ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ககமுகன் | சகஸ்திரபாதன் சகாத்தியாயன் |
ககுதிமி | ரைவதன் மகன். இவன் தன்னுடைய மகள் ரேவதிக்கு நாயகனொருவனைத் தேடவெண்ணிப் பிரமசபைக்குத் தன்டீனாடவளை அழைத்துப்போய் அங்கே ஒருமுகூர்த்தகாலம் ஆடல் பாடல்களிற் பிரியனாயிருந்து பின்னர்ப் பிரமாவுக்குத் தன் கருத்தைச் சொல்ல, இங்கே நீ பொழுதுபோக்கிய முகூர்த்த காலத்திலே பூலோகத்தில் 27 சதுர்யுகம் கழிந்து விட்டன. உனக்குப் பழக்கமானவர்களை நீ காண்பதரிது. இப்போது பலராமர் பிறந்திருப்பதால் அவருக்கு உன்மகளைக் கொடுக்கவென்று விடைகொடுத்தனுப்ப, அவ்வாறு செய்தான் |
ககுபுதேவி | தர்மன் பாரி தக்ஷன் மகள் |
ககுபை | ஒட்டிர தேசத்திலுள்ள ஒரு பர்வதம் |
ககுவன் | கம்சன் தம்பி |
ககுஸ்தன் | இக்ஷூவாகு பௌத்தினாகிய விகுக்ஷீ மகன். இவன் விஷ்ணுவினுடைய அநுமதியால் விருஷபரூபம் பெற்றுத் தேவேந்திரன் தன்மீது ஏறி யுத்தஞ்செய்து ராக்ஷசர்களைக் கொல்லும்படியாக முதுகு கொடுத்துத் தாங்கினமையால் ககுஸ்தனெப்படுவன், ககுஸ்தம் ~ முதுகு, புரஞ்சயன் எனவும்படுவன், இக்ஷூவாகு மகன் குக்ஷீ. அவன் மகன் விகுக்ஷீ |
ககேந்திரன் | புள்ளரசு |
கக்ஷதேசம் | இது தற்காலம் கச்சு என வழங்குவது |
கங்கணன் | நிம்மரோசன் தம்பி |
கங்கன் | வசுதேவன் தம்பி. அஞ்ஞாதவாசத்திலே தருமர் வகித்துக் கொண்ட நாமம். சம்பாதிவமிசத்துப் பக்ஷீயரசன். ஒர் இருஷி. இவர் பாரி பிரமலோசை. மகள் மரிஷை. யமன். நன்னூல் செய்வித்த சீயகங்கன் |
கங்காத்துவாரம் | அரித்துவாரம் |
கங்கை | உக்கிரசேனன் மகள். கங்கன் பாரி |
கங்கை | தேவலோகத்திலிருந்து பகீரதன் தன் பிரயத்தனத்தால் இமயமலையயில் வந்து உற்ப்பத்தியாகுமாறு பெற்ற மகா புண்ணியநதி. பனீரதன் பிதிர்களா கியசகரர், கபிலர் சாபத்தாற் கதியடையாது பாதாளத்திலே சாம்பாராய்க்கிடப்ப, அவர் பொருட்டாக ஆகாசகங்கையை நோக்கிப் பகீரதன் தவஞ் செய்தான். அது கண்டிரங்கிக்கங்கை பிரசன்னமாகி எனது பிரவாகத்தை தாங்குவதற்கு யாவராயினும் உடன்பட்டால் வருவேனென, பகீரதன் சிவனை நோக்கி வரங்கிடப்ப, அவர் சடையிற் பரிப்பேன் கங்கை வரட்டுமென்ன கங்கை வருதலும் சடைக்கொழுந்தில் மறைந்தது. அதுகண்ட பகீரதன் பின்னரும் சிவனைநோக்கிக் கங்கையை யருள்கவென்ன, எழுதுளி ஜலத்தை இமயமலைச்சாரலில் விழும்படி விட்டார். அத்துளி ஏழும் ஏழுசரசாகி விந்துசரசெனப் பெயர்பெற்று விளங்கி ஜன்னுவ மகா விருக்ஷூயாகஞ்செய்த சாலையைப் பெருகியழிக்க, ஜன்னுவர் அதனைப் பானஞ் செய்தனர். அதுகண்ட பகீரதன் ஜன்னுவரை வேண்ட ஜன்னுவர் காதுவழியே செல்கவென்று கங்கையைவிட அது பகீரதனோடு பாதாளஞ்சென்று சகரர் அஸ்தியைச் சுத்திசெய்யச்சகரர் மேற்கதி பெற்றனர். இது பகீரதியென்றும், ஜன்னுவர் காதுவழி விடுத்தமையின் ஜானவியென்னும், ஆகாயத்தும், பூவுலகத்தும் பாதாலத்தும், செல்லுகையின் திரிபதகையென்றும் பெயர்பெற்றது. இக்கங்கையினது நீரிலே அற்பமேனும் அழுக்குண்டாவதில்லை அதனால் கிருமிகளும் உற்ப்பத்தியாவதில்லை. கங்கை நதிக்கு அதிதேவதையாகிய தெய்வமாது. இவள் பிரமாவினது சாபத்தால் மானுஷமாதா கவந்து பிறந்து சந்தனுவுக்குப் பாரியாகி எண்மர் புத்திர ரையீன்றவள் |
கசன் | பிருகஸ்பதி மகன். இவன் தேவர்கள் பிரார்த்தனையினாற் சுக்கிரபகவானிடம் மிருதசஞ்சீவி மந்திரத்தைக் கிரகிக்குமாறு போய்ச் சீஷனாயிருக்கும் போது சுக்கிரன் மகள் அவன்மீது காதலாயினாள். அதுகண்ட அசுரரர்கள் பொறாராகிச் சமயம்பார்த்திருந்து கசனைக் கொன்றார்கள். தேவயானை அவனைக் காணாது கலங்கித் தந்தையை வினவ, தந்தை ஞாகதிருஷ்டியால் அவனிறந்ததுணர்ந்து அவனை மந்திரத்தால் எழுப்ப அவன் வந்துசேர்ந்தான். பின்னர் அசுரர்கள் அதிகோபங்கொண்டு சமயம்பார்த்து மீளவுங் கொன்று அவனைச் சாம்பராக்கி அச்சாம்பரைக் கள்ளிலே கலந்து சுக்கிரனுக்கு புது மதுவென்றுபசரித் தருந்தினார்கள். மீண்டும் தெய்வயானை அவனைக் காணாது வருந்தித் தந்தையை வினவ அவன் உணர்ந்து முதலிலே அம்மந்திரத்தைத் தன் வயிற்றிலிருந்த கசனுக்கு உபதேசித்துவிட்டு அவனைக் கூவ அவன் சுக்கிரன் வயிற்றைப் பீறி வெளியேவந்து, அதனால் இறந்த சுக்கிரனை யெழுப்பி. இனி எனக்கு விடைதருகவென்றான். சுக்கிரன் விடைகொடுக்க கசன் தேவயானையிடஞ் சென்று விடைவேண்ட, உன்னை நான் மணம்புரிய நினைந்திரு க்க நீ விடைகேட்கின்றனையாவென்று தடுத்தாள். அதற்கவன் மறுக்க, நீ பெற்ற மந்திரம் பலிக்காது போவென்று அவன் சபிக்க, தருமவிரோதங் கூடாதென்று மறுக்க நீ சபித்தமையால் நான் பிறருக்குப தேசித்தால் பலிப்பதாக, நீ பிராமண குலத்தில் மணம் பெறாயாகவென்று பிரதி சாபமிட்டுப் போயினான். அது காரணமாக அவள் யயாதியை மணந்தாள். சுக்கிரனும் அன்றுமுதலாகப் பிராமணருக்குச் சுரா பானம் விலக்காகுகவென்றான் |
கசியபன் | பிரசாபதிகளுளொருவன். இவன் மரீசிக்கு ஒருகலையாலுற்பத்தி யானவன். தக்ஷன் புத்திரிகள் பதின்மூவரையும் வைசுவாநரன் புத்திரிகளிலே இரண்டு கன்னியரையும் விவாகஞ்செய்தான். தக்ஷன் புத்திரிகளாகிய திதியால் தைத்தியரையும், அதிதியால் ஆதித்தியரையும், தநுவால் தானவரையும், அநாயுவால் சித்தரையம், பராதையால் கந்தருவரையும், முனியால் அப்சரசுகளையும், சுரசையால் யக்ஷராக்ஷசர்களையும், இளையால் விருக்ஷாதிகளையும், குரோதவகையால் சிங்க முதலியவற்றையும், தாமரையால் பக்ஷீகணங்கள் அசுவகணங்களையும், கபிலையால் பசுக்களையும், விநாதையால் அநூரன்கருடன் முதலியவர்களையும், கந்துருவையால் நரகங்களும், வைசுவாந்ரன் புத்திரிகளாகிய காலையால் காலகேயரையும், புலோமையால் பௌலோமரையும் பெற்றான். இப்புத்திரரேயன்றிப் பர்வதன், விபண்டகன் எனவும் இருவர் புத்திரருமுளர். பரசுராமர் அசுவமேதத்திற் பூமி முழுவதும் வாங்கிப் பிராமணருக்குத் தானஞ்செய்த இருஷி. ஒரு புராணிகன். வசுதேவன் புரோகிதன் |
கச்சி | காஞ்சிபுரம் |
கச்சிருமன் | விப்பிரசித்தி புத்திரன் |
கஜகர்ணன் | ஒருயக்ஷன் |
கஜன் | ஒருதானவன். இவன் தாரகயுத்தத்தில் உருத்திரராற் கொல்லப் பட்டவன். அவனுடைய தோலைச் சிவன் போர்த்துக் கொண்டமையின் கஜசர்மதாரியென்றும், ஆனையுரிபோர்த்தொன் என்றும் கூறப்படுவர் |
கஜாசியன் | விநாயகக் கடவுள் தக்ஷயாக பங்ககாலத்தில் வீரபத்திரராலே இவர் தலைகொய்யப்பட்ட போது, தேவர்கள் சிவனைநோக்கி விநாயகக் கடவுள் சர்வகாரியங்களுக்கும், விக்கினம் வராமற் காப்பவராதலால் அவரை எழுப்பித்தருதல் வேண்டுமென்று பிரார்த்திக்க, அவர் உத்தரதிசையிலே தலைவைத்து யாவர் உறங்குகிள்றாரோ அவர் தலையைக் கொய்து கொண்டு வந்து பொருத்த எழும்புவரென்றார். அவ்வாறே தேடியவிடத்து யாவருமின்றி யானைமாத்திரம் அங்ஙனம் நித்திரை செய்யக்கண்டு அதன்றலையைக்கொய்துகொண்டு போய்ப்பொருத்த அன்றுமுதல் கஜாசியன் ஆயினார். இவர் வரலாறு வேறு பலவாறுமுண்டு |
கஜானனன் | யானை முகன் என்பது பதப்பொருள். விநாயகக்கடவுள். இக்கஜானக் கடவுளினதுற்பத்தி புராணங்களிலே பலவாறாகக் கூறப்படும். முன்னே கஜாசியன் என்பதிற் கூறப்பட்டது அப்பல வரலாறுகளுளொன்று இவர் சிவன் திருக்குமாரரு ளொருவர். பிரணவமே இவ்வடிவு கொண்டதென்பது எல்லாப் புராணங்களுக்கு மொத்ததுணிவு. இவர் யானைமுகமும் துதிக்கையோடு ஐந்துகைகளும் பருத்தவயிறும் குறுகிப்பணைத்த கால்களும் ஒற்றைக் கொம்புமுடையவர். வாகனம் ஆகு. ஆயுதம் பாசாங்கு சதந்தங்கள், கத்திகள், சித்தியும், புத்தியும். எக்கருமாரம்பத்துக் கண்ணும் வழிபடற்குரியவர். தம்மை மெய்யன்பொடு வழிபட்டுத் தொடங்கப்படுங் கருமங்களுக்கு வரத்தக்க ஊறுபாடுகளை யெல்லாம் வராமற்காத்தினிது முடிப்பவரா தலால் விக்கின விநாயகரெனப்படுவர் |
கஞ்சன் | கம்சன் காண்க |
கஞ்சி | காஞ்சீபுரம் |
கஞ்ஜஜன், கஞ்ஜன் | பிரமா. தாமரையிற் பிறந்தோன் என்பது பொருள் |
கடகபுரி | கஜபதி ராஜாக்களுக்கு ராஜதானி |
கடந்தைநாயகி | திருத்தூங்கானை மாடத்தற் கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
கடியநெடுவேட்டுவன் | பெருந்தலைச்சாத் தனாராற் பாடப்பட்ட ஒரு வேட்டுவபிரபு |
கடைச்சங்கம் | இதன் வரலாற்றை மேல் வருமாசிரியப்பாவானுணர்க பருங்கடைச்சங்க மிருந்தோர்யாரெனிற். சிறுமேதாவியார் சேந்தம் பூதனாரறிவுடை யானார். பெருங்குன்றூர் கிழார் ~ பாடல் சான்றாவிளந்திருமாறன். கூடலாசிரியர் நல்லந்துவனார் ~ பரவு தமிழ் மதுரை மருதனிளநாக ~ ரவிர்கணக்காயர். நவினக் கீரர் ~ கீரங்கொற்றர்கிளர் தேனூர்கிழா ~ ரோங்கலை மணலூராசிரியர் ~ நல்லூர்ப் புளியங்காய்ப் பெருஞ்சேந்தர் ~ செல்லூராசிரியர். முண்டம் பெருங்குமரர் ~ முசிறி யாசிரியர். நீலகண்டனா ~ ரகைவிரிகுன்ற த்தாசிரியரன்றி ~ நாத்தலங்கனிக்குஞ் சீத்தலைச்சாத்தா ~ முப்பாலுணருமுப்பூரி குடிகிழா ~ ருருத்திரசன்மர் மருத்துவராகிய ~ நாமநாற்கலைத்தாமோதரனார் ~மாதவளனாரோடோது மிளநாகர் ~ கடியுங்கா மப்படியங்கொற்றனா ~ ரருஞ்செயிலூர் வாழ் பெருஞ்சுவனாருடன் ~ புவிபுகழ் புலமைக்கபிலர்பரண~ ரின்னாத்தடிந்த நன்னா கரன்றியு ~ மொல்காப்பெருமைத் தொல்காப்பியத்துக் ~ குரையிடையிட்ட விரகர் கல்லாடர் ~ பேர்மூலமுணருமா மூலர்தம்மொடு விச்சைகற்றிடுநச் சென்னையார் முதற் ~ றேனூற்றெடுப்பச் செந்தமிழ் பகர்ந்தோர் ~ நாணூற்றுவர்முதனாற்பத் தொன்பதின்மர் ~ பீடு பெறவுலகிற்பாடியசெய்யுண் ~ முத்தொள்ளாயிர நற்றிணை நெடுந்தொகை ~ யகநானூறு புறநாநூறு ~குருந்தொகைசிற்றிசை பேரிசைவரியோ ~ டறம்புகல் பதிற்றுப்பத்தைம்பதோடிருபான் ~ பெறும்பரிபாடலுங் குறுங்கலி நூற்றைம்பது முதலாகிய நவையறுங் கலைகளக் காலத்வர்க்கத் தியமதனொடு ~ மிக்காமிலக்கணம் விளங்கு தொல்காப்பிய மெண்ணூற் கேள்வியரிந்த தாயிரத்துத் தொளாயிரத் தைம்பதுவருடமென்ப ~ விடர்ப்படாதிவர்களைச் சங்கமரீ இபினார் ~ முடத்தி மாறன் முதலாவுக் கிரப் பெருவழுதியீறாப் பிறங்கு பாண்டியர்கள் ~ நரபதிகளாகு நாற்பத்தொன்மதின்மரிவருட் கவியரங் கேறினர் மூவர் ~ புவியிற்சங்கம்புகழ் வடமதுரை ~ யாதிமுச்சங்கத்தருந் தமிழ்க் கவிஞரோதிய வெய்யுளுலவாப் பெரும் பொருள் வாளாக்கேட்குந் தெரியாவோட்டை நெஞ்சினுக்கு நுழையாவாதலினுழை புலன்றன்னொடும் விழைவார்க்குரைக்க வெண்டுவர் தெரிந்தே, விரிவு சங்கத்திற்காண்க |
கடோற்கசன் | வீமனுக்கு இடும்பியிடத்துப் பிறந்த புத்திரன். பாரத யுத்தத்தில் ஒரக்கிரோணி சேனையை நாசஞ்செய்து ஈற்றில் அருச்சுனனைக் கொல்லவேண்டுமென்று இந்திரனிடம் பெற்றிருந்த ஒரு சக்தியைக் கொண்டு கர்ணனாற் கொல்லப்பட்டவன் |
கட்க கேத்திரதேவியம்மை | திரு ஆக்கூரிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
கட்டுவாங்கன் | விசவசகன்மகன். தீர்க்கவாகு தந்தை. இவன் தேவாசுரயத்தத்திலே தேவர்களுக்குச் சகாயஞ் செய்தபோது தேவர்கள் சந்துஷ்டியடைந்து உனக்கு வேண்டியதைக் கேளென, அவன் எனக்கு இன்னுமள்ள வயது எவ்வளவினதென்ன ஒரு முகூர்த்தமிருக்கின்ற தென்றார்கள். அது கேட்டு மோக்ஷம்புக்கான் |
கணதரர் | சீர்காழியிலே பிராமணகுலத்திலே பிறந்து அடியார் பக்தி சிவபக்திகளிற் சிறந்து விளங்கி ஒரு சிவபக்தர் |
கணபதீசுவரர் | திருசெங்காட்டங்குடியிலே கோயில்கொண்டிருக்கும் சவாமி பெயர் |
கணம்புல்லநாயனார் | வடவெள்ளாற்றுக்குத் தென்கரையிலுள்ள இருக்கு வேளூரிலே இருந்து சிவாலயத்திலே திருவிளக்கிடுதலையே பெருந்தொண்டாகக் கொண்டு அதன் பொருட்டுத் தமது செல்வ மெல்லாமழிந்தும் அதனை விடாது கணம்புல்லரிந்து விற்றுப் பொருளீட்டி அப்பணி புரிந்து வருகையில் ஒருநாள் நெய் போதாது போகத் தமது முடியை விளக்கிற் பொருத்தி எரிக்கப் புகுந்து சிவனருள் கொண்ட தவச்செல்வர் |
கணாதன் | வைதிகசாஸ்திரங்கள் ஆறனுள்ளே வைசேஷிகசாஜ்திரஞ் செய்தவர். இவ்வை சேஷிகம் நியாயசாஸ்திரம் போலத் தருக்கவிஷயமே கூறுவது. கணாதருடைய பூர்வநாமம் காசியபர். அணுவையும் பிளந்து சோத்தித்த நுண்மதியுடையவராதலினாலே கணாதரெனப் பெயர்படைத்தார், கணம் அணு: அதம் அழிவு, அதிதிநாயனாகிய காசியபனும் வேறு இவரும் வேறு |
