ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
தொடித்தலைவிழுத்தண்டினார் | இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். இவராற் பாடப்பட்டவன் பெருஞ்சாத்தனென்னும் வேளாளன். பூணிட்ட தலையையுடைய பெருந்தண்டூன்றி நடக்கும் மிக்க முதுமையுடையவர் என்பது பெயர்ப்பொருள் |
தொண்டரடிப்பொடியாழ்வார் | இவா கலியுகம் 200 ல் சோழதேசத்திலே மண்டங்குடியிலே பரசூடன் என்னும், வைஷ்ணவனுக்குப் புத்திரனாராகப் பிறந்த விளங்கிய விஷ்ணுபக்தர் |
தொண்டி | சோழகுலத்தோர் ருறையும் ஒரு நகரம் |
தொண்டைமண்டலம் | வேழமுடைந்து மலைநாடு மேதக்க சோழவளநாடு சோறுடைத்த பூமியர்கோன் தென்னாடு முத்துடைத்துத் தெண்ணீர் வயற்றாண்டை நன்னாடு சான்றோருடைத்து என்ற ஒளவையாராற் புகழப்பட்ட இந்நாடு, கிழக்கே கடலும், மேற்கே பவளமலையும், வடக்கே வேங்கடமும், தெற்கே பினாகிநதியு மெல்லையாகவுடையது. இதற்கு இராஜதானி காஞ்சீபுரம். இந்நாடு பூர்வத்திலே சோழ நாட்டைச் சேர்ந்தது. நாகபட்டினத்துச் சோழன் நாகலோகஞ் சென்ற காலத்திலே நாககன்னிகையை மணம்புரிந்து அவள் வயிற்றிலே பிறக்கும் புத்திரனுக்குத் தனது நாட்டிற் பாதிகொடுப்பதாக வாக்களித்து மீண்டான். மீளும்போது நாககன்னிகை தன் புத்திரனை அனுப்புவது எவ்வாறென்று வினவ, அவன் தொண்டைக் கொடியை அடையாளமாகக்கட்டித் தெப்பத்திலிட்டனுப்பக் கடவை யென்றான். அவ்வாறே அப்புதல்வன் தொண்டைத்தழை சூடிக்கொண்டு திரையாற் செலுத்தப்பட்டு நாகபட்டினக் கரையையடைந்தான். சோழன் அவனை வளர்த்து இந்நாட்டைப் பிரித்து அவனுக்குக் கொடுத்துத் தொண்டைமான் என்னும் பெயரும் முடியுஞ் சூட்டினான். தொண்டைமான் ஆண்டமையின் அது தொண்டை மண்டலமென்னும் பெயர்த்தாயிற்று. இது நெடுங்காலம் உபநாடகவுஞ் சிலகாலந் தனிநாடாகவுமிருந்து பெரும்புகழ்படைத்தது. இந்நாட்டிலே திருவள்ளுவர், கச்சியப்பர், கம்பர், பரிமேலழகர், ஒட்டக்கூத்தர், ராமாநுஜாசாரியர், சேக்கிழார், இரட்டையர், அருணகிரிநாதர், பவணந்தி, படிக்காசுப்புலவர், அப்பையதீக்ஷிதா முதலியவித்துவ சிகாமணிகளும். அதிகமான், கறுப்பன், சடையப்பமுதலி முதலிய மகௌதாரியப் பிரபுக்களும், உத்தமகுண அரசர்களும் விளங்கின ரென்றால் அதன்பெருமை எடுத்துக் கூறுவேண்டா. இத்தொண்டை நாட்டுப் பெருமையைப் படிக்காசுப்புலவர் தொண்டைமண்டலசதக மென்னும் நூலாற் பாடினர் |
தொண்டைமான் இளந்திரையன் | கடியலூர் உருத்திரங்கண்ணனாராலே பெரும்பாணாற்றுப்படையிலே வைத்துப் பாடப்பட்டவன் |
தொல்காப்பியனார் | இவர் சமதக்கினிமுனிவர் புத்திரராகிய திரணதூமாக்கினி என்பவர். இவர் வடநாட்டினின்று தென்னாட்டிற்கு அகஸ்தியமுனிவரோடு சென்று அவர் பாற்றமிழ்கற்று மிக்கவல்லுநராகித் தம்பெயராலே தமிழிற்கு இலக்கண நூல் செய்தவர். இவர் தொல்காப்பியக்குடியை உடையராதலின் தொல்காப்பியரென வழங்கப்படுவாராயினார். இவரோடொருங்கு கற்றவராகிய பணம்பாரனார் இவர்மேற் கூறிய சிறப்புக்கவி வருமாறு: வடவேங்கடந் தென்குமரியாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி ~ னெழுத்துஞ் சொல்லும் பொருளுநாடிச் ~ செந்தமிழியற்கை சிவணியநிலத்தொடு ~ முந்து நூல்கண்டு முறைப்பட வெண்ணிப் ~ புலந்தொகுத் தோனெ போக்கறுபனுவ ~ னில்ந்தருவிற் பாண்டியனவையத் ~ தறங்கோட்டாசாற் கரிறபத்தெரித்து ~ மயங்காமரபி னெழுத்து முறை காட்டி ~ மல்குநீர் வரைப்பி னைந்திர நிறைந்த ~ தொல்காப்பியனெனத் தன் பெயர் தோற்றிப் ~ பல்புகழ் நிறுத்தபடிமையோனே இவர் நிலந்தருவிற் பாண்டியன் சயமாகீர்த்தி காலத்தவர். எனவே இவர் காலம் முதற் சங்கத்தறுதியும் இடைச்சங்கத்து முதலுமாம். இவ்வுண்மை தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் பொய்யும் வழுவும் என்னுஞ் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் உரையினுள்ளே இவ்வாசிரியர் ஆதியூழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின் என வருவதனாற் பெறப்படும் |
தொல்காப்பியம் | அகத்தியமுனிவர் மாணாக்கருள் ஒருவரும், இடைச்சங்கப்புலவரு ளொருவருமாகிய தொல்காப்பிய முனிவர் செய்த இயற்றமிழிலக்கணநூல். இஃது எடுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களையுடையது. இதற்குரை செய்தோர் கல்லாடர், இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியரென ஐவர் |