அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
திக்குபாலகர்

அஷ்டதிக்குபாலகர்

திதி

கசியபன் மூத்தபாரி. தக்ஷன்மகள்.இவள் வயிற்றிற் பிறந்தோர் தைத்தியர்

திதிக்ஷன்

மகாமநுவினது இரண்டாம் புத்திரன்

தித்தன்

சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியினது தந்தை. இவன் உறையூரிலிருந்தரசு புரிந்தவன், அகநானூறு

திபோதரசன்

திவோதாசன் காண்க

திமித்துவஜன்

தசரதனைத் துணைக்கொண்டு இந்திரனாற் கொல்லப்பட்ட அசுரன். அந்த யுத்தத்திலே தசரதன் மூர்ச்சையடைந்த போது கைகேசி அவன் மூர்ச்சையைத் தீர்த்து அவனை ரக்ஷித்தாள். அது கண்டு தசரதன்மகிழ்ந்து அவளை நோக்கி யாதுவேண்டுமென்ன, அவள் நான் இனிமேல் எக்காலத்திலாயினும் இரண்டு வரம் வேண்டுவேன். அப்போது அவைகளை மறாத தருதல் வேண்டுமென்ன, அங்ஙனமே யாகுகவென்று அவளுக்கு வாக்குத்தசரதஞ் செய்தான். அதனை வாய்ப்பாகக் கொண்டே கைகேயி இராமபட்டாபிஷேக்காலத்திலே அவனைக் காடு செல்லவும் தன்மகன் பரதனை அரசுகொள்ளவும், இருவரங்கள் தசரதன்பாற் பெற்றனள்

தியுதிமந்தன்

சுவாயம்புவமநு புத்திரருள் ஒருவன். கிரௌஞ்சத்துவீபத்தை மனு இவனுக்குக் கொடுத்தான்

தியுமத்சேனன்

சாளுவராஜன். சத்தியவந்தனுக்குத் தந்தை. சாவித்திரிக்கு மாமன்

தியுமந்தன்

திவோதாசன்

திரசதஸ்யன்

புருகுத்சன்மகன். அநரண்ணியன் தந்தை. வசுதன் எனவும் படுவன்

திரதாக்கினி

அபமிமானாக்pகனி மைந்தராகிய பாவகன் பவமானன் சுகி என்னு மூன்றக்கினி. ஆகவனீயம், காருகபத்தியம் தக்கிணிக்கினி எனக் கிருகஸ்தன் ஆராதனாக்கினிகளுமாம்

திரயாரணன்

சூரியரணியன்

திரயாருணி

ரிக்ஷயன் மகன்

திரவிடம்

ஆந்திர கருநாடக தேசங்களுக்குத் தெற்கேயுள்ள தேசம். அது தமிழர் நாடென்பது

திராக்ஷாராமம்

இது மகாராஷ்டிரகர் நாடாந்தர தேசங்களுக்கு மத்தியிலுள்ள பர்வதத்தின் கணுள்ள சிவஸ்தலம்

திராவிடம்

தமிழ்,. தமிழ் நாடு. பஞ்ச திராவிடம். அவை திராவிட கர்னாட கூர்ச்சர மகாராஷ்டிர தைலங்கமென்பன. இவ்வைந்து நாட்டுப் பிராமணரும் திராவிடரெனப்படுவர். தைலங்கம் தரிலிங்கம்மெனவும் படும்

திராவிடாசாரியர்

வடமொழியிலே வேதாந்தசூத்திரத்திற்கு ஒருபாஷியஞ் செய்தவர். ராமாநுஜாசாரியர் செய்த பாஷியத்துள் இவர் மதமெடுத்துக் கூறப்படுதலின் இவர் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னர் விளங்கினவராதல் வேண்டும். தமிழ்நாட்டாராதலின் இப்பெயர் பெற்றார்

திரிகர்த்தம்

ஆரியாவர்த்தத்துக்கு வாயுதிக்கிலுள்ள தேசம்

திரிசங்கு

அரிச்சந்திரன் தந்தை. இத்திரிசங்கு தான் தேகத்தோடு சுவர்க்கம்புகவேண்டித் தனது குலகுருவாகிய வசிஷ்டரையடைந்து பிரார்த்தித்தான். அது கூடாதென்றவர் மறுக்க, அவர் புத்திரரிடஞ் சென்றான். அவர்கள் குருவாக்கைத் தடுத்தனையென்று நீசனாமாறு சபிக்க. அவன் விசுவாமித்திரரிடஞ் சென்றான். அவர் அவனுக்காக ஒரந்தரசுவர்க்கத்தையுண்டாக்கி அவனை அங்கே வைத்தார்

திரிசடை

விபீஷணன் புத்திரி. இவள் சீதாதேவி ராவணன் சிறையிலிருந்தபோது அவருக்கு நற்றுணையாயிருந்தவள்

திரிதன்

பிரமமானச புத்திரர்களுளொருவன்

திரிதன்னுவன்

சுமனன் மகன். சூரியாரண்ணியன் தந்தை

திரிதிவை

பாரிபததிரபர்வதத்திலுள்ள நதி

திரிபுரசுந்தரி

திருநாரையூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். திருவான்மியூலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

திரிபுரசுந்தரியம்மை

திருநல்லூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

திரிபுராசுரர்

தாரகாசுரன் புத்திரராகிய கமலாக்ஷன், வித்தியுன்மாலி, தாரகாக்ஷன் என்னும் முவரும் இப்பெயர் பெறுவர். இவர்கள் சிவபெருமானை நோக்கித் தவங்கிடந்து இரும்பு வெள்ளி பொன் என்னும் மூன்று லோகத்தாலும் அமைந்த கோட்டைகளையுடைய மூன்று ஜங்கமபுரங்களைப் பெற்று அப்பட்டணங்களோடு அந்தரத்தெழுந்து தமக்கிஷ்டமாகிய விடங்களுக்குச் சென்று ஆங்காங்கு முள்ள பட்டணங்கள் மீதும். ஊர்கள் மீதும் உட்கார்ந்து அவைகளை நாசஞ் செய்து வந்தார்கள். அதுகண்ட விஷ்ணு நாரதரை ஏவித் திரிபுராசரருக்குப் பாஷண்டமதத்தை உபதேசிடத்தச் சிவன்மீது அவர் வைத்த பத்திக்கு ஊறு செய்வித்தார். அதனால் சிவபொருமான் இவர்களை அழிக்கநினைந்து யுத்தஞ் செய்து மூவரையுங் கொன்று தமது கணங்களோடு சேர்த்தருளினர்

திரிபுருஷ்டன்

வசுதேவனுக்குத் திருத்தேவியிடத்துப் பிறந்த புத்திரன்

திரிபுவனம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திரிமூர்த்திகள்

சுத்தப்பிரமம் சிருஷ்டி ஸ்திதி சங்காரமென்னும் முத்தொழிற்காகச் சகளீகரித்த பிரமா விஷ்ணு உருத்திரன் என்னும் மூன்று திருமேனிகள்

திரியம்பகன்

உருத்திரன், முக்கண்ணனென்பது பொருள்

திரியம்பகம்

வீரபத்திரர்கன் யாகத்தை அழிக்க எடுத்த வில்லு. அது பின்னர்ச் சீதையோடு நிலத்திற்றோன்றிக் கிடந்து அவர் கல்யாணகாலத்தில் ராமரால் முறிக்கப்பட்டது

திருஅகத்தியான்பள்ளி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். வேதாரணியத்துக்குத் தெற்கேயுள்ளது. சுவாமி பெயர் அகஸ்தியேசுரர். அம்மையார் பெயர் மையார்தடங்கண்ணி. சம்பந்தமூர்த்திநாயனார் திருவாய்மலர்ந்தருளிய தேவாரம் பெற்றது

திருஅச்சிறுபாக்கம்

திருக்கழுக்குன்றத்துக்குத் தென்மேற்றிசையிலேயுள்ள சிவஸ்தலம். சுவாமி பெயர் பாக்கரரேசர். அம்மையார் ஆதிசுந்தர மின்னமையார். திருபுராசுரரையழிக்கும் பொருட்டெழுந்த சிவபிரானுக்குத் தேவர்கள் தேராகிகத் தம் உதவியின்றித் திரிபுரஜயங் கூடாதென்று நின்ற அத்தேவர் கருவத்தைப் பங்கஞ்செய்யுமாறு தேரச்சைச் சிவபிரான் திருவடிவைத் தொடித்ததலமாதலின் அச்சிறுபாக்கம் எனப்பட்டது. சம்பந்தர் தேவாரம் பெற்றது

திருஅச்சோபுரம்

நடுநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருஅண்ணாமலை

பிரம விஷ்ணுக்களுக்குச் சோதிப் பிழம்பாக நின்று சிவன்தரிசனங் கொடுத்த தலம் இதுவே. இங்குள்ளது வேயுலிங்கம். இது நடுநாட்டிலுள்ள அதிப் பிரபலசிவஸ்தலம். மாணிக்கவாசகர் திருவெம்பாவையும் திருவம்மானையும் பாடியது இத்தலத்திலேயே. இது சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பட்டது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர்க்கு ஜன்மஸ்தானமுமிதுவே

திருஅன்னியூர்

சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி ஆபத்சகாயேசுரர். அம்மை பெரியநாயகி. நாவுக்கரசராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது

திருஅன்பில்

காவிரியின் வடகரையிலேயுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி வடிவழகியநம்பி. சத்தி சௌந்தரியவல்லி. திருமங்கைஆழ்வார் மங்களாசாசனம்

திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிபிரமபுரநாதேச்சரர். அம்மையார் பவளவண்ணப்பூங்குழல் நாயகி. இவ்வாலயம் கோச்செங்கட்சோழராற் செய்விக்கப்பட்ட திருப்பணி. சம்பந்தராற்பாடப்பட்டது. இது சோமாசிமாறநாயனார் திருவவதாரஞ் செய்தருளியதலம்

திருஅம்பர்மாகாளம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். மாகாளர் காவலிலிருந்த இந்திராணியை அஜமுகியிழுத்துக் கரங்கொய்யப்பட்ட ஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருஅம்பிலாலந்துறை

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சத்தியவாகேசுரர். அம்மை சௌந்தரநாயகி. நாவுக்கரசராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது

திருஅரசிலி

திரு அச்சிறுபாக்கத்திற்குத் தெற்கேயுள்ள சிவஸ்தலம். சுவாமி அரசிலிநாதர். அம்மை பெரியநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருஅரதைப் பெரும்பாழில்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பாதாளேச்சுரர். அம்மை அலங்காரநாயகி. இரணியாக்ஷனைக் கொன்றும் மத்தங்கொண்ட வராகத்தினது கொம்பைச் சிவன் ஒடித்துத் தமது மார்பிலணிந்து கொண்ட ஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருஅரிசிற்கரைப்புத்தூர்

புகழ்த்தணைநாயனாரவதரித்த சிவஸ்தலம். அரிசில் நதிதீரத்திலுள்ளது. மூவராலும் பாடப்பட்டது

திருஅரிமேயவிண்ணகரம்

காவிரியின் வடகரையின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பெயர் குடமாடியகூத்தன். சத்தி விழியமுதவல்லி. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் பெற்றது

திருஅழுந்தூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி வேதபுரேசுரர். அம்மை சௌந்தராம்பிகை. சம்பந்தராற் பாடப்பட்டது. சோழநாட்டிலே காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பெயர் ஆமருவியப்பன். சத்தி செங்கமலவல்லி. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்

திருஅவணிடவணல்லூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி காட்சிநாயகேசுரர். அம்மை சவுந்தரநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருஆய்ப்பாடி

காவிரியின் வடகரையிலுள்ள சிவஸ்தலம். சுவாமி பாலுகந்தார். அம்மை பெரிய நாயகி. நாவுக்கரசராலும் ஐயடிகள் காடவர்கோனாலும் பாடப்பட்டது

திருஆலம்பொழில்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி ஆத்மநாதேசுரர். அம்மை ஞானாம்பிகை. நாவுக்கரசராற் பாடப்பட்டது

திருஆவூர்ப்பசுபதீச்சுரம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பசுபதீச்சுரர். அம்மை மங்களநாயகி. சம்பந்தராற்பாடப்பட்டது

திருஇடும்பாவனம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சற்குணநாதேச்சுரர். அம்மை மங்களநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருஇடைச்சுரம்

திருக்கச்சூராலக் கோயிலுக்குத் தெற்கே கழுக்குன்றுக்கு வடக்கேயுள்ள சிவஸ்தலம். சுவாமி இடைச்சுரநாதர். அம்மை இமயமடக்கொடி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருஇந்தளூர்

காவிரியின் வடகரையின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி சுகந்தவனநாதர். சக்தி புண்டரீகவல்லி. குலசேகராழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பாடப்பெற்றது

திருஇராதாபுரம்

மறந்து மாலைக்காலங்காறும் வேட்டையாடித் தனது நகரஞ்சென்று சுவாமி தரிசனஞ் செய்யவியலாது காட்டிற்றங்கி அதுவேகவற்சியாக விருந்த வரகுண பாண்டியனுக்குச் சிவன் தரிசனமருளிய தலம். அது பாண்டிநாட்டிலே தென்பாலிலுள்ளது. சுவாமி வரகுணபாண்டி யேச்சுரர். அம்மை நித்தியகல்யாணி

திருஇராமசநல்லூர்

பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி இராமநாதேச்சரர். அம்மை குணக்குன்றுநாயகி. இத்தலம் தாமிரவருணிநதி தீரத்திலுள்ளது

திருஇராமனதீச்சரம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி இராமநாதேச்சுரர். அம்மை கருவார்குழலி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருஇராமேச்சரம்

பாண்டிநாட்டிலே சேதுதீர்த்தத்தை யடுத்துள்ள சிவஸ்தலம். ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்து பூசித்த லிங்க மூர்த்தியையுடைமையின் இத்தலம் இராமேச்சரம் எனப்படுவதாயிற்று. சுவாமி இராமநாதர், அம்மை பர்வதவர்த்தனி. இதுமிக்க பிரசித்திபெற்ற சிவஸ்தலங்களுளொன்று. இமயமலைச் சாரலிலுள்ளாரும் வந்து தரிசிக்கும் பெருமைவாய்ந்தது. பக்தர்கள் இவ்விலிங்கத்துக்குக் கங்காதீர்த்தந் தினந்தினதோறும் காவடியிற் கொணர்ந்து அபிஷேகம் பண்ணுவார்கள். இத்தலம் வான்மீகியாலும் ராமாயணத்திலே எடுத்துக் கூறப்பட்டுள்ளது

திருஇரும்பூளை

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது ஆலங்குடியெனவும் படும். சுவாமி காசியாரணியேசர். அம்மை ஏலவார்குழலி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருஇரும்பைமாகாளம்

தொண்டைநாட்டிலே திருஅரசிலிக்குத் தென்கீழ்த்திசையிலேயுள்ள சிவஸ்தலம். மாகாளர்பூசித்த தலமாதலின் இப்பெயர்த்தாயிற்று. சுவாமி மாகாளேச்சுரர். அம்மை குயின்மொழி

திருஇலம்பையங்கோட்டூர்

காஞ்சீபுரத்துக்கு வடகீழ்த்திசையிலுள்ள சிவஸ்தலம். சுவாமி சந்திரசேகரேச்சுரர். அம்மை கோடேந்துமலையன்மை. சம்பந்தராற் பாடப்பட்டது

திருஇளையான்குடி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இளையான் குடிமாறநாயனார் அவதரித்தருள் பெற்ற தலம்

திருஈய்ங்கோய்மலை

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மரகதாசலேச்சரர். அம்மைமரகதவல்லி. மாணிக்கவாசகரால் ஈங்கோய்மலையி லெழிலது காட்டியும் என்றெடுத்துக் கூறப்பட்டதலமிதுவே. சம்பந்தருமிதனைப்பாடினர். அகஸ்தியர் ஈவடிவங்கொண்டு சென்று பூசித்தமையினிப் பெயர்த்தாயிறறு

திருஉத்தரகோசமங்கை

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். அது சிவன் மாணிக்கவாசகருக்குத் தரிசனங்கொடுத்து நீத்தல் விண்ணப்பம் பெற்றருளியதலம்

திருஉரோமேச்சுரம்

பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். ஊரோமரிஷி பூசித்தருள் பெற்ற தலமாதலின் அஃதிப்பெர்பெறவதாயிற்று

திருஎயினனூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். ஏனாதிநாயனார் பிறந்தருள் பெற்றதலமிதுவே

திருஎருக்கத்தம்புலியூர்

நடு நாட்டிலே மணிமுத்தாநதிதீரத்திலுள்ள ஒரு சிவஸ்தலம். நாகேந்திரபட்டணமெனவும் படும். சம்பந்தராற் பாடப்பட்டது. சுவாமி நீலகண்டநாயகர், அம்மை நீலமலர்க்கண்ணி

திருஎறும்பியூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். அஃது எறும்பு பூசித்தருள் பெற்றதலமாதலின் இப்பெயர்த்தாயிற்று. நாவுக்கரசராற் பாடப்பட்டது. சுவாமி எறும்பீசர், அம்மை நறுங்குழல்நாயகி

திருஏகம்பம்

சமயாசாரியா மூவராலும் பாடப்பட்ட காஞ்சீபுரத்துச் சிவஸ்தலம். மிக்க பிரபலமுடையது. சோழர்களுக்கு ராஜதானியாகவுமிருந்தது. சுவாமி ஏகாமபரநாதர், அம்மை காமாக்ஷி. உமாதேவியார் மண்ணினாற் சிவலிங்கம் ஸ்தாபித்துப் பூசிக்க, அதனைப் பரீக்ஷிக்குமாறு சிவன் கம்பாநதியைப் பெருகச் செய்து அவ்விலிங்கத்தை மூழ்குவிக்க, தேவியார் மார்போடதனை யெடுத்தணைக்க, அவர் முலைத்தழும்பு பதிந்தபடியே சிவலிங்கப்பெருமானாகிய அற்புதநிகழ்ந்த ஸ்தலம். அங்குள்ள மாமரம் வேதங்களின் வடிவம்

திருஓமாம்புலியூர்

இது காவிரியின வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். புலியினாலே தொடரப்பட்ட ஒரு வேடன் இத்தலத்து வில்வமரத்திலேறியிருந்து அஸ்தமயனகாலமுதல் விடியுங்காறும் அம்மரத்துப் பத்திரங்களைப் பறித்தொவ்வொன்றாக அதன் கீழிருக்குஞ் சிவலிங்கப் பெருமானுக்கர்ச்சித்து விடியற்காலத்திலே அருள்பெற்று அப்புலியோடு நற்கதிபெற்றமையிடன் இப்பெயர்த்தாயிற்று. சுவாமி துயர்தீர்த்த செல்வர், அம்மை பூங்கொடியம்பிகை

திருக்கங்கைகொண்டான்

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்

திருக்கச்சி அனேகதங்காவதம்

காஞ்சீபுரத்திலே திருவேகம்பதைச் சார்ந்த சிவஸ்தலம்

திருக்கச்சிஅத்திகிரி

இது தொண்டைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி வரதராஜப்பெருமாள். சக்தி பெருந்தேவியார்

திருக்கச்சிநெறிக் காரைக்காடு

இது தொண்டைநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்

திருக்கச்சூராலக்கோயில்

திருப்போரூருக்கு மேற்றிசையிலுள்ள சிவஸ்தலம். சுந்தரமூர்த்திக்குத் திருவமுது அளித்ததலம்

திருக்கஞ்சனூர்

இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். மணக்கோலஞ்செய்து மணப்பந்தரின் கீழ் வந்திருந்த கன்னிகையினது கூந்தலை மாவிரதிவேடங் கொண்டு சென்று சிவபெருமான்கேட்க அதனை அக்கன்னியையின் தந்தையாகிய மானக்கஞ்சாற நாயனார் மறாது கொய்து கொடுத்த தஸ்தலமிதுவே. புழுக்கக் காய்ச்சிய இருப்புப்படி யேறிச் சிவபரஞ்சாதித்த ஹரதத்தாசாரியர் திருவவதாரஞ்செய்த ஸ்தலமுமிதுவே. இங்குள்ள சிவமூர்த்தி அக்கினீச்சுரர், அம்மை கற்பகநாயகி

திருக்கடம்பந்துறை

காவிரியின் கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கடம்பவனநாதர், அம்மை முற்றிலா முலையம்மை. நாவுக்கரசராற் பாடப்பட்டது

திருக்கடம்பூர்க்கரகோயில்

இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி அமிர்தகடேசுவரர், அம்மை சோதிமின்னம்மை. இது நாவுக்கரசரும் சம்பந்தரும் பாடியதலம்

திருக்கடவூர்

காவிரியின் தென்பாலிலே சோழநாட்டிலே கீழ்கடலோரத்திலேயுள்ள சிவஸ்தலம். முவராலும் பாடப்பட்டது. அது யமசம்மார மூர்த்தியாய்ச் சிவனெழுந்தருளியிருக்கும் ஸ்தலம். சுவாமி அமிர்தகடேசுரர், அம்மை அபிராமித்தாய். இஃது அட்டவீரட்டத்துள்ளுமொன்று. யமசங்காரம் காசியில் நடந்தது. குங்கிலியக்கலய நாயனார்க்கும் அபிராமிப்பட்டர்க்கும் ஜம்மஸ்தலமுமிதுவே

திருக்கடவூர்மயானம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இதுவும் மூவராலும் பாடப்பட்டது

திருக்கடிகை

தொண்டைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். இது சோழங்கிபுரமென வழங்கப்படுவது. சுவாமி நரசிங்கமூர்த்தி. சத்தி அமிர்தவல்லி. பேயாழ்வார்,திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் என்னும் மூவராலும் பாடப்பட்டது

திருக்கடிக்குளம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கற்பகேச்சுரர். அம்மை சௌந்தரநாயகி. இது கற்பகவிநாயகர் சிவன்பால் மாங்கனிபெற்ற ஸ்தலம். சம்பந்தர் பாடல் கொண்டது

திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சொர்ணபுரேச்சுரர். அம்மை சிவாம்பிகை. நாவுக்கரசர் பாடல்கொண்டது

திருக்கடைமுடி

இது சோழநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தர் பாடல் கொண்டது

திருக்கணமங்கலம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருக்கண்டியூர்

பிரமனதுசிரங்கொய்த சிவஸ்தலம். காவிரியின்தென்கரையிலுள்ளது. சுவாமி வீரட்டானேச்சுரர். அம்மை மங்கைநாயகி. சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பட்டது. காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி அருஞ்சாபந்தீர்த்த பெருமாள். சத்தி கமலமடந்தை

திருக்கண்ணங்குடி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருக்கண்ணபுரம்

காவியின் தென்கரையிலுள்ள விஷ்ணுஸ்தலம். காளமேகப்புலவர். இங்குள்ள விஷ்ணுமூர்த்தியைப் பாடீராயின் கபாடந்திறவேனென்றூடி நின்ற காமக்கிழத்தியினது ஊடலைத் தீர்ப்பான்கருதி, கண்ணபுரமாலே கடவுளிலும் நீயதிகம் என்று முதலடியைக்கூறி அவளை மகிழ்வித்துக் கதவு திறப்பித்துபின்னர், உன்னிலுமோ நானதிகமொன்றுகேள், முன்னமே ~ உன்பிறப்போபத்தா முயர்சிவனுக் கொன்றுமில்லை, என்பிறப்பெண்ணப்பபோகாதே என்று மற்றைய அடிகளையும் கூறி நிந்தாஸ்ததி செய்யப்பெற்றத மித்தலமே

திருக்கண்ணப்பதேவர் மறம்

நக்கீரர் பாடிய பிரபந்தம். கல்லாடரும் இப்பெயரால் ஒரு பிரபந்தம் பாடினர்

திருக்கண்ணமங்கை

காவிரியின் தென்கரையிலுள்ள விஷ்ணுஸ்தலம். சுவாமி சௌந்தரராஜப்பெருமாள், சத்தி கண்ணபுரநாயகி. குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மூவராலும் பாடப்பட்டது

திருக்கண்ணார்கோவில்

இது சோழநாட்டிலேயுள்ள ஒரு சிவஸ்தலம். இது சிந்துபூந்துறை யெனவும் படும். சுவாமி கைலாயநாதேச்சுரர். அம்மை சிவகாமி. இஃது அகஸ்தியருக்குச் சிவன் திருமணக்கோலங் காட்டியருளிய தலம்

திருக்கன்றாப்பூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். பசுக்கன்றுத் தறியிலே வெளிப்பட்டு ஒரு பெண்ணுக்குச் சிவன் தரிசனங் கொடுத்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. நாவுக்கரசராற் பாடப்பட்டது

திருக்கரம்பனூர்

காவிரியின் வடகரையின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி புருஷோத்தமன். சக்தி பூர்வாதேவி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருக்கரவீரம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம் சுவாமி கரவீரேச்சுரர், அம்மை பரத்தியடிமின்னாள். சம்பந்தராற் பாடப்பட்டது

திருக்கரிவலம்வந்தநல்லூர்

இது பாண்டி நாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பால்வண்ணநாதர், அம்மை ஒப்பிலம்பிகை. குலசேகரபாண்டியன் வேட்டையாடும் போது எதிர்ப்பட்ட ஒரு யானையைத் துரத்த, அஃதோடிப்போய் இம்மூர்த்தியிருந்த புதரை வலம்போய்ச் சிவகணமாகப் பெற்றமையால் அத்தலம் இப்பெயர்பெற்றது

திருக்கருகாவூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி முல்லைவனநாதர், அம்மை கரும்பனையாள், சம்பந்தராற் பாடப்பட்டது

திருக்கருக்குடி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது வலங்கைமான் எனவும் படும். சுவாமி சற்குணலிங்கேச்சுரர், அம்மை சர்வாலங்கிருதமின்னம்மை. சம்பந்தராற் பாடப்பட்டது

திருக்கருப்பறியலூர்

இது ஞாயிறு என வழங்குஞ் சிவஸ்தலம். சோழநாட்டிலே காவிரியின் வடகரையிலுள்ளது. சுவாமி குற்றம் பொறுத்தநாதர், அம்மை கோல்வளைநாயகி. பூதவடிவுகொண்டு நின்ற தம்மையுணராமற் குலிசத்தாற்றாக்க வெத்தனித்த இந்திரன் மீது நாடகமாத்திரையாகக் காட்டிய கோபாக்கினியைத் தணித்துப் பிழை பொறுத்துஅவனுக்குச் சிவபிரான் அருள்புரிந்த தலமாதலின் இங்கே கோயில் கொண்டிருக்கும் மூர்த்தி கோபம் பொறுத்தநாதர் எனப்படுவர். சுந்தரர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது. துணித்த கோபாக்கினியை மேலைச்சமுத்திரத்திற் சிவன் வீச அது ஜலந்தராசுரனாயிற்று

திருக்கருவிலி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிசற்குணேச்சுரர், அம்மை சர்வாங்கநாயகி. நாவுக்கரசராற் பாடப்பட்டது

திருக்கருவூர்த்திருவாநிலை

கொங்குநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். குருவூரெனவும்படும். பிரமா சிருஷ்டியின்றியிருந்த காலத்திற் காமதேனு சிவனை வழிபட்டுச் சிருஷ்டி அதிகாரம் பெற்றதலமாதலின் ஆநிலையெனப்பட்டது. சிவயோகமும் அணிமாதிசித்திகளும் வல்லவராய், மழை பொழிவித்தல், நினைத்தபோது வெயிலைநீக்கல், அரங்கநாதரை அழைத்தது முதலிய அற்புதங்களைச் செய்து விளங்கியவரும். திருவிசைப்பாப்பாடியவருமாகிய கருவூர்த்தேவர்க்கு அவதாரஸ்தலமுமிதுவே. சுவாமி பசுபதிச்சுரர். அம்மை கிருபாநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது. இத்தலசம்பந்தமான சரித்திரங்களுக்கு அளவில்லை

