ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
யக்கர், யக்ஷர் | கசியபன் சுரசையிடத்துப் பெற்ற புத்திரர். இவர்கள் குபேராதியர்கள். இவர்கள் தேவசபையில் யாழ்வாசிப்போர். யக்கர் கிந்நரர், கந்தருவர் என்போர் தேவருக்குப் பிறந்தமையால் தேவயோனிகளெனப்படுவர் |
யக்கியகோபன் | யஞ்ஞகோபன் எனவும்படுவன். இவன் மாலியவந்தன் புத்திரன் |
யக்கியக்கினன் | யக்கிய மூர்த்தியாகிய விஷ்ணுவினாற் கொல்லப்பட்டவன் |
யக்கியதத்தன் | இவன் ஒரு பிராமண புத்திரன். தசரதன் வேட்டைமேற் சென்றபோது, இவன் தன்கமண்டலத்திலே குனிந்து நீரருந்துகையில் இவனை யானையென நினைந்து தூரத்தினின்றபடியே பாணத்தாற் கொன்றான். அதுகண்ட தந்தைதாயர் தசரதனை நீயும் எம்மைப்போலப் புத்திரசோகத்தா லிறக்கவென்று சபித்தார்கள் |
யக்கியன், யஞ்ஞன் | ருசிபி ரஜாபதிக்குச்சுவாயம்புவமனு புத்திரியிடத்திற் பிறந்த புத்திரன். இவனுடைய தங்கையைத் தக்ஷிணன்மணம் புரிந்தான். இவ் யக்கியனை விஷ்ணு அவதாரமென் பாருமுளர் |
யக்கியம் | தேவதாப்பிரியமாகச் செய்யப்படும் அக்கினிகாரியம். இஃது இருபத்தொரு வகைப்படும். யக்கியம் ~ யாகம். அவை சப்தயக்கியம், சப்த ஹவிர்யக்கியம், சப்தசோமசமஸ்த மென்பன. இவைகளைக் குறித்த விதானங்கள் எல்லாம் ஆபத்தம் பசூத்திரத்துட்இன்னும் பிராமணர்க்கு நியதமாகவுள்ள யாகங்கள் ஐந்து. அவை பஞ்சமகா யக்கியமென்று சொல்லப்படும். அவை தேவயக்கியம், பிதிர்யக்கியம், பூதயக்கியம், மானுடயக்கியம், பிரமயக்கியம் என்பன |
யக்கியவராகம் | வராகவதாரங் காண்க |
யசோதை | நந்தன் மனைவி. இவனே கிருஷ்ணனை வளர்த்ததாய் கிருஷ்ணன் பிறந்த அன்றிரவிலே இவள் வயிற்றிலும் ஒரு பெண் குழந்தை யோக நித்திரையின் அமிசமாகப் பிறந்தது. அது பிறத்தலும் அசோதை பிரசவவேதனையால் அறிவுமழுங்கிச் சோகமுற்றுக் கிடந்தாள். அருகிருந்தோரும் தம்வசமழிந்தனராய்ச் சோகமுற்றுக் கிழந்தனர். மழையுங் காரிருளும் மூடுவவாயின. அச்சமயத்திலே வசுதேவன் தன் குழந்தையாகிய கிருஷ்ணனைக் கஞ்சன் வாளுக்கிரையாகா மற்றப்புவிக்குங் கருத்தினனாய்ப் பிறந்தவுடனே கையிலேந்திக் கொண்டுபோய் அந்நந்தன் மனையினுட் புகுந்து, அசோதையின் பக்கத்திலே கிடத்திவிட்டு அங்கிருந்த பெண் சிசுவைக் கவர்ந்து சென்ற தேவகி பக்கத்திலேயிட அதுகாறும் வாய்திறவாது கிடந்த சிசு அழுவதாயிற்று. அவ்வொலிகேட்ட காவலாளர் கஞ்சனுக் குணர்த்தக் கஞ்சனோடிச் சென்று அக்குழந்தையைக் கவர்ந்து தறையிலிட்டு வாளை யோங்கினான். தேவகி கதறியழுது, கஞ்சனை நோக்கி, அண்ணா! மண்டலேசா! இது