ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சூடிக்கொடுத்தாள் | இம் மாதுசிரோமணியார் பெரியாழ்வாருக்குப் புத்திரியாகத் துளசியிலே பிறந்த விஷ்ணு கைங்கரிய பக்தியிற் சிறந்து விளங்கினவர் |
சூதசங்கிதை | வியாசர்சூதர்பொருட்டுச் செய்த சங்கிதை. இது ஸ்கந்தபுராணத் தாறுசங்கிதைகளுளொன்று. ஆறாயிரங்கிரந்தமுடையது |
சூதபுத்திரன் | கர்ணன். குகன் வளர்த்தமையால்வந்தபெயர், சூதன் ~ தேர்ப்பாகன் |
சூதமாகதர் | இவர்களே வந்தியரென்றும் சூதரென்றும் தமிழ்நூல்களிலே வழங்கப்படுபவர்கள். அரசர்களுக்கு உற்சாகம் முதலியன உண்டாதற் பொருட்டுப் பாடுபவர்களாகிய இவர்கள் பிருது பிறந்தயாகசுத்தி காலத்திலே உற்பவித்தவர்களது வமிசத்தவர்கள் |
சூதர் | வியாசர் சீஷருள்ளே ஒருவராகிய இவ்விருஷியே நைமிசாரணியவனத்திலேயிருந்த முனிவர்களுக்குப் புராணங்களையெல்லா முபதேசித்தவர் |
சூத்திரகன் | மகததேசத் தரசனாகிய சுசர்மனுக்கு மந்திரியாயிருந்த பின்னரவனைக் கொன்று இராச்சியங்கவர்ந்து கொண்டவன் |
சூத்திரங்கள் | சுபாசுப கர்மங்களைக் குறித்துச் செய்யப்பட்டவிதிகள். அவை, போதாயனம், ஆபஸ்தம்பம், சத்தியாஷாடம், திராஹியாயனம், அகஸ்தியம், சாகல்லியம், ஆசவலாயனம், சாம்பவீயம், காத்தியாயணம், வைகானசம், சௌனகீயம், பாரத்துவாசம், அக்கினிவைசியம், ஜைமினீயம், கௌண்டின்னியம், கௌஷீதகம், ஹிரணியகேசி எனப்பதினெட்டு நூல்களாம் |
சூத்திரர் | நான்காம் வருணத்தோர். இவர்கள் பிரமன் பாதத்திற் பிறந்தோர். இவர்கள் ஏனைவருணத்தாரைப் போல மோதற் கதிகாரிகளல்லர். இவர்களுக்குப் நயனம் விவாகம். சூத்திரராவார் வேளாளரேயென்பது தொல்காப்பியம் அகத்திணையியலில் வரும் மன்னர்பாங்கில் என்னுஞ் சூத்திரத்தானுணரப்படும். அவ்வேளாளர் உழுவித்துண்போரும் உழுதுண் போரும்மென இருதிறப்படுவர். உழவித்துண்போர் மண்டிலமாக்களும், தண்டத்தலைவருமாய்ச் சோழனாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாருமென்றிவை முதலியவூர்களிற்றோன்றி வேள் எனவும் அரசு எனவும் உரிமைபெற்றோரும் பாண்டிநாட்டுக் காவிதிப்பட்டங் கொண்டோரும் குறுமுடி குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு மகட் கொடைக்குரிய வேளாளர். ஊழுதுண்போர் பலவகைப்பட்ட தொழலினரேனும் உழவொன்றையுமே யுரியதொழிலாக வுடையோர். இவ்விருவகை வேளாளரும் தம்மினுயர்ந்த வைசியர் க்ஷத்திரியர் பிராமணர் மூவரையும் வழிபடற்குரியர். இனி ஆகமங்களிலே சூத்திரர் சற்சூத்திரர் அசற்சூத்திரரென இருபாலாகக் கூறப்படுவர். மேலாகியவொழுக்கமுங் குடிப்பிறப்புடையோர்சற் சூத்திரர் |
