அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
பஃறுளி

குமரியாற்றிற்குத் தெற்கேயுள்ளதோராறு. இஃது ஆதிகாலத்தே கடல்கொள்ளப்பட்டது. இதனையுள்ளிட்ட நாற்பத்தொன்பது நாடுகள் கடல் கொண்டழிந்தகாலத்தே தலைச்சங்கமிருந்த தென்மதுரையு மவற்றோடழிந்த தென்பது சிலப்பதிகாரவுரையாற் பெறப்படும். அதுவருமாறு: முதலூழியிலு திக்கண் தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து சயமாகீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்தரீ இயினான். அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னுமாற்றிற்கும் குமரியென்னுமாற்றிற்குமிடையே யெழுநூற்றுக்காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும் ஏழ் மதுரைநாடும், ஏழ் முன்பாலைநாடும், ஏழ் பின்பாலைநாடும், ஏழ் குன்றநாடும், ஏழ் குணகாரைநாடும், ஏழ் குறும்பனைநாடும், என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்ல முதலிய பன்மலை நாடும், காடும் நதியும், பதியும், தடநீர்க்கமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்ழிதலால். என்பது வடிவேலெறிந்த வான்பகை பொறாது, பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடுகொடுங்கடல் கொள் என்பதனாலும் அது வலியுறுத்தப்படும்

பகன்

ஏகசக்கரபுரத்துப் பிராமணருக்குத் துன்பஞ் செய்து கொண்டிருந்த ராக்ஷசன். அப்பிராமணர் தத்தம் முறைப்படி தினந்தோறும் ஒருவண்டி சாதமும், இரண்டு எருமைக்கடாவும், ஒரு பிராமணப்பிள்ளையும் உணவாகக் கொடுக்க வுடன்பாடுபண்ணிக் கொண்டு கொடுத்துவருநாளில், அக்கிரகாரத்தில் வீமன் தங்கியிருந்தவீட்டுக்காரன் முறை வந்தது. சாதத்தை மாத்திரம் வண்டியிலேற்றிக் கொண்டு வீமன்றானே சென்று பகனைக்கண்டு சாதம் வந்தது ஒப்புக்கொள்ளுகவென்றான். சாதத்தோடு எருமைக்கடா முதலியன வராதது கண்டு அவன் சினந்து வீமனைச்சாட, வீமன் அவனைக் கொன்றொழித்து மீண்டான். பிருந்தாவனத்தில் கஞ்சன் ஏவலினால் கிருஷ்ணனைக் கொல்ல எத்தனித்துக் கிருஷ்ணனாற் கொலையுண்ட ராக்ஷசன். கங்கன் மூத்தமகன். துவாதசாதித்தியருளொருவன். தக்ஷன் யாகத்திலே வீரபத்திரராலொறுக்கப்பட்ட சூரியன்

பகவற்கீதை

கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குபதேசித்த யோகநூல். இது பாரதத்தின் ஒரு கூறாகுமாயினும் தனி நூலாகவே வழங்கப்பட்டு வருகின்றது. இதிலே பேரின் பத்துக்குச் சாதனமாகிய நிஷ்காமகன்மமும் ஞானசாதனமாகிய யோகமுமே கூறப்பட்டுள்ளன. வேதாந்தமாகிய உபநிஷதங்களினது உண்மைப்பொருளை யுணரும்பக்குவம் இக்கலியுகத்து மாநதர்க்குக் கைகூடாதென்பது கருதியே, கலியுகாரம்பத்திற்குச் சிறிது காலத்துக்கு முன்னரே லோகரக்ஷையின் பொருட்டுத் திருவவதாரஞ் செய்தருளிய கிருஷ்ணபகவான் அவ்வுபநிஷதங்களின் சாரமாகிய இந்நூலை அர்ச்சுனனை வாயிலாகக் கொண்டு சர்வான்ம வீடேற்றத்திற் குபகாரமாகவுபதேசித் தருளினார். பலாபேக்ஷையின்றிக் கன்மங்களைச் செய்து கொண்டும் ஒருவன் ஞானியாகவிருக்கலாமென்பதே இந்நூற் சித்தாந்தம். இவ்வுபசே நூலைக்கேட்டிருந்து வெளியிட்டவர் சஞ்சயனார். இந்நூலுக்குச் சங்கராசாரியர் அத்துவைதபடிமாகவும், பாஷியங்கள் செய்திருக்கின்றனர். இந்நூல் பாரதத்தினுள்ளே கூறப்பட்ட நூலின்றென்றும். அதுபின்னர்க் காலத்திலெ யாரோ ஒருவராற் செய்து பாரதத்திலே யொட்டப்பட்ட தென்றும் பழிநாணாதுகூறும் அந்நியசமயிகளுஞ் சிலருளர். அவர் கூற்று ஆதாரமின்றி அழுக்காறு காரணமாக எழுந்ததென்று தள்ளப்படும். இந்நூலை ஐரோப்பியபண்டிதர்களும் பலர் புகழ்ந்து கொண்டாடி உச்சிமேற் கொள்வரென்றால் மற்றதன் பெருமை கூறவேண்டா

பகீரதன்

திலீபன் புத்திரன். இவன் சகரன் புத்திரரும் தனது பாட்டன்மாருமாகிய சகரரைக் கபிலர் சாபத்தினின்று நீக்கி ரக்ஷிக்குமாறு கங்கையைக் கொண்டு வந்துலகில் விடுத்தவன், கங்கைகாண்க

பகுகந்தன், பகுகவன்

சுத்தியுவன் புத்திரன்

பகுரதன், வெகுரதன்

புரஞ்சயன் புத்திரன்

பகுளாசுவன்

இவன் கிருஷ்ணனால் மோடிம்புகுந்தவன்

பகுளை

உத்தானபாதன் புத்திரனாகிய உத்தமன்பாரி

பங்காசுவன்

இவன் நூறு புத்திரரையும் நூறு புத்திரிகளையும் பெற்றபின் இந்திரன் வரத்தாற் பெண்ரூபங்கொண்ட ஓரரசன்

பசுபதி

சிவன். அஷ்டமூர்த்திகளுளொருவன்

பசுபதிநாயகி

திருப்பாசூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பசுபதிநாயகேசுவரர்

திருச் சக்கரப்பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பசுபதீசா

திருப்பந்தண நல்லூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பசுபதீசுரர்

திருஆவூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பசுபதீசுவரர்

திருக் கருவூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பஜமானன்

சாத்துவதன் புத்திரன். அந்தகன் சேஷ்டபுத்திரன்

பஜி

சாத்துவதன் புத்திரன்

பஞ்சகௌடர்

சாரஸ்வதம், கன்னியாகுப்சம். மிதிலம். கௌடம், உதகலம் என்னும் இவ்வைந்து தேசத்துப் பிராமணரும் பஞ்சகௌட ரெனப்படுவர்

பஞ்சசாயகன்

மன்மதன். பஞ்சபாணன் என்பது பொருள்

பஞ்சசிகன்

மிதிலாபுரி ராஜாவாகிய ஜனகனுக்கு உபதேசஞ் செய்த மகாத்தமா

பஞ்சசூடை

ஓரப்சரசை. நாரதருக்குப் பெண்கள் சுபாவம் இதுவென்று எடுத்தோதினவன்

பஞ்சஜனன்

சம்ஹலாதன் புத்திரன். நாந்தீபன் புத்திரனைப் பிரபாச தீர்த்தத்துக்குள்ளே கொண்டு போன ராக்ஷசன். கிருஷ்ணன் தன் குருபுத்திரனை அவன் மோசஞ் செய்தானென்றுணர்ந்து அவனைக் கொன்று அவன் கழுத்தெலும்பை எடுத்துப் பாஞ்சசன்னிய மென்னுஞ் சங்காக்கினார்

பஞ்சதிராவிடர்

தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர் கூர்ச்சரர் என்னும் இவ்வைந்து பாஷையாளரும் பஞ்சதிராவிடர் எனப்படுவர்

பஞ்சபாரதீயம்

நாரதன் செய்த இசைத்தமிழ்நூல்

பஞ்சமரபு

அறிவனார் செய்த இசைத்தமிழ்

பஞ்சலிங்கம்

பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயமென்னும் ஐந்து பூதங்களினாலும் தனித்தனியுண்டாய லிங்கங்கள். பிருதிவிலிங்கம் காஞ்சியிலும் அப்புலிங்கம் ஜம்புகேசுவரத்திலும் தேஜோலிங்கம் அருணாசலத்திலும், வாயுலிங்கம் காளத்தியிலும். ஆகாயலிங்கம் சிதம்பரத்திலுமுள்ளன

பஞ்சவடி

ராமன் வனவாசத்துக்கண் ஆச்சிரமம் அமைத்துக் கொண்டவிடம். அது கோதாவிரிதீரத்துள்ளது. ஐந்து ஆலமரங்கள் கூடி நிற்றலின் அது பஞ்சவடி எனப்பட்டது, வடம் ~ ஆல்

பஞ்சவனநாதர்

திருமுக்கீச்சரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பஞ்சாப்சரசம்

மந்தகர்ணன் தண்டகாரணியத்தி லுண்டாக்கிய குளம்

பஞ்சினுமெல்லடியம்மை

திருவாரூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பட்டி

சந்திரசர்மன் புத்திரன் விக்கிரமார்க்கன் தம்பி

பட்டினத்தடிகள், பட்டணத்துப்பிள்ளையார்

சோழநாட்டிலே காவிரிப்பூம் பட்டினத்திலே வைசியர்குலத்திலே ஆயிரத் திருநூறு வருஷங்களுக்கு முன்னே அவதாரஞ் செய்து திருவெண்காட்டீசனாரிடத்திற் பேரன்புடையராகி யொழுகிய காரணத்தால் திருவெண்காடரெனக் காரணப்பெயர் பெற்ற ஒரு புருஷரத்தினம். இவர் மரக்கலவாணிகத்தாற் பெரும்பொருள் படைத்து குபேரனெனவும் சிவனடியாரைச் சிவனெனக்கொண்டு பசரகக்கும் பத்தியிற்சிறுத்தொண்டரனவும் வாழ்ந் தில்லறநாடாத்தி வருநாளிலே விவாகஞ் செய்து கொள்ளற்குப் பொருளின்றி வருந்தியிருந்த ஒராதிசைவரிடம் சிவபிரான் ஒரு மானிடவுருக்கொண்டு சென்று உமதடிமையாகப்பாவித்த என்னைக்கொண்டு சென்று விற்றுக்கலி தீர்த்துக்கொள்ளுவீராக வென்றுகூற ஆதசைவரவ்வாறே அவரைக் கொண்டு சென்று பட்டணத்தடிகளிடம் விற்றுப்பொருள் பெற்றுப் போயினார். பட்டணத்தடிகள் அவ்வடிமையை அடிமையாக நினையாது புத்திரனைப் போல வைத்து வணிகமுறை பயிற்றி மரக்கலத்தில் ஊர்தோறுமனுப்பிப் பொருளீட்டு வித்துமகிழ்ந்து வருநாளில், அவ்வடிமையானார் ஒருமுறை தாம் மரக்கலத்திற் கொண்டு போன பண்டங்களையெல்லாம் விற்றுப் பெற்ற பெருநிதியை ஒருதீவிலே ஆலயத்திருப்பணிக்கும் தருமத்துக்கும் செலவுசெய்து விட்டு மீளும்போது மரக்கலநிரப்ப எருமுட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்து பண்டாரத்திற் சேர்த்துப்பொன்மணலையெரு முட்டைகளிற் செறித்து வந்தேனெனக் கூறி, ஒன்றைப் பிட்டுக் கரைத்துக் காட்டினர். பின்னர் அவரோடு சென்ற சிலர் பட்டணத்தடிகளிடம் போய் இவர் உம்மை வஞ்சித்தாரென்று கூற அவர் அவ்வடிமையைச் சிறையிலிட்டு வைத்தார். அங்கே அவரிடத்தில் விளங்கிய அற்புதங்களை அறிந்த பிள்ளையார் அவரைச் சிறைநீக்கிவிட, அவர் பிள்ளையாருக்கு ஞானோபதேசஞ் செய்தருளினர். அவ்வளவிற் பிள்ளையார் துறவாமைகண்ட பரமசிவன், ஒரு காதற்றவூசியால் அவருக்கு ஞானமுதிக்கச் செய்து மறைந்தருளினார். பிள்ளையார் முற்றத்துறந்த துறவியாகித் தலங்கடோறுஞ் சென்று அற்புதஞானப் பாக்களைப்பாடி அநேக அற்புதங்களைச் செய்து ஈற்றிலே திருவொற்றியுரையடைந்து சமாதி கூடினர். திருவேகமபத் திருவந்தாதி, ஒருபாவொருபது முதலிய அநேகதோத்திரப் பிரபந்தங்கள் இவராற் பாடியருளப்பட்டன

பட்டினப்பாக்கம்

காவிரிம்பூம் பட்டினத்தின் உண்ணகர்

பட்டினப்பாலை

பத்துப்பாட்டுள் ஒன்பதாவது, கரிகாற்சேழைகைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது

பட்டியல்

இப்பெரிய நூல்கள் பலவுள. அவற்றுள் வச்சணந்தி செய்தது வச்சணந்திமாலை யெனவழங்கும். குணவீரபண்டிதர் செய்து வெண்பாப்பாட்டிய லெனப்படும். அது பண்பார்கவிஞர் வியந்தெடுத்த பாட்டியலை ~வெண்பாவந்தாதி விளம்பினான். மண்பாவும் ~ கோடாதசீர்த்திக் குணவீர பண்டிதனாம் ~ பீடார்களந்தைப்பிரான் என்னும் வெண்பாவால் நிச்சயமாம். இனி எஞ்சியபலவற்றுள் ஒன்று தியாகராஜ தேசிகர் செய்த நூல். இது மங்கலப்பொருத்த முதலியன கூறுவது. தியாகராஜதேசிகர் இலக்கணவிளக்கஞ் செய்த வைத்தியநாதநாவலர் மகனார். இவர்காலம் இருநூறு வருஷங்களுக்கு முற்பட்டது

பட்டீசுவரர்

திருப்படடீச்சரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

பட்டோதிக்ஷிதன்

பாணினி வியநகரசூத்திரங்களைச் சித்தாந்த கௌமுதி யென்னும் பெயராற் பிரகரணஞ் செய்த பண்டிதர். இவர் கௌடப்பிராமணர். இவர் காலம் இற்றைக்கு 800 வருஷத்துக்கு முந்தியது

பண்மொழியம்மை

திருப்பாண்டிக்கொடு முடியிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்

பதஞ்சலி

யோகசூத்திரம் செய்தவராகிய இவர் இளாவிருதவருஷத்தில் அங்கிரனுக்குச் சதியிடத்திற் பிறந்தவர். இவர் பிறந்தவுடன் திரிகாலஞானமுடையராய் எல்லா முணர்ந்தவர். இவர் லோலுபையைச் சுமேருவிலிருந்த ஒராலமரத்துப் பொந்திலே கண்டு மணம்புரிந்தனர். பாணினி வியாகரணத்துக்கு மகாபாஷியஞ் செய்த பதஞ்சலியும் இவரே. பாணினி வியாகரணத்துக்கு மகாபாஷியஞ்செய்த பதஞ்சலியும் இவரே. பாணினி வியாகரணத்துக்கு மகா பாஷியஞ்செய்த பதஞ்சலி இரண்டாயிரத் தெண்ணூறு வருஷங்களுக்குமுன்ன ரிருந்தவரென்பது சங்கராசாரிய காலநிரூபணத்தால் நன்றாக நிச்சயிக்கப்படும். இக்காலநிரூபணம் ஐரோப்பிய பண்டிதருக்கு மொத்த துணிபாம். இப்பதஞ்சலிக்குப் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்தவர் பதஞ்சலிமுனிவர். அவர் ஆதி சேஷனுடைய அவதாரம். ஆதிசேஷன் சிவபிரானது திவ்வியநடனங் காணவேண்டிப் பதஞ்சலி முனிவராக அவதரித்துத் தில்லைவனத்திலே ஆனந்த தாண்டவ தரிசனம் பண்ணிக்கொண்டிருந்தவரென்பது கோயிற்புராணம். மகாபாஷியஞ் செய்தவரும் யோகசூத்திரஞ் செய்தவரும் யோகசூத்திரஞ் செய்தவரும் இருவேறு பதஞ்சலி என்பாருமுளர்

பததத்தன்

நரகாசுரன் புத்திரன்

பதரி, வதரி

சரஸ்வதி நதிக்குச் சமீபத்துள்ளஒரு புண்ணியவனம்

பதரீபாசனம்

ஒரு புண்ணிய தீர்த்தம். பிரபாவதி காண்க

பதிற்றுப்பத்து

கடைச்சங்கப் புலவரியற்றிய எட்டுத் தொகையுள் நான்காவது. இந்நூல் கேரர்புகழை யெடுத்துக் கூறுவது

பதுமகோமளை

சூரபத்மன்மனைவி. இவளிடத்திற் பிறந்தபுத்திரன் பானுகோபன்

பதுமபுராணம்

பாத்துமபுராணங் காண்க

பத்தினிக்கடவுள்

கண்ணகி. இவளுக்கு இப்பெயர் கோவலனோடு சுவர்க்கஞ் சென்ற பின்பு வந்தது

பத்திரகர்மன்

சுக்கிரன் மகன். தைத்தியகுரு

பத்திரகாளி

பார்வதி அமிசமாகிய ஒருதேவி

பத்திரகிரியார்

பட்டணத்தடிகள் பால்ஞானோபதேசம் பெற்ற ஒரு துறவி. இவர் பாடிய புலம்பல் ஞானாமிர்தம் பொழிந்து எவர் மனத்தையு முருக்குமியல்பினது. இவர் ஓர் அரசர். பட்டணத்தடிகளது உபதேசத்தாலே அரசு துறந்து ஞானமுடிசூடினவர்

பத்திரசேனன்

மகிஷம்நதன் புத்திரன்

பத்திரதன்

சம்பன் பௌத்திரன் பிருகதகர்ணன் தந்தை

பத்திரன்

வசுதேவன் புத்திரன். சுபத்திரன் சகோதரன்

பத்திரவாகு

வசுதேவன் புத்திரன். சுபத்திரன் சகோதரன்

பத்திராவதி

அஸ்திணாபுரத்துக்கு ஐந்துகாதத்திலுள்ள ஒரு நகரம்

பத்திரை

துர்க்காதேவி. வசுதேவன்பாரி. கிருஷ்ணன் பாரிகளுளொருத்தி. கேகயன் மகள்

பத்மாவதி

விந்தியதுக்குக் சமீபத்துள்ள ஒருநகரம். ஓரிராசகுமாரிக்கும் பெயர்

பந்தன், வந்தன்

திரணவிந்து தந்தை. புதன் எனவும் படுவன் இவன் மனுவமிசத்தோன்

பனங்காட்டீசர்

திருப்பனங்காட்டூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பனம்பாரனார்

அகஸ்தியர்மாணாக்கர் பன்னிருவரு ளொருவராகிய இவரே தொல்காப்பித்துக்குப் பாயிரஞ் செய்தவர். பம்பாரமென்னும் சூத்திரஞ் செய்தாருமிவரே. புறப்பொருட் பன்னிருபடலஞ் செய்த ஆசிரியர் பன்னிருவருள் இவருமொருவர். இவர் தொல்காப்பியரைப் போலவே தலைச்சங்கத் திறுதிக்காலத்திலிருந்தவர்

பன்னிருபடலம்

அகத்தியர் மாணாக்கர். பன்னிருவராலும் செய்யப்பட்ட புறப்பொருணூல். இஃது அழிந்தது போலும்

பப்பிரு

விதர்ப்பன். பௌத்திரன். 2 ய. சாத்துவதன் பௌத்திரன். 3 திருஹியன்புத்திரன்

பப்பிருவாகனன்

அருச்சுனன் மதன். இவன் தாய் மணலூர் இராஜாவாகிய சித்திரவாகனன் மகளாகிய சித்திராங்கதை. தருமன் அசுவமேதஞ் செய்த போது அசுவத்தைத் தடுத்தபப் பிருவாகனனோடு அருச்சுனன் யுத்தஞ் செய்திறக்க, நாககன்னடகையாகிய உலூபி அருச்சுனை மீளவும் உயிர் பெறும்படி எழுப்பிக் காத்தாள்

பம்பை

கிஷ்கிந்தைக்குச் சமீபத்திலுள்ள ஒருவாவி

பயை

ஹேதபாரி. வித்தியுத்தகேசன்தாய்

பயோஷ்ணி

விதர்ப்பதேசத்தில் பிரவாகமாகி வரதநதியிற் கலப்பதாகிய ஒருநதி

பரங்கருணையம்மை

திருப்புனவாயிலிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்

பரங்கிரிநாயகர்

திருப்பரங்குன்றத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்

பரசுராமன்

ஜமதக்கினிக்கு ரேணுகையிடத்துப் பிறந்த புத்திரன். இவன் விஷ்ணுவினது ஆறாமவதாரம் கார்த்தவீரியார்ச்சுனன் புத்திரர்யாகப் பசவை நாடிச் சென்ற போது ஜமதக்கினியினுடைய ஆச்சிரமத்தில் அது நிற்கக்கண்டு ஜமதக்கினியைக் கொன்று பசுவைக் கவர்ந்து சென்றனர். அச்சமயம் வெயியே போயிருந்த பரசுராமன் மீண்டு வந்து தந்தை கொல்லப்பட்டதைக் கண்டு, டித்திரியரை வேரறுத்து இப்பழிதீர்ப்பேன் என்று விரதம் பூண்டுடித்திரியரை யெல்லாம் கருவறுத்து அவ்விரத்தத்தாற் பிதிர்கருமஞ் செய்தான். இவன் உக்கிரதவஞ் செய்து சிவனிடத்து அநேக திவ்வியாஸ்திரங்களைப் பெற்று வில்வித்தையிலே தனக்கிணையில்லா திருந்தான். இவன் சிறுபிள்ளையாயிருந்த போது தந்தை சொற்படி தாயைக்கூசாது கொன்றவன். இவன் ராமர் காலத்திலே ராமரால் அபஜயமடைந்து மகேந்திர மலைக்குச் சென்று அங்கே இன்றும் சிரஞ்சீவியாகத் தவஞ் செய்கின்றானென்பர், ஜமதக்கினி காண்க

பரஞ்சோதிமுனிவர்

திருவிளையாடற் புராணஞ் செய்தவர்

பரணர்

இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். இவருங்கபிலரும் மிக நண்பினர்கள். இவர் கோச்செங்குட்டுவன் மேல் ஒருபிரபந்தம் பாடிப் பரிசிலாக உம்பறகாட்டுவாரி கொண்டவர். இவர் ஒளவையாராலும் தாம்பாடிய அமரர்ப்பேணியும் என்னும் பாடலிலே சென்றமர்கடந்து நின்னாற்றறோற்றிய வன்றும் பாடுநர்க்கரியையின்றும் பரணன் பாடினன் என்றெடுத்துச் சுட்டப்பட்டவர் இவர் தெய்வப்புலமையடைவர்

பரதகண்டம்

பாரதவருஷமானது விதேகம், ரேபதம், மத்தியம், பரதமென நான்கு கண்டங்களையுடையது.விதேகம் மேல்பாலிலுள்ளது. மத்தியம் இமயத்துக்கும் விந்தியத்துக்கு மிடையேயுள்ளது. பரதம் விந்தியத்துக்குத் தெற்கேயுள்ளது. இவை நான்கையும் நவகண்டமாக்கிக் கூறுவாருமுளர்

