அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
சகடாசுரன்

கம்சன் தூதருளொருவன். இவன் கிருஷ்ணன் சிசுவாயிருக்கும் போது ஒரு சகட ரூபமெடுத்துப் போய்த் தன்மீதூரவருங் கிருஷ்ணனைக் கொல்ல வெண்ணிக் கிடந்தபோது அஃதுணர்ந்து கிருஷ்ணன் அதன்மீதேறித் தகர்த்தவழி உயிர் துறந்தவன்

சகந்தரை

ஒரு தேசம்

சகம்

சாகர் வசிக்குந்தேசம். இது சிந்துதேசத்திற்கு மேற்றிசைக்கண்ணது

சகரன்

சக்கரவர்த்திகள் அறுவரிலொருவன். வாகுகன் புத்திரன். இவனுக்குப் பாரியரிருவர். மூத்தாள் கேசினி. இளையாள் சுமதி. இவன் அசுவமேத யாகஞ் செய்தபோது அசுவத்தைப் பாதலத்தில் இந்திரன் கொண்டுபோய் மறைத்தான். சகரன் புத்திரர் அறுபதினாயிரவரும் பூமியைத் தேடியபோது கபிலரால் நீறாக்கப்பட்டார்கள். இவர்களா லகழப்பட்டமையின் கடல்சொகரமெனப்படும். சகரன் கருப்பத்திலிருக்கும்போது தாய் நஞ்சூட்டப்பட்ட காரணத்தால் சகரனென்னும்பெயர் அவனுக்காயிற்று, கரம் ~ நஞ்சு

சகஸ்வான்

அமரிஷன் புதல்வன்

சகிதேவிநாயகி

திருச்சேஞலூரிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்

சகுந்தலை

விசுவாமித்திரருக்கு மேனகையிடத்துப் பிறந்த புத்திரி. துஷ்யந்தன் பாரி. பரதன் தாய். இவளைப் பெற்றவுடனே மேனகை அக்காட்டில் விட்டுப்போக அச்சிசுவைச் சகுந்தபட்சிகள் சிறகாலணைத்துக் காத்தன. அப்போது கண்ணுவ முனி அவ்வழியிற் சென்று கண்டெடுத்துப் போய் வளர்த்தனர். சகுந்த பக்ஷீகள் காத்தமையின் சகுந்தலைப்பெயர் பெற்றாள்

சகுனி

இரணியாக்ஷன் புத்திரன். தசரதன் புத்திரன். காந்தார தேசத்தரசனாகிய சுபலன் புத்திரன். காந்தாரி சகோதரன். துரியோதனன் மாமன். துரியோதனனுக்காக பாண்டவரோடு சூதாடிவென்றவன். இவனே துரியோதனன் குடிக்கு நாசகாரணன்

சகோத்திரன்

பகீரதன் புதல்வன்

சக்கரசமேரதைத்தியன்

திரணாவர்த்தன்

சக்கரதேவன்

கலிங்கதேச ராஜாவாகிய சுருதாயுவினது இரண்டாம் புத்திரன்

சக்கரவாளம்

லோகாலோக பர்வதம். இது சக்கராகாரமாகப் பூமியைச் சூழ்ந்திருத்தலின் இப்பெயர் பெறுவதாயிற்று

சக்கிரி

இந்திரன்

சக்தி

வசிஷ்டர் மூத்தமகன். பராசரன் தந்தை. லோகமாதாவாகிய சங்கரி. தெய்வத்தினது வல்லமை, அருள், ஞான முதலிய குணங்கள் சக்தி யெனப்படும்

சக்ஷூ

யயாதிபௌத்திரன். அநு புத்திரன்

சக்ஷூ நதி

கங்கையிற்கலக்குமொரு நதி

சக்ஷூர்மநு

சர்வதேசசுவினது புத்திரன். சுவாயமபுவமநு வமிசம். தாய் அஹதி. பாரி நடுவலை. புருவன், குறசன், திருதன், துய்ம்மன், சத்தியவந்தன், இருதன், விரதன், அக்கிநிஷ்டோமன், அதிராத்திரன், சுதுய்ம்மன், சிபி, உன்முகன் எனப் பன்னிருவர் புத்திரர்

சங்கசூடன்

இவன் பிருந்தாவனத்திருந்த கோபஸ்திரிகளை உத்தர திசைக்குக் கொண்டு போனபோது கிருஷ்ணனால் கொல்லப்பட்ட குபேரன் தூதன்

சங்கடன்

தருமனுக்கு புதேவியிடத்துப் பிறந்த புத்திரன்

சங்கணன்

வச்சிரநாபன் மகன்

சங்கன்

விராடராஜன் புத்திரன். இவன் உத்தரைதமையன். கஞ்சன் தம்பி

சங்கபாலன்

லோகபாலருளொருவன்

சங்கமங்கை

சாக்கிய நாயனார் முத்தியடைந்தலம். இது தொண்டை நாட்டிலுள்ளது

சங்கமன்

ஒரு வீரணிகன். நீலிகணவன்

சங்கம்

தமிழ்ச்சங்கம் காண்க

சங்கம்

தமிழ்ச்சங்கம் காண்க

சங்கர நமச்சிவாயப் புலவர்

நன்னூலுக்கு விருத்தியுரைசெய்தவர். இவர் திருநெல்வேலியிலே நூற்றுதொண்ணூறு வருஷங்களுக்கு முன் இருந்தவர். இவர் குரு சுவாமிநாததேசிகர்

சங்கரகவி

போஜன் சமஸ்தானத்துக் கவிகளுளொருவர். இவர் ஒரு சமயத்திலே சொன்ன அற்புதசுலோகத்துக்காகப் போஜனிடத்திலே பதினோரிலக்ஷம் பொன் பரிசு பெற்றவர்

சங்கரன்

சிவன், சுகத்தைச் செய்பவன் என்பது பதார்த்தம்

சங்கராசாரியர்

இப்பெயரால் விளங்கிய ஆசாரியர் மூவர். பிரசித்திபெற்றவர் ஆதிசங்கராசாரியார். மற்றைய இருவரும் அப்பெயரைத் தமக்கிட்டுக் கொண்டுடமையாற் பிரசித்தி பெற்றாரானவர். ஆதிசங்கராசாரியர் சிதம்பரத்திலே விசுவசித்து என்னும் பிராமணோத்தமருக்கு அம்பிகையென்னும் அவர் மனைவிவயிற்லே புத்திரராக அவதரித்தவர். அவதரித்தகாலம் யுதிஷ்டிசகம் இரண்டாயிரத்து நூற்றம்பத் தெட்டாம், உகருஅ, வருஷமாகிய இரத்தாக்ஷீயிலே மாசிமாதத்துக் கிருஷ்ணபக்ஷத்துச் சதுர்த் தசிதிதியோடு கூடிய சோமவார அர்த்தராத்திரி. அவர் பாலசந்நியாசம் பூண்டு உத்தரஞ் சென்று அங்கே ஒரு குருவையடைந்து வேதசாஸ்திரங்களைக் கற்று வல்லராகிப் பிரமசூத்திரத்திற்கும் உபநிஷதங்களுக்கும் பாஷியஞ் செய்து அத்துவைத மதத்தை எடுத்துத் திக்குகடோறுஞ் சென்று பிரசங்கித்து வியவஸ்தாபனம் பண்ணி ஜகத்குருவாயினர். துவாரகை, சிருங்கிரி, காஞ்சீபுரம், கும்பகோணம் முதலியவிடங்களிற் சிற்சிலநாள் வாசஞ் செய்து அத்துவைதமத ஸ்தாபனம் பண்ணினமையால் பிற்காலத்திலே ஆங்காங்கும் அவர்க்கு மடாலயங்களமைத்துச் சமர்ப்பிக்கப்பட்டன. அவர் முப்பதிரண்டு வயசிலே பரிபூரணதசையடைந்தனர். அவர் செய்த நூல்களிலே பௌத்தமத கண்டனம் யாண்டுங்காணப்பட்டமையினாலே அவர் பௌத்தமதத்தை வேரறுத்தார் என்னுங் கொள்கை ஆதாரமுடையதன்று. புத்தர் அவர்க்குப் பின்னுள்ளவர். அத்துவைத மதத்தைத் தடைவிடைகளாலே பிரவசனஞ் செய்து வியஸ்தாபனம் பண்ணிப்போயினரேயன்றி, அவர் நடுநிலைபிறழ்ந்து அகங்கரித்து நிமிர்ந்து ஒரு மதத்தையுஞ் தூஷித்தாரல்லர். அவர் வாக்குவல்லபமும், சாதுரியமும், எடுத்த விஷயங்களை வரம்புகடவாது கடைபோக விசாரித்து நிச்சயிக்கும் நுண்ணிய விவேனமும், அழுக்காறும் பக்ஷபாதமும்பற்றி நடுநிலை பிறழாது சத்தியத்தையே அவாவும் பெருந்தகைமையுமுடையரென்பது அவருடைய நூல்களால் நன்கு புலப்படும். அவர் இப்பரதகண்டத்திலே அந்நாளிலே அவதாரம் பண்ணிப் பாஷியங்கன் செய்யா திருப்பரேல் வேதோபநிஷதங்கள் நெடுங்காலத்துக்கு முன்னே மேகபடலத்தால் மூடப்பட்ட சந்திரனைப்போலொளியிழந்து விடும். அவர் சமாதிகொண்டவிடம் காஞ்சீபுரம். அவர் பௌத்தமதம் தமக்குப் பிற்காலத்திலேவந்து ஆரியதேசத்திலே வேரூன்றப்பாக்குமெனத் தமது தீர்க்கதிருஷ்டி யினால் முன்னருணர்ந்து வேதாந்தசூ த்தித்துக்குப் பாஷியமுதலியன செய்து வைத்துப் போயினாரெனக் கொள்ளினுங் கொள்ளலாமேயன்றி, அவர் புத்தசமயத்தை வேரறுக்கும் பொருட்டு அவதாரஞ் செய்தாரெனக் கொள்வது அவர்பெருமைக்கீனந் தருவதாகும். இனி அவர் இரண்டாயிரத்தெண்ணூற்று நாற்பத்திரண்டு வருஷங்களுக்கு முன்னிருந்தவரென்பது சைனசமயநூல்க ளுளொன்றாகிய ஜினவிஜயம் என்னும் நூலினாலே நன்கு விளங்கும். சங்கராசாரியருக்குப் பிரதமசீஷராகிய ஆனந்தகிரியென்பவர் தாம் செய்த சங்கரவிசயம் என்னும் நூலிலே சங்கராசாரியர் பிறந்தவூர் சிதம்பரமென்றும், தந்தையார் அம்பிகை என்றும் கூறிப் போயினாரேயன்றி, இன்ன காலத்திலே என்று கூறினாரில்லை. அவ்விஷயத்தைக் காலத்தோடு கூறிப்பூர்த்தி செய்வது சினவிசய இருஷி, பாணம், பூமி, அக்ஷீ என்னும் எண்களை வலப்புறந்தொட்டு இடப்புறமாக முறையே எழுதவரும் தொகை வருஷங்கள் கழிந்த பின்னர் என்பது சினவிசயத்திலே கூறப்ப ட்ட சுலோகக்கூற்றின் மொழிபெயர்ப்பு. இருஷி என்பது ஏழு. பாணம் ஐந்து, பூமி ஒன்று, அக்ஷீ இரண்டு இவற்றை முறையே இடந்தொடங்கி வலமுகமாக விட்டெழுதிப் படிக்க வருவது உகருஎ. யுதிஷ்டிரசகத்திலே சங்காராசாரியர் பிறக்கும்போது சென்ற வருஷத்தொகை இதுவே. விக்கிர மசகாரம்பத்துக்கு முன்னே ஆரிய தேசத்திலே வழங்கிவந்தது. யுதிஷ்டிரசகமென் பதுயாவருமறிந்த விஷவம். விக்கிரமசகம் ஆரம்பிக்கும்போது யுதிஷ்டிரசகத்தில் ங0சுசு, வருஷங்கழிந்தன. விக்கிரமசகத்தில் இக்கலி ஐயாயிரம் வரைக்கும் சென்ற வருஷம் ககூருசு. ஆகவே சங்கராச்சாரியார் பிறந்து உஅசஉ வருஷங்கள் சென்றன. புறச்சமயவாதிகளாகிய சைனருடைய நூலே இதற்குப்பிரமாணமாய் ஆனந்தகிரியினது கூற்றை வலியுறு த்துமென்றால் அவர்காலத்தைக் குறித்து ஐயங்கொள்ளற்கிடங்காண்கிலம். சமஸ்கிருத திராவிட நூல்களை ஆராய்ந்துணர வேண்டுமென்னும் அவாவோடு அவற்றைக் கற்கப்புகும் ஐரோப்பிய பண்டிதர்களுட் சிலர் புகுந்தும் புகாமுன்னே அந்நூல்களுக்கும் பாஷைகளுக்கும் வயசு நிச்சயிக்கத் தொடங்கி விபரீதசித்தாந்தஞ் செய்வர். அவர் போசப்பிரபந்தத்திலே சங்கரகவியென்பவர் பெயரைக்கண்டவுடனே சங்கராசாரியரையுஞ் சங்கரகவியையுமொருவராகக் கொண்டு காலங்கற்பித்து வழக்குரைப்பர். அவர்ககுப் மேற்படாதிருத்தலே உவப்பின் பாலதாம். அதற்கு மேற்படுமாயின் அஃதவர் வெறுப்புக்கேதுவாய்விடும் அதுநிற்க, சிருங்கிரி மடத்திலே சங்கராசாரியாருக்குப் பின், ஒருவர் பின் னொருவராகச் சாரதாபீடத்திலே ஆசாரியாக வீற்றிருந்து வைதிகராச்சியஞ் செய்து போயினவர் தொகை பிரமசுவரூபாசாரியர் முதல் கேசவாச்சிரமரீறாக எழுபத்திரண்டு. எழுபத்துமூன்றாம் பட்டங்கொண்டு இப்போதுள்ளவர் ஸ்ரீராஜராஜேசுவர சங்காராச்சிரம சுவாமிகள். ஒரு பட்டத்துக்கு கணக்கிட்டாலும் அவர்காலமீராயிரத்தைஞ் நூறு வருஷங்களுக்கு முன்னுள்ளதாகின்றது. கும்பகோணத்துள்ள மடத்துப்பட்டத் தொகையும் இதற்காதாரமாக நிற்கின்றது. ஆரிய கிரந்த கர்த்தாக்கள் சரித்திரமென்னும் நூல்செய்த ஸ்ரீ ஜனார்த்தன ராமச்சந்திரர் அவர்ளும், சங்கராசாரியர் இரண்டாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னுள்ளவரென்றே தமது நூலிற் கூறுவர் அதுவும்நிற்க, சங்கராசாரியருக்குக் குரு பதஞ்சலியென்பது வித்தியாரண்ணி யர் செய்த சங்கரவிஜயமென்னும் நூலினால் நிச்சயிக்கப்படும். பதஞ்சலியென்பது கோவிந்தயோகிக்குப் பூர்வாச்சிரமநாமம். யோகசூத்திரம் மகாபாஷியம் முதலியன செய்தவருமிவரே, பதஞ்சலி மகா முனிவரல்லர், பதஞ்சலி இரண்டாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னுள்ளவரென்பது ஐரோப்பியபண்டிதர்க்கு மொத்த கருத்தாம். பதஞ்சலிக்குச் சீஷராகவே சங்கராசாரியர் காலமும் இரண்டாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னுள்ளதேயாம். நூல்களிலே யவன சப்தம் கேட்கப்படுமாயின் அதுகொண்டு அந்நூல்களெல்லாம் மகா அலெக்சாந்தர் படையெடுப் புக்குப் பின்னுள்ளனவெனக் கூறுவது சமஸ்கிருத வித்தியா விநோதர்களாகிய ஐரோப்பியபண்டிதர் வழக்கு. அப்படையெடுப்புக்குப் பல்லாயிரம் வருஷங்களுக்கு முற்றொட்டு யவனர் ஆரியநாட்டில் வந்து சேவித்தும், வாணிகம்பண்ணியும், சாஸ்திரங்கற்றும் மீளும் வழக்குடையரென்பது அப்பண்டிதர்கள் அறியார் போலும். இனி இரண்டாஞ் சங்கராசாரியர் கேரளதேசத்திலே சாலிவாகனசகம் நானூற்றிருபத்தொன்றிலே மாசிமாதச்த்தபரபக்கத்துச் சதுர்த்தசியிலே சிவகுரு என்பவருக்குப் புத்திரராக அவதரித்தவர். இவர் வித்தியாநரசிங்க பாரதிக்குப் பின் சாரதா பீடத்தில் வீற்றிருந்தவர். இவருந்திக்கு விஜயஞ்செய்து அத்துவைதமத ஸ்தாபனம் பண்ணிப் பெயர்படைத்தவர். இவர் சாலிவாகனசகவருஷம் நானூற்றுத் தொண்ணூற்றொன்றிலே கார்த்திகைமாசத்தி லேயுண்டாகிய சூரியகிரகணகாலத்திலே சமுத்திரஸ்நானஞ் செய்யும் பொருட்டு நிர்மலமென்னும் ஊரையடந்து அது முடித்துக் கொண்டு அங்கேயிருக்குநாளிலே, அடுத்த சுக்கிலபக்கத்துத் திரயோதசியிலே சமாதி கூடினவர். இவரே சங்க்ஷேபசாரீரக முதலிய நூல்கள் செய்தவர். இவரும் ஆதிசங்கராசாரியரை யொருவாறொத்து நிற்றகுரிய சர்வசாஸ்திரநிபுனர். ஆகவே இவர்காலம் ஆயிரத்து முந்நூற்று முப்பது வருஷங்களுக்கு முன்னுள்ளது. இவ்வரலாறும் சினவிசயத்திற் கூறப்பட்டுள்ளது. நிர்மலம் மேற்குச்சமுத்திர தீரத்திலே கொங்க தேசத்துக்கு வடதிசையிலேயுள்ளது. அங்கே சங்கராசாரியரது சமாதியும் ஆலயமுமின்றுமுள. கார்த்திகைமாசத்துச் சுக்கிலபக்ஷத்துத் திரயோதசி தோறும் பெருவிழாவொன்று நடந்துவருகின்றது. ஜினவிசயம் பிரமாணநூலென்பதற்கு அது வலிய சான்றாகும். மூன்றாஞ் சங்கராசாரியர் சாலிவா கனசகாப்தம் எழுநூற்றுப் பத்திலே பிறந்து ஐம்பத்தாறாம் வயசிலே அடைந்தவர். இவரும் வித்தியாசாதுரியமுடையவர். இவருடைய வரலாறு சதானந்த சுவாமிகள் செய்த திக்குவிசய நூல்கள் செய்தோர் ஆதிசங்கராசாரியரிடத்து விளங்கிய பெருமைகள் சிலவற்றையுமெடுத்து முள்ளனவேபோல முகதனாலாரோபித்துப் போயினர். ஆதிசங்கராசாரியராற் செய்யப்பட்ட நூல்கள் பிரமசூத்திரபாஷியம், ஆனந்தலகரி, சௌந்தரியலகரி, சிவபுஜங்க முதலியன. அவர் திருஞானசம்பந்தமூர்த் திநாயனாரைச் சௌந்தரிய லகரியிலும், இயற்பகையார் சிறுத்தொண்டர், சண்டேசுரரென்னும் நாயன்மார்களைச் சிவபுசங்கத்திலும் துதித்திருத்தலால், அந்நாயன்மார்கள் காலம் அவருக்கு முந்தியதென்பது நன்றாக நிச்சயிக்கப்படும். ஆனந்தலகரிக்கு வியாக்கியானஞ்செய்தோர் இருபத்து நால்வர். அவ்வியாக்கியானங்களுள்ளே சிறந்ததாகக் கொள்ளப்படுவது அப்பையதீ க்ஷீதர் செய்தது. மேலே பௌத்தமதமெனச் சுட்டப் பட்டது பூர்வ பௌத்த மதமன்று

சங்கருஷணன்

பலராமன். இவன் தேவகியினது கருப்பத்திலிருந்தபோது யோக மாயாதேவி சங்கருஷித்துக் கொண்டு போய் ரோஹிணி கருப்பத்திற் சேர்ந்தமையால் இப்பெயர்பெற்றான்

சங்கற்பசூரியோதயம்

நாராயனாசாரியர் விசிஷ்டாத்துவைத மத தத்துவங்களை ரூபாகாரம் பண்ணி நாடகமாகச் செய்த நூல். இது பிரபோத சந்திரோதயமென்னும் நூலை மாதைவேங்கடசுவாமிகள் செய்தருளிய பின்னர். அதற்கிணையாகக் காஞ்சீபுரத்து வைஷ்ணவராகிய இவ்வாசா ரியாராற் இயற்றப்பட்டது

சங்கற்பன்

பிரமமானச புத்திரருளொருவன். தருமனுக்குச் சங்கற்பையிடத்துப் பிறந்த புத்திரன்

சங்கற்பை

தருமன் பாரி

சங்கவருணர்

பாண்டியவரசராற் சூட்டப் பட்ட நாகரிகர் என்னும் பட்டமுடையோருள் ஒருவராகிய இவர் தந்துமாரன் என்பவனைப் பாடிய புலவர். புறநானூற்றிலுள்ள செய்யுள்களுளொன்றாகிய இவர் பாடல் செல்வ நிலையாமையை நன்குணர்த்தும்

சங்கிராந்தவாதசைவன்

விகாரமின்றி நிற்கும் ஆன்மசந்நிதியிலே அசத்தாகிய கருவிகளே சத்தாகிய சிவத்தைச் சிவகரணமாய் நின்று அறியுமென்று சொல்பவன். இவன் அகச்சமயிகளுளொருவன்

சங்கிருதம்

சமஸ்கிருத பாஷைக்கினமாயுள்ள சௌரசேனி முதலிய பிராகிருதங்களுள் ஒன்று. சமஸ்கிருத பாஷை

சங்கிருதி

மூன்றாம் நரன் புத்திரன். ரந்திதேவன், குரன் என்போர் இவனுக்குப் புத்திரர்

சங்குசிரசு

தநுபுத்திரருளொருவன்

சசதன்வன்

ஹிருதிகன் புத்திரன். தேவமீடன் தம்பி. இவன் சத்தியபாமையைத் தான்பெறக்கருதிச் சத்திராசித்துவை நித்திரைபோம்போது கொன்றவன். அது காரணமாகக் கிருஷணனாற் கொல்லப்பட்டவன்

சசாங்கன்

சந்திரன். சசசின்னமுடையவன் என்பது பதார்த்தம். சசம் ~ முயல். காயாவிலிருந்த போதிவிருக்ஷத்தை வெட்டி அழித்தவன்

சசி

புலோமன் மகன். இந்திரன் பாரி. புலோமன் மகளாதலிற் புலோமசையெனவும் படுவன். இவள் நித்தியகன்னிகை. தேவராஜபதம் பெறுவோரெல்லாம் இந்திர நாமத்துக்கும் அவ்வவர்க்குப் பாரியாவோ ரெல்லாம் சசியென்னும் பெயர்க்கு முரியரென்பது நித்தியகன்னிகையென்பதன் கருத்து

சசிவிந்து, சசிபிந்து

குரோஷ்டு வமிசத்துச் சித்திரரதன் புத்திரன். இவன் அநேகமனைவியரும் புத்திரரும் உடையோனெப்படுபவன்

சச்சந்தன்

ஏமாங்கத தேசத்தரசன். ஜீவகன் தந்தை. தாய்வயிற்றிலே சீவகனிருந்தபோது சச்சந்தனை மந்திரி கொன்று அரசனாகத் தாய் காட்டகத்தோடி உயிர் பிழைத்தாள். இவன் வரலாறு சீவகசிந்தாமணியிற் கூறப்பட்டுள்ளது

சஞ்சயன்

திருதராஷ்டிரனுக்கு நண்பினனாகிய ஒரு சூதன் மகன். இவனே பாரதயுத்தம் நடக்கும்போது யுத்தகளத்தில் நடக்கும் செய்திகளையெல்லாம் அவ்வப்போதுள்ளவாறு பார்த்துத் திருதராஷ்டிரன் பாரதயுத்தத்தைப் பார்க்க விரும்பி வியாசரைநோக்கித் தனக்குக் கண்ணோக்கந் தந்தருளவேண்டுமென்று வேண்டிப் பெற்றுலகத்தை நோக்கியபோது, பயந்து, இப்பார்வை நமக்குவேண்டாம். என்றும் போலக் குருடனாகவிருப்பதே நமக்குப் பிரியம் என வியாசர் சஞ்சயனுக்கு எப்பொருளையும் எத்துணை தூரத்திலுமிருந்து நோக்கியுணருமுணர்ச்சியையும் வாய்மை யையும் அருளிப் போகச் சஞ்சயன் யுத்தகள வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருந்தான். பகவற்கீதையைக் கேட்டு வெளியிட்டானுமிவனே

சடையநாயனார்

சுந்தரமூர்த்தி நாயனாருடைய தந்தையார்

சடையப்பநாதர்

திருப்பானந்தாளிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமிபெயர்

சடையப்பமுதலி

இவர் கம்பரைச் சன்மானித்துவந்த மகாப்பிரபு. இவர் திரு வெண்ணெய் நல்லூரிலே சாலிவாகனசகம் எண்ணூற்றேழளவில் விளங்கிய வேளாண் முதலி. இவர் பெருமையைக் கம்பர் தாம் பாடிய இராமாயணத்தில் இடைஇடையே இசைத்துக் கவிசெய்தார்

சண்டகௌசிகன்

இவர் கௌதம வமிசத்தில் வந்த ஒரு முனிவர். மகததேசத்தரசனாகிய பிருகத்திரதன், இக்கௌசிகர் அநுக்கிரகித்த ஒரு மாங்கனியால் ஜராசாந்தன் என்னும் புத்திரனைப் பெற்றான்

சண்டமார்க்கன்

சுக்கிரன் புத்திரன். தைத்திய புரோகிதன்

சண்டமுண்டர்

சும்பசிசும்பர் தோழர்

சண்டேசுரநாயனார், தண்டீசர், சண்டி, விசாரசருமர்

சேஞலூரிலே பிரா மண குலத்திலே எச்சதத்தன் மகனாகப் பிறந்து வேத விற்பன்னராகி அக்கிரகாரத்துப் பசுக்களை மேய்த்துவரப் பொருந்திக் கொண்டு போய் மண்ணியாற்றின் கரையிலே விடுத்து மணலைச் சிவலிங்கமாக்கிப் பசுக்களின் பாலைக்கறந்து அபிஷேகம் பண்ணிப் பூசை புரிந்து வருவதையுணர்ந்த தந்தை ஒருநாட்சென்று மணலினாலமைத்த லிங்கத்தைக் காலாற் சிதைக்க அது கண்டு பொறாராகி வாளினாலவர் காலைச் சிதைத்த சிவபக்தர். இவருடைய பக்திவலிமையைக் கண்டு சிவபிரான் சண்டேசுரபதத்தையீந்தருளினர். இவர் திருநாவுக்கரசருக்கு முந்தியவரென்பது தழைத்ததோராத் தியின் கீழ்த்தாபரமண லாற்கூப்பி யழைத்தங்கே யாவின்பாலைக்கறந்து கொண்டாட்டக் கண்டு பிழைத்தான்றாதலைப் பெருங்கொடு மெழுவால் வீசக் குழைத்த தோரமுதமீந்தார்குறுக்கை வீரட்டனாரே. என்னுமவர் தேவாரத் தாற் துணியப்படும். ஆகவே இவர் காலம் நாலாயிரத்தைஞ்நூறு வருஷங்களுக்கு முன்னுள்ளதாதல் வேண்டும்

சண்பகாரணியேசுவரர்

திருநாகேச்சரத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்

சதகும்பம்

பொன்விளையுமொரு மலை

சதகோடி

பசமானன் புத்திரன். இவனுக்குப் புத்திரர் நூற்றுவர். அவருள் மூத்தோன் வஷூவசோதி. சகஸ்திரஜித்து புத்திரன். இவன் புத்திரர் மகாஹயன், வேணுஹயன், ஹேஹயன் என்போர்

சதசிருங்கம்

ஒருமலை. துர்வாசர் உபதேசித்த மந்திரத்தாற் பாண்டவரைப் பெற்றவிடம்

சதசுவன்

சமரன் புத்திரன்

சதசேனன்

கிருஷ்ணன் வமிசத்து உக்கிரசேனன் மகன்

சதத்திருதி

பிரமன். பிராசீனபரு கிபாரி. சமுத்திரன் மகன். பிரதேசுதாய்

சதத்துரு

ஒரு நதி. இஃது இமாலயத்து வடபாலிலுற்பத்தியாகிச் சிந்துநதியிற் கூடுவது

சதத்துவசன்

ஊர்வஜன் புதல்வன்

சதபருவை

சுக்கிரன் பாரி

சதமகன்

இந்திரன். நூறுமகம்புரிந்தோன் என்பது பொருள்

சதயாபன்

கேகயவமிசத்து ஓரிராசவிருஷி

சதரூபை

சுவாயம்பு பாரி. இவள் பிரமாவினால் முதன் முதல் சிருஷ்டிக்கப்பட்ட பெண்

சதவலி

சுக்கீரிவன் சோதிபதிகளுள் ஒருவன். சீதையை வடதிசையிற் தேடிப் போன தூதன் இவனே

சதாகாநந்தை, சதாநீரை

பாரிபத்திரபர்வதத்தி லுற்பத்தியாகும் நதிகள்

சதாக்ஷீ

துர்க்கை

சதாசிவதேசிகர்

இலக்கண விளக்கஞ் செய்த வைத்தியநாத நாவலர் குமாரர்

சதாசிவன்

விந்ரூபமும் விநியோகவடிவும், படிகநிறமும், பிறைமுடியும், ஐந்து திருமுகமும், பத்துக்கரமும், மூன்றுதேத்திரமும், உமையொருபாகமும், இம்மூர்த்ததிக்குப் பீஜாக்ஷரம் ஹகாரம்

சதாநந்தன்

பிரமா. கௌதமர் அகலியையிடத்துப் பெற்ற புத்திரன். இவன் ஜனகராசர் குலகுரு

சதாநீகன்

நகுலனுக்கு துரோபதியிடத்துப் பிறந்த புத்திரன். ஜனமேஜன்

சதாமதுராம்பிகை

திருத்தருமபுரத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்

சதாயு

சிராயு

சதுரங்கன்

ரோமபாதன் மகன்

சத்தி

பராசரர் தந்தை. வசிஷ்டர் மகன். சிவசக்தி. தெய்வசக்தி. தெய்வல்லமை. நிர்க்குணப்பிரமம் சிருஷ்டி முதலிய தொழில்களுக்காகச் சகுணவடிவு கொள்ளும்போது அதனிடத்தில் விளங்குச் சக்தி

சத்திமுற்றப்புலவர்

சத்திமுற்றமென்னும் ஊரிலே விளங்கிய ஒரு தமிழ்ப்புலவர். இவர் தமது வறுமைநோயாற் பாண்டி நாட்டை அடைந்து பாண்டியனைத் தரிசிக்கும் பொருட்டுப் போர்த்துக்கொள்ளவும் வஸ்திரமில்லாது குளிரால் மெலிந்து மரத்தின் கீழிருந்து, தமது மனைமக்களை நினைத்து தமது மனைமக்களை நினைத்து தம் விதியை நொந்துகொண்டிருந்தார். அப்பொழுது ஆகாயத்திலே தெற்கிருந்து வடக்குநோக்கிச் சத்தமிட்டுக்கொண்டு பறந்து போகின்ற ஒரு நாரையைக்கண்டு நராய் நராய் செங்கால்நாரய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன, பவளக்கூ ர்வாய்ச் செங்கால்நாராய் என்றற்றொடக்கத்துச் செய்யுளிலே தமது மனைமக்களது நிலைமையையும் எடுத்தமைத்துப் பாடினார். அச்சமயத்தில் நகர் சோதனையின் பொருட்டு அவ்வழியே சென்ற பாண்டியன் அதனைக் கேட்டு அவன் மீதிரக்கமுடையனாகித் தான் தரித்திருந்த போர்வையை அவன் மீது வீசிப்போயினான். விடிந்தபின்னர் அரசன் தன் சேவகரை அழைத்துத் தனது போர்வை முன்னிரவிற் களவுபோயிற்றென்று கூறி அக்கள்வனைத் தேடிக் கண்டு வருத்தாது கொண்டு வருமாறு ஆஞ்ஞைசெய்ய. அவ்வாறவர்கள் புலவ ரைக்கொணர்ந்து அரசன் முன் விடுப்ப, அரசன் அவருக்குத் தக்கவாறு பரிசளித்து அவரை அனுப்பிவிட்டான்

சத்தியகன்

இரண்டாம் சினி புத்திரன். சாத்தியகி தந்தை. யாதவர்களுள் விருஷ்ணி வமிசத்தவன்

சத்தியகர்மன்

திருடவிருதன்

சத்தியகீர்த்தி

அரிச்சந்திரன் மந்திரி

சத்தியகேது

சுகேதன் பௌத்திரன். விபுவினது தந்தை

சத்தியசிரவன்

இருக்குவேதாத்தியா பகனாகிய ஓரிருஷி, நரி, வீதிகோத்திரன் புத்திரன்

சத்தியசேனன்

கர்ணன் புத்திரன்

சத்தியஜித்து

வசுதேவன் தம்பியாகிய கங்கன் இரண்டாம் புத்திரன். துருபதன் தமயன்

சத்தியதிருதி

சாத்துவந்தன். சதாநந்தன் புத்திரன். இவன் தநுர்வேத நிபுணன். ஒரு நாள் வனத்தில் ஊர்வசியைக் கண்டு குக்கிலஸ்கலிதமுண்டாகப் பெற்று அதனை ஒரு நாணலின் மேல் விட, அதிலே ஒரு பெண்மகவும் ஆண்மகவும் உற்பத்தியாயின. சந்தநு அவ்வழியே வேட்டைமேற் சென்றபோது அச்சிசுக்களை யெடுத்துப் போய்வளர்த்தான். பெண் மகவாகிய கிருபி துரோணனுக்கு மனைவியாயினாள். ஆண் மகன் கிருபனெனப் பெயர் கொண்டான். பு. கிருதிமந்தன் புத்திரன். மி. மகாவீரியன் புத்திரன்

சத்தியநாயனார்

சோமநாட்டு வரிஞ்சியூரில் வியங்கிய வேளாளராகிய இச்சிவபக்தர் சிவனடியார்களை நிந்தைசெய்பவர்களது நாக்கையரிதலே தமது திருத்தொண்டாகக் கொண்டு விளங்கினவர்

சத்தியபாமை

சத்திராஜித்து மகள். இவள் கிருஷ்ணனுக்குப் பிரியநாயகி. இவள் பொருட்டுக் கிருஷ்ணன் பாரிஜாத விருக்ஷத்தையும் தேவலோகத்திருந்து பெயர்த்துக் கொணர்ந்தான்

சத்தியரதன்

பௌமரதனமகன்

சத்தியவதி

தாசராஜன் எடுத்து வளர்த் த புத்திரி. வியாசன் தாய். சந்தனு பாரி. இவள் வயிற்றிலே சந்தனுவுக்குப் பிறந்த புத்திரர் சித்திராங்கதன் விசித்திரவீரியன் என்போர். ஒரு சாபத்தினால் யமுனையிலே மீனுருக் கொண்டு கிடந்த அந்திரிகை யென்னும் அப்சரசு உபரிசரவசு என்பவன் விட்ட வீரியத்தை உட்கொண்டு பெற்ற புத்திரி. இவள் திவ்விய சுந்தர ரூபமுடை யயாயினும் மீன் வயிற்றிற் பிறந்தமையால் மற்சியகந்தம் அவள் தேகத்தில் வீச அது காரணமாக மற்சியகந்தியென்று பெயர் பெற்றிருந்த இவள் பராசரைக் கூடி வியாசரையீன்றபோது பராசரர் அநுக்கிரகத்தால் யோசனைகந்தி, பரிமளகந்தி யென்னும் காரணப் பெயர்களைப் பெற்றாள். கௌசிகி, இவள் காதிராஜன் மகள். இருஷிகன் பாரி. ஜமதக்கினி முனிவர் இவள் புத்திரர். இவள் நாயகனோடு தீப்பிரவேசஞ்செய்து கௌசி க நதியாயினவள்

சத்தியவாகீசர்

திரு அன்பிலாலர்துறையிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்

சத்தியவான்

மந்திர தேசத்தரசனான தியுமத்சேனன் புத்திரன். சித்திராசுவன் எனவும்படுவன். இவனே சாவித்திரி நாயகன்

சத்தியவிரதன்

திரிசங்குவினது பூர்வநாமம். முன் கற்ப்பத்திலே திராவிட தேசத்தரசனாகவிருந்து விஷ்ணு பக்தி பண்ணி இக்கற்பத்திலே வைசுவத மனுவாகப் பிறந்தவன்

சத்தியஹிதன்

உபரிசரவசுவினது வமிசத்தன்

சத்திராஜித்து

யாதவருள் விருஷ்ணி வமிசத்து நிம்முனன் புத்திரன். சத்தியபாமை தந்தை

சத்துபிரஸ்தன்

குருதேத்திரத்திருந்த ஒரு பிராமணன். இவன் தான் செய்த அதிதிபூஜாபலத்தால் குடும்பத்தோடு பிரம லோகமடைந்தவன்

சத்துருக்கினன்

தசரதன் கடைமகன் தாய் சுமத்திரை. குசத்துவஜன் மகள். சுருதகீர்த்தி இவனுக்குப் பாரி

சத்துருசாதனபாண்டியன்

இவன் கூன் பாண்டியன் தந்தை. காருண்ணியபாண்டியன் மகன்

சத்துருசித்து

பிரதர்த்தனன்

சத்துருஞ்சயன்

இவன் உக்கிரசே பாண்டியன் மகன்

சநகன், சநந்தனன்

பிரமமானச புத்திரர். இவர்கள் சனாதனர் சனற்குமாரரோடு சிவபிரானையடைந்து தமக்கு மனமடங்கலில்லை யென்றும், மனமடங்கவருள் புரியவேண்டுமென்றும் பிரார்த்திக்க, அவர் யோகசமாதியிலிருந்து சின்முத்திரைகாட்டி உண்மையுபதேசிக்கப்பெற்றவர்கள்

சநீசுவரன், சனி

சூரியன் புத்திரன். நவக்கிரகங்களுளொருவன். யமன் தம்பி

சந்தனு

பிரதீபனுக்குச் சுநந்தையிடத்துப் பிறந்த புத்திரன். இவனுக்கு முதற் பாரி கங்காதேவி. இவளிடத்திலே விஷ்மரைப் பெற்றான். இரண்டாவது பாரி பராசரருக்கு வியாசரைப்பெற்ற சத்தியவதி. இவளிடத்திலே சந்தநுவுக்குப் பிறந்த புத்திரர் சித்திராங்கதன், விசித்திரவீரியன் என இருவர். விசித்திரவீரியன் சந்ததியின்றி இறந்தான். அது கண்ட சத்தியவதி தனது மூத்தமகனாகிய வியாசனை அழைத்து நியோக நியாயத்தால் விசித்திர வீரியன் மனைவியரிருவரித்தும் திருதராஷ்டிரனையும் பாண்டுவையும் பிறப்பித்தான். வியாசரும் வீஷ்மரும் விவாகம்புரியவுடன் படாது பாலியத்திலே துறந்தார். சித்திராங்கதன் பாலியத்திலிறந்தான்

சந்தனை

அங்கதேசத்து வழியே பாய்கின்ற ஒரு நதி

சந்தியை

சாலகடங்கடை தாய்

சந்திரகிரி

நரசபூபாலன் ராஜதானி. இது தெலுங்க ராஜக்களுக்கு நெடுங்காலம். ராஜதானியாகவிருந்தது

சந்திரகுப்தன்

நந்தர்களுக்குப்பின் மகத தேசத்தையாண்ட மௌர்விய ராஜர்களுள் முதல் அரசன். இவன் தாய் முரையென்னும் பெயருடையாள். அது பற்றி அந்த வமிசத்தர் மௌர்வியரெனப்படுவர் இவர் காலம் இற்ரைக்கு 2,200 வருஷங்களுக்கு முன்னரென நிச்சயிக்கப்படுகின்றது. அஃதாவது கலி இரண்டாயிரத்து எழுநூற்றிருபதில் முடிதரித்தவன்