சூரசூதன் | அருணன் |
சூரசேனன் | கார்த்தவீரியார்ச்சுனன் இரண்டாம் புத்திரன். சத்துருக்கினன் புத்திரன் |
சூரசேனம் | மதுராபுரியை ராஜதானியாகப் பெற்றிருந்த தேசம். சத்துருக்கன் புத்திரனாகிய சூரசேனன் ஆண்டமையின் அப்பெயர்பெற்றது |
சூரன் | கார்த்தவீரியார்ச்சுனன் ஐந்தாம் புத்திரன். யாதவர் அநேகர் இப்பெயரால் விளங்கினர். விரோதன் புத்திரன். சிநி தந்தை. தேவமீடன் புத்திரன். வசுதேவன் தந்தை. வசுதேவன் மதிரை வயிற்றிற் பெற்ற புத்திரன் |
சூரபன்மன், சூரன் | கசியபனுக்கு மாயையிடத்துப் பிறந்த புத்திரருள்ளே மூத்தோனும் மகா வரப்பிரசாதங்கள் பெற்று அயிரத்தெட்டண்டங்களையும் நூற்றெட்டு யகமாண்டவனும் இந்திராதி தேவரைச்சிறையிட்டவனும் ஈற்றிலே குமாரக்கடவுளாற் சங்கரிக்கப்பட்டழிந்து ஒரு பாதி மயிலாகி அக்கடவுட்கு வாகனமாகவும் ஒருபாதிகுக் குடக்கொடியாகவும் பெற்றவனுமாகிய ஓரசுரன். இவன் பிறந்ததும் தவத்தாலிணையற்றுயர்ந்ததும் செல்வம் அதிகாரம் புஜ பல முதலியவற்றை அளவின்றிப் பெற்றும் மயங்கித் தீநெறியிற் சென்றுலகங்களுக்கெல்லாம் பயங்கரகாரணனாயிருந்ததும், தெய்வசிந்தை சிறிதுமின்றி அகங்கரித்திரந்ததும், ஈற்றிலே எல்லாமிழந்துகதியற்றதும், பின்னர்ப் பூர்வஜன்ம புண்ணியவசத்தினாற் சுப்பிரமணியக் கடவுளுக்குச் சேவலும் மயிலுமாயதுமாகிய சரித்திரங்களை யெல்லாம் சாங்கோபாங்கமாக விரித்துத் தீநெறிப்பயன் காட்டி அதனை விலக்கி முத்திநெறி விதிப்பது கந்தபுராணம்மாம் |
சூரி | ஜைநூலாசிரியர்கள் மேற்கொள்ளும் பட்டப்பெயர் |
சூரியகுண்டம் | காவிரியின் சங்கமுகத்துக்கு அயலதாகிய ஒரு தடாகம் |
சூரியசாவர்ணி | எட்டாம் மனு. சூரியனுக்குச் சாயாதேவியிடத்துப் பிறந்த புத்திரன். இம்மனுவே இனி வரப்போகும் மனு. இவன் முன்பிறந்தமனுவுக்குச் சமானனாயினமையின் சாவர்ணியெனப்படுவன். இவன் காலத்திலே சுதபர், அமிதாபர், முக்கியர் எனத் தேவகணங்கள் முத்திறத்தராவர். அக்காலத்திலே தீப்திமான், காலவன், ராமன், கிருபன். ஆசுவத்தாமன், வியாசன், சிருங்கன் என்பவரே சப்த ரிஷிகளாவார்கள். பாதலத்திலே தவங்செய்திருப்பவனாகிய பலி சக்கரவர்த்தியே தேவேந்திர பதம்பெறுவான். வீரஜன் சர்வசீவான் நிர்மோகன் முதலியோர் பூலோகத்து மானுஷியவர்க்காதிபராவார்கள் |
