ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
புகழேந்தி | ஒட்டக்கூத்தன் காலத்திலே பாண்டியன் சமஸ்தானத்து வித்துவானாக விளங்கிய ஒரு தமிழ்ப்புலவர். இவர் செய்த நூல்கள் நளவெண்பா முதலியன. வெண்பாப்பாடுவதில் இவருக்கு ஒப்பாரும் மிக்காருமில்லை. இவருடைய கவித்திறமையைக் கண்ட ஒட்டக்கூத்தன் அவருக்குப்பல துன்பங்கள் செய்யப் புகுந்தும் ஈற்றில் அவருடைய இனிய குணங்களினால் அவரோடு கலந்து நண்பனாயினான் |
புகழ்ச்சோழநாயனார் | சோழநாட்டிலே உறையூரிலே செங்கோன்முறை வழுவாமல் அரசியற்றிய ஒரு சிவபக்தர். இவர் சிவகாமியாண்டார் கொண்டு சென்ற புஷ்பங்களைச் சிதறிய தம்முடைய யானையையும் பாகர்களையும் கொன்ற எறிபத்தநாயனாரை அணைந்து இத்தீமைக்கக் காரணனாகிய என்னையுங் கொன்றருளுமென்று தமதுடைவாளைக் கொடுத்துக் தமது பக்தியை விளக்கிய அரசராகிய பெருந்தகை. இவர் 1800 வருஷங்களுக்கு முன்னுள்ளவர் |
புகழ்த்துணைநாயனார் | செருவிலிபுத்தூரிலே ஆதிசைவர் குலத்திற் பிறந்து சிவாகமவிதிப்படி பரமசிவனை அர்ச்சனைசெய்து வருங்காலத்திலே, பஞ்சத்தினால் பசிமிகப் பெற்று மெய்சோர்ந்த வழியும் கைசோராத உறுதிப்பாட்டைக்கண்ட சிவபெருமான் பஞ்சம் நீங்கும் வரைக்க உனக்குத் தினந்தோறு மிங்கே ஒவொருகாசு வைப்போம் என்றருளிச் செய்து அவ்வாறு செய்யப் பெற்ற சிவபக்தர் |
புஞ்சிகஸ்தலை | வருணன் புத்திரியாகிய ஓரப்சரஸ்திரி |
புட்கரம் | வடநாட்டின் கண்ணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம் |
புண்டரன் | பலியினது நான்காவது புத்திரன் |
புண்டரம் | ஒருதேசம். இது வங்காளத்துக்கு மேற்கிலுள்ளது |
புண்டரீகன் | நபசுபுத்திரன் |
புண்டரீகம் | அக்கினித்திக்குக் காவல் பூண்ட ஆண்யானை உ. ஒரு தீர்த்தம் |
புண்டரீகாடின் | விஷ்ணு. கமலக் கண்ணன் என்பது பதார்த்தம் |
புண்ணியசரவணம் | அழகர்மலைக்கணுள்ள தோர் பொய்கை. இது தன்பால் நீராடவோர்க்கு ஐந்திர வியாகரணத்தைத் தெரிவிப்பது, புறநானூறு |
புதன் | சந்திரன் புத்திரன். தாய் பிருஹஸ்பதி பாரியாகிய தாரை நவக்கிரகங்களுளொன்று |
புத்தரிற்சௌத்திராந்திகன் | உருவம், ஞானம், வேதனை. குறிப்பு, வானை என்பன தொடர்ச்சியாய் அழிவதுபந்தமென்றும், அவை முற்றும் ஒழிதலே முத்தியென்றுஞ் சொல்பவன் |
