அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
துங்கப்பிரஸ்தம்

ராமகிரிக்குக் கிழக்கின் கணுள்ள மலை

துச்சலை

திருதராஷ்டிரன் மகள். தூய் காந்தாரி. ஜேயத்திரதன் மனைவி

துச்சாசனன்

துரியோதனன்றம்பி. ஆண்மையிலும் துர்க்கிருத்தியத்கிலும் மிக்கவன். திரௌபதியைக் கூந்தலிற்பற்றி யிழுத்துப் போய்த் துரியோதனன் சபையிலே பாண்டவர்கள் பார்த்திருக்க அவளுடைய ஆடையையுரிந்து மானபங்கஞ் செய்யத்துணிந்த மகாபாவி இவனே. தருமனுடைய ஆணையென்னும் அங்குசத்தாலே தடுக்கப்பட்டிருந்த வீமசெனன் மற்றொன்றுஞ்செய்ய வியலாது சபை நடுவே எழுந்து நின்று இத்தீச்செயல்புரிந்த துச்சாசனனைக் கொன்று இரத்தபானம் பண்ணுவென் என்று சபதஞ் செய்தபடியே பின்னர்ச் சிலநாளில் நேர்த்த யுத்தத்திலே அவனைக் கொன்று வஞ்சினமுடித்தான்

துண்டி, துண்டிவிநாயகர்

காசியிலுள்ள விநாயகர்

துந்து

உதங்கமகாரிஷிக்குப் பகைவனாயிருந்த வொரு கொடிய அசுரன். குவலயாசுவன் தன் புத்திரர் இருபத்தோராயிரவரோடுஞ் சென்று இவ்வசுரனை எதிர்த்து யுத்தஞ்செய்து கொன்று துந்து மாரனென்னும் பெயர் கொண்டான். குவலயாசுவன் புத்திரருள் திருடாசுவன் என்னும் மூவரொழிய, ஒழிந்தோர் யாவரும் துந்துவினது அக்கினிசுவாசத்திலகப்பட்டு மடிந்தனர். இச்சரித்திரத்தைக் கம்பர் துந்துவெனுந்தானவனைச் சுடசரத்தாற் றொலைத்தானும் என்பதாற் சுட்டினர், கம்பராமாயணம் குலமுறைகிளத்து படலம்

துந்துபி

நரன்மகன். மயன்புத்திரன். மாயாதேவியினது இரண்டாம்மகன். வாலியாற் கொலையுண்டவன். மதங்கமுனிவர் வாசஞ்செய்த இருஷிய மூகபர்வதத்திலே துந்துபியினது இரத்தம் தெறித்து வீழ்ந்து அதனை அநுசிதம்பண்ண, மதங்கர் இவ்வநுசித்ததுக்குக் காரணனாகிய வாலி இம்மலையை மிதிப்பனேல் அவன் தலை ஆயிரங்கூறாகுக என்ற சபித்தனர். அன்று தொட்டு வாலி அங்கே செல்லா தொழுகினான்

துந்துமாரன்

குவலயாசுவன். துந்து என்னும் இராடிசனைக் கொன்றவனாதலின் இப்பெயர் பெற்றான். துந்து காண்க

தும்புரீயம்

ராகதாள லடிணங்களைக் குறித்துத் தும்புரு செய்த நூல்

தும்புரு

கந்தருவகுரு. இவரும் நாரதரும் பிரசித்திபெற்ற சங்கீதவித்துவான்கள்

துயர்தீர்த்தசெல்வர்

திரு ஒமாம் புலியூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

துரகியு

யதாதி புத்திரன்

துரியசித்தன்

யயாதிபுத்திரனாகிய துர்வாசன் பௌத்திர பௌத்திரன். இவனுக்குச் சந்ததியில்லாமையால் பரதன் சிற்றப்பனாகிய திஷ்யந்தனைத் தத்தபுத்திரனாக வெடுத்து வளர்த்தான்

துரியோதனன்

திருதராஷ்டிரனுக்குக் காந்தாரிவயிற்றிற் பிறந்த நூறு புத்திரருள் மூத்தோன். இவன் துச்சாதனன்கன்னன் சகுனி இவர்கள் போதனையால் பாண்டவர்கள் மீது பொறாமையுடையனாகித் திருதராஷ்டிரனைத் தனது எண்ணங்களுக்கு இயைவித்துக் கொண்டு அவர்களைச் சூதில் வென்று அவர்கள் இராச்சியபாகத்தைக் கவர்ந்து கொண்டு பதினான்குவருஷங்காட்டுக்குப் போய் மீண்டவருமிடத்து இராச்சியபாகந் தருவேனென்றுகூற, அவர்கள் அவ்வாறு போய் மீண்டவந்தபோது இராச்சியங் கொடெனென்று மறத்தமையால் அவர்கள் யுத்தஞ் செய்து பதினெட்டாநாள் இவனையும் இவன் கிளைஞரையுங் கொன்று வாகை சூடினர். மநுவமிசத்தரசனாகிய சுதரிசனன் தந்தை