சந்திரகேதன்

ஸ்ரீராமருடைய தம்பி லக்ஷமணன் புத்திரருள்ளே இரண்டாம் புதல்வன்

சந்திரசர்மன்

விஷ்ணுசர்மன் புத்திரன். விக்கிரமார்க்கன் தந்தை. இவன் நான்கு வருணத்தும் நால்வர் பாரிகளை மணம்புரிந்து பார்ப்பனப் பெண்ணிடத்து வரருசியையும், க்ஷத்திரியப் பெண்ணிடத்து விக்கிர மார்க்களையும், வைசியப்பெண் வயிற்றில் பட்டியையும், சூத்திரஸ் திரியிடத்துப் பர்த்துருகரியையும் பெற்றவன். விக்கிரமார்க்கன் அரசனானபோது பட்டி மந்திரியானான்

சந்திரசேகரேசுவரர்

திரு இலம்பயங்கோட்டூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

சந்திரன்

நவக்கிரகத்தொன்று. அத்திரிக்கு அநசூயையிடத்துப் பிறந்தபுத்திரன். இச்சந்திரன் நக்ஷத்திரங்கள், பிராமணர், ஓஷதிகள், எக்கியங்கள், தபசு முதலிய வைகளுக்கதிபதி தன் புத்திரிகளாகிய இருபத்தேழு நக்ஷத்திரங்களையும் மணமுடித்துக் கொடுத்தான். இருபத்தேழில் ரோகிணி பிரியநாயகி. பிருஹஸ்பதி பாரியாகிய தாரையைச் சந்திரன் சோரமார்க்கமாகக் கூடிப்பெற்ற புத்திரன் புதன். இதுபற்றிப் புதன் மதிமகனெனப்படுவன். மற்றொருகாலத்திலே சமுத்திர மதனத்துக்கண் திருப்பாற்கடலிலே இச்சந்திரன் பிறந்தான். தக்ஷன் தன் குமாரிகள் இருபத்தேழுபெயர்களுள் ரோகினியிடத்துப் அதிப் பிரீதியும் மற்றையரிடத்துப் அற்பபிரீதியும் வைத்தொழுகும் சந்திரன்மீது கோபமுடையனாகி க்ஷயரோகத்தால் வருந்துக வென்று சந்திரனைச் சபித்தான்

சந்திரபாகை

சிந்துநதிக்கு உபநதி

சந்திரமதி

மதிதயன் மகள். அரிச்சந்திரன் பாரி. இவள் பிறக்கும்போதே மங்கலிய சூத்திரத்தோடு பிறந்தவள். பதிவிராதா தன்மத்திலும் நற்குணநற்செய்கைகளிலும் அழகிலுஞ் சிறந்தவள். விசுவாமித்திரர் அரிச்சந்திரனுடைய சத்தியவிரதத்தைச் சோதிக்கும் பொருட்டு அவனுக்குச் செய்த வன்மைகளையும் கொடியதுன்பங்களையும் இம்மாது சிரோமணி தன்கணவனோடுடனிருந்து மனஞ் சிறிதுஞ்சலியா தநுபவித்தவள். தனது நாயன் கடனுக்காக ஓரந்தணனுக்கு அடிமைப்பட்டவள். காட்டகத்தேதன்மகன் பாம்புகடித்திறந்தா னென்பது கேட்டும் அந்தணனுக்குத் தான் செய்யவேண்டிய கைங்கரியமெல்லாம் செய்து வைத்து விட்டே நள்ளிரவிற் காட்டகஞ்சென்று மைந்தனுடலைக் கண்டெடுத்துச் சுடலைக்குக் கொண்டுபோனவள். பறையனுக்கடிமைப்பட்டு அச்சுடலையிற் காவல்பூண்டிருந்தான். கணவனையும் அவனுக்குற்ற விதியையுங் கண்டு கதறி நைந்துருகி வழியும் தன் கணவனுக்கு மனந்தளரவேண்டாமென்றும் சத்தியத்தை கடைப் பிடிக்க வேண்டுமென்றும் புத்திகூறின உத்தமியுமிவளே. இங்ஙனம் அரிச்சந்திர னோடு படத்தகாத பாடெல்லாம்பட்டுக் கடைபோகச் சத்தியவிரதத்தை அணுத்துணையுந் தவறாமற் காத்த மாதுரத்தினம் இவ்வுலகில் இவளொருத்தியே. ஈற்றில் விசுவாமித்திரருங்கைசலித்து இறந்துகிடந் த புத்திரனை எழுப்பி அரிச்சந்திரனையும் சந்திரமதியையுமடிமை நீக்கி அவர்க்கு முன்போல அரசரிமையுங்கொடுத்து வாழ்த்தி வரங்களும் கொடுத்துப்போயினார். பல்லாயிரசருஷங்களுக்கு முன்னேயிருந்து விளங்கினவளேயாயினும் அவளுடைய உத்தமோத்தம குணங்களே இன்னுமவள் பெயரை விளக்குவனவாம்

சந்திரரேகை

ஓரப்சரப்பெண்

சந்திரலோகம்

சுவர்க்கத்திலே பிதிர்கள் வசிக்குமிடம்

சந்திரவக்கிரன்

சந்திரகேது

சந்திரஹாசன்

தக்ஷீணத்திலே அர்ச்சுனன் காலத்திலே இருந்தரசியற்றியவோரரசன். இவன் பாலியத்திலே தந்தையாரை யிழந்துவருந்திப் பின்னாளிலே அரசுகொண்டவன். கிருஷ்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் நண்பினன்

சந்திராங்கதன்

ஓரரசன்

சந்திராசாரியர்

இவர் காசுமீரத்திலே ஆயிரத்தெண்ணூற்று ஐம்பத்தொன்பது வருஷங்களுக்கு முன்னே அபிமன்னியன் காலத்திலே அவனுடைய சமஸ்தாகவியாகரண வித்துவானாய்ப் பதஞ்சலி செய்த மகாபாஷியத்தை அந்நாட்டில் முதல்முதல் கற்பித்து விளக்கிய சமஸ்கிருத பண்டிதர். பாரதத்திலே கூறப்பட்ட அபிமன்னியனும் வேறு: இவனும் வேறு

சந்திராசுவன்

தண்டாசுவன்

சந்திராலோகம்

ஓரலங்கார சாஸ்திரம். இது காளிதாசன் செய்தது

சந்தோவிசிதி

வேதத்தில் உக்தை முதலிய சந்தோ பேதங்களுக்கு அக்ஷர சங்கியை கற்ப்பிப்பதாகிய வேதாங்க நூல்

சந்நதமந்தன்

நலாஞ் சுமதி புத்திரன். கிருதிதந்தை

சந்நதி

அலர்க்கன் புத்திரன், சுநீதன் தந்தை. கிருதுவின் பாரி, தக்ஷப்பிரசாபதி மகள், வாலகில்லியர் தாய்

சந்நிதியப்பேசுவரர்

திருச்சேறையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

சனகன்

ஜனகன் காண்க

சனற்குமாரசங்கிதை

ஒரு சங்கிதை

சனற்குமாரன்

பிரமமானச புத்திரருளொருவர். சநந்தனர் சகபாடி. உண்மையுணர் வுதிக்கவேண்டுமென நெடுங்காலந் தவனிருந்து சிவன் பாலருட் பெற்றவா

சனற்குமாரம்

உபபுராணங்களுளொன்று

சனாஜித்து

ஹேஹபன் பௌத்திரனாகிய குந்திபுத்திரன். சோபஞ்சியெனவும்படுவன்

சனாதனர்

சனற்குமாரர் சகபாடி

சனி, சநீசுவரன்

சூரியன் புத்திரன். நவக்கிரகங்ளுளொருவன். யமன்தம்பி

சனியூர்

பாரதம் பாடிய வில்லிபுத்தூரர் பிறந்து விளங்கியவூர். அது திருமுனைப்பாடி நாட்டிலேயுள்ளது. ஆட்கொண்டான் என்னும் பிரபுவினது ஊரமிதுவே

சன்மிஷ்டை

விருஷபர்வன்மகன்

சபரி, சவரி

பம்பாநதிதீரத்திலே மதங்காசிரமத்திலிருந்த ராமபக்தராகிய மதங்கர் சீஷர்

சபஸ்தன்

முதல் யுவனாசவன் புத்திரன். பிருகதசுவன் தந்தை. இவன் கௌடதேசத்திலே சாபத்தியென்னும் பட்டணம் நிருமித்தவன்

சபாகலன்

யயாதீ பௌத்திரன். அணு மூத்த புத்திரன்

சபாநாயகர், சபாபதி

நடேசர், சிவன் பஞ்சகிருத்தியங்களின் பொருட்டுக் கொண்டருளிய ஆநந்ததாண்டவ வடிவம். திருமேனி பஞ்சகிருத்தியக் குறியுடைய தென்பதற்கு: தோற்றந்துடியதனிற் றோயுந் திதியமைப்பிற் ~ சாற்றரியவங்கியிலே சங்காரம் ~ ஊற்றமா ~ யூன்று மலர்ர்ப்பத த்தே நாடு என்னும் உண்மைவிளக்கத் து வெண்பாவே பிரமாணமாம். ஒரு கரத்திலேயுள்ள அக்கினியகல் சங்காரத் தொழிலைக்குறிக்கும், மற்றொருகரத்திலே யுள்ள தமருகம் சிருஷ்ஷயைக் குறிக்கும் அபயகரம் திதியைக் குறிக்கும், ஊன்றிய கால் திரோபவத்தைக் குறிக்கும், ஏனைய வெயங்களு மிவ்வாறே ஒவ்வொரு குறிப்பினவாம். ஆகவேமுழுதும் தத்துவ சொரூபமாம்

சபை

சிற்சபை கனகசபையென இரண்டு. அவை புண்டரீக வீடாகிய இருதய கமலத்தினது குறிப்பாகவுள்ள சிதம்பர ஸ்தலத்திலேயுள்ளன அச்சிற்சபையிலுள்ள ஐந்து படிகளும் பஞ்சாக்ஷரத்தின் குறிப்பு. அதிலுள்ள இருபத்தெட்டு ஸ்தம்பங்களும் இருபத்தெட்டாகமங்களையும் குறிக்கும். இத்தம்பத்தளம் பிரமபீடம். தொண்ணூற்றாறு கவாக்ஷீயும். தொண்ணூற்றாறு தத்துவங்களின் பாவனை. இது விஷ்ணு பீடம், உருத்திரபீடம், உருத்திரபீடத்திலுள்ள ஐந்து ஸ்தம்பங்களும் பஞ்சபூதங்களைக் காட்டுவன. ஈசுவரபீடத்துத் தம்பம் நான்கும் வேதம் நான்கையுங் குறித்துநிற்கும். திரை மகாமாயையின் குறிப்பு. தரிசன ஸ்பரிசன வேதிகளிரண்டும் மந்திர ஸ்தானங்கள், மகாபிரணவம் இரகசியமாக விருக்கின்றது. கைமரங்கள் அறுபத்து நான்கும் கலாஞானம் அறுபத்துநான்கையுங் குறிப்பன. பலகை இருபத்துநான்கும் புவனங்கள் இருபத்தோராயிரத்துநூறு தாமிர ஓடுகள் உச்சுவாச நிச்சுவாசங்கள். ஆணிகள் எழுபத்தீராயிரமும் நரம்புரூபம். ஒன்பது கலச முடிகளும் நவசத்திகளினது ரூபம். இனிச் சிவன் வெளிப்படப் பஞ்சகிருத்தியத்தின் பொருட்டு ஆனந்த தாண்டவஞ் செய்யும் கனகசபை திருவருள் வடிவினது. இதனிடத்துள்ள பதினெட்டுஸ்தம்பமும் பதினெண் புராணங்களையுங் குறிக்கும். கலசமுடியொன்பதும் நவசக்திகளைக் குறிக்கும். இச்சபைகளைத் தேவநிருமாணமென்ப. இவற்றின் விரிவு மகாசைவதந்திர முதலிய நூல்களிற் காண்க

சப்தகுலாசலம்

மகேந்திரம், மலயம், சையம், சுக்திமந்தம், இருக்ஷபர்வதம், விந்தியம், பாரியந்திரம் என ஏழுமலைகள். இவ்வாறன்றி வேறுவகையாகவுங் கூறுப

சப்தசமுத்திரம்

உவர்நீர்ச்சமுத்திரம், நன்னீர்ச்சமுத்திரம், பாற்சமுத்திரம், தயிர்ச்சமுத்திரம், நெய்ச்சமுத்திரம், கருப்பஞ் சாற்றுச் சமுத்திரம், தேன்சமுத்திரம் என ஏழுமாம்

சப்தசாரசுவதம்

இது வசிஷ்டாதியர் செய்த யாகத்திலே சரசுவதிநதி. சம்பிரபை, கனகாக்ஷீ, விசாலை, சுரதந்வை, அமோகை, மாலா, சுவேணி, விமலோதகை என்னும் பெயர்களையுடைய பெண்காக வடிவங்கொண்டு இருஷிகளுக்கும் தேவர்களுக்கும் ஏவல் செய்து பேறுபெற்ற புண்ணியக்ஷேத்திரம்

சப்ததீவுகள்

ஜம்பு, பிலக்ஷ, குச, கிரளெஞ்ச, சாக, சான்மல, புஷ்கர தீவகள், பிரியவிரதன் தன் புத்திரராகிய ஆக்கினித்தரனுக்குச் ஜம்புவீபத்தையும், மோதிதிக்குப் பிலக்ஷத்து வீபத்தையும், வபுஷ்மந்தனுக்குச் சான்மலத்து வீபத்தையும், திதியுமந்தனுக்குக் குசத்துவீபத்தையும், தியுதி மந்தனுக்குக் கிரௌஞ்சத்துவீபத்தையும், பவியனுக்குச் சாகத்துவீபத்தையுங் கொடுத்து முடிசூட்டினான். இவர்களே சுவாயம் புவமனுவந்தரத்திலே அவ்வத்தீவுகளில் முதன்முதலரசு புரிந்தவர்கள். ஒவ்வொரு தீவும் ஒவ்வொரு சமுத்திரத்தாற் சூழப்பட்டுள்ளன. இத்தீவுகள் ஏழும் காலாந்தரத்திலே பூர்வரூபம் திரிந்தன

சப்தபாராயணம்

பிருகஸ்பதிபகவான் செய்த சம்ஸ்கிருதடிண நூல். அப்பெயரிய நூலொன்றிருந்ததென்பது பதஞ்சலி ஆசிரியர் கூற்றால் விளங்குகின்றதன்றி, அஃது இப்போதுளதாகத் தோன்றவில்லை

சப்தலோகம்

பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகம், மகர்லோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகமென்னு மேழும் மேலுலகங்கள். இவ்வேழுவோகத்துமுள்ள சீவர்கள் தத்தங் கர்மப்பயனாக அவ்வுலகத்தையடைவார்கள். பூலோகத்தில் மனுஷரும், புவர்லோகத்தில் யக்ஷரா க்ஷசகந்தருவகிந்நர கிம்புருஷர்களும், சுவர்க்கத்திலே தேவர்களும் வசிப்பர். கீழுலகம் ஏழு அவை அதல, விதல, சுதல, தராதல, ரசாதல, மகாதல,டாதல மென்பன

சப்தவிருஷிகள்

மரீசி, அங்கிரசன், புலகன், வசிஷ்டன், அந்திரி, புலஸ் தியன், கிருது என்போர் ஒருசாரர். கசியபன், அத்திரி, பரத்துவாஜன், விசுவா மித்திரன், கௌதமன், ஜமதக்கினி, வசிஷ்டன் என்போரையும் சக்தவிருஷிகளென்னும் பெயரால் ஒரு நடித்திரகணமுமுளது. அக்கணத்தில் அகஸ்தியர் பெயருமொன்றாம்

சமசோற்பேதம்

ஒரு தீர்த்தம்

சமடன்

இவ்விருஷி தருமராசனேடு தீர்த்தயாத்திரை செய்தவர்

சமணர்

க்ஷபணர். ஜைனர். அருகனை வழிபடுஞ் சமயத்தோர். ஆரகதர். இவர்கள் ஆன்மாவும் உலகமும் அநாதிநித்திய மென்றும், உலகத்துக்குக் காரணராகியவொரு கடவுளில்லை யென்றும், முற்றத துறந்த ஜினனாதலே முத்தியென்றும் கூறுபவர்கள். அருகன் சமணருக்கு ஆதி குருமூர்த்தி. முகா வீரன், பரசுவன் முதலியோர் தீர்த்தங்கரருட் பிரசித்தி பெற்றோர். இவருக்கு முன்னிருந்த தீர்த்தங்கரர் இருபதின் மேற்பட்டோர். மகாவீரர் என்னுஞ் சமணாசாரியர் கௌதமபுத்தர் காலத்தவர். பார்சுவர் இரண்டாயிரத்தறு நூறு வருஷங்களுக்கு முன்னுள்ளவர். இவர்களுக்கு முதனூல் நான்கு மூலசூத்திரங்களும் நாற்பத்தைந்து ஆகமங்களுமாம். வழிநூல் கற்பசூத்திரம். அது பத்திரவாணனார் செய்தது. இச்சமயத்தோர் மைசூர் கூர்ச்சரமுதலிய நாடுகளிலுளர். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்நாளில் இச்சமயம் மிக்கபெருக்கமுற்றிருந்தது

சமந்தகமணி

சூரியனால்சந்திரா சித்துவுக்குக் கொடுக்கப்பட்ட மணி

சமந்தபஞ்சகம்

குருக்ஷேடத்திரம். திரேதாத்துவாபரயுக சந்தியிலே பரசுராமர் கர்வங்கொண்ட கூத்திரியரையெல்லாங் கொன்று அவர்கள் இரத்தத்தை ஐந்து தடாகங்களில் நிறைத்து அதனாற் பிதிர் தர்ப்பணஞ்செய்தார். ஆதலின் அவ்விடம் ஆதியில் சமந்தபஞ்சகமெனப் படுவதாயிற்று. அந்த ஸ்தானம் பின்னர்க் கௌரவரும் பாண்டவரும் நின்று யுத்தஞ் செய்தமையால் குருடித்திரமெனப் பெயர் பெறுவதாயிற்று

சமனை

சந்திகலை பதினாறனு ளொன்று

சமன்

தருமனுக்குச் சிரத்தையிடத்துப் பிறந்த மூத்தமகன். காமனும் ஹர்ஷனும் இவன் தம்பியர். சுமபிரீதி இவன் பாரி

சமரகோலாகலன்

விக்கிரமகஞ் சுகபாண்டியன்மகன்

சமரன்

நீபன் சேஷ்ட புத்திரன். இவன் காம்பிலிய தேசத்தரசனானவன். இவனுக்குப் பாரன், சுபாரன், சதசுவன் என மூவர் புத்திரர்

சமிஞ்ஞாதேவி

பிரபாவதி. இவள் சூரியன் பாரி

சமீகன்

சிருங்கிமுனிவர் தந்தை. 2. போஜவமிசத்தோரரசன்

சமீசி

ஓரப்சரப்பெண்

சமுத்திரன்

சகரன்

சம்சபதகர்கள்

திரிகர்த்தா தீசுரனாகிய சசர்மன் தம்பியர். சத்தியரதன் சத்தியசேனன் சத்தியகர்மன் சத்தியவர்மன் முதலியோர்

சம்சிருதன்

மிதிலை வமிசத்தரசரு ளொருவன்

சம்பந்தசரணாலயர்

கந்தபுராணச் சுருக்கமென்னுந் தமிழ் நூலாசிரியர். அடைசொல்லினால் வீணாக அலங்கரித்தலின்றி எவ்விஷயத்தையுஞ் சுருக்கி நயம்பெறப் பாடுஞ் சக்தி பெரிதுமுடையவ ரென்பது கந்தபுராணச் சுருக்கத்தால் நன்கு புலப்படும். திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரது அடித்தொண்டர்களது பரம்பரையிலுள்ளவர். இவர்காலம் கலி 4650

சம்பந்தர்

சீர்காழியிலே பிராமண குலத்திலே சிவபாத விருதயருக்குப் பகவதியாரிடத்திலே புத்திரராக அவதரித்தவர். மூன்றாண்டு நிரம்பியபோது உமாதேவியாரால் ஞானப்பாலூட்டப் பட்டவர். அன்று முதல் வேதத்துண்மைப் பொருளையெல்லாம் திருவாய்மலர்ந்தருளும் பொருட்டு, அற்புதமயமாகிய தேவாரங்களைப் பாடத்தொடங்கினவர். அதன்பின்னர் ஒத்தறுத்துப்பாடும் பொருட்டுச் சிவபெருமானது திருமுத்திரையிடப்பட்ட ஒரு பொற்றாளங்கையில் வந்திருக்கப் பெற்றவர். சர்வ சாஸ்திரங்களையும் ஒதாதுணர்ந்தவர். ஸ்தலங்கள்தோறுஞ் சென்று சுவாமிதரிசனஞ் செய்யும் பொருட்டு ஏறுதற்கு முத்துச்சிவிகை பெற்றவர். பாம்பு கடித்திறந்த பூம்பாவை யென்னும் பெண்ணினது எலும்பை முன்போலப் பெண்ணாக்கியது முதலிய அநேக அற்புதங்களைச் செய்தவர். கூன்பாண்டியனது கொடிய சுரந்தீர்த்து அதுவாயிலாகப்போரில்வென்று சமணசமயத்தைவேரறுத்து அப்பாண்டியனைச் சைவசமயப் பிரவேசஞ் செய்வித்தவர். இவ்வரும்பெருஞ் செயல்களையெல்லாம் பதினாறாண்டு நிரம்புமுன் செய்து தமிழ் நாட்டுக்கு உலககுருவாயினவர். பதினாறாண்டளவில், தந்தையாரது வேண்டுகோளுக் கிணங்கி மணம்புகுந்து, மணக்கோலத்தோடு திருப்பெருமணமென்னுஞ் சிவாலயத்திற் புகுந்து சிவசோதியிற் கலந்தவர். மணத்திற்காக அங்கே சென்றிருந்தார் யாவரும் அவருடன் சென்று அவர்பெற்ற பெரும்பேறே பெற்றார்கள். சம்பந்தருடைய பாடல்கள் பொருளால் மாத்திரமென்று, சந்தத்தாலும் யாப்பாலும் அற்புதமானவை. தற்காலத்துள்ள யாப்பிலக்கண நூல்களுக்கு அவருடைய பாடல்களுட் சில அதீதமானவை யென்பது நுண்மையாய் நோக்குமிடத்துப் புலனாகும். சிற்சில பாடல்களுக்கு உண்மைப் பொருள் காண வல்லாருமிந்நாளில் இலர். சம்பந்தரைச் சுப்பிரமணியக் கடவுளது அமிசாவதாரமெனக் கொள்வாருமுளர். அவர் இவ்வுலகில் ஞான விளக்கமின்றிருந்த காலம் மூன்றுவருஷம். நாம்காம் வயசுமுதற் பதினாறாண்டில் பூரணமாகுங்காறும் ஒப்புயர்வில்லாச் சிவஞானச் செல்வராகவே விளங்கினர். அற்புதங்களினாலே சைவசமய ஸ்தாபனஞ் செய்தருளினமையினால் அவர் சைவசமயாசாரியரு ளொருவராயினார் இனி அவர் இருந்தகாலத்தைப் பலரும் பலவாறாகக் கூறுவர். இன்னகாலமெனநிச்சயிப்பது எளிதன்று. ஆயினும் அவர் திருவாய் மலந்தருளிய தேவாரங்களிலே கூறப்பட்டுள்ள சில விஷயங்களைக்கொண்டும் அவர்காலத்தில் அவருடைய திருக்கூட்டத்தவரு ளொருவராய் விளங்கிய திருநாவுக்கரசு நாயனாரருளியச் செய்த தோவாரத்திலே கூறப்பட்ட சில ஏதுக்களைக்கொண்டும் பிறநூற்பிரமாணங் கொண்டும் நன்கு நிச்சயிக்கப்படும். சம்பந்தர் தேவாரத்திலே, வேயுறுதோளிப் பதிகத்திலேயுள்ள என்போடு கொம்பொடாமை என்னும் பாசுரத்திலே வரும் ஒன்பதொடொன் றோடேழு பதினெட்டொடாறு முடனாய நாட்களவைதாம் என்பதன் பொருளை நிச்சயிப்பதனால் அவருடைய காலநிச்சயத்துக்கு ஒரதிப் பிரபல எதுபெறப்படும். சோதிட நூலிலே கூறப்பட்ட பிரயாணத்துக்கு ஆகாத நக்ஷத்திரங்கள் பன்னிரண்டுமே இப்பாசுரத்திலே சுட்டப்பட்டன. அவை திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயிலியம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் என்னும் பன்னிரண்டுமாம். சம்பந்தர் காலத்திலே முதலாகக்கொண்டு எண்ணப்பட்ட நக்ஷத்திரம் கார்த்திகை. அயனசலனத்தினாலே தொளாயிரத்து எண்பத்தெட்டு வருஷமும் நான்கு மாசமுமாகிய காலவட்டந்தோறும் ஒவ்வோறு நக்ஷத்திரந் துருவம்பெறும். அஃதாவது, நக்ஷத்திரமே அத் தொளாயிரத்து எண்பத்தெட்டு வருஷமும் நான்கு மாசமுமாம் என்க. இங்ஙனந் துருவம்பெறும் நக்ஷத்திரமே அத்தொளாயிரத்து எண்பத்தெட்டு வருஷகாலத்துக்கும் முதல் நக்ஷத்திரமாகக் கொள்ளப்படும். சம்பந்தர் காலத்திலே துருவம் பெற்றுநின்ற நக்ஷத்திரம் கார்த்திகை. கார்த்திகை முதற்கொண்டு ஒன்பதாம் நக்ஷத்திரம் பூரம். ஓன்று ~ கார்த்திகை. ஒன்றோ ~ டேழு ~ எட்டாம் நக்ஷத்திரம் ~ மகம். ஏழு ~ஏழாம் நக்ஷத்திரம் ஆயிலியம். புதினெட்டு ~ பதினெட்டாம் நக்ஷத்திரம் பூராடம். பதினெட்டொடாறு ~ பதிமெட்டா நக்ஷத்திரமுதல் ஆறாம் நக்ஷத்திரம் பூராட்டாதி. உடனாய நாள்கள் ~ இவையோடு மற்றைய ஆறும் என்றவாறு. அதுநிற்க, இப்போது துருவம் பெற்றிருக்கும் நக்ஷத்திரம் உத்தரட்டாதி. கார்த்திகைக்கும் உத்தரட்டாதிக்கு மிடையேயுள்ள பரணி அச்சுவினி ரேவதி என்னும் மூன்றும் கடக்கப்பட்டன. ஒரு நக்ஷத்திரத்துக்குத் தொளாயிரத்து எண்பத்தெட்டு வருஷமாக மூன்றுக்குஞ் சென்றவருஷத் தொகை இரண்டாயிரத்துத் தொளாயிரத்து அறுபத்துநாலு. சம்பந்தர்காலத்திலே கார்த்திகையிலே சென்றன போக எஞ்சிநின்ற வருஷங்கள் ஐஞ்ஞூற்றுக்கு மேலாயின. ஆகவே சம்பந்தர்காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளதாக நிச்சயிக்கப்படும் திருநாவுக்கரசர் சம்பந்தருக்கு உத்தமநட்பினராய் விளங்கினவரென்பது பெரியபுராணமும் தேவாரமுங் கூறுமாற்றால் வெளிப்படை, இருவரும் தத்தம் தேவாரத்திலே அர்ச்சுனனுக்குச் சிவன் புரிந்த திருவருட்டிறத்தை இடையிடையே எடுத்துத் துதித்துப் போவது, அவர்கள் காலத்துக்கு ஆயிரம் வருஷங்களுக்கு முன்னே விளங்கிய அர்ச்சுனனுக்குச் சிவன் வேடவடிவங்கொண் டெழுந்தருளிச் சென்று அருள்புரிந்த பேரற்புத நிகழ்ச்சியை உலகம் கன்னபரம்பரையாக மறக்காமல் எடுத்துப் பாராட்டிவந்த சமீப காலமேயாதல் பற்றியாம். பாரதயுத்த முடிந்த காலம் கலியுகாரம்பம். கலியுகத்திலிப்போது சென்றது. 5000 வருஷம். பாண்டவர்க்குத் துணையாயிருந்து போர்செய்த சோழனுக்குப் பின் முடிசூடியவன் நாகலோகஞ்சென்றசோழன். அவனுக்குப் பின் முடிசூடியரசு புரிந்தவர் கோச்செங்கட் சோழரென்பது, கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியத்துப் பதினேழாம் பதினெட்டாஞ் செய்யுள்களாற் பெறப்படும். கோச்செங்கட் சோழருடைய பெருமைகளைச் சம்பந்தரும் நாவுக்கரசரும் தத்தமது தேவாரத்திலே எடுத்துக்கூறலால் இருவருக்கும் இச்சோழர் சமீபகாலத்தவரென்பது நன்கு துணியப்படும். இரண்டாயிரத் தெண்ணுறு வருஷங்களுக்கு முன்னே விளங்கிய சங்கராசாரியர் தாம் செய்த சௌந்தரிய லகரியிலே சம்பந்தரை எடுத்துத் துதித்தலாலே சம்பந்தர் அவருக்கு முன்னுள்ளவரென்பது பிரத்திசஷம். இதுவும் அவர் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளவரென்பதற் கோராதாரமாகும். சந்துசேனன், இந்துசேனன், தருமசேனன், கந்துசேனன், கனகசேனன் முதலியோர் சம்பந்தர் காலத்து விளங்கிய சமணாசாரியர்கள் என்பது அவருடைய தேவாரத்தாற் பெறப்படும். அவர்கள் பெயர்கள் இரண்டாயிரத்தைஞ் நூறுவருஷங்களுக்குட்பட்ட சமண சரித்திரங்களிலே கேட்கப்படாமையின் அவ்வாசாரியர்கள் முற்பட்டவர்களேயாதல் வேண்டும். ஆகவே சம்பந்தரும் முற்பட்டவரேயாதல் வேண்டும் திருமங்கையாழ்வார் தாம் பாடியருளிய பெரிய திருமொழியிலே கோச்செங்கட்சோழரைப் புகழ்ந்து கூறுதலாலும், நாலாயிரப் பிரபந்தத்திலே திருமங்கையாழ்வார் கலியுகம் நானூற்றறுபதின் மேலதாகிய துன்மதி வருஷத்துக் கார்த்திகை மாதத்திலே திருவவதாரஞ்செய்தாரெனக் கூறப்படுதலாலும், திருஞானசம்பந்தரை அவ்வாழ்வார் கண்டபோது, வருக்கைநறுங்கனிசிதறிச் செந்தேன் பொங்கி மடுக்கரையிற்குளக்கரையின் மதகிலோடப் பெருக்கெடுத்து வண்டோலஞ் செய்யுங்காழிப் பிள்ளையார் சம்பந்தப் பெருமான் கேளீர் அருட்குலவுமயிலைதனிலனலால் வெந்த வங்கத்தைப்பூம்பாவை யாக்கினோமென்றிருக்குமது தகவன்று நிலவால் வெந்த விவளையுமோர் பெண்ணாக் கலியல்புதானே என்னும் பாடலைச் சொற்றனரெனறொரு கர்ணபரம்பரைக் கதையுண்மையாலும், திருஞானசம்பந்தரைப் போலவே திருமங்கையாழ்வாரும் சமணசமயகண்டனஞ் செய்து வைதிக சமயஸ்தாபனஞ் செய்யத் திருவவதாரஞ் செய்தாரெனக் கூறப்படுவதாலும், திருமொழியிலே கூறப்படும் பல்லவன்முதலிய அரசர்கள் தேவாரத்திலுங் கூறப்படுதலாலும், இருவருமே காலத்தவர்களென்பதற் கையமில்லை. இதனாலும், திருஞானசம்பந்தர் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளவரென்பது நன்கு நாட்டப்பட்ட தாயிற்று. இனித்திருஞானசம்பந்தராலே சுரநோய் தீர்த்தருளப்பட்ட கூன்பாண்டியன் காலத்தை நிச்சயிப்பாம். கூன்பாண்டியன் முடத்திருமாறனெனவும்படுவன், அவன் இடைச்சங்கத்திறுதியிலும் கடைச்சங்கத்துக் தொடக்கத்திலுமிருந்தவ னென்பது வடுவறுகாட்சி நடுவட்சங்கத்து. வெண்டேர்ச்செழியன் முதலா விறல்கெழு, திண்டேர்க்கொற்ற முடத்திருமாறன எனவும், பருங்கடைச் சங்க மிருந்தோர் யாரெனில். இடர்ப்படாதிவர்களைச் சங்கமிரீஇயினார், முடத்திருமாறன் முதலாவுக்கிரப் பெருமாவமுதியீறாப் பிறங்கு பாண்டியர்கள் எனவும் வரும ஆன்றோராசிரியப் பாக்கூற்றாற் பெறப்படும். கூன்பாண்டியன் முதல் உக்கிரப் பெருவழுதி யீறாகச் சென்றகாலம், எண்ணுற்கேள் வியரிந்ததாயிரத்துத் ~ தொளாயிரத்தைம்பது வருடமென்ப என மேலே கூறப்பட்ட ஆசிரியப்பாவினுள்ளே வருவதனால் ஆயிரத்து தொளாயிரத் தைம்பது வருஷங்களென்பது வெளிப்படை. உக்கிரப் பெருவழுதி முதலதுலுக்கரால் வெல்லப்பட்ட பராக்கிரம பாண்டியெனீறாக நாற்பத்து நான்கு பாண்டியர் வழிவழி யரசுபுரிந்தனர். ஓரு பாண்டியனுக்குப் முப்பது வருஷமாகும். பராக்கிரம பாண்டியனைத் துலக்கர்வென்று அரசுகைக்கொண்டது இன்றைக்கு எண்ணுறு வருஷங்களுக்கு முன்னரென்பது இந்திய சரித்திரத்தாரினிது விளங்கும். இம்மூன்று தொகையும் நாலாயிரத்தெழுபதாம், ஆகவே கூன்பாண்டியன்காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ள தென்பது நன்றாகத் துணியப்படும். இனித் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருவாய்மலர்ந்தருளிய தேவாரப் பாக்களினது இயல்பாலும் அவருடைய காலத்தை அவருடைய காலத்தை நிச்சயிப்பாம். இக்காலத்தில் இயற்றமிளொன்றுமே வழங்கிவருகின்றது. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னேயுள்ள கடைச்சங்ககாலத்திலே இயல் இசை நாடகமென்னு முத்தமிழும் வழங்கி வந்தனவென்பது கடைச்சங்கத்து நூல்களால் நிச்சயிக்கப்படும். ஆயினும், இடைச்சங்ககாலத்தில் வழங்கிவந்த அத்தணையாகக் கடைச்சங்ககாலத்தில் இசைத்தமிழ் வழங்கியதன்று. இற்றைக்கு ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னிருந்த சிலப்பதிகாரவுரையாசிரியரும் தம்முடைய காலத்துக்கு முன்னே இசைநூலும் நாடகநூலும் அழிந்தொழிந்தன வென்பர். இசைத்தமிழிலக்கண நூல்களும் இலக்கியங்களும் இடைச்சங்க காலத்திலேயே மலிந்துகிடந்தன. அவ்விடைச்சங்கத்து இயற்றமிழ் நூல்களுள்ளே தொல்காப்பியம் ஒன்றுமே இன்றுவரையும் நின்று நிலவுகின்றது. மற்றை இயற்றமிழ் இசைத்தமிழ் நூல்களெல்லாம், சில கடைச்சங்க காலத்திலும், பல அதற்கு முன்னுமாக அழிந்தொழிந்தன. திருஞானசம்பந்தர் செய்தருளிய தேவாரங்களுள்ளே சிலபாக்கள் இயற்றமிழ்யாப்பின் வேறுபடுவன. அவற்றுட் சிலவற்றை இயற்றமிழ்யாப்பிலே அடக்குவது கூடுமாயினும், யாழ்முரி முதலிய சிலவற்றை அடக்குதல் கூடாது. இலக்கண வரம்பு கடந்தனவோவெனில் அன்னவுமன்று. பின்னர் அவைகளுக்கு இலக்கண நூல் யாதெனில் அவை இசையிலக்கண நூலமைதி யுடையனவெனக் கொள்ளல்வேண்டும். அவை தேவபாணியாகவோவெனில் அவை தேவபாணிக்கினமாவதன்றி அதுவாகா. தேவபாணி இயற்றமிழுக்குரியது. தேவாரம் இசை தத்தமிழுக்குரியது என்பது சிலப்பதிகாரத்துக் கடலாடுகாதை யுரையிலே இசைத் தமிழின் வருங்கால் முகநிலை கொச்சகம் முரியென்ப என வருவதனானும் பிறவற்றாலும் பெறப்படும். தேவபாணியைப் பண்ணிசை யறியாதாருமோதுவர். தேவாரத்தைப் பண்ணிசையறியாதாரோதல் கூடாது. ஆதலின் தேவாரம் இசை நுணுக்க முதலிய விசைத் தமிழிலக்கணத்துக் கியையப்பாடியருளப்பட்டதாம். இனி, அத்தேவாரம் எக்காலத்திற் செய்யப் பட்டதென நிதானிப்பாம். கடைச் சங்கத்தார் தமிழாராந்தது அகத்தியமும் தொல்காப்பியமுங் கொண்டேயாம். இடைச்சங்கத்தார் தமிழாராய்ந்தது அகத்தியம் தொல்காப்பியம் மாபுராணம் பூதபுராணம் இசை நுணக்கமென்னும் நூல்களைக்கொண்டேயாம். இவ்வுண்மை இறையனாரகப்பொருளுரையாலும், மேலே சுட்டிய ஆசிரியப்பாவினுள்ளே, அந்நாளிலக்கண மகத்தியமதனொடு பின்னாட்செய்தபிறங்கு தொல்காப்பியம். என வருவதனாலும், வல்லிதினுணர்ந்த நல்லிசை நுணக்கமும் என வருவதனாலும் நன்கு வளங்கும். ஆகவே, இசைத்தமிழிலக்கணம் கடைச்சங்கத்தார்க்குக் கருவி நூலாக விருந்ததில்லையென்பதும் நிச்சயமாயின. இடைச்சங்கத்திறுதியிலும் கடைச்சங்கத்துத் தொடக்கத்திலுமிருந்த கூன்பாண்டியன் காலத்தைக் கூறவே, இடைச்சங்க மொழிந்த காலமும் இசைத்தமிழிலக்கணம் ஆட்சியிலிருந் தொழிந்தகாலமும் தாமேபெறப்படும். கூன்பாண்டியன் காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளதென்பது மேலே காட்டினாம். ஆதலின் அத்தேவாரம் செய்தருளப்பட்ட காலமும் அதுவே யாமென்பது நன்றாகத் துணியப்படும். இதனாலும் திருஞானசம்பந்தர்காலம் நாலாயிரமவருஷங்களுக்கு முன்னுள்ளதென்பது நிச்சந்தேகமாம் இனி, சாக்கியர், புத்தர் என்னும் நாமங்கள் கபிலவஸ்துவிலேபிறந்த புத்தருடைய காலமாகிய இரண்டாயிரத்தைஞ்நூறு வருஷங்களுக்குட்பட்டனவேயாகவும், நாலாயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட சம்பந்தருடைய தேவாரத்திலே எவ்வாறு வந்தனவோவெனில், கௌதமர் ஆதிநாளிலே புத்தர் என்னும் பெயரோடு நாஸ்திக மதத்தைப் போதித்தாரென்றும், விஷ்ணு சிவனுக்குப் புத்திரராகக் கலியுகாரம்பத்திலே யவதரித்துப் புத்தர் என்னும் பெயர்பூண்டு வைதிகமத விரோதமான ஒரு மதத்தை யுலகிற்பரவச் செய்வாரென்றும் முறையே ஸ்காந்தத்திலும் பாகவதத்திலுங் கூறப்படுவதலால், அப்பெயர்கள் கபிலவஸ்து விலேபிறந்த புத்தரைச் சுட்டியவையல்லவென்க. அவை முன்னுள்ள புத்தசமயிகளைச் சுட்டியனவேயாம். கபிலவஸ்துவிலே பிறந்த புத்தர் கௌதமபுத்தரென்றும், சாக்கியபுத்த ரென்றும் அடைகொடுத்து வழங்கப்படுவது கௌதம கோத்திரத்திலே சாக்கியர் குடியிலே பிறந்தமை பற்றியேயாம். அப்பெயர் வழக்குள் தாமே முன்னும் புத்தர்களிருந்தார்களென்பதை நன்கு விளக்கும். இதனாலும் முன்னும் பௌத்தமதம் காலந்தோறும் தோன்றி யழிந்ததென்பது இனிதுபெறப்படும். இன்னும், தற்கால புத்தசமயிகளும் தமது புத்தர் முன்னும் பன்முறைகளிலே அவதாரம் பண்ணிப் பௌத்தமதத்தைப் போதித்தாரெனக் கூறுவார்கள். தேவாரத்திலே கௌதமபுத்தர் சாக்கியபுத்தர் என்னும் நாமங்கள் வருதலின்றி, வாளா சாக்கியர், புத்தரென்றே வருதலாலும், சாக்கிய புத்தநாமங்கள் பிந்திய புத்தரது கோத்திரத்தலைவர்க்கே யுரியனவாதலாலும் சம்பந்தர்காலம் கலியுகாரம்பமே யாதலாலும், சம்பந்தர்காலம் நாலாயிரம் வருஷங்களுக்கு முற்பட்டதேயாம். இன்னேரன்ன பிரபலநியாயங்கள் பலவுளவாகவும் சிலாசாசனங்கொண்டு சிலராற் செய்யப்பட்ட கால நிச்சயங் சிறிதும் அங்கீகார யோக்கியமுடைய தன்று. சேரசோழபாண்டியர்களுடைய பெயர்கள் அவ்வப்பரம்பரையிலுள்ளார் பலர்க்குரியனவாய் வருதலின், ஒரு காலத்திலே ஒரரசனாலே செய்யப்பட்ட சாசனத்தைக் கொண்டு, அவனுக்கு முன்னே நிகழ்ந்த சம்பங்களை அச்சாசன காலத்திலொட்டிக்கால நிச்சயம் பண்ணுதல் சிறிதும் பொருத்த முடையதன்று