திருக்கற்குடிமலை

காவிரியின் தென்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம். சுவாமி முத்தீச்சுரர், அம்மை அஞ்சனாட்சி. மூவராலும் பாடப்பட்டது

திருக்கலிக்காமூர்

சோழநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருக்கலையநல்லூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுந்தராற் பாடப்பட்டது

திருக்களக்காடு

பாண்டி நாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சகலபுவனேச்சுரர், அம்மைஉமாதேவி

திருக்களர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருக்கள்ளில்

திருவொற்றியூருக்கு வடமேற்கிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருக்கள்வனூர்

தொண்டைநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி ஆதிவராகன், சத்தி அபய நாயகி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருக்கழிப்பாலை

சோழ நாட்டிலே காவிரியின் வடபாலிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுமயாசாரியர் மூவராலும் பாடப்பட்டது

திருக்கழுக்குன்றம்

இது திருவிடைச்சுரத்துக்குத் தெற்கேயுள்ள சிவஸ்தலம். சிவபெருமான் றிருவாக்கிற்கு எதிர்வாக்குரைத்த துறவிகளிருவரும் கழுகுரூபம் பெற்று அங்கே வழிபட்டுக் கொண்டின்றுமிருக்கப் பெற்ற ஸ்தலம். மாணிக்கவாசகருக்குக் குரு வடிவுகாட்டியதலமிதுவே. காட்டினாய் கழுக்குன்றிலே எனத் திருவாசகத்திலே வருதல் காண்க. சுவாமி வேதகிரீச்சுரர், அம்மை பெண்ணினல்லாள். சமயாசாரியர் மூவராலும் தேவாரஞ் சூட்டப்பட்டது

திருக்கழுமலமும்மணிக்கோவை

பட்டினத்தடிகள் பாடிய பிரபந்தங்களுளொன்று

திருக்கவித்தலம்

இது காவிரியின் வடகரையின்கணுள்ள ஒருவிஷ்ணு ஸ்தலம். சுவாமி கஜேந்திரவரதர். சுத்திரமாமணி வல்லி. திருமழிசையாழ்வாராற் பாடப்பட்டது

திருக்காசிபேச்சுரம்

பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். இது அம்பாசமுத்திர மெனவும்படும். சுவாமிபெயர் எரித்தாள்வுடையார், அம்மைசிவகாமி. சிவசர்மனது பொருளைக் கவர்ந்து கொண்டு பொய்ச்சத்தியஞ் செய்யப்புகந்த அர்ச்சனை எரித்துச் சிவசர்மாவை ஆட்கொண்டமையால் இம்மூர்த்தி எரித்தாள்வுடையார்என்னும் பெயர் பெற்றார்

திருக்காட்கரை

மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். நம்மாழ்வாராற் பாடப்பட்டது

திருக்காட்டுப்பள்ளி

சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையின்கணுள்ள சிவஸ்தலம். சுவாமி ஆரணியசுந்தரேச்சரர், அம்மை அகிலாண்டநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருக்காந்தீச்சுரம்

பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். இது ஆழ்வார் திருநகரி எனவும்படும்

திருக்கானப்பேர்

பாண்டி நாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கானக்காளையீச்சுரர், அம்மை மகமாயி. சுந்தர சம்பந்தர்களாற் பாடப்பட்டது

திருக்கானாட்டுமுள்ளூர்

இது காவிரியின் வடகரையிலுள்ள வொரு சிவஸ்தலம். சுவாமி பதஞ்சலிநாதேச்சுரர். அம்மை திரிபுரசுந்தரி. சுந்தரராற் பாடப்பட்டது

திருக்கானூர்

காவிரியின் வடகரையிலுள்ளவொரு சிவஸ்தலம். சுவாமி செம்மேனிநாயகர், அம்மை சிவயோகநாயகி. திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப்பட்டது

திருக்காம்பிலி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருக்காரகம்

தொண்டைநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி கருணாகரன். சுத்தி பத்மாமணி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருக்காராயில்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம், இது சப்த விடங்கஸ்தலங்களுளொன்று. சம்பந்தராற்பாடப்பட்டது

திருக்கார்வானம்

தொண்டை நாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி நவநீதசோரன் சத்திகமலவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருக்காளத்தி

தொண்டைநாட்டுச் சிவஸ்தலங்களுளொன்று. இது சிலந்தியும் பாம்பும் யானையும் பூசித்து முத்திபெற்ற தலமாதலின் காளத்தியெனப்படும். இந்த ஸ்தலத்திலேயே கண்ணப்பர் முதிர்ந்த திடபத்தியினால ஆறு நாளுக்குள் முத்திபெற்றனர்

திருக்காழிச்சிராம விண்ணகரம்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி ஸ்ரீநிவாசன், சத்தி உலகநாயகி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருக்கீழ்வேளூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி அடியலிங்கேசுவரர். அம்மை வனமுலைநாயகி. திருநாவுக்கரசர் சம்பந்த ரென்னுமிருவராலும் பாடப்பட்டது

திருக்குடந்தாபுரி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி ஆராவமுது. சத்தி கோமளவல்லி. பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வாரென்னுமிவர்களாற் பாடப்பட்டது

திருக்குடந்தைக்காரோணம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சோமநாதர். அம்மை தேனார்மொழி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருக்குடந்தைக்கீழ்க் கோட்டம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மடந்தைபாகர். அம்மை பெரியநாயகி. திருநாவுக்கரசராற் பாடப்பட்டது. குடந்தை, கும்பகோணம்

திருக்குடமூக்கு

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். கும்பகோணமெனவும் பெயர்பெறும். இங்கேயுள்ள தீர்த்தம் மாமகதீர்த்த மெனப்படும். ஒரு முனிவர் தமது தாயினது அஸ்தியை எடுத்துக் கொண்டு தீர்த்தங்கடோறுஞ் சென்று நீராடிச் சுவர்ண புஷ்கரிணியென்னும் மாகமதீர்த்தத்திலும் ஆடிக்கரையேறி அவ்வென்புப்பொதியை அவிழ்த்துப்பார்க்க அது பொற்றாமரைப் பூவாயிற்று. சுவாமி கும்பேச்சுரர், அம்மை மங்களநாயகி. மூவராலும் பாடப்பட்டது

திருக்குடவாயில்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கோணேசர். அம்மை பெரியநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருக்குரக்குக்கா

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கொந்தளேசர். அம்மை கொந்தளநாயகி. திருநாவுக்கரசராற் பாடப்பட்டது. அனுமார் பூசித்தது

திருக்குரங்கணின்முட்டம்

தொண்டை நாட்டிலே வாலி பூசித்த சிவஸ்தலம். இது திருமாகறலுக்கு வடக்கேயுள்ளது. சுவாமி வாலீச்சுரர். அம்மை இறையார்வளையம்மை. சம்பந்தராற் பாடப்பட்டது

திருக்குருகாவூர்

சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையின் கணுள்ள ஒரு சிவஸ்தலம. சுவாமி திருமேனிவெள்ளடையீச்சரர், அம்மை காவியங்கண்ணி. சுந்தரர் அப்பர் என்னுமிருவராலும் பாடப்பட்டது

திருக்குருகூர்

பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி ஆதிநாதப் பெருமாள். சத்தி ஆதிநாதவல்லி. நம்மாழ்வாராற் பாடப்பட்டது. இதுவே பிரயோகவிவேகஞ்செய்த சுப்பிரமணிய தீடிதர் பிறந்த ஸ்தலம்

திருக்குறள்

தமிழ்ப்பாஷைக்குச் சிரோரத்தினமாக விளங்கும் இத்திவ்வியநூல் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாராற் செய்யப்பட்டது. அறம் பொருள் இன்பம் என்னும் முப்பாற் பொருளையும் எஞ்சாமல் எப்பாற்சமயத்தோர்க்கும் ஒப்பக்கூறும் அற்புதநூல். இதற்கிணையான நூல் உலகத்தில் மற்றெப்பாஷையிலும் இல்லை. இதற்குரை செய்தவர் தருமர் முதற் காளிங்கரீறாகிய பதின்மர். அவருட் பரிமேலழகருரையே வள்ளுவர் கருத்தை உள்ளவாறுரைப்பது. திருக்குறள் நூற்றுமுப்பத்துமூன்று அதிகாரமும் ஆயிரத்து முந்நூற்றுமுப்பது திருக்குறளுமுடையது. சங்கப்புலவர்களாலே அந்நூலைப் பாராட்டிச் செய்யப்பட்ட பாமாலை திருவள்ளுவமாலை யெனப்படும். அதற்குரை செய்தவர் திருத்தணிகைச் சரவணப்பெருமாளையர். திருவள்ளுவமாலையுரையோடு பரிமேலழகர் உரையை முதன்முதல் அச்சிட்டு வெளியிட்டவர் செந்தமிழ்க்கடலாகிய நல்லூர் ஆறுமுகநாவலர் திருவள்ளுவர் காண்க

திருக்குறிப்புத்தொண்டர்

காஞ்சீபுரத்தில் ஏகாலியர்குலத்திலே அவதரித்த ஒரு சிவபக்தர். இவர் சிவபெருமான் ஒரு முனிவரைப்போல வேடங்கொண்டு சென்று ஒலித்துத் தரும்படி தம்மிடத்துக்கொடுத்த வஸ்திரத்தை மழையினால் ஒலித்துக் கொடுப்பதற்குக் கூடாதிருந்த காரணம்பற்றி, வாக்குத்தவறியதே, குளிரினாற் சிவபக்தர் வருந்துவாரே யெறெண்ணித் தமது தலையைக்கல்லின்மீது மோதப்புகந்து சிவனுடைய திருக்கரத்தாலே தடுத்தாளப் பெற்ற பெரும்பேறு பெற்றவர்

திருக்குறுக்கை

மன்மதனை யெரித்த சிவஸ்தலம். சுவாமி வீரட்டான ஈச்சரர், அம்மைஞானாம்பிகை திருநாவுக்கரசராற் பாடப்பட்டது

திருக்குறுங்குடி

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். பாண்டிநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

திருக்குற்றாலம்

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். அஃது அகஸ்தியமுனிவர் பொதிகைக்கு எழுந்தருளும் பொழுது அதனை விஷ்ணு தலமென்றுணராது அதன் வழியே செல்ல அங்கிருந்த வைஷ்ணவர்கள் அகஸ்தியர் தரித்திருந்த சிவசின்னங்களைக் கண்டு பொறாராகி வெளியேதுரத்த, அகஸ்தியர் புறத்தேபோய் அவ்வைஷ்ணவர்களைப் போல வடிவு தாங்கி மீண்டுசென்று அவர்களனுமதிப்படி ஆலயத்துட் பிரவேசித்து விஷ்ணுமூர்த்தியைத் தமது திருக்கரத்தாற் குழைவித்துச் சிவலிங்கப் பெருமானாகச் செய்து பூசித்து வைஷ்ணவர்களைக் கருவபங்கஞ் செய்தருளிய தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருக்குலசேகரன்பட்டினம்

இச்சிவஸ்தலத்திலுள்ள ஒரற்புதமாமரம் எக்காலத்தினும் பூவும் காயுமறாமல் விளங்கியிருப்பது. இத்தலம் திருச்செந்தூருக்குத் தென்மேற்கிலுள்ளது

திருக்குழந்தை

பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி மாயக்கூத்தன். சத்தி குழந்தைவல்லி

திருக்குழல்நாயகி

திருச்செங்காட்டங்குடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

திருக்கூடலூர்

இது காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்

திருக்கூடலையாற்றூர்

நடுநாட்டிலே மணிடமுத்தா நதிதீரத்திலேயுள்ள ஒரு சிவ ஸ்தலம்

திருக்கூடல்தென்மதுரை

பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி கூடலாழகர்

திருக்கேதீச்சரம்

ஈழ நாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது சம்பந்த சுந்தரர்களாற் பாடப்பட்டது. சிவாலயம் அழிந்து போயிற்று. முன்போற் சிவாலயத்திருப்பணி செய்யக் கருதி நாட்டுக்கோட்டை வணிகர் பெருமுயற்சி செய்துவருகின்றனர்

திருக்கைச்சின்னம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருக்கைலாயஞானவுலா

சேரமான் பெருமாணாயனார் செய்த பிரபந்தம்

திருக்கொடுங்குன்றம்

பாண்டிநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சோலைமலைக்குக் கிழக்கேயுள்ளது

திருக்கொடும்பாளூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருக்கொள்ளம்பூதூர்

சோழநாட்டிலே குடமுருட்டி நதிக்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது. சுவாமி வில்வவனநாதர். அம்மை சௌந்தரநாயகி

திருக்கொள்ளிக்காடு

காவிரியின் தென்கரையதிலுள்ள ஒரு சிவஸ்தலம். சும்பந்தராற் பாடப்பட்டது

திருக்கோகர்ணம்

திருக்கைலாசத்திலே சிவன்பால் ராவணன் இரந்து பெற்ற சிவலிங்கத்தை இவ்விடத்திலே ஓரந்தணச் சிறுவராகத் தன்முன்னே தோன்றிய விநாயகர்கையிலே கொடுத்துச் சலமோசனம் பண்ணியபொழுது, விநாயகர் அதனைக் கீழே வைத்துவிட, அவன் தன் இருபது கரங்களாலும் பற்றி இழுப்பவும் அதுவராது பசுவின்காது போலக்குழைந்துவேர் கொண்டமையினால் இதுமகாபலம் என்று கூறிவணங்கி விடுத்துப்ட போயினான். அது பற்றி இத்தலம் கோகர்ணம் என்னும் பெயர் பெறுவதாயிற்று. இது துளுவநாட்டிலேயுள்ளது. திருநாவுக்கரசராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது

திருக்கோடிக்கா

இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருக்கோடிக்குழகர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது ஐயடிகள் காடவர்கோன் க்ஷேத்திர வெண்பாவாலும், சம்பந்தரும் நாவுக்கரசரும் தேவாரத்தாலும் பாடியது

திருக்கோட்டாறு

இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம் சம்பந்தராற் பாடப்பட்டது

திருக்கோட்டியூர்

பாண்டிநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி சௌமிய நாராயணன். சத்தி திருமாமகள். பூதத்தாழ்வார் முதலிய ஐவராழ்வாராற் பாடப்பட்டது

திருக்கோட்டீச்சுரம்

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். அகஸ்தியர் மணலால் அமைக்க அமைக்க அமையாது நின்ற இலிங்கத்தைப் பார்த்து இஃதென்ன கோட்டி என்று கூறித்தியானித்தவளவில், அமைந்த விலிங்கத்தையுடைமையின் திருக்கோட்டியீச்சுரம் எனப்பெயர்பெற்றது

திருக்கோட்டூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருக்கோட்டையூர்க்கோடீச்சரம்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கோடீச்சுரர். அம்மை பந்தாடுநாயகி. திருநாவுக்கரசராலே பாடப்பட்டது

திருக்கோணமலை

ஈழ நாட்டிலேயுள்ள ஒரு சிவஸ்தலம். இது திருஞானசம்பந்தசுவாமிகளாற் பாடப்பட்டது. இது தக்ஷிணகைலாச மூன்றனுளொன்று. வில்லிபுத்தூரர் பாரதத்திலே பாண்டிநாட்டையும் ஈழநாட்டையும் இருதட்டாக்கிக் கோணமலையையும் பொதியமலையையும் அத்தட்டுகளிலெ யிட்டுச் சீர்தூக்கி நிறுப்பதற்காகப் பிரமதேவன் சேதுபந்தனத்தைத் துலாக்கோலாக்கினா னென்னுங் கருத்தினையுடைய வன்றிரை வெங்களிற்றினம் என்னுஞ் செய்யுளிற் கூறப்பட்டதுமிதுவே திருக்கோயில், சிதம்பரம், புலியூர்

திருக்கோண்டீச்சரம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பசுபதிச்சுரர். அம்மை சாந்தநாயகி திருநாவுக்கரசராற் பாடப்பட்டது

திருக்கோலக்கா

சம்பந்தருக்குப் பொற்றாளம் அருளிய சிவஸ்தலம். இது சோழநாட்டிலுள்ளது. சுந்தரர் சம்பந்தர் இருவராலும பாடப்பட்டது

திருக்கோளிலி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கோளிலிநாதர், அம்மை வண்டமர்பூங்குழல். மூவராலுந் தேவாரஞ்சூட்டப்பட்டது. சப்தவிடங்கஸ்தலத்த ளொன்று. சுந்தரமூர்த்தி தாம் குண்டையூர்க்கிழவர் பாற்பெற்ற நென்மலையைக் கொண்ட போதற்கு ஆளின்மையால் வருந்திக்கருணாமூர்த்தியை நோக்கி ஆளில்லையெம்பெருமான் என்று பாடிப்பூத கணங்களை ஆளாகப் பெற்றதலமிதுவே

திருக்கோளுர்

பாண்டிநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். இது நம்மாழ்வாராற் பாமாலை பெற்றது

திருக்கோழம்பம்

காவிரியின் தென்கரையிலுள்ளதொரு சிவஸ்தலம் சுவாமி கோகிலேச்சுரர், அம்மை சௌந்தரநாயகி. அப்பர் சம்பந்தர்களாலே பாடப்பட்டது

திருக்கோவலூர்வீரட்டானம்

யுத்தசன்னத்தனாய்க் கைலாசகிரி நோக்கிச்சென்ற அந்தகாசுரனை வென்றருளிய சிவஸ்தலம். இஃது அட்டவிரட்டானத்தளொன்று. பெண்ணை நதி தீரத்திலுள்ளது. அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது

திருக்கோவையார்

இது திருச்சிற்றம்பலக் கோவையாரெனவும்படும். இவ்வினிய நூல்செய்தவர் மாணிக்கவாசக சுவாமிகள். அது நானூறு கட்டளைக் கலித்துறைகளையுடையது. அது சிற்றின்பத்தின் மேல்வைத்துக் கூறப்பட்ட பேரின்பப்பொருளை யுடையது. அதற்கு அகப்பொருட்பகுதிகாக வைத்து உரை செய்தவர் நச்சினார்க்கினியர். அவ்வுரையைப் பேராசிரியர் உரையென்பர் ஒரு சிலர். திருக்கோவையார் உண்மை ஞானப்பொருளைத் திருக்கோவை யாருண்மையென்னும் பெயராற் செய்தவர் திருவாரூர்ச் சுந்தரதேசிகர். கடவுட்பத்தியிலழுந்தி ஆனந்த பரவசப்பட்டு நிற்போர் அன்மாவையும் பதியையும் நாககநாயகி பாவனைபண்ணிப்பாடுதல் இயல் பென்பது அப்பர் திருமூலர் பாடல்களாலும் பெறப்படுதலின், சிவயோகஞ்சாதித்த மாணிக்கவாசகசுவாமிகள் செய்த திருக்கோவையாரும் பேரின்பப்பொருள் மேலதேயாம்

திருக்சச்சி ஒணகாந்தன்றளி

இதுவும் திருவேகம்பத்தைச் சார்ந்த சிவஸ்தலம். இஃது ஒணகார்நதனென்னும் அசுரன் பூசித்தது

திருக்சச்சிமேற்றளி

இது திருவேகம்பத்தைச் சேர்ந்த சிவஸ்தலம்

திருக்சாவளம்பாடி

காவிரியின் வடகரையின் கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி கோபாலன். சத்தி மடவரல்மங்கை. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருக்டித்தானம்

மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். திருவஞ்சைக்களத்துக்குத் தென்கீழ்த்திரையிலுள்ளது

திருச்சக்கரப்பள்ளி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருச்சங்கநாரயணார்கோவில்

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்

திருச்சத்திமுற்றம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுத்திமுற்றப்புலவர் விளங்கிய ஸ்தலமுமிதுவே. சுவாமி சிவக்கொழுந்தீச்சரர், அம்மை பெரிய நாயகி. நாவுக்கரசர், கோவாய்முடுகி யடுதிறற்கூற்றங்குமைப்பதன்முன், பூவாரடிச் சுவடென்மேற் பொறித்துவை என்று தமது தேவாரத்தில் விண்ணப்பஞ் செய்தஸ்தலமுமிதுவே

திருச்சாத்தமங்கைஅயவந்தி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம் இது சிவனடியார் வேண்டும் எதனையும் மறாது கொடுக்கும் இயல்புடையராகிய இயற்பகைநாயனாரிடத்திலே சிவபிரான் ஒரு விடபுருடனாகிச் சென்று அவர் மனைவியை வேண்ட, மறாது கொடுக்கத் துணிந்த அந்நாயனாருடைய பத்தியை மெச்சி அவருக்கு முத்தியளித்ததலம்

திருச்சிக்கல்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். திருஞானசம்பந்தராற் பாடப்பட்டது

திருச்சிங்கவேள்குன்றம்

வடநாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்

திருச்சித்திரகூடம்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். இது சிதம்பரத்துக்கு வைஷ்ணவர்கள் இட்டுக்கொண்டபெயர். சுவாமி கோவிந்தராசன். சத்தி புண்டரீகவல்லி. குலசேசராழ்வார் முதலியோராற் பாடப்பட்டது

திருச்சிராப்பள்ளி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம் தனகுப்தன் மனைவி சிவபக்தியிற் சிறந்தவளாயொழுகி வருநாளிற் கருப்பவதியாகிப் பிரசவித்தாள். அச்சமயம் அவள் தாய் காவிரிப்பெருக்கால் அக்கரையில் நின்றுவிடச் சிவபிரான் அத்தாயைப்போல உருவங்கொண்டு சென்று போய் அப்பெண்ணுக்குப் பிரசவஅறையில் உதவி புரிந்திருந்தார். அதுபற்றி இத்தலத்திலெழுந்தருளியிருக்கும் சுவாமிக்குத் தாயுமானார் என்னும் பெயருண்டாவதாயிற்று

திருச்சிறுகுடி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மங்களேச்சுரர். அம்மை மங்களநாயகி

திருச்சிற்றேமம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம். சுவாமி பொன்வைத்த நாதேச்சரர். அம்மை அகிலாண்டேசுவரி. திருஞானசம்பந்தராற் பாடப்பட்டது

திருச்சிவபுரம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மங்களேச்சுரர். அம்மை மங்களநாயகி

திருச்சுழியல்

பாண்டியன் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி திருமேனிநாதேச்சுரர், அம்மை துணைமாலை. சுந்தரமூர்த்தி சுவாமிகளாற் பாடப்பட்டது

திருச்செங்காட்டங்குடிக்கணபதீச்சரம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சிறுத்தொண்டநாயனார் விளங்கிய ஸ்தலமுமிதுவே, சுவாமி கணபதீச்சுரர், அம்மை திருக்குழனாயகி

திருச்செங்குன்றூர்

கொங்கு நாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி அர்த்தநாரீஸ்வரர், அம்மை பாகாம்பிரியாள். திருஞானசம்பந்தராற் பாடப்பட்டது. மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

திருச்செந்தூர்

சீரலைவாயெனப்படும் சுப்பிரமணியஸ்தலம் பாண்டிநாட்டிலே சமுத்திரதீரத்துள்ளது. சுவாமி சுப்பிரமணியர், அம்மை தெய்வானை

திருச்செப்பறை

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி தியாகேச்சுரர், அம்மை சிவகாமிஅம்மை. இத்தலம் திருநெல்வேலிக்கு வடகீழ்த்திசையிலுள்ளது

திருச்செம்பொன்செய்கோவில்

காவிரியின் வடகரையிலுள்ள ஒருவிஷ்ணுஸ்தலம். சுவாமி கிருபாகரன், சத்தி அல்லிமலர்மங்கை. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருச்செம்பொன்பள்ளி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சொர்ணபுரேச்சுரர், அம்மைசுகந்தவனநாயகி. நாவுக்கரசராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது

திருச்சேய்ஞலூர்

குமாரக்கடவுளுக்காக விசுவகர்மாவினா லமைக்கப்பட்ட நகரம். இது சோழநாட்டிலுள்ளது. இது வடமொழியிலுஞ் சேஞலூரென்றே வழங்கப்பட்டுள்ளது. குமாரக்கடவுள் சூரசங்காரத்தின் பொருட்டுச் செல்லும் வழியில் ஒருநாள் தங்கிச் சிவபூசைசெய்து ஆயுதங்கள் பெற்றதலமிதுவே. இங்கெழுந்தருளியிருக்குஞ் சிவமூர்த்தி சத்தகிரீசர், அம்மை சகிதேவி. சுண்டீசர் அவதரித்ததலமுமிதுவே. சம்பந்தராற்பாடப்பட்டது

திருச்சேரன்மாதேவி

பாண்டிநாட்டிலுள்ள ஒரு ஒரு சிவஸ்தலம்

திருச்சேர்ந்தமங்கலம்

பாண்டிநாட்டின் கணுள்ள சிவஸ்தலம்

திருச்சேறை

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி செந்நெறியப்பர், அம்மை ஞானவல்லி. நாவுக்கரசர்சம்பந்தர் என்னுமிருவராலும் பாடப்பட்டது. காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

திருச்சேற்றுத்துறை

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி தொலையாச்செல்வீச்சுரர், அம்மை ஒப்பிலாம்பிகை. மூவராலும் பாடப்பட்டது

திருச்சோமேச்சுரம்

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது ஆற்றூர் எனவும்படும்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

சம்பந்தர் காண்க

திருடநேமி

சத்தியதிருதன் மகன்

திருடவிரதன்

விஜயன் மகன்

திருடஹனு

சேனசித்தன்மகன்

திருடாசுவன்

தண்டாசுவன்

திருணவிந்து

மனுச்சக்கரவர்த்தி வமிசத்தில் வந்த புதன்மகன். விசாலன்தந்தை

திருணாவர்த்தன்

சுழல்காற்று ரூபத்தோடு சென்றுரெபல்லையிலே சிசுவாகவிருந்த கிருஷ்ணனை வாரிக்கொண்டந்தரத்தெழந்த போது, அங்கே அக்கிருஷ்ணனாற் கொன்றொழிக்கப்பட்டவன்

திருததேவி

தேவகன்மகன். வசுதேவன் பாரி

திருதன்

காந்தாரன் பௌத்திரன். கங்காபுத்திரன்

திருதராஷ்டிரன்

விசித்திரவீரியன் மனைவியாகிய அம்பிகை நியோகநியாயம் பற்றி வியாசரைக்கூடிப்பெற்ற புத்திரன். அம்பரிகை நாணத்தாற் கண்ணை மூடிக்கொண்டு வியாசரைக் கூடினமையின் இவன் அந்தகனாகப் பிறந்தான். இவன் காந்தாரியை மணம்புரிந்து துரியோதனன் முதலிய நூற்றுவர் புத்திரரைப் பெற்றான். திருதராஷ்டிரன் மூத்ததோனாயினும் அந்தகனாதலின் அவனுக்குரிய அரசு அவன் தம்பி பாண்டுவுக்காயிற்று. பாண்டு பரமபதம் அடைந்தபின்னர் அவன் புத்திரராகிய பாண்டவர்க்குரிய அரசைத் திருதராஷ்டிரனும் அவன் மக்களும் வஞ்சனையாற் கவர்ந்து கொண்டு அப்பாண்டவர்க்கு ஆற்றொணாப் பெருந்துன்பங்கள் செய்து வந்தார்கள். அது காரணமாக மூண்ட செரும்போரிலே துரியோதனனை வீமன் கொன்று தொலைத்தான். திரதராஷ்டிரன் தன்மகனைக் கொன்ற பழிக்குப் பழிவாங்குங் கருத்துடையனாய்த் தன்மேலிட்டிருந்த கவசத்தினுள்ளே முள்வேற்படைக்கலங்களை மறைத்துத் தரித்துக் கொண்டு அசையால் வீமனைத் தழுவுவான் போன்று தழுவச் சமயம் பார்த்திருந்தான். அஃதுணர்ந்து கிருஷ்ணன் திருதராஷ்டிரனுக்கு ஒரு சிலாவிககிரகத்தைக் காட்ட, அவன் அதனை வீமனெனக்கொண்டு தழுவிப்புரண்டு ஆயுதங்களை முரித்துத் தான்உள்ளத்துக் கொண்டவஞ்சத்தையும் வெளியாக்கி வெள்கி மானங்குலைந்தான். இங்ஙன மெல்லாஞ் செய்தானாயினும் அவைகளைப் பொருட்படுத்தாது யுதிஷ்டிரன் அவனைச் சாங்காறும் தந்தைக்குச் சமானமாகவே வைத்துப் பரிபாலித்து வந்தான்