பரதசேனாபதீயம்

ஆதிவாயிலார் செய்த நாடகத் தமிழ் நூல்

பரதன்

தசரதன் புத்திரன். ஸ்ரீராமன்றம்பி. இவன் அதிக நற்குணவான். இவன் ஸ்ரீராமன் பெறவேண்டிய அரசியலைத் தனக்கு வஞ்சனையாலே தாய்பெற்றுக் கொடுத்தாளென்றறிந்து, அதனை வேண்டாமென்று மறுத்து ராமனுக்குரைக்க, ராமன் தந்தை சொல்லைக் கடக்கலாகாதென்று கூறிச் சமாதானஞ் செய்ய. அது கேட்டொருவாறு ஸ்ரீராமன் வரும் வரைக்கும் அரசியலைக் கைக்கொண்டவன். சகுந்தலைவயிற்றிலே துஷ்யந்தனுக்குப் பிறந்தபுத்திரன். இவன் ஆரியதேசம் முழுவதையும் கட்டியாண்டமையால் பாரதவருஷப்பெயர் அத்தேசத்தற்காயிற்று. இவனுடைய ஒன்பதாஞ் சந்ததிகுரு. குருவினது பதினான்காஞ்சந்ததி சந்தனு. சந்தனுவுக்கு நான்காஞ்சந்ததிபாண்டவர்

பரதம்

ஒரு நாடகத் தமிழ் நூல். அஃது இறந்தது

பரத்துவாஜன்

உதத்தியன் புத்திரன். மமதை இவன் தாய். இவன் பிரஹஸ்பதி பிரசாதத்தால் உற்பத்தியானவன்

பரத்துவாஜி

மாளவ தேசத்திற்பிரவாகிக்கும் ஒரு நதி

பரமசிவன்

ஸ்ரீகைலாசத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர். மும்மூர்த்திகளையும் படைத்தருளும் தனிமுதற்கடவுள். இக்கருத்து அதர்வசிகையிற் கூறப்பட்டுள்ளது

பரமேஷ்டி

பிரமா. இந்திரத்துய்மன் புத்திரன்

பரரஜகுஞ்சரன்

ஆயோதன வீரபாண்டியனுக்குப்பின் அரச செய்த பாண்டியன்

பராக்கிரமவாகு பாண்டியன்

விக்கிமவாகு பாண்டியனுக்குப் பின் அரசுசெய்தவன்

பராசரன்

விசிஷ்டன் பௌத்தரன். சக்தி புத்திரன். வியாசன் தந்தை. சுகன் பாட்டன். இவன் தந்தையாகிய சக்தியை இராக்ஷசன் கொன்று தின்றானென்றுணர்ந்து அவனையும் ஏனைய ராக்ஷசர்களையுங் கொல்வதற்காக ஒருயாகஞ் செய்தவன். அது முடிந்தபின்னர் இவன் யமுனையைத் தாண்டவேண்டி ஓரோடத்தேறிச் செல்லும் போது சரதியவதி யென்னும் பெண் அவ்வோடத்தைத்தனியே தாங்கிச் செல்லக்கண்டு அவளைப் புணர்ந்து வியாசரைப் பெற்றான். இவன் அவள் மீது இயல்பாக வீசிக் கொண்டிருந்த புலான்மணத்தை மாற்றித் திவ்வியபரிமளம் வீசும்படி செய்து அவளுக்கு யோசனகந்தி யென்னும் பெயரைக் கொடுத்தாள்

பராசரஸ்மிருதி

கலியுகத்துக்கு ஏற்ற தருமங்களைக் கூறும் தருமசாஸ்திரம். பராசரர் செய்தது

பராவசு

ரைப்பியன் புத்திரன். அர்த்தாவசன் சகோதரன்

பரிக்ஷித்து

குருவினது புத்திரருளொருவன். இவன் ஜன்னுவினது தம்பி. அபிமன்னியு புத்திரன். அருச்சுனன் பௌத்திரன். இவன் கலியுகாரம் பத்தில் அஸ்தினாபுரத்தில் அரசு செய்தவன். இவன் தாய் உத்தரை இவன் மகன் ஜனமேஜயன்

பரிணாமவாதசைவன்

உயிர்கெட்டுக் கூடி அரனடியில் ஒன்றாகிப் போமென்று சொல்லுமோர் அகச்சமயி

பரிபாடல்

தலைச்சங்கப்புலவர் செய்த பரிபாடலென்னும் நூல் இறந்தொழிந்தது. கடைச்சங்கப் புலவர் செய்ததுவே இப்போதுள்ளது. அஃது எழுபது பாடல்களையுடையது. திருமாற்கிருநான்கு செவ்வேட்குமுப்பத் தொருபாட்டுக்கார் கோளுக்கொன்ற மருவினிய வையை யிருபத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரிபாடற் றிறம் என்னும் பாவால் அவ்வெழுபதின் வியாகமுணர்க. அவ்வப்பாடல்களின்கீழ் ஆசிரியர்கள் பெயர் கூறப்பட்டுள்ளன

பரிமளகந்தி

மந்சகந்தி வேதவியாசன்றாய்

பரிமளசுகந்தநாயகி

திருவேள்விக்குடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பரிமேலழகர்

இவர் காஞ்சீபுரத்திலே வைஷ்ணவப் பிராமணகுலத்திலே அவதரித்து வடமொழி தென்மொழியிரண்டிலும் வல்லுநராய் விளங்கித் திருவள்ளுவர் குறளுக்குரையியற்றிய ஆசிரியர். இவரைப் பாண்டிநாட்டிற் பிறந்தவ ரென்பாருமுளர். அது பொருந்தாமை வள்ளுவர்சிலைப் பெருமணச் சர்சாத்தர் வழுதி முதற் ~ றள்ளுவ னார்க்குந் தலையானபேரையுந தன்னுரையை ~ விள்ளுவனார்க்குந் திருக்காஞ்சி வாழ் பரிமேலழகன் ~ வள்ளுவனார்க்கு வழிகாட்டினான்ட றொண்டைமண்டலமே என்னுந் தொண்டைமண்டல சதகததானுணர்க. வள்ளுவர்குறளுக்கு உரை செய்தவர்கள் பதின்மர் அவருள்ளே சிறந்தவர்கள் நச்சினார்க்கினியரும் இவருமே யாவர்கள். இவ்விருவருள்ளும் இவரே தம்முரையாற் சிறந்தார். பதின்மர் உரையையு மொருங்குகற்று ஒப்புநோக்கிய ஆன்றோர் ஒருவர் கூறிய: பாலெல்லா நல்லாவின் பாலாமோ பாரிலுள ~ நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ ~ நுலிற் ~ பரித்தவுரை யெல்லாம் பரிமேலழகன் ~ றெரித்தவுரை யாமோ தெளி என்பதனால் அவ்வுண்மை பெறப்படும். நச்சினார்க்கினியர் இவர்காலத்தவரேயாயினும் அவர் வயசால் முதிர்ந்தவர். இவர் வைஷ்ணவரென்பது அரிமேலன்புறூஉமன் பமையந்தணன் என்னும் ஆன்றோருரையாற் றுணியப்படும். இவர் வைஷ்ணவரேயாயினும் சைவாகமவுணர்ச்சியு முடையவரென்பது வள்ளுவருரையிலிடையிடை யெடுத்துரைக்குமாற்றால் விளங்குகின்றது. வள்ளுவருக்குரை செய்த பதின்மருள் முற்பட்டவராகிய தருமர் ஆருகதர். அவரை ஆருகதர்கள் தருமசேனர் என்பர். அவரைத்தவுரையிலே பெரும்பாலும் ஆருகதமதக்கொள்கைகளே பிரசங்கிக்கப்பட்டன. இவ்வாறே மற்றையோரும் தத்தஞ்சார்பு பற்றியுரைத்தார்கள். அவருள்ளே நச்சினார்க்கினியர் ஒருவரே திருவள்ளவரைப் பொதுநூலெனக் கொண்டு நடுநிலைகலங்கா துரை செய்தார். ஆயினும் அவ்வொன்பதின்மர் உரையும் மெய்யுரையல்லவெனக் கண்டே பரிமேலழகர் தாம் உரை செய்யப்புகுந்தார். பரிமேலழகர் யோகப்பயிற்சி புடையரென்றும, ஒவ்வொரு சொல்லுக்குஞ் சமாதியிருந்தே மெய்ப்பொருள் கண்டாரென்றும், பூர்வம் வைஷ்ணவராயிருந்து பின்னர்ச் சுப்பிரமணியோபசக ராயினரென்றும் ஒரு கர்ணபரம்பரையுளது. மற்றைய சரித்திரம் எவ்வாறாயினும் ஒவ்வொரு சொற்குஞ்சமாதியிருந்தே மெய்ப்பொருள் கண்டாரென்பது அவருரையை யூன்றி நோக்குந்தோறும் நம்பத்தக்கதாகின்றது. இவர் உரையிலே பொருள் வன்மையும், செஞ்சொற்சிறப்பும், இலக்கணங்கூறும் சாதுரியமும், விசேடவுரை தெரிக்கு மாற்றலும், மேற்கோளெடுத்துச் சித்தாந்தஞ் செய்யுமுபாயமும், பிறர்க்கெல்லாம் பலவசனங்களானன்றிய மையாத விஷயங்களைச் சிலசொற்கொண்டு தெற்றெனக்காட்டும் போராண்மையும், வடமொழிப் பதங்களைச் செந்தமிழ் மொழியாக்கும் அற்புதசாமர்த்தியமும், சொன்முட்டுற்று வடமொழிப் பதங்களை யெடுத்தாளும் நல்குரவுடையார் போலாது செந்தமிழ்ச் சொற்செல்வமுடைமையும், வேதாகமவியாகரண சாஸ்திர புராணேதி காசஸ்மிருதி காவியாலங்காராதி வடநூற்பயிற்சியோடு முத்தமிழ்ப் பரப்பெலா முற்றவுணர்ந்த நுண்புலமையும் நன்கு பெறப்படுகின்றன இவர் வைதிகசமய வுணர்ச்சியிற் றமக்கிணையில்லாதவ ரென்பது, யாது மெய்யென நிகழுமையத்தினை யோகமுதிர்ச்சியுடையார் தம்மநுபவத் தானீக்கி மெய்யுணர்வார் என்றும், நிலமுதலுயிரீறாகிய தத்துவங்களின் றொகுதியெனவுணர்ந்து, அவற்றை நிலமுதலாகத் தத்தங்காரணங்களிலொடுக்கிக் கொண்டு சென்றாற் காரணகாரியங்களிரண்டு மின்றி முடிவாய் நிற்பதை யுணர்த்தலாம் என்றும், வீடாவது நிரதிசயவின்பம் என்றும், தோற்றக்கேடுகளின் மையின் நித்தமாய் நோன்மையாற்றன்மை யொன்றுங் கலத்தலின்மையிற்றூய்தாய், தானெல்லாவற்றையுங் கலந்து நிற்கின்ற முதற் பொருள் விகாரமின்றி யெஞ்ஞான்ற மொருதன்மைத்து என்றும் ….துன்பங்களாவன பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி யீட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்தவுடம்புகளான் அநுபவித்தனவும் பிறந்தவுடம்பான் முகந்துநின்றனவு மொழியப் பின்னும் அநுபவிக்கக்கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன்னிருள் போல் ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான் என்றும், பரம் பொருளையுணரப் பிறப்பறும் என்றும் வரும் விசேடவுரைகளாற் றுணியப்படும் இவர் தம்முரையிலே தமக்குடன் பாடாயுள்ள உரையாசிரியர்களுடைய மதங்களை யெடுத்துக் காட்டித்தழுவுவதோடு தமக்குடன் பாடில்லாத மதங்களை மெடுத்துக்காட்டி ஏதுக்கூறி மறுத்தலுஞ் செய்வர். நச்சினார்க்கினியரும் பரிமேலழகரும் ஒரே காலத்தவரென மேலே கூறினாமன்றோ. பரிமேலழகர் திருவள்ளுவருக்கு உரையொன்றியற்றி, அதிலே தமதுரையைச் சிற்சிலவிடங்களிலெடுத்து மறுத்திருக்கின்றாரென்று கேள்வியுற்ற நச்சினார்க்கினியர் பரிமேலழகர்பாற் சென்று அவ்வுரையைத் தமக்குக் காட்டுமாறு வேண்டினர் பரிமேலழகர் அவரை உபசரித்து அவ்வுரையைக் காட்டினார். அதனை நச்சினார்க்கினியர் இருகையாலும்மேற்றுத் தமக்குள் சிலவற்றை எடுத்துநோக்கிச் சென்றனர். நோக்கிச் சென்ற போது குடம்பைதனித்தொழிய வென்னுந் திருக்குறளிலே, குடம்பை என்பதற்குத் தாங்கூடென்றுரைத்திருக்கப் பரிமேலழகர் அதற்கு முட்டை யென்று பதவுரையும், கருவந்தானு மொன்றாய்ப்பிறந்து வேறாந்துணையும் அதற்காதாரமாய் நிற்றலா லஃதுடம்பிற்குவமையாயிற்று என்றும் அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமற்போகலின் புள் உயிர்க்குவமையாயிற்று என்றும் விசேடமுரைத்து, கூடுபுள்ளுடன்றோன்றாமையானும், அதன்கண் அதுமீண்டு புகுதலுடைமையானும் உடம்பிற்கு உவமையாகாது என்று மறுத்திருக்கக்கண்டு தாமுரைத்ததைக் கண்டித்தாரென்று வெகுளாமலும் நாணாமலும் மெய்ப்பொருள் மெய்ப்பொருள் என்று பாராட்டி உச்சிமேலேற்றிக் கொண்டாடின ரென்பது ஆசிரியகன்ன பரம்பரை. இவ்வாறே தருமர் முதலியோரதுரைகளையு மோரோவிடங்களிலெடுத்துமறுப்பர். அவையெல்லாமெடுத்து விரிப்பிற் பெருகும் இனி இவர்காலம், கந்தபுராணம் கம்பராமாணமுதலிய நூல்களினின்றும் உதாரணமெடுத்துக் காட்டாமையால் அந்நூலாசிரியர்களுக்கு முற்பட்டதென்பதும், போசராசன் பெயர் இவர் செய்தவுரையிலே வருதலால், அவனுக்குப் பிற்பட்டது என்பதும் நன்றாக நிச்சயிக்கப்படுதலின் ஆயிரத்திருநூறுவருஷங்களுக்கு முற்பட்டதாக துணியப்படும்

பரிஹஷதன்

பிராசீனபரிஹி

பரிஹிணாசுவன்

அமிதாசுவன். கிருசாசுவன் தந்தை

பரிஹிஷதர்

பிதிரர்களுளொரு வகுப்பார்

பரிஹிஷ்மதி

விசுவகர்மன் புத்திரி. பிரியவிரதன் பாரி

பரீவதராஜபுத்திரி

க. திருநன்னி பள்ளியிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர், உ, பார்வதி

பருதியப்பேசுரர்

திருப் பருதிநியமத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பருப்பதமங்கை

திருப்பருப்பதத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமிபெயர்

பருப்பதேசுவரர்

திருப்பருப்பதத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பர்க்கன்

சிவன், உ, பிரமன்

பர்ஜன்னியன்

மேகங்களுக்கு அதிதேவதை. சூரியன் வருணன் இந்திரன் இவர்களுக்குப் பரியாயப் பெயர்

பர்த்துருஹரி

வடமொழியிலக்கணமொன்று செய்த ஒரு பிரபல பண்டிதர்

பர்மியாசுவன்

பூருவமிசத்து அஜமீடன் புத்திரன்

பர்யந்ததேசங்கள்

ஆரியாவர்த்தத்துக்கு அயலிலேயுள்ள மிலேச்ச துருக்கதேசங்களுக்கு குறிப்புப் பெயர்

பர்வதன்

நாரதன் சகோதரி புத்திரன்

பர்வதராஜன்

இமயமலை, உ, இமயராஜன்

பறையூர்

சேரநாட்டுள்ள தோரூர்

பற்குனன்

அருச்சுனன், பங்குனி உத்தரத்திலே பிறந்தமையின் அவன் இப்பெயர் பெற்றான்

பலசூதனன்

இந்திரன், பலாசுரனைக் கொன்றமையால் இந்திரன் இப்பெயர் பெற்றான்

பலந்தனன்

நாபாகன் புத்திரன்

பலன், வலன்

திதிவமிசத்துப் பாணாசுரன் புத்திரன், உ, பலராமன், ந, பரயாத்திரன் என்பவன் மகன். இவன் மகன் சலன்

பலபத்திரர், பலராமர்

ஆதிசேஷன் அமிசமாக வசுதேவனுக்கு ரோகிணியிடத்துப் பிறந்த புத்திரனார். இவர் கிருஷ்ணனோடு வளர்ந்து விளையாடிக் கிருஷ்ணனுக்கு எக்கருமத்திலுந் துணையாயிருந்தவர். துரியோதனனுக்குக் கதாயுதப்பிரயோக வித்தை பயிற்றினவர் இவரே. இவர்க்குக் கொடி பனைக்க்கொடி. ஆயுதம் கலப்பைப்படை. இவரும் கிருஷ்ணரும் ஒருங்கு கூடியே விஷ்ணுவினது எட்டாம் அவதாரமாவர் தேனுகாசுரனையும் பிரலம்பனையும கொன்றவரும் பலராமரே. யமுனாநதியைத் தாமிருக்குமிடத்துக்குத் தமது கலப்பைப்படையினாலே யிழுத்துப்பாயும்படி செய்தவரும் இவரே. இவர் ரைவதராஜன் புத்திரியாகிய ரேவதியை மணம்புரிந்தவர்

பலாசவனேசுரர்

திருநாவலூர் மயானத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பலாசினி

ஒருநதி. இது சுக்திமந்தத்திலுற் பத்தியாகி மகாநதியிற் கலப்பது

பலாசுவன்

இரண்டாங் கனித்திரன் பௌத்திரன்

பலி

சுதபன் என்னும் அசுரன் புத்திரன், உ, பிரகலாதன் புத்திரனாகிய விரோசனன் மகன். இவன் மகாபராக்கிரமசாலி. விஷ்ணு இவனைக் கொல்வதற்காக வாமனாவதாரமாகி அவனிடஞ் சென்று மூன்றடி நிலந்தருகவென்றிரக்க, அவனுடன்படுதலும், அவர் விசுவரூபங் கொண்டு பூமியை ஓரடி நீளமாக அளந்து, ஆகாயத்தை மற்றடியாக வளந்து, மூன்றாமடிக்கிடமின்மையால் அவன் மீதடிவைத்து அவனைப் பாதலத்தமிழ்த்திக் கொன்றான்

பல்லவன்

இல்வலன் புத்திரன். இவன் பலராமரோடு யுத்தஞ் செய்தபோது அவராற் கொல்லப்பட்டவன்

பல்லாதன்

உதக்சேனன் புத்திரன்

பழமலையந்தாதி

சிவப்பிரகாசர் செய்த ஒரு பிரபந்தம். அது கற்பனாலங்காரமலிந்துள்ளது, பழமலை ~ விருத்தாசலம்

பழமொழி

பதினெண்கீழ்க் கணக்கினுளொன்று. முன்னுறை யரசர் செய்தது. அது நானூறு வெண்பாக்களையுடையது. அது முற்றும் நீதியே கூறுவது

பழம்பதிநாயகர்

திருப்புனவாயிலிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்

பழையனூர்நீலி

பழையனூர் வணிகன் மனைவி. நீலி காண்க

பழையன்

பாண்டியநாட்டு மோகூர்க் குறுநிலமன்னன், மதுரைக்காஞ்சி

பவகாரணி

அழகர் மலையிலுள்ள ஒரு பொய்கை. இது நீராடுவோர்க்கு அவர் பழம்பிறப்பிற் செய்தவற்றையுணர்த்துவது

பவணந்தி

இவர் தொண்டை நாட்டிலே சனகாபுரியிலே சன்மதி முனிவருக்குப் புத்திரரா யவதரித்துத் தமிழ்ப் புலவராய் விளங்கிய ஒரு சமண முனிவர். சீயகங்கன் கேள்விப்படி தொல்காப்பியத்தைச்சுருக்கிப் பாணினீய வியாகரண அடைவுப்படி நன்னூல் என்னும் இலக்கணஞ் செய்தவர். அந்நூற் சூத்திரங்கள் மிக்க திட்பமுநுட்பமுமுடையன வென்பது சர்வாங்கீகாரம். மொழிமுதற் காரண மாமணுத்திரளொலி யெழுத்து என்று ஒலியெழுத்திற் கிலக்கணங் கூறிய அவர் சாதுரியம்பெரிதும் வியக்கற்பாலது. குற்றெழுத்து வல்லெழுத்து மெல்லெழுத்திடையெழுத்துக்களுக்கெல்லாம் எண்கூறி வரையறுத்தவர் ஐயும் ஒளவும் எல்லாவிடத்தும் நெட்டெழுத்தாகாவென்பது உய்த்துணரவைக்கும் பொருட்டு நெட்டெழுத்திற்குமாத்திரம் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள நெடில் என்ற வாளாசூத்திரஞ் செய்த குசாக்கிரபுத்தியினது ஆற்றல் அத்தியற்புதம். இவ்வாறே ஒவ்வொரு சூத்திரமுமொவ்வோராதிசயமுடையனவாம். இவ்வகை நுட்பமுஞ் சுருக்கமுமுடைய இலக்கணநூல் மற்றெப் பாஷையிலு மில்லை. இன்னும் முன்னூலொழியப் பின்னூல் பலவினு ~ ணன்னூலார்தமக் கெந்நூலாரு ~ மிணையோ வென்னுந்துணிவே மன்னுக என்றார் இலக்கணக்கொத்துச் செய்த ஈசான தேசிகரென்னும் சுவாமிநாத தேசிகரும் அதுநிற்க, இவர் இற்றைக்குத் தொளாயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்தவரென்பது சில ஏதுக்களாற் றுணியப்படும்

பவன்

அட்டமூர்த்தகளிலொருவர், உ, சிவன்

பவபூதி

ஒருசம்ஸ்கிருதகவி. இவர் காசிபகோத்திரத்தார். இவர் தேசம் விதர்ப்பம், விதர்ப்பம் தற்காலம்டுண்டூர் என்று வழங்கப்படும், இவர் போஜராசாவுடைய சனஸ்தானகவீச்சுரருள் ஒருவர்

பவளக்கைநாயகி

தருவைகாவிலே கோவில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்

பவளக்கொடியம்மை

குரங்காடு துறையிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்

பவளவன்னப் பூங்குழலம்மை

திரு அம்பர்ப்பெருந்திருவிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்

பவானி

பார்வதி, உ, ஒரு நதி

பவித்திரை

தண்டீசர் தாய்

பவிஷியபுராணம்

பிரமாவானவர் சூரியனுடைய மான்மியத்தை மனுவுக்குரைத்தபின்னர், அவர் அம்மனுவுக்கு அகோரகற்பத்திலே உலகமுளதா முறையையும் சிருஷ்டிபேதமுதலியவைகளையும் உரைத்ததாக வுணர்த்துவது. முப்பத்தோராயிரங் கிரந்தமுடையது

பவ்வியன்

சுவாயம்புமனு புத்திருளொருவன்

பாகஎக்கியம்

அஷ்டகம், பார்வணம், ஸ்தாலிபாகம். சிரார்த்தம்மாசிகம் சர்ப்பபலி, ஈசானபலி, ஆக்கிரஹயண முதலிய எக்கியங்கள்

பாகசாசனன்

இந்திரன், பாகனைத் தண்டித்தவன் என்பது. அதன் பொருள்

பாகன்

விருத்திராசுரன் தம்பி. இவன் இந்திரனாற் கொல்லப்பட்டவன்

பாகவதம்

பதினெண் புராணங்களுளொன்று இதில் காயத்திரிதேவி விஷயம், பரமாத்மாவிசார முதலியன சொல்லப்படும். இது பதினெண்ணா யிரங்கிரந்தமுடையது. பொப்டண்ணபட்டர் செய்தது தேவிபாகவதம்

பாக்கபுரேசர்

திரு அச்சிறுபாக்த்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பாசகண்டம்

சமயங்கள் தொண்ணூற்றினதும் சாஸ்திரக்கோவை. வைதிகக்கொள்கையோடு அவைதிகக் கொள்கையுமெடுத்து விதிப்பது பாசண்ட சமயமாம்

