ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
பொதியில் | பாண்டிநாட்டிலுள்ள தொருமலை. இது தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பொது விடமாயிருத்தலின் இப்பெயர் பெற்றது |
பொன்னுச்சாமித்தேவர் | புதுக்கோட்டைச் சிவஞானத் தேவர் புத்திரராகிய இவர் சேதுபதிசமஸ்தானத்துச் சர்வாதிகாரியாகி அவ்விராஜாங்கத்தைச் சீரிட்டு நன்னிலைக்குய்த்தவர். முன்னாளிலே தாராநகரத்திலிருந்து சம்ஸ்கிருத பாஷையை வளர்த்த போஜராஜனே பின்னாளிலே தமிழையும் வளர்க்குமாறு இப்பொன்னுச்சாமி நரேந்திரனாக அவதரித்தான் என்று புலவர் நாவினும்பாவினும் போற்றற்குரிராய் விளங்கிய ராஜபண்டிதர் இவர் ஒருவரே. தமிழ்ப் புலமையுஞ் சிவபக்தியும் ராஜதந்திரமும்ம கௌதாரியமும் இவர்பாற் குடிகொண்ட சிறப்புக்கள். புலவர் திலகர்களாகிய ஆறுமுகநாவலரும் மீனாக்ஷிசுந்தர கவிச்சக்கரவர்த்தியும் இவர் காலத்துப் புலவர்கள். ஆறுமுகநாவலரைக் கொண்டு திருக்குறளையும் திருக்கோவையாரையும் கரலிகிதவழூஉக் களைந்து அச்சிடுவித்துலகுக்குபகதித்த பெருந்தகையு மிவரே. இவரைப் போலவே இவர்க்கு அருந்தவப் புதல்வராக வந்தவதரித்திருக்கும் பாலயவனத்தத்து ஜமீந்தாராகிய பாண்டித்துரைச்சாமித் தேவரும் தமிழ்க் கலாவினோதரும் வித்துவசிகாமணியுமாகி விளங்குகின்றார். அவரே இப்போது மதுரையிலே தமிழ்ச்சங்கம் ஸ்தாபித்து நடாத்தி வருகின்றவர் |
பொன்பற்றியூர்ப்புத்தமித்திரனார் | வீரசோழன் காலத்திலேயிருந்து அவன் பெயரால் வீரசோழிய மென்னுமிலக்கணநூல் செய்தவர் |
பொன்மயிலம்பிகை | திருப்பராய்த்துறையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
பொன்முடியார் | இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர் |
பொய்கையார் | இவர் கோச்செங்கட்சோழனாராற் சிறையிலிடப்பட்ட சேரமான் கணைக்காலிரும் பொறையைச் சிறைவிடும் பொருட்டு அச்சோழனாரைக் களவழிநாற்பதென்னும் நூலாற்பாடிய புலவர். இவர்க்கு ஜன்மநகரம் தொண்டி, சேரமான்கோத்கோதையும் இவராற் பாடப்பட்டவன் |
பொய்யடிமையில்லாதபுலவர் | மதுரைத்தமிழ்ச்சங்கத்திலிருந்த கபிலபரணர் முதலியோர் |
பொய்யாமொழிப்புலவர் | துறையூரிலே வேளாளர் குலத்திலே அவதரித்துத் தமிழ்ப்புலமையும் சாபானுக்கிரகமும் பெரிதுமுடையராய் விளங்கியவர். அழிந்துபோன தமிழ்ச்சங்கத்தை மீளவும் அமைத்து வளர்த்தல் வேண்டுமென்னும் பேரவாவடையராய் வணங்காமுடிப் பாண்டியன்பாற் சென்றனர். அவன் இவர் கருத்தையுசாவி யுணர்ந்து சங்கங்கூட்டுங்கருமத்தைப் பின்னர் யோசிப்பாம், இப்போது நமது சிவாலயத்தினுள்ளே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் சங்கப்புலவர்களது விக்கிரகங்க ளெல்லாம் மலை துளக்கும்படி பாடும் பார்ப்போ மென்றான். உடனே இவர், உங்களிலேயானெருவனெவ்வெனோ வல்லேனோ, திங்கட்குலவறியச் செப்புங்கள் ~ சங்கத்துப் பாடுகின்ற முத்தமிழ்க் கென்பைந்தமிழுமொக்குமோ ~ ஏடவீழ்தாரேழெழுவீரே என்னும் வெண்பாவைக் கூறுதலும் அவ்விக்கிரகங்களெல்லாம் சிரக்கம்பஞ் செய்தன. இவ்வற்புதத்தைக் கண்டும் பாண்டியன் இவர் விண்ணப்பத்தைப் பொருட்படுத்தானாயினான். அது கண்டு புலவர் தமது சோணாட்டை நோக்கிப்பல்லக்கேறி மீண்டார். அப்பொழுது பாண்டியன் மனைவியார் தமது பல்லக்கேறித் தொடர்ந்து போயிறங்கி இவருடைய பல்லக்குச்சுமப் போருளொருவராயினர். அஃதுணாந்தபுலவர், நீ நமக்குப் பல்லக்குத்தாங்கப் புகுந்தகருத்தை