ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
நகுலன் | பாண்டுவுக்கு மாத்திரியிடத்திலே அசுவினிதேவர் பிரசாதத்தாற் பிறந்தவன். இவனுக்குத் திரௌபதியிடத்தில் சதானிகனும் ரேணுமதியிடத்தில் நிரமித்திரனும் பிறந்தார்கள் |
நகுஷன் | சந்திரவமிசத்த ஆயுவுக்குச் சுவர்ப்பாநவியிடத்துப் பிறந்தவன். புரூரவன் பௌத்திரன். இவன் பாரிபிரியம்வதை, புத்திரர்கள், யதி,யயாதி. சம்யாதி, ஆயாதி, உத்தமன் என ஐவர். இந்திரன் பிரமஹத்திர தோஷத்தினால் அப்பதத்தைவிட்டு நீங்கிப்போக, அப்பதத்துக்கு நகுஷனே தக்கானெனத் தேவர்களுணர்ந்த, அவனைப் பிரார்த்தித்து இந்திரனாக்கினார்கள். அதனாற் கர்வமுற்ற நகுஷனை இருஷிகள் சிவகையிற்றாங்கிச் சென்ற ஒரு சமயத்தில், நகுஷன் அவர்களை விரைந்து செல்லுகவென்று எவுவான் சர்ப்ப சர்ப்ப என்றான். அது சகிக்காத அகஸ்தியா அஜகரம் என்னும் சர்ப்பமாகப் பூமியிற்பிறக்குமாறு அவனைச் சபித்தார். அவ்வாறே அவன் இந்திரபதத்தினின்றுமிழிந்த மலைப்பாம்பாகச் சஞ்சரிக்கும்போது, பாண்டவர்களை வனவாசகாலத்திலே இரையாகக் கவ்விவிழுங்க, வீமன் அதன் வயிற்றையிடந்து, வெளியேவந்து மற்றவர்களை இரக்ஷித்தான். அப்போது தருமர் அவற்குச் சில உபதேசங்களைச் சொல்ல அவன் சாபம் நீங்கினான் |
நக்கீரர் | இவர் கடைச்சங்கத்திலே அதனிறுதிக்காலத்திலே தலைமை பெற்றிருந்த தெய்வப் புலவர். சிவபெருமான் அருளிச் செய்த ஒருகவியிலும் குற்றம் கற்பிக்கப்புகுந்த அஞ்சாச்சதுரர். இறையனாரகப் பொருளுக்கு நக்கீரர் செயதவுரையால் அவருடைய அளப்பருங்கல்வித்திறமும், அக்காலத்திலே. தமிழ்ப்பாஷைக் குண்டாயிருந்த அபிவிருத்தியும் ஆற்றலும் இத்துணையவென்பது நன்கு புலப்படுகின்றது. நக்கீரர் தமக்கொரு காலத்திலுண்டாகிய குஷ்டரோகத்தைக் கைலைபாதி காளத்திபாதி என்னும் பிரபந்தம் பாடி நீக்கினார். திருமுருகாற்றுப்படை கண்ணப்பதேவர் மறம் முதலியனவு மிவராற் பாடப்பட்டன வேயாம். இவர் மதுரைக் கணக்காயனார் மகனார். கடவுட்பூசையிலே வைத்த மனஞ் சிறிது திறம்பினோர் ஒருவரொழிந்த ஆயிரவரை மலைமுழையிலெ கூட்டிவைத்தவிட்டு அவ்வியல்புடைய இன்னுமொருவரைத் தேடித் திரிந்த பூதமொன்று நக்கீரர் ஒரு தடாகத்தருகே பூசை செய்திருத்தலைக்கண்ட அவர் முன்னே வீழ்ந்த ஆலிலையைப் பாதிமீனாகவும் மற்றப்பாதியைப் பறவையாகவுமாக்கி அவர் மனத்தைக் கவரும் படி செய்து அவரையுங் கொண்டு போய்ச்சிறை செய்து நீராடிவந்துண்போமென்று போயிற்று. அதுகண்ட நக்கீரர் திருமுருகாற்றுப்படையைப்பாடி ஆறுமுருகனருளாலே தம்மையும் மற்றையோரையும் காத்தனரென்பது அந்நூல்வரலாறு |
நக்ஷத்திரகன் | விசுவாமித்திரன் சீஷருளொருவன். இவன் அரிச்சந்திரனைத் தொடர்ந்து அவனிடம் விசுவாமித்திரன் ஆஞ்ஞையிட்ட தனங் கவர்ந்தவன் |
நச்சினார்க்கினியர் | மதுரையிலே பாரத்துவாச கோத்திரத்திலவதரித்த அந்தணர். சிவபக்தியிற் சிறந்தவர். தமிழாராய்ச்சியிலே தமக்கு ஒப்பாரு மிக்காரு மில்லாதவர். தொல்காப்பியமென்னு மிலக்கணக் கடலைக் கரைகாண்பது இவர் செய்தருளிய உரைத் தெப்பமில்லையாயின் எத்துணை வல்லார்க்குமரிதாம். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சிந்தாமணி, கலித்தொகை, நற்தொகையிருபது என்னும் பழைய நூல்களை இறந்தொழியாமற் காத்து நிலைநிற்கச்செய்தது அந்நூல்களுக்கு இப்பெருந்தகை செய்தருளியவுரையேயாம். இவர் பிறந்திலராயின் அகத்தியமுதலிய நூல்களைப் போலவே இந்நூல்களும் கற்றற்கமையாவாய்க் காலன்வாய்ப்பட்டேவிடும். இவர் இந்நூல்களுக் குரையியற்றினாரென்பது பாரத்தொல்காப்பியமும் பத்துப்பாட்டுங்கலியும், ஆரக்கநற் தொகையுடைளஞ்ஞான் குஞ் சாரக் ~ திருத்தகுமாமுனிசெய் சிந்தாமணியும் ~ விருத்தி நச்சினார்க்கினியமே என்பதனாலுணர்க. இவர் முத்தமிழ் நூல்களினும் வித்தகரென்பது அவர் உரைகளால் நன்கு புலப்படுகின்றது. இவர் காலமும் பரிமேலழகர் காலமுமொன்று. கந்தபுராணம் பாடிய கச்சியப்பசிவாசாரியர் காலத்துக்கும் கம்பர்காலத்துக்கும் முன்னுள்ளவரென்பது அவர் நூல்களினுதாரணங் கொள்ளாமையானும் வேறுசில வேதுக்களானும் நன்றாகத் துணியப்படும். ஆதலின் இவர் ஆயிரத்திருநூறு வருஷங்களுக்கு முன்னுள்ளவர். இவர் கலித்தொகைக்குச் செய்தவரை மிகவும் அற்புதமானது |
நச்சுமனார் | இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர் |
நட்டுவலை | சக்ஷூர்மனுபாரி. உன்முகன் தாய் |
நத்தத்தனார் | இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர் |
நந்தனம் | இந்திரன்வனம் |
நந்தன் | கிருஷ்ணனை வளர்த்த தந்தை. இவன் பாரி யசோதை. வசுதேவனுக்கு மதிரையிடத்துப் பிறந்த புத்திரன். கலியுகம் ஆயிரத்திலே ரிபுஞ்சயன் அரசுசெய்திறந்தான். அவனுக்குப்பின்னே மகததேசத்துக்கு அரசனானவன் அவன் மந்திரி சுனகன்மகன் பிரத்தியோதனன்.