பெண் குழந்தை! இஃது உனக்க யாதுதீங்கு செய்ய வல்லதாகும்! வீணில் உயிர்ப்பழி கொள்ளாதொழி! என்ற தடுத்தான். அஃது அவன் செவியிற் பட்டிலது. அவன் ஒங்கியவாள் மீளுமுன்னே அக்குழந்தை அந்தரத்தெழுந்து எண்கரங்களோடு சோதிரூபமாய்த் தோன்றிநின்று ஏய்! கஞ்சா! என்னை வீணேகொல்லா முயன்றாய்! உன்னைக் கொல்லவந்தபாலன் வேறோரிடத்திலே வளர்கின்றான். அவனால் நீ மடிவது சரதம் என்று கூறி மறைந்தது. அது நிற்க, அங்கே யசோதை மயக்கந்தீர்ந்து விழித்துப்பார்த்தபோது, நீலமணிபோல ஓர் ஆண் குழந்தையிருப்பக்கண்டு பெருமகிழ் கொண்டு வளர்த்தாள். அக்குழந்தையின் உண்மை வரலாறுணர்ந்த பின்னரும் தன் அருமைக் கண்மணி போலவே வளர்த்து வந்தாள் |
யசோவதி | ஈசானபுடபேதம் |
யஞ்ஞகோபன், யக்கியகோபன் | மாலியவந்தன் புத்திரன் |
யதி | பிரமமானச புத்தரருளொருவன், உ, நகுஷன் சேட்டபுத்திரன். யயாதி தமையன். இவன் துறவியாகி ராச்சியத்தை விடுத்துப்போனவன் |
யதிராஜன் | ராமானுஜாசாரியர் |
யது | யயாதிக்குத் தேவயானைவயிற்றிலுதித்த புத்திரன். இவன் வமிசத்தார் யாதவரெனப்படுவர் |
யதுகிரி | மைசூரிலுள்ள ஒரு விஷ்ணுதலம் |
யமன் | கசியபப்பிரஜாபதி புத்திரனாகிய விவசுவதன் என்னும் சூரியன் புத்திரன். இவன் அஷ்டதிக்கு பாலகருள்ளு மொருவனாவன். இவன் பிதிர்லோகாதிபன். இவன் திக்குத்தெற்கு. பாரி சியாமளாதேவி. பட்டணம் சம்யமனி. வாகனம் மகிஷம், ஆயுதம் தண்டம், தருமன் என்றம் பெயர் பெறுவன். யமன் என்பதற்குக் கூற்றுவன் என்பது பதார்த்தம். கூறுசெய்வோ னென்பது கருத்து. இவன் தொழில் உயிர்களை ஆயுள் முடிவில் உடலினின்றும் பிரித்துக்கொண்டு போதல். அத்தொழிலிற் சிறிதும் நடுநிலை தவறாதவன். அது பற்றியே இவனைத்தருமனென்று கூறுப. இவன் தருமத்தைக் குறித்து, போற்றவும் போகான் பொருளொடும்போகான் சாற்றவும்போகான் தமரொடும்போகான் நல்லாரென்னான் நல்குரவறியான் தீயாரென்னான் செல்வரென்றுன்னான் என்று ஆன்றோரும் பாடினர். மார்க்கண்டேயரைச் சிவபெருமானுக்கு உத்தம அடியாரென்று கருதாது அவர்மீதும் பாசந்தொட்டு அவரைப் பற்றியபோது சிவபெருமானார் அவனுக்கு முன்னே தோன்றித் தடுத்த வழியும் அஞ்சாது தமது ஆஞ்ஞையைச் செலுத்த எத்தனித்து அவராற் கொலையுண்டு பின் உயிர் பெற்றானென்றால் அவன்நடுவு நிலைமை பெரிதும் வியக்கற்பாற்று |