சம்பன்

அரிதன்புத்திரன். சுதேவன்தந்தை. புருதுலாடின் புத்திரன். இவன் பம்பாநகரத்தை நிருமித்தவன்

சம்பரன்

இவன் கிருஷ்ணனுக்கு ருக்குமிணியிடத்துப் பிரத்தியுமனன் பிறந்தவுடனே அச்சிசுவைத் திருடிப்போய்ச் சமுத்திரத்திலிட்டவன். இட்டவுடனே அச்சிசுவை ஒரு மகரமெடுத்து விழுங்கியது. இம்மகரம் சிலதினத்திலொருவலைஞன் கையிலகப்பட்டது. அம்மகரத்தை வலைஞன் கொண்டுபோய்ச் சம்பரனிடம் கொடுக்க அவனதையேற்றுத் தன்மனைவி மாயாவதியிடங்கொடுத்தான். அவள் அதனைக் கறிசெய்யுமாறு வகிர்ந்தபோது அதிருபமுடைய ஒரு சிசு அதனுள்ளே யிருப்பதைக் எடுத்து வளர்த்தாள். வளர்த்தபின்னர்ச் சம்பரன்தான் தன்னைக் கடலிலிட்டவனெனவுணர்ந்து அவனைக் கொன்று மாயாவதியோடு தந்தைவீடு சேர்ந்தான். பிரத்தியுமனன் மன்மத அம்சமாதலின் மன்மதனுக்குமிவனுக்கும் சம்பராரியென்னும் பெயருண்டாவதாயிற்று

சம்பவாசுவன்

பரிகிணாசுவன்

சம்பாதி

அநூரன் மூத்த மகன் இவன் தாய் சியேனி. இவன் தம்பி ஜடாயு. சுபார்சுவன் இவன் மகன். சம்பாதி ஜடாயுக்களிருவரும் பக்ஷி ரூபராய்ப் பிறந்து சூரியமண்டலம்வரையும் பறந்து இறகுகரிந்துவீழ்ந்து பின்னர்ச் சம்பாதி கடலோரத்திலும் சடாயுதண்ட காரணியத்திலுமிருக்கும் போது, ராவணன் சீதையைக் கொண்டு போகக்கண்ட சடாயு ராவணனைத் தடுத்துப் போர்புரிந்துயிர்துறக்கச் சம்பாதி சீதையிருக்குமிடத்தை அநுமானுக்குணர்த்தி இமயஞ் சேர்ந்தான். மாலிபுத்திரன். விபீஷணன் மந்திரி

சம்பாநகரம், சம்பை

அங்கதேசத் தரசனாகிய சம்பனால் நிருபிமிக்கப்பட்ட அங்கதேச ராஜதானி

சம்பிரீதி

சமன்பாரி

சம்பு

சிவன். துருவன்மனைவி

சம்புகேசுவரர்

திருஆனைக்காவிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமிபெயர் சம்பூதி. சுமணன். திருதன்வன்

சம்மியன்

யாகத்திலே முதல் அவிப்பாகத்துக்குரியவனாகிய அக்கினி. இவன் பிருகஸ்பதி புத்திரன். இவன் பாரி சக்தியை

சம்யமனி

யமன் ராஜாதானி

சம்யாதி

நகுஷன் புத்திரன். யயாதி தம்பி. சரியாதி

சம்வருணன்

அஜமீடன் புத்திரருளொருவன். இவன் சூரியன் மகளாகியதபதியை மணம்புரிந்து குருவைப்பெற்றவன். இருடின் புத்திரன்

சம்வர்த்தன்

அங்கிராசன் புத்திரன். பிருகஸ்பதி தம்பி. உதத்தியனெனவும் படுவன்

சம்ஸ்கிருதம்

சுத்திபண்ணப்பட்ட பூரணபாஷை என்பது தாற்பரியம். தேவ பாஷை, வடமொழி, ஆரியம், ஆதி பாஷை, கீர்வாணம் என்பன பரியாயப்பெயர்கள். சமஸ்கிருதம் ஆரியரது ஆதிபாஷை. அது இன்னகாலத்திலே தோன்றியதென்றும், இத்தனையுகங்களாக வழங்கப்பட்டுவருவதென்றும் துணிதற்கறிவு மனுஷரிடத்தில்லை. பூர்வகாலவெல்லை கூறவேண்டுமாயின் உலகந் தோன்றிய நாட்டோன்றிய தெனலே அதற்குபாயமாம். அஃது ஆதியிலே இச்சம்புத்தீவு முழுதுக்கும் பாஷையாகவிருந்த தென்பது, அதனிடத்தேயுள்ள தேசங்கடோறு மிந்நாள் வழங்கும் பாஷைகளிலே சமஸ்கிருதச் சொற்கள் விரவிக் கிடத்தலால் அநுமிக்கப்படும். காலாந்தரத்திலே அஃது உத்தரத்திலே இமயமும், தசஷிணத்திலேவிந்தமும், கிழக்கே கடலும், மேற்கேகடலோடு மிலேச்சநாடு மெல்லையாகவுடைய ஆரியதேசத்திலே வழங்கிய பாஷையாயிற்று. பிந்திய காலாந்தரத்திலே பிராகிருதங்களே அத்தேசபாஷைகளாக அஃது அருகுவதாயிற்று. அருகியும் அதுவே நூற்பாஷையாகி அன்றுமுதலின்றுகாறும் நின்று நிலவிவருகின்றது. அது நூற்பாஷையாயின்மை பற்றியே அதற்குக் கிரந்தமென்னும் பெயரு மொன்றுண்டாவதாயிற்று. சகல வேத புராணேதிகாச சாஸ்திரங்களெல்லாம் அப்பாஷையிலேயேயுள்ளன. சம்ஸ்கிருதபாஷைக்கு முதல் இலக்கணம் வகுத்தளியவர் சிவபெருமான். அது மகேசுர சூத்திரமெனப்படும். அம் முதனூலை ஆதாரமாகக் கொண்டு பிருகஸ்பதி பகவான் சத்தபாராயணம் என்னுமிலக்கணத்தைச் செய்தார். அதனைக்கொண்டு இந்திரன் ஐந்திரம் என்னுமிலக்கணத்தைச் செய்தான். அவற்றை யெல்லாங்கொண்டு காச்சியபம் காலவம் கார்க்கிய முதலிய வியாகரணங்கள் இருஷிகளாற் செய்யப்பட்டன. அதன்பின்னர்ப் பாணினி முனிவர் மகேசுரசூத்திரம் பதினான்கையுங் கொண்டு பாணினீயம் என்னும் வியாகரணத்தைச் செய்தருளினர். அதுபோலும் பூரணமும் நுட்பமுமமைந்த வியாகரணம் உலகத்திலே மற்றெப்பாஷைக்குமில்லை, இக்கருத்து ஐரோப்பிய பண்டிதர்க்குமுடன் பாடேயாம்,. தம்மைச்சூழ்ந்து நின்ற இருஷிகணங்கள் அவரவர்கள் பக்குவத்துக்கேற்பப் பொருளைக் கிரகித்துக் கொள்ளுமாறு சிவபிரான் தமது தமருகத்தைப் பதினான்கு முறையடித்தனர். அப்பதினான்கு முறையிலுமெழுந்த வொலிகள் பதினான்கு சூத்திரங்களாயின. வியாகரணம் நாடிய விருஷிகள் அச்சூத்திரங்களை வியாகரணமூலமாகக் கொண்டார்கள். தத்துவப் பொருளைநாடினோர் தத்துவங்களாகக் கொண்டார்கள். அச் சூத்திரங்களுக்குத் தத்துவ முகமாக வியாக்கியானஞ் செய்தவர். உபமனினியுமுனிவர். அது நிற்க, அ இ உண் என்பது முதற்சூத்திரம். அதிலே ணகாரம் அநுபந்தம். மற்றையமூன்றும் அடிரங்கள். இப்படியே மற்றைய சூத்திரங்களுமொவ்வோரநுபந்த முடையன. தமருகமென்பது ஒலியினது புருஷருபமும் சக்திருபமுங் கூடிய வடிவு. ஓலியினது புருஷருபம் சூக்ஷூமப் சலிக்கச் சத்திருபமாகிய விந்து. அதன் சததிருபம் ஸ்தூலப் பிரணவருபமாகிய நாதம். புருஷவடிவு, மற்றது சக்திவடிவு. சக்திவடிவப்பக்கம் கயிற்றுப்பக்கம். மனுஷருடைய கண்டமும், செவியும் உள்ளும்புறமும் தமருகத்தினது வடிவேயுடையன. சுத்தசாஸ்திரதினது நுட்பங்களெல்லாம் நன்குணர்ந்தார்க்கு இது பேரற்புதருபமாயிருக்கும். சர்வ பூதங்களுக்கும் ஆதாரமாயும் பரையிடத்திலே தோன்றுவதாயும் எல்லா எழுத்துக்குங் காரணமாயுமிருத்தலின் அகரம் அத்துடியினிடத்து முதற்றோன்று வதாயிற்று. இவற்றின் விரிவெல்லாம் மகேசுவரசூத்திர மென்பதனுட்சம்ஸ்கிருதபாஷையிலுள்ள அதிப்புராதன நூல் வேதம். அஃது இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என நான்குபாற்படும். வேதம் அநாதியென்பாரும் ஆதியென்பாருமாக ஆசிரியர் இருதிறப்படுவர். ஓருவர் பொருளையும் மற்றவர் நூலையும் நோக்கி அங்ஙனங் கூறுபவாதலின் இருவர் கருத்தும் தம்முண் மாறுகொண்டன வல்ல. வேதபாஷையினது கதியும் மற்றைய சாஸ்திரபாஷையினது கதியும் வேறுபடுதலின் சம்ஸ்கிருதபாஷை, வைதிகபாஷையெனவும் லௌகிகபாஷை யெனவும் இருபாற்படும். பாணனீயம் இருபாஷைக்கும் இலக்கணமாம் பாணினீயம் அஷ்டாத்தியாயி என்பன வொருபொருட்கிளவி. சமஸ்கிருத பாஷையை யுற்றுநோக்குமிடத்து அஃது ஒரு தொகைப்பட்ட தாதுக்களாலாகிய பாஷையென்பது வெளிப்படையாம். ஒரு தாது எண்ணிறந்த பதங்களுக்கு மூலமாகும். தூதுக்களினது பொருளுணர்ச்சி யிருக்குமாயின் எப்பதங்களுக்கும் பொருள் எளிதிலே புலப்படும். முற்றறிவுடையோர், உலகத்திலேயுள்ள பொருளெல்லாம் குணப்பண்பும், தொழிற்பண்புமென விருவகைச் சிறப்பியல்புடையனவாதலின் குணங்களையும் தொழில்களையுமுணர்த்தற்குப் போதிய குறியீட்டுச்சொற்களை யாக்கிக்கொள்ளுமிடத்துப் பொருளெல்லாவற்றையும் மிகவெளிதிலே பெயரிட்டு வழங்குதல்கூடுமென்பது கருதியே சொற்களுக்கு வித்தாகிய தாதுக்களை வகுத்துவைத்துப்போயினர். எப்பாஷைக்கும் சொற்பஞ்சமுண்டு. சம்ஸ்கிருதபாஷைக்கோ உலவாக்கிழியாகிய தாதுக்களிருத்தலால் எஞ்ஞான்றும் சொற்பஞ்சம்வருவதில்லை. அதுமற்றைய பாஷைகளுக்கெல்லாம் சொல்லுதவியும் புரிந்துவருதலினால் புரிந்து வருதலினால் இரவலர்க்கீந் துவக்கும் வற்றாத செல்வப்பிரபுவை நிகர்த்து நிற்பதொரு பாஷாதிலகமாம். முன்னர்க்காலத்திலே ஒருவராலுங் கருதப்படாத வொருவிஷயத்தின் மேலோருநூல் செய்தேனெனக் கூறி ஒரு மகா பண்டிதன் எக்காலத்திலும் வெளிவாராவகை மாந்தர் மனதுக்குக் கோசரமாகத்தக்க விஷயங்கள் ஒன்றுந் தவறாமலெல்லாம் மெடுத்து வியவகரித்து நூல்களிலே அமைக்கப்பட்டனவென்றால் சம்ஸ்கிருதபாஷையிலே இல்லாத நூலொன்று கூறற்கு யாதொன்றுங் காண்கிலம் சம்ஸ்கிருதபாத பாஷையை வளர்த்தவர்கள் பூர்வத்திலே மகாவிருஷிகளும், மத்தியகாலத்திலே அரசரும் இருஷிகளும், பின்னர்நாளிலே அரசரும் பண்டிதருமாவர். சம்ஸ்கிருத பாஷையிலுள்ள வித்தைகள் வேதம், வேதாங்கம், மீமாஞ்சை, தர்மசாஸ்திரம், புராணம், தருக்கம் என்பவற்றுள் ஒருவாறடங்குமாயினும், வேதபாஷியம், வியாக்கியானம், பிராமணம், ஆரணியகம், உபநிஷ்தம், சிசைஷ, வியாகரணம், சந்தசு, நிருத்தம், சோதிஷம், கற்பம், பிரயோகம், பூர்வ மீமாஞ்சை, வேதாந்தம், அத்துவைதவேதாந்தம், சைவ வேதாந்தம், காணபத்தியம், சாக்தம், பௌத்தம், ஜைனம், சாங்கியம், யோகம், தருக்கம், ஸ்மிருதி, ஆசாரம், கால நிர்ணயம், தானம், பிரயோகம், பிராயச்சித்தம், வியவகாரம், சிராத்தம், நீதி, நிகண்டு, அலங்காரம், பரதம், சங்கீதம், இதிகாசம், சங்கிதை, ஸ்தோத்திரம், கீதை, மஹாத்மியம், காவியம், சம்பு, கதை, சரித்திரம், நாடகம், கணிதம், பூகோளசாஸ்திரம், சிற்பம், சாமுத்திகம், வைத்தியம், ரசாயனம், அர்த்தசாஸ்திரம், காம சாஸ்திரம் யுததசாஸ்திர முதலிய பாகுபாடுகளையுடையன. தர்க்க சாஸ்திரத்தில் மாத்திரம் ஆயிரத்தின் மேற்பட்ட நூல்களுளவென்றால் மற்றைய பாகுபாடுகள் ஒவ்வொன்றினுக்குந் தொகை எவ்வளவாதல்வேண்டும்! இத்துணைப் பரந்த சாஸ்திரபேதங்களை யுடைய பாஷை உலகில் மற்றியாது தானுளது. அதிலுள்ள நூற்கடலைக் கணக்கிடற்கே ஓராயுட் காலம் வேண்டப் படுமென்றால் முற்றக் கற்றல் அசாத்தியமேயாம். சமஸ்கிருதபாஷையிலே யுள்ள அடிரங்கள் இனிமை, வீரம், கோபம், சோகம், அச்சம், அதிசயம் முதலியவற்றைத் தரத்தக்க இசைகளை இயல்பாகவுடையன. அதிலேயுள்ள நூல்களோ சிங்கார முதலிய நவரசங்களும் பொழிவன. உலகத்துக்குச் சமயவறிவைக் கொடுத்ததும், நாகரிகத்தைத் தத்தம்பண்ணியதும், போகத்துக்கு வழிகாட்டியதும், சொல் வறுமையுறாது சொற்றானஞ் செய்து வருவதும், தன்னை விரும்பிக் கற்பவரைச் சாதிநோக்காது பெரியோராக்கிப் பெரும்புகழ் கொடுத்து உலகம் கைகூப்பிவணங்குமாறு உந்நத நிலையில் நிறுத்துவதும் சம்ஸ்கிருத பாஷையே யென்றால் அதன் பெருமை இச்சிறுநூலினுள்ளே இச்சிறிய விடத்தினுள்ளே இச்சிறியேன் கூறவடங்குவதெங்ஙனம்!

சம்ஹதாசுவன்

பரிகிணாசுவான்

சம்ஹராதி

சுமாலிபுத்திரன்

சம்ஹலாதன்

பிரஹலாதன் தம்பி

சயந்தம்

ஒருநாடகத் தமிழ்நூல். அஃது அடியார்க்கு நல்லார் காலத்திலிறந் தொழிந்தது

சரசுவதி

பிரமாவினது பாரி. பிரமாவினாற் சிருஷ்டிக்கப்பட்டு அவருக்கே தேவியாயினவர். இவர் வித்தைக்கதிதேவதை. ஜனங்களாலே சரற்காலத்திலே பூசிக்கப்படுவதலாலே சாரதாதேவி யெனப்படுவர். இவர் ஓரஸ்தத்திலே அடிமாலையும் ஓரஸ்தத்திலே கிளியும் ஓரஸ்தத்திலே கமலமும் ஓரஸ்தத்திலே புஸ்தகமுமாக நான்கு கைகளையுடையர். இவர்க்கு வேதம் நான்கும் கைகளென்றும், உபநிஷதம் சிரமென்றும் பிரமவித்தை முகமென்றும், இலக்கணமும் கணிதமும் கண்களென்றும், சங்கீதசாகித்தியங்கள் ஸ்தானங்களென்றும், ஸ்மிருதி வயிறென்றும், புராணேதிகாசங்கள் பாதங்களென்றும், ஓங்காரம் யாழென்றும் கூறப்படும். சரஸ்வதி காயத்திரி, சாவித்திரி முதலியநாமங்களும் பெறுவர். ஓரு யாகத்திலே சரசுவதிவரத்தாழ்த்தமை பற்றி இடைக்குலக்கன்னியாகிய காயத்திரியைப் பிரமா இரண்டாம் பாரியாகக் கொண்டனரென்றும், அதுகாரணமாகத் தேவரெல்லோரும் சரசுவதியாற் சபிக்கப்பட்டாரென்றும் ஒருவரலாறுளது. வேதசாரமாகிய காயத்திரி சூத்திரமே கன்னிகையாக ரூபகாரம் பண்ணப்பட்டது. அதனை அந்தணர்கள் உதயாஸ்தமன காலங்களிலே தவறாதோதிவருங் கடப்பாடுடையவர்கள். அக்காயத்திரி யிலேயுள்ள பர்க்கநாமஞ் சிவனுக்குரிய தாயினும் விஷ்ணுவுக்குஞ் சொல்லுதலின் சைவவைஷ்ணவர் கூறுவார்கள். வேதம் பசுவாகவும், அதன் சாரத்தைப் பாலாகவும், அச்சாரத்தைக் கவர்ந்தடக்கி யிருப்பது காயத்திரி சூத்திரமாதலின் அதனை இடைக்குலக் கன்ணிகையாகவும் உருவகித்தனர். போலும். அந்திசாரன் பாரி. ஒரு நதி

சரணவப்பெருமாளையர்

இவர் திருத்தணிகையிலே வீரசைவர் குலத்திலவதரித்துச் சென்னையிலேயிருந்து தமிழ்க்கலை வளர்த்து இற்றைக்கு முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னே அருவுடம்பு கொண்டவர் நாலடியார், நன்னூல், நைஷதம், திருவள்ளுவமாலை, நன்னெறி முதலிய நூல்களுக்குரையும், பூகோயதீபிகை, பாலபோத இலக்கண முதலிய நூல்களும் செய்தவர் இவரே. இவர் செய்த திருவள்ளுவமாலையுரை மிக்க திட்ட நுட்பமமைந்து புலவோருள்ளத்திற்கு அதிசயானந்தம் பயப்பது இவர் செய்த நைஷதவுரை முற்றுப் பெற்றிருக்குமாயின் அதற்கிணை பிறிதொன்றெக்காலத்து முளதாகாது

சரத்துவந்தன்

சதாநந்தன் புத்திரனாகிய சத்தியதிருதி

சரபங்கன்

தண்டகாரணியத்திருந்த ஒரு மகாவிருஷி. இந்திராதிதேவர்கள்தாமே தண்டகாரணியத்துக்கு வந்துபசரித்துச் சுவர்க்கத்துக்குக் கொண்டுபோகப் பெற்றவர். ஸ்ரீராமர் தண்டகாரணியஞ் சென்ற போது இவரைத் தரிசித்தனர்

சரபன்

சுக்கிரீவன் சேனாநாயகரு ளொருவன் இவ்வாநரன் பர்ச்சன்னிய னுக்குப் பிறந்தவன்

சரபோஜி

தஞ்சாவூரில் அரசுசெய்திருந்த மகாராஷ்டிர அரசருள் ஒருவன். இவ்வரசனே சோழநாட்டிலுள்ள விஷ்ணுவாலயங்கள் சிவாலயங்க ளெல்லாவற்றையும் புதுக்குவித்து நித்திய நைமித்தியங்களின் பொருட்டு விளைநிலங்கள் தானம்பண்ணினவன். சோழநாட்டிற் பலவித நாகரிகங்களுக்கும் காரணகர்த்தனிவனே. இவன்காலத்தில் கைத்தொழில்களும் பலவிதவித்தைகளும் அபிவிருத்தியாயின. இவன்காலம் இற்றைக்கு நானூற்றெழுபது வருஷங்களுக்கு முன்னுள்ளது இப்பெயர் கொண்ட அரசர் பலர்

சரமை

விபீஷணன் பாரி. இவள் சைலூஷன் என்னும் கந்தருவன் புத்திரி. இவள்மகள் திரிசடை. இச்சரமையே ராவண ராமயுத்தத்திலே நிகழ்ந்தவை களையெல்லாம் அவ்வப்போது சீதைக்கு அறிவுறுத்தி வந்தவள்

சரயுநதி

இந்நதி அயோத்திக்கு வடமேற்றிசையிலே பாய்வது, இஃதிப்போது கோக்கிராவென வழங்கப்படுகின்றது

சரராமமுதலி

சடையப்ப முதலித்தம்பி. இவரும் கம்பரால் ராமயணத்திற் புகழ்ந்து பாடப்பட்டவர். இவர் மகா அன்னதாதாவும் தமிழ்க் கலை வினோதருமாக விளங்கியவர்

சரவணபவன்

குமாரக்கடவுள்

சரியன்

நரிஷியந்தன் வமிசத்தோரரசன்

சரியாதி

வைவசுவதமனு புத்திரருளொருவன். இவன் இக்ஷிவாகு தம்பி. இவனுக்கு உத்தானபருகி, அனர்த்தன், பூரிசேனன் என மூவர் புத்திரருங் சுகன்னிகையென ஒரு புத்திரியும் பிறந்தார்கள். சம்யாதி

சரை

பார்வதி

சர்ப்பபுரேசர்

திருப்பாதளீச்சரத்திலே கோயில் கொண்டிருக்குஞ்சுவாமி பெயர்

சர்மணவதி

விந்தியபர்வத்திலுற் பத்தியாகி உத்தரஞ் சென்று யமுனையிற் கலக்குநதி

சர்மிஷ்டை

யயாதி யிரண்டாம் பாரி. விருஷபர்வன் மகள்

சர்வகாமன்

இருதபர்னன் புத்திரன். சுதாசன் தந்தை

சர்வங்கஷம்

மாகவியாக்கியானம்

சர்வதேஜசு

வியுஷ்டி புத்திரன். இவன் தாய்புஷ்கரிணி. ஆகூதி இவனுக்குப் பாரி. சுக்ஷூர்மனு இவனுக்குப் புத்திரன்

சர்வன்

அஷ்டமூர்த்திகளு ளொருவன். சிவன்

சர்வபதி

பட்டிகாவியத்துக்குமல்லி நாதர் செய்த வியாக்கியானம்

சர்வர்த்தி

வற்சரன்பாரி. புஷ்பார்ணன் தாய்

சர்வாகன்

துரியோதனனுக்கு நட்பினனாகியவோரசுரன். இவன் தருமராஜனுக்குப் பட்டாபிஷேக நடக்குங் காலத்திலே பங்கஞ்செய்யக் கருதி இருஷிவேஷந்தாங்கிப் போயிருந்தபோது அங்கிருந்த இருஷிகளால் சாம்பராகச் சபிக்கப்பட்டவன். சார்வாகமத்தை யுண்டாக்கினோன்

சற்குணநாதர்

திரு இடும்பாவனத்திலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்

சலந்தரன், ஜலந்தரன்

இவ்வரசுரன் மனைவி மிக்கருபவதி. அவளைச் சேருதல் வேண்டுமென்று சமயம் பார்த்திருந்த விஷ்ணு சலந்தரன் இறந்துவிட அவன் சரீரத்திலே பிரவேசித்து அவளைப் பலநாட் புணர்ந்து பின்பு அவளுக்கது புலனாயபோது அவளாலே சபிக்கப்பட்டு வருந்தினார். சலந்தரன் கங்கை வயிற்றிற் சமுத்திரராஜனுக்குப் பிறந்த புத்திரன். இவன் சைசவப்பருவத்திலேயே தன்கைக்ககப்பட்ட பிரமாவைக் கழுத்திற்பிடித்து வருத்திப் பின்விடுத்த பராக்கிரமசாலி. விஷ்ணு முதலிய தேவரெல்லோரும் தோற்றோடிவிடச் சிவனாற் சங்கரிக்கப்பட்டவன். மனைவி பெயர் பிருந்தை. இவளைத் தகனஞ்செய்தவிடம் பிருந்தாவன மெனப்படும். அது விஷ்ணு ஸ்தலங்களுளொன்று

சலன்

பரீசஷித்துவுக்குச் சசோபையிடத்துப் பிறந்தபுத்திரன். இவன் வாமதேவவிருஷியினது திரையைக் கவர்ந்து கொண்டு அவர் கேட்டவிடத்துங் கொடாது மறுத்தமையால் அவர் கோபாவேசராகி இவனையும் இவன் தம்பி தலனையும் கொன்றொழித்தார். பலன் புத்திரன்

சல்லியன்

மத்திரதேசத்தரசன். நகுலசகதேவருக்குத் தாய்மாமன். மாத்திரி சகோதரன். பகையரசர்க்குச் சல்லியன் போன்றானாதலின் சல்லியனெனப் பெயர் பெற்றான். இவன் பாரதயுத்தத்திலே கன்னனுக்குச் சாரதியாயிருந்து தருமராசனாற் கொல்லப் பட்டவன். சோமதத்தன் புத்திரன். விப்பிரசித்தி புத்திரன்

சவனன்

பிரியவிரதன் புத்திரருள் ஒருவன். புஷ்கரதீவைத் தன் பங்காகப் பெற்றவன். இவன் புத்திரர் இருவர்

சவுதாசன்

கன்மாஷபாதன்

சவுந்தரநாயகி

திருவியலூரிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர். திரு அன்பிலாலத்துறையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். திருக்கொள்ளம்பூதூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர். திருஅழுந்தூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர். திருக்கடுக்குளத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியார்பெயர்

சவுந்தரநாயகியம்மை

திரு அவணிவணல்லூரிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்

சவுந்தரேசர்

திருப்பனையூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்

சஹதேவன், சஹாதேவன்

சுதாசன் புத்திரன் சோமகன் தந்தை. பாண்டுவுக்கு அசுவினிதேவர் பிரசாதத்தால் மாத்திரிவயிற்றில் பிறந்தவன். இவன் மனைவி விஜயை. சுகோத்திரன் இவன் புத்திரன். ஜராசந்தன் புத்திரன்

சஹஸ்திரஜித்து

யதுவினது மூத்தமகன், ப, பஜமானன் புத்திரருளொருவன்

சஹஸ்திரபாதன்

ககமுகன் சகாத்தியாயன். இவன் பரிகாசமாகத் தனது சகாத்தியாயன் மீது ஒரு பாம்பையெறிய அவன் கோபித்து இவனை டுண்டுபமென்னுஞ் சர்ப்பாமாகும்படி சபிக்க அவ்வாறிருந்து உருரன் தரிசனத்தால் விமோசனம் பெற்றவன்

சஹியம், சையகிரி

கொங்கண நாட்டுக்குக் கீழ்பாலிலுள்ள மலை. இதினின்றுமே காவிரியெழுவது

சாகடாயனர்

இருக்குதந்திரஞ் செய்த முனிவர். இருக்குதந்திரம் சாமவேதலசஷணம்

சாகரன்

சகரன் காண்க

சாகர்

சிந்துநதிக்கு மேற்கேயுள்ள சகதேசத்தோர்

சாகல்லியன்

திருதராஷடிரன் வனவாசஞ்செய்த முனி. வேதமித்திரன் சீஷனாகிய சௌபரிபுத்திரன். இவன்தான் ஓதிய இருக்கு வேதசாகைகளை ஐந்து வகைப்படுத்தி வாற்சியன், மௌற்கலியன், சாலியன் கோமுகன், சிசிரன் என்னும் சீஷர் ஐவருக்கும் உபதேசித்தான். இருக்குவேதத்தைச் சங்கிதையாக்கிய முனி

சாகல்லியம்

மத்திரதேசத்திராஜசானி

சாகுந்தலம்

காளிதாசன் செய்த சமஸ்கிருத நாடகம். நாடக காவியங்களுள்ளே மிகச் சிறந்ததும் சிங்காரத்தால் மலிந்ததுமாயுள்ளது. இது சகுந்தலைசரித்திரங் கூறுவது

சாகேதபுரி

அயோத்தி

சாக்கியநாயனார்

திருச்சங்க மங்கையிலே பிறந்து காஞ்சிபுரத்தையடைந்து பௌத்தராகி அம்மதத்தை ஆராய்ந்து அதிலே பற்றில்லாமல் சைவ சமயத்தை ஆராய்ந்து அதுவே மெய்ச்சமய மெனக்கொண்டு தாம் கொண்ட பௌத்த வேஷத்தைத் துறவாது ஒரு சிவலிங்கத்துக்கு நியமமாகக் கல்லெறிந்து வருதலையே அருச்சனையாகப் பாவித்து முத்தி பெற்றவர்

சாக்கியமுனி

இக்ஷூவாகு வமிசத்துப் பிருகத்பலன் குலத்துதித்தோன். இவன் கோதமன் புத்திரனாதலிற் கௌதம னெனப்படுவன். இவர் மரபிலேயே புத்தர் அவதாரஞ்செய்தார். அக்காரணம் பற்றியே சாக்கியமுனி சாக்கியசிங்கம் முதலிய நாமங்கள் புத்தருக்கு வருவதாயின. புத்தர் கோதமன் வமிசத்திற் பிறந்தமையாற் கௌதமபுத்தரெனப் படுவர்

சாக்கையன்

பறையூரிலிருந்த வோரந்தணன்

சாக்தேயர்

சக்தியை வழிபடுவோர். இம்மதஸ்தர்க்கு ஆதாரநூல் வாமதந்திரம். இவர்க்குச்சர்வம் சக்திமயம் என்பது கொள்கை. நான்கு புருஷார்த்தங்களையுந்தர வல்லது. சக்தியேயெனக் கொண்டு வழிபாடு புரிபவர்

சாக்ஷிநாயகேசுவரர்

திரு அவளிவணல்லூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்

சாக்ஷிவரதர்

திருப்புறம் பயத்திலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்

சாக்ஷூஷன்

ஒருமனு. விசுகர்மாவினது புத்திரன் எனப்பாகவதங்கூறும்

சாங்காசியபுரி

குசத்துவஜன் இராஜதானி, அஃது இக்ஷூமத்தீரத்தி லுள்ளது

சாங்கியன்

புமானாகிய சுத்தபுருடன் அறியாமையுற்ற போது பிரபஞ்சமெல்லாந் தானென விரிந்து நிற்பனென்றும். விவேகஞானம் எய்தியபோது, அவையெல்லாம் பிரகிருதிக்கேயன்றித் தனக்கில்லையாமென்றுஞ் சொல்பவன். இவன் புறச்சமியிகளுளொருவன்

சாங்கியம்

ஒரு யோகமார்க்கநூல். கேச்சுவரசாங்கியம் நீரீச்சுவரசாங்கியமென அஃதிருபாற்படும். அத்துவைதமதாநுஷ்டானங் கூறுவது கேச்சுவரசாங்கியமாம். கபிலமதஸ்தர்களது சாங்கியம் நிரீச்சுவரசாங்கியமெனப்படும். சண்மதங்களுள்ளே சாகியமும்ஒன்று. கபிலர் செய்தது. இம்மதம் தத்துவங்களை இருபத்தைந்தாக்கி இருபத்தைந்தாந் தத்துவமாகிய புருஷ தத்துவம் மற்றை இருபத்து நான்கையும் பிரித்துணர்ந்து மாயாபந்தத்தினின்றும் நீங்குவதே முத்தியெனச்சாதிப்பது. வேதாந்த மதத்துக்கும் சாங்கியத்துக்கு மிடையேயுள்ள வேற்றுமை முன்னையது பரமான்மாவைவிட மற்றொன்றுமில்லை யென்பது, பின்னையது ஆன்மாவும் வேறு மற்றையத்துவமும் வேறென்பது

சாங்கியாயனன்

இருக்குவேதாத்தியாபகனாகிய ஒரிருஷி

சாசுவதன்

இவன் விசுவநந்தன் எனவும் விசுவகன் எனவும்படுவன். பிரதன் புத்திரன்

சாணக்கியன்

அர்த்தசாஸ்திரமென்னும் ராஜதருமத்தைக் குறித்த நூல் செய்தவொரு பிரபலமந்திரி. இவன் முத்திராராடிச நாடகத்திலே பிரபலமாகவெடுத்துப் பேசப்பட்டவன். இவன் கௌடில்லியன் விஷ்ணுகுப்த்தன் என்னும் நாமங்களும் பெறுவன். சுந்திரகுப்தன் மந்திரி

சாணூரன்

கம்சன் தூதனாய வொருமல்லன். இவன் கம்சன் ஏவலின் வழிக் கிருஷ்ணணைக் கொல்லக் தொடுத்த போரில் உயிர்துறந்தவன்

சாண்டிலி

ரிக்ஷபர்வதத்திலே தவஞ்செய்த ஒரு பார்ப்பனமாது. பிரசாபதிபாரி. அக்கினிப்பெயருடைய வசுவினது தாய்

சாண்டில்லியன்

சாண்டில்லிய ஸ்மிருதி செய்த ஒரிருஷி இவர் ஒருகோத்திரத்தலைவர். நந்தன் வமிசத்துச் சந்திரகுப்பதனுக்கு ராச்சியம் வருமாறு செய்த ஓரந்தணன்

சாதகம்

மழைத்துளியை யுண்ணுமொரு பசஷி

சாத்தனார்

இவர் மணிமேகலை நூல் செய்தவரும். பிறர்செய்யும் நூலின் கணுள்ள பிழைகளைக் கேட்குமிடத்துத் தமது தலையிற்குட்டி நொந்து கொள்ளுமியல்பினாலே சீத்தலைச் சாத்தனாரென்னும் காரணப்பெயர் பெற்றவரும். திருவள்ளுவர் காலத்திலே மதுரைச்சங்கத்திலிருந்த புலவருளொருவரும் தானிய வணிகருமானவர்

சாத்தன்

தொண்ணுற்றறுவகைச் சமயசாஸ்திரங்களையும் கற்று மகாசாத்திரனென்று பெயர்பெற்ற ஒரு மஹாத்மா

சாத்தியகி

சத்தியகன் புத்திரனாகிய யுயதானன்

சாத்தியர்

கணதேவதைகளுளொரு சாரார். தருமன் புத்திரர். அவர் பன்னிருவர்

சாத்தியை

தருமன் பாரிகளுளொருத்தி. இவள் புத்திரர்சாத்தியர்

சாத்துவதன்

விஷ்ணுபரிசரருள் ஒருவன். விதர்ப்பனிரண்டாம் புத்திரனாகிய கிருதன் வமிசத்தொருவன். இவனுக்கு எழுவர் புத்திரர்

சாத்துவதி

சுரதசிரவை காண்க

சாந்தலிங்க சுவாமிகள்

துறையூரிலே விளங்கிய ஒரு தமிழ்ப்புலவர். சமயசாஸ்திரங்களில் மிக்க வன்மையுடையவர். சமயத்தால் வீரசைவர் பாலியவயசிலே துறவறம்பூண்டவர். அவிரோதவுந்தியா ரென்னும் உத்தம ஞான நூல் செய்தவர். வைராக்கிய தீபம் கொலைமறுத்தல் முதலிய நூல்கள் செய்தவருமிவரே, சாலிவாகனசகம் ஆயிரத்தறுநூறளவிலிருந்தவர்

சாந்தி

அஜமீடன் பௌத்திரன். நீலன் புத்திரன். தேவகன் புத்திரி, வசுதேவன்பாரி

சாந்தீபன்

பலராம கிருஷ்ணர்களுக்குக் குரு. இவருக்கு வாசஸ்தானம் அவந்தி. இவர் புத்திரன் பிரபாசதீர்த்தத்திலே ஸ்தானஞ்செய்த போது அவனை ஒருதானவன் நீருக்குள்ளேயிழுத்துப் போய்க் கொன்றான். அப்புத்திரனைப் பலராமகிருஷ்ணர்கள் யமபுரஞ்சென்று மீட்டுவந்து குருதக்ஷியாகக் கொடுத்தார்கள்

சாந்தை

ரோமபாதன் வளர்த்த புத்திரி. தசரதன்மகள். இருசிய சிருங்கன்பாரி. இவளைக் காந்தையென்றுங் கூறுப

சாந்தோக்கியம்

வேதரகசியங்களைக் கூறும் நூற்றெட்டு உபநிஷதங்களு ளொன்று. அதிரகசியப் பொருளாகிய தகரவித்தை இவ்வுபநிஷதத்திலேயே கூறப்பட்டுள்ளது. இதற்குப்பாஷியஞ் செய்தவர் சங்கராசாரியர்

சாபஸ்தி

கௌட தேசத்தின் பண்ணேசபஸ்தன் நிருமித்த நகரம்

சாமிநாததேசியர்

சங்கர நமச்சி வாயப்புலவர்க்கு ஆசிரியர். இலக்கணக் கொத்துச் செய்தவர். கருவருஷத்துக்கு முன்னுள்ளவர்

சாமுண்டி

விந்திய பர்வத வாசியாகிய பராசக்தி, காளி

சாம்பன்

கிருஷ்ணனுக்கு ஜாம்பவதி பெற்ற புத்திரன். சிவன்

சாயனாசாரியர், சாயணாசாரியர்

இவர் மாதவாசாரியர் சகோதரர். சாயணாசாரியரென்பது மாதாவாசாரியருக்கு ஒரு நாமாந்தரமென்று கூறுவாருமுளர், வித்தியாரணியர் காண்க