அவன் பரம்பரையில் நந்திவர்த்தனானீறாக ஐவர் அரசுபுரிந்தகாலம் நூற்று முப்பத்தெட்டு வருஷம். இந்நந்தவர்த்தனனும் நந்தனெனப்படுவன். இவன் வமிசத்திலே எட்டாஞ்சந்ததியாக வந்தவனும் நந்திவர்த்தனன் என்னும் பெயரொடு விளங்கினான். அவன் மைந்தன் மகாநந்தி. மகாநந்தி ஒரு சூத்திரப்பெண் வயிற்றிலே நந்தனென்பவனைப் பெற்றான். இந்நந்தன் மகாபதுமன் எனவும் படுவன். இவன் க்ஷத்திரியமணஞ் சிறிதுமில்லாமல் வேரறுத்து ஆரியதேசம் முழுவதையு மொரு குடைக்கீழாண்டவன். இவன் வழி வந்தோர் ஒன்பதின்மர் நவநந்தரெனப்படுவர். இவர்களை நரசஞ்செய்தவர் விஷ்ணுகுப்தரென்னும் பிராமணர். இந்நந்தர்களுடைய இராச்சியகால மெல்லாம் கலியுகம் ஆயிரத்தைஞ்நூற்றுக்குள்ளாகவே முடிந்தன. ரிபுஞ்சயனுக்குப்பின்னர். அஃதாவது கலியுகத்தில் ஆயிரம் வருஷஞ்சென்றதன் மேல் அரசுகைக் கொண்ட நானூறு வருஷகாலமாக வழிமுறை அரசு புரிந்தோர்களெல் லோருக்கும் நந்தர் என்பது பொதுப் பெயர். பரிக்ஷித்த காலத்திலே சப்தரிஷிகள் மக நக்ஷத்திரத்திலே யிருந்தனவென்றும், சப்தரிஷிகள் பூர்வாஷ்ட நக்ஷத்திரத்திலே யிருக்குங் காலத்திலே நந்தர்கள் அரசு தொடங்குவார்களென்றும் விஷ்ணுபுராணங் கூறுதலின் இஃதுண்மையாகும். சப்தரிஷிகள் ஒரு நக்ஷத்திரத்திலே நூறு வருஷத்துக்கிருக்கும். மகமுதல் பூர்வாஷாடமீறாகப் பதினொரு நக்ஷத்திரமாகும். ஆகவே பத்து நக்ஷத்திரங்களுக்கும் சென்ற வருஷம் ஆயிரம். அதன் மேற் பூர்வாஷாடகாலம். அது கலியுகம் ஆயிரத்தின் மேற் றொடங்கியது. அக்காலத்திலே தமிழ் நாட்டிலே திருவவதாரஞ் செய்து விளக்கமுற்றிருந்த திருஞான சம்பந்த மூர்த்திநாயனாரும் நந்தனுடைய அரசியலைக்குறித்து. கட்டார்துழாயன் தாமரையானென்றிவர் காண்பரிய, சிட்டார்பலி தேர்ந்தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே, நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த, கொட்டாறுடுத்த தண்வயல் சூழ்கொச்சையமர்ந்தவனே என்னுந்தேவாரத்திலெடுத்துரைத்தனர். திருநாளைப்போவார்நாயனார் |
நந்தர் | நந்தன் காண்க |
நந்திக்கிராமம் | அயோத்திக்குச் சமீபத்திலுள்ள ஒரு சிறுகிராமம். ராமன் காட்டுக்குப்போய் மீண்டுவருங்காறும் பரதன் வசித்த இடமிதுவே |
நந்திதுர்க்கம் | ஒரு மலை. இது மைசூர்த்தேசத்திலுள்ளது. இதில் பாலாறும் உத்தரபிநாகினி நதியும் உற்பத்தி |
நந்திதேவர் | சிலாதரன்புத்திரர். இவர் கோடிவருஷமாக உக்கிரதவஞ் செய்து சிவனுக்கு வாகனமும் துவாரபாலகருமாயினவர். சக்தானகுரவர்களுக்கு முதற்குருவும் சிவனுக்குப் பிரதமமாணாக்கருமாயுள்ளவர் இவரே |
நந்தினி | வசிஷ்டர் வளர்த்தகாமதேனுவின் கன்று |
நந்திவர்த்தனன் | க்ஷத்தரியவமிசத்து ரிபுஞ்சயன் என்னுங்கடையரசனைக் கொன்று தன்மகன் பிரத்தியோதனனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்த சுனகன் என்னும் மந்திரிவமிசத்து ஆறாம் வழித் தோன்றலாகிய ஓரரசன். உதயணன் என்னுமரசன் புத்திரன். மகாநதசிதந்தை, விஷ்ணுபுரா |
நந்தை | சாலபோதன் என்னும் நாகராஜன்மகள். தந்தை சாபத்தால் ஊமையாகிச் சுசர்மனால் அச்சாபம் நீங்கப் பெற்றவள் |
நன்னன் | இவன் விச்சிக்தோவினது பூர்வ மரபிலுதித்தவன். பல்குன்றக்கோட்ட மென்னுமூரை ஆண்டவன். மலைபடுகடா மென்னும் பிரபந்தம் பெற்ற நன்னன். இவன் மகன், அகநானூறு |
நன்னயபட்டர் | ஒராந்தரமாக கவி. ராஜராஜேந்திரன் சமஸ்தானகவி |
நன்னாகனார் | இவர் புறநானூற்றினுள்ளே கரும்பனூர் கிழானைப் பாடியவர் |
நன்னூல் | சனகாபுரத்துப் பவணந்தி முனிவர் செய்த தமிழ் இலக்கணநூல். இதிலே எழுத்துஞ் சொல்லுமே ஆராயப்படுவன. சுருக்கமுறையாதலின் இது கற்றோர்க்குப் பெரிதும் பயன்படுவது. இந்நூல்யாத்தகிரமம் அத்தியற்புதகரமானது. இது சுருங்கச் சொல்லல் முதலிய பத்தழகுஞ் சிறந்தது. வடநூன் முறையாகப் பகுபதம் பகாப்பதம் என்னும் முறைகளை வகுத்துக் காட்டுவது இந்நூலே. இது இற்றைக்கு எண்ணூற்றறுபது வருஷங்களுக்கு முன்னர்ச் செய்யப்பட்டது என்பது சமணசரித்திரங்களாற் றுணியப்படும். இந்நூலுக்கு முதலுரையியற்றினவர் ஒரு சமணமுனிவர். அதன் பின்னர்ச் சங்கரநமச்சிவாயப் புலவரால் ஒரு விருத்தியுரை செய்யப்பட்டது. அதனைத்தழுவிச் சரவணப் பெருமாளையரால் ஒருரை செய்யப்பட்டது |
நபகன் | வைவசுவத மனு புத்திரன். இவன் மகன் நாபாகன் |
நபசநவ்தன் | முராசுரன் மகன். கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன் |
நபசுவதி | அந்தர்த்தானன் இரண்டாம்பாரி. ஹலிர்த்தானன் தாய் |
நபன் | விப்பிரசித்தி மகன் |
நப்பாலத்தனார் | இவர் கடைச் சங்கப்புலவர்களுளொருவர் |
நமிநந்தியடிகணாயனார் | தாம் செய்துவந்த திருவிளக்குத் தொண்டுக்கு நெய்யகப்படாமையா லிடையூறுண்டாக அந்நெய்க்கீடாகக் குளத்துநீரை முகந்து திருவாரூர் ஆலயமெங்கும் திருவிளக்கெரித்த சிவபக்தராகிய இவர், சோழமண்டலத்திலே ஏமப்பேறூரிலே பிராமணகுலத்திலே அவதரித்தவர் |
நமுசி | விப்பிரசித்திமகன். சுவர்ப்பானன் மகள் பிரபை இவன் பாரி. இவன் இந்திரனாற் கொல்லப்பட்டவன் |
நம்பியாண்டார்நம்பி | திருநாரையூரிலே அவதரித்த ஆதிசைவப்பிராமணர். இவர் சிறுவராகவிருக்கும் போது ஒருநாள் இவருடைய தந்தையார் இவரையழைத்து, இன்றைக்கு நானோரூருக்குப் போகவேண்டியிருத்தலால் பொல்லாப்பிள்ளையார் கோவிற்பூசையை நான் நடத்துவது போற் சென்று நடாத்தி வருவாயாகவென்று கட்டளையிட்டுப் போயினார். அவ்வாறே நம்பியாண்டார் விதிப்படி பூசைசெய்து, நைவேத்தியத்தைப் பிள்ளையார் திருமுன்னே வைத்துத் தந்தையார் வைக்கும் நைவேத்தியத்தைப் பிள்ளையார் திருவமுது செய்துவருபவரென நினைந்து, எம்பெருமானே திருவமுது செய்தருளுமென வேண்டினர். பிள்ளையார் திருவமுது செய்யாதிருப்பக்கண்டு நம்பியாண்டார் மனம் வெம்பி, எம்பெருமானே அடியேன் யாது தவறுசெய்தேனென்று அழுது கொண்டு தமது தலையைக் கல்லிலே மோதப்புகுந்தார். உடனே பிள்ளையார் நம்பிபொறு என்ற தடுத்து அந்நைவேத்தியத்தைத் திருவமுத செய்தருளினார். பின்னருமொரு நாள் சோழராஜன் முன்னிலையிலே இவ்வற்புதம் நிகழ்ந்தது. இந்நம்பியாண்டாரே திருத்தொண்டர் சரித்திரமாகிய திருவந்தாதி பாடியவர். தேவாரத்திருமுறை கண்டவருமிவரே |