யயாதி | நகுஷன் புத்திரன். இவன் முதலிலே சுக்கிரபுத்திரியாகிய தேவயானையையும், அதன் பின்னர் விருஷபர்வன் புத்திரியாகிய சர்மிஷ்டையையும் விவாகம் புரிந்தவன், தேவயானையிடத்தில் யது, துர்வசன் என இருபுத்திரரையும், சர்மிஷ்டையிடத்தில் துருகியன், அணு, பூரு என மூன்று புத்திரரையும் பெற்றான். சுக்கிரன், யயாதியை நோக்கி இருவரையும் படிபாதமின்றி நடாத்திவருக வென்று கற்பித்த வழியும் அந்நியதியிற்றவறிய யயாதி மேற்கோபமுடையனாய். நீ கிழப்பருவ முடையனாகவென்று சபித்தப் போயினான். அதனால் வருந்தியயாதி தன் புத்திரரை நோக்கி எனது கிழப்பருவத்தைப் பெற்றுக்கொண்டு தனது எவ்வன பருவத்தை எனக்குக் கொடுக்க விரும்புபவன் நும்மில்யாவன் என்ன, மற்றெல்லாரும் மறுக்கப்பூருமாத்திரம் அதற்கு முகமலர்ந்து முற்பட்டுத் தனது எவ்வனத்தை அவனுக்குக் கொடுத்து அவன் கிழப்பருவத்தைப் பெற்றான். அது பெற்ற யயாதி ஆயிரமியாண்டு சிற்றின்ப நுகர்ந்தும் திருப்தி அடையாதீற்றில் பூருவுக்கு முடிசூட்டிச் காட்டிற் சென்று தவமியற்றிக் காலங்கழித்தான். யதுவினால் யாதவ வமிசமும் துர்வசனால் சேரசோழ பாண்டிய வமிசமும், துருகியனால் காந்தாரவமிசமும் விருத்தியாயின |
யழனாநதி | சூரியன் புத்திரி. யமன் சகோதரி. இந்நதி காளிந்தி நதியிலுற்பத்தியாதலின் காளிந்தி யெனவும்படும் |
யழனைத்துறைவர் | இவரே ஸ்ரீஆளவந்தாரெனப்படுவா. இவர் பன்னிரண்டு வயசு நிரம்பாச் சிறுவராக விருக்குங்காலத்திலே பாண்டிய சமஸ்தான வித்துவானாகிய ஒரு பிரபலமகா பண்டிதரை மூன்று அற்ப வினாக்களால் வென்று பாண்டியன் சங்கேதப்படி அவன் நாட்டிற் பாதி கொண்டரசு புரிந்தவர். உமது தாய் புத்திரவதியல்லள் என்றும், தர்மவானாகிய பாண்டியன் தர்மவான் அல்லன் என்றும், பதிவிரதையாகிய ராஜபத்தினிபதி விரதையல்லள் என்றும் ஏதுக்கூறி ஸ்தபித்தல் வேண்டுமென்று கேட்ட கேள்விகளுக்கு வித்துவான் யாதுங்கூறாதிருக்க, பாண்டியன் யமுனைத்துறை வரை நோக்கி, நீர் நாட்டுவீரேல் என் அரசிற்பாதி தருவலென்ன, யமுனைத்துறை வரைநோக்கி, நீர் நாட்டுவீரேல் என் அரசிற்பாதி தருவலென்ன. யமுனைத்துறைவர், ஒரு பிள்ளையும் பிள்ளையல்ல ஒருமரமுந் தோப்பல்ல என்றாற் போல ஏக புத்திரனைப் பெற்றாள் வாழைமலடியெனக் கூறுதல் தரும நூன் முறையாதலின் இவர் தாய் மலடியாயினாளென்பது முதல்வினாவுக் குத்தரமென்றும், குடிகள் செய்யும் பாவம் அரசனைச் சேருமென்னும் விதியால் அரசன் தருமவானல்லன் என்பது இரண்டாவதற்குத்தரமென்றும், மணப்பந்தரிலே அக்கினி முதலிய தேவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுப் பின்னர் வரன்கையி லொப்பிக்கப் பட்டவளாதலின் பதிவிரதாபங்கம் பெற்றாளென்பது மூன்றாவதற்கு உத்தரமென்றுங்கூற, அரசன் அவருடையகுசாக்கிரவிவேகத்தை