சாயன்

குருதேவியிடத்திற் பிறந்த புத்திரன்

சாயலன்

காவிரிப்பூம் பட்டினத்துள்ள ஒருவணிகன். அவன் வணிகர்கள் பெறுதற்குரிய எட்டிப்பட்டம் பெற்றோன்

சாயாவனேசர்

திருச்சாய்க்காட்டிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமிபெயர்

சாரங்கன்

சிவன். பலவர்ணங் கொண்ட மேனியனென்பது அதன்பொருள்

சாரங்கம்

விஷ்ணுவினது வில்லு. கொம்பினாற் செய்யப்பட்டது என்பது பதார்த்தம்

சாரசுவதன்

ததீசியுடைய வீரியத்தினாற் சரசுவதி நதியிற்றோன்றிய விருஷி

சாரசுவதம்

சரசுவதிநதிதீர தேசம், சமஸ்கிருத சந்திகளையுணர்த்தும் ஒரு வியாகரணசங்கிரகம்

சாரசுவதர்கள்

சரசுவதிநதி தீரதேச வாதிகள். இவர்கள் பஞ்ச கௌடர்களு ளொருபாலார்

சாரணன்

வசுதேவன் ரோகிணியிடத்துப் பெற்ற புத்திரன். ராவணன் அநுசரர்களுளொருவன்

சாரணர்

தேவருட் பாடுவோர்

சாரமாமுனி

இவர், தாம் சிவபெருமானுக்குச் செய்துவந்த புஷ்பகைங்கரியத்துக்குப் பராந்தக சோழனிடையூறுசெய்ய அவன் நாட்டை மண்மாரியாலழித்தவர்

சாரமேயன்

அக்குரூரன் தம்பி

சாருவரன், சாரு

பு மனசியன் புத்திரன்

சார்ங்கம்

சாரங்கம் காண்க

சார்ங்கிகர்

மந்தபாலன் புத்திரர். இவர் நால்வர். காண்டவதகன காலத்திலே அக்கினியினாற் காக்கப்பட்டோர்

சார்த்தூலன்

ராவணன் பரிவாரத்தவருளொருவன்

சார்வபௌமம்

உத்தரதிக்குக் காவல்பூண்ட பெண்யானை

சார்வாகம்

இந்திரிய கோசமாகும் விஷயங்களேயன்றிப் பிறிதொரு பொருளில்லை யென்று பிரதிபாதிக்கும் ஒரு மதம். அது நாஸ்திகமெனப்படும். இம்மதஸ்தர்கள் சைதன்னியரென்ப பெயர்பெறுவர்கள்

சாலகடங்கடேயர்

சாலகடங்கடை வழிவந்தோர்

சாலகடங்கடை

வித்துற்கேசன்பாரி. சுகேசன்தாய். இவ்வமிசத்தர் சாலசடங்கடேயர் எனப்படுவர், வித்தியுத்கேசன்

சாலக்கிராமம்

ஒரு புண்ணிய கோஷத்திரம். இது கண்டகி நதி உற்பத்தியாகுமிடம். பூஜாருகமாகிய விஷ்ணுமுத்திரையுள்ள ஒருவகைச் சிலை. இச்சலாக்கிராமம் நிலத்திற்படுவது, நீரிற்படுவது என இருவகைப்படும், ஜலஜன்னியம் ஸ்தலஜன்னியம், இஃது இமயமலைச் சமீபத்திலே பன்னிரு யோசனை அந்தர்க்கத பூமியிலே சாலக்கிராமாதி தீர்த்தங்களிலே படுவது

சாலபோதகன்

இவன் ஒரு நாகராஜன். நந்தை தந்தை

சாலிகோத்திரன்

ஒரு முனிவர். இடும்பன்வனத்துக்குச் சமீபத்தேயுள்ள தம்முடைய ஆச்சிடரமத்துக்குப் பாண்டவர் அரக்குமாளிகைக்குத் தப்பிச் சென்ற போது அவர்களையுபசரித்தவர். அசுவசாஸ்திரஞ்செய்தவர். சாமவேதாத்தியாயனராகிய ஓரிருஷி

சாலினி

வேட்டுவமகளாகிய தேவராட்டி

சாலிவாகனன்

விக்கிரமார்க்கனைக் கொன்று தன்பெயரால் சகவருஷம் நிலைநாட்டினோன். சுலோசனன் என்னும் பிராமணனுக்குச் சமித்திரையென்னுமொரு புத்திரி பிறந்தாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, தன்வசந்தப்பியொரு சோரநாயகனைக் கூடிக் கருப்பவதி யாயினாள். அஃது அவள் மனசை வருத்தச் சோரநாயகனைக் கண்டு, எனது ஒழுக்கத்துக்கிழுக்கு நேர்ந்தது. குலப்பழி தேடிக்கொண்டேன். இனி யாது செய்வேன் என்று கூறிக் கவன்றாள். அதுகேட்ட சோரநாயகன்யான் மனுஷனல்லேன், யான் ஆதிசேஷன், உனது கருப்பத்திலிருக்கும் புத்திரன் மகா கீர்த்திப் பிரஸ்தாபனாகிய ஒரரசனாவான். அவனாலுன்குலம் விளங்கும். அவனைச் செவ்வே பாதுகாத்துப் பெற்று வளர்க்கக்கடவை யென்றாசீர்வதித்துத் தனது நிசரூபத்தைக் காட்டி அந்தர்த்தானமாயினான். இவ்வாறு நிகழ்ந்தனவற்றை யெல்லாம் சுமித்திரை தனதுதந்தையிடஞ்சென்றுரைத்தாள். அவன் இது தெய்வசங்தற்பமெனக் கொண்டு தேறியிருக்கையில், சுமித்திரை சோர நாயகனைக் கூடிக் கர்ப்பவதியாயினாளென்று அயலார் அவ்வூரரசனுக் கறிவுறித்தினார்கள். அரசன் சுலோசனனை அழைத்தது உன் புத்திரியை இந்நகரத்துக்கு வெளியே அனுப்பிவிடக்கடவையென்று அவனுக்கு ஆஞ்ஞை செய்தான். அவ்வாறே அவள் அந்தகரத்துக்குப் புறத்தேயுள்ளதாகிய ஒரு குலாலசேரியை அடைந்து ஒரு குலாலன் வீட்டில் அடைக்கலம்புகுந்து வசிப்பாளாயினாள், உரிய காலத்திலே புத்திரனும் பிறந்தான். அவனுக்குச் சாலிவாகனன் என நாமகரணஞ்செய்து வளர்க்க, அவனும் வளர்ந்து ஐந்து வயசடைந்து குலாலசேரியிலுள்ள சிறுவரைக் கூட்டி விளையாடிவருநாளில், ஒருநாள் தான் அரசனாகவும் தனது தோழர் மந்திரி பிரதானி முதலியோராகவும் பாவித்து விளையாடினான். அதுகண்ட குலாலபதி ஐந்து வயது செவ்வே நிரம்பாத இச்சிறுவன், அரசனைக்கண்டதெங்கே, மந்திரி பரதானி முதலியோரைக் கண்டதெங்கே, இவனுக்கு இவ்வுணர்ச்சிவந்த தெங்ஙனமென்று அதிசயித்திருந்தான். தினந்தோறும் இவ்வாறு தோழரைக்கூட்டி இராச்சியபரிபாலன விளையாட்டயர்ந்து வருநாளிலொருநாள், அவ்வழியேசென்ற ஒரு பிராமணன் இவ்விளையாட்டைக் கண்டு அரசனாகவிருந்து விளையாடும் சாலிவாகனன்முன்னே போய், விநாயபக்தியோடு நின்று சொல்வான் போல நாடக மாத்திரையாகப் பஞ்சாங்கஞ் சொன்னான். அதுகண்ட சாலிவாகனன் தன்பக்கத்து மந்திரியாக நின்றவனை அழைத்து அப்பஞ்சாங்ககாரனுக்குச் சன்மானமாக ஒரு குடங் கொடுக்குமாறு கற்பித்தான். பஞ்சாங்ககாரனும் அகப்பட்டதைக் கைவிடலாகதெனக் கொண்டுசென்று வீட்டில்வைத்து, மற்றைநாட்காலையிற் பார்த்தபோது அக்குடம் பொற்குடமாகவிருக்கக்கண்டு அதிசயித்து இச்செய்தியை நாடெங்கும் விளக்கினான். இஃதிங்ஙனமாக, குலாலன் அப்புத்திரனுக்கு மண்ணினாலே சிங்காசனம் முதலியனவும், இரதகஜதுரகபதாதிகளும் இயற்றிக் கொடுத்தான். இவையெல்லாம் விக்கிரமார்க்கன் சபைக்கும் சென்றெட்டின. அஃதுணர்ந்த விக்கிரமார்க்கனும் இச்சிறுவனைப் பார்க்க வேண்டுமென்ற வாவுற்றிருந்தான். இவ்வாறிருக்கையில் புரந்தர புரத்திலேயிருந்த தனஞ்செயன் என்னும் வைசியன் இறக்கும்போது, தனது புத்திரர் நால்வரையும் அழைத்து. இக்கட்டிலின் கால்கள் நாலுக்கும் கீழே வைத்திருக்கும் திரவியத்தை நீங்கள் நால்வீரும் பங்கிட்டுக்கொண்டு சுகமாக வாழக்கடவீர்களென்று கூறி விட்டிறந்தான். தந்தைக்குரிய கடன்கள் யாவுஞ்செய்த பின்னர்ப் புத்திரர் நால்வரும் தந்தை கூறியநிதியை வெட்டியெடுத்துப் பார்த்த போது, ஒரு பையிலே மண்ணும். ஓரு பையிலே உமியும், ஒன்றிலே பொன்னும், மற்றொன்றிலே சாணமுமிருப்பக் கண்டு, இவை திரவியாமாவதெப்படி இவற்றைநாம் பாகித்துக் கொள்வதெங்ஙன மென்றெண்ணி மயங்கி வல்லாரிடஞ் சென்று காட்டினர். அவருமதன் குறிப்பையுணராது அரசனிடஞ், சென்று காட்டுமினென, அப்புத்திரர் விக்கிரமார்க்கனிடஞ் சென்று காட்டினர். அவனும் தனது மந்திரிகளோடு ஆராய்ந்தும் அதன்குறிப்புணராது புறந்தந்தான். அப்பால் அப்புத்திரர் மதூர் நோக்கி மீளும்போது சாலிவானனிருந்து விளையாடு மிடத்து வழியே சென்றார். சாலிவாகனன் அவர்களைக் கண்டு அவர்களுடைய நிலையை ஆராய்ந்து இச்சிறு கருமத்துக்காகவா இத்துணை அலைந்தீர்கள். நான் அதன் குறிப்பை கூறுவேன். பைகளை எடுமினென்றான். எடுத்துக் காட்டியவுடனே மண்ணிட்டிருந்த பையினால் ஒருவனுக்கு நிலங்களும் உமியிட்டிருந்த பையினால் ஒருவனுக்குத் தானியங்களும், பொன்னிட்டிருந்த பையினால் ஒருவனுக்கு ஆபரணாதிகளும். முற்றச் சாணமிட்டிருந்த பையினால் ஒருவனுக்கு ஆபரணாதிகளும், மற்றச் சாணமிட்டிருந்த பையினா லொருவனுக்கு மாடுகளுமாகவென்பது உமது தந்தை குறித்த விபாகமெனக் கூறினான். அதுகேட்டவைசியன் புத்திரர் நால்வரும் மகிழ்ந்து சிறுவனைக் கொண்டாடிப் போயினர்.அது கேட்ட விக்கிரமார்க்கன் தனது கீர்த்தி பங்கப்பட்டதே யென்றெண்ணிச் சாலிவாகனனைக் கொல்லுமாறு படை கொண்டுசென்றான். சாலிவாகனன் அவனைத் தனது சிறுபடையோடெதிர்த்து முதுகிடச் செய்து நருமதையாற்றுக்கிப்பாலுள்ள தேசத்தைக் கவர்ந தரசனானான். இவன் வமிசத்தவரே மைசூர் அரசர். நருமதைக்கிப்பால் சாலிவாகனசகமும் அப்பால் விக்கிரமார்க்கசகமும் அதுமுதல்நடை பெறுவவாயின. சிறிதுகாலத்திலே சாலிவாகனனால் விக்கிரமார்க்கனும் கொல்லப்பட்டான். சாலிவாகன சகத்திலிப்போது 1821 வருஷம் சென்றன. வைத்தியசாஸ்திரம் அசுவசாஸ்திரம் அலங்காரசாஸ்திரம் என மூன்றுநூல்கள் இவனாற் செய்யப்பட்டன

சாலீயன்

சாகல்லியன் சீஷரான ஓரிருஷி

சாலுவன்

சாளுவன் காண்க

சால்மலி, சான்மலி

சப்த தீவுகளுளொன்று. அது சுரா சமுத்திர நடுவிலுள்ளது. அங்கே முள்ளிலவ மரங்களதிகமாதலின் அஃது இப்பெயர் பெற்றது. குமுதம், உன்னதம், பலாஹம், துரோணம், கங்கம், மகிஷம், ககுத்துமான் என ஏழு பர்வதங்கள் அத்தீவிலுள்ளன. அங்குள்ள விசேஷநதிகள் யோனி, தோயை, விதிருஷ்ணை, சந்திரை, சுக்கிலை, விமோசினி, நிவிர்த்தி என்னும் ஏழுமாம். அங்குள்ளோர் நிறத்தினாற் கபிலர், அருணர், பீதர், கிருஷ்ணர் என் நான்குபாற்படுவர். அவர்கள் கடவுளை வாயுவினிடத்திலே தியானித்து அவிகளை நிவேதித்து வழிபடுபவர்கள். அஸ்திரேலிய தீவென இந்நாள் வழங்குவது இத்தீவினது சேஷம்போலும், பூர்வத்தில் அநுமான் சஞ்சீவி கொணர்ந்தது இத்தீவிலிருந்தேயாம். ஒரு நரகம். யமதூதர்கள் அங்குள்ள முள்ளிலவ மரக்காட்டிலே பாவிகளைப் புதுத்தியோட்டி யூறுபடுத்தி வருத்துவார்கள்

சாளக்கிராமம்

வடநாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்

சாளுவன், சாலுவன்

சிசுபாலன்தம்பி. கிருஷ்ணன் உருக்குமினியைக் கவர்ந்து போனபொழுது சிசுபாலனைக் கொன்றமை கண்டு இவன் தவங்கிடந்து சகல மாயா சத்திகளையும் சௌம்பகமென்னும் விமானத்தையும் சிவன்பாற் பெற்று ஆகாயத்திற் சஞ்சரித்து யாதவர்களை யெல்லாம் வருத்திவரும்போது கிருஷ்ணனால் எதிர்த்து போர்புரிந்து கொல்லப்பட்டவன். வசுதேவன் தம்பியாகிய விருகன் மூன்றாம் புத்திரன்

சாளுவம்

மத்திய தேசத்திலுள்ள ஒரு தேசம்

சாவகம்

பதினெண் பாஷைகளுளொன்று

சாவரி

ஓரற்பபிராகிருத பாஷை

சாவர்ணி

எட்டாம்மநு. இவர் சூரியனுக்குச் சாவர்ணையிடத்துப் பிறந்த புத்திரனார். ஒரு புராணிகன்

சாவர்ணை

சூரியன் மனைவிகளுள் ஒருத்தி

சாவித்திரி

அசுவபதி மகள். இவள் பதிவிரதையெனப் பெயர் படைத்த மாது கிரோமணிகளுளொருத்தி. இவள் மணப் பருவத்தை யடைந்தபோது, அஸ்வபதி அவளை அழைத்து, நீயோ எனக்கு ஏகபுத்திரி. என்னிஷடப்படி உனக்கு ஒரு நாயகனை நாடித் தரின் அவ்விவாகமுனக்கு உவப்பாகாது போகினும்போகும். ஆதலால் நீ உன் இஷ்டநாயகனை நாடிவந்து சொல்வாயாகில் அவனுக்கு உன்னை மணமுடித்துக் கொடுப்போன் என்று கூற, அவள் அதற்கிசைந்து எங்கும் நாடி, ஈற்றில் ஒரு காட்டிலே தன் மனைவியோடு தவஞ்செய்து கொண்டிருந்த விருத்தனான ஒரரசனுடைய மகனாகிய சத்தியவானைக் கண்டு, அவன்மீதிற் காதலுடையளாய்த் திரும்பி வந்து, தந்தையையடைந்து, தன் கருத்தை உணர்த்தினாள். அச்சமயத்தில் அங்குவந்திருந்த நாரதர் அவளைப்பார்த்து, சாவித்திரீ, யாது செய்தனை, மோசம் போயினையே, சத்தியவானை மணம்புரிவையேல் நீ சுகமடையமாட்டாய். அவன் இன்றுமுதல் ஒரு வருஷத்தில் இறந்துவிடுவான். அவனை விட்டு இன்னொருவனை நாடக்கடவாயென்று தடுத்தார். பதிவிரதத்திற் சிறந்தவளாகிய சாவித்திரியினது மனசை நாரதர் உரைகள் சிறிதும் அசைத்திலவாதலின் அவளுடைய இஷ்டப்படியே தந்தை உடன்பட்டுச் சத்தியவானுக்கு அவளை மணம்முடித்துக் கொடுத்தான். சாவித்திரி சிலதினங்களில் நாயகனோடு காட்டுக்குச் சென்று அங்கே தன் அலங்கார ஆடையாபரணங்களைத் துறந்து தவத்துக்குரிய ஆடைதரித்து நாயகனுடைய ஆயுள்நாளை நினைந்து தவம் புரிவாளாயினாள். நாளும் ஒவ்வொன்றாய்க் கழிந்து வருஷவெல்லைக்கு மூன்றுநாள் உளவென வந்தடுத்தது. அம்மூன்றுநாளும் ஊணும் உறக்கமுமின்றிக் கொடுந்தவங்கிடந்தாள். மூன்றாநாளிலே தன் வழக்கம் போலச் சத்தியவான் அன்றும் மரந்தறிக்கப்போய்த் தறித்து மீண்டுவந்து மிக்க சோர்வினாற் சாவித்திரி மடிமீது சாய்ந்து நித்திரை போயினான். அச்சமயம் யமன்சென்று அவன் உயிரைக் கவர்ந்து கொண்டு தென்றிசை நோக்கிச் சென்றான். அஃதுணர்ந்த சாவித்திரியும் யமனைத் தொடர்ந்து சென்றாள். யமன் அவள் தொடர்வதைக்கண்டு என்னைத் தொடர்வதாற் பயனில்லை நீ போகவென்றான். ஏன் நாயகனைவிட்டு யான் திரும்புவதாலும் பயனில்லை. ஆதலின் என் நாயகனைத் தொடர்ந்தே செல்வேன் என்று விடாது தொடர்ந்தாள். அதுகண்ட யமன் அவள் கற்பை மெச்சி அவளுக்கிரங்கிச் சத்தியவானுடைய உயிரை உடலிற்சென்று கூடும்படிவிடுத்து வாழ்த்திப்போக, சாவித்திரி தனது நாயகனோடு தந்தை வீட்டுக்குச் சென்று ஒருயிரும் ஈருடலும் பெற்றாள்போல நெடுங்காலம் வாழ்ந்திருந்தாள். இருக்கு வேதத்திலுள்ள ஒரு பிரபல இருக்கு இப்பெயர்பெறும். பிரமாவின் பாரிகளுளொருத்தி. சரசுவதியே இப்பெயர் பெறுவரென்பர். ஓருசாரர். பார்வதி. கசியபன் மனைவி

சாவித்திரி விரதம்

ஆனி மாசத்துப் பௌரணிமையிலே சுமங்கலிகளால் வைதவ்வியம்வராமல் அனுஷ்டிக்கப்படு மொரு விரதம்

சிகண்டி

அந்தர்த்தானன் முதற்பாரி. துருபதராஜன் புத்திரியாகப்பிறந்து ஒரு புத்திரனைப்போல வளர்க்கப்பட்டவள். அப்பால் ஓர்யடினாலே தன்னுடைய பெண்ணுருவம் மாற்றப்பட்டு விஷமரைக் கொல்லுநிமித்தமாக ஆணுருப்பெற்றவள். பாரத யுத்தத்திலே வீஷ்மரை யெதிர்த்தபோது அவர் பெண்ணை யெதிர்த்துப் போர்புரியலாகாதென்று மறுக்க அசுவத்தாமனாலே கொல்லப்பட்டவள்

சிங்கன்

சனகவிஜயற்குத் துணையாயினானோரரசன்

சிங்கபுரம்

கலிங்க நாட்டிலுள்ள ஒரு நகரம்

சிங்கமுகன், சிங்கன்

சூரன் தம்பி. கசியபன் சிங்கவுருக் கொண்டுநின்ற மாயையைக் கூடிப்பெற்ற புத்திரன். இவன் மனைவி விபுதை. புத்திரர் அதிசூரன் முதலிய நூற்றுவர். இவன் தேவர்களுக்குப் பெருந் துன்பங்கள் செய்துவருங் காலத்திலே சுப்பிரமணியக் கடவுளாலே யுத்தத்திலே கொல்லப்பட்டவன்

சிங்களம்

சிம்ஹளத்துவீபம். இலங்கை, ஈழம், லங்காதேசம் என்பன பரியாயங்கள். இது மிக்க பழைமையும் பெரும் புகழும்வாய்ந்த தேசம். இப்போதுள்ள இலங்கை பூர்வ லங்காதேசத்தின் ஒரு சிறு கூறேயாம். எஞ்சியபாகம் காலாந்தரத்திலே கிழக்கும் தெற்கும் மேற்கும் சமுத்திவாய்ப்பட்டழிந்தது. இப்போது இலங்கையிலே வசிப்பவர்கள் ஈராயிரத்தைஞ்நூறு வருஷங்களுக்கு முன்னே மகததேசத்திலிருந்துபோய்க் குடியேறிய ஆரியரும் பூர்வ ராக்ஷச வமிசத்தவர்களும் கலந்துற்பத்தியான வமிசத்தவர்கள். பூர்வ சிங்களவாஷையும் ஒட்டரபாஷையும் சம்ஸ்கிருதமுங் கலந்துண்டாயதே இப்போதுள்ள சிங்களபாஷை. ஓட்டரக்கலப்பு மகத தேசத்தாராலாயது இலங்கைக்கு மகதநாட்டார் வருதற்கு ஈராயிரத்தைஞ்நூறு வருஷங்களுக்கு முன்னே, அஃதாவது இற்றைக்கு ஐயாயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த பாண்டவர்கள் செய்த ராஜசூய யாககாலத்திலே, அவர்களுக்கு இலங்காதேசத்தரசன் வைடூரியத்தினங்களும், முத்துக்களும், மயிரகங்களும், யானைகளும், அனுப்பினானென்றும், அவைகளைக் கொண்டுசென்ற தூதர்கள் பொன்னிற முடையோரும் கருநிறமுடையோருமாகிய மாந்தரென்றும், பாரதத்திலே கூறப்படலால் பாண்டவர்கள் காலத்திலே இலங்கை மிக்கநாகரிக முற்றிருந்ததென்பது அநுமிக்கப்படும். அதற்குப் பிந்தியகாலத்தலே தாழ்வுற்று விஜயன் அரசனாகியபின்னர் விருத்தியுற்றது போலும். விஜயன் மகதநாட்டான்

சிங்கேசுவரி

திருப்பத்தூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

சிசிரன்

சாகல்லியன் சீஷன்

சிசுநாகன்

சைசு நாகர்களுக்குக் கோத்திரத் தலைவனாகிய மகத்தேசத்தரசன். இவனரசுசெய்த காலம் புத்தருக்குப் பின் எழுபத்திரண்டாவது வருஷம். அஃதாவது 2372 வருஷங்களுக்கு முன்னுள்ளது. கலியுகத்தாற் கூறுமிடத்து அவனிருந்தகாலம் 2628 ம் வருஷம்

சிசுபாலன்

சேதிதேசத் தரசனாகிய தமகோஷன் வசுதேவன் தங்கையாகிய சுரதசிரவையிடத்துப் பெற்ற புத்திரன். இவன் பூர்வத்திலே இரணியகசிபனாகவும். அதன்பின்னர் ராவணனாகவும் பிறந்து விஷ்ணுவாற் கொல்லப்பட்டவன். இச்சிசுபாலப் பிறப்பிலும் முற்பிறவிகளி லிருந்ததைப்பார்க்கிலும் மிக்க கொடியவனா யொழுகுநாளிலே கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன். இவனுடைய வன்மையையும் மூர்க்கத்தையும் மாகாகவி தாம்செய்த சிசுபாலவதமென்னும் நூலிலே மிகச் சிறப்பித்துரைப்பர்

சிதத்துவஜன்

அஜன்புரத்திரன்

சிதம்பரதேசிகர்

வைராக்கிய தீபம் வைராக்கியசதக முதலியவற்றுக்கு உரைசெய்தவர். திருப்போரூர்ச் சந்நிதிமுறையும் பஞ்சாதிகார விளக்கமும் பாடினவரும் இவரே. பஞ்சாதிகாரம் சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களைக் கூறுவது. இவர் சாந்தலிங்கசுவாமிகள் சீஷர்

சிதம்பரம்

பஞ்சலிங்கங்களு ளொன்றாகிய ஆகாசலிங்க ஸ்தலம். இது தொண்டை நாட்டிலுள்ளது. இத்தல மான்மியங்களை யெலலாங் கோயிற் புராணத்திற் காண்க. பிண்டமும் பிரமாண்டமும் சமம். பிண்டமாகிய சரீரத்தில், இடப்பக்க நாடியாகிய இடைக்கும் வலப்பக்கநாடியாகிய பிங்கலைக்கும், நடுவிலுள்ள சுழுமுனாநாடியும், பிரமாண்டத்திலுள்ள இப்பரதகண்டத்தில், இலங்கைக்கும் இமயமலைக்கும் நடுவிலுள்ள தில்லையும், சிவபெருமான் ஆனந்த நிருத்தஞ்செய்யுந் தானமாம். சரீரம் பிரமபுரம், சரீரத்திலுள்ளேயிருக்கும் இருதயத்தானம் தகரமாகிய புண்டரீகவீடு, இருதயத்தானத்தினுள்ளே இருக்கும் பிரமமாகிய சிவம் ஆகாசம். புறத்தும் இப்படியே, பிரமாண்டம்பிரமபுரம், பிரமாண்டத்தினுள்ளேயிருக்குந் தில்லைவனம் புண்டரீக வீடு, தில்லைவனத்தில் நிருத்தஞ் செய்யுஞ்சிவம் ஆகாசம். இவ்வாகாசம் பூதாகாசம்போற் சடமாகாது சித்தேயாம், ஆதலாற் சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எக்காலமும் நீக்கமின்றி விளங்குந்தானமாதலால், இத்தில்லையுஞ் சிதம்பரத்திலே, ஞான சபையிலே, சிவபெருமான், சிவகாமியம்மையார்காண ஆனந்தநிருத்தஞ் செய்தருளுவர். சிதம்பரத்தி லெழுந்தருளியிருக்கும் திருமூல ஸ்தானமாகிய சிவலிங்கப் பெருமானுக்கு வேத சிவாகம விதிப்படி பூசை முதலியன செய்யும் பிராமணர் தில்லைவாழந்தண ரெனப்படுவர்கள். அவர்கள் மூவாயிரவர் இப்போதுள்ளோர் முந்நூற்றுவரே, சேக்கிழார் காலத்திலே மூவாயிரவாராக விருந்தோர் இப்போது முந்நூற்றுவராயினது தமக்குரிய தருமங்களினின்றுமிழுக்கிய காரணத்தினாற்போலும். சிதம்பரமென்பதன் பொருள்ஞானாகாசம்

சித்தத்தைச் சிவன்பால் வைத்தார்

இராஜயோகத்திருந்து சிவனைத் தியானித்து முத்திகூடிய தொகையடியார்கள். இவர்களுடைய பெயர் ஊர் முதலியன புலப்படக் கூறப்பட்டில. சுந்தரமூர்த்தி நாயனாராற் பாடப்பட்டமையின் அவர்க்கு முன்னுள்ளவர்களென்பது வெளிப்படை

சித்தநாதேசுவரர்

திருநறையூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்

சித்தபுரி

இது மேகலாரேகையிலே லங்காபுரிக்குநேரே அதோ பாகத்திலே ரோமகபுரிக்கு மேற்கே தொண்ணூறு பாகையிலேயுள்ளது, அமெரிக்கதேசமென இந்நாள் வழங்குந் தேசத்திலிருந்ததாதல் வேண்டும்

சித்தர்கள்

அணிமாதிகள் எல்லாம் வல்ல கணங்கள், அவர்கள் எண்ணிவர். அவருள்ளே தமிழ்நாட்டிலே விளங்கிய சித்தர்கள் பாம்பாட்டிச்சித்தர், அகப்பேய்ச்சித்தர் அந்தணரென்றும், அகப்பேய்சித்தர் வேளாளரென்றுங் கூறுவார்கள். இருவரும் அணிமாதிசித்திகளைப் பெற்றபின்னர் அவற்றாற் பயனில்லையெனக் கண்டு ஞானிகளாயினோர். இருவரும் அவர்கள் பாடித்திரிந்த பாடல்களிலே அகப்பேயென்றும் ஆடுபாம்பே யென்றும் வருவனவாற்றாற் பெயர்கொண்டவர்கள். இயற்பெயர் தெரியவில்லை. அவர்கள் பாடல் வெள்ளென்றிருப்பினும் ஆழ்ந்த ஞானப்பொருளுடையன. கோரர்கர் சத்தியநாதர் முதலியோர் ஒன்பதின்மரும் நவநாரித்தரெனப்படுவர். இவர்கள் பதார்த்தங்களின் பகுதிகளையும் சரீரத்தின்பகுதிகளையும் நன்றாக ஆராய்ந்து நிச்சயித்து அப்பகுதிகளின் சொரூபலடிணங்களை யுணர்ந்து அவற்றை எண்ணியவாறு ஏவல்கொள்ளும் வன்மையுடையராதலிற் சித்தரெனப்படுவர்கள். ரசாயனசாஸ்திரங்களும் வைத்தியமுஞ் செய்தோர் இவர்களே. இவர்கள் செய்த நூல்களெனத் தமிழிலுள்ளன பெரும்பாலும் இக்காலத்துச் சாமானியர்பாடிய புரட்டு நூல்களேயாம். சித்தர் செய்தன இறந்தன

சித்தாச்சிரமம், சித்தாசிரமம்

விசுவாமித்திரன் தவமும் யாகமுஞ் செய்தவிடம். இவ்விடத்தேயே விஷ்ணு ஒரு கற்பத்திலே தவஞ் செய்ததுமாம். இதிலே தவஞ்செய்வோர் சித்திபெறுதல்நிச்சயம்

சித்தாந்தகௌமுதி

பாணினிவியா கரணத்துக்கு வியாக்கியானம்

சித்தாந்தசாஸ்திரங்கள்

உந்திகளிறோடுயர் போதஞ் சித்தியார் பிந்திருபாவுண்மைப்பிரகாசம் ~ வந்தவருட் ~ பண்பு வினா போற்றி கொடி பாசமிலா நெஞ்சவிடு~ வுண்மை நெறிசங்கற்ப முற்று என்னும் வெண்பாவால் இவையென்பதும் இத்தனையென்பது முணர்க. திருவருட்பயன், சங்கற்பநிராகரணம், வினாவெண்பா, கொடிக்கவி, போற்றிப்பஃறொடை, சிவப்பிரகாசம், நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்க மென்னும் இவ்வெட்டும் உமாபதி சிவாசாரியர் செய்தன. உண்மை விளக்கஞ் செய்தவர் திருவதிகைமனவாசகங்கடந்தார். சிவஞானசித்தியும் இருபாவிருபஃதும் செய்தவர் அருணந்திசிவாச்சாரியார். சிவஞானபோதஞ்செய்தவர் மெய்கண்டதேவர். திருவுந்தியார் செய்தவர் உய்யவந்த தேவநாயனார். திருக்களிற்றுப்படியார் செய்தவர் திருக்கடவூர் உய்யவந்தவேதநாயனார். இவர் திருக்களிற்றுப்படியார் செய்தவருடைய சீடருடைய சீடர். இச்சித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கும் சிவாகமத்தின் ஞானகாண்டப்பொருளைச் சுருக்கி இனிது விளக்குந் தமிழ்நூல்களாம். இவை ஐஞ்டிற்றெண்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னே பாடியருளப்பட்டன வென்பது சங்கற்பநிராகரணஞ் செய்த உமாபதி சிவாசாரியர்தாமே அந்நூலிலே சாலிவாகன வருஷம் ஆயிரத்திருநூற்று முப்பத்தைந்தில் அதனைச் செய்ததாகக் கூறலால் நிச்சயிக்கப்படும். உமாபதி சிவாசாரியர் அருணந்தி சிவாசாரியர் சீடர். அருணந்தி மெய்கண்டசிவாசாரியரது சீடர். சிவஞானபோதஞ் செய்யப்பட்ட காலம் சாலிவாகனசகவருஷம் ஆயிரத்திருநூறளவி லுள்ளது. உமாபதி சிவாசாரியராற் பாடப்பட்ட சேக்கிழார் எழுநூற்றெழுபது வருஷங்களுக்கு முன்னுள்ளவர். வேதத்தின் ஞானகாண்டப் பொருளையுள்ளபடி அறிவிக்குந் தமிழ்நூல்கள் தேவாரமுந்திருவாசமுமாம், இவையிரண்டுந் தமிழ் வேதமெனப்படும். இச்சித்தாந்த சாத்திரங்கள் தமிழிலேவெளிவருதற்கு முன்னுள்ளகாலத்திலே பக்குவர்கள் குருவைத்தேடியடைந்து உபதேசமுகமாகச் சமயவறிவைப் பெற்றுக்கொள்வார்கள். இக்காலத்திலோ நூல்களே யாவர்க்கும் குருவாயின. ஆகியும் உண்மையறிவு தலைப்பட்டார். மிகச் சிலரே. அக்காலத்தில் அறியாதார் பலர். இக்காலத்தில் அறிந்துமறியாதாரே பலர்

சித்தாந்தசிகாமணி

சிவப்பிரகாசசுவாமிகள் செய்த இருபது நூல்களுளொன்று. அது யாப்பாலும் மிகச் சிறந்த நூல்

சித்திரகுப்பதன்

யமன் கணிகன். இவன் மனுஷர் நல்வினை தீவினைகளைக் கிரமமாகவெழுதி யமனுக்குக் கணக்குக்காட்டுபவன்

சித்திரகூடம்

தற்காலம் பண்டல்கண்டு என்று வழங்குமிடத்திலுள்ள ஒரு மலை. இது வான்மீகி ஆச்சிரமம். சிருங்கிவேரபுரத்துக்கு நிருதிதிசையிலுள்ளது

சித்திரகேதன்

வசுதேவன் தம்பியாகிய தேவபாகன் மூத்தமகன். சூரசேன தேசத்துராஜா. இவன் சிலகாலம் சந்ததியின்றித் தவங்கிடந்து ஒரு புத்திரனைப் பெற்றான். அதுகண்ட சககளத்திகள் பொறாமையுற்று விஷமூட்டி அப்புத்திரனைக் கொன்றார்கள். அதுகாரணமாகச் சித்திரகேதன் புத்திரசோகத்திலாழ்ந்து வருந்தினான். அப்போது நாரதனும் அங்கிரசனும் அவனிடஞ் சென்று அவனுக்கு ஞானோபதேசஞ்செய்துபோக, அதனால் அவன் மகா ஞானியாகித் தனது தேகத்தை விட்டு வித்தியாதரவுடல் பெற்றுக் கைலாசகிரிக்குப் போய் அங்கே சிவபெருமான் சக்திசமேதராயிருப்பக்கண்டு, அவரைப்பார்த்து, ஜகத்காரணராகிய நீரும் இப்படிப் பெண்ணோடு கூடியிருக்க வேண்டுமோ வென்று உண்மையுணராதான் போன்று பரிகாசஞ்செய்தான். அதனால் ராடிசரூபம்பெற்றுப் பூமியில்வந்து பிறந்து விருத்திராசுரன் என்று விளங்கி இந்திரன் கையிலிறந்து முத்திபெற்றான்

சித்திரசேனன்

ஒரு கந்தருவன். அர்ச்சுனன் தோழன். துரியோதனன் தம்பிகளுளொருவன். கர்ணன் மகன். நரிஷியந்தன் புத்திரருளொருவன். ஜராசந்தன் தோழன்

சித்திரசேனபாண்டியன்

சித்திரவர்ம பாண்டிய னுக்குப்பின் அரசுபுரிந்தவன்

சித்திரத்துவசன்

சித்திரபூஷண பாண்டியனுக்குப்பின் அரசுபுரிந்த பாண்டியன்

சித்திரன்

கனகவிசயற்குத் துணை அரசன்

சித்திரபூஷணன்

சித்திரவிரதனுக்குப்பின் அரசுபுரிந்தபாண்டியன்

சித்திரரதன்

முனிமகன். கந்தருவராசன். பேருசங்கன் புத்திரன். சசிவிந்தன் தந்தை. அதிவிரதன் புத்திரன். துரியோதனன் தம்பி

சித்திரரேகை

வாணாசுரன் மந்திரியாகிய கவந்தன் மகள். உஷா தேவிக்குத் தோழி. சித்திரத்தில் வல்லவளாதலின் இப்பெயர் பெற்றாள்

சித்திரவர்மபாண்டியன்

சித்திரத்துவச பாண்டியனுக்குப்பின் அரசுபுரிந்தவன்

சித்திரவாகன், சித்திரவாகனன்

மணலூர் புரத்திலரசிருந்த பாண்டியன். பப்பிருவாகன். தாயைப் பெற்ற பாட்டன். இவன் பாரதயுத்தத்திலே பாண்டவர்க்காகச் சென்று துணைபுரிந்தவன்

சித்திரவிக்கிரமன்

சித்திரசேன பாண்டியனுக்குப்பின் அரசுசெய்த பாண்டியன்

சித்திரவிரதன்

இவன்சுகுணசேகர பாண்டியனுக்குப் பின் அரசு புரிந்த பாண்டியன்

சித்திராங்கதன்

ஒரு கந்தருவன். விசித்திரவீரியன் தமையன். திருதராட்டிரன் பெரிய தந்தை. சித்திராங்கதன் என்னும் பெயரோடிவன் காலத்திருந்த கந்தவனை எதிர்த்துக் கொடிய யுத்தஞ்செய்து அக்கந்தவனாற் கொல்லப்பட்டவன். துரியோதனன் தம்பியருளொருவன்

சித்திராங்கதை

அர்ச்சுனன் பாரி. சித்திரவாகனன் மகள். இவளே பப்பிருவாகனனுக்குத் தாய். அர்ச்சுனன் தருமன்செய்த அசுவமேதயாக காலத்தில் அவ்வசுவத்தோடு சென்றபொழுது அவ்வசுவத்தைப்பப்பிருவாகனன் பிடித்துக்காட்ட, அர்ச்சுனன் அவனை இன்னானென்றறியாது அவனோடு யுத்தஞ்செய்து அவன் பாணத்தால் மூர்ச்சையாயினான். அப்பொழுது பப்பிருவாகனன் அர்ச்சுனனைத் தந்தையென்றுணர்ந்து அவன் மூர்ச்சையைத் தீர்த்து அவனை வழிபட்டு வணங்கி அக்குதிரையை ஒப்புவித்தான். அல்லியெனப்படுவளும் இச்சித்திராங்கதையேயாம்

சித்திராங்கி

ராஜராஜ நரேந்திரன் காமக்கிழத்தி. காமலீலையில் இவளை வென்றவரில்லை, அற்புதசரீரமுடையானென்பது பதார்த்தம்

சித்திராதேவி

குபேரன் பாரி. இவள் சித்திரரேகையென்றும் சொல்லப்படுவள்

சித்திராபதி

மாதவி நற்றாய்

சித்திராயுதன்

ஒரு கந்தருவன்

சித்திரோபலை

இருக்ஷ பர்வதத்திற் பிரவாகிக்குமொரு நதி

சிநிவாலி

தாதைபாரி

சிந்தாமணி

திருத்தக்க தேவரென்னும் சைனமுனிவரியற்றிய தமிழ்க்காவியம். இது சீவகன் கதையை வனப்புறக் கூறுவது. நச்சினார்க்கினியராலுரை செய்யப்பட்டது. சீவகசிந்தாமணி யெனவும்படும். இது கடைச்சங்க காலத்தையடுத்தநூல். 3145 செய்யுளும், பதின்மூன்றிலம்பகங்களு முடையது