நம்மாழ்வார் | கலியுகாரம்பத்திலே திருக்குருகையிலே காரியென்னும் சூத்திரனுக்குப் புத்திரராக அவதரித்தவர். ஏனைய ஆழ்வார்களைப் போலவே இவரும் விஷ்ணுபத்தராகி அம்மூர்த்திமேற் சூட்டிய தோத்திரப்பாடல்கள் ஆயிரத்தின் மேற்பட்டன |
நரகன் | விஷ்ணுவுக்கு வராகவதாரத்திலே பூமியிற் பிறந்த புத்திரன். இவன் அசுரன். இவன் ராஜதானி பிராக்சோதிஷம். இவன் வாகனம் சுப்பிரதீகம் என்னும் யானை. இவன் புத்திரன் பகதத்தன. இந்நரகாசுரன் அதிதியினது கர்ணகுண்டலங்களையும் வருணுடைய சத்திரத்தையும் கவர்ந்து கொண்டு தேவலோகஞ் சென்ற இந்திரன் சிங்காசமத்தையுங் கவர்ந்தான். அதுகண்டு இந்திரன் விஷ்ணுவிடஞ் சென்று முறையிட, அவர் இவனையும் அவன் தமையன் முராசுரனையுங் கொன்ற அவன் சிறையிலிருந்த பதினாறாயிரங் கன்னியரையஞ் சிறையிவிடுத்து மணஞ்செய்து தேவலோகஞ் சென்றனர். இத்தினம் நரகசதுர்தியெனப் பெயர் பெற்றது. விப்பிரசித்திமகன் |
நரகம் | பாபலோகம். அஃது இருபத்தெட்டுப்போதம். அவை : தமம், அந்ததமம், ரௌரவம், மகாரௌவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்திரவனம், கிருமிபடிணம், அந்தகூபம், சந்தஞ்சம், சன்மலி, சூர்மி, வைதரணி, பிராணரோதம், வைசசம், லாலாபடிணம், வீசி, சாரபடிணம், வச்சிரகண்டம், காரம்,பிசிதபடிணம், சூலப்பிராந்தம், விதோதகம், தந்தசூகம், பரியாவருத்தம், திரோதானம், சூசிமுகம், பீடனம் என்பனவாம் |
நரசிங்கமுனையரையநாயனார் | சிவனடியார்களைத் திருவமுது செய்வித்தலும் விபூதியுமே பெருஞ்செல்வப் பேறெனக் கொண்டு ஒழுகிய சிவபக்தராகிய இவர் திருமுனைப்பாடிநாட்டிலே குறுநில மன்னர் குலத்திலே விளங்கியவர் |
நரசிங்காவதாரம், நரசிம்ஹாவதாரம் | விஷ்ணுதசாவதாரங்களுளாறாவது அவதாரம், விஷ்ணு இரணியகசிபனைக் கொன்ற பிரகலாதனை ரக்ஷிக்க ஸ்தம்பத்திற் பிறந்த அவதாரமிதுவே. கண்டத்தின்கீழ் நரவடிவமும் அதன் மேற் சிங்கவடிவமுமாகத் திருமேனி கொண்ட அவதாரம் |
நரநாராணர் | இவரிருவரும் விஷ்ணு அபிசமாகப் பிறந்த முனிவர்கள். இவர்கள் வதரீவனத்திற் பல்லாயிரவருஷம் தவஞ்செய்தவர்கள். இவர்களுடைய தவத்தைக் கெடுக்குமாறு இந்திரன் அரம்பையரையனுப்ப, நாராயணன் தனது தொடையினின்றும் ஒரு கன்னிகையைத் தோற்றுவித்தார். அவளுடைய ரூபலாவண்ணியங் களைக் கண்ட தெய்வமாதர் நாணி அவ்விடம்விட்டு நிங்கினர். நரநாராயணர் என்னும் பெயர் கிருஷ்ணார்ச்சுனர்களுக்கும் வழங்கும் |
நரன் | ஒரு தேவஇருஷி. இவனும் நாராயணன் என்னும் இருஷியும் நரநாராயண ரெனப்படுவர். இவ்விருவருமே அருச்சுனனுமக் கிருஷ்ணனுமாகப் பின்னர்ப் பிறந்தார்கள். பிரியவிரதன் வமிசஸ்தனாகிய கயன்மகன். புமன்னியன்மகன். சங்கிருதிதந்தை |
நராந்தகன் | ராவணன் மகன். இவனைக் கொன்றவன் அங்கதன் |
நரிவெரூஉத்தலையார் | இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். இவர் தம்முடம்பிலுளதாகிய வேறுபாடு காரணமாக இப்பெயர் பெற்றவர். சேரலிரும்பொறையைக் கண்ட மாத்திரத்தே அவ்வேறுபாடு நீங்கி நல்லுடம்பு பெற்றவர், புறநா |
நரிஷியந்தன் | வைவசுவத மநுபுத்திரருளொருவன். மநுசக்கரவர்த் திரருளொருவன். மநுசக்கரவர்த்தி மகனுமிப்பெயர் பெறுவன் |
நர்மதை | மேகலா பர்வதத்திலுற்பத்தியாகிச் செல்லும் நதி |
நறுந்தொகை | உலகநீதி கூறும் ஒரு சிறிய நூல். அதிவீரராமபாண்டியன் செய்தது |
நற்றிணை | சங்கப்புலவர் செய்த எட்டுத் தொகை நூல்களுளொன்று. பெருந்தேவனாராற் பாடப்பட்ட கடவுள் வாழ்த்தும் கபிலர் முதலியோராற் பாடப்படட ஏனைய நூறு பாக்களுமுடையது. இந்நூலைத் தொகுப்பித்தோன் பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி. இது அகப்பொருளையே பொருளாகவுடையது, புறநா |
நற்றுணையப்பர் | திருநன்னிபள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
நலவடிவிறந்தோன் | பரமசிவன் நவவடிவமாவன. பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேசுவன், சதாசிவம். விந்து, நாதன், சத்தி, சிவம் என்பன. இவற்றுள் பரமாதிநான்கும் உருவம். விந்தாதி நான்கும் அருவம். இடை நின்ற சதாசிவம் அருவுருவம் |
நலை | நளை காண்க |
நல்கூர்வேள்வியார் | இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர் |
நல்லந்துவனார் | கலித்தொகை நூலாசிரியர். இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். சமயத்தாற் சைவரென்பது கடவுள் வாழ்த்து முதலியவற்றாற் புலப்படும் |
நல்லாதனார் | திரிகடுக நூலாசிரியர். இவர் கடைச்சங்க காலத்தவர். கல்வியாலும் அறத்தாற்றினாலும் மிகச்சிறந்தவர். இவர் வைஷ்ணவர் |
நல்லாப்பிள்ளை | தொண்டை நாட்டிலே மகாதலம்பேட்டையிலே கர்ணிகவேளாளர் மரபிலே நூற்றெழுபது வருஷங்களுக்கு முன்னே அவதரித்தவர். வடமொழி தென்மொழியிரண்டும் வல்லவர். இவர் வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தை வடமொழிப்பாரதம் போல விரிக்கவெண்ணி இடையிடையே தந்துவிரித்துப் பதினாலாயிரத்தெழு நூற்றிருபத்தெட்டு வருத்தங்களாற் பூர்த்தி செய்தவர். அவற்றுள் வில்லிபுத்தூராழ்வார் பாடல் நாலாயிரத்து முந்நூற்றைம்பது. நல்லாப்பிள்ளை செய்த பாரதம் நல்லாப்பிள்ளைபாரத மெனவழங்கும். தமிழிலே பாரதம் முதலிற் செய்தவர் வில்லிபுத்தூரர். கடையிற் செய்தவர் இவர். இதனைப் பாடும் போது இவர்க்கு வயசு இருபது |
நல்வழி | ஒளவையாராற் செய்யப்பட்ட ஒரு சிறிய நீதிநூல் |
