அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
லக்ஷூமணன்

ராமன் தம்பி. தசரதனுக்குச் சுமித்திரையிடத்துப் பிறந்த புத்திரன். இவன் ராமனிடத்து மிக்க பக்தியுடையவன். இவன் ராமன்மேல் வைத்த பக்தியினாலும் சகோதர அன்பினாலும் ராமரோடு காட்டுக்கேகி அவருக்கு வந்த கஷ்டங்களை யெல்லாம் உடன் அநுபவித்தானாதலின் சகோதர அன்பிற்கு இவனை இலக்கியமாக எடுத்துக் கூறுவர்

லக்ஷூமணவதி

கௌடபுரி

லக்ஷூமி

அமிர்தமதனத்துக்கண் திருப்பாற்கடலிலெழுந்த பெண். இவர் விஷ்ணுவுக்குத் தேவியாயினர். பிரமாவுக்குப் புத்திரியாய் சியேட்டா தேவிக்குப் பின் பிறந்தவராகவும் சொல்லப்படுவர். பிருகுபுத்திரியென்றுஞ் சிலர் கூறுவர். இதுகாரணமாகப் பார்க்கவி யென்றும் ஒரு பெயர்பெறுவர். இவ்விகற்பமாகிய கொள்கையெல்லாம் கற்பந்தோறும் எடுத்த அவதார பேதத்தால் வந்தனவாம். லக்ஷூமிதேவி செல்வங்களுக்கெல்லாம் அதிதேவதை

லக்ஷூமீசுவரர்

திருநின்றியூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

லங்காதேவி

தருமன் பாரியாகிய தக்ஷன்புத்திரி. லம்பா என்றும் பெயர் பெறுவள்

லங்காபுரி, லங்கை

ராவணன் ராஜதானி. இது தென்சமுத்திரத்திலே திரிகூடபர்வத சிகரத்திலே விசுவகர்மாவினால் நியமிக்கப்பட்ட பட்டணமும் அதனைச்சேர்ந்த நாடுமாம் முதலிலே மாலியவந்தனுக்கு ராஜதானியாகிப் பின்னர்க் குபேரனுக்கு ராஜதானியாகி அதன்பின்னர் ராவணனாலே அபகரிக்கப்பட்டது. ஏழுமதில்களை யுடையது. இதனைச் சேர்ந்த நாட்டையுள்ளிட்டு இஃது எழுநூறுகாதம் விஸ்தாரமாயிருந்த தென்பர் இது சூரிய சித்தாந்தத்திலே சொல்லப்பட்ட மேகலாநகரங்கள் நான்கனுள் ஒன்று. சோதிட சாஸ்திரத்துக்கு நாடிஸ்தானமாக விருந்தது. இப்போதுள்ளலங்கை மேகலாரேகை, Equator, க்கு வடக்கே வெகுதூரத்திலிருப்பதாலும், ஆதிலங்காபுரி மேகலாரேகையிலிருந்தமையாலும், கடல் வாய்ப்பட்டழிந்த லங்கையினது ஒருசிறுகூறே தற்காலத்துள்ளதாதல் வேண்டும்

லங்கினி

லங்கையைக் காவல் செய்துநின்ற ஒரு ராக்ஷசி. இவள் அது மந்தனாற் கொல்லப்பட்டவள்

லங்கை

லங்காபுரி காண்க

லதை

ஓரப்சரப்பெண்

லம்போதரன்

விநாயகர். தொந்தி வயிற்றினையுடையவ ரென்பது பொருள்

லவணாசுரன்

மதுபுத்திரன். இவன் சாதுக்களை வருத்துவதே தொழிலாகக் கொண்டு திரியுங்காலத்திலே சத்துருக்கனாலே கொன்றொழிக்கப்பட்டவன்

லவன்

ராமர் புத்திரன்

லாங்கலி

பலராமன்

லாங்கிலினி

மகேந்திரபர்வதத்திலே உற்பத்தியாகமோர் நதி

லாசகன்

சிவன்

லிங்கம்

சிவபெருமானார் ஆன்மாக்கள் தம்மை வழிபட்டுய்யுமாறு கொண்ட நிர்க்குண சொரூபமாகிய சகளவடிவம். பீடமும் லிங்கமும் சதா சிவவடிவம். அது கன்மசாதாக்கிய வடிவமெனவும்படும். பீடஞ்சத்தியையும், லிங்கம் சிவத்தையுங் குறிக்கும். இச்சாதாக்கியத் திருமேனி சர்வான்மாக்களையும் சர்வாண்டங்களையும் அடக்கியிருக்கும் பரம காரணனை விளக்குதலின், உலகத்து மக்கள் தியானித்து வழிபாடு புரிதற்குச் சிறந்த சின்னமாகவுள்ளது. இதனிலுஞ் சிறந்ததொரு சின்னம் வேறில்லை. லிங்கம் பராத்த மென்றும் இஷ்டமென்றும் இருபாற்படும். அவற்றுட்பரார்த்தம், சுயம்பு காணம் தைவிகம் ஆரிடம் மானுடமென ஐவகை லிங்கமாம் இஷ்டலிங்கம் சுவார்த்தமாகப் பூசிக்கப்படுவதாயொருவன் தன் குருவிடத்துப் பெறுவது, உ, விக்கிரகங்களுக்கும் பொதுப் பெயர்

லீலாவதி

இரணியகசிபன் பாரி. பிரகலாதன் தாய், உ, பாஸ்கராசாரியர் புத்திரி. இவள் பொருட்டே லீலாவதி யென்னும் பிரபல கணித நூல் பாஸ்கராசாரியரால் செய்யப்பட்டது, ந, துர்க்காதேவி. லீலாவதி கணிதத்திலே வல்லவளாகிய பின்னர்த் தான் செய்த நூல்களை யெல்லாந்தந்தை பெயராற் பிரகடனஞ் செய்தாளென்பர்

லைங்கம்

லிங்கபுராணம். நந்திகேசுரராற் கூறப்பட்டது. பதினோராயிரங் கிரந்தமுடையது

லோகபாதன்

அங்கதேசராஜன்

லோகபாலர்

பூமிக்கு நான்குபக்கத்திலும் லோகா லோக பர்வதத்திலேயிருந்து பூமியைக் காக்கின்ற சுதன்வன், சங்கன், இரணியரோமன், கேதுமந்தன் என்னு நால்வர் இப்பெயர் பெறுவர்

லோகாலோகம்

சக்கரவாளகிரி. இது மண்டலாகாரமாகவுள்ளது. இதுவரைக்குமே சூரிய கிரணம் வியாபகமாம். மனுஷர் வசித்தற் கொவ்வாத பூப்பிரதேசம் அலோகமென்றும் வசித்தற்குரியது லோகமென்றுஞ் சொல்லப்படும். பூகோளத்தினது அதி உத்தரபாகமும், அதிதக்ஷிணபாகமும் அலோகமாம். இரண்டையும் பிரிக்கு மெல்லையே லோகாலோகபர்வதமாம்

லோகிதாசியன்

அரிச்சந்திரன் புத்திரன்

லோகித்தியநதி

தேவாரணியத்தருகேயுள்ள ஒரு நதி

லோபாமுத்திரை

அகஸ்தியர் பாரி. விதர்ப்பராஜன் புத்திரி. புலஸ்தியர் தங்கை

லோலா, லோலை

லவணாசுரன் தந்தையாகிய மவினது தாய்