கணிகன் | திருதராஷ்டிரன் மந்திரிகளுள் ஒருவன். இவன் ஜாதியில் துவிஜன். அதர்மமானாராச்சிய தந்திரோபதேசம் பண்ணுவதிலும் அக்கிரமான இழி தொழில்களையும் புரியும்படி அரசரையுடன்படுத்துவதிலும் மிக்க வன்மையுடையவன். இக்கணிகணுடைய துஷ்டமந்திரோபதேசத்தைக் கேட்டபின்னரே திருராஷ்டிரன் தன்மைந்தனுடைய வேண்டு கோளுக்கெல்லா முடன்பட்டானாயினான். இவனே திருதராஷ்டினக்கு இராச்சிய சூழ்ச்சியுபதேசித்தபொழுது, ஒருவன்றனக்கு மைந்தனேயாயினும், சகோதரனேயாயினும், நட்பினனேயாயினும், தந்தையேயாயினும், குருவேயாயினும் அவர்களைத் தன்னுடைய அபிவிருத்திக்குச் சத்துருக்களாகக்கண்டால் அவர்களைக் கொன்றழிக்கக்கடவன். என்று இன்னேரன்ன துஷ்டோபதேசங்களும் நரியின் கதையும் எடுத்துரைத்தவன். அந்நரியின்கதை வருமாறு. சுயலாபமும் தாந்திரிகமுமுள்ள ஒரு நரி தனக்கு துனைவராக ஒரு புலியையும், ஒரு எலியையும், ஒரு செந்நாயையும், ஒரு கீரியையும் சிநேகித்துக் கொண்டு ஒரு காட்டிலிருந்தது. அக்காட்டிலே ஒருமான் கூட்டமுமிருந்தது. அக்கூட்டத்திற்கு ஒருகலை அரசாகவிருந்தது. அக்கலைமானை இந்நரியும் மற்றைய துணை மிருகங்களும் எதிர்த்தற்கு இயலாதனவாய்ப் கலநாட்பலவாறு முயன்றும் சித்தி பெறாது ஈற்றில் அவ்வைந்து மிருகங்களும் கூடிச் சூழ்ச்சி செய்வனவாயின. புத்தியில்லாததாகிய நரி புலியைப் பார்த்து, அக்கலைமானைக் கொல்லுதற்கு நீ பலநாள் முயன்றும் உனக்கும் முயற்சி கைகூடாமற் போயிற்றன்றோ. ஆதலால் நான் ஓர் உபாயஞ் சொல்லுகிறேன். அக்கலைமான் நித்திரை செய்யும் பொழுது நமது எலித்துணைவன் போய் அதன் காலைக் கடித்துவிடக்கடவது. அதனால் அக்கலைமான் வேகமாய்ப் பாய்வதற்கு வலியிழந்துவிடும். அப்பொழுது நீ போய் மிக எளிதாகக் கொன்றுவிடலாம். என்று கூறிற்று. இதனைக்கேட்ட புலியும் மிருகங்களும் தக்கவுபாயமென்றெண்ணி அவ்வாறே செய்தன. மற்றைய நாளுதயத்தில் அவ்வைந்து மிருகங்களுஞ் சென்று அக்கலையிறந்து கிடக்குமிடத்தை அடைந்தன. அதனைக்கண்ட நரி நான் ஸ்நானம்பண்ணி விட்டு வந்து விட்டேன் நீங்களும் போய் ஸ்நானம்பண்ணி வந்தால் எல்லோரும் விருந்தருந்தலாமென்றது. அவ்வாறே நரி அங்கிருக்க மற்றைய மிருகங்களெல்லாம் ஸ்நானத்துக்குப் போயின. புலி ஸ்நானம் முடித்துக்கொண்டு முன்னர் மீண்டது. அப்பொழுது நரி துக்க முகத்தோடிருந்தது. அதுகண்ட புலி நரியைநோக்கி நம்முள்ளே புத்திசாலியாகிய நீ துக்கித்திருப்பது யாதுபற்றியென்று வினாவியது. நரி புலியைநோக்கிப் பராக் கிரமத்திற்சிறந்த புலியே! எலி எனக்கு சொன்ன சொற்கள் உன்காதில் வீழ்ந்தால் நீ இதனைப் புசிக்காதெழிவையென்று யென்மனம் வருந்துகின்றது. எலிதான் சென்று மானுடைய காலை யூறு செய்யாதிருந்தால் புலிக்கு இது போசனமாகுமா என்றுகூறித்தன் பெருமையை மிகப்பாராட்டிற்று. இதுவே என்னை வருத்துகின்றதென்று கூறப், புலி நரியை நோக்கி என் மானத்தை விற்று இதனையுண்பதிலும் நான் பசியிருப்பது நன்றென்று கூறி உடனே அவ்விடத்தை விட்டு நீங்கியது. அதன் பின்னர் ஸ்நானம் முடித்துக் கொண்டு எலி மீண்டது. நரியதனை நோக்கி நான் சொல்வதை கேட்கக்கடவை, கீரி இம்மான் மாமிசத்தைப் பார்த்து இது புலியாற் கொல்லப்பட்டமையினாலே அதன் வாயிலுள்ள விஷம் இதிலே கலந்திருக்கின்றது என்றும் தானிதனை உண்பதில்லை யென்றும் கூறிப்போய்விட்டது. தான் மீண்டு வரும்பொழுது உன்னைத் தனக்கு இரையாக்கித்தரும்படி என்னிடத் திலனுமதி கேட்டதென்று கூறியது அது கேட்ட எலி சிறிதுந் தாமதிக்காது அவ்விடத்தினின்று நீங்கியது. அதன்பின்னர்ச் செந்நாய் மீண்டது. நரி அதனை நோக்கி நீ நமக்கு நண்பன் மாத்திரமன்று உறவினனுமாய் இருக்கின்றாய். உன்னைக்காத்தல் எனது கடனாகின்றது. புலி உன்னி டத்திலேதோ கோபமுடையதாகவிருக்கின்றது. இதனைப்புசிக்கும்படி புலி தன் மனைவியோடு இங்கே வரும் ஆதலால் நீ இவ்விடத்திலிருப்பது நன்றன்றென்று கூறியது. அது கேட்டு செந்நாயும் ஓடிப் போயிற்று. அதன்பின்னர் கீரி வந்தது. நரி அக்கீரியைப்பார்த்து என்னுடைய பராக்கி ரமத்தினாலே புலியையும் செந்நாயையும் எலியையும் வென்றுவிட்டேன். உனக்கு பராக்கிரமமிருக்குமாயின் என்னை வென்று இவ்விடக்கைப் புசிக்கலாமென்று கூறியது. மகாபராக்கிரமசாலியாகிய புலியை வென்றவுன்னோடு யான்போருக்குத் துணிதலெங்கனமென்று கூறி அவ்விடத்தை விட்டுக் கீரியும் ஓடியது அதன் பின்னர் நரி அம்மாசத்தைப்யெல்லாம் வயிறாரவுண்டு மகிழ்ந்திருந்தது இவ்வுபகதையினால் இவன் திருதராஷ்டிரனுக்குப் பலவுபாயங்களைக் கூறி அவன் பாண்டவர்கள் மீது வைத்திருந்த அன்பைக் கெடுத்தவன் |
கணியன்பூங்குன்றனார் | பேர்யாற்றகேயுள்ள பூங்குன்று என்னுமூரிற் பிறந்து விளங்கிய புலவர். இவர் உக்கிரப்பெருவழுதி காலத்துக்கு முன்னுள்ளவர். இவர் சாதியிற் கூத்தர். புறநானூற்றில் வரும் இவருடைய பாடல் இவர் ஆன்றகல்வியுஞ் சான்றவெழுக்க முடையாரெனக் காட்டு கின்றது. யாதுமூரே யாவருங்கேளிர் ~ தீதுநன்றும் பிறர்தரவாரா ~ நோதலுந்தணி தலுமவற்றோரன்ன ~ சாதலும் புதுவதன்றே வாழ்தலினிதென மகிழ்ந்தன்றுமிலமே முனிவி னின்னாதென்றலுமிலமே மின்னொடு ~ வானந் தண்டுளி தலை இயானாது ~ கல்பொருதிரங்குமலற்பேர்யாற்று ~ நீர்வழிபடு உமென்பதுதிறவோர் ~ காட்சியிற்றெளிந்தனமாகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலுமிலமே ~ சிறியோ ரையிகழ்ந்த லதனினுமிலமே |
கணேசர் | விநாயகக் கடவுள். பூர்வத்திலே தேவர்களும், இருஷிகளும் தாம் செய்யுங் கருமங்களெல்லாம் இடையூற்றான் முடியாது போதலைக்கண்டு சிவன்பாற் சென்று, தங்கருமங்களுக்கு இடையூறு வராமற்காத்தற் பொருட்டு ஒரு புத்திரனைத்தருதல் வேண்டுமென்றிரப்ப, அவர் திரு முகத்திலே ஒரு சோதி தோன்றிற்று. அச்சோதியினின்றுமொரு புத்திரர் தோன்றினார். அவருடைய திருமேனியின்று காலும் சோதிப்பிரகாசம் உமாதேவியாரது திருநேத்திரத்தைக் கூசப்பண்ணியது. அது கண்ட உமாதேவியார், அப்புத்திரனாருடைய திருமேனி காந்தியிழந்து யானைத்தலையும் தேவகரங்களும் பூதசரீரமும் பொருந்துவதாகவென்ன, அவ்வாறே கஜானனமும் லம்போதர முதலியவுறுப்புக்களு முடையரானார். அதன் பின்னர்ச் சிவபிரான் அவரை கணங்களுக்குத் தொடங்கப்படுங் கருமங்களை யெல்லாம் இடையூறுவராமற் காத்தினிது முடிக்கும் அதிகார தெய்வமாகுக வென்றாக்கினார். அவர் கணங்களுக்குத் தலைவராதலிற் கணபதி கணேசர் முதலிய நாமங்களை பெறுவாராயினார். விக்கினங்காப்பவரும் செய்பவருமாதலின் விக்கினேசுரரெனப்படுவர். இது வராகபுராணத்துள்ளது வரலாறு. கருமம் பலித்தலும் பலியாமையும் ஊழின்வசத்தனவும் புத்தியின் வசத்தனவுமாம். ஆகவே ஊழான்வருவதும் புத்தியான் வருவதுமென விக்கினமிரு வகைப்படும். ஊழான் வருவது வந்தே தீரும் புத்தியான் வருவருவது முன்னரே நாடித் தெளிந்து உபாயங்களாலே விலக்கத்தக்கது. புத்தி தத்துவத்துக்கு அதி தெய்வம் கணேசர். அவர் சகலசராசரங்க ளினிடத்தும் விளங்குகின்ற புத்தி யெல்லாவற்றுக்கும் ஆதாரஸ் தானமாகவுள்ளவர். அவரைத் தியானியா தொழியின் புத்திவிரிதலும், உபாயந்தோன்றுதலும் இல்லையாம். ஆகவே எடுத்த கருமமுங்கைகூடாது கணேசருடைய தலையை யானைத்தலையாக பாவித்தது, யானை ஞாபகசக்தியாற் சிறந்ததும், கண்டது, கேட்டது, உற்றது யாவற்றையும் ஒரு சிறிதேனும் ஒருகாலத்தும் மறவாவியல்புடையதும், மிக்க வலிமையுடையதாயினும், இதஞ்செய்வார்க்கு வசப்பட்டு பகாரஞ் செய்வதும் பிறவுமாகிய சிறந்த குணங்களையுடைமை பற்றியேயாம் யானையினது தலை பழரணவ வடிவாகவிருந்தாலும் அதற்கோரேதுவாம். பாசம் வியாபகத்தையும், அங்குசம் அருளையும் ஐங்கரமுந்தனித்தனியொவ்வொரு குறிப்பினையுடையனவாயினும் அளப்பிலாற்றலையும், பாதமிரண்டும் சித்தயையும் புத்தியையும், பரந்தசெவிகள் சர்வஞ்ஞத்து வத்தையும், ஏகதந்தம் பரஞானத்தையும், ஒடித்ததந்தம் அபயத்தையும், லம்போதரம் பொறையடைமையையும் உணர்ததுஞ் சிற்சொரூபங்களாம் |
கண்டகி | மகததேசத்திற் பிரவாகமாகிக் கங்கையோடு சங்கமிக்கின்ற நதி |
கண்டராதித்தர் | திருவிசைப்பாபாடினா ரொன்பதின்மருளொருவர். இவர் உறையூரிலிருந்து அரசுபுரிந்த சோழருளொருவர் |
கண்டாகர்னன் | குபேரன் கிங்கரனாகிய ஒரு பிசாசபதி. ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு சமயத்தில் வதரிவனத்தில் யோகத்திலிருந்தபோது இக்கிங்கரன் அவரை வழிபட்டுப் பிசாரூபம் நீங்கப்பெற்றவன் |
கண்டீரச்கோப்பெருநள்ளி | நள்ளிகாண்க |
கண்ணகனார் | கோப்பெருஞ் சோழனுக்குயிர்த் துணைவராயிருந்து அவன் இறந்தமையுணர்த்தப் படாது தாயுமேயுணர்ந்துடனுயிர் துறந்த பிசிராந்தையாரைப் பாடிய புலவர் |
கண்ணகி | கோவலன் மனைவி. இவள் கற்பு முதலியவற்றை வெளிப்பத் தற்பொருட்டே சிலப்பதிகாரம் செய்யப்பட்டது. இவளை மறக்கற்புடையாள் என்பர். திருமாபத்தினி, பத்தினிக்கடவுள், மங்கல மடந்தை, வீரபத்தினியென்பன இவளுடைய பரியாயநாமங்கள். கோவலன் தன் காமக்கிழத்தி காரணமாகத் தன்னிடத்துள்ள செல்லமொல்லாம் போக்கி இலம்பாடுடை யனாகிப் பொருளீட்டக்கருதித் தன் பத்தினியோடு காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு மதுரையையடைந்து அங்கே தன் பத்தினியுடைய காற்சிலம்பொன்றை விற்குமாறு முயன்றான். பாண்டிமாதேவியினது காற் சிலம்பை வாங்கிப்போய் விற்றுச் செல்ல செய்துவிட்டு அதனைக்கள்வர் கவர்தாரென்று நடித்திருந்த தட்டான் இச்சிலம்பைக் கண்டு அரசனிடஞ் சென்று சிலம்புதிருடி யகள்வன் அகப்பட்டான் என்று கூறி அரசனை தன் பொய்மாயத்துக்குடன் படுத்திக் கோவலனைக் கொல்லுவித்தான். அஃதறிந்த கண்ணகி புலம்பித் தவித்து அரசன் மாட்டுச்சென்று தன்வரலாற்றைச் சொல்லி தன்சிலம்பினுள்ளேயிருக்கும் பரல் மணியென்றெடுத்துக் காட்டி, அரசன் தான் செய்தது குற்றமென்றெப்பும்படி செய்து, சோகாக்கினி பொங்கத் தனது முலையி லொன்றைத் திருகி மதுரை மாநகரின் மீது வீசியுயிர்விட்டாள். உடனே மதுரை எரிந்தழிந்தது. இவனுடைய கற்பைமெச்சி அரசன் அவளைப் பத்தினிக்கடவுளாக்கி அவளுக்கு ஊர்கள் தோறும் கோயில் அமைத்து பூசையும் விழாவுஞ் செய்வித்தான். அந்நாள் இவளுக்கு இலங்கையிற் கோயி லமைத்தவன் கயவாகு வேந்தன். புறநானூறென்னு நூலிலே கூறப்பட்ட வள்ளலாகிய பேகன் பாரி. இவளைப் பிணங்கிப் பிரிந்திருந்த பேகனோடு சந்திசெய்து வைத்தவர். கபில பரணர் முதலிய புலவர்கள் |
கண்ணப்பமுதலியார் | இவர் திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப முதலியார் சகோதரர். இவரும் கம்பராற் புகழ்ந்து பாடப்பட்டவர் |
கண்ணப்பர் | உடுப்பூரிலே வேடர்குலத்திலே திண்ணர் என்னும் பெயரோடு விளங்கிய இவர் காட்டிலே வேட்டைமேற் சென்றபோது காளாத்திநாதர் என்னும் சிவலிங்கத்தைக் கண்டு அவர்மேல் அன்புடையராகிப் பிரியமாட்டாது இரவும் பகலுமங்கிருந்து அதற்குபசாரம் புரிந்து வருநாளிலொருதினஞ் சுவாமியினது கண்ளொன்றிலிரத்தஞ் சோரக்கண்டு அதற்கு மருந்தாக தமது கண்ணையிடந்து அதன் மேலப்பிய மெய்யப்பன்பு காரணமாகச் சிவபெருமானது பேரருள் கொண்ட பக்கதசிரோமணி. இவர்காலம் கலியுகாரம்பம் |
கண்ணாயிரநாதர் | திருக்காறாயலிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
கண்ணாயிரேசுவரர் | திருக்கண்ணார் கோயிலி லெழுந்தருளியிருக்கும் சுவாமி பெயர் |
கண்ணுவன் | பூருவமிசத்து அதிசாரன் மகன். சகந்தலையை வளர்த்த இருஷி. கண்ணுவன் வமிசத்தர் காணவியர் எனப்படுவர். மகததேசராஜாவாகிய தெவபூதிமந்திரி. தேவபூதியைக் கொன்று பின் ராஜாவாயினவன் |
கதன் | பலராமன் தம்பி. ரோகிணியிடம் வசுதேவனுக்குப் பிறந்தவன் |
கதிர்காமம் | ஈழநாட்டிலுள்ள ஒரு சுப்பிரமணிய ஸ்தலம் |
கதையங்கண்ணனார் | புறநானூறுபாடிய புலவர்களுளொருவர்.சேய்நாட்டுச் செல்க கிணைஞனைப் பாடியவர் |
கத்துருவை | கசியபன் பாரியருள் ஒருத்தி. தக்ஷன் மகள். இவளால் நாக குலம் உண்டாயிற்று. ஆதிசேஷன் கார்க்கோடகன் முதலியோர் தாய். இவளுடைய சக்களத்தி விந்தையும் தானும் பாற் கடற்கரையிலே உச்சைச்சிரவமென்னும் குதிரையைக்கண்டு அதிசயித்துப் பேசும் போது கத்துருவை விளையாட்டாக அக்குதிரைக்கு வால் கறுப்பென்றாள். மற்றவள் ஆதியந்தம் வெள்ளையென்றாள். கத்துருவை அது கரியதானால் நீயெனக் கடிமையாதல் வேண்டுமென்றாள். விந்தை வெண்மையானால் நீயெனக்கு அங்ஙன மென்றாள். இச்சமயத்தில் அஸ்தமயமாயது. கத்தருவை உடனே தன்மகன் ஆதிசேஷனிடம் போய்த் தனது கருத்தைச் சொல்ல, அவன் உடன்படாது மறுத்தான். அப்பால் கோடகனிடஞ்சொல்ல அவன் அவ்விரவேபோய் அக்குதிரையின் வாலை நஞ்சூட்டி கறுப்பாக்கி மீண்டான். விடிதலும் விந்தை சென்று பார்த்து மறுபேச்சின்றிக் கூறிய படிதாசியானாள். அது கண்ட ஆதிசேஷன் அவளைவிட்டு நீங்க, கோடகனொழிந்த மற்றெல்லோரையும் சர்ப்பயாகத்தில் மடிந்தொழிக வென்று தாய் சபித்தாள் |
கந்தன் | மன்மதன். குமாரக் கடவுள் |
கந்தபுராணம் | தற்புருஷ கற்பத்துச் சம்பவங்களையும், அறுமுகக் கடவுளுடைய மான்மியத்தையும் விரித்துணர்த்துவது: இலக்ஷங்கிரந்தமுடையது. வடமொழியிலே செய்தவர் வியாசகர். அதிலே சங்கர சங்கிதையின் ஒரு கண்டத்தை மாத்திர மெடுத்துத் தமிழிலே மொழிபெயர்த்துப் பாடினவர் காஞ்சீபுரத்துக் குமரகோட்டத் தர்ச்சகரும் சுப்பிரமணியக்கடவுளது திருவருள்பெற்ற புலவர்சிகாமணியுமாகிய கச்சியப்ப சிவாசாரியார். இது பன்னீராயிரஞ் செய்யுளுடையது. இது பாடிய காலம் சாலிவாகனசகம் எழுநூறு. புராணவரலாற்றினோடு தத்துவோபதேசங்களையுமினிது விளக்கு நூல் தமிழிலே புராணங்களுளிது வொன்றேயாம் |
கந்தமாதனன் | இவன் சுக்கிரீவன் சேனையிலொருவன். குபேரன் புத்திரன். அக்குரூரன் தம்பிகளுளொருவன் |
கந்தமாதனம் | மேருவுக்கு கீழ்பாலிலுள்ள ஒருமலை. தென்னாட்டிலுள்ள ஒருமலை |
கந்தரவன் | சம்பாதிவமிசத்துக் கங்கன் தம்பி |
கந்தருவர் | தேவர்களுள் ஒரு பாலார். கசியபனுக்குப் பிராதையிடத்துற்பத்தியானவர்கள் |
கந்தர்ப்பன் | மன்மதன் |
கந்தவதி | வாயுவுக்கு ராஜதானி. வியாசர்தாயாகிய சத்தியவதி |
கந்தவெற்பு | தேவர்கள் குமாரக்கடவுளைப் பூசித்த மலை |
கந்நன் | கிருஷ்ணன் |
கனகசடம் | ஜந்தவர் பிறந்தவூர் |
கனகசபை | சிதம்பரத்துள்ள பொன்னம்பலம். இது சிவன்றிரு நடனம்புரியும் பஞ்சசபைகளுள்ளே மிக்கசாந்நித்தியமுடையது. இது பிரண்மாடத்துப் தூலபாவனாஸ்தலம். பிண்டத்திலே சூக்குமதத்து வஸ்தலம் இருதய ஸ்தானமாகிய ஞான சபை |
கனகமாலை | சீவகன் மனைவியருளொருத்தி |
கனகவிசயர் | ஆரியமன்னனாகிய பாலகுமாரன் புதல்வர். இவர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டவர் |