நளகூபரன் | குபேரன் புத்திரன். அழகுக்கிலக்கியமானவன். மணிக்கிரீவன் தமையன். இவ்விருவரும் கைலாசத்திற்கலக்கிரீடை செய்து கொண்டிருக்கையில் நாரதர் கண்டு, நீங்கள் நிருவாணிகளாக நீராடி நிற்கும் தோஷத்தற்காக மருதவதிருடிங்களாகக் கடவீர்களென்று சபித்தார். அவர்கள் அவ்வாறே பூமியில் நந்தன் வீட்டருகே இரண்டு மருதமரங்களாகப் பிறந்து நின்று, கிருஷ்ணன் தான் கட்டுண்ட வரலையிழுத்துப் போகும் போது அவ்வுரலால் இடறப்பெற்று வேரோடு சாய்ந்து பழைய வடிவம் பெற்றுச் சாபநீங்கினார்கள் |
நளன் | யதுவினது மூன்றாம் புத்திரன். யயாதிபௌத்திரனாகிய அணுவினது இரண்டாம் புத்திரன். நிஷததேச ராசனாகிய வீரசேனன் மகன். இவன் பாரி தமயந்தி. இவன் மகன் இந்திரசேனன். மகள் இந்திரசேனை. நளன் கொடையாலும் கல்வியாலும் நடையாலும் படையாலும் அழகாலும் ஆண்மையாலும் தன்னினமிக்காரும் ஒப்பாரும் இல்லாத சக்கரவர்த்தி. இவன் கீர்த்தியை ஓரன்னப்பட்சி கொல்லக் கேட்ட தமயந்தி தன் சுயம்பரத்துக்கு இந்திரன் முதலிய தேவர்கள் வந்திருப்பவும் அவரை விரும்பாது நளனைவிரும்பி அவனுக்கு மாலையிட்டுச் சிறிதுகாலம் காமனுமிருதியும் போல் வாழ்ந்திருந்து வருநாளிலே கலிபுருஷன் பொறாமை கொண்டவனாகிப் புஷ்கரராசனை ஏவி, நீ, நளனோடு சூதாடுவையேல் அவனைவென்று அவன் இராச்சியத்தை நீ கவர்ந்துகொள்ளுமாறு அனுகூலஞ் செய்வேனென்றான். அவ்வாறே அவன் போய்த் தமையனாகிய நளனோடு சூதாடி, அவன் ராச்சியத்தைக் கவர்ந்து நளனையுந் தமயந்தியையும் உடுத்த ஆடையோடு மாத்திரங் காட்டுக்கேகும் படி செய்தான். அங்கே மெல்லியலாகிய தமயந்தி, பஞ்சணையையும், வஸ்திராபரணங்களையும், களபகஸ்தூரகளையும், பாங்கியரையும், மற்றைய போக்கியங்களையும்மறந்து, கல்லும் முள்ளும் வெயிலும் வருத்தும் வருத்தினையுமம் நேரக்காது, நாயகன் மீது கொண்ட பேரன்பால், அவன்படுந்துன்பங்களுக்கிரங்கி, நிழலென அவனோடு சஞ்சரிக்கும் போது, ஒருநாளிரவு, நளன், அவள்படுந் துன்பங்களைச் சகயாதவனாய், நடச்சாமத்தில் அவளைத் தனிவிடுத்தகன்றான். அவள் தமியளாய்த் தேடிப் புலம்பி அலைந்து பலவிடையூறுகளுக் கெல்லாந்தப்பித் தந்தை வீடு சேர்ந்த பின்னர், நளன் தமயந்தியைத் தேடிக் கண்டு அவளை அழைத்துச் செனறு, புஷ்கரனை வென்று பழமைபோலிராச்சியம் பெற்று வாழ்ந்திருந்தான். இவன் சரித்திரத்தை விரித்துரைக்கும் நூல் நைஷதம், அது தமிழிலும் அப்பெயராலேயே நடக்கும். விசுவகர்மாவுக்குப்பிறந்த ஒருவாநரன். சேது பந்தனங்கட்டினவன் இவனே |
நளினி | ஹஸ்திகன் புத்திரனாகிய அஜமீடன் இளையபாரி |
நளை, நலை | கங்கையிற் சங்கமிக்கும் ஒரு நதி |
நள்ளி | கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவனாகிய இவன் மலைநாட்டரசரு ளொருவன். ஆர்வமுற் றுள்ளிவருந ருலைவுநனிதீரத் தள்ளாதீயுந் தகைசால் வண்மைக் கொள்ளாரோட்டிய நள்ளியும் எனப் புறநானூற்றினுள்ளே பெருஞ்சாத்தனாரால் எடுத்துப் புகழப்பட்டவன் |
நவகண்டங்கள் | நவவர்ஷங்கள் |
நவக்கமிரகங்கள் | சூரியாதி ஒன்பது கிரகங்கள். அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது |
நவநதி | கங்கை, யமுனை, நருமதை, சரசுவதி, கோதாவரி, காவிரி, பயோஷ்ணி, சரயு, குமரி என்னுமிவ்வொன்பதம் நவநதி யெனப்படும். தம்மிற் படிவோர் பாவமனைத்தையும் தாங்கவர்ந்து சுமந்தலாற்றாது ஒருங்குகூடிப் பெண்ணுருக் கொண்டு கைலை சென்று சிவனை வழிபட்டுத் தமது குறையைத் தீர்த்தருளும்படி வேண்டச் சிவன் அந்நதிகளை நோக்கிக் கும்பகோணத்திலே அக்கினிதிக்கிலே ஒரு தீர்த்தமுளது. வியாழன் சிங்கராசியில் வரும் பொழுது மகநடித்திரத்திலே நீங்கள் அத்தீர்த்ததிற் சென்று படிந்துஉங்கள் பாவத்தைப் போக்கக் கடவீரென்றனுக் கிரகித்தார் |
நவரதன் | வீமரதன் புத்திரன் |
நவராத்திரி | ஆஸ்வயுஜ மாசத்தில், ஐப்பசி, சுக்கிலப் பிரதமைமுதலாக ஒன்பது ராத்திரி. கிருதயுகத்திலே பக்தியிற் சிறந்த சுகேதன் என்னு மோரரசன் தனது இராச்சியத்தையிழந்து பாரியோடுவனஞ் சென்ற போது அங்கிரசன் என்னும் இருஷி நவராத்திரி பூஜாமான்மியத்தையும் அதன்முறையையும் உபதேசித்தார். அவன் அவ்வாறே நவராத்திரி பூசையைப் பக்தியோடு செய்து தனது ராச்சியத்தை மீளவும் பெற்று வாழ்ந்திருந்தான். அதனால் உலகத்தல் அதுமுதலாக வருஷந்தோறும் அக்காலத்திலே துர்க்கை லக்ஷூமி சரசுவதி இம்மூவரையும் முறையே ஒருவர்க்கு மூன்று தினமாக ஒன்பதுநாளும் பூசித்து ஒன்பதாம்நாள் ஆயுதங்களையும் புஸ்தகங்களையும் வைத்து ஆராதித்து வருவார்கள். அடுத்த தஜமி திதி விஜயதசமி யெனப்படும் |
நவவர்ஷங்கள் | பாரதம், கிந்நரம், ஹரி, இளாவிருதம், ரம்மியகம், இரண்மயம், குரு, பத்திராசுவம், கேதுமாலம் என ஒன்பது வர்ஷங்கள். ஆரியர் இப்பூகோளத்தை ஊர்த்துவகபாலம் அதகபாலம் என இருகூறாக்குவர். அவற்றுள் ஊர்த்துவபாலமம் நீருமாம். நில முழுதும் மழைப்பெயல் வேறுபட்டால் ஒன்பது வர்ஷங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சுமேருவை அஃதாவது துருவத்தை மத்தியிலுடையது இருளாவிருத வருஷம். அதற்குத் தெற்கேயுள்ளது ஹரிவருஷம். அதற்குத் தெற்கேயுள்ளது கிந்நரம், அதற்குத் தெற்கேயுள்ளது பாரதம். ரம்மியகம்ஹிரண்மயம் குரு என்னும் மூன்றும் இளாவிருதத்திற்கு வடக்கேயுள்ளன. மற்றைய விரண்டும் இருபாரிசத்திலுமுள்ளன |
நாகதன்னுவம் | வாசுகி நாகராஜனாக அபிஷேகம் பண்ணப்பட்டவிடம் |
நாகன்றேவனார் | இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர் |
