ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
தேஜஸ்வி | அகஸ்தின் பௌத்திரன். திருசியன் புத்திரன் |
தேஜோவதி | அக்கினிதேவனது நகரம். அது சோதிமயமாயிருக்கும் |
தேநவர் | சுசுருதரோடு ஆயுள்வேதங் கற்றவர் |
தேனார்மொழியம்மை | குடந்தைக்காரோணத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
தேனீக்குடிக்கீரனார் | இவர்கடைச் சங்கப்புலவர்களு ளொருவர் |
தேனுகாசுரன் | விருந்தாவனத்திலிருந்த ஜனங்களைக் கர்த்தபரூபங் கொண்டு கொன்று வந்த அசுரன். பலராமனாற் கொல்லப்பட்டவன் கர்த்தபம் ~ கழுதை |
தேரையர், தேரனார் | தமிழிலே அகஸ்தியர் பால் வைத்தியங்கற்ற மாணாக்கருள்ளே முதன்மை பெற்றவர். வைத்தியத்திலே தமக்கு ஒப்பாருமிக்காரு மில்லாதவர். சாரீரம், நிதானம், சிகிற்சை முதலிய துறைகளிலெல்லாம் மிக்க வல்லுநர். பதார்த்தகுணமெல்லாம் கடைபோகவா ராய்ந்தவர். பதார்த்த குணமென்னும் அற்புதநூல் செய்தவருமிவரே. தமிழிலே இறந்தனபோக எஞ்சியுள்ள உண்மைப் புராதனவைத்திய நூல்கள் இவர் செய்தன சிலவே. ஏனையவெல்லாம் கற்பித நூல்களேயாம். நீர்நிறக்குறி நெய்க்குறி, தைலவருக்கச்சுருக்கம், கஷாயம் நூறு, பதார்த்தகுணம் சிகிற்சை ஆயிரம் முதலியன இவராற் செய்யப்பட்டன. சிகிற்சை ஆயிரமும் அச்சிடுவோரால் ஆராய்வின்றி இடையிடையே பிறழ்விக்கப்பட்டது. தேரையர் கூறும் சிகிற்சைகள் உள்ளவாறு செய்யப்படுமாயின் தவறுவதரிது. சஸ்திரவைத்தியத்திலுள்ளுஞ் சிறந்ததாகமிய கபாலசல்லியத்திலே பெயர்படைத்தவரென்றால் அத்துறையில் அவர் வன்மை கூறவேண்டா. ஓருவாற்றானும் நீங்காத தலைக்குத்தினால் வருந்திய ஓரரசனுக்கு அந்நோயின் காரணத்தை நிதானித்துச் சம்மோகினியைப் பிரயோகித்து அவனை மயங்கி அவன் கபாலத்தைத் திறந்து அமிர்தத்திலிருந்த தேரையை ஒரு நீர்க்கிண்ணத்திலுள்ளே பாய்வித்துப் பின்னர்ச் சந்தானகரணியினாலே அக்கபாலத்தை முன்போலப் பொருத்தி அந்நோயை நீக்கினாரென்பது கன்னபரம்பரை. இதற்கிணையான சரித்திரமொன்று போஜப்பிரபந்த மென்னும் வடமொழி நூலிலுங் கூறப்பட்டுள்ளது. ஆஷ்டவிதபரீக்ஷையினாலேயன்றி நோயினது சாத்தியாசாத்தியங்களை ஆடிக் கலசத்திற்பெய்த மூத்திர நடுவேயிட்ட ஒரு துளி எண்ணெய்க் கொண்டு பண்டிதரல்லாதாரு முணர்ந்து கொள்ளுமாறு நெய்க்குறி நூல் செய்தவர் தேரையர். சூத்திரங்களுட் சில வருமாறு : விடுதுளிசிதறி வௌ, வேறொன்மற் ~ கடுகெனப்பரவிற் கைவிடன் முறையே அவியுமூத்திரமு மணைந்தொன்றினாவி ~ யவியுமென்றல் கவுதமரறையே முல்லையரும்பு முளிரிப்பூவுஞ் சொல்லியதுளியுட் டோற்றிடுமாயின் ~ இல்லையில்லைநோ யென்பது சாரமே |