யுணர்ந்தோம். நாம் வெகுண்டு அரசனைமுனிவாமல்லேம் ~ அஞ்சற்க வென்று அவ்வுத்தமியைத்தடுத்து, உமையாளுநீயுமொருங்கொப்பே யொப்பே, உமையாளாளுக்கங்குண்டோரூனம்~உமையாடன் ~பாகந்தோய்ந் தாண்டான் பலிக்குழன்றான் பாண்டியனின், ஆகந்தோய்ந்தாண்டானரசு என்று வாழ்த்திப்போயினர். இவர் சோழராஜவினது மந்திரியாகிய சீநக்கராயனுக்குப் பிரியாநட்பினர். ஒருநாள் சீநக்கராயன் சயனிக்குங் கட்டிலிலே அவனும் புலவருமாகவிருந்து பொழுது போயபின்னர் நெடுநேரம் அளவளாவிக் கொண்டிருக்கையில் புலவர் தமக்கு நித்திரைவந்ததென்று கூறி ராயனைப் போசனத்துக்குப் போகுமாறு செய்து அக்கட்டிலிற்றானே ஒரு பக்கமாக நித்திரை போயினர். ராயன் போசன முடித்துக் கொண்டு நிலாமணி மேடையிற் சென்று மீளுமுன்னே ராயன் மனைவியும் அக்கட்டிலிற்படுத் துறங்குகின்றவரைத் தன் கணவனென்றெண்ணி ஒருபக்கத்திற் படுத்து நித்திரை போயினான். அதன்பின்னர் ராயனும் போய்ப் படுத்துறங்கினான். வைகறையிலே புலவர் முதலிலே யெழுந்தார். அவ்வரங்கேட்டு அரசனும் எழுந்தான். புலவர் தம்மருகே ராயன் மனைவிபடுத்து நித்திரை போதலைக் கண்டு துணுக்குற்று ராயனைநோக்கி என் செய்தாய்! என்செய்தாய்! என்றனர். ராயன் அவரைநோக்கி அஞ்சாதீர், இப்போ தெழுந்திருக்க வேண்டாம், செல்லக்கிடமின் என்றான். மனைவி அவ்வொலிகேட்டுப் பதைத்தெழுந்தோடி அந்தப்புரஞ் சென்றாள். ராயன் புலவரை நோக்கி என்மனையாளை மாத்திரமன்று உலகத்துப் பெண்களெல்லோரையும் மாதாவெனக் கொண்டு போற்றுகின்ற உம்பக்கத்திலே என்மனையாள் படுத்துறங்கியதைப் பெரும் பாக்கியமாகக் கொண்டேன் என்றான். அன்றுமுதலாகப் புலவரும் ராயனும் ஈருடலு மோருயிரும்போன் றொழுகினர். இவர் சினக்கராயன் இறந்த பொழுது சோழன் தடுக்கவுங் கேளாமல் மேல்வருங் கவிகளைக் கூறி உடன்கட்டையேறினார் வாழிசோழவென்வாய் மொழி கேண்மோ ஊழிநிலவெறிமாளிகையின் வயிற் என்றறிமனைவிநெடிது துயில்கொளச் செல்லக்கிடமினெனக் கிடந்தரு கெனைச் சொல்லிய நண்பன் பன்றனிச் செல்பவனோ நானுமேகுவனற்றுணையவற்கே அன்றுநீ செல்லக்கிடவென்றா யியிழையோ, டின்று நீவானுலகமேறினாய் மன்றல் கமழ், மானொக்கும் வேல்வழியார் மாரனேகண்டியூர்ச் சீநக்காசெல்லக்கிட இப்புலவர் பெருந்தகையே தஞ்சைவாணன் கோவை யென்னும் பிரபந்தம் பாடியவர். அக்கோவையினது சொல்லாற்றல் பொருளாற்றல்கள் தமிழ்ப் புலவர்களைப் பிரமிக்கச் செய்வனவென்றால் மற்றினிக் கூறுவதென்னை இவர் தொண்டைநாட்டிலுஞ் சிறிது காலம் வசித்தவரென்பதும், அக்காலத்திலேயே முருகக்கடவுள் வாயால், விழுந்ததுளியந்தரத்தே வெமென்றும் என்னும் வெண்பாப்பாடப் பெற்றவரென்பதும் தொண்டை மண்டலசதகத்தால் விளங்குகின்றது. இவர் அதிவிரராம பாண்டியன் காலத்துக்குச் சற்று முன்னேயிருந்த வணங்காமுடிப் பாண்டியன் காலத்தவராதலின் இவர் காலம் சற்றேறக்குறைய ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்டது |
பொருநராற்றுப்படை | முடத்தாமக்கண்ணியார் பாடிய பிரபந்தம் |
பொருனை | தாம்பிரபன்னிநதி. இது பாண்டி நாடுள்ளது. இவ்வாறு சேரநாட்டுக்குரிய தென்பாருமுளர் |
பொல்லாப்பிள்ளையார் | அபயகுலசேகர சோழராஜன் கொண்டு போய்க்கொடுக்க நம்பியாண்டார் நம்பியென்னும் ஆதிசைவப் பிராமணர் வாங்கி நிவேதித்த பழம் அவல் எள்ளுண்டை முதலியவைகளைத் தமது துதிக்கையை யுண்மையாக நீட்டி யெடுத்துத் திருவமுது செய்த விநாயகமூர்த்தி விக்கிரகம். இம்மூர்த்தி திருநாரையூரிலுள்ளது |