நாகமுக்கியர் | கத்துருவை கசியபனுக்குப் பெற்ற புத்திரர். இவர் நாகராயினர். சேஷன், வாசுகி, ஐராவதன், தடிகன். கார்க்கோடகன், தனஞ்சயன், காளியன், மணிநாகன், அபூரணன், பிஞ்சரன், ஏலாபுத்திரன், வாமனன், நீலன், அநீலன், கலமாஷன், சபலன், ஆரியகன். ஆர்த்தரகன், கலசபோதகன், சுராமுகன், ததிமுகன், விமலபிண்டகன், டிhரிதன், சங்கன், வாலசிகன், நிஷ்டானகன், ஹோமநேத்திரன், நஹ_ஷன், பிங்கலன், வாகியகர்ணன், ஹஸ்திகர்ணன், முத்கரபிண்டகன், கம்பலன், அசுவதரன், காளியகவிருத்தன், சாம்விருத்தகன். சங்கமுகன், கூஷ்மாண்டகன், க்ஷேமகன், பிண்டாரகன், கரவீரன், புஷ்ப தமுஷ்டிரன், வில்வகன், வில்வபாண்டரன், மூஷிகாதன், சங்கசிரன், பூரணதமுஷ்டிரன், ஹரித்திரகன், அபராஜிதன், ஜியோதிகன், ஸ்ரீதகன், கௌரவியன், திருதராஷ்டிரன், சங்கபிண்டன், புஷ்கரன், சல்லியகன், விரஜன், சுபாகு, சாலிபிண்டன். ஹஸ்திபிண்டன், பிடகரன், முகரன், கோணநாசிகன், குடரன், குஞ்சரன், நபாகரன், குமுதன், குமுதாடின், தீத்திரி, ஹரிகன், விகன், கர்த்தமன், வெகுமூலகன், கர்க்கரன், அகர்க்கரன், குண்டோதரன்,மகோதரன் என்னுமிவர்கள் அந்நாக முக்கியருள்ளே தலைமை பெற்றவர்கள் |
நாகவீதி | தருமன் புத்திரி. இவள் தாய் யாமி. இவள் நடித்திரவீதியினத உத்தரபாகத்துக்கு அபிமான தேவதை |
நாகாம்பிகை | கிருஷ்ணதேவராயன் தாய் |
நாகோற்பேதம் | ஒரு தீர்த்தம் |
நாடிக்கிரந்தம் | பதினைந்த நாடிக்கிரந்தங்களுள. அவை சூரியநாடி, சந்திரநாடி, குசநாடி, புதநாடி, சுக்கிரநாடி, குருநாடி, சாமிநாடி, ராகுநாடி, கேதுநாடி, சர்வசங்கிரகநாடி, பாவநாடி, துருவநாடி, சாவநாடி, சுகநாடி, தேவிநாடி என்பன. இந்நாடிக்கிரந்தங்களிலே உலகத்திலேயுள்ள மாந்தர் பெரும்பாலார்க்கும் ஜாதகங்களும் பலன்களுங் கூறப்பட்டுள்ளன |
நான்மணிக்கடிகை | விளம்பி நாகனார் செய்த நூல். இதுபதினெண் கீழ்க்கணக்கினுள் இரண்டாவது |
நாபாகன் | இக்ஷூவாகு தம்பியாகிய திஷ்டன்புத்திரன். இவன் தனது டிச்திரியத் தொழிலைவிடுத்து. வைசியத் தொழிலை மேற்கொண்டோழுகி வைசியனாகிச் சுப்பிரபையென்னும் வைசியப் பெண்ணையே மணம்புரிந்தவன். இவன் புத்திரன் ஜலந்தனன். இக்ஷூவாகு தம்பிகளுள் மற்றொருவனாகிய நபகன் புத்திரன். இவன் அம்பரீஷன் தந்தை. சுகோத்திரன் புத்திரன் |
நாபி | ஆக்கினீத்திரன் புத்திரர் ஒன்பதின்மருளொருவன். இவன் பங்காக ஜம்புத்துவீபங் கிடைத்தது. இவன் பாரி மேருதேவி. புத்திரன் ரிஷபன், பரதகண்டங்காண்க |
நாமகள் | சரஸ்வதி |
நாரசிங்கம் | இஃது உபபுராணத்தொன்று |
நாரதன் | இவர் முந்திய மகாகற்பத்தில் உபவருகன் என்னும் கந்தருவனாகவிருந்து பிரமசிரேஷ்டர் என்னும் பிராமணர் செய்த பாயத்துக்குப்போய் அங்கே வீணாகானஞ் செய்து அங்கு வந்திருந்த ஒரு கன்னிகையை வசியஞ்செய்து அவளைப் புணர்ந்து போயினர். அஃதுணர்ந்த பிராமணர் இவரைச் சூத்திரவருணத்திற் பிறக்க வென்று சபிக்க, அவ்வாறே சூத்திரனாகப்பிறந்து மகாதவஞ்செய்து பிரமமானச புத்திரராகப் பிந்தியகற்பத்திற் பிறந்தவர். இவர் கலகப்பிரியர். இவர் தடிப்பிரஜாபதி பிள்ளைகள் யாவருக்கும் ஞானோபதேசஞ் செய்து சிருஷ்டிக்குப் பிரதிகூலஞ் செய்ய, அதுகண்ட தக்ஷன் சந்ததியில்லாதவராய் நிலையற்றலைக வென்ற இவரைச் சபித்தான். அதனாலே இவர் திரிலோகங்களிலுஞ் செல்பவராயினர். இவர் தாங்காதினாற் கேட்டவற்றைப் பிறர்க்குரையாம லிருப்பதில்லை. தேவசபை இராஜசபை வேள்விச்சாலை முதலிய வெவ்விடத்துந் தடையின்றிச் செல்லும் சவாதீமமுடையவர். தனியிடங்களிலகப்பட்டுத் திக்கற்றிருப்பவர்களுக்கு வெளிப்பட்டு உபாயங்களும் பின் நிகழ்வதுங் கூறுபவர். தூது போய்ச் சாதுரியமாகப் பேசுவதிலும் வல்லவர். தரமநூலிலும் சிறந்தவர். வீணையிலே ஒப்பாரும் மிக்காருமில்லாதவர். கிருஷ்ணனது அவதாரத்தைக் கஞ்சனுக் குணர்த்தினவரும், ராமாயணத்தை வான்மீகியாருக் குரைத்தவரும் இத்தேவவிருடியே. இவர் சம்பந்தப்படாதவை திகசரித்திரங்கள் மிகச் சில |
நாரதீயம் | பதினெண்புராணங்களுளொன்று. இது நாதரப்புரோக்தம். பெரிய கற்பதர்மங்களைக் கூறுவது. இஃது 25000 கிரந்தமுடையது. உப புராணங்களுள்ளும் இப்பெயரயதொன்றுளது. ராக தாளலடிணங்களைக் குறித்து நாரதர் செய்தநூல் |
நாராயணகவசம் | ஒரு மந்திர். இதனைக் கிரமமாகச் செபிப்போர்க்கு நாராயணன் விரைந்து அருள்புரிவர் |
நாராயணகோபாலர் | பல பராக்கிரமங்களிற் கிருஷ்ணனுக்குச் சமானமாயினவர். இவர்கள் ஜாதியில் யாதவர். இவர்கள் பதினாயிரவரும் துரியோதனனுக்குத் துணையாகச் சென்ற போது அர்ச்சுனனாற் கொல்லப்பட்டவர்கள் |
நாராயணன் | விஷ்ணு, நாரம் ~ ஜலம். அதிற்போந்தமையின் நாராயணன். மகாப்பிரளயத்தில் சமஸ்தமும் அப்புரூவமா யொடுங்கிய பொழுது அதன் கண் விஷ்ணு தோன்றி உலகனைத்தையுந் தோற்றுவித்தாரென்பது வேதபுராணங்களின் கருத்து. இந்நாராயணபதம் விஷ்ணுவுக்கு மாத்திரமன்று சிவனுக்கும் பெயராகச்சொல்லு மென்பர். ஜகம் அப்புவிலொடுங்கிய கற்பத்திலே அதனை மீளவும் அத்தத்துவத்தினின்றுந் தோற்றுவித்த பரப்பிரமத்தினது புருஷாமிசமே நாராயணனெனப்பட்டது. நாரமென்பது அப்புவினத மூலப்பதி. அதுமண்டலமிட்டெழுந்தாடும் சர்ப்பவடிவினையுடையதாயிருக்கும். அதன் சக்திபாகம் சங்கினது வடிவினையுடையது. அப்புவினிடத்து விளங்கும் புருஷாமிசம் ஆதிசேஷன் என்னுஞ் சர்ப்பத்தைப் பாயலாகக் கொண்டு அறிதுயில் செய்யும் நாராயணனாகக் கூறப்படும். ஒடுங்கா தெஞ்சி நின்று மீளவும் சகத்துக்கு ஆதிகாரணமாய்க் கிடந்தது