திருத்தக்கதேவர்

சீவக சிந்தாமணி செய்த தமிழ்ப்புலவர். இவர் சோணாட்டிலே விளங்கிய சமண சமயி. தமிழ்ப்புலமையில் மிக்க சாதுரியமுடையவர். இவர் செய்த சீவகசிந்தாமணி சிறந்த காவிய நூல்களுளொன்றாக விளங்குகின்றது. இவர் பொருணுட்பமும் சொற்சுருக்கமும் சிருங்காரமும் பெறக் கவிபாடுந்திறமையுடையவர். கும்பர் பொருளாழமும் செஞ்சொற் சிறப்பும் சந்தமும் பெறப் பாடுந்திறமையுடையவர். இருவர்க்கும் முந்தினவராகிய திருவள்ளுவர் பலபாக்களாற் கூறத்தக்க பரந்த பொருளைச் சிலசொற்களால் அழகெல்லாம் பொருந்தப் பாடுந்திறமையும் பரந்தஞானமுமுடையவர். இவையே அவர் தம்முள் வேற்றுமை. திருத்தக்கதேவர் கடைச்சங்ககாலத்தவரெனக் கொள்ளப்படுவர்

திருத்தங்கால்

பாண்டி நாட்டுள்ளதோரூர். இவ்வூர்வார்த்திகனுக்கு ஒரு பாண்டியனால் பிரமதாயமாகக் கொடுக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சமீபமாகவுள்ளது, சிலப்

திருத்தஞ்சைநகர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். தஞ்சாவூரெனவும் வழங்கப்படும். சரபோஜி முதலிய அரசர் அரசுசெய்திருந்த ராஜதானி. இவ்வாலயத்துக் கர்ப்பக்கிருகத்துச் சிலாசாசனங்களால் அநேக பூர்வசரித்திரங்கள் விளங்கும். சுவாமி பிருகதீசுரர், அம்மை உமாமகேசுவரி. கருவூர்த்தேவரால் திருவிசைப்பாவும் அஷ்டபந்தனமும் பெற்றதலம்

திருத்தண்கலூர்

பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

திருத்தண்கா

தொண்டைநாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி தீபப்பிரகாசன்

திருத்தண்டலைநீணெறி

இதுகாவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி நீணெறிநாதேச்சுரர், அம்மை ஞானநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருத்ததென்முல்லைவாயில்

சோழநாட்டிலுள்ள ஒருசிவஸ்தலம். சுவாமி முல்லைவனநாதேச்சுரர், அம்மை அணிகொண்ட கோதை. சம்பந்தராற் பாடப்பட்டது

திருத்தனைநகர்

கெடிலநதி தீரத்துள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி திருநந்தீச்சுரர், அம்மை ஒப்பில்லாநாயகி. சுந்தரராற் பாடப்பட்டது

திருத்தருமபுரம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி யாழ்முரிநாதேச்சுரர், அம்மை சதாமதுராம்பிகை. சம்பந்தராற் பாடப்பட்டது

திருத்தலைச்சங்காடு

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சங்கநாயகேச்சுரர், செங்குரநாதேச்சுரர், அம்மை சௌந்தரி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருத்தலையாலங்காடு

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி ஆடவல்லவீச்சுரர், அம்மை திருமடந்தை. நாவுக்கரசராற் பாடப்பட்டது

திருத்தலையூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். ஊருத்திரபசுபதிநாயனார். திருவவதாரஞ் செய்தருளியதலம்

திருத்திலதைப்பதி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மதிமுத்தநாதேச்சரர், அம்மை பொற்கொடி

திருத்துரத்தி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது குற்றாலமெனவும்படும். சுவாமிவேதேச்சுரர், அம்மை அமிர்தமுகிளாம்பிகை. மூவராலும் பாடப்பட்டது

திருத்துரவாசநல்லூர்

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி காளத்தியீச்சரர், அம்மை பூங்கோதை

திருத்துறையூர்

சகலாகமபண்டிதரென்னும் அருணந்திசிவாச்சாரியார் திருவவதாரஞ் செய்யப்பெற்ற சிவஸ்தலம். இது நடுநாட்டிலுள்ளது சுவாமி துறையூரப்பேச்சுரர், அம்மை பூங்கோதை. சுந்தரராற் பாடப்பட்டது

திருத்தூங்கானைமாடம்

கெடிலநதி தீரத்திலேயுள்ள ஒரு சிவஸ்தலம். திருநாவுக்கரசர் தமது தோள்களிலே சூலக்குறியும் இடபக்குறியும் பொறிக்கப்பெற்றதலம். சுவாமி சுடர்க்கொழந்தீச்சுரர், அம்மை மடந்தைநாயகி. சம்பந்தரராற் பாடப்பட்டது

திருத்தெங்கூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி வெள்ளிமலைநாதேச்சுரர் அம்மை பெரியநாயகி. சம்பந்தராற்பாடப்பட்டது

திருத்தென்குடித்திட்டை

காவிரியின் தென்கரையிலுள்ள சிவஸ்தலம். சுவாமி பசுபதீச்சுரர், அம்மை உலகநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருத்தெற்றியம்பலம்

காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி செங்கண்மால். சத்தி செங்கமலை. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருத்தெளிச்சேரி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பாதளேச்சுரர். அம்மை சத்தியம்பாள். சம்பந்தராற் பாடப்பட்டது. சம்பந்தர் புத்தசமயியாகியநந்தி செய்த தீமைக்காக அவன் தலையிலே இடிவீழும்படி செய்து தம்மோடு வாதம் புரியவெழுந்த சாரியையும் அவன் குழாத்தினரையும் வாதிலே வென்று அவர்களை நிறணிவித்த தலமிதுவே

திருத்தேவனார்தொகை

காவிரியின் வடகரையிலுன்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி மாதவப்பெருமாள், சத்தி க்ஷிராப்பிவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருத்தேவூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி தேவகுருநாதேச்சுரர், அம்மை மதுரபாஷிணி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருத்தொண்டரந்தாதி

நாயன்மார்களது சரித்திரத்தை நம்மபியாண்டார் நம்பி சுருக்கி அந்தாதியாகச் செய்த நூல்

திருத்தொண்டர்

கலியுகாரம்பத்திலே சைவசமயத்தினையும் பத்திமார்க்கத்தையும் நிலைநாட்டும் பொருட்டுத் தமிழ்நாட்டிலே அவதரித்த கண்ணப்பர். கோச்செங்கட்சோழர். சண்டீசர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலிய நாயன்மார்கள் திருத்தொண்டர்களெனப்படுவார்கள். இவர்கள் வரலாறு கூறுவன. திருத்தொண்டர் புராணசாரம், பெரியபுராணம் முதலியன

திருத்தொலைவில்லிமங்கலம்

இது பாண்டி நாட்டிலுள்ள விஷ்ணுஸ்தலம். சுவாமிஅரவிந்தலோசனன். அம்மை கருந்தடங்கண்ணி. நம்மாழ்வாராற் பாடப்பட்டது

திருநணா

கொங்குநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமசங்கமேச்சுரர், அம்மை வேதாம்பிகை. சம்பந்தராற் பாடப்பட்டது. இதுபாவானியெனவும் படும்

திருநந்திபுரவிண்ணகரம்

காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி ஜகநாதன். அம்மை செங்கமலமடந்தை. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருநனிபள்ளி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருநன்னிலத்துப்பெருங்கோயில்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். கோச்செங்கட்சோழரால் எடுப்பிக்கப்பட்ட ஆலயத்திருப்பணியையுடையது. சுந்தரராற் பாடப்பட்டது

திருநறையூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி வடிவழகியநம்பி. சத்தி நம்பிக்கைநாய்ச்சியார்

திருநறையூர்ச்சித்தீச்சரம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது திருநறையூர் எனவும்படும். சுவாமி சௌந்தரேச்சுரர். அம்மை அழகம்பிகை. சம்பந்தராலும் சுந்தரராலும் பாடப்பட்டது

திருநல்லம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது கோனேரிராயபுரமெனவும்படும். சுவாமி உமாமகேசர், அம்மை மங்களநாயகி. நாவுக்கரசராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது

திருநல்லூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிபெரிய பாண்டவேச்சுவார். அம்மை திருபுரசுந்தரி. திருநாவுக்கரசர் திருவடிசூட்டப் பெற்றதலம். சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பட்டது

திருநல்லூர்ப்பெருமணம்

கொள்ளிடக்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது ஆச்சாபுரமெனவும்படும். சுவாமி சிவலோகத்தியாகேசர். அம்மை நங்கைஉமைநாயகி. திருஞானசம்பந்தர் சிவசோதியுட் கலந்ததலம். அவராற் பாடப்பட்டது

திருநவலிங்கபுரம்

பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி தெர்ப்பாரணியேச்சுரர். அம்மை போகமார்த்த பூண்முலை. மூவராலும் பாடப்பட்டது

திருநாகேச்சுரம்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருநாகைக்காரோணம்

காவிரியின் தென்பாலிலே கடற்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி காயாரோகணர், அம்மை நீலாயதாக்ஷி. மூவராலும் பாடப்பட்டது. இத்தலபுராணம் மகாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையாற் பாடப்பட்டது. அது சொற்பொலிவும் பொருட்சிறப்புமுடையது

திருநாட்டியத்தான்குடி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருநாராயணபுரம்

துளுவநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

திருநாரையூர்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். முரத்திலேறிக் கனிபறித்தெறிந்து துருவாசமுனிவரது நிஷ்டைக்கிடையூறு செய்து அவர் சாபத்தால் நாரையுருப்பெற்ற கந்தருவன் சிவனைப்பூசித்து முத்திபெற்ற தலமாதலின் இப்பெயர் பெற்றது. நம்பியாண்டார்நம்பிக்கு ஜனனஸ்தலம்

திருநாளைப்போவார்

ஆதனூரிலே புலைத்திருமேனியிலே அவதரித்தருளினவர். முற்பவத்தீட்டிய பெருஞ்சிவபுண்ணியத்தான் முறுகிய பக்திமேலீட்டினால் நாடராஜப் பெருமானைத் தரிசிக்குங் காதலுடையராய் நாளைப்போவென் என்று சொல்லித்திரிந்த காரணத்தால் இப்பெயர் பெற்றனர். இவர் சிதம்பரத்தையடைந்த புறத்தே நின்ற பொழுது சிவாஞ்ஞையினால் வளர்க்கப்பெற்ற அக்கினியில் மூழ்கி நடராஜப் பெருமானைத்தரிசித்து முத்திபெற்றவர்

திருநாவலூர்

சுந்தரமூர்த்திநாயனார் அவதாரஞ்செய்த சிவஸ்தலம். திருவதிகைக்கு மேற்கே நடுநாட்டிலுள்ளது

திருநாவுக்கரசுநாயனார்

திருமுனைபாடிநாட்டிலே திருவாமூரிலே வேளாளர் குலத்திலே புகழனாரென்பவர்க்கு மாதினியார் வயிற்றிலே பிறந்தவர். அவர் பிள்ளைத் திருநாமம் மருணீக்கியார். அவர் பல கலைகளையுங்கற்று நல்லொழுக்கமும் தருமப்பிரியமு முடையராகி ஒழுகிவருநாளிற் பிரபஞ்சவாழ்வு அநித்தியமெனக்கண்டு துறவறத்தையடைந்து, சமணசமயத்திற் பிரவேசித்து, அச்சமய நூல்களெல்லாவற்றையுங் கிரமமாகக்கற்று, அவைகளிலும் மகாபண்டிதராகிச் சமணசாரியராற் தருமசேனரென்னும் பெயர் பெற்று அவருள்ளே அதிசிரேஷ்டராய் விளங்கிவருநாளில்,அவர் வயிற்றிலே கொடிய சூலைநோயுண்டாகி வருத்த, சமணாசாரியர்கள்தமது மந்திர வித்தைகளை யெல்லாம் பிரயோகித்தும் அதனால் அந்நோய் சிறிதுந்தணியாது முன்னையிலுமதிகப்பட, அதனைக்கேள்வியுற்ற அவர் சகோதரியாராகிய திலகவதியார், அவரைத் தம்மிடம் வருமாறு செய்து, அவருக்குப் பஞ்சாடிரோபதேசஞ் செய்து, அவருடைய சூலைநோயைநீக்க, அவர் இது பரமசிவனுடைய திருவருளெனக்கொண்டு, சைவசமயப் பிரவேசஞ் செய்து, சிவபக்தியிற் சிறந்தவராகி வீரட்டானே சுவரரையடைந்து, அவர் சந்நிதானத்திலே விழுந்து நமஸ்தரித்து எழுந்து நின்று, அன்புமயமாகிய தமிழ்ச்செய்யுள் பாடுஞ் சத்தியுடையராகி, அத்தியற்புதமாகிய தேவாரங்களைப் பாடித் திருநாவுக்கரசு என்னும் பெயர் சிவனாலளிக்கப் பெற்றவர். அதனை அறிந்து சமணர்கள் அரசனாணை கொண்டு அவரைக் கல்லோடுசேர்த்துக் கட்டிக் கடலிலிட்ட போது அக்கல்லைத் தெப்பமாகக்கொண்டு கரையேறியதும், நீற்றறையிலிட்டபோது சாவாது பிழைத்திருந்தும், விஷமூட்டியபோது அதனாலிறவாதிருந்தும், பிறவுமாகிய அநேக அற்புதங்கள் தம்மிடத்திலே விளங்கப்பெற்றவர். பெரியபுராணத்தி லெடுத்துக் கூறப்பட்டுள்ள அவருடைய சரித்திரம் முற்றும் உண்மையென்பது கல்லினோடென்னைப் பூட்டி அமண்கையர், ஒல்லைநீர்புகநூக்கவென் வாக்கினால், நெல்லுநீள்வயல் நீலக்குடியரன், நல்ல நாமநவிற்றியுய்ந் தேனனறே என்னுந் தேவாரத்திலே சமணர் செய்த துன்பத்தைத் தமது திருவாயாற் கூறியதால் வியவஸ்தாபனமாம். அவர் சாயுச்சியப்பேறு பெற்ற போது அவர்க்கு வயசு எண்பத்தொன்றென்பது அப்பருக்கெண்பத்தொன் றருள்வாதவூரருக்குச், செப்பிய நாலெட்டினிற் றெய்வீகம்~ இப்புவியிற ~ சுந்தரர்க்கு மூவாறுதொல் ஞானசம்வந்ர்க், கந்தம்பதினாற்றி என்னும் வெண்பாவால் நிச்சயிக்கப்படும். அவர்காலம் சம்பந்தர்காகலமென்பது சம்பந்தர் என்பதனுட்கூறினாம். ஆண்டுக்காண்க அஃதாவது அவர் இற்றைக்கு நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னர் விளங்கினவர் என்பது ஆண்டுக்கூறிய நியாயங்களான மாத்திரமன்று இடைச்சங்கத்திறுதிக் காலத்திலே நிகழ்ந்த பிரளயத்தைக் குறித்துக் கேள்வியுற்றபோது அவர் திருவாய்மலர்ந்தருளிய, வாமந்துளங்கிலென் மண்சம்பமாகிலென் மால்வரையுந், தானந்துளங்கித் தலைதடுமாறிலென் தண்கடலும், மீனம்படிலென் விரிசுடர் வீழி லென்வேலைநஞ்சுண், டூனமொன்றில்லா வொருவனுக்காட்பட்டவுத்தமர்க்கே என்னுந் தேவாரத்தாலும் நிச்சயிக்கப்படும். இடைச்சங்கத்திறுதிக்காலத்தில் வந்துற்ற பிரளயத்தைக்குறித்துத் தமிழ் என்பதனுட் கூறினாம். திருநாவுக்கரசு நாயனார் திருவாய்மலர்ந்தருளிய தேவாரங்கள் பத்திச்சுவைகால்வதோடு வேதோபநிஷதசாரங்களும், வித்தியாசாதுரிய கற்பனாலங்காரங்களும் பொழிவனவாதலின், அவருடைய செந்தமிழ்ப்புலமையின் அந்தமிலாற்றலெல்லாம் பிறவழியிலே செல்லாது சிவபத்தியிடலும் சிவஞானத்திலுமே சென்றன. உலகியல் நெறி நிற்கும் சாமானியவித்துவான்கள் போல, நிலையில்லாத வுலகவின்பத்தைப் பெரிதென மதித்து மயங்கிப் பெண்கள் முகத்தைச் சந்திரனுக்கும், கூந்தலை மேகத்துக்கும் பல்லை முத்துக்கும் நுதலைப் பிறைக்கும்மாக வின்னோரன்னவுப மானங்களாலே புனைந்த மகிழ்கூராது. சிவத்தியானமும் சிவதரிசனமுமன்றி மற்றொன்று முள்ளத்திற் கொள்ளாராய், ஞானக்குறிப்பினையுடைய சிவன் திருமேனியையும், அம்மேனியினுள்ள ஞான பூஷணங்களையுமெடுத்து அவைகளுக்கே உவமைகற்பித்து மகிழ்கூர்வர். அவ்வுண்மை, செற்றுக்களிற்றுரி கொள்கின்றஞான்று செருவெண்கொம்பொன், றிற்றுக்கிடந்தது போலுமிளம்பிறை பாம்பதனைச் சுற்றுக்கிடந்தது கிம்புரிபோலச் சுடரிமைக்கு, நெற்றிக்கண்மற்றதன் முத்தொக்குமா லொற்றியூரனுக்கே என்பது முதலிய பாடல்களாலுணரப்படும். திருநாவுக்கரசு நாயனார் தீவிரதரசத்திநி பாதமுடையராய்ச் சிவானந்தமேலிட்டுச் சீவன் முத்தராயிருந்தவர். சிவானந்தமேலிட்டப் பெற்றோர் ஆனந்தபரவசமும் ஆடலும் அதிசயாநந்த ஞானப்பாடலுமுடையராதல் இயல்பன்றோ. அதுபற்றியே அவருடைய பாமாலை யெல்லாம், செந்தமிழ்த்தேன் பிலிற்றியச் சிவஞான நறுமணங் கமழ்ந்து, பத்தியழகெறித்துக் கேட்டோரைப்புறம் பெயரவிடாது கவருமியல்பினவாய்க், காட்சிக்கரியராகிய பரம கருணாநிதியையும் எளியராக்கும் வலியுடையனவாயின. விரகமீதூரப் பெற்ற நாயகி தன் நெஞ்சத்திடையே கழிபேரன்பு காரணமாக நிகழும் பரவசத்தினாலே தனது நாயகன்புகழை யெடுத்துப் பாடலும் இரங்கலும் தூதுபோக்கலும் கண்டாமன்றோ. அவ்வாறே சிவன் மேல்வைத்த வேட்கையினாலே அவரைப் பாடலும் இரங்கலும் எதிர்ப்பட்ட பொருள்களை நோக்கித் தூது போக்கலும் பிறவும் பரவசப்பட்ட பத்தர்க்கியல்பேயாம். அதுபற்றியே திருநாவுக்கரசுநாயனாரும் காமச்சுவைபடவும், முன்ன மவனுடைய நாமங் கேட்டாண் மூர்த்தியவனிருக்கும் வண்ணங்கேட்டாள், பின்னையவனுடையவாரூர் கேட்டாள். பெயர்த்துமவனுக்கே பிச்சியானாள், அன்னையுமத்தனையு மன்றே நீத்தாளகன்றாள கலிடத்தாராசாரத்தைத், தன்னைமறந்தாடன்னாமங்கெட்டாடலைப் பட்டாணங்கை தலைவன்றாளே என்பது முதலிய சில பாடல்களைப் பாடினர். இங்ஙனங்கற்பித்துப் பாவனைபண்ணிப் பாடல் மாணிக்கவாசகர் திருமூலர் முதலிய சீவன்முத்தர்க்கியல் பென்பது, திருச்சிற்றம்பலக்கோவையாராலும், இருட்டறைமூலையிலிருந்தகுமரி, குருட்டுக் கிழவனைக் கூடநினைந்து, குருட்டினை நீக்கிக் குணம்பலகாட்டி, மருட்டியவனைமணம்புணர்ந்தாளே என்னும் திருமந்திரத்தாலும் காண்க. திருநாவுக்கரசுநாயனார் அருளிச்செய்த பாடல்களிலே வரும் வருணனைகளெல்லாம் அவ்வத்தலங்களுக்கியல்பாகவுள்ள சிறப்புக்களையே உள்ள உள்ளவாறெடுத்துரைக்கு மன்றிக் கற்பித்துரையா. உள்ளவுள்ளவாறுரைப்பதிலும் ஒவ்வோரதிசயமும் தத்துவக்குறிப்பும் ஆராமையுந் தோன்றுமாறே கூடும். இன்னும் அவ்வருட்பாடல்கள், தத்துவஞானமும் பிரபஞ்சவைராக்கியமும் எடுத்துக்காட்டி, முத்திமேலிச்சையைக் கொளுத்துமாற்றல் பெரிதுமுடையன வென்பது எடுத்துக்காட்டவேண்டா. அவற்றை ஒதுந்தோறுங் கோட்துந் தோறும், பிரபஞ்ச வெறுப்பும் சிவத்தின் மேல் விருப்புமே தலைப்படுமன்றி அவை ஏனைய புராணோதிகாசங்கள் போல நுண்பொருளைப் புதைத்துப் பருப்பொருளை வெளிப்படக்காட்டி உலகத்தை மயங்கவைப்பனவல்ல. ஆனந்தம் அரும்பி அருள்மலர்ந்து முத்திக்கனிபழுக்கும் பெற்றியினையுடையன. கோடியரிற் கொடியனாகிய கூற்றுவன் சந்நிதிப்பட்டோர்க்கும் உறுதியும் அஞ்சாநிலையுந் தரத்தக்கது தேவாரமொன்றுமேயாம். அச்சிறப்பு மூவர்தேவாரத்துக்குமொக்கு மேயாயினும் திருநாவுக்கரசுநாயனார் தேவாரம் வாக்குப் பொலிவினானுஞ் சிறந்து விளங்குவது. திருநாவுக்கரசுநாயனார் திருவாய்மலர்ந்தருளிய தேவாரப்பாடல்கள் ஐந்துலடித்து முப்பத்தேழாயிரம். அவற்றுள் அழிந்தனபோக எஞ்சியுள்ளன மூவாயிரத்து நானூற்றெழுபத்தாறு

திருநின்றவூர்

இது சோழநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். தொண்டைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்

திருநிலாத்திங்கட்டுண்டம்

தொண்டைநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்

திருநீடூர்

சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருநீரகம்

தொண்டை நாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

திருநீர்மலை

தொண்டை நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

திருநீலகண்டநாயனார்

வேசிகமனங்காரணமாக, தம்மனைவியார் திருநீலகண்டமறிய எமைத் தீண்டற்க வென்று சொன்ன ஆணையால் அம்மனைவியையே யன்றிப் பிறரையுந் தீண்டாது துறந்து இருந்து மூப்புவந்தகாலத்துச் சிவபிரான் ஓடொன்றைக் கொடுத்து மறைத்தமையின் சத்தியஞ் செய்யப்புகந்தும் மனைவியைத்தீண்டாது கோலினொருதலைபற்றி வாவியின் மூழ்கி இளமையைப்பெற்று முத்தியடைந்தவராகிய இவர் சிதம்பரத்திலே குயவர் குலத்திலே அவதரித்து விளங்கியவர்

திருநீலகண்டயாழ்ப்பாணநாயனார்

சிவபெருமானுடைய திருப்புகழை யாழிலிட்டுப் பாடுபவராய் மதுரைச் சோமசுந்தரக் கடவுளினாலே கொடுக்கப்பெற்ற பொற்பலகையை யுடையவராய்த் திருஞானசம்பந்த நாயனார் படியருளும் திருப்பதிகங்களை யாழிலிட்டு வாசிக்கும் பெரும்பேறுடையவலாய்த் திருநல்லூர்ப்பெருமணத்திலே அவரோடு முத்தியடையப் பெற்றவராகிய இவர் திருஎருக்கத்தம்புலியூரிலே அவதரித்தவர்

திருநீலக்குடி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம்

திருநீலநக்கநாயனார்

அடியார்பூசையுஞ் சிவபூசையுஞ் செய்பவராய், அயவந்தியிலுள்ள சிடவலிங்கப்பெருமானைப் பூசிக்கையில், அவ்விலிங்கத்தின் மீது விழுந்த சிலம்பியை மனைவியார் வாயாலூதியமையினால் அநுசிதமென்று அவரைத்துறந்து நித்திரை செய்தபொழுது சிவபிரான் வெயிப்பட்டு, உன்மனைவியூதிய விடமொழிய ஏனைய விடங்களெல்லாம் கொப்புளம் மிகுத்திருத்தலைக் காணென்று காட்டியருள. மகிழ்ந்து மனைவியாரோடு திருத்தொண்டு செய்திருக்கப் பெற்றவராய்த் திருஞானசம்பந்தசுவாமிகளிடத்தே அன்புபூண்டவராய், உள்ள இவர் பிராமணகுலத்திலே சாத்தமங்கையிலே அவதரித்தவர்

திருநெடுங்களம்

வங்கிய சோழன் நாடோறும் தரிசித்துப் பேறு பெற்ற சிவஸ்தலம். இது காவிரியின் தென்கரையிலுள்ளது

திருநெய்த்தானம்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருநெல்வாயிலரத்துறை, திருஅரத்துறை

கெடிலநதி தீர்த்திலேயுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது அரத்துறையெனவும் பெயர்பெறும்

திருநெல்வாயில்

சோழநாட்டிலே காவிரிக்கு வடபாலிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது சிவபுரியென்று வழங்கப்படும்

திருநெல்வெண்ணை

பெண்ணைநதி தீரத்திலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருநெல்வேலி

வேதசர்மா பஞ்சகாலத்தில் நைவேத்தியத்திற்கென இரந்து கொணர்ந்து உலர்த்தியநெல்லை, அப்பொழுது பெய்த பெருமழைநனைத்து வாரிப்போகாவண்ணம் சிவபிரான்காத்தருளினமையின் திருநெல்வேலியெனப் பெயர் பெறுவதாயிற்று. சுவாமி நெல்வேலிநாதர், அம்மை காந்திமதி. சம்பந்தராற் பாடப்பட்டது. சபை தாமிரசபை

திருந்துதேவன்குடி

இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருபுராந்தகேசுரர்

திருவிற் கோலத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

திருப்பட்டீச்சுரம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம்

திருப்பதி

வேங்கடாசலம். இது விஷ்ணு ஸ்தலம். சுவாமி பெயர் வேங்கடேசுரர். மகா முக்கிய மானஸ்தலம். இங்கேயுள்ள தீர்த்தங்கள் அநேக ரோகங்களைத் தீர்ப்பன. இத்தலம் பூர்வத்திற் சுப்பிரமணியாலயமென்று சைவர் கூறுவர். அதற்குச் சில ஆதாரங்களுமுள. இம்மலை தமிழ்நாட்டுக்கு வடவெல்லையென்பது தொல்காப்பியம் பழைய நூல்களாற் கூறப்படும்