சூரியன் | கசியபனுக்கு அதிதிவயிற்றிலே பிறந்த புத்திரன். மனைவி துவஷ்டா புத்திரியாகிய சஞ்ஞாதேவி. இவளிடத்திலே பிறந்தபுத்திரர் வைவசுவதமனுவும் யமனுமென இருவர்புத்திரி யமுனை. ஊதயகாலசூரியன் பிரமாவினது சொரூபமென்றும் மத்தியானகால சூரியன் சிவசொரூபமென்றும் அஸ்தமயனகால சூரியன் விஷ்ணுசொரூப மென்றும் கொண்டு ஜபத்திலே தியானிக்கப்படுவன். சூரியன் ஏழு குதிரைபூண்ட வோராழித் தேரிலே சஞ்சரிப்பன். தினத்தைச் செய்தலால் தினகரனென்றும், பிரபையைச் செய்தலாற் பிரபாகரனென்றும் பிறவுமாக அநந்த நாமங்களைப் பெறுவன். இவ்வண்டம்சூ ரியனை ஆதாரமாகவுடையது. சூரியன் துரவனையாதாரமாகவுடையது. சூரியனைக்குறித்து விஷ்ணு புராணத்திற் கூறப்பட்டனவற்றை இங்கே சங்கிரகித்துக் கூறுவாம். அதிற் கூறப்பட்டன ஐரோப்பிய சித்தாந்தத்திற்குப் பெரும்பாலுமொத்தன. முற்றுமுருவகமாதலின் நுண்மையானுணரப்படும். துருவனை யாதாரமாகக் கொண்டு அவனாலே ஆட்டப்பட்டு அவனையே வலஞ் செய்துவருதலைத் தொழிலாகவுடைய சூரியனுக்கு ஒரிரதமுண்டு. அவ்விரதத்திற்கு ஓரச்சும், அவ்வச்சிலே ஒருருளும், அவ்வுருளினிரு மருங்கிலும் அச்சிலே கோக்கப்பட்ட பூட்டுக் கோலாகிய கொடிஞ்சிகளும் அவற்றின் மீதேபாரும், அதன் மீதே தட்டும், உறுப்புக்காளகவுள்ளன. கொடிஞ்சிகளிலே ஏழு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். காயத்திரி, பிருகதி, உஷ்ணிக்கு, ஜக்தி, திருஷ்டுப்பு, அநுஷ்டுப்பு, பந்தி என்னும் பெயர்களையுடைய சந்தங்கள் ஏழுமே அவ்வேழு குதிரைகளுமாம். அவ்வுரளி னொருபக்கத்தச்சு மிக நீண்டிருக்கும். மற்றப் பக்கத்தச்சு மிக்க குறுகியிருக்கும். அவ்வுருளினது பண்டிகாலை நண்பகல் மாலை என்னும் பிரிவுகளாலாயது. சம்வற்சரம், பிரிவற்சரம் இடாவற்சரம் அநுவற்சரம் இத்துவற்சரம் என்னும் ஐந்தும் உருளாரங்களாம். இருதுகள் ஆறும் உருள் வலயங்களாம். குறுகிய அச்சுப்பக்கம் துருவபக்கத்தை நோக்கி நிற்கும். அவ்வச்சுத் துருவ நடித்திரத்திலிருந்து வரும் வாயுவடிவினவாகிய கயிறுகளிலே தொடுக்கப்பட்டிருக்கும். உருளை மானசோத்தரபர்வத்தின் மீதே சஞ்சாரித்துவரும். அப்பர்வதத்தின் மீது கிழக்கில் இந்திரனுக்குரிய வசுவோகசாரா நகரமும், தெற்கில் யனனுக்குரிய சம்யமனிநகரமும், மேற்கில் வருணனுக்குரிய சுகாநகரமும், வடக்கிலே சோமனுக்குரிய லிபாவரீ நகரமுமென நான்கு நகரங்களுள. சூரியன் இவ்விரதத்திலே சஞ்சரித்து வருதலால் உதயாஸ்தமயங்களுளவாகின்றன. உதயாஸ்தமயங்களுண்மைபோல நமக்குத் தோன்றினும் சூரியன் உண்மையளவில் உதிப்பதும் அஸ்தமிப்பதுமில்லை. சூரியன் மேலே கூறப்பட்ட நான்கு கோணத்து நகரங்கள் நான்கனுள் எதிலாயினும் இடையிலாயினும் இருக்கும்போதே இரண்டு கோணங்களுக்கும் இரண்டு நகரங்களுக்குந் தரிசனமாவான். சூரிபகிரணங்கள் செல்லாதவிடமமேருப்பக்க மொன்று மேயாம். அப்பக்கஞ் செல்லும் சூரியகிரணங்கள் மேருவினது கிரணங்களாலே திரஸ்கரிகரிக்கப்பட்டு