அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ராகு

விப்பிரசித்திபுத்திரன். இவன் தாய் சிங்கிகை. இவன் தம்பி கேது. இவர் இருவருக்கும் கசியபன் பௌத்திரர். விஷ்ணு மோகினி வேஷங் கொண்டு அமிர்தம் பங்கிடும் போது ராகு, தேவதாரூபங் கொண்டு தேவரோடு கலந்து அமிர்தங்கொள்ள எத்தனித்த போது, சூரியசந்திரர் அஃதுணர்ந்து விஷ்ணுவுக்குணர்த்தினமை பற்றிச் சூரியசந்திரர்க்கும் ராகு கேதுக்களுக்கிடையே பகையுண்டாயத. அச்சமயத்திலே விஷ்ணு ராகுவினது தலையைக் கொய்து விட்டார். ராகுகேதுக்கள் சாயாக்கிரகங்கள்

ராகை

தாதாபாரிகளுளொருத்தி, உ, சுமாலிமகள். தூஷணன் திரிசிரன் என்பவர்கள் தாய்

ராக்ஷசர்

இவர்கள் கசியபனுக்குச் சுரசையிடத்துப் பிறந்தவர்கள். இவர்கள் பிறந்தவுடன் பசிதாகங்களையடைந்த சிலர் யக்ஷாம என்றும் பசிதாக மில்லாத மற்றோர் ரக்ஷாம என்றும் அழுதார்கள். அதுபற்றியே யக்ஷரென்றும் ராக்ஷசர் என்றும் பெயர்பெற்றார்கள், யக்ஷாம ~ யாமுண்ணுக,, ரக்ஷாம ~ யாங்காக்க,, உ, நந்தர்களுடைய மந்திரி. ராக்ஷசன் என்னும் பெயருடையவன். முத்திராராக்ஷச மென்னும் நாடகத்தில் இவன் முக்கியபாத்திரம். ராக்ஷசர்களைப் புலஸ்தியன் மரபில் வந்தோரென்றுங்கூறுப. இவர்கள் பிராமண அமிசமாகப்பிறந்தும், நரமாமிசபக்ஷணமும், மாயவல்லபமுமுடையராய்த் தேவர்களுக்குப் பகைவராயிருந்தவர்கள். இவர்களுள்ளே ராவணகும்பகர்ணர்கள் முக்கியர்கள்

ராசிகள்

மேஷாதி மீனமீறாயுள்ள பன்னிரண்டும் ராசிகளெனப்படும். சூரியன் ஒரிராசியிற் சஞ்சரிக்குங்காலம் ஒருமாசமெனப்படும்

ராஜகேசரி

ஒரு சோழன், உ, ஈழநாட்டிலரசுபுரிந்த ஓரரசன். அரசகேசரி காண்க

ராஜதர்மன்

நாரீஜங்கன்

ராஜன்

சந்திரன், உ, இந்திரன், ந, ஓர்யடின்

ராஜராஜநரேந்திரன்

வேகிதேசாதிபதி. இவ்வரசனுடைய சமஸ்தான வித்துவானே நன்னயப்பட்டன்

ராஜாதிதேவி

வசுதேவன் தங்கை. ஜயசேனன் பாரி. இவள் புத்திரர் விந்தன், அநுவிந்தன்

ராஜாநகன்

உத்தம புலவர்களுக்கு முற்காலத்திலே சூட்டப்படும் ஒரு பட்டாபிதானம்

ராதை

கிருஷ்ணன் பிரியநாயகி. நந்தன் தங்கை, உ, கர்ணணை வளர்த்ததாய். இது பற்றியே கர்ணன் ராதேயனெனப்படுவன்

ராமகிரி

நாகபுரத்துக்குச் சமீபத்துள்ள ஒரு மலை. இதன் பிரஸ்தாபம் மேகதூதத்திற் சொல்லப்படும்

ராமகிருஷ்ணன்

ஓராந்தரகவி. இவன் பிறந்தவூர் தெனாலி. கிருஷ்ண தேவராயருடைய சபையில் விளங்கிய எண்மர் வித்துவான்களுளொருவன். அதி சாதுரியபுத்தியும் விகட சாமர்த்தியமு முடையன். தெனாலிராமன் என்னும் பெயர் சாதாரணவழக்கு. பாண்டுரங்க மான்மியம் என்னும் மகாவியஞ் செய்தவனமிவனே. இது முழுவதும் விலடிணரசமுடையது. இவர் கூறிய விகடகதைகள் அநேகம் இக்காலத்தும் வழங்கி வருகின்றன. தென்னாலுராமன் காண்க