அப்புவினது மூலப்பகுதியாதலின் அஃது ஆதிசேஷன் எனப்பட்டது, சோஷம் ~ எஞ்சியது, அப்புவினது மூலப்பகுதி மண்டலமிட்டெழுந்தாடுஞ் சர்ப்பவடிவினதென்பது அப்புவினது அணுவையெடுத்துச் சோதித்தால், இனிதுபுலப்படும். அவ்வணுவானது ஸ்தூலநிலைவிட்டுச் சூக்குமித்துச் சூக்குமித்துப் போய் ஏழாவது நிலையையடையும் அவதரத்தில் இவ்வடிவைப் பெறும். அதற்குக்கீழே அடுத்த ஆறாவது நிலையிலே கமலவடிவம் பெறும் கமலவடிவுடைய அப்புவினிடத்தே பிரமாவாகிய சிருஷ்டிபுருஷன் தோன்றுவன். அது நிற்க அப்புவின் மூலப்பகுதியை ஆதிசேஷன் என்றும், அப்புவுக்குக் குறி கமலமென்றுங் கூறிய நமது பூர்வ வேதாந்த சித்தாந்த நூலாசிரியர்களது பூத பௌதிக ஞானமும்புத்திநுண்மையும் அநுபவமும் பெரிதும் பாராட்டப்படத்தக்கனவென்பது இக்காலத்து ஐரோப்பிய ரசாயனபரீடிகர்கள் வெளியிட்ட பரீக்ஷாவிஞ்ஞாபனங்களை ஊன்றிவிசாரிக்குமிடத்து நன்கு துணியப்படும், Lucifer, Vol: XVII No 99, விஷ்ணு காண்க |
நாரீகவசன் | மூலகன் |
நாரீசங்கன் | ஒரு கொக்கரசன் |
நாரீதீர்த்தங்கள் | சௌபத்திரம், பௌலோமம், காரண்டவம், பிரசன்னம், பாரத்தவாஜம் எனத் தடிணத்திலுள்ள ஐந்துதீர்த்தங்கள், நந்தை, சௌரபேபி, சமீசி, வசை, வதையென்னும் ஐந்து அப்சரஸ்திரிகள், ஒரிருஷி சாபத்தினால் இத்தீர்த்தங்களிலே முதலைகளாகிக்கிடந்து, அத்தீர்த்தங்களிற்படிவோரைப்பற்றி விழுங்கிவந்து, அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை சென்றபோது அவன் காலைத்தீண்டிச் சாபவிமோசனம் பெற்றார் |
நாலடியார் | இது பதினெண் கீழ்க்கணக்கதினுள் முதலாவது நூல். சைனமுனிவர்களாற் பாடப்பட்டது. பதுமனாராற் தொகுக்கப்பட்டது. நாற்பது அதிகாரமும் நானூறு செய்யுட்களுமுடையது. அறம் பொருள் இன்பம் என்னுமுப்பாற் பொருண்மேலது. உரை செய்தாரும் பதுமனாரே |
நால்வர் | அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர். இவர்கள் சமயகுரவர்களெனப்படுவர். சொற்கோவுந் தோணிபுரத்தோன்றலுமென் சுந்தரனும் சிற்கோலவாதவூர்த் தேசிகனும் ~ முற்கோலி வந்திலரேனீறெங்கே மாமறை நூறானெங்கே எந்தைபிரானைந் தெழுத்தெங்கே இதனால் தென்னாட்டிலே சமணரால் மங்கிய சைவத்தை மீளவும் விளக்கினோர் இந்நால்வரேயென்பதுணரப்படும் |
நாளாயணி, நாளாயனி | நளாயணன் என்னும் ஒரிருஷி புத்திரி. இவன் இயற்பெயர் இந்திரசேனை ~ மௌத்கல்லிய இருஷி என்னும் குஷ்டரோகிக்குப் பாரியாகி மறுஜன்மத்தில் திரௌபதியாகப் பிறந்தவள் |
நிகிருந்தனம் | இது நிகுந்தனம் என்னும் ஒரு நரகம் |
நிகுந்தனம் | ஒரு நரகம். இது குயவன் திகிரிபோல்விடாது சுழன்று திரிந்து பாவிகளுடலைத் துண்டிக்கும் சக்கரங்களையுடையது |
நிகும்பன் | ஹரியசுவன் மகன். இவன் மகன் பரிஹிணாசுவன். பரிஹிணாசுவன் அமிதாசுவன் சம்ஹதாசுவன் என்பன ஏகநாமம். கும்பகர்ணன் புத்திரன். இவன் அநுமனாற் கொல்லப்பட்டவன். சிவகணங்களுள் ஒருவர் |
நிகும்பலை | இந்திரசித்து யாகஞ்செய்தவிடம் |
நிக்கனன் | அநமித்திரன் சேஷ்டபுத்திரன். சத்திராசித்து பிரசேனன் என்போர் இவன் புத்திரர் |
நிசகன் | அபிமன்னியன் ஏழாஞ்சந்ததி. இவன் காலத்திலேயே அஸ்தினாபுரியைக் கங்கை கொண்டது. அதன் பின்னர்க் கவுசாம் பிராஜதானியாயிற்று |
நிசாகரன் | ஒரிருஷி. இவா ஆச்சிரமத்திலே வசிப்பவனவாகிய ஜடாயு சம்பாதி யென்னும் பக்ஷிகள் சூரியமண்டலததைக் காண்போமென்று அங்கே சென்றபோது சிறகு தீயப்பெற்றுக் கீழே விழுந்து அவ்வாச்சிரமத்திற்றானே வசித்துக் கொண்டிருந்தன. இவ்வாச்சிரமம் விந்தியபர்வதத்திலுள்ளது. சீதையை ராவணன் கொண்டு சென்ற போது தடுத்த பக்ஷிகள் இவைகளே. சந்திரன் |
நிசுந்தன் | சந்தோபசுந்தர் தந்தை |
நிசும்பன் | திதிவமிசம், சும்பநிசும்பர் காண்க |
நித்தியசுந்தரேசுவரர் | திருநெடுங்களத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர் |
நித்தியயௌவனை | திரௌபதி |
நிபந்தனகாரர் | சுருதி மிருதிகளும் சூத்திரங்களுங்கூறும் ஆசாரவிதிகளைத்திரட்டி நூலாக்கினவர்கள். அந்நூல்கள் பராசரமாதவீயம் வைத்தியநாததீக்ஷிதம் முதலியன |
நிமி | இக்ஷூவாகு புத்திரருளொருவன். தம்மைக்கொண்டு யாகஞ் செய்விக்காது கௌதமரைக் கொண்டு செய்வித்தமைக்காக வசிஷ்டராலே சபிக்கப்பட்டு அங்கஹீனனாயினவன். இவன் விதேவதேசத்துக்கு அரசன் |
நியக்குரோதன் | கஞ்சன் தம்பி |
நியதி | மேருமகள், விததன்பாரி |
நியாயசாஸ்திரம் | பிரத்தியக்ஷநுமானாதிப் பிரமாணங்களைக் கொண்டு பொருளை ஆராய்ந்து நியாயித்தற்குரிய நூல். இது கௌதமமுனிவராலே செய்யப்பட்டது. இதுவும் கணாகாசெய்த வைசேடிகமும் தருக்கநூலெனப்படும். இவையிரண்டும் வடமொழியிலுள்ளன |
நியாயபோதினி | இது கௌடரும் தருக்கபாடாப்பிரகாசஞ், செய்தவருமாகிய கோவர்த்தனமிசிரராலே செய்யப்பட்ட தருக்கசங்கிரக வியாக்கியானம். இது நானூறு கிரந்தமுடையது. இது வடமொழியிலுள்ளது, தமிழ் ~ தருகசங்கிரக வரலாற்றினின்றும் எடுத்துரைக்கப்பட்டது |
நிராகன் | புலஸ்தியன் புத்திரன் இருபன்சீஷன் |
நிருதன் | வைவசுவதமனு இரண்டாம் புத்திரன். இக்ஷூவாகு தம்பி. இவன் மகா பிரசித்திபெற்ற அரசன். உசிநரன் இரண்டாம் புத்திரன் |
நிருதி | அஷ்டதிக்கு பாலகருளொருவன். தென்மேற்றிசைக் கதிபதி. பாரி தீர்க்காதேவி. வாகனம்நரன். நகரம் கிருஷ்ணாங்கனை. ஆயுதம் குந்தம் |