பாசகர்ணன்

சுமாலி புத்திரன்

பாசுபதன்

சிவன் வீபூதியும் சடையுந் தரித்த மூர்த்தியாய் அருள்வர் என்பவன். இவன் அகப்புறச்சமயிகளுளொருவன்

பாசுபதேசுவரர்

திருவேட்களத்திலும் திருமுல்லைவாயிலிலும் கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர். அருச்சுனனுக்குப் பாசுபதங் கொடுக்கச் சிவன் கொண்ட வடிவம்

பாசூர்நரதர்

திருப்பாசூரிலே கோயில் கொண்ட சுவாமி பெயர்

பாஞ்சசன்னியம்

விஷ்ணுசங்கம் பஞ்சசன் என்பவன் எலும்பினாலாயது என்பது அதன் பொருள்

பாஞ்சராத்திரி

நாராயணன் தன்னை வழிபட்டவர்களுடைய பந்தத்தை நீக்கி அவர்களை விரசாநதியில் மூழ்குவித்துச் சுத்தர்களாக்கி, வைகுண்டத்திலே சாபரூபத்தைக் கொடுப்பவனென்பவன். இவன் புறச் சமயிகளுளொருவன்

பாஞ்சாலம்

அஸ்தினாபுரிக்கு வாயுதிக்கில் இமயத்துக்கும் சர்வ நதிக்கும் நடுவிலுள்ள தேசம்

பாடலாவதி

இருடி பர்வதத்திலு ற்பத்தியாகிப் பாயும் நதி

பாடலிபுத்திரம்

பிரதிஷ்டானபுரம். உதயாசுவன் அமைத்த நகரம். அது குசுமபுரியெனவும்படும். சோணைநதி கங்கையோடு சங்கமிக்குமிடத்துக்குச் சமீபத்திலே இருந்ததாகிய இப்பழையநகரத்தை ஆயிரத்து நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னே, அஃதாவது கலிய்பதம் மூவாயிரத்து எண்ணூற்றைம்பதாம் வருஷமளவில் கங்கைநீர் பெருகி அழித்தது. இங்கே பௌத்தமுனிவர் மடங்களும் நூறு சிவாலயங்களுமிருந்தனவென்றும், அம்மடங்களைந்திலும் ஐயாயிரம் பௌத்தமுனிவர்கள் இருந்தார்களென்றும், மற்றைய வைதிக சமயிகள் தொகை அளப்பரிதென்றும் சீனா தேசத்திலிருந்து ஆரிய தேசத்திற்கு வந்துபோன ஹயூன்சங்கன் என்பவன் கூறுவன். எனவே இந்நகரம் நெடுங்காலம் கீர்த்தி பெற்றிருந்த ஓர் ராஜதானி என்பதற்கையமில்லை

பாடலிபுரம்

பாடலிபுத்திரம்

பாடாணவாதசைவன்

ஆன்மா முத்தியிலும் சகசமலம் நீங்காது கல்லுப்போலக் கிடக்குமென்பவன். இவன் அகச்சமயிகளுளொருவன்

பாணன்

பலியினுடைய மூத்தமகன். இவன் ஆயிரங்கையுடையவன், உ, அநீகன் புத்திரன்

பாணபத்திரன்

இவன் வரகுணபான்டியன் சபையிலே விளங்கிய ஒரு யாழ்வல்லோன். சிவபிரானை இசைப்பாட்டினாலே தன்வசப்படுத்தி அவரிடம் ஒரு பாசுரம் வரைந்த திருமுகமொன்று பெற்றுக்கொண்டு போய்ச் சேரமான் பொருமாணாயனாரிடங் கொடுத்து அளவிறந்த திரவியம் பெற்றுத் திரவியசம்பன்னனாக விளங்கியவன். அப்பாசுரம் மதிமலிபுரிசை மாடக்கூடற் ~ பதிமிசைநிலவும் பானிறவரிச்சிற ~ கன்னம்பயில் பொழிலாலவாயின் ~ மன்னியசிவன்யான் மொழிதருமாற்றம் ~ பருவக்கொண் மூப்படி யெனப்பாவலர்க் ~ குரிமையினுரிமையினுதவி யொளி திகழ் ~ குரு மாமதிபுரை குலவிய குடைக்கீழ்ச் ~ செருமாவுகைக்குஞ் சேரலன்காண்க ~ டண்பாலியாழ் பயில் பாணபத்திரன் ~ றன்பொலென்பாலன் பன்றன்பாற் ~ காண்பதுக ருதிப்போந்தனன் ~ மாண்பொருள் கொடுத்துவர விடுப்பதுவே என்பது. இவ்வரகுணபாண்டியன் கூன்பாண்டியன் காலத்துக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின்னர் விளங்கியவன். இவன் காலத்தையும் பரம்பரைக்கிரமத்தையும் திருவிளையாடற் புராணமுடையார் பிறழ வைத்தனர்

பாணினி

இவர் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னே, காந்தாரதேசத்திலே சலாதுரநகரத்திலே பிறந்து உரியகாலத்தே வித்தியாப்பியாசஞ் செய்து வரும்போது, மந்த மதியுடையராயிருத்தலைக் கண்டு குருவாலும் சகபாடிகளாலும் அவமதித்துத் தள்ளப்பட்டு, மனம் வருந்தித் தமது வீடுநோக்கிச் செல்லாது, இமயமலையை நோக்கி நடந்து அங்கே சிவனைநோக்கித் தவங்கிடந்து, அவர்பாற் சகல சாஸ்திரங்களுக்கும் மூலசாஸ்திரமாகிய மாகேசுவர சூத்திரோடதேசம் பெற்றுக் கலையெல்லாம் வல்லவராயினவர். இவர் தந்தையார் பெயர் டணினி என்பர். தாயார் பெயர் தாக்ஷி யென்பது தாக்ஷிபுத்திரரெனவும் இவர் வழங்கப்படுதலால் நன்கு துணியப்படும். இவர் அம்மா கேசுவர சூத்திரங்களை ஆதாரமாக்கொண்டு செய்த சம்ஸ்கிருதயாகரணம் பாணினீயம் எனப்படும். அஃது எட்டு அத்தியாயங்களை யுடையதாதலின் அஷ்டாத்தியாயி எனவும்படும். இவரும் வரருசியும் ஒரே காலத்தவர்கள். பாணினிபகவான் வியாகரணஞ் செய்யுமுன்னே வரருசி காதந்திர மெனப்பெயரிய ஓரிலக்கணம் வகுத்தாரேனும், பாணினிபகவான் செய்தருளிய நூலே சிறந்ததெனக் கண்டு அதற்குத் தாம் ஒருரையியற்றினர். அவரே பாணினீயத்துக்கு முதலுரையாசிரியர். பாணினீயத்துக்கு மிக விரிந்த தோருரை செய்தவர் பதஞ்சலி பகவான். விரிவுநோக்கி அதற்கு மஹாபாஷியம் என்னும் பெயருளதாயிற்று. பதஞ்சலிபகவான் தாமியற்றிய பாஷியத்திலே, இச்சூத்திரத்திரங்களின் பெருமையை நோக்குமிடத்துப் பொருளில்லாத வோரெழுத்தையேனும் அவற்றினுள்ளே யான் காண்கின்றிலேன் எனக்கூறிப் போவரேல், பாணினீய சூத்திரங்களின் வன்மையும் நுட்பமும் வனப்பும் எடுத்துரைக்க வேண்டா. ஐரோப்பிய பண்டிதர்களும் தாங்கண்ட பாஷைகளில் பாணினீயத்திற்கிணையான இலக்கணமொன்றில்லை யென்ற கூறி உச்சிமேற்கொண்டு பாராட்டுவார்கள். பாணினீயத்துக்கு முன்னரும் ஐந்திர முதலிய வியாகரணங்கள் பல தோன்றி நடைபெற்றனவேனும் அவையெல்லாம் அது தோன்றிய பின்னர்க் கற்றற்கெளிதல வென்று மாந்தராற் கைவிடப்பட்டனவாயின. ஆகவே பாணினீயமே நின்று நிலவுவதாயிற்று. அது வேதமொழிக்கும் சாமானியமொழிக்கும் இலக்கணங் கூறுவது. பூர்வவியாகரணங்கள் எல்லாம் வேதமொழிக்கே இலக்கணங் கூறுவன. பாணினீயம் இரண்டிற்குமாதலின் மிகச் சிறப்பதாயிற்று. அதுவுமன்றி அதுபூர்வ வியாகரணங்களைப்போல வேதத்திற்கும் அங்கமாயிற்று. இத்துணைச் சிறப்புவாய்ப்ப வியாகரணஞ் செய்த பாணினியாரது அவதாரகாலம் இரண்டாயிரம் வருஷங்களுக்குமுன்ன தென்பர் சிலர். பாணினீயத்தினுள்ளே வரும்யவனபதம் கிரேக்கரைக் குறிப்பதென்பது அச்சிலர் கருத்து. அது கிரேக்கரைக் குறிப்பதன் றென்பது கௌதம தருமசூத்திரம், மனு, ராமாயணன், பாரதம், காசிகாவிருத்தி முதலியவற்றினுள்ளே கூறப்படும் யவன வரலாற்றாற் பெறப்படும். ராமாயணம், யவனராவார் சகரனாலே விசுவாமித்திரரது ஆணைப்படி முண்டிதஞ் செய்து ஒட்டிவிடப்பட்ட க்ஷத்திரியர் என்று கூறும். பாரதம் யவனர் துர்வசுவினது சந்ததியாராவர் என்று கூறும் காசிகாவிருத்தியும் விஷ்ணு புராணமும் யவனர் தமது தலையை முண்டிதஞ் செய்துகொள்பவர் என்று கூறும். கிரேக்கரோ தமது தலையைமழித்துக் கொள்பவரல்லர். அது கிரேக்கனாகிய தெமொஸ்தெனை, Demosthenes, என்பவன் தான் வெளியே செல்லாவகை தன்தலையை முண்டிதஞ் செய்து கொண்டு ஒரறையினுள்ளே மறைந்திருந்து நூலோதி வந்தான் என்பதனால் நன்கு துணியப்படும். ஆதலின் பாணினி குறித்தயவினரும் வேறு ~ ஐரோப்பிய பண்டிதர் குறிக்கும் யனவரம் வேறென்பது நாட்டப்பட்டதாயிற்று. ஆதலின் கிரேக்கர் படையெடுத்து ஆரியாவர்த்தத்தைத் தாக்கியபின்னர்ப் பாணினி விளங்கினாரென்னுங் கொள்கை எற்புடையதன்று. நிர்வாணபதத்திற்குப் பாணினியார் கொண்ட பொருளும் வேறு ~ பௌத்தர் கொள்ளும் பொருளும் வேறென்பதும் பாணினி பாஷியத்தினுள்ளே பதஞ்சலியாரெடுத்துக் கூறும் தீபங்காற்றினால் நிர்வாண முற்றது என்பது முதலிய உதாரணங்களால் நாட்டப்படும். ஆதலின் அது கொண்ட அவர்காலம் புத்தர் காலத்துக்குப் பிற்பட்டது என்று சாதிப்பாரது கொள்கையும் பிரமாணமாகாது அது நிற்க ~ பாணினிதாம் செய்தவியா கரணத்தைக் காஸ்மீர தேசத்தரசனாகிய காநிஷ்க மகாராஜன் சபையிலே அரங்கேற்றித், தம்மை முன்னர் அவமதித்த புலவர்களை யெல்லாம் வாதத்தில் வெற்றி கொண்டு கலையெல்லாம் முற்றவுணர்ந்த பெரும்பண்டிதரென்று திசையெல்லாம் போற்ற விளங்கினர். இவர் திருவுருவத்தைச் சிலையில் அமைத்துப் பிரதிஷ்டை செய்து பூசித்து வந்தவனாகிய காநிஷ்டிகராஜன் சந்திரகுப்பதனுக்கு நெடுங்காலத்துக்கு முன்னே அரசு செய்தவன். இதனாலும் பாணினி முனிவர்காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முந்தியதென்பது நன்கு துணியப்படும். பாணினி முனிவர் சரித்திரம் கதாசரித்சாகரம் என்னும் நூலிலும் அதற்கு முதனூலாகிய பிருகத் கதையிலும் கூறப்பட்டுள்ளது

பாணினீயம்

பாணினி செய்த சம்ஸ்கிருத வியாகரணம். மூவாயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றாறு சூத்திரங்களையுடையது

பாண்டரங்கண்ணனார்

சோழன் ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாடியபுலவர்

பாண்டவர்

பாண்டவர் ஐவர், தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன். இவருள் முதல் மூவரும் குந்திவயிற்றிற் பிறந்தவராதலின் கௌந்தேயர் எனவும் மற்ற இருவரும் மாத்திரிவயிற்றிற் பிறந்தமையின் மாத்திரேயர் எனவும் பெயர் பெறுவர்

பாண்டிதேசம்

சோழதேசத்துக்குத் தென்மேற்கிலே கன்னியாகுமரி வரையுமுள்ளதேசம். இதற்கு ராஜதானியுமுள்ள தேசம். இதற்கு ராஜதானி மதுரை. பாண்டியர் அரசு செய்தமையின் இஃது இப்பெயர் பெற்றது. இதுவே தமிழ் பிறந்தநாடு. இதுமிக்க பழமையும் பெருங்கீர்த்தியும் அநேக சரித்திரங்களும் புண்யக்ஷேத்திரங்களும், நதிகளும் மலைகளுமுடையநாடு முச்சங்கமிருந்ததும் அநேகபுலவர்களைத் தந்தது மிந்நாடே

பாண்டியன்

துஷ்யந்தன் தம்பியாகிய திஷ்யந்தனது பௌத்திரனாகிய ஆசிரிதன் புத்திரன். இவனே பாண்டிதேசஸ்தாபகன். இவன் வமிசத்து வந்தோர் பல்லாயிரம் பாண்டியர். இவனே குலசேகரபாண்டியன்போலும். இவன் தென்மதுரையை நகராக்கி நான்கு வருணத்துச் சனங்களையும் ஸ்தாபனஞ் செய்து காசியிலிருந்து ஆதிசைவர்களையும் கோயிற்பூசைக்காகக் கொண்ர்ந்து இருத்தி அகஸ்தியர் அநுமதிப்படி அரசு புரிந்தவன். இவன் மகன் மலையத்துவசபாண்டியன். மலயமலையைத் தனது கொடியில் தீட்டிக் கொண்டமையால் மலயத்துவசனென்னும் பெயர் அவனுக்கண்டாயிற்று. இவன் அகஸ்தியரை உசாவியே எக்கருமமுங் செய்பவன் என்பது அக்கொடியின் குறிப்புப்பொருள் இப்பாண்டியன்காலம் துவாபரயுகம்

பாண்டியன் ஆரியப்படைதந்த நெடுஞ்செழியன்

இவனே கோவலனைக் கொல்வித்த பாண்டியன் என்பது சிலப்பதிகாரத்தால் விளங்குகின்றது. இவன் கல்வியைப் பொருளாகவும், கற்றோரைத் தனக்குறுதிச் சுற்றமாகவுங் கொள்பவன். கோவலன் ஊழிவினைவலியே இத்துணைச் சிறந்த இவ்வரசனைப் புத்திமயக்கி அவனைக் கொள்விக்குமாறுடன் படுத்தியது போலும். இவ்வரசனுடைய கல்வியறிவும் உலகியலுணர்ச்சியும் பெரிதும் வியக்கற்பாலன வென்பதற்கு : உற்றுழியுதவியு முறுபொருள் கொடுத்தும் ~ பிற்றைநிலை முனியர்து கற்றனன்றே ~ பிறப்போரன்ன வுடன் வயிற்றுள்ளுஞ் ~ சிறப்பின்பாலாற் றாயுமனந்திரியு ~ மொருகுடிப் பிறந்த பல்லோருள்ளு ~ மூத்தோன் வருகவென்னாதவரு ~ ளறிவுடையோனாறரசுஞ் செல்லும் ~ வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளுங் ~ கீழ்ப்பா லொருவனுமவன் கட்படுமே என்னும் இவ்வற்புத அநுபவப் பொருளையுடைய செய்யுளே சான்றாம். இச்செய்யுள் இவனாற் பாடப்பட்டதென்பது புறநானூற்றினுட் காண்க. சோழநாட்டிற் படையேற்றி வெற்றி புனைந்து மீண்டகயவாகு ஆங்குப்புகுந்ததும் மீண்டதும் பாண்டிநாட்டு வழியேயாமாதலின். இவன் இலங்காபுரத்து அரசனாகிய அக்கயாவாவுக்கு நட்பினன் போலும். இவனும் கரிகாற் சோழனும் கயவாகுவும் ஒருகாலத்தவர்கள். இவன் தனது நாட்டைச் செவ்வேகாக்கும் பொருட்டு உத்தரதேசத்திலிருந்து படைவீரரைக் கொணர்ந்திருத்தினவனாதலின் ஆரியப்படை தந்தவனென்னும் பெயர் பெற்றான்

பாண்டியன் கருங்கை ஒள்வாட்பெரும் பெயர்வழுதி

இவன் இரும்பிடர்த்தலையாராற் பாடப்பட்ட வீகையாளன்

பாண்டியன் கானப்பேர்தந்த வுக்கிரப்பெருவழுதி

இரவலக்கருங்கல மருகாதுவீசி வாழ்தல் வேண்டு மிவண்வரைந்த வைகல் ~ வாழச்செய்த நல்வினையல்ல ~ தாழுங்காலைப்புணைபிறிதில்லை உயர்ந்துமேந்தோன்றிப் பொலிக நந்நாளே என்ற ஒளவையாராற் பாடப்பட்டவன். இவனே வேங்கைமார்பனை வென்று கானப்பேரென்னு மரண் கொண்டவன், புறநா, இவனே திருவள்ளுவருக்குச் சிறப்புப்பாயிரஞ் சொன்ன பாண்டியன்

பாண்டியன் கிரஞ்சாத்தன்

இவன் ஆவூர்மூலக்கிழாராற் பாடப்பட்டவன். இவன் தன் வாயிலையடைந்த பெரியாரை என்மேலாணை உண்மின் என்ற குளுற்றிரந்துண்பிப்பவன் என்பதும், போரிற் பிறர்க்குடைந்து முதுகிட்டோடும் வீரர்க்கு முன்னே சென்று அபயங்கொடுத்துப் போரிற்றுணைபுரிந்து அவர்க்கு வெற்றிகொடுப்போன் என்பதும், மணம்மலி முற்றம் புக்க சான்றோர் ~ உண்ணாராயினுந் தன்னொடுகுளுற் ~ றுண்மெனவிரக்கும் பெரும் பெயர்ச்சாத்தன். நெடுமொழிமறந்த சிறுபோராள ரஞ்சிநீங்குங்காலை யேமமாகத்தான் முந்துறுமே என்னுஞ் செய்யுளாற் பெறப்படும்

பாண்டியன் குலவந்திகைப்பள்ளித் துஞ்சியநன் மாறன்

இவ்வரசன் நக்கீரனாராலும் மதுரை மருதனிளநாகனார் முதலியோராலும் பாடப்ட்டவன். கடிய சினத்தையுடைய யானைப்படையும். கடிய வேகமுஞ் செருக்குமுடைய குதிரைப்படையும், நெடிய கொடியினையுடைய நெடுந்தேர்ப்படையும், வலியுநெஞ்சும் போர்விருப்புமுடைய காலாட்படையுமாகிய நான்காலுமரசு சிறந்ததாயினும். சிறந்த அறநெறியே அரசரது வெற்றிக்குக் காரணமாம். அதனால் இவர் நம்மவரெனக் கொண்டு அவர் செய்யும் கொடுஞ்செயல்களைப் பொறுத்து நின் செங்கோலுக்குக் குற்றததை விளைவியாமலும், இவர் பிறரெனக் கொண்டு அவர் செய்யும் நற்செய்களைக் கெடாமலும் சூரியனைப் போற் காய்ந்தும், சந்திரனைப் போற் குளிர்ந்தும். மழையைப் போல் வழங்கியும் நீடூழி வாழ்கவென்னும் பொருளினை யுடைய. கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரியகலிமாவு நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவருமென நான்குடன் மாண்டதாயினுமாண்ட வறநெறிமுதற்றே யரசின் கொற்றம் அதனால், நமரெனக் கோல் கொடாது பிறரெனக் குணங்கொல்லாது ஞாயிறன்ன வெந்திறலாண்மையுந் திங்களன்ன தண்பெருஞ் சாயலும் வானத்தன்னவண்மையுமூன்று முடையையாகி. நீடூவாழிய. என்னும் இச்செவியறிவுறூ உச்செய்யுள் மதுரை மருதனின் நாகரால் இவனுக்குரைக்கப்பட்டது. இக்காலத்துப் புலவர் போலாவது அக்காலத்துப் புலவர் அரசருக்கு அறமுறையெடுத்து இடித்துரைக்கும் ஆண்மையும் அறிவுஞ் சிறந்தோரென்பதும், அவருரையை அரசரும் விரும்பி யேற்றொழுகு மியல்பினரென்பதும் இச்செய்யுளால் ஊகிக்கக் கிடக்கின்றன

பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதி

ஐயூர் முடவனாராலும் மருதனிளநாகனாராலும் பாடப்பட்ட ஒரு பாண்டியன். இவன் கூடகாரமென்னும் புதியிலிறந்தவன். இவனுடைய பேராண்மையை ஐயூர்முடவனார், நீர்மிகிற் சிறையுமில்லைத்தீமிகின் ~ மன்னுயிர்நிழற்று நிழலுமில்லை ~வளிமிகின் வலியுமில்லையொளிமிக் ~ கவற்றோரன்னசினப்போர்வழுதி ~ தண்டமிழ் பொது வெனப்பொறான் டோரெதிர்ந்து ~ கொண்டிவேண்டுவனாயிற் கொள்கெனக் ~ கொடக்க மன்னர் நடுக்கற் றனரே என்னுஞ் செய்யுளா லெடுத்துரைத்தனர்

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சியநன்மாறன்

இவன் சீத்தலைச்சாத்தனாராலே, காய்சினந்தவிராது கடலூர் பெழுதரு ~ ஞாயிறனையை நின் பகைவர்க்குத் ~ திங்களனையை யெம்மனோர்க்கே என்று பாடப் பட்டவன். பகைவரிடத்தே பேரருளுமுடையவன் என்பது அதன் பொருள்

பாண்டியன்அறிவடைநம்பி

இவன் தமிழ்ப்புலமையிற் சிறந்தவோர் அரசன். படைக்கப்படும் செல்வம் பலவற்றையும் படைத்துப் பலருடனே யுண்ணும் மிக்க செல்வத்தையுடையோராயினும் காலம் இடையேயுண்டாகக் குறுகக்குறுக நடந்து சென்று சிறியகையை நீட்டிக் கலத்தின் கட்கிடந்ததனைத் தரையிலே யிட்டும், கூடப் பிசைந்து தோண்டியும், வாயாற் கவ்வியும், கையினாலே துழாவியும். நெய்ச்சோற்றை உடம்பிற்படச் சிதறியும் இவ்வாறாக அறிவை இன்பத்தால் மயக்கும் புதல்வரை இல்லாதார்க்குத் தம் வாழ்நாளிலுளதாம் பெரும்பயன் பிறிதில்லையென்னுங் கருத்தினையுடைய~ படைப்புட்பலட்டைத்துப் பலரோடுண்ணு ~ முடைப்பெருஞ் செல்வராயினு மிடைப்படக் ~ குறுகுறு நடந்து சிறுகை நீட்டி ~ யிட்டுந் தொட்டுங் கல்வியுந் துழந்து ~ நெய்யுடையடிசின் மெய்படவிதிர்த்து ~ மயக்குறு மக்களை யில்லோர்க்குப் ~ டயக்குறையில்லை தாம்வாழுநாளே ~ என்னுஞ் செய்யுள் செய்த பெருந்தகையிவனே. இவனைப் பாடிய புலவர் பிசிராந்தையார். இவன் தன் பெயருக்கியைய அறிவிற் சிறந்தவனேயாம். இவன் கடைச் சங்க காலத்தவன்

