அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
மகதம்

வங்கத்துக்கு மேற்றிசைக்கணுள்ள தேசம். இத்தேசம் அதிப்பழமையானது. உத்தமகுல ராசாக்களாற் பரம்பரையாக ஆளப்பட்டது. இத்தேசம் புராணேதிகாசங்கள் எல்லாவற்றிலும் எடுத்துக் கூறுப்பட்டுள்ளது. இதன் ராஜதானியும் மகதமெனவேபடும். இத்தேசத்துமாக்கள் மாகதர் எனப்படுவர்

மகமாயியம்மை

திருக்கானப்பேரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மகாடிசன்

கரன் புத்திரன்

மகாபரதம்

வடமொழியிலே சாரங்கதேவமுனிர்செய்த பரதசாஸ்திரம். அது லக்ஷ்ங்கிரந்த முடையது. சோமராய மகாராசாவினாற் செய்விக்கப்பட்டது, உ, செந்தமிழ்ப்பரமாசாரியராகிய அகஸ்தியமுவரால் தமிழிலே ஆறாயிரஞ் சூத்திரமுடையதாகச் செய்யப்பட்டபரத நூல்

மகாளேசுவரர்

திருஇரும்பை மாகாளத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

மகாவிரதன்

சிவன் என்புமாலை தரித்த மூர்த்தியாய் அருள்வர் என்று சொல்பவன். இவன் அகப்புறச் சமயிகளுளொருவன்

மகேந்திரபுரி

இது தென்சமுத்திர மத்தியிலேயிருந்த சூரபத்மன்ராசதானி

மகேந்திரம்

மஹேந்திரங் காண்க

மங்கணன்

தபோ மகிமையினாலே சாரசுவதத்தில் நடனஞ் செய்தவன்

மங்கலகிரி

நரசிங்கமூர்த்தியாய் விஷ்ணு வெழுந்தருளியிருக்கும் மூன்றுஸ்தலங்களிலொன்று. மூன்றாவன அகோபலம், மங்கலகிரி, சுவாலை

மங்கலநாயகியம்மை

திருக்குடமூக்கிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மங்கலன்

அங்காரகன்

மங்கலமடந்தை

ஒரு பெண் தெய்வம். மங்கலாதேவியென்பர். இத்தெய்வத்திற்கு ஆலயம் மலைநாட்டிலும் அதைச்சார்ந்த நாடுகளிலும் உண்டு. மங்களூரென்பதை இதுபற்றிவந்த மங்கலபுரமென்னும் பெயரின் மரூஉவென்று கூறுவர்

மங்களநாயகி

திருமங்கலக் குடியிலே கோயில்கொண்டிருக்கும் வேதியார் பெயர். உ. திருக்கண்டியூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர். ந. திருநல்லத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். ச. திரு இடும்பாவனத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மங்களநாயகி அம்மை

திருவாரூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மங்கைநாயகி

திரு அகத்தியான் பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். உ. திருவிசயமங்கையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மங்கையர்க்கரசி அம்மை

திருவேதிகுடியிலே கோயில் கொண்டிருக்முக் தேவியார் பெயர்

மங்கையர்க்கரசியார்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை வரவழைத்துத் தமது நாயகனாகிய கூன்பாண்டியனுக்குச் சுரந்தீர்ப்பித்தவராகிய மாது சிரோமணியார். இவர் சோழராஜ புத்திரியார்

மச்சதேசம்

மற்சதேசங் காண்க

மச்சாவதாரம்

விஷ்ணுதசாவதாரத்துள்ளே முதல் அவதாரம். இவ்வவதாரம் வேதங்களை அபகரித்தோடிச் சமுத்திரத்தில் ஒளித்திருந்த சோமகாசுரனைக் கொன்று வேதங்களை மீட்குமாறு எடுக்கப்பட்டது. இவ்வவதாரத்திலேயே மகாப்பிரளயம்வர ஏழாவதுமனுவும் சப்தரிஷிகளும் மீன்ரூபந்தாங்கித் தம்முயிர்பிழைத்திருப்பச் சமஸ்தபூமியும் மற்றியாவும் அழிந்தொழிந்தன

மஞ்சிதேவர்

காசியிலுள்ள பெருமாள் விக்கிரகத்தை எழுந்து சென்று எல்லாருங்காண விசுவலிங்கத்தை வணங்கச் செய்தவர். அதுகாரணமாக அங்கிருந்த வைஷ்ணவர்கள் சிவதூஷணஞ் செய்யா தடங்கினர்

மஞ்சுகோசர்

வச்சரசூசிசெய்த அசுவகோசர் குரு

மஞ்சுவந்தம்

இமயத்துக்கு உத்தரதிசையிலுள்ள ஒருமலை. இதிலே மிகப் பெரியதாகிய ஒருதடாக முளது. அதில் பஞ்சவர்ணங்களோடு கூடிய தாமரைகள் வளர்வன

மட்டுவார்குழலி

திருச்சிராப்பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மணலிழத்துக்கிருஷ்ண முதலியார்

இவர் இற்றைக்கு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னே சென்னையில் விளங்கிய ஒரு வேளாளப்பிரபு கல்வி, செல்வம், ஈகை, குலம், ஒழுக்கமென்னுஞ் சிறப்பெல்லாம் பொருந்தி வாழ்ந்தவர். இவரே ராமாயண கீர்த்தனையைப்பாடிய அருணாசலக்கவிராயருக்குப் பொன்மாரி வழங்கிய வள்ளல் ஆயிரம் வருஷங்களுக்கு முன்னே செய்யப்பட்ட கம்பராமாயணத்திற்கும் இவர் மரபினரே அபிமானப் பிரபுக்களாயினர்

மணலூர்புரம்

மணிபுரம், உ, பாண்டிநாட்டகத்தே சித்திராங்கத பாண்டியனுக்கு ராஜதானியாக விருந்த நகரம், ந, சோழநாட்டிலுள்ள ஒரு சிற்றூர்

மணவாளதாசர்

திருவரங்கலம் பகம்பாடிய வைஷ்ணவராகிய வோருத்தம தமிழ்ப்புலவர். இவருடைய கலம்பகம் மிக்க சொன்னபயமும் பொருளாழமு முடையது. இவ்வந்தணர் இற்றைக்கு ஐஞ்நூறு வருஷங்களுக்கு முன்னே யுள்ளவர்

மணவாளமாழனி

இவரும் சிவாக்கிரயோகியாரு மொருகாலத் தவர்கள். தஞ்சாவூரிலே சரபோஜி மகாராஜாவினது சமுகத்திலே பதினெழு நாளாகச் செய்த சமயவாதப் போரிலே சிவாக்கிரயோகிக்குத் தோற்றவராயினும் தமிழ்ப்புலமைசான்ற விஷ்ணுபத்தரேயாவர். உபதேசரத்தினமாலை. நூற்றந்தாதி முதலியன பாடினாருமிவரே

மணிகர்ணிகை

கங்கைக்கணுள்ள ஒரு கட்டடம், கட்டம் ~ தீர்த்தத்துறை

மணிக்கிரீவன்

குபேரன் புத்திரன்

மணிதீபம், மணித்துவீபம்

பாற்கடல் மத்தியிலுள்ள ஒரு தீவு

மணிபுரம்

கலிங்கதேசத்துள்ள ஒரு பட்டணம்

மணிபுஷ்பகம்

சகதேவன் காண்க

மணிமதி

இல்வலன் வாதாபி என்போர் இருந்த பட்டணம்

மணிமந்தன்

குபேரன் தோழனாகிய ஓர்யடின்

மணிமேகலை

ஒரு பெண் தெய்வத்திற்கும், கோவலனுக்கு மாதவிபாற் பிறந்த மகளுக்கும் ஒரு தமிழ்நூலுக்கும் பெயர் அத்தமிழ்நூல் கோவலன் காமக்கிழத்தியாகிய மாதவியிளது மகள் மணிமேகலை யென்பவள் வரலாறு கூறுதலால் இப்பெயர் பெற்றது. சாத்தனார் செய்தது. கொந்தார்குழன்மணி மேகலைநூனுட்பங் கொள்வதெங்ஙன் எனத் துறைமங்கலத்துச் சிவப்பிரகாசசுவாமிகளே இந்நூலினது வன்னையைப் புகழுவரென்றால் வேறு கூறவேண்டா. இந்நூல் பௌத்தமதச் சார்புடையது

மணிவண்ணன்

காவிரிம்பூம் பட்டினத்திற்கு மேற்கே கோயில் கொண்ட திருமாலின் பெயர்

மண்டலபுருடன்

தொண்டைநாட்டிலே வீரையென்னுமூரிலிருந்த ஆருகதராகிய ஒரு தமிழ் வித்துவான். இவரே சூடாமணி நிகண்டு செய்தவர். இவர் குன்றையூரிலிருந்த குணபத்திரருக்கு மாணாக்கர். இவர் கிருஷ்ணராயன் என்னும் அரசன் காலத்தவரென்பது அவர் செய்த சூடாமணி நிகண்டினுள் வருமொரு செய்யுளாற் றுணியப்படும். கிருஷ்ணராயன் சாலிவாகன வருஷம் ஆயிரத்திருநூற்றைம்பஃ தளவிலிருந்தவன். இவர் அடைமொழிகளால் தமதுசெய்யுளைப் புனைபவரல்லர். பிரயோகிக்கு மடையெல்லாம் பொருள் குறித்தனவே

மண்டலேசுவரர்

திருவாரூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

மதங்கன்

ஒரு பார்ப்பனப்பெண் வயிற்றிலே ஒரழிகுலத்தானுக்குப் பிறந்த புத்திரன். இவன் பார்ப்பானாதற்கு முயன்றும் வாய்க்காது இந்திரனைப் பூசித்துச் சண்டதேவனெனப் பட்டம் பெற்றிருந்தவன் உ. ஒரிருஷி. இவர் ததேபாசக்தியினாலே பராசக்தியைத் தன் புத்திரியாகப் பிறக்கப் பெற்றவர். அதுகாரணமாகப் பார்வதிதேவிக்கு மாதங்கியெனப் பெயர் வந்தது. ந. துந்துபிக்கும் பெயர்

மதன், மது

ஓரசுரன். கைடவன் காண்க, உ, ராமபத்திரனாகிய குசன் வமிசத்தரசன். ந. ராவணன் மைத்துனன். இவன் மகன் லவணாசுரன். ச. வைடூரியபர்வதத்தில் அசுவினி தேவர்களை இந்திரன் சோமபானஞ் செய்வித்தபோது சியவனன் அவ்விந்திரனைக் கொல்லும் பொருட்டுப் பெற்ற புத்திரன். ரு. கார்த்தவீரியார்க்சுனன் புத்திரருளொருவன். சு. தேவடித்திரன் புத்திரன்

மதயந்தி

மித்திரசகன் மனைவி, கல்மாஷபாதன் காண்க

மதலாசை

ஓரப்சரசை, உ, வறசன் மகனாகிய குவலயாசுவன் மனைவி. இவன் தன்புத்திரராகிய விக்கிராந்தன், சுபாகு, சத்துருமர்த்தனன், அலர்க்கண் என்னும் நால்வர்க்கும் நீதிமார்க்கங்களையுபதேசித்து வளர்த்த மகா புத்திசாலியாகிய மாதுசிரோமணி

மதிசாரன்

அந்திசாரன். இவன் இருசேயன் புத்திரன்

மதிரை

வசுதேவன் பாரிகளுளொருத்தி

மதிவாணர்நாடகத்தமிழ்நூல்

மதிவாணன் என்னும் பாண்டியன் செய்த நாடகத் தமிழ்நூல்

மது

மதன் காண்க

மதுச்சந்தன்

விஸ்வாமித்திரன் புத்திரன்

மதுமந்தம்

ஜனஸ்தானங் காண்க

மதுரகவியாழ்வார்

இவர் துவாபரயுகாந்தத்திலே பாண்டிதேசத்திலே திருக்கோளூரிலே முக்காணிப் பிராமணருக்குப் புத்திரராகப் பிறந்து வளர்ந்து அயோத்திக்குச் சென்று மீண்டுவந்து நம்மாழ்வாரையடைந்து தத்துவஞான தீக்ஷை பெற்றவர்