கனித்திரன் | பிரஜானன் புத்திரன் க்ஷபன் தந்தை. விவிம்சன் பாட்டன். இவன் தம்பிகள் இவனைக் கொல்லுமாறு ஒரு யாகத்தினிகறுமொரு பூதத்ததை யெழுப்பிவிட அஃது அவனைக்கொல்லவியலாது திரும்பி வந்து ஏவினோரையே கொன்றது. விவிம்சன் புத்திரன். இவன் மகன் கரந்தமன் |
கனிவாய்மொழியம்மை | திருவெண்பாக்கத்திலே கோயில் கொண்டிருக்குஞ் தேவியார் பெயர் |
கன்னன் | கர்ணன் காண்க |
கன்னர் | செங்குட்டுவனுக்கு நட்பினராகி ய ஆரிய அரசர். இவர் நூற்றுவர் |
கன்னியாகுப்சம் | ஒரு தேசம் இது, குநசாபன் புத்திரிகள் நூற்றுவரையும் வாயுபகவான் பூப்பின்றியிருக்குமாறு சபிக்கப் பிருகதத்தன் அச்சாபத்தை நீக்கி மணம்புரிந்து வாழ்ந்த இடம் |
கன்னியாகுமரி | மலைநாட்டிலுள்ள குமரியம்மை யென்னும் தேவி க்ஷேத்திரம். சிவசக்தியாகிய இத்தேவியை இங்கே ஸ்தாபித்துப் பூசித்தவன் பரசுராமன். இக்குமரிஸ்தலம் முன்னூழியிறுதிலே கடல் கொள்ளப்பட்டது. இப்பொழுதுள்ள ஸ்தலம் பின்னரமைக்கப்பட்டது. இதுகுமரி எனவும்படும் |
கன்னியுமைமாது | திருக்கச்சூராலத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
கன்னியை | விதர்ப்பன் மனைவி. இவளைச் சியாமகன்றனக்கென்று கொண்டுபோய்த் தன் மகன் விதர்ப்பனுக்கு மனைவியாக்கினான் |
கன்மாடபாதன் | மித்திரசகன். இவன் வேட்டம் சென்றபோது ஓரிராக்ஷசனைக் கொன்று சென்றான். அதற்கு பழி வாங்கு நிமித்தம் அவ்விராக்ஷசன் தம்பி பரிசாரகவேஷந்தரித்து இம்மித்திரசகனிடம் போய் அவன் மடைப்பள்ளிக்கதிபதினானான். ஒரு நாள் வசிஷ்டர் இவ்வரசன் மனைக்கு விருந்தினராய்ப்போக, அப்பரிசாரகன் ஒரு நரனைக்கொன்று அம்மாமிசத்தைப் பாகஞ்செய்து முனிவர்க்கிட, முனிவர் அதுகண்டு சினந்து அரசனை ராக்ஷசனாகவென்று சபித்தார். அரசன் தன்மீது குற்றமில்லாதிருக்கச் சபித்தவருக்குப் பிரதிசாபமிடத்த் துணிந்து கையினீரையெடுக்க மனைவி தடுத்தாள். தடுத்தலும் அந்நீரைத் தனது பாதத்தில்விடக் கன்மாஷபாதபாதனாயினான். அது கண்ட வசிஷ்டர் உண்மையுணர்ந்து ஈராண்டிற் சாபவிமோசனமாக வென்றனுக்கிரகித்தார் |
கபாடபுரம் | இடைச்சங்கம் இருந்தவிடம். அது பின்னர்க்காலத்திற் கடல்கொண்டழிந்தது |
கபாலமோசனம் | ஒரு புண்ணிய க்ஷேத்திரம். ராமரால் கொலையண்ட மகோதரனது கபால என்புத்துண்டம் ஒரு இருஷி காலிற்றைக்க அவ்வேதனையால் அவ்விருஷி சுக்கிரன் தபஞ்செய்தவிடத்துக்குப் போனார். அஃதங்கே வீழ்ந்தமையால் அவ்விடம் கபாலமொசனம் எனப்பட்டது |
கபாலீசர் | திருமயிலைப் பூம்பாவையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
கபிலன் | கர்த்தமப் பிரஜாபதிக்குத் தேவஹூதியிடத்திற் பிறந்த இருஷி. இவரே சாங்கிய யோகஞ்செய்தவர். அரிவமிசத்திலே இவர் விதாதாபத்திர ரெனப்படுவர். சகரசக்கரவர்த்தி தொண்ணூற்றொன்பது அசுவமேதஞ் செய்யத்தொடங்கிக் குதிரையை அலங்கரித்துத் திக்கு விஜயத் துக்கு விடுத்துத் தன் புத்திரர் அறுபதியாயிரவரையும் அதற்குக் காவலாக வுடன் போக்கினான். இந்திரன் இவ்வியாகம் முற்றுப்பெற்றால் தனது பதத்துக்குத் கேடுவருமென்றெண்ணி அக்குதிரையை மாயமாகக் கவர்ந்து சென்றான். இது நிகழ்ந்தது கபிலாச்சிரமத்துக்குச் சமீபத்திலேயாதலின் சகர புத்திரர்கள் கபிலரேயிது செய்தாரெனநிச்சயித்து அவரைச் சாட வெத்தனித்தார்கள். அவர் அது கண்டு அவர்களைச் சாபத்தாற் சாம்பராக்கினார். தனு புத்திரருளொருவர். திருவள்ளுவர் சகோதரருளொருவர். தம்மைப் பெற்றவுடன் தந்தை தாயரோராற்றங்கரையில் வைத்தேக திருவாரூரந்தணரொருவர் எடுத்து வளர்க்க வளர்ந்தவர். இவர் கடைச்சங்கத்துப் புலவரு ளொருவராகித் தமிழாந்ததோடு தாமும் பலநூல் செய்தவர். பாரியென்னும் பெருவள்ளலுடன் மிக்கநண்பு பூண்டிருந்தவர். இவர் பாரி இறந்த பின்னர் அவன் புத்திரிகளை தமது புத்திரிகள்போலப் பாதுகாத்து அவன் சாதியர் அப்பெண்களை மணம் புரிதற்கு மறுத்தமையாற் பார்ப்பனப் பிரபுக்களுக்கு மணத்திற் கொடுத்த தரும சீலர். ஐங்குநுறூற்றிற் குறிஞ்சிப்பொருண் மேல்வரும் மூன்றாம் நூறுசெய்தவரும், சேரமான் செல்வக் கடுங்கோவாழியாதனைப் பதிற்றுப்பத்துள் எழாம் பத்தாற்பாடி மலைமீதேறிக் காணும் நாடும் பிறவும் பரிசாகப் பெற்றவரும் குறிஞ்சிப்பாட்டும் இன்னா நாற்பதும் பாடியவரும் இப்புலவர் பெருந்தகையே. புலனழுக்கற்றவந்தணாளன் எனவும், பொய்யா நாவிற் கபிலன் எனவும் புறநானூற்றிலே புகழப் படுபவரும் இவரே. திருத்தொண்டர் புராணசாரத்திலே உமாபதிசிவாசாரியராலே, பொய்யறியாக்கபிலர் என்னு துதிக்கப் படுபவருமிவரே. இவர் கல்வி கேள்விகளான மாத்திரமன்று ஒழுக்கத்தானும் தம்மின் மிக்காரின்மையினன்றே கடைச்சங்கத்திலும் அக்கிரபதம் பெற்றாராயினவர். கபிலரகவலெனப் பெயரிய அகவல் சொற்சுவை பொருட்சுவை நியாயவன்மை முதலியவற்றாற் சிறந்தது |
கபிலபுரம் | கலிங்க நாட்டிலுள்ள ஒரு நகரம் |
கபிலாசவன் | குவாலயசுவன் மகன். துந்துமாரன் மகனாகிய திருடாசுவன் |
கபிலாச்சிரமம் | இது கங்காசங்கம சமுத்திரப்பிரதேசத்திலுள்ளது. சகரதீவிலுள்ளது. பாதாலத்திலுள்தென்றுஞ் சொல்லப்படும் |
கபிலை | சிந்துநதியிற் கலக்கும் ஒருபநதி. தக்ஷன் மகள். கசியபன் பாரி. பசுக்களுக்குத் தாய். சுரபியெனவும் படுவாள். புண்டரீகம் என்னும் திக்கு யானையினது பெண்யானை |
கபோதலோமன் | விலோமன் மகன் |
கமலபவன் | பிரமா,, தோயஜகர்ப்பன் காண்க |
கமலாக்ஷன் | திரிபுராசுரர் காண்க |
கமலாபாலிகை | இடிம்பை |
கம்சன், கஞ்சன் | உக்கிரசேனன் மகன். மதுராபுரத்தரசன். கிருஷ்ணன் மாதுலன். இவன் பூர்வஜன்மத்தில் காலநேமியென்னும் ராக்ஷசன். அந்தவாசனையால் தேவர்களை இமிசித்து வந்தான். தனது தங்கையான தேவகியை வசுதேவனுக்கு விவாகம பண்ணிக்கொடுத்து இரதத்திலே ஏற்றிக் கொண்டு வனம்பார்க்கப் போகையில் உன் தங்கை புத்திரனாற் கொல்லப்படுலாய் என்றோரசரீரி பிறந்தது. அது கேட்டமாத்திரத்தில் திரும்பிவந்து இருவரையும் சிறையிலிட்டுப் பிள்ளைகள் பிறக்குந்தோறும் கொன்று வந்தான். ஈற்றில கிருஷ்ணன் பிறந்து தனது யோகமாயையால் நந்தன் சேரிபோய்ச் சேர்ந்தான். அஃதறிந்த கம்சன் அவனைக் கொல்லப் பல உபாயங்கள் தேடியும் பலியாது ஈற்றில் கிருஷ்ணனாற் கொல்லப்பட்டான். உக்கிரசேனன் மனைவி தோழிகளோடு காட்டிற் சென்ற போது அங்கே தோழிகளைப்பிரிந்து வழிதடுமாறித் தனிக்க அச்சமயம் ஓரரக்கன் கண்டுமோகித்து அவளைக் கூடிப்பெற்ற புத்திரன் இக்கம்சன் |
கம்சாராதி | கிருஷ்ணன் |
கம்சை | உக்கிரசேனன் மூத்த மகள் |
கம்பன் | சோழமண்டலத்திலே திருவழுந் தூரிலே பிறந்து சடையப்ப முதலியாராலாதிரிக்கப்பட்டு விளங்கிய தமிழ்கவிசக்கரவர்த்தி. இவர் சடையப்பமுதலியார் வேண்டுகோளின்படி ராமாயணத்தை பாடிச் சோழன் சபையில் அரங்கேற்றினவர். இவருடைய கவிகள் வெண்சொல்லும் புதைபொருளும் உடையனவாய் எத்துனை வல்லாரையும் முதல் மயக்கிப் பொருள்வெளிப்பட்டவிடத்துப் பேரானந்த முறச்செய்யுமியல்பின. இவர் காலம் இற்றைக்கு ஆயிரத்து பதினைந்து வருஷங்களுக்கு முன்னையது. கம்பர்காலத்தைச் சிலர் தக்கநியயாமின்றி நானூறுஐஞ்நூறு வருஷங்களுக்கு முன்னுள்ளதாகக் கூறுவர். ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் கம்பர் காலத்தவர் என்பது தொண்டை மண்டலசதகத்தால் யாவர்க்கு முடன்பாடேயாம். புகழேந்தி வச்சிராங்கத பாண்டியனுடைய சமஸ்தான வித்துவான். உறையூரிலிருந்து குலோத்துங்க சோழனுக்குப்பெண் கொடுத்தவன் இப்பாண்டியனே. இவன் துலுக்கரால் வெல்லப்பட்ட பராக்கிரம பாண்டியனுக்கு முன்னர் அரசு புரிந்தவன். துலுக்கர்வென்றது இற்றைக்கு எண்ணூற்றெழுபது வருஷங்களுக்கு முன்னரென்பதும் யாவர்க்கு முடன்பாடாம். ஆகவே எண்ணூற்றெழுபதும் நாற்பத்தைந்தும் அதற்குமுன் ஓரறுபதுமாகச் சென்ற வருஷங்களைத் தொகை செய்யுமிடத்து எண்ணியசகாத்த மெண்ணூற்றேழின் மேல். கவியரங்கேற்றினானே என அரங்கேற்றுக் காலங்கூறுஞ் செய்யுள் இழுக்காகமாட்டாது. அக்காலத்தில் அவ்வரங்கிலுடனிருந்து கேட்ட வைஷ்ணவாசாரியர் ஸ்ரீமந்நாமுனிவர். அவர்க்குப்பின் ஆசாரியபரம்பரையாக வந்தோர் இப்பொழுதிரப்பவரையுள்ளிட்டு நாற்பத்து மூவராவர் ஒருவர்க்கு இருபத்தைந்து வருஷங்களாகுமே. எவ்வழியாயினும் எல்லாமொத்தலின் கம்பர்காலம் ஆயிரம்வருஷங்களுக்கு முன்னுள்ளதேயாம் |
கம்பளபருகிஷன் | அந்தகன் மகன் |
கம்பை | ஓர் நதி |
கயன் | உன்முகன் புத்திரன். அங்கன் தம்பி. ஒரு சக்கரவர்த்தி. அவன் பிரியவிரதன் வமிசத்து நந்தன் மகன். இவன் 500 அசுவமேதயாகஞ் செய்து இந்திரபதம் பெற்றவன். அதூர்த்தரஜன் மகன். யக்கியங்கள் பலசெய் துராஜ விருஷியானவன். இவன் யக்கியங்கள் செய்தவிடமே கயையெனப் பெயர் பெற்றது |
கயவாகு | இவன் சிலப்பதிகாரத்திற் கூறப்பட்ட இலங்கை அரசன். இவனே முதன்முதல் கண்ணகிக்கு இலங்கையில் கோயில் கட்டுவித்து உற்சவங்கொண்டாடியவன் |
கயிலாசநாயகியம்மை | திருக்காறாயலிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
கயை | காசிக்கு சமீபத்திலுள்ள புண்ணியஸ்தலம். இவ்விடத்தில் அக்ஷயவடம் என்று சொல்லப்படும் ஓராலவிருக்ஷமுளது |
கரதோயம் | வங்க தேயத்திலுள்ள ஒரு நதி. இது கவுரி விவாககாலத்திற் சிவன் கரங்களினின்று பெருகினமையாற் கரதோயமெனப்பட்டது |
கரந்தாமன் | யயாதி புத்திரனாகிய துர்வாசன் பௌத்திர புத்திரன். பலாசு வன் எனவும் படுவன். பல பராக்கிரமவந்தனாய் ராச்சியம் செய்த போது பெறாமையால் ஏனையராஜாக்கள் திரண்டு இவனை வளைந்தார்கள். அது கண்டு அஞ்சிச்சிறிது நேரம் ஏகாந்தமாயிருந்து சித்தித்துப் பின் வெளியே சென்று யாவரையுஞ் செயித்தவன். இவன் மகன் அவீக்ஷீத்து |
கரன் | விச்சிரவாவுக்குச் சாகையிடத்துப் பிறந்தபுத்திரருள் மூத்தவன். ஜனஸ்தானத்தில் சேனாபதியாயிருந்தபோது ராமராற் கொல்லப்பட்டவன். சகோதரர். தூஷணன் திரிசிரன் என இருவர் |
கரம்பி | சகுனி மகன். குந்தி |
கரவீரேசுவரர் | திருக்கரவீரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமியர் பெயர் |
கரிகாற்சோழன் | காவிரிப்பூம் பட்டினத்திணுலே, இளஞ்சேட் சென்னியன் என்னும் சோழராஜாவுக்குப் புத்திரனா அவதரித்து உத்தரதேசத்திலே படை கொண்டு அநேகநாடுகளைத் தனதடிப்படுத்திப் பகையரசரையடக்கி மனு நெறிவழாமற் செங்கோல் செலுத்தியவனும், கடியலூர் உருத்திரங் கண்ணனாரென்னும் புலவர் பட்டினப்பாலையென்னும் பிரபந்தத்திலே தன்பராக்கிரமம், செங்கோல், கொடை முதலிய நற்குணங்களை யெடுத்துப் பாடப்பெற்றவனும், அப்புலவர்களுக்கு அப்பிரபந்ததுக்காகப் பதினாறிலக்ஷம் பொன் பரிசிறைந்தவனும் இப்பெருந்தகையே. இவன் சாலிவாகன சகாரம்பத்தில் விளங்கியவன். சாரமாமுனிவரிட்ட சாபத்தால் உறையூர் மண்மாரியாலழிய அதில் அரசு செய்திருந்த பராந்தகசோழனும் மனைவியும் அம்மண்மாரிக்குத் தப்பியோடிக் காவிரிநதியை கடந்து செல்லும் போது பராந்தகன் குதிரையினின்றுந் தவறிக் காவிரியில் வீழ்ந்திறக்க அவன் மனைவி அக்கரைபட்டு ஒரு வனத்தையடைந்தாள். பராந்தகன் இறக்கும்போது கருப்பத்திலிருந்த இக்கரிகாற்சோழன் சிலநாளில் பிரமமாநதி முனிவராச்சிரமத்திற் பிறந்தான். இம் முனிவரால் சகல கலைகளையு மோதியுணர்ந்து வருநாளில் அரசிழந்திருந்த சோழநாட்டிற்கு ஓரரசனை நாடுமாறு விடப்பட்ட யானையானது சென்று அச்சிறுவனைத் தூக்கவெத்தனித்தும் போதியவலியில்லாது திகைத்து நின்றது. அப்பொழுது பிரமாநதி மனிவர் அப்புத்திரன் காலில் ஒரு கரிக்கட்டியால் வரைசெய்து விட்டார். அவ்வளவில் அப்புத்திரனை யானைதூக்கிச் சென்று முடிசூடுவித்தது. இதுவே பெயர்க்காரணம் எனவே இப்பெயருடையார் இருவர் சோழர் |
கருசன் | வைசுவதமனுவினுடைய புத்திரருள் ஒருவன். இக்ஷவாகு தம்பி. காரூசர் இவன் வமிசத்தவர். இவன் தேசம் கரூசம் |
கருடன் | கசியபப் பிரசாபதிக்கு விநாதையிடத்துப் பிறந்த புத்திரன். இவன் விஷ்ணுவுக்கு வாகனம் |
கருடபஞ்சமி | ஆவணி சுக்கிலபக்ஷத்துப் பஞ்சமி. இது சுமங்கலிகளக்குரிய விரத தினங்களில் ஒன்று |
கருணிகாரவனம் | மேரு சமீபத்திலுள்ள வனம் |
கருணிகை | ஆனகன் பாரி. ஓரப் சரசு |
கருணைநாயகி | திருமாற்பேற்றிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
கருநாடகம் | திருவிடாந்தர தேசமத்தியத் தியத்திற்கு நேரே மேற்கின் கணுள்ள தேசம் |
கரும்படுசொன்னாயகி | திருப்புறம்பாயத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
கரும்பனூர்கிழான் | வெங்கட நாட்டில் விளங்கிய கரும்பனூரன் இவன் புறத்திணைநன்னாகராற் பாடப்பட்டவன் |
கரும்பன் | தன் தோட்டத்தலிருந்த கரும்பையெல்லாம் எவரும் நாணாது வந்து தின்னுகவென்று யாவரையு மழைத்தபோது சிலர் மறுக்க, அவர்க்குக் கூலிகொடுத்தழைத்து அருத்தின தொண்டை நாட்டு வேளாளன். கரும்பு தின்னக் கைக்கூலி என்ற பழமொழி இவனால் வந்தது, தொண்டைமண்டலசதகம் |
கருவூர் | வஞ்சி. இந்நகர் சேரருக்குரிய இராஜதானி. சேரரைவென்று சோழமிங்கரசியற்றினர் |
கரையேறவிட்டநல்லூர் | இது திருப்பாதிரிப்புலியூருக்குச் சமீபத்திலே யுள்ளது. கெடிலம்பெருகி மாணிக்கவாசகரை வழி தடுக்கச் சிவன் சித்ராய்வந்து அவர்க்கு வழிவிடுத்த தலம் |
கர்க்கடேசர் | திருத்துதேவன் குடியிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