பாண்டியன்தலையாலங்கானத்துச் செருவென்று நெடுஞ்செழியன்

இவன் புலமையிற் சிறந்தஓர் அரசன் என்பது புறநானூற்றினுள்ளேவரும் எழுபத்திரண்டாஞ் செய்யுளாற் புலப்படும். இவன் தான் புலமையிற் சிறந்தது மாத்திரமன்ற புலமையிற் சிறந்த புலவரைக்காத்தலிலும், அவராற் பாடப்படுதலிலும் மிக்கவிருப்புடையவனென்பது மாங்குடிமருதனாரால் மதுரைக்காஞ்சிக்குத் தலைவனாக்கப்பட்டமையாலம், கல்லாடர் இடைக்குன்றூர்கிழார் முதலியோராற் பாடப்பட்டமையாலும் இனிது விளங்கும். இவன் தலையாலங்கானத்திலே கோச்சேரமான் யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறையைப் பெரும்போரிலே வென்றா னாதலின் இப்பெயர் கொண்டான்

பாண்டியவமிசேசன்

சேரவமிசாந்தக பாண்டியனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன்

பாண்டீச்சுரன்

வமிச சிரோமணி பாண்டியனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன்

பாண்டு

விசித்திரவீரியன் மனைவியிடத்து வியாசருக்குப் பிறந்த இரண்டாம் புத்திரன். தாய் அம்பாலிகை. திருதராஷ்டிரன் தம்பி. இவனுக்குக் குந்தியும் மாத்திரியும் பாரியர். இவன் காட்டில் வேட்டையாடி வரும் போது அதிதூரத்தே ஒரு முனிவர் தமது பத்தினியோடு மானுருக்கொண்டு கலந்திருத்தலை நோக்காது தனியனெனக்கருதிப் பாணத்தை விடுத்து இருவரையுங் கொன்றான். முனிவர் பாண்டுவை நோக்கி, நீயும் கலவிக்காலத்துச் சிரப்பிளந்திறக்கவென்று சபித்திறந்தார். அச்சாப காரணமாக நெடுநாட்கலவியின்றியிருந்து ஒரு நாட் காமாதிகாரத்தால் மாத்திரியைப் புணர்ந்துயிர் துறந்தான். இவன் வெண்ணிறமுடையனாதலிற் பாண்டு வென்னும் பெயர் பெற்றான். இவன் புத்திரர் பாண்டவரெனப்படுவர். இவன் இறந்தபின்னர்ப் பாண்டவருள் மூத்தோனாகிய தருமன் அரசனாயனான். கண்ணில்லா மையால் அரசுரிமையிழந்திருந்த திருதராஷ்டிரன் தன் மகனாகிய துரியோதனன் சூழ்சியினாலே பாண்டவர்களைக்காடு கொள்வித்தான். பாண்டவர்கள் பதின்மூன்று வருஷங் காடு கொண்டிருந்து பின்னர்ப் போரிலே துரியோதனாதியரைக் கொன்று அரசு கொண்டார்கள்

பாதாளகேதன்

மதாலசனையெடுத்துப் போய்க்காலவனுக்குத் தபோபங்கஞ் செய்த ஓரிராக்ஷசன்

பாதாளேசுவரர்

திரு அரதைப் பெரும்பாழியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பாத்துமகற்பம்

பிரமாவினது ஆயுட்காலத்தில் முற்பாதி. வராககற்பமென்பது மது

பாத்துமபுராணம்

பாத்தும கற்பவரலாறு கூறும் புராணம். இது 55000 கிரந்தமுடையது

பானு

வசுதேவன் தம்பி. 2 சூரியன். 3 தக்ஷப்பிரஜாதிபதி மகன்

பானுகோபன்

இவன் சூரபன்மனுக்குப் பதுமகோமளையிடத்துப் பிறந்த புதல்வன். இவன் தொட்டிலின் கண்ணே மகவாய்க் கிடக்கு நாளிலொருநாள் தன்கண்கூசும்படி சூரியன் பிரகாசித்தானென்று கோபித்து அவனைப் பிடித்துவந்து தொட்டிலிற் றளைசெய்தவனாதலாலே பானுகோபினென்னும் பெயர் பெற்றான், பானு ~ சூரியன் ~ கோபன் ~ காய்ந்தவன், இவன் சுப்பிரமணிய யுத்தத்தலுயிர் துறந்தவன்

பானுமதி

கார்த்தவீரியார்கச்சுனன் தங்கை. அகம்யாதிபாரி. 2 துரியோதனன் பாரி. 3 சகதேவன் பாரி

பானுமந்தன், பானுமரன்

சீதாதேவி சகோதரன்

பாம்பாட்டிச்சித்தர்

இவர் திருக்கோகர்ணத்தைத் தமக்குச் சன்மஸ்தானமாகவுடைய ஒரு சித்தர். இவர் காலம் நன்கு புலப்படுவதன்றாயினும் சமீபகாலத்தவரல்ல ரென்பது எளிதிற் றுணியப்படும். இவர் ஆடுபாம்பே எழுந்தாடுபாம்பே என்று பாம்பை முன்னிலைப்படுத்தி ஒரு பாடல் செய்திருத்தலின் பாம்பாட்டிச்சித்தர் ரென்னும் பெயர் கொண்டார். இவர் பாடல் கூத்தர் பாடல் போல வெள்ளையாயிருப்பினும் அது தத்துவார்த்தங்களின் மேலதாகிய அற்புத ஞானப் பாடலாம். பாம்பென்று அவர்கூறுவது பாம்பு வடிவாக மண்டலமிட்டுக் கிடக்கும் குண்டலிசத்தியை சொரூப தரிசனத்துக்குக் குண்டலியை எழுப்புதல் அத்தியாவசிய மாதலின் இவர் அதனைப் பிரரேரிப்பாராயினார்

பாம்புரேசர்

திருப்பாம் புரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பாரத சம்பு

அநந்தபட்டர் செய்த வொரு காவியம்

பாரதம்

பரதவமிசராஜாக்கள் சரித்திரம். இஃது இதிகாச ரூபமாயுள்ளது. இதில் சிருஷ்டியாதி வரலாறும் தருமசாஸ்திரங்களும் உபநிஷதப் பொருள்களும் சரித்திரமுகத்தாலொட்டிக் கூறப்படும். இது வியாசர் சொல்ல விக்கினேசுவரர் எழுதியது. இஃது ஓரிலடித்தையாயிரங் கிரந்தமுடையது இதனைத்தமிழிலே வெண்பாவாற்பாடியவர் பெருந்தேவனார். அவர்க்குப்பின் விருத்தப்பாவாற் பாடியவர் வில்லிபுத்தூரர். அதன்பின்னர் அதனை எண்ணாயிரம் விருத்தப்பாக்களை யிடையிடை யிட்டு விரித்துப் பாடியவர் நல்லாப்பிள்ளை. இற்றைக்கு ஐயாயிரம் வருஷங்களுக்குமுன்னே சந்திர வமிசத்திலேயுதித்த திரதராஷ்டிரன் பிறவிக்குருடனாயிருந்தமையால் அவன் தம்பி பாண்டு அரசனாகித்தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்னும் ஐவரைப் புத்திரராக்கியிறக்க, திருதராஷ்டிரன் அப்புத்திரர்க்கு அவ்வரசிற்பாதி கொடுத்து இந்திரப்பிரஸ்தமென்னும் நகரத்திலிருத்தியதும், திருதராஷ்டிரன் புத்திரர் நூற்றுவருள் மூத்தோனாகிய துரியோதனன் பாண்டவர்களுடைய அரசைச் சூதினாலே கவர்ந்து கொண்டு அவர்களைக் காட்டுக்கேகுமாறு செய்ததோடு அவர்கள் மனைவியாகிய திரௌபதியையும் துகிலுரிந் மானபங்கஞ் செய்ததும், அதுகண்ட வீஷ்மாசாரியர் முதலிய பெரியோர், பாண்டவருடைய அரசைக்கவர்வது தகாதகரும மென்று துரியோதனனுக்கு எடுத்துரைத்த போது, அவன், பாண்டவர் பன்னிரண்டு வருஷம் வனவாசமும் ஒருவருஷம் அஞ்ஞாதவாசமும் செய்து மீள்வரேல் அவர்க்குப் பாதியரசு கொடுப்பேன் என்றுடன் பட்டதும், அவ்வாறே பாண்டவர்கள் பதின்மூன்று வருஷங்முங் கடந்து மீண்டு கண்ணபிரானைத் தூது போக்கித்தமது பாகத்தைக் கேட்டதும், அவன் மறுத்ததும், பின்னர்க் குரு க்ஷேத்திரத்திலே பதினெட்டு நாட்பெருங் கொடும் போர் புரிந்ததும் துரியோதனாதியர் நீர்மூலப்பட்டதும் பாண்டவர் வெற்றிபுனைந்து அரசு பெற்றுச் செங்கோலோச்சியது மாகியசரித்திரமோ பாரதமாம். சம்ஸ்கிருதபாரதத்தைப் போலும் போகமோக்ஷத்துக்குபகாரமாகிய நூல் உலகத்தில் வேறில்லை. சம்ஸ்கிருத பாரதத்தின் அத்தியற்புத சிறப்பை நோக்கியே ஐரோப்பியரும் தத்தம் பாஷைகளிலே அதனைப் பெரும் பொருள் செலவிட்டு மொழிபெயர்த்துக் கொண்டார்கள். அந்நூலை யுள்ளவாறு தமிழிலே வசனரூபமாக மொழிபெயர்த் துலகத்துக் குபகரித்தல் தமிழ்நாட்டுப் பிரபுதிலகர்கள் கடனாம்

பாரதம் பாடிய பெருந்தேவனார்

இவர் தமிழிலே பாரத கதையை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றிய ஆசிரியர். இவர் நாடு தொண்டைநாடு. இவர் ஜாதியில் வேளாளர். நற்றிணை, கலித்தொகை, புறநானூறு முதலிய நூல்களிலுள்ள கடவுள் வாழ்த்துக்களும் இவராற் பாடப்பட்டன. கடைச்சங்கப்புலவர்க ளுள்ளே பெயர்படைத்தவர்களுள் இவருமொருவர். இவர் சைவசமயி என்பது இவர் பாடிய கடவுள் வாழ்த்துக்களாலினிது புலப்படுகின்றது. புறநானூற்றுக்கடவுள் வாழ்த்தாக இவர் செய்த, திருமுடிமேற் சூட்டப்படுங் கண்ணிகார் காலத்து மலரும் நறிய கொன்றைப்பூ, அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக்கொன்றைப்பூ ~ அழகிய ஏறப்படுவது தூயவெளியஆனேறு, மிக்க பெருமைபொருந்தியகொடியும் அவ்வானேறென்னு சொல்லுவர். நஞ்சினது கறுப்புத்தடமிருமிடற்றை அழகு செய்தலுஞ் செய்தது, அக்கறுப்புத்தான் மறவாயு, வானோரை உய்யக் கொண்டமையின், வேதத்தைப்பயிலும் அந்தணராற் புகழவும்படும். பெண்வடிவு ஒரு பக்கமாயிற்று, ஆய அவ்வடிவுதான் தன்னுள்ளே யொடுக்க மறைக்கினும் மறைக்கப்படும். பிறைதிருநுதற்கு அழகாயது, அப்பிறைதான் பெரியோன் சூடுதலால் பதினெண்கணங்காளாலும் புகழவும்படும். எவ்வகைப்பட்ட வுயிர்களுக்குங் காவலாகிய நீர் தொலைவறியாக் குண்டிகையானும், தாழ்ந்த திருச்சடையானுஞ் சிறந்த செய்தற்கரிய தவத்தையுடயோனுக்கு என்னும் பொருளினையுடைய செய்யுள்வருமாறு: கண்ணிகார்நறுங் கொன்றைகாமர் வண்ண மார்பிற்றாருங் கொன்றை யூர்தி வால்வெள் ளேறேசிறந்த சீர்கெழுகொடியும் வேறேன்ப கறைமி ~ றணியலு மணிந்தன்றக்கறை ~ மறைநடுவிலந்தணர் நுவலவும்படுமே ~ பெண்ணுருவொரு திறனாகின்றவ்வுருத் ~ தன்னுளடக்கிக் கரக்கினுங் கரக்கும் ~ பிறை நுதல் வண்ண மாகின் றப்பிறை ~ பதினெண்கணனு மேத்தவும் படுமே யெல்லாவுயிர்க்கு மேமமாகிய நீரறவறியாக் கரகத்துத் ~ தாழ்சடை பொலிந்தவருந்தவத்தோற்கே, என்பது. இச்செய்யுளிலே சிவனுக்குரிய பூவும், மாலையும் வாகனமும் கொடியும், அவர் நஞ்சுண்டருளிய பெருங்கருணையும், ஆன்மாக்களின் பெருங்கருணையும், ஆன்மாக்களின் பொருட்டுக் கொண்டருளிய வடிவும், தலையிலே கங்கையையுஞ் சந்திரனையுமணிந்தமையும், அவர் எல்லாவுயிர்க்குங் காவல் பூண்டமையும் எடுத்தோதப்பட்டன இச்செய்யுளிலே பெண்ணுருவொரு திறனாகின்றவ்வுருத், தன்னுளடக்கிக்கரக்கினுங்கரக்கும் எனவரும் அடிகளால் சிருஷ்டியின் பொருட்டுத் தமது சக்தியை ஒருபாலாகத் தோற்றுவித்துப் பின்னர் உலகை ஒடுக்குங்காலத்திலே தமது சக்தியைத் தம்முள்ளே மறைத்துக் கொள்வரென்பது தோன்ற விளக்கலின், இவர் சைவ சமயத்துள்ளுறைப் பொருளெல்லாம் நன்குணர்ந்தவரென்பது அநுமானிக்கக் கிடக்கின்றது. இவர் மதுரைச் சங்கத்திறுதிக் காலத்திலேயிருந்த புலவர்களுள்ளே மிகமுதியவர்

பாரந்தகன்

இவன் சாரமுனிவர் சாபத்தார் தன் உறையூர் மண்மாரியாலழியப் பெற்ற சோழன்

பாரன்

பிருதுசேனன் புத்திரன். இவன் மகன் நீபன்

பாரவி

கிராதார்ச்சுனீயஞ் செய்த சம்ஸ்கிருத கவி

பாராசரம்

இஃதோருபபுராணம்

பாராசரி

சுக்கிரன்

பாரி

இவன் பறம்பு என்னுமூரிலிருந்த ஒரு சிற்றரசன். இவன் கொடையாற் சிறந்தோனாதலின் வள்ளல்களுளொருவனாயினான். இவன் கொடைச்சிறப்பு நோக்கிக் கொடையாளரைப் புகழ்வோ ரெல்லோரும் பாரியேயென்று புகழ்வார்கள். சுந்தரமூர்த்தி நாயனாரும் இவனுடைய வள்ளற்றன்மையைக் கேள்வியுற்றே இவனைக் கொடைக்கிலக்கியமாக்கிக் கூறின ரென்பது கொடுக்கிலாதானைப் பாரியேயென்றுகூறினும் என்னுந் திருப்புகலூர்ப் பதிகத்துத் தேவாரத்தாற் பெறப்படும். இவன் தன் காலத்திருந்த சேரசோழ பாண்டியர்களது கீர்த்திப் பிரகாசத்தையெல்லாம் தன் கொடைக்கீர்த்திப் பிரகாசத்தால் மங்குவித்தவன். அதுகண்டு அவ்வேந்தர் மூவரும் போர் தொடுத்து இவனைக் கொன்றொழித்தார்கள்.இவனோடு இவன் கிளைஞரும் போரில் மடிந்தொழிய, இவனை யடுத்துவசித்த புலவர்களும் நிலைகெட்டார்கள். இவனுடைய புத்திரிகள் தம்மைக்காப்பா ரெவருமின்றிக் கபிலரையடைய, அவர் தாம் பாரியிடத்துப் பெற்ற நன்றியை மறவாது அவர்களை வளர்த்துக் கோமக்களுக்குமணம் பொருத்தமுயன்றும் பயன் படாமையால் அந்தணர்களுக்கு மணம்முடித்துக் கொடுத்தார். கபிலர் கடைச்சங்கத்துப் புலவர்

பாரிஜாதம்

அமிர்தமதனத்துக்கண்ணே யெழுந்த பஞ்சதருக்களிலொன்று. வீமன் திரௌபதிக்காகத் தேவலோகஞ் சென்று இதன் புஷ்பமொன்று எடுத்துக்கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்தான்

பாரிபத்திரம்

சரூசதேசத்து முக்கியபட்டணம். விந்தியத்துக்குச் சமீபத்துள்ளது

பாரியாத்திரம்

குருபுத்திரன். இவன் குசன் வமிசம்

பார்க்கபூமி

பார்க்கவன் புத்திரன்

பார்க்கவன்

சுக்கிரன், உ, பரசுராமன், ந, சிவன், ச, வீதிஹோத்திரன் மகன்

பார்க்கவம்

ஓர் உபபுராணம்

பார்சரஸ்வதி

சன்னயபட்டர் சிஷன்

பாலகன்

சுசர்மன் பாரியைக்கவர்ந்த அசுரன். ஜாதகர்ணிசீஷன்

பாலகர்

கிழக்காதி முறையே இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், என எண்மர்

பாலகாசுவன்

புரூரவன் மகனாய அமவசுமிசத்து அஜகன் மகன். குசிகன் தந்தை

பாலசவுந்தரியம்மை

திருப்பைஞ்ஞீலியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பாலவற்சை

தியுமற் சேனன்பாரி. சத்தியவந்தன் தாய்

பாலி

கௌதமர் காலத்திலும் அதற்குப்பூர்வாபரகாலங்கிளிலும் ஆரியா வர்த்தத்திலே வழங்கிய பாஷை. இப்பாஷையிலேயே பௌத்தசமய சாஸ்திரங்களெல்லாம் முள்ளன. இப்பாஷை சம்ஸ்கிருத பிராகிருதம்

பால்வண்ணநாதர்

திருக்கழிப் பாலையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பால்வளை

திருப்பட்டீச்சரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பால்வளைநாயகி

காவிரிப்பூம்பட்டினத்துள்ள ஐவகை மன்றத்து ளொன்று. இஃது அரசனுடைய செங்கோல் கோடுதல் முதலியகுற்றங்கழின் அவற்றைப் பாவைதெரிவிப்பதற் கிடமாகவுள்ளது

பாஷ்கலி

பாஷ்கலன் புத்திரன்

பாஸ்கரரசாரியர்

இவர்காலம் இற்றைக்கு எழுநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னதென்பர். இவர் ஒரு பிரபல சோதிடகிரந்தகர்த்தா. இவரே பீஜகணிதஞ் செய்தவர். இப்பிஜகணிதத்தில் வருக்கசங்கரணவிதி என்று கூறப்படுவதாகிய ஒரரிய கணித விதிகூறப்பட்டிருக்கின்றது

பாஸ்கரராமாயணம்

பாஸ்கரராலே செய்யப்பட்டது

பாஸ்வரர்

ஒரு தேவகணம். இவர் அறுபத்து நால்வர்

பாஹிலிகன்

குருவமிசம், பிரதீபன் புத்திரன். சோமதத்தன் தந்தை. பூரிசிரவன் பாட்டன். இவன் பாரதயுத்தத்தி லிறந்தவன்

பாஹிலிகம்

சிந்துநதிக்குச் சமீபத்துள்ள தேசம்

பாஹூகன்

சகரன் தந்தை. விருகன்புத்திரன். 2 நளன் இருதுபர்னனிடம் சென்றிருந்தகாலத்துத் தான்பூண்டபெயர்

பாஹூதை

சரசுவதிநதியோடு சேருகின்ற ஒரு நதி. 2. மகாநதியிற்கலக்கின்ற சிறுநதி

பிங்கலமுனிவர்

திவாகரநிகண்டு செய்த திவாகரர் புத்திரனார். இவர் சோழவமிசத்தி லுதித்தவரேயாயினும் துறவு பூண்டு தமிழ் நூலாராய்ச்சியிலே தமது காலத்தைப் போக்கியவர். இவர் செய்த நூல் பிங்கலநிகண்டு. இவர்காலம் நச்சினார்க்கினியர் காலத்துக்கு முந்தியது

பிங்களை

தக்ஷிணதிக்குக் காவல்பூண்ட பெண் யானை

பிசர்சர்

தேவயோனியிற் பிறந்ததோரிழிகுண சிருஷ்டிகள்

பிசாசகை

ரிடிபாவதத்திலுற்பத்தியாகு மொருநதி

பிண்டம்

விளாங்கனிப் பிரமாணமாகப் பிதிர் தேவதைகளுக்கு இடப்படும்பலி

பிண்டாரம்

ஒருபுண்ணிய க்ஷேத்திரம். இது துவாரகாபுர சமீபத்துள்ளது

பிதிர்கணம்

அங்கிரசப் பிரசாபதிக்குச் சுவதையிடத்துப் பிறந்தவர்கள். இவர்களே உலகத்துப் பிரஜாவிருத்திக்கு வித்தாயிருப்பவர்கள். இவர்களே பிதிர் தேவதைகள். வசுருத்திரர் ஆதித்தயர் என்னுமிவர்களுடைய ரூபங்களை யுடையராய்ச் சந்திரலோகத் திருப்பவர்கள். பிதிர்லோகத்தை அடைபவர்கள் மீளும்போது, சந்திரனை விட்டு ஆகாசம், காற்று, புகை, மேகம், மழை, வித்து இவற்றின் வழியாக ஸ்திரீபுருஷர்களை யடைந்து பிறப்பார்கள், தேவர் காண்க

பிதிர்குலியை

மலயத்தி லுற்பத்தியாகுமொரு நதி

பிதிர்தீர்த்தம்

கயை

பிந்துசாரன்

சந்திரகுப்தன் புத்திரன். மகததேசாதிபதி

பிந்துமதி

சசிபிந்தன் மகள். மாந்தாதாபாரி

பிப்பபாச்சையர்

கொப்பூரில் விளங்கிய ஒரு சிவனடியார். இவர் சிவனடியாருடைய பரிகல்சேஷத்தை வாரிக்கொண்டு ஒரு வைஷ்ணவ அக்கிரகாரவழியே செல்லும் பொது அவ்வக்கிரகாரத்தார் தடுக்கச் சினங்கொண்டு அப்பரிகல சேஷத்தை வாரிவீசினர். அது பட்ட வீடுகள் எல்லாம் எரிந்து சாம்பராயின. வைஷ்ணவர்கள் அதுகண்டு அவரைச் சரணடைந்து அநுக்கிரகம் பெற்றார்கள்