மதுரவசனியம்மை

திருக்காட்டூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மதுராந்தகம்

தொண்டைநாட்டின் கண்ணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்

மதுரை

யமுனைக் கரையிலுள்ள நகரம். இந் நகரம் கிருஷ்ணனுக்குரியது. கிருஷ்ணன் பகைவனாகிய ஜராசந்தன் இந்நகரத்தைப் பதினெண்முறை வளைந்தான், உ, பாண்டிதேசத்துக்கு ராஜதானி. இது வைகைக் கரையின்கணுள்ளது. இது முன் கடம்பவனமாக விருந்தது. அதனை நகரமாக்கிச் சிவபெருமானைக் கொண்டு அவர் சடைக்கங்கைநீரால் சுத்தி செய்வித்தபோது அந்நீர்த் திவலைகள் மதுரமாயிருந்தமையால் அந்நகரம் மதுரையெனப் பெயர் பெற்றது. சந்தனப்பொதியச் செந்தமிழ் முனிவனுஞ் ~ சௌந்தரபாண்டியனெநன் தமிழ்நாடனுஞ் ~ சங்கப்பலகையுந் தழைத்தினி தோங்கு ~ மங்கலப்பாண்டிவளநாடென்ப வென்று புகழப்பட்டதாகிய இந்நகரம் மிக்க பழமையும், மிக்க செல்லமும், மிக்ககீர்த்தியும், மிக்க தெய்வத்தன்மையும். மிக்க அலங்காரமுமுடையதாய்ப் பாண்டியர்களுக்கு இராஜதானியாக நெடுங்காலம் விளங்கியது. உமாதேவியாரது அவதாரமாகிய தடாதகைப் பிராட்டியாரும், சோமசுந்தர மூர்த்தியும், உக்கிரப் பெருவழுதியாகிய குமாரக் கடவுளும் உண்மையாகத் திருமுடிசூடியரசாண்ட நகரமாகிய இம் மதுரையினது பெருமை எழுத்திலடங்குவதன்று. பல்லாயிரம் வருஷங்களாகப் பல்லாயிரம் புலவர் சிகாமணிகளிருந்து பல்லாயிரம் நூல்களை இயற்றியும் ஆராய்ந்தும் தமிழை வளர்த்தது மித்திவ்விய நகமேயாம். இந் நகரத்துக்குக் காவலாகப் பூர்வத்திலமைக்கப்பட்டு கிடந்த மதிலினது சிறப்புக்களைப் பௌராணிகர்களெடுத்துக் கூறியிருக்கின்றபடி கூற வீண்டமையாதாயினும் அவற்றுட் சில கூறுவாம். வேற்றரசர்வந்து புகுங்காலத்தில் அவரைப் புகவொட்டாமலெதிர்த்து யுத்தஞ் செய்யுமாயுறு அம்மதின்மேலே யமைக்கப்பட்டுக்கிடக்கும் பொறிகளும் பாவைகளும் எண்ணிலவாம். அவற்றுட் சில பாவைகள் அக்கினியை வாரி வீசும், சில மணலைவாரிப் பொழியும், சில வாளை வீசி வெட்டும், சில கயிறுகளை வீசிக்கட்டும், சில வல்லுவளைத்தப் பாணங்களை யிடையறாமற் செலுத்தும், சில பாம்புப் பொறிகளுள் சீறி யெழுந்து மேல் விழுந்து பகைவரைக் கடித்துக் கொல்லும், பகைவர் விடுகின்றபாணங்களை யெட்டிப்பிடித்து அப்பகைவர்மேற் செலுத்துவனசில பொறிகள், சில மல்லயுத்தஞ் செய்யும், சில வெந்நீரையூற்றும், இவ்வகைச் சிறப்புக்களும் சிற்பசாதுரியங்களும் மலிந்து விளங்கிய இந்நகரம் பின்னர்க் காலத்திலே வேற்றரசர் கைப்பட்டுப் பூர்வ மாண்பெல்லாமிழந்து பிரசண்டமாருதத்திற் பட்ட மரம்போலிந்நாள் நின்று நிலவுவதாயிற்று

மதுரை அளக்கர்ஞாழலார்மகனார் மள்ளனார்

பாண்டியன் மருகனாகிய சிறுகுடிகிழான் பண்ணனைப்பாடியபுலவர். இவர் பாடிய செய்யுளிலே வெள்ளிதென்புலத் துறைய உலகில் விளைவுகுன்றும் என்னும் சோதிடவுண்மை விளக்கமாகின்றது, புறநா

மதுரை ஓலைக்கடைக் கண்ணம்புகுந்தாராயத்தனார்

புறநானூறு பாடினோருளொருவர்

மதுரைஇளங்கண்ணிக்கௌசிகனார்

புறநானூறு பாடினோருளொருவர். போரிலே வெற்றிபெறுதல் எளிது. கொடிய சர்ப்பமுறைகின்ற புற்றைப் போலவும், கொல்லுகின்றவலிய இடபந்தரிகின்றசாலையைப் போலவும் வலிய காவலையுடைய பகைவரது பாசறைக்கண்ணே புகுந்திட்டானென்னும் புகழே பெறுதற்கரியதொன்றாம் என்னுங் கருத்தினைக் கொண்ட இரும்புமுகஞ்சிதைய வென்னுமிவர் பாடல் வீரர்க்கு ஊக்கந் தருதலின் மிகச் சிறந்தது

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார்

சாத்தனார், பாண்டியன் சித்திரமாடத்துஞ்சிய நன்மாறனது அபிமானப்புலவர்

மதுரைக்கணக்காயனார்

தமிழ்க்கலை முற்றும் பருகிய ஒப்பிலாப் புலவர்சிகாமணியாகிய நக்கீரருக்குத்தந்தையார். இவரும் புலமையிற் சிறந்தவரே

மதுரைக்கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

புறநானூறு பாடினோருளொருவர்

மதுரைக்காஞ்சி

மாங்குடிமருதனார் பாடிய நூல். இதற்குரை செய்தவர் நச்சினார்க்கனியர்

மதுரைத்தமிழாசிரியர் செங்குன்றூர்கிழார்

இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர்

மதுரைத்தமிழ்க்கூத்தனார்

புறநானூறு பாடினோருளொருவர்

மதுரைத்தமிழ்நாயகனார்

இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்

மதுரைநக்கீரனார்

புறநானூறு பாடினோருளொருவர். பிடவூர்க்கிழார் மகன் பெருஞ்சாத்தன்மகனுக்கு இவர் அபிமானப் புலவர்

மதுரைப்படைமங்கமன்னியர்

புறநானூறு பாடிய புலவருளொருவர்

மதுரைப்பாலாசிரியனார்

இவர்கடைச்சங்கப்புலவர்களுளொருவர்

மதுரைப்பூதனிளநாகனார்

புறநானூறு பாடினோருளொருவர்

மதுரைப்பெருமருதனார்

இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்

மதுரைப்பேராலவாயர்

பூதபாண்டியன்தேவி தன்நாயகனோடு உடன்கட்டை யேறியது கண்டு வியந்து பாடியவர், புறநா

மதுரைமருதனிளநாகனார்

இறையனாரகப் பொருளுக்குரை செய்த நாற்பத்தொன்பதின்மருளொருவர் இவருரை நக்கீரரொழித் தொழிந்தோருரையினுஞ் சிறந்தது. புறநானூறு பாடினோருள்ளு மொருவர் இவராற் பாடப்பட்டோன் நாஞ்சில் வள்ளுவன் முதலியோர்

மதுரைமாதெய்வம்

மதுரைநகரத்தின் அதிதேவதையாகிய ஒரு பெண் தெய்வம். இந்தத் தெய்வத்தாலேயே கண்ணகி கோவலனுடைய முற்பிறப்பின் வரலாறு முதலியவற்றைத் தெரிந்துகொண்டாள்

மதுரையறுவைவாணிகர்இளவேட்டனார்

இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். இவர் வஸ்திரவணிகர்

மதுரையாசிரியர்

இவரே பேராசிரியர் எனப்படுவர். இவர் இளம்பூரணருக்கு வித்தியாகுரு. நச்சினார்க்கினியர்க்கு இளம்பூரணர் வித்தியாகுரு. நச்சினார்க்கினியர் தமது குருவாகிய இடம்பூரணரை ஆசிரியர் என்றும் தமது குருவுக்குக்குருவாகிய மதுரையாசிரியரைப் பேராசிரியரென்றும் வழங்கவாராயினர். அவ்வழக்குப்பற்றி இவர்க்குப்பேராசிரியர் என்னும் பெயர் நிலைப்பதாயிற்று. இவரது இயற் பெயர் புலப்படவில்லை. இவரே குறுந்தொயிலேயுள்ள நானூற்றிரண்டு செய்யுளுள்ளே முன்னூற்றெண்பத்திரண்டு செய்யுட்களுக்குமுரை செய்தவர். எஞ்சிய இருபதுக்குமுரை செய்யுமுன்னே இவர் தென்புலஞ்சென்றனர். அவ்விருபதுக்கும் நச்சினார்க்கினியர் உரை செய்தனர். இப்பேராசிரியரே திருக்கோவையாருக்கு முரை செய்தாரென்பாருஞ் சிலருளர்

மதுரைவீரன்

அரசுக் காகாதவரென்று காட்டகத்தே கொண்டுபோய் விடுக்கப்பட்ட காசிராஜாவினது புத்திரன். இவன் ஒரு சக்கிலியன் மனையாள் கண்டெடுத்துப் போய் வளர்க்க வளர்ந்து, வளர்த்த தந்தை தாயார் தென்னாட்டிற்சென்றபோது அங்கே மதுரையிலே பொம்மணன் சேவையிலிருந்து அவன் மகளைக்கவர்ந்து கொண்டு சீரங்கத்தையடைந்து சோழனுக்குப் படைத்துணைவனாகி மதுரையை வெற்றி கொண்ட பராக்கிரசாலி. இவன் தொட்டியர்க்கும் வேறு சில ஜாதியாளர்க்கும் குலதெய்வமானான். இவன் தெய்வபத்தியிற் சிறந்தவன்

மதுவனம்

யமுனைக்கரைக் கணுள்ள வனம், உ, கிஷ்கிந்தைக்குச் சமீபத்துள்ள வனம். இது சுக்கிரிவனுக்குரியது

மத்தன்

மாலியவந்தன் புத்திரன்

மத்திமம்

மத்தியதேசம்

மத்தியதேசம்

விபாசைக்குக் கிழக்கேயும் பிரயாகைக்கு மேற்கேயும் இமயத்துக்குத் தெற்கேயும் விந்தியத்துக்கு வடக்கேயுமுள்ள தேசம். இங்கே வசிப்போர் மாத்தியமிகரெனப்படுவர்

மத்தியந்தினமுனிவர்

இவர் வியாக்கிரபாத முனிவருடைய தந்தையார்

மத்திரன்

சிபியுடைய நான்காம் புத்திரன்

மத்திரம்

சிபி புத்திரனாகிய மத்திரனாலே இமயமலைச் சாரலிலே நிருபிக்கப்பட்ட தேசம்

மத்துவாசாரியர்

இவர் துவைத மதஸ்தாபகர். இவர் க்ஷேத்திரம் பாசகக்ஷேத்திரம். இவர் ஜன்ம நாள் தைமாசத்துச் சுக்கிலபக்ஷநவமி

மந்தபாலன்

ஒரு பிரமசாரி

மந்தரபுரேசர்

திருஉசாத் தானத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

மந்தரை

கைகேயினுடைய தோழி

மந்தவாகினி

சுத்திமந்தத்திலுற்பத்தியாகின்ற ஒரு நதி

மந்தாகினி

கங்கை, ஆரவாரமனறிப் பாய்வதென்பது அதன் பொருள்

மந்தாரன்

ஒரு வித்தியாதரன்

மந்தோதரி

ராவணன்பாரி. திதி பத்திரனாகிய மயன்மகள்

மனசியன்

பிரவீரன் புத்திரன்

மனத்துணைநாதேசுவரர்

திருவலிவலத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

மனன்

மி. ஹரியசுவன் புத்திரன்

மனவாசகங்கடந்தார்

சித்தாந்தசாத்திரம் பதினான்கனுளொன்றுகிய உண்மையிளக்கமென்னு நூலாசிரியராகிய இவர் மெய்கண்டதேவர் மாணாக்கருளொருவர். இவர்க்கு ஜன்மநகரம் திருவதிகை

மனஸ்வி

தேவலன் இரண்டாம் புத்திரன்

மனஸ்வினி

பிரஜாபதிபாரி, உ, மிருகண்டன்பாரி

மனு

சிருஷ்டி ஆரம்பகாலத்திலே பூமிபரிபாலனஞ் செய்யுமாறு தெய்வஆஞ்ஞையாற் பிறந்தவர். மனுக்கள் பதினால்வர். சுவாயம்புவன், சுவாரோசிஷன், உத்தமன், தாமசன், ரைவதன், சாக்ஷூசன், வைவசுவதன், சூரியசாவர்ணி, தடிசாவர்ணி, பிரம்மசாவர்ணி, ருத்திரசாவர்ணி, தர்மசாவர்ணி, ரௌசியன், பௌசியன் என்போர். இம்மனுக்களே அவ்வச்சிருஷ்டிதோறும் மனுஷவர்க்கத்தைத் தோற்றுவிப்பவர்களாதலின் அவரே மனுஷருக்கு மூலபிதாக்களாவார். இப்போதுள்ள சிருஷ்டிக்கு மூலபிதா வைவசுவதமனு. இஃது ஏழாவது மனுவந்தரம. ஒருமனுவந்தரகாலம் 4320000 மானுஷியவருஷம். இப்படி மனுவந்தரம் ஆறு சென்றன. இப்போது செல்லாநிற்பது ஏழாவது மனுவந்தரம், சிருஷ்டி காண்க

மனுத்தேவன்

பிரமபுத்திரருளொருவன்

மனுநீதிகண்டசோழன்

இச் சோழன் திருவாரூரை ராஜதானியாக்கி அரசு செலுத்திவருநாளில், தன்மகன் தேரூர்ந்து சென்ற போது தற்செயலாக ஒரு ஆன்கன்றோடி அத்தேர்க்காலிலகப்பட்டரையுண்டிறக்க. அதன் தாயோடி யாராய்ச்சி மணியை அசைத்துக் கதறிது கண்டு பொறாது அம்மகனைத் தன் தேர்க்காலிலிட்டரைத்ததன் றுயர்தீர்க்க முயன்றவிடத்துச் சிவபெருமானது திருவருளால் அக்கன்று உயிர் பெற்றெழப் பெற்ற பேரருட் பெருந்தகை