தேர்ப்பாரண்ணியேசுவரர் | திருநள்ளாற்றிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
தேர்வண்மலையன் | வடவண்ணக்கன் பெருஞ்சாத்தனாராற் புறநானூற்றிலே வைத்துப் பாடப்பட்டவன். இவன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்குத் துணையாகிச் சேரமான்ழாந்தரஞ்சேரலிரும் பொறையைப் போரில் வென்றவன், புறநானூறு |
தேவகன் | உக்கிரசேனன் தம்பி. தேவகிக்குத் தந்தை |
தேவகி | வசுதேவன் பாரி. கிருஷ்ணன்தாய். கோசலதேசத்திற் பிரவாகித்துக் கங்கையிற் சங்கமிக்கின்ற நதி |
தேவகிரி | சத்துரு நதிக்கும் யமுனைக்குமிடையேயுள்ள நதி |
தேவசிரவசு | வசுதேவன் தம்பி |
தேவசேனை | அரிஷ்டநேமிமகன். இவளைக் கேசியென்னும் அசுரன் எடுத்துப் போகும் போது இந்திரன் மீட்டுவளர்த்தான். இத் தேவசேனையே குமரக்கடவுள்தேவி |
தேவடித்திரன் | தேவராதன்மகன் |
தேவதத்தம் | அர்ச்சுனன் சங்கு. இந்திரன் கொடுத்தமையின் தேவதத்தம் என்னும் பெயர் பெற்றது |
தேவதாருவனம் | பிருகு முதலிய மகாரிஷிகள் தவஞ்செய்த மகாவனம். ஆம்மகாரிஷிகளுடைய தவத்தைச் சோதிக்கும் பொருட்டும். மீமாஞ்சை நூலே உண்மை நூலெனவும், அந்நூலிலே கூறப்பட்டயாகங்களே இருமைப்பயன்களையும் பயப்பனவெனவும் கொண்ட மயக்கத்தைத் தீர்த்தாட் கொள்ளும் பொருட்டும் சிவன் பிக்ஷாடன மூர்த்தியாகி விஷ்ணுவை மோகினியாக்கித் தம்முடன் கொண்டு இவ்வனத்திற் புகந்தனர். மோகினி வடிவைக்கண்ட முனிவர்கள் காமத்தாற் கலங்கி நியமமிழந்தார்கள். இருஷிபத்தினிகள் பிக்ஷாடன மூர்த்தயுடைய சுந்தரரூபத்தைக் கண்டு கற்புநிலைகலங்கித் தம்மை மறந்து அவர் பின்னே சென்றுழன்றார்கள். முனிவர்கள் தம்மனைவியரது கற்பைக்கலக்கிய சிவபிரானைக் கொல்லும் பொருட்டு அபிசாரவேள்வி செய்து அதினின்றும பூதங்களையும் புலியையுஞ் சர்ப்பத்தையும முயலகனையுமெழுப்பி விட்டார்கள். பூதங்களைச் சிவன் தமக்குப்பரிசனமாக்கினர். புலியையுரித்து அவ்வுரியை யாடையாக்கினர். சர்ப்பத்தை ஆபரணமாகக் கொண்டனர். முயலகனைக் காலின் கீழிட்டுக் கொண்டனர். அவற்றைக் கண்ட முனிவர்கள் தம்மயக்கந்திர்ந்து சிவனை வழிபட்டுய்ந்தார்கள். இருஷி பத்தினிகளும் சிவன் கடைக்கண்ணோக்கத்தால் சிவஞானம் பெற்றுய்ந்தார்கள். இச்சரித்திரத்திலே சிவன் ஆன்மாக்களை ஆணவமலத்தைக் கெடுத்து ஆட்கொள்ளுஞ் செயல் கூறப்பட்டது. பிக்ஷாடனவடிவம் சிவம். மோகினிவடிவம் சத்தி. இருஷிகள் மெய்யுணர்வு தலைப்படாத பக்குவான்மாக்கள். இருஷி பத்தினிகள் அகங்காரம் இச்சரித்திரம் சிவபுராணங்களிலே சிறிது மாறுபடக் கூறப்பட்டுள்ளது |