திருப்பந்தணைநல்லூர்

இது காவிரியின் வடகரையிலுள்ள ஒர சிவஸ்தலம்

திருப்பனங்காடடூர்

இது திருவல்லத்துக்குத் தெற்கேயுள்ள சிவஸ்தலம். கண்ணுவர் நிவேதனத்துக்கு வேறியாதுங் கிடையாது. ஓரு பனம்பழத்தை நிவேதித்தனுக்கிரகம் பெற்ற தலமாதலின் அன்று தொட்டு பனங்கனியும் அங்கு நைவேத்தியப் பொருளாயிற்று. நடுநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருப்பனந்தாள்

இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சிவபக்தியிற் சிறந்த ஒரு மாதுசிரோமணியார் தாம் கொடுத்த மாலையை இங்குள்ள சிவபெருமானுக்குச் சாத்தச்சென்ற பொழுது தமது உடைநெகிழ அதனை இரு முழங்கைகளாலும் இடுக்கிக்கொண்டு திருமாலைக்கைங்கரியத்துக்கு இடையூறு வந்ததேயென்று கவன்றதையுணர்ந்த சிவபிரான் தமது திருமுடியைச் சாய்த்து மாலையேற்றருளிய தலம். குங்குலியக்கலய நாயனார் தமது கழுதிற் கயிறு பூட்டியிழுக்க நிமிர்ந்தது இவ்விலிங்கமே. இத்தலத்திலே புராதன மடாலயமுமொன்றுளது

திருப்பனையூர்

இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சௌந்தரேச்சுரர். அம்மை பெரியநாயகி. சப்தவிடங்கஸ்தலங்களு ளொன்று. சம்பந்த சுந்தரர்களாற் பாடப்பட்டது

திருப்பயற்றூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருப்பரங்கிரி, திருப்பரங்குன்றம்

மதுரைக்குத் தெற்கேயுள்ள ஒரு சுப்பிரமணிய ஸ்தலம்

திருப்பரமேச்சுவரவிண்ணகரம்

இது தொண்டைநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி வைகுந்தநாதன். சத்தி வைகுந்தவல்லி

திருப்பராய்த்துறை

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பராய்த்துறைநாதர். அம்மை பொன்மயிலம்பிகை. மாணிக்கவாசகரால், எடுத்துக்கூறப்பட்டுள்ளது சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பட்டது

திருப்பருதிநியமம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பருத்தியப்பேசர். அம்மை மங்களநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருப்பறியலூர்வீரட்டானம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி வீரட்டாணேச்சுரர். அம்மை இளங்கொம்பன்னை. இது தக்ஷன் சிரம்பறித்ததலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருப்பல்லவனீச்சரம்

இது காவிரிப்பூம்பட்டினம். பல்லவராயன் பூசித்து அநேகவரங்களைப் பெற்றதலமாதலின் இப்பெயர் பெற்றது. புட்டினத்தடிகளும் இயற்பகைநாயனாரும் திருவவதாரஞ் செய்ததலம். சம்பந்தராற் பாடப்பட்டது. இது பட்டினமெனவும் படும்

திருப்பழனம்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி ஆபத்துசகாயர். ஆம்மை பெரியநாயகி. அப்பூதியடிகள் அவதரித்ததலம். சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பட்டது

திருப்பழனிமலை

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சுப்பிரமணியஸ்தலம். பழத்துக்காகப் பிணங்கிடயிருந்த குமாரக்கடவுளைச் சிவபிரான் பழம் நீயன்றேவென்று சாந்திசெய்தருளியதலம். ஆது பற்றி வந்த பெயராகிய பழநீயெனற்பாலது பழனியென மருவிற்று

திருப்பழமண்ணிப்படிக்கரை

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி நீலகண்டேசர். அம்மை அமிர்தகரவல்லி. சுந்தரராற் பாடப்பட்டது

திருப்பழுவூர்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சோமேச்சுரர். அம்மை சோமகலாநாயகி

திருப்பவளவண்ணம்

தொண்டைநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பவளவண்ணன். சுக்திபவளவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருப்பாசூர்

இது சோழனுக்குச் சிவபெருமான் பாம்பாட்டியாக வந்து தரிசனங்கொடுத்த தலம். இது திருவொற்றியூருக்கு மேற்றிசையில் திருவெண்பாக்கத்துக்குத் தெற்கேயுள்ளது. நாவுக்கரசராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது

திருப்பாச்சிலாச்சிராமம்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். கோல்லிமளவன் தன்மகளுக்குண்டாய குமரகண்டவலியைத் திருஞானசம்சந்தமூர்த்தி நாயனாரால் நீக்குவித்த சிவஸ்தலம். சுவாமி நீலகண்டேச்சுரர், அம்மை விசாலாக்ஷி. சுந்தர சம்பந்தர்களாற் பாடப்பட்டது. சுந்தரர் நச்சிலராகிலிவரல்லாற் பிரானில்லையோ என்று பாடிப் பொன்பெற்ற தலமுமிதுவே

திருப்பாடகம்

தொண்டைநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பாண்டவர்தூதன். சக்தி உருக்குமிணி. பேரியாழ்வார் திருமழிசையாழ்வார் திருமங்கை யாழ்வாரென்னு மூவாலும் பாடப்பட்டது

திருப்பாணாழ்வார்

கலியுகம் முந்நூற்றின் மேல் சோழதேசத்திலே உறையூரிலே அவதரித்தவர். இவர் வீணையிலே மகாசதுரராகி அதனாற் பகவநாமத்தைப் பாடிப்பக்தியிற் சிறந்து விளங்கியவர், நாலாயிரப்பிரபந்தங்காண்க

திருப்பாண்டிக்கொடுமுடி

கொங்குநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கொடுமுடிநாதேச்சுரர். அம்மை பண்மொழியம்மை. இது நொய்யலுங் காவிரியுங்கூடுமிடத்தேயுள்ள தலம். இது மூவராலும் பாடப்பட்டது. இங்குள்ள லிங்கம் அகஸ்தியருடைய கமண்டலத்தைக் கவிழ்த்த விநாயகராற் றாபித்துப் பூசிக்கப்பட்டது

திருப்பாதாளேச்சரம்

இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது பாமணியெனவும்படும். சுவாமி சர்ப்பபுரேச்சுரர், அம்மை அமிர்தநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருப்பாதிரிப்புலியூர்

இது சமணர்களாற் கற்றூணிற் சேர்த்துக்கட்டிக்கடலிலிடப்பட்ட திருநாவுக்கரசர் சொற்றுணைவேதியம் என்னுந் தேவாரம் பாடிக் கரைசேர்ந்த சிவஸ்தலம். இது பெண்ணைநதி தீரத்திலுள்ளது. சுவாமி தோன்றாத் துணையீசர். அம்மை தோகையம்பிகை, அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது

திருப்பாம்புரம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பாம்புரேச்சுரர். அம்மை வண்டமர் பூங்குழல்நாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருப்பார்த்தம்பள்ளி

காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி பார்த்தசாரதி சக்தி மலர்மாது. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருப்பாற்றுறை

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி திருமூலநாதேச்சுரர். அம்மை மேகலாம்பிகை. சம்பந்தராற் பாடப்பட்டது

திருப்பாலைத்துறை

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம் சுவாமி பாலைவனநாதர். அம்மை தவளவெண்ணகையம்மை. அப்பராற் பாடப்பட்டது

திருப்பாவநாசம்

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பாவநாசேச்சுரர். அம்மை உலகம்மை. இங்கேளுள்ள தீர்த்தம் மிக்க விசேடமுடையது

திருப்பிரமபுரம்

இது சீர்காழி என வழங்கப்படும் சிவஸ்தலம். மாணிக்கவாசகர் சிவபெருமானது திருவடியைத் தமதுகையினாற் பிடித்துக் கொண்டு திருப்பாசுரம் பாடப்பெற்றதும். விஷ்ணுகொண்ட நரசிங்கவடிவத்தைக் கருவபங்கம் செய்யும் பொருட்டுச் சிவபெருமான் சரபமாகிப்பின் சட்டைநாதவடிவங்கொள்ளப் பெற்றதுமாகிய சிவஸ்தலம். திருஞானசம்பந்தமூர்த்திகளுக்கு அவதாரஸ்தலமுமிதுவே. இத்தலம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, கொச்சைவயம், கழுமலம், காழி, பிரமபுரம் என்னும் பன்னிரண்டு திருநாமங்களையுடையது. சமயாசாரியர் மூவராலும் பாடப்பட்டது. எழுபத்தொருதிருப்பதிகங்கள் பெற்றுள்ளது

திருப்பிரமேச்சுரம்

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்

திருப்பிரீதி

வடநாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பரமபுருஷன். சக்தி பரிமளவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருப்புகலூர்

திருநாவுக்கரசு சுவாமிகள் முத்தியடைந்த சிவஸ்தலம். இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுந்தரமூர்த்திநாயனார் பொன் வேண்டிப்பாடிய பொழுது செங்கற்கள் பொன்கற்களாகப் பெற்ற ஸ்தலமுமிதுவே. இது மூவராலும் பாடப்பட்ட எட்டுத் திருப்பதிகங்களையுடையது. சுவாமி அக்கினீச்சுரர். அம்மை கொந்தார்குழலி

திருப்புகலூர்வர்த்தமானேச்சரம்

இது காவிரியன் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி வர்த்தமானேச்சுரர். அம்மை கருந்தார்குழலி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருப்புகழ்

அருணகிரிநாதர் குமாரக்கடவுளினது புகழையெடுத்துத் திருவாய்மலர்ந்தருளிய தோத்திரரூபமான பாடல்கள், இப்பாடல்கள் தம்மை யோதுபவர்களது நெஞ்சினுள்ள அச்சம் துன்பங்களை நீக்கித் தைரியத்தையும் குமாரக்கடவுள் மேலே நம்பிக்கையையும் விரைந்த பத்தியையுந் தருமியல்பின. திருப்புகழ்ப் பாடற்றொகை பதினாயிரத்திலிறந்தன போக எஞ்சியுள்ளன. சிலவே. இந்நூல் வில்லிபுத்தூரர் காலத்தது

திருப்புக்கொளியூர்அவிநாசி

கொங்குநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது அவிநாசியெனவும்படும். சுவாமி அவிநாசீச்சுரர். அம்மை பெருங்கருணைநாயகி. சுந்தரமூர்த்திநாயனார். புரைக்காடு சோலைப் புக்கொளியூரவிநாசியே, கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையேஎன்று பாடி முதலையுண்ட பிள்ளையை மீட்டதலம்

திருப்புடார்ச்சுனபுரம்

பாண்டிநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருப்புட்குழி

தொண்டை நாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி விஜயராகவன். சக்தி மரகதவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருப்புத்தீசர்

தருப்புத்தூரிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமிபெயர்

திருப்புத்தூர்

பாண்டிநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது திருக்கோட்டியூருக்குத் தென்கீழ்த் திசையிலுள்ளது

திருப்புனவாயில்

பாண்டி நாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பழம்பதிநாதர், அம்மை பரங்கருணைநாயகி. சுந்தரர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது

திருப்புன்கூர்

நந்தனார் பொருட்டு நந்தி தேவரை விலகும் படி செய்து அவர்க்குத் தரிசனங்கொடுத்தருளிய சிவஸ்தலம். சோழ நாட்டிலே காவிரிக்கு வடகரையிலுள்ளது. சமயாசாரியர் மூவராலும் பாடப்பட்டது

திருப்புறம்பயம்

இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். சுவாமி காட்சிநாதர், அம்மை கரும்பன்னசொல் நாயகி, அராலிறந்த வணிகனைச் சம்பந்தர் பதிகம் பாடி யுயிர்ப்பித்த தலம். சமயாசாரியர் மூவராலும் பாடப்பட்டது

திருப்புல்லாணி

பாண்டிநாட்டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி கல்யாணஜகநாதன். சக்தி கல்யாணவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருப்புளிங்குடி

பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

திருப்புள்ளமங்கை

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி திருவாலந்தரித்த ஈச்சுரர். அம்மை அல்லியங்கோதை. சம்பந்தராற் பாடப்பட்டது

திருப்புள்ளம்பூதங்குடி

காவிரியின் வடகரையின் கணுள்ள ஒரு விஷ்ணஸ்தலம்

திருப்புள்ளிருக்கும்வேளூர்

இது சோழநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுடாயுப்புள் பூசித்தமையால் இப்பெயர் பெற்றது. திருப்புள்ளிருக்கு வேளூர் எனக்கொண்டு புள்ளும் இருக்குவேதமும் பூசித்த தலமென்று பொருள் பண்ணுவாருமுளர். சுவாமி வைத்தியநாதர். அம்மை தையல்நாயகி. அப்பர் சம்பந்தர்களாற்பாடப்பட்டது. இத்தலத்து முத்துக்குமாரசுவாமி மேலுள்ள பாமாலைகள் அநேகம். புள்ளிருக்கு வேளூர்க்கலம்பகஞ் செய்தவர் படிக்காசுப்புலவர். தரிசனார்த்தமாக நாற்றிசையிலிருந்தும் சனங்கள் சென்று பெருந்திரளாகக் கூடுவார்கள். இத்தலத்தை மிதித்தவர்களும் நோய்தீரப் பெறுவரென்பது ஐதிகம்

திருப்பூந்துருத்தி

காவேரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி புஷ்பவனநாதர், அம்மை அழகாலமர்ந்த நாயகி. நாவுக்கரசராற் பாடப்பட்டது

திருப்பூவனம்

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்

திருப்பூவனூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருப்பெருந்துறை

சோழ நாட்டிலே தென்பாலிலுள்ள ஒரு சிவஸ்தலம். பாண்டியற்காகக் குதிரை கொள்ளச் சென்ற மாணிக்கவாசகரைத் தடுத்தாட்கொண்ட சிவஸ்தலம். இங்குள்ள ஆலயம் திவ்வியமான சிற்ப வேலைகளையுடையது. சுவாமி ஆன்மநாதன், அம்மை உமாதேவி

திருப்பெருமிழலையூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருப்பெரும்புலியூர்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி வியாக்கிரபுரேச்சுரர். அம்மை சவுந்தரநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருப்பெருவேளூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். சுவாமி பிரியாதநாயகர், அம்மை மின்னனையாள். அப்பர் சம்பந்தராற் பாடப்பட்டது

திருப்பேணுபெருந்துறை

இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சிவானந்தேசர். அம்மை மலையரசி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருப்பேரநகர்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி அப்பக்குடத்தான். சத்தி கமலவல்லி. மிருமழிசையாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் என்னும் நால்வராலும் பாடப்பட்டுள்ளது

திருப்பேரூர்

கொங்கு நாட்டின் கணுள்ள ஒருசிவஸ்தலம். இஃது மேலைச்சிதம்பரமெனவும் படும். சுவாமி பட்டீச்சுரர். அம்மை பச்சைநாயகி. ஸ்தல விருடிங்கள் பிறவாப்புளியும்,அரசம், இறவாப்பனையும், முசுகுந்தன் குரங்குமுகம் நீங்கி மனிதர் முகம் பெற்ற தலம். சுந்தரராற் பிற பதிகங்களிலே வைத்துப்பாடப்பட்ட தலம்

திருப்பேரெயில்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். சுவாமி சகலபவனேசுவரர் அம்மை மேகலாம்பாள். அப்பராற் பாடப்பட்டது

திருப்பைஞ்ஞலி

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்சுவாமி மாற்றறிவரதேச்சுரர். அம்மை வாலசவுந்தரி. இங்குள்ள இரத்தினசபையிலாடி யருளும் நடேசர் இரத்தினசபாபதமி யெனப்படுவர்.மூவராலும் பாடப்பட்டுள்ளது

திருப்போரூர்

திருவான்மியூருக்குத் தெற்கே சமுத்திரதீரத்திலுள்ள சுப்பிரமணியஸ்தலம்

திருமங்கலக்குடி

இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். அம்மை மங்களநாயகி. அரசிறைப்பொருளை ஆலயத்திருப்பணிக்குச் செலவுசெய்து விட்டு அரசனுக்கஞ்சி உயிர்துறந்த ஒரு சிவபக்தர்க்கு உயிர்கொடுத்த சிவஸ்தலம். அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது

திருமங்கைபுரம்

பாண்டி நாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது கோவிற்பட்டி எனவும்படும். சுவாமி பூவணலிங்கேச்சுரர். அம்மை செண்பகவல்லி. சுந்தரராற் பாடப்பட்டது

திருமங்கையாழ்வார்

இவர் கலியுகம் நானூற்றறுபதின் மேல்திருநகரிலே நீலனென்னுமொரு சூத்திரனுக்குப் புத்திரராகப் பிறந்தவர். இவரே ஸ்ரீரங்கத்துக் கோபுரத்திருப்பணிசெய்த விஷ்ணுபத்தர். இவர் பத்தினியார் குமுதவல்லி. இவர் விஷ்ணு பத்தராவதற்கு முன் ஆறலைக்குங்கள்வர். துறவுபூண்ட பின் ஆழ்வார் பன்னிருவருள் இவரே சிறந்தவர். நாலாயிரப்பிரபந்தத்துட் பெரிய திருமொழி இவர் திருவாய்மலர்ந்த தேன்பாமாலை

திருமணஞ்சேரி

இது சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையிலுள்ளது. சுவாமி அருள்வள்ளனாயகேச்சுரர். அம்மை யாழின்மென்மொழியம்மை. திருநாவுக்கரசர் திருஞானசம்பந்த ரென்னுமிருவராலும் பாடப்பட்டது

திருமணவைமாநகரம்

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மங்களேச்சுரர். அம்மை மங்களாம்பிகை

திருமணிக்கூடம்

காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி மணிக்கூடநாயகர். சத்தி திருமாமகள். திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருமந்திரம்

திருமூலர் செய்தருளிய நூல். அது சரியை கிரியை யோகம் ஞானமென்னு நான்கு பாதங்களையுமெடுத்துக் கூறுவது. வேதாகமப் பொருளை யாராய்ந்தவர்க்கே அந்நூல் நன்கு புலப்படும். அது மூவாயிரம் மந்திரங்களையுடையது. திருமூலர் காண்க

திருமந்திரேச்சுரம்

பாண்டிநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம்

திருமயிலை

சிவநேசர் இறந்து போன தமது பெணணினுடைய எலும்புச்சாம்பரைச் சம்பந்தமூர்த்தி முன்வைக்க, அவர், பூம்பாவைத் திருப்பதிகம் பாடி அதனை உருப்பெற்றெழும்பச் செய்த சிவஸ்தலம். இது திருவொற்றியூருக்குத் தெற்கே சமுத்திரதீரத்துக்குச் சமீபத்திலேயுள்ளது. திருவள்ளுவர் பிறக்கப்பெற்ற ஸ்தலமுமிதுவே. சுவாமி கபாலீச்சுரர்.அம்மை கற்பகவல்லி. இது திருஞானசம்பந்த சுவாமிகளாலே பாடப்பட்ட ஸ்தலம்

திருமயேந்திரப்பள்ளி

சோழநாட்டிலே கொள்ளிடநதி தீரத்திலுள்ள சிவஸ்தலம். இது திருக்கோயிலினுள்ளேயிருந்த தீபத்தைத் தூண்டிய எலிக்குச் சிவபெருமான் நரப்பிறப்பருளிய சிவஸ்தலம். சுவாமி திருமேனி அழகேச்சுரர். அம்மை முல்லைநகைவடிவம்மை. இது திருஞானசம்பந்தசுவாமிகளாற் பாடப்பட்ட ஸ்தலம்

திருமருகல்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மாணிக்கவணணஈச்சுரர். அம்மை வண்டுவார்குழலி. திருநாவுக்கரசராலும் திருஞானசம்பந்தராலும் பாடப்பட்டுள்ளது

திருமறம்

கல்லாடர் கண்ணப்பதேவர் மீது செய்த நூல். நக்கீரர் செய்தது

திருமறைக்காடு

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். வேதாரணியமெனப்படுவ மிதுவே. சுவாமி மறைக்காட்டீச்சுரர். அம்மை யாழைப்பழித்த மொழியம்மை. சுமயகுரவர் மூவராலும் பாடப்பட்ட ஸ்தலம்

திருமலை

கைலாசம். திருவேங்கடமலை. இது வடநாட்டு விஷ்ணுஸ்தலங்களுளொன்று

திருமழபரடி

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி வச்சிரத்தம்பநாதேச்சுரர். அம்மை அழகம்பிகை. சமயகுரவர் மூவராலும் பாடப்பட்டுள்ளது

திருமழிசையாழ்வார்

திருமழிசையிலே பிருகுவுக்கு ஒரப்சரஸ்திரியிடத்திற் பிறந்தவர். இக்குழந்தையைத் தாய் அவ்விடத்தில் விட்டேக, அதனை யிழிகுலத்தானொரு பக்தன் கண்டெடுத்துப் போய்வளர்த்தான். இவர் துவாபரயுகாந்தத்திலே பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் என்னு மூவரும் பிறந்து மூன்றுமாசஞ் சென்ற பின்னர்ப் பிறந்தவர். இவர் பாடிய பாமாலை நாலாயிரப்பிரபந்தத்திற் சேர்க்கப்பட்டுள்ளது

திருமாகறல்

காஞ்சிபுரத்துக்குத் தெற்கேயுள்ள சிவஸ்தலம்.சுவாமி அடைக்கலங்காத்தவர். அம்மை புவனநாயகி. திருஞானசம்பந்தராற் பாடப்பட்டஸ்தலம்

திருமாணிகுழி

திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கேயுள்ள சிவஸ்தலம். சுவாமி மாணிக்கமேனிவரதேச்சுரர். திருஞானசம்பந்தராற் பாடப்பட்டதலம்

திருமாந்துறை

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி ஆம்பிரவனேச்சுரர். அம்மை அழகாலுயர்ந்தஅம்மை. திருஞானசம்பந்த சுவாமிகளாற் பாடப்பட்டுள்ளது

திருமாற்போறு

விஷ்ணு பூசித்துச் சக்கிரம் பெற்ற சிவஸ்தலம். இது காஞ்சீபுரத்துக்கு வடபாலில் உள்ளது. சுவாமி மால்வணங்கீச்சுரர்.அம்மை கருணைநாயகி. திருநாவுக்கரசராலும் திருஞானசம்பந்தராலும் பாடப்பட்டஸ்தலம்

திருமாலிருஞ்சோலை

பாண்டிநாட்டிலுள்ள விஷ்ணு ஸ்தலம் சுவாமி மாலலங்காரர். சத்தி சௌந்தரியவல்லி. நம்மாழ்வார். குலசேகராழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் என்னுமிவர்களாற் பாடப்பட்டுள்ளது

திருமீயச்சூரிளங்கோயில்

இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி சகலபுவனேச்சுரர். அம்மை மேகலாம்பாள். திருநாவுக்கரசராற் பாடப்பட்டது

திருமீயச்சூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது பேராளமெனவும்படுமம். சுவாமி திருமுயற்சிநாதேச்சரர்

திருமுண்டீச்சுரம்

நடுநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி முண்டீச்சுரர், அம்மை கானார்குழலி. திருநாவுக்கரசராற் பாடப்பட்டது

திருமுதுகுன்றம்

நடு நாட்டிலே மணிமுத்தாநதி தீரத்திலேயுள்ள ஒரு சிவஸ்தலம். சுந்தரமூர்த்தி நாயனார் மணிமுத்தா நதியிலிட்டுத் திருவாரூர்க்குளத்திலே எடுத்த பன்னீராயிரம் பொன்னையும் சிவபெருமானிடத்திற் பெற்றது இத்தலத்திலேயே. சுவாமிபெயர் பழமலைநாதர், அம்மை பெரியநாயகி இத்தலம் விருத்தாசலம் எனவும்படும். மூவராலும் பாடப்பட்டது. கற்பனாலங்கார பண்டாரமாகிய துறைமங்கலம் சிவப்பிரகாசரும் நான்மணிமாலை பெரியநாயகி விருத்தமுதலியவற்றா லித்தலத்தைப் பாடினர். வானோர்தொழுநின் பலிப்பாத்திரத்தைவனைந்தநீ, தானோவெனச் சக்கரந்தான் சுழற்றத் தகுங்குயத்தி, யானோர்குயவன் மெய்யென்றேமுது குன்றிறையியம்ப, நானோவொருசிற்றிடைச்சி யென்றாளந்நறுநுதலே என்பது நவமணிமாலையுள் ஒன்று

திருமுருகன்பூண்டி

கொங்கு நாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிமுருகநாதர்

திருமுருகாற்றுப்படை

நக்கீரர் சுப்பிரமணியக்கடவுளினது பாரக்கிரமங்களையும் பெருமைகளையும் அமைத்துப்பாடி அவர் அருள் பெற்ற நூல். பத்துப்பாட்டு என்னும் நூலினுள்ளே முதற்பாட்டு. முந்நூற்றுப் பதினெழடிகளை யுடையது. நச்சினார்க்கினியரா லுரையிடப்பட்டது. இந்நூலைப் பந்தியோடு வட்டம் பண்ணிவந்தால் சுப்பிரமணியக்கடவுள் விரைந்து அநுக்கிரகம் புரிவரெனக் கொண்டு அநேகர் அங்ஙனஞ் செய்வது பண்டுதொட்டின்று முள்ளவழக்கம்

திருமுறப்பநாடு

பாண்டி நாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்

திருமூக்கீச்சுரம்

சோழநாட்டிலே குடமுருட்டிநதிதீரத்திலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பஞ்சவர்ணநாதேச்சுரர், அம்மை காந்திமதியம்மை. சம்பந்தராற் பாடப்பட்டது

