அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
நீணெறிநாதேசுவரர்

திருத்தண்டலை நீணெறியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

நீபன்

பாரன்புத்திரன் இவனுக்கு நூறுபுத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் மூத்தோனாகிய சமரன் காம்பிலியதேசத்தரசனாயினான்

நீலகண்டக்ஷேத்திரம்

இமாலயத்துக்குச் சமீபத்திலே கௌசிகிநதியுற்பத்தி ஸ்தானம்

நீலகண்டசாத்திரியார்

தருக்கசங்கிரகதீபிகைக்கு நீலகண்டீயம் என்னும் வியாக்கியானஞ் செய்தவர். இவர் அறுபத்தைந்து வருஷங்களுக்கு முன்னே பல்லாரியிலிருந்த ஒரு தெலுங்கர்

நீலகண்டசிவாசாரியார்

இவர் வேதாந்தசூத்திரத்திற்குச் சிவாத்துவித பக்கமாகப் பாஷியஞ் செய்தவர். இவர் திருக்கோகர்ணஸ்தலத்திலே பிறந்து விளங்கியவர், தெலுங்கர். இவர்செய்த பாஷியம் நீலகண்டபாஷிய மெனப்படும். மாதவாசாரியர்செய்த சங்கரவிஜயத்திலே சங்கராசாரிய சுவாமிகள் நீலகண்ட சிவாசாரியரை வாதத்திலே வென்றனரென்று கூறப்படுதலாலும், நீலகண்டவிஜயத்திலே சங்கராசாரிய சுவாமிகள் நீலகண்ட சிவாசாரியர் வினாவியவைகளுக்கு உத்தரங் கூறவியலாது திகைத்தனரென்றுங் கூறப்படுதலாலும், இருவரும் எக்காலத்தவர்களென்பது பெறப்படுகின்றது. சரித்திரம் மாறுகொள்வனவாயினும் இருவரும் ஒருவரையொருவர் கண்டனரென்பதுண்மையாதலின் ஒரேகாலத்தவர்க ளென்பது நன்கு துணியப்படும். இருவிஜயங்களுங் கற்பிதநூல்களாகுமிடத்து எக்காலத்தவர்களென்பதும் பொய்மையின் பாலதாம். நீலகண்டர் ராமானுஜாசாரியரது கொள்கைகளையெடுத்துக் கண்டித்தலாலே நீலகண்டர் ராமானுஜருக்குப் பிந்தியவரென்பதும் அவர்காலம் எண்ணூறுவருஷங்களுக்கு முன்னரென்பதும் சங்கராசாரியர் காலநிரூபணஞ் செய்த பாஷியாசாரிய பண்டிதர் கருத்து, Vide the age of SriSankara Charya, The Adyar Library Series, அஃதுண்மையாயின், நீலகண்டருக்கு இருநூறு வருஷங்களுக்கு முன்னேயுள்ளவரென்று பாஷியாசாரிய பண்டிதராலே கூறப்பட்ட ஹரதத்தாசாரியர் நீலகண்ட பாஷியத்துக்குச் சமர்த்தனம் எனப் பெயரியவியாக்கமியானஞ் செய்தமை பொருந்தாதன்றோ. ஆதலின் ஹரதத்தாசாரியர் நீலகண்டருக்குப் பின்னர்க்காலத்திலாயினும் எக்காலத்திலாயினு முள்ளவராவர். ஆகவே பாஷியாசாரியபண்டிதர் கருத்துப் பொருத்த முடையதன்று. அற்றேல் முன்னிருந்த நீலகண்டர் தமக்குபின்னர் விளங்கிய ராமானுஜரது கொள்கைகளை எடுத்துக்கண்டித்தல் எங்ஙனங் கூடுமென்றாலோ, அக்கொள்கைகள் முன்னரு முள்ளனவேயாமாதலாலும் அந்நூலிலே ராமானுஜர் பெயர் கேட்கப்படாமையாலும் அது வினாவாகாதென்க. நீலகண்டசிவாசாரியர் வேதாந்தகம புராணேதிகாசங்களிலே மிக்க வல்லுநரென்பது எடுத்துக்கூறவேண்டா. சங்கராசாரியரை வேதாந்திகள் எத்துணையாகத் தழுவுகின்றார்களோ அத்துணையாகச் சைவர்களும் நீலகண்டசிவாசாரியரைத் தழுவுகின்றார்கள். சிவபரஞ்சாதித்த பிரபல ஆசாரியர்கள் நீலகண்டர் ஹரதத்தர் அப்பைய தீக்ஷிதர் என்னும் மூவருள்ளே நீலகண்டர் எல்லாவகையானும் முதன்மையுற்றவர். இம்மூவரும் வடமொழிப்புலவர்களாக அவதாரஞ் செய்திலரேல் சைவசமயம் நிலைகலங்கிவிடுமென்றாலும் தோஷமன்று. நீலகண்டர் சுவேதாசாரியர் மாணாக்கர். நீலகண்டர் ஸ்ரீகண்டரெனவும் படுவர்