தேவந்தி | கண்ணகியின் பார்ப்பனத்தோழியாப் மாநாய்கன்மனையில் வளர்ந்தவள். மானிடவடிவங் கொண்ட சாத்தனென்னும் தெய்வத்தின் மனைவி தான் கண்ட தீக்கனாவைக் கண்ணகி சொல்லிய பொழுது தேற்றியவள். கண்ணகிக்கும் கோவலனுக்கும் நேர்ந்த துன்பத்தைக்கேட்டு மதுரையையடைந்து பின்பு வஞ்சிநகரஞ் சென்று அங்குப் பிரதிட்டிக்கப்பட்டிருந்த கண்ணகி வடிவத்தைப் பூசித்தவள் |
தேவபாகன் | வசுதேவன் தம்பி. ஊத்தமனுக்குத் தந்தை |
தேவபூதி | மகததேஜ ராசாக்களாகிய சிருங்கிகளுள்ளே கடைஅரசன், கண்ணுவன்காண்க |
தேவப்பிரயாகை | இது அலகநந்தை கங்கையோடு சங்கமிக்குமிடத்துள்ள நகரம். இங்கே 900 அடியுயரமுள்ள ஒரு விஷ்ணு ஆலயமிருக்கின்றது |
தேவமித்திரன் | மாண்டூகேயன் சீஷன் |
தேவமீடன் | ஹிருதிகன் மகன். வசுதேவன் பாட்டன் |
தேவயானை | சுக்கிராசாரி மகள். யுயாதி பாரி. தேவேந்திரன் வளர்த்தமகள், தேவசேனை காண்க |
தேவரக்ஷிதி | வசுதேவன் பாரி. தேவகன்மகள் |
தேவராதன் | சுகேதன் மகன். கரம்பியாகியகுந்திமகன். சனசேபன் |
தேவர் | ஜன்மதேவர் கர்மதேவர் என இருதிறத்தினர் தேவர், அக்கினி, இந்திரன்ன. யமன், சூரியன். வாயு, வருணன் முதலியோர் ஜன்மதேவதைகள் இவர்கள் லொகோபகாரார்த்தமாக ஒவ்வோரதிகாரத்தோடு சிருஷ்டி காலத்திலே சிருஷ்டிக்கப்பட்டுத் தத்தம் அதிகாரத்தைச் சங்காரகாலம் வரைக்குஞ் செலுத்தி நின்று அழிபவர்கள். இனிக் கர்மதேவதைகள் மனுஷருள்ளே புண்ணிய விசேஷத்தாற் சுவர்க்கம் போய்த் தேவகதியடைந்து மீள்பவர்கள். இவர்கள் நகுஷன் முதலியோர், இன்னும் பிதிர் தேவதைகளெனவும் ஒருபாலாருளர். அவர்கள் பிரஜாபதிபுத்திரர்கள். இவர்களே மனுஷ கணங்களுக்கு ஆதிபிதாக்கள். இன்னும் இறந்து போகின்றவாகளெல்லாரும் தத்தம் குடும்பத்தனர்க்குப் பிதிரராகின்றார்கள். ஓரு காலத்தில் இந்திராதி தேவர்களும் பிதிர்களும் அசுரபீடைக்கஞ்சிக் காகரூபந்தாங்கிப் பூமியிற் சஞ்சரித்தார்கள். அதுபற்றியே காகங்களுக்குப் பிண்டமிட்டுண்ணும் வழக்கம் உலகத்துண்டாயது. இதுவாயசபிண்டமெனப்படும். ஜன்மதேவர் முப்பத்து மூவர். பிரமா 1. இந்திரன். 1. வசுக்கள். 8. ருத்திரர் 11. ஆதித்தர் 12. ஆக 33 பிரமேந்திரரை நீக்கி அசுவினிதேவர் இருவரையுங் கூட்டி எண்ணுவாருமுளர் |
