளியது. இது உச000 கிரந்தமுடையது. இதிலே வராககற்ப வரலாறு முதலியன கூறப்படும். பலவகைப்பட்டவுலகங்களையும், கிரகமண்டலங்களையும், யுகசரித்திரங் களையும் குறித்து ஆராயவிரும்பு வோர்க்கு இது சிறந்த நூலாகும்

விஷ்ணுவர்த்தனன்

பாஸ்கரவந்தன்

விஷ்வக்ஜோதி

பிரியவிரதன் வமிசத்து ஓரரசன்

விஷ்வசேனன்

க. பிரமத்தன்புத்திரன். உ. விஷ்ணுதூதருளொருவன். இவன் வைகுண்ட சேனாபதி

விஹாரம்

வங்கதேசத்துக்கு வடக்கின் கணுள்ள தேசம்