ராமபத்திரன்

இவர் கிருஷ்ண தேவராயர் சபையிலிருந்த எண்மர் பண்டிதரு ளொருவர். ராமாப்பியுத மென்னும் மகாகாவியஞ் செய்தவர்

ராமமந்திரி

ஓராந்தரகவி. இவர் ஆதுனிக கவிகளுளொருவர். இவர் தசாவதாரசரித்திரஞ் செய்தவர்

ராமராஜபூஷணன்

பட்டுமூர்த்தி

ராமர்

விஷ்ணு தசாவதாரங்களுள் எழாம் அவதாரமாயுள்ளவர். இவர் இக்ஷூவாகு வமிசத்திலே அஜன் புத்திரனாகிய தசரதனுக்குக் கௌசலையிடத்துப் பிறந்த புத்திரர். இவர் பாரி சீதை. பரதன், லக்ஷூமணன், சத்துருக்கினன் என்போர் தம்பியர், குசலன்புத்திரர் இவர் பாரியோடும் லக்ஷூமணனோடும் பிதிர்வாக்கிய பரிபாலனார்த்தம் பதினான்குவருஷம் வனவாசஞ் செய்து ராவணன் கும்பகர்ணன் முதலியோரைக் கொன்று, தண்டகாரணியவாசிகளாகிய முனிவர்களுக்கு அவ்வரக்கரால் விளைந்த துன்பங்களை நீக்கி மீண்டு தமது ராச்சியம் பெற்று நல்லரசு புரிந்தவர். இவர் தசரதன் புத்திரனாதலின் தாசரதி யென்றும், ககுத்தன் வமிசமாதலின் காகுத்தனென்றும், ரகுகுலதிற் பிறந்தமையின் ராகவ னென்றும் பெயர் பெறுவர். ராவணனைக் கொன்று சிறையிட்டபோது ராமருக்கு வயசு நாற்பது. பூர்வம் தேவர்க்கும் அசுரர்க்குமிடையே நடந்த யுத்தத்திலே பிருகு மகாமுனிவருடைய பத்தினியை விஷ்ணு கொன்ற காரணத்தால், பிருகு கோபித்து விஷ்ணுவை நரனாகப்பிறந்து பத்தினியைப்பிரிந்து வருந்துமாறு சபித்தமையின் விஷ்ணு இவ்வவதார மெடுத்து வருந்தினர். ராமர் தம்மைக் காட்டுக்கனுப்பித் தனது புத்திரன் பரதனுக்கு அரசு பெற்ற சிறியதாயாகிய கைகேயி யிடத்திலே அணுத்துணையும் கோபமில்லாதவராய்த் தமது தந்தையார் பாற்சென்று அவளைச் சபித்த சாபத்தை நீக்குமாறு வரம்பெற்ற பெருந்தகைமையும், பிறர்துயர்கூரத் தாமதுகண்டு சகியாதபேரருளு முடையரென்றால், அவரிடத்து விளங்கிய திவ்வியகுணங்களை யெடுத்துச் சொல்லதெங்ஙனம். ராமபிரான் உத்தம அரசராக வன்று உத்தமகாருண்ணிய மூர்த்தியினது அவதாரமாக் கொண்டே இந்நாளிலும் வழிபடப்படுவர். இவரை வழிபடுவோர் தொகையும் இவர்க்கு ஆலயங்களும் ஆரியவார்த்தத்தில் எண்ணில. ராம ராம சத்திய நாம என்னும் மந்திரம் ராமபக்தர்கள் வாயிலும் மனத்திலும் நீங்காதது ராமர் பெருந்தகைமையை மேல்வரும் ராமாயணம் என்பனுட் காண்க