தேவலன் | அஷ்டவசுக்களு ளொருவனாகிய பிரததியுஷ்ன் மகன். இவனுக்கு க்ஷமாவர்த்தன், மனஸ்வி என இருவர் புத்திரர். அக்குரூரன் சேட்டபுத்திரன். தேவகன்மகன் |
தேவவதி | சுகேசன்பாரி. கிராமணியென்னும் கந்தருவன் மகள் தேவமணி |
தேவவர்த்தனன் | தேவகன் மகன் |
தேவவிரதன் | வீஷ்மன் |
தேவஸ்தாணன் | பாரதயுத்தத்தின் பின்னர் கிருஷ்ணன் நிரியாணமடைந்தமையால் துக்கித்திருந்த தருமருக்கு உபதேசஞ் செய்தவிருஷி |
தேவஹூதி | சுவாயம்புவமனுமகள். கர்த்தமப்பிரஜாபதி பாரி. கபிலமகாவிருஷி தாய் |
தேவாதிதி | அக்குரோதன் மகன் |
தேவாந்தகன் | இராணவன் மகன். ஹனுமந்தனாற் கொல்லப்பட்டவன் |
தேவானீகன் | க்ஷேமதன்னுவா மகன் |
தேவாபி | பிரதீபன் சேட்ட புத்திரன். இவன் தன் தம்பியாகிய சந்தனுவுக்கு ராச்சியத்தைக் கொடுத்து விட்டுக் காட்டுக்குத் தபசுக்குப் போனவன் |
தேவாபிருதன் | சாத்துவதன் புத்திரருளொருவன். இவனுக்குப் பப்பிருவென்னும் புத்திரனொருவன் பிறந்தான் |
தேவாரணியம் | லோகித்தியநதி தீரத்திலுள்ள ஒரு வனம். இங்கே மாணிதரன் என்னும் யக்ஷன் வசித்தான் |
தேவாரம் | தேவ ஆரம் ~ தேவாரம். ஆரம் ~ மாலை. கடவுளுக்கு நாரினாலே தொடுத்துச் சாத்தப்படும் மலர்மாலை போலப் பத்தியாகிய நாரினாலே தொடுத்தச் சாத்தப்படும் அன்பு மணக்குஞ் சொன்மாலையாதலின் தேவார மெனப்பட்டது. அப்பர் சம்பந்தர் சுந்தரர் என்னும் மூவர் பாடலுமே தேவாரமெனப்படும். அவையனைத்துமாகத் தொண்ணுற்றாறாயிரம் பதிகம். அவற்றுள் அழிந்தனபோக எஞ்சியுள்ள எழுநூற்றுத் தொண்ணூற்றைந்து. இதன் சிறப்பைத் திருநாவுக்கரசுநாயனார் என்பதனுட் கூறினாம். தேவாரந் தோன்றிநின்று நிலவுங்காலத்திலே தமிழ்நாட்டிற் பகையரசர் படைநடத்தி எரியூட்டியும் சூறையாடியும் நாட்டைக் கலக்கியபோது தேவாரத்திருமுறைகளெல்லாம் அக்கினி வாய்ப்பட்டனவும் பிறநாட்டிற் சென்றனவுமாயருகின. அதன் பின்னர் அபயகுலசேகர சோழன் தன் சபையிற் போந்த புலவர் வாயிலே ஒரோரு தேவாரப்பாக்களைக்கேட்டு அவற்றின் பெருமையையும் இனிமையையும் அளந்து பேராசையுற்று அத்திருமுறையை எங்குந்தேடியும் பெறானாய் நம்பியாண்டார் நம்பியாற் சென்று இப்போதுள்ள எழுநூற்றுத் தொண்ணூற்றைந்து பதிகங்களையுமே பெற்றான். அது பெற்றகாலம் இற்றைக்கு எழுநூறு வருஷங்களுக்கு முன்னுள்ளது |