சிந்துத்துவீபன்

அயுதாயுவினது தந்தை. சிந்துதேசராசா

சினி

பு. கர்க்கன் புத்திரன். கார்க்கியன்தந்,தை. ய. யுதாசித்துபுத்திரன். ய. அநமித்திரன் புத்திரன். ய. விரேதன் புத்திரன்

சிபி

உசீநரன் மூத்தமகன். இவன் யாகஞ்செய்த காலத்தில் இந்திரானும் அக்கினியும் இவன் உத்தமகுணத்தைப் பரீடிக்குமாறு இந்திரன் பருந்தாகவும் அக்கினி புறாவாகவும் ரூபந்தரித்ததுப் பருந்து புறாவைப்பற்றியுண்ணுமாறு துரத்திச் செல்ல, புறாவானது ஓடிப்போய்ச் சிபிச்சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புகுந்தது. அதுகண்ட சிபி அப்புறாவுக்கு அபயஸ்தங் காட்டி அணைத்தான். பருந்துந் தொடர்ந்துள்ளே சென்று சிபியை நோக்கித் தான் துரத்திவந்த புறாவை விடுமாறுகேட்க, சிபி, என்னிடத்தடைக்கலம் புகுந்த புறாவை விடமாட்டேனென்ன, எனக்கு மாமிசம் புசித்தல் இயல்பு. மனுஷரைப் போலக் காய்கனிகளை அருந்திச் சீவித்தல் எனக்குப் பொருந்தாது. ஆகையால் என் புறாவை விடக்கடவாயென்றது. சிபி அப்பருந்தை நோக்கிப் புறாவை விடமாட்டேன். அப்புறாவினது எடையுள்ள மாமிசத்தை என் தேகத்திற் கொய்து தருவேன் ஏற்றுக் கொள்கவென்ன, பருந்து அதற்குடன்பட்டது. உடனே ஒரு துலையின் ஒரு தட்டிலே அப்புறாவையிட்டு எதிர்த் தட்டிலே அதற்கீடாகத் தனது சரீரத்தினின்றுஞ் சதையைக் கொய்துவைத்தான். அத்தட்டுத் தாழ்ந்து புறாவிருந்த தட்டுக்குச் சமமாகாதது கண்டு மீண்டுங் கொய்து வைத்தான். அவ்வளவிலும் நிரம்பாமை கண்டு தன்சரீரத்திலே கொய்யத்தக்க சதையெல்லாங் கொய்து கொய்து வைத்தும் ஆற்றாது ஈற்றிலே தானே முழுவதும் இரையாக வேறினான். அவ்வளவிலே தட்டுச்சமப் பட்டது. உடனே இந்திராக்கினி தேவரிருவரும் தமது மெய்வடிவைக் காட்டி உனது சீவகாருணியத்தை மெச்சினோம் உன்போற் சிறந்தான் எவனுமில்லை. உனக்கு இஷ்டமாகிய வரங்களைத் தருவோமென்று அவனைப் பழைமை போலாக்கி அநேகவரங்களைக் கொடுத்துப் போயினர். இவனுக்கு விருஷதர்ப்பன், சுவீரன், கேகயன், மந்திரன் என நால்வர் புத்திரர். பிரகலாதன் புத்திரன்

சிம்சுபாயன்

ஒரு பௌராணிகன்

சிம்சுமாரம்

சோதிசக்கரம். இது பகோளத்தின் கண்ணேயுள்ளது. இச்சக்கரம் துருவன் இந்திரன் வருணன் கசியபன் முதலியோர் கூடிப் பிரதடிணமாகத் தினந்தோறுஞ் செல்லப்பெற்றுள்ளது. இதன் வாற்பக்கத்திலே பிரஜாபதியும் அக்கினி இந்திரன் தருமன் என்போரும், வான மூலத்திலே தாதாவும் விதாதாவும், கடிதடத்திலே சப்த இருஷிகளும், மேன்மோவாயிலே அகஸ்தியரும், கீழ்மோவாயிலே யமனும், முகத்திலே அங்காரகனும், குய்யத்திலே சனியும், பீஜத்திலே பிரகஸ்பதியும், பக்கத்திலே சூரியனும், நாபியிற்சுக்கிரனும், நெஞ்சிலே சந்திரனும், ஸ்தானங்களிலே அசுவினி தேவர்களும், பிராணவாயு அபான வாயுக்களிலே புதனும் சர்வாங்கமும் சனி கேதுக்களும், ரோமங்களிலே நக்ஷத்திரங்களுமாக அதிகரித்து நிற்பர். இச்சிஞ்சுமார சக்கரம் மகர வடிவமாகவுள்ளது. முதலைவடி வெனினும் ஒக்கும்

சிம்மபலன்

கீசகன்

சிம்மமுகன்

சிங்கமுகன் காண்க

சிம்மிகை

திதிபுத்திரி. இவள் விப்பிரசித்தி மனைவி. இவள் தடிதன் மகளென்றும் கசியபன் பாரி என்றும் பாரதங்கூறும். இராணியகசிபன் மகள். சாயாக்கிராகிணி. ஓரிராக்ஷசி. அநுமான் இலங்கைக்குச் செல்லும் போது அவனாற் கொல்லப்பட்டவள். இலங்கணியெனவும்படுவள்

சியவனன்

பிருகுவுக்குப் புலோமையிடத்தி லுற்பத்தியான புத்திரன். சுகோத்திரன் புத்திரன். மித்திராயுபுத்திரன்

சியாமகன்

வசுதேவன் தம்பி

சியாமரஸ்மி

கபிலன் சீஷன். இவன் வேதங்கள் அப்பிரமாணமெனக் கபிலனோடு வாதித்து முடிவில் வேதங்களே எல்லாவற்றுக்கும் பிரமாணமென அக்கபிலன் நாட்ட ஒப்பியவன்

சியாமளாதேவி

யமன் பாரி. உச்சிஷ்டை

சியேனி

அநூரன்பாரி. இவள் புத்திரர் சம்பாதி சடாயுக்கள்

சிரகாரி

மேதாநிதிபுத்திரன். இவன் தந்தை தன் மனைவியை, தாயை, வெட்டுமாறு இவனைஏவ அவன் சற்றே தாமதித்துச் சிந்தித்து நின்றான். அவ்வளவில் தந்தை கோபந்தணிந்து சந்தோஷித்து இவனுக்கு இப்பெயரை யிட்டான். சிரம் ~ தாமசம். காரி ~ செய்பவன்

சிரத்தாவதி

வருணன் ராஜதானி

சிரத்தை

தருமன் பாரி. சுமன்தாய். வைவசுவதன் பாரி

சிரவணத்துவாதசி

திருவோண நக்ஷத்திரத்தோடு கூடின துவாதசி. இத்தினத்தில் விஷ்ணுமூர்த்தி வாமனா வதாரஞ் செய்தமையால் உலகத்தி லத்தினம் விரததினமாயிற்று

சிரவணன்

முராசுரன் புத்திரன். கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன்

சிராத்தம்

பிதிர்கன்மம். இது பிர்தேவதைகளுடைய திருப்பதியின் பொருட்டுச் செய்யப்படும் பிண்டகருமம். இது சுபகருமத்தின் கண்ணும் அசுபகருமத்தின் கண்ணும் செய்யப்படும். சுபகருமத்தின்கட் செய்யப்படும் சிரார்த்தம் நாந்தியென்றும் அப்பியுதய மென்றும் சொல்லப்படும். அசுபசிரார்த்தங்களநேகம். அவற்றுள் பிரேதசிரார்த்தம் பிரேததிருப்தியின் பொருட்டும் செய்யப்படுவது. இது நக்கினநலை ஏகோதிஷ்ட சோடச சபிண்டீகரண சிரார்த்தங்களெனப் பல. பைதிருக சிரார்த்தம் பிதிர்தேவதைகளின் பொருட்டுச் செய்யப்படும். பிதிர்தேவதைகள் வசுருத்திர ஆதித்திய பதப்பேறுடையவர் ளாயுள்ளவர்கள். காசி கயை பிரயாகை குருக்ஷேத்திரம் கோகர்ணம் குருஜாங்கலம் புஷ்கலக்ஷேத்திரம் முதலியன சிரார்த்தகருமங்களுக்குரிய சிறந்த ஸ்தலங்கள். அவற்றுள் கயாசிரார்த்தம் மிக்க விசேஷமுடையது. இறந்ததினம், அமாவாசை, மகாளயபடி முதலியன சிரார்த்தத்துக்குரிய காலம்

சிராயு

பிரமதத்தன் தகப்பன்

சிரார்த்ததேவன்

சூரியனுக்குச் சமிஞ்ஞா தேவியிடத்துப் பிறந்த புத்திரன்

சிராவணம்

திருவோணம். ஆவணி மாசத்துச் திருவோண நக்ஷத்திரத்திலே இருபிறப்பாளர் மூவராலும் அநுஷ்டிக்கப்படுவதாகிய ஒரு வைதிககிரியை. அது பதினான்கு வித்தைகளையும் சிரவணஞ்செய்யத்தொடங்குதற்குரிய கிரியை

சிராவிதம்

ராமன் புத்திரனாகிய லவன் ராஜதானி

சிருகாலவாசுதேவன்

மதுராபுரத்துக்குச் சமீபத்திலேயுள்ள கரவீரபுரத்தரசன். இவன் எப்பொழுதும் கிருஷ்ணன் மீது பகை பாராட்டி வந்தமையால் கிருஷ்ணன் இவனைக் கொன்று மகனுக்கு முடிசூட்டினான்

சிருங்ககிரி

சங்கராசாரியாராலே ஸ்தாபிக்கப்பட்ட சாரதாபீடமும் மடாலயமு மிருக்குமிடம். இம்மடத்துக்குச் சங்கராசாரியரது சீஷ பரம்பரையில் வருவோர் அதிபதியாவர். அவருஞ் சங்கராசாரிய பட்டமே பெறுவர். இம்மடாலயத்திலேயுள்ள கிரந்தமண்டபத்திலே அநேக நூல்களுள. சிருங்ககிரி மைசூர் நாட்டிலுள்ள ஒருமலைமேல் நகரம்

சிருங்கர்

புஷ்யமித்திரன் வமிசத்தரான மகததேசத்தரசர். இவர்கள் பதின்மர். நூற்றுப்பன்னிரண்டு வருஷம் அரசியற்றினர்

சிருங்கி

சமீகன் புத்திரன்

சிருங்கிபேரபுரம்

இது ஸ்ரீராமர் சிநேகனாகிய குகனுடைய பட்டணம். அது கங்கைக்கரையிலுள்ளது

சிருஞ்ஜயன்

பர்மியாசுவன் புத்திரருளொருவன். இவன் தவங்கிடந்து நாரதனுக்கிரகத்தாற் பொன்னாகவே மூத்திர புரீஷங்களைக் கழிக்கின்ற ஒரு திவ்விய புத்திரனைப் பெற்றான். அவன் வளர்ந்து வருநாளில் அவன் தேகத்திலே பொன்னிருக்கின்றதெனக் கருதிக் கள்வர் அவனைக் கொன்று உடலைப் பரிசோதித்துப் போயினர். அப்பாலும் நாரதரனுக்கிரகத்தால் உயிர்பிழைத்தான். அவன் சுவர்ணஷ்டீவி யென்னும் பெயரினன். வசுதேவன் தம்பி. காலாநலன்புத்திரன்

சிருஷ்டி

மூலப் பிரகிருதியினின்றும் உலகங்களெல்லாந் தோன்றுதல் கிருஷ்டியெனப்படும். அத்துவைதிகள் பிரபஞ்சமெல்லாம் பிரமதினின்றும் தோன்றும் என்று கூறுவார்கள். துவைதிகள் சித்தும் அசித்துமென இரண்டு பொருளுண்டென்றும் சித்தினது அதிகாரத்தால் சித்தும் அசித்துமாகிய பிரபஞ்சந் தோன்றுமென்றும், விசிஷ்டாத்துவைதிகளும் சுத்தாத்து வைதிகளும் பிரமம், ஆன்மா, மாயை என முப்பொருளுண்டென்றும் மாயையினின்றும் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்குமென்றும் சிருஷ்டியைப் பலதிறப்படக் கூறுவர். இரண்டோரமிசமன்றி மற்றெல்லாம் எல்லா வைதிக சமயிகளுக்கும் பொதுவே. மாயையென்று கூறப்படுவதாகிய மூலப் பிரகிருதியிலே பிரகிருதி தோன்றும். அதனிடத்தே குணதத்துவந் தோன்றும். அக்குணம் சாத்துவிகம், இராஜதம், தாமதமென மூன்றாம். அக்குணதத் தவத்திலே புத்தி தத்துவந் தோன்றும். புத்தியெனினும் மஹத்தத்துவமெனினும் பொருளொன்றே. அப்புத்தி தத்துவம் குணத்திரயத்தை யுடையதாய்த தோலினாலே மூடிக்கொள்ளப்பட்ட வித்துப்போலப் பிரகிருதியினாலே மூடப்பட்டிருக்கும். அதினின்றும் வைகாரிகம் தைஜசம் பூதாதியென்னும் அகங்காரங்கள் மூன்றும் தோன்றும். ஆவ்வகங்காரம் புத்திதத்துவத்தினாலே மூடப்பட்டிருக்கும். அம்மூன்றினுள்ளே பூதாதியாகிய தாமசாகங்காரத்தினின்றும் சத்த தன்மாத்திரை தோன்றும். அத்தன் மாத்திரையினின்றும் ஆகாசந்தோன்றும். அவ்வாகசம தாமசாகங் காரத்தினாலே மூடப்பட்டிருக்கும். அவ்வாகாசம் விகாரப்பட்டுப்பரிசதன் மாத்திரையை யுண்டாக்கும். அதனின்று வாயுத் தோன்றும். அக்காரணத்தால் வாயுவின் குணம் பரிசமாயிற்று. வாயுவும் ஆகாய கவசமுடையது. வாயு விகாரப்பட்டு ரூபதன்மாத்திரையை யுண்டாக்கும். அத்தன்மாத்திரையினின்றும் தேயுத் தோன்றும். அதுபற்றித் தேயுவுக்கு ரூபம் சிறப்பியல்பாயிற்று. தேயுப்பரிசதன் மாத்திரையினாலே மூடப்பட்டிருக்கும். தேயு விகாரப்பட்ட ரச மாத்திரையை யுண்டாக்கும். அதினின்றும் அப்புத் தோன்றும். அப்புவும் ரூபதன் மாத்திரையினாலே பொதியபப்ட்டிருக்கும். அப்பு விகாரப்பட்டுக் கந்ததன் மாத்திரையை யுண்டாக்கும். அதனின்றும் பிருதிவி தோன்றும். மூலப்பிரகிருதியும் மகத்ததும் அரூபம். அகங்காரமும் தம்மாத்திரையும் மகா பூதங்களும் ரூபம். சத்தத்தினின்றும் ரூபம் தோன்றும். சத்தம் சோதியிற்றோன்றும். சோதி மனத்திற்றோன்றும். மனம் புருஷனிற் றோன்றும். சத்தம் சோததியிற்றோன்று மென்பது யோக சூத்திரத்திலே அநாஹதஸ்யசப்தஸ்ய என்னுஞ் சூத்திரத்தினாலறிக. மேலே கூறப்பட்ட பஞ்சபூதங்களும் தம்மிற் கூடிச் சிருஷ்டியை விருத்திபண்ணும் ஆற்றலில்லாதனவாக, ஈசுரசக்தி அவற்றுட் கலந்து நின்றூக்கும். ஊக்கவே அவை பஞ்சீகரணப்பட்டுப் பிரமாண்டத்தைத் தோற்றுவிக்கும் பிரபஞ்சமனைத்தும் சித்தும் சடமும் ஆகிய இருகூற்றில் அடங்கும். சித்தின்றிச் சடம் இயங்காது. ஆகவே தோற்றந் திதி நாசமென அவ்வியக்கமும் மூன்றாய்த் தோன்றும், தோற்றுவிக்குஞ் சக்தி பிரமாவெனப்படும். திதி செய்யுஞ் சக்தியாகிய காலவடிவம் விஷ்ணுவெனப்படும். நாசஞ் செய்யுஞ் சக்தி உருத்திரன் எனப்படும். ஒவ்வோரணுவையும் இம்மூன்றுசக்திகளும் பற்றிநின்று தத்தம் முறையிலே தமது தொழிலைச் செய்யும். இவற்றை ஐரோப்பிய பண்டிதர்கள் ஆற்றலென்பர். ஆரியர் தனித்தனிக் கடவுள் ரென்பர். மேலே தாமசாகங்காரத்தின்றோற்றங் கூறினாம். இனிச் சாத்துவிக அங்காரமாகிய வைகாரிகத்தினின்றும் மனமும் சோத்திரமுதலிய பஞ்சஞானேந்திரியமும் தோன்றும். ராசதாகங்காரமாகிய தைஜசத்தினின்றும் வாக்குமதலிய கன்மேந்திரியம் ஐந்துந் தோன்றும். ஒவ்வொரு பூதமும் இருகூறாகி, ஒருகூற்றை நிறுத்தி மற்றைக் கூற்றை நான்குகூறாக்கி, ஏனைய நான்கு பூதங்கட்கு மொவ்வொன்றாகக் கொடுத்தும் வாங்கியும் தம்பிற் கலப்பதே பஞ்சீகரணமாம். அஃதாவது பிருதிவியிலே பிருதிவிதன் மாத்திரை அரை, அப்புதன் மாத்திரை அரைக்கால், வாயுதன் மாத்திரை அரைக்கால், ஆகாயதன் மாத்திரை அரைக்கால், இப்படியே மற்றவையுமா மெனக் கொள்ளுக. தூலபூதங்களைச் சோதித்தால் இக்கூறுகள் புலனாகும் மூலப் பிரகிருதியிலினிடத்திலேயுள்ள கூறுகளை யெல்லாமடக்கி யிருக்கும்மயின் முட்டை போலப் பிரபஞ்சத்துக்கு வித்தாயுள்ளது இவ்விருபத்துக்கு நான்கிற்கும் மேலாய் வேறாயுள்ள தத்துவம் புருஷ தத்துவம். இத்துணையுஞ் சாங்கியமதக் கொள்கை. சைவ சித்தாந்திகள் தத்துவம் முப்பத்தாறென்பர். அவர்கொள்கைவருமாறு, பூதம் ஐந்து. தன்மாத்திரை ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து. கன்மேந்திரியம் ஐந்து. மனம் அகங்காரம் புத்தி குணம் பிரகிருதி என்னும் ஐந்து, ஆகத் தத்துவம் இருபத்தைந்தும் அசுத்தாத்துவா. இருபத்தாறாந் தத்துவம் அராகம். அதற்குமேலே வித்தியாதத்துவம். அதற்குமேலே கலாதத்துவம். அதற்குமேலே நியதிதத்துவம். அதற்குமேலே காலதத்துவம். ஆராகம் முதற்கால தத்துவ மீறாகிய வைந்தும் மிச்சிராத்துவா. இவை முப்பதும் ஆன்மாக்களுக்குத் தனித்தனிசூக்குமதேகங்களாம். அதற்குமேல் மாயாதத்துவம். அதற்குமேலே சுத்த வித்தியாதத்துவம். அதற்குமேல் ஈசுரதத்துவம். அதற்கு மேலே சதாசிவ தத்துவம். அதற்கு மேலே சத்தி தத்துவம். அதற்கு மேலே சிவ தத்துவம். இவையே முப்பத்தாறுமாம். சிவதத்துவம் நாதம் என்றும் சத்தி தத்துவம் விந்து என்றும் சொல்லப்படும். சொல்லொற்றுமை நோக்கிச் சிவதத்துவமும் பரமசிவமுமொன்றெனக் கொள்ளாதொழிக. இனி அதிகார தேவர்களிருக்கும் முறை கூறுவாம். சுத்த வித்தியா தத்துவத்திலே சத்தகோடி மகா மந்திரங்களும் நந்தி முதலிய கணநாதர் எண்மரும், இந்திரன் முதலிய உலகபாலகரும், ஈசுர தத்துவத்தில் அநந்தர் முதலிய வித்தியேசுரருமிருப்பர். அநந்தர் மாயா தத்துவ புவனங்களை யுண்டாக்குபவர். ஸ்ரீகண்டருத்திரர் குணதத்து வத்திலிருந்து ஒடுக்கக்காலத்தில் அராகத்திலிருப்பர். பிரகிருதி மத்தகத்திலே எட்டுருத்திரர் இருப்பர். பிரமவிஷ்ணுக்கள் ஸ்ரீகண்டருத்திரரோடு குண தத்துவத்திலிருப்பர். பிரணவம் ஈசுர தத்துவத்திலிருக்கும். ருத்திரகணங்களுக்குச் சங்கையில்லை. ஆகாயம் துவாரமாகி ஏனைப்பூதங்களுக் கிடங்கொடுக்கு மியல்பினது. வாயு சலித்து மற்றைப் பூதங்களைத் திரட்டுமியல்பினது. தேயுச் சுட்டொன்றுவிக்கும். அப்புக் குளிர்ந்து பதஞ்செய்யுமியல்பினது. பிருதிவி கடினமாய் மற்றெவற்றையுந் தரிக்குமியல்பினது. ஆகாயம் வட்டவடிவினது. வாயு அறுகோணம். தேயு முக்கோணம். அப்புப்பிறை. பிருதிவி சதுரம். ஹ ய ர வ ல ஆகாயாதி ஐந்திற்கும் முறையே அடிரங்களாம். மாயையின் வேறாகியும் அதனுள்ளே பந்திக்கப்பட்டு மூழ்கிக்கிடந்த ஆன்மாவுக்குக் கலாதத்துவம் மின்னற்கதிர்போல அந்தகாரத்தைச் சிறிது விலக்கித் தெருட்ட அக்கலையினின்றும் அறிவுக்கு உபகரணமாயுள்ள வித்தியாதத்துவமும் அதினின்றும் போகத்துக்குக் கருவியாகிய அராகமும் தோன்றும். அந்த அவதாரத்திலே ஆன்மாப் போகாதிகாரத்தைப் பொருந்தும். அவ்வதிகாரமே புருஷன்என மேலே கூறப்பட்டது. அஃதுள்ளவாறு தத்துவ மாகாமையின் தத்துவங்களோடு சேர்த் தெண்ணப்படாதாயிற்று. ஆன்மாவுக்குப் போக்கியமாயுள்ள இருபத்தைந்துமாம். சித்தஞ்சேர்த்தெண்ணப்படாமைக்கு நியாயமும் இது போன்றதேயாம். சைவசித்தாந்திகள் சுத்த சிவமாகிய பிரமமும் ஆன்மாவும் மாயையும் நித்தியப் பொருள்களென்பர்கள். சுத்த சிவத்துக்குச் சிவதத்துவமும், சுத்தியும், சதாசிவமும் திருமேனியாகும். சிவதத்துவத்திலே சுத்தசிவகலை ஸ்தூலமாகச் சத்திகலை சூக்குமமாய் நிற்கும், சத்திதத்துவத்திலே சிவகலை பாதியும் சத்திகலை பாதியுமாகும். ஆதிலே சதாசிவம் சூக்குமமாகும். சுதாசிவத்திலே சிவகலை காலும் சத்திகலை முக்காலுமாக விளங்கும். சிவதத்துவத்திலே ஆன்மாவும் சத்திதத்துவத்திலே மாயையும் அந்தர்க்கதமாய் நிற்கும். ஈசுர தத்துவத்திலே சிவகலை சைதன்னிய ரூபமாகச் சத்திகலை மேம்பட்டுநிற்கும். சுத்த வித்தியா தத்துவத்திலே சைதன்னியமும், மாயையும் சமப்பட்டுநிற்கச் சத்தி யோங்கிநிற்கும். அச்சுத்த வித்தையிலே அதோபாகத்திலுள்ள மாயையைச் சத்திநோக்கிநிற்க, மாயை வேறாகப் பிரியும். சிவதத்துவமுதலிய ஐந்தும் பிரேரகமாக மாயைமுதலிய ஏழும் ஆன்மாவுக்குப் போககாண்டமாம். அவற்றின் கீழுள்ள இருபத்துநான்கும் போக்கியமாம். இவற்றின் உள்ளுறையெல்லம் சிவாத்துவ விருத்தியிற் காண்க. இப்போதுள்ள சிருஷ்டி தொடங்கி இருபத்தேழு சதுர்யுகங்கடந்து இருபத்தெட்டாஞ் சதுர்யுகம் நடக்கின்றது. இச்சிருஷ்டியிலே ஆறு மனுக்களிறந்து ஏழாம்மனுவாகிய வைவசுவத மனுவின் காலம் நடக்கின்றது. மனுவந்தரங்கள் தோறும் சோபானக்கிரமமாக மனுஷரது வடிவமும் குணமும் வேறுபட்டுயர்ந்துவரும். முன்னிருந்த மனுவினது காலத்து மாந்தர் நம்மினும் வடிவு குணங்களாற் குறைந்தவராயிருப்பர். இனிவரும் சாவர்ணி மனுவினது காலத்துமாந்தர் நம்மிலுஞ் சிறந்தோராவர். முனுவென்றது மனுஷகணத்தை. அவ்வக்கணத்துக்கு ஆதிதலைவனெனினும் பொருந்தும். ஆன்மாக்கள் ஆணவத்தால் உடலெடுத்துக் கன்மத்துக்கீடாக மேல்கீழ்ப்பிறவிகளிற் செல்லும். சிருஷ்டியும் ஆன்மாக்களின் பொருட்டாக நிகழ்வது வாயுவுலகம் சனி, தேயுவுலகம் சூரியன், அப்புவுலகம் சுக்கிரன். பிருதிவியுலகம்பூமி. ஓவ்வொரு பூதத்திலும் மற்றைய நான்கு பூதங்களுங் கூடியிருக்கும். தனிப்பூதங்கள் தன் மாத்திரைகள். தன்மாத்திரைகளது சையோகத்தாலே பூதங்களும் உலகங்களுந் தோன்றும். உலகம் தோன்றிநின்று ஒடுங்குமியல்பினதாதலின் நித்தியாமாயுள்ளது. ஊன்றி நோக்குமிடத்துக்கணந்தோறும் சிருஷ்டி திதி சங்காரமாகிய முததொழிலும் நிகழ்வது பிரத்தியடிமாம். நிலைதிரிதலேயன்றி அழிவென்பதொன்றில்லை

சிருஷ்டியாதிபத்தியம்

பூமிக்குப் பிருதுசக்கிரவர்த்தியும், ஒஷதிகள், யாகம், விரதம், நடித்திரங்கள் முதலியவைகளுக்குச் சந்திரனும், ஜலத்துக்கு வருணனும், தனத்துக்கும் யடிர்களுக்கு குபேரனும், துவாதசாதித்தியர்களுக்கு விஷ்ணுவும், வசுக்களுக்கு அக்கினியும், பிரஜாபதிகளுக்குத் தடினும், தேவர்களுக்கு இந்திரனும், தைத்தியர் தானவர்களுக்குப் பிரஹலாதனும், பிதிர்களுக்கு யமனும், பசுபூதாதிகளுக்குச் சிவனும், மலைகளுக்கு இமயமும், நதிகளுக்குச் சமுத்திரமும், கந்தருவ வித்தியாதரகிந்நர கிம்புருஷர்களுக்குச் சித்திர ரதனும், சர்பப்ங்களுக்கு வாசுகியும், திக்கஜங்களுக்கு ஐராவதமும், பக்ஷிகளுக்குக் கருடனும், குதிரைகளுக்கு உச்சைச்சிரவமும், மிருகங்களுக்குச் சிங்கமும், சிருஷ்டிகாலத்திலாதிபத்தியம் பெற்றார்கள்

சிறப்புலிநாயனார்

சிவனடியார்களைச் சிவனெனக்கொண்டு அவர்களை அன்போடு திருவமுது செய்வித்து அவர்களுக்கு வேண்டுந்திரவியங் கொடுத்தது வழிபட்டு வந்த திருவாக்கூர்ப் பிராமணராகிய பக்தர்

சிறுத்ததொண்டநாயனார், பரஞ்சோதியார்

சிவபிரான் வைரவவேடங்கொண்டு சென்று நம்மை அமுதுசெய்விப்பீரோவென்று கேட்க, செய்விப்பேன் என்றுகூறி வைரவர் கேட்டபடி தமது ஒரே பிள்ளையாகிய சீராளனை வெட்டிக் கறியாகப் பாகம்பண்ணி விருந்திடத் துணிந்தபோது வைரவர் உமது புத்திரனை அழையுமென, இப்போதுதவான் எனச்சொல்லியும் கேளா வைரவரைத்த திருப்திசெய்யும்படி வாளாவழைக்க, அப்புத்திரன் உண்மையாகவே வரப்பெற்ற பக்தர். இவர் திருச்செங்காட்டங் குடியில் விளங்கிய பிராமணர். மனைவிபெயர் திருவெண்காட்டு நங்கை. சிறுத்தொண்டர் திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் காலத்தவரென்பது பெரியபுராணத் தாற்றுணியப்படுதலின் நாலாயிரம் வருஷங்களுக்கு முற்பட்டவர்

சிறுபாணாற்றுப்படை

இதுகடைச்சங்க நூல்களுளொன்று. பத்துப்பாட்டுள் மூன்றாவது பிரபந்தமாகிய இஃது ஏறுமாநாட்டு நல்லியக்கோடன் மீது கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய நல்லூர் நத்தத்தனார் பாடியது. தன் யாழ்வன்மை காட்டிப் பரிசு பெறவிரும்பிய பாணனை நல்லியக்கோடன் மாட்டுச் செலவிடுத்தமையின் ஆற்றுப்படையாறிற்று

சிறுபுலியூர்

காவிரியின் தென்கரையிலுள்ள விஷ்ணுஸ்தலம்

சிறுமலை

பாண்டிநாட்டுள்ளதோர்மலை

சிறுமேதாவியர்

இவர் கடைச்சங்கப்புலவர்களு ளொருவர்

சிற்றம்பலம்

சிதம்பரம் காண்க

சிலம்பாறு

அழகர் மலைக்கணுள்ள ஓராறு. நூபுரகங்கையெனவும் பெயர்பெறும்

சிலாதன்

நந்தீசுவரன் தந்தை

சிவகங்கை

கைலாசத்தின் கண்ணதாகிய ஒரு நதி. சிதம்பரத்திலுள்ள ஒரு தீர்த்தம். இத்தீர்த்தத்திலே இரணியவன்மன் மூழ்கித் தனதுடற்குற்றம் நீங்கப்பெற்று அரசனாயினான்

சிவகலை

பட்டணத்தடிகள் மனைவி

சிவகாமி

சிதம்பரத்தி லெழுந்தருளியிருக்கும் சிவசத்திபெயர்

சிவகாமித்தாயம்மை

திருப்புத்துரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர்

சிவகோசரியார்

கண்ணப்பர் காலத்திலே திருக்காளத்தியிலே விளங்கிய அருச்சகர்

சிவசன்மா

வடமதுரையிலிருந்த வோரந்தணன். இவனை விஷ்ணுவினது கணநாதர் உபசரித்தழைத்துப் போய்ச் சந்திராதியுலகங்களை யெல்லாங் காட்டினார்கள்

சிவஞானசித்தி

அருணந்தி சிவாசாரியர் செய்த பதிசாஸ்திரம். அது சைவ சித்தாந் தசாஸ்திரங்கள் பதினான்கனுளொன்று. அது சிவஞான போதத்திற்கு வழிநூல். அது பரபடிம் சுபடிம் என் இரு படிங்களையுடையது. பதி பசு பாச வியல்புகளை ஐயந்திரிபறத் தடைவிடைகளால் விளக்குவது. இது பௌத்தம் லோகாயதமுதலிய சமயங்களைக்கண்டித்துச் சுவபக்கம்நாட்டுவது. ஆன்மவிசாரணை செய்யப் புகுவார்க்கு இது போலச் சிறந்தநூல் மற்றில்லை. அதற்கு மறைஞானசம்பந்தர் சிவாக்கிரயோகிகள் முதலியோர் உரை செய்தார்கள்

சிவஞானபோதம்

இது வடமொழியிலே நந்திபகவானாலும், தமிழிலே மெய்கண்ட தேவராலுஞ் செய்யப்பட்டது. தமிழ்ச் சைவசித்தாந்தசாத்திரம் பதினான்கிற்கும் முதனூலாகவுள்ளது. பண்னிரண்டு சூத்திரங்களையுடையது. இதற்குச் சிவஞானமுனிவர் பாஷியமுஞ் சிற்றுரையுஞ் செய்தனர். சிவஞானமுனிவர் வடமொழியிலே சிவாக்கிரயோகிகள் செய்த பாஷியத்தையே மொழிபெயர்த்தனர். வேதம்பசுவதன்பான் மெய்யாகமநால்வ ரோதுந்தமிழ் வேதமுள்ளுநெய் ~போதமிகு ~ நெய்யினுறு சுவையா நீள்வெண்ணெய் மெய்கண்டான் ~செய்த தமிழ்நூலின் நிறம் என்னும் ஆன்றோர்வாக்கே சிவஞானபோதத்தின் மாட்சிமையைத் தெரிவிக்கும்

சிவஞானமுனிவர்

நூற்றுமுப்பது வருஷங்களுக்கு முன்னர்த்திருவாவடுதுறை மடத்திலிருந்த ஒரு தம்பிரான். இவர் வடமொழி தென்மொழியிரண்டிலும் வல்லவர். சிவஞானபோதத்திற்குத் திராவிடமகாபாஷியமும் சிவஞானசித்தியார்க்குப் பொழிப்புரையும், சிவஞானபோதத்திற்குச் சிற்றுரையும், தொல்காப்பியமுதற் சூத்திரவிருத்தியும் செய்தவர். சம்ஸ்கிருதநூல்களைத் தமிழிலே வசனரூபமாகவும், செய்யுள் ரூபமாகவும், மொழிபெயர்ப்பதில் இவர்க்கிணையாயினார் பிறரில்லை. அன்னம்பட்டியம் சிவதத்துவ விவேகமுதலியன இவர் செய்த மொழி பெயர்ப்புக்கள், தமிழ் இலக்கண வுணர்ச்சியும் தர்க்க சாஸ்திரவாராய்ச்சியும் நிரம்பியவராதலால் சிரோரத்தினங்களாக விளங்குகின்றன. பிறர் நூல்களிலே குற்றங்தெரித்தலில் நக்கீரரும் அவர்க்கிணையாகார். பாஷியமொன்றேனு மில்லாத பாஷையென்று வடமொழியுடையோர் தமிழை இகழ்ந்துவந்த குற்றத்தை நீக்கினது அவர்செய்த திராவிடபாஷியமே. அதற்குமுன்னே நாலாயிரப்பிரபந்தபாஷியம் உண்டென்றாலும் அஃது இத்திராவிட பாஷியம் போலச் சிறந்ததன்று

சிவதத்தம்

விஷ்ணுவினது சக்கரம்

சிவதருமம்

உபபுராணங்களுள் ஒன்று

சிவதருமோத்தரம்

பரமதருமாதயியல், சிவஞானதானவியல், ஐவகையாகமவியல், பல விசிட்டகாரணவியல், சிவதருமவியல், பாவவியல், சுவர்க்க நரகவியல், சனனமரணவியல், சுவர்க்கநரகசேடவியல், ஞான யோகவியலெனப் பன்னிரண்டியல்களையுடைய இந்நூல் மறைஞானசம்பந்தர் செய்தது

சிவநேசர்

மயிலாப்பூரிலிருந்த இவர் பாம்புகடித்திறந்த தமது புத்திரியினது எலும்பை ஒரு குடத்திலிட்டு வைத்துத் திருஞானசம்பந்த ரங்கெழுந்தருளிய போது அவர் முன்வைத்து அவரருளால் முன்போலப் பெண்ணுருவாக எழும்பப்பெற்ற வொருபக்தர்

சிவன்

திரிமூர்த்திகளு ளொருவரென்று விஷ்ணு புராணங்களும் அம்மூவரையும் அதிஷ்டித்து நிற்கும் பரப்பிரமமென்று சைவ புராணங்களுங் கூறும். சிவன் என்னுஞ்சொல்லுக்கு மங்களரூபி என்பது பொருள். சிவனை முழுமுதற்கடவுளாகக் கொண்டு வழிபடுவோர் சைவரெனப்படுவர். அவர்கள் சமயம் சைவசமய மெனப்படும். பதினெண் புராணங்களுள்ளே சிவபரமாகவுள்ள புராணங்கள் பத்து. சிவனை வழிபடுவோர்க்காதார நூல்கள் ஆகமங்களாம். அவை இருபத்தெட்டு. சிவன் ரூபமும் அரூபமும் ரூபாரூபமும் ஆகிய மூன்று திருமேனிகளுடையர். ஆரூபத்திருமேனியோடு கூடியவிடத்துச் சிவனென்றும், ரூபாரூபத் திருமேனியிற் சதாசிவமூர்த்தியென்றும், ரூபத் திருமேனியில் மகேசுவரரென்றும் சொல்லப்படும். பிரமாவைச் சிருஷ்டி கர்ததாவென்றும், விஷ்ணுவைக் காவற்காரகர்த்தா வென்றும், சிவனைச்சங்காரகர்த்தா வென்றும் வைதிகர்யாவருங் கூறுவர். சங்கார கிருத்தியம் சிருஷ்டி திதிகளுக்கு ஏதுவாகச் செய்யப்படுவதல்லது நாஸ்தியாக்கும் பொருட்டன்று. ஆதலால் சங்காரகிருத்தியத்தில் மற்றையிரு கிருத்தியங்களு மடங்கும். அடங்கவே சங்காரகர்த்தாவே மற்றையிருவரையு மிதிஷ்டித்து நின்று நடாத்து முழுமுதற் கடவுளென்பர்கள். விருஷபத்து வஜன், உமாபதி, சர்மவாசன், நந்திவாகனன், சூலி, கபாலமாலாதரன், சர்ப்ப குண்டலன், காலகாலன், நீலகண்டன், கங்காதரன், திரிநேத்திரன், சந்திரசேகரன், திரிபுராந்தகன் முதலிய அநந்தநாமங்கள் பெறுவர். ஊலோககண்டகராகிய திரிபுராசுரரை சங்காரஞ் செய்தருளியமையின், திரிபுராந்தகன் எனப்படுவர். திரிபுராந்தகனஞ் செய்யப் புறப்பட்ட போது, பூமியை இரதமாகவும், சூரியசந்திரர்களை இரதசக்கரமாகவும், வேதங்களைக் குதிரைகளாகவும், பிரமாவைச் சாரதியாகவும், மேருவை வில்லாகவும், சாகரத்தை அம்புக்கூடாகவும், விஷ்ணுவைப் பாணமாகவும் கொண்டு சென்றார். இவ் விஷயத்திலே அத்தியற்புத தத்துவார்த்தமடங்கியிருக்கின்றது. அதனை ஈண்டுவிரிப்பிற் பெருகும். பரம விஷ்ணுக்களது கபாலத்தை மகா கற்பாந்தரங்களிலே தரித்துத் தனித்து நின்று ஆனந்த தாண்டவஞ் செய்தலின் கபால மாலாதரனென்னும் நாமம்பெறுவர். சிவன் மூன்று கண்களுடையர். ஓன்று நெற்றியிலுள்ளது. அதனாற் கண்ணுதலெனப்படுவர். இக்கண்ணினாலேயே காமதகனஞ் சேர்க்கும் பொருட்டுப் பெற்ற கங்கையினது பிரவாக வேகத்தைச் சடைக்கொழுந்த தொன்றினாலடக்கிய காரணம்பற்றிக் கங்காதரன் கங்கை வேணியன் முதலிய நாமங்களைப்பெறுவர். அமிர்தமதன காலத்து எழுந்த விஷத்தைக் கண்டத்தடக்கித் தேவரைக் காத்தருளினமையின் நீலகண்டன் காளகண்டன் முதலிய நாமங்களைப் பெறுவர். அக்காலத்திற்றானே யெழுந்த சந்திரனைச் சடையிற்றரித்தமையின் சந்திரசேகரன் சந்திரமெனலி முதலிய நாமம் பெறுவர். மார்க்கண்டனைக் காக்குமாறு காலனை உதைத்தருளினமையாலும் காலவரையறைக்ககப்படாத அநாதி நித்தியாராதலினாலும் காலகாலன் காலாந்தகன் முதலியநாமங்கள் பெறுவர். இச்சிவபிரானை மகாலிங்கம் அர்த்தநாரீஸ்வரர் நடேசர் முதலிய இருபத்தைந்து மூர்த்தத்திடத்தே தியானித்து வழிபடுவர். சிவனுக்குச் சத்தி உமாதேவியாரெனப்படுவர். இருபத்தைந்து மூர்த்திகளாவார். லிங்கமூர்த்தி, சுகாசனமூர்த்தி, உமாசகமூர்த்தி, கல்யாணசுந்தரமூர்த்தி, சோமஸ்கந்தமூர்த்தி, சக்கரப்பிரதானமூர்த்தி, திரிமூர்த்தி, அர்தாங்க விஷ்ணுமூர்த்தி, தக்ஷிணமூர்த்தி, பிக்ஷாடனமூர்த்தி, கங்காளமூர்த்தி, காமசமஹாரமூர்த்தி, காலாரி, ஜலந்தாரி, திரிபுரதம்ஹாரமூர்த்தி, சரபமூர்த்தி, நீலகண்டமூர்த்தி, திரிபாதமூர்த்தி, எகபாதமூர்த்தி, வைரவமூர்த்தி, விருஷபாரூடமூர்த்தி, நடராஜமூர்த்தி, கங்காதரமூர்த்தி. அக்குரூரன்தம்பி

