ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
யுகங்கள் | கிருத, திரேத, துவாபர, கலியுகங்கள். இச்சதுர்யுகம், சந்தியமிசகாலங்களுளப்படப் பன்னீராயிரம் தேவவருஷங்க கொண்டது. அதாவது சந 20,000 மானுஷிய வருஷங்கொண்டது கிருதபுகம்~கஎ, உஅ000 திரேதாயுகம் ~ கஉ, சுசு000, துவாரபரயுகம் ~ அ,சுச000, கலியுகம்~ ச,நஉ000 இச்சதுர்யுகம் ஆயிரங் கழிந்தால் பிரமனுக்கு ஒருபகலாம். பின்னுமோராயிரஞ் சென்றால் ஒரிரவாம். இப்படி நசு0 பகலிராக்கழிந்தாலர் பிரமவருஷமொன்றாம். இவ்வருஷம் நூறு சென்றால் பிரமாவுக்கு ஆயுள் முடிவாம். இவ்வாயுளில் முற்பாதிருய. வருஷம் பாத்தும கற்பம் என்றும், பிற்பாதிருய. வருஷம் வராககற்பமென்றுஞ் சொல்லப்படும் இப்போது நடப்பது வராக கற்பம். பிரமாவுக்கு ஒரு பகலில் பதினான்கு மனுக்கள் அரசுசெய்வர். அம்மனுவந்தரம் ஒன்றில் தேவேந்திரன் சப்தரிஷிகள் முதலியோர் பிறந்திறப் பார்கள். பிரமாவுக்கு இரவாகும் போது பிரளயகால முண்டாகும். அப்பிரளயத்தில் திரிலோகங்களும் அழிந்தொழிய மகர்லோகவாசிகள் ஜனலோகஞ் சேர்வார்கள். கிருதயுகத்திலே தருமதேவதை நான்கு பாதத்தாலும், திரேதயுகத்தில் மூன்று பாதத்தாலும், துவாபரத்தி லிரண்டாலும், கலியில் ஒரு பாதத்தாலும் நடக்கும். இன்னும் கிருதயுகத்திலே தியானமும், திரேதயுகத்திலே தியானமும் யாகமும், துவாரபரத்திலே யாகமும், கலியிலே தானஞ்செய்தலும் சற்கருமங்களெனப்படும் |
யுகசந்தி | கிருதத்துக்கு அளதேவ வருஷம். மற்றையுகங்களுக்குத் தனித்தனியே உள |
யுதாசித்து | யதுவமிசத்து விருஷ்ணி இரண்டாம் புத்திரன். இவன் புத்திரர் சினிஅநமித்திரன் என இருவர், உ, கேகயதேசாதிபதி. அவன் தசரதன் பாரியாகிய கைகேசி சகோதரன். இவன் ராஜதானி கிரிவிரசம் |
யுதிஷ்டிரன் | குருவமிசத்துப் பாண்டு மூத்தமகனாகிய தருமராஜன். யுதிஷ்டிரன் என்பதற்குக் கலங்காமல் யுத்தஞ் செய்வோன் என்பது. பொருள் இவன் பொறுமைக்கிலக்கியமாயுள்ளவன் |
யுயுதானன் | யதுவமிசத்துச் சாத்தியகி |
யுயுற்சன் | திருதராஷ்டிரனுக்கு வைசியப் பெண்ணிடத்துப் பிறந்த புத்திரன். திருதராஷ்டிரனுக்குப் பின் இந்திரப்பிரஸ்தத்தி லரசுபுரிந்தோன் |
யுவநாசவன் | இந்தன் புத்திரன். சபஸ்தன்தந்தை, உ, திருதாசுவன் மகன். இவன் மகன் மாந்தாதா. இவன் தனக்குச்சிலகாலம் புத்திரோபத்தி யில்லாததினால் அதன் பொருட்டு ஓரிந்திர யாகஞ் செய்தான். அவ்வியாகத்தில் இவன்பாரிக்காக மந்திரித்துவைத்த நீரை இவன் இரவில் மிகுந்ததாகத்தால் அதுவென்றறியாது பானஞ் செய்தமையால் தன்பத்தினி தரிக்க வேண்டிய கருப்பததைத்தானே தரித்தான். அதுகாரணமாக அவன் வயிற்றிலிருந்தசிசு வயிற்றைப்பீறி உரியகாலத்தில் வெளிப்பட்டது. தாயின் பாலுக்குப் பிரதியாக இந்திரன் தன்விரலைக் கொடுத்து வளர்த்தான். இக்காரணம்பற்றியே அச்சிசுமாந்தாதா வென்னும் பெயர் பெற்றது |