மனுமசித்தி

பூர்வம் நெல்லூரிலரசு செய்தராஜா

மனுஸ்மிருதி

அஷ்டாதசஸ்மிருதிகளிலே சிரேஷ்டமானது

மனோரமை

மேருபுத்திரி. இவள் இமவானைப் பெற்றுக் கங்கையையும் பார்வதியையும் பெற்றவன்

மன்மதன்

விஷ்ணுமானசபுத்திரன் இவன்பாரி ரதி. கொடிகாமரம். பாணம். புஷ்பம். மன்மதன் என்பதன் பொருள் மனத்துக்குக் கிளர்ச்சியைக் கொடுப்பவன் என்பது. மன்மதனைப் பிரமபுத்திரனென்று கூறுவாருமுளர். இருக்குவேதம் பிரமசைதன்னியத்திலே முதற்கணெழுந்தது இச்சையென்று கூறும். அது நிற்க, காமவிச்சைக் கதிதேவதையாகிய மன்மதனே பெரும்பாலும் புராணங்களிலே பேசப்படுபவன். மன்மதன் அழகோடுகூடிய யவ்வனத்தை அதிகரித்துநின்று ஆண் பெண்ணைக்கூட்டிப் பிரஜாவிருத்திக்குபகாரஞ் செய்யும் அதிகாரமூர்த்தி. மன்மதன் அரூபியாய் வசந்தகாலம் நிலாமணி மேடை மணற்குன்று பூஞ்சோலை சந்திரோதயகாலம் புஷ்பம் வாசைன அழகு முதலியவைகளைத் தனக்குப் பரிவாரமாகக் கொண்டிருப்பவன். தாரகாதி அசுரரால்வருந்திய தேவர் வேண்டுகோளுக் கிரங்கி மன்மதன் சிவபிரான்மீது தனது காமபாணங்களைச் செலுத்தி அவர் நெற்றிக்கண்ணுக்கிரையாகி அங்கமிழந்து அநங்கன் என்னும் பெயர் கொண்டான். மன்மதன்பாரியாகிய ரதிதேவி பார்வதயைப் பன்முறையிரந்து தன் குறையைக் கூற, பார்வதி, ரதியைத்தேற்றி, உன்கணவன் கிருஷ்ணனுக்குப் பிரத்தியுமனன் என்னும் பெயரோடு புத்திரனாகப் பிறப்பான். அச்சிசுவைச்சம்பராசுரன் கவர்ந்து போய்க்கடலிலிடுவான். அதனை மீன்கவர்ந்துவிழுங்கும். அம்மீனை வலைஞர் பிடித்து சம்பரனுக்குக் கொடுப்பார்கள். நீ அவன்வீட்டு ஏவற் பெண்ணாகி அம்மீனை வாங்கி அறுத்து அச்சிசுவைக்கவர்ந்தேகி அவனோடு வாழ்வை என்றார். அவ்வாறே ரதிசம்பரன் மனையில் ஏவற்பெண்ணாகியிருந்து பிரத்தியுமனனை நாயகனாகப் பெற்றாள். இச்சரித்திரம் வாமன பாகவத விஷ்ணுபுராணங்களில் கூறப்பட்டுள்ளன. ஸ்கந்த புராணத்திலே கூறப்பட்ட சரித்திரம் சற்றே விகற்பமாம்

மன்வந்தராதிபர்

சுவாரோசிஷ மனுவந்தரத்திலே விபஸ்சித்து என்னும் நிலிம்பபதியும், உத்தம மனுவந்தரத்தில் சுசாந்தனென்னும் அமரபதியும், தாமச மனுவந்தரத்தில் சிபி என்னுமிந்திரனும், ரைவத மனுவந்தரத்தில் வாசவனும், சாக்ஷூச மனவந்தரத்தில் மனோச்சவசன் என்னுந்தேவபதியும், வைவசுவதமன வந்தரத்தில் புரந்தரன் என்னும் பிருந்தாரகேந்திரனும், சூரியாதி தேவர்களையும் வசிஷ்டாதி இருஷிகளையும் நடாத்துவார்கள்

மமதை

உதத்தியன் பாரி. தீர்க்கதமன் தாய். இவள் பிருகஸ்பதி அநுக்கிரகத்தால் பரத்துவாசரைப் பெற்றவள்

மயன்

கசியபனுக்குத் திதி வயிற்றிற் பிறந்த புத்திரன். தானவர்க்குத்தச்சன். சிற்பசாஸ்திரஞ் செய்தவன் இவனே. மாளிகைகளும் அரண்களும் சமைப்பதில் மிக்க வல்லவன். அவ்வாற்றல் மாத்திரமன்றுநினைத்த மாத்திரத்தே நிருமிக்குமாற்றலுடையவன். இவனுக்கு மாயாவி துந்துபி புத்திரர்கள், மண்டோதரிபுத்திரி. இவனுக்க ராவணன் மருமகன். இவனுக்குப்பின் வந்தோரும் இப் பெயரினாலேயே விளங்கினர் என்பது அர்ச்சுனன் மயனுயிரைக் காத்தானென்றும், அவ்வுபகாரத்துக்காக மயன் ஓரலங்கார மண்டபமொன்றியற்றிப் பாண்டவர்க் களித்தானென்றும் வரும் பாரத கதையாற் பெறப்படும். மயன் வமிசத்தோர், தெய்வகம்மியராகிய துவஷ்டாவெனப்படும். விசுவகன்மாவினது வமிசத்தோர்க்கஞ்சி ரோமபுரியை யடைந்து அசுரர்க்குக் கம்மியராகி அவர்க்குப்படைக்கலங்களும் ரதங்களும் மாடமாளிகைகளும் ஏனையபலவகைக் காருகம்மியங்களும் பயிற்றி விளங்ககுவாராயினர். ரோமகபுரி கடல் கொள்ளப்பட்டழிந்தபோது அவ்வமிசத்தோர் பலர் அப்பிரளயத்துக்குத் தப்பி மீண்டும் ஆரிய நாட்டையடைந்தனர். அங்ஙனம் வந்தடைந்தோர் பெருக மற்றைத் துவஷ்டாவினது மரபினர் அருகினர் போலும். ஆலயசிற்பமானங்கள் ஆகமத்திலொன்றும் மயன் விதியிற் மற்றொன்றுமாக இந்நாளிலும் முரணுதல் காண்க

மயிலாடுதுறை

இது காவிரியின் தென்கரையிலுள்ள வொரு சிவஸ்தலம்

மயேச்சுரர்

இவர் ஒரு யாப்பிலக்கண நூலாசிரியர் என்பது குணசாகரர் காரிகையால் விளங்குகின்றது. எனவே அவர்க்கு முன்னுள்ளவரென்பதும் அந்நூலிறந்த தென்பதும் அநுமானமாம்

மரகதவல்லியம்மை

திருஈங்கோய்மலையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மரகதாசலேசுவரர்

திருஈங்கோய் மலையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

மரீசி

பிரமமானசபுத்திரருளொருவன். இவன் புத்திரன் கசியபன் புத்திரி பூர்ணிமை

மருதப்பேசுரர்

திரு இடைமருதிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

மருதமலை

கொங்குநாட்டின் கணுள்ள ஒரு சுப்பிரமணியஸ்தலம்

மருதுவதி

தக்ஷன் மகள். தர்மன்பாரி. ஜயந்தனும் மருத்துவந்தனும் புத்திரர்

மருதேசம்

குருசைனியம் பாரதயத்தகாலத்திலே தங்கியவிடம்

மருத்து

அவீக்ஷித்து புத்திரனாகிய ஒரு சக்கரவர்த்தி. இவனைப் போல் யாகஞ் செய்தார் ஒருவருமில்லை. இவன் காமாதிகளைமுனிந்த சீலன். அந்த யாககாலத்தில் ராவணன் சென்று மருந்து மகாராஜனைப் போருக்கழைக்க அவன்யாக நிறைவேறாதென்றெண்ணி ராவணனோடு சமாதானம் போயினான். அங்கு வந்திருந்த ராவணனுக்கஞ்சி இந்திரன் மயிலாகவும் யமன் காகமாகவும் குபேரன் ஓந்தியாகவும் மாறி யொளித்து மீண்டுபோயினார்

மருத்துவந்தன்

தர்மனுக்கு மருத்துவதியிடத்துப் பிறந்த மூத்தமகன்

மருத்துவன்றாமோதரனார்

இவர்கடைச்சங்கப்புலவர்களு ளொருவர். இவர் திருவள்ளுவர் குறளுக்குக் கூறிய சிறப்புப்பாயிரக்கவி, பாயிரமாதலோடு உலகத்தார்க்குத் தலைக்குத்து மருந்தாகவுமிருக்கின்றது. அது சீந்திநீர்க் கண்டந் தெறிசுக்குத் தேனளாய் ~ மோந்தபின் யார்க்குந் தலைக்குத்தில் ~ காந்தி ~ மலைக்குத்துமால்யானை வள்ளுவர் முப்பாலாற்றலைக்குத்துத் தீர்வுசாத்தற்கு என்பது

மருந்தீசுவரர்

திருவான்மி யூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

மருபூமிகள்

சிந்துதேசத்துள்ள மலைநாடுகள்

மருவூர்ப்பாக்கம்

காவிரிப்பூம்பட்டினத்தின் புறநகர்

மறைக்காட்டீசுவரர்

திருமறைக்காட்டிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

மறைஞானசம்பந்தர்

திருக்களாஞ்சேரியிலே விளங்கிய சைவசமயாசாரியராகிய இவர் உமாபதிசிவாசாரியருக்கு குரு மூர்த்திகள். இவர் சற்றேறக்குறைய அறுநூறு வருஷங்களுக்கு முன்னேயுள்ளவர். இவர் மெய்கண்ட தேவருக்கு மாணாக்கர். சிவதருமோத்தரத்தை வடமொழியிலிருந்து தமிழான் மொழிபெயர்த்துப் பாடியவர் இவரே

மற்சபுராணம்

விஷ்ணுவினது மீனவதாரமான்மியமும் அவ்விஷ்ணு சலப்பிரளயதாலத்திலே மனுவையும், பிறவற்றையும் ஓர் பேழையினுள்ளே வைத்து இரக்ஷித்தமையும், பிரமசிருஷ்டியும், திரிபுராசுரர் சங்காரமும், தாராகாசுரனுக்கும் தேவர்களுக்கும் இடையினிகழ்ந்த யுத்தமும், பார்பதியம்மையார் திருக்கல்யாணமும், முருகக்கடவுள் திருவவதாரமும், விஷ்ணு அவதாரமுமாகிய காதைகளை யுணர்த்துவது. பதினாலாயிரங் கிரந்தமுடையது

மற்சியதேசம், மற்சதேசம்

இப்பெயரினால் இரண்டுதேசங்களுள். ஒன்று கூர்ச்சரதேசத்துக்கு மேற்றிசைக்கணுள்ளது. மற்றது தற்காலம் தினாசபுர மென்று வழங்கும் இடத்துக்குச் சமீபத்துள்ளது

மலயம்

பொதியமலை

மலர்மங்கை

திருநாட்டியத்தான் குடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மலைபடுகடாம்

பெருங்குன்றூர்ப் பெருங்கவுசினார் பாடிய நூல்

மலையத்துவஜன்

குலசேகரபாண்டியன்மகன். இவன் மகள் தடாதகைப்பிராட்டி. இவன் மனைவி காஞ்சனமாலை. இவள் விச்சாவதி என்பவளது அவதாரம், உ, அசுவத்தாமாவினாற் கொல்லப்பட்ட பாண்டியன்

மலையமான்திருமுடிக்காரி

கடையெழுவள்ளல்களுளொருவனாகிய காரி யெனப்படுவன்இவனே. தொண்டை நாட்டுக்குஞ் சேரநாட்டுக்குமிடையேயுள்ள மலைநாட்டைக் கோவலூரிலிருந்த தாண்ட சிற்றரசன் இவனே. இவன் கொடையாலும் புஜபலத்தாலுஞ் சிறந்தவன். புலவர்க்குப் பேருபகாரி. இவன் குதிரையும் காரியெனப்படும் போரிற் புறங்கொடுத் தோடும் வேந்தர்க்குத் துணைபுரிந்து வெற்றி மாலை சூடுவித்தலைத் தொழிலாகவுடையவன் காரி யென்றும். குளிர் காலத்திலே காட்டகத்திலே ஒரு மயிலைக்கண்டு அது குளிரால் வாடுமேயென்றிரங்கித்தான் போர்த்திருந்த போர்வையை அதற்குக் கொடுத்தவன் பேகனென்றும், முல்லைக்கொடியிற் சிக்கியதேரை அக்கொடியைச் சிதைத்து மீட்காது அக்கொடி படர்ந்துலகுக்குப் பயன்படும்படி அத்தேரை அதற்குக் கொடுத்தவன் பறம்பு நாட்டுவேந்தனாகிய பாரியென்றுஞ் சிறுபாணாற்றுப்படையிற் கூறப்பட்ட முவர்கடைவள்ளல்களுள்ளே இவன் விசேடித்துக் கூறப்பட்டவன்