சிவபுரம்,சிவபுரி, சிவராஜதானி

காசி

சிவபுராணம்

பதினெண்புராணத்தொன்று

சிவப்பிரகாசசுவாமிகள்

பிரபுவிங்கலீலை, திருக்கூவப்புராணம், சித்தாந்தசிந்தாமணி, வேதாந்த சூடாமணி, சிவப்பிரகாசவியாசம், சிவநாமமகிமை, தர்க்கபாஷை, சோணசைல மாலை,நன்னெறி, நால்வர் நாண்மணிமாலை, வேங்கையுலா, வேங்கைக்கோவை முதலிய நூல்கள் செய்தவர். காஞ்சீபுரத்திலே பிறந்து சிந்துபூந்துறையிலே வெள்ளியம் பலத்தம்பிரானிடம் பாடங்கேட்டவர். இலக்கண இலக்கியங்களில் மகா சதுரர். குற்பனைக்களஞ்சியம். சாதியில் வீரசைவர். இவர் இற்றைக்கு இருநூற்றிருபது வருஷங்களுக்கு முன்னர் வியங்கியவர்

சிவமலை

கொங்கு நாட்டின் கணுள்ள ஒரு சுப்பிரமணிய ஸ்தலம்

சிவயோகநாயகி

திருக்கானூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

சிவராத்திரி

மாசிமாசத்திலே அபரபடி சதுர்த்தசியோடு கூடிய அர்த்தராத்திரிகாலமாகிய புண்ணிய முகூர்த்தம். அது லிங்கோற்பவருக்குப்பிரிய முகூர்த்தம்

சிவராத்திரிவிரதம்

மாசிமாதத்துக் கிருஷ்ணபடி சதுர்த்தசியிலே சிவபெருமானைக் குறித்து அநுஷ்டிக்கும் விரதம். அத்தினத்திலே உபவாசஞ் செய்து நான்குயாமமும் நித்திரையின்றிச் சிவபூசைசெய்தல் வேண்டும். சிவபூசையில்லாதவர் நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாடிர செபமும் சிவபுராண சிரவணஞ்செய்து நான்கு யாமமும் சிவாலயதரிசனஞ் செய்தல்வேண்டும். இது சைவ சமயிகள் யாவராலும் அவசியம் அநுஷ்டிக்கத்தக்கது

சிவலிங்கம்

லிங்கம் காண்க

சிவலோகநாயகர்

திருப்புன்கூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்

சிவாக்கிரயோகி

இவர் தஞ்சாவூரிலே சரபோஜி மகராஜாவுடைய சரபோஜி மகராஜாவுடைய சபையிலே மணவாளமாமுனி யென்னும் வைஷ்ணவ சிரேஷ்டரோடு பதினேழுநாள் வரையில் அவர் கடாவிய வினாக்களுக்கெல்லாம் ஏற்றவாறு விடையளித்துச் சிவபரத்துவம் நாட்டி வரும்போது பதினேழாநாளிரவு மணவாளமா முனிவர் படித்தார் சிவாக்கிரயோகி எழுந்தருளியிருந்த மடத்திற்றீக்கொளுவினார்கள். அம்மடம் முழுவதுஞ் சாமபராகியும் சிவாக்கிரயோகி சிறிதும் வருந்தாது நிஷ்டையிலிருந்தனர். அதனைக் கேள்வியுற்ற சரபோஜி அம்மடத்திற்குத் தீயிட்டவர்களையெல்லாம் ஒரறையிற் சேர்த்து அக்கினிக்கிரையாக்கினான். சிவாக்கிர யோகிகள் செய்தநூல்கள் சிவஞானபோத பாஷியம், சித்தாந்ததீபிகை, தத்துவதரிசனம், பாஞ்சராத்திச பேடிகை என்பவைகளாம்

சிவானந்தலகரி

சங்கராசாரிய சுவாமிகள் செய்தவொருநூல்

சிவானந்தவல்லியம்மை

திருக்கோவலூர் வீரட்டத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

சிவானீ

பார்வதி, சிவசக்தி

சிவாலயமுனிவர்

சபாநாதர் அருளால் அகஸ்தியரை அடைந்து அகஸ்தியத்திரட்டு என்னும் தேவாரப்பதிகமிருபத்தைந்து பெற்று அவற்றைக் கிரமமாகப் பாராயணம்பண்ணித் திருவருள் பெற்றவர்

சிவேதன்

சனகவிஜயற்குநண்பன்

சிவை

அங்கிரசன்பாரி. உமாதேவியார்

சிஷ்டி

துருவன் புத்திரன். பவியன் இவன் சகோதரன். சுகச்சாயை இவன் மனைவி

சீகாளத்தி

இது தொண்டை நாட்டிலுள்ள சிவஸ்தலம். இது திருக்காளத்தியெனவும்படும். சிலந்தியும் பாம்பும் யானையும் பூசித்து முத்திபெற்ற தலமாதலின் இது முத்திபெற்ற தலமாதலின் இப்பெயர் பெற்றது. கண்ணப்பரும் நக்கீரரும் முத்திபெற்றதும் இத்தலத்திலேயே. இது வேங்கடத்துக்குக் கிழக்கேயுள்ளது

சீதை

ஜனகன் யாகஞ்செய்து பெற்ற புத்திரி. ராமன் பாரி. வேதவதி காண்க

சீத்தலைச்சாத்தனார்

இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர். இவரே மணிமேகலையென்னும் நூல் செய்தவர். இவர் பிறர் நூல்களிலே குற்றங்காணுந் தோறும் தமது தலையிலே குட்டிக்கொள்ளுதலினாலே அதுகாரணமாக வுண்டாகிய புண் ஆறப்பெறாத தலையையுடையவர். அதுபற்றியே சீத்தலைச்சாத்தனார் என்னும் பெயர்கொண்டார். கண்ணகியால் மதுரையெரிந்து நிலைகெட்ட போது இவர் பொருளீட்டும் பொருட்டுச் சேர ராசாவாகிய செங்குட்டுவன் பாற்சென்று மதுரையினி கழந்தது கூற, செங்குட்டுவன் தம்பி இளங்கோவடிகள் அதனைச் சிலப்பதிகார மென்னும் பெயராற் பாடினார். சாத்தனார் காண்க

சீரத்துவஜன்

ஜனகன்

சீராளன்

சிறுத்தொண்டநாயனார் மகன்

சுகச்சாயை

சிஷ்டி மனைவி

சுகந்தநாயகி

திருவேட்டககுடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர்

சுகன்

இவ்விருஷி வியாசருக்குக் கிருதாசியென்னும் அப்சர ஸ்திரியிடத்துப் பிறந்த புத்திரனார். கிளிரூபத்தோடிருந்த கிருதாகியிடத்தே பிறந்தமையின் இவர் சுகரெனப்பட்டார். இவர் பிறந்தவுடனே தத்தவஞானியாயினார். இவர் அரம்பையென்னும் தெய்வப்பெண் தன்னோடு சேருமாறு தன்னாலியன்றவாறெல்லாம் காதல்காட்டியும் சித்தஞ் சலியாத சுத்தவைராக்கியமுடையவர். முனிவருள் இவர் ஒருவரே பெண்போகத்திலே மயங்காதவர். ராவணன் சாரணர்களுளொருவன். சுகன்னியை வைவசுதமனு புத்திரனாகிய சரியாதிபுத்திரி. சியவனமகாவிருஷிபாரி. பிரமதிக்குத் தாய். இவள் சரியாதியோடு தபோவனத்திலிருக்கும் மலமூத்திர பந்தனரோகத்தால் வருந்த அவளைச் சரியாதிகொண்டு போய் ஒரு புற்றினிடமாகவிருந்துதவஞ்செய்த சியவனனைக்கண்டு வணங்கிக்கூறி அவளை அவனிடத்தொப்பித்து அவனையுமுடன் கொண்டு தன்நகரஞ்சார்ந்து அங்கே அசுவினிதேவரால் அவளுடைய ரோகத்தை நீக்குவித்தான்

சுகர்மன்

ஜைமினி முனிவர் புத்திரனாகியசுமந்தன் புத்திரன்

சுகவாஞ்சிநாயகர்

திருவாஞ்சியத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

சுகிருதி

பிருதுபுத்திரன்

சுகுணகுணபாண்டியன்

இராஜாதிராஜ பாண்டியனுக்குப் பின் அரசு செய்தவன். இவன் காலத்திலேயே கரிக்கரீஇக்கு உபதேசஞ்செய்த திருவிளையாடல் நடந்தது

சுகுணசேகரபாண்டியன்

சுகுண பாண்டியனுக்குப்பின் அரசு செய்தவன்

சுகுணன்

பாண்டு புத்திரனாகிய வீமசேனனுக்கு ஜலதரையென்பவளிடத்துப் பிறந்தபுத்திரன்

சுகுணபாண்டியன்

இராஜராஜ பாண்டியனுக்குப்பின் அரசு செய்தவன்

சுகுமாரன்

சுவிபுபுத்திரன். திருஷ்டகேதன் தந்தை

சுகேசன்

வித்தியுற்கேசன்புத்திரன். மாலியவந்தன முதலியோர் தந்தை. இவன் பாரி தேவவதி

சுகேசினி

சகரன் முதன்மனைவி அசமஞ்சசன்தாய்

சுகேதனன்

தாடகை தந்தையாகிய ஓரியடின், நவராத்திரிகாண்க

சுகேதன்

மிதிலன்புத்திரனுக்குப் பௌத்திரன். க்ஷேமன் புத்திரன்

சுக்கிரன்

பிரமமானச புத்திரருளொருவனாகிய பிருகுவினது பௌத்திரன். இவன் அசுரகுரு. இவன்மகள் தெய்வயானை. இவன்தாய் தேவலோகத்திலே தவஞ்செய்திருந்தபோது விஷ்ணுவாற் கொல்லப்பட்டவள். இவன் அசுரமந்திரியெனவும்படுவன். இவன் மகாபலி சக்கரவர்த்தியிடத்திலே மந்திரியாக விருந்தகாலத்திலே விஷ்ணு வாமனாவதாரமெடுத்து மகாபலியிடஞ்சென்று மூன்றடி மண்வேண்டியபோது சுக்கிரன் இது விஷ்ணுவினது வஞ்சச்சூது நம்பாமொழி யென்று மகாபலியைத் தடுத்தகாரணத்தால் விஷ்ணு அச்சுக்கிரன் கண்களிலொன்றைக் கெடுத்தார். சுக்கிரன் இறந்தவுயிரை யெழுப்பும் வன்மையுடையவன். இவனிருக்கும் மண்டலம் அப்புமண்டலம். நவக்கிரகங்களுளொன்று. சுக்கிரன் சுபஸ்தானங்களில் நிற்கப்பிறப்போர் திரிகாலவுணர்ச்சியும் ராஜயோகங்களு முடையராய் விளங்குவர். சுக்கிரன் மழைக்கதிபதியாதலின் மழைக்கோளெனப்படும்

சுக்கிரவிரதம்

இது உமாதேவியாரைக்குறித்து அநுஷ்டிக்கப்படுவதும், சுப்பிரமணியரைக் குறித்து அநுஷ்டிக்கப் படுவதும் என் மூன்றாம். தேவியைக் குறித்தது சித்திரை மாசத்துச் சுக்கிலபடித்து முதற்சுக்கிரவாரந் தொடங்கியும், விநாயகரைக் குறித்தது வைகாசிமாசத்துச் சுக்கிலபடித்து முதற்சுக்கிரவாரந் தொடங்கியும், மற்றது ஐப்பசி மாசத்து முதற்சுக்கிர வாரந் தொடங்கியு மனுஷ்டிக்கத்தக்கன

சுக்கிரிநகன்

பார்ஹச்திரத வமிசத்து ரிபுஞ்சயன் மந்திரி

சுக்கிரீவன்

வாலி தம்பி. இருடிவிரஜன் புத்திரன். இவன் மனைவி உருமை. இவன், வாலி தன் மனைவியையும் அரசுரிமையையுங் கவர்ந்து கொண்டு தனக்குச் செய்த துன்பங்களையெல்லாம் ராமனிடத்திலே முறையிட்டு அத் துன்பத்தை நீக்கித்தந்தால் அவ்வுபகாரத்துக் கீடாகத் தானும் தன் சேனையும் சீதையைச் சிறை மீட்டற்கு வேண்டிய துணைச்செய்வதாகக் கூறி ராமரால் வாலியைக் கொல்வித்துடன் சென்று இலங்கையிற் சீதையைச் சிறைமீட்டவன். விஷ்ணு ராவண சங்காரத்தின் பொருட்டுத் தமதுலகத்தைவிட்டுப் புறப்படும் போது அத்வேதருட்சிலரைத் தம்மோடு சென்று பூமியிற் பிறக்குமாறு பணித்தருளினர். அவருட் சூரியனது அமிசமாகப் பிறந்தவன், இச்சுக்கிரீவன். அவனைத்த துணையாகக் கொள்ளும்படி ராமருக்குச் சூழ்ச்சி கூறியவன் கவர்ந்தன். சுக்கிரீவனுடைய வாசஸ்தானம் பம்பைக் கரையிலுள்ளது. ராமரது வில்லாண்மையைப் பரீக்ஷிக்கும் பொருட்டுச் சர்ப்பகோணமாக மாறிமாறிநின்ற ஏழுமராமரங்கயையு மோரம்பாலே துளைசெய்யும்படிகேட்டு அவர் அது செய்தபின்னர் அவர்மீது நம்பிக்கை வைத்தவன். ராமரால் அரசுபெற்ற சுக்கிரீவன் குறித்த அவதியிலே சேனையோடு புறப்படாது ராஜபோகத்திலே மயங்கிக் கிடந்து, ராமர் அச்சுறுத்தித் தூதுபோக்கியபின்னர்ப் படை திரட்டிக்கொண்டு போய் வணங்கித் தான்செய்த குறையைப் பொறுத்தருளுமாறு செய்தவிண்ணப்பம் மிகவியக்கற்பாலது. சுக்கிரீவனும் ராவணனும் செய்த கொடும்போரிலே சுக்கிரீவன் ஒரு மலையைப் பெயர்த்து ராவணன் மார்பிலே மோத, அவன் வெகுண்டு ஒரு கொடியவேலை விட்டெறிந்தான். அவ்வேலை அனுமான்பற்றி முழந்தாளிற் பூட்டித் தகர்த்தான். அதுகண்டு ராவணன் ஒரு மலையையிடந்து சுக்கிரீவன் சிரசில் மோத அவன் வீழ்ந்து மூர்ச்சையாயினான். இராவணன் உடனே யவனைத் தூக்கியிடுக்கிக்கொண்டு செல்லச் பல்லாலும் நகங்களாலும் அவனுடைய விலாவைக் கடித்துக் கிழிக்க, அவன் அத்துன்பத்தாற் கையை நெகிழ்ந்தான். உடனே சுக்கிரீவன் குதித்தந்தரத்திலெழுந்து ராமர்பக்கஞ்சார்ந்தான. இவ்வாறே சுக்கிரீவன், ராமர் ராவணனைக் கொன்று சீதையைச் சிறைமிட்குங்காறும் தன் வாக்குத் தவறாமல் மிக்கபக்தியோடு போர்புரிந்து அவருக்குப் பெருந்துணைபுரிந்து அவருக்குப் பெருந்துணைபுரிந்தான்

சுக்திமதி

கடகபுரிக்குச் சமீபதிலேயுள்ள ஒரு புண்ணிய நதி

சுசர்மா, சுசர்மன்

திரிகர்த்ததேசத்தரசன் சுதன்வன் புத்திரன். தன்பாரியைப் பலாகன் என்னுமிராக்ஷசன் அபகரித்துப் போனபோது உத்தானபாதன் மனனாகிய உத்தமன் கண்டு அவளை மீட்டுக் கொடுக்கப் பெற்ற ஓரந்தணன். கர்ணன் புத்திரன். நகுலனாற் கொல்லப்பட்டவன். மகததேசத்தரசரான காண்வாயருள்ளே கடையரசன். ஆந்தரவிருத்தியனென்னுஞ் சூத்திரனாற் கொல்லப்பட்டவன்

சுசாந்தி

அஜமீடன் இரண்டாம் புத்திரனாகிய நீலன் பௌத்திரன்

சுசி

மிதிலைவமிசத்து ஒரரசன். ய. அந்தகன் புத்திரன். சுத்தன் புத்திரன்

சுசுருதன்

மிதிலாதிபதிகளுள் ஒருவன். ஜயன் தந்தை. காசிராஜன் புத்திரருளொருவர். இவர் சுசுருதம் என்னும் பெயராற் சிறந்த வைத்தியநூலென்று சம்ஸ்கிருத்திலே செய்தவர். அந்நூல் ஆவசியகம் தமிழிலே மொழிபெயர்க்கப்படுதல் வேண்டும். அதிலே சஸ்திரவைத்தியமுங் கூறப்பட்டுள்ளது. பூர்வ ஆரியர் சஸ்திரவைத்தியமெனப்படும் சல்லியத்திலே எத்துணையாகக் கைதேர்ந்தவர்களென்பது அந்நூலிலே கூறப்பட்டுள்ள நூற்றிருபத்துநான்கு யந்திரசஸ்திரங்களால் அநுமிக்கப்படும். நோய் நிதானமும் சிகிற்சையும் வியந்து பாராட்டப்படத் தக்கன

சுசோயை

சூரியவமிசத்துப் பரீடித்து பாரி. இவள் மண்டூகராஜன் மகள்

சுஜன்மகிருது

சோமன் புத்திரன்

சுஜாதை

அஷடவக்கிரன்தாய். ஏகபாதன் பாரி

சுடாக்கொழுந்தீசர்

திருத்தூங்கானைமாடத்திற் கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

சுதக்ஷிணன்

பௌண்டரக வாசுதேவன்புத்திரன். தந்தையைக் கிருஷ்ணன் கொன்ற காரணத்தால் அப்பழிவாங்கவேண்டிச் சிவனை நோக்கித் தவங்கிடந்து ஒரபிசாரவோமஞ்செய்து அதினின்றும் பெற்ற ஒரு பூதத்தைத் துவாரகைக்கனுப்பினான். கிருஷ்ணன் அதனைக்கொண்டே சுதக்ஷிணனைக் கொன்று அவன்நகரத்தையு மெரியூட்டுவித்தான்

சுதக்ஷிணை

தலீபன் மனைவி. இவள் அதிரூபவதி. திலீபன் நெடுங்காலம் புத்திரப்பேறின்றி வருந்தி வசிஷ்டரையடைந்து விண்ணப்பஞ்செய்ய அவர் நீயும் உன்மனைவியும் தேனுவைக் கிரமமாக வழிபடுவீர்களாயின் புத்திரப்பேறு சித்திக்குமென்றனர். அச்சொற்கொண்டு இவளும் தலீபனும் கிரமமாகத் தேனுவை வழிபட்டு ரகுவைப் பெற்றார்கள்

சுதந்தவனநாயகி

திருச்செம்பொன்பள்ளியிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார்பெயர்

சுதனுசு

குருபுத்திரருளொருவன்

சுதன்வன்

லோகபாலகர் நால்வருளொருவன். திரிகர்த்த தேசாதீசனாகிய ஓரரசன். சுசர்மன் தந்தை

சுதன்வானன்

வசுதேவனுக்கு ஸ்ரீதேவியிடத்துதித்த புத்திரருளொருவன்

சுதன்வானன்

மூன்றாஞ்சியவனன் புத்ததிரன். சஹாதேவன் தந்தை

சுதபன்

ஹேமன் புத்திரன். பலி தந்தை

சுதர்சனன்

அங்கிரசனைப் பார்த்துச் சிரித்துச் சர்ப்பமாகச் சபிக்கப்பட்டுக் கிடந்து பின்னர்க் கிருஷ்ணன் திருவடிதீண்டப் பெற்றுத் தொல்லுரப்பெற்ற வித்தியாதரன். சுதர்சனை புத்தரன். இவன் தன் கிருகத்துக்குத் தருமதேவதை அதிதியாகிச் சென்று விருந்தருந்தப்பெற்றவன்

சுதர்சனம்

விஷ்ணுசக்கரம்

சுதர்சனை

மநுவமிசத்துத் துரியோதனன் நருமதையிடத்துப் பெற்றபுத்திரி. இவன் தன் கிருகத்துக்குத் தருமதேவதை அதிதியாகிச் சென்று விருந்தருந்தப் பெற்றவன்

சுதலம்

கீழுலகங்களுளொன்று. பச்சைவர்ணமுடையது

சுதாமனி

வசுதேவன் தம்பியாகிய அநீகன் பாரி

சுதீக்ஷிணன்

அகஸ்தியரது ஆச்சிரமத்தை நாடிச்சென்ற ராமரைக்கண்டு உபசரித்து விருந்திட்ட முனிவர். இவருடைய ஆச்சிரமம் அகஸ்தியருடைய ஆச்சிரமத்துக்கு உத்தரதிசையிலே சிறிது தூரத்திலுள்ளது

சுதேவன்

தேவகன் புத்திரன். சம்பன்புத்திரன். விஜயன் தந்தை

சுதேஷ்ணை, சுதேட்டிணை

அநுவமிசத்துப்பலி பாரி. விராடன் பாரி. கேகயராஜன் மகள். கீசகன் சகோதரி. பாண்டவர்கள் விராடனுடைய நகரத்திலிருந்தபோது திரௌபதி இச்சுதேஷ்ணையிடத்திலே வண்ணஞ்செய்யும் தோழியாகவிருந்தாள். அக்காலத்திலேயே கீசகன் திரௌபதியைக் கண்டு காதல்கூர்ந்து அவளை வலிதிற் கூடவெத்தனித்துயிர் மாண்டது

சுத்தசைவன்

ஆன்மாவுஞ் சிவமுங்கூடியவிடத்து, ஆன்மா சிவானுபவத்துக்கு உரியதாகாதென்று சொல்பவன். இவன் அகச்சமயிகளுளொருவன்

சுத்தன்

ஆயு பௌத்திரன். அநேநசன் புத்திரன். மூன்றாம் சுசிதந்தை

சுத்தியுமனன்

இவர் வைவசுவதமனுவுக்கு யாகத்திலே முன்னர்ப் பெண்ணாகத் தோன்றிப் பின்னர் வசிஷ்டர் பிரயத்தனத்தாற் புருஷரூபம் பெற்றவர். பெண்ரூபத்தோடிருந்த காலத்தில் இளையென்னும் பெயரோடு புதனைக்கூடிப் புரூரவனைப் பெற்றுப் பின்னர்ப் புருஷரூபம் பெற்றபோது உற்கலன், கயன், விஹவலன் என மூவர் புத்திரரைப் பெற்றவர்

சுத்தியுவு

சாரூபுத்திரன்

சுத்திராமன்

இந்திரன்

சுநகன்

கிருற்சினமதன் புத்திரன். தபோநியமத்திற் சிறந்தவராகிய சௌநகர் தந்தை. ருரன் பிரமத்துவரையிடத்துப் பெற்ற புத்திரன்

சுநசேபன்

இருசிகன் இரண்டாம்புத்திரன். இவனுக்குத் தேவராதனெனவுமொருபெயருளது. அஜிகர்த்தன்மக னென்பாருமுளர். அரிச்சந்திரன் தன் புத்திரனாகிய ரோகிதனை வருணனுக்குத் தத்தஞ் செய்வதாக நியமஞ்செய்துவிட்டுப் பின்னர் அவனுக்கு ஈடாக இவ்வஜிகர்த்தன் புத்திரனாகிய சுநசேபனை விலைக்குவாங்கித் தத்தஞ்செய்ய, அவன் வருணனையிரந்து தப்பிப்போய்த் தன் தந்தையிடஞ் செல்லாமல் விசுவாமித்திரனையடைந்து அவனுக்குத் தத்தபுத்திரனானான் எனவுமொரு கதையுளது

சுநசை

பாரிபத்தி ரபர்வதத்திலே உற்பத்தியாகிய ஒரு நதி

சுநந்தன்

விஷ்ணுபரிசரருளொருவன்

சுநந்தை

துஷ்யந்தன் புத்திரனாகிய பரதன் பாரி. இந்துமதிதோழிகளுளொருத்தி

சுநாபன்

வச்சிரநாபன் தம்பி

சுநாமன்

கம்சன் தம்பி

சுநீதன்

சந்நதி புத்திரன். அலர்க்கன் பௌத்திரன். க்ஷேமன் தந்தை

சுநீதன்

சிசுபாலன் சேனாபதி

சுநீதி

உத்தானபாதன் பாரி

சுநீதை

அங்கன்பாரி. மிருத்தியு மூத்தபுத்திரி. வேனன் தாய்

சுந்தன்

ஓரியடின். தாடகை மகன். மாரீசன் சுபாகு என்போர்க்குத் தந்தை

சுந்தரகுசாம்பிகை

திருவீழிமிழலையிலே கோயில் கொண்டிருக்கந் தேவியார்பெயர்

சுந்தரமூர்த்திநாயனார்

சைவ சமயகுரவர் நால்வருள் ஒருவர். கைலாசத்திலே சிவபெருமானது அடியார்களு ளொருவராய் ஆலாலசுந்தரரென்னும் பெயரோடிருந்து உமாதேவியாரது சேடியர்கள்மீது மோகித்த காரணத்தாற் பூலோகத்திலே, திருமுனைப்பாடி நாட்டிலே திருநாவலூரிலே, சடையனாருக்கு இசைஞானியார் வயிற்றிலே அவதரித்தவர். அச்சேடியர்களும் பரவையார் சங்கிலியார் என்னும் பெயரோடு முறையே திருவாரூரிலும் திருவொற்றியூரிலும் அவதரித்தார்கள். ஆலாலசுந்தரர் கைலாசத்தை விட்டுநீங்கு முன் மனம் பரிதபித்தழக்கண்ட சிவபெருமான் கருணைகூர்ந்து, பூலோகத்திலுன்னைவந்தாட் கொள்வோம் என்ற நுக்கிரகித்தபடியே, சுந்தரமூர்த்திநாயனார் மணப்பருவத்தையடைந்து மணக்கோலத்துடன் மணப்பந்தலின் கீழிருக்குஞ்சமயத்தில் அச்சிவபிரான் ஒரு கிழப்பிராமண வடிவங்கொண்டு ஒரு முறியோலையோடவ்விடத்தையடைந்து நாயனாரைத் தமக்கு அடிமையென அச்சபையிலுள்ளோர் ஒப்புமாறுநாட்டி, மணம்புக வொட்டாமற்றடுத்து அழைத்துப்போய்த் தம்மை இன்னரென்றுணருமாறு மறைந்தருளினார். ஆப்பொழுது நாயனார் பூர்வவாசனையாற் சிவபக்தி மேலிடப்பெற்று அன்றுமதல் அன்புமயமான அற்புதஞானப் பாடல்களைப் பாடிச் சிவஸ்தலங்கள் தோறுஞ் சென்று வணங்கி வருவாராயினர். தமது பிறவிக்குக் காரணமாகிய பெண்ணவாவின் பயன் வந்து கூடுங்காலம் வந்தடுக்க, திருவாரூரிலே சுவாமிதரிசனஞ் செய்து மீள்பவர் ஊழ்வலியாலே பரவையாரைக் கண்டு மயங்கி அவர்பாற் சிவபிரானைத் தூதுபோக்கி அவரை இசைவித்து அவர் மெய்ந்நலநுகர்ந்தங்கிருந்தார். பின்னர்த் திருவொற்றியூரிற் சென்று அங்கு மூழ்கூட்டச் சங்கிலியாரையுங் கூடி அவ்வூரையும் புசித்தனர். அச்சங்கிலியார்பொருட்டுச் செய்த பொய்ச்சத்தியத்தின் பயனாகப் பார்வையிழந்து சிலநாள் வருந்திப்பதிகம் பாடிப் பார்வைபெற்றார். சிவபிரானுக்குத் தோழர் என்னும் பெயர் பெற்றவராயிருந்தும் செய்த பிழையை அக்கடவுள் பொறுத்தருளாது அதற்காகச்சுந்தர மூர்த்தியைத் தண்டித்தலின் சிவபிரான் நடுநிலை தவறாத நீதியுடையரென்பதும், எவ்வினையும் அனுபவித்தன்றித் தீராதென்பதும், டிமித்துப் பாவங்களைத் தீர்க்கும் அதிகாரங் கடவுளுக் கில்லையென்பதும் பெறப்படும். சுந்தரமூர்த்தி நாயனாரது பெருமைகளையெல்லாம் கேள்வியுற்ற சேரராஜாவாகிய சேரமான் பெருமாணாயனார் அவரையழைத்துப் போய்த் தமதரமனையிலே விருந்திட்டுபசரித்து வைத்திருந்து அவரிடத்திலே பேரன்பும் பெருநட்பு முடையராயிருந்தார். சுந்தரமூர்த்திநாயனார் பதினெட்டாம் வயசிலே திருவஞ்சைக்களத்திற் சுவாமி தரிசனஞ் செய்து மீண்டு கோபுரவாயிலையடைந்த போது கைலாசகிரியினின்று சிவகணங்களோடு மொரு வெள்ளையானையானது சிவாஞ்ஞையினாலே அவர்முன்னே சென்று நின்று சிவாநுக்கிரகத்தையுணர்த்த, ஆனந்தபரவசராய் அதன் முதுகின் மேற்கொண்டு சென்றார். சேரமான் பெருமாளும் அதனை யுணர்ந்து தமது குதிரை மேற்கொண்டு அதன் செவியிலே ஸ்ரீபஞ்சாடிரத்தை யோத அஃது அந்தரத்தெழுந்து பாய்ந்து சென்று சுந்தரருடைய யானையை வலம்வந்து முன்னே சென்றது. இருவரும் கைலாசத்தையடைந்து சிவகணபதப் பேறுபெற்றார்கள். சுந்தருமூர்த்தியிடத்திலே விளங்கிய அற்புதங்கள் முதலை விழுங்கிய புதல்வனை அம்முதலையை அழைத்து உமிழச்செய்து பிழைப்பித்தது, நென்மலைபெற்றது, அம்மலையைப் பூதங்கள் வாரிப்போய்ப் பரவையார் வீட்டிலும் திருவாரூரிலுள்ளார் வீடுகள் தோறும் குவைசெய்யப் பெற்றது, தலைக்கணையாக அடுக்கிப் படுத்திருந்த செங்கற்கள் உதயத்திலே பொன்னாயிருக்கப் பெற்றது, மணிமுத்தா நதியிலேயிட்ட பொன்னைத் திருவாரூர்க் கமலாலயக்குளத்திலே யெடுத்தது முதலியனவாம். சுந்தரமூர்த்திநாயனார் பொன்னை ஆற்றிலிட்டுவந்து திருவாரூரிலே பரவையார்முன்பாகக் குளத்திலே தேடியபோது பரவையார் அவரைப்பார்த்து ஆற்றிலேயிட்டுக் குளத்திலே தேடினால் அகப்படுமாவென்று அவருடைய ஆற்றலையுணராமற் பரிகசித்தவாக்கியம் இந்நாளிலும் ஆற்றிலிட்டுக் குளத்திலேதேடல் என்னும் பழமொழியாய் வழங்கவதாயிற்று சேரமான் பெருமாணாயனார் காலம் கடைச்சங்கத் திறுதிக்காலம் என்பது கல்லாடத்தாலும் திருவிளையாடல் முதலிய நூற்களாலும் நன்கு நிச்சயிக்கப்படும். இச்சேரமான் புறநானூற்றிலே சேரமான்மாவெண்கோ வெனப்படுவர். அந் நூலிலே தானே சேரமான்மாவெண்கோவும் உக்கிரப்பெருவழுதியும் நட்புடையாரெனப்படுவர். சுந்தரமூர்த்திநாயனார் புராணத்திலே சேர சோழ பாண்டியர் மூவரும் சுந்தரரோடுமதுரையிலே ஒருசமய மொருங்கிருந்தார்களென்பது கூறப்பட்டிருத்தலால், அவர்கள், புறநானூற்றிலே ஒருங்கிருந்தாரெனக்கூறப்பட்ட சேரமான் மாவெண்கோவும் உக்கிரப்பெருவழுதியும் இராசசூயம் வேட்டசோழன் பெருநற்கிள்ளியுமேயாவர்.சேரமான் மாவெண்கோவெனப்படும் சேரமான்பெருமானாயனாரை ஒளவையார் பாடினாரென்பது, புறநானூற்றால் பாடினாரென்பது, புறநானூற்றால் மாத்திரமன்று, அவர் கைலாசத்துக்குக்குதிரை மேற்சென்றபோது ஒளவையாரும் தாம்பூசித்துவந்த விநாயகர் அருளாலே குதிரைமேற்சென்றாரோடொக்கச் சென்றாரென்றொருகதையும் குதிரையுங்காதம் கிழவியுங்காதம் என்ற பாடலு முண்மையாலும் நிச்சயிக்கப்படும். படவே சேரமான்பெருமாணாயனாரும் கடைச்சங்கத்து இறுதிக்கண்ணிருந்த உக்கிரப்பெருவழுதியும், சுந்தரமூர்த்திநாயனாரும், அவருடைய தேவாரத்திலும் புராணத்திலுஞ் சுட்டப்பட்ட சோழனாகிய இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளியும், கல்லாடர், கபிலர், பரணர் முதலியயோரும் ஓரே காலத்தவர்களென்பது சித்தாந்தமாம். ஆகவே அவர்கள் காலம் ஆயிரத்தெண்ணூறு வருஷங்களுக்கு முன்னுள்ளதாம். கடைச்சங்க கால நிச்சயம் சம்பந்தர் வரலாற்றினுட்கூறினாம். ஆண்டுக் காண்க

சுந்தரி

மாலியவந்தன்பாரி நர்மதையென்னும் கந்தருவப்பெண்ணினது புத்திரி

சுந்தோபசுந்தர்கள்

இரணியகசிபன் வமிசத்து நிசுந்தன் புத்திரர். இச்சகோதரரிருவரும் பெருந்தவங்கள் செய்து பிரமாவினிடத்திலே இச்சித்த ரூபம் பெறவும் இச்சித்தவிடத்துக்குப் போகவும் அந்நியாராற் கொல்லப்படாமலிருக்கவும் மாயாஜாலங்களையறியவும் வரம்பெற்று ஜனங்களை மிக வருத்தி வருங்காலத்தில், விஷ்ணு விசுவகர்மாவினால் ஒரு கன்னிகையை அதிரூபவதியாகச் சிருஷ்டிபபித்து அவளை இவர்களிடத்தனுப்பிவிட்டார். அவளைக்கண்ட இருவரும் அதிமோகராய் அவளைநோக்கி நீ நம்மில் யாருக்கு மனைவியாக விரும்புகின்றா யென்ன, அவள் நும்முள்யார் ஜயவீரனோ அவனுக்கே மனைவியாவேன் என்றாள். அதுகேட்டுப் போர்தொடுத்து ஒருவரையொருவர் வெட்டி இருவருமுயிர்துறந்தார்கள். இவர்கள் புத்திரர் சும்பநிசும்பர்கள்

சுபதந்தி

புஷ்பதந்தம் என்னும் திக்கியானையினது பெண்

சுபத்திரன்

வசுதேவன் புத்திரன். தாய் பௌரவி

சுபத்திரை

கிருஷ்ணன் தங்கை. அர்ச்சுணன் பாரி. அபிமன்னியன் தாய்

சுபந்தன்

விக்கிரமார்க்கன்காலத்தில் விளங்கிய ஒரு சம்ஸ்கிருதகவி. வாசவதத்தையென்னும் நூல்செய்தவர் இவரே

சுபலன்

காந்தாரதேசத் தரசன். இவன் புத்திரன் சகுனி. புத்திரி காந்தாரி

சுபாகு, சுவாகு

சேதிதேசத் தரசனாகிய வீரவாகு புத்திரன். சுநந்தை இவன் சகோதரி. இராமன்தம்பியாகிய சத்துரக்கினன் மூத்தபுத்திரன். கிருஷ்ணன்வமிசத்துப் பிரதிவாகுபுத்திரன். தாடகைபுத்திரன். மாரீசன் தம்பி. இவன் விசுவாமித்திரன் யாககாலத்திலே ராமராற் கொல்லப்பட்டவன்

சுபார்சுவன்

சம்பாதி புத்திரன். சுமாலிபுத்திரன். துலமீடன் வமிசத்தனாகிய திருடநேமி புத்திரன். சுமதி தந்தை

சுபு

கஞ்சன் தம்பி

சுப்தக்கினன்

ஈசானியதிக்குக் காவல்பூண்ட பெண்யானை

சுப்பிரதீகன்

தன்பிதாவினது திரவியங்களைத் தமையனைவஞ்சிக்கும் பொருட்டுக் கவர்ந்தமைக்காகத் தமையனால் யானையாகச் சபிக்கப்பட்ட பிராமணன்

சுப்பிரமணியர்

குமாரக்கடவுள்

சுப்பிரமன்

சும்ஹன்

சுப்பிரயை

முதல் நாபாகன் பாரி. இவள் ஜாதியில வைசிய ஸ்திரி

சுப்பிரயோகை

சையகிரியிலுற்பத்தியாகித் தடிணவாகினியாகப் பாய்கின்ற வொருநதி

சுமதன்

விசுவாமித்திரன் புத்திரன்

சுமதி

இக்ஷூவாகு தம்பியாகி நிருகன்புத்திரன். மதிசாந்திரன் புத்திரன். இருஷபன் புத்திரனாகிய பரதன்புத்திரன். மதிசாந்திரன் புத்திரன் ரைப்பியன் தந்தை. துவிமீடன் வமிசத்துச் சபார்சுவன் புத்திரன். சந்நதமந்தன் தந்தை. சகல வேதசாஸ்திரபாரகனாகிய பாரன் புத்திரன். அரிஷ்டநேமி புத்திரி. சகரன்பாரிகளுளொருத்தி. இவளிடத்திலே பிறந்த அறுபதினாயிரம் புத்திரரும் கபிலரால் நீறாக்கப்பட்டார்கள்

சுமத்திரன்

பஜமானன் பௌத்திரன். விருஷ்ணி புத்திரன். வசுதேவன் தம்பியாகிய அநீகன் புத்திரன். இக்ஷூவாகு வமிசத்துக் கடையரசன். இவன் பாரதயுத்தத்திலே அபிமன்னியனாலே கொல்லப்பட்ட பிருகத்பலன் மரபிலேமுப்பதாம் வழித்தோன்றலாகிய அரசன்

சுமநசன்

உன்முகன் புத்திரன். அங்கன் தம்பி. சம்பூதி. இவன் தந்தை டிரியசுவன். புத்திரன் திரிதன்வன்

