அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
வாகீசர்

திருநாவுக்கரசர்

வாசமலர்க்குழல்நாயகி

திருஎதிர்கொள் பாடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

வாசவதத்தை

இவள் அநேக சரித்திரங்களுக்குக் கதாநாயகி. பித்தியோதனன் மகள்

வாசவன்

இந்திரன்

வாசஸ்பதிமிசிரன்

வேதாந்தசூத்திரத்திற்குச் சங்கராசாரியர் செய்த பாஷியத்திற்கு வியாக்கியானஞ்செய்தவர். இவர் ராமானுஜருக்கு முன்னிருந்தவர்

வாசுதேவன்

க. கிருஷ்ணன். உ. கரூசதேசராஜா. இவன்மிக்க கர்வமுடையனாய்த் தானே கிருஷ்ணனென்று சொல்லப்படத் தக்கானென்றி றுமாந்திருந்த காலத்திலே கிருஷ்ணனாலே கொல்லப்பட்டவன்

வாஜசநேயசாகை

யாஞ்ஞவல்கியன் செய்த யருரர் வேத சாகை

வாதாபி

விப்பிரசித்திக்குச் சிமஹிகையிடத்திற் பிறந்த புத்திரன், அகஸ்தியர்காண்க, அசமுகி துருவாசரை வலிதிற் கூடி இவ்வலன்வாதாபி என்போரைப் பெற்றாளென்பது கந்தபுராணம்

வாத்சியன்

சாகல்லியன் சீஷன்

வான்மீகியார்

முதற்சங்கத்திருந்த ஒருத்தம தமிழ்ப்புலவர். இவர் செய்த நூலை நச்சினார்க்கினியர் தலையாய வோத் தென்பர், உ, கடைச்சங்கப் புலவருளொருவர். இவர் பாடல் ஒன்று புறநானூறுற்றினுள்ளே யுளது

வாமதேவன்

வசிஷ்டனோடு அயோத்தியில் வசித்த தசரதன் புரோகிதன். உ. சிவன்

வாமனன்

க. பலிசக்கரவர்த்தியைச் சங்காரம் பண்ணும் பொருட்டுக் கசியபனுக்கு அதிதியிடத்துப் பிறந்த விஷ்ணு. இவ்வவதாரம் தசாவதாரங்களுளைந்தாவது. உ. காசிகாவிருத்தி செய்தவர்

வாமனம்

அஷ்டாதசபுராணங்களுளொன்று. சுவேதவராக கற்பத்துக்குரியதாகிய முதல் மூன்று வேதத்திலும் சொல்லப்பட்ட விஷயங்களையும் திரிவிக்கிரம வரலாறுகளையும்எடுத்துக் கூறுவது. இது பிரமாவினால் சொல்லப்பட்டது. பதினாலாயிரங் கிரந்தமுடையது. உ. தென்றிசையானை

வாமாசாரம்

தந்திரமார்க்கத்து இடங்கையார் வழக்கம்

வாயிலார் நாயினார்

மயிலாப்பூரிலே வேளாளர் குலத்திலவதரித்து ஞான பூசை செய்து சிவபதம் அடைந்த பக்தர்

வாயு

இவன் வாயுமண்டலத்திற்கு அதிதேவதை. வெள்ளியமேனியும் மான் வாகனமும், எக்காளமும், அழகியரதமும், அவ்விரதத்திற்கு இரண்டு முதலாயிரங் குதிரைகளுமுடையன். இவன் அதிதிபுத்திரன்

வாரணாசி, வாராணசி

காசி. வரணை அசி என இருநதிகள் கூடிப் பிரவாகித்தலால் அஃது இப்பெயர் பெற்றது

வாரணாவதம்

பிரயாகை. இது துரியோதனன் பாண்டவர்களை யிருத்திக் கொல்லுமாறு அரக்குமாளிகை அமைத்த இடம். இது பாரதயுத்த காலத்திலே கௌரவசேனைக்கு ஒருபாசறையாகவு மிருந்தது

வாராகம்

க. ஒரு கற்பம். உ. ஒருபுராணம். இது கற்பாதிமானங்களும் பிறவும் கூறுவது. இது உச000 கிரந்தமுடையது

வாருணம்

ஒருபுராணம்

வாருணி

மத்தியத்துக்கு அதிதேவதை

வார்கொண்டமுலையம்மை

மேலைத்திருநாட்டுப் பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

வார்த்திகன்

தக்ஷிணாமூர்த்தி, சிலப்

வாலகில்லியர்

இவர்கள் பிரமமானச புத்திரருளொருவராகிய கிருது புத்திரர் அறுபதின்மர். மகாவமுடையோர். இவர்கள் அங்குஷ்டப் பிரமாணமாயுள்ள தேகமுடையோர்கள். இவர்கள் நிரந்தரம் சூரியரதத்தைச் சூழ்ந்து திரிவர்

வாலாம்பிகை

திருநெய்த்தானத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

வாலி

சுக்கிரீவன்தமையன். அங்கதன் தந்தை. இவன் பாரிதாரை. இவன் சுக்கிரீவன் வேண்டுகோளினபடி ராமராற் கொன்றொழிக்கப்பட்டவன். இவன் இறந்தபின்னர்த் தாரைசுக்கிரீவன் மனைவியாயினாள்

வாலீசுவரர்

குரங்கணின் முட்டத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

வால்மீகி

வடமொழியிலே ராமாயணஞ் செய்த வித்துவசிரேஷ்டர். இவர் ஜாதியிலே பிராமணராகியும், கிராதர்தொழிலை மேற்கொண்டு காட்டிலேயிருந்து வழிப்போக்கர்களை அலைத்து அவர்கள் பொருளைக் கவர்ந்தொழுகும் நாளில் நாரதர் கண்டு ஞானோபதேசம் பண்ணி அவரை நல்வழிப்படுத்தினர். அதன்பின்னர் மகாதவசிரேஷ்டராகி ராமாயணத்தை இயற்றி முடித்தார். சீதையை ராமர் காட்டுக்கனுப்பியபோது இவ்விருஷியே அச்சீதையையம் குசலவர்கள் என்னும் புத்திரரையும் ஆதரித்தவர். இவர் வருணன் மகனார் என்றுங் கூறப்படுவர். அதுகாரணமாகப் பிராசேதசர் எனவும் படுவர், பிரதேசஸ் ~ வருணன், அவன் புத்திரர்

வாழவந்தநாயகியம்மை

திருவாஞ்சியத்திலே கோயில் கொண்டிருக்கும தேவியார் பெயர்