அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
நிகிருந்தனம்

இது நிகுந்தனம் என்னும் ஒரு நரகம்

நிகுந்தனம்

ஒரு நரகம். இது குயவன் திகிரிபோல்விடாது சுழன்று திரிந்து பாவிகளுடலைத் துண்டிக்கும் சக்கரங்களையுடையது

நிகும்பன்

ஹரியசுவன் மகன். இவன் மகன் பரிஹிணாசுவன். பரிஹிணாசுவன் அமிதாசுவன் சம்ஹதாசுவன் என்பன ஏகநாமம். கும்பகர்ணன் புத்திரன். இவன் அநுமனாற் கொல்லப்பட்டவன். சிவகணங்களுள் ஒருவர்

நிகும்பலை

இந்திரசித்து யாகஞ்செய்தவிடம்

நிக்கனன்

அநமித்திரன் சேஷ்டபுத்திரன். சத்திராசித்து பிரசேனன் என்போர் இவன் புத்திரர்

நிசகன்

அபிமன்னியன் ஏழாஞ்சந்ததி. இவன் காலத்திலேயே அஸ்தினாபுரியைக் கங்கை கொண்டது. அதன் பின்னர்க் கவுசாம் பிராஜதானியாயிற்று

நிசாகரன்

ஒரிருஷி. இவா ஆச்சிரமத்திலே வசிப்பவனவாகிய ஜடாயு சம்பாதி யென்னும் பக்ஷிகள் சூரியமண்டலததைக் காண்போமென்று அங்கே சென்றபோது சிறகு தீயப்பெற்றுக் கீழே விழுந்து அவ்வாச்சிரமத்திற்றானே வசித்துக் கொண்டிருந்தன. இவ்வாச்சிரமம் விந்தியபர்வதத்திலுள்ளது. சீதையை ராவணன் கொண்டு சென்ற போது தடுத்த பக்ஷிகள் இவைகளே. சந்திரன்

நிசுந்தன்

சந்தோபசுந்தர் தந்தை

நிசும்பன்

திதிவமிசம், சும்பநிசும்பர் காண்க

நித்தியசுந்தரேசுவரர்

திருநெடுங்களத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

நித்தியயௌவனை

திரௌபதி

நிபந்தனகாரர்

சுருதி மிருதிகளும் சூத்திரங்களுங்கூறும் ஆசாரவிதிகளைத்திரட்டி நூலாக்கினவர்கள். அந்நூல்கள் பராசரமாதவீயம் வைத்தியநாததீக்ஷிதம் முதலியன

நிமி

இக்ஷூவாகு புத்திரருளொருவன். தம்மைக்கொண்டு யாகஞ் செய்விக்காது கௌதமரைக் கொண்டு செய்வித்தமைக்காக வசிஷ்டராலே சபிக்கப்பட்டு அங்கஹீனனாயினவன். இவன் விதேவதேசத்துக்கு அரசன்

நியக்குரோதன்

கஞ்சன் தம்பி

நியதி

மேருமகள், விததன்பாரி

நியாயசாஸ்திரம்

பிரத்தியக்ஷநுமானாதிப் பிரமாணங்களைக் கொண்டு பொருளை ஆராய்ந்து நியாயித்தற்குரிய நூல். இது கௌதமமுனிவராலே செய்யப்பட்டது. இதுவும் கணாகாசெய்த வைசேடிகமும் தருக்கநூலெனப்படும். இவையிரண்டும் வடமொழியிலுள்ளன

நியாயபோதினி

இது கௌடரும் தருக்கபாடாப்பிரகாசஞ், செய்தவருமாகிய கோவர்த்தனமிசிரராலே செய்யப்பட்ட தருக்கசங்கிரக வியாக்கியானம். இது நானூறு கிரந்தமுடையது. இது வடமொழியிலுள்ளது, தமிழ் ~ தருகசங்கிரக வரலாற்றினின்றும் எடுத்துரைக்கப்பட்டது

நிராகன்

புலஸ்தியன் புத்திரன் இருபன்சீஷன்

நிருதன்

வைவசுவதமனு இரண்டாம் புத்திரன். இக்ஷூவாகு தம்பி. இவன் மகா பிரசித்திபெற்ற அரசன். உசிநரன் இரண்டாம் புத்திரன்

நிருதி

அஷ்டதிக்கு பாலகருளொருவன். தென்மேற்றிசைக் கதிபதி. பாரி தீர்க்காதேவி. வாகனம்நரன். நகரம் கிருஷ்ணாங்கனை. ஆயுதம் குந்தம்

நிருத்தி

இது தமிழ்நாட்டிலிருந்த தெலுங்கராகிய பட்டாபிராமசாத்திரியாராலே தமது புத்திரியின் பொருட்டுச் செய்யப்பட்ட சம்ஸ்கிருத தருக்க சங்கிரகவி யாக்கியானம். மற்றைய வியாக்கியானங்களுள் இது மிக எளிதினுணர்தற்பாலது. இது அறுநூறு கிரந்தமுடைத்து. இந்நூலாசிரியர் அறுபத்தைந்து வருஷங்களுக்கு முன்னே விளங்கினவர்

நிலாதகவசர்

தைத்திரியர்களு ளொருசாரார். பிரகலாதன் வமிசத்தவர். இவர் தொகை முப்பது கோடி. இவர்கள் சமுத்திரமத்தியிலே வசிப்பவராயத் தேவர்களை வருத்தும் போது தேவேந்திர்ன வேண்டுகோளின்படி அர்ச்சுனனாற் கொல்லப்பட்டவர்கள்

நிவாதகவசம்

காற்றும்புகாத கவசம் எனவே பாணத்துக்கு அறாதகவசம் என்பது பொருள். அதனையுடையவர் நிவாதகவார்

நிஷதன்

குருநான்காம் புத்திரன். ராமர் புத்திரனாகிய குசன் பௌத்திரன்

நிஷதம்

விந்தியாபர்வத சமீபத்திலே பயோஷ்ணிநதி தீரத்திலுள்ள தேசம். இதுநளன்தேசம். ஒருமலை