கர்க்கன் | யாதவர்கள் புரோகிதன். வசுதேவன் இவரை நந்தன்மனைக்கனுப் பிப்பலராமகிருஷ்ணர்களுக்கு நாமகரணா திசமஸ்காரஞ் செய்வித்தான். ஹூதமன்னியன் புத்திரன். சினி தந்தை |
கர்ணன், கன்னன் | குந்தி கன்னிகையாயிருக்கும் போது தனக்கு ஓர் இருடி கொடுத்த குளிகையைப் பரீக்ஷார்த்தமாக உட்கொண்டு சூரியனைநினைக்கச் சூரியன் பிரசன்னமாயினான். அவனைக் கூடிப்பெற்ற புத்திரன் இவன். குந்தி தனது கற்புக்குப் பங்கம்வந்ததேயென்று நாணி உடனே அப்புத்திரனை பேழையிலிட்டு யமுனையிலே மிதந்து போம்போது ஒரு துறையிலே தனது மனைவியோடு நீராடிநின்ற அதிரதன் என்னும் இரதசாரதி அப்பேழையைப் பற்றித் திறக்க அதிலே புத்திரன் இருக்கக்கண்டானந்தித்தெடுத்துப் போய் வளர்த்தான். அது காரணம் பற்றி அதிரபுத்திரன் எனப் பெயர் பெற்றான். அதிரதன் மனைவி பெயர் ராதையாதலால் ரததேயன் எனவும் படுவன். இவன் சகஜ கவசகுண்டலனாதலால் கர்ணனென்றும், வசுவர்மாரனாதலின் வசுசேனனென்றும் பெயர் பெற்றான், வசுவர்மம் ஸ்ரீபொற்கவசம், அதிரன் இவனைத் துரோணனிடங் கொண்டுபோய் வில்வித்தை கற்பித்தல் வேண்டுமென்று வேண்டத் துரோணன் பிராமணரும் க்ஷத்திரியருமல்லாதார்க்குப் பயிற்றுவதில்லையென்று மறுக்க, கர்ணன் பிராமணவடிவந்தாங்கிப் பரசராமரிடஞ்சென்று கிரமமாகக் கற்று வல்லனாயினான். இங்கே துரோணரிடங் கற்ற அர்ச்சுனன்தனக்குச் சமானனாயினமை கண்ட கர்ணன் பொறாமை கொண்டொழுக, அஃதுணர்ந்து துரியோதனன் அவனைச் சிநேகித்து அங்கதேசாதி பதியாக்கித் தன்க்குயிர்த் துணையாக்கினான் இதற்கு முன்னே பரசுராமர், தம்மை கர்ணன்வஞ்சித்தானென்ப துணர்ந்து, தாமுப தேசித்த மகாஸ்திரவித்தை ஆபத்துக்காலத்திலுதவாது போவென்று சபித்தார். கர்ணன் வில்லியத்தை அப்பியாசித்து வரும்போது ஒருநாள் ஒரு வெளியிலே நின்று மேய்ந்த பசுக்கன்றின் மேல் அவன் கைப்பாணம்பட அஃதிறந்தது. அக்கன்றுக்குரிய பிராமணன் கோபித்து, சமானனோடு யுத்தஞ் செய்யும் ரதம்புதையப் பெற்று அவனால் மடிகவென்று அவனைச் சபித்தான். கர்ணன் எதைக்கேட்பினும் மறாது கொடுக்குந் தாதாவென்பது துணர்ந்திந்திரன் தனது மகன் அர்ச்சுனன் பொருட்டு லஞ்சத்தால் அவன் கவச குண்டலங்களைக் கவர்ந்தான். கர்ணன் பாரதயுத்தத்திலே அர்ச்சுனாலே கொல்லப்பட்டுக் கற்றுயிராய்க்கிடக்கும் போதும் கிருஷ்ணன் ஒரு வேதியனாகி அவன்பாற் சென்றுயாசிக்க, அவன் பிராமணோத்தமரே, என்னாவி நிலைகலங்கிப் பிரிகின்ற சமயத்தில் வந்தீர். நீர் கேட்பவற்றை யெல்லாம் முகமலர்ந்து வாரிக் கொடுக்கும் நன்னிலையிலிருக்கும் போது வந்தீரில்லை. இச்சமயம் யான் செய்யத்தக்கது யாதென்று வினவ, கிருஷ்ணன், நீ செய்த புண்ணியங்களையெல்லாம் எனக்குத் தத்தஞ் செய்வாயாகவென்ன, கர்ணன் என்னிடத்துள்ள தனையே கேட்டீர் அஃது யான் செய்த தவப்பயனேயாமென்று மகிழ்ந்து தன் தேகத்திலே பாணம் பாய்ந்த கண்ணினின்றுகாலும் இரத்தப்புனலால் புண்ணியத்தைத் தத்தஞ்செய்தான். கிருஷ்ணன் அவனுடைய வண்மையை மெச்சி அவனுக்கு நற்கதியருளிப் போயினர். கர்ணனுக்கும் துரியோதனனுக்குமிடையேயிருந்த நட்பே நட்பிலக்கணமெல்லாம் பொருந்திச் சிறந்தது. ஒரு நாள் கர்ணனும் துரியோதனன் மனைவியும் சதுரங்கமாடிக் கொண்டிருக்கையில், துரியோதனன் அவ்விடஞ் சென்றான். அவனைக்கண்ட மனைவி துணுக்குற்றெழுந் தோடினாள். கர்ணன் காரணமுணராது ஆட்டம் முடியுமுன் எங்கெழுந்துதோடுகின்றனை யென்று அவளுடைய மேகலையைப்பற்றி அவளையிழுக்க, அவள் அதனையறுத்துக்கொண்டோட மேகலை முத்துக்களெல்லாமுதிர்ந்து சிதறின. கர்ணன் அது கண்டு யாது செய்தேனென்று துன்புற்று அம்முத்துக்களைப் பொறுக்கு வானாயினான். அதுவரையிலுங் கர்ணன் துரியோதனனை கண்டிலன். நடந்தனவற் றையெல்லாங்கண்டு சென்ற துரியோதனன் அவன் முன்னே சென்று தானும் அம்முத்துக்களைப் பொறுக்குவானாகி, நண்பனே, கோக்கவா பெறுக்கவாவென்றான். அப்பொழுது கர்ணன் துணுக்குற்று நின்று, நின் மனைவியைப் பற்றியிழுத்தேனென்று கோபஞ் சாதியாது, கோக்கவா, பெறுக்கவாவென்று நினது கண்ணியத்துக் கடாத இச்சிறுகுற்றவேனுக்கு மாட்பட்டயையயென்று நாத்தழுதழுத்து நின்றான். துரியோதனன் நட்புக்குச் சிறுமையும் பெருமையும் ஐயமுமுளவாமோவெனக்கூற கர்ணன் கலக்கந்தீர்த்து அவன் தன்மேல் வைத்த கேண்மையை வியந்து அன்று முதல் முன்னையிலும் மிக்க கேண்மையுடையனாயினான் |
கர்த்தமப்பிரஜாபதி | பிரமசாயையிலுற்பத்தியானவன். பாரி தேவஹூதி. புத்திரன் கபிலன் |
கர்மம் | அகங்கார மமகாரங்கள் காரணமாகச் செய்யப்படுஞ் செயல்கள். ஆகாமியம், பிராரத்தம், கஞ்சிதம் எனக் கர்மம் மூன்றாம். இக்கர்மமே சுகதுக்கங்களுக்கும் அவைகளை அநுபவிப்பதற்கருவியாக பிறவிகளுக்கு காரணமாம். கர்மம் நசித்தவிடத்துப் பிறவியும்நசித்து முத்தி கைகூடும் |
கர்மியன் | காந்தாரி புத்திரன் |
கறுப்பன் | இவன் தொண்டைநாட்டிலே மாவையம்பதியிலே விளங்கிய மகாபிரபு. இவன் தந்தை பெயர் கஸ்தூரி. தமிழ் நாவலர்களுக்குப் பொன்மாரிபொழிந்து பெரும் புகழ்படைத்தவன். இவனே தொண்டைமண்டல சதகத்தைப் படிக்காசுப் புலவரால் பாடுவித்தான் |
கற்கிஅவதாரம் | விஷ்ணுவினது தசாவதாரங்களுட் கடை அவதாரம். கலியுகாந்தத்திலே சம்பளகிராமத்திலே விஷ்ணு அம்சமாயுள்ள ஒரு பிராமணணுக்கு விஷ்ணு புத்திரராகப் பிறந்து கற்கியென்னும் பெயருடையராய் வழுவிய தருமங்களை நிலைநிறுத்துவரென்பது புராணசம்மதம் |
கற்பகஈசுவரர் | திருக்கடிக்குளத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமியர் பெயர் |
கற்பகத்தீசுவரர் | திருவலஞ்சுழியிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
கற்பகவல்லியம்மை | திருமயிலைப் பூம்பாவையிலே கோயில் கொண்டிருக்குஞ் தேவியார் பெயர் |
கற்பூரபாண்டியன் | குங்குமபாண்டியனுக்குப் பின் முடி தரித்தவன் |
கலககண்டகி | காலகௌசிகன் பாரி |
கலகங்காத்தவரதேசுரர் | திருமாகறலிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
கலசபவன் | அகஸ்தியன். வசிட்டன். துரோணன். கலசம் ~கும்பம், பவன் ~பிறந்தோன் |
கலாதத்துவம் | இது வித்தியாதத்துவத்துவத்துக்கு மேலுள்ள தத்துவம். அது செம்பிற் களிம்புபோல ஆன்மாவை மறைத்துநிற்கும் மலவிருளைச் சிறிது விலக்கி அவ்வான்மாவினது சுவரூபத்தை ஒருவாறு புலப்படுத்துவது. எனவே ஆன்மாவினது பிரகாசமாம் |
கலி | கலியுகத்துக்கு அதிதேவதை. சங்ககாலத்து வழங்கினதொரு தொகை நூல் |
கலி | இருக்ஷன் மகன். இவன் வமிசஸ்தர்பிராமணராயினர். இக்ஷூவாகு தம்பி. இவன் பாலியத்திலே தானே இறந்தவன். சுக்கிரன் தந்தை. சுக்கிரன். வான்மீகி. சூரியன். பிரமா |
கலிக்கம்பநாயனார் | கடந்தை நகரில் வைசியகுலத்தில் விளங்கிய ஒரு சிவபக்தர் |
கலிங்கதேசம் | இது ஒட்டிர தேசத்துக்கு தெற்கும் கருநாடகத்துக்கு வடக்குமுள்ள தேசம் |
கலிங்கத்துப்பரணி | சயங்கொண்டான் சோழனைப்பாடிய நூல். அநேகசோழருடைய சரித்திரங்களிதிலே கூறப்பட்டுள்ளன |
கலிங்கன் | பலி மூன்றாம் பத்திரன், இவனால் கலிங்கதேசம் விளங்கியது |
கலித்தொகை | சங்கப்புலவரால் செய்ய ப்பட்ட ஒரு தொகைநூல். சொன்னயம் பொருணயங்களால் மிகச்சிறந்தது. இதற்கு நச்சினார்க்கினியர் உரை செய்தர் |
கலியநாயனார் | திருவெற்றியூரிலே செக்கார் குலத்திலே அவதரித்த இவர் சிவாலயத்துக்கு திருவிளக்கிடுதலையே பெருஞ் சிவபுண்ணியமாகக்கொண்டு தம்மிடத்துள்ள செல்வமெல்லாவற்றையும் அதன் பொருட்டுச் செலவிட்டு வறுமையடைந்து தமது மனைவியை விற்கப்புகுந்தும் வாங்குவாரின்மையால் தமதுதூட்டி யையரிந்துகொள்ளத் துணிந்த போது சிவன்வெளிப்பட்டு அருள் புரியப் பெற்ற பக்தர் |
கலியுகம் | சதுர்யுங்களுளொன்று. 4,32,000 வருஷங் கொண்ட காலவட்டம். இது கிருஷ்ணநிரியாணம்முதற் கொண்டு கணிக்கப்படுவது. இவ்யுகத்தில் ஜனங்கள் தமோகுணம்மேலிடப் பெற்றவர்களாய், விருப்பு வெறுப்புடையயர்களாய், தவங்களிலே மனஞ்செல்லப் பெறாதவர்களாய், ரோகங்களாற் பீடிக்கப்பெற்றவர்களாய், துராசாரபரார்களாய், பொய்ம்மை யேமேற்கொண்டவர்களாய், அற்பாயுசுடையர்களாய் சாதியாசாரம் சமயாசாரம் தலை தடுமாறப் பெற்வர்களாய்ப் பிறந்துழல்வார்களென்பது புராணசம்மதம். இக்கலியுகத்திலிப் போது சென்றது ஐயாயிரம் ஐயாயிரத்தின் மேலதாகிய இவ்விகாரி வருஷத்திலே விருச்சிகராசியிலே கேது வெழித் தொழிந்த எட்டுக் கிரகங்களுங் கூடி நின்றன. சப்தகிரககூமமென்றும் ஷட்கிரககூடமென்றும் பஞ்சக்கிரககூடமென்றும் சோதிஷர் பலமதப்பட்டனர். இக்கிரககூடத்தின் பயனாகக் கொடிய பூகம்பங்களும் கோரரோகங்களும் பெரும் பஞ்சமும் யுப்தங்களும் பிறவுமாகிய பல வுற்பாதங்கணிகழ்ந்தன |
கலை | கலைஞானம்: அவை அறுபத்துநான்கு. சந்திரகலை, அவை பதினாறு. பிரதமைமுதற் பூரணையீறாகிய பதினைந்தையும் தேவருண்பர். பிரதம கலையையுண்பவர். அக்கினி. துவிதிய கலையை ஆதித்தன். திருதிய கலையை விச்சுவதேவர். கதுர்த்தகலையை வருணன். பஞ்சமகலையை வஷடகாரம். சஷ்ட கலையை வாசவன். சப்தமகலையை முனிவர். அஷ்டமகலையை ஏகபாதசிவம். நவமகலையை மறலி. தசமகலையை வாயு. ஏகாதசகலையை பார்ப்பதி. துவாதசகலையைப் பிதிர்கள். திரயோதசகலை யைக் குபேரன். சதுர்த்தசகலையைச் சிவன். பூரணகலையைப் பிரமதேவர். எஞ்சிய ஒரு கலையே சந்திரனுக்குரியது |
கல்மாஷ்பாதன் | கன்மாடபாதன் காண்க |
கல்யாணசுந்தரர் | திருவேள்விக்குடியிற் கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
கல்லாடனார் | தொல்காப்பியத்திற் குரையிடையிட்ட விரகர் கல்லாடர் என ஆன்றோராற் புகழப்பட்ட புலவர் சிகாமணியாகிய இவர் கடைசங்கத்து புலவர்களுள் ஐந்தாமாசன வரிசை பெற்றவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும், அப்பர்கிழான் அரவந்தை முதலிய பிரபுக்களையும் பாடியவர். கல்லாடமென்னும் நூல் செய்தவரும் இவரே. திருவள்ளுவர் குறளுக்கு இவர் கொடுத்த சிறப்புக்கவியும், கல்லாடத்திலே திருவள்ளுவரைக் குறித்து இவர் கூறியதும் ஒரு கருத்துடையனவேயாயம். இவர் பலவகைப்பட்ட சமயநூல்களெல்லாம் நன்காராய்ந்த பேரறிஞர் என்பது, ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி, னன்றென்றவாறுசமயத்தார் ~ நன்றென, வெப்பாலவருமியைபவே வள்ளுவனார், முப்பான்மொழிந்தமொழி என்பதனாலும். சமயக்கணக்கர் மதி வழிகூறா துலகியல் கூறிப் பொருளிதுவென்ற, வள்ளுவன்றனக்கு வளர்கவிப்புலவர் முன், முதற் கவிபாடிய முக்கட்பெருமான். என்னுங் கல்லாடத்தானும் துணியப்படும். இவர் சிவபக்தியிற் சிறந்தவரென்பது கல்லாடத்திலே செய்யுள் தோறும் சிவன் அருட்டிறத்தை யெடுத்துக் கூறிப்போகும் பரிவு சான்ற பரிசேகாட்டும். இவர் மாணிக்கவாசகர் காலத்துக்குப் பின்னுள்ளவ ரென்பது, சிவன் வைகையடைத்ததும் நரியைப்பரியாக்கியதுமாகிய திருவிளையாடல்கள் கல்லாடத்திலே கூறப்பட்டுள்ளதால் அநுமிக்கப்படும். இவர் ஆயிரத்தெண்ணூறு வருஷங்களுக்கு முற்ப்பட்ட கடைச்சங்க காலத்தவர் |
களத்தூர்கிழார் | இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். இவர் வள்ளுவர் குறளுக்குக் கொடுத்த சிறப்புக்கவியிலே அக்குறள் வேதசாரமெனக் கூறினவர். திருவள்ளுவர் சமயத்தை வெளியிடும் பொருட்டு இவர் தாம்கூறிய அம்மாலைவெண்பாவில் அருமறைகளைந்துஞ் சமயநூலாறு நம் வள்ளுவனார், புந்திமொழிந்த பொருள். எனக்கூறுமுகததால் வள்ளுவரைத் தம்பக்னத்து வைதிகசமயியென்பது காட்டினாயினார் |
களரியாவிரை | இது தலைச்சங்ககாலத் திருந்தவொருநூல் |
களரிளமுலையீசர் | திருக்களரிலே கோயில் கொண்டிருக்குந் சுவாமி பெயர் |
களவழிநாற்பது | செங்கட் சோழன் சேரமான் கணைக்காலிரும் பொறையைச் சிறை வைத்துழி அவனைச் சிறைவிடுவித்தற்குச் சோழனைப் பொய்கையார் பாடிய பிரபந்தம் |
களாவதி | பாரன் என்னும் இருஷிக்குப் புஞ்சிகஸ்தலை யென்னும் அப்சரசிடத்துப் பிறந்த புத்திரி. இவள் அழகைக்கண்ட பார்வதி அதிசயித்து அவளுக்கு பதுமினி வித்தையை அருளிச்செய்ய, அவள் அது கொண்டு சுவரோசியை வசியஞ்செய்து மணம்புரிந்தாள். பதுமினிவித்தை விரும்பி யதைக்கொடுக்கும் பெருமந்திரம் |
களை, கலை | கர்த்தமன் மகள். மரீசி மனைவி கசியான் தாய் |
கள்ளில்ஆத்திரையனார் | ஆதனுங்கனைப்பாடிய புலவர். அவன் மீது இவர் பேரன் புடையரென்பது. எனது மனத்தைத் திறந்து காணும் வன்மையுடையோருள ராயின் அவர் அம்மனத்திடை உன்னையன்றி வேறுகாணார். உண்ணை யான் மறக்குங்காலமுளவாயின் அக்காலம் இரண்டேயாம். ஒன்று என்னுயிர் பிரியுங்காலம். மற்றது என்னையான் மறக்குங்காலம் என்னுங் கருத்தமையப் பாடிய அவர் பாடலால் விளங்கும்: எந்தை வாழி ஆதனுங்க, வென்னெஞ்சந்திறப்போர் நிற் காண்குவரே, நின்னியான்மறப்பின் மறக்குங் காலையென்னுயிர் யாக்கையிற்பிரியும் பொழுது மென்னியான்மறப்பின் மறக்கு வென் வென்வேல் |
கழங்சிங்கநாயனார் | காடவர்குலத்தில் அவதரித்தரசியற்றி வருங்காலத்தில் தமது மனைவியுந் தாமும் திருவாரூரிற் சுவாமி தரிசனம் பண்ணிக்கொண்டு செல்லுகையில் மனைவியார் ஒரு புஷ்பத்தை யெடுத்துமோந்த குற்றத்துக்காக அவர் கையை வாளாற் சோத்தித் தருள்பெற்ற பக்தர் |
