ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
மூகன் | அருச்சுணன் தவஞ் செய்த போது அவன் தவத்தைப் பரீக்ஷிக்குமாறு கிராதவேடங் கொண்டு சென்ற சிவபிரானாற் கொல்லப்பட்ட பன்றிரூபங் கொண்டதானவன் |
மூகாம்பை | சையபர்வதசமீபத்தில் எழுந்தருளியிருக்கும் தேவி பெயர் |
மூதுகுருகு | முதற் சங்கத்தார் செய்த இசைத் தமிழ்நூல். இது பெருங்குருகெனவும் படும் |
மூர்க்கநாயனார் | தொண்டை நாட்டிலே வேளாளர் குலத்திலே தலைமை பெற்று விளங்கிய ஒரு சிவபக்தர். இவர் தம்மிடத்துள்ள திரவியங்களையும் அடிமை நிலம் முதலியவற்றையும் மகேசுர பூசையின் பொருட்டுச் செலவு செய்துவிட்டு வேறுவழியின்றித் தாம் முன்பயின்ற சூதினாலே பொருள் சம்பாதித்துத் தாம் கொண்ட மகேசுர பூசைத்தொண்டை வழுவாது செய்துவந்தவர் |
மூர்த்திகள் | அஷ்டமூர்த்திகள் காண்க |
மூர்த்திநாயனார் | பாண்டிநாட்டிலே மதுராபுரியிலே வைசியர் குலத்திலே விளங்கிய ஒரு சிவபக்தர். தாஞ்செய்து வந்த சந்தனத் திருத்தொண்டுக்குச் சந்தனக்கட்டை அகப்படாமலிடையூறுவரத் தமது முழங்கையைச் சந்தனக்கட்டை போலக்கல்லிலே எலும்பு தேயும்படி தேய்த்த வுறுதிப்பாடுடையவரும், மதுரைநகருக்கு அரசனாகும்படி சிவாஞ்ஞை உண்டாயபொழுது சடாமுடியே கரீடமும் ருத்திராடிமே ஆபரணமுமாகக் கொண்டு அரசியற்றியவரும் இவரே |
மூலகன் | நாரீகவன். இவன் அசுமகன் புத்திரன். பரசுராமன் டித்திரியநாகஞ் செய்து வரும் போது இவன் தன் மனைவியை வைத்து விட்டிறந்தான். அவள் மூலமாக மீளவும் க்ஷத்திரியவமிசம் தழைத்தமையால் இவன் மூலகன் என்னும் பெயர் பெற்றான் |
மூவன் | பெருந்தலைச் சாத்தனாராலிகழ்ந்து பாடப்பட்ட சிற்றரசன். அப்புலவர் பாடிய பொய்கைநாரை என்னுஞ் செய்யுளிலே, பழனுடைப் பெருமரந் தீர்ந்தெனக்கையற்றுப் ~ பெறாது பெயரும் புள்ளினம்போலநின் ~ னசைதரவந்து நின் னிசைநுவல் பரிசிலேன் ~ வறுவியேன் பெயர்கோ எனப்பாடி நொந்து சென்றனர் |
மூஷிகம் | ஒருதேசம். அது தற்காலம் கொச்சியெனப்படும், உ, விநாயகர் வாகனம், உ, சௌபரி முனி பாரியாகிய மனோமனய என்பவளைக் கிரவுஞ்சன் என்னுங் கந்தருவவேந்தன் கண்டு மோகித்து அவள் கரத்தைப்பற்றினன். அதுகண்ட முனிவர் வெகுண்டு கிரவுஞ்சனை மூஷிக மாகுக வென்று சபித்தார். அவன் மூஷிகமாகிப் பலிபீடமுள்ள விடங்களை யெல்லா மகழ்ந்து திரிகையில் விநாயகக்கடவுள் அம்மூஷிகத்தைத் தமக்கு வாகனமாக்கிக் கொண்டனர். மூஷிகம் ~ பெருச்சாளி |