புத்தர் | பௌத்தமதம் ஸ்தாபித்த கௌதமனார். இவர் கங்கைக்கு வடதிசையிலே ரோகிணிநதி தீரத்திலே கபிலவாஸ்து என்னுநகரத்திலே சுத்தோதனன் என்னுமரசனுக்கு மாயாதேவி வயிற்றிலே புத்திரராக அவதரித்தவர். இவர் அவதரித்திருந்தபோது அசிதர் என்னு மகாமுனிவர் அங்கேசெல்ல, சுத்தோதனன் அக்குழந்தையைக் கொண்டுபோய் அவர் பாதங்களில் வைத்தாசீர்வதிக்குமாறு வேண்டினான். அசிதர் அக்குழந்தையை வாங்கி அதன்பாதங்களைத் தன்னிரு கண்களிலுமொற்றி, பாலகிருபா மூர்த்தியே, உனக்கு நமஸ்காரம். நீயே அவன். உன்சரீரத்திலே ஞானிகளுக்குரிய முப்பத்திரண்டு இலக்கணங்களும் எண்பது உபலக்கணங்களும் விளங்குகின்றன. நீ உலகத்துக்கு ஆன்மபோதம் புகட்ட அவதரித்திருக்கிறாய். உனது திவ்விய போதத்தை என்காதாற்பருகி யானந்தமடையும் பேறபெறாமற் சின்னாளில் இச்சரீரத்தை விட்டகலப் போகின்றேன். ஓ! சுத்தோதன மகாராஜனே! இச்சிசுரத்தினம் மானுஷகணமாகிய பொற்றாமரை வாவியிலே பல்லாயிர வருஷங்களுக்கொருமுறை பூத்தலர்வதாகிய ஏகபுஷ்பமேயாம். இவ்வற்புதமலர் உலகமெங்கும் கமழ்ந்து நறுந்தேன் பிலிற்றும். இம்மலரைக் கொடியாகிய நின்குடும்பம் பெற்ற பாக்கியமே பாக்கியம். ஆயினும் இத்தெய்வக்குழந்தையாலே சுகத்தையடைய மாட்டாய் என்றுகூறிப் பின்னரும் பலவாறு வாழ்த்திப்போயினர் புத்தர் பிள்ளைத்திருநாமம் சித்தார்தனார். அவர் கௌதம கோத்திரத்திலே சாக்கியர் குடியிலே பிறந்தமையாற் கௌதமரென்றும் சாக்கியர் என்றும் இருவேறு பெயர் கொண்டனர். புத்தர் என்னும் பெயர் பின்னர்ப் பெற்ற ஆச்சிரமப்பெயர். இவர் தமக்குக் கல்விகற்பிக்க வந்த ஆசிரியர் சொல்லவெடுக்கும் பாடங்களை அவர் சொல்லுமுன்னே தாமே யோதியும், அவர் வழுவிய விடத்து அவ்வழூஉக்களைத் திருத்தியும் வருவாராயினார். அதுகண்டு அவ்வாசிரியர் நீங்கினார். அதன்பின்னர்ப் புத்தர் தாமாகவே சர்வசாஸ்திரங்களையும் பழம்பாடம்படிப்பார் போலப் பூர்வஜன்ம வாசனைபற்றி ஒதியுணர்ந்தார். உரிய காலத்திலே விவாகமுமாயிற்று. அவர் இயல்பிலே துறவுடைய ராதலின் அவரை விவாகாதி போகங்களெல்லாம் பிணிப்பனவாகாவாயின. ஒரு நாள் அவர் தமது மனைவியோடு நந்தவனம் பார்க்குமாறு தேரேறி வீதியிற் செல்லும் போது, ஒரு யௌவன புருஷன் எதிரேவரக் கண்டு அவன் அழகைப்பாத்து வியந்துசென்றார். அவர் சாயங்காலத்திலே மீண்டு செல்லும்போது அப்புருஷன் மிக்கநோயால் வருந்தி மெலிந்து வீதியிலே வீழ்ந்து கிடப்பக்கண்டு சென்றார். அங்ஙனஞ் சென்றார்க்கு ஊண்மேலும் நித்திரைமேலும் மற்றைய சுகங்களின் மேலும் மனஞ் செல்லாமையால் அவர் அவ்விரவிற்றானே