மலைவளர்காதலியம்மை

இராமேச்சுரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மல்லிநாதன்

இவன் ரகுவமிசம் நைஷதம் மாகம் இவைகளுக்கு வியாக்கியான கர்த்தா

மஹதி

நாரதன் வீணை

மஹாகாலன்

சர்வசங்காரமூர்த்தியாகிய சிவன்

மஹாகாலம்

ஒரு புண்ணியக்ஷேத்திரம். அஃதுச்சயினியிலுள்ளது

மஹாசுவாலை

ஒருநரகம். அது வியபிசாரம் புரிவோர் அடைதற்குரியது

மஹாதேவன்

அஷ்டமூர்த்திகளுளொருவர், உ, சிவன்

மஹாநந்தி

மகததேசது ராஜாக்களாகிய சைசுநாகருளீற்றரசன்

மஹாநாபன்

ஹிரணியாடின் மகன்

மஹாபலன்

சுமாலி புத்திரன்

மஹாபலி

பலிச்சக்கரவர்த்தி

மஹாபார்சுவன்

ராவணன் சிறிய தாய் புத்திரருளொருவன்

மஹாபிஷன்

பிரதீபன் காண்க

மஹாபோஜன்

சாத்துவதன் புத்திரன். இவன் வமிசத்தார் போஜரெனப்படுவர். இவன் மிக்கதருமசீலன்

மஹாப்பிரகன்

மிதிலன் வமிசத்தோரரசன். கீர்த்திராதன் தந்தை

மஹாமகம்

சிங்கராசியில் பிருஹஸ்பதி பிரவேசமாயிருக்கும் வருஷத்தில் மாசி மாசத்துப் பௌர்ணிமை. அது கும்பகோணத்திலேயுள்ள மகாமக தீர்த்தத்திலே ஸ்நானஞ் செய்தற்குரிய விசேஷ புண்ணியநாள்

மஹாமனன்

மகாகாலன் புத்திரன். இவன் புத்திரர் உசீநரன். திதிக்ஷன் என்போர்

மஹாமாயன்

கீழ்லோகங்களில் ஒன்றாகிய அதலலோகத்ததிபதி

மஹாயுகம்

சதுர்யுகம். இது 4320000 கொண்டது

மஹாராஜிகர்

கணதேவதைகளுளொரு பேதம். இவர்கள் இருநூற்றிருபதின்மர்

மஹாராஷ்டிரம்

கூர்ச்சரதேசத்துக்குத் தெற்கின்கணுள்ள தேசம். இத்தேசத்தில் வழங்கும் பாஷையும் இப்பெயரேபெறும். இது பஞ்சதிராவிடத்தொன்று. இத்சேதத்தார் மகாராஷ்டிரர் எனப்படுவர்

மஹாரோமன்

கீர்த்திராதன் புத்திரன்

மஹாரௌரவம்

அக்கினிமயமான ஒருநரகம். இது கொடிய பாபிகள் போய் வருந்துமிடம்

மஹாவர்மன்

நந்தன்

மஹாவாகு

இரணியாடின் புத்திரன்

மஹாவீரன்

ஜைனகுருக்களுளொருவன். இவன் கடைத்தீர்த்தங்கரன்

மஹாவீரியன்

புமன்னியன் புத்திரன். இருடியன்தந்தை, உ, பிருகத்திரதன் புத்திரன்

மஹாஹயன்

சதஜித்து சேட்டபுத்திரன்

மஹிஷன்

தேவரும் அசுரரும் யுத்தஞ் செய்தபோது அசுரரெல்லோரும் இறந்துபோக, திதியென்பவள் தவஞ்செய்து பிரமாவினது அநுக்கிரகத்தினாலே இம்மஹிஷனைப் பெற்றாள். இவன் கண்டத்தின்மேல் மஹிஷ ரூபமும் அதன்கீழ் மனுஷ ரூபமுடையவன். இவன் மிக்க கொடுமையினையுடையவன். இவனைத்துர்க்காதேவியார் கொன்று மஹிஷாசுரமர்த்தனியென்னும் பெயர் பெற்றார்

மஹிஷாசுரமர்த்தனி

துர்க்காதேவி

மஹிஷ்மந்தன்

சனாஜித்துபுத்திரன். நர்மதாநதிதீரத்தில் மாஹிஷ்மதிபுரத்தை நிர்மாணஞ் செய்தவன் இவனே

மஹேந்திரம்

இது உற்கலம் முதல் காண்டவநாடுவரையும் வியாபித்திருக்கும் மலை, உ, குலபர்வதங்களுளொன்று

மஹோதயம்

மகதநாட்டிலுள்ள ஒரு பட்டணம். இது விசுவாமித்திரன் ராஜதானி. குசிகன் மகன் குசநாடனாலே நிருமிக்கப்பட்டத, உ, தைமாசமும் அமாவாசையும் திருவோணநடித்திரமுங் கூடிய சுபதினம் மஹோதய புண்ணியகால மெனப்படும். இப்புண்ணியகாலத்திலே செய்யப்படுந் தான தர்ப்பண முதலியன நற்பலன் தரும்

மஹோதரன்

ராவணன் சிறிய தாய் புத்திரன். நீலனாற் கொல்லப்பட்டவன் இவனே

மாகதி

மகததேசத்துப் பாஷை. இது பிராகிருதங்களுளொன்று. சோணநதிக்கும் பெயர்

மாகந்தி

தக்ஷிணபாஞ்சாலத்து ராஜதானி

மாகன்

மாகஞ்செய்த சமஸ்கிருதகவி. இவன் தத்தகன் மகன்

மாகம்

மாகன் செய்த சமஸ்கிருதகாவியம். இக்காவியம் கிருஷ்ணன் சிசுபாலனை வதஞ்செய்த வரலாறு கூறுவது

மாகாபலலிங்கநாதர்

திருக்கோகரணத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

மாங்காடு

குடமலைப் பக்கத்துள்ளதோரூர். இஃது இக்காலத்து மாங்காடுவென்று வழங்கப்படுகின்றது

மாங்குடிமருதனார்

இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்

மாசாத்தர்

திருக்கைலாசஞான வுலாவை அங்கே கேட்டுவந்து திருப்பிடவூரிலே வெளியிட்டவர்

மாசாத்துவான்

கோவலன் தந்தையின் இயற்பெயர். இவன் கோவலன் இறந்ததை மாடலன் சொல்லக் கேட்டுத் தன்கையிலுள்ள பொருள் அனைத்தையும் தானஞ் செய்து விட்டுத் துறவு பூண்டவன்

மாசிலாமணியீசுவரர்

திருஆவடுதுறையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

மாடலன்

தலைச்செங்கானத்துள்ள ஒரந்தணன். கோவலனுடைய நட்பாளன். கோவலன் மதுரையில் கொலையுண்டது முதலியவற்றைக் காவிரிப்பூம் பட்டினத்தார்க்குச் சொல்லித் தன்சொல்லால் அவர்களிற் சிலரிறந்தமை தெரிந்து அப்பாவத்தைப் போக்குதற் பொருட்டுப் போய்க் கங்கையாடி மீளுகையில் இடையே செய்குட்டுவனைக் கண்டு அளவளாவி, வஞ்சி நகரஞ்சார்ந்து, அவனை யாகஞ் செய்யும்படி தூண்டி, அது செய்வித்து அவனை நல்வழிப்படுத்தினவன்

மாணிக்கத்தியாகர்

திருவொற்றியூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

மாணிக்கவண்ணஈச்சுவரர்

திருமருகலிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

மாணிக்கவண்ணர்

திருவாழ்கொளிபுத்தூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

மாணிக்கவரதேசுரர்

திருமாணிகுழியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

மாணிக்கவல்லியம்மை

திருமாணிகுழியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மாணிக்கவாசகசுவாமிகள்

