ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சோணபுரம் | வாணாசுரன் ராஜதானி |
சோணாட்டுப்பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன்விண்ணந்தாயன் | அந்தணர்க்குரிய அறுதொழிலுஞ் சிரத்தையோடு புரியும் ஒரு பிராமணோத்தமர். கோடையாலும் பெரும்புகழ்படைத்தவர். ஆவூர் மூலங்கிழாராற் பாடப்பட்டவர், புறநானூறு |
சோணை | மைநாகபர்வதத்திலே லுற்பத்தியாகிக் கங்கையிற் சங்கமிக்கும் நதி. சித்தாச்சிரமத்திலிருந்து மிதிலைக்குப் போகும் மார்க்கத்திலே இப்பெயரையுடைய நதியுமொன்றுளது. அது மகததேசத்திற்பாய்தலால் மாகதியெனவும்படும். இதிலிருந்தே சோணபத்திரவிநாயக மூர்த்தங்கள் எடுப்பார்கள் |
சோதிடம் | ஜியோதிஷம் காண்க |
சோனகம் | ஆரியதேசத்துக்குமேற்கின்கணுள்ள ஒரு தேசம் |
சோனை | வச்சிரநாட்டைச் சார்ந்த ஓராறு |
சோமகன் | சஹதேவன் புத்திரன். சுஜன்மகிருதுதந்தை. விருஷதன் தந்தை தந்தை. ஜந்தன்தந்தையாகிய ஓரிராஜவிருஷி. பிரமா நித்திரை போயிருந்தகாலத்தில் வேதங்களைத் திருடிப்போய்ச் சமுத்திரத்தில் ஒளித்தவசுரன். விஷ்ணு மற்சாவதாரமெடுத்து அச்சமுத்திரத்திலாராய்ந்து வேதங்களைக் கைப்பற்றிப் போய்ப்பிரமாவுக்கீந்தனர் |
சோமகுண்டம் | சிரவுதாக்கினியிலே செய்யப்படுகின்ற யாகபேதங்கள். அவை அக்கினிஷ்டோமம். ஆத்தியக்கிமனிஷ்டோமம், உக்தியம், சோடசி, அதிராத்திரம், அப்தோரயாமம், வாஜபேயம் என ஏழாம் |
சோமசிரவசு | சுருதசிரவன் புத்திரன். ஜனமேஜயன் புரொகிதன் |
சோமசிரவம் | பாஞ்சாலத்துக்குச் சமீபத்திலுள்ள புண்ணிய தீர்த்தம். அத்தீர்த்தக் கரையிலேயே அங்காரவர்ணன் அர்ச்சுனனோடு யுத்தஞ்செய்து சாபவுடல் போக்கிப் பூர்வரூபமாகிய சித்திராதன் என்னும் பெயரோடு தனதுலகஞ் சென்றனன் |
சோமசுந்தரபாண்டியன் | இவர் மலையத்துவசபாண்டியன் மருகனார். தடாதகைப் பிராட்டியாரை மணம்புரிந்தவர் |
சோமசுந்தரபாதசேகரன் | இவன் வங்கியபாத பாண்டியனுக்குப்பின் அரசுசெய்த பாண்டியன். சோமசுந்தரக் கடவுளது அருள் கொண்டு சோழனை மடுவில் வீழ்த்தியவன் இவனே |
சோமசூடாமணி | வமிச பூஷணபாண்டியனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன் |
சோமதத்தன் | சந்தனு சகோதரனாகிய பாகிலகன் புத்திரன். இவன் பாரதயுத்தத்திலிறந்தவன். பூரி, பூரிசிரவன், சலன் என்னுமூவரும் இவன் புத்திரர் |
சோமதீர்த்தம் | பிரபாச தீர்த்தம். சோமநாதபுரத்துக்குச் சமீபத்திலுள்ளது. சந்திரன் தக்ஷன் சாபத்தாற் பெற்ற க்ஷயரோகத்தை இத்தீர்த்தத்திலாடித் தீர்த்துக் கொண்டமையால் இஃது இப்பெயர் பெற்றது |
சோமநாதம் | கூர்ச்சர தேசத்திலுள்ள ஒரு திவ்விய சிவஸ்தலமும் நகரமுமாம். சுந்திரன் தவஞ்செய்து க்ஷயரோகம் நீங்கப்பெற்ற ஸ்தலம் |