மெச்சிஅவரை மார்புறத் தழுவிப் பாதியரசு கொடுத்தான் என்பது கர்ணபாரம்பரியம். இவர் சிறிதுகாலமரசு செய்திருக்கையில் மணக்கால்நம்பி யென்னும் வைஷ்ணவாசாரியர் இவர்பாற் சென்று, நீர் நம்மோடு தனித்து வருவீராயின், உமது பாட்டனார் வைத்துப்போன புதையலைக் காட்டுவே னென்று கூறியிவரை வஞ்சித் தரைழத்துப்போய் ஸ்ரீ ரங்கத்திற் கோயில் கொண்டிருக்கும் அழியாநிதியாகிய திருமாலைக்காட்டப் பூர்வஜன்ம வாசனையால் அச்சந்நிதியை யடைந்த மாத்திரத்தே இவர் துறவுடையராய விஷ்ணு வழிபாடே பரமசாம்பிராச்சிய மெனக் கொண்டு அன்று முதலதனையே பற்றி நின்றார். இவர் ஏழு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னுள்ளவர் |
யவனம் | பாரத வருஷத்துக்கு மேற்கேயுள்ள தேசம், உ, கிரேக்கதேசம். அத்தேசத்தார் யவனப்பெண்களும் முற்காலத்தில் ஆரியராசாக்களுக்கு ஏவலாளராக விருந்தார்களென்பது சிலசம்ஸ்கிருத நாடகங்களா லறியக்கிடக்கின்றது. அவருள்ளே சிலர் ஆரியசாஸ்திரங்களைக் கற்றுப் பண்டிதராகித் தமது நாட்டிற் சென்று விளங்கியதுமன்றிச் சோதிடசித்தாந்த முதலிய நூல்களுஞ் செய்தார்கள். அச்சித்தாந்தம் ஆரியராலும் எடுத்தாளப்பட்டு வருவதாயிற்று |
யவனர் | பாரத வருஷத்துக்கு மேற்கேயுள்ள தேசத்தில் வசிப்போர் யவனரெனப்படுவர். இவர்களுள் ஒரு சாரார் யயாதிபுத்திரனாகிய துர்வசுவமிசத்திலே பிறந்து வேதானுஷ்டானங்களைத் துறந்து பதிதரானடித்திரியர். அவர்கள் பாரதவருஷத்தைவிட்டு அதன் மேற்கே யுள்ள தேசங்களிலே சென்று யவனரோடு கலந்து யவனராயினார்கள் தற்காலத்தவராற்கிரேக்க சென்ற சொல்லப்படுபவர்களும், ஏனைய ஹூணர்களும் பாரசீகர்களும் பூர்வத்தில் யவனரென்றே சொல்லப்படுவர். யவனர் வெண்ணிறமுடையவரும் கருநிறமுடையவரும் மென இருபாற்படுவர். கருநிறமுடையவர் காலயவனரென்றும் மற்றோர் யவனரென்றும் வழங்கப்படுவர், பாணினியென்பதனுட்காண்க |
யவீனரன் | பூருவமிசத்துத் துவிமீடன் புத்திரன், உ, முற்கலன் தம்பி |
யாகசேனன் | துருபதராஜன் |
யாஜன் | ஒருமுனிவர். இவர் அநுக்கிரகத்தால் துருபதராஜன் அக்கினி குண்டத்திலே திருஷ்டத்துய்மனென்னும் புத்திரனையும் கிருஷ்ணை யென்னும் புத்திரியையும் பெற்றான் |