கழற்றறிவார்நாயனார், சேரமான்பெருமாணாநாயனார் | கொடுங்கோளூரிலே சேரர் குடியிலே பெருமாக் கோதையார் என்பவர் பிறந்து பாலிய தசையிலே தானே துறவுடையராகித் திருவஞ்சைக்களத்தை அடைந்து அங்கிருந்து சிவகைங்கரியம் புரிந்துவருகையில், சேரன் மோக்ஷத்தின் மீது பேராசைகொண்டு அரசுதுறந்து தபோவனம்புக, மந்திரிமார்கள் பெருமாக் கோதையைவேண்ட அவர்சிவாஞ்ஞைபெற்றரசராயினார். தன்மேனியிலு வர்மண்ணுறிய னாலுத்தூளனமாக வீபூதியை உடம்பெங்குச் தரித்தான் போன்றெரு வண்ணான் எதிரே வரக்கண்டு நமஸ்கரித்துவரும், சேரமான் பெருமாள்நாயனாரென்னும் பெயர் கொண்டவரும், சுந்தரமூர்த்தி நாயனாருடன் குதிரைமேற் சென்று கைலாசத்தையடைந்துவரும், சிவபிரான் பாணபத்திரன் கையில் திருப்பாசுர மென்றெழுதியனுப்பப் பெற்றவரும், திருக்கைலாச ஞானவுலாப்பாடிய வரும் இவரே. பிறர் கழறியவற்றையறியு மறிவைச் சிவன்பாற்பெற்றவராதலின் கழற்றறிவாரெனப்பட்டர். இவருக்கு முன் அரசியற்றிய சேரன் செங்கோற்பொறையன், புறநானூற்றிலே மாந்தரஞ்சேரவிரும் பொறையென்று வழங்கப்படுவன். இவன் இராசசூயம் வேட்டபெருநற்கிள்ளியென்னுஞ் சோழனனோடு போர் செய்தவன். இச்சோழன் ஒளவையாற் பாடப்பட்டவன். கடைச்சங்கத்து கடையரசனாகிய உக்கிரப்பெருவழுதி இவனுக்கு பெருநட்பாளன். எனவே இந்நாயனார் காலம் ஆயிரத்தெண்னூறு வருஷங்களுக்கு முன்னுள்ளதாதல் வேண்டும். இந்நாயனார் புறநானூற்றிலே சேரமான் மாவெண்கோவென்று வழங்கப்படுவர். இவர் குதிரைப்பிரியரா தலினாலே இப்பெயரால் வழங்கப் பட்டாரென்பது பெரியபுராணத்தாற் துணியப்படும். என்னை? வயப்பரிமுன் வைத்துச் சேரர்வீரரும் சென்றனார் என்பது பெரிய புராணக்கூற்று |
கழாத்தலையார் | சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலபானும், சோழன் வேற்பஃறடக் கைப் கெருவறற் கிள்ளியும்பொருது களத்தில் வீழ்ந்துகிடந்தபோது அவ்விருவார் பெருமையையும் அவர் தேவியர் துன்பத்தையும் எடுத்துப்பாடிய புலவர். இவர் பரணர்காலத்தவர் |
கழுமலம் | சீர்காழி |
கழைதின்யானையார் | வல்லேரியைப் பாடியபுலவர். இவர் தாம் ஊர்ந்து செல்கின்ற யானைக்குக் கரும்பேயுணவாகக் கொடுப்பவராதலின் இப்பெயர் பெற்றார் |
கவந்தன் | ஓபராக்ஷசன். இவன் காலில்லாதவனாய் யோசனைதூரம் நீண்டபுஜங்களும் உதரத்திலே புதைந்தமுக முமுடையயனாய்த் தண்டகாரணியத்திலிருந்தவன். ராமவக்ஷூமணர் சீதையைத் தேடிச்சென்றகாலத்து இவன் அவர்களை உட்கொள்ள எத்தனித்தபோது அவர்களால் புஜங்கள் கொய்யப்பட்டு பூர்வகந்த ருவரூபம்பெற்றவன். முற்பிறவியில் இவன் தனுவென்னும் கந்தருவன். இவன் தபோபலத்தாற் சிரசீவித்துவமும், காமரூபித்துவமும் பெற்றுக் கோபசிரேஷ்டனாயொழும்போது, ஸ்தூலகேசனென்னும் இருஷி சாபத்தால் ராக்ஷசரூபம் பெற்றவன். பின்னர் இவன் இந்திரனேடு போர்தொடுத்த போது இந்திரன் வச்சிராயுதத்தாற்காலும் தலையும் வயிற்றிற் புதையுமாறு தாக்கப் பெற்றுக் கவந்த வடிவங் கொண்டவன். வாணாசுரன் மந்திரி. கும்பாண்டன் |
கவாக்ஷன் | சுக்கிரவன் சேனையில் ஒரு வாநரன் |
கவிசாகரப்பெருந்தேவனார் | கடைச்சங்கப் புலவர்களுளொருவர் |
கவுணியனார் | கடைச்சங்கப் புலவர்களுளொருவர். இவர் வள்ளுவர்க்கூறிய சிறப்புக்கவியில் அவர் கூறியவெல்லாம் முந்திய நூல்களிலே கூறப்பட்டனவெனப் பாடியவர் |
கவுந்தி | இவள் கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும்பொழுது அவர்களுக்கு வழித்துணையாகச் சென்று இடையில் அவர்களை அவமதித்துப் பேசிய இருவரை நரியாகும்படி சபித்து மதுரையையடைந்தபின் கண்ணகியை மாதரியிடம் அடைக்கலமாகக் கொடுத்தவன் |
கவுரியம்மை | திருக்கேதாரத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியர் பெயர் |
காக்கைபாடினியார் நச்சென்னையார் | நாடுகோட்பாடு சேரலாதனைப்பாடி ஒன்பது காப்பென்னும் நூறாயிரங் காணமும் பரிசாகப்பெற்ற புலவர் |
காசன் | இவன் சுகோத்திரன் மகன் |
காசி | இந்நகர் கங்காதீரத்திலுள்ள திவ்வியஸ்தலம். இது சப்தபுரிகளுளொன்று. சமஸ்கிருத சங்ககமிருந்தவிடமுமிவே. பண்டுதொட்டுள்ள வைதிகராஜாதானி இதுவே. இந்நகரத்தையெடுத்துக் கூறதா புராணேதிகாசங்களில்லை. வாரணாசியெனவும் படும் |
காசிபன் | கசியபன் காண்க |
காசியன் | சேனசித்துமகன். ஆயு பௌத்திரனாகிய சுகோத்திரன் மகன் |
காசியபன் | பாம்பு மந்திரம் வல்ல ஒரு பிராமணன். இவன் பரீக்ஷீத்து மகாராஜன் விஷத்தினாலிறப்பானென்பதுணர்ந்து அவனிடஞ் சென்றபோது வழியிலே தக்ஷசன் கண்டு வேண்டியதிரவியங்களைக் கொடுத்து அங்குச் செல்லாமல் தடுத்தான் |
காசியாரண்ணியேசுவரர் | திருஇரும்பூளையிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
காசிராசா | அம்பிகை, அம்பாலிகை என்போர் தந்தை |
காஞ்சனன் | புரூரவன் புத்திரனாகிய அமவசுவினது பௌத்திரன். உதயகுமாரனை வாளாற் கொன்றவன் |
காஞ்சனமாலை | மலையத்துவச பாண்டி யன் மனைவி |
காஞ்சி, காஞ்சீபுரம் | தொண்டைமண்டலத்தின் கண்ணுள்ள ஒரு திவ்விய ஸ்தலம். இது சோழருக்கு ராசதானியாகவுமிருந்தது. இங்கே கோயில் கொண்டருளியிருக்கும் சிவபெருமான் ஏகாமிரேசுரரென்றும் அம்மையார் காமாக்ஷீயென்றும் பெயர் பெறுவர். விஷ்ணு ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சுவாமி பெயர் வரதராஜர். காஞ்சிபுரம் காஞ்சி எனவும்படும். திருக் குறளுக்குச் சிறந்தவுரை செய்த பரிமேலழகருக்கும். கந்தபுராணம் தமிழிலே பாடியருளிய கச்சியப்பருக்கும் இதுவேஜன்மஸ் தானம். சங்கராசாரியர், ராமாநுஜாசாரியர் முதலியபாஷியகாரரும் வித்தியாவாதங்கள் புரிந்ததுமிவ்விடமே |
காண்டவம் | இந்திரனது வனம் அருச்சுனனால் தீயூட்டப்பட்டது |
காண்டிக்கியன் | நிமி வமிசோற்பவனாகிய தருமத்துவஜன். ஜனக மகாராஜன் பௌத்திரன். மிதத்துவசன் புத்திரன். இவன் தன் சிறிய தந்தையாகிய கிருத்து வாசனது புத்திரனாகிய கேசித்துவசனேடு முரணிக் காடுசென்றவன் |
காண்டீபம் | அருச்சுனனுக்கு அக்கினி தேவன் காண்டவதகனத்துக்குப் போகும் போது கொடுத்த வில் |
காதம்பரி | காதம்பரியைக் கதநாயகனாக வைத்து பாணகவி செய்த சமஸ்கிருத நாடகம் |
காதி | குசாம்பன் மகன். விஸ்வாமித்திரன் தந்தை |
காத்தஈசுவரர் | திரு ஆமாத்தூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
காத்தியயாயனி | பார்வதி |
காத்தியாயனன் | பாணினி வியாகரணத்துக்கு வார்த்திகஞ் செய்தவரருசி. யாஞ்ஞவற்கிய முனிவர் |
காந்தாரன் | யயாதி மகன். துருகியனுடைய பௌத்திர பௌத்திரன். இவனே காந்தாரதேசஸ்தாபகன். அந்தக் குலத்தவர்கள் குதிரையேற்றத்தில் மகாசதுரர் |
காந்தாரம் | காந்தாரனது தேசம். இஃது ஆரியவர்த்தத்துக்கு மேற்றிசையில் சிந்து தீரத்திலுள்ளது |
காந்தாரி | திருதராஷ்டிரன் பாரி. காந்தார தேசத்தரசனாகிய சபலன் மகள். மகாபதி விரதை. நாயகன் அந்தகனாக இருந்தமையால் தானம் கண்ணைக்கட்டிக் கொண்டு சஞ்சரித்தவள். இவள் புத்திரருள் மூத்தவனாகிய துரியோதனன் யுத்தத்துக் குபோகும்போது தனக்குச் சயமுண்டாகுமாறு வரந்தருகவென்று தாயைவேண்ட அவள் யதோதர்மஸ்ததோஜிய என்று சொன்னவள். தருமம் எப்படியோ அப்படி சயம் |
காந்தினி | அக்குரூரன் தாய். சுவபற்கன் மனைவி |
காந்திமதியம்மை | திருமூக்கிச்சரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். திருநெல்வேலியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர் |
கானக்காளை | திருக்காப்பேரூரிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
கானப்பேரெயில் | வேங்கை மார்பனுக் குரியதாகவிருந்த ஒரு பேரரண். இவ்வரண் கடைச்சங்கத்து கடையரசனாகிய உக்கிரப்பெருவழுதியாற் போரிற்கைக் கொள்ளப் பட்டது |
கானார்குழலம்மை | திருகானாட்டு முள்ளூரிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
காபாலிகம் | அதிமார்க்க மூன்றனுளொன்று. மூன்றாவன, பாசுபதம், மகாவிரதம், காபாலிகம் எனபன. காபாலிகம் காபாலத்திற் பிக்ஷையேற் றுண்ணலைக் கைக்கொண்டொழுகுந் துறவினை வற்ப்புறுத்தும். இம்மதத்திற்குக் கடவுள் காலவுருத்திரர். இம்மதம் நெடுங்காலத்திற்கு முன்னர் அருகிவிட்டது |
காபிலம் | கபிலமதம். அது கபிலரால் செய்யப்பட்ட காபிலசூத்திரத்தை ஆதாரமாகவுடையது |
காப்பியக்குடி | சோழநாட்டிலே சீர்காழிக்கு வடபாலிலேயுள்ள ஒரூர். இங்கேயே தேவந்தியின் கணவனாகிய சாத்தன் வளர்ந்தது |
காமதேனு | சுரபி. அது பாற்கடலில் பிறந்தது. இச்சித்தவெல்லாங் கொடுக்குந் தெய்வப்பசு |
காமந்தகம் | ராஜநீதியைக் குறித்துக் கூறும் ஒரு நூல் |
காமன் | மன்மதன் |
காமபாலன் | பலராமன் |
காமாக்ஷீ | காஞ்சிபுரத்திலே கோயில் கொண்டிருக்குந் உமாதேவியார் |
காமாக்ஷீயம்மை | திருவனேகதங்காவதத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
காமிகம் | சிவகாமமிருபத்தெட்டனு ளொன்று. இதிலே சிவதத்துவ ரூபங்களெல்லாம் விரிவாகக் கூறப்பட்டுள்ளன |
காமியகம் | இது பாண்டவர்கள் ஆரணியவாசகாலத்து வசித்த ஒரு வனம் இது குருஜாங்காலத்தைச் சார்ந்துள்ளது |
காம்பன்னதோளி | திருப்பந்தனநல்லூரிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
காம்பிலியன் | பர்மியாசுவன் மகன் |
காம்பிலியம் | பாஞ்சால தேசத்தொரு பாகம். துருபதன் தேசம் |
காம்போஜம் | பரத கண்டத்துத்துக்கு வாயு திக்கிலுள்ள ஒரு தேசம் |
காயாரோகணேசவரர் | திருநாகைக்காரோணத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயார் |
காய்சினவழுதி | இவனே உக்கிரபாண்டியனெனப்படுவன். தலைச்சங்கம் தாபித்துத் தமிழாராய்ந்த முதற்பாண்டியன் இவனே. இவனுக்கு இராஜதானி, தலைச்சங்கமிருந்து பின் கடல்கொண்ட தென்மதுரை குமரியாற்றினருகேயிருந்தது |
காரி | இவர் ஒளவையார் காலத்திலே மலைநாட்டிலே பழையனூரிலேயிருந்த மகௌதாரியப்பிரபு. இவர் ஒளவைப்பாடல் கொண்டு அதற்குப் பரிசாகச் சிறந்ததொரு கழைக்கோடு கொடுத்தவர். இவர் ஒரு குறுநில மன்னர். ராஜதானி கோவலூரென்றும் பழையனூரென்றுஞ் சொல்லப்படும். இவர் கடைச்சங்கப் புலவருளொருவராகிய கபிலராலே புகழ்ந்துபாடப்பட்டவர். தமமோடொத்த கொடைவள்ளலாகிய ஓரியைப்போரில்வென்று அவன் நாட்டைச் சோழனுக்குக் கட்டிக்கொடுத்தவர். தாமும் துடிமன்னராதல் வேண்டுமெனச் செருக்குற்று முடிதரித்துத் திருமுடிக்காரியென்னும் பட்டங்கொண்டவர். அது கண்டு சோழன் இவரைப் போரில்வென்று விண்புகுவித் தான். இவர் மலையமான் என்னும் பெயரும்பெறுவர் |
காரிகிழார் | பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய புலவர். இவர் புறநானூறு பாடிய புலவருள்ளுமொருவர் |
காரிநாயனார் | திருக்கடவூரிலே தமிழ் மொழியிலே மிக வல்லவராய் விளங்கித் தம்பெயரினாலே தமிழ்க்கோவையொன்று, சொல்விளங்கிப் பொருள் மறைந்து கிடக்கும்படி பாடித் தமிழ்நாட்டு மூவேந்தரிடஞ் சென்று, பொருளெடுத்து பிரசங்கித்து அவர்கள் கொடுத்த பெருந்திரவியங்களைக்கொண்டு திருப்பணிகள் பல செய்து உடம்போடு கைலாசஞ் சென்ற பக்தர் |
காரியாறு | நெடுங்கிள்ளியென்னும் சோழன் போரில் மடிந்த இடம் |
காருடம் | கருடோற்பவம் முதலிய விஷயங்களைக் கூறும் புராணம். 19000 கிரகந்தமுடையது |
காருண்ணியபாண்டியன் | கற்பூரபாண்டியனுக்குப்பின் முடிதரித்தவன். இவனுக்கும் கூன்பாண்டியனுக்குமிடையில் இருவர் அரசுபுரிந்தனர் |
காரைக்காலம்மையார் புனிதவதியார் | காரைக்காலிலே தனத்தனென்னும் வைசியனுக்குப் புனிதவதியாரென்னும் பெயருடைய புத்திரியாராகப் பிறந்து இல்லறம் புகுந்தபோது, ஒருவன் அவர் நாயகனிடங் கொடுக்கவென்று கொடத்த மாங்கனிகளிரண்டில் ஒன்றை ஒரு சிவனடியார்க்குக் கொடுத்துவிட்டு, ஒன்றைத் தமது நாயகனுக்குக் கொடுக்க, அவன் அதை வாங்கியுண்டு மற்றதையுந் தருகவென்ன, உள்ளே சென்று சிவனை நினைந்து வேண்டியொரு மாங்கனியைப் பெற்றுப் போய்க் கொடுத்து நடந்ததையுஞ் சொல்ல, அஃதுண்மையாயின் இன்னுமொன்று பெற்றுத் தருவாயென்னப் பெற்றுக் கொடுத்த பெரும்பக்தியுடையவர். நாயகன் பரமத்தன். இவன் இரண்டாம் மனைவி வயிற்றிற் பிறந்த புத்திரியும் புனிதவதி யெனப்படுவள். இக்காரைக்காலம்மையாரே அற்புதத் திருவந்தாதியும் திருவிரட்டை மணிமாலையும் பாடி தலையால் நடந்து கைலாசஞ் சென்று அங்கே சிவபிரானால் அம்மையேயென்று அழைக்கப் பெற்றவர் |
காரைத்திருநாதர் | திருநெறிக்காரைக் காட்டிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
கார்க்கியன் | சினிமகன். பாஷ்கலன் சீஷன். இருக்குவேதத்தில் வல்லவன். இவன் வமிசத்தர் பிராமணர் |
கார்க்கோடகன் | கத்துருவை புத்திரருளொருவன். வாசுகி தம்பி |
கார்த்தவீரியார்ச்சுனன் | ஹைஹைய வமிசத்தரசனாகிய கிருதவீரியன் புத்திரனாதலின் கார்த்தவீரியயார்ச்சுனனெனப் பட்டான். இவன் பெயர் அர்ச்சுனன். பாண்டவஅர்ச்சுனனோடு மயங்காதுணருமாறு தந்தைபெயர் கூட்டிக்கார்த்த வீரியார்ச்சுனன் எனப்பட்டான். இவன் பதினாயிரம்யாகங் கள் செய்து இமயமலைநாட்டைச் செவ்வே ஆண்டவன் |
கார்த்திகேயன் | குமாரசுவாமி. கிருத்திகை காண்க |
கார்த்திகை | வார்த்திகனென்னும் அந்தணன் மனைவி. தக்ஷீணாமூர்த்தியென்பவனது தாய். ஒரு நக்ஷத்திரம் |
காலகண்டன் | சிவன் |
காலகர்முகன் | சுமாலி மகன் |
காலகவுட்சேயன் | க்ஷேமதரிசியென்னும் கோசலதேச ராஜாவுடையமந்திரி. இவன் ராஜகருமத்தை நன்குணர்ந்தவனென்பது பிரசித்து |
காலகூடம் | பாரதயுத்தத்தில் சேனைகள் தங்கியவிடம். விஷம் |
