அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ருகன்

விருகன் தந்தை. விஜயன் புத்திரன்

ருக்குமகேசன்,ருக்குமதரன், ருக்குமநேத்திரன், ருக்குமவாகு

ருக்குமிதம்பியர்

ருக்குமன், ருக்குமேஷூ

ருசிகன் புத்திரர். சியாமகன் சகோதரர்

ருக்குமி

விதர்ப்பராஜனாகிய வீஷ்மகன்மூத்த மகன். ருக்குமிணி தமையன்

ருக்குமிணி

கிருஷ்ணன் மூத்தமனைவி. வீஷ்மகன் புத்திரி. பிரத்தியுமனன் தாய்

ருக்ஷயன்

மகாவீரன் புத்திரன், இவனுக்குப் புஷ்கராருணி, கவி, திரயாருணி எனமூவர்புத்திரர். இவர்கள் சந்ததியார் பிராமணராயினர்

ருசி

ஒருபிரஜாபதி. சதரூபன் புத்திரியாகிய ஆகூதி இவன் பாரி. இவளிடத்திற் பிறந்த புத்திரன் யஞ்ஞன்

ருசிகன்

தருமன்புத்திரன். இவன்புத்திரர் சியாமகன், புருது, ருக்குமோஷூ, ருக்குமன், புருசித்து என்போர்

ருசிரதன்

குரு

ருசிராஜன்

பிருகதிஷன் வமிசத்துச் சேனசித்துபுத்திரன். பிராக்கியன் தந்தை

ருத்திரகோடி

ஒரு தீர்த்தம். இது ஒரு காலத்தில் ருத்திரன் இருஷிகளுக்குப் பிரத்தியடிமாகக் கோடி ரூபமாய்த் தோன்றினமையால் இப்பெயர் பெற்றது

ருத்திரன்

திருமூர்த்திகளுளொருவராகிய சங்காரகர்த்தா. சிவனுக்கும் பெயராம். பிரமாவினது புத்திரருள்ளு மொருவராவர். ஸ்ரீகண்டருத்திரர் முதலிய ருத்திரபேத மெண்ணில

ருத்திரபர்வதம்

ஜானவிகட்டமென்னும் கங்கைக் கரையிலேயுள்ள மலை

ருத்திரப் பிரயாகை

மந்தாகினிக்கும் அளக நந்தைக்கு மிடையேயுள்ள க்ஷேத்திரம்

ருத்திரர்

இவர் அஜன், ஏகபாதன், அரன், அகிர்ப்புத்தியன், சம்பு, திரியம், பகன், அபராஜிதன், ஈசானன், திரிபுவனன், துவஷ்டா, ருத்திரன் எனப்பதினொருவர். இவர்களை ருத்திரன் மானசபுத்திரரென வழங்குவர். பிரமமானச புத்திரரெனவும் படுவர்

ருத்திராக்ஷம்

சிவபக்தராற் றரிக்கற் பாலதாகிய ஒரு மணி. திரிபுராசுரர்களை வதம் பண்ணப் புறப்பட்ட போது காயத்திரியைக் கண்ணைமூடிச் செபிக்கக் கண்களிலிருந்து வீழ்ந்த கண்ணீர்த் துளிகள் இம் மணிகளாயின வென்பது சரித்திரம்

ருமை

சுக்கிரீவன் பாரி

ருரன்

சியவனன் புத்திரனாகிய பிரமதிக்குக் கிருதாசியென்னும் அப்சரசையிடத்திற் பிறந்த புத்திரன். இவரோரிஷி. இவர் பாரி பிரமத்துரை. இவர் தமது பாரி ஒரு பாம்பாலிறக்க, அவளைத் தமது தவமகிமை யாலெழுப்பி, அன்று முதற் பாம்புகளைக் கொல்வதே விரதமாகக் கொண்டவர். அவ்விரதத்தை நீக்கினவர் டுண்டுபம் என்னும் சர்ப்பரூபந் தாங்கியிருந்தவராகிய சகஸ்திர பாதமுனிவர். ருரன் மகன் சுநகன்