அரிமர்த்தன பாண்டியற்காகக் குதிரை கொள்ளச்சென்ற வழியில் சிவபெருமான் ஞானாசாரியராக வெழுந்தருளி வந்து உபதேசஞ்செய் தாட்கொண்டருளப்பட்டவரும், குதிரைவாங்கும் பொருட்டுக் கொண்டு சென்ற திரவியங்களையெல்லாம் சிவாலயத் திருப்பணிக்காக்கிய துணர்ந்து பாண்டியனா லொறுக்கப்பட்டு நின்றபோது சிவபிரான் நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு போய்க் கொடுத்தவழி அவராற் காத்தருளப்பட்டவரும், பரிகளெல்லாம் நரிகளாக மீளுதலும் பின்னரும் பாண்டியனொறுக்க, சிவன் வைகையைப் பெருகச்செய்து அதன் கரையை அடைக்கக் கூலியாளாகிச் செல்லப் பெற்றவரும் அதுவாயிலாகப் பாண்டியன் பணியினின்றும் நீங்கிச் சீவன்முத்தராய் விளங்கினவரும், கேட்டோரை மனமுருக்கி முத்திநெறியிற் செலத்துமியல்பினதாகிய திருவாசகமும் திருக் கோவையாரும் பாடியருளியவரும், புத்தரை வாதில் வென்று சைவசமய ஸ்தாபனஞ் செய்தவருமாகிய சைவசமயாசாரியர். இவர் பூர்வாச்சிரம நாமம் வாதவூரர். இவர்க்குப் பாண்டியனால் சூட்டப்பட்ட பட்டப் பெயர் தென்னவன் பிரமராயன். கல்லாடத்திலே, வெடிவாற்பைங்கட்குறு நரியினத்தினை யேழிடந்தோன்றியின னூற்கியைந்து வீதிபோகிய வாலுளைப்புரவி யாக்கியவிஞ்சைப் பிறைமுடியந்தணன், என்றும், மண்ணகழ்ந்தெடுத்து வருபுனல்வையைக் கூலஞ்சுமக்கக் கொற்றாளாகி நரைத்தலை முதியோளிடித்தடு கூலிகொண் டடைப்பது போலவுடைப்பது நோக்கிக் கோமகனடிக்க வவனடிவாங்கி என்றும் வருதலாலே, கடைச்சங்கப் புலவராகிய கல்லாடருக்கு முன்னுள்ளவரென்பது நிச்சயிக்கப்படும். சிவன் வலைவீசிய திருவிளையாடலை இவர் பன்முறையெடுத்தெடுத்துத் திருவாசகத்தி லோதுதலால் வலைவீசிய திருவிளையாடல் நிகழ்ந்தகாலத்தை யடுத்திருளந்தவ ரென்பதும. எந்து, அச்சன், அச்சோ, பப்பு என்பன முதலிய மலையாளச் சொற்களை அத்திருவாசகத்திலே பிரயோகித்தலால் மலையாளத்திருந்து வந்து பாண்டி நாட்டிலே குடிகொண்டவரென்பதும் அனுமிக்கக்கிடக்கின்றன. இச்சிவஞானச்செல்வர், சண்டீசரையும் கண்ணப்பரையும் தமக்கு முந்தினோராக வெடுத்துக்கூறி, அவர் பெருமையைப்புகழுவர். கன்றால்விளவெறிந்த கிருஷணன் செயலும் திருவாசகத்தி லெடுத்துக் கூறப்படுதலின், இவர் கிருஷ்ணன் காலத்துக்குப் பிற்பட்டவ ரென்பதுற்கையஞ் சிறிதுமில்லை. திருநாவுக்கரசு நாயனாராலே, தமது தேவாரத்திலே, நரியைக் குதிரைசெய்த அற்புத மெடுத்துக் கூறப்படுதலால் அவர் காலத்துக்கு இவர் முன்னுள்ளவ ரென்பதற்கும் ஆக்ஷேபஞ் சிறிதுமில்லை. திருநாவுக்கரசு நாயனார் காலம், முன்னே சம்பந்தர் என்பதனுட் கூறப்பட்டபடி நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளது. அவர்க்கு இவர் முன்னுள்ளவராதலின் இவர் காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளதென்பது நன்கு துணியப்படும். அதுமாத்திரமன்று, திருவாசகத்தினுள்ளே பிற்காலத்திலே அறியப்படாத அநேக சரித்திரங்களும், க்ஷேத்திரங்களும் எடுத்தோதப்படலாலும், கண்ணப்பர் சண்டீசர்களைத் துதிப்பவர் திருஞானசம்பந்தர் முதலியோரைத் துதிக்காமையாலும், சிரிப்பார் களிப்பார்தேனிப்பார் என்னுந் திருவாசகத்திலே தேனித்தல் என்னுஞ் சொல்வழக்கும், உவலைமுதலிய அரிய சொற்களும் பிற்காலத்து வழக்கன்மையாலும், திருவாசகம், தேவாரத்துக்கும் கடைச்சங்கத்து நூல்களுக்கும் முந்திய தென்பதுநன்றாகத் துணியப்படும். இனித் திருத்தொண்டத் தொகையினுள்ளே எடுத்தோதப் படாமையின், மாணிக்கவாசகர் சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பிற்பட்டவரெனச் சாதிப்பாருஞ்சிலருளர். அஃதறியாமையின் பாலதாம். அகஸ்தியர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் முதலியோரெல்லாம் சிவ பக்தியிலும் சிவயோகத்திலுஞ் சிறந்த மெய்யடியார்களாகவும் அவரையெல்லாந் திருத்தொண்டத்தொகையினுட் கூறாமையாது காரணமாமோ, அதுவே மாணிக்கவாசகரைச் சேர்த்தோதாமைக்குங் காரணமாம். முன்னர் வெளிப்படாத அடியார் வரலாறுகளே சேக்கிழாருக்கு அருளிச் செய்யப்பட்டன. வன்றி முன்னே வெளிப்பட்ட சரித்திரங்களல்ல. மாணிக்கவாசக சரித்திரம் முன்னே ஆலாசியத்திற் கூறப்பட்டது. அதுபற்றியே அவர் சரித்திரம் திருத்தொண்டத் தொகையிலும் பெரியபுராணத்திலும் கூறப்படா தொழிக்கப்பட்டது. அவ்வாறே அகஸ்தியர், பதஞ்சலி, வியாக்கிரபாதர்கள் சரித்திரங்கள் சிதம்பர மான்மியத்திலும் பிறவற்றிலுங் கூறப்பட்டுக்கிடந்தமையின் அவையுமொழிக்கப்பட்டன. அற்றேல் சம்பந்தமூர்த்தி நாயனார் சரித்திரம் ஆலாசியத்திற் கூறப்பட்டிருக்கவும் மீளவும் பெரிய புராணத்திலும் திருத்தொண்டர் தொகையிலும் கூறப்பட்டது யாது பற்றியோ வெனின், ஆலாசியத்துள் அச்சரித்திரம் விரித்துரைக்கப்படாமையி னென்க. இதுவே திருத்தொண்டத் தொகையிலும் மாணிக்கவாசகர் எடுத்துக் கூறப்படாமைக்குக் காரணமாமெனக் கொள்ளுக. அதுநிற்க, மாணிக்கவாசகர் இடையறாத சிவத்தியானமுஞ் சிவபத்தியுமுடையராய் விளங்கினரென்பதும், அவருடைய சரித்திரம் முற்றுமுண்மையென்பதும் அவர் திருவாக்குக்களே வெளிப்படப் பகர்கின்றன. வாசனையாற் புறத்தே காணப்படும் எச்செயல்களையுஞ் சிவசம்பந்தப்படுத்தியே யெடுத்தோதுவர். திருவண்ணாமலையிலே இவர் தலவாசஞ் செய்தகாலத்திலே அங்குள்ள பெண்கள் வைகறையிலே யெழுந்து சிவதோத்திரஞ் சொல்லிக் கொண்டு அயல்வீட்டுப்பெண்களை யெழுப்பி நீராடப்போதலைக்கண்டு, அச்செயலைச்சிவசத்திகள் சிருஷ்டியின் பொருட்டு ஒருவரையொருவ ரெழுப்புவதாகப் பாவித்துத் திருவெம்பாவையைப் பாடியருளினார். இப்படியே புறத்தே நிகழுகின்ற செயல்களாகிய படையெழுச்சி சாழல் பொற்கண்ண முதலியவைகளை யெல்லாம் சிவஞானச்செயலாகப் பாவித்துப் பாடியருளினர். இவருடைய மனமுஞ் செயலுமெக்கேயழுந்தித் கிடந்தனவென்பது, எங்கையுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல்பகலெங்கண் மற்றோன்றுங் காணற்க விங்கிப்பரிசே யெமக்கெங்கோனல் குதியே லெங்கெழிலென்ஞாயிறெமக்கு என்பது முதலிய திருவாக்கா னுணரப்படும். பேரின்பக்கனியாகிய சிவத்தைக் கிடத்தற்கரிய பெரும்பேறாக மதித்தார் என்பது, ஞானக்கரும்பின் றெளியைப் பாகை, நாடற்கரியநலத்தை நந்தாத் தேனைப்பழச்சுவையாயினானைச் சித்தம்புகுந்து தித்திக்கவல்ல கோனைப்பிறப்பறுத்தாண்டு கொண்ட கூத்தனைநாத்தழும் பேறவாழ்த்தி என்னுந் திவ்விய வாக்கா னுணரப்படும் இவருடைய பாடலெல்லாம் ஞானப்பொருள் குறித்த வுருவங்களா மென்பதற்கு வையகமெல்லாமுரலதாக மாமேருவென்னு முலக்கைநாட்டி மெய்யெனுமஞ் சணிறையவட்டி மேதகுதெமன்னன் பெருந்துறையான் செய்யதிருவடி பாடிப்பாடிச் செம்பொனுலக்கை வலக்கைபற்றி யையனணி தில்லைவாணனுக்கே யாடப்பொற் சுண்ணமிடித்துநாமே என்னுந் திருவாக்குச் சான்றாகும். இனி இவருடைய மெய்ஞ்ஞான போதவாற்றலோ வென்றால் அஃதெடுத்துரைக்குந் துணைத்தன்று. கல்லையுங்கனியவைக்குந் திவ்விய வாய்ச் சொல்லைச் சொல்லென்றுரைத்தலாகா தென்றே மாணிக்கவாசகமென் றிவ்வுலகத் தலைமே லேற்றி யோலமிடுவதாயிற்று. தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் யாமாரெமதார்பாசமா ரென்னமாயமிவை போகக் கோமான் பண்டைத் தொண்ட ரொடுமவன்றன் குறிப்பேகுறிக்கொண்டு போகமாறமைமின்பொய் நீக்கிப் புயங்கனாள்வான் பொன்னடிக்கே இப்பரமோத்தம வாக்குவே தோபநிஷதங்க ளெல்லாவற்றையு மொருங்கேயளக்குந் துணையதாம். இப்படியே ஒவ்வொன்று மொவ்வோருப நிஷதமாமன்றி வாளா இலக்கியமன்று. சிதம்பரத்திலே சிவத் தோடிரண்டறக் கலந்த போது இவர்க்கு வயசு முப்பத்திரண்டு

மாணிபத்திரன்

குபேரன் சேனாபதியாகிய ஒரு யக்ஷன். குபேரனோடு போர்புரிந்தபோது இம்மாணிபத்திரன் ராவணனை யெதிர்த்து அமர்புரிந்து மிக்க சூரனாய் நின்ற சமயத்து ராவணன் தன் கதாயுதத்தால் அவன்தலையை மோத அவன் தலை ஒரு பக்கஞ்சாய்ந்து போனமையால் பார்சுவமௌலியெனப் பெயர் பெற்றான்

மாண்டவி

தசரதபுத்திரனாகிய பரதன்பாரி. குசத்தவசன் புத்திரி. மாளவியெனவும் படுவள்

மாண்டவ்வியன்

மகாதவங்களைச் செய்து சிறந்த ஒரு பிரமரிஷி. இவரே விதுரனாகப்பின்னர்ப் பிறந்தவர். விதுரன் காண்க

மாண்டுகேயன்

இந்திரப்பிரமிதி சீஷர். இவர் இருக்குவேதாத்தியனயர்

மாதங்கதிவாகரன்

ஒரு வடமொழிப்புலவன்

மாதரி

மதுரையைச்சார்ந்த ஆயர்பாடியிலிருக்கும் இடைச்சியர்தலைவி. இவள் கோவலன் கொலையுண்டிறந்ததையும் கண்ணகி துன்புற்றதையுங் கேட்டு வருத்தமுற்றுத்த தீயில் விழுந்திறந்தவள்

மாதர்கள்

சிவனுக்கு ஏவற்குரிய மாதர்கள் இப்பெயர் பெறுவர்கள் அவர்கள். பிராமிமாஹேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி என எழுவர். சிலர் மதப்படி சண்டியோடு அஷ்டமாதரெனவும் படுவர்

மாதலி

தேவேந்திரன்சாரதி

மாதவன்

விஷ்ணு, உ, மதுவமிசத்தில் வந்தோன், ந, கிருஷ்ணன், ச, பரசுராமன்

மாதவாசாரியர்

வித்தியாரணியர் காண்க

மாதவி

யயாதிபுத்திரி. இவள் காலவனை மணந்து அஷ்டகன் முதலியோரைப் பெற்றவன், உ, அகத்திய முனிவர் சாபத்தாலுலகிற் பிறந்த உருப்பசி, ந, கோவலன் காதற்பரத்தை. இந்திரன் சபையகத்து ஒருவரை யொருவர் காமுற்று அகத்தியமுனிவராற் சாபம் பெற்ற சயந்தனும் உருப்பசியும் முறையே விந்தமலையில் மூங்கிலாயும், காஞ்சிநகரத்திலே தேவகணிகையாயும் பிறந்தன ரென்பது சிலப்பதிகாரம். உருப்பசி காஞ்சிநகரிற் பிறந்து மாதவியென்னும் பெயர்கொண்டாள். அவள் மரபிற் பிறந்த கோவலன் காதற் பரத்தையும் மாதவியெனப்பட்டாள்

மாதவீயசங்கிதை

காலநிர்ணயம். வித்தியாரணியர் செய்த சோதிஷகிரந்தம் இதுவே

மாதவீயம்

பராசரஸ்மிருதி வியாக்கியானம். மாதவாசாரியர் செய்தது

மாதா

இலக்குமி, உ, துர்க்கை, ந, உமாதேவியார் உலகத்தை யீன்றளித்தலின் உமாதேவியார்க்கிப்பெயர் உவமையாகுபெயர்

மாதுமையம்மை

திருக்கோணமா மலையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மாதேவியம்மை

திருஅம்பர்மாகாளத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மாதைவேங்கடேசுரன்

இப்பிரபு, தமிழ்ப்புலவர்களுக்குப் பரமோபகாரியாயிருந்து தமிழைவளர்த்த அவதாரபுருஷன். ஒரு கவிக்கு ஆயிரம் பொன்னாகத் தொண்ணூற்றொன்பது கவிக்குக்கொடுத்து நூறாங்கவிக்கு நூறாயிரம் பொன்கொடுத்து ஒரு பிரபந்தங் கொண்ட பிரபுசிகாமணியிவனே. அது நோக்கியே படிக்காசுப்புலவரும் தமது தொண்டை மண்டல சதகத்தினுள்ளே எல்லப்பன் என்னுஞ் செய்யுளிலே மாதைவேங்கடேசுரன் போல வரிசை செய்தான் என்று புகழ்ந்தனர்

மாத்திரி

மத்தமிரன் மகள். சல்லியன் தங்கை. பாண்டுவினது இரண்டாம் பாரி. இவள் பாண்டுவோடு உடன்கட்டையேறினவள். நகுலனும் சகாதேவனும் இவள் வயிற்றிற்பிறந்தோர்

மாத்மீகன்

அறிவும், அறியப்படுபொருளுஞ் சூனியமென்றும், அதனாலே பிரபஞ்சந் தோன்றாதென்றுஞ் சொல்பவன்

மாநாய்கன்

கண்ணகிபிதா. இவன் கோவலன் கொலையுண்டதையும் கண்ணகி துன்புற்றதையும் மாடலன் கூறக் கேட்டுத் துன்புற்றுத் தன்பொருளை யெல்லாம் தானஞ்செய்துவிட்டுத் துறவுபூண்டவன்

மாந்தரஞ்சேரலிரும்பொறை

சேரருள் ஒருவன். பராசரனென்னு மந்தணனுக்குப் பரிசில் கொடுத்தோன்

மாந்தாதா

இரண்டாம் யுவநாசுவன் புத்திரன். இவன் பாரி சசிபிந்து. விந்துமதி இவன் மகன். மாந்தாதா, புருகுற்சன், அம்பரீஷன், முசுகுந்தன் என்னும் மூன்றாபுத்திரரையும் ஐம்பது புத்திரிகளையும் பெற்றவன். சௌபரியென்னும் முனி இவ்வைம்பது புத்திரிகளையும் மணம் புரிந்தான்

மானக்கஞ்சாறநாயனார்

கஞ்கனூரென வழங்குங் கஞ்சாறூரிலே வேளாளர் குலத்திலே விளங்கியவொரு சிவபக்தர். மணக்கோலஞ் செய்து மணப்பந்தரின் கீழ் வந்திருந்த தமது புத்திரியினது கூந்தலை மாவிரதிவேடங் கொண்டு சென்று சிவபெருமான் கேட்க அதனைமறாது கொய்து கொடுத்தவருமிவரே

மானசசரசு, மானசவாவி

கைலாசத்திற் குபேரவனத்திலுள்ளசரசு. அன்னப்பக்ஷிகளுக் குறைவிடமிதுவே. அன்னங்கள் பிறவிடங்களுக்குச் சென்று வாழினும் மழைக்காலத்தில் மீண்டுசென்று இவ்வாவியை யடைந்து விடும். இவ்வாவியின் காட்சி மிக்கரமணியமும் வசீகரமுமுடையதாம்

மானவம்

உபபுராணத்தொன்று

மாபலி

பலிச்சக்கரவர்த்தி. இவன் பிரஹலாதன் புத்திரனாகிய விரோசனன் மகன், மகாபரக்கிரமசாலி. தேவர்களை இவன் துன்புறுத்த அவர்கள் விஷ்ணு பால் முறையிட, அவர் குறள் வடிவங்கொண்டு சென்று மூன்றடியாகவுமளந்து மூன்றாமடிக்கு அவன்தலைமேற் றிருவடியையூன்ற நெரிந்திறந்தவன் கம்பர் இச்சரித்திரத்தை இராமாயணத்தில் மிக்க மாதுரியமாகக் கூறுவர்

