ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சைசுநாகர் | சிசுநாகன் வமிசத்தோர். இவர்கள் பதின்மர். பிரத்தியோதர்களுக்குப் பின்னர் மகததேசத்திலே முந்நூற்று அறுபத்திரண்டுவருஷம் அரசுபுரிந்தோர் |
சைதன்னியர் | இவர்கள் இலிங்கதாரிகளைப்போல வருணாச்சிரமதருமங்களை நிராகரித்திருப்பவர்கள். இவர்களுக்குப் பத்தியே விசிட்டமுள்ளது. விஷ்ணுவையே பூசிப்பவர்கள். இவர்கள் உத்தரத்திலே பெருக்கமாயுள்ளவர்கள் |
சைத்தியர் | யாதவபேதம். விதரியன் புத்திரனாகிய ரோமபாதம் வமிசத்தனாகிய சேதிவழிவந்தவராதலின் இப்பெயர் பெற்றார் |
சைத்திராதம் | குபேரன் உத்தியானவனம் |
சைந்தவன் | ஜயத்திரதன். இவன் சிந்துதேசத்தரசன். துரியோதனன் தங்கையாகிய துற்பலையை மணம்புரிந்தவன். இவன் தந்தை விருத்தடித்திரன். இச்சைந்தவன் பாண்டவர்கள் வனவாசஞ் செய்து கொண்டிருந்த காலத்திற் காட்டிலே ஒருநாள் தனியிருந்த திரௌபதியைப் பலபந்தமாகக் கவர்ந்து போக, அஃதுணர்ந்த பாண்டவர்கள் உடனே தொடர்ந்து சென்று இடைவழியிலே தடுத்து அவனை மானபங்கஞ்செய்து திரௌபதியை மீட்டுச் சென்றார்கள். பின்னர் பாரதயுத்தத்திலே அர்ச்சுனனாற் கொல்லப்பட்டவன் |
சைப்பியர் | உசீநரன் புத்திரனாகிய சிபிவமிசத்தோர் |
சைப்பியை | விதேகராலன் புத்திரி. இவள் மகாபதிவிரதை. சியாமகன் பாரி. விதர்ப்பன் தாய் |
சைவசமயகுரவர் | மாணிக்கவாசக சுவாமிகள், திருஞானசம்பந்த மூர்த்திகள், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் இந்நால்வரும் இப்பெயர் பெறுவர் |
சைவம் | ஒரு புராணம். இது வாயுவினாற் கூறப்பட்டது. சுவெதவராககற்பசம்பந்தமாகிய சிவமான்மியங்களை எடுத்துரைப்பது. அதன் கிரந்தசங்கியை பன்னீராயிரம். சிவனை முழுமுதற்கடவுளாகக் கொண்ட சமயம். இச்சமயத்தோர் சைவரெனப்படுவர். பதி பசு பாசம் என மூன்றும் நித்தியப் பொருள்கள் என்றும், பசுக்களாகிய ஆன்மாக்கள் புண்ணியமேலீட்டினாலே பதிஞானம் பெற்றுப் பாசத்தடை நீங்கிச் சிவத்தோடிரண்டறக் கலத்தலே முத்தியென்றும், இச்சையே பிறவிக்குக் காரணமென்றும், பற்றொழிதலே முத்திக்குக் காரணமென்றும், சிவன் சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகமென்னும் பஞ்ச கிருத்தியங்களையும் ஆன்மாக்களை யீடெற்றும் பொருட்டுச் செய்பவரென்றும், செய்யினும் நிர்விகாரி யென்றும், சச்சிதாநந்தப் பொருளென்றும் அச்சமயம் தர்க்கவாயிலாக ஸ்தாபிக்கும் |
சைவாகமங்கள் | காமியம் முதல் வாதுளமீறாகிய இருபத்தெட்டுமாம். இவை சதாசிவமூர்த்தியினது ஈசான முகத்தினின்றும் தோற்றின. தத்துவ சொரூமாகிய விக்கிரகங்கள், ஆலயங்கள் பூவைகள் என்னுமிவற்றினுன்மைப் பொருள்கள். அவ்வாகமங்களா லுணர்த்தப்படும். இவ்வாகமங்கள் மந்திர மெனவும், தந்திரமெனவும், சித்தாந்தமெனவும் பெயர் பெறும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கோடியாக இருபத்தெட்டுமிருபத்தெட்டுக் கோடி கிரந்தங்களுடையன. இவை ஞானபாதம் யோகபாதம், கிரியாபாதம், சரியாபாத மென்று தனித்தனி நான்கு பாதங்கள் உடையனவாயிருக்கும். இவற்றுள் ஞானபாதம் பதி, பசு, பாசம், என்னும் திரிப தாத்தங்களின் ஸ்வரூபத்தையும், யோகபாதம் பிராணாயாமம் முதலிய அங்கங்களையுடைய சிவயோகத்தையும், கிரியா பாதம், மந்திரங்களின் உத்தாரணம், சந்தியா வந்தனம், பூசை, செபம், ஓமம் எனபனவற்றையும், சமீய விசேஷ நிருவாண ஆசாரியாபிஷேகங்களையும், சியாபாதம் பிராயச்சித்தம், சிவலிங்கவிலக்கண முத லியவைகளையும் உபதேசிக்கும். ஆகமம் என்பது, பரமாப்தரினின்றும் வந்தது எனப் பொருள்படும். இவ்வாகமங்களுக்கு வழி நூல் நாரசிங்னம் முதல் விசுவகன்மம் ஈறாகிய உபாதகமங்கள். இருநூற்ழெழுமாம். மூலகமங்கள் இருபத்தெட்டும் வேதம் போலச் சிவனாலருளிச் செய்யப் பட்டமையின் சைவர்க்கு இரண்டும் முதன் நூல்களாம் |
சைவாகமங்கள் | இவை இவையென ஆகமங்கள் என்பதனுட் கூறினாம். இருபத்தெட்டாகமங்களும் ஒவ்வொன்றுக்குக் கோடி கிரந்தமாக இருபத்தெட்டுக் கோடி கிரந்தங்களையுடையன. ஞானம், யோகம், கிரியை, சரியை யென நான்கு பாதங்களையும், ஒவ்வொன்றுங் கூறவன. ஞானபாதம் திரிபதார்த்த சொரூபத்தையும், யோகபாதம் பிராணாயாம முதலிய அங்கங்களோடு கூடிய சிவயோகத்தையும், கிரியாபாதம் பூசைஓமம் முதலியவற்றையும், சரியாபாதம் சமயாசாரங்களையு மெடுத்துக்கூறும். இவ்வாகமங்கள் சிவன் மேன்முகத்திற் பிறந்தன வெனப்படும் |
சைவை | அநிலன் பாரி |