காலகேயர்கள் | கசியப்பபிரஜாபதிக்குக் காலையிடதிலுற்ப்பத்தியானவர்கள். இவர்கள் மிகக்கொடிய பாதகர்கள். இவர்களால் மிகவருந்திய தேவர்கள் அகஸ்தியர்க்குத் தங்குறையைக்கூற, அவர், இவர்களுக்குறைவிடாமாயிருந்த சமுத்திர நீரையெல்லாம் ஆசமனஞ் செய்து வற்றுவித்தனர். அது காரணமாக நிலைதளர்ந் து வலியிழந்தார்கள். இவர்களுடைய சந்ததி அர்ச்சுனனால் நிர்மூலமாக்கப்பட்டது |
காலகௌசிகன் | காசியிருந்த ஒரு பிராமணன். அரிச்சந்திரனுடைய மனைவியை விலைக்குக் கொள்ளும்பொருட்டுக் கலிபகவான் விசுவாதித்திரருடைய ஏவலலால் இப்பிராமணனாகக் காசியிலே பிறந் திருந்தாரென்பது புராணசம்மதம் |
காலசவி | விரோசனன் மகன். பலிக்குச் சகோதரன். இவன் துவாபரந்தத்தில் தானவர்கள் சகாயார்த்தம் விஷகபித்த ரூபமாக ரேபல்லையில் உற்பத்தியாய் அந்தக்கிராமத்திற் கோபாலர்களுக்கு குரோதத்தை யுண்டாக்குகிறபோது அச்செய்தியைச் சங்ககர்ணனென்கிற பூதம் ஒரு பிராமணனிடத்திலே ஆவேசித்து ஸ்ரீ கிருஷ்ணபலராமர்களுக்கு அறிவித்தது. அப்பொழுது அவர்கள் அந்தக் கபித்தவிருக்ஷத்தை நிர்மூலஞ்செய்து கோபாலர்களுக்கும் பசுக்களுக்கும் சுகத்தையுண்டாக்கினார்கள். கபித்தம் ~ விளாமரம் |
காலநாபன் | இரணியாக்ஷன் மகனாகிய தாரகன் |
காலநேமி | தாரக யுத்தத்தில் விஷ்ணுவினால் கொல்லப்பட்ட ஒரு தானவன். ராவணன் மாதுலன் |
காலயவன் | இவன் நாரதன் உபதேசத்தால் மதுராபுரியைப் படைகொண்டு வளைந்தபோது, அதனை முன்னரே உணர்ந்த கிருஷ்ணன் சமுத்திரமத்தியிலே ஒரு பட்டணத்தை விசுவகர்மாவினாலே யுண்டாக்கி, அங்கேதமது ஜனங்களையெல்லாம் போக்கி விட்டுத் தாமமாத்திரம் நிராயு தராக இவன் முன்னே வெளிப்பட்டு நடந்தார். அதுகண்ட காலயவன் அவரைத் தொடர, அவர் முசுகுந்தன் நித்திரை செய்த மலைக்குகையினுள்ளே சென்றார். அவனும் அங்கே நுழைந்து கிருஷ்ணனென்று நினைத்து முசுகுந்தனையுதைத் தான். முசுகுந்தன் பெற்றிருந்த வரப்பிரசாத மகத்துவத்தால் விழித்துப்பார்க்க காலயவன் பஸ்மமானான், சாளுவன் கார்க்கி யனைப் பார்த்து நபுஞ்சகாவென்று விளித்தபோது யாதவர்கள் சிரித்தார்கள். அது காரணமாகக் கார்க்கியன் லோகபஸ்மம் புசித்துப் பன்னீராண்டு கொடுந்தவமிருந்து காலயவனைப் பெற்றான். காலயவன் காலயவனனெனவும்படுவன் |
காலவைரவன், காலபைரவன் | காசியிலுள்ள பைரவமூர்த்தி. யமன் இவ்வைர வருக்கஞ்சிக் காசியிலுள்ளாரை வருத்தாது கொண்டேகுவனென்பது ஜதிகம் |
காலா, காலை | வைசுவநாரன் என்கிற தானவனுடைய மகள். கசியப்பனுடைய பாரி. இவளுடைய மக்கள் காலகேயர்கள் |
காலாநலன் | அனு பௌத்திரன். சபாநலன் புத்திரன் |
காலேசுவரர் | திருவனேகதங்காவதத்திலே கோயில் கொண்டிருங்குஞ் சுவாமி பெயர் |
காளஞ்சனம் | ஒரு தீர்த்தம் |
காளத்தி, காளஹஸ்தி | திருக்காளத்தி |
காளத்தியப்பன் | தொண்டை நாட்டிலே வல்லமென்னுமூரிலே விளங்கியவனாகி இப்பிரபு தன்மீது ஒரு பிரபந்தம் பாடிப் பாற்பசு கேட்ட ஒரு புலவனுக்கு ஒவ்வொருகவிக்கு மொவ்வொரு பசுவும் அப்பசுவுக்கு மேய்ப்பவனும் கறவையாளும் பால் காய்ச்சுபவனுமாக மூம்மூன்றாளும் உடன் கொடுத்துப் பொன்மாரியும் வழங்கியவன் |
காளத்தீசுவரர் | திருக்காளத்தியிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
காளமேககவி | ஸ்ரீரங்கத்திலே வைஷ்ணவப் பிராமணராக அவதரித்த இவர், சம்பு கேசுரத்திலே ஒரு தாசிவலையிலகப்பட்டு, அவள் பொருட்டாக அங்குசென்று கோயிலுனுட் பிரகாரத்திலே அவள் வரவை எதிர்நோக்கி இருக்கையில் நித்திரைவர அங்கேபடுத்து நித்திரைபோயினார். தாசி இவரைத் தேடிப்பார்த்துங் காணாமையால் தன்வீடு போய்ச்சேர்ந்தாள். அதன் பின்னர்க் கோயிலும் திருக்காப்பிடப்பட்டது. அப்பொழுது அந்தப்பிரகாரத்திலொ ருபக்கத்தில் சரஸ்வதியை நோக்கி ஓரந்தணன் தவங்கிடந்தான். சரஸ்வதி அதற்கிரங்கிப்பிரசன்னராகித் தமது தம்பலத்தை அந்தணன் வாயிலுமிழப்போக அவன் அதை அநுசிதமென்று வாங்காது மறுத்தான். அது கண்ட வைஷ்ணவர் கிடந்தவிடத்தையடைந்து அவரையொழுப்பித் தம்பலத்தை நாவினாற் கொடுக்க வைஷ்ணவர் தம்தாசியே தம்பலங் கொணர்ந்தாளென்றென்னி அதனை நாவினாலேற்றார். அவ்வளவில் சரஸ்வதி மறைந்து போக, வைஷ்ணவர் அதனை யேற்றமாத்திரத்தில் சகலகலைகளும்வல்ல பண்டிதராகிச் சூற்கொண்டகாளமேகம்போலத் தமிழ் கவிமாரி பொழியத்தொடங்கினார். அன்று முதல் அவருக்குக்காளமேகமென்னும் பெயருண்டாவதாயிற்று. இவர் திருமலைராயனென்னும் அரசன் சமஸ்தான வித்துவானாகிய அதிமதுரகவிராயனுக்குமாறாகி அவ்வரசன் சபையிலே இருந்த புலவர்களெல்லோரும் பிரமிக்கும்படியாக யமகண்ட விதானப்படி ஆசுகவிகள் பொழிந்தவர். இவர் காலம் சாலிவாகனவருஷம் ஆயிரத்திருநூறு |
காளாமுகன் | சிவனைப் படிகமும் புத்திர தீபமணியும் தரித்தமூர்த்தியாகத் தியானிக்குஞ்சமயி. இவன் அகப்புறச் சமயிகளுளொருவன் |
காளி | காலவுருத்திரருடைய சக்தி. அஃதாவது அழிவுக்குக் காரணமாகிய காலத்தை நடாத்தும் உருத்திரர் அவ்வழிவையாது சக்தியாற் செய்துமுடிப்பர். அச்சக்தியே காளியெனப்படும். உருத்திரபேதம் பலவாதல் போல அச்சத்திபேதமும் பலவாம். காலத்துவம் கருமையாற் குறிக்கொள்ளப்படுவது போலக் காளியும் கருநிறமுடையளாயினாள். காலத்திரர் சங்காரத் தொழிலைத் தமது சக்தியாகிய இக்காளியைக்கொண்டே நடாத்துவர். ஆக்கம் உயிர்களுக்கு எப்பொழுதும் இன்பம் தருவது. அழிவு எப்பொழுதும் பயங்கரம் பயப்பது. அது பற்றியே அவ்வழிவைப் புரிவதாகிய சக்தியும் பயங்கர ரூபமுடைதாக ரூபாகாரம் பண்ணப்பட்டது. காலபதமும் காளியும் கருமைபடபொருட் சொல்லடியாகப் பிறந்தனவேயாம். காளி கரிய மேனியும், சதுர்ப்புஜமும், கபால மாலையும் சிவந்த கண்ணும் நான்ற நாவுமுடைய தேவியாக வுபாசிக்கப்படவள். யுத்தவீரர் தமக்கு வெற்றியுண்டாம்படி காளியையுபாசித்துப் பூசிப்பர். கோபம் செந்நிறச் சம்மந்தமுடையது. அது பற்றி வாமார்க்கத்தினர் அதன் உண்மையுணராது இரத்தப் பலியிட்டுப் பூசிப்பர். இரத்தப்பிரியையென்பதற்கு சிவந்த நிறத்திற் பிரியமுடைளெனப் பொருள் கொள்ளாது உதிரப் பொருள் கொண்டேதே இத்தடுமாற்றத்துக்கு ஏதுவாம். செந்நிறமாகிய புஷ்பங்களே அப்பூசைக்கு போதியவாம். அவற்றை விடுத்து இரத்தப்பலியிடுதல் அத்துணைச் சிறந்ததன்று. அதற்கீடாக கோபம்முதலிய துர்க்குணங்களைப் பலியிடுதல் அத்தேவிக்கு உவந்ததாகம். சில புராணங்கள் காளிக்கு எண்கரங்கூறும். காளி சண்டமுண் டர்களாகிய அசுரரைக் கொன்று சாமுண்டியென்னும்பெயரும், தாரகனைக் கொன்று தாரகமர்த்தனியென்னும் பெயருங் கொண்டாள். வியாசகர் தாயாகிய சத்தியவதி |
காளிதாசன் | இவன் விக்கிரமார்க்கன் வமிசத்தானாகிய போஜராஜன் சமஸ்தானத்துச் சமஸ்கிருத வித்துவான்கள் ஒன்பதின்மருள் சிரேஷ்டன். சமஸ்கிருதத்திலேயுள்ள ஸ்ரீங்காரரச சுலோகங்களுள் இவன் செய்த சுலோகங்கள் அதிமாதுரியமானவை. இவன் சரஸ்வதியினது அமிசாவதாரம். இவன் செய்த நூல்களும் தனிச்சுலோகங்களும் எண்ணில. ரகுவம்சம் குமாரசம்பவ முதலிய காவியங்கள் இவன் செய்தவை. காளி உபாசகனாதலின் காளிதாசனெப்பட்டான். ஜாதியில் அந்தணன். இவன் வரலாறு விரிப்பிற் பெருகும். இவன் தண்டி மகாகவியேடு இகலிச் சரசுவதியைப் பிரார்த்தித்து தம்முள் மிக்கார் யாரென்ன, தண்டி மகாகவிதான், நீயோ வென்றால் நானே நீ என்று சரஸ்வதியா ற் புகழப்பட்டவன். புலகேசியினது கல்வெட்டிலே கூறப்படலால் அவன்காலம் இற்றைக்க ஆயிரத்துநானூறு வருஷங்களுக்கு முன்னுள்ளதாக நிச்சயிக்கப்படும் |
காளிந்தி | யமுனாநதி. களிந்தபர்வ தத்தினின்றிழியுநதி. சுமதி பாரி. கிருஷ்ணன் அஷ்டபாரிகளிளொருத்தி. சூரியன் மகள் |
காளிம்பன் | திருவேங்கடப்பதியிலிருந்து தமிழ்நாவலர்களுக்குப் பெருநிதி வழங்கிய ஒருபிரபு |
காளியன் | யமுனையிலிருந்து கொடிய விஷநாகம் அது கிருஷ்ணனாற் கொல்லப்பட்டது |
காளேஸ்வரம் | பயோஷணி கோதாவரி நதிகள் சங்கமிக்மிடத்துள்ள திவ்விய க்ஷேத்திரம் |
காவியன் | கவிபுத்திரனாகிய சுக்கிரன் |
காவிரி | இஃது அகஸ்தியரால் சையகிரியினின்று முற்ப்பத்திபண்ணப்பட்ட புண்ணியநதி. தக்ஷீணத்திலுள்ளது. இந்நதிநீர் மிக்க சுவையுடையது. இதுபோலப் பயன் படுநதி உலகத்திலே மற்றில்லையெனினும் இழுக்காகாது. இந்நதியே சோழநாட்டைப் புனனாடாக்கியது. இந்நதியினிரு கரையிலும் சமீபத்திலும் சற்றே தூரத்திலுமாக அநேக சிவாலயங்களும் விஷ்ணு வாலயங்களுமுள |
காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக் கண்ணனார் | இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். பெருந்திருமாவளவன். வெள்ளியம் பலத்துத்துஞ்சிய பெருவழுதி, பிட்டங்கொற்றன் முதலியோர் இவராற் பாடப்பட்டோர். இவர் சாதியில் வணிகர். முதற்கூறிய இருவர் பாண்டியரையும் ஒருங்கேகண்ட பொழுது, இவர், இன்னுங்கேண்மினும் மிசை வாழியவே யொரு வீரொருவீர்கள் காற்றுத்திரிருவீரு முடனிலை திரியீராயி னிமிழ்திரைப் பௌவ மூடுத்தலிப்பயங் கொழுமாநிலம். கையகப்படுவது பொய்யாகாதே அதனால், நல்லபோலவுந் தொல்லோர்சென்று நெறியபொலவும் காதனெஞ்சினும் மிடைபுற்கலமரு மேதின்மாக்கள் பொதுமொழிகொள்ளா தின் றேபோல்கநும்புணர்ச்சி என இவரையு மொற்றுமையுடையராக வொழுகும்படி அவர்க்கு ஒற்றுமைப்பயனெடுத்துக் கூறி வாழ்த்தினவர் |
காவிரிப்பூம்பட்டினம் | சோழமண்டலத்திலே கீழ்க்கடற்கரையிலே காவிரிநதி சங்கமிக்குந்துறையருகிலேயிருந்த சோழ ராஜதானி. இந்நகரம் புகாரெனவும்படும். தமிழ் நூல்களிலே பெரிதும் பாரட்டப்படும் பழைமையுடைய நகரங்களுள் இதுவுமென்று. இதன் துறை பொன்னித்துறையெனப்படும். இத்துறையிலே சீன முதலிய அந்நிய தேசங்களிலிருந்தும், வங்கம் குடகம் கொல்லம் தென்மதுரை ஈழம் முதலிய அயல்நாடுகளிலிருந்தும் வந்து கொள்ளலும், விற்றலும் செய்கிற மரக்கலங்கள் மலிந்து பொலிந்து விளங்கும். தென்னாட்டிலே இது போல வளஞ்சிறந்தும், சித்திராலங்காரம் பொருந்திய மாடகூட கோபுரங்களையுடையதும், நாகரிகம் வாய்ந்த நன்மக்களைத் தன்னகத்தேயுடையதும், சித்திரப்பொறிகளையுடைய மதில்சூழ்ந்ததும், பல்வகை நீர்ப்பூக்களும் நீர்ப்பக்ஷீகணங்களும் நிறைந்து விளங்கும் அகழியினையுடையதுமாகிய நகர் பிறிதில்லை. அழகிய சோலைகளும், கண்ணையும் மூக்கையும் ஒருங்கே கவருமியல்பினவாகிய நந்தவனங்களும் இந்நகருக்கு அணி செய்வன. இந்நகரின் கண்ணே ஐந்து மன்றங்களுள. அவை, மற்றெங்குமில்லாதன: இந்நகருக்கேயுரிய விசேடமாகவுள்ளன. அவை, வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கன் மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம் என்பன. இந்நகரத்திலே கள்வர் புகுந்து பொருள் கவர்வாராயின் அவரை மயக்கிக் கால் கடுக்க இடையறாமல் ஊரைவலம்வரச் செய்யும் இயல்பினது வெள்ளடை மன்றம் எனவே இம்மன்றம் கள்வரை நெஞ்சங் கலங்கி நடுங்கச் செய்வதொன்றாதலால் இந்நகரிலே களவென்பது கனவிலுமில்ல தோர்செயலாம். இலஞ்சி மன்றம், தன்னிடத்திலேயுள்ள பொய்கையிலே நீராடியெழும் கூனர், முடவர், ஊமர், செவிடர், தொழுநோயாளர் முதலியோரை அக்குற்றங்களைந்து நல்லுடம்பு பெறுவிக்குமியல்பினது. நெடுங்கல் மன்றம், மருத்தூட்டி னாற்பித்தரானோரும், நஞ்சுண்டோரும், நாகத்தாற் கடியுண்டோரும், பேய்கோட்பட்டோரும் என்றிவர்கள் அந்நெடுங்கல்லை வலஞ்செய்ய அவர்க்கு அத்துன்பங்களை யெல்லாம் போக்கியருளுமியல்பினது. இராசத்துரோகியையும், கற்புநிறை தவறிய மனைவியரையும், போலித் துறவிகளையும், பிறன் மனைவியைப் புணரும் துச்சாரியையும் சத்தியஞ் செய்ய தன் முன்னே கொண்டுவருமிடத்து அவரையறைந்து கொல்லும் பூதமொன்று வசிக்கும் ஸ்தலமே பூதசதுக்கம். தருமாசனத்தாரும் அரசனும் தமது நீதி தவறுங்கால் அது குறித்துக் கண்ணீர்சொரிந்து வாய் பேசா தழும்பாவையொன்றுடையது. பாவை மன்றம். இங்கனம் அற்புதகரமான ஜந்துமன்றங்களையுந் தன்னகத்தேயடையதாய் விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்துச் சிறப்பை முற்றாயிங்கெடுத்துக் கூறலமையாதாயினும் இற்றைக்கு ஆயிரத்தெழுநூறு வருஷங்களுக்கு முன்னதாகி அக்காலத்திலிந் நகரடைந்திருந்த பெருக்கத்தை யொருவாறு புலப்படுத்துவாம். வானளாவிய கோபுரங்களும் நிலாமுற்றங்களும், அணிகலமாடங்களும், ஆனகட்சாளரங்க ளையுடைய மாளிகைகளும், காண்போர் கண்ணைப் புறஞ்சொல்லவிடாத மிலேச்சர்வாசங்களும், மரக்கலவணிகராகிய பரதேசிகளுறைகின்ற அலை வாய்க்கரையிருப்பம், தொய்யிற்குழம்பு, வாசச்சுண்ணம், சந்தனக்கூட்டு, மூவகைப்பூ, புகைத்திரவியம், கோட்டமுதலியவிரை என இவைகளை விற்போர் திரியும் நகர வீதியும், பட்டினாலும் எலிமயிரினாலும் பருத்தியா லும் சித்திர வஸ்திரங்நெய்கின்ற சாலியர் வீதியும், சந்தனம், அகில், பட்டு, பவளம், முத்து, இரத்தினம், பொன், ஆபரணம் என இவற்றை அளவின்றி விலைக்குக் குவித்திருக்கும் வணிக வீதியும், பலசரக்குக் குவிந்துகிடக்கும் வீதியும், உப்புவிற் போர், இலைவணிகர், தக்கோல முதலிய வெற்றிலை வாசம் விற்போர், எண்ணெய் வாணிகர், வெண்கலக்கன்னார், செம்பு செய்வோர், மரவினைத்தச்சர், இரும்புக் சொல்லர் சிற்பாசாரியர், பொற்பணித்தட்டார், இரத்தினப்பணித்தட்டார், கஞ்சுகி செய்யுஞ் சிப்பியர், தோற்றுன்னர், வஸ்திரத்தினாலும், கிடேச்சையாலும் வாடாமாலைகளும், புஷ்பங்களும், பொய்க்கொண்டைகளும், பல்வகைப் பிரதிமைகளும், செய்தலால் தம் கைத்தொழிற்றிறமை காட்டும் வல்லோர், துளைக்கருவியாலும், யாழினாலும், ஏழிசையும் ஏழெழுத்தையும், மூவகை