ராமானுஜாசாரியர்

வசிஷாத்வை தமதோத்தாரகராகிய இவர் எண்ணூற்றிருபது வருஷங்களுக்கு முன்னிருந்தவர். இவர் தந்தையார் ஆசூர்க்கேசவாசாரியார், தாயார்காந்திமதி. இவர் ஜன்மஸ்தானம்பூதபுரம், ஸ்ரீபெரும்பூதூர், இவர்வித்தியாப்பியாசஞ் செய்தவிடம் காஞ்சி. இவர் யாதவப்பிரகாச ரென்னும் சந்நியாசியிடத்திற் சாஸ்திரங்களைக்கற்று வல்லராசித் தங்குரு முன்னிலையிலே தானே விசிஷ்டாத்துவைத மதத்தைச் சாதித்துப் பின்னர்த் திரிதண்ட சந்நியாசியாகி, யதிராஜன் என்னும் பெயர் பெற்றுத் திருநாராயணபுரம் ஸ்ரீரங்கம் திருப்பதி முதலியஸ்தலங்களிற் சென்று ஆங்காங்கும் மடங்கள் ஸ்தாபித்து வைஷ்ணவமதத்தை நிலை நாட்டினர். அதன்பின்னர்ப் பலவிடங்களுக்குஞ் சென்று பரமதங்களைக் கண்டித்துத் தமது மதநாட்டி ஆங்காங்குஞ் சீடர் குழாங்களைச் சேகரித்துத் தமது மதத்தை விருத்தி செய்தனர். இவர் கீதாபாஷியம், வியாசசூத்திர பாஷியம், தர்க்கபாஷியம் முதலிய அநேக நூல்களைச் செய்தார். இவரை வைஷ்ணவர்கள் பாஷியகார ரென்றும், எம்பெருமானாரென்றும் வழங்குவர். இவருக்கு முன்னர் விசிஷ்டாத்துவைதமதம் நாட்டினவர்கள் பன்னிருவராவார். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், சூடிக்கொடுத்தாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என்போர்