துருபதன்

பாஞ்சாலதேசத்தரசன். காம்பில்லியநகரம் இவன்ராஜதானி. விரஷதன் இவனுக்கு தந்தை. திருஷ்டத்தியுமன் சிகண்டி இருவரும் புத்திரர். திரௌபதி புத்திரி. துருபதனும் துரோணனும் சகாத்தியாயர், உடன் கற்றோர்,. துருபதன் பட்டாபிஷேகம் பெற்ற பின்னர் ஒருநாள் துரோணன் துருபதனிடஞ்சென்று தனக்குப் பொருளுதவி செய்யுமாறு வேண்டத்த துருபதன் துரோணனை நோக்கி நீ யாவன் யாதுன்தேசம் என்று முன் அறியான் போன்று வினாவி அவமானஞ் செய்தனுப்பினான். இதனை மனத்திடை வைத்துத் துரோணன் கௌரவ பாண்டவர்களிடம் போய் அவர்களுக்கு அஸ்திரவித்தை கற்பித்து வரும்போது, அர்ச்சுனன் வில்வித்தையில் அதி சதுரனாயினமைகண்டு, நீ எனக்குக் குருதக்ஷிணையாகத் துருபதனைத் தருதல் வேண்டுமென்ன, அவன் அதற்குடன்பட்டு அவனைப் பிடித்து வந்து கொடுத்தான். துரோணன் சந்தோஷமடைந்து துருபதனை நோக்கி இப்போதுன்கதியாதாயிற்று என்று பலவாறு பரிகசித்தவமானம் பண்ணி அவனைப் போம்படி விடுத்தான். அவ்வன்மத்தாற் துருபதன் ஓருயாகஞ் செய்து அவ்வியாகத்திடைத் துரோணனைக் கொல்லும் பொருட்டுத் திருஷ்டத்துயமனையும் அர்ச்சுணனுக்குப் பாரியாகத் திரௌபதியையும் பெற்று வளர்த்தான்

துருவன்

உத்தானபாதனுக்குச் சுநீதிடத்துப் பிறந்தவன். துஷ்ட வசுக்களுளொருவன். மதசாரன் இரண்டாம் புத்திரன். பலராமன் தம்பி. துருவநடித்திரம். பிரமா. விஷ்ணு

துருவாக்ஷி

வசுதேவன் தம்பியாகிய விருகன் பாரி

துரோணன்

ஒரு பக்ஷி. இது தர்மபக்ஷிகளுக்குத் தந்தை. முந்தபாலன் மகவு

துரோணாசாரியன்

பரத்துவாசமுனி புத்திரன். ஆசுவத்தாமன் தந்தை. பாரதயுத்தத்தில் திருஷ்டத்தியுமனாற் கொல்லப்பட்டவன். இவனுக்குக் கம்பன் என்றும் பெயர், துரோணம் ஓரளவினதாகிய கும்பம், பரத்துவாசருடைய தவத்தையழிக்கும் பொருட்டு இந்திரன் ஏவலிற்சென்றமேனகை அவருக்கு விகாரத்தையுண்டாக்க, அவர் தமது வீரியத்தையுண்டாக்க, அவர் தமது வீரியத்தை ஒரு துரோணத்திலே விட்டார். அதிற் பிறந்தமையாலே துரோணனெனப்பட்டான். இவன் கௌரவபாண்டவரென்னு மிருதிறத்தார்க்கும் வில்வித்தை கற்பித்த ஆசிரியன்