வங்கியதினும், நால்வகை யாழினும் பிறக்கும் பண்களுக்கின்றியமையாத மூவேழுதிறத்தையும் குற்றமற்ற இசைத்துக்காட்டவல்ல பாணர்கள் என இம்மக்களிருக்கின்ற வீதிகளும், குற்றேவல் செய்கின்ற சிறுதொழிலாளர் வசிக்கும் பாக்கமும், இராசவீதியும், கடைவீதியும், பெருங்குடிவணிகர் வசிக்கின்ற மாடமாளிகைவீதியும், வேளாளர்வீதியும், ஆயுள்வேதியர் வீதியும், சோதிடர்வீதியும், முத்துக்கோப்பாரும், சங்கறுத்து வளையல் செய்வோரும், வாழ்கின்றவீதியும், சூதர், மாகதர், நாழிக்கைகணக்கர், விகடககூத்தர், காவற்கணிகையர், ஆடற்கூத்தியர், பூவிலைமடந்தையர், ஏவற்பெண்கள், பேரிகை முதலியதோற் கருவியாளர், கழைக்கூத்தர், என இவர்களிருக்கின்ற வேறுவேறு வீதிகளும், குதிரைப்பாகர், யானைப்பாகர், தேர்ப்பாகர் போர்வீரர் என்றிவர்களிருக்கின்ற வீதிகளும். வேதியர் வசிக்கின்ற அக்கிரகாரங்களும் என எண்ணில்லாத வீதிகளையும், எண்ணில்லாத தொழிற்சாலைகளையும், உடையதாய் இந்நகர் விளங்கியது என்பது சிலப்பதிகாரத்தாற் பெறப்படும் கல்வியாரச்சியிற் பொழுது போக்குவார்க்குப் பட்டிமண்டபமெனப்படும் வித்தியா மண்டபங்களும், நோயாருக்கு மருத்துவசாலைகளும், இளங்காளையர்க்கு விளையாட்டிடங்களும், அகதிகளுக்கு அன்னசாலைகளும், தவஞ்செய்வார்க்குத் தவச்சாலைக ளும் என்றின்னோரன்ன அநேக பொதுக்களங்களுமிங்குள வாயிருந்தன. ஆதலால் இந்நகரம் பலவகைப்போகங்களுக்கும், இடமாயிருந்ததென நிச்சயிக்கப்படும். இந்நகரம் மருவூர்ப்பாக்கத்திலே பெரும்பாலும் தொழிலாளரும், பட்டினப்பாக்கத்திலே பெரும்பாலும் மேன்மக்களும், பிரபுக்களுமே குடிகொண்டிருந்தார்கள். இருபக்கத்தினுமாகவிங் கேயிருந்து வாழ்ந்த குடித்தொகை அறுபதினாயிரம் என்பது. பாலைபாடிய பரிசிலன் றெடுத்த, மாலைத் தாகியவறங்கெழுசெல்வத், தாறைந்திரட்டி யாயிரங் குடிகளும், வீறுசான்ஞாலத்து வியலணியாகி, யுயர்ந்தோருலகிற் பயந்தரு தான, மில்லதுமிரப்புநல்லோர்குழுவுந், தெய்வத்தானமுந் திருந்தியபூமியு, மையருறையுளுமற்வோர் பள்ளியும் என்னுஞ் செய்யுட் கூற்றாற்பெறப்படும். அநேக புலவரையும் கரிகாற்சோழன் போலும் பராக்ககிரமமாதலும், கொடையாலும் ஒரு சிறிதும் திறம்பாத செவ்வியநெறி முறையாலும், சிறந்தோங்கிய அநேக ராஜாக்களையும் பட்டினத்தடிகளையொத்த அநேக மெய்த் துறவிகளையும் தந்தருளிப் புகழ்படைத்ததும் இந்நகரமேயாம். இங்ஙனம் சிறந்து விளங்கிய இந்நகரம் பின்னர்நாளிலே அழிந்தொழிந்து போக இப்பொழுது அவ்விடத்திலேயுள்ளது. அப்பெயரையுடை யவொருகுக் கிராமமே |
காவேரி | காவிரி காண்க. இந்நதிகவேரனாலே திருத்தப்பட்டமையின் காவேரியெனப்படுவதாயிற்று. கவேரன் புத்திரியென்பதுபசாரம் |
கின்னரன் | புலகன் புத்திரன் |
கின்னரர் | தேவருள் ஒருபாலார். இவர் அசுவமுகமும் நரசரீரமுமுடையவர் |
கிம்புருஷன் | புலகன் புத்திரன் |
கிம்புருஷர் | தேவருள் ஒருபாலார். இவர்கள் அசுவகமும், நரசரீரமுடையவர்கள் |
கிம்மீரன் | பகாசுரன் தம்பி. காமிய கவனத்திலே வீமனாற் கொல்லப்பட்டவன் |
கியாதி | தக்ஷப்பிரஜாபதிமகள். இவளுக்குத் தாதை விதாதை என இரு வர் புத்திரரும் லஷூமி என்னும் புத்திரியும் பிறந்தார்கள். உன்முகன் மகன் |
கிரகபதி | ஒரு அக்கினி. இவன் இந்திராதிதேவர்களுக்கு அவ்வியத்தைச் சுமந்து கொண்டு போனமையினாலே இந்நாமம் பெற்றான். ஒரு சமயத்தில் இவன் அவிகளைச்சுமக்க இயலாமையால் சமுத்திரத்திற் கரந்திருக்கையிலே அதிலிருக்கும் மற்சங்கள் இவனிருக்கிற இடத்தை தேவர்களுக்கு சென்று சொல்லின. அதனால் மற்சங்கள் ஜனங்களுக்கு ஆகாரமாக வென்று சபித்தான் |
கிரசன் | தாரகயுத்தத்தில் விஷ்ணுவினாற் கொல்லப்பட்ட ராக்ஷசன் |
கிரதாசுவன் | பரிகிணாசுவன் மூத்த மகன். இவன் மகன் இரண்டாம் யவனாசுவன் |
கிரத்திபூஷணன் | இவன் இடைச்சங்க காலத்திறுதிக்கண் அரசு செய்த பாண்டியன். அதுலகீர்த்தி பாண்டியனுடைய மகன். இப்பாண்டியன் காலத்திலேயே ஒரு பிரளயம் வந்து அநேக நாடுகளை உருத்தெரியாமலழித்து அந்நாடுகளிலுள்ள சராசரங்களையெல்லாம் கடல்வாய்ப்படுத்தி நிர்மூலம் பண்ணுவதாயிற்று. இதுவே துவாபரகலியுக சந்தியிலுண்டாகிய பிரளம். இப்பிரளயத்தாலேயே குமரியாற்றையும் அதனைச் சார்ந்த நாற்பத்தொன்பது நாடுகளையும் கடல் கரைகடந்து பொங்கியெழுந்து தன் வயிற்றிலடக்கி அழித்தது. இவ்வுண்மை எழில்புனையதுல கீர்த்தியென விருபத்திரண்டு. வழிவழி மைந்தராகி வையகங்காத்த வேந்தர். பழிதவிர துலகீர்த்தி பாண்டியன்நன் பாலின்பம் பொழிதர வுதித்தகீரித்தி பூடணன் புரக்கு நாளில். கருங்கடலேழுங் காவற் கரைகடந்தார்த்துப் பொங்கி யொருங் கெழுந்துருத்துச் சீறியும்பரோடிம்பரெட்டுப் பெருங்கடகரியு மெட்டுப்பொன்னொடுங்கிரியு நேமிப் பெருங்கடிவரைய நேரப் பிரளயங் கோத்ததன்றே என்னுந் திருவிளையாடற் செய்யுள்களானும், சிலப்பதி காரவுரையானும், நச்சினார்க்கினியர் உரையானும் இனிது நாட்டப்படும் |
கிரந்தையார் | கடைச்சங்கப் புலவருளொருவர் |
கிராதார்ச்சுனீயம் | ஒரு சமஸ்கிருத காயியம். அர்ச்சுனன் தவஞ்செய்தபோது சிவபெருமான் கிராதரூபந்தாங்கிவந்து அமர்புரிந்து பாசுபதமீந்துபோன சரித்திரங் கூறுவது |
கிராமரதேவதை | கிராமங்கள் தோறுமுள்ள ஐயனார் காளி முதலிய காவற்றேவதை |
கிரிவிரசம் | மகததேச ராஜதானி. இதைச்சுற்றி மலைக்கோட்டை யிருப்பதால் கிரிவரசம் எனப்பெயர் பெற்றது. கோகய ராஜதானி. அது குசன்மக்களுள் நான்காம் புத்திரன். வசுவினால் ஸ்தாபிக்கப்பட்டது. தருமாரணியத்துக்குச் சமீபத்திலிலுள்ளது |
கிரீடி | அர்ச்சுனன் |
கிருசன் | ஒரிருஷி |
கிருசாசுவன் | கிருதாசுவன் |
கிருசாநு | அக்கினி |
கிருசாநுரேதன் | சிவன் |
கிருதகன் | வசுதேவன் மகன் |
கிருதகிருத்தியன் | திருககுப்தன் மகன். இவன் விரக்தனாயிறந்தவன் |
கிருதசிரவணன் | பரசுராமன் அநுசரன் |
கிருதன் | கம்பிரன் மகன். இவன் வமிசத்தவர்கள் பிராமணராயினார்கள். பலராமன் தம்பி |
கிருதமந்தன் | யமீநரன் மகனாகிய திருதிமந்தன் |
கிருதமாலை | மலைய பர்வத்திலுற்பத்தியாகும் ஒரு நதி |
கிருதயுகம் | பதினேழிலக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் வருஷங்கள் கொண்ட காலவட்டம். அத்தரும நாட்டஞ் சிறிது மின்றித் தருமமேயோங்கிநடந்த காலமிதுவே. அது பற்றி இந்த யுகம் புண்ணிய யுகமென்றுஞ் சத்தியயுகமென்றுங் கூறப்படும். வருணாச்சிரமத்துக்குரிய கன்மங்க ளொல்லாம் முறைப்படி யொருசிறிதும் இழுக்கமின்றிச் செய்யப்பட்ட யுகமாதலிற் கிருதயுகமெனப்பட்டது. இந்த யுகத்திலே தேவர் கந்தருவர், தானவர், யக்ஷர், கிந்நரர், நகர் என்போர் யாருமில்லை. கொள்ளல் விற்றல்களில்லை. மனுஷர்க்கு ஒரு வகையுழப்புந் துன்பமுமில்லை. மரங்க ளும் பயிர்வர்க்கங்களும் மனுஷர்கையால் நீரும், எருவும், உழவும், காவலுங் கொள்ளாது தாமே பயன்றருவாயின. நினைத்த மாத்திரத்தே எல்லாப் போகங்களும் வந்து கூடும். பிணியும், மெலிவும், பகையும், பெருமையும், வஞ்சமும், அச்சமும், கொடுமையும், நலிவும், பொறாமையும் இந்த யுகத்துக்குரியனவல்ல. சத்தியமே அரசு புரிந்தது. துறவே விரும்பப்படுவதா யிற்று. பரப்பிரமம் யாவர்க்குங் சாந்நித்தி யமாயிருந்தது. நாரயணன் சுவேதரூபியா யிருந்தான். எல்லாமாந்தருக்கும் நெறியு மொன்றே: கடவுளுமொன்றே: மந்திரமு மொன்றே: வேதமுமொன்றே: இது விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது |
கிருதராதன் | மகாதிருதி புத்திரன் |
கிருதவர்மன் | ஹிருதிகன் மகன். தேவமீடன் தம்பி. பாரதயுத்தத்தில் அசுவத்தாமனுக்குச்சகாயன். கிருதவீரியன் தம்பி |
கிருதவீரியன் | தனிகன் புத்திரன். கார்த்தவீரியார்ச்சுனன் தந்தை |
கிருதவுஜசு, கிருதவுஜன் | கிருதவீரியன் தம்பி |
கிருதாக்கினி | கிருதவீரியன் தம்பி |
கிருதாசி | ஓரரம்பை |
கிருதாந்தன் | யமன் |
கிருதாயு | அரிஷ்டநேமி மகன் |
கிருதி | வகுளாசுவன் மகன். கந்தமந்தன் மகன். இவன் இரணியநாபனால் யோகமார்க்க முணர்ந்து சமாசங்கிதையைக் கீழைத்தேசங்களிற் சென்றுபதேசித்தவன். விபுமகன். சியவனன் மகன் |
கிருது | பிரமமானச புத்திருளொருவன். இவனுக்குத் தக்ஷப்பிரசாபதி மகளாகிய சந்நதியிடத்து அங்குஷ்டப் பிராமாணமாக அறுபதினாயிரம் மகாவிருஷிகள் பிறந்தார்கள். இவர்கள் பெயர்கள் வாலகில்லியவிருஷிகள். உன்முகன். அங்கன்தம்பி |
கிருத்சிநமதன் | க்ஷத்திர விருத்தன் பௌத்திரன். சுகோத்திரன் புத்திரன். சுனகன் தந்தை |
கிருத்திகை | மூன்றாம் நக்ஷத்திரம். அஃது ஆறு நக்ஷத்திரங்களினது கூட்டம். ஒருசமயம் அக்கினிதேவன் சப்த இருஷிகளினது பாரிகளைப்பார்த்து மோகித்தான் அது கண்ட அவன் பாரி சுவாகாதேவி தனது நாயகன் அந்த இருஷிகள் பாரியரால் சபிக்கப்படுவானென்றஞ்சி அருந்ததி யொழிந்த ஏனைய ஆறுபாரியாகி நாயகனைக்கூடினாள். இவ்வறுவரே கிருத்திகை யாயினர். இவர்களால் வளர்க்கப்பட்டமை யின் குமாரக்கடவுள் கார்த்திகேயரெனப்படுவர். அயலசலனத்தால் ஒவ்வொருகாலத்திற்கொவ்வொரு நக்ஷத்திரமாகவெண்ணப் பட்டது |
கிருத்திவாசன் | சிவன் |
கிருநத்துயுதி | சித்திரகேதன் மூத்தபாரி. அங்கராஜபுத்தரி |
கிருபன் | சத்தியதிருதி புத்திரன். துரோணாசாரிக்கு மைத்துனன். கௌரவ ருக்கு முதலில் அஸ்திரவித்தை கற்ப்பித்தவன். இவன் சிரஞ்சீவி. இவன் பாரதயுத் தத்திலே கௌரவர் பக்கத்தில் நின்று பெருதவன் |
கிருபாநாயகி | திருக்கருவூரிலே கோயில் கொண்டிருக்குஞ் தேவியார் பெயர் |
கிருபி | சத்தியதிருதி புத்திரி. துரோணாசாரியர் பாரி. அசுவத்தாமன் தாய். கிருபாசரரியன் தங்கை |
கிருபீடஜன்மன் | உதகத்திலே பிறந்தவன், சந்திரன், அக்கினி |
கிருபீடயோனி | சந்திரன் அக்கினி |
கிருமி | உசீநரன் புத்திரருள் நான்காம் புத்திரன் |
கிருமிலாபுரம் | ஒருபட்டணம். இது கிருமியால் நிருபிக்கப்பட்டது |
கிருஷ்ணஜயந்தி | ஆவணிக் கிருஷ்ணபக்ஷத்தட்டமி. இது கிருஷ்ணன் பிறந்த தினமாதலின் அது விரததினமாககக் கொள்ளப்படும் |
கிருஷ்ணதேவி | கிருஷ்ணாநதி |
கிருஷ்ணத்துவைபாயனன் | வேதவியாசன் |
கிருஷ்ணன் | கமசனுடைய கொடுங்கோன்மைக் கஞ்சித் தேவர்கள் விஷ்ணுவையடைந்து தம்மைக் காத்திரக்ஷீக்கவென்று வேண்ட, அவர் தமது கேசத்தைப்பற்றித் தடவ, இரண்டு ரோமங்களுதிர்ந்தன. விஷ்ணு அவ்வுரோமங்களை நோக்கி, இவ்விரண்டனுள் வெண்ணிறரோமம் பல ராமனாகச்சென்றுயிறக்க, மற்றக்கரியது கிருஷ்ணணாகப் பிறந்து கம்சனையழிக்க வென்றருளி அத்தேவர்க்கும் விடையீந்தனர். ரோமமென்றதை அதுவாகக்கொள்ளற்க. விஷ்ணுவினது அம்சத்திலோரற்ப் பாகமே இங்ஙனங் கூறப்பட்டதாகக் கொள்ளுக. அது நிற்க. கம்சன் தனது தங்கை தேவகியையும் அவள் நாயகன் வசுதேவனையுமுடன் கொண்டோரிரத்தில் ஏறி வனம்பார்க்கச் சென்றான். அப்பொழுது கமசா! கேள்! உன்னுடன் இரதமூர்ந்து வருகின்ற உன் தங்கை தேவகிவயிற்றிலே பிறக்கப்போகும் எட்டாம் பிள்ளை யால் நீ கொல்லப்படுவாய் என்று ஓர் அசரீரி இடிபோலொலித்துரைத்தது. அது கேட்ட கம்சன் துணுக்குற்றுத் தன் வாட் படையுறைகழித்து அவளைக் கொல்ல ஓங்கினான். வசுதேவன் உடனே எழுந்து வீராதிவீர, இவளைக் கொல்லாதொழிக. அவள் வயிற்றிற்பிறக்கும் பிள்ளைகளையெல்லாம் உன்கையி லொப்பிப்பேன் என்று கூறி அவனைத் தடுத்தான். இவ்வு றுதியாற் கோபந்தணிந்த கம்சன் தேவகியையும் வசுதேவனையும் சிறையிலிட்டு அவள் வயிற்றிற் பிள்ளைகளையெல்லாம் கொன்று வந்தான். ஏழாவது சிசுக்குறை மாசத்திற் பிறக்க அதனை வசுதேவன் எடுத்துப்போய்க் கோகுலத்திலிருந்த தனது இரண்டாம் மனைவியாகிய ரோகினி யிடத்திற்கொடுத்தான். அச்சிசுவே பலராமன் காவலர் கம்சனிடஞ் சென்று ஏழாவது அழிகருப்பமாயிற்று என்று கூற, அவன் மகிழ்ந்தான். அதன் பின்னர் உரிய காலத்தில் எட்டாஷ் சிசுப்பிறந்தது. இச்சிசுவே கிருஷ்ணன். அதனை வசுதேவன் பிறருக்குப் புலனாகாவண்ணம் அந்நள்ளிரவிற்றானே கொண்டு சென்று யமுனைக்கு அக்கரையிலிருந்த நந்தன் மனையிலிட்டு, அங்கே அவன் மனைவி யசோதை அப்பொழுது தானேயீன்று வைத்திருந்த சிசுவைக்கவர்ந்து கொண்டு மீண்டு, முன் போலப் பிறர் அறியாவண்ணம் தன் வாச ஸ்தானம் புகுந்தான். அச்சிசுவினது அழுகுரல்கேட்ட காவலர் வைகறைக் காலத்யோடிக் கமசனுக்குணர்த்த, அவன் உடனே அவ்விடஞ்சென்று அச்சிசுவைக் கவர்ந்து ஒரு கல்லின்மேல் மோதினான். மோதலும் அஃது அந்தரத்திலெழுந்து அஷ்டகரங்களோடு கூடிய பெரியதொரற் புதவடிவாகி, அவனைப் பார்த்து நகைத்து, என்னையெடுத்து வீணே மோதிக் கொல்லமுயன்றாய். உன்னையன் பூர்வஜன்மத்திற் கொன்றொழித்த அம்மேலோன் பிறந்து சமீபத்திலே வேறு மனையில் வளர்க்கின்றான். அவனே உன்னைக் கொல்வான் என்று கூறி மறைந்தது. அவன் அதன் பின்னர்த் தேவகியையும் வசுதேவனையும் சிறைவிடுத்தான். வசுதேவன் ரோகிணியிடத்திருந்த பலராமனையுங்கொண்டு போய்த் நந்தன் மனையில் விட இரண்டு சிசுவும் அங்கேயுடனிருந்து வளர்வனவாயின. சிலநாட்கழியக் கிருஷ்ணன் வளர்கின்ற இடத்தையுணர்ந்து கம்சன் பூதனையென்னுமொரு பேயைக் கிருஷ்ணன் மனையிற் சென்று அவனைப் பாலூட்டிக்கொன்று வருகவென்றேவினான். பூதனை சென்று அச்சிசுவையெடுத்து மடி மீதுவைத்துப் பாலூட்டினாள். கிருஷ்ணன் அவள் முலைப்பாலோடு அவள் ஆவியை யுமருந்தி அவளை அலறவலறக் கொன்றொழித்தான். இவ்வற்புதம் அச்சேரியை