நிருத்தி | இது தமிழ்நாட்டிலிருந்த தெலுங்கராகிய பட்டாபிராமசாத்திரியாராலே தமது புத்திரியின் பொருட்டுச் செய்யப்பட்ட சம்ஸ்கிருத தருக்க சங்கிரகவி யாக்கியானம். மற்றைய வியாக்கியானங்களுள் இது மிக எளிதினுணர்தற்பாலது. இது அறுநூறு கிரந்தமுடைத்து. இந்நூலாசிரியர் அறுபத்தைந்து வருஷங்களுக்கு முன்னே விளங்கினவர் |
நிலாதகவசர் | தைத்திரியர்களு ளொருசாரார். பிரகலாதன் வமிசத்தவர். இவர் தொகை முப்பது கோடி. இவர்கள் சமுத்திரமத்தியிலே வசிப்பவராயத் தேவர்களை வருத்தும் போது தேவேந்திர்ன வேண்டுகோளின்படி அர்ச்சுனனாற் கொல்லப்பட்டவர்கள் |
நிவாதகவசம் | காற்றும்புகாத கவசம் எனவே பாணத்துக்கு அறாதகவசம் என்பது பொருள். அதனையுடையவர் நிவாதகவார் |
நிஷதன் | குருநான்காம் புத்திரன். ராமர் புத்திரனாகிய குசன் பௌத்திரன் |
நிஷதம் | விந்தியாபர்வத சமீபத்திலே பயோஷ்ணிநதி தீரத்திலுள்ள தேசம். இதுநளன்தேசம். ஒருமலை |
நீணெறிநாதேசுவரர் | திருத்தண்டலை நீணெறியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
நீபன் | பாரன்புத்திரன் இவனுக்கு நூறுபுத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் மூத்தோனாகிய சமரன் காம்பிலியதேசத்தரசனாயினான் |
நீலகண்டக்ஷேத்திரம் | இமாலயத்துக்குச் சமீபத்திலே கௌசிகிநதியுற்பத்தி ஸ்தானம் |
நீலகண்டசாத்திரியார் | தருக்கசங்கிரகதீபிகைக்கு நீலகண்டீயம் என்னும் வியாக்கியானஞ் செய்தவர். இவர் அறுபத்தைந்து வருஷங்களுக்கு முன்னே பல்லாரியிலிருந்த ஒரு தெலுங்கர் |
நீலகண்டசிவாசாரியார் | இவர் வேதாந்தசூத்திரத்திற்குச் சிவாத்துவித பக்கமாகப் பாஷியஞ் செய்தவர். இவர் திருக்கோகர்ணஸ்தலத்திலே பிறந்து விளங்கியவர், தெலுங்கர். இவர்செய்த பாஷியம் நீலகண்டபாஷிய மெனப்படும். மாதவாசாரியர்செய்த சங்கரவிஜயத்திலே சங்கராசாரிய சுவாமிகள் நீலகண்ட சிவாசாரியரை வாதத்திலே வென்றனரென்று கூறப்படுதலாலும், நீலகண்டவிஜயத்திலே சங்கராசாரிய சுவாமிகள் நீலகண்ட சிவாசாரியர் வினாவியவைகளுக்கு உத்தரங் கூறவியலாது திகைத்தனரென்றுங் கூறப்படுதலாலும், இருவரும் எக்காலத்தவர்களென்பது பெறப்படுகின்றது. சரித்திரம் மாறுகொள்வனவாயினும் இருவரும் ஒருவரையொருவர் கண்டனரென்பதுண்மையாதலின் ஒரேகாலத்தவர்க ளென்பது நன்கு துணியப்படும். இருவிஜயங்களுங் கற்பிதநூல்களாகுமிடத்து எக்காலத்தவர்களென்பதும் பொய்மையின் பாலதாம். நீலகண்டர் ராமானுஜாசாரியரது கொள்கைகளையெடுத்துக் கண்டித்தலாலே நீலகண்டர் ராமானுஜருக்குப் பிந்தியவரென்பதும் அவர்காலம் எண்ணூறுவருஷங்களுக்கு முன்னரென்பதும் சங்கராசாரியர் காலநிரூபணஞ் செய்த பாஷியாசாரிய பண்டிதர் கருத்து, Vide the age of SriSankara Charya, The Adyar Library Series, அஃதுண்மையாயின், நீலகண்டருக்கு இருநூறு வருஷங்களுக்கு முன்னேயுள்ளவரென்று பாஷியாசாரிய பண்டிதராலே கூறப்பட்ட ஹரதத்தாசாரியர் நீலகண்ட பாஷியத்துக்குச் சமர்த்தனம் எனப் பெயரியவியாக்கமியானஞ் செய்தமை பொருந்தாதன்றோ. ஆதலின் ஹரதத்தாசாரியர் நீலகண்டருக்குப் பின்னர்க்காலத்திலாயினும் எக்காலத்திலாயினு முள்ளவராவர். ஆகவே பாஷியாசாரியபண்டிதர் கருத்துப் பொருத்த முடையதன்று. அற்றேல் முன்னிருந்த நீலகண்டர் தமக்குபின்னர் விளங்கிய ராமானுஜரது கொள்கைகளை எடுத்துக்கண்டித்தல் எங்ஙனங் கூடுமென்றாலோ, அக்கொள்கைகள் முன்னரு முள்ளனவேயாமாதலாலும் அந்நூலிலே ராமானுஜர் பெயர் கேட்கப்படாமையாலும் அது வினாவாகாதென்க. நீலகண்டசிவாசாரியர் வேதாந்தகம புராணேதிகாசங்களிலே மிக்க வல்லுநரென்பது எடுத்துக்கூறவேண்டா. சங்கராசாரியரை வேதாந்திகள் எத்துணையாகத் தழுவுகின்றார்களோ அத்துணையாகச் சைவர்களும் நீலகண்டசிவாசாரியரைத் தழுவுகின்றார்கள். சிவபரஞ்சாதித்த பிரபல ஆசாரியர்கள் நீலகண்டர் ஹரதத்தர் அப்பைய தீக்ஷிதர் என்னும் மூவருள்ளே நீலகண்டர் எல்லாவகையானும் முதன்மையுற்றவர். இம்மூவரும் வடமொழிப்புலவர்களாக அவதாரஞ் செய்திலரேல் சைவசமயம் நிலைகலங்கிவிடுமென்றாலும் தோஷமன்று. நீலகண்டர் சுவேதாசாரியர் மாணாக்கர். நீலகண்டர் ஸ்ரீகண்டரெனவும் படுவர் |
நீலகண்டநாயனார் | திருஎருக்கத்தம்புலியூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர் |
நீலகண்டேசர் | திருமண்ணிப்படிக் கரையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
நீலகண்டேசுவரர் | திருப்பாச்சிலாச்சிரமத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர் |
நீலகிரி | செங்குட்டுவன் வஞ்சிநகரத்திலிருந்து இமயமலைக்குச் செல்லும் பொழுது ஒருநாள் தங்கியிருந்தமலை. அது சேரநாட்டிலுள்ளது. இளாவிருதவிருஷத்துக்க வடக்கெல்லையாகவுள்ள மலை |
நீலன் | அசமீடன் புத்திரன். 2 ராஜசூயகாலத்திலே சகாதேவனோடு யுத்தஞ் செய்த மாகிஷ்மதிபுரிராசா. 3 அக்கினிக்குப் பிறந்த வாநரன். அவன் சுக்கிரீவன் படைத்தலைவன் |
நீலமலர்க்கண்ணி | திருஎருக்கத்தம்புலியூரிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
நீலாசலநாதர் | திரு இந்திரநீலப்பருப்பதத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
நீலாம்பிகை | திரு இந்திரநீலப் பருப்பதத்தலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
நீலாயதாக்ஷி | திருநாகைக்காரோணத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
நீலி | சங்கமனென்னும் வைசியன் மனைவி. கோவலன் கொலையுண்டிறக்கும்படி அவனுடைய முற்பிறப்பில் அவனைச் சபித்தவள் |