உலகப் பற்றையெல்லாம் முற்றத் துறந்து ஆன்மாக்கள் பிறவிப் பெருங்கடலாகிய துக்கராகரத்தைக் கடந்துய்யும்வழி யாதென்று நாடியுணரக்கடவேன் என்று கூறித் துணிந்து தமது அரமனையை விட்ட கன்று காட்டகஞ்சென்று யோகசித்தியடைந்தபின்னர் அவர் தேசங்கடோறுஞ் சென்று தமது கொள்கைகளை எடுத்துப் பிரசங்கித்து வந்தார். அவரைப் பல்லாயிரவர் ஞானாசாரியராகக் கொண்டார்கள். அவருக்கு அநேக அரசரும் சீஷரானார்கள். அவராலும் ஏனைய மாணாக்கர்களாலும் அவருடைய மதம் உலகெங்கும் வியாபிப்பதாயிற்று. கடவுள் அவாங்மனோகோசரமாதலின் கடவுளை இம்மானுடநிலையிற் கண்டு தெளிவது கூடாதென்றும், புத்தநிலையை யடையமுயல்வதே முத்தியுபாயமென்றும், அவாவறுத்து, உலகம் கணந்தோறும் விகாரப்பட்டுத் தோற்றக்கேடுகளுக் கிடனாய் நிற்றலின் பொய்யென்றுணர்ந்து ஆன்மதரிசனஞ் செய்தவழியன்றி அந்நிலை சித்தியா தென்றுங் கூறுவது அவர்மதவுள்ளுறை. உயிர்களிடத்து அன்பும் ஞானமுமே அவர்மதத்துக்கு ஆதாரபீடமாம். அவர்கூறிய அறநெறிகள் அத்தியற்புத மானவை. அவருடைய பிரமசீஷர் ஆநந்தர் என்பவர். அவர்காலத்தரசர் விம்பிசாரன் அஜாதசத்துரு முதலியோர். அடைந்தபோது அவர்க்கு வயசு எண்பது. அவர்காலம் இற்றைக்கு இரண்டாயிரத்து ஐநூற்றறுபது வருஷங்களுக்கு முன்னுள்ளது. முன்னுள்ள காலாந்தரங்களிலே புத்தர்பலர் அவதரித்துப் பௌத்தமத ஸ்தாபனம் பண்ணிப்போயினரேனும், அவர்கள் பெயரெல்லாம் இக்கௌதம புத்தரால் ஒளியிழந்து போயின. முன்னும் பலபுத்தருண்மை பற்றியே அவரோடு மயங்காவண்ணம் இவர் கௌதமபுத்தரென்றும் சாக்கியபுத்தர் சாக்கிய முனிவரென்றும் பலபெயரால் வழங்கப்பட்டனர் |
புத்தி | விநாயகக்கடவுளது உபயசக்திகளுளொருவர். மற்றவர் சித்தி |
புத்து | புத்திரரில்லாதோர் சென்றடையும் ஒரு நரகம். தந்தைக்குப் புத்தென்னும் நரகத்தைத் தவிர்ப்போன் மகனாதலின் மகனுக்குப் புத்திரனென்னும் பெயருண்டாயிற்று |
புனர்வசு | தவித்தியோதன் தம்பி. துந்துபிமகன், உ, ஒருநடித்திரம் |
புனிதவதியார் | காரைக்காலம்மையார் காண்க |
புமன்னியன் | துஷ்யந்தன் புத்திரன் |
புரஞ்சயன் | விகுக்ஷிபுத்திரன். இவன் பூர்வாநமம் ககுத்சன், உ, சுவீரன்மகன், ந, சிருஞ்சயன் புத்திரன் |
புரந்தரன் | வைவசுவதமனு காலத்துள்ள இந்திரன். ஓரக்கினி |