சுமந்தன்

வியாசர்சீஷனாய அதர்வண வேதாத்தியாயனன். சாம வேதாத்தியாயராகிய ஜைமினி புத்திரன்

சுமந்திரன்

புரூரவன்வமிசத்து ஜன்னு புத்திரன். தசரதன் சாரதியும் மந்திரியுமானவன்

சுமந்து

ஜன்னுமகாவிருஷியினது புத்திரன்

சுமாலி

சுகேசன் புத்திரன், மாலியவந்தன் தம்பி. ராவணன் மாதாமஹன். கம்சன் தம்பி. பலராமனாற் கொல்லப்பட்டவன்

சுமித்திரை

தசரதன் இரண்டாம் பாரி. லக்ஷ்மண சத்துருக்கினர் களுக்குத் தாய்

சுமெரு

இது வடக்கின் கண்ணேதுருவ நக்ஷத்திரத்தை நோக்கி நிற்கும் மேருவினது சிகரம். மேருவின் வாற்பக்கம் குமெருவெனப்படும். அது தெற்கே நோக்கியிருக்கும். அது வடவாமுகமெனவும்படும். மேருவானது பூமிக்கு நாராசம் போலத் தெற்கிற்ருந்து வடக்கேயுருவியோடி நிற்பது. ஆரியர் பூகோளத்தை ஊர்த்துவகபாலம் அதக்கபாலம்என இருகூறாக்கி ஊர்த்துவகபாலம் முழுதும் நிலமென்றும். அதகபாலத்தை முழுதுநீரென்றும் கூறுவர். ஐரோப்பிய பண்டிதர் பூமியின் கர்ப்பத்திலேயிருக்கும் கருஷணா சக்திக்கு அளவில்லையென்று கூறுவது போலப் புராணங்களும் இம்மேருவை அநேக தேவதாகணங்களுக்கு வாசஸ்தானமாகக் கூறும். சுமெரு இளாவிருது வருஷநடுவிலேயுள்ளது. இச்சுமெருவை மனுஷர் சென்றடைவது கூடாதென்பது புராணக்கருத்து. அவ்விடத்தையடைதற்கு ஐரோப்பியர் பலர் பலவாறாகப் பலகாலத்திலும் பன்முறை முயன்றும் சித்தியுற்றார் ஒருவருமில்லை. அத்தேசலியற்கை மனுஷர் சஞ்சரித்தற் கொவ்வாததாதலின் அங்குச்செல்வது யார்க்கும் கூடாதுகருமமாம். இதனால் இக்கால ஐரோப்பியர் துருவியாராய்ந்துணராத துருவநாட்டைப் பூர்வ ஆரியர் துருவியாராய்ந்தவர்களென்பது நன்றாகப் புலப்படும்

சும்பநிசும்பர்

சுந்தோபசுந்தரரது புத்திரர். இவர்கள் இரணிய கசிபன் வமிசத்தர். இவர்கள் புஷ்கரத்தலத்திலே பிரமாவை நோக்கித் தவங்கிடந்து இந்திராதிதேவர்களை அடக்குஞ் சக்திபெற்று மூர்க்கராய்த்திரிந்த காலத்திலே காளியினாற் கொல்லப்பட்டவர்கள்

சும்ஹன்

சுப்பிரமன். புலியினது கடைமகன். இவன் சௌம்ஹநகரம் நிருமித்தவன்

சுயஞ்ஞன்

தசரதன் புத்திரகாமேஷ்டியாகத்தை நடாத்திய கர்த்தாக்களுளொருவர். உசீநரதேசத்தரசன். இவன் சத்துருக்களால் யுத்தத்திலே வீழ்த்தப்பட்டபோதுபந்துக்களது துக்கத்தில் மூழ்கிக்கிடக்க யமன் ஒரு பாலப்பருவமுடையனாகிச் சென்று தத்துவோபதேசஞ் செய்து போகப்பெற்றவன்

சுயம்புநாதர்

திரு ஆக்கூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்

சுரசை

தக்ஷன் மகள். காசிபன் பாரி. மாயையில் வல்லவனாதலின் மாயையெனவும் படுவள். இவளே சூரன் தாரகன் முதலிய அசுரர்களைப் பெற்றவள். நாகர்கள் தாய். அநுமான் சீதையைத் தேடி இலங்கைக்குப் போகும்போது வழியிலே சமுத்திரமத்தியிலே நின்று வழியடைத்துநின்ற இவளைக் கர்ப்பத்திற்பிரவேசித்து வயிற்றைப் போழ்ந்து கொன்று போயினான்

சுரதன்

ஜன்னு புத்திரன்

சுரதன்

சுவேதன்தம்பி. சுவேதனுக்குப்பின் வதர்ப்பதேசத்திற்கு அரசனாயினவன்

சுரதமாரபாண்டியன்

பராக்கிரம பாண்டியனுக்குப் பின் அரசு செய்தவன்

சுரநிந்தனை

ஜேஷ்டாதேவியிடத்து வருணனுக்குப்பிறந்த புத்திரி. அதாமன் தங்கை

சுரபி

கபிலை

சுரபு

உக்கிரசேனன் மகள். சியாமகன் பாரி

சுரமஞ்சரி

ஒரு சங்கீத சாஸ்திரம்,. ஆடவரைச் சேர்வதில்லையென்று விரதம்பூண்டிருந்து பின்னர்ச் சீவகன் சங்கீதத்தால் மயங்கி அவனுக்கு மனைவியாயினவள், சீவகசிந்தாமணி

சுராதிராஜன்

இவனே சோழமண்டலமமைத்த முதற் சோழன் என்பது கலிங்கத்துப் பரணியிற் கூறப்பட்டுள்ளது

சுராஷ்டிரன்

தாமசமநு தந்தை. காசியன் புத்திரன். தீர்க்கதமன் தந்தை

சுருசி

உத்தானபாதன் இளைய மனைவி, உத்தமன் தாய்

சுருதகீர்த்தி

அர்ச்சுனனுக்குத் திரௌபதியிடத்துப் பிறந்த புத்திரன். வசுதேவன் தங்கை. கேகயராஜாவாகிய திருஷ்டகேது பாரி. விக்கிரமார்க்கன் பாட்டன். இவன் தனக்குப் புத்திரனின்மையாற் புத்திரிபுத்திரனாகிய விக்கிரமார்க்கனுக்கு அரசுகொடுத்தான். சத்துரக்கினன் பாரி. குஜந்துவசன் மகள்

சுருதசிரவன்

சோமசிரவன்தந்தை. இவன் ஜனமேஜயன் காலத்திலிருந்தவன்

சுருதசிரவை

வசுதேவன் தங்கை. சிசுபாலன்தாய். துமகோஷன் பாரி. சாத்துவதியென்றம் பெயர்பெறுவள்

சுருதசேனன்

சகதேவனுக்குத் திரௌபதியிடத்துப் பிறந்த புத்திரன். ஜனமேஜயன்

சுருதசோமன்

வீமனுக்குத் திரௌபதியிடத்துப் பிறந்த புத்திரன்

சுருததேவன்

மிதிலையிலிருந்த ஒருவிஷ்ணுபக்தன். விஷ்ணு பரிவாரத்தவரு ளொருவன்

சுருததேவி

வசுதேவன் தங்கை. இவள் விருத்தசர்மன்பாரி. தந்தவத்திரன் தாய்

சுருதன்

சுஹோத்திரன். பகீரதன் புத்திரன்

சுருதமுக்கியன்

வசுதேவன் புத்திரருளொருவன். இவன் தாய் சகதேவி

சுருதவர்மன்

துரியோதனன் தம்பி

சுருதாயு

புரூரவன் புத்திரனாகிய வசுமந்தன். கலிங்கதேசத்தரசன். இவன் சகோதர புத்திரர்களோடு வீமனால் பாரதயுத்தத்திலே கொல்லப்பட்டவன். அரிஷ்டநேமிபுத்திரன்

சுருதாயுதன்

வருணன் புத்திரனாகிய ஓரரசன். இவன் தான் வருணனிடத்துப் பெற்ற கதாயுதங்கொண்டு கருஷ்ணனைச் சாடியபோது அக்கதை மாலையாகி விழுந்து மீண்டுவந்து தன்னையேகொல்லப்பெற்றவன்

சுருதிகள்

வேதங்கள்

சுருதிகீதைகள்

சகம் ஒடுங்கியவிடத்து யோக நித்திரையிலிருந்த பரமேசுவரனை வேதங்கள் செய்த தோத்திரங்கள். இவை பரமதத்துவார்த்தமுடையன

சுலபை

பரமதத்துவார்த்த முணர்ந்தாளொரு பெண். இவள் மகாத்துமாவான பின்னர் ஒருநாள் மகாஞானியாகிய ஜனகமகாராஜாவினது மனநிலையை ஆராயும் பொருட்டுச் சம்வாதம் புரிந்தவள்

சுவசை

பிரஜாபதிபாரி. ஆநிலன் தாய்

சுவபற்கன்

பிரசினன் மூத்தபுத்திரன். இவனுக்குக் காந்தினியிடத்துப் பன்னிருவர் புத்திரர் பிறந்தார்கள். அவருள் மூத்தோன் அக்குரூபரன்

சுவர்ணரோமன்

மகாரோமன் புத்திரன். ஹிருசுவரோமன் தந்தை

சுவர்ணஷ்டீவி

சிருஞ்சயன் புத்திரன்

சுவர்ப்பானன்

தனுபுத்திரன். விப்பிரசித்திபுத்திரன் ராகு

சுவர்ப்பானலி

ஆயவின்பாரி. நகுஷன் தாய்

சுவாகாதேவி

அக்கினிதேவன் பாரி

சுவாகிதன்

விருஜினவந்தன் புத்திரன்

சுவாகு

சுபாகு காண்க

சுவாமிசித்தீச்சுவரர்

அம்மை நித்தியநாயகி. சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பட்டது

சுவாமை

வாமையென்னும் நதி

சுவாயம்புவமனு

பிரம மானசபுத்திரனாகிய ஒரு மனு. இவன் பாரி சதரூபை. பிரியவிரதன் உத்தானபாதன் என்போர் புத்திரர். பிரசூதி, ஆகூதி, தேவகூதி என்போர் புத்திரிகள்

சுவாரோசிஷன்

சுவரோசி புத்திரனாகிய ஒரு மனு. தூய்பெயர் மனோரமை. இவன் நெடுங்காலந் தவங்கிடந்து மனுவாயினவன்

சுவிந்திரம்

மலைநாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம்

சுவீரதன்

ஊசீநரன் ஐந்தாம் புத்திரன்

சுவீரன்

சிபியினது இரண்டாம்புத்திரன். இவன் தேசம்சவ்வீரம்.. வசுதேவன் தம்பியாகிய தேவசிரவசன்புத்திரன்

சுவேதகி

ஓரிராஜவிருஷி. இவருடைய பக்திவைராக்கியத்தைப் பிரமா மெச்சி இவர் செய்யப்புகுந்த யாகத்தை நடாத்தும்படி தூவாசரை அனுப்பினார். இவ்வியாகம் நடந்த பன்னீராண்டு காறும் அவன் நெய்யேயிடையறாமற் சொரிந்து அக்கினிதிருப்தி செய்தமையால் அக்கினி தேவருக்குத்தீபனாக்கினி மாந்தமுண்டாயது. அதுகாரணமாகவே அக்கினி தேவர்காண்டவ வனத்தை யுண்ணற் கொருப்பட்டனர்

சுவேதகேதன்

அஷ்டவக்கிரன் தாய்மாமன். இவன்கோபத்தாற் றனது மகனை யமபுரத்துக்கு அனுப்ப அவன் அவ்வாறு சென்று மீண்டான். உத்தாலகன் புத்திரன்

சுவேதன்

விராடராஜன் புத்திரன். உத்தரன்தமையன். காளாஞ்சன தீர்த்தக் கரையிலே சிவனை நோக்கித் தவங்கிடந்த பொழுது யமன் சென்று பிடித்துப்போகச் சிவன் தோன்றி விடுவிக்கப்பெற்ற ஓரிராஜவிருஷி. விதர்ப்பதேசத்தரசன். சுதேவன்மகன். சுக்கிரன்

சுவேதவராகம்

பாத்ம கற்பாந்தத்திலே ஜலத்திலே மூழ்கிய பூமியையெடுத்து நாட்ட விஷ்ணு வெடுத்த வெண்பன்றி வடிவம். இப்போது நடப்பது சுவேதவராககற்பம்

சுவேலம்

இலங்கையில் ராமர் வானரசேனையை நிறுத்திவைத்த மலை

சுஷேணன்

கர்ணன் புத்திரன். இவன் சாததகியினாற் கொல்லப்பட்டவன். கிருஷ்ணன் உருக்குமிணியிடத்துப் பெற்ற புத்திரன். உருமைதந்தை. சுக்கிரீவன மாமன். இவன் வருணனாற் பிறந்தவன். கஞ்சனாற் கொல்லப்பட்ட வசுதேவன்மக்களுளொருவன்

சுஹோத்திரன்

டித்திரவிருத்தன் மகன். இவனுக்குக் காசியன், குகன், கிருத்சினமதன் என மூவர்புத்திரர். பிருஹதடித்திரன் புத்திரன். ஹஸ்திகன் தந்தை. சுமநசு புத்திரன். பகீரதன் புத்திரன். சுரதன் எனவும்படுவன். புரூரவன் பௌத்திரனான வீமன் பௌத்திரன். ஜனஹன் தந்தை. இவன் சோடசமகாரஜாக்களுள் ஒருவன். இவன் அரசு புரிந்துவருநாளில் இந்திரன் தனது மேகங்களைக்கொண்டு நண்டு மீன் தவளை ஆமை முதலிய ரூபங்களாகப் பொன்மழையை இவன் நாட்டிற் பொழிவித்தான். அப்பொன்னை யெல்லாமெடுத்து அநேக யாகங்களைச் செய்து அவற்றை நடாத்திய ஆசாரியர்களுக்கும் மற்றைப்பண்டிதர் ஏழைகளுக்கும் வாரிவழங்கினான். சஹதேவனுக்கு விஜயையிடத்துப்பிறந்த புத்திரன்

சூடிக்கொடுத்தாள்

இம் மாதுசிரோமணியார் பெரியாழ்வாருக்குப் புத்திரியாகத் துளசியிலே பிறந்த விஷ்ணு கைங்கரிய பக்தியிற் சிறந்து விளங்கினவர்

சூதசங்கிதை

வியாசர்சூதர்பொருட்டுச் செய்த சங்கிதை. இது ஸ்கந்தபுராணத் தாறுசங்கிதைகளுளொன்று. ஆறாயிரங்கிரந்தமுடையது

சூதபுத்திரன்

கர்ணன். குகன் வளர்த்தமையால்வந்தபெயர், சூதன் ~ தேர்ப்பாகன்

சூதமாகதர்

இவர்களே வந்தியரென்றும் சூதரென்றும் தமிழ்நூல்களிலே வழங்கப்படுபவர்கள். அரசர்களுக்கு உற்சாகம் முதலியன உண்டாதற் பொருட்டுப் பாடுபவர்களாகிய இவர்கள் பிருது பிறந்தயாகசுத்தி காலத்திலே உற்பவித்தவர்களது வமிசத்தவர்கள்

சூதர்

வியாசர் சீஷருள்ளே ஒருவராகிய இவ்விருஷியே நைமிசாரணியவனத்திலேயிருந்த முனிவர்களுக்குப் புராணங்களையெல்லா முபதேசித்தவர்

சூத்திரகன்

மகததேசத் தரசனாகிய சுசர்மனுக்கு மந்திரியாயிருந்த பின்னரவனைக் கொன்று இராச்சியங்கவர்ந்து கொண்டவன்

சூத்திரங்கள்

சுபாசுப கர்மங்களைக் குறித்துச் செய்யப்பட்டவிதிகள். அவை, போதாயனம், ஆபஸ்தம்பம், சத்தியாஷாடம், திராஹியாயனம், அகஸ்தியம், சாகல்லியம், ஆசவலாயனம், சாம்பவீயம், காத்தியாயணம், வைகானசம், சௌனகீயம், பாரத்துவாசம், அக்கினிவைசியம், ஜைமினீயம், கௌண்டின்னியம், கௌஷீதகம், ஹிரணியகேசி எனப்பதினெட்டு நூல்களாம்

சூத்திரர்

நான்காம் வருணத்தோர். இவர்கள் பிரமன் பாதத்திற் பிறந்தோர். இவர்கள் ஏனைவருணத்தாரைப் போல மோதற் கதிகாரிகளல்லர். இவர்களுக்குப் நயனம் விவாகம். சூத்திரராவார் வேளாளரேயென்பது தொல்காப்பியம் அகத்திணையியலில் வரும் மன்னர்பாங்கில் என்னுஞ் சூத்திரத்தானுணரப்படும். அவ்வேளாளர் உழுவித்துண்போரும் உழுதுண் போரும்மென இருதிறப்படுவர். உழவித்துண்போர் மண்டிலமாக்களும், தண்டத்தலைவருமாய்ச் சோழனாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாருமென்றிவை முதலியவூர்களிற்றோன்றி வேள் எனவும் அரசு எனவும் உரிமைபெற்றோரும் பாண்டிநாட்டுக் காவிதிப்பட்டங் கொண்டோரும் குறுமுடி குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு மகட் கொடைக்குரிய வேளாளர். ஊழுதுண்போர் பலவகைப்பட்ட தொழலினரேனும் உழவொன்றையுமே யுரியதொழிலாக வுடையோர். இவ்விருவகை வேளாளரும் தம்மினுயர்ந்த வைசியர் க்ஷத்திரியர் பிராமணர் மூவரையும் வழிபடற்குரியர். இனி ஆகமங்களிலே சூத்திரர் சற்சூத்திரர் அசற்சூத்திரரென இருபாலாகக் கூறப்படுவர். மேலாகியவொழுக்கமுங் குடிப்பிறப்புடையோர்சற் சூத்திரர்

சூரசூதன்

அருணன்

சூரசேனன்

கார்த்தவீரியார்ச்சுனன் இரண்டாம் புத்திரன். சத்துருக்கினன் புத்திரன்

சூரசேனம்

மதுராபுரியை ராஜதானியாகப் பெற்றிருந்த தேசம். சத்துருக்கன் புத்திரனாகிய சூரசேனன் ஆண்டமையின் அப்பெயர்பெற்றது

சூரன்

கார்த்தவீரியார்ச்சுனன் ஐந்தாம் புத்திரன். யாதவர் அநேகர் இப்பெயரால் விளங்கினர். விரோதன் புத்திரன். சிநி தந்தை. தேவமீடன் புத்திரன். வசுதேவன் தந்தை. வசுதேவன் மதிரை வயிற்றிற் பெற்ற புத்திரன்

சூரபன்மன், சூரன்

கசியபனுக்கு மாயையிடத்துப் பிறந்த புத்திரருள்ளே மூத்தோனும் மகா வரப்பிரசாதங்கள் பெற்று அயிரத்தெட்டண்டங்களையும் நூற்றெட்டு யகமாண்டவனும் இந்திராதி தேவரைச்சிறையிட்டவனும் ஈற்றிலே குமாரக்கடவுளாற் சங்கரிக்கப்பட்டழிந்து ஒரு பாதி மயிலாகி அக்கடவுட்கு வாகனமாகவும் ஒருபாதிகுக் குடக்கொடியாகவும் பெற்றவனுமாகிய ஓரசுரன். இவன் பிறந்ததும் தவத்தாலிணையற்றுயர்ந்ததும் செல்வம் அதிகாரம் புஜ பல முதலியவற்றை அளவின்றிப் பெற்றும் மயங்கித் தீநெறியிற் சென்றுலகங்களுக்கெல்லாம் பயங்கரகாரணனாயிருந்ததும், தெய்வசிந்தை சிறிதுமின்றி அகங்கரித்திரந்ததும், ஈற்றிலே எல்லாமிழந்துகதியற்றதும், பின்னர்ப் பூர்வஜன்ம புண்ணியவசத்தினாற் சுப்பிரமணியக் கடவுளுக்குச் சேவலும் மயிலுமாயதுமாகிய சரித்திரங்களை யெல்லாம் சாங்கோபாங்கமாக விரித்துத் தீநெறிப்பயன் காட்டி அதனை விலக்கி முத்திநெறி விதிப்பது கந்தபுராணம்மாம்

சூரி

ஜைநூலாசிரியர்கள் மேற்கொள்ளும் பட்டப்பெயர்

சூரியகுண்டம்

காவிரியின் சங்கமுகத்துக்கு அயலதாகிய ஒரு தடாகம்

சூரியசாவர்ணி

எட்டாம் மனு. சூரியனுக்குச் சாயாதேவியிடத்துப் பிறந்த புத்திரன். இம்மனுவே இனி வரப்போகும் மனு. இவன் முன்பிறந்தமனுவுக்குச் சமானனாயினமையின் சாவர்ணியெனப்படுவன். இவன் காலத்திலே சுதபர், அமிதாபர், முக்கியர் எனத் தேவகணங்கள் முத்திறத்தராவர். அக்காலத்திலே தீப்திமான், காலவன், ராமன், கிருபன். ஆசுவத்தாமன், வியாசன், சிருங்கன் என்பவரே சப்த ரிஷிகளாவார்கள். பாதலத்திலே தவங்செய்திருப்பவனாகிய பலி சக்கரவர்த்தியே தேவேந்திர பதம்பெறுவான். வீரஜன் சர்வசீவான் நிர்மோகன் முதலியோர் பூலோகத்து மானுஷியவர்க்காதிபராவார்கள்

சூரியன்

கசியபனுக்கு அதிதிவயிற்றிலே பிறந்த புத்திரன். மனைவி துவஷ்டா புத்திரியாகிய சஞ்ஞாதேவி. இவளிடத்திலே பிறந்தபுத்திரர் வைவசுவதமனுவும் யமனுமென இருவர்புத்திரி யமுனை. ஊதயகாலசூரியன் பிரமாவினது சொரூபமென்றும் மத்தியானகால சூரியன் சிவசொரூபமென்றும் அஸ்தமயனகால சூரியன் விஷ்ணுசொரூப மென்றும் கொண்டு ஜபத்திலே தியானிக்கப்படுவன். சூரியன் ஏழு குதிரைபூண்ட வோராழித் தேரிலே சஞ்சரிப்பன். தினத்தைச் செய்தலால் தினகரனென்றும், பிரபையைச் செய்தலாற் பிரபாகரனென்றும் பிறவுமாக அநந்த நாமங்களைப் பெறுவன். இவ்வண்டம்சூ ரியனை ஆதாரமாகவுடையது. சூரியன் துரவனையாதாரமாகவுடையது. சூரியனைக்குறித்து விஷ்ணு புராணத்திற் கூறப்பட்டனவற்றை இங்கே சங்கிரகித்துக் கூறுவாம். அதிற் கூறப்பட்டன ஐரோப்பிய சித்தாந்தத்திற்குப் பெரும்பாலுமொத்தன. முற்றுமுருவகமாதலின் நுண்மையானுணரப்படும். துருவனை யாதாரமாகக் கொண்டு அவனாலே ஆட்டப்பட்டு அவனையே வலஞ் செய்துவருதலைத் தொழிலாகவுடைய சூரியனுக்கு ஒரிரதமுண்டு. அவ்விரதத்திற்கு ஓரச்சும், அவ்வச்சிலே ஒருருளும், அவ்வுருளினிரு மருங்கிலும் அச்சிலே கோக்கப்பட்ட பூட்டுக் கோலாகிய கொடிஞ்சிகளும் அவற்றின் மீதேபாரும், அதன் மீதே தட்டும், உறுப்புக்காளகவுள்ளன. கொடிஞ்சிகளிலே ஏழு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். காயத்திரி, பிருகதி, உஷ்ணிக்கு, ஜக்தி, திருஷ்டுப்பு, அநுஷ்டுப்பு, பந்தி என்னும் பெயர்களையுடைய சந்தங்கள் ஏழுமே அவ்வேழு குதிரைகளுமாம். அவ்வுரளி னொருபக்கத்தச்சு மிக நீண்டிருக்கும். மற்றப் பக்கத்தச்சு மிக்க குறுகியிருக்கும். அவ்வுருளினது பண்டிகாலை நண்பகல் மாலை என்னும் பிரிவுகளாலாயது. சம்வற்சரம், பிரிவற்சரம் இடாவற்சரம் அநுவற்சரம் இத்துவற்சரம் என்னும் ஐந்தும் உருளாரங்களாம். இருதுகள் ஆறும் உருள் வலயங்களாம். குறுகிய அச்சுப்பக்கம் துருவபக்கத்தை நோக்கி நிற்கும். அவ்வச்சுத் துருவ நடித்திரத்திலிருந்து வரும் வாயுவடிவினவாகிய கயிறுகளிலே தொடுக்கப்பட்டிருக்கும். உருளை மானசோத்தரபர்வத்தின் மீதே சஞ்சாரித்துவரும். அப்பர்வதத்தின் மீது கிழக்கில் இந்திரனுக்குரிய வசுவோகசாரா நகரமும், தெற்கில் யனனுக்குரிய சம்யமனிநகரமும், மேற்கில் வருணனுக்குரிய சுகாநகரமும், வடக்கிலே சோமனுக்குரிய லிபாவரீ நகரமுமென நான்கு நகரங்களுள. சூரியன் இவ்விரதத்திலே சஞ்சரித்து வருதலால் உதயாஸ்தமயங்களுளவாகின்றன. உதயாஸ்தமயங்களுண்மைபோல நமக்குத் தோன்றினும் சூரியன் உண்மையளவில் உதிப்பதும் அஸ்தமிப்பதுமில்லை. சூரியன் மேலே கூறப்பட்ட நான்கு கோணத்து நகரங்கள் நான்கனுள் எதிலாயினும் இடையிலாயினும் இருக்கும்போதே இரண்டு கோணங்களுக்கும் இரண்டு நகரங்களுக்குந் தரிசனமாவான். சூரிபகிரணங்கள் செல்லாதவிடமமேருப்பக்க மொன்று மேயாம். அப்பக்கஞ் செல்லும் சூரியகிரணங்கள் மேருவினது கிரணங்களாலே திரஸ்கரிகரிக்கப்பட்டு மீளும். சூரியரதஞ் சஞ்சரிக்கிற கிராந்திவிருத்தங்கள் நூற்றெண்பத்துமூன்று. அவை தக்ஷ்ணாயன உத்தராயண வெல்லைகளுக்கிடையேயுள்ளன. இரதம் அக்கிராந்தி விருத்தங்களிலேயே உத்தராயணத்தி லேறுவதும் தக்ஷ்ணாயனத்தி லிறங்குவதுமாயிருக்கும். அதனால் ஒரு கிராந்திலிருத்தத்திற்கு இரண்டாக முந்நூற்றறுபத்தாறு கதிகளினாலே ஒரு வருஷமுண்டாகும். மாசந்தோறுஞ் சூரியன் தன் இயல்பு வேறுபடலால் பன்னிரண்டு பெயர்களைப் பெறுவான். அதுபற்றிச் சூரியர் பன்னிருவராகக் கொள்ளப்படுவர். சூரியரதத்திலே சூரிய ரிஷிகந்தருவ அப்சர யடி சர்ப்ப ராடிசகணங்கள் ஏழும் ஏறியிருக்கும். சித்திரை மாசத்திலே தாதவென்னுஞ் சூரியனும், கிருதஸ்தலையென்னும் அப்சரப் பெண்ணும், புலஸ்தியவிருஷியும். வாசுகி சர்ப்பமும், ரதபிருத்துவென்னும் யடினும். ஹேதிராடிசனும், தும்புருவென்னும் கந்தருவனும், அவ்விரதத்திலே வசிப்பார்கள். வைகாசியிலே சூரியன் அரியமா, இருஷிபுலகர், அப்சரசு புஞ்சிகஸ்தலை, யடின் ரதௌஜா, சர்ப்பம் கச்சவீரன், கந்தரூவன் நாரதன், ராக்ஷசன் பிரஹேகி. இவ்வாறே ஏனைய மாதங்களிலும் வேறுவேறு பெயர்களைப் பெறுவர். சூரியரதத்திலுள்ள இவ்வேழுகணங்களும் இப்பூமியிலே மழைபனி வெயில் சுகம விருத்தி பஞ்சம் நோய் முதலியவற்றிற்குக் காரணராய்க காலபேதங்களை யுண்டாக்குவர். சூரியனை அவ்விரதத்திலிருக்கும் இருஷிகள் தோத்திரஞ் செய்துகொண்டிருப்பார்கள், அரம்பையர் ஆடிக் களிப்பிப்பர், ராடிசர் பின்றொடந்து நிற்பர், சர்ப்பகணங்கள் தாங்குவர், யடிர் கடிவாளம் பிடித்து நிற்பர், கந்தரூவர் பாடிக் கிளிப்பிப்பர். சூரியன் அண்டத்தைக் காப்பன். மேலும் ஏழுகணமென ரூபகம் பண்ணப்பட்டன சூரியனிடத்திலேயுள்ளனவாய் விளங்குகின்ற ஆற்றல்களேயாம். இருஷிகளென்பது ஒளியைக்கொடுத் துலகத்தை அதற்குரிய வியாபாரத்தக் கேலிவிடும் சக்தியைப்போலும். அரம்பையரென்றது உலகவியர் பாரத்திலுயிர்களை யாட்டுவிக்கும் சக்தியை. இராடிர்பின் றொடர்ந்து நிற்பரென்பது இருளை. சர்ப்பகண மென்றது சூரிய வீதியெனப் பெயர்வந்ததுமா மென்க. யடிர் கடிவாளம்பற்றி நிற்பரென்றது. சூரியனை உரியகதியிற் பிறழாதுகாக்குஞ் சக்தியை. கந்தருவர் பாடிக் களிப்பிப்பர் என்றது அணுக்களைக் கவரும் சக்தியை. சூரியன் அண்டத்தைக் காப்பன் என்றது. அண்டங்களெல்லாந் தன்னை வலம்வருமாறு செய்து அவைக்கெல்லாம் தான் காரணமாய்நிற்கும் ஆற்றலை. இனி மான சோத்தரபர்வத மென்றது சூரியன் சஞ்சரிக்கும் வீதியினது நிலையை. சூரியன் அவ்வுயர்ந்த நிலையிற் கீழே பூமியை நோக்கி யிறங்காமலும் அந்நிலையினின்றும் மேலேயுயராமலும் சமமாகிய ஒருமலை போன்ற மதிற்சுவரின் மீதே சஞ்சரிப்பது போலச் செல்லுதலின் அந்நிலை மலையெனப்பட்டது. மனசுக்கு மெட்டாதுயர்ந்தமலை யென்பது அதன் பொருள். நான்கு நகரமென்றது. உதயம், உச்சி, அஸ்தமயம், அதோபாகம் என்னும் நான்கு கோணங்களையுமாம். உதயகோணத்தை இந்திடரனுக்குரிய வசுவோக சாராநகரமென்றது பொன்மயமாகிய வெளியும் புள்ளொலியும் முதலிலே புலப்படுமிடமாதல் பற்றியாம். வேளிக்கிறைவ னிந்திரனாதலின் இந்திரனுக்குரிய தெனப்பட்டது, வசு ~ பொன், ஒகம, புள், உச்சிக்கோணநகரம் யமனுக்குரிய தெனப்பட்டது. வெயில் மிகக் கொடிதாதலும் உயிர்களுக்குப் பசிதாகங்க ளுளவாதலும் பற்றியாம். அஸ்தமயகோணத்தை வருணனுக்குரிய தென்றது சூரியன் அவ்விடத்தையடையும் போது பூமி குளிர்ச்சியும் சோகநீக்கமும் பெறுதலால், தண்ணென்ற சுபாவத்தையுடைய நீருக்கிறைவன் வருணனேயன்றோ. வடக்கென்றது அதோபாகத்திலிருக்கும் போது ஊர்த்துவ பாகத்திலுள்ள வுயிர்களுக்குக் களிப்பையும் நித்திரையையுங் கொடுத்தல் பற்றி அக்கோண்ம் சோமனுக்குரிய தெனப்பட்டது. ஏழ்பரியை ஏழ்நிறமென்பாருமுளர். இவை ஒருவாறு விரிக்கப்பட்டவுள்ளுறை. அவ்வுருவகங்களை முற்ற நிதானித்துத் தத்துவங்காட்டல் மகாபண்டிதர்க்கன்றி மற்றோர்க்கசாத்தியமாம்

சூரியாரண்ணியன்

திரிதன்வன் புத்திரன். சத்தியவிரதன் என்னும் திரிசங்குதந்தை. திரயாரண்ணியன் எனவும் படுவன்

சூர்ப்பகன்

இவன் மன்மதனாற் கொல்லப்பட்டராக்ஷசன்

சூர்ப்பணகை

ராவணன் தங்கை, முறம் போன்ற நகங்களையுடையாள் என்பது பதப்பொருள்,. இவள் புத்திரன் ஜம்புகமாரன் ஸ்ரீராமர் ஆரணியஞ் சென்றிருந்தபோது அவரைக்கண்ட சூர்ப்பனகை மோகாதீதையாகி அவர்பாற் செல்ல அவர் மறுத்து லக்ஷ்மணனிடத் மவளையனுப்ப, லக்ஷ்மணன் அவளுடைய முறைகேட்டையுஞ் சீதையை எடுத்து விழுங்க எத்தனித்தமையை யுங்கண்டு அவளுடைய நாசியைச்சேதித்து அவளை அவ்விடத்தினின்று மோட்டிவிட்டான். அவள் கரதூஷணாதியரிடத்துச் சென்று அதனை முறையிட, அவர்கள் ராமலக்ஷ்மணரை யெதிர்த்துப் போர்செய்து மாண்டார்கள். இச்செய்திகளை யெல்லாஞ் சூர்ப்பணகை இராவணனிடஞ் சென்று முறையிட அவன் ராமர் வசித்த ஆரணியஞ் சென்று வஞ்சச் சூதாற்சீதையைக் கவர்ந்துசென்றான். இராவணனுக்கு இவ்வழியே நாசத்துக்குக் காரணியாயிருந்தவள் இவளே

சூலினி

பார்வதி

சூளாமணி

தோலாமொழித் தேவர் செய்த ஒரு சைன காவியம். காவியநாயகன் பயாபதி. அந்நூல் பயாபதி புத்திரரைப் பெற்று அவராற் பகையரசரை வென்று அரசபோகம் துய்த்துப் புத்திரனுக்கு முடிசூட்டித் துறவுபூண்டு அருகசரணம்பெற்ற வரலாறுகளை மிகவெடுத்துரைக்கும்

சூளி

பிரமதத்தன் தந்தை

செகராஜசேகரன்

செகராஜசெகரமென்னும் சோதிடநூல் செய்த ஈழநாட்டரசன். அந்நாட்டிலே தமிழ்வளர்த்த அரசருளொருவன். இற்றைக்கு நானூற்றுப்பத்து வருஷங்களுக்கு முன்னுள்ளவன்

செங்குட்டுவன்

இளங்கோவடிகட்கு மூத்தோனாகிய சேரன். இவன் கண்ணகி தன்னாட்டையடைந்து தன் கணவனோடு சுவர்க்கம் புகுந்தாளென்பதைக் கேட்டு இமயமலையிலிருந்து சிலைகொணர்ந்து அவள் வடிவமைப்பித்துப் பிரதிஷ்டை செய்வித்துப் பூசையுந் திருவிழாவும் நடத்தினவன்

செங்குன்று

கொடுங்கோடிருக்கு அயலதாகிய ஒரு மலை. குண்ணகி இம்மலையில் ஒரு வேங்கை மரத்துநிழலிலே நிற்கும்போது அங்கே தெய்வவடிவத்தோடுவந்த கோவலனைக்கண்டு அவனோடு சுவர்க்கம் புகுந்தாள்

செங்கோடு

திருச்செங்கோடென்னும் மலை. இதனை முருகக்கடவுளுக்குரியவிடமாக இளங்கோவடிகளுங் கூறியிருக்கின்றனர்

செந்தில்

அநேக பிரபந்தங்களாற் புகழப்படுவதாகிய இது முருகக்கடவுளது படைவீடுகளுள் ஒன்று. இக்காலத்திலே திருச்செந்தூரென்று வழங்கப்படுகின்றது. குமரகுருபரர் தமது ஊமைத்தன்மை நீங்கப்பெற்ற ஸ்தலமிதுவே

சென்னிமலை

கொங்குநாட்டின் கணுள்ள ஒரு சுப்பிரமணிய ஸ்தலம்

செம்மேனிநாயகர்

திருக்கானூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர்

செயலூர்க்கொடுஞ்செங்கண்ணனார்

இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்

செயிர்க்காவிரியார்மகனார்சாத்தனார்

இவர் கடைச்சங்கப்புலவர்களுளொருவர்

செயிற்றியம்

செயிற்றியனார் செய்த நாடகத் தமிழ்நூல்

செருத்தணி, திருத்தணி, திருத்தணிகை

இது சூரனோடு சுப்பிரமணியர் செய்த செருத்தணிந்தவிடமாதலின் இப்பெயர் பெற்றது. இத்தலத்தில் உதயகாலத்திலொருபூவும் உச்சிக்காலத்தொரு பூவும் மாலையிலொரு பூவும் மலருகின்ற நீலோற்பலத்தையுடைய ஒரு திவ்வியசுனையுளது. அது அற்புத தீர்த்தமெனப்படும். இத்தலம் வேய்கடத்துக்குத் தென்றிசையிலேயுள்ளது

செருத்துணைநாயனார்

தஞ்சாவூரிலே வேளாளர்குலத்திலே அவதரித்துத் திருவாரூரையடைந்து அங்கே சுவாமிக்குத் திருத்தொண்டு செய்து கொண்டிருக்கையில் புஷ்பமண்டபத்தின் பக்கத்திலே விழுந்துகிடந்த ஒரு பூவை எடுத்து மோந்த கழற்சிங்க நாயனாருடைய மனைவியை மூச்சரிந்த சிவபக்தர்

சேக்கிழார்

தொண்டை நாட்டிலே குன்றத்தூரிலே சேக்கிழார் மரபில் அவதரித்த அருண்மொழித்தேவர். அவருக்குச் சேக்கிழார் ரென்பது அம்மரபை விளக்கினமையாலுண்டாயபெயர். அவருடைய கல்வியறி வொழுக்கங்களை அறிந்த அநபாய சோழமகாராஜா அவரைத் தமக்கு மந்திரியாராக்கி அவருக்கு உத்தமசோழப் பல்லவரென்னும் வரிசைப்பெயரையுங் கொடுத்தான். அவர் சைவசமயிகள் புறச்சமயக் காப்பியமாகிய சீவக சிந்தாமணியைச் சொற்சுவை பொருட்சுவைகளை மாத்திரம் விரும்பிக் கற்றுத் தங்கள் வாணாளை வீணாளாகக்கழிப்பதுகண்டு மனங்கசிந்து இம்மை மறுமை யின்பங்களை ஒருங்கேதந்து முத்திக்குச் சாதனமாயுள்ள சிவனடியார் சரித்திரமாகிய பெரியபுராணத்தைப் பாடியருளினார். அப் பெரியபுராணம் சிதம்பரத்திலே சபாநாயகர் சந்நிதியிலே திருவருளாலெழுந்த அசரீரி வாக்காகிய உலகெலாமுணர்ந்தோதற்கரியவன் என்னும்மடியை முதலாகக்கொண்டு ஆயிரக்கால் மண்டபத்திற் பாடிமுடிக்கப்பட்டது. பக்திரசம் பெருகப் பாடுஞ்சக்தி இவரிடத்திலே பெரிதுமுண்டு, கர்ணபாரம்பரியத்திலே கிடந்த அடியாருடைய சரித்திரங்களைச் சேக்கிழார் உள்ளவுள்ளவாறு கேட்டாராய்ந்து பாடி முடித்துச் சபாநாயகர் சபையிலேயே அரங்கேற்றினர். அநபாய சோழமகாராஜா அவருக்குக் கனகாபிஷேகம் பண்ணி அவரையும் பெரியபுராணத்தையும் யானைமேலேற்றித் தானுமேறியிருந்து அவருக்குச் சாமாம் வீசிக்கொண்டு வீதிவலஞ்செய்வித்தான். அரசன் அதன் பின்னர்ப் பெரிய புராணத்தைச் செப்பேட்டிலெழுதுவித்து அவ்வாலயத்திலே வைத்தான். சேக்கிழார் அது நிகழ்ந்தபின்னர் ஞானமுடி சூடி அத்தலத்திற்றானேயிருந்து சிலகாலஞ்சென்ற பின்னர்ச் சிவபதமடைந்தனர். அநபாய சோழமகாராஜாவினது காலம் சாலிவாகனசகம ஆயிரத்து நாற்பதுவரையிலுள்ளது. ஆதலின் சேக்கிழார் காலம் எழுநூற்றெழுபதுக்கு முன்னுள்ளதாதல் வேண்டும்