பிப்பலன்

இவ்வலன் புத்திரன். 2 அரிஷ்டன் தம்பி

பிரகணன்

சுமாலி புத்திரன்

பிரகஸ்பதி, பிருஹஸ்பதி

பிரமமானசபுத்திரருள்அங்கிரசன் புத்திரனாகிய வியாழன். இவன் தேவகுரு. மகாபுத்திமான். வாசஸ்பதியெனவும் படுவன். இவன் பாரிதாரை. இவன் சகோதரி யோகசித்தி. இவன் பாரியாகிய தாரையைச் சந்திரன் கவர்ந்தான். அதனால்த பிருகஸ்பதிக்கும் சந்திரனுக்கும் பெரும்போர் மூண்டது. பிரமதேவர் சந்திரன்பாற் சென்று தாரையை விட்டுவிடும்படி செய்தார். தாரை பிருஹஸ்பதிக்கு மீண்டும் மனைவியானாள். சந்திரனுக்குத் தாரைவயிற்றிற் பிறந்த புத்திரன் புதன். அவனே சந்திர வமிசஸ்தாபகன். பிருகஹஸ்பதி மண்டலமும் பிருஹஸ்பதியெனப்படும். அது பொன்மயமாயிருத்தலின் பிருகஸ்பதிபீதகன், பொன் என்னும் பெயர்களைப் பெறுவன். இம்மண்டலத்தைச் சூழ்ந்துள்ள மண்டலங்களிலே மனுஷரிற் சிறந்த அறிவுடையோர்கள் வசிக்கின்றார்களென்பது ஐரோப்பிய வான சாஸ்திரிகள் துணிபு. அது பிருஹஸ்பதியைத் தேவகுரு என்று கூறும் நமது ஆரியசித்தாந்தத்திற்கு மொத்தமாகும். பிருகஸ்பதி மண்டலம் நமது பூமண்டலத்திலும் பதின்மடங்கு பெரியதாயினும் மிக்கலேசான கோளாரும் அந்தரத்திற் சஞ்சரிக்கும் லகுதேகிகளாயிருப்பார். அவர்களைத் தேவகணத்தினர் என்பது புராணமதம். பிருஹஸ்பதி மண்டலம் புராணங்களிலே ரதமெனப்படும். அதனைச் சூழ்ந்துள்ள மண்டலங்களைப் புராணங்கள் வெண்ணிறக் குதிரைகளாக ரூபகாரம் பண்ணும். ஐரோப்பியவான சாஸ்திரிகள் அவைகளைச் சந்திரரென்பர்கள். அம்மண்டலங்களின் றொகையைப் புராணங்கள் எட்டிடன ஐரோப்பியர் ஐந்தென்பர்

பிரகாமியம்

நினைத்த போகமெல்லாம் பெறுதல். இஃது அஷ்டசித்திகளுளொன்று

பிரகேசுவரர்

திருநன்னிலத்துட் பெருங் கோயிலிலே எழுந்தருளியிருக்குஞ் சுவாமி பெயர்

பிரசாதகன்

இந்திரத்துய்மன் வமிசத்தரசன்

பிரசிரன், பிரசிரிதன்

வசுதேவனுக்குச் சாந்தியிடத்துப் பிறந்த புத்திரன்

பிரசூதி

சுவாயம்பவமனு மகன்

பிரசேசுவரி

திருநன்னிலத்துட் பெருங்கோயிலிலே எழுந்தருளியிருக்குந் தேவியார் பெயர்

பிரசேதக

காந்தாரன் பௌத்திரடௌத்திரன். இவன் புத்திரர் யாவரும் மிலேச்சராயினர்

பிரசேதசர்

பிராசீனவருகிக்குச் சமுத்திரன் மகளாகிய சத்திருதியிடத்துப் பிறந்தவர்கள். இவர்கள் பதின்மர்சகோதரர். மகாதபோதனர்கள் இவர்கள் பாரி மரீஷை

பிரசேதன், பிரசேதசன்

வருணன்

பிரசேனசித்தன்

ரேணுகை தந்தை. ஜமதக்கினிமாமன்

பிரசேனன்

சத்தராசித்து தம்பி

பிரஜானி

பிராம்சமகன்

பிரஜாபதி

பிரமன்

பிரஜாபதிக்ஷேத்திரம்

பிரயாகை, பிரதிஷ்டானபுரம், வாசுகிஹிரதம், வெகுமூலபர்வதம் என்னும் இந்நான் கிடத்துக்கு மிடையேயுள்ள ஒரு புண்ணியக்ஷேத்திரம். இதில் ஸ்தானஞ் செய்வோர் வெகுபுண்ணியங்களைப் பெறுவர்

பிரணவம்

ஓங்காரம். ஆதி அடிரம். பிரணவமானது சிருஷ்டிக்கு முன்னுள்ள அவசரத்திலே பிறமத்தின் வேறாகாத சிற் சோதியாகவுள்ளது. அது சிருஷ்டியின் பொருட்டு விகாரப்படுமிடத்து விந்து ரூபமாகக் கிடக்கும். விந்துரூபமாகக் கிடக்கும் அவசரத்திலே அதனிடத்துளதாகிய வைந்தவ சக்தியினாலே புருஷாமிசமாகிய நாதங் கம்பிதமாகும். அஃதாவது வட்டவடிவினதாகிய விந்து விஷமப்பட்டு அண்டவடிவுபெறும். எனவே பிரணவம் விஷமப்பட்டவிடத்து விந்துவென்றும் அது விஷமப்பட்டவிடத்து நாதமென்றும் பெயர் கொள்ளும். காரணத்திலொடுங்கிய வுலகத்தை மீளவும் எழுப்புவது சைதன்னிய சேஷ்டையேயாம். சைதன்னிய சேஷ்டையின்றி உலகமயங்காது. ஐரோப்பிய பௌதிக தத்துவபண்டிதர்களும் சேஷ்டையே, வைப்ரேஷன், சிருஷ்டிக்குக் காரணமென்பார்கள். அச்சேஷ்டை புரிபோலச் சுழன்று சுழன்ற செல்வதென்பது ஐரோப்பியமதம், Spiral motion,. ஆரிய சாஸ்திரங்களும் பிரணவம் சங்குவடிவினது என்பனவாதலின் இரண்டற்கும் பேதங்காண்கிலம். சங்கு தன்னிடத்தே ஆகாயவெளியும் புரியுமுடையதாதலின் பிரணவத்துக்குக் குறியாயிற்று பிரணவம் ஸ்தூலப் பிரணவம் சூக்கமப் பிரணவமென இருபாற் படும் ஹ்ரீம் என்பது ஸ்தூலமும் ஓம் என்பது சூக்குமமுமாம். பிரணவம் பதினாறு உறுப்புக்களாலாயது. அவ்வுறுப்புக்கள் மாத்திரை யெனப்படும். அப்பதினாறுமாத்திரைகளும் வருமாறு :. அ,. உ,. ம,. அர்த்தம்,. நாதம்,. விந்து,. கலை,. கலாதீதை. சாந்தி,. சாந்தியாதீதை,. உன்மணி,. மனோன்மணி,. புரி,. மத்தியமை,. பசியயந்தி,. பரை, இப்பதினாறும் நூற்றைம்பத்தாறாகவும் வகுக்கப்படும். அவையெல்லாம் அப்பையதீக்ஷிதர் செய்தருளிய அநுபூதி மீமாஞ்சை பாஷியத்திலே விரித்து விளக்கப்பட்டிருக்கின்றன அகரம் பிரமாவையும், உகரம் விஷ்ணுவையும், மகரம் அரனையுங்குறிக்குமென்பாரும், அகரம் விஷ்ணுவையும் உகரம் சிவத்தையும், மகரம் பிரமாவையுங் குறிக்குமென்பாருமாகச் சைவ வைஷ்ணவசமயிகள் இப்பிரணவப் பொருளிலே தம்முண் மாறுபடுவார்கள். அகரம் பிரமத்தைக் குறித்து நிற்றலாலே அந்தப்பிரமத்தை விஷ்ணுவென்றும் சிவமென்றும் தத்தமக்கிஷ்ட நாமத்தால் வழங்குமிருவர் குறிக்கோளுமொன்றேயாம் பிரணவ சொரூபத்தை இது வென்றெடுத் துரைத்தல் கூடாதென்று சாஸ்திரங்களெல்லாங் கூறுதலின் உண்மையணர்ந்த ஞானிகளுக்கே அதன்பரப்பெல்லாம் புலனாமென்க. மந்திரங்களுள்ளே பிரணவமே சிறந்ததும் மோடிசாதனமாயுள்ளதுமாம். முண்டகேபநிஷத்தில் இப்பிரணவமாகிய வோங்காரத்தைக் குறித்துச் சொல்லப்பட்ட ஒருவாக்கியம் வருமாறு: ஓம் என்பது வில்லு, ஆன்மாவே பாணம், பிரமமேகுறி. இடையறாத் தியானத்தினாலேயே குறியை எய்தல்கூடும். குறியிற்புதைந்த பாணம் போல ஆன்மாபிரமத்திற் புதையக்கடவது. பிரணவம் என்பதன் பொருள் அழியாதது. கழிந்ததும் நிகழ்வதும், வருவதுமாகிய முக்கூற்றுப் பிரபஞ்சமெல்லாம் ஓமெனும் பொருளே அகரம் ஜாக்கிரவலகமாய் யாவரும் வசித்தற் கிடமாகவுள்ளது. இதனையுணர்பவன் இஷ்டபோகத்தை யடைகிறான் உகரம் சொப்பனமாய்ப் பிரகாசமாகவுள்ளது. மகரம் சுஷூப்தியாய் முடிவிடமாகவுள்ளது, மாண்டூக்கியம்

பிரதர்த்தன்

திவோதாசன் புத்திரன்

பிரதாப சூரியன்

சம்பகபாண்டியனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன்

பிரதாபமார்த்தாண்டன்

வீமரதபாண்டியனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன்

பிரதாபருத்திரீயம்

வித்தியாநாதகவி செய்த அலங்கார சாஸ்திரம்

பிரதிவாகு

கிருஷ்ணன் வமிசத்து வச்சிரன்புத்திரன். 2. அக்குரூரன் தம்பி

பிரதிவிந்தியன்

தர்மராஜாவுக்குத் திரௌபதியிடத்துப் பிறந்த புத்திரன்

பிரதிஷ்டானபுரம்

இது கங்கையும் யமுனையும் சங்கமிக்குமிடத்துக்குக் கிழக்கேயுள்ள நகரம்

பிரதீபன்

வீமன் புத்திரன். பாரி சுநந்தை. புத்திரர் தேவாபிசந்தனு

பிரத்தயுமனன்

கிருஷ்ணனுக்கு ருக்மிணியிடத்துப் பிறந்த புத்திரன். பாரி ரதி

பிரத்தியக்கிரன்

உபரிசரவசு புத்திரன்

பிரத்தியடிநாயகியம்மை

திருக்கரவீரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பிரத்தியூஷன்

அஷ்ட வசுக்களுளொருவன்

பிரத்தியோதனன்

சூரியன்

பிரபலோற்பலன்

விஷ்ணுபரிசார கருளொருவன்

பிரபாசன்

வசுக்களுளொருவன்

பிரபாசம்

ஒரு புண்ணியதீர்த்தம்

பிரபாசை

பிரஜாபதி பாரி

பிரபாவதி

சூரியன் பாரி

பிரபுலிங்கலீலை

துறைமங்கலத்துச் சிவப்பிரகாசசுவாமிகள் செய்த தமிழ்க் காவியம். கன்னலையுங் கைப்பிக்கும் சொன்னலமும் பொருணலமுஞ் சிறந்தது. இஃது ஐக்கிய வாதசைவ நூல்களுள் ஒன்று

பிரபை

புஷ்பாரணன் பாரி. மக்கள் பிராதக்காலம், மத்தியானம், சாயங்காலம்

பிரபோதசந்திரோதயம்

வடமொழியிலே கிருஷ்ணமிசிரபண்டிதராற் செய்யப்பட்ட ஓர் அற்புத வேதாந்த நாடகம். இதனைத்தமிழிலே விருத்தப்பாவான் மொழி பெயர்த்தவர் மாதை வேங்கடேசபண்டிதர் ஆன்மாக்கிடத்துளவாகிய காமக் குரோதாதிகளையும் விவேகம் சாந்தம் முதலியவைகளையும் ரூபகாரம் பண்ணிப் பாரத கதையைப் போல நாடுகவர்தல் காட்டுக் கோட்டல் தூது போக்கல் போர்புரிதல் வகைசூடல் ஞானமுடிசூட்டு எனக் கட்டியமைத் துரைப்பது.1250 வருஷங்களுக்கு முன் வடமொழியிற் செய்யப்பட்டது

பிரமகீதை

இஃதுபநிஷதப் பொருளெடுத்துக்கூறுவது. இதனை அருளிச் செய்தவர் பிரமதேவர். இதனைத் தமிழிலே பாடியவர் தத்துவராயர்

பிரமகைவர்த்தம்

ஒரு புராணம். இதுவசிட்டர் செய்தது. இது 18000 கிரந்தமுடையது

பிரமசூத்தரம்

வேதாந்த சூத்திரம்

பிரமதகணம்

கைலாசத்தலிருக்கும் பக்தர் சமூகம்

பிரமதி

சியவனனுக்குச் சுகன்னிகையிடத்துப் பிறந்த புத்திரன். உரூரன் இவன் மகன். பாரி கிருதாசி

பிரமத்தன்

சூளிபுத்திரன். இவன் குசநாபன்புத்திரிகளை மணம் புரிந்தவன்

பிரமத்துவரை

விசுவாவசு என்னும் கந்தருவராஜன் மகள். தாய் மேனகை

பிரமபுரநாதர்

திருஅம்பர்ப் பெருந்திருவிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்

பிரமபுரிநாயகர்

திருச் சிவபுரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

பிரமபுரீசர்

திருக்கடவூர் மயானத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பிரமம்

ஏகமாய்க் சச்சிதாநந்தமாய் ஜகமனைத்துந் தோன்றி யொடுக்குதற்கிடமாயுள்ள கடவுள். ஒரு புராணம். அது பதினாயிரங்கிரந்தமுடையது. உலக சிருஷ்டியையும் மநுவந்தரங்களையும், கிருஷ்ணர்வரைக்குமிருந்த சூரிய சந்திர குலத்து அரசர்களையும், சூரியன் பொருட்டும் சிவபெருமான் பொருட்டும் சகநாகர் பொருட்டும் உள்ள திருக்கோயில்களையும், திருநந்தனவனங்களையும் ஜகநாத மான்மியத்தையு முணர்த்துவது

பிரமராம்மை

ஸ்ரீசைலத்திலுள்ள பராசக்தி பெயர்

பிரமரிஷேதேசம்

குருக்ஷேத்திர மற்சியபாஞ்சால கன்னியாகுப்த சூரசேன மதுராதேசங்கள் இப்பெயர் பெறும்

பிரமலோசை

ஓரப்சரசை

பிரமவித்தை

பாரதம்படி, பிரஜாபதிபாரி. 2. பிரமா அதர்வனுக்குரைத்த ஞானநூல்

பிரமா

சிருஷ்டி கிருத்தியத்தை நடாத்தும் அதிகாரமூர்த்தி. இவர் விஷ்ணுவினது நாபிக்கமலத்திலுதித்தவர். இவர் சக்தி சரசுவதி தேவி. இவர்க்கு வாகனம் அன்னம். இவர் தாம் சர்வலோகங்ளையுஞ் சிருஷ்டிக்கு மாற்றலுடையரெனக் கர்வித்துச் சிவனை மதியாயிருந்து சிவன் கோபாக்கினியிற் றோன்றிய வைரவக்கடவுளாலே ஒரு தலைகொய்யப்பட்டு நான்கு முகங்களையுடையராயினமையின் நான்முகன் சதுர்முகன் என்னும் நாமங்களைப் பெறுவர். இவர் சிருஷ்டிமுறையறியாது மயங்கிச் சிவனை வழிபட்டு அவரைத் தமக்குப்புத்திரராகப் பெற்றாரெனச் சில புராணங்கூறும். சிவன் தாமே இவருக்குப் புத்திரராகவந்தமையின் இவருக்குப் பிதாமகன் என்னும் பெயருளதாகுக வென்றார். பிரமாவைச் சுப்பிரமணியக்கடவுள் சிறையிலிட்டுச் சிருஷ்டிகிருத்தியத்தை ஒருகாலத்தில் நடாத்தினர் என்பது கந்தபுராணம் இங்ஙனம் புராண சரித்திரம் பலவுள. பிரமாவானவர் மகாப்பிரளய காலத்திலொடுங்கிச் சிருஷ்டிகாலத்திலே தோன்றுதலின் அக்காலந்தோறும் மழிகின்ற பிரமாக்களினது கபாலங்களைச் சிவன் மாலையாக அணிவர் என்பதினால் தேவரெல்லோரு மழியவும் அழியாது எஞ்சி நிற்பவர் சிவனொருவரே என்பது பெறப்படும்

பிரமாண்டம்

சிருஷ்டி காண்க. 2 பதினெண்புராணத்தொன்று. இது பிரமப்புரோக்தம். இத பன்னீராயிரங் கிரந்தமுடையது

பிரமாவர்த்தம்

சரசுவதி திருஷத்வதி நதிகளுக்கு நடுவிலுள்ள தேசம்

பிரமோத்தரகாண்டம்

வரதுங்கராமபாண்டியன் பாடியவொரு தமிழ் நூல். அது சைவ புராணங்களின் சாரமாகவுள்ளது

பிரயாகன்

இந்திரன்

பிரயாகை

பிரஜாபதிக்ஷேத்திரம் இது கங்கையும் யமுனையும் கூடுமிடத்திலுள்ளது. இஃது ஒருபிரபலபுண்ணிய க்ஷேத்திரம்

பிரயோகவிவேகம்

குருகூர்ச் சுப்பிரமணிய தீக்ஷிதர் செய்த இலக்கணம். இந்நூற் குரையும் அவரே செய்தார். இந்நூல் வடமொழி தமிழ்மொழியிலக்கண நூல்களின் கண்ணேயுள்ள பிரயோக வொற்றுமைகளை எடுத்து விளக்குவது. இது காரகசமாசதத்திததிங்நு என்னு நான்கு படலங்களும் ஐம்பத்தொரு கலித்துறைகளுமுடையது. இந்நூல் செய்யப்பட்ட கால மிற்றைக்கு இருநூறு வருஷங்களுக்கு முன்னுள்ளது

பிரலம்பன்

பலராமராற் கொல்லப்பட்ட ஓரசுரன்

பிரழகன்

ரேவதி தந்தை

பிரவரன்

ஒரு விப்பிரன்

பிரவர்ஷணம்

மதுராபுரிக்குச் சமீபத்துள்ள மலை. கிருஷ்ணனும் பலராமனும் ஜராசந்தனுக்கஞ்சி ஒளித்திருந்தமலை. இது ஜராசந்தனால் தீயூட்டப்பட்டது

பிரவீரன்

பு. பிராசிவன்வானன் புத்திரன்

பிரஹலாதன்

திதிவமிசம். இரணியகசிபன் புத்திரன். தாய் லீலாவதி. இப்பிரஹலாதனை ரக்ஷிப்பதும் இரணியகசிபனைக் கொல்வதும் காரணார்த்தமாக விஷ்ணுதூணிடை நரசிங்கமாக அவதரித்தார். இவன் அரிபக்தியிற் சிறந்தவன்

பிரஹஸ்தன்

சுமாலி மகன்

பிரஹேதி

ஹேதிகாண்க

பிராக்ஜோதிஷம்

நரகாசுரன் பட்டணம். கிராதர் வசிக்கும் காமரூப தேசத்துள்ளது

பிராசின்னவானன்

முதல் ஜனமே ஜயன் மகன். பிராசீசனெனவும் படுவன்

பிராசீசன்

பிராசின்னவானன்

பிராசீனவருகி

ஹவிர்த்தானன் புத்திரன். வருகிஷிதன் எனவும்படுவன். இவன் தாய் திஷணை. சத்திருதியிடத்து இவனுக்குப் பதின்மர்புத்திரர் பிறந்தார்கள்

பிராஜாபத்தியன்

ஓரக்கினி. புரந்தரன் புத்திரன்

பிராஞ்ஞன்

ஓரக்கினி. புரந்தரன் புத்திரன்

பிராணன்

விதாதைக்கு நியதியிடத்துப்பிறந்த புத்திரன். வேதசிரசு தந்தை

பிராணபதேசுரர்

திருமங்கலக்குடியிய லெழுந்தருளியிருக்கும் சுவாமி பெயர்

பிராதை

தடிப்பிரஜாபதி புத்திரி. கசியபன் பாரிகளுளொருத்தி

பிராப்தி

ஜராசந்தன் புத்திரி. அஸ்திதங்கை. கஞ்சன் இரண்டாம் பாரி. அஷ்டசித்திகளுளொன்று அஃது இஷ்டலோகஞ் சென்று மீளுதல்

பிராமம்

பிரமபுராணம். இது பதினாயிரங் கிரந்தமுடையது

பிராம்சு

பிரஜானி தந்தை

பிராயச்சித்தம்

பாபபரிகாராத்தமாகச் செய்யப்படும் கிரியை

பிராயோபவேசம்

தேகத்தியாகநிமித்தம் தர்ப்பை மீது சயனித்தல்

பிரியம்வதை

நகுஷன்பாரி, உ, சகுந்தலைதோழிகளு ளொருத்தி

பிரியவிரதன்

சுவாயம்புவமனுவுக்குச் சதரூபியிடத்துப் பிறந்த புத்திரன். உத்தானபாதன் தமையன்

பிரியாதநாயகர்

திருப்பெருவேளூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பிரீதி

புலஸ்தியன் பாரியாகிய அவிர்ப்புக்குவுக்குப் பெயர்

பிருகதசுவன்

சபஸ்தன் புத்திரன். குவலயாசுவன் தந்தை

பிருகதிஷன்

அஜமீடன் புத்திரன். பிருகத்தனு இவன் மகன், உ, பர்மியாசுவன் மூன்றாம் புத்திரன்

பிருகத்கரன்

பத்திரரதன் புத்திரன்

பிருகத்கர்ணன்

பிருகத்திரதன் தந்தை

பிருகத்காயன்

பிருகத்கர்மன். பிருகத்தனு புத்திரன்

பிருகத்சங்கிதை

வராகமிஹிரர் செய்த வொருநூல். அதிலே சூரியசந்திர கிரகண விவரண பலாபலன்கன் தூமகேதுக்கள் வரலாறு இரத்தன குணாதியங்கள் சகுனங்கள் முதலியன கூறப்படும்

பிருகத்சேனன்

மத்திரதேசத்தரசன்

பிருகத்ஜாதகம்

வராகமிஹிராசாரியர் செய்த சோதிடசாஸ்திரம்

பிருகத்டித்திரன்

பு. புமன்னியன் புத்திரன். ஹஸ்திகன பாட்டன்

பிருகத்தனு

பிருகதிஷன் புத்திரன்

பிருகத்திரதன்

குருவமிசத்து உபரிசரவசுமூத்தமகன். இவன் புத்திரர் ஜராசந்தன், குசாக்கிரன், உ, தேவராதன் மகன் மகன், ந, பிருகத்கர்ணன் புத்திரன்

பிருகத்பலன்

வசுதேவன் தம்பியாகிய தேவபாகன் இரண்டாம்புத்திரன், உ, சகுனி தம்பி, ந, ராமன் புத்திரன்

பிருகத்பானன்

பிருகத்திரதன் புத்திரன்

பிருகந்தளை

அருச்சுனன் அஞ்ஞாதவாசத்துக்கண் பேடிரூபங் கொண்டபோது பூண்ட பெயர்

பிருகன்மனசன்

பிருகத்பானன் புத்திரன்

பிருகு

பிரமமாசை புத்திரருளொருவன், உ, ஒருமகா இருஷி. இவர் வமிசத்தில் பரசுராமர் பிறந்தார். பிருகுரிஷி ஒரு காலத்திற் சிவனைத் தரிசிக்குமாறு சென்ற போது அவர் தரிசனங் கொடாமையாற் கோபித்துச் சிவனை லிங்காகார மாகவென்று சபித்துவிட்டுப் பிரமாவைக் காணச்சென்றார். அவரும் இவரை மதிக்காதிருந்ததுகண்டு அவர்க்கு ஆலயமும் பூசையுமில்லாது போகவென்றுசபித்து விஷ்ணுவிடஞ் செல்ல, அவரும் நித்திரை செய்திருந்தார். அதுகண்டு மார்பிலே காலாலுதைத்தார். விஷ்ணு விழித்துக் கோபஞ் செய்யாது உமது திருவடி என்மார்பிற்பட நான் செய்த புண்ணியமே புண்ணியமென்றுபசரிக்க, விஷ்ணுவே யாவராலும் வழிபடத்தக்க கடவுளென்று அநுக்கிரகித்துப் போனார் அடி முடி தேடப்புகுந்த போது பிரமா சொன்ன பொய்யுரைக்காகச் சிவன் அவருக்கு ஆலயமில்லாது போகவெனச்சபித்தாரெனக் கந்தபுராணங்கூறும்