ஒருங்கே அங்கழைத்தது. ஓரசுரன் சென்று நந்தன் மனையிற் கிருஷ்ணனைக் கொல்லச் சமயம் பார்த்துச் சகடமாய்க்கிடக்க, நந்தன் கிருஷ்ணனைக் கொண்டுபோய் அச்சகடத்திருத்தி விளையாடும்படி வைத்தான். கிருஷ்ணன் பாலுக்கழுவான் போன்றழுது கோபித்தெழுந்து அச்சகடத்தைக் காலால் உதைக்க அச்சகடந் துளியாயிற்று. அவ்ழியே அசரனுமிறந்தான். மற்றொருநாள், கிருஷ்ணனும் பலராமனும் கட்டிவைத்த ஆண்கன்றுகளையவிழ்த்துப் பாலுண்ண விட்டுப் விளையாட்டயர்ந்தார்கள். அது கண்ட யசோதை கிருஷ்ணனை உரலோடு கட்டிவைத்தாள். கிருஷ்ணன் அவ்வுரலையிழுத்துப்போய்ச் சமீபத்திலே நின்ற இரண்டு மருதமரங்களுக்கு இடையே புகுத்திச் சிக்குவித்து அப்பால் நின்றிழுக்க, அவ்வலிய விருக்ஷமிரண்டும் வேரோடு வீழ்ந்தன. அஃது ஆய்ப்பாடியெங்கும் பேரதியத்தை விளைத்தது. இம்மரம் வீழ்த்திய அற்புதத்தின்பின்னர் நந்தன் தன் குடும்பத்தோடு பிருந்தாவனஞ் சென்று வசிப்பானாயினான். அங்கும் கம்சன் பல வுபாயங்களாற் கிஷ்ணனைக் கொல்ல முயன்றான். அவ்வுபாயங்கள் பலவற்றுள்ளே பகாசுரன் கொக்காகிச் சென்று தன் அலகாலே கிருஷ்ணன் அக்கொக்கைப் பற்றிக் காலின்கீழிட்டு இடந்து கொன்றது மொன்று. கிருஷ்ணனுடைய பாலிய கால மெல்லாம் கன்றுகளை மேய்த்துவருதலாலும் இவ்வகை அற்புத சாமர்த்தியத்தாலும் பரோபகார சீலனாகவேயிருந்தான். ஒரு நாள் பலராமன் சிலகன்றுகளையும் அவைகளைக்காக்கும் கோபாலச் சிறுவர்களையும் விளையாட்டாகக் கொண்டு போய் மறைத்தான். அப்பொழுது ஆய்ச்சியர் வரும்நேரமாக, அச்செய்தியை அவர்களுணரா வண்ணம் அக்கன்றுகளைப் போல வேறுமைந்தரும் தன் மாயாவல்லபத்தாற் சிருஷ்டித்து அவர் வருமுன் வழக்கம்போல நின்று மேயவும்மேய்க்கவும் வைத்தான். அவ்வாயப்பாடியிலுள்ள பல்லாயிரம் ஆய்ச்சியரும் கிருஷ்ணனைக் கொண்டுபோய்த் தத்தம் வீட்டில் அமுதருந்தி அவனுடைய மழலை விளையாட்டைச் சிறிதுநேரங் கண்டு களிக்கவெண்டு மென்னும் பேராசை யுடையராயிருந்தார்கள் அஃதுணர்ந்து கிருஷ்ணன் ஒவ்வொரு நாளிலே ஏக காலத்திலே அவர் வீடுகள் தோறுஞ் சென்றிருந்து அவரூட்டும் வெண்ணெய் பால்களையுண்டு விளையாடி அவர்ளை மகிழ்வித்து அவர்க்கொவ்வாம் அருமைப் புத்திரன் போலாயினான். ஒருத்தி இன்று மத்தியானத்திலே கிருஷ்ணன் என்வீட்டுக்கு வந்திருந்தான். என்று தன் அயல்வீட்டாளுக்குச் சென்று சொல்வாள். அவள் ஏன் பொய்கூறுகின்றனை: அவன் அப்பொழுதென் வீட்டிலிருந்து வெண்ணெயுண்டானென்பாள். அவ்விருவரும் சண்டையிட்டு அயல்வீடு சென்று சொல்லுவர். அவ்வீட்டாள், இருவீரும் ஏன் பொய்யுரைக்கின்றீர்கள்: அவன் அந்நேரத்தில் என்வீட்டிலன்றோ வந்திருந்து பால் வாங்கியுண்டான் என்பள். இப்படியே எல் லோருங் கூறத் திருவிளையாட்டயர்வதே கிருஷ்ணனுக்கு தொழிலாகவிருந்தது. கிருஷ்ணன் தன் பிள்ளைப் பருவத்திலே செய்த அற்ப்புதங்களும் செயற்கருஞ் செய்திகள் மீண்டுக் கூளப்புகின் அடங்கா. கம்சன் கிருஷ்ணனைக் கொல்லப் பலவாறு முயன்றதும் ஒன்றிலும் சித்தி பெறா தீற்றிலே கிருஷ்ணனாற் கொல்லப்பட்டான். கிருஷ்ணன் பிரிய மனைவியர் ருக்மிணி சத்தியபாமா என இருவர். கிருஷ்ணனுக்கு பாலிய காலந்தொட்டுப் பிராசகியாயிருந்தவள். ராதை. அர்ச்சுனன் கிருஷ்ணனுக்கு மைத்துணனும் பிராணசிநேகனுமாயுள்ளவன். அவன் பொருட்டே பாரத யுத்தத்திற் கிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கஞ்சார்ந்திருந்து அவர்களுக்கு வேண்டுந் துணையெல்லாம் புரிந்தான். கிருஷ்ணன் அவதாரஞ் செய்திலனேல் பாண்டவர்கள் அரசு பெறுவதும், அசுரர்கள் மாண்டொழிவதும், இக்கலியுகத்திலே நல்லறங்கள் தலைகாட்டுவதும் இல்லையாம். கிஷ்ணனுக்கிணையான மதியூகியும் வியாசம்வல்லவனும், யோகநிலையுணர்ந்த கன்மஞானியும், பேராற்றலுடை யோனும் இம்மண்ணுலகத்தில் இன்னும் பிறந்திலன் அர்ச்சுனன் போர்க்களத்திலே புகுந்தபோது எதிரே நிற்போர்யாவரும் இஷ்டரும் தாயத்தருமாக விருத்தலை யெண்ணித் தனக்குச் சாரதியாகவிருக்கும் கிருஷ்னைப்பார்த்து, இவர்களைக் கொன்றொழித்து விட்டுப் பின் யாரையுறவாகக் கொண்டு அரசு புரியப்போகின்றேன் என்று கூறித் தன்வில்லைக் கீழேநழுவவிட்டான். கிருஷ்ணன் அதனையே சமயமும் அவன் மன நிலையையே பக்குவமுமாகக்கண்டு அப்பக்குவத்துக்கேற்ற கன்மயோக உபதேசமாகிய பகவற்கீதையையுபதேசித்தருளினான். பயன் விரும்பாது அவ்வவ்வாச்சிர மங்களுக்குரிய கடன்களைத் தவறாமற் செய்தல் வேண்டும். அங்ஙனஞ்செய்பவன் கன்மபந்தமடையமாட்டான். அதுவே அவ னுக்கு இசுபரசிலாக்கியங்களைக் கொடுப்பது என்பதே அவ்வுபதேசத்தான் முடிந்தபொருள். இக்கீதை வேதாந்தசாரத்தை நன்கு விளக்குமோரற்பத நூல் |
கிருஷ்ணராயன் | ஒரு சிற்றரசன். இவன் சமுகத்தில் விகடக்கூத்தர்கள் வேளாண் மகளிரைப் போல வேடம்பூண்டு கூத்தாடினார்கள். அப்போது தொண்டை மண்டலத்து வேளார்கள் நம்மை இக்கிருஷ்ணராயன் அவமதித்தானென்று சினந்து அவனுயிரைமாய்த்தார்கள் |
கிருஷ்ணாங்கனை | நைருதன் இராஜ தானி |
கிருஷ்ணை | திரௌபதி. ஒரு நதிக்கும் பெயர் |
கிரௌஞ்சன் | மைநாகன் புத்திரன். இவன் அரசிருந்த மலை கிரௌஞ்சமெனப்படும். இவனை அம்மலையோடு சுப்பிரமணியக்கடவுள் பிளந்தமைன் கிரௌஞ்ச தாரகனெனப்படுவர் |
கிழான் | வேழாழர்பட்டப் பெயர் |
கிஷ்கிந்தை | வாலி சுக்கிரீவர்கள் ராஜ தானி. இது மைசூருக்கு வடகிழக்கிலுள்ளது |
கிஷ்ணகர்ணாமிருதம் | இது ஸ்ரீலீலாசுகராற் செய்யப்பட்ட நூல் |
கீசகர் | இவர்கள் நூற்றுவர் சகோதரர். விராடன் பாரியாகிய சுதேஷணையோடு பிறந்தவர்கள். இவருள் மூத்த கீசகன், பாண்டவர் விராடதெயத்திருந்த காலத்தில் திரௌபதியை இழுத்தான். அது கண்டவீமன் கீசர் நூற்றுவரையுங் கொன்றான் |
கீர்த்திமதி | அணுகன் பாரி. சகுனி மகன் |
கீர்த்திமாலினி | சந்திராங்கதன் மகள் |
கீர்த்திரதன் | பிரதிரதகன் மகன் |
கீர்த்திராதன் | மகாப்பிரகன் மகன் |
குகன் | குமாரக் கடவுள். கிருங்கிபேரபுரத்துக்குப் பிரபுவாகிய ஒரு கிராதராஜன். இராம பக்தன் |
குகியர் | குபேரனுடைய நவநிகளைக் காப்பவர்கள், இரகசியத்தை வெளியிடாதவர்கள் |
குகுதேவி | பிரமபாரியருள் ஒருவர் |
குகுரன் | அந்தகன் மகன் |
குக்ஷீ | இக்ஷூவாகு மகன். விகுக்ஷீ தந்தை |
குங்கிலியக் கலய நாயனார் | திருக்கடவூரிலே பிராமணகுலத் தவதரித்துச் சுவாமிக்குக் குங்கிலியத் தூபமிடுதலையே பெரும் பணியாகக் கொண்டு தம்மிடத்துள்ள வெல்லாம் அதன்பொருட்டுச் செலவு செய்து வறுமையுற்றவர். உணவுக்கு நெல்வாங்கிவரக் கொண்டுபோன தாலியை ஒரு பொதி குங்கிலியமெதிரே வரக் கண்டு அத்தாலியைக் கொடுத்து அதனை வாங்கிப்போய்க் கோயிலிலே வைத்துத் தூபமிட்டுக் கொண்டு நின்று தமது மனைமக்கள் பட்டினியை மறந்தவரும் அவ்வுறுதிகண்டு சிவபிரான் அவ்வீடெல்லாம் நெல்லால் நிறையச்செய்யப்பெற்ற வரும் இவரே |
குங்குமபாண்டியன் | சரதமார பாண்டிய னுக்குப்பின் அரசு செய்தவன் |
குசத்துவஜன் | ஜனகன் தம்பி. தசரதன் சம்பந்தி. பரதசத்துருத்தனர் மாமன் |
குசநாபன் | குசன் மகன். இவன் புத்தரிகள் நூறுபேரும் வாயுசாபத்தால் பெண்மை இழந்தார்கள். பிரமதத்தன் என்னுமோர் இருஷி இவர்களை மணத்திற்பெற்றுத் தமது தபோபலத்தால் அவர்களுக்கு அக்குப்ஜத்துவத்தைப் போக்கினார் |
குசன் | குசலவர் காண்க |
குசலவர் | ஸ்ரீராமன் புத்திரர். இவர்கள் குசனும் லவனுமென இரட்டையர். இவர்கள் கருப்பத்திலுற் பத்தியாயிருக்கும் போது, அயோத்தியிலே ஒருவன் தனது நாயகியோடுமுரணி, அவள்மீது அபவாதம் சுமத்தி, அவனைச் சேர்க்கமாட்டேனென்ற போது அவன் தாய் அவனைப் பார்த்து, இராவணன் கொண்டுபோயிருந்த சீதா தேவியை இராமர் சேர்க்கவில்லையா? உனக்கு மாத்திரம் இவனைச் சேர்த்தல் கூடாதாவென்றான். அதனை ஒற்றர் இராமன் செவியிற் சேர்க்க, அவர் நமக்கும் அபகீர்த்திவச்தாவென்று துக்கித்து கருப் பிணியாயிருந்த சீதையைக் காருண்யமின்றிக் காட்டிற் கொண்டு போய் வான்மீகி ஆச்சிரமத்தில் விட்டார். அங்கே சீதா தேவியார் இப்பிள்ளைகளை இரட்டையராகப் பெற்று முனிவர் அநுக்கிரகத்தால் வளர்த்தார். குசன் குசஸ்தலியென்னும் பட்டணத்தை நிருமித்தவன் வான்மீகி ஒரு தருப்பைப்புல்லை யெடுத்து இரு கூறாக்கி நுணிக்கூற்றால் குசனுக்கும் அடிக்கூற்றால் லவனுக்கும் காப்பிட்டபடியால் குசலவர் என்னும் பெயருண்டாயின, லவம் ~ கூறு |
குசஸ்தலி | ரைவததுருக்கத்திலுள்ள ஒரு பட்டணம். மதுராபுரத்தை ஜராசந்தன் எரியூட்டியபின்னர்க் கிருஷ்ணனுக்கு ராசதானியாயிருந்தது. இது விந்திய கிரிமுகத்திலேயுள்ளது |
குசாக்கிரன் | பிருகத்திரதன் மகன். ஜராசந்தன் தம்பி |
குசாம்பன் | குசன் மகன். இவன் புத்திரன் காதி |
குசாவதி | குசன் ராஜதானி. இது உத்தரகோசலததுள்ளது |
குசிகன் | விசுவாமித்திரன் பிரபிதாமஹன், பாட்டன்றந்தை, பாலாகாசுவன் மகன் |
குசீலவன் | மைத்திரெயன் தந்தை |
குசுமபுரம் | பாடலிபுத்திரம் |
குசுமேஷன் | மன்மதன், குசுமம் ~ புஷ்பம். இகஷூ ~பாணம். புஷ்பபாணன் |
குசும்பன் | உபரிசரவசு மகன் |
குசேலன் | கிருஷ்ணன் சிநேகனாகிய வோரந்தணன் |
குஜன் | செவ்வாய் |
குஜம்பன் | தாரகயுத்தத்தில் வருணனால் கொல்லப்பட்ட ராக்ஷன். வத்சந்திரலே கொல்லப்பட்ட ஓரரசன் |
குஞ்சரன் | ஒரு வாநரன். அஞ்சனை தந்தை. அநுமந்தன் மாதாமஷன், பாட்டன் |
குடநாடுதிருப்புலியூர் | மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம் |
குடமலை | மேற்றிசைக் கண்ணதொரு மலை. அது வையகரியெனவம்படும் |
குடம்பன் | ஓரிருடி |
குணநூல் | சில சூத்திரங்கள் தவிர மற்றெல்லாமிறந்தொழிந்த ஒரு நாடகத் தமிழ் நூல் |
குணவாயில் | திருக்குணவாயிலென்பதோரூர். வஞ்சி நகரத்திற்குக் கீழ்த்திசைக் கண்ணது. இளங்கோவடிகள் துறவு பூண்டிருந்தவூரிதுவே |
குணவீரபண்டிதன் | தமிழிலே நிகண்டு செய்த ஒரு சமணவித்துவான் |
குணாட்டியன் | உருத்திரன் சாபத்தாலே பூலோகத்தில் உற்பத்தியான மாலியவந்தன் |
குணி | யுகந்தரன் தந்தை |
குண்டலை | விந்தியவந்தன் பாரி. இவன் நாயகன் சமபாசுரனாற் கொல்லப்பட்டவன் இவள் தான்நினைத்தவிடமெல்லாம் போகுஞ் சக்தியுடையவள் |
குண்டினபுரம் | விதர்ப்பதேச ராஜதானி. அமராவதிக்கு ஈசானியத்தில் நான்கு யோசனைதூரத்திலுள்ளது |
குண்டூர்க்கூற்றம் | சேரநாட்டின் ஒருபகுதி |
குத்சன், குற்சன் | அங்கிரசன் சந்நதியிற்றேன்றியவன். இவன் வேதங்களிலேயுள்ள சிலகீதங்களுக்குக் கர்த்தா |
குந்தலம் | பல்லாரிப் பிராந்திய தேசத்துக்குப் புராதனப்பெயர் |
குந்தி | இந்தப் பெயரினையுடையயாதவரநேகர். கேகயன் பௌத்திரன். தர்மகேந்திரன் புத்திரன். விதர்ப்பன் பௌத்திரன். புருதன் மகன் இவன் சசிவிந்தன் வமிசத்தவன். புருதன் மகன். சாத்துவன் மகனாகிய மகாபோசன்வமிசத்தவன். பாண்டவர் தாயாகிய குந்திக்கு வளர்த்த தந்தை. இவன் குந்திபோஜன் எனவும்படுவன் |
குந்திதேவி | குந்திபோஜன் எடுத்து வளர்த்த அபிமான புத்திரி. தேவமீடனுக்கு மாரிஷையிடத்துப் பிறந்த புத்திரி. வசுதேவன் தங்கை. இவளுக்குப் பிருதையென்றும் பெயர். இவள் தந்தை அநுமதிப் படிதுர்வாசவிருஷியிடந்து ஏவல் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய ஏவற் பக்தியைப் பன்முறையுங் கண்டு மகிழ்ந்த இருஷி, ஒரு திவ்வியமந்திரத்தையுபதேசித்து இதனை நீ யாரை நோக்கிச்செபித்தாலும் அவர்கள் பிரசன்னமாகிப் புத்திரோற்பத்தி செய்வார்களென்னு கூறி விடையளித்தனர். இதனைக் குந்திதேவி பரீக்ஷீக்க நினைத்துக் கங்கையாடி அக்கங்கைக்கரையிலே நின்று சூரியனை நோக்கி அம்மந்திரத்தைச் செபித்தாள். உடனே சூரியன் பிரசன்னமாகிக் கன்னி காபங்கமின்றி ஒரு புத்திரனைப் பெறுக வென்று கூறி மீண்டான். அவ்வாறே குந்தி சகஜகர்ணகுண்டலங்களோடு கூடிய கர்ணனைப் பெற்றாள். வசுசேனன் என்பதும் கர்ணனுக்குகொருநாமதேயம். இதன் பின்னர்ப் பாண்டு ராசாவுக்கு பாரியாகித் தருமுன் முதலிய ஐவரையும் பெற்றாள். இவன் வரலாறு பாரதத்திற்காண்க. இவள் சித்திவமிசம் |
குந்திபுரி | இப்போது குவாலியூர் என்று வழங்கப்படும் நகரம் |
குனி | சிதத்துவஜன் புத்திரன் |
குன்றத்தூர் | சேக்கிழார் பிறந்தவூர். அது தொண்டை நாட்டிலுள்ளது |
குன்றைஎல்லப்பன் | தொண்டைநாட்டிலே குன்றத்தூரிலே தமிழ்ப் புலவர்களுக்குக் கைசலியாமற் பொன்மாரிபொழிந்து புகழ்படைத்தவனாகிய ஒரு வேளாண் பிரபு |
குபன் | தசீசிமுனிவரோடு அந்தணரோ அரசரோ சிறந்தாரென்று வாதம் பேசி ஈற்றிலே அம்முனிவரைத் தனது வச்சிரப் படையாற் கொன்று இரு கூறு செய்தவன் |
குபேரன் | திக்குபாலகர் எண்மருள் ஒருவன். இவனுக்குப் பட்டணம் உத்திர திசையில் அளகாபுரி. பாரி சித்திரரேகை. வாகனம் குதிரை. ஆயுதம் வாள். இவன் ஐசுவரியத்துக்குத் தேவதை. தேவப்பிரசித்தி பெற்றவன். யக்ஷர்களுக்கரசன். இவன் விச்சிரவசு புத்திரன். பார்வதிதேவியார் சாபத்தால் ஒற்றைக்கண்ணனாயினவன் |
குமணன் | தொண்டை நாட்டினைச்சார்ந்த முதிரமலைச் சூழலிலேயுள்ள நாட்டில் அரசு புரிந்த சிற்றரசன். இவன் தமிழ்க் கலைவினோதனாய்த் தமிழ் நாவலர்க்குப் பொன்மாரி பொழிந்த ஒரு வள்ளல். இவன் பரணர்காலத்தையடுத்த பிற்காலத்திலே விளங்கினவன். எனவே ஆயிரத்தெழுநூறு வருஷங்களுக்கு முன்னேயுள்ளவன். இவன் தம்பி இளங்குமணனென்பவன். இவனுடைய நாட்டை வஞ்சனையாற் கவர்ந்து கொண்டு இவனையுங் கொல்லவகை