துர்க்கை

விந்தியத்திலுள்ள ஒரு நதி. துர்க்காதேவி. திரிலோக பயங்கரனாய்த் திரிந்த உருவென்னும் அசுரன் மகனாயிய துர்க்காசரனைக் கொன்றகாரணம் பற்றி இத்தேவிக்குத் துர்க்கை யென்னும் பெயருண்டாயிற்று, துர்க்காசுரனாலே இந்திரன் முதலிய தேவர்கள் தம்பதங்களையிழந்து சிவன்பாற் சென்று குறையிரந்தனர். சிவன் அவர்க்கிரங்கி பார்வதியை நோக்க, பார்வதி தேவியார் தாமே அவ்வசுரனைக் கொன்று தேவர்களைக் காப்பதாகக் கூறிக் காலராத்திரியென்னும் பாங்கியை ஏவ, அப்பாங்கியார் அவ்வசுரனுடைய சேனாசமுத்திரத்தைக் கண்டஞ்சி மீண்டு பார்வதிதேவியார்க் குரைக்க, தேவியார் சென்று அவன் சேனைகளையெல்லாம் பரிநாசம் பண்ணி அசுரனைச்சாட, அசுரன் மகா பர்வதப்பிரமாணமான ஒரு யானையாகி எதிர்த்தான். அவ்வடிவத்தைத்தேவியார் தமது நகங்களாலே கிழித்துத் துண்டஞ்செய்ய, அசுரன் ஒரு மகிஷமாகித் தேவியை எதிர்த்தான். அதுவுஞ்சிதைபட்டொழிய அசுரன் பழையவடிவு கொண்டு கொடிய ஆயதங்களையோச்சினான். தேவி ஒரு கடுங்கணையை விட்டு, மார்பைப் பிளந்து அவனைக்கொன்று தேவர்களுக்கு அச்சந்தீர்த்தருளினார். எனவே பார்வதி தேவியார் துர்க்கனைக் கொல்லுமாறு கொண்டருளிய வடிவமே துர்க்காதேவியாம். துர்க்காதேவியினது வரலாறு புராணங்களிலே பலபடக் கூறப்பட்டுள்ளது. துர்க்கை உருத்திரசக்திகளுள் ஒருபேதம். ஏண்டோருடையவரென்றும், பத்துக் கரங்களுடையவரென்றும், பதினெட்டுக் கரங்களுடையரென்றும், சூலம் வாள் சக்கரம் கரக முதலிய ஆயதங்களுடையரென்றும், சிங்கவாகினியென்றும், கலையூர்தியென்றும். புலவர்ணங்களை யுடையவரென்றும், துர்க்கங்களிலே சஞ்சரிப்பவரென்றும், போர்த்தொழிலுக்கு அதிதேவதையென்றும் கன்னியென்றும் பலவாறாகக் கொண்டு உபாசிக்கப்படுவர். காளிகாதேவிக்குரிய லட்சணங்களுமேற்றிக் கூறப்படுவர்

துர்ச்சேயன்

தநு புத்திரன்

துர்த்தமன்

காந்தாரன் பௌத்திர புத்திரன். பத்திரசேனன் புத்திரன்

துர்மதன்

வசுதேவன் புத்திரன்

துர்மருஷணன்

துரியோதனன் தம்பி

துர்முகன்

துரியோதனன் தம்பி. மாலியவந்தன் மகன்

துர்யோதனன்

துரியோதனன் காண்க

துர்வசன், துர்வசு

யயாதிக்குத் தெய்வயானையிடத்தப் பிறந்த புத்திரன்

துர்வாசன்

அத்திரிக்கு அநசூயையிடத்துப் பிறந்த புத்திரனார். அவர் சகோதரர் சோமதத்தாத்திரேயர். அவர் மகா கோபியாதலின் அவர் கோபம் உலகத்தாருக்கு உவமானப்பிரமாணமாய் விட்டது. கோபியாயினும் அவர் தவத்திற் சிறந்த மகா ரிஷி. தாம் நீட்டிய திருமாலையைத் தோட்டி யாலேற்று. யானையினது மத்தகத்திற் சேர்த்த இந்திரனது செல்வமெல்லாம் போய்த் திருப்பாற்கடலிற் புக்கொளிக்குமாறு சபித்தவர் இவரே

துலவமிசம்

யயாதிமகனாகிய துர்வசு வமிசத்தில் சந்திரகுப்தன் வழிவந்த சூத்திரகுலம் மூன்றனுளொன்றாகிய அந்தர சூத்திரகுலம். இக்குலத்துவந்து தமிழ் நாட்டிற் குடியேறினோர் துளுவவேளாளர் எனப்படுவர்

துலாதாரன்

வாரணாசியிலிருந்த ஒரு வணிகசிரேஷ்டன். இவன் ஜாஜிலி யென்னும் இருடிக்குப் பிரமசீதையையுபதேசஞ்செய்த புருஷோத்தமன்