பிருகுக்ஷேத்திரம்

ஆனர்த்த தேசங்களுக்குச் சமீபத்திலே மேலைச்சமுத்திர தீரத்திலுள்ள புண்ணிய ஸ்தலம்

பிருகுசிரவணம்

இமயகிரியிலே சகரன் தவஞ் செய்த ஸ்தலம்

பிருசினி

அனமித்திரன் புத்திரன். சுவபற்கன் தந்தை. சத்தியகன்சிற்றப்பன்

பிருதிவி

பூதேவி. இவள் விஷ்ணுபாரி. இவளைப் பலர்க்கும் நாயகியாமாறு பார்வதி சபித்தார்

பிருது

இக்ஷூவாகுவமிசம், அநேநசுபுத்திரன். விசுவகாந்தன் தந்தை. இவனுக்குச் சாசுவதன் விசிவகனென்னும் நாமங்களுமுள, உ, பிரசாதகன் மகன், ந, பா. பாரன்மகன், ச, சுவாயம்புவமனுவமிசத்துவேநன் புத்திரன். இவன் சக்கரவர்த்தி பாரி அர்ச்சி. புத்திரர் விஜயாசவன். தூமிரகேது, ஹரியசுவன். தீரவிணன், விருகன் என்போர் இவன்சனற்குமாரரால் உபதேசக்கப்பட்டவன். இவன் தனது பிரசைகளைச் செவ்வே காத்தரசாண்டவன். இவன் காலத்திலொருமுறை பஞ்சம் வந்து புல்பூண்டின்றிப் பூமிவறப்பெய்தியபோது இவன் தனது திவ்வியாஸ்திரத்தை யெடுத்துப் பூமியை அழிக்கவெழ, அதுகண்டு பூதேவி ஒருபசுவாகிச் சுவாயம்புவ மனுவைக் கன்றாகக் கொண்டு வெளிப்பட்டுச் சராசரங்களுக்குணவுட்டிப்பிருது கோபத்தை ஆற்றினாள் இவ்வுபாயத்தைத் தேவர்களும் இருஷிகளும் மற்றோரும் பின்னர்க்காலத்திலே பின்பற்றினார்கள், ரு, ருசிகன் புத்திரன். தர்மன் தந்தை

பிருதுகர்மன், பிருதுகீர்த்தி, பிருதஜயன், பிருதுசாதன், பிருதுயசன்

சசிபிந்துபுத்திரர்

பிருதுசேனன்

பிராஞ்ஞன்புத்திரன். பௌரன்தந்தை

பிருதுலாடின்

சதுரங்கன்மகன்

பிருதை

குந்திதேவி

பிருந்தாவனம்

யமுனாநதிக்கு மேற்கில் மதுராபுரிக்குச் சமீபத்திலுள்ள துளசிவனம். கிருஷ்ணன் தமது பக்தர்களுக்குப் பிரசன்னமாகி நின்று அருள் புரியும் மகாக்ஷேத்திரம்

பிருஷதன்

சுசன்மகிருத்துமகன். துருபதன் தந்தை

பிர்ம்மவித்யாநாயகி

திருவெண்காட்டிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பிள்ளைப்பெருமாள்ஐங்கார்

வேங்கடமாலை முதலிய அநேக வைஷ்ணவப்பிரபந்தம் பாடிய தமிழ்ப்புலவர். விஷ்ணுஸ்தலங்கள் நூற்றெட்டின்மேலும் அந்தாதிபாடினோருமிவரே. இவர் நானூறு வருஷங்களுக்கு முன்னே சீரங்கத்திலே திருத்தொண்டு புரிந்து விளங்கினவர்

பிள்ளைலோகாசாரியர்

திரவரங்கத்தந்தாதி, திருவரங்கக்கலம்பகம் அர்த்தபஞ்சகமுதலிய நூல்களையியற்றிய வைஷ்ணவராகிய தமிழ்ப் புலவர். இவர் நூல்கள் சொல்லிரசம் பொருளிரசம் பக்திரசம் கால்வனவாதலின் யாவராலும் சிரமிசைக் கொள்ளப்படுவன. இவர்காலம் சற்றேறக்குறைய நானூறு வருஷங்களுக்கு முற்பட்டது

பீபற்சன், வீபற்சு

அருச்சுனன்

பீமசேனன், வீமசேனன்

மூன்றாம் ரிக்ஷன் புத்திரன்

பீமன், வீமன்

க. விதர்ப்பதேச ராஜா. இவன் மகள் தமயந்தி. உ. அஷ்டமூர்த்திகளுளொருளவர். ந. பாண்டுபுத்திரனாகிய வீமசேனன். வீமன் காண்க

பீமரதன்

யதுகுலம் விகிர்புத்திரன்

பீமரதி

ஒருநதி. பீமநதியென்றும் பெயர்

பீஷணன்

காசி ராஜாவுடைய கிங்கரன்

பீஷ்மகன்

விதர்ப்பதேச ராஜா. ருக்குமிணி தந்தை

புகழேந்தி

ஒட்டக்கூத்தன் காலத்திலே பாண்டியன் சமஸ்தானத்து வித்துவானாக விளங்கிய ஒரு தமிழ்ப்புலவர். இவர் செய்த நூல்கள் நளவெண்பா முதலியன. வெண்பாப்பாடுவதில் இவருக்கு ஒப்பாரும் மிக்காருமில்லை. இவருடைய கவித்திறமையைக் கண்ட ஒட்டக்கூத்தன் அவருக்குப்பல துன்பங்கள் செய்யப் புகுந்தும் ஈற்றில் அவருடைய இனிய குணங்களினால் அவரோடு கலந்து நண்பனாயினான்

புகழ்ச்சோழநாயனார்

சோழநாட்டிலே உறையூரிலே செங்கோன்முறை வழுவாமல் அரசியற்றிய ஒரு சிவபக்தர். இவர் சிவகாமியாண்டார் கொண்டு சென்ற புஷ்பங்களைச் சிதறிய தம்முடைய யானையையும் பாகர்களையும் கொன்ற எறிபத்தநாயனாரை அணைந்து இத்தீமைக்கக் காரணனாகிய என்னையுங் கொன்றருளுமென்று தமதுடைவாளைக் கொடுத்துக் தமது பக்தியை விளக்கிய அரசராகிய பெருந்தகை. இவர் 1800 வருஷங்களுக்கு முன்னுள்ளவர்

புகழ்த்துணைநாயனார்

செருவிலிபுத்தூரிலே ஆதிசைவர் குலத்திற் பிறந்து சிவாகமவிதிப்படி பரமசிவனை அர்ச்சனைசெய்து வருங்காலத்திலே, பஞ்சத்தினால் பசிமிகப் பெற்று மெய்சோர்ந்த வழியும் கைசோராத உறுதிப்பாட்டைக்கண்ட சிவபெருமான் பஞ்சம் நீங்கும் வரைக்க உனக்குத் தினந்தோறு மிங்கே ஒவொருகாசு வைப்போம் என்றருளிச் செய்து அவ்வாறு செய்யப் பெற்ற சிவபக்தர்

புஞ்சிகஸ்தலை

வருணன் புத்திரியாகிய ஓரப்சரஸ்திரி

புட்கரம்

வடநாட்டின் கண்ணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

புண்டரன்

பலியினது நான்காவது புத்திரன்

புண்டரம்

ஒருதேசம். இது வங்காளத்துக்கு மேற்கிலுள்ளது

புண்டரீகன்

நபசுபுத்திரன்

புண்டரீகம்

அக்கினித்திக்குக் காவல் பூண்ட ஆண்யானை உ. ஒரு தீர்த்தம்

புண்டரீகாடின்

விஷ்ணு. கமலக் கண்ணன் என்பது பதார்த்தம்

புண்ணியசரவணம்

அழகர்மலைக்கணுள்ள தோர் பொய்கை. இது தன்பால் நீராடவோர்க்கு ஐந்திர வியாகரணத்தைத் தெரிவிப்பது, புறநானூறு

புதன்

சந்திரன் புத்திரன். தாய் பிருஹஸ்பதி பாரியாகிய தாரை நவக்கிரகங்களுளொன்று

புத்தரிற்சௌத்திராந்திகன்

உருவம், ஞானம், வேதனை. குறிப்பு, வானை என்பன தொடர்ச்சியாய் அழிவதுபந்தமென்றும், அவை முற்றும் ஒழிதலே முத்தியென்றுஞ் சொல்பவன்

புத்தர்

பௌத்தமதம் ஸ்தாபித்த கௌதமனார். இவர் கங்கைக்கு வடதிசையிலே ரோகிணிநதி தீரத்திலே கபிலவாஸ்து என்னுநகரத்திலே சுத்தோதனன் என்னுமரசனுக்கு மாயாதேவி வயிற்றிலே புத்திரராக அவதரித்தவர். இவர் அவதரித்திருந்தபோது அசிதர் என்னு மகாமுனிவர் அங்கேசெல்ல, சுத்தோதனன் அக்குழந்தையைக் கொண்டுபோய் அவர் பாதங்களில் வைத்தாசீர்வதிக்குமாறு வேண்டினான். அசிதர் அக்குழந்தையை வாங்கி அதன்பாதங்களைத் தன்னிரு கண்களிலுமொற்றி, பாலகிருபா மூர்த்தியே, உனக்கு நமஸ்காரம். நீயே அவன். உன்சரீரத்திலே ஞானிகளுக்குரிய முப்பத்திரண்டு இலக்கணங்களும் எண்பது உபலக்கணங்களும் விளங்குகின்றன. நீ உலகத்துக்கு ஆன்மபோதம் புகட்ட அவதரித்திருக்கிறாய். உனது திவ்விய போதத்தை என்காதாற்பருகி யானந்தமடையும் பேறபெறாமற் சின்னாளில் இச்சரீரத்தை விட்டகலப் போகின்றேன். ஓ! சுத்தோதன மகாராஜனே! இச்சிசுரத்தினம் மானுஷகணமாகிய பொற்றாமரை வாவியிலே பல்லாயிர வருஷங்களுக்கொருமுறை பூத்தலர்வதாகிய ஏகபுஷ்பமேயாம். இவ்வற்புதமலர் உலகமெங்கும் கமழ்ந்து நறுந்தேன் பிலிற்றும். இம்மலரைக் கொடியாகிய நின்குடும்பம் பெற்ற பாக்கியமே பாக்கியம். ஆயினும் இத்தெய்வக்குழந்தையாலே சுகத்தையடைய மாட்டாய் என்றுகூறிப் பின்னரும் பலவாறு வாழ்த்திப்போயினர் புத்தர் பிள்ளைத்திருநாமம் சித்தார்தனார். அவர் கௌதம கோத்திரத்திலே சாக்கியர் குடியிலே பிறந்தமையாற் கௌதமரென்றும் சாக்கியர் என்றும் இருவேறு பெயர் கொண்டனர். புத்தர் என்னும் பெயர் பின்னர்ப் பெற்ற ஆச்சிரமப்பெயர். இவர் தமக்குக் கல்விகற்பிக்க வந்த ஆசிரியர் சொல்லவெடுக்கும் பாடங்களை அவர் சொல்லுமுன்னே தாமே யோதியும், அவர் வழுவிய விடத்து அவ்வழூஉக்களைத் திருத்தியும் வருவாராயினார். அதுகண்டு அவ்வாசிரியர் நீங்கினார். அதன்பின்னர்ப் புத்தர் தாமாகவே சர்வசாஸ்திரங்களையும் பழம்பாடம்படிப்பார் போலப் பூர்வஜன்ம வாசனைபற்றி ஒதியுணர்ந்தார். உரிய காலத்திலே விவாகமுமாயிற்று. அவர் இயல்பிலே துறவுடைய ராதலின் அவரை விவாகாதி போகங்களெல்லாம் பிணிப்பனவாகாவாயின. ஒரு நாள் அவர் தமது மனைவியோடு நந்தவனம் பார்க்குமாறு தேரேறி வீதியிற் செல்லும் போது, ஒரு யௌவன புருஷன் எதிரேவரக் கண்டு அவன் அழகைப்பாத்து வியந்துசென்றார். அவர் சாயங்காலத்திலே மீண்டு செல்லும்போது அப்புருஷன் மிக்கநோயால் வருந்தி மெலிந்து வீதியிலே வீழ்ந்து கிடப்பக்கண்டு சென்றார். அங்ஙனஞ் சென்றார்க்கு ஊண்மேலும் நித்திரைமேலும் மற்றைய சுகங்களின் மேலும் மனஞ் செல்லாமையால் அவர் அவ்விரவிற்றானே உலகப் பற்றையெல்லாம் முற்றத் துறந்து ஆன்மாக்கள் பிறவிப் பெருங்கடலாகிய துக்கராகரத்தைக் கடந்துய்யும்வழி யாதென்று நாடியுணரக்கடவேன் என்று கூறித் துணிந்து தமது அரமனையை விட்ட கன்று காட்டகஞ்சென்று யோகசித்தியடைந்தபின்னர் அவர் தேசங்கடோறுஞ் சென்று தமது கொள்கைகளை எடுத்துப் பிரசங்கித்து வந்தார். அவரைப் பல்லாயிரவர் ஞானாசாரியராகக் கொண்டார்கள். அவருக்கு அநேக அரசரும் சீஷரானார்கள். அவராலும் ஏனைய மாணாக்கர்களாலும் அவருடைய மதம் உலகெங்கும் வியாபிப்பதாயிற்று. கடவுள் அவாங்மனோகோசரமாதலின் கடவுளை இம்மானுடநிலையிற் கண்டு தெளிவது கூடாதென்றும், புத்தநிலையை யடையமுயல்வதே முத்தியுபாயமென்றும், அவாவறுத்து, உலகம் கணந்தோறும் விகாரப்பட்டுத் தோற்றக்கேடுகளுக் கிடனாய் நிற்றலின் பொய்யென்றுணர்ந்து ஆன்மதரிசனஞ் செய்தவழியன்றி அந்நிலை சித்தியா தென்றுங் கூறுவது அவர்மதவுள்ளுறை. உயிர்களிடத்து அன்பும் ஞானமுமே அவர்மதத்துக்கு ஆதாரபீடமாம். அவர்கூறிய அறநெறிகள் அத்தியற்புத மானவை. அவருடைய பிரமசீஷர் ஆநந்தர் என்பவர். அவர்காலத்தரசர் விம்பிசாரன் அஜாதசத்துரு முதலியோர். அடைந்தபோது அவர்க்கு வயசு எண்பது. அவர்காலம் இற்றைக்கு இரண்டாயிரத்து ஐநூற்றறுபது வருஷங்களுக்கு முன்னுள்ளது. முன்னுள்ள காலாந்தரங்களிலே புத்தர்பலர் அவதரித்துப் பௌத்தமத ஸ்தாபனம் பண்ணிப்போயினரேனும், அவர்கள் பெயரெல்லாம் இக்கௌதம புத்தரால் ஒளியிழந்து போயின. முன்னும் பலபுத்தருண்மை பற்றியே அவரோடு மயங்காவண்ணம் இவர் கௌதமபுத்தரென்றும் சாக்கியபுத்தர் சாக்கிய முனிவரென்றும் பலபெயரால் வழங்கப்பட்டனர்

புத்தி

விநாயகக்கடவுளது உபயசக்திகளுளொருவர். மற்றவர் சித்தி

புத்து

புத்திரரில்லாதோர் சென்றடையும் ஒரு நரகம். தந்தைக்குப் புத்தென்னும் நரகத்தைத் தவிர்ப்போன் மகனாதலின் மகனுக்குப் புத்திரனென்னும் பெயருண்டாயிற்று

புனர்வசு

தவித்தியோதன் தம்பி. துந்துபிமகன், உ, ஒருநடித்திரம்

புனிதவதியார்

காரைக்காலம்மையார் காண்க

புமன்னியன்

துஷ்யந்தன் புத்திரன்

புரஞ்சயன்

விகுக்ஷிபுத்திரன். இவன் பூர்வாநமம் ககுத்சன், உ, சுவீரன்மகன், ந, சிருஞ்சயன் புத்திரன்

புரந்தரன்

வைவசுவதமனு காலத்துள்ள இந்திரன். ஓரக்கினி

புராணம்

உலகத்தினது தோற்றமும், ஒடுக்கமும், பாரம்பரியங்களும், மனுவந்தரங்களும், பாரம்பரியகதைகளும் ஆகிய இவ்வைந்தையுங் கூறலால் பஞ்சலடிணமெனப்படுவது. புராணம் பதினெட்டு. அவை வேதங்களுக்கு வியாக்கியாரூபமாயுள்ளன. அவை, பிரமம், பத்மம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம், பவிஷியம், பிரமகைவர்த்தம், லிங்கம், வராகம், ஸ்கலாந்தம், வாமனம், கூர்மம், மற்சம், கருடபுராணம், பிரமாண்டம் எனப் பதிணெண் புராணங்களாம். புராணம் என்பதன் பொருள் பண்டைவரலாறு. அவற்றைவகுத்தவர் வியாசர். அவற்றுட் சிவபுராணம் பத்து விஷ்ணுபுராணம் ஆறு, பிரமபுராணம் ஒன்று, சூரியபுராணம் ஒன்று, விஷ்ணுபுராண நான்கென்றும், பிரமபுராண மிரண்டென்றும். அக்கினிபுராண மொன்றென்றுங் கூறுவாருமுளர். இனி, புராணமானது சாஸ்திரங்களுள்ளே தலைமைபெற்றது. அது கிருயுகத்திலே நூறுகோடி கிரந்தங்களினாலே பிரமாவினாற் செய்யப்பட்டமையின் பிராமம் என்னும் பெயரினையுடையதாய் ஒன்றாயிருந்தது. திரேதத்திலே கோடி கிரந்தங்களால் நூற்றுப்பதினெட்டுச் சங்கிதைகளையுடைய பதினெட்டுப் பாகங்களாக அது மகாரிஷிகளால் வகுக்கப்பட்டது. அதனைத் துவரபரத்திறுதியிலே வியாசர் நான்கிலடிங்கிரந்தங்களால் பதிணெண் புராணமாக்கினர். அப்பதினெட்டையும் ரோமகர்ஷணர் என்னும் முனிவர் வியாசர்பாற் கேட்டார். அவர் சுமதி அக்கினிவர்ச்சன் முதலியோர்க் குபதேசித்தார். இப்படிக் குருசீஷ பரம்பரையாக வெளிவந்தன. இறந்துபோன பலகற்பத்துச் செய்திகளே யெடுத்துக் கூறப்படுதலாலும் இறந்துபோன சிருஷ்டிகளும் ஒருவாறின்றிப் பேதப்படுதலாலும், கற்பந்தோறும் அநுக்கிரக மூர்த்திகளும் வேறாகலாலும், அவ்வக்கற்பத்து வரலாற்றைக் கூறும்போது அவ்வக்கற்பத்ததிகார மூர்த்தியே விசேடித்துத்துதிக்கப் படுதலாலும் புராணங்கள் ஒன்றற்கொன்று மாறுகொள்வனபோற் றோன்றினும் உண்மையானோக்குமிடத்து ஒற்றுமையுடையனவேயாம்

புராந்தகியம்மை

திருவிற்கோலத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர்

புரிகுற்சன்

மாந்தாதாசக்கரவர்த்தி மகன்

புரிகுழலாள்

திருபாண்டிக்கொடுமுடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர்

புருகோத்திரன்

அணுபுத்திரன்

புருஜன்

சுசாந்திமகன்

புருஜித்து

ரிசிகன் புத்திரன், உ, வசுதேவன் தம்பியாகிய கங்கன் மகன்

புருமீடன்

ஹஸ்திகன்மகன். அஜமீடன் தம்பி

புருஷோத்தமபாண்டியன்

அநுலோகம பாண்டியருளொருவன்

புரூடன்

வசுதேவனுக்குச் சகதேவியிடத்துப் பிறந்த புத்திரன்

புரூரவன்

வைவசுவதமனு புத்திரியாகிய இளையிடத்துப் புதனுக்குப்பிறந்த புத்திரன். இவன் பிரசித்தி பெற்ற ஒரு சக்கரவர்த்தி. இவன் ஈகையிலும் தெய்வபக்தியிலும் அழகிலும் சிறந்தவன். இவன் ஒரு நாள் ஊர்வசியைக் கண்டு மோகித்து அவளைத் தனக்கு மனைவியாம்படிகேட்க, நீர் என்னை ஒருநாளும் பிரிந்திருப்பதில்லையென்று வாக்குத்தானஞ் செய்தால் உம்மோடு கூடியிருப்பேனென்று அவள்கூற, அதற்குடன்பட்டு அவளோடு கூடிச் சுகித்திருந்தவன். இவ்விஷயம் இருக்குவேதத்திலே குறிக்கப்பட்டிருக்கின்றது

புரோசனன்

துரியோதனன் நண்பனாகிய ஒரு சிற்பி. இவன் துரியோதனன் ஏவலின்படி பாண்டவர்களைக் கொல்லும் பொருட்டு அரக்குமாளிகை அமைத்தவன்

புறநானூறு

எட்டுத்தொகையுள் எட்டாவது. முரஞ்சியூர் முடிநாகராயர் முதல் கோவூர்க்கிழாரெல்லையாகவுள்ள புலவர்களால் இயற்றப்பட்டது. இந்நூல் கடைச்சங்கத்தார் காலத்தது. இந்நூலினால் பூர்வகாலத்தரசர் பலருடைய வரலாறும் பூர்வகாலத்துப் புலவர் ஆற்றலும் நன்கு புலப்படும்

புறப்பொருள் வெண்பாமாலை

ஐயனாரிதனார் செய்தது. புறப்பொருளையே பொருளாகவுடையது

புலகர்

புலத்தியரது தமையனார். இவா தக்ஷபுத்திரிகளுளொருத்தியாகிய க்ஷமையை மணம்புரிந்து மூவர் புத்திரரைப் பெற்றவர்

புலஸ்தியர்

பிரமமானச புத்திரருளொருவர். இவனுக்கு அவிர்ப்புக்கு விடத்திலே அகஸ்திய னென்றொருவனும் விச்சிரவசுவும் பிறந்தார்கள், இந்த அகஸ்தியரும் வேறு, கும்பமுனியும் வேறு, இப்புலஸ்தியரே புராணங்களை முதன்முதல் மனுஷருக்கு வெளியிட்டவர்

புலி

வியாக்கிரபாதர்

புலியூர்

சிதம்பரம். வியாக்கிரபாதர் பூசித்த ஸ்தலமாதலின் சிதம்பரத்துக்கு இப்பெயர் வந்தது

புலோமசை

இந்திரன் மனைவியாகிய சசிதேவி. புலோமன் மகள். இந்திரன் புலோமனைக் கொன்று புலோமசையைக் கொண்டேகினான்

புல்லாற்றூர் எயிற்றியனார்

தன்மக்கண் மேற்போருக்கெழுந்த கோப்பெருஞ்சோழனைப்பாடி அது செய்யாவகை தடுத்தவர். போர்வலியிற்சிறந்த வேந்தேதேகேள், உன்னைப்பகைத்திருப்பவர் யார்? உன்புதலவரன்றோ? நீ அவரைப்போரில் வென்றிருந்து விண்ணுலகாளப் புகும்போது இம்மண்ணுலகை யாருக்குவைத்தேகுவை? ஒருகால் அவர்க்கு நீ தோற்பின் உனக்குண்மைப் பகைவர் கொண்டாடப் பேரிழிவை நிலைநிறுத்துவையன்றோ. ஆதலின் நின்சினம் ஒழிவதாக என்னுங் கருத்தையடக்கி இவர் கூறியபாட்டு அதிசாதுரியமானது, புறுநானூறு உகந