யாஞ்ஞவல்கன் | மிர்மராதர் புத்திரர். இவர் சைவசம்பாயனர் சீஷர். வைசம்பாயனர் ஒருநாள் தமது சகோதரி புத்திரனை இருளிலே கால்பிழைத்து மிதிக்க அப்புத்திர னிறந்தான். அதனால் அவர்க்குப் பிரமஹதஞ் சீஷர்களை விரதங் காக்குமாறு ஏவினர். யாஞ்ஞவற்கியர் மற்றையோர் தேகவல்லியில்லாதவரா யிருத்தலின் அதனைத் தாமேசெய்வதாக வேண்டினர். அவர் தம்முரையை மறுத்தாரென்று யாஞ்ஞவற்கியரை முனிந்து என் வேதங்களை விடுத்துப் போக வென்றனர். யாஞ்ஞவற்கியர் பக்திமேலீட்டினாற் சொன்னதையுணராது முனிவு செய்தவுமக்குயான் சீஷனாயிருத்லுந் தகாதெனக்கூறி, அவர் பாலோதிய யசுர்வேதகாகைகளை யெல்லாம் கண்டத்தினின்று மிரத்தம் கான்றுவிழுமாறு ஒதிவிட்டு, இவ்வேதசாகைகளை இனி யோதேனெனக் கூறிப் போய்ச் சூரியனை வழிபட்டுத் தவங் கிடந்தார் சூரியன் குதிரைவடிவு கொண்டு வெளிப்பட்டு வைசம்பாயனர்க்குத் தெரியாத பதினைந்து சாகைகளை அநுக்கிரகித்துப் போய் யாஞ்ஞவற்கியர் அவற்றை யோதுவாராகித் தஞ்சீஷரையு மோதுவித்தார். குதிரை வடிவத்தோடு அநுக்கிரகித்தமையின் வாஜசனேய சங்கிதை யென்னும் பெயர் இச்சாகைகளுக்குளதாயிற்று, வாஜி ~ குதிரை, முன்னே இவர்கான்ற இரத்தங்களைச் சகபாடிகள் மானுட சரீரத்தோடுண்பது தகாதென்று யுண்டமையின்தைத்திரீய மென்னும் பெயர் அச்சாகைகளுக்குளதாயிற்று தித்திரி ~ சிச்சிலிப்புள் |
யாஞ்ஞவல்கியம் | பதினெண்மிருதிகளு ளொன்று. இதற்கு விஞ்ஞானேசுவர யோகிகள் ஒரு வியாக்கியானஞ் செய்தனர் |
யாதவநிகண்டு | ஒருசம்ஸ்கிருத நிகண்டு |
யாதவர் | யது வமிசத்தவர்கள். இவ்வமிசம் பல்கிப் பலகிளைகளாகி அநேக பிரசித்தி பெற்ற ராஜாக்களைத் தந்தது. யதுவினது மூத்தகுமாரனாகிய சகஸ்திரஜித்துவினாலே ஹேஹயவமிசமாயிற்று. அவர்களுக்கு மாகிஷ்மதி ராஜதானி. அவ்வமிசத்திலேயே கார்த்தவீரியார்ச்சுனனென்னும் பிரசித்தி பெற்ற அரசன் தோன்றினான். அவன் சந்ததியிலே தாளஜங்கர்கள் தோன்றி விளங்கினர். யதுவினது இரண்டாம் புத்திரனாகிய குரோஷ்டுஷவமிசத்திலே பிரசித்தி பெற்றவர்கள் சசி. பிந்து, சியாமகன். விதர்ப்பன் என்போர். இவருள் விதர்ப்பனால் விதர்ப்பராஜ வமிசம் வந்தது. விதர்ப்பன் மூன்றாம் புத்திரனாலே சேதிவமிசம் வந்தது. இரண்டாம் புத்திரன் வமிசத்தனாகிய சாத்துவதனால் போஜவமிசமும் அந்தகவமிசமும் விருஷ்ணிவமிசமும் வந்தன. போஜவசமித்துக்கு ராஜதானி தாராபரம். அந்தவமிசத்திலே கிருஷ்ணன் பிறந்தார் |
யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை | பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் கட்டுண்டவன். இவனைப்பாடியபுலவர் குறுங்கோழியூர்கிழார், புறநா |
யாமர் | யக்கியன்மக்கள். இவர் பன்னிருவர். சுவாயம்புவமனுவந்தரத்திலுள்ள தேவதைகள் |
யாமளேந்திரர் | இந்திரகாளியமென்னு மிசைத்தமிழ் நூல் செய்தவர். இவர் கடைச்சங்கமிருந்த காலத்தையடுத் திருந்தவர். சிலப்பதிகாரவுரையாசிரியர் மேற்கோளாகக் கொண்ட நூல்களுள் இவர் நூலு மொன்று |