ராமாயணம்

இது ஸ்ரீராமருடைய வரலாறு கூறுவதோரிதிகாசம். இது வடமொழியிலே வான்மீகி பகவானாற் கூறப்பட்டது. இது ஆதி காவியமெனவும்படும். இது பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், கிஷ்கிந்தாகாண்டம், லங்காகாண்டம், யுத்தகாண்டம், உத்தரகாண்டம் என ஏழுகாண்டமும் இருபத்து நாலாயிரங் கிரந்தமுமுடையது. ஒவ்வோராயிரத்து முதற் சுலோகத்து முதற்பாதம் காயத்திரி மந்திரத் தொவ்வோ ரெழுத்தாற் றொடங்குதலின் இக்காவியம் காயத்தரி ரூபமெனப்படும். இவ்விராமாணத்தைத் தமிழிற் காவியமாக மொழி பெயர்த்வர். கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர். இவர் சாலிவாகனசகம் அ0எ ல் விளங்கிய புலவர். கம்பர் வான்மீகி ராமாயணத்தையே மொழி பெயர்த்தாரென்பது வேதபாடையினிக்கதை செய்தவர் மூவரானவர் மூவருண்முந்திய ~ நாவினானுரையின் படி நான்றமிழ்ப் ~ பாயினுலிதுணர்த்திய பண்பரே என்னுங் கம்பர் வாக்காலுணரப்படும். முதலிற் செய்தவர் வான்மீகி. அதன் பின்னர்ச் செய்தவர் வசிட்டர். அதன் பின்னாச் செய்தவர் போதாயனர். கம்பராமாணத்துச் சரித்திரம் பெரும்பாலும் வான்மீகி ராமாயணப்படியேயாயினும் வர்ணனை யெல்லாம் கம்பருடையனவேயாம். கம்பர் லங்கா காண்ட மென்பதைச் சுந்தரகாண்டமெனப்பெயரிட்டு வழங்குவர். கம்பராமாணத்துச் செய்யுள் பதினாயிரம். எஞ்சிய ஈராயிரமும் ஒட்டக் கூட்டத்தார் பாடல். கம்பர் பாடிய ராமாயணத்திலே செய்யுள் வன்மையும், சொற்சாதுரியமும் சந்தவின்பமும், பொருட் கம்பீரமும், சிருங்காரம், சோகம், வீரம் முதலியரசங்களும் பயின்ற வருதலால், அது தமிழிலேயுள்ள இலக்கியங்களை யெல்லாங் கடந்து தமிழ்க் கலைவினோதர்களை வசீகரிக்கும் பெருஞ் சிறப்பினையும் மதிப்பினையும் முடைய பெருங்காவியமாயிற்று. கம்பர் வாக்கெல்லாம் பெரும்பாலும் ஊன்றி நோக்குமிடத்து ஒரு பொருளும், வெளிப்படையி லொருபொருளும் பயப்பனவாய்க் கற்போர்க்கு அதிசயமும் ஆராமையுமுண்டாக்குமியல்பின. அவர் சாதுரியத்தை மேல்வரும் கவியாலள விட்டுணர்க: இந்திரன் சசியைப்பெற்றானி ருமூன்றுவதனத் தோன்றன், றந்தையமுமையைப்பெற்றான் றாமரைச்செங்கணானுஞ், செந்திருமகளைப்பெற்றான் சீதையைநீயும்பெற்றா லந்தரம்பார்க்கினன்மை யவர்க்கில்லை யுனக்கேயையா. இக்கவியிலே, நன்மை அவர்க்கில்லை,உனக்கே நன்மை என்பதாகத் தொனிக்கினும், பின்னர் நிகழப்போவதை நோக்குமிடத்து, நன்மை அவர்க்கு, இல்லை யுனக்கு என்பது தோன்றவமைத்தனர். இக்கவியில் மாத்திரமன்று அடுத்த இரண்டுகவிகளிலும் இவ்வாறே அநிஷ்டப் பொருட் குறிப்பமையப் பாடியிருத்தல் காண்க. பாகத்திலொரு வன்வைத்தான் என்னுஞ் செய்யுளிலே, நீயெங்ஙனம் வைத்துவாழ்தி என்று வினவியதற்கு, நீ எவ்விடத்திலிருத்தி வாழப் போகின்றாய்? என்றும், நீ எப்படி வைத்து வாழ்வாய் வாழமாட்டாய் என்றும் பொருள்படுமாறமைத்தனர். மற்றச் செய்யுளிலே, பிள்ளை போற் பேச்சினாளைப் பெற்றபின் பிழைக்கலாற்றாய் என்பதற்கும், சீதையைப் பெற்றபின் அவள் இஷ்டத்துக்குமாறாக யாதுஞ் செய்யமாட்டார் என்றொரு பொருளும், அவளைப் பெற்றால் இறப்பாய் என்றமற்றொரு பொருளும் கொள்ள வைத்தனர். இவ்வாறே அவர் சாதுரிய சாமர்த்தியங்கள் ஊன்றி நோக்குந்தோறும் ஊற்றாய்ப் பெருகும். மேலெயெடுத்துக் காட்டிய செய்யுட்கள் மாரீசன் வதைப்படல்திலே சூர்ப்பணகைகூற்றாக வருவன. இனி வான்மீகிபகவான் வைதிகப் பொருளையெல்லாம் லௌகிகப் பொருண்மேல்வைத்துக் கூறுங் கருத்தினையுடையராய் ராமசரித்திரத்தினையே ஏற்றவாயிலாகக் கொண்டு வெளிப்படையிலே லௌகிகத்திற் குரிமையும் இனிமையும் பயக்கவும், குறிப்பிலே வைதிக போதமும் தத்துவங்களும் விளங்கவும் இப்பாரகாவியத்தை இயற்றிப் போயினர். இவ்வுண்மை மேலேயெடுத்தோதிய காயத்திரியடிரக் குறிப்பினால் நன்கு துணியப்படும். ராமாயண கதாநாயகராகிய ஸ்ரீராமபிரானம் சக்ரவர்த்தி திருமகனாராக அவதரித்தும், தந்தையார் வாக்கைக் காக்குமாறு காட்டுக்கேகிய பெருந்தகைமையும், சத்தியம், பொறுமை, அறிவு, ஆண்மை, நீதிதிறம்பாமை, பேரருளுடைமை, நன்றிமறவாமை, அடைந்தவரைக் காக்கும் பேராற்றல், சகோதரவொற்றுமை முதலிய உத்தமகுணங்களுக்கெல்லா முறைவிடமாகவுள்ளவர். அவருடைய இல்லறவொழுக்கச் சிறப்புச் சூர்ப்பணகைக்கு எடுத்தோதிய நன்மதியுரைகளால் விளங்கும். ஸ்ரீராமரைப் பாலியப்பருவத்தில் வீதியிலே விளையாட்டயரும் வேளையிலே கண்டு உச்சிமோந்து கட்டித்தழுவிச் செல்பவனாகிய ஒரு பிச்சைக்காரன், அவர் காட்டுக்கேகி மீண்டுவந்து பட்டாபிஷேகம் பண்ணிக் கொண்டேழுந்தருளியிருக்கும். அவ்வமையத்திலே அச்சபை முன்னேவந்து, அடாராமா! எங்கடா போயிருந்தாய்! உன்னைக்காணாமல் என்கண்கள் மிக வருந்திவிட்டனவே யென்று போராமையோடு கூவியழ, அவர் சிங்காசனத்தை விட்டேழுந்து யானும் உம்மைக்காணப் பேராசையுற்றேன் வருக என் சிறியதந்தையே என்றிருகையும் நீட்டியழைக்க, அச்சபையிலிருந்த அரசர் முனிவர் பெரியோரெல்லா மதிசயித்தெழுந்து வழிவிட, பிச்சைக்காரனாகிய முதியோன் சென்ற அவரைத்தழுவி மோந்து போயினன். அவனுடைய அழுக்குடை யையும் நாறுகின்ற சரீரத்தையும் நோக்காது பேரன்பாற் கட்டுண்டுமயங்கிய ராமன் பெருந்தகைமைக்கு எல்லையுமுண்டோ! இத்துணைச் சிறந்த பெருயோனது சரித்திரத்தைக் கேட்டலும் கற்றலும் உலகுக்குப் பெரும் பயனைத்தராமற் போகுமா? இப்பெருமையெல்லா நோக்கியே இதனைத் திவ்வியநூலென்று பெரியோர் கொண்டாடுவர்