துவரை

கண்ணன் பசுமேய்த்து விளையாடியதோரூர்

துவஷ்டா

யாவனன்மகன். துவாதசாதித்தியருளொருவன். சுக்கிரபுத்திரனாகிய தைத்தியகுரு. பிரமமாசை புத்திரருளொருவன். இவன் குமாரன் விசுவரூபனை இந்திரன் கொன்று பிரகத்திபெற்றான்

துவஷ்ரா

சூரியன் பாரியாகிய சௌஞ்ஞாதேவி. இவள் சூரியனது உஷ்ணத்துக்காற்றாது தனக்கு ஈடாகச் சாயாதேவியை நியமித்துவிட்டத் தந்தைவீடு சென்றாள். துவஷ்டா தன்மகள் செய்தது குற்றமெனக்கண்டு அவளைச் சூரியனிடம் போகச் சொன்னான். அவள் அதற்குடன் படாது அங்கு நின்று நீங்கி ஒரு பெண்குதிரைரூபங் கொண்ட மேருச்சாரலிற் சென்றங்கிருந்தாள். சூரியன் அவனைத்தேடித் தந்தை வீடு சென்று வினாயினான். துவஷ்டா சூரியனைநோக்கி உன் உஷ்ணத்துக் காற்றாது வடவைரூபந்தாங்கி மேருச்சாரலிலுள்ளாள் என்றான். அது கேட்டுச் சூரியன் தன் சோதியிற் சிறிது பாகத்தையுதறிவிட்டு ஆண்குதிரையாகி மேருபக்கஞ் சென்று அவளைக்கூடி அஸ்வினி தேவரைப் பெற்றான். துவஷ்டா அங்கு விழுந்த சோதியைச் சக்கராயுதமும் சூலமும் வச்சிராயுதமுமாக்கி முறையே விஷ்ணு சிவன் இந்திரர்களுக்குக் கொடுத்தான்

துவாதசாந்தஸ்தலம்

மதுரை

துவாபரம்

மூன்றாவது யுகம். 364000 வருஷங்கொண்டது

துவாரகை

கிருஷ்ணன் ராஜாதானி. அஸ்தினாபுரத்துக்கும் இந்நகருக்கும் 70 காததூரம். ஆங்காங்கே அநேக துவாரங்களையுடைய கோட்டையை யுடையதாதலால் துவாரகை யென்னும் பெயர்த்தாயிற்று. துவாரம் ~ வாயில்

துவிசராசகுலோத்துங்கன்

ராஜசார்த்தூல பாண்டியனுக்குப் பின் அரசு செய்தபாண்டியன்

துவிதன்

பிரமமானச புத்திரருளொருவன்

துவிமீடன்

ஹஸ்திகன் இரண்டாம் புத்திரன். இவன் வமிசத்தர் பௌரவரெனப்படுவர்

துவிமூர்த்தனன்

தநுபுத்திரருளொருவன்

துவிவிதன்

மைந்தன் சகோதரனாகிய ஒரு வாநரன். இவன் நாகாசுரன் சினேகன். நுரகாசுரனைக் கிருஷ்ணன் கொன்ற கோபத்தால் அக்கிருஷ்ணன் நகரத்தில் இவ்வாநரன் சென்று அழிவு செய்த பொது பலராமனாற் கொல்லப்பட்டவன்

துவைதம்

ஒரு மதம். ஜீவாத்மா பரமாத்மாவென விரண்டும் வேறென்றும், ஜீவாத்மா பஞ்சபேதஞானத்தால் மோடிம்புகு மென்றும் பிரதிபாதிப்பது. இது மத்துவாசாரியாராகிய ஆநந்ததீர்த்தராலே ஸ்தாபிக்கப்பட்டது. பாண்டவர்கள் காமியகவனத்தை விட்டுப்போய் வசித்த வனம் துவைதவனமென்று பெயர் பெறும்

துவைபாயனம்

இது குருக்ஷேத்திரத்துக்குச்சமீபத்திலுள்ள ஒருதடாகம். துரியோதனன் தன்சேனைகள் மாண்டொழிந்தபின்னர் இத்தடாகத்தில் ஜலஸ்தம்பனம் பண்ணிக் கொண்டு மறைந்திருந்தான்

துஷிதர்

தேவர்களுள் ஒரு பாலார். துஷிதர் என்பதற்குச் சந்தோஷமுடையர் என்பது பொருள்

துஷ்டிமந்தன்

கம்சன் தம்பி

துஷ்யந்தன்

ஈளினனுக்கு ரதந்தையிரடத்துப் பிறந்த புத்திரன். சகுந்தலை கணவன். பரதன் தந்தை