புளிந்தர்

விதர்ப்பானர்த்த தேசங்களிலுள்ள ஒரு சாதியாளர்

புள்ளிருக்கும்வேளூர்

திருப்புள்ளிருக்கும் வேளூர் காண்க

புள்ளிலூர்

தொண்டைநாட்டகத் தோரூர்

புவனநாயகியம்மை

திருமாகறலிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

புவனேகவாகு

விஜய கூழங்கைச்சக்கரவர்த்தி யாழ்ப்பாணத்திலரசு புரிந்தகாலத்தில் அவனுக்கு மந்திரியாயிருந்தவர். இவர் தமிழ்ப்புலமை நிரம்பியவர். இவராலெடுக்கப்பட்ட சுப்பிரமணியாலயம் இன்னும் நல்லூரில் நின்று நிலவுவது. இவர் ஆயிரத்தெண்ணூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னேயிருந்தவர். இவர் ஊர்தோறும் தரும பாடசாலைகள் அமைத்துத் தமிழ்க் கலாவிருத்தி செய்தவர். இவர் காலம் ஆயிரம் வருஷங்களுக்கு முந்திய தென்பாருமுளர்

புவனேசுவரி

க. பார்வதி. உ. ஒட்டரதேசத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

புஷ்கரன்

வசுதேவன் தம்பியாகிய விருகன் இரண்டாம் புத்திரன், உ, நளன் சிறயதந்தை புத்திரன், ந, ராமன் தம்பி பரதனது புத்திரன், ச, சிவன், ரு, விஷ்ணு

புஷ்கரம்

மாளவதேசத்திலுள்ள ஒரு தீர்த்தம், உ, ஏழுதீவுகளுளொன்று

புஷ்கரவதி

ராமன்தம்பி. பரதனது இரண்டாவது புஷ்கரனாலமைக்கப்பட்ட ஒரு நகரம்

புஷ்கராடின்

விஷ்ணு, புஷ்காரம் ~ தாமரை, அடின் ~ கண்ணன்

புஷ்கராணியம்

புஷ்கரதீர்த்தத்துக்குச் சமீபத்துள்ள வனம்

புஷ்கராருணி

ருக்ஷையன் புத்திரன். இவன் வமிசம் பிராமண வமிசமாயிற்று

புஷ்கரிணி

உல்முகன் பாரி. அங்கன் தாய், உ, வியுஷ்டி பாரி. சர்வதேசசு தாய்

புஷ்பகம்

குபேரன் பிரமாவைநோக்கி தவஞ்செய்து பெற்றுக்கொண்ட விமானம். இது மணிமயமுடையதாய் இச்சித்தவிடத்துக்குக் கொண்டேகுவது. இதனை ராவணன் குபேரனோடு போர்செய்து கவர்ந்து கொண்டான். ராவணயுத்தம் முடிந்த பின்னர் இராமர் அவ்விமானத்தைக் குபேரனுக் கீந்தனர்

புஷ்பதந்தன்

சிவகணங்களுளொருவன். இவனேமகிமாஸ்தோத்திரஞ் செய்தவன், உ, விஷ்ணு பரிவாரத்தவருளொருவன்

புஷ்பதந்தம்

வாயுதிக்குக் காவல்யானை

புஷ்பவந்தன்

உபரிசரவசு வமிசத்தரசன்

புஷ்பாரணன்

துருவன்மகனாயிய வற்சரனுக்குச் சருவசித்தியிடத்தப் பிறந்த புத்திரன்

புஷ்போற்படை

சுமாலிபுத்திரி. விச்சிரவசுபாரிகளிளொருத்தி. ராவணாகும்பகர்ணன் தாய்

புஷ்யமித்திரன்

மகாதேசராஜாக்களுள் கடையரசனாகிய பெரிய ரதன்சேனாபதி. இவன் ராஜாவைக் கொன்று தான்பின்னர் அரசனாயினவன்

புஷ்யம்

பூசநடித்திரம், உ, கலியுகம். தைமாசம்

பூகோளம்

ஆரிய சாஸ்திரம் பூமத்தியிலேசுமேருவும் சமுத்திரமத்தியிலே வடவாமுகமுமாயிருக்கின்றனவென்று கூறும். இவை முறையே வடதுருவமென்றும் தென்துருவமென்றும் கூறப்படும். பூமத்தியென்று ஆரியசாஸ்திரத்திலே சொல்லப்பட்ட விடம் வடதுருவமுனை. ஆரியசாஸ்திரம் பூமியை மேகலாரேகையை எல்லையாகவைத்து வடகோளார்த்தம், தென்கோளார்த்தமென இருகூறாகப் பிரித்து வடகோளார்த்தம் முழுதும் நிலமென்றும் தென்கோளார்த்தம் சலமென்றும் கூறும். வடகோளார்த்தம் முழுதும் நிலமெனவே அதன் மத்தியஸ்தானம் வடதுருவத்தின் கணுள்ள சுமேருவாகின்றது. இனிச்சமுத்திரமத்தியெனவே தென்கோளார்த்த முழுதும் சலமாக அதன் கணுள்ள வடவாமுகமாகின்றது. வடகோளார்த்தம் முழுதையும் ஜம்புத்தீவென்னும் பெயரால் வழங்குவர். இச் சம்புத்தீவென்னும் வடகோளார்த்தம் நவ வர்ஷங்களாக கவகுக்கப்பட்டன. அவைவருமாறு : மேருவைச் சூழ்ந்திருப்பது இளாவிருதவர்ஷம், அதற்குத் தெற்கேயுள்ளது ஹரிவர்ஷம், அதற்குத் தெற்கேயுள்ளது கிம்புருஷ வர்ஷம், அதற்குத் தெற்கேயுள்ளது பாரதவர்ஷம். இனி இளாவிருதவர்ஷத்துக்கு வடக்கே இரண்மயவர்ஷத்துக்கு வடக்கே இரண்மயவர்ஷம். அதற்கு வடக்கே ரம்மியக வர்ஷம். அதற்கு வடக்கே குருவர்ஷம். இவ்விளாவிருதத்துக்குத் தெற்கேயும் வடக்கேயுமுள்ள ஆறு வருஷங்களுக் குமிடையே இளாவிருத வருஷத்துக்குத் கிழக்கினும் மேற்கினும் முறையே பத்திராசுவவருஷம் கேதுமாலவருஷம் என்னுமிரு வருஷங்களுள்ளன. பாரத வருஷம் கேதுமால வருஷம் குருவருஷம் பத்திராசுவ வருஷம் என்னும் நான்கும் மேகலாரேகையை அடுத்துள்ள வருஷங்கள். இந்நான்கு வருஷங்களிலும் மேகலா ரேகையிலே ஒன்றுக்கொன்று சமதூரத்திலே நான்கு பட்டணங்கள் உள்ளன. அவை இலங்காபுரி, ரோமபுரி, சித்தபுரி, யவகோடி என்பன வருஷம் என்பது மழைப்பெயல் வேறுபாட்டால் வந்த பெயர். இலங்காபுரிக்கு நேர்கீழே அஃதாவது அதோபாகத்தில் சித்தபுரி யிருக்கின்றதென்றும், இலங்காபுரிக்கு சித்தபுரிக்கு மிடையே சமதூரத்திலே கிழக்கே யவகோடி இருக்கின்ற தென்றும், இலங்காபுரிக்கும் சித்தபுரிக்குமிடையே சமதூரத்திலே மேற்கே ரோமபுரியிருக்கின்ற தென்றும் ஆரிய சாஸ்திரங்கள் கூறும். இலங்காபுரிமுதல் தொண்ணூறு பாகையில் கிழக்கே யவகோடியிருக்கின்றது. அதிலிருந்து தொண்ணூறுபாகையில் சித்தபுரி, அதிலிருந்து தொண்ணூறு பாகையில் ரோமகபுரி. மற்றைய ஆறுதீவுகளும் மேகலாரேகைக்குத் தெற்கே சமுத்திரத்தி லாங்காங்குமுள்ளன. அவை தனித்தனி ஒவ்வொரு சமுத்திரஞ் சூழ்ந்தன. க்ஷிரமுதலிய சமுத்திரப்பயெர்கள் சுவைதோற்றமுதலிய வேறுபாட்டான் வந்தன போலும். இதனால் ஆரியர்பூகோள சாஸ்திரஞ் செய்த காலத்திலே மேகலாரேகையிலே இலங்காபுரி முதலிய நான்கு பட்டணங்களுமிருந்தன வென்பது நிச்சயமாகின்றது

பூங்கொடிநாயகி

திருவோமாம்புலியூரிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பூங்கொம்பனை

திருஇன்னம்பரிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பூங்கோதை

மதுரையிலே இற்றைக்கு இருநூற்றெழுபது வருஷங்களுக்கு முன்னேயிருந்த ஒரு தாசி. இவள் சீதக்காதியென்னுஞ் சோனகப்பிரபுவுக்குக் காமக்கிழத்தியாயினமையால் தன்னினத்தினராலே நீக்கப்பட்டவள். தமிழ்ப்புலமையிற் சிறந்தவள். இவள் காயற்பட்டினத்திலே சீதக்காதி கொடுத்த பெருநிதியைக் கொண்டு தன்னூருக்கு மீளும் வழியிலே கள்வர் கவர்ந்து கொள்ளக். கதியற்றவளாய் நின்று, தினங்கொடுக்குங் கொடையானே தென்காயற்பதியானேசீதக்காதி இனங்கொடுத்தவுடைமையல்ல தாய்கொடுத்தவுடைமையல்லவெள யாளாசை மனங்கொடுத்து மிதழ்கொடுத்துமபிமானந் தனைக்கொடுத்து மருவிரண்டு தனங்கொடுத்த வுடைமையெல்லாங்கள் வர்க்கையிற் பறிகொடுத்துத்தவிக்கின்றேனே

பூதனை

கிருஷ்ணன் சிசுவாகவிருந்தபோது கம்சன் எவலினால் தன் முலைகளிலே நஞ்சைப்பாய்ச்சி அப்பாலைக் கிருஷ்ணனுக்கு ஊட்டியபோ தம்முலைவழியே பாலோ டவளுயிரும் அவனாலுடன் கவரப் பெற்றுயிர் துறந்த பூதகி

பூதன்

வசுதேவன் புத்திரன்

பூதமகிபாலன்

ஒளவைக்கு விருந்திட்டு அவளாற் பாடப்பட்டவனாகிய புள்ளலூரி லிருந்த வேளாண் பிரபு

பூதுவசித்தி

ஆக்கினீத்திரன் பாரியாகிய ஓரப்சரசை

பூரணவர்ணன்

ஆயிரத்து நானூறு வருஷங்களுக்கு முன்னே மகததேசத்திலரசு புரிந்தவன். இவன் பௌத்தசமயி. கயாவிலே இருந்த போதி விருடித்தைச்சசாங்கன் அழித்தானென்பது கேள்வியுற்று ஆற்றுதற்கரிய துக்கமுடையனாய்ப் பூமியின் மீது விழுந்து புரண்டு அழுது ஈற்றில் தெளிந்து ஆயிரம் பாற்பசுக்களைக் கொண்டு சென்று அவற்றின் பாலையெல்லாங்கறந்து அடிமரத்திற்கு அபிஷேகஞ் செய்விக்க அவ்வடிமரம் ஓரிரவில் ஏழு முழம்வளர்ந்து ஓங்க, அதுகண்டு பேரானந்த முடையனாகி அதனை மீளவும் ஒருவரும் வெட்டாவண்ணம் அதனைச்சுற்றிப் பதினாறுமுழவுயரமுடைய ஒருமதிலை யெழுப்பியவனிவனே

பூரி

சோமதத்தன் மூத்தமகன்

பூரிக்கோ

குறுந்தொகை தொகுத்தவன்

பூரிசிரவன்

சோமதத்தன் இரண்டாம் புத்திரன்

பூரிசேனன்

சரியாதிபுத்திரருளொருவன்

பூரு

யயாதிக்குச் சன்மிஷ்டையிடத்துப் பிறந்த புத்திரன். இவன் தந்தைக்குத் தனது எவ்வன ரூபத்தைக் கொடுத்துத் தந்தையினது வார்த்திகத்தைப் பெற்றுஅவனை மகிழ்வித்தவன். இவன் மகன் ஜனகமேஜயன். இச்சனமேஜயன் பாண்டவர்க்கு முன்னிருந்தவனாதலின் பாண்டவர்க்குப் பின்னிருந்த பரிக்ஷித்துமகன் ஜனமேஜயனும் வேறு

பூர்ணிமை

தாதாவுக்கு அநுமதியிடத்துப் பிறந்த புத்திரி

பூவணநாதர்

திருப்பூவணத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

பூஷன்

தூவாதசாதித்தியருளொருவன். தக்ஷயாகத்தில் வீரபத்திரரால் பல்சேதிக்கப்பெற்றவன்

பெண்ணினல்லாள்

திருக்கழுக்குன்றத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பெரியநாயகி

திருஅரசிலியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். உ. திருப்பனையூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.ந. திருமுதுகுன்றத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். ச.திருப்பனந்தாளிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். ரு. திருப்பழனத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பெரியநாயகியம்மை

திருவலஞ்சுழியிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர். உ. திருக்குடவாயிலிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். ந. திருச்சிவபுரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். ச. திருத்தெங்கூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். ரு. திருப்பனையூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். சு. திரு உசாத்தானத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பெரியபாண்டேசுவரர்

திருநல்லூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பெரியாம்பிகை

திருநாலூர்மயானத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பெரியாழ்வார்

இவர் ஸ்ரீவில்லிபுத்தூரிலே புரசூடனென்னும் வைஷ்ணவருக்குப் புத்திரராகப் பிறந்து வேதங்களில் வல்லராகிய ஒரு மகாபக்தர்

பெருங்கருணைநாயகி

கொங்குநாட்டிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பெருங்கிள்ளி

கோவலன் காலத்து உறையூரிலிருந்த சோழன். இப்பெயர் பெருநற்கிள்ளியெனவும் வழங்கும்

பெருங்குன்றூர்கிழார்

பதற்றுப்பத்துள் ஒன்பதாம் பத்துப்பாடிச் சேரமான் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறைபால் முப்பத்தீராயிரங் காணமுதலியன பெற்றவர். வையாவிக் கோப்பெரும்பேகனால் நீக்கப்பட்ட கண்ணகியென்னு முத்தமியை அவனோடுசந்தி செய்யும் பொருட்டு, நேற்றுமுதலாக ஒரு பக்கத்திலே தனியிருந்த நீருமாடாள் பூவுஞ் சூடாள் ஊணும் விரும்பவளாய்ப் புலம்பிக் கொண்டிருப்பவள் பால் என்னோடு செல்லுவையாயின் அதுவே எனக்குத்தரும் பரிசிலாக வென்னுங்கருத்தினையுடைய நெருநலொரு சிறைப்புலம்பு கொண்டுறையு ~ மரிமதர்மழைக்கணம்மாவரிவை ~ நெய்யோடு துறந்த மையிருங்கூந்தன் ~ மண்ணுறுமணியின் மாசறமண்ணிப் புதுமலர்கஞலவின்று பெயரி ~ னதுமனெம் பரிசிலா வியர்கோவே என்னுஞ் செய்யுளைப்பாடியவருமிவரே. இவர் ஊர் பெருங்குன்றூ ரென்பதும் ஜாதியால் வேளாளர் என்பதும் இவர் பெயராற் பெறப்படும்

பெருங்குருகு

இது தலைச்சங்கப் புலவருள் ஒருவர் செய்தது

பெருங்குறிஞ்சி

இது சங்கத்துநூல்களுளொன்று. இஃது இறந்தொழிந்தது

பெருங்கோழிநாய்கன்மகன் கண்ணனார்

சோழன் போர்வைக்கோப்பெரு நற்கிள்ளியைப் பாடிய ஒரு தமிழ்ப்புலவர். இவர் வைசியர். இவர் கைக்கிளைப் பொருண்மேற் செய்யுள் செய்தலில் மிக்கவன்னையுடையவர். சிறந்தவீரக் கழலினையும், மை போன்ற தாடியினையுமுடைய காளையை எண்ணுந்தோறும் என் கைவளை என்னைக் கைவிடுகின்றமையை என்தாய் காண்பளாயிற் கடிவளேயென்று அவட் கென்மனமேங்குகின்றது. இஃதொரு பக்கமாக, அவட்குப் புலனாகாமற்றான் அவனைக்கூடுவேனென்று துணிகினும் அவனைச் சூழ்ந்திருக்கும் சபைக்கென் செய்வதென்று நாணமீதூருகின்றது மற்றொருபக்கம். இவ்வாறு மயங்கின்றேன் என்னுங் கருத்தினையுடைய அடிபுனைதொடுகழல் என்னுஞ் செய்யுளைப் பாடினோர் இவரே, புறநா

பெருஞ்சித்திரனார்

இவர் ஓரற்புத கவிஞர். இவர் மிக்க வறுமையுற்றவராயொரு காலத்திலே குமணன் வண்மையைப் புலவர்வாய்க் கேட்டு அவன்பாற் சென்று தமது வறுமையினது நிலையை யுள்ளவாறுரைத்து அவன் பாற் பெற்ற பெருஞ் செல்வத்தாற் குபேரனைப்போல வாழ்ந்தவர். இவர் தமது வறுமைநிலையை யெடுத்துரைத்த சித்திரம் கேட்போர் மனத்தை யுருக்காமற் போகாது. அது பெரும்புகழ்படைத்தகுமணகேள், நின்வண்மையையும் அளப்பில் செல்வத்தினையும புலவர்வாய்க் கேட்டு விரைந்துன்னை யடைந்தேன். உணவுப் பொருள் யாதுமில்லாத மனையே யாயினும் அதனை யிகழ்ந்து நீங்காது அங்கே தானே யுறைகின்ற என்பாலன் குடுமியோ நெற் காணாமையாற் குதிரைப்பிடர்மயிர்போற் பறக்குமியல்பினையுடையதாயிற்று. அத்தன்மையன்பாலின் றித்திரங்கிய தாய் முலையைப் பலகாலுஞ் சுவைத்துப் பார்ப்பன். பால் வாயில் வீழப் பெறாமல் அதனை விடுத்துவறிதே மூடிக்கிடக்கும் சோறிடுகலத்தைத் திறந்து பார்ப்பன். அங்குந்தன் பசிக்கு யாதுங் காணானாய்த் தாயை யடைந்தழுதழுது வாடுவன். தாய் புலிவருகின்றதென்று அச்சுறுத்துவள் தணியாமைகண்டு அப்புலியைக் காட்டுவள். உன் தந்தையைக் காணாதுகுன்றிய உன்மேனியினது அழகையெனக் குக்காட்டுவாய் என்று வினாவுவன். இத்துன்பத்துக் கிறுதிகாணுமாறு நின்னை யடைந்தேனாதலின் பரிசில் தந்து என்னைக்கடிது விடுப்பாயாக என்னுங்கருத்தினையுடைய உருகெழுஞாயிற் றொண்கதிர் என்னுஞ் செய்யுளாற் பெறப்படும்

பெருஞ்சீத்தனார்

இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்

பெருநம்பி

குலச்சிறைநாயனார் காண்க

பெருநாரை

இது தலைச்சங்கத்து இசைத்தமிழ் நூல்களுளொன்று. இஃதிறந் தொழிந்தது

பெருந்தலைச்சாத்தனார்

தம்பியால் நாடுகொள்ளப்பட்டுக் காடு கொண்டிருந்த குமணனைப் பாடியபோது அவன் தனது தலையைக் கொண்டுபோய்த் தம்பிகையில் கொடுப்பீராயின் பெரு நிதி பெறுவீரென்று தன் வாளைக் கொடுத்துக் கொய்யுமென்ன, அவ்வாளைப் பெற்றுக் கொண்டோடிப்போய் அவன் தம்பிக்குக்காட்டி அவன் மனப்பகையை மாற்றியபுலவர் பெருந்தகை இவரே, குமணன் காண்க

பெருந்தேவனார்

தொண்டைநாட்டிற் பிறந்து தமிழில் மிக்க வல்லுனராகிப் பாரதத்தைத் தமிழிலே பன்னீராயிரம் வெண்பாவாற் பாடிக் கொண்டுபோய் மதுரைச் சங்கத்தில் அரங்கேற்றியவர். இவர் சாதியிலே வேளாளர். சீரூறும்பாடல் பன்னீராயிரமுஞ் செழுந்தமிழ்க்கு. வீரர்தஞ் சங்கப்பலகையி லேற்றிய வித்தகனார், பாரதம் பாடும் பெருந்தேவர் வாழும்பழம் பதிகாண்மாருதம்பூவின் மணம் வீசிடுந் தொண்டை மண்டலமே என்பது மேற்கோள், உ, வீரசோழியத்துக்குரை செய்த ஆசிரியர்

பெருமகள்

கோவலன் மாதா, இவளைப் பெருமனைக்கிழத்தியென்றும் பேரிற் கிழத்தியென்றும் வழங்குவர். இவள் மதுரையிற் கோவலன் கொலையுண்டிறந்ததை மாடலனாற் றெரிந்து வருந்தித் தன்னுயிரை விட்டவள்

பெருமலை

சேரநாட்டிலுள்ளதொரு மலை

பெருமிழலைக்குறும்பநாயனார்

பெருமிழலையென்னுமூரிலே விளங்கியவராகிய ஒரு சிவபக்தர். இவர் சுந்தரமூர்த்திநாயனார் கைலாசமடைவதைத் தமது யோகப் பிரத்தியடித்தாலறிந்து யோகமுயற்சியினாலே பிரமரந்திரந்திறப்ப உடலினின்றும் பிரிந்துகைலாசமடைந்தவர்

பெரும்பதுமனார்

இவர் புறநானூற்றுட் கூறப்பட்ட புலவருளொருவர்

பெரும்பாணாற்றுப்படை

இது பத்துப்பாட்டுளொன்று. கச்சிநகரத்திருந்த தொண்டைமானிளந் திரையனைக் கடியலூருருத்திரங்கண்ணனார் பாடியது

பேகன்

கடையெழுவள்ளல்களுளொருவன். இவன் கபிலபரணர்களுக்குப் பேருபகாரியாய் விளங்கிய வொருமலைநாட்டரசன் இவன் ராஜதானி நல்லூர். இவன் மனைவி பெயர் கண்ணகி. அவளைத் துறந்திருந்த இவனைத் கைக்கிளைவகைப்பாடாண் பாட்டாற் பரணர் பாடினர்

பேயாழ்வார்

பூதத்தாழ்வார் அவதரித்தமற்றைநாள் மயூரபுரியில் ஒரு வாவியிலே செங்குவளை மலரிலே அவதரித்தவர். இவர் விஷ்ணுபத்தியிற் சிறந்தவர். திருக்கண்டேன்என்னுமந்தாதி பாடினவர் இவரே

பேய்மகள்இளவெயினி

சேரமான்பாலைபாடிய பெருங்கடுங் கோவைப்பாடிய புலமையள். இவளை நரவடிவெடுத்துவந்த வொரு பேய் என்பாருமுளர்

பேராறு

சேரநாட்டுள்ள தோராறு

பேராவூரான்

இவன் தொண்டைநாட்டுப் பேராவூரில் விளங்கிய ஒரு வேளாளப் பிரபு. புலவர்களுக்குப் பொன்மாரி பொழிபவன். நந்தனாரைத் தன்னருகிருத்திப் புலையரென்றநுசித மடையாதவருடன் போசனஞ்செய்த பெருந்தகையிவனே. இதனைக் கம்பரும் தமது ஏரெழுபதினுட் கூறினார். நந்தனுடனமுதுண்டான் பேராவூரான் என்பதனாலும் தெண்டைமண்டலசதகத்தானுமுணர்க

பேருசங்கன்

இருசங்கன்

பேரெயின்முறுவலார்

நம்பிநெடுஞ் செழியனைப்பாடிய புலவர்

பைசாசி

பிராகிருதபாக்ஷைகளுளொன்று. இது பைசாசி குளிகையென்றும் பைசாசி யென்றும் இரண்டு வகைப்படும். இது பிசாசதேசங்களிற் பேசபடுவது. கேகயம் நேபாளம் பாகிலிய முதலிய தேசங்கள் பிசாசதேசங்களெனப்படும்