நீலகண்டநாயனார்

திருஎருக்கத்தம்புலியூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

நீலகண்டேசர்

திருமண்ணிப்படிக் கரையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

நீலகண்டேசுவரர்

திருப்பாச்சிலாச்சிரமத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

நீலகிரி

செங்குட்டுவன் வஞ்சிநகரத்திலிருந்து இமயமலைக்குச் செல்லும் பொழுது ஒருநாள் தங்கியிருந்தமலை. அது சேரநாட்டிலுள்ளது. இளாவிருதவிருஷத்துக்க வடக்கெல்லையாகவுள்ள மலை

நீலன்

அசமீடன் புத்திரன். 2 ராஜசூயகாலத்திலே சகாதேவனோடு யுத்தஞ் செய்த மாகிஷ்மதிபுரிராசா. 3 அக்கினிக்குப் பிறந்த வாநரன். அவன் சுக்கிரீவன் படைத்தலைவன்

நீலமலர்க்கண்ணி

திருஎருக்கத்தம்புலியூரிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

நீலாசலநாதர்

திரு இந்திரநீலப்பருப்பதத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

நீலாம்பிகை

திரு இந்திரநீலப் பருப்பதத்தலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

நீலாயதாக்ஷி

திருநாகைக்காரோணத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

நீலி

சங்கமனென்னும் வைசியன் மனைவி. கோவலன் கொலையுண்டிறக்கும்படி அவனுடைய முற்பிறப்பில் அவனைச் சபித்தவள்

நீலி

பழையனூர் வணிகன் மனைவி. இவள் விவாகமாகிச் சிறிதுகாலத்தில் இறந்து திருவாலங்காட்டிலே பேயாய்த் திரிவாளயினாள். ஒருநாள் அவளுடைய நாயகன் அக்காட்டுவழியே தனித்துச் சென்றபோது. இந்நீலிப்பேய் அவனுடைய இரண்டாம் மனைவியைப் போல வடிவங்கொண்டு ஒரு கள்ளிக்கட்டையைப் பிள்ளையாக்கி மருங்கிலே தாங்கிக் கொண்டு அவனைத் தொடர, அவன் அவ்வடிவத்தைப் பேயென நிச்சயித்து அப்பேயினது வஞ்ச மொழிகளுக்கிணங்கா தோடினான். பேயும் இதுமுறையோ இதுமுறையோ என்னைக் காட்டில் விடுத்து அகலக்கருதினீரே என்று அழுது கொண்டு தொடர்ந்து காஞ்சீபுரத்தையடைந்து அங்கே அம்பலத்திற் கூடியிருந்த வேளாளரிடத்துச் சென்று தன்வழக்கைச் சொல்லிற்று. அம்பலத்து வேளாளர் இருவர் வழக்கையுங் கேட்டுப் பேயைப்பார்த்து. நீ கூறுவதற்குச் சாக்ஷியாதென்று வினாவ பேய், இப்பிள்ளையை விடுகின்றேன். அஃது அப்பாவென்றழைத்துத் தந்தை மடிமீதேறாதோபாருங்கள் என்று கூறி விடுப்ப, அப்பிள்ளை அவ்வாறுசெய்ய, வணிகன் இது பேய்க்கூத்தென்றான். அது கேட்ட வேளாளர் அஃதுண்மையானால் நாங்கள் பிணையாவோம். நீயும் இவளுமாக இவ்வறையினுட்போய்ச் சிறிதுநேரம் பேசிவாருங்கள் என்று சொல்ல, வணிகன் அவ்வுரைமறுக்கவியலாதவனாய் அறையினுட் செல்லப் பேயுந் தொடர்ந்துள்ளே புகுந்து கதவடைத்து அவனுயிரைப் பருகி மறைந்தது. வேளாளர் எழுபதின்மரும் கதவைத்திறந்து பார்த்துத் தம்மாலிறந்த வணிகன் பொருட்டுத் தாமுந் தீப்பாய்ந்துயிர் விடுத்தார்கள். சிவபிரான் அவர்களுடைய சத்திய நெறிக்கிரங்கி எல்லோரையும்ட எழுப்பி வேளாளர் வாக்கைக்காத்தருளினார். இவ்விஷயம் தொண்டைமண்டல சதகத்திலும், சேக்கிழார் புராணத்தினுங் கூறப்பட்டது