திருமூலநகரம்

பாண்டிநாட்டின் கணுள்ள ஓரு சிவஸ்தலம்

திருமூலநாதேசுவரர்

திருப்பாற்றுறையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

திருமூலநாயனார்

நந்திதேவர்மாணாக்கராகிய சிவயோகியாரென்பவர், அகஸ்தியரைக் காணும் பொருட்டுத் தெற்கு நோக்கிச் செல்லும் வழியிலே திருவாவடுதுறையில் மூலனென்னுமொரிடையன் இறந்துகிடக்க. அவன் மேய்த்த பசுக்கள் நின்று கதறி அழுதலைக்கண்டு பரிவுற்று அவன் காயத்திற் பிரவேசித்து, அவனைப் போல அவைகளை மேய்த்து ஆற்றிவிட்டுத் திரும்பிவந்து தமது சரீரத்தைத்தேடி அதனைக் காணாமையால் அம்மூலன் சரீரத்தோடு தானே அங்கிருந்து மூவாயிரம் வருடம் யோகஞ்சாதித்த இவர் வருடத்துக்கு ஒருமந்திரமாக மூவாயிரம் மந்திரங்களை அருளிச்செய்தவர். அவற்றின்றொகுதி திருமந்திரமெனப்படும். அண்டபிண்டங்களின் தத்துவ சொரூபத்தை அநுபவப்பிரத்தி யடிமாகவுணர்ந்து உலகத்துக்கு வெளியிட்ட மகாஞானிகளுள்ளே இவர் தலைமை பெற்றவர்அவருடைய உபதேசமெல்லாம் பெரும்பாலும் ரூபகமும் பரிபாஷையுமாகவே யிருக்கும். சித்தின்றிச் சடமும் சடமின்றிச் சித்துமில்லையென்பது அவர் சித்தாந்தமாம். அணுவுளவனுமவனுளணுவுங் ~ கணுவற நின்றகலப்பஃ துணரா ~இணையிலியீசனவனெங்குமாகித் ~ தணிடவற நின்ற சாராசரந்தானே சீவனுக்கு வடிவுகூறிய திருமந்திரம் வருமாறு: மேவிய சீவன் வடிவது சொல்லிடிற் ~ கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு ~ மேவிய கூறதுவாயிர மாயினா ~ லாவியின் கூறு நூறாயிரத் தொன்றே பஞ்சேந்திரியங்களையும் அடக்குதல் கூடாதென்பதும், அடக்குங்கால் அறிவில்லாத சடத்தின் கதியாமென்பதும் அவைதாமேயடங்கும பாயமறிவதே அறிவு என்பதும் அவர் கூறிய, அஞ்சுமடக்கடக்கென்பரறிவிலா ~ரஞ்சுமடக்கும மரமிங்கில்லை ~ யஞ்சுமடக்கி லசேதனமா மென்றிட் ~ டஞ்சு மடக்காவறிவறிந்தேனே என்னுந் திருமந்திரத்தானறிக. அவர் கூறும் ஞானபூசைவருமாறு: உள்ளம் பெருங்கோயிலூமுடம் பாலயம் ~ வள்ளற்பிரானார்க்கு பாய் கோபுரவாயில் ~ தெள்ளத்தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்மங் ~ கள்ளப்புலனைந்துந் காளாமணிவிளக்கே இன்னோரன்ன திவ்வியோபதேசங்கள் திருமந்திரத்தினுள்ளே அளவில்வாதலின் அவற்றைச் சமுத்திரகலசநியமாக வெடுத்துக்காட்டல் எனிதன்றாம்

திருமூழிக்களம்

மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி திருமூழிக்களநாதன், சத்தி மதுரநாரணி. நம்மாழ்வாராற் பாடப்பட்டது

திருமெய்யம்

பாண்டி நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி சத்தியகிரிநாதன், சத்தி அத்திவல்லி. இது திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருமேனியழகர்

திருமயேந்திரப்பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர். திருவேட்டக்குடியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

திருமோகூர்

பாண்டிநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

திருவக்கரை

திரு அச்சிறுபாக்கத்துக்குத் தென்மேற்றிசையிலேயுள்ள ஒரு சிவஸ்தலம். இங்கே ஒரு மடாதீனமுமுளது

திருவஞ்சைக்களம்

மலைநாட்டிலுள்ள ஒருசிவஸ்தலம். பரசுராமன் தாயைக்கொன்ற பழிதீர்த்ததும் சுந்தரமூர்த்திகள் வெள்ளையானை பெற்றது மித்தலத்மேயாம் சுவாமி அஞ்சைக்களத்தீசர், அம்மை உமை. சேரமான்பெருமாணாயனார் திருத்தொண்டு செய்த திருந்ததலமிதுவே

திருவடதளி

காவிரியின் தென்கரையிலுள்ள சிவஸ்தலம். சுவாமி வடதளிநாயகர், அம்மை கௌரியம்பிகை திருநாவுக்கரசர் சுவாமி தரிசனஞ் செய்யப்புக்கபோது அதற்கிடையூறு செய்த சமணரை அரசனாற்றண்டிப்பித்த தலம்

திருவடமுல்லைவாயில்

இது திருவொற்றியூருக்குத் தென்மேற்றிசையிலே திருப்பாசூருக்குத் தெற்கே சமீபத்துள்ள சிவஸ்தலம். சுந்தரமூர்த்திநாயனார் சங்கிலியார் பொருட்டுக் கண்ணிழந்து கவன்று பதிகம் பாடியதலம். சுவாமி பாசுபதேச்சுரர், அம்மை கொடியிடையாள். முல்லைக்கொடியினுள்ளே மறைந்துகிடந்து, தொண்டைமான் தன் யானையின் காலைச்சிக்கிய அக்கொடியை வெட்டியபோது வெளிப்பட்ட சிவலிங்கமாதலின் அதனையுடையதலம இப்பெயர் பெறுவதாயிற்று. தென்றிசையிலு மொருமுல்லைவாயிலுண்மையின் வடவென்னு மடை பெற்றது

திருவடவாலவாய்

இது மதுரையின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். இது இடைக்காடன் பொருட்டு ஆலவாயினின்றும் சிவபெருமான் நீங்கி எழுந்தருளி இருந்ததலம். இது வைகையின் தென்கரையிலுள்ளது

திருவடுகூர்

திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கேயுள்ள சிவஸ்தலம். சுவாமி வடுகேச்சுரர், அம்மை வடுவகிர்க்கண்ணி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருவட்டபுயங்கம்

தொண்டை நாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி சக்கரராஜன், சத்தி பதுமவல்லி. பேரியாழ்வார் திருமங்கையாழ்வார் என்னுமிருவராலும் பாடப்பட்டது

திருவட்டாலு

மலை நாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி ஆதிகேசவன், சத்தி மரகதவல்லி. நம்மாழ்வாராற் பாடப்பட்டது

திருவண்டாம்பாலை

வந்தோமிப்பாலே யென்பது வண்டாம் பாலையென மருவிற்று. திருவாரூருக்குச் சமீபத்தேயுள்ள ஒரு சிவஸ்தலம். சுந்தரர் சிவபிரானை ஏவல் கொண்டமைக்காக அவரிருக்குந்திருவாரூரை மிதிப்பதில்லையென்னும் விரதம்பூண்டு எல்லைகடந்திருந்த விறன்மிண்ட நாயனாரைச் சிவபிரான் சோதிக்குமாறு வேற்றுருக் கொண்டு சென்று அவர் முன்னே நின்று திருவாரூரென்ன, அவர் சினந்து துரத்தச் சிவபிரான் புறங்கொடுத்தோடித் திருவாரூரெல்லைக்குள் வந்து வந்தோமிப்பாலே யென்றமையிடன் அத்தலம் இப்பெயர்த்தாயிற்று

திருவண்புருஷோத்தமம்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி புருஷோத்தமன், சத்தி புருஷோத்தமவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருவண்வண்டூர்

மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பாம்பணையப்பன், சத்தி கமலநாயகி. நம்மாழ்வாராற் பாடப்பட்டது

திருவதிகைவீரட்டானம்

வித்துன்மாலி முதலிய திரிபுராசுரர்களைச் சிவபெருமான் நகைத்தெரித்த சிவஸ்தலம். இது கெடிலநதி தீரத்திலுள்ளது. இத்தலத்திலேயே திருநாவுக்கரசு சுவாமிகள் சூலைநோய் தீரப்பெற்றுச் சைவத்திற் பிரவேசித்தது. சுமயாசாரியர் மூவரானும் பாடப்பட்டது

திருவநந்தபுரம்

மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி அநந்தபதுமநாபன், சத்திஹரிலக்ஷூமி. நம்மாழ்வார் பெரியாழ்வாரிருவராலும் பாடப்பட்டது. இத்தலம் மலைநாட்டரசர்க்கு இன்று மிராஜ தானியாகவுள்ளது. இக்காலத்திலே சுதேசராஜாக்களது ஆதீனத்திலுள்ள ஆலயங்களுள் இது மிக்க செல்வத்தோடு நித்திய நைமித்திகங்கள் குறைவுறாது நடக்கப் பெற்றுள்ளது

திருவன்னியூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். நாவுக்கரசராற் பாடப்பட்டது

திருவயிந்திரபுரம்

நடுநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி தெய்வநாயகர், சத்தி வைகுந்தநாயகி. இது சிவபத்தியிலே முதிர்ந்த வொரு சோழன். இவ்வாலயத்தைச் சிவாலயமாக்க வெத்தனித்தமையை யுணர்ந்த தெய்வநாயகப் பெருமான் தாம் தியானித்தார் தியான ரூபமாக நிற்கும் அகண்டாகாரப் பொருளாயுள்ள வரென்பதும் தாம் வெறு சிவம் வேறாகாத அபேதமூர்த்தியென்பதுங் காட்டுமாற அச்சோழனுக்குத் திரிநேத்திரமும் திரிசூலமுமுடையராய்த் தரிசமங் கொடுத்து அவனைப் பணிவித்தருளியதலம். திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர்க்கு மேல்பாலிலுள்ளது

திருவரகுணமங்கை

பாண்டிநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். நம்மாழ்வாராற் பாடப்பட்டது

திருவரங்கம்பெரியகோயில்

இஃது எட்டுச் சுயம்புத் தலங்களுளொன்று. தென்னாட்டிலுள்ள விஷ்ணுஸ்தலங்களுள்ளே முக்கியமானது, சீரங்கமென்றும் ஸ்ரீரங்கமென்றும் வழங்கப்படுவது. இது காவிரியாற்றிடைக் குறையின் கண்ணே யிருத்தலின் இப்பெயர்த்தாயிற்று. ஏழுமதில்களாற் சூழப்பட்டுள்ளது. திரிசிரபுரத்துக் கணித்தாகவுள்ளது. மிக்க அலங்காரம் பொருந்திய பெரிய கோபுரங்களையுடையது. குளிர்ந்தடர்ந்த சோலைகளையுடையது. முகோற்சவ காலங்களிலே நாற்றிசையினின்றும் பெருந்திரட்சனங்கள் சென்று தரிசிக்கப் பெறுவது. திருவரங்கத்தந்தாதி முதலிய அநேகபிரபந்தங்களைப் பெற்று விளங்குவது. பத்து ஆழ்வாராற் பாடப்பட்டது

திருவரிஞ்சையூர்

இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம்

திருவலஞ்சுழி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருவலம்புரம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம். சுவாமி வலம்புரிநாதேச்சுரர், அம்மை வடுவகீர்க்கண்ணி

திருவலிதாயம்

இது தொண்டை நாட்டிலுள்ள சிவஸ்தலங்களுள் ஒன்று. இது திருவொற்றியூருக்குத் தென்மேற்றிசையிலுள்ளது. சுவாமி திருவலிதாயநாதேச்சுரர். அம்மை தாயம்மை. சம்பந்தராற் பாடப்பட்டது

திருவலிவலம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுமயாசிரியர் மூவராலும் பாடப்பட்டது

திருவல்லம்

இது பனங்காட்டூருக்கு வடக்கே துளவநாட்டோரத்திலே வல்லாளனென்று மரசனால் பூசிக்கப்பட்டதாயுள்ள சிவஸ்தலம்

திருவல்லவாழ்

மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி கோலப்பிரான், சத்தி செல்வத்திருக்கொழுந்துவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருவல்லிக்கேணி

இது தொண்டைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி பார்த்தசாரதி. சத்தி வேதவல்லி

திருவள்ளக்குளம்

காவிரியின் வடகரையின் கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி கண்ணன், சக்தி நன்மலராள். திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருவள்ளியூர்

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிமுருகக்கடவுள், சத்தி வள்ளிநாயகி

திருவள்ளுவர்

இவர் பிரமதேவருடைய அமிசாவதாரமாகப் பகவனாரென்பவருக்கு ஆதியென்பவல் வயிற்றிலே பிறந்து. மைலாப்பூரிலே ஒருவள்ளுவன் மனையில் வளர்ந்து, வேதசாஸ்திர நிபுணராகி அவற்றின் சாரமாய திருக்குறளைப்பாடிச் சங்கப்பலகையேறி அரங்கேற்றினவர். குபிலரகவலின்படி, கபிலர் ஒளவை முதலாயினோர் இவர்க்குச் சகோதரர். இவ்வள்ளுவருக்குச் சங்கத்தார் சமாசனங்கொடுக்கப் பின்வாங்கின ரென்பதும் பின்னர் அசரீரிவாக்காலுடன் பட்டனரென்பதும் திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோ, டுரத்தகு நற்பலகையொக்க விருக்க வுத்திரசன்மர் என்னும் வெண்பாவாற் கொள்ளப்படும். திருவள்ளுவர், தாமேயெல்லா மேதியுணர்ந்தவர்.அவர் பிறரெவரிடத்துங் கல்லாதவர். இவ்வுண்மை நக்கீரர் கூறிய தானேமுழுதுணர்ந்து என்னும் வெண்பாவாற் பெறப்படும். இவர் திருக்குறளைக் கொண்டுபொய்ச் சங்கத்திலரங்கேற்றிய காலத்தில் அரசுவீற்றிருந்த பாண்டியன் உக்கிரப்பெருவழுதி. திருக்குறளுக்குப் பாமாலை சூட்டினோர் ஐம்பதோடைவருள் உக்கிரப் பெருவழுதியு மொருவன். திருவள்ளுவர் செய்த நூல் வைதிகசமயத்தினரால் மாத்திரமன்று. உலகத்துச் சமயிகள் யாவராலும் மெய்நூலெனக்கொண்டு மெச்சித்தலை வணங்கப்படும். நூலென்பது, கல்லாடர் எப்பாலவருமியைபவெ வள்ளுவனார் முப்பான் மொழிந்த மொழி எனக் கூறியிருத்தலின் அக்காலத்தவர்க்கு மொத்த துணிபாம். வள்ளுவர் நூலிலே யாவர்க்கும் மங்கீகாரமாகிய பொருட்சிறப்பும் இலக்கிய விலக்கண வனப்புமமைந்து கிடத்தலினால் வள்ளுவர் காலத்திலேயே அது பிரமாணநூலாகத் தொடங்கிவிட்டது. மலிவுவருமிடங்கடோறும் இது வள்ளுவன் மொழியென்றால் அவ்வளவில் மலைவுநீங்கிவிடும். கண்ணுதல் கலியிலுங் குற்றங்கற்பித்த நக்கீரரே தமது இறையனாரகப்பொருளுரையிலே குறளைப் பிரமாணமாக எடுத்தாண்டு போயின ரென்றால் மற்றோர் கொள்வது புதுமையாகாது. சேரமான்பெரமாணாயனார் வள்ளுவர் திருக்குறளைத் தமது நூலிலெடுத்த தோதியிருத்தலால் வள்ளுவர் சேரமான் பெருமாணாயனாருக்கு முன்னுள்ளவரென்பது நிச்சயிக்கப்படும். சிலர் ஒளவை சேரமான்பெருமாணாயனார் காலத்திருந்தமையால் திருவள்ளுவரும் சேரமான் காலத்தவரேயாதல் வேண்டுமென்பர். ஓளவையார் அதிகமான் கொடுத்த அற்புத நெல்லிக்கனியுண்டு ஆயுள்நீட்டம் பெற்றுப் பன்னூறாண்டுயிர் வாழ்ந்திருந்தவர். அவருடைய ஆயுட்காலத்திலொருவர் பின்னொருவரா யெத்தனையோவரசரிருந்து போயினர். ஆதலால் ஒளவையாருடைய வார்த்திக தசையிலிருந்தவர்களுடைய காலத்தைக் கொண்டு வள்ளுவர் காலத்தை நிச்சயித்தல் கூடாது. ஊக்கிரப்பெருவழுதி கடைச்சங்கத்துக் கடையரசன். கடைச் சங்கம் ஆயிரத்தெண்ணூறு வருஷங்களுக்கு முன்னிருந்தது. இற்றைக்கு ஆயிரத்தெழுநூற்றறு பத்தைந்து வருஷங்களுக்கு முன்னே விளங்கிய கரிகாற்சோழன் காலத்து நூல்களாகிய மணிமேகலையினுள்ளுஞ் சிலப்பதிகாரத்தினுள்ளும் மேற்கொள்ளப்பட்ட திருக்குறள் அவ்விருநூல்களுக்கு முன்னர்த் தோன்றிய தென்பது தானேபோதரும். சிலப்பதிகார நூற்காலம் ஆயிரத்தெழுநூற்றறுபத்தைந்து வருஷங்களுக்கு முற்பட்டதென்பது மகாவமிசமென்னு நூலினுள்ளே வருங் கயவாது காலத்தாற் றுணியப்படும். ஆகவே திருவள்ளுவர் காலம் ஆயிரத்தெண்ணூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னுள்ளதென்பது நன்றாக நிச்சயிக்கப்படும். இன்னும், இலங்கையை வெற்றிகொண்டு இற்றைக்கு இரண்டாயிரத்தறுபது வருஷங்களுக்கு முன்னர் அரசுபுரிந்த சோழ மண்டலத்தானாகிய ஏலேலசிங்கனுடைய பௌத்திர பௌதிரனுக்குப் பௌத்திரனாகிய ஏலேலசிங்கன் என்னும் பிரபுவுக்குத் திருவள்ளுவர் நண்பினரென்றும், அப்பிரபுவினது கலமொன்று கடலோடி மீண்டுவந்து பாரிற் பொறுத்துமிதவாது கிடந்தபோது திருவள்ளுவர், ஏலேலையா வென்று கூறித் தொட்டபோது மிதந்ததென்றும், பாரமிழுப்போர் இன்றும் ஏலேலையா வென்று சொல்லியிழுப்பது அன்று தொட்டவழக்கென்றும் வரும் கன்னபரம்பரையாலும் மேலே செய்த காலநிச்சயம் வியவஸ் தாபனமாம். இரண்டாயிரத்தறுபதில் ஏலேலசிங்கனுடைய பிறசந்ததி ஆறினுக்கும் இருநூறு வருஷம் வாங்க எஞ்சுவது ஆயிரத்தெண்ணூற்றறுபது. ஏலேலசிங்கன் இலங்கையை வெற்றி கொண்டணகாலம் இரண்டாயிரத்தறுபது வருஷங்களுக்கு முன்னரென்பது மகாவமிசத்திற்காண்க. சிங்கன் என்னும் பட்டப்பெயர் சோழமண்டலத்திலுள்ள இவனுக்கு வந்தது தன்மரபினர் இலங்கையரசு பெற்ற காலத்தப்பெயரோடு விளங்கினமையாற் போலும். யேசுசமயிகள் தமது சமயத்தவராகிய தாமசு முனிவர் மைலாப்பூரில் வந்திருந்தபோது திருவள்ளுவரென்னும் பெயரோடு விளங்கினரென்றும், அவர்காலம் யேசுவுக்குப்பின் ஐம்பதாம் வருஷமென்றுங்கூறும் வெளிற்றநுமானவுரையு மிந்நிண்ணயத்துக் கொருசான்றாம். இனித் திருவள்ளுவமாலையிற் கல்லாடராற் கூறப்பட்ட வெண்பாவும், கல்லாடமென்னும் நூலிலே அவர் கூறிய அகவற்கூறும் ஒத்தகருத்தினவாதலின், திருவள்ளுவமாலை பிற்காலத்தவராற் படியொட்டப்பட்டதென்பது அறியாமையின் பாலது. அவவை வருமாறு : திருவள்ளுவ மாலையிற் கல்லாடந் கூறியது :.எப்பாலவருமியைபவே வள்ளுவனார் முப்பான் மொழிந்தமொழி கல்லாடம்.சமயக்கணக்கர்மதிவழிகூறா துலகியல்கூறிப் பொருளிதுவென்ற வள்ளுவன்றனக்கு வளர்கவிப்புலவர்முன்.. திருவள்ளுவர் உலகியல் நெறி வீட்டியல் நெறி இரண்டும் நன்றாகவிசாரித் துண்மையுணர்ந்தவர். மாந்தர்க்கு இல்லறம் துறவறமென்னும் இருவகையறங்களுமே உரியனவென்பதும், அவற்றுள் துறவறத்தை நோக்கியே இல்லறம் சாதிக்கத்தக்க தென்பதும், வீடு தேடுவார்க்குத் துறவறமும். ஊலகந் தேடுவார்க்கு இல்லறமுமுரியன வென்பதும் அவர் சித்தாந்தம். இல்லறவியல்பு கூறப்புகந்த திருவள்ளுவர் அன்பிலாரெல்லாந் தமக்குரிய ரன்புடையா, ரென்புமரியர் பிறர்க்கு என்னுந் திருக்குறளால் அன்பே அதற்குச் சிறந்த விலக்கணமென்றும். துறவுக் கிலக்கணங் கூறுமிடத்து, அவாவென்ப வெல்லாவுயிர்க்கு மெஞ்ஞான்றுந், தவர அப்பிறப்பீனும் வித்து என்னுங்குறளால் அதற்கு அவாவின்மையே சிறப்பிலக்கணமென்றும், சித்தாந்தஞ் செய்திருத்தலை உன்றிநோக்கினால் அவருடைய அற்புததெய்வப்புலமையினாற்றல் நன்கு புலப்படும். திருவள்ளுவர் நூற்று முப்பத்துமூன்று விஷயங்களெடுத்து நூல்யாத்தனர். ஓவ்வொரு விஷயங்களும் எஞ்சாமற் கடைபோக அவரால் விசாரித்து நிச்சயம் பண்ணப்பட்டிருத்தலின், எத்துணைப் புத்திநுண்மையுடையாரும் ஒரு விஷயத்திலாயினும் ஒன்றைக் கூட்டவேனுங் குறைக்க வேனும் இடங்காணமாட்டார். திருவள்ளுவர் எடுத்துக் கொண்ட விஷயங்களுட் சிலவற்றைத் தாமாக விசாரித்த பிறபாஷைப் புலவருட்டலையானோர் அவ்விஷயங்கள் மேற்கூறியவற்றையு மொப்புநொக்குமிடத்துத் திருவள்ளுவர் கருத்துக்களே விஞ்சிநிற்றலின்,அவரின் விஞ்சினோர் பிறரில்லை எனலே சித்தாந்தமாம். அதுபற்றியே திருக்குறள் கிரேக்க பிராஞ்சிய லத்தீன் ஆங்கில முதலிய பாஷைகளிலே மொழிபெயர்க்கப்பட்டு அத்தேயங்களிலே சென்று வழங்குவதாயிற்று. திருவள்ளுவர்க்கு முன்னும், முனிவரும், புலவரும் அறம்பொருளின்பமென்னு முப்பாற்பொருளு மொருவாறெடுத்துக் கூறினாரேனும் அவரெல்லாம், திருவள்ளுவரைப் போலக் கேட்டார் நெஞ்சினுட் பாய்ந்து பதிகொள்ளுமாறு சொல்லுஞ் சொல்வன்மையும் சாதுரியமுடையரல்லர். எழுத்து முதலாயவிலக்கண மெல்லாம் ~ பழுத்தினி துறங்கும் பள்ளி. என்ற புகழப்பட்ட திருக்குறட்சிறப்பு எழுத்தலடங்குவதன்று. திருவள்ளுவரை ஆரகதசமயியென்று சிலரும், சைவசமயியென்று பலரும் வாதிப்பர். ஆயினும் வைதிகாசாரங்களை மேற்கொண்டு நிற்குந்திருக்குறட் கருத்தை நோக்க அவரை ஆரகதரென்று சாதிக்கப்போந்தநியாயங் காண்கிலம்

திருவழுந்தூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இங்கே சோழராசாக்களுக்குச் சம்பந்திகளான வேளாளர்களிருந்தார்கள். சுவாமி வேதபரேக்சரர், அம்மை சௌந்தராம்பிகை

திருவழுவூர்

யானையையுரித்த சிவஸ்தலம். காவிரியின் வடகரையிலுள்ளது. சுவாமி மரவுரிநாதேச்சுரர், அம்மை வனமுலையம்மை

திருவாக்கூர்த்தான்றோன்றிமாடம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். நாவுக்கரசராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது

திருவாசகம்

மாணிக்கவாசக சுவாமிகளென்றுஞ் சிறப்புப் பெயர்பூண்ட திருவாதவூரடிகள் வேதத்தின் ஞானகாண்டப் பொருளைத் தோத்திரரூபமாகத் திருவாயமலர்ந்தருளிய தமிழ்வேதம். அது நமச்சிவாயவாழ்க என்றற்றொடக்கத்து அகவல் முதலிய நான்கும் முதலாக அச்சோப்பதிகமீறாகவுள்ள நாற்பத்தொன்பது ஒத்தினையுடையது. மாணிக்கவாசகர் காண்க

திருவாஞ்சயம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருவாடனை

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருவாதனூர்

காவிரியின் வடகரையின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி ஆண்டளக்குமையன். சத்தி ஸ்ரீரங்கநாயகி. திருமங்கையாழ்வார் பாடியது

திருவாதவூர்

பாண்டி நாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். இது மாணிக்கவாசகசுவாமிக்கு ஜனன ஸ்தானமாகவுள்ளது. சுவாமி வாதவூரீச்சுரர், அம்மை உமாதேவி

திருவானைக்கா

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். ஜம்புகெசுபர மெனவும்படும். சுவாமி ஜம்புநாயகர், அம்மை அகிலாண்டநாயகி. ஸ்தலவிருடிம் நாவல். அப்புலிங்கம். இத்தலம் நாவற்காடாயிருந்த பூர்வத்திலே ஒருமுனிவர் நாவற்கனியொன்றை எடுத்துப்போய்க் கைலையிற் சிவனுக்கு நிவேதித்தும் தாமுமுண்டபொழுது அக்கினியின் வித்து முளைத்தெழுந்து அவர் சிரசைத்துளைத்துக் கொண்டோங்க, முனிவர், சிவபிரான் அவ்விருடித்தின் கீழே என்றும் எழுந்தருளியிருக்குமாறு வேண்டி அவரை உடன்படுவித்துக் கொண்டு மீண்டிவ்வனத்தை யடைந்திருந்தார். அது பற்றி ஜம்புகேச்சுவரமெனப்பட்டது. ஆனை பூசித்தப் பேறு பெற்றமையின் ஆனைக்காவெனப் பட்டது. ஆனை சிவகணமாக, ஆனையோடு மாறாகி நின்று பூசித்த சிலந்தி கோச்செங்கட்சோழனாகப் பிறந்தது. இத்தலம் மூவராலும் பாடப்பட்டது. இது சீரங்கத்துக்கு அணித்தாகவுள்ளது

திருவான்மியூர்

மயிலாப்பூருக்குச் சமீபத்திலே தென்றிசையிலுள்ள சிவஸ்தலம். இங்குள்ளது வெள்ளைலிங்கம். வான்மீகர் பூசித்தமையால் வான்மீயூரெனப் பெயர் பெற்றது. அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது

திருவாப்பனூர்

இது பாண்டிநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி ஆப்பனூர்க்காரணர். அம்மை அம்பிகை. சம்பந்தராற் பாடப்பட்டது

திருவாமாத்தூர்

நடுநாட்டி லுள்ள ஒரு சிவஸ்தலம். திருஅண்ணாமலைக்குக் கீழ்த்திசையிலுள்ளது. சுவாமி காமார்த்தேச்சுரர், அம்மை அழகியநாயகி. சமயாசாரியர் மூவராலும் பாடப்பட்டது

திருவாய்ப்பாடி

வடநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி நவமோகன கிருஷ்ணன். சத்தி சத்தியபாமை. குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் என்னும் மூவராலும் பாடப்பட்டது

திருவாய்மூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.சுவாமி ஆத்மாநாதேச்சுரர், அம்மை உமாதேவி

திருவாரூர்

திருவாரூர் மூலட்டானங் காண்க

திருவாரூர் அறநெறி

திருவாரூரிலுள்ள சிவஸ்தலங்களுளொன்று. சுவாமி அகிலேச்சுரர், அம்மை அல்லியங்கோதை

திருவாரூர்ப்பரவையுண்மண்டளி

திருவாரூர் மூலட்டானத்துக்குச் சமீபத்திலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பரவையண்மண்டளீச்சுரர், அம்மை பஞ்சின் மெல்லடியம்மை. சுந்தரராற் பாடப்பட்டது