மாமை

அரித்துவாரம்

மாயநகர்

தாருகாசுரன் அரசிருந்த நகரம்

மாயாதேவி

சம்பராசுரன் வீட்டிற்பதிவிரதத்தை அநுட்டித் திருந்தவன்

மாயாவதி

சம்பராசுரன் பாரி, உ, புத்தன் தாய்

மாயாவாதி

சுத்தமாகிய பரப்பிரமம் மாயோபாதியினாலே வாதிக்கப்பட்டுச் சரீரத்தினுள்ளே சீவான்மாவாகநிற்குமென்றும், சீவான்மாவும் விவேக ஞானமடைந்து, மாயாவத்தை கடந்து, பரமான்வாவோடு கடாகாயமும மகாகாயமும் போல அபேதமாய் விடுமென்றுஞ் சொல்லபவன்

மாயாவி

மயன்மூத்த மகன். மண்டோதரிக்குந்து பிக்குந்தமையன். இவன், மாயாவி, வாலியாற் கொல்லப்பட்டவன்

மாயூரேசர்

திருமயிலாடுதுறையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

மாயைபுரி

மாயாநகர். கஜமுகாசுரன் ராஜதானி. இது ஜம்புத்தீவின் கண்ணது

மாராபிராமன்

புகழேந்திப்புலவர் காலத்திலே தொண்டைநாட்டுச் செஞ்சிநகரை யாண்ட சிற்றரசன். இவன் தமிழ்க்கலை வினோதனாய்ப் புலவர்களை அபிமானித்து வந்தவன்

மாரிசன்

தாடகிபுத்திரன். சுபாகுதமையன். மாயாவிநோதங்களில் வல்லவன். விசுவாமித்திரர் யாகஞ் செய்தபோது அதனை அழிக்கக்கருதி வந்த இம்மாரீசன் சுபாகு என்னுமிருவருள் சுபாகுவை இராமன் அக்கினி அஸ்திரத்தாற் கொன்று மாரீசனை வாயு அஸ்திரத்தாற் கொன்று மாரீசனை வாயு அஸ்திரத்தினாற் கடலிலே தள்ளிவிட்டான். அதன்பின்னர் இம்மாரீசன் சீதையை ராவணன் அபகரித்துச் சென்ற காலத்தில் மாயமானாகி ராமனை வஞ்சித்துக் காட்டுட் கொண்டுசெல்ல ராமன் அதனைமாயம் என்றுணர்ந்து அவனைப் பாணத்தாற் கொன்றான்

மாரீசம்

உபபுராணங்களுளொன்று

மார்க்கண்டேயனார்

மதுரைத்தலைச் சங்கப்புலவர்களுளொருவர். புறநானூற்றிலொரு செய்யுள் இவர் பாடியது. இவர் செய்த நூலை நச்சினார்க்கியர் தலையாய வோத்தென்று கூறுவர். இதனை அறுவகைப் பட்டபார்ப் பனப்பக்கமும் என்னுந் தொல்காப்பியச்சூத்திரவுரையினுட் காண்க

மார்க்கண்டேயன்

மிருகண்டன் புத்திரர். இவர் மகா இருஷி. இவர் தமது ஆயுளெல்லை பதினாறென்பதறிந்து தீர்க்காயுள் பெறக் கருதிச் சிவனைத் தினந்தோறுமிடைவிடாது பூசித்து அவரருளால் காலக்கடவுளது வன்மையை வென்றவர்

மார்க்கண்டேயபுராணம்

வியாசருடைய சீடராகிய சைமினிபகவான் முற்பிறப்பிலே பிராமணகுலத்தனவாயும், முற்பிறப்பி லெய்திய ஞானவிசிட்டத்தினாலே மிகுந்த சாமார்த்திய முடையனவாயும் உள்ள இரண்டு பக்ஷிகளை நோக்கி, விஷ்ணுமூர்த்தி மானுடசரீரம் எடுத்தமைக்குக் காரணம் யாது என்றும், தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் என்னும் பாண்டவர் ஐவர்க்கும் பொதுவாகத் திரௌபதியம்மையார் என்னுமொருவரே மனைவியாக எய்துதற்குக் காரணம் யாதுஎன்றும், பலராமர் மதுமயக்கத்தினாலே தாம் செய்து கொண்ட பிரமஹத்திபாவ நிவாரணத்தின் பொருட்டு இவர் பிராயச்சித்தஞ் செய்து கொள்ள வேண்டியது எற்றுக்கு என்றும், திரௌபதியாருடைய புதல்வர் ஐவருக்கும் காத்தற்றலைவராயிருந்த கிருஷ்ணார்ச்சுனரிருவருக்கும், அகாலமரணம் எய்துதற்குக் காரணம் யாது என்றும் வினாவிய நான்கு விசிஷ்டவினாக்களின் உத்தரவிவரணங்களை உணர்த்தும் புராணம். இது முப்பத்தீராயிரங் கிரந்தமுடையது. இது மார்க்கண்டேயப் புரோக்தமாதலின் இப்பெயர்த்தாயிற்று

மாறனார்

மதுரையாசிரியன் மாறனார் எனப்படுபவர் இவரே. இவர் இடைச்சங்கத்துப் புலவர்களுளொருவர்

மாறொக்கத்துநப்பசலையார்

கொற்கையைச் சூழ்ந்த நாட்டில் விளங்கிய இப்புலவர். காரி முதலியோரைப்பாடிப்பெரு நிதிபடைத்தவர், புறநா

மாற்றறிவரதேசரர்

திருப்பைஞ்ஞீலியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

மாலதி

காவிரிப்பூம் பட்டினத்துள்ளதோர் பார்ப்பனி

மாலி

சுகேசன் புத்திரன். இவ்விராக்ஷசன் தேவாசுரயுத்தத்தில் விஷ்ணுவினாற் கொல்லப்பட்டவன்

மாலினி

ஒருநதி. இது அயோத்திக் குவாயுதிக்கில் அபரதால பர்வதங்களிலிருந் துற்பத்தியாகிக் கோசல தேசத்திற் பிரவாகிப்பது

மாலியவந்தம்

கிஷ்கிந்தைக்குச் சமீபத்துள்ள ஒரு மலை. வாலிவதத்தின் பின்னர் ராம லக்ஷ்மணர் கார்காலங் கழித்தவிடம் இம்மலையே

மாலியவான், மாலியவந்தன்

சுகேசன் புத்திரன். முதன் முதல் இலங்காபுரியில் அரசு செய்தவன் இவனே. இவனை வென்று குபேரன் அரசனாயினான். அவனைவென்று ராவணன் இலங்கையைக் கைக்கொள்ள மாலியவான் அவனுக்கு மந்திரியாயினானன்

மால்வணங்குமீசர்

திருமாற்பேற்றிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

மாளவம்

முன்னர் உச்சியினிபுரமும் பின்னர்த் தாராபுரமும் ராஜதானியாகப் பெற்ற தேசம். இது விதர்ப்பத்துக்கு வடக்கிலுள்ளது. இது மாளுவமெனவும்படும்

மாளவி

மத்திரதேசாதிபனாகிய அசுவபதிபாரி. சாவித்திரி தாய்

மாளுவவேந்தர்

மாளுவதேசத்தரசர்

மாழலனார்

இவர் கடைச்சங்கப்புலவருள் ஒருவர். இவர் பேர் மூலமுணருமாமூலர் என்று ஆன்றோராற் புகழப்படுவர்

மாழையங்கண்ணி

திருவலிவலத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மாவசன்

அச்சோதை தந்தை

மாஹிஷ்மதி

நர்மதை தீரத்துள்ள நகரம்

மாஹேசுவரசூத்திரம்

சம்ஸ்கிருத வியாகரணத்துக்கு முதனூலாகச் சிவபிரான் தமது டமருகத்தினின்றுந் தோற்றுவித்த சப்தமூல சூத்திரங்கள். அவை, அ, இ, உண், உ, இருலுக், ந, ஏ, ஓங்,, ச, ஐ, ஒளச்,, ரு, ஹயவரட்,, சு, லண், ஏ, ஞ மஙநம் ஜ ப ஞ்,, கூ, கடதஷ், ய ஜபகடதஷ்,, கக, கபசடதசடதவ்,, கஉ, கபய், கந, சஷஸர், கச, ஹல்

மாஹேசுவரம்

உபபுராணங்களிலொன்று

மாஹேயர்

இப்பொழுது மூலபானாவென்று வழங்குந் தேசத்துப் பிராசீன வேளாளர்

மிசிரகேசி

வசுதேவன் தம்பியாகிய வற்சகன்பாரி

மிசிரன்

கல்வியாலுயர்ந்த பெரியோர்க்குரிய ஒருவரிசைப்பெயர். கிருஷ்ணமிசிரன். வராகமிசிரன் எனபன போலவரும்

மிசிரஸ்தானம்

துருக்கரால் மிசிறென்று வழங்கப்படுவதாகிய வொரு தேசம். தற்காலத்தில் ஐரோப்பியரால் ஈஜிப்ட் என வழங்கப்படுவது. யயாதியினால் தன்தேசத்தனின்றும் மோடப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இம்மிலேச்சதேசஞ் சென்று அத்தேசத்துக்கரசராகி அச்சனங்களைக் கலந்தமையால் மிசிரஸ்தான மென்படுவதாயிற்று. சர்வில்லியம் ஜோன்ஸ் என்னுமாங்கில பண்டிதரும் இக்கருத்தேபடத் தமது நூலொன்றிலெழுதினர், Reports of the R.A.Society

மிதிலன்

நிமிபுத்திரன். வசிட்டாச்சாபத்தால் நிமிதேசத்தை யிழந்துழல அவன் ராச்சியம் அரசின்றி யிருப்பக்கண்ட. மந்திரிகள் அவன் தேகத்தைக்கடைய அதினின்றும் ஒரு புத்திரனுற்பத்தியாயினான். அவன் பெயர் மிதிலன். கடைந்தெடுக்கப்பட்டவ னென்னபது பதப்பொருள். நிமியிறந்த பின்னர் அவன் தேகம் தைலத்தாற் பக்குவம் பண்ணி நெடுங்காலம் வைத்துக் காக்கப்பட்டமையால் அவனுக்குப் பின்னர்க் காலத்தில் விதேகனெனவும் மொரு பெயருண்டாயிற்று

மிதிலை

மிதிலனென்னுமரசன் நிருமித்த நகரம் ஆதலின் மிதிலையெனப் பெயர் பெற்றது. இது கண்டகிகௌசிகி நதிகளுக்கு நடுவேயுள்ளது. ஜனகனுக்கு ராஜதானி. பஞ்சகௌடதேசங்களுள் மொன்று

மித்திரசகன்

கல்மாஷபாதன் காண்க

மித்திரன்

அரிஷ்டன் தந்தை. நாலாம் ரேவதி நாயகன். சூரியனுக்கும் பெயர்

மித்திராயு

திவோதாசன் மகன்

மித்துகாவதி

மாளவதேசத்துள்ள ஒரு பட்டணம்

மின்னனையாளம்மை

திருப்பெருவேளூ ரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மின்னம்மை

திருப்பூவனத்திலே கோயில் கொண்டிருக்கும்ம தேவியார் பெயர்

மிருகண்டன்

பிருகுபுத்திரனாகிய தாதைக்கு ஆயதி என்பவள் பெற்ற புத்திரன். மார்க்கண்டேயன் தந்தை

மிருச்சகடி

இது சூத்திரகனாலே செய்யப்பட்ட ஒரு நாடகம். அது பத்துப்பாகமுடையது

மிருடன்

உருத்திரன். சுகத்தைக் கொடுப்பவனென்பது பதப்பொருள்

மிருதகன்

அக்குரூரன் தம்பியரு ளொருவன்

மிருதுபத்து

அக்குரூரன் தம்பியரு ளொருவன்

மிருத்தியு

கூற்றுவன். யமன்

மீனாக்ஷி

மதுரையிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மீனாக்ஷிசுந்தரம்பிள்ளை

இவரும் ஆறுமுகநாவலரும் ஒரே காலத்தவர்கள். இவர் மகாவித்துவான் என்னும் பட்டாபிதானம் பூண்டவர். இவர் பாடும் வன்னையிலே கம்பரிலுஞ் சிறந்தவரென்னலாந்தகுதி வாய்ந்தவர். இவர் பாடிய பாடல்களுக்குக் கணக்கில்லை. இவர் ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னும் நால்வகையும் பாடவல்லவர். இவர் நாகைக் காரோணபுராணம், மயூரபுரணம், குடந்தைப்புராணமுதலிய ஐம்பது நூல் பாடினார். இவர் திரிசிபுரத்திலே பிறந்து திருவாவடுதுறை மடாலயத்திலே கலைபயின்று அம்மடத்து ஆதீனவித்துவானாகி அநேக மாணாக்கரைச் சேர்த்துத் தமிழ்க்கலை பயிற்றி அவர் மூலமாகத் தென்னா டெங்கும் தமிழ்பயிர் வளர்த்தவர்