புராணம் | உலகத்தினது தோற்றமும், ஒடுக்கமும், பாரம்பரியங்களும், மனுவந்தரங்களும், பாரம்பரியகதைகளும் ஆகிய இவ்வைந்தையுங் கூறலால் பஞ்சலடிணமெனப்படுவது. புராணம் பதினெட்டு. அவை வேதங்களுக்கு வியாக்கியாரூபமாயுள்ளன. அவை, பிரமம், பத்மம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம், பவிஷியம், பிரமகைவர்த்தம், லிங்கம், வராகம், ஸ்கலாந்தம், வாமனம், கூர்மம், மற்சம், கருடபுராணம், பிரமாண்டம் எனப் பதிணெண் புராணங்களாம். புராணம் என்பதன் பொருள் பண்டைவரலாறு. அவற்றைவகுத்தவர் வியாசர். அவற்றுட் சிவபுராணம் பத்து விஷ்ணுபுராணம் ஆறு, பிரமபுராணம் ஒன்று, சூரியபுராணம் ஒன்று, விஷ்ணுபுராண நான்கென்றும், பிரமபுராண மிரண்டென்றும். அக்கினிபுராண மொன்றென்றுங் கூறுவாருமுளர். இனி, புராணமானது சாஸ்திரங்களுள்ளே தலைமைபெற்றது. அது கிருயுகத்திலே நூறுகோடி கிரந்தங்களினாலே பிரமாவினாற் செய்யப்பட்டமையின் பிராமம் என்னும் பெயரினையுடையதாய் ஒன்றாயிருந்தது. திரேதத்திலே கோடி கிரந்தங்களால் நூற்றுப்பதினெட்டுச் சங்கிதைகளையுடைய பதினெட்டுப் பாகங்களாக அது மகாரிஷிகளால் வகுக்கப்பட்டது. அதனைத் துவரபரத்திறுதியிலே வியாசர் நான்கிலடிங்கிரந்தங்களால் பதிணெண் புராணமாக்கினர். அப்பதினெட்டையும் ரோமகர்ஷணர் என்னும் முனிவர் வியாசர்பாற் கேட்டார். அவர் சுமதி அக்கினிவர்ச்சன் முதலியோர்க் குபதேசித்தார். இப்படிக் குருசீஷ பரம்பரையாக வெளிவந்தன. இறந்துபோன பலகற்பத்துச் செய்திகளே யெடுத்துக் கூறப்படுதலாலும் இறந்துபோன சிருஷ்டிகளும் ஒருவாறின்றிப் பேதப்படுதலாலும், கற்பந்தோறும் அநுக்கிரக மூர்த்திகளும் வேறாகலாலும், அவ்வக்கற்பத்து வரலாற்றைக் கூறும்போது அவ்வக்கற்பத்ததிகார மூர்த்தியே விசேடித்துத்துதிக்கப் படுதலாலும் புராணங்கள் ஒன்றற்கொன்று மாறுகொள்வனபோற் றோன்றினும் உண்மையானோக்குமிடத்து ஒற்றுமையுடையனவேயாம் |
புராந்தகியம்மை | திருவிற்கோலத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர் |
புரிகுற்சன் | மாந்தாதாசக்கரவர்த்தி மகன் |
புரிகுழலாள் | திருபாண்டிக்கொடுமுடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர் |
புருகோத்திரன் | அணுபுத்திரன் |
புருஜன் | சுசாந்திமகன் |
புருஜித்து | ரிசிகன் புத்திரன், உ, வசுதேவன் தம்பியாகிய கங்கன் மகன் |
புருமீடன் | ஹஸ்திகன்மகன். அஜமீடன் தம்பி |
புருஷோத்தமபாண்டியன் | அநுலோகம பாண்டியருளொருவன் |
புரூடன் | வசுதேவனுக்குச் சகதேவியிடத்துப் பிறந்த புத்திரன் |