ராமேசுவரம்

ராமர் ராவணனைக் கொன்று திரும்பியபோது சேதுவோரத்திலே சிவலிங்கப்பிரதிஷ்டை செய்து பூசைபுரிந்த ஸ்தலம். இவ்விலிங்கத்தைத் தரிசித்துவழிபடுவோர் சகலபாவங்களும் நீங்கப்பெறுவர் என்பது புராணசம்மதம்

ராவணன்

ராக்ஷசர்தலைவன். இவன் ராஜதானி லங்காபுரி. புலஸ்தியன் புத்திரனாகிய விச்சிரவாவு புத்திரன். தாய் சுமாலி புத்திரியாகிய கைகசி. இவன் பாரிமயன் மகளாகிய மந்தோதரி, மண்டோதரி, கும்பகர்ணன், விபீஷணன் என்போர் இவன் தம்பியர் முடையனாகித் திரிலோகங்களிலுஞ் சென்று சாதுக்களையுந் துன்புறுத்தி வந்தான். இத்துன்பங்களை யொழிக்குமாறே விஷ்ணு ராமனாகப் பிறந்து ராவணனைக் கொன்றார். ராவணன் திக்கெல்லாம் வெற்றிபெற்று வடக்கிற் சென்று குபேரனைக் கண்டு அவனைச்செயித்து அவன் புஷ்பக விமானத்தைக் கவர்ந்து கொண்டு கைலைக்கு மேல் நேராக வந்தபோது நந்திதேவர் தடுப்ப, இவன் தனது விமானத்தோடழிந்து அக்கைலையை வேரோடும் பழித்துச் செல்வெனென்று கர்வங் கொண்டு பெயர்த்துத் தோள் மேற் கொள்ள வெத்தனிக்க, அதுகண்ட சிவன் தமது பெருவிரலாலழுத்த, அம்மலையின் கீழ் அகப்பட்ட இவன்நெடுங் காலங் கிடந்து வருந்திச்சிவனைத் தோத்திரித்து அவ்வாபத்தினின்றும் நீங்கிப் போயினான். அக்கைலையின் கீழ்க்கிடந் துச்சவிசையாலழுது துதித்தமையால் இவனுக்கு ராவணன் என்னும் பெயர் வாய்ப்பதாயிற்று. இவன் திக்குவிஜயஞ் செய்யப் போனவிடங்களில் அபஜயப்பட்டுத் திரும்பியது இரண்டிடத்தன்றி மற்றெங்கு மில்லை. ஒன்று வாலியாலும் மற்றது கார்த்தவீரியார்ச்சுனனாலுமேயாம் இவன் மேரு பக்கஞ் சென்ற போது அங்கே அரம்பையைக் கண்டு அவளைப் பலவந்தம் பண்ணிப் புணர்ந்தான். அது கேட்ட நளகூபரன் சினந்து, நீ எப்பெண்ணையாயினும் அவள் சம்மதமின்றிப் புணர்வையேல் உன் தலைகள் ஆயிரத்துண்டமாகச் சிதறி யிறக்கக்கடவையென்று இவனைச் சபித்துப் போயினான். அதுபற்றியே சீதையை மானபங்கஞ் செய்யாது தன் சிறையிலிட்டு அவள்பாற் சென்றிரந்து வருவானாயினதும், முன் நரரைப் பொருட்படுத்தாது கேட்டவரத்திழுக்கால் நரனாகிய ராமனாலிறந்தது மாமென்க

ராஷ்டிரபாலன்

கஞ்சன் தம்பி

ராஷ்டிரபாலிகை

உக்கிரசேனன் புத்திரி. சிருஞ்சயன்பாரி