நீலி | பழையனூர் வணிகன் மனைவி. இவள் விவாகமாகிச் சிறிதுகாலத்தில் இறந்து திருவாலங்காட்டிலே பேயாய்த் திரிவாளயினாள். ஒருநாள் அவளுடைய நாயகன் அக்காட்டுவழியே தனித்துச் சென்றபோது. இந்நீலிப்பேய் அவனுடைய இரண்டாம் மனைவியைப் போல வடிவங்கொண்டு ஒரு கள்ளிக்கட்டையைப் பிள்ளையாக்கி மருங்கிலே தாங்கிக் கொண்டு அவனைத் தொடர, அவன் அவ்வடிவத்தைப் பேயென நிச்சயித்து அப்பேயினது வஞ்ச மொழிகளுக்கிணங்கா தோடினான். பேயும் இதுமுறையோ இதுமுறையோ என்னைக் காட்டில் விடுத்து அகலக்கருதினீரே என்று அழுது கொண்டு தொடர்ந்து காஞ்சீபுரத்தையடைந்து அங்கே அம்பலத்திற் கூடியிருந்த வேளாளரிடத்துச் சென்று தன்வழக்கைச் சொல்லிற்று. அம்பலத்து வேளாளர் இருவர் வழக்கையுங் கேட்டுப் பேயைப்பார்த்து. நீ கூறுவதற்குச் சாக்ஷியாதென்று வினாவ பேய், இப்பிள்ளையை விடுகின்றேன். அஃது அப்பாவென்றழைத்துத் தந்தை மடிமீதேறாதோபாருங்கள் என்று கூறி விடுப்ப, அப்பிள்ளை அவ்வாறுசெய்ய, வணிகன் இது பேய்க்கூத்தென்றான். அது கேட்ட வேளாளர் அஃதுண்மையானால் நாங்கள் பிணையாவோம். நீயும் இவளுமாக இவ்வறையினுட்போய்ச் சிறிதுநேரம் பேசிவாருங்கள் என்று சொல்ல, வணிகன் அவ்வுரைமறுக்கவியலாதவனாய் அறையினுட் செல்லப் பேயுந் தொடர்ந்துள்ளே புகுந்து கதவடைத்து அவனுயிரைப் பருகி மறைந்தது. வேளாளர் எழுபதின்மரும் கதவைத்திறந்து பார்த்துத் தம்மாலிறந்த வணிகன் பொருட்டுத் தாமுந் தீப்பாய்ந்துயிர் விடுத்தார்கள். சிவபிரான் அவர்களுடைய சத்திய நெறிக்கிரங்கி எல்லோரையும்ட எழுப்பி வேளாளர் வாக்கைக்காத்தருளினார். இவ்விஷயம் தொண்டைமண்டல சதகத்திலும், சேக்கிழார் புராணத்தினுங் கூறப்பட்டது |
நூல் | நாடகத்தமிழ் நூல்களுளொன்று |
நெடியோன்குன்றம் | வேங்கடமலை. இது தமிழ்வழங்கு நிலத்திற்கு வடவெல்லையாயுள்ளது |
நெடுங்கல்நின்றமன்றம் | காவிரிப்பூம்பட்டினத்துள்ள ஐவகை மன்றத்தளொன்று. இது பித்தேறினோர் நஞ்சுண்டொர் பேய்பிடிக்கப்பட்டோராகிய இவர்கள் துயரத்தை நீக்குவது |
நெடுங்கிள்ளி | கோவூர்கிழாராற் பாடப்பட்டவன். ஆவூர் உறையூர்களில் அரசுபுரிந்திருந்தவன். சோழ பரம்பரையிலுள்ளவன், புறநா |
நெடுங்குளம் | பாண்டிநாட்டுள்ள ஓரூர். இஃது அக்காலத்தில் உறையூரிலிருந்து மதுரைக்குச் செல்லும் வழியிலுள்ளது |
நெடுஞ்செழியன் | மதுரையிலிருந்த ஒரு பாண்டியன். இவன் ஆராயாது கோவலனைக் கொலைபுரிவித்துக் கண்ணகிக்கு வழக்கிற்றோறறுத் தனக்குண்டான பழியை நினைந்து உயிரைவிட்டவன் |
நெடுநல்வாடை | நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியது. இது பத்துப்பாட்டுள் ஏழாவது |
நெடுமாறநாயனார் | திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரால் சுரநோயும் கூனுந்தீரப் பெற்றுச் சமணசமயம் விடுத்துச் சைவஞ் சார்ந்த கூன்பாண்டியனார். இவரே வடபுலத்தரசரைத் திருநெல்வேலிப் போர்க்களத்தில் வென்ற சைவசமயம் அபிவிர்த்தியாகும்படி நெடுங்காலமரசியற்றினவர் |
நெடுவேளாதன் | குன்றூர்கிழார் மகனாராற் பாடப்பட்டவன் |
நெடுவேள்குன்றம் | திருச் செங்குன்றென்னுமலை. இது சோழ நாட்டிலுள்ளது |
நெட்டிமையார் | பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய புலவர், புற |
நெய்க்குறி | தேரையர் செய்த மூத்திரபரீiடி கூறு நூல் |
நேசநாயனார் | சாதியிற சாலியராகிய இச்சிவபக்தர் சிவனடியார்க்கு உடையுங்கீளு நெய்து கொடுக்குந் திருத்தொண்டு பூண்டு காம்பீலி நகரத்திலிருந்தவர் |
நேமிநாதம் | தொண்டை நாட்டுக்களத்தூரில் விளங்கிய குணவீரபண்டிதர் என்னும் ஆருகதர் செய்த தமிழிலக்கணம். எழுத்ததிகாரம் சொல்லதிகாரமென்னும் மிருபாற்றாய்த் தொண்ணூற்றாறு வெண்பாக்களால் முடிந்துள்ளது |
நேரிவாயில் | உறையூரின் தெற்கு வாயிலின் கண்ணதோரூர் |
நைமிசம் | மரீசி. அத்திரி, பிருகு, வசிஷ்டன், கிருது, அங்கிரசன் என்னு மிவர்கள் வமிசத்தவர்கள் தவஞ் செய்த ஆரணியம் |
நைமிசாரணியம் | வட நாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம் |
நையாயிகர் | கௌதமகணாத மதவாதிகள் நையாயிக ரெனப்படுவார்கள். அவர்கள் சித்துஞ் சடமுமாகிய விரண்டுமே நித்தியப் பொருள்களென்பவர்கள். சடமாகியலிவ்வுலகம் பீஜத்தினி என்று தோற்றுவிக்கப்பட்டதென்றும், தோற்றுவிப்பது சித்துப் பொருளென்றும், தோன்றும் போது பிஜம் ஏக அணுவாய்ப் பின்னர்த் திரியணுவாய் வடிவுடைப் பொருளாகும் என்றும, ஒடுங்கும் போதும் அவ்வாறே ஒடுங்கிச் சென்று பீஜமாய் நிற்குமென்றும். அந்நிலைக்கண் அது நித்தியமென்றும், வடிவுடையதாய் நிற்கும் நிலைக்கண் அழிதன்மாலையதென்றும். சித்தின்றிச் சடங்காரியப்பாடாதென்றும், ஆன்ம கோடிகள் எல்லாம் ஜகத்காரணமாகிய சித்துப்பொருளின் அமிசங்களேயாமென்றும், அமிசங்களாதலின் சிற்றறிவும் சிறுதொழிலுமுடையனவென்றும் ஜகத்காரணமாகிய சித்து முழுமுதலாதலின் முற்றறிவும் முற்றுத்தொழிலுமுடைதென்றும் ஆன்மாக்கள் சரீரத்தோடு கூடியிருக்கும்போது அஞ்ஞானமுடையதா யிருக்குமென்றும், இடையறாத முயற்சியினால் ஞானத்தை யடைந்தவிடத்து அவ்வான்மாக்கள் முழுமுதலோடு சேர்ந் பேரானந்தத்தை அநுபவிக்குமென்றும் கூறுபவர்கள். இவையே நையாயிக மதக் கொள்கைகளாம் |
நைஷதம் | சம்ஸ்கிருதத்தில் பஞ்சகாவியங்களுளொன்று. ஸ்ரீகர்ஷன் செய்தது. நிஷதராசனாகிய நளன் சரித்திரங்கூறலின் அஃது இப்பெயர்த்தாயிற்று. தமிழில் இப்பெயரால் அதனை மொழிபெயர்த்தவன் அதிவீரராமபாண்டியன் |
நொச்சிநியமங்கிழார் | புறநானூற்றனுள்ளே ஒரு பாடல் பாடியபுலவர் |
நோயணுகாவிதி | தேரையர் செய்த ஆரோக்கிய நூல் |