மீனாக்ஷிபீடம்

நவசத்தி பீடங்களுளொன்று

மீனாங்கன்

மன்மதன்

மீமாஞ்சகன்

வேதம் அநாதி யென்றும், ஈசனை வேண்டாது கன்மமே பலத்தைக் கொடுக்குமென்றுஞ் சொல்பவன்

மீமாஞ்சை

வேதார்த்த மிதுவென்று நிச்சயித்துக் கூறும் நியாய சாஸ்திரம். அது பெரும்பாலும் கிரியாகாண்டத்தையே யெடுத்து வியவகரிக்கும். இந்நூல் செய்தவர் ஜைமினி பகவான். இதனைப்பூர்வமீமாஞ்சை யென்று வழங்குவது முண்டு

முகூர்த்தை

தக்ஷப்பிரஜாபதியினது இரண்டாம் புத்திரி. தர்மன்பாரி. இவளிடத்தில் பிறந்தசந்ததி மௌகூர்த்தியரெனப்படுவர்

முகையலூர்ச்சிறுகருத்தும்பியார்

இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்

முக்காவல்லியம்மை

திருமண்ணிப்படிக்கரையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

முசுகுந்தன்

மாந்தாதாகனிஷ்ட புத்திரன். இவன் தேவர்களுக்கு யுத்தத்திற் சகாயஞ் செய்யப் போய் வெககாலம் நித்திரையின்றி அவர்கள் பொருட்டு யுத்தஞ் செய்தான். பின்னர்த்தேவர்கள் மகிழ்ந்து நீ நெடுங்காலத்துக்கு இடையூறின்றி நித்திரை செய்யக்கடவை. நித்திராகாலத்தேயுன்னை யெழுப்புவன் யாவனோ அவன் உயிர் துறக்க வென்று அநுக்கிரகித்தார்கள். கிருஷ்ணனது சூதினால் காலயவனன் முசுகுந்தன் நித்திரையை எழுப்பி உயிர்துறந்தான்

முஞ்சன்

போஜன் சிறிய தந்தை

முண்டகோபநிஷதம்

அஞ்ஞானமாகிய கணுவைச் சிதைக்கும் முண்டகம் போலுதலின் முண்டகோபநிஷதமென்னும் பெயர்த்தாயிற்று. முண்டகம் ~ மயிரெறிகருவி. இவ்வுபநிஷதம், அதர்வ வேதத்தைச் சார்ந்தது. இவ்வுபநிஷதத்திலே, இவ்வுபநிஷகங் கேட்டரிஷிகள் குருபரம்பரை, பிரமவித்தை, வேதவித்தை, அக்கினிகாரிய தத்துவம், கிரியாபலத்தினது நிலையின்மை, ரிஷியும் பிரமவித்தையும், உண்மையை நாடுவோன் குரு வைத்தேடுவன், எல்லாம் பிரமத்தின் பாலுதிக்கும், எல்லாம் பிரமமாம் பிரமமும் அதனையடையுமுபாயமும், பிரணவவில்லு, யோகம் என்பனவே கூறப்பட்டுள்ள விஷயங்களாம்

முதற்சங்கம்

இதன் வரலாற்றை மேல்வரும் ஆசிரியப்பாவானுணர்க. வேங்கடங்குமரி தீம்புனற் பௌவத், திந்நான்கெல்லையி னிருந்தமிழ் பயின்ற, செந்நாப்புலவர் செய்தியீண்டுரைப்பி, னாடகக்குடுமி மாடக்கூடலின், முன்னர்ச்சங்கக்கன்மாப்பலகையிற், றிரிபுரமெரித்தவிரி சடைக்கடவுண், மற்றன் மராத்தார்க்குன் றெறியிளஞ்சேய், திண்டிறற்புலமைக் குண்டிகைக்குறுமுனி, புவிபுகழ்மருதங் கவினியமுரிஞ்சிப், பதிமுடிநாகன் நிதியின் கிழவ, னினையர் நானூற்றுநாற்பத் தொன்பதின்ம, ரனையர் நானான் காயிரநூற்றொடு, நாற்பத்தொன்பதின்மர் பார்க்கிற் செந்தமிழோர், புரிந்தன செய்யுட் பெரும்பரிபாடலு, முதுமையடுத்த நாரையுங்குருகுங், கதியுறச்செய்த களரியாவிரையு, மாங்கவரிருந்தது மத்தொகையாகு, மீங்கிவர் தம்மை மிரீஇயபாண்டியர்கள், காய்சினவழுதி முதற்கடுங்கோனீறா, வேசிலாவகையெண்பத் தொன்பதின்மர் கவியரங்கேறினா ரெழுவராகு, மகத்துவமுடைய வகத்தமியமிலக்கணம் இச்சங்கமிருந்த தென்மதுரையும் அதனைச்சார்ந்த சிலநாடுகளும் கடல்கொண்டழிந்து போக அதற்குப்பின்வந்த பாண்டியர்கள் கபாடபுரத்தைத் தமக்கு ராஜதானியாக்கி இரண்டாஞ் சங்கத்தை அங்கே ஸ்தாபனஞ் செய்தார்கள். தமிழ் என்பதனுள் இதன்விரிவு காண்க

முதாவதி

சௌநந்தை. விடூரதன் மகள். இவள் தோளிடசளோடு நந்தனவனஞ் சென்றபோது குஜம்பன் என்னும் ராடிசனால் பாதலத்திற் கொண்டு போய் மறைக்கப்பட்டாள். வற்சந்திரன் அவ்விராக்ஷசனைக் கொன்று அவளை மீட்டுக் கொண்டு போய் மணம் புரிந்தான்

முதுநாரை

முதற் சங்கத்தார் செய்த இசைத்தமிழ்நூல்

முத்கலன், முற்கலன்

இவ்விருஷிமகா சீலங்களை யுடையவராய்த் துர்வாச இருஷிமுதலியோரைச் சிநேகித்துத் தேவலோகங்காறும் பிரசித்தி பெற்றவர், உ, அஜமீடன் இரண்டாம் புத்திரனாகிய நீலன் வமிசத்தவன். தந்தை அரியசுவன். திவோதாசன் இவன் மகன். புத்திரி அகலியை. இவள் கௌதமன் பாரி. இம்முத்கலன் டித்திரியனாகவும் தபசினால் பிராமணமாயினான். இவன் வமிசத்துப் பிராமணர் மௌத்கல்லிய கோத்திரத்தவர்களென்ற சொல்லப்படுவார்களாயின்றுமுளர்

முத்தாவதேசுரர்

திருத்துருத்தியிலெழுந்தருளியிருக்கும் சுவாமி பெயர்

முத்துக்கிருஷ்ணமுதலியார்

மணலிமுத்துக் கிருஷ்ணமுதலியார் எனப் படுபவரிவரே. இவர் இற்றைக்கு நூற்றிருபத்திரண்டு வருஷங்களுக்கு முன்னர்த்த தென்புலஞ் சேர்ந்த அருணாசல கவிராயர் பாடிய இராமாயண கீர்த்தனத்தைத் தமது சபையில் அரங்கேற்றுவித்து அவர்க்குக்கனகாபிஷேகம் பண்ணி, கனந்தந்தான் கனகாபிஷேகந்தந்தான் களங்கமிலாக்கருப்பொருளை யழைத்துத்தந்தான், மனந்தந்தான்முடிசூட்டு மாலைதந்தான் வாணிசிங்காசனத்திருத்தி வரிசைதந்தான், இனந்தந்தானி ராமகதை யெவர்க்குந்தந்தான் எனைராமாணக்கவிஞ னெனப்பெயர்தந்தான், அனந்தந்தான் மணலி முத்துக்கிருஷ்ணபூப னகந்தந்தானிருமையிலுஞ் சுகந்தந்தானே என்னுங் கவிகொண்டமாந்தர் பெருந்தகை

முத்துத்தாண்டவர்

இவர் சங்கீதவித்துவான். இவர்பாடிய பதங்கள் அத்தியற்புதரசமுடையன. இவர்சீகாழியிலே பிறந்து சிதம்பரத்திற் சிவதொண்டு பூண்டிருந்தவர். இவர் இற்றைக்க இருநூற்றறுபது வருஷத்துக்கு முன்னுள்ளவர்

முத்தொள்ளாயிரம்

கடைச்சங்கப்புலவர் சேரசோழபாண்டியர்கள் மீது பாடிய ஒருநூல்

முனி

தக்ஷப்பிரஜாபதி புத்திரிகளொருத்தி

முனையடுவார்நாயனார்

சோழநாட்டிலே திருநீடூரிலே வேளாளர் குலத்திலவதரித்துக் கூலிப்படையாளாகப் போர்முனையிற் சென்று பொருது பொருள் சம்பாதித்து அப்பொருளைக் கொண்டு சிவனடியார்களைத் திருவமுது செய்வித்தலை விரதமாகக் கொண்ட ஒரு சிவபக்தர்

முயற்சிநாயகர்

திருமீயச்சூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

முரசை

குபேரன் மனைவி

முரலை

கேரளநாட்டகத்தொருநதி

முராசுரன்

தனுஜன். நரகாசுரன் தமையன். இவனைக் கிருஷ்ணன் கொன்று முராரியென்னும் பெயர் பெற்றான்

முராரி

இவன் அனர்க்கராகவீயமென்னும் நாடகஞ் செய்த சம்ஸ்கிருதகவி, உ, கிருஷ்ணன்

முருகநாயனார்

திருப்புகலூரிலே பிராமணகுலத்தில் விளங்கிய ஒரு சிவபக்தர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குச் சிநேகராக விருந்தவர்

முருகன்

பாலசுப்பிரமணியக்கடவுள்

முருகுவளர்கோதை

திருக்கண்ணார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் தேவியார் பெயர்

முரை

ஒன்பதாம் நந்தன் பாரி. இவள் சந்திரகுப்தன்தாய். இவள் சூத்திரவர்ணத்தவள்

முறுவல்

இஃது இறந்நாடகத்தமிழ் நூல்களுளொன்று. பழைய காப்பியம் ஐந்தனுள் ஒன்று

முல்லைநகைவடிவாள்

திருமயேந்திரப்பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

முல்லைவனநாதர்

திருமுல்லை வாயிலிற் கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

முல்லைவனேசர்

திருக்கருவூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

முஷ்டிகன்

கஞ்சன் தூதன். பலராமன்என்னும் மல்லயுத்த வீரனாற் கொல்லப்பட்டவன்

மூகன்

அருச்சுணன் தவஞ் செய்த போது அவன் தவத்தைப் பரீக்ஷிக்குமாறு கிராதவேடங் கொண்டு சென்ற சிவபிரானாற் கொல்லப்பட்ட பன்றிரூபங் கொண்டதானவன்

மூகாம்பை

சையபர்வதசமீபத்தில் எழுந்தருளியிருக்கும் தேவி பெயர்

மூதுகுருகு

முதற் சங்கத்தார் செய்த இசைத் தமிழ்நூல். இது பெருங்குருகெனவும் படும்

மூர்க்கநாயனார்

தொண்டை நாட்டிலே வேளாளர் குலத்திலே தலைமை பெற்று விளங்கிய ஒரு சிவபக்தர். இவர் தம்மிடத்துள்ள திரவியங்களையும் அடிமை நிலம் முதலியவற்றையும் மகேசுர பூசையின் பொருட்டுச் செலவு செய்துவிட்டு வேறுவழியின்றித் தாம் முன்பயின்ற சூதினாலே பொருள் சம்பாதித்துத் தாம் கொண்ட மகேசுர பூசைத்தொண்டை வழுவாது செய்துவந்தவர்

மூர்த்திகள்

அஷ்டமூர்த்திகள் காண்க

மூர்த்திநாயனார்

பாண்டிநாட்டிலே மதுராபுரியிலே வைசியர் குலத்திலே விளங்கிய ஒரு சிவபக்தர். தாஞ்செய்து வந்த சந்தனத் திருத்தொண்டுக்குச் சந்தனக்கட்டை அகப்படாமலிடையூறுவரத் தமது முழங்கையைச் சந்தனக்கட்டை போலக்கல்லிலே எலும்பு தேயும்படி தேய்த்த வுறுதிப்பாடுடையவரும், மதுரைநகருக்கு அரசனாகும்படி சிவாஞ்ஞை உண்டாயபொழுது சடாமுடியே கரீடமும் ருத்திராடிமே ஆபரணமுமாகக் கொண்டு அரசியற்றியவரும் இவரே

மூலகன்

நாரீகவன். இவன் அசுமகன் புத்திரன். பரசுராமன் டித்திரியநாகஞ் செய்து வரும் போது இவன் தன் மனைவியை வைத்து விட்டிறந்தான். அவள் மூலமாக மீளவும் க்ஷத்திரியவமிசம் தழைத்தமையால் இவன் மூலகன் என்னும் பெயர் பெற்றான்

மூவன்

பெருந்தலைச் சாத்தனாராலிகழ்ந்து பாடப்பட்ட சிற்றரசன். அப்புலவர் பாடிய பொய்கைநாரை என்னுஞ் செய்யுளிலே, பழனுடைப் பெருமரந் தீர்ந்தெனக்கையற்றுப் ~ பெறாது பெயரும் புள்ளினம்போலநின் ~ னசைதரவந்து நின் னிசைநுவல் பரிசிலேன் ~ வறுவியேன் பெயர்கோ எனப்பாடி நொந்து சென்றனர்