சேடக்குடும்பியன்

திருவனந்தபுரத்துள்ளளா னோரந்தணன். துன்பால் அடைக்கலமாகவிருந்த கண்ணகிக்கு நேர்ந்த துன்பங்களைக் கேட்டுத் தீயில் விழுந்திறந்தமாதரி மறுமையில் இவனுக்கு மகளாயினள்

சேடி

ஒரு வித்தியாநகரம்

சேதன்

துருஹியன் பௌத்திரன்

சேதி

விதர்ப்பன் மூன்றாம் புத்திரனாகிய ரோமபாதன் வமிசத்தவனாகிய உசிகன் புத்திரன். இவன் வமிசம் சேதிவமிசம் என்றும், இவனுளுந் தேசம் சேதி தேசமென்றுஞ் சொல்லப்படும்

சேதிராயர்

திருவிசைப்பாப்பாடினோர் ஒன்பதின் மருளொருவர்

சேது

ஸ்ரீராமர் ராவணசங்காரம் முடித்து மீண்டகாலத்தில் பிரமஹத்தி நீங்கும் பொருட்டு ஆடியதீர்த்தத்துறை. இது சேதுபந்தனத்துக்கருகே ராமேசுவரத்தைச் சார்ந்த சமுத்திரத்திலுள்ளது. இது மகா விசேஷமுடைய தீர்த்தமென இமயகிரிப்பிரதேச முதலாயுள்ள தேசங்களினின்றும் ஆரியர் வருஷந்தோறுஞ் சென்று படியப்பெறுவது

சேதுபந்தனம்

திருவணை. அது பாண்டிநாட்டினின்று கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லவேண்டிய ராமனும் வாநர சேனையும் கடலைத் தூர்த்திட்ட அணைப்பாதை. இதனை வல்லிபுத்தூரர் தமது பாரதத்திலே தென்கடலும் வடகடலுமாகிய இரண்டு யானைகளும் முட்டிக்கொள்ளாவண்ணம் இடையேயிடப்பட்ட கணையமரமென வர்ணிப்பர்

சேதுபுராணம்

ராமேச்சரதலபுராணம். ஆது நிரம்பவழகிய தேசிகராலே பாடப்பட்டது. அது மூர்த்தி தலம் தீர்த்தமென்னும் மூன்றன் மான்னியங்களையுஞ் செவ்வே கூறுவது. சொற்பொரு சிறப்புக்களாற் சிறந்து கற்போர்க்கினிமை பயப்பது

சேந்தனார்

திருவாகர நிகண்டு செய்வித்த ஒரு சிற்றரசர். இவர் அருகசமயத்தவர். பட்டணத்துப் பிள்ளையாருக்கு மந்திரியுந் தோழருமாயிருந்த ஒருவைசியர் இவரைக் குற்றமின்றி அரசன் விலங்கிட்டுவைத்த போது அவர்மகன் பட்டணத்துப்பிள்ளையாருக்கு விண்ணப்பஞ்செய்ய, பிள்ளையார் ஒரு பாடலைப்பாடிச் சிவனைவேண்ட அவரருலால் விலங்கைத் தவிர்த்துக் காக்கப்பட்டவர். திருவிசைப்பாப்பாடினோருளொருவர். இவர் தஞ்சைமாநகரத்திருந்து விளங்கியவர். சிவபக்தி மேலீட்டாற் றமது மந்திரி விருத்தியை விடுவித்துச் சிவன்மீது இசைப்பாக்களைப் பாடித் தோத்திரஞ்செய்து சிவதொண்டு புரிவதையே பரம விருத்தியாகக் கொண்டவர். இவரையும் பட்டணத்தடிகளுடைய தோழராகிய சேந்தனாரையுமொருவராகக் கொள்வாருமுளர்

சேனஜித்து

கிருதாசுவன்புத்திரனென்றும் இரண்டாம் யுவநாசுவன் தந்தையென்றும் சொல்லப்படுவன. விசுவஜித்து புத்திரன். ருசிராசுவன், திருடஹனு, காசியன, வற்சஹனு என நால்வர் இவன் புத்திரர்

சேனாவரையர்

தொல்காப்பியஞ் சொல்லதகாரத்திற்குச் சேனாவரையம் என்னுமுரைசெய்த ஆசிரியர். வடமொழி தென்மொழியிரண்டிலும் மிக்க வல்லுநர். குசாக்கிரவிவேகமுடையவர். அவர்க்கிணையான வுரையாசிரியர் அவர்க்குப்பின் இன்றளவும் பிறந்திலர். அவர் நச்சினார்க்கினியர்க்கு முந்தியகாலத்திலுள்ளவர் என்பது நச்சினார்க்கினியர் தாமியற்றிய வுரையினுள்ளே ஒரோவிடத்துச் சேனாவரையர் மதத்தை மறுத்துத் தம்மதங் காட்டலாலினிது புலப்படும். அவருடைய ஜன்மநாடு பாண்டிநாடென்றும் ஜாதியினால் அந்தணர் என்றுங் கூறுவார்கள். அவர் இளம்பூரணருரையை இடையிடை மறுத்தலால் இளம்பூரணர் முந்தியவர். ஆதலாற் சேனாவரையர் இற்றைக்கு ஆயிரத்திருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னுள்ளவராதல் வேண்டும்

சேரன்

சேரநாட்டரசன் சேரன் எனப்படுவன். அவன் தமிழ்நாட்டு மூவேந்தருளொருவன். இவ்வமிசத்தரசர் இன்றுமுளர். முற்றிருவமிசமுமழிந்தொழிந்தன. சேரன் தேசம் மலைநாடு. அஃதிப்போது மலையாளமெனப்படும் சேரன்தேசத்துத் துறை பொருளைத்துறை. சேரராஜாக்களுக்குரிய மாலை போந்தின்றார். அவர்களுக்குரிய சிறந்தமலை கொல்லி

சேரமான் கடுங்கோவாழியாதன்

கபிலராலும், குண்டுகட்பாலியாதனாராலும், குண்டுகட்பாலியாதனாராலும் பாடப்பட்டவொரு சேரன். தன்னைப் பதிற்றுப்பத்தினுள்ளே ஏழாம்பத்தென்னும் பாடலாலே பாடிய கபிலருக்கு நூறாயிரங்காணமும் மலைமீதேறிக்கண்ட நாடும் பரிசாகக் கொடுத்த வள்ளல் இவ்வரசனே, இவன் போராண்டையிலுஞ் சிறந்தவன். இவன் இறந்த விடம் சிக்கற்பள்ளி. காணம் ~ ஒரு பொற்காசு. அது காணம்போலும் வடிவினதாதலின் காண மெனப்படுவதாயிற்று, காணம் ~ கொள்ளு

சேரமான் கணைக்கா லிரும்பொறை

கோச்செங்கட்சோழனாலே சிறை செய்யப்பட்டுக் காராக்கிருகத்திலே கிடந்து தாகத்தாற் சோகித்தவழியும் தண்ணீரும் வாங்கியுண்ணாதுயிர் துறந்தவன். அரசர் மரபிலே கருப்பத்தனுள்ளேயிறந்து பிறக்கின்ற சிசுவையும் பிண்டத்தையும் வாளாற் போழ்ந்து புதைப்பது மரபாகவும் அம்மாத்திரையும் பெறாது சங்கிலியிற் பணிக்கப்பட்ட நாய்போற் சிறையிடைக்கிடப் பேனாயினும், பகைவன் கையிலே தண்ணீர் வாங்கியருந்துவேனல்லேன். அவ்வாறுண்ணும் புத்திரரை அரசர் ஈன்று வப்பவராகார் என்னுங் கருத்தினையுடைய குழவியிறப்பினு மூன்றடி பிறப்பினும் ~ ஆளன்றென்று வாளிற்றப்பார் ~ தொடர்படுஞமலயினிடர்ப் படுத்திரீஇய ~ கேளல்கேளீர் வேளாண் சிறபத ~ மதுகையின்றி வயிற்றுத்தீத் தணியத் ~ தாமிரந்துண்ணுமளவை ~ யீன்மரோ விவ்வுலகத்தானே என்னும் இப்பாட்டு உயிர் துறக்கும் போது அவனாற் பாடப்பட்டது, புறநானூறு

சேரமான் கருவூரேறியவொள்வாட்கோப் பெருஞ்சேரலிரும் பொறை

இச்சேரன் நரிவெரூஉத்தலையராற் பாடப்பட்டவன். அப்புலவர் நல்லுடம்பு பெறுவதற்குக் காரணனாயிருந்தவனும் இவ்வரசனே, புறநானூறு

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்

இவனும் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி யென்னுஞ் சோழனும் போரிலிறந்த போது கழாத்தலையராலும் பரணராலும் அச்சோழனோடு சேர்த்துப்பாடப்பட்டவன்

சேரமான் குட்டுவன்கோதை

சோணாட்டு எறிச்சிலூர்மாடலன் மதுரைக்குமரனாராற் பாடப்பட்ட வீகையாளன்

சேரமான் கோக்கோதைமார்பன்

இவன் கோச்செங்கட் சோழன் காலத்துச் சேரன். இவன் பொய்கையாராற் பாடப்பட்டவன். இவன் வண்மையிற் சிறந்தோனென்பது புறநானூற்றால் விளங்கும்

சேரமான் கோட்டம் பலத்துத்துஞ்சியமாக்கோதை

புறநானூற்றினுள் வருமொருபாடலால் புலமைநிறைந்த சேரருளொருவ னென்பது துணியப்படும்

சேரமான் சடலோட்டிய வேல் கெழுகுட்டுவன்

பரணராற் பாடப்பட்ட வொரு சேரன். இவன் போர்வன்மையை நோக்கி யானைப்படையை மேகமாகவும், சேனாவீரர் கையிலுள்ள வாட்படைகளை மின்னலாகவும், போர்ப்பறையை முழக்கமாகவும், குதிரைகளினது கதியைக் காற்றாகவும், வில்லினாற் செலுத்தப்படும் பாணங்களை மழை வருஷமாகவும் பூமியை வயலாகவும், தேரை ஏராகவும், எறியப்படும் வேலாயுதங்களை வித்தாகவும், சாய்ந்துகிடக்குந் தலைகளை நெற்போராகவுங் கொண்டு வேளாண்மைசெய்பவனென அவனைப் பரணர் புறநானூற்றிலே புகழ்ந்து பாடுவர்

சேரமான் செல்வக்கடுங்கோவாவாழியாதன்

சிக்கற்பள்ளியிலிறந்த பெருங் கொடையாளனாகிய சேரன். இவன் குண்டுகட்பாலியாதனாராற் பாடப்பட்டவன். கபிலா துகையைப்பற்றி, நுங்கை மெல்லியவென, அவராற்பாடப்பட்டசேரன், புறநானூறு

சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை

தனது முரசுகட்டிலி லறியாதேறி நித்திரை செய்த மோசிகீரனாரைத் தண்டியாது அவர் துயிலொழிந்தெழுந் துணையுங் கவரிவீசிநின்ற பெருந்தகையாகிய சேரன். அவ்வரும் பெருஞ்செயல் புறநானூற்றினுள்ளே வரும் மோசிகீரனார் பாடலிலே விரித்துப் புகழப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்தினுள் எட்டாம் பத்தாலே தன்னைப் பாடிய அரிசில்கிழாருக்கு ஒன்ப திலக்ஷம் பொன் பரிசில் கொடுத்தோனும் தகடூரை வென்றவனுமிவனே

சேரமான் பாமுடிரெறிந்த நெய்தலங்கானலிளஞ்சேட் சென்னி

சேரமானுடைய பாமளூரை வென்று கைக்கொண்ட சோழன். இவன் ஊர் பொதிபசுங்குடையராற் பாடப்பட்டவன். ஒருநாள் ஊனை வாங்கிக்குடையினுள் மறைத்துச் சென்றமையால் அப்புலவர்க்கு இப்பெயர் வருவதாயிற்று

சேரமான் பெருஞ்சேரலாதன்

இவன் கரிகாற்சோழனுக்குத் தோற்று நாணி வடநாட்டிற் சென்றிருந்த சேரன். இவன் கழாத்தலையார் வெண்ணிக்குயத்தியார் என்னும் இருவராலும் பாடப்பட்டவன், புறநானூறு

சேரமான் பெருஞ்சொற்று உதியன் சேரலாதன்

இவன் பாண்டவர்களும் கௌரவர்களும் செய்த யுத்தகாலத்திலே அவர்கள் சேனைகளுக்கு அந்த யுத்தமுடியுங்காறும் நல்லுணவளித்த பெருஞ்செல்வனாகிய சேரன். இவன் முரிஞ்சியூர் முடிநாகராயராற் பாடப்பட்டவன். புறநானூற்றிற் காண்க. முதற்சங்கத்திருந்த முடிநாகராயரும்வேறு. இவரும் வேறு. இவர் இடைச்சங்கத்திலிருந்தாருள் ஒருவரால் வேண்டும். புறநானூற்றுச் செய்யுட்களெல்லாம் இடைச்சங்கத்தும் கடைச்சங்கத்துமிருந்த புலவர்கள் பலராற் பாடப்பட்டனவேயாதலின் அது நன்கு துணியப்படும்

சேரமான் பெருமாணாயனார்

கழறிற்றறிவார் நாயனார் காண்க

சேரமான் பெருமாள்

ஆயிரத்து அறுபது வருஷங்களுக்கு முன்னே சேரநாட்டிலே, மலைநாட்டிலே, அரசுபுரியுநாளில் துருக்கரோடு யுத்தஞ்செய்து தோற்று அவர்களுடைய சமயத்திலே பிரவேசித்துத் துருக்கனாகிப் பின்னருஞ் சிலநாளரசுபுரிந்து ஈற்றிலே தனது நாட்டைவிட்டோடித் துருக்கருடைய தெய்வஸ்தலமாகிய மக்கபுரியை அடைந்து அங்கே இறந்தவன். அவன் சமாதி இன்றுமங்குளது. அவன் இறந்தகாலம் அச்சமாதியிலே வரையப்பட்டிருக்கின்றது

சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறை

இவன் சோழன் ராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளியோடு போர்செய்த சேரன். இவன் பொருந்திலிளங்கீரனாராலும் வட்வண்ணக்கன் பெருஞ்சாத்தனாராலும் பாடப்பட்டவன், புறநானூறு

சேரமான் மாவெண்கோ

கானப்பேர்தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் இராசசூயம் வேட்டபெருநற்கிள்ளியும் இச்சேரன் காலத்தவர்கள். மூவரும் நட்பினர்கள். இச்சேரமானே சேரமான் பெருமாணாயனாரெனப் பெயர் கொண்டவர். இவரைப் பாடிய புலவர் ஒளவையார், புறநானூறு

சேரமான் யானைக்கட் சேரலிரும்பொறை

மாந்தரஞ்சேர லிரும் பொறை பாதுகாத்தநாடு தேவருலகத்தை யொக்கும் என்றுலகம் போற்ற அரசுபுரிந்த சேரன். இவன் தன்னைப்பாடும் புலவர்க்குப் பிறரிடத்தே சென்று பாடியிரந்து நில்லாவண்ணம் அளவின்றிப் பெரும்பொருள் வழங்கும் பெருங் கொடைவள்ளல். இவனைப் பாடியபுலவர் குறுங்கோழியூ கிழார். இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் சிறைசெய்யப்பட்டிருந்த ஞான்றும் குறுங்கோழியூர்கிழார் தாம் முன்னர் அவன்பாற் பெற்ற நன்றியை மறவாது போய்க்கண்டு அவன் புகழை மிகவெடுத்துப்பாடினர், புறநானூறு

சேரமான் வஞ்சன்

இவன் திருத்தாமனாராற் பாடப்பட்ட சேரன்

சேரமான்குடக்கோவிளஞ் சேரலிரும்பொறை

பெருங்குன்றூர் கிழாராற் பாடப்பட்ட சேரன். புதிற்றுப்பத்தினுள்ளே ஒன்பதாம்பத்திற்குத் தலைவனு மிவனே

சேரமான்குடச்கோச் சேரலிரும்பொறை

பெருங்குன்றூர் கிழாராற் பாடப்பட்ட சேரன். புதிற்றுப்பத்தினுள்ளே ஒன்பதாம்பத்திற்குத் தலைவனு மிவனே

சேரமான்பாலைபாடிய பெருங்கடுங்கோ

இவன் கொடையாலும் வீரத்தாலும் புகழ் படைத்தவொரு சேரன். பேய்மகள் இளவெயினியாற் பாடப்பட்டவன். பாட்டிலும் வல்லவன்

சேரலாதன்

செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகட்கும் தந்தை

சேரவமிசாந்சக பாண்டியன்

சோழவமிசாந்தக பாண்டியன் மகன்

சேஷன்

ஆதிசேஷன்

சைசுநாகர்

சிசுநாகன் வமிசத்தோர். இவர்கள் பதின்மர். பிரத்தியோதர்களுக்குப் பின்னர் மகததேசத்திலே முந்நூற்று அறுபத்திரண்டுவருஷம் அரசுபுரிந்தோர்

சைதன்னியர்

இவர்கள் இலிங்கதாரிகளைப்போல வருணாச்சிரமதருமங்களை நிராகரித்திருப்பவர்கள். இவர்களுக்குப் பத்தியே விசிட்டமுள்ளது. விஷ்ணுவையே பூசிப்பவர்கள். இவர்கள் உத்தரத்திலே பெருக்கமாயுள்ளவர்கள்

சைத்தியர்

யாதவபேதம். விதரியன் புத்திரனாகிய ரோமபாதம் வமிசத்தனாகிய சேதிவழிவந்தவராதலின் இப்பெயர் பெற்றார்

சைத்திராதம்

குபேரன் உத்தியானவனம்

சைந்தவன்

ஜயத்திரதன். இவன் சிந்துதேசத்தரசன். துரியோதனன் தங்கையாகிய துற்பலையை மணம்புரிந்தவன். இவன் தந்தை விருத்தடித்திரன். இச்சைந்தவன் பாண்டவர்கள் வனவாசஞ் செய்து கொண்டிருந்த காலத்திற் காட்டிலே ஒருநாள் தனியிருந்த திரௌபதியைப் பலபந்தமாகக் கவர்ந்து போக, அஃதுணர்ந்த பாண்டவர்கள் உடனே தொடர்ந்து சென்று இடைவழியிலே தடுத்து அவனை மானபங்கஞ்செய்து திரௌபதியை மீட்டுச் சென்றார்கள். பின்னர் பாரதயுத்தத்திலே அர்ச்சுனனாற் கொல்லப்பட்டவன்

சைப்பியர்

உசீநரன் புத்திரனாகிய சிபிவமிசத்தோர்

சைப்பியை

விதேகராலன் புத்திரி. இவள் மகாபதிவிரதை. சியாமகன் பாரி. விதர்ப்பன் தாய்

சைவசமயகுரவர்

மாணிக்கவாசக சுவாமிகள், திருஞானசம்பந்த மூர்த்திகள், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் இந்நால்வரும் இப்பெயர் பெறுவர்

சைவம்

ஒரு புராணம். இது வாயுவினாற் கூறப்பட்டது. சுவெதவராககற்பசம்பந்தமாகிய சிவமான்மியங்களை எடுத்துரைப்பது. அதன் கிரந்தசங்கியை பன்னீராயிரம். சிவனை முழுமுதற்கடவுளாகக் கொண்ட சமயம். இச்சமயத்தோர் சைவரெனப்படுவர். பதி பசு பாசம் என மூன்றும் நித்தியப் பொருள்கள் என்றும், பசுக்களாகிய ஆன்மாக்கள் புண்ணியமேலீட்டினாலே பதிஞானம் பெற்றுப் பாசத்தடை நீங்கிச் சிவத்தோடிரண்டறக் கலத்தலே முத்தியென்றும், இச்சையே பிறவிக்குக் காரணமென்றும், பற்றொழிதலே முத்திக்குக் காரணமென்றும், சிவன் சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகமென்னும் பஞ்ச கிருத்தியங்களையும் ஆன்மாக்களை யீடெற்றும் பொருட்டுச் செய்பவரென்றும், செய்யினும் நிர்விகாரி யென்றும், சச்சிதாநந்தப் பொருளென்றும் அச்சமயம் தர்க்கவாயிலாக ஸ்தாபிக்கும்

சைவாகமங்கள்

காமியம் முதல் வாதுளமீறாகிய இருபத்தெட்டுமாம். இவை சதாசிவமூர்த்தியினது ஈசான முகத்தினின்றும் தோற்றின. தத்துவ சொரூமாகிய விக்கிரகங்கள், ஆலயங்கள் பூவைகள் என்னுமிவற்றினுன்மைப் பொருள்கள். அவ்வாகமங்களா லுணர்த்தப்படும். இவ்வாகமங்கள் மந்திர மெனவும், தந்திரமெனவும், சித்தாந்தமெனவும் பெயர் பெறும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கோடியாக இருபத்தெட்டுமிருபத்தெட்டுக் கோடி கிரந்தங்களுடையன. இவை ஞானபாதம் யோகபாதம், கிரியாபாதம், சரியாபாத மென்று தனித்தனி நான்கு பாதங்கள் உடையனவாயிருக்கும். இவற்றுள் ஞானபாதம் பதி, பசு, பாசம், என்னும் திரிப தாத்தங்களின் ஸ்வரூபத்தையும், யோகபாதம் பிராணாயாமம் முதலிய அங்கங்களையுடைய சிவயோகத்தையும், கிரியா பாதம், மந்திரங்களின் உத்தாரணம், சந்தியா வந்தனம், பூசை, செபம், ஓமம் எனபனவற்றையும், சமீய விசேஷ நிருவாண ஆசாரியாபிஷேகங்களையும், சியாபாதம் பிராயச்சித்தம், சிவலிங்கவிலக்கண முத லியவைகளையும் உபதேசிக்கும். ஆகமம் என்பது, பரமாப்தரினின்றும் வந்தது எனப் பொருள்படும். இவ்வாகமங்களுக்கு வழி நூல் நாரசிங்னம் முதல் விசுவகன்மம் ஈறாகிய உபாதகமங்கள். இருநூற்ழெழுமாம். மூலகமங்கள் இருபத்தெட்டும் வேதம் போலச் சிவனாலருளிச் செய்யப் பட்டமையின் சைவர்க்கு இரண்டும் முதன் நூல்களாம்

சைவாகமங்கள்

இவை இவையென ஆகமங்கள் என்பதனுட் கூறினாம். இருபத்தெட்டாகமங்களும் ஒவ்வொன்றுக்குக் கோடி கிரந்தமாக இருபத்தெட்டுக் கோடி கிரந்தங்களையுடையன. ஞானம், யோகம், கிரியை, சரியை யென நான்கு பாதங்களையும், ஒவ்வொன்றுங் கூறவன. ஞானபாதம் திரிபதார்த்த சொரூபத்தையும், யோகபாதம் பிராணாயாம முதலிய அங்கங்களோடு கூடிய சிவயோகத்தையும், கிரியாபாதம் பூசைஓமம் முதலியவற்றையும், சரியாபாதம் சமயாசாரங்களையு மெடுத்துக்கூறும். இவ்வாகமங்கள் சிவன் மேன்முகத்திற் பிறந்தன வெனப்படும்

சைவை

அநிலன் பாரி

சொக்கநாதர்

திருஆலவாயிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்

சொக்கநாயகி

திருப்புன்கூரிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர்

சொர்ணபுரிசுவரர்

திருச்செம்பொன்பள்ளியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

சொர்ணபுரீசர்

திருப்புத்தூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர்

சோணபுரம்

வாணாசுரன் ராஜதானி

சோணாட்டுப்பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன்விண்ணந்தாயன்

அந்தணர்க்குரிய அறுதொழிலுஞ் சிரத்தையோடு புரியும் ஒரு பிராமணோத்தமர். கோடையாலும் பெரும்புகழ்படைத்தவர். ஆவூர் மூலங்கிழாராற் பாடப்பட்டவர், புறநானூறு

சோணை

மைநாகபர்வதத்திலே லுற்பத்தியாகிக் கங்கையிற் சங்கமிக்கும் நதி. சித்தாச்சிரமத்திலிருந்து மிதிலைக்குப் போகும் மார்க்கத்திலே இப்பெயரையுடைய நதியுமொன்றுளது. அது மகததேசத்திற்பாய்தலால் மாகதியெனவும்படும். இதிலிருந்தே சோணபத்திரவிநாயக மூர்த்தங்கள் எடுப்பார்கள்

சோதிடம்

ஜியோதிஷம் காண்க

சோனகம்

ஆரியதேசத்துக்குமேற்கின்கணுள்ள ஒரு தேசம்

சோனை

வச்சிரநாட்டைச் சார்ந்த ஓராறு

சோமகன்

சஹதேவன் புத்திரன். சுஜன்மகிருதுதந்தை. விருஷதன் தந்தை தந்தை. ஜந்தன்தந்தையாகிய ஓரிராஜவிருஷி. பிரமா நித்திரை போயிருந்தகாலத்தில் வேதங்களைத் திருடிப்போய்ச் சமுத்திரத்தில் ஒளித்தவசுரன். விஷ்ணு மற்சாவதாரமெடுத்து அச்சமுத்திரத்திலாராய்ந்து வேதங்களைக் கைப்பற்றிப் போய்ப்பிரமாவுக்கீந்தனர்

சோமகுண்டம்

சிரவுதாக்கினியிலே செய்யப்படுகின்ற யாகபேதங்கள். அவை அக்கினிஷ்டோமம். ஆத்தியக்கிமனிஷ்டோமம், உக்தியம், சோடசி, அதிராத்திரம், அப்தோரயாமம், வாஜபேயம் என ஏழாம்

சோமசிரவசு

சுருதசிரவன் புத்திரன். ஜனமேஜயன் புரொகிதன்

சோமசிரவம்

பாஞ்சாலத்துக்குச் சமீபத்திலுள்ள புண்ணிய தீர்த்தம். அத்தீர்த்தக் கரையிலேயே அங்காரவர்ணன் அர்ச்சுனனோடு யுத்தஞ்செய்து சாபவுடல் போக்கிப் பூர்வரூபமாகிய சித்திராதன் என்னும் பெயரோடு தனதுலகஞ் சென்றனன்

சோமசுந்தரபாண்டியன்

இவர் மலையத்துவசபாண்டியன் மருகனார். தடாதகைப் பிராட்டியாரை மணம்புரிந்தவர்

சோமசுந்தரபாதசேகரன்

இவன் வங்கியபாத பாண்டியனுக்குப்பின் அரசுசெய்த பாண்டியன். சோமசுந்தரக் கடவுளது அருள் கொண்டு சோழனை மடுவில் வீழ்த்தியவன் இவனே

சோமசூடாமணி

வமிச பூஷணபாண்டியனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன்

சோமதத்தன்

சந்தனு சகோதரனாகிய பாகிலகன் புத்திரன். இவன் பாரதயுத்தத்திலிறந்தவன். பூரி, பூரிசிரவன், சலன் என்னுமூவரும் இவன் புத்திரர்

சோமதீர்த்தம்

பிரபாச தீர்த்தம். சோமநாதபுரத்துக்குச் சமீபத்திலுள்ளது. சந்திரன் தக்ஷன் சாபத்தாற் பெற்ற க்ஷயரோகத்தை இத்தீர்த்தத்திலாடித் தீர்த்துக் கொண்டமையால் இஃது இப்பெயர் பெற்றது

சோமநாதம்

கூர்ச்சர தேசத்திலுள்ள ஒரு திவ்விய சிவஸ்தலமும் நகரமுமாம். சுந்திரன் தவஞ்செய்து க்ஷயரோகம் நீங்கப்பெற்ற ஸ்தலம்

சோமன்

அத்திரிக்கு அநசூயையிடத்துப் பிறந்தவனாகிய சந்திரன். இச்சந்திரனே மண்ணுலகத்துக்குத் தோன்றுபவன். சிவன் முடியிருப்பவன் கடலிற் பிறந்தவன். சந்திரனை அத்திரிபுத்திரனென்று சிலபுராணங்களும் பாற்கடலிற் பிறந்தவனென்று சில புராணங்களும் கூறுதல்கற்பபேதம். சிவன். வசுக்களுளொருவன். இவன் பிரஜாபதி புத்திரன். இவன் மனைவி மனோஹரை புரொஜபன் வரியன் பிராணன் கரணன் ரமணன் என ஐவர் புத்தரரையும் பிரதையென்னும் புத்திரரையும் பெற்றவன். இப்பிரதை பதின்மர் கந்தருவர்களுக்குப் பொதுமனைவி. யமன். குபெரன்

சோமாசிமாறநாயனார்

அந்தணர் குலத்திலே பிறந்து அடியார்களுக்குத் திருத்தொண்டு செய்தலே பெருஞ் சிவபுண்ணியமெனக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனாரை அடைந்து அவரேவலின் வழிநின்றொழுகிச் சிவபக்தி சாதித்தவர்

சோமாஸ்கந்தர்

மகேசுரவடிவம் இருபத்தைந்தனுளொன்று. சிவனும் உமாதேவியாரும் முருகக்கடவுளைத்தழுவிய அவசரம்

சோமி

ஆற்றூரிலே பிறந்து தமிழ்க்கல்வியிலே மிக்க புலமையுடையளாய்ச் சிறந்து புலவர்களுக்குப் பொன்மாரிவழங்கிக் காளமேகப்புலவராலும் பாடப்பட்ட ஒரு தாசி

சோரன்

ஒரு சம்ஸ்கிருதகவி. வில்கணனெனவும்படுவன்

சோழதேசம்

சோழகுலத்தரசர்க்குரிய தேசம். கிழக்குந் தெற்குந் கடலும், வடக்கு வெள்ளாறும், மேற்குப் பாண்டிநாடும். எல்லையாகவுடைய தேசம். அது விரிநதிபாயநாடாதலின் நீர்மலிவான் என்றும் புனனாடென்றும் காரண விடுகுறிப் பெயர்கள் கொண்ட நீர்வளம் நிலவளம் வாய்ந்த நாடு. பழைமையும் நாகரிகமும் வாய்ந்தநன் மக்களையுடையது. காவிரிப்பூம்பட்டினம் கருவூர் திருவாரூர் முதலிய சிறந்த ராஜமாநகரங்களைப் பண்டைநாளுடையது. பின்னர்நாள் அதிப்பிரபல்லிய முடையதாகிய தஞ்சை மாநகரம் திருக்குடந்தை நகரென்று மிரு மகா நகரங்களைத் தன்னகத்தேயுடையது. எண்ணில்லாத சிவஸ்தலங்களும் விஷ்ணு ஸ்தலங்களுமுடையது செல்வமுங் கல்வியுமநாகரகமும் சதாசாரமும் வாசஞ்செய்யுந் தேசமிது வொன்றேயாம். காருகமுங் கம்மியமுங்குறைவற நிகழப்பெறுவது மிந்நாட்டின் கண்ணேயாம்

சோழநாட்டுப் பிடவூர்கிழார்மகன் பெருஞ்சாத்தன்

வேளாளில் உழுவித்துண்போன். அரசர் பெண் கொள்ளுங்குடியிலுள்ளேரன் மதுரை நக்கீரனாற் பாடப்பட்டவன். பின்னர் நச்சினார்க்கினியராலும் பொருளதிகாரவுரையினுள்ளே எடுத்துக் கூறப்பட்டவன்

சோழன்

திஷ்யந்த பௌத்திரனாகிய ஆசிரதன் புத்திரன். இவனே சோழதேச ஸ்தாபகன்

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

சேரமானமாந்தரஞ் சேரலிரும்பொறையனைப் போரிடைவென்றவன். சேரமான்மா வெண்கோவுக்கும் கானப்பேர்தந்த உக்கிரப் பெருவழுதிக்கும் நட்பினன். பாண்டராங்கண்ணனாராலும் ஒளவையாராலும் உலோச்சனாராலும் பாடப்பட்டவன்

சோழன் உருவப் பஃறேரிளஞ் சேட்சென்னி

இளஞ்சேட்சென்னி உருவப்பஃறேரிளையோன் என்னும் பெயர்களாலும் வழங்கப்படுவன். இவன் வீரங் கொடைகளாற் சிறந்தோன். ஆழுந்தூர்வேளிடத்துப் பெண் கொண்டோன் என நச்சினார்க்கினியர் கூறுவர். இவன் கரிகாற்சோழன் தந்தை. அவனைப் பரணரும் பெருங்குன்றூர்கிழாரும் பாடினர்

சோழன் நலங்கிள்ளி சேட்சென்னி

இவன் இலவந்திகைப் பள்ளியிலே பிறந்த சோழன். ஏறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனாராற் பாடப்பட்டவன்

சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி

தித்தன் என்னுஞ் சோழன்மகன். தந்தையைப் பகைத்து நாடிழந்து நல்குரவாற் புல்லரிசியுமுண்டு சிலகாலமிருந்து பின்னர் நாடுகொண்டரசுபுரிந்தவன், புறநானூறு

சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி

சேரமான் அந்துவஞ்சேரலிரும் பொறைக்குப்பகைவன். இவனைப் பாடியபுலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், புறநானூறு

சோழன் வேற்பஃறடக்கைப்பெருநற்கிள்ளி

சேரமான் குடக்கோநெடுஞ்சேரலாதனாற் போரிற் கொல்லப்பட்டவன். பரணராலும் கழாத்தலையராலும் பாமாலைசூட்டப்பட்வன், புறநானூறு

சோழன்கரிகாற் பெருவளத்தோன், சோழன்கரிகாலன்

உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னிபுதல்வன். இவன் நாங்கூர் வேளாளனிடத்துப் பெண் கொண்டவன் என நச்சினார்க்கினியர் கூறுவர். கரிகாற்சோழன’’காண்க

சோழன்கிள்ளிவளவன்

குராப்பள்ளியி லிறந்தவனாதலின் குராப்பள்ளித் துஞ்சியகிள்ளிவளவ னெனவும்படுவான். குருவூரையழித்தவனும் கோவூர்க்கிழாராற் பாடப்பட்டவனும் இவனே. குளமுற்ற மென்னுமூரிலே இறந்தசோழன். கோடை வீரம் கல்விகளாற் பெரும் பெயர்படைத்தவன். உழையூரிலிருந்தரசு புரிந்தவன். ஆலத்தூர் கிழார், கோவூர்க்கிழார், மாறொக்கத்து நப்பசலையார் இடைக்காடனார் முதலிய புலவர் அநேகராற்பாடப்பட்டவன், புறநானூறு

சோழன்செங்கணான்

கோச்செங்கடசோழநாயனார் காண்க

சோழன்நலங்கிள்ளி

சோழன் மாவளத்தான் தமையன். பாடும் புலமையுடையவன். போரிற்பேரூக்கமும் அவாவுமுடையவன். பாண்டி நாட்டை வென்று புலிக்கொடிநாட்டியவன். பின்னர் உறையூர் முதுகண்ணன் சாத்தனாரால் அறநெறியில் நிறுத்தப்பட்டிருந்து புண்ணியங்களியற்றி வந்தவன். உறையூர் முதுகண்ணன் சாத்தனார். கோவூர்க்கிழார், ஆத்தூர் கிழாரென்னு மூவராலும் பாடப்பட்டவன்

சோழன்நல்லூருத்திரன்

இவன் புலமைமிக்கோன் என்பது புறநானூற்றினுள்வரும் அவன் பாடலாலினிது புலப்படும்

சோழன்நெய்தலங்கான லிளஞ்சேட்சென்னி

ஊன்பொதிபசுங்குடையாரென்பவராற் பாடப்பட்டவன். இளவரசாய் நெய்தலங்கான லென்னுமூரிலிருந்து உரியகாலத்தில் அரசு கொண்டவனாதலின் அப்பெயர் பெற்றான்

சோழன்பெருந்திருமாவளவன்

இவன் குராப்பள்ளியிலே யிறந்தவன். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணானாராலும் மருந்து வன்றாமோதரனாராலும் பாடப்பட்டவன், புறநானூறு

சோழன்மாவளத்தான்

இவன் சோழன் நலங்கிள்ளிதம்பி. தாமப்பல் கண்ணனாராற் பாடப்பட்டவன், புறநானூறு

சோழவமிசாந்தக பாண்டியம்

ரிபுமர்த்தன பாண்டியனுக்குப் பின் அரசுசெய்த பாண்டியன்

சோழியவேனாதி திருக்குட்டுவன்

மிக்ககொடையாளன். ஏறிச்சிலூர்மாடலன் மதுரைக்குமரனாராற் பாடப்பட்டவன்

சௌகந்திகம்

சௌகந்திக புஷ்பங்கள் நிறைந்துள்ளதாகிய ஒரு தாடகம். இது குபேரன் நந்தனவனத்திலுள்ளது. இத்தடாகத்திலிருந்தொரு சௌகந்திக புஷ்பம் வாயுவினாற் பறித்து வீசப்பட்டுத் துரொபதை முன்னே வந்து வீழ்ந்தது. அதனைக் கண்ணுற்ற துரௌபதை அப்புஷ்பமுள்ள தடாகத்தைத் தேடிச் சென்று தனக்கொருபுஷ்பங் கொண்டுவந்து தரல் வேண்டுமென்று வீமனை வேண்ட வீமன் அவ்வாறே சென்று எடுத்து வந்து கொடுத்தான். வீமன் தனது தமையன் முறையிலுள்ள அநுமனைக்கண்டது அங்குச் சென்ற வழியிலேயேயாம்

சௌநகன்

சுநகன் புத்திரன். கிருத்சினமதன் பௌத்திரன். இம்மகாத்துமா தபோநியதியோடும் பிறந்தவர்

சௌநந்தை

முதாவதி

சௌந்தரநாயகி

திருப்பெரும்புலியூரிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர்

சௌந்தரநாயகியம்மை

திருக்கோளம்பத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

சௌந்தரபாண்டியன்

இவர் தடாதகைப்பிராட்டி நாயகனார்

சௌந்தரேசர்

திரநாரையூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர்

சௌன்னம்

பலி புத்திரனாகிய சுன்ஹனால் நிரூபிக்கப்பட்ட நகரம்

சௌபரி

மாந்தாதா மருமகனாகிய ஒரிருஷி. இவர் யமுனாநதிஜலத்தினுள்ளே பன்னிரண்டு வருஷந் தவங்கிடந்து பின்னர் மாந்தாதாவிடஞ்சென்று தமக்கொரு கன்னிகையைத் தருமாறு வேண்டமாந்தாதா தனது புத்திரிகளுள் யார் உம்மை மணம்புரிதற்கு விரும்புகின்றாளோ அவளை மணத்திற் கொள்ளுவீராகவென்று அவரைக் கன்னிகாமாடத்துக் கனுப்பத் தமது தபோபலத்தினால் மன்மதனைப் போல நல்லவடிவங் கொண்டங்கே செல்ல, அங்கிருந்த கன்னிகைகள் எல்லோரும் தனித்தனி தனக்கென்று மோகிக்க அவரையெல்லாம் மணம் புரிந்துகொண்டு சென்று நெடுங்காலம் காமவின் பஞ்சுகித்திருந்தவர். வேதமித்திரன் சீஷன். சாகல்லியன் தந்தை

சௌம்பகம்

சாளுவன் விமானம். சிவன் ஆஞ்சையால் மயன் இயற்றிக்கொடுத்த விரதம்

சௌரசேனி

சூரசேனதேசத்துப் பிரகிருத பாஷை

சௌரபேயி

ஓரப்சரப்பெண்

சௌரம்

ஒரு புராணம்

சௌராஷ்டிரம்

சூராட்டு என்னும் நகரத்தையுடைய தேசம்

சௌரி

கிருஷ்ணன், சூரன்மகனாகிய வசுதேவன் புத்திரனாதலின் கிருஷணனுக்கு இப்பெயர் வந்தது

சௌவீரம்

சிபி புத்திரனாகிய சுவீரனால் நிருமிக்கப்பட்டதாகிய ஒரு பட்டணம்