புரூரவன் | வைவசுவதமனு புத்திரியாகிய இளையிடத்துப் புதனுக்குப்பிறந்த புத்திரன். இவன் பிரசித்தி பெற்ற ஒரு சக்கரவர்த்தி. இவன் ஈகையிலும் தெய்வபக்தியிலும் அழகிலும் சிறந்தவன். இவன் ஒரு நாள் ஊர்வசியைக் கண்டு மோகித்து அவளைத் தனக்கு மனைவியாம்படிகேட்க, நீர் என்னை ஒருநாளும் பிரிந்திருப்பதில்லையென்று வாக்குத்தானஞ் செய்தால் உம்மோடு கூடியிருப்பேனென்று அவள்கூற, அதற்குடன்பட்டு அவளோடு கூடிச் சுகித்திருந்தவன். இவ்விஷயம் இருக்குவேதத்திலே குறிக்கப்பட்டிருக்கின்றது |
புரோசனன் | துரியோதனன் நண்பனாகிய ஒரு சிற்பி. இவன் துரியோதனன் ஏவலின்படி பாண்டவர்களைக் கொல்லும் பொருட்டு அரக்குமாளிகை அமைத்தவன் |
புறநானூறு | எட்டுத்தொகையுள் எட்டாவது. முரஞ்சியூர் முடிநாகராயர் முதல் கோவூர்க்கிழாரெல்லையாகவுள்ள புலவர்களால் இயற்றப்பட்டது. இந்நூல் கடைச்சங்கத்தார் காலத்தது. இந்நூலினால் பூர்வகாலத்தரசர் பலருடைய வரலாறும் பூர்வகாலத்துப் புலவர் ஆற்றலும் நன்கு புலப்படும் |
புறப்பொருள் வெண்பாமாலை | ஐயனாரிதனார் செய்தது. புறப்பொருளையே பொருளாகவுடையது |
புலகர் | புலத்தியரது தமையனார். இவா தக்ஷபுத்திரிகளுளொருத்தியாகிய க்ஷமையை மணம்புரிந்து மூவர் புத்திரரைப் பெற்றவர் |
புலஸ்தியர் | பிரமமானச புத்திரருளொருவர். இவனுக்கு அவிர்ப்புக்கு விடத்திலே அகஸ்திய னென்றொருவனும் விச்சிரவசுவும் பிறந்தார்கள், இந்த அகஸ்தியரும் வேறு, கும்பமுனியும் வேறு, இப்புலஸ்தியரே புராணங்களை முதன்முதல் மனுஷருக்கு வெளியிட்டவர் |
புலி | வியாக்கிரபாதர் |
புலியூர் | சிதம்பரம். வியாக்கிரபாதர் பூசித்த ஸ்தலமாதலின் சிதம்பரத்துக்கு இப்பெயர் வந்தது |
புலோமசை | இந்திரன் மனைவியாகிய சசிதேவி. புலோமன் மகள். இந்திரன் புலோமனைக் கொன்று புலோமசையைக் கொண்டேகினான் |
புல்லாற்றூர் எயிற்றியனார் | தன்மக்கண் மேற்போருக்கெழுந்த கோப்பெருஞ்சோழனைப்பாடி அது செய்யாவகை தடுத்தவர். போர்வலியிற்சிறந்த வேந்தேதேகேள், உன்னைப்பகைத்திருப்பவர் யார்? உன்புதலவரன்றோ? நீ அவரைப்போரில் வென்றிருந்து விண்ணுலகாளப் புகும்போது இம்மண்ணுலகை யாருக்குவைத்தேகுவை? ஒருகால் அவர்க்கு நீ தோற்பின் உனக்குண்மைப் பகைவர் கொண்டாடப் பேரிழிவை நிலைநிறுத்துவையன்றோ. ஆதலின் நின்சினம் ஒழிவதாக என்னுங் கருத்தையடக்கி இவர் கூறியபாட்டு அதிசாதுரியமானது, புறுநானூறு உகந |
புளிந்தர் | விதர்ப்பானர்த்த தேசங்களிலுள்ள ஒரு சாதியாளர் |