சோமன் | அத்திரிக்கு அநசூயையிடத்துப் பிறந்தவனாகிய சந்திரன். இச்சந்திரனே மண்ணுலகத்துக்குத் தோன்றுபவன். சிவன் முடியிருப்பவன் கடலிற் பிறந்தவன். சந்திரனை அத்திரிபுத்திரனென்று சிலபுராணங்களும் பாற்கடலிற் பிறந்தவனென்று சில புராணங்களும் கூறுதல்கற்பபேதம். சிவன். வசுக்களுளொருவன். இவன் பிரஜாபதி புத்திரன். இவன் மனைவி மனோஹரை புரொஜபன் வரியன் பிராணன் கரணன் ரமணன் என ஐவர் புத்தரரையும் பிரதையென்னும் புத்திரரையும் பெற்றவன். இப்பிரதை பதின்மர் கந்தருவர்களுக்குப் பொதுமனைவி. யமன். குபெரன் |
சோமாசிமாறநாயனார் | அந்தணர் குலத்திலே பிறந்து அடியார்களுக்குத் திருத்தொண்டு செய்தலே பெருஞ் சிவபுண்ணியமெனக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனாரை அடைந்து அவரேவலின் வழிநின்றொழுகிச் சிவபக்தி சாதித்தவர் |
சோமாஸ்கந்தர் | மகேசுரவடிவம் இருபத்தைந்தனுளொன்று. சிவனும் உமாதேவியாரும் முருகக்கடவுளைத்தழுவிய அவசரம் |
சோமி | ஆற்றூரிலே பிறந்து தமிழ்க்கல்வியிலே மிக்க புலமையுடையளாய்ச் சிறந்து புலவர்களுக்குப் பொன்மாரிவழங்கிக் காளமேகப்புலவராலும் பாடப்பட்ட ஒரு தாசி |
சோரன் | ஒரு சம்ஸ்கிருதகவி. வில்கணனெனவும்படுவன் |
சோழதேசம் | சோழகுலத்தரசர்க்குரிய தேசம். கிழக்குந் தெற்குந் கடலும், வடக்கு வெள்ளாறும், மேற்குப் பாண்டிநாடும். எல்லையாகவுடைய தேசம். அது விரிநதிபாயநாடாதலின் நீர்மலிவான் என்றும் புனனாடென்றும் காரண விடுகுறிப் பெயர்கள் கொண்ட நீர்வளம் நிலவளம் வாய்ந்த நாடு. பழைமையும் நாகரிகமும் வாய்ந்தநன் மக்களையுடையது. காவிரிப்பூம்பட்டினம் கருவூர் திருவாரூர் முதலிய சிறந்த ராஜமாநகரங்களைப் பண்டைநாளுடையது. பின்னர்நாள் அதிப்பிரபல்லிய முடையதாகிய தஞ்சை மாநகரம் திருக்குடந்தை நகரென்று மிரு மகா நகரங்களைத் தன்னகத்தேயுடையது. எண்ணில்லாத சிவஸ்தலங்களும் விஷ்ணு ஸ்தலங்களுமுடையது செல்வமுங் கல்வியுமநாகரகமும் சதாசாரமும் வாசஞ்செய்யுந் தேசமிது வொன்றேயாம். காருகமுங் கம்மியமுங்குறைவற நிகழப்பெறுவது மிந்நாட்டின் கண்ணேயாம் |
சோழநாட்டுப் பிடவூர்கிழார்மகன் பெருஞ்சாத்தன் | வேளாளில் உழுவித்துண்போன். அரசர் பெண் கொள்ளுங்குடியிலுள்ளேரன் மதுரை நக்கீரனாற் பாடப்பட்டவன். பின்னர் நச்சினார்க்கினியராலும் பொருளதிகாரவுரையினுள்ளே எடுத்துக் கூறப்பட்டவன் |
சோழன் | திஷ்யந்த பௌத்திரனாகிய ஆசிரதன் புத்திரன். இவனே சோழதேச ஸ்தாபகன் |
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி | சேரமானமாந்தரஞ் சேரலிரும்பொறையனைப் போரிடைவென்றவன். சேரமான்மா வெண்கோவுக்கும் கானப்பேர்தந்த உக்கிரப் பெருவழுதிக்கும் நட்பினன். பாண்டராங்கண்ணனாராலும் ஒளவையாராலும் உலோச்சனாராலும் பாடப்பட்டவன் |
சோழன் உருவப் பஃறேரிளஞ் சேட்சென்னி | இளஞ்சேட்சென்னி உருவப்பஃறேரிளையோன் என்னும் பெயர்களாலும் வழங்கப்படுவன். இவன் வீரங் கொடைகளாற் சிறந்தோன். ஆழுந்தூர்வேளிடத்துப் பெண் கொண்டோன் என நச்சினார்க்கினியர் கூறுவர். இவன் கரிகாற்சோழன் தந்தை. அவனைப் பரணரும் பெருங்குன்றூர்கிழாரும் பாடினர் |