யாமளை | உமாதேவியார் |
யாமி | ஜாமி. இரண்டாம் தடிப்பிரஜாபதி மகள். தருமன்பாரி. இவள் துருக்கபூமிகளுக்கு அதிர்ஷ்டான தேவதை |
யாமினி | ஒரு கலாசத்தி |
யாழினுமென்மொழியம்மை | திருவிளமரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
யாழின்மென்மொழிநாயகி | திருமணஞ்சேரியி லெழுந்தருளியிருக்கும் தேவியார் பெயர் |
யாழைப்பழித்த மொழியம்மை | திருமறைக் காட்டிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
யாழ்முரிநாதேசுவரர் | திரத்தருமபுரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
யுகங்கள் | கிருத, திரேத, துவாபர, கலியுகங்கள். இச்சதுர்யுகம், சந்தியமிசகாலங்களுளப்படப் பன்னீராயிரம் தேவவருஷங்க கொண்டது. அதாவது சந 20,000 மானுஷிய வருஷங்கொண்டது கிருதபுகம்~கஎ, உஅ000 திரேதாயுகம் ~ கஉ, சுசு000, துவாரபரயுகம் ~ அ,சுச000, கலியுகம்~ ச,நஉ000 இச்சதுர்யுகம் ஆயிரங் கழிந்தால் பிரமனுக்கு ஒருபகலாம். பின்னுமோராயிரஞ் சென்றால் ஒரிரவாம். இப்படி நசு0 பகலிராக்கழிந்தாலர் பிரமவருஷமொன்றாம். இவ்வருஷம் நூறு சென்றால் பிரமாவுக்கு ஆயுள் முடிவாம். இவ்வாயுளில் முற்பாதிருய. வருஷம் பாத்தும கற்பம் என்றும், பிற்பாதிருய. வருஷம் வராககற்பமென்றுஞ் சொல்லப்படும் இப்போது நடப்பது வராக கற்பம். பிரமாவுக்கு ஒரு பகலில் பதினான்கு மனுக்கள் அரசுசெய்வர். அம்மனுவந்தரம் ஒன்றில் தேவேந்திரன் சப்தரிஷிகள் முதலியோர் பிறந்திறப் பார்கள். பிரமாவுக்கு இரவாகும் போது பிரளயகால முண்டாகும். அப்பிரளயத்தில் திரிலோகங்களும் அழிந்தொழிய மகர்லோகவாசிகள் ஜனலோகஞ் சேர்வார்கள். கிருதயுகத்திலே தருமதேவதை நான்கு பாதத்தாலும், திரேதயுகத்தில் மூன்று பாதத்தாலும், துவாபரத்தி லிரண்டாலும், கலியில் ஒரு பாதத்தாலும் நடக்கும். இன்னும் கிருதயுகத்திலே தியானமும், திரேதயுகத்திலே தியானமும் யாகமும், துவாரபரத்திலே யாகமும், கலியிலே தானஞ்செய்தலும் சற்கருமங்களெனப்படும் |
யுகசந்தி | கிருதத்துக்கு அளதேவ வருஷம். மற்றையுகங்களுக்குத் தனித்தனியே உள |
யுதாசித்து | யதுவமிசத்து விருஷ்ணி இரண்டாம் புத்திரன். இவன் புத்திரர் சினிஅநமித்திரன் என இருவர், உ, கேகயதேசாதிபதி. அவன் தசரதன் பாரியாகிய கைகேசி சகோதரன். இவன் ராஜதானி கிரிவிரசம் |
யுதிஷ்டிரன் | குருவமிசத்துப் பாண்டு மூத்தமகனாகிய தருமராஜன். யுதிஷ்டிரன் என்பதற்குக் கலங்காமல் யுத்தஞ் செய்வோன் என்பது. பொருள் இவன் பொறுமைக்கிலக்கியமாயுள்ளவன் |