திருவாரூர்மும்மணிக்கோவை

சேரமான் பெருமாணாயனார் திருவாரூர் மீது செய்த நூல்

திருவாரூர்மூலட்டானம்

இது சுந்தரராலே திருவாரூர்ப்பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன்’’ என்று துதிக்கப்பட்ட பரபல சிவஸ்தலம். இது தியாகப்பெருமானை முசுகுந்தசக்கரவர்த்தி இந்திரன் பாற்பெற்று ஸ்தாபித்த சிவஸ்தலம். இது சப்தவிடங்க ஸ்தலங்களுள் மிகச் சிறந்தது. இத்திருவாரூர் சோழராஜாக்களுக்கு நெடுங்காலம் ராஜதானியாக விருந்தது. மநுநீதிகண்ட சோழன் அரசுசெய்யுங்காலத்திலே தன்மகன் தேர்ஊர்ந்து ஒரு பசுவின் கன்றைத் தேர்க்காலி லரைத்துக் கொன்றான் என்பதுணர்ந்து. அவ்வரசகுமாரனைத் தன்றேர்க்காலிலிட்டு அரைத்துக்கொன்று தாய்ப்பசுவின்றுயர் தீர்க்க முயன்று சிவாநுக்கிரகத்தால் கன்றும்மைந்தனு முயிர்பெற்றெழப்பெற்ற பெருங்கீர்த்தி வாய்ந்த தலமுமிதுவே. பரவையார்க்கும் இலக்கண விளக்கஞ்செய்த வைத்தியநாத நாவலர்க்கும் ஜன்மஸ்தலமுமிதுவே. இத்தலசம்பந்தமான சரித்திரங்கள் எண்ணில. சுவாமி வன்மீகநாதர், அம்மை அல்லியங்கோதை. மூவராலும் பாடப்பட்டது

திருவாறன்விளை

மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி ததிவாமனன். சத்தி பத்மாசனநாய்ச்சியார்

திருவாலங்காடு

இதுவே பழையனூர். இங்கே ரத்தினசபையிலே சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவஞ்செய்தருளுவர். காரைக்காலம்மையார் தொண்டு புரிந்திருந்த தலமும் இது. பழையனூர் நீலியால் வேளாளர் தீய்ப்பாய்ந்து புகழ் பெற்றதும் இவ்விடத்தேயாம். இது திருத்தணிகைக்குத் தென்கீழ்த்திசையிலுள்ளது. பட்டணத்தடிகள் வீடுநமக்குத் திருவாலங்காடு என்று துதித்ததும் இத்தலத்தையே. இச்சிவதலத்திலெழுந்தருளியிருக்கும் சிவமூர்த்தி ஊர்த்துவதாண்டவேச்சுரர், அம்மை வண்டார்குழலி. இது மூவராலும் பாடப்பட்டது

திருவாலங்காட்டுமூத்ததிருப்பதிகம்

காரைக்காலம்மையார் செய்த பிரபந்தங்கள் மூன்றனுளொன்று. தன்னை ஓதுபவர்க்கு மிக்க வைராக்கியமும் பிரபஞ்சவெறுப்புந்தருமியல்பினது. முற்றையவிரண்டும் திருவிரட்டை மணிமாலையும் அற்புதத் திருவந்தாதியுமாம்

திருவாலவாயடையார்

சொக்கநாதமூர்த்தி

திருவாலவாய்

மதுரைச் சிவஸ்தலம். இது சிவபெருமான் அறுபத்துநான்கு திருவிளையாடல்கள் செய்தருளியதலம். ஐவகைநதிக் கரையிலுள்ளது. சுவாமிசொக்கநாதர், அம்மை மீனாஷி. சர்ப்பம் வளைந்தெல்லையிட்ட நகரமாதலின் ஆலவாயெனப்பட்டது. அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது. இத்தலமான்மியம் பரஞ்சோதிமுனிவராலே தமிழிலே திருவிளையாடற் புராணமென்னும் பெயரினாலே ஆலாசியமெனப்படும். இங்குள்ள சிவாலயம் பாண்டியர்களாலே செய்யப்பட்ட திருப்பணி மிக்க பழைமையினையுடையது. துலக்கர் காலத்திலே பங்கமுற்றுப் பின்னர்த் திருத்தப்பட்டது

திருவாலிதிருநசரி

காவிரியின் வடகரையின்கணுள்ள ஒருவிஷ்ணுஸ்தலம். சுவாமி வயலாலிமணவாளன். சக்தி குமுதவல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருவாள்கொளிபுத்தூர்

திருமால் மாணிக்கத்தைவைத்துப் பூஜித்த சிவஸ்தலம். காவிரியின் வடகரையிலுள்ளது. சுவாமி மாணிக்க வண்ணேச்சரர், அம்மை வண்டமர்பூங்குழனாயகி. சுந்தரராலும் சம்பந்தராலும் பாடப்பட்டது

திருவாவடுதுறை

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மாசிலாமணீச்சுரர், அம்மை ஒப்பிலாமுலையம்மை. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சிவபெருமானிடத்து உலவாக்கிழி பெற்றருளிடயதலமுமிதுவே. திருநந்ததேவர் மாணாக்கராகிய சிவயோகியாரென்பவர் அகஸ்தியரைக் காணும் பொருட்டுத் தெற்கு நோக்கிச் செல்லும் வழியிலே இத்தலத்தில் மூலனென்னுமொரிடையனிறந்து கிடக்க, அவன் மேய்த்த பசுக்கள் நின்று கதறி அழுதலைக்கண்டு, அவன் காயத்திற்பிரவேசித்து அவனைப்போல் அவைகளை மேய்த்து ஆற்றிவிட்டுத் திரும்பிவந்து தமது சரீரத்திற் புகஎத்தனித்த பொழுது, அதனைக்காணாமையால் அச்சரீரத்தோடுதானே இங்கிருந்து மூவாயிரம் வருடம் யோகஞ் சாதித்தார். இவரே திருமூலநாயனாரெனப்படுவர். வருடத்திற்கு ஒருமந்திரமாக மூவாயிரமம் மந்திரங்களை அருளிச்செய்தவருமிவரே. அவற்றின் றொததிதருமந்திர மெனப்படும். கைலாசபரம்பரையிலே அவதரித்தவராகிய நமச்சிவாயமூர்த்திகள் மடாலயங்கொண்டதம் இத்தலமே. அவ்வாசாரியபரம்பரை இன்றுமுளது. நமச்சிவாயமூர்த்திகள் காலம் இற்றைக்கு அறுநூறு வருடங்களுக்கு முன்னுள்ளது. திருவாவடுதுறையாதீன பரம்பரையில் இப்போது ஞானமுடிபுனைந்திருப்பவர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிகர். இப்பெயரால் முன்னும் பலர் விளங்கினர். திராவிடமாபாடியஞ் செய்த சிவஞானமுனிவர் இம்மடாதீனத்தைச் சேர்ந்தவர். இத்தலம் சமயாசாரியர் மூவராலும் பாடப்பட்டது

திருவாவினன்குடி

பாண்டி நாட்டின் கணுள்ள ஒரு சுப்பிரமணிய ஸ்தலம்

திருவிசைப்பா

திருமாளிகைத்தேவர், சேந்தனார், கண்டராதித்தர், கருவூர்த்தேவர், பூந்துரத்தி நம்பிகாடவநம்பி, வேணாப்படிகள், திருவாலியமுதனார். புருடோத்தமநம்பி, சேதிராயர் என்னுமொன்பதின்மாராலுஞ் செய்யப்பட்ட பாடற்றொகுதி. சிவன்புகழை எடுத்துரைக்கும் பாக்களையுடையது என்றும், திவ்விய இசையினையுடைய பாக்களையுடையது என்றும் இருவகையாகப் பெயர்ப்பொருள் விரிப்ப

திருவிஜயமங்கை

இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது அருச்சுனன் பூசித்தமையின் இப்பெயர்த்தாயிற்று. அப்பர் சுந்தரர்களாற் பாடப்பட்டது

திருவிடவேந்தை

தொண்டைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். இது திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருவிடைமருதூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மருதப்பேச்சுரர், அம்மை நன்முலைநாயகி. இத்தலத்தைப்பற்றிய சரித்திரம் அநேகம். வரகுணதேவர் தம்மைப்பற்றி நின்ற கொலைப்பழிதீரப் பெற்ற தலமிதுவாதலின் இத்தலத்தின் கணுள்ள சாராசரமெல்லாம் சிவசொரூபமாகக்கண்டு சிவயோகியாகித் தமது அளப்பருஞ் செல்வங்களையும் மனைவியையஞ் சிவதொண்டுக்காக்கியிருந்தனர். சமயாசாரியர் மூவராலும் பாடப்பட்டது

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

பட்டணத்துப் பிள்ளையாரருளிச் செய்த ஒரு நூல்

திருவிடையாறு

நடுநாட்டிலே பெண்ணைந்தி தீரத்திலேயுள்ள சிவஸ்தலம். சுவாமி இடையாற்றீச்சுரர், அம்மை சிற்றிடைநாயகி. சுந்தரராற் பாடப்பட்டது

திருவிண்ணகரம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி உப்பிலியப்பன். அம்மை பூமிதேவி. நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பாடியது

திருவினநகர்

இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருவின்னம்பர்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருவியலூர்

இது காவிரியின் வடகரையிலுள்ள ஒருசிவஸ்தலம் சுவாமி யோகாநந்தேச்சுரர்,அம்மை சௌந்தரநாயகி. சம்பந்தராற் பாடப்பட்டது

திருவிரட்டைமணிமாலை

காரைக்காலம்மையார் செய்த பிரபந்தங்கள் மூன்றனுளொன்று

திருவிராமேச்சுரம்

பாண்டிநாட்டிலே சமுத்திரதீரத்திலேயுள்ள ஒரு திவ்விய சிவஸ்தலம். ராமனால் ஸ்தாபித்துப் பூஜிக்கப்பட்ட சிவலிங்கப்பெருமானை உடையமையால் ராமேச்சுரமெனப் பெயர் பெற்றது. இங்குள்ள தீர்த்தம் தனுக்கோடி தீர்த்தமெனப்பெயர் பெறும். இச்சிவஸ்தலம் பிரமஹத்தி முதலிய பாவங்களை நிக்கியருளுதலின்காசி முதலிய தூரதேசங்களினின்றும் நானாவருணத்தர்களும் வந்துதரிசித்துப் போகப்பெறுவது. இது ராமயணத்திலுங் கூறப்பட்டதலம். சுவமி ராமநாதர், அம்மை பர்வதவர்த்தனி. இத்தலம் சேதுபந்தனத்தலையிலுள்ளது. இது சேதுவெனவும் படும். இத்தலமான்மியத்தை நிரம்பவழகியதேசிகர் சேதுபுராண மென்னும் பெயராற் பாடினர்

திருவிரிஞ்சிபுரம்

இது பனங்காட்டூருக்கத் தென்மேற்றிசையிலேயுள்ள சிவஸ்தலம். மிளகுப்பொதிகொண்டு தனிமையிற் சென்ற ஒருவணிகன் அவ்விரவிலே தனக்கு வழி துணை வருவானுக்கு அப்பொதியிற் பாதி கூலியாகக்கொடுப்பதாக எண்ணியபோது சிவபெருமானே வழி துணையாகச்சென்று அவ்வணிகனிடம் மிளகுகைக்கொண்ட தலமிதுவாதலின் அங்கெழுந்தருளியிருக்கும் மூர்த்தி மார்க்கசகாயரெனப்படுவர். அருச்சகனிறந்து போக அவன் மகன் சிவசர்மனென்னும் மிகச்சிறுவன் சென்றருச்சிக்கச் சிவபெருமான் அதனை உவந்து திருமுடி சாய்த்த சிவஸ்தலம் இதுவே. இச்செய்தியைப் பட்டினத்தடிகளும் சரன்சாயு மென்னும் திருப்பாடலிலே அமைத்துப்பாடினர்

திருவிற்குடிவீரட்டானம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது சலந்தரனைச்சிரங் கொய்த விடம்

திருவிற்கோலம்

இது சிவசத்தி பூசித்த ஒரு சிவஸ்தலம்

திருவிற்றுவக்கோடு

மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

திருவிளமர்

இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது முசுகுந்தன்பூசித்த சப்தவிடங்கஸ் தலங்களுளொன்று. சுந்தரராற் பாடப்பட்டது