மூஷிகம்

ஒருதேசம். அது தற்காலம் கொச்சியெனப்படும், உ, விநாயகர் வாகனம், உ, சௌபரி முனி பாரியாகிய மனோமனய என்பவளைக் கிரவுஞ்சன் என்னுங் கந்தருவவேந்தன் கண்டு மோகித்து அவள் கரத்தைப்பற்றினன். அதுகண்ட முனிவர் வெகுண்டு கிரவுஞ்சனை மூஷிக மாகுக வென்று சபித்தார். அவன் மூஷிகமாகிப் பலிபீடமுள்ள விடங்களை யெல்லா மகழ்ந்து திரிகையில் விநாயகக்கடவுள் அம்மூஷிகத்தைத் தமக்கு வாகனமாக்கிக் கொண்டனர். மூஷிகம் ~ பெருச்சாளி

மெய்கண்டதேவர்

திருவெண்ணை நல்லூரிலிருந்த வேளாளராகிய சுவேதவனப்பெருமாள். இவர் பரஞ்சோதி முனிவரது மாணாக்கர். சித்தாந்த சாஸ்திரத்து மெய்ப்பொருளுணர்ந்த சாஸ்திரத்து மெய்ப்பொருளுணர்ந் துலகுய்யவெளிப்பட்டருளிய குருபீட மாதலின் மெய்கண்டதேவரென்னுங் காரணப் பெயர் கொண்டார். வடமொழிச்சிவஞான போதத்தைத் தமிழிலே மொழிபெயர்த்து அப்பெயரினாலே தானே வெளியிட்டவர் இவரே. இவர்க்கு மாணாக்கர் அருணந்தி சிவாசாரியார். அருணந்திசிவாசாரியர் தாம் மெய்கண்டதேவருக்கு வயசாலும் கல்வியறிவாலும் மிக்கவரென நினைந்து தம்மாணாக்கரோடு அவர்பாற் சென்று இறுமாப்போடு உலாவிநின்றனர். அப்பொழுது அருணந்தி சிவாசாரியர் ஏவலால் அவர் மாணாக்கருளொருவர், மெய்கண்டதேவரைவணங்கி, அகங்காரமாவது யாதென்று வினாவ, மெய்கண்ட தேவர் நுங்குருமூர்த்தி நிற்கு நிலையே அதுவாம் என்றருளிச்செய்ய, அருணந்திசிவாசாரியர் மெய்கண்டான் றிருவடியிலே வீழ்ந்து திருவடிகளிரண் டையும் பற்றிக்கொண்டு தமக்குஞானோபதேசஞ் செய்தருளுமாறு வேண்டிச் சிவஞானபோதநூலைக் கேட்டறிந்தா ரென்பது கர்ணபரம்பரை, இவர்கள் காலம் அறுநூற்றைம்பதுக்கு முன்னுள்ளது. இம்மெய்கண்டதேவர் அவதாரஞ் செய்திலராயின, தமிழ் நாட்டில் இரவுரவாகமத்துட் கூறுப்பட்ட சிவஞானபோத படலமாகிய சகலாகம நவநீதம் எளிதிலே வெளிப்படுதலும், சைவம் ஏனையசமயப் பெரும்படைகளையெதிர்த்துப் பொருது வெற்றித்தம்பம் நாட்டுவதுமில்லையாம் கலியின் கொடுமைக்கஞ்சிச்சமயாசாரிய ரெல்லாம் மறைந்த இக்காலத்தே, நாற்றிசையினும் ரணபோமுழக்கி வளைந்திருக்கும் புறச்சமயவாதிகள் படைத்திரள், இச்சிவஞான போதமென்னும் பேரகழிக்கும் சிவஞான சித்தியென்னும் வாணாஸ்திரத்துக்குமே அஞ்சி நிலைதளர்கின்றது. அப்பேரகழியும் அவ்வஸ்திரமுமில்லையாயின் சைவம் நெடுங்காலத்திற்கு முன்னே அரசிழந்து விடும். அவ்வகழியைக் கடக்குமாற்றலும், அவ்வஸ்திரத்திரத்திற்கு மேற்பட்ட அஸ்திரமும், உலகத்தில் மற்றெச்சமயமும் எக்காலத்திலும் பெறாதென்பது நன்கு துணிந்வுண்மையாம்

மெய்ஞ்ஞானநீலகண்டேசுவரர்

திருப்பைஞ்ஞீவியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

மெய்ப்பபொருணாயனார்

தம் அரண்மனையினுள்ளே புகுந்து சைவாகமோபதேசஞ் செய்ய வந்தேன் என்று கூறி அங்கோரிடத்திற் றனிமையிற் கொண்டு சென்றிருந்து உபதேசஞ் செய்வான் போல, மறைத்து வைத்திருந்த உடைவாளாலே தம்கைக்குத்தி வீழ்த்திய முத்திநாதனென்னும் பகையரசனுக்கு அவ்வுயிர் போஞ் சமயத்தினும் ஒருவரும் இடையூறு செய்யாதபடி பக்கத்திலே நின்றவர்களைத் தடுத்து உயிர்விட்ட பக்த சிரோமணியாகிய இவர், சேதிநாட்டிலே திருக்கோவலூரிலே மலையமாநாட்டாருக்கு அரசராக விருந்தவர்

மேகநாதன்

ராவணனுக்கு மந்தோரியிடத்துப் பிறந்த புத்திரன். இந்திரனோடு பொருது இவனைவென்றமையால் இந்திரஜித்து என்னும் பெயர் பெற்றவன். லக்ஷூமணணாற் கொல்லப்பட்டவன். இருவர்க்குமிடையே நடந்தயுத்தம்மிகக் கடியதும் கொடியதுமே. இவனைக் கம்பர் தாம் பாடிய ராமாயணத்திலே வில்லாளரானார்க் கெல்லாமேலவன் என்று புகழ்வர்

மேகலகன்னிகை

நர்மதை. மேகலபர்வதத்திலுற்பத்தியாகும் நதியாதலின் இப்பெயர் பெற்றது

மேகலன்

விந்தியாபர்வதச் சாரலில் வசிக்கும் ஒரிருஷி

மேகலம்

நர்மதை யாற்றை யுடைய தேசம், உ, மேகலமலை

மேதாதிதி

பிரியவிரதன் புத்திரருள் ஒருவன். இவன் பங்குக்கு வந்த தீவுபிலடித்துவீபம். இவன் புத்திரரெழுவர், உ, கண்ணுவர் புத்திரன். இவன் வமிசத்துப் பிராமணர்காண்வாயா ரெனப்படுவர்

மேதாநிதி

சிரகாரி

மேனகை

ஒரப்சரஸ்திரி. விசுவாமித்திரன் தவத்தை அழிக்குமாறு இந்திரன் விடுக்க, அவள் சென்று அவரைக்கூட்டிச் சகுந்தலையைப் பெற்றாள், உ, மேருபுத்திரி. இமவான் பாரி. இவளுக்கு மனோரமை யென்றும் பெயர். இவள்புத்திரிகள் கங்கையும் பார்வதியும்

மேனை

பிதிர்தேவதைக்குச் சுவத்தையிடத்துப் பிறந்த புத்திரி. இவள் புத்திரி வைதரணி, உ, மலையரசன் மனைவியாகிய மேனகை

மேரு

பூமிக்கு நாராசம் போலத்தென் துருவம் முதல் வட துருவம் வரையும் உள்ளே வளர்ந்து வடதுருவத்தில் முனைத்திருக்கும் பொன்மயமாகிய மலை. வடதுருவம் சுமேருவென்றும், தென் துருவம் குமேருவென்றும் வடவா முகம் என்றும் சொல்லப்படும். சுமேருவே சாதாரணமாக மேருவென்றும வழங்கப்படும். இச்சுமேருப் பிரதேசத்திலிருப்பவர்களுக்கு உத்தராயண காலமாகிய ஆறுமாசமும் பகலும் தக்ஷிணாயனகாலமாகிய ஆறுமாசமும் இரவுமாகவிருக்கும். இம் மேருவினது புத்திரி மேனகை

மேருதேவி

நாபிபாரி. இருஷபன் தாய்

மேலைத்திருக்காட்டுப்பள்ளி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

மைத்திரேயன்

குசீலவன் புத்திரன். பராசரன்சீஷன். இவன் துரியோதனனைக் காமியவனத்திற்கண்டு அவனுக்கு ஞானோபதேசஞ் செய்ய எத்தனித்த போது அதனைச்சிரவணஞ் செய்யாது பரிகசித்தமையினால் துரியோதனனை வீமன்கதாயதத்தால் இறக்க வென்று சபித்துச் சென்றவன்

மைநாகன்

இமவான் மேனகையிடத்துப் பெற்ற புத்திரன். கிருதயுகத்தில் மலைகளெல்லாம் சிறகுகளையுடையனவாய்ப் பூவுலகில் எங்கும் பறந்து பட்டணங்கள் மீது சென்று படிந்து அப்பட்டணங்களையும் ஜனங்களையும் நாசஞ் செய்து வந்தன. அதுகண்ட இந்திரன் அம்மலைகளைச் சிறகரிந்து பறவாவண்ணந் தடுத்தான். அப்போது மைநாகன் வாயுசகாயத்தால் தப்பியோடிச்சமுத்திரத்திலொளித்தான்

மைந்தன்

ஒருவாநரன். இவனுக்குச் சகோதரரிருவர். இவன் அசுவினி தேவர்கள் புத்திரன். இவன் சுக்கிரீவன் சேனாபதிகளுளொருவனாயினான்

மையார்தடங்கணாயகி

திருக்கோடிக்குழகரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மைவார்குழலியம்மை

திருவிற்குடி வீரட்டத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மோகவதி

மோகவந்தன் புத்திரி. சுதர்சனன் பாரி. இவளே நிருகன் வமிசத்துக் கடைத்தோன்றல், உ, பாரதயுத்த காலத்திலே குருக்ஷேத்திர சமீபத்திலிருந்த வொருநதி. பாண்டவர் பாரதயுத்தம் முடிந்த பதினெட்டா நாளிரவு இந்நதிக் கரையில் நித்திரை செய்தார்கள்

மோகாம்பிகை

திருப்பாற் றுறையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

மோகினி

விஷ்ணு வடிவங் கொண்ட காலத்தில் வகித்த பெயர். அமிர்த மதனகாலத்தில் தேவர்களோடு அசுரர் மாறுகொண்டு நிற்க அவ்வசுரரை அமிர்தத்திலே பங்கு பெறாமற்றடுக்கு முபாயமாக இம்மோகினிரூபத்தை விஷ்ணு வெடுத்து அவர்களை நோக்கி, இவ்வமிர்தம் வேண்டுமோ, என்போகம் வேண்டுமோ வென்று கேட்க, அவர்கள் அம்மோகினிமேற் காதலித்துப் புறஞ் சென்றார்கள். அவ்வேளையில் தேவர்கள் எல்லோருங் கூடி அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொள்வாராயினர். அப்போது ராகுவும் கேதுவும் தேவவுருக்கொண்டு தேவர்களுட்கலந்து நின்று அமிர்தம் பருக எத்தனித்தார்கள். அதனைச் சூரியசந்திரர் குறிப்பாலுணர்த்த வுணர்ந்த விஷ்ணு தமது சக்கரத்தால் ராகு கேதுக்களது சிர சரீரங்களை யூறு செய்தா ரென்பது புராணசாரம், உ, தாருவனத்துக்கண் சிவன் சுந்தரவடிவங் கொள்ள விஷ்ணு கொண்ட மோகினி வடிவு, ந, ஓரப்சரப் பெண். இவன்பூஞ்சோலை முதலிய விடங்களிலும், காமுகர்கனவிலுந் தோன்றி அவர்களை யுருக்குலைக்குந் தொழிலினை யுடையவன்

மோசிகீரனார்

இவர் கடைச்சங்கப்புலவர்களு ளொருவர். சேரமான் தகடூரெறிந்த பெருஞ் சேரலிரும் பொறையுங் கொண்கானங்கிழானும் இவராற் பாடப்பட்டோர். இவர் திருவள்ளுவருக்குஞ் சிறப்புக்கவி யொன்று கூறினர்

மோசிசாத்தனார்

புறநானூறு பாடினோரு ளொருவர்

மோடி

வனத்திலுறையுங்காளி

மௌகூர்த்திகர்

தர்மன் முகூர்த்தையிடத்துப் பெற்ற தேவகணம். முகூர்த்தகாலங்களுக் கதிதேவதைகளாகிய இவர்கள் அவ்வம் முகூர்த்தங்கள் தோறும் உலகத்திலே செய்யப்படும் கருமங்களை யேற்றுவைத்திருந்து அந்தக்கிரமமாகப் பலன்களையூட்டுவோர்

மௌத்தகல்லியன்

சாகல்லியன் சீஷன்

மௌத்தகல்லியர்

முத்கலன் கோத்திரத்துப் பிராமணர்

மௌநேயர்

கசியபன் முனியென்பவள் வயிற்றிற் பெற்ற கந்தருவர்

மௌர்வியர்

சந்திரகுப்தவமிசத்தரசர். இவர்கள் பதின்மர். நூற்று முப்பத்தேழு வருஷம் ராச்சியம் பண்ணினர்