பைரவன், வைரவன்

சிவமூர்த்தங்களுளொன்று பகாரம்பக்ஷித்தல் மேலும், ரகாரம் ரக்ஷித்தல் மேலும், வகாரம் வமனத்தின் மேலும் பொருள் செல்லுதலால் அழித்தல் காத்தல் சிருஷ்டித்தல் என்னும் மூன்றும் வல்லார் என்பது பதப்பொருள்

பைலன்

க, வியாசசீஷர்களுளொருவன். இருக்குவேதாத்தியாபகன். உ. ஜாதகர்ணிசீஷன்

பொதியில்

பாண்டிநாட்டிலுள்ள தொருமலை. இது தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பொது விடமாயிருத்தலின் இப்பெயர் பெற்றது

பொன்னுச்சாமித்தேவர்

புதுக்கோட்டைச் சிவஞானத் தேவர் புத்திரராகிய இவர் சேதுபதிசமஸ்தானத்துச் சர்வாதிகாரியாகி அவ்விராஜாங்கத்தைச் சீரிட்டு நன்னிலைக்குய்த்தவர். முன்னாளிலே தாராநகரத்திலிருந்து சம்ஸ்கிருத பாஷையை வளர்த்த போஜராஜனே பின்னாளிலே தமிழையும் வளர்க்குமாறு இப்பொன்னுச்சாமி நரேந்திரனாக அவதரித்தான் என்று புலவர் நாவினும்பாவினும் போற்றற்குரிராய் விளங்கிய ராஜபண்டிதர் இவர் ஒருவரே. தமிழ்ப் புலமையுஞ் சிவபக்தியும் ராஜதந்திரமும்ம கௌதாரியமும் இவர்பாற் குடிகொண்ட சிறப்புக்கள். புலவர் திலகர்களாகிய ஆறுமுகநாவலரும் மீனாக்ஷிசுந்தர கவிச்சக்கரவர்த்தியும் இவர் காலத்துப் புலவர்கள். ஆறுமுகநாவலரைக் கொண்டு திருக்குறளையும் திருக்கோவையாரையும் கரலிகிதவழூஉக் களைந்து அச்சிடுவித்துலகுக்குபகதித்த பெருந்தகையு மிவரே. இவரைப் போலவே இவர்க்கு அருந்தவப் புதல்வராக வந்தவதரித்திருக்கும் பாலயவனத்தத்து ஜமீந்தாராகிய பாண்டித்துரைச்சாமித் தேவரும் தமிழ்க் கலாவினோதரும் வித்துவசிகாமணியுமாகி விளங்குகின்றார். அவரே இப்போது மதுரையிலே தமிழ்ச்சங்கம் ஸ்தாபித்து நடாத்தி வருகின்றவர்

பொன்பற்றியூர்ப்புத்தமித்திரனார்

வீரசோழன் காலத்திலேயிருந்து அவன் பெயரால் வீரசோழிய மென்னுமிலக்கணநூல் செய்தவர்

பொன்மயிலம்பிகை

திருப்பராய்த்துறையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

பொன்முடியார்

இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்

பொய்கையார்

இவர் கோச்செங்கட்சோழனாராற் சிறையிலிடப்பட்ட சேரமான் கணைக்காலிரும் பொறையைச் சிறைவிடும் பொருட்டு அச்சோழனாரைக் களவழிநாற்பதென்னும் நூலாற்பாடிய புலவர். இவர்க்கு ஜன்மநகரம் தொண்டி, சேரமான்கோத்கோதையும் இவராற் பாடப்பட்டவன்

பொய்யடிமையில்லாதபுலவர்

மதுரைத்தமிழ்ச்சங்கத்திலிருந்த கபிலபரணர் முதலியோர்

பொய்யாமொழிப்புலவர்

துறையூரிலே வேளாளர் குலத்திலே அவதரித்துத் தமிழ்ப்புலமையும் சாபானுக்கிரகமும் பெரிதுமுடையராய் விளங்கியவர். அழிந்துபோன தமிழ்ச்சங்கத்தை மீளவும் அமைத்து வளர்த்தல் வேண்டுமென்னும் பேரவாவடையராய் வணங்காமுடிப் பாண்டியன்பாற் சென்றனர். அவன் இவர் கருத்தையுசாவி யுணர்ந்து சங்கங்கூட்டுங்கருமத்தைப் பின்னர் யோசிப்பாம், இப்போது நமது சிவாலயத்தினுள்ளே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் சங்கப்புலவர்களது விக்கிரகங்க ளெல்லாம் மலை துளக்கும்படி பாடும் பார்ப்போ மென்றான். உடனே இவர், உங்களிலேயானெருவனெவ்வெனோ வல்லேனோ, திங்கட்குலவறியச் செப்புங்கள் ~ சங்கத்துப் பாடுகின்ற முத்தமிழ்க் கென்பைந்தமிழுமொக்குமோ ~ ஏடவீழ்தாரேழெழுவீரே என்னும் வெண்பாவைக் கூறுதலும் அவ்விக்கிரகங்களெல்லாம் சிரக்கம்பஞ் செய்தன. இவ்வற்புதத்தைக் கண்டும் பாண்டியன் இவர் விண்ணப்பத்தைப் பொருட்படுத்தானாயினான். அது கண்டு புலவர் தமது சோணாட்டை நோக்கிப்பல்லக்கேறி மீண்டார். அப்பொழுது பாண்டியன் மனைவியார் தமது பல்லக்கேறித் தொடர்ந்து போயிறங்கி இவருடைய பல்லக்குச்சுமப் போருளொருவராயினர். அஃதுணாந்தபுலவர், நீ நமக்குப் பல்லக்குத்தாங்கப் புகுந்தகருத்தை யுணர்ந்தோம். நாம் வெகுண்டு அரசனைமுனிவாமல்லேம் ~ அஞ்சற்க வென்று அவ்வுத்தமியைத்தடுத்து, உமையாளுநீயுமொருங்கொப்பே யொப்பே, உமையாளாளுக்கங்குண்டோரூனம்~உமையாடன் ~பாகந்தோய்ந் தாண்டான் பலிக்குழன்றான் பாண்டியனின், ஆகந்தோய்ந்தாண்டானரசு என்று வாழ்த்திப்போயினர். இவர் சோழராஜவினது மந்திரியாகிய சீநக்கராயனுக்குப் பிரியாநட்பினர். ஒருநாள் சீநக்கராயன் சயனிக்குங் கட்டிலிலே அவனும் புலவருமாகவிருந்து பொழுது போயபின்னர் நெடுநேரம் அளவளாவிக் கொண்டிருக்கையில் புலவர் தமக்கு நித்திரைவந்ததென்று கூறி ராயனைப் போசனத்துக்குப் போகுமாறு செய்து அக்கட்டிலிற்றானே ஒரு பக்கமாக நித்திரை போயினர். ராயன் போசன முடித்துக் கொண்டு நிலாமணி மேடையிற் சென்று மீளுமுன்னே ராயன் மனைவியும் அக்கட்டிலிற்படுத் துறங்குகின்றவரைத் தன் கணவனென்றெண்ணி ஒருபக்கத்திற் படுத்து நித்திரை போயினான். அதன்பின்னர் ராயனும் போய்ப் படுத்துறங்கினான். வைகறையிலே புலவர் முதலிலே யெழுந்தார். அவ்வரங்கேட்டு அரசனும் எழுந்தான். புலவர் தம்மருகே ராயன் மனைவிபடுத்து நித்திரை போதலைக் கண்டு துணுக்குற்று ராயனைநோக்கி என் செய்தாய்! என்செய்தாய்! என்றனர். ராயன் அவரைநோக்கி அஞ்சாதீர், இப்போ தெழுந்திருக்க வேண்டாம், செல்லக்கிடமின் என்றான். மனைவி அவ்வொலிகேட்டுப் பதைத்தெழுந்தோடி அந்தப்புரஞ் சென்றாள். ராயன் புலவரை நோக்கி என்மனையாளை மாத்திரமன்று உலகத்துப் பெண்களெல்லோரையும் மாதாவெனக் கொண்டு போற்றுகின்ற உம்பக்கத்திலே என்மனையாள் படுத்துறங்கியதைப் பெரும் பாக்கியமாகக் கொண்டேன் என்றான். அன்றுமுதலாகப் புலவரும் ராயனும் ஈருடலு மோருயிரும்போன் றொழுகினர். இவர் சினக்கராயன் இறந்த பொழுது சோழன் தடுக்கவுங் கேளாமல் மேல்வருங் கவிகளைக் கூறி உடன்கட்டையேறினார் வாழிசோழவென்வாய் மொழி கேண்மோ ஊழிநிலவெறிமாளிகையின் வயிற் என்றறிமனைவிநெடிது துயில்கொளச் செல்லக்கிடமினெனக் கிடந்தரு கெனைச் சொல்லிய நண்பன் பன்றனிச் செல்பவனோ நானுமேகுவனற்றுணையவற்கே அன்றுநீ செல்லக்கிடவென்றா யியிழையோ, டின்று நீவானுலகமேறினாய் மன்றல் கமழ், மானொக்கும் வேல்வழியார் மாரனேகண்டியூர்ச் சீநக்காசெல்லக்கிட இப்புலவர் பெருந்தகையே தஞ்சைவாணன் கோவை யென்னும் பிரபந்தம் பாடியவர். அக்கோவையினது சொல்லாற்றல் பொருளாற்றல்கள் தமிழ்ப் புலவர்களைப் பிரமிக்கச் செய்வனவென்றால் மற்றினிக் கூறுவதென்னை இவர் தொண்டைநாட்டிலுஞ் சிறிது காலம் வசித்தவரென்பதும், அக்காலத்திலேயே முருகக்கடவுள் வாயால், விழுந்ததுளியந்தரத்தே வெமென்றும் என்னும் வெண்பாப்பாடப் பெற்றவரென்பதும் தொண்டை மண்டலசதகத்தால் விளங்குகின்றது. இவர் அதிவிரராம பாண்டியன் காலத்துக்குச் சற்று முன்னேயிருந்த வணங்காமுடிப் பாண்டியன் காலத்தவராதலின் இவர் காலம் சற்றேறக்குறைய ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்டது

பொருநராற்றுப்படை

முடத்தாமக்கண்ணியார் பாடிய பிரபந்தம்

பொருனை

தாம்பிரபன்னிநதி. இது பாண்டி நாடுள்ளது. இவ்வாறு சேரநாட்டுக்குரிய தென்பாருமுளர்

பொல்லாப்பிள்ளையார்

அபயகுலசேகர சோழராஜன் கொண்டு போய்க்கொடுக்க நம்பியாண்டார் நம்பியென்னும் ஆதிசைவப் பிராமணர் வாங்கி நிவேதித்த பழம் அவல் எள்ளுண்டை முதலியவைகளைத் தமது துதிக்கையை யுண்மையாக நீட்டி யெடுத்துத் திருவமுது செய்த விநாயகமூர்த்தி விக்கிரகம். இம்மூர்த்தி திருநாரையூரிலுள்ளது

போகமார்த்த பூண்ழலைநாயகி

திருநள்ளாற்றிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

போகர், போகி

இவர் ஜாதியிற் சீனர். சமயத்தாற் புத்தசமயி. ஆச்சிரமத்தாற்றுறவி. இவர் இற்றைக்கு ஆயிரத்தறு நூறுவருஷங்களுக்கு முன்னே சீன தேயத்திலிருந்து பாரதவருஷத்துக்கு வந்து பாடலிபரம் கயா முதலிய விடங்களைத் தரிசித்துக்கொண்டு, தக்ஷிண தேசத்திலும் சோழபாண்டி நாடுகளுக்குச் சென்று அங்கே நெடுங்காலம் வசித்து ஆங்காங்குமுள்ள பண்டிதர்கள் பால் தாமறியாதவைகளைக் கற்றும் அவரறியாதவைகளை அவர்களுக்குக் கற்பித்தும் மீண்டு சீனதேசத்தையடைந்தவர். இவர்பால் வைத்தியங்கற்ற மாணாக்கர் ஒருவர் அவர் கூறிய முறைகளைச் செய்யுள்ரூபமாகப் பாடிப் போகர்நூலெனப் பெயரிட்டனர். பிற்காலத்து வைத்தியபண்டிதர்களுஞ் சிலர் தாமநுபவத்தாலறிந்த முறைகளைப்பாடிக் காலந்தோறும் அந்நூலினுட் புகுத்தியும் விட்டார்கள். பின்னர் அச்சிடப் புகுந்தோரும் கூட்டியும் திருத்தியும் மாற்றியும் அதனை அடியோடு பிறழவைத்தனர். இவர் சீனதேசத்துக்கு மீண்டு சென்றபோது சீஷராகத் தமிழருஞ் சிலர் சென்றார்கள். அப்பொழுது தஞ்சாவூர்ப்பிருகதீசுரன் கோயில் விமானத்துக் கபாலக்கல்லுச்சிற்பவேலை முடிந்தும் அச்சிற்பியிறந்தமையால், நெடுங்காலமாக விமான வேலையிற் பழுதுறாவண்ணமேற்றுமுபாயந்தேர்ந்து கொள்ளப்படாமற் கிடந்தது. அதுமாத்திரமன்று, நாகபட்டணத்துப் புதுவெள்ளிச் கோபுரத்துள்ளே வைக்கப்பட்டு நெடுங்காலமாகக் கிடந்த பொற்குவையுமெடுக்கும்வகை தேர்ந்து கொள்ளப்படா திருந்தது. இவ்விஷயங்களைப் போகியோடு சென்றசீடர்வாய்க கேட்ட சீனதேயத்துச் சிற்பிகளுளொருவன், அப்பெரிய கபாலத்தை யேற்றுவதற்கு அவ்வூரிற் பஞ்சுப்பொதி யில்லையாவென்றும், அச்சக்கரத்தைத் தடுக்க வாழைத் தண்டில்லா தொழிந்ததா வென்றுஞ் சொல்ல, அதனைக்கேட்டிருந்த தமிழருளொருவனாகிய ஒருகைக்கோளன் மற்றோரை யறியாது மீண்டு சோழநாட்டையடைந்து அரசனுக்குணர்த்த, அரசன் பஞ்சை விமானப் பிரமாணமாகக் குவித்து அக்கல்லை யேற்றுவித்தானென்றும், வாழைத்தண்டையிட்டுச் சக்கரத்தை நிறுத்திப் பொற்குவையைக் கவர்ந்து சீரங்கத்து ஏழ்மதிற்றிருப்பணியை முற்றுவித்தா னென்றும் ஒருகர்ணபாரம்பரியமுளது புலிப்பாணி யென்பவர் போகரோடு சீனதேசத்தி லிருந்து வந்து அவர்மீளும் போது அவருடன் செல்லாது தமிழ்நாட்டிலே தங்கியவர். அவர் பாடலென்றுள்ளன வெல்லாம் அவராற் பாடப்பட்டனவன்று. அதுவும் புரட்டு நூலேயாம். இவர் வைத்தியமுஞ்சாலவித்தையுமுணர்ந்தவர். தமிழ்நாட்டுக்கு ஆதியிலே வைத்தியநூல்கள் தந்தருளியவர்கள் அகஸ்தியரும் தேரையர் முதலியோருமேயாவர். அவர் நூலினுள்ளே பெரும்பாலான அழிந்தனவேனும் எஞ்சிய சின்னூல்களை நோக்குமிடத்து அவையெல்லாம் வடமொழிக்கிணங்குவன வாயிருத்தல் பிரத்தியடிமாம். போகர் புலிப்பாணி நூல்களே சிறிதும் ஒவ்வா

போகவதி

வாசுகிராஜதானி

போக்கியார்

இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்

போஜகடகம்

நர்மதாநதியோரத்துள்ள பட்டணம்

போஜசம்பு

ஒரு சம்ஸ்கிருதகாவியம். அது போஜன் செய்த இராமசரித்திரம்

போஜன்

சாத்துவதன்புத்திரன். குந்தியைவளர்த்த தந்தை. இவன் குந்திபோஜன் மகாபோஜன் என்னும் நாமங்களாலும் விளங்குவன் 2. மாளவ தேசத்தரசனாகத்தாரா நகரத்திலிருந்தரசு புரிந்தவோர் அதிப்பிரபல அரசன். இவன் இற்றைக்கு ஆயிரத்திருநூறு வருஷங்களுக்கு முன்னே அரசுபுரிந்தவன் இப்போஜன் காலத்திலே வித்தியா விஷயம் அபிவிருத்தியானது போல் முன்னுமில்லை, பின்னுமில்லையெனலாம். பூர்வத்திலே பூரணசந்திரோதயம் போல் விளங்கிப்பின்னர் அபரபடிம் பெற்ற கலைஞானமெல்லாம் இவ்வரசன் காலத்திலேயே மீளவும் பூர்வபக்கத்துச் சந்திரனானமையால் இப்போஜனைக் கலைமகள் தந்தையெனினும் குற்றமாகாது. போஜன் மகாபண்டிதனா யிருந்தமையால் கலைஞானங்க ளெல்லாவற்றையும் ஆராய்விப்பானாயினான். போஜனாலே செய்யப்பட்ட வைத்தியநூலுமொன்றுளது. அவனுடைய காலத்திலே வேதம் முதல்சிற்பமீறாகிய சாஸ்திரங்களோடு பண்டிதர்களுந் தழைத்து விளங்கினார்கள். காளிதாசன் முதலிய கவிரத்தினங்கள் விளங்கியதும் இவன் சமஸ்தானத்திலேயேயாம். இவன் காலத்திலே மானுஷவைத்தியமாகிய சத்திரவைத்தியமும் அதி உந்நதமாக ஓங்கிவிளங்கிய தென்பது வல்லாளன் செய்த போஜப் பிரபந்தத்திற் கூறப்பட்ட ஒரு சரித்திரத்தால் அநுமிக்கப்படும். போஜப்பிரபந்தம் போஜனைப்பற்றிய சிறு சரித்திரங்களை யெடுத்துக் கோத்துக் கூறுவது. போஜன் ஒருகாலத்தில் கொடிய தலைவலியால் வருந்துவானாயினான். வைத்திய பண்டிதர்களுட் சிரோமணிகளாக அக்காலத்தில் விளங்கியமருத்துவர்க ளொருவர்பின் னொருவராக யாவருஞ்செய்த ஒளஷதப்பிரயோக மெல்லாவற்றையும் பொருட்படுத்தாது மேன்மேலும் தலைக்குத்து இருப்புப்பாரை இடிபோலோங்குவதாயிற்று. இது மரணத்திற்கு ஏதுவாகவந்த தலைவலி யென்றுகூறி மருத்துவரும் கைசலித்து நீங்கினர். அச்சமயத்திலே சல்லிய சாஸ்திரத்திலே, Surgery, கைபோய பண்டிதராகிய சகோதரரிருவர் அரசன் சமஸ்தானத்துக்கு வந்தணைந்தார்கள். அவர்கள் உள்ளே சென்று அரசனுடைய நோயை நிதானித்து இது சத்திர சிகிற்சையாலன்றி மற்றை ஒளஷத சிகிற்சையால், தீராதென்றார்கள். அதுகேட்ட அரசன் அதற்குடன்படுதலும், அரசனுக்கு மூர்ச்சையுண்டாகுமாறு சம்மோகனி யென்னுமோரவுஷதம் பிரயோகித்தார்கள். உடனே அரசன் மூர்ச்சையாயினான். பண்டிதர்கள் அரசன் கபாலத்தை ஆயுதத்தாற் றிறந்து மூளையின்கண்ணேயிருந்தவிஷாமிசத்தை நீக்கிக் சுத்திசெய்து களபாலத்தைப் பழைமைபோலப் பொருந்திச் சந்தைத் தைத்துச் சந்தானகரணியிட்டுச் சஞ்சீவியென்னும் மருந்தை யுள்ளுக்குப் பிரயோகித்து உயிர்ப்பும் அறிவு முதிக்கும்படி செய்ய, அரசன் நித்திரை தெளிந்தான் போன்று விழித்துப் பூரணசுகம் பெற்றான். இதன்விரிவைப் போஜப்பிரபந்தத்திற் காண்க. சம்மோகினி யென்பது தற்கால ஐரோப்பிய பண்டிதர் பிரயோகிக்கும் குளோரபாம், Choloroform, போல்வதொரு மூர்ச்சையுண்டாக்கும் மருந்து. அது குளோரபாம் என்பதிலும் மிகச்சிறந்தது. குளோரபாம் அபாயமுள்ளது. சம்மோகனி ஒருபகற்காலம் வரைக்கும் அபாயஞ் செய்யாது. வேண்டிய போது சஞ்சீவினிப் பிரயோகத்தால் அதன் அதிகாரம் முற்றும் நீங்கி அறிவுதயமாகும். அக்காலத்தாரிய பண்டிதர் சஞ்சீவினிகையிலிருப்பினன்றிச் சம்மோகனிப் பிரயோகஞ் செய்யார், சஞ்சீவினி ~ a restorative, குளோரபாமைக் கொடுத்துவிட்டுக் கைமிஞ்சியதே யென்று விழிக்கம் ஐரோப்பிய பண்டிதரைப்போல விழித்துத் திகைக்கமாட்டார். அதுநிற்க, மேற்கூறிய சரித்திரத்தால், ஐரோப்பிய பண்டிதர், Triumph of Modern Surgery, தற்காலத்திலே தாம் நூதனமாகக் கண்ட சத்திர சிகிற்சை யென்றுச்சிமேல் வைத்துக் கொண்டாடும், Cranial Surgery, கபாலசல்லியும், கபாலத்தைத் திறந்து சிதைவு சோதித்தல் முதலியன, ஆரிய பண்டிதர் பல்லாயிரவருஷங்களுக்கு முன்னே சிறிதும் அபாயமின்றிப் பயின்றுவந்த அரிய சிகிற்சைகளுளொன்றேயா மென்பது நன்கு புலப்படுகின்றது. இக்கபால சல்லிய சம்பவம் இஃதொன்று மாத்திரமன்று கௌதம புத்திரருடைய வைத்தியபண்டிதனாக விளங்கிய ஜீவகனும், அநேக கபால கல்லிய சிகிற்சைகள் செய்து புகழ்படைத்தானெனப் பௌத்த நூல்கள் கூறுகின்றன. சம்மோகனிகட் கீவாகடத்திலுளதென்றாதலும் சஞ்சீவினிக்கீடாக அவ்வைரோப்பிய வாகடத்தில் யாதுமில்லை யென்பது இனாற் புலப்படும்

போஜப்பிரபந்தம்

இதிலே போஜசரித்திரமும் காளிதாசன்தண்டி முதலிய வித்துவ ரத்தினங்களினது வரலாறுங் கூறப்படும்

போஜர்

யாதவருள் ஒரு சாரார்

போதனை

ராமகிரிக்குக்கிழக்கிலுள்ள ஒரு மலை

பௌண்டரம்

வீமசேனன் சங்கு, உ, ஓட்டரதேசத்துக்கு ஆந்தரதேசத்துக்கும் உத்தரத்திலுள்ள நாட்டுக்குப் பெயர்

பௌத்தர்

பௌத்தமதத்தை அவலம்பித் திருப்பவர்கள். இம்மதம் சத்திய சீலங்களையும் யோகவித்தையையும் செவ்வே போதிப்பது

பௌமன்

செவ்வாய்

பௌரவர்

பூருவமிசத்தோர்

பௌரவி

பாகிலிகன் புத்திரி. வசுதேவன் பாரி

பௌலோமர்

வைசுவாநரன் என்னும் தானவன் மகளாகிய புலோமையிடத்து மரீசிக்கு உற்பத்தியான ராக்ஷகள். அருச்சுணனாற் கொல்லப்பட்டவர்கள்

பௌலோமி

சசிதேவி. புலோமன் புத்திரி. இந்திரன் பாரி

பௌஷியன்

உதங்கனுக்குக் குண்டலங்கொடுத்த ராஜா