மீளும். சூரியரதஞ் சஞ்சரிக்கிற கிராந்திவிருத்தங்கள் நூற்றெண்பத்துமூன்று. அவை தக்ஷ்ணாயன உத்தராயண வெல்லைகளுக்கிடையேயுள்ளன. இரதம் அக்கிராந்தி விருத்தங்களிலேயே உத்தராயணத்தி லேறுவதும் தக்ஷ்ணாயனத்தி லிறங்குவதுமாயிருக்கும். அதனால் ஒரு கிராந்திலிருத்தத்திற்கு இரண்டாக முந்நூற்றறுபத்தாறு கதிகளினாலே ஒரு வருஷமுண்டாகும். மாசந்தோறுஞ் சூரியன் தன் இயல்பு வேறுபடலால் பன்னிரண்டு பெயர்களைப் பெறுவான். அதுபற்றிச் சூரியர் பன்னிருவராகக் கொள்ளப்படுவர். சூரியரதத்திலே சூரிய ரிஷிகந்தருவ அப்சர யடி சர்ப்ப ராடிசகணங்கள் ஏழும் ஏறியிருக்கும். சித்திரை மாசத்திலே தாதவென்னுஞ் சூரியனும், கிருதஸ்தலையென்னும் அப்சரப் பெண்ணும், புலஸ்தியவிருஷியும். வாசுகி சர்ப்பமும், ரதபிருத்துவென்னும் யடினும். ஹேதிராடிசனும், தும்புருவென்னும் கந்தருவனும், அவ்விரதத்திலே வசிப்பார்கள். வைகாசியிலே சூரியன் அரியமா, இருஷிபுலகர், அப்சரசு புஞ்சிகஸ்தலை, யடின் ரதௌஜா, சர்ப்பம் கச்சவீரன், கந்தரூவன் நாரதன், ராக்ஷசன் பிரஹேகி. இவ்வாறே ஏனைய மாதங்களிலும் வேறுவேறு பெயர்களைப் பெறுவர். சூரியரதத்திலுள்ள இவ்வேழுகணங்களும் இப்பூமியிலே மழைபனி வெயில் சுகம விருத்தி பஞ்சம் நோய் முதலியவற்றிற்குக் காரணராய்க காலபேதங்களை யுண்டாக்குவர். சூரியனை அவ்விரதத்திலிருக்கும் இருஷிகள் தோத்திரஞ் செய்துகொண்டிருப்பார்கள், அரம்பையர் ஆடிக் களிப்பிப்பர், ராடிசர் பின்றொடந்து நிற்பர், சர்ப்பகணங்கள் தாங்குவர், யடிர் கடிவாளம் பிடித்து நிற்பர், கந்தரூவர் பாடிக் கிளிப்பிப்பர். சூரியன் அண்டத்தைக் காப்பன். மேலும் ஏழுகணமென ரூபகம் பண்ணப்பட்டன சூரியனிடத்திலேயுள்ளனவாய் விளங்குகின்ற ஆற்றல்களேயாம். இருஷிகளென்பது ஒளியைக்கொடுத் துலகத்தை அதற்குரிய வியாபாரத்தக் கேலிவிடும் சக்தியைப்போலும். அரம்பையரென்றது உலகவியர் பாரத்திலுயிர்களை யாட்டுவிக்கும் சக்தியை. இராடிர்பின் றொடர்ந்து நிற்பரென்பது இருளை. சர்ப்பகண மென்றது சூரிய வீதியெனப் பெயர்வந்ததுமா மென்க. யடிர் கடிவாளம்பற்றி நிற்பரென்றது. சூரியனை உரியகதியிற் பிறழாதுகாக்குஞ் சக்தியை. கந்தருவர் பாடிக் களிப்பிப்பர் என்றது அணுக்களைக் கவரும் சக்தியை. சூரியன் அண்டத்தைக் காப்பன் என்றது. அண்டங்களெல்லாந் தன்னை வலம்வருமாறு செய்து அவைக்கெல்லாம் தான் காரணமாய்நிற்கும் ஆற்றலை. இனி மான சோத்தரபர்வத மென்றது சூரியன் சஞ்சரிக்கும் வீதியினது நிலையை. சூரியன் அவ்வுயர்ந்த நிலையிற் கீழே பூமியை நோக்கி யிறங்காமலும் அந்நிலையினின்றும் மேலேயுயராமலும் சமமாகிய ஒருமலை போன்ற