திருவிளையாடல்

சிவன் செயல்எல்லாம் பொதுப்படத் திருவிளையாடலேயாமாயினும், மதுரைசிலே சிவன் வெளிடப்படச் செய்தருளிய அற்புதச்செயல்கள் அறுபத்துநான்கும் திருவிளையாடல் என வழங்கும். அவைவருமாறு:. தன்மகனைக்கொன்ற பழிகொள்ளும் பொருட்டுத் துவஷ்டாவினாலே யாகத்திலே தோற்றுவித்து இந்திரனைக் கொல்லுமாறு ஏவிவிடப்பட்ட விருத்திராசுரனைக் கொன்ற இந்திரன், அப்பிரமஹத்தியால் ஒளியிழந்து தெளிவின்றித் திகைத்து ததிரிந்து கடம்பவதை, தையடைந்த போது, அப்பழியினீங்கியுயயுமாறு அவனுக்குச் சிவபிரான் அநுக்கிரகம் புரிந்ததும், அவன் அர்ச்சித்தற்குப் புஷ்பந்தேடிய போது ஒரு வாயிலே பொற்றாமரைகளைத் தோற்றுவித்ததுமாகிய செயல் முதலாந் திருவிளையாடல் இந்திரன் வருத்திராசுரனோடு பொருது அவனை வெல்லவியலாது முதுகிட்டோடி விஷ்ணுவையடைந்து வேண்ட, அவரனுக்கிரகித்தவாறு இந்திரன் பாற் கடற்புறத்திருந்த ததிசிமுனிவரையடுத்து அவருடைய முதுகென்பை வேண்டிய போது, அம்முனிவர்பிரான் நாய்நமதென நரிநமதெனப் பிதா தாய்நமதென பேய்நமதென மனமதிக்கும் வெற்றிபோ லாய்நமதெனப்படும். யாக்கையாரதே உறவினரின்றித் தனியே காட்டிலே நோயுற்று வலியற்று நிநைவற்றுக் கிடக்குங் காலத்திலே நாயும் நரியுங் கண்டு இவ்வுடலைத் தமதென்னும். வீட்டிலிருந்தால் தாயும் தந்தையும் தமதென்பர். மனமெவ்வாறு சென்றதோ அவ்வாறெல்லாம் நமது நமதெனப்படும். இவ்வுடல் யார்க்குரியதாகும்! துன்பத்தால் வருந்துவோரது துன்பங்களைத் துடைத்து அவர்க்கு நல்வாழ்வு தருமாறு எடுத்த இந்தவுடலைப் பயன்படுத்துவேன் என்று கூறித் தமதுயிரை விடுத்தனர். அவ்வுடலின் முதுகெலும்பை இந்திரனெடுத்து விசுவகர்மாவினாலே வச்சிராயுதத்தை இயற்றுவித்து அதனைக் கொண்டே விருத்திராசுரனைக் கொன்றொழித்தான். சிவபிரான் திருமுடிமீதிருந்து வீழ்ந்த திருமாலையைத் துருவாசர் ஏந்திக்கொடுபோய் இந்திரனுக்கு நீட்ட, அவன் அதை ஒருகையால் வாங்கி யானையின் சிரசிலிட, அந்தயானை அதனையெடுத்துக் காலின் கீழிட்டுச் சிதைத்தது. அதுகண்டு துரவாசர் சினங் கொண்ட இந்திரனைப் பாண்டியன் வளையாற் சிரசுசிதறிப் பெறுக வென்று சபித்து அவனுடைய ஐராவதத்தையுங் காட்டானையாகவென்று சபித்தார். இந்திரன் நடுங்கி முனிவரையிரப்ப, முனிவர் இரங்கி தலைமட்டாக வந்தது முடிமட்டாக வென்று இந்திரனுக்கு அச்சாபத்தைக் குறைத்த பின்னர் ஐராவதத்தையும் பார்த்து, நீ இருபத்தைந்து வருடங் காட்டானையாகத் திரிந்து அவ்வெல்லையில் முன்போலகவென்று பிறிது வகுத்தனர். அவ்யானை அக்கால வெல்லை வருங்காறுங் காட்டானையாகத்திரிந்து, ஈற்றிலே கடம்பவனத்தை யடைந்து பொற்றாமரை வாவியிற்படிந்து முன்னுரக்கொண்டு சிவபிரானனுக்கிரகமும் பெற்று அவரைப் பிரியமாட்டாது முன்போல் இந்திரனுக்கு வாகனமாயிற்று. இத்துருவாசசரித்திரம் இராமாணத்திலும் சிறிது மாறுபடக்கூறப்பட்டுள்ளது. தலைக்குவந்தது முடியோடு போயிற்றென்ற பழமொழி அதுமுதலாக வழங்கிவருவ தாயிற்று. திருநகரங்கண்ட திருவிளையாடல் குலசேகர பாண்டியன் காலத்திலே அவன் ராஜதானியாகிய மணவூரிலே வசிக்குந் தனஞ்சயன் என்னும் வணிகன் மேற்றிசையிலுள்ள ஊர்களிற் சென்று வணிகஞ்செய்து மீளும் வழியிலே கடம்பவனத்தில் இராத்தங்கினபோது அங்கே ஒரு திவ்விய விமானமும் அதன்கீழே சிவலிங்கப்பெருமானும் அங்கே தேவர்கள் வந்ததும் அன்றிரவெல்லாம் அருச்சனை புரிந்ததுங்கண்டு அதிசயித்துத் தானுந் துதித்து வணங்கிக்கொண்ட விடியற்காலத்திலே அவ்விடத்தினின்றும் நீங்கி அரசனையடைந்து தான் கண்டதைக்கூற, அரசன் உடனே சென்று அவ்வனத்தை வெட்டிச் சவபிரான் கனவிடைச்சென்று தனக்குக் கூறியபிரகாரம் ஆலயமும்,தனக்கு அரமனையும், நானாவருணத்தினர்க்கும் வீடுகளும், வீதிகளும், மதில்களும். பிறவும் வகுத்து நகரமாக்கினான். குலசேகரபாண்டியன் மகன் மலயத்துவசபாண்டியனுக்கு அவன்மனைவி காஞ்சனமாலை வயிற்றிலே புத்திரொற்பத்தி யில்லாமற்போக,அவன் யாகஞ்செய்து அவ்யாகத்தினிடமாக உமாதேவியாரைத் தடாதகைப் பிராட்டியாரென்னும் பெயரோடு மூன்றுவயது நிறைந்த மகவாகப் பெற்றது. நான்காந் திருவிளையாடல். காஞ்சனமாலை முற்பிறப்பிலே உமாதேவியாரைத் தனக்குப் புத்திரியாராக வருதல் வேண்டுமென வேண்டித் தவங்கிடந்த விச்சாவதியென்னுங் கந்தருவமாது. மலயத்துவசன் தடாதகைப் பிராட்டியாருக்கு முடிசூட்டிச் சிவபதமடைந்த பின்னர். துடாதகைப் பிராட்டியர் திக்குவிஜயத்துக் கெழுந்து திசைதோறும் அரசர்களை வென்று வடதிசையிற் கைலாயஞ் சென்று அங்கும் படையேற்றினர். அப்பொழுது சிவபிரான் வெளிப்பட மும்முலைகளுள் ஒன்று மறைந்தது. அதுகண்டு நாணிச் செயல்மறந்து நின்ற தடாதகைப் பிராட்டியாரைச் சிவபிரான் நோக்கி, உன்னை நாம் மதுரையில் வந்து மணம்புரிவாம்: மீண்டேகுக என்றருளிச் செய்தனர். அவ்வாறு மீண்டு மதுரையையடைந்த போது சிவபிரான் சோமசுந்தர பாண்டியனார் என்னும் பெயரோடு சென்று உலகறியத் திருமணம் புரிந்து மதுரையை யாண்டனர். இது ஐந்தாந் திருவிளையாடல். திருமணத்தின் பொருட்டு மதுரைக்கு வந்திருந்த பதஞ்சவி வியாக்கிரபாதர்கள் திருநடங்கண்டன்றி யுண்ணே மென்ன, சிவபிரான் திருவுளமிரங்கி, மதுரையின் ஒருபாலிலே வெள்ளியம்பலத்தைத் தோற்றுவித்து அதன் மேல் மாணிக்கப் பீடிகையின் மீது திருநடங்காட்டி யருளியது ஆறாந்த திருவிளையாடல். திருமணத்தின் பொருட்டு அமைக்கப்பட்ட சோற்றுமலை யெல்லாவற்றையும் சிவகணத்தொருவனாகிய குண்டோதரன் நொடிப் பொழுதில் உண்டுவிட்டுத்தன்பசி தணிந்தில தென்றழுதலைத் தடாதகைப் பிராட்டியர் கண்டு யாது செய்வேனென்று அதிசயித்து நாணிநிற்கச் சிவன் செய்தருளியது ஏழாந்திருவிளையாடல். அதுகண்ட சிவபிரான் குண்டோதரனுடைய தணிப்பரும் பெரும்பசியைத் தீர்க்கும் பொருட்டு அன்னக்குழியையும் அவன் தாகத்தைத் தீர்த்தற்பொருட்டு வைகைநதியையும் வரவழைத்தருளிய திருவிளையாடல் எட்டாவது. இவ்வன்னக்குழி எடுக்கு நாதோறுங் குறையா வியல்பினது. தடாதகைப் பிராட்டியாரது தாயார் காஞ்சனமாலையார் நீராடும் பொருட்டுச் சிவபிரான் சத்த சமுத்திரங்களையும் வரவழைத்தருளியது ஒன்பதாந் திருவிளையாடல். கடலாடவேண்டி ஏழுகடலும் பெற்ற காஞ்சனமாலை தனது நாயகனிறந்து போயினமையாலே கன்றின்வாலைப் பற்றிக் கொண்டு கடலாடவந்ததேயேன்று கவன்றதைத் தடாதகைப் பிராட்டியாராலுணர்ந்த சிவபிரான் அவ்விருவர் மனக்குறிப்பையுமுணர்ந்து, இறந்து சுவர்க்கத்திலிருந்த மலயத்துவசபாண்டியனை வரவழைத்து அவனைக் காஞ்சனமாலையோடு கரம்பற்றிக் கடலாடச்செய்தது பத்தாந்திருவிளையாடல். சோமசுந்தர பாண்டியராயுலகாண்ட சிவபிரான் தடாதகைப்பிராட்டியா வயிற்றிலே உக்கிரவருமன் என்னுங் குமாரனைத் திருவவதாரஞ் செய்வித்தருளியது பதினொராந் திருவிளையாடல். உக்கிரவரும பாண்டியன் சோமசேகரனென்னும் அரசனது புத்திரி காந்திமதியை மணம் புணர்ந்தபின்னர் அவனைச் சிவபிரான் நோக்கி, மைந்தனே, கேள், இந்திரனும் கடலும் உனக்குப் பெரும்பகைகளாம், மேருவானது தருக்குற்றுநிற்கும், இந்திரன் முடியைச் சிதைக்கும் பொருட்டு இவ்வளையை வைத்துக்கொள், கடலுக்கு இவ்வேற்படையை விடு, மேருவை இச்செண்டாலடியென்று மூன்று படைக்கலங்களையும் கொடுத்தாசீர்வதித்தருளியது பன்னிரண்டாந்திருவிளையாடல். உக்கிரவருமபாண்டியன் அரசுபுரிந்து வருநாளிலே அசுவமேதயாகந் தொண்ணூற்றாறு செய்து முடித்த போது இந்திரன் பொறாமையுற்று வருணனை ஏவிக் கடல்பொங்கிப் பாண்டிநாட்டை அழிக்கும்படி செய்ய ஒரிரவினுள்ளே கடல் சினங்கொண்டேழுந்து நாட்டை மூடி நகரவாயிலை யடுத்தது. ஆதனைச் சிவபிரானாலுணர்ந்த உக்கிரவருமன் தான் முன்னே சிவன்பாற்பெற்ற வேலையெறிந்து சுவறும்படி செய்தான். இது பதின்மூன்றாந் திருவிளையாடல். பாண்டிநாட்டிலும், அயல்நாடுகளிலும் மழைப்பெயல் இல்லாது போகச் சேர சோழ பாண்டியர் மூவரும் தேவலோகஞ் சென்று இந்திரனை வணங்க அவன் மற்றிருவருக்கும் மழைவர மீந்து பாண்டியனை மதியா திகழ்ந்தனுப்பிவிட்டான். பாண்டியன் மேகங்களைப் பிடித்துக்கட்டிச் சிறையிலிட்டான். இந்திரன் பாண்டியனோடு போருக்கெழுந்து பொருதபோது பாண்டியன் வளையை விட்டு இந்திரன் முடியைத் தகர்த்துவிட்டான். அவ்வளவில் இந்திரனடங்கிச் சமாதானங் கேட்க, பாண்டியன் மறுத்தான். வேளாளர் தாம் பிணையாகி மேகங்களைச் சிறைவிடுவித்தார்கள். இது பதின்னான்காந் திருவிளையாடல். உக்கிரவரும் பாண்டியன் காந்திமதியிடத்திலே வீரபாண்டியனென்னுங், குமாரனையின்ற பின்னர்த் தனது நாடு மழையின்றி வருந்துதலைக்கண்டு சகிக்கொணாத் துன்பக்கடலிலாழ்ந்து கிடந்தான். சோமசுந்தரக் கடவுளவனுக்குக்கனவிலே தோன்றி நீ மேருமலையையடைந்து அம்மேருவரசனைச் செண்டாலடித்து அவனை வணங்கச்செய்து அம்மலையிலுள்ள பொன்னறையைத் திறந்து வேண்டுமளவுபொன்னை வாரிக் கொணர்ந்து வழங்கி மழை பெய்து நாடு மலியுங்காறும் நினது நாட்டைக் காக்கக்கடவை என்று அநுக்கிரகித்தனர். அவ்வாறே அவன் தன் சேனைகளோடு புறப்பட்டுப் பாரதவருஷம். கிம்புருஷவருஷம், ஹரிவருஷம் என்னும் மூன்றுநாடுகளையுந்தாண்டி இளாவிருத வருஷ மத்தியிலுள்ள மேருவையடைந்து மேருவரசனுக்குப் பல முகமன் கூறியழைக்க அவன் வரத் தாழ்த்தமைபற்றித் தனது செண்டைப்பி ரயோகித்து நிற்ப அவன் வெளிடப்பட்டு எதிர்முகமன் கூறி வேண்டிய மட்டும் பொன்னைப் பொதிசெய்து போகவென்ன, அவ்வாறு செய்து மீண்டு தன்நாட்டைக் காத்தது பதினைந்தாந் திருவிளையாடல். கண்ணுவராதி முனிவர்களுக்குச் சிவபிரான் ஒரந்தணச் சிறுவனாகி வெளிப்பட்டு வேதப்பொருளை உபதேசித்தருளியது பதினாறாம் திருவிளையாடல். வீரபாண்டியன் வேங்கை வாய்ப்பட்டிறக்க, அவன் மகன் அபிஷேகபாண்டியனுக்கு முடி சூட்டுவதற்கு முகூர்த்தம் வைத்து மந்திரிகள் முடியைத் தேடிப் பார்த்தபோது அதனை வீரபாண்டியன் காமக்கிழத்தி மக்கள் களவிற் கவர்ந்து போயின ரென்றுணர்ந்து கவன்றிருப்ப, சிவபிரான் வணிகனாகி மாணிக்கப் பொதியோடு சென்று அவர்க்கு வேண்டியஅளவு மாணிக்கம் விற்றது பதினேழாந் திருவிளையாடல். திருவிளையாடற் புராணத்திலே மாணிக்கம் விற்றபடலத்தில் இரத்தின பரீக்ஷைக்குரியன வெல்லாம் விரித்துக் கூறப்பட்டுள்ளன. வருணன் தன் வயிற்றுநோயைச் சிவபிரானாலே தீர்ப்பிக்கும் பொருட்டுக் கடலைப் பொங்கியெழுந்து மதுரையைச் சூழும்படி செய்த போது அவன் கருத்துணராத அபிஷேகபாண்டியன் ஒலமிட்டழ அதற்கிரங்கிச் சிவபிரான் அக்கடலை வற்றுவித்து அதுவாயிலாக வருணனுக்கு அநுக்கிரகித்தது பதினெட்டாவது திருவிளையாடல். மீண்டும் வருணன் மேகங்களை ஏவி மதுரைநகரம் மூழ்கும்படி யுகாந்தகாலத்து மழை போல வருஷிக்குமாறு செய்ய, பாண்டியன் சிவபிரானைத் துதித்துத் தனது நகரத்தையுஞ் ஜனங்களையுங் காத்தருளுமாறு வேண்ட, கிருபாமூர்த்தி மேகங்களை நான்குபக்கமும் நான்கு மாடமாகிநின்று காக்கவென்றேவியருள, மேகங்கள் அங்ஙனஞ் செய்ய, மேலேநின்ற மேகங்கள் மழையை வருஷிதது நீர் வற்றி வறப்பெய்தின.இது பத்தொன்பதாந் திருவிளையாடல். சிவபெருமான், எல்லாம் வல்ல ஒரு சித்தவேடங்கொண்டு, மதுராபுரியையடைந்த, ஆணைப் பெண்ணுருவாக்கியும் பெண்ணை ஆணுருவாக்கியும், தம் மாத்திரைக்கோலினாலே தடவி விருத்தரைக் காளையராக்கியும், கூன் முதுகினையுடைய விருத்தஸ்திரிகளை இளமங்கையராக்கிக் கருத்தரிக்கச்செய்தும், மிக்க தூரத்தேயுள்ள மலைகளை மிக்க சமீபத்துள்ளனவாக்கியும், சமீபத்துள்ள மாடமாளிகைகளைச் சேய்மைக் கண்ணவாக்கியும், வறிஞரைச் செல்வராக்கியும் செல்வரை வறிஞராக்கியும், இன்னோரன்ன செயற்கருஞ் செயல்களைச் செய்வாராகி, வீதிகளிலே சஞ்சரித்தலைக் கேள்வியுற்ற அபிஷேக பாண்டியன் அச்சித்தரை அழைத்துவரும்படி அமைச்சரை ஏவியும் வாராது இறுமாந்திருந்தது இருபதாந் திருவிளையாடல். பின்னர் அப்பாண்டியன் சித்தரது ஆற்றலை அளந்தறியும் பொருட்டு அவர் முன்னே சென்று நின்று அவர் வரலாற்றை வினாவிநிற்கும் பொழுது, அவ்வழியே சென்ற ஓர் உழவன் கையிலிருந்தகரும் பொன்றைவாங்கி, நீர் எல்லாமவல்ல் சித்தா என்பது உண்மையேயாயின் இதனை இம் மண்டபத்திலேயுள்ள கல்லானைக்கு அருத்தி நுமதாற்றலை விளக்குக என, சித்தர் அவ்வியானையைக் கடைக்கணித்தருள, அஃது உயிர்பெற்றுக் கண்விழித்து மதம் பொழிந்து துதிக்கையை நீட்டிப் பாண்டியன் கையிலிருந்த கருப்பங்கோலைப் பறித்துக் கறித்துக்குதட்டிற்று. இஃது இருபத்தொராந் திருவிளையாடல். அபிஷேகபாண்டியன் சிவபதமடைந்தபின்னர், அவன் மகன், விக்கமிரமபாண்டியன் அரசுபுரிந்து வருநாளிலே, சமணசமயப்பிரவேசஞ் செய்திருந்த சோழராசன், அஞ்சனம், கிரவுஞ்சம், அத்திகிரி, எமகூடம், விந்தம் என்னும் எட்டு மலைகளினுமுள்ள சமணகுரவர் எண்ணாயிரவரையுமழைத்து, அபிசார வேள்வியொன்றை இயற்றுவித்து, ஒரு யானையை எழுப்பி, பாண்டியனைக் கொல்லுமாறுஏவ, அதனையறிந்த பாண்டியன் சோமசுந்தரப் பெருமானை வேண்ட,ஒரு வேட்டுவவடி வங்கொண்டு அவ்வியானையைக் கொன்று பாண்டியனைக் காத்தருளியது இருபத்திரண்டாந் திருவிளையாடல். பின்னரும் அப் பாண்டியன் காலத்திலே, விரூபாடின் என்னும் வேதியனெருவன் புரிந்த பெருந்தவப்பயனால் அருந்ததிநிகர்த்த அவன் மனைவியாகிய சுவவிரதையின் வயிற்றிலே பெற்ற கௌரி என்பாள் ஐந்துவயதிலே கௌரிமந்திரத்தைத் தந்தையினால் உபதேசிக்கப்பெற்று ஞான வொழுக்கத்திலே சிறந்து வருங்காலத்திலே பிச்சைபுக்குண்பானாகிய ஒரு வைஷ்ணவப் பிரமசாரி அங்கே வரத் தந்தை அக்கன்னிகையை அவனுக்கு மணஞ்செய்து கொடுக்க, அவ்வைஷ்ணவன் அவளைத் தன்மனைவிக்குக் கொண்டு செல்லக் கொடிய வைஷ்ணவர்களாகிய தாய்தந்தையர்கள் அவளுடைய சிவசின்னங்களை நோக்கிக் குற்சிதமுற்று அவளை ஒதுக்கிவைத்து ஒழுகிவருபவர்கள். ஓருநாள், அவளைத் தனியிருத்திக கதவுபூட்டி ஒரு மணத்தின் பொருட்டு அயலூர் செல்ல, கௌரி, தான் மணம்புகந்த காலமுதல ஒரு சிவனடியாரையாவது காணப்பெற்றிலனேயென்று கவன்றிருக்க, சிவபெருமான் அவளை ஆட்கொள்ளும் பருவகால நோக்கி ஒரு விருத்தவேதிய வடிவந்தாங்கி அங்கே சென்று தமது பசிக்குறிப்பையுணர்த்த, கௌரி அவர்க்குத் திருவமுதூட்ட உண்ட அவர் பதினாறுவயசுக் குமாரப் பருவத்தையடைந்து விளங்க, அதுகண்டு கற்பிற்சிறந்த கௌரி நடுங்கி நாணி ஒதுங்கிநிற்க, அச்சமயத்திலே அயலூர்ரினின்றும் மாமன் மாமியர் மீண்டுவர, அதுநோக்கி அவ்வதிதியார் ஒரு பசுங் குழவியாய்க் கிடந்தழுதார். அதனை மாமிகண்டு கௌரியை நோக்கி, இம்மகவு ஏதெனச் சினந்து வினவ, கௌரி தேவதத்தன் மனைவி இதனைப்பார்த்துக் கொள் எனக் கிடத்திப்போயினாள் என், மயானப் பொடிபூசம் ருத்திரனுக்கன்பனான தேவதத்தன் சிசுவுக்கு அன்புடையையாதலின் நீ எமக்குதவாய் என்று இரக்கஞ்சிறிதுமின்றி அவளை வெளியே துரத்தி விட்டாள். கௌரி தன் கைமீது கிடந்த குழந்தை அந்தரத்தெழுந்து இடபாரூடராகித் தோற்றக்கண்டு தோத்திரித்துப் பலருங்காண அந்தரத்தெழுந்து அவ்விடபத்தின் மேற்கொண்டு அவருடைய இடப்பாகத்தையடைந்தாள். கௌரி பார்வதிதேவியாரது அமிசாவதாரம். இஃது இருபத்துமூன்றாந் திருவிளையாடல். விக்கிரமபாண்டியனுக்குப் பின்னர் அவன் மகன் ராஜரேகரன் அரசுபுரிந்து வருநாளிலே கரிகாற்சோழன் சமஸ்தானத்து வித்துவான் ஒருவன் மதுரையையடைந்து அரசன் பாற்சென்று அளவளாவிக் கொண்டிருக்கையில். கரிகாற்சோழனுக்கு அறுபத்துநான்கு கலையும் வரும், உனக்கோ பரதமொழித்தொழிந்த அறுபத்துமூன்றுமே வருமென்ன, பாண்டியன் அதுகேட்டு மானத்தாற்றுண்டப் பட்டவனாய்க் கவன்று உடனேதானே நாடக நூல்வல்லாரை வரவழைத்து அவர்பால் அதனைக் கற்கும்போதுண்டாகிய மெய்வருத்தத்தை நோக்கி, இடையறாத பஞ்ச கிருத்தியத்தின் பொருட்டு ஆனந்தத்திரத்தாண்டவஞ் செய்தருளும் நங்கருணா மூர்த்தியினது திருமேனி எத்துணையாக வருந்தும் என்று பரவசப்பட்டு அந்நிலையிற் கவற்சியுடையனாய்த் திருக்கோயிலையடைந்து, கால்மாறி ஆடிராயின் உயிர்விடுவேன் என்று கூறித் தவங்கிடக்க, சிவன் அவன் பத்திக்கிரங்கி இடக்காலூன்றி வலக்கால வீசி ஆடியருறியது இருபத்துநான்காந் திருவிளையாடல். இக்கரிகாற்சோழனும் வேறு, இவனுக்குப் பின்னர் விளங்கிய பட்டினப்பாலை கொண்டவனும், பொருநராற்றுப்படையிலே கூறப்பட்டவனுமாயகிய இருவேறுகரிகாற் சோழரும் வேறு. ராஜசேகரனுக்குப் பின்னர் அவன்மகன் குலோத்துங்க பாண்டியன் அரசுபுரியுங் காலத்திலே, திருப்புத்தூரிலிருந்து மதுரைக்கு வழிக்கொண்டு சென்ற ஒருவேதியன் தன்னுடன் சென்ற மனைவியையும் மகவையும் ஓராலின் கீழிருத்தி, அவளுக்காகத் தண்ணீர்தேடிச்சென்ற மீண்ட போது ஆலின்மீது கிளைகளிலே சிக்குண்டிருந்த அம்பொன்று காற்றால் அலைப்புண்டு வீழ்ந்து கீழே படுத்திருந்த பார்ப்பனி வயிற்றிலே தைத்து உயிர்துறந்து கிடக்கக்கண்டு, உண்மையுணராது பதைபதைத்தேடி இப் பாதகஞ் செய்தான் யாவனெனத் தேடிப் பார்க்க, அவ்வாலின் சமீபத்திலே ஒரு வேடன் நிற்ப, அவனே கொன்றானென்றெண்ணி அவனைக்கைப்பற்றிக் கொண்டு இறந்த மனைவியைத் தூக்கித் தன் முதுகிற் கட்டிப் பிள்ளையை ஒக்கலிலே தாங்கி முலைவேட்டழுகின்ற அப்பிள்ளையைப் பார்த்துப் பார்த்துப் பொழிந்த கண்ணீரோடு சென்று பாண்டியன் சபையையடைந்து, முறையோ முறையோவென்று வீழ்ந்து புலம்பினான். பாண்டியன் பார்ப்பான வாய்மொழியைக் கேட்டு வேடனைப்பார்த்து, யாது கூறுகின்றாயென்ன, வேடன் இக்கொடும் பழியான் செய்தன்று, செய்தாரையும் அறியேன், இது சத்தியம், இப்பழியை யான் யாது குறித்துச் செய்யப்புகந்தேன், என்றுண்மையை மிக்க பரிவோடு கூறினான். அது கேட்ட பாண்டியன் உண்மை தேறமாட்டாதவனாய்ச் சோமசுந்தரக் கடவுளுடைய சந்நிதியையடைந்து விண்ணப்பஞ்செய்ய, நாளை வணிகதெருவிற்சென்று அங்கே மணப்பந்தரில் நடக்குஞ் செய்தியைக் காண் என்று ஓரசரீரிகேட்டது. அவ்வாறே பாண்டியன் அப்பார்ப்பனோடு மற்றைநாள் வணிகவீதியிற் சென்று மணவீட்டருகே நிற்க, யமதூதர் நேற்றுப் பார்ப்பனியுயிரை ஆலமரக்கிளைளையிற் சிக்கியிருந்த அம்பைவீழ்த்தி எவ்வாறு கொன்றோமோ அவ்வாறே இம்மணமகனுயிரையு மோருபாயத்தாற் கவர்வேமென்ற சொற்கேட்டு இருவரும் ஐயத்தினீங்கினர். இஃதிருபத்தைந்தாந் திருவிளையாடல். மாதுரு கமனஞ் செய்து தந்தையைக் கொன்ற மகாபாதகனாகிய ஒரந்தன்னை நல்வழிப்படுத்திய திருவிளையாடல் இருபத்தாறாவது. குலோத்துங்கபாண்டியன் காலத்திலே வேற்றூரிலிருந்து போய் மதுரையைத் தனக்குவாழ்பதியாக்கி வாள்வித்தை கற்பித்துக் காலக்கழிவு செய்யுமோராசிரியனுடைய மாணாக்கனாகிய சித்தன் என்பவன், அவ்வாசிரியனில்லாத சமயம் பார்த்து அவனுடைய மனைவியை வலிதிற்புணரவெத்தனித்த போது, அம்மாது, ஆலவாய்க் கடவுளைத் தியானிக்க, அக்கடவுள் அவ்வாளாசிரியனைப் போல் வடிவங்கொண்டு அங்கேசென்று வெளிப்பட்டு, காளையே நாளைவா இருவருங் கலந்து வாட்போர் செய்வோம் என்று கூற, அதுகேட்டு மகிழ்ந்து மீண்ட சித்தன் அடுத்தநாளிலே குறித்த விடத்திலே அறைகூவி எதிர்க்க, ஆலவாய்க்கடவுள் ஆசிரியனைப் போல் நின்று அமராடி அவன் அங்கத்தை வெட்டியது இருபத்தேழாந் திருவிளையாடல். குலோத்தூங்க பாண்டியனுக்குப்பின் அவன் மகன் அனந்தகுண பாண்டியன் செங்கோலோச்சுங்க காலத்திலே, பாண்டிநாட்டிலே சைவப்பயிரன்றிச் சமணப்பயிர் வேர்கொள்ளாதிருத்தலை நோக்கிய சமணகுரவர்கள் எண்ணாயிரவாராலும் பாண்டியனைக் கொல்லுமாறு யாகத்திலெழுப்பி விடப்பட்ட அசுரன் ஒரு மகாசர்ப்பமாகி மதுரையையடைந்து அந்நகரைக் கலக்க, பாண்டியன் அந்நாகத்தைப் பாணத்தாற் கொன்றொழிக்கும்படி சிவன் அநுக்கிரகஞ்செய்தது இருபத்தெட்டாந் திருவிளையாடல். மீளவுஞ் சமணரால் ஏவப்பட்ட மாயப்பசுவானது, சிவனேவலால் நந்திதேவர் அழகிற் சிறந்த அற்புத ரிஷபமாகிச் சென்று தன் முன்னே தோன்றிநிற்ப, அதனைக் கண்ட மாத்திரத்தே காமநோய் தலைக்கேறி வீரிய மெல்லாவற்றையும் விடுத்து வலிகுன்றி வீழ்ந்து பாறையாம்படி சிவன்செய்தது இருபத்தொன்பதாம் திருவிளையாடல். அனந்தகுண பாண்டியனுக்குப்பின் அவன் மகன் குலபூஷணன் பூமிநாயகனா யிருக்குங் காலத்திலே, சேதிராயன் மதுரைமீது படை நடத்தப் போகின்றான் எனக் கேள்வியுற்றுத் தனதுயிர்த் துணைவனும் சிவபக்தியிற் சிறந்தவனும் சேனைத்தலைவனுமாகிய சௌந்தரசாமந்தன் என்பவனிடம் அளவிறந்த திரவியங்களைக் கொடுத்துப் புதுச்சேனை திரட்டமாறு ஆஞ்ஞாபிக்க, அவன் அத்திரவியத்தைச் சிவாலயத் திருப்பணிக்கும் சிவபக்தர்க்கும் வாரி வழங்கிட்டு ஆறுமாசகாலத்தைச் சிவகைங்கரியத்திற் போக்கினான். அதுகண்ட பாண்டியன் சவுந்தர சாமந்தனை ஒருதினத்தினுள்ளாகச் சேனை தருதல் வேண்டுமென்ன, அவன் சோமசுந்தரக்கடவுள் சந்நிதியில் வீழ்ந்து வேண்ட, நாம் சேனையோடு நாளை வருவோம் என்று ஓரசரீரி கேட்டது. அவ்வாறே சோமசுந்தரக்கடவுள் மற்றை நாளிலே தாமோரு குதிரை வீரராகவும் கணங்கள் சேனாவீரராகவும் வடிவு கொண்டு வெளிப்பட்டுச் சாமந்தன். இவர் இன்னதேயத்தர், இவர் இன்னதேயத்தவர் என்று பாண்டியனுக்கு மெய்காட்டியறிவிக்க நின்றருளியது முப்பதாந்திருவிளையாடல் (31) பஞ்சத்தாலே தனது நாட பெரிதுந் துன்புறதலைக் கண்டு சோமசுந்தரக் கடவுள் சந்நிதியில் வரங்கிடந்த குலபூஷண பாண்டியனுக்கு அவர், எடுக்குந் தோறங் குறையாததாகிய உலவாக்கிழி ஈந்தருளியது முப்பத்தொராந்திருவிளையாடல் (32) தங்கணவர்களது சாபத்தாலே தாருகவனத்திருஷிபன்னியர்கள் மதுரையிலே வணிக கன்னியராகப் பிறந்திருந்தபோது, அவர் சாபத்தை நீக்கியருளும் பொருட்டுச் சிவபிரான் வளையல் விற்கும் நாயகராகிச் சென்று அவர் கையைப்பற்றி வளையலிட்டுப் போனது முப்பத்திரண்டாம் திருவிளையாடல் (33) குமாரக்கடவுளுக்குப் பாலூட்டித் தம் பழவினைப் பற்றறுத்த தேவ கன்னிகையர் அறுவரும் சிவரஞ்ஞையை மறந்த குற்றத்தாலே பட்டமங்கையிலே ஆலின் கீழே பாறையாகிக்கிடக்க, அவர் சாபத்தை நீக்கியருளும் பொருட்டுச் சிவன் திருக்கடைக்கண்சாத்தி எழுப்பி அவர் விரும்பிய அஷ்டமாசித்திகளையும் அளித்தருளியது முப்பத்துமூன்றாந் திருவிளையாடல் (34) காடு வெட்டிய சோழன் சோமசுந்தரக் கடவுளைத் தரிசிக்க வேண்டுமென்னுங் கழிபேரன்புடையனா யொழுகி வருநாளிலே, ஒருநாள், அக்கடவுள் அவனைத் தமியனாய்க் கொண்டேகி வடக்கு வாயிற்கதவை மீனமுத்திரையையழித்துத் திறந்து உள்ளேபோக்கிப் பொற்றாமரைத் தடாகத்திற் படிவித்துச் சுவர்ண விமானத்தின் கீழே தாமெழுந்தருளியிருக்குந் திருக்கோலத்தையும், உலகமாதாவினது திவ்விய தரிசனத்தையுங்காட்டி, விடியமுன் அவனை நகர்ப்புறத்திற் கொண்டுபோய் விடுத்து விடையீந்து மீண்டுமவ்வாயில் வழியே புகுந்து அக்கதவிலிடப்படும் மீனலச்சினைக்குப் பிரதியாக ரிஷிய முத்திரையிட்டுத் தமது கோயிலிற் புகுந்தருளியது முப்பத்துநான்காந் திருவிளையாடல் (35) குலபூஷணனுக்குப் பின் அவன்மகன் இராசேந்திரபாண்டியன் அரசுபுரியுநாளிலே காடு வெட்டிய சோழன் மதுரைச் சோமசுந்தரக்கடவை வெளிப்படையாகப் போய் வழிபடக் கருதிப் பாண்டியனை நண்பனாக்கிக் கொள்ளும் பொருட்டுப் பொன்னணி முதலியவற்றை வரிசையாயனுப்ப அவற்றைக் கண்டு மகிழ்ந்த பாண்டியனும் சில வரிசைகளையனுப்ப அதனால் உவந்து தனது மகளை அப்பாண்டியனுக்கு மணஞ் செய்த கொடுப்பக் கருதியிருத்தலைப் பாண்டியனுக்குத் தம்பி முறையிலுள்ள அரசசிங்கன் என்பவன் உணர்ந்து காஞ்சிநகரை யடையக் காடுவெட்டிய சோழன் தன்புத்திரியை அவனுக்கு மணஞ்செய்து பாண்டி நாட்டைக் கைப்பற்றக்கருதிச் சேனைகள் சூழத்தன் மருகனோடு புறப்பட்டு இரண்டு யோசனை தூரத்தே வந்து சேந்ததனைக் கேட்ட பாண்டியன் மருதுரைச் சோமசுந்தரக்கடவுளை வேண்ட, நீ அஞ்சாது எதிர்த்துப் பொருங்காலத்து வெற்றி உனக்கேயாகுமென்று அசரீரி எழும்ப, அது கேட்ட பாண்டியன் சேனைகள் புடைசூழச்சென்று கொடிய உச்சிக்காலம் வருங்காறுங் கொடுஞ்சமர் புரிதலினாலே நீர் வேட்கை மீதூரப்பட்ட பாண்டியனுடைய சேனைகளின் நடுவே சிவபெருமான் ஒரு தண்ணீர்ப் பந்தரையமைத்துப் பருகுமாறு செய்து நீர்வேட்கையை நீக்க, அச்சேனைகள் தெளிவடைந்த பின்னரும் பொருது வெற்றிச்சங்க மொலித்துச் சோழனை மருகனோடு பிணித்துவந்து பாண்டியன் முன்னர் உய்க்க, பாண்டியன், அவ்விருவரையும் சோம சுந்தரக்கடவுள் சந்நிதியினிறுத்தி இவர்க்குப்புரியுந் தண்டம் யாதென வேண்ட, அவர், நீ நீதி கோடாதவனாதலின் உன் எண்ணப்படி புரிக என்றருளச், சோழனுக்கு வேண்டிய உபகாரங்களைக் கொடுத்தனுப்பித் தனது தம்பிக்கும் தனது செல்லத்துட் சிலவற்றைக் கொடுத்து மகிழ்ந்து வாழ்ந்திருந்தனன். இது முப்பத்தைந்தாந் திருவிளையாடல் (36) பின்னர்த் திருப்பூவணமென்னுஞ் சிறந்த ஸ்தலத்திலே ஆடல்பாடல்களிலும் அழகிலுஞ் சிறந்த பொன்னையாளென்பவள், சிவபக்தகியிற் சிறந்தவளாய்ச் சிவனடியார்க்கு அமுது செய்வித்து வருங்காலத்திலே சிவபெருமானது திருவுருவையமைத்துப் பிரதிட்டை செய்யக்கருதிக் கருக்கட்டி வைத்ததும் நாடோறுஞ் செய்வதாகிய மாகேசுர பூசையின் பொருட்டுப் பொருளெல்லாஞ் செலவழிதலினாலே அதனை நிறைவேற்ற இயலாதவளாய்ப் பொற்கிழி கொடுத்த சிவபெருமானைச் சிந்தித்திருக்க, அதனையுணர்ந்த அவர் சிவனடியார் வேடங்கொண்டு வந்து ஏனைய அடியரெல்லாம் அமுதருந்தத் தாம் மாத்திரம் அமுது செய்யாது மாளமிகையின் புறங்கடையின் கண்ணே வீற்றிருக்க அவரை அமுது செய்தருளுமாறு வேண்ட, அவர் பொன்னையானை நோக்கி உன் இடைபோல உடம்பெல்லாம் மெலிந்து கவலையடைந்திருத்தற்குக் காரணமென்னையென, அன்னவள் தன்குறையை முறையிட, அதனைக் கேட்ட சிவபெருமான் அவளிடத்துள்ள வெண்கலம் பித்தளை முதலியவற்றை வாங்கி இரசவாதஞ்செய்து பொன்னாக்கக் கொடுத்து மறைந்தருளக்கண்ட அவள். தோத்திரஞ் செய்து, பின்னர் அப்பொன்னைக்கொண்டு திருவுருவை அமைத்துப் பிரதிட்டை செய்து, பூசித்திருந்து சிவபெருமானது திருவடியையடைந்தாள். இது முப்பத்தாறாந் திருவிளையாடல் (37) இராசேந்திர பாண்டியனுக்குப் பின்னர் அவன் மகன் இராசேசனும், அவனுக்குப்பின் அவன் மகன் இராசகம்பீரனும், அவனுக்குப்பின் அவன்மகன் பாண்டியவமிசதீபனும். அவனுக்குப்பின் அவன் மகன் பரந்தரசித்துவும், அவனுக்குப்பின் அவன் மகன் பாண்டிவமிசபதாகனும். முறைமுறை அரசுசெய்து போனபின்னர், அவன் மகன் சுந்தரேசபாதசேகர பாண்டியன் அரசு செய்து வருங்காலத்திலே, அவன் படைவலிக் குறைவை நோக்கிச் சோழரசன் பாண்டிநாட்டைக் கைக்கொள்ளக்கருதிப் படையெடுத்துச் சென்ற பொழுது, பாண்டியன் சிவபெருமானமிடத்து முறையிட்டு அவர் அனுக்கிரகம் பெற்று எதிர்த்துப் போர்புரிந்து ஆற்றாது முதுகிட்டோட, அவனைத் துரத்திச் சென்ற சோழனை மடுவில் வீழ்த்திக் கொன்றருளியது முப்பத்தேழாந் திருவிளையாடல் (38) பின்னர் மதுராபுரியிலே வேளாண்குலத்திலே அவதரித்த அடியார்க்கு நல்லான், கற்பிற்சிறந்த தன் மனைவியாகிய தருமசீலையோடுங்கூடி வேளாண்டொழிலினாலே வரும் பொருள் கொண்டு சிவனடியார்க்கு அமுதூட்டி வருங்காலத்திலே, வருவாய் சுருங்கியதனாலே அடியார்க்கமுதூட்ட வழியின்றி வருந்தித் தானுந் தன் மனைவியாளும் உயிர்விடக்கருதிச் சிவ பெருமானிடம் முறையிட, அவர் மகேசுரபூசை முதலியன என்றுங் குறைவறநடாத்தும் பொருட்டு அவர்க்கு எடுக்குந்தோறுங் குறையாவியல்பினமாகிய உலவாக்கோட்டையை யீந்தருளியது முப்பத்தொட்டாந் திருவிளையாடல் (39) புத்திரனில்லாமையாற் சகோதரிபுத்திரனைத் தத்த புத்திரனாக்கிக் கொண்ட தனபதியென்னும் வணிகன் தன்னிடத்துள்ள பொருளையெல்லாம் அவனிடத்தொப்பித்து அவனை யீன்றதாயோடிருத்திவிட்டத் தன் மனைவியோடு காட்டிற்சென்று தவமிருயற்றங்காலத்திலே. அவன் தாயத்தார் அச்சிறுவன் பொருளையெல்லாங் கவர்ந்து கொண்டு அவனையுந் துரத்திவிட, அவள் திக்கற்றவளாய்த் தன் புத்திரனோடு சோமசுந்தரக் கடவுளுடைய சந்நிதியிற் சென்று முறையிட, கருணாநிதி அவளுக்கிரங்கி, தருமாசனத்தார் முன்பசென்ற சொல், நாம் நாளை அங்குவந்து உன் வழக்கைத் தீர்ப்பாம் என்றருளிச்செய்து, மற்றை நாள் அச்சிறுவன் மாமனாகிய துனபதியைப்போல் வடிவங்கொண்டு சென்று சபையார் முன்னே தோன்றி வழக்கறுத்தருளியது முப்பத்தொன்பதாந் திருவிளையாடல் (40) சுந்தரேச பாதசேகரபாண்டியனுக்குப் பின்னர்ச் சிங்காரனங் கொண்ட வரகுணபாண்டியன் சிவலோகத்தைத்தானெடுத்த மானுடசரீரத்தோடு காண வேண்டிடுமென்று வரங்கிடக்க, அவன் பத்திவலையிற்பட்ட சோமசுந்தரக் கடவுள் அவனுக்கதனை அவ்விடத்திற் காட்டியருளியது நாற்பதாந் திருவிளையாடல் (41) எமநாதனென்னும் யாழ்வல்லோன் மதுரையிற் சென்று தனக்கு இணையான யாழ்வல்லோன் உளனோவென்று பாண்டியன் முன்னேநின்று தருக்கிக்கூற, பாண்டியனது சபைப்பாணனாகிய பாணபத்திரன் நானை அவ்வியாழ்மகனை வென்று அவன் விருதையுங் கவர்வேனென்று கூறிப்போய்ச் சோமசுந்தரக் கடவுளை வேண்ட, அவர் ஒரு விறகுவிற்கு மேழைபோலச் சென்று ஏமநாதக் வீட்டு வாயிலிலிருந்து படுமரமுந்தழைக்கப் பாட, ஏமநாதன் வெளியேவந்து நீயாவன் என்று வினாவ, அவர் பாணபத்திரனடிமை யென்று கூற, ஏமநாதன் அதிசயித்துப் பாணபத்திரன் ஆற்றலையளந்து கொண்டேன். இனி யான் இங்கிருத்தலாகாதென்றெண்ணி, அவ்விரவிற்றானே அவ்விடத்தை விட்டோடி மறையும் படி செய்தருளியது நாற்பத்தோராந் திருவிளையாடல் (42) வறுமையுற்று வருந்திய பாணபத்திரன் மிடியைநீக்குமாறு சோமசுந்தரக்கடவுள், சேரமான் பெருமாளுக்கு ஒரு திருமுக மெழுதிப் பாணபத்திரன் கையிற கொடுத்து அவனை அவர்பாற்படுத்தியது நாற்பத்திரண்டாந் திருவிளையாடல். சோமசுந்தரக்கடவுள் கொடுத்தருளிய திருமுகப்பாசுரம் வருமாறு : மதிமலிபுரிசை மாடக்கூடற் பதிமிசைநிலவ பானிறவரிச் சிறையன்னம் பயில்பொழி லாலவாயின் மன்னியசிவன்யா மொழிதருமாற்றம், பருவக்கொண்மூப் படியெனப்பாவலர்க் குரிமையினுரிமையினுதவி யொளிதிகழ், குருமாமதியுரை நிலவிய குடைக்கீழ்ச், செருமாவுகைக்குஞ் சேரலன் காண்க, பண்பால் யாழ்பயில் பாணபத்திரன். காண்பது கருதிப் போந்தனன் தன்போ லென்பாலன் பன்றன்பான் மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே இச்சரித்திரம் பெரியபுராணத்தின்படி கூன்பாண்டியனுக்குப் பின்னே நெடுங்காலங்கழிந்த பின்னர் அரசுபுரிந்த வரகுணபாண்டடியனொருவன் காலத்திலே நிகழ்ந்ததாகக் கொள்ளத்தக்கது (43) பாணபத்திரனுடைய யாழானது மழையீரந்தாக்கி யிசை குன்றாவண்ணம் அவனிருந்து பாடும்பொருட்டு அவனுக்குச் சோமசுந்தரக்கடவுள் பொற்பலகை கொடுத்தருளியது நாற்பத்தமூன்றாந் திருவிளையாடல் (44) வரகுண பாண்டியனுக்குப்பின் ராஜ ராஜ பாண்டியன் அரசுபுரியுங்காலத்தில். அவன் தன் காமக்கிழத்தி ஏவலாலே பாணபத்திரன் பத்தினியை இசையிலே வெல்விக்குமாறு ஈழநாட்டிலிருந்து ஒரு பாண்மகளை அழைப்பித்து இசை வாது புரிவித்தபோது, பாண்டியன் நடுநிலை பிறழ்வானென்றுணர்ந்து சோமசுந்தரக்கடவுள் ஓரிசைப்புலவராகத் தோன்றிப் பாணபத்திரன் பத்தினி புலமையை மெச்சி அற்புதம் அற்புதம் என்றுகூறி மறைந்தருளியது நாற்பத்துநான்காந் திருவிளையாடல் (45) தாயிழந்து தவித்த பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்தருளியது (46) அப்பன்றிக்குட்டிகளை மானிடராக்கிப் பாண்டியனுக்கு மந்திரிகளாக்கியருளியது (47) கரிக்குருவிக்குபதேசஞ் செய்தருளியது (48) நாரைக்கு முத்தி கொடுத்தருளியது (49) பிரளயத்தில் மறைந்த இந்நகர எல்லையை அரவகங்கணத்தாற் காட்டித் திருவாலவாயாகச் செய்தருளியது (50) பாண்டியனுக்குப் படைத்துணைவராகச் சென்ற சுந்தரம் என்று பெயர்தீட்டி அம்பெய்தருளியது (51) சங்கப்பலகை தந்தருளிய திருவிளையாடல் (52) பாண்டியன் ஆசங்கைநீங்கக் கவிபாடித்தருமியெனும் ஆதிசைவனுக்குக் கிழியறுத்துக் கொடுத்தருளியது (53) அக்கவிக்குக் குற்றங்கூறிய நற்கீரனைப் பொற்றாமரைக் குளத்தி லாழ்த்தி, பின் கரையேற்றியருளியது (54) அந்நக்கீரனுக்கு அகஸ்தியர்பால் இலக்கணமுபதேசித்தருளியது (55) சங்கத்தார்கலகத்தை ஊமைப்பிள்ளை யாற்றீர்த் தருளியது (56) தமிழையவமதித்த பாண்டியனோடு பிணங்கிய இடைக்காடன் பிணக்குத்தீர்த்தருளியது (57) மின்வலைச்சியாகவந்த மீனலோசனையை வலைவீசி மணம்புரிந்தருளியது (58) மாணிக்கவாசக சுவாமிகளாகிய வாதவூரடிகள் அரசன் அனுமதிப்படி குதிரைவாங்கக்கொண்டு போன பொருளையெல்லாம் சிவன் திருப்பணிக்குதவும்படி செய்து அவருக்கு ஞானோபதேசஞ் செய்தருளியது (59) அப்பொருளை வாங்கும் பொருட்டு, அரசன் வாதவூரடிகளுக்குச் செய்தவன் செய்கைக்கிரங்கி வனநரிகளை வாமபரிகளாக்கித்தருளியது (60) அப்பரிகளையே மீட்டும் நரிகளாகச் செய்தருளியது (61) பின்னும் வாதவூரடிகளை அரசன் வருத்தியதற் கிரங்கி வைகை நதியைப்பெருகச் செய்தும், நகரத்தார் கரையடைக்கத் தொடங்க வந்தியென்னும் அடியவள் பொருட்டுக் கூலியாளாய்ச் சென்ற பிட்டுண்டு மண்சுமந்தும், கரையடையா திருந்தமையால் அரசன் பிரம்பாலடித்த அடி சராசரமனைத்தும் பெறுமாறு செய்தும், தாமே யெல்லாவற்றுள்ளும் அந்தரியாமியென் றறிவித்தருளியது (62) திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகளும் திருநாவுக்கரசசுவாமிகளும் திருமுறைக்காட்டி லெழுந்தருளியிருக்கும் பொழுது அமண்சமயமிக்குச் சிவசமயந் தாழ்ந்ததைக்குறித்துக் கூன்பாண்டியனது மனைவி மங்கையர்க்கரசியாரும், மந்திரி குலச்சிறையாரும் அறிவிப்ப, அவ்வமண் களையும் பொருட்டுப் புறப்பட்டருளிய பிள்ளையாரை அரசுகள் தடுப்பவும், கேளாது சென்று மதுரையையடைந்து ஒருமடத்திலமணர் தீக்கொளுவ, அத்தீயைப் பையச்சென்ற பாண்டியற்காக என்ற பதிகமோத, அது அரசனைச்சுடசுரமாய்ப் பற்றிய அளவில். அதனைப் பிள்ளையார் தீர்த்தருளுமாறு செய்தருளியது (63) சமணர் அக்கினியிலிட்ட ஏடு கரிந்த போகச் சம்பந்தரிட்டது வேவாதிருக்கச் செய்தருளியது (64) வன்னியுங் கிணறுமிலிங்கமுஞ் சாட்சியாகமணஞ் செய்யப்பெற்ற வணிகப் பெண்ணுக்கும் அவள் சககளத்திக்கும் வந்தபூசலில் அவ்வணிகப்பெண் பொருட்டு அக்கரிகள் மூன்றையும் மதுரைக்கு வரவழைத்தருளியது