சோழன் நலங்கிள்ளி சேட்சென்னி | இவன் இலவந்திகைப் பள்ளியிலே பிறந்த சோழன். ஏறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனாராற் பாடப்பட்டவன் |
சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி | தித்தன் என்னுஞ் சோழன்மகன். தந்தையைப் பகைத்து நாடிழந்து நல்குரவாற் புல்லரிசியுமுண்டு சிலகாலமிருந்து பின்னர் நாடுகொண்டரசுபுரிந்தவன், புறநானூறு |
சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி | சேரமான் அந்துவஞ்சேரலிரும் பொறைக்குப்பகைவன். இவனைப் பாடியபுலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், புறநானூறு |
சோழன் வேற்பஃறடக்கைப்பெருநற்கிள்ளி | சேரமான் குடக்கோநெடுஞ்சேரலாதனாற் போரிற் கொல்லப்பட்டவன். பரணராலும் கழாத்தலையராலும் பாமாலைசூட்டப்பட்வன், புறநானூறு |
சோழன்கரிகாற் பெருவளத்தோன், சோழன்கரிகாலன் | உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னிபுதல்வன். இவன் நாங்கூர் வேளாளனிடத்துப் பெண் கொண்டவன் என நச்சினார்க்கினியர் கூறுவர். கரிகாற்சோழன’’காண்க |
சோழன்கிள்ளிவளவன் | குராப்பள்ளியி லிறந்தவனாதலின் குராப்பள்ளித் துஞ்சியகிள்ளிவளவ னெனவும்படுவான். குருவூரையழித்தவனும் கோவூர்க்கிழாராற் பாடப்பட்டவனும் இவனே. குளமுற்ற மென்னுமூரிலே இறந்தசோழன். கோடை வீரம் கல்விகளாற் பெரும் பெயர்படைத்தவன். உழையூரிலிருந்தரசு புரிந்தவன். ஆலத்தூர் கிழார், கோவூர்க்கிழார், மாறொக்கத்து நப்பசலையார் இடைக்காடனார் முதலிய புலவர் அநேகராற்பாடப்பட்டவன், புறநானூறு |
சோழன்செங்கணான் | கோச்செங்கடசோழநாயனார் காண்க |
சோழன்நலங்கிள்ளி | சோழன் மாவளத்தான் தமையன். பாடும் புலமையுடையவன். போரிற்பேரூக்கமும் அவாவுமுடையவன். பாண்டி நாட்டை வென்று புலிக்கொடிநாட்டியவன். பின்னர் உறையூர் முதுகண்ணன் சாத்தனாரால் அறநெறியில் நிறுத்தப்பட்டிருந்து புண்ணியங்களியற்றி வந்தவன். உறையூர் முதுகண்ணன் சாத்தனார். கோவூர்க்கிழார், ஆத்தூர் கிழாரென்னு மூவராலும் பாடப்பட்டவன் |
சோழன்நல்லூருத்திரன் | இவன் புலமைமிக்கோன் என்பது புறநானூற்றினுள்வரும் அவன் பாடலாலினிது புலப்படும் |
சோழன்நெய்தலங்கான லிளஞ்சேட்சென்னி | ஊன்பொதிபசுங்குடையாரென்பவராற் பாடப்பட்டவன். இளவரசாய் நெய்தலங்கான லென்னுமூரிலிருந்து உரியகாலத்தில் அரசு கொண்டவனாதலின் அப்பெயர் பெற்றான் |
சோழன்பெருந்திருமாவளவன் | இவன் குராப்பள்ளியிலே யிறந்தவன். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணானாராலும் மருந்து வன்றாமோதரனாராலும் பாடப்பட்டவன், புறநானூறு |
சோழன்மாவளத்தான் | இவன் சோழன் நலங்கிள்ளிதம்பி. தாமப்பல் கண்ணனாராற் பாடப்பட்டவன், புறநானூறு |
சோழவமிசாந்தக பாண்டியம் | ரிபுமர்த்தன பாண்டியனுக்குப் பின் அரசுசெய்த பாண்டியன் |
சோழியவேனாதி திருக்குட்டுவன் | மிக்ககொடையாளன். ஏறிச்சிலூர்மாடலன் மதுரைக்குமரனாராற் பாடப்பட்டவன் |