மதிற்சுவரின் மீதே சஞ்சரிப்பது போலச் செல்லுதலின் அந்நிலை மலையெனப்பட்டது. மனசுக்கு மெட்டாதுயர்ந்தமலை யென்பது அதன் பொருள். நான்கு நகரமென்றது. உதயம், உச்சி, அஸ்தமயம், அதோபாகம் என்னும் நான்கு கோணங்களையுமாம். உதயகோணத்தை இந்திடரனுக்குரிய வசுவோக சாராநகரமென்றது பொன்மயமாகிய வெளியும் புள்ளொலியும் முதலிலே புலப்படுமிடமாதல் பற்றியாம். வேளிக்கிறைவ னிந்திரனாதலின் இந்திரனுக்குரிய தெனப்பட்டது, வசு ~ பொன், ஒகம, புள், உச்சிக்கோணநகரம் யமனுக்குரிய தெனப்பட்டது. வெயில் மிகக் கொடிதாதலும் உயிர்களுக்குப் பசிதாகங்க ளுளவாதலும் பற்றியாம். அஸ்தமயகோணத்தை வருணனுக்குரிய தென்றது சூரியன் அவ்விடத்தையடையும் போது பூமி குளிர்ச்சியும் சோகநீக்கமும் பெறுதலால், தண்ணென்ற சுபாவத்தையுடைய நீருக்கிறைவன் வருணனேயன்றோ. வடக்கென்றது அதோபாகத்திலிருக்கும் போது ஊர்த்துவ பாகத்திலுள்ள வுயிர்களுக்குக் களிப்பையும் நித்திரையையுங் கொடுத்தல் பற்றி அக்கோண்ம் சோமனுக்குரிய தெனப்பட்டது. ஏழ்பரியை ஏழ்நிறமென்பாருமுளர். இவை ஒருவாறு விரிக்கப்பட்டவுள்ளுறை. அவ்வுருவகங்களை முற்ற நிதானித்துத் தத்துவங்காட்டல் மகாபண்டிதர்க்கன்றி மற்றோர்க்கசாத்தியமாம் |
சூரியாரண்ணியன் | திரிதன்வன் புத்திரன். சத்தியவிரதன் என்னும் திரிசங்குதந்தை. திரயாரண்ணியன் எனவும் படுவன் |
சூர்ப்பகன் | இவன் மன்மதனாற் கொல்லப்பட்டராக்ஷசன் |
சூர்ப்பணகை | ராவணன் தங்கை, முறம் போன்ற நகங்களையுடையாள் என்பது பதப்பொருள்,. இவள் புத்திரன் ஜம்புகமாரன் ஸ்ரீராமர் ஆரணியஞ் சென்றிருந்தபோது அவரைக்கண்ட சூர்ப்பனகை மோகாதீதையாகி அவர்பாற் செல்ல அவர் மறுத்து லக்ஷ்மணனிடத் மவளையனுப்ப, லக்ஷ்மணன் அவளுடைய முறைகேட்டையுஞ் சீதையை எடுத்து விழுங்க எத்தனித்தமையை யுங்கண்டு அவளுடைய நாசியைச்சேதித்து அவளை அவ்விடத்தினின்று மோட்டிவிட்டான். அவள் கரதூஷணாதியரிடத்துச் சென்று அதனை முறையிட, அவர்கள் ராமலக்ஷ்மணரை யெதிர்த்துப் போர்செய்து மாண்டார்கள். இச்செய்திகளை யெல்லாஞ் சூர்ப்பணகை இராவணனிடஞ் சென்று முறையிட அவன் ராமர் வசித்த ஆரணியஞ் சென்று வஞ்சச் சூதாற்சீதையைக் கவர்ந்துசென்றான். இராவணனுக்கு இவ்வழியே நாசத்துக்குக் காரணியாயிருந்தவள் இவளே |
சூலினி | பார்வதி |
சூளாமணி | தோலாமொழித் தேவர் செய்த ஒரு சைன காவியம். காவியநாயகன் பயாபதி. அந்நூல் பயாபதி புத்திரரைப் பெற்று அவராற் பகையரசரை வென்று அரசபோகம் துய்த்துப் புத்திரனுக்கு முடிசூட்டித் துறவுபூண்டு அருகசரணம்பெற்ற வரலாறுகளை மிகவெடுத்துரைக்கும் |
சூளி | பிரமதத்தன் தந்தை |