திருவீங்கோய்மலை

ஒரு சிவஸ்தலம். திரு ஈங்கோய்மலை காண்க

திருவீழிமிழலை

காவரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருவுசாத்தானம்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்

திருவூரகம்

தொண்டைநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

திருவூறல்

காஞ்சீபுரத்துக்கு வடக்கேயுள்ள சிவஸ்தலம். நந்திவாயினின்றும் நீர் ஊறிக்கொண்டிருத்தலால் இப்பெயர் பெற்றது

திருவெஃகா

தொண்டை நாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

திருவெஞ்சமாக்கூடல்

கொங்கு நாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்

திருவெண்காடு

சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையின் கணுள்ள ஒரு சிவஸ்தலம்

திருவெண்காட்டுநங்கை

சிறுத்தொண்டநாயனார் மனைவி

திருவெண்டுறை

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருவெண்ணியூர்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது

திருவெண்ணெய்நல்லூர்

சுந்தரமூர்த்தி நாயனாரை மணம்புகாவண்ணம் தடுத்தடிமைகொண்ட சிவஸ்தலம். இது பெண்ணைநதி தீரத்திலுள்ளது. கம்பருக்கு உபகாரப்பிரபுக்களாகவிருந்து ராமாயணத்தை அவரைக் கொண்டு பாடுவித்த சடையப்பமுதலிக்கும் அவன்றம்பி சரராமமுதலிக்கும் ஜம்மஸ்தலமுமிதுவே. மெய்கண்டதேவர் திருவவதாரஞ் செய்தருளிய தலமுமிதுவே. சுவாமிபெயர் தடுத்தாட் கொண்டவர், அம்மை வேற்கண்ணி. சுந்தரராற் பாடப்பட்டது

திருவெண்ணெய்மலை

கொங்கு நாட்டிலுள்ள ஒரு சுப்பிரமணியஸ்தலம்

திருவெண்பரிசாரம்

மலை நாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

திருவெண்பா

ஐயடிகள் காடவர்கோன் செய்த வொருபிரபந்தம்

திருவெண்பாக்கம்

இது சுந்தரமூர்த்திநாயனார் சங்கிலியார் பொருட்டுச் செய்த பொய்ச்சத்தியத்தாற் கண்ணிழந்து சிவபெருமானிடம் ஊன்றுகொல் பெற்றதலம். இது திருவொற்றியூருக்கு மேற்றிசையிலுள்ளது

திருவெள்ளாறை

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்

திருவெள்ளியங்கிரி

கொங்குநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். இது பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாய லிங்கங்களையுடையது

திருவெள்ளியங்குடி

காவிரியின் வடகரையின்கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருவெழுகூற்றிருக்கை

நக்கீரர் செய்தவொரு பிரபந்தம்

திருவெவ்வுளூர்

தொண்டைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி வீரராகவன். சத்தி வல்லி. திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருவேகம்பமுடையார்திருவந்தாதி

பட்டணத்துப்பிள்ளையாரருளிச் செய்த ஞானப்பொருள் மேலதாகிய வொருநூல்

திருவேகம்பம்

இதுவே காஞ்சிபரசிவஸ்தலம். இது தொண்டை நாட்டினுள் முதன்மையும் மிக்க பிரசித்தியும் பெற்றது. உமாதேவியார் மணலாற் சிவலிங்கம் ஸ்தாபித்துப் பூஜித்தபொழுது கம்பாநதிளைப் பெருகும்படி சிவபிரான் செய்ய அம்மையார் அதனைக் கட்டிக்கொள்ளச் சிவபிரான் றிருமேனியில் முலைத்தழும்பும் வளைத்தழும்பும் உண்டாகப்பெற்றது. இத்தலத்திலேயாம். குமரகோட்டமும் இவ்வாலயத்துக்குச் சமீபத்திலுள்ளன. இத்தலத்தின் மேலதாகிய காஞ்சிப்புராணம் பாடியவர் இற்றைக்கு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னிருந்த கச்சியப்பதம்பிரான்

திருவேடகம்

பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். இது சோலைகலைக்குத் தென் கீழ்த்திசையிலுள்ளது

திருவேட்களம்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிபாசுபதேச்சுரர், அம்மை நல்லநாயகி. அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது

திருவேட்டக்குடி

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். அர்ச்சுனன் பொருட்டுச் சிவபிரான் வேட்டஞ்செய்தருளிய கோலத்தோ டெழுந்தருளியிருக்கும் ஸ்தலமாதலின் இஃதிப் பெயர்த்தாயிற்று. சம்பந்தராற் பாடப்பட்டது. சுவாமி திருமேனி அழகர், அம்மை சுகந்தவன நாயகி

திருவேதிகுடி

இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். அப்பர் சம்பந்தர்களாற் பாடப்பட்டது

திருவேரகம்

சுவாமி மலையென வழங்கும சுப்பிரமணியஸ்தலம். கும்பகோணத்துக்குச் சமீபத்திலுள்ளது

திருவேற்காடு

மூர்க்கநாயனார் முத்திபெற்ற தலம். இது திருவலிதாயத்துக்கு மேற்கேயுள்ளது

திருவேளுக்கை

தொண்டைநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். பேயாழ்வார் திருமங்கையாழ்வார் இருவராலும் பாடப்பட்டது

திருவேள்விகுடி

தந்தை தாயரையிழந்த ஒரு பெண்ணை ஓரிராசகுமாரனுக்குச் சிவபெருமான் தானே யாசாரியராக வெழுந்தருளியிருந்து மணவேள்ளி செய்து கொடுத்த சிவஸ்தலம். இது காவிரியின் வடகரையிலுள்ளது. சம்பந்த சுந்தரர்களாற் பாடப்பட்டது

திருவைகன்மாடக்கோயில்

காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற் பாடப்பட்டது

திருவைகாவூர்

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம் சம்பந்தராற் பாடப்பட்டது

திருவைகுந்த விண்ணகரம்

காவிரியின் வடகரையின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். திருமங்கையாழ்வாராற் பாடப்பட்டது

திருவையாறு

காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். காவிரியின் தென்கரையிலிருந்து சுந்தரமூர்த்திநாயனார் அவ்வாற்றைத்தாண்டி இத்தலத்திற்குச் செல்ல வெத்தனித்தபோது அவ்வாறு மிகப்பெருகி வழிமறிக்க நாயனார் அக்கரையினின்று பதிகம் பாடப் பெருகிவந்த நீர் பளிங்கு போல் உறைந்துநிற்க, எஞ்சிய நீர் வற்றி வழிவிடச் சென்று தரிசித்தஸ்தலம். சுவாமி செம்பொற்சோதி, அம்மை அறம்வளர்த்தாள். சிவபிரான் அப்பருக்குக் கைலாயக்காட்சி கொடுத்தருளிய தலமுமிதுவே. மூவராலும் பாடப்பட்டது

திருவொற்றியூர்

சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலியாரைச் சிவானுஞ்ஞையால் மணம் பொருந்திய சிவஸ்தலம். அவ்விருவரும் சத்தியஞ் செய்து கொண்ட மகிழவிருடிம் இன்றுமங்குளது. பட்டினத்தடிகளும் கலயநாயனாரும் முத்திகூடியது இத்தலத்திலேயாம். இது மயிலாப்பூருக்கு வடக்கே சமுத்திரதிரத்துள்ளது. மூவராலும் பாடப்பட்டது

திருவோத்தூர்

பனங்காட்டூருக்குத் தென்கீழ்த்திசையிலே உள்ள சிவஸ்தலம். சம்பந்தமூர்த்திநாயனார் ஆண்பனைகளைப் பெண்பனைகளாக்கிய அற்புதம் நிகழப்பெற்ற ஸ்தலமிதுவே

திருஷத்வதி

யமுனைக்கு மேற்கிற் பிரவேசித்துக் கௌசிகநதியோடு சங்கமிக்கின்ற நதி

திருஷியன்

அகஸ்தியன் புத்திரன்

திருஷ்டகேது

சத்தியதிருதன் புத்திரன். திருஷ்டத்துயமன் மகன். சுகமாரன் மகன்

திருஷ்டத்துயமனன்

துருபதன்மகன். திரௌபதி சகோதரன்

திருஷ்டன்

வைவசுதமனு புத்திரருளொருவன். இக்ஷூவாகு தம்பி. தூர்ஷ்டம் என்பது இவன் வமிசப்பெயர். நாபாகன் இவன் புத்திரன். குகரன் மனன், விஷ்ணுபராணம் நாலாம் அமிசம்

திருஷ்டவர்மன்

அக்குரூரன் மகன்

திருஷ்டி

இரண்டாவது குந்திமகன்

திருஹியன், துருஹியன்

யவாதி புத்திரருளொருவன்

திரேதாயுகம்

மூன்றாவது யுகம். இது 1296000 வருஷங் கொண்டது. பலி இந்தயுகத்தவன்

திரௌபதி

துரபதன்மகள். பாண்டவர்பாரி. இவள் பூர்வத்தில் நளாயனன் என்னும் இருஷி புத்திரி. இந்திரசேனையென்னும் பெயரோடு மௌத்கல்லியன் என்னும் இருஷிக்குப் பாரியாயிருந்த போது அவள் பதிவிரதாதர்மத்தைப் பரீக்ஷிக்க விரும்பிய குஷ்டரோகியாகிய மௌத்கல்லியன் அவளுக்கு அசூயையுண்டாம் படி தன் தேகத்தை அழுகுபுண்ணாற் குரூரமாக்கியவழியும் அவள் மனங்கோணாது பாதுகாத்து வந்தாள். அது கண்ட மௌத்தகல்லியன் அவளை மெச்சி உனக்கு யாது வேண்டுமென்ன அவள் உம்மீது காமாதிகாரமுண்டாவதால் சுந்தர ரூபத்தோடு நீர் என்னை ஐந்துவகை கலத்தல் வேண்டுமென்ன, அன்று முதல் இருவரும் அவ்வாறே கலந்து போகந் துய்த்துவந்தார்கள். மேளத்கல்லியன் சிறிது காலத்திலிறந்து போக அவளுமிறந்து மறுஜன்மத்தில் காரொசனுக்குப் புத்திரியாகப் பிறந்து பசுபதியை நோக்கித் தவங்கிடந்தபோது பசுபதி பிரசன்னாராகி யாது வேண்டுமென்ன, அவள், பதிந்தேகி, பதிந்தேகி, பதிந்தேகி, பதிந்தேகி, பதிந்தேகி என ஐந்து பதி தருகவென்று வேண்டினாள். அது காரணத்தால் பசுபதி நீ மறுஜன்மத்தில் ஐவருக்குப் பாரியாவையென்றருளி மறைந்தார். இவள் யாகத்திற் பிறந்தமையால் யாக்கியசேனை யென்றும் துருபதன் மகளாதலின் திரௌபதியென்னும் பாஞ்சாலராஜன் மகளாதலின் பாஞ்சாலி யென்றும் பெயர் பெறுவள். தந்தையிட்ட பெயர் கிருஷ்ணை. திரௌபதியைத் துரியோதனன் தன்சபையிலெ பாண்டவர்கள் முன்னே ஆடைகளைவித்து மானபங்கஞ்செய்விக்கத் துணிந்த போது அவள் தன்னுடைய தெய்வபக்தியினால் உரிய வுரிய ஆடை வளரப் பெற்றவள். அதுகண்டு துரியோதனன் ஆற்றாது விடுத்தான். திரௌபதி பாண்டவர் ஐவருக்கும் பொதுமனைவி யேயாயினும் அருந்ததியொத்தகற்பினாள். சத்தியந்தவறாதவள். ஐவருக்கும் முறைமுறை யொவ்வொராண்டு மனையறம் புரிபவன். திரௌபதி யுதிஷ்டிரனுக்குப் பெற்ற புத்திரன் பிரதிவிந்தியன், வீமனுக்குப் பெற்ற புத்திரன் சுரதசேனன், அர்ச்சுனனுக்குச் சுரதகீர்த்தி, நகுலனுக்குச் சதானீகன், சகதேவனுக்குச் சுரதகன்மன். கிருஷ்ணனுக்கு ஐவரோடு, திரௌபதி தானும் தனது மனக்கிடக்கையச் சொல்ல நேர்ந்த போது, ஐம்புலன்களும் போலைவரும்பதிகளாகவு மின்னம் வேறொருவ னெம் பெருங்கொழுனனாவதற்குருகு மிறைவனே யெனது பேரிதய. மம்புவிதனிற் பெண் பிறந்தவர்க் காடவரிலாமையில்லா. னம்புதற்குளதோ வென்றனள் வசிட்ட மல்லறமனைவியேயனையாள்

திலீபன்

விருத்தசர் பகீரதன் தந்தை. இத்திலீபன் கல்வியும் ஆண்மையும் செங்கோன்னைமயுஞ் சிறந்தவன். இவன் பாரி சுதக்ஷிணை. திலீபசரித்திர சம்பந்தமாக சகுவமிசத்திற் கூறிய வமிசவரிசையும் புராணங்களிலே கூறிய வமிசவரிசையும் சிறிது மாறுபடுகின்றன. புராணேதிகாசங்களுகந்தம் முண்மாறு கொள்ளுகின்றன. ரகுவமிசம் திலிபன் ரகுவைப் பெற்றானென்று கூற, விஷ்ணுபுராணமுதலியன திலிபன் பகீரதனைப் பெற்றானெனக் கூறும். தசரதன் அஜன் புத்திரனென்பதும் அஜன் ரகுபுத்திரனென்பதும் ரசுவமிசம் விஷ்ணுபுராணம் இரண்டுக்குஞ் சம்மதம். ரகு தீர்க்கவாகு புத்திரனென்பது விஷ்ணுபுராணத்துணிபு. தீர்க்கவாகுவுக்குத் திலீபன் என்பது நாமாந்தரமாயின், ரகுவமிசம் மாறுபடுவதாகாது

திலோத்தமை

ஓரப்சரப்பெண். பிரமா ஏனைப்பெண்களைச் சிருஷ்டிக்குந் தோறும் வாய்ந்த ஒழுகினுள்ளே திலப், எட், பிரமாணம் எடுத்துச் சேர்த்து வைத்திருந்து பின்னர்ச் சிருஷ்டித்த பெண்ணாதலின் திலோத்தமையெனப் பட்டாள். பாற்கடலிற் பிறந்தவள். ஆநாகுலபாண்டியனுக்குச் சாரகுமாரனை யீன்றவள்

தில்லைவாழந்தணர்கள்

சிதம்பரத்திலே ஆனந்ததாண்டவஞ் செய்தருளுகின்ற நடராஜப் பெருமானுக்கு அர்ச்சகராகவுள்ள அந்தணர்கள். அந்நடராஜப் பெருமானிடத்திலே எல்லையில்லாத பக்தியுடையவர்கள். சிவபிரான் அவ்வந்தணர்களுள்ளே தாமுமொருவரென்று கூறப்பெற்ற பெருமை வாய்ந்தவர்கள். இவ்வந்தணர் மூவாயிரவரும் இரணியவன் மச்சக்கிரவர்த்தியாலே கங்கைக்கரையிலே பிரமாவினது அந்தர்வேதியினின்றும் கொண்டு வந்து சிதம்பரத்திலே சேர்க்கப்பட்டவர்கள். இவர்கள் மகிமை கோயிற் புராணத்திலே கூறப்பட்டுள்ளது

திவாகரன்

திவாகரமென்பதனுட்காண்க. இக்ஷூவாகுவமிசத்துப் பிரதிவியோமன் மகன்

திவாகரம்

திவாகரமுனிவர் செய்த நிகண்டு. இஃது அம்பர்நகரத்துச் சேந்தன் செய்வித்தமையினால் சேந்தன் திவாகரமெனப் பெயர் பெறும். பன்னிரண்டு தொகுதிகளையுடையது. இந்நூல் சிற்றளவினவாகிய சூத்திரங்களால் யாக்கப்பட்டிருத்தலிற் கற்போர்க்குப் பெரிதும் பயன்படத்தக்கது. கற்றநாவினன் கேட்டசெவியினன். முற்றவுணர்ந்த மூதறிவாளன், நாகரிகநாட்டத்தாரியனருவந்தை, தேருங்காட்சிச் சேந்தன் எனத் திவாகரத்தள்ளே வருங்கூற்றாற் சேந்தன் செய்வித்தோனென்பதும், செங்கதிர்வரத்திற்றோன்றுந் திவாகரர் எனவரும் வீரைமண்டலவன் நிகண்டுப்பாயிரத்தாலே திவாகரர் சூரியகுலவேந்தர் பரம்பரையில் வந்தோரென்பதும் நன்றாக நிச்சயிக்கப்படும். சேந்தன் கல்லாடராற் புறநானூற்றினுள்ளே பாடப்படுதலின் திவாகரர் கடைச் சங்ககாலத்தவரென்பது நன்கு துணியப்படும்

திவியன்

சாத்தவதன் மகன்

திவிரதன்

ததிவாகனன் மகன்

திவோதாசன்

காசிராஜ வமிசத்துத் தன்வந்தரியினது பௌத்திரனாகிய பீமரதன் புத்திரன். இவனிடத்திலே தன்வந்தரியினது குணவிசேஷங்க ளெல்லாம் விளங்கினமையின் தன்வந்தரி என்னும் பெயராலும் வழங்கப்பட்டான். திவோதாசன் அரசியற்றுங் காலத்திலே விசுவாமித்திரர் புத்திரராகிய சுசுருதர் முதலிய எண்மரும் அவன்பாற் சென்று வைத்தியசாஸ்திரத்தைக் கிரமமாகக்கற்று வல்லாராகி எண்மருந் தனித்தனி நூல் செய்தார்கள். அவருள்ளே சுசுருதர் செய்த சுசுருதம் தலைமைபெற்ற வைத்திய சாஸ்திரங்களுளொன்றாய் விளங்குவது, ஆரியவைத்திய நூல்களுள்ளே அதுவொன்றே சஸ்திரசிகிற்சை முறையைத் திட்பநுட்பமாக விரித்துரைப்பது. சுசுருதம் இற்றைக்கு ஆயிரத்துநூறு வருஷங்களுக்கு முன்னே பர்ப்பரபாஷை, அரபி, யிலே மொழி பெயர்க்கப்பட்டது. லத்தீன் பாஷையிலும் பின்னர்க்காலத்திலே, Hepler, என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது. திவோதாசன் காசியிலே நெடுங்காலம் தருமராச்சியம் புரிந்து வந்தானென்றும், அவனே சிவாலயத்தை ஸ்தாபித்து முறைப்படி நித்தியநைமித்தியங்களை நடாத்திவந்தவனென்றும் ஸ்காந்தங்கூறும். பகீரதன்மகன். முற்கலன்மகன். அகலியை தமையன்

திஷ்டன்

இக்ஷூவாகு தம்பி. இவன் மகன் நாபாகன்

திஷ்யந்தன்

துரியசித்தன் சுவீகாரபுத்திரன் துஷ்யந்தன் தம்பி