புள்ளிருக்கும்வேளூர் | திருப்புள்ளிருக்கும் வேளூர் காண்க |
புள்ளிலூர் | தொண்டைநாட்டகத் தோரூர் |
புவனநாயகியம்மை | திருமாகறலிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
புவனேகவாகு | விஜய கூழங்கைச்சக்கரவர்த்தி யாழ்ப்பாணத்திலரசு புரிந்தகாலத்தில் அவனுக்கு மந்திரியாயிருந்தவர். இவர் தமிழ்ப்புலமை நிரம்பியவர். இவராலெடுக்கப்பட்ட சுப்பிரமணியாலயம் இன்னும் நல்லூரில் நின்று நிலவுவது. இவர் ஆயிரத்தெண்ணூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னேயிருந்தவர். இவர் ஊர்தோறும் தரும பாடசாலைகள் அமைத்துத் தமிழ்க் கலாவிருத்தி செய்தவர். இவர் காலம் ஆயிரம் வருஷங்களுக்கு முந்திய தென்பாருமுளர் |
புவனேசுவரி | க. பார்வதி. உ. ஒட்டரதேசத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
புஷ்கரன் | வசுதேவன் தம்பியாகிய விருகன் இரண்டாம் புத்திரன், உ, நளன் சிறயதந்தை புத்திரன், ந, ராமன் தம்பி பரதனது புத்திரன், ச, சிவன், ரு, விஷ்ணு |
புஷ்கரம் | மாளவதேசத்திலுள்ள ஒரு தீர்த்தம், உ, ஏழுதீவுகளுளொன்று |
புஷ்கரவதி | ராமன்தம்பி. பரதனது இரண்டாவது புஷ்கரனாலமைக்கப்பட்ட ஒரு நகரம் |
புஷ்கராடின் | விஷ்ணு, புஷ்காரம் ~ தாமரை, அடின் ~ கண்ணன் |
புஷ்கராணியம் | புஷ்கரதீர்த்தத்துக்குச் சமீபத்துள்ள வனம் |
புஷ்கராருணி | ருக்ஷையன் புத்திரன். இவன் வமிசம் பிராமண வமிசமாயிற்று |
புஷ்கரிணி | உல்முகன் பாரி. அங்கன் தாய், உ, வியுஷ்டி பாரி. சர்வதேசசு தாய் |
புஷ்பகம் | குபேரன் பிரமாவைநோக்கி தவஞ்செய்து பெற்றுக்கொண்ட விமானம். இது மணிமயமுடையதாய் இச்சித்தவிடத்துக்குக் கொண்டேகுவது. இதனை ராவணன் குபேரனோடு போர்செய்து கவர்ந்து கொண்டான். ராவணயுத்தம் முடிந்த பின்னர் இராமர் அவ்விமானத்தைக் குபேரனுக் கீந்தனர் |
புஷ்பதந்தன் | சிவகணங்களுளொருவன். இவனேமகிமாஸ்தோத்திரஞ் செய்தவன், உ, விஷ்ணு பரிவாரத்தவருளொருவன் |
புஷ்பதந்தம் | வாயுதிக்குக் காவல்யானை |
புஷ்பவந்தன் | உபரிசரவசு வமிசத்தரசன் |
புஷ்பாரணன் | துருவன்மகனாயிய வற்சரனுக்குச் சருவசித்தியிடத்தப் பிறந்த புத்திரன் |
புஷ்போற்படை | சுமாலிபுத்திரி. விச்சிரவசுபாரிகளிளொருத்தி. ராவணாகும்பகர்ணன் தாய் |
புஷ்யமித்திரன் | மகாதேசராஜாக்களுள் கடையரசனாகிய பெரிய ரதன்சேனாபதி. இவன் ராஜாவைக் கொன்று தான்பின்னர் அரசனாயினவன் |
புஷ்யம் | பூசநடித்திரம், உ, கலியுகம். தைமாசம் |