யுயுதானன் | யதுவமிசத்துச் சாத்தியகி |
யுயுற்சன் | திருதராஷ்டிரனுக்கு வைசியப் பெண்ணிடத்துப் பிறந்த புத்திரன். திருதராஷ்டிரனுக்குப் பின் இந்திரப்பிரஸ்தத்தி லரசுபுரிந்தோன் |
யுவநாசவன் | இந்தன் புத்திரன். சபஸ்தன்தந்தை, உ, திருதாசுவன் மகன். இவன் மகன் மாந்தாதா. இவன் தனக்குச்சிலகாலம் புத்திரோபத்தி யில்லாததினால் அதன் பொருட்டு ஓரிந்திர யாகஞ் செய்தான். அவ்வியாகத்தில் இவன்பாரிக்காக மந்திரித்துவைத்த நீரை இவன் இரவில் மிகுந்ததாகத்தால் அதுவென்றறியாது பானஞ் செய்தமையால் தன்பத்தினி தரிக்க வேண்டிய கருப்பததைத்தானே தரித்தான். அதுகாரணமாக அவன் வயிற்றிலிருந்தசிசு வயிற்றைப்பீறி உரியகாலத்தில் வெளிப்பட்டது. தாயின் பாலுக்குப் பிரதியாக இந்திரன் தன்விரலைக் கொடுத்து வளர்த்தான். இக்காரணம்பற்றியே அச்சிசுமாந்தாதா வென்னும் பெயர் பெற்றது |
யூபாஷன் | ராவணன் பரிவாரத்தவருள் ஒருவன். இவன் அநுமானால் அசோகவனத்தின் கண்ணே கொல்லப்பட்டவன் |
யோகசாரன் | சௌத்திராந்திகனிற் சிறிது வேறுபட்டு, அறிவு அரூபமென்றும் பிரபஞ்சம் பொய்யென்றுஞ் சொல்பவன். இவன் புறப்புறச் சமயிகளுளொருவன் |
யோகசித்தி | அங்கிரசன் புத்திரி. பிருகஸ்பதி சகோதரி. பிரபாசுரன்பாரி. விசவகர்மன் தாய் |
யோகநந்தேசர் | திருவியலூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
யோகம் | இந்திரியங்களை வசஞ்செய்து கொண்டு சித்தத்தைப் பிரமத்தினிடத்து நிறுத்துதல். இது ராஜயோகம் கன்மயோகம் அடையோக மெனமூன்றாம். யோகசாஸ்திரஞ் செய்தவர் பதஞ்சலி பகவான். உலகப்பற்றைத் துறந்து சித்தத்தைப் பிரமத்தினிடத்தினிறுத்துதல் ராஜயோகம். பலாபேக்ஷையின்றிக் கர்மத்தைச் செய்து கொண்டு பிரமோபாசனை பண்ணல் கர்மயோகம். சுவாசத்தையடக்கல் முதலியவற்றைப் பதுமாசனமுதலியவையிட்டுப் பயிலல் அடையோகம் |
யோகி | நின்மலசத்துவ பரிணாமரூபமாகிய சித்தவதிருத்திகளை உன்முகமாகத் திருப்பி அவைகளை அவற்றின் முதற் காரணத்திலே ஒடுக்குதலாமென்பவன். இவன் புறச்சமயிகளுளொருவன் |
யோகினிகள் | இவர்கள் பன்னிருவர்கள். வித்தியா, உ, ரேசிகா, ந, மோசிகா, ச, அமிர்தா, ரு, தீபிகா, சு, ஞான, எ, ஆபியாயனி, வியாபினி, கூ, மேதா. வியோமா, கக, சித்திரூபா, கஉ, வக்ஷூமியோகினிகள். இவர்கள் வித்தியாசக்திகளாய் வாசினிகளோடு அடிரங்களை அதிகரித்து நிற்போராவார்கள் |
யௌவனன் | பிரியவிரதன் வமிசத்தவன். தீமந்தன் மகன் |
யௌவனாசுவன் | அம்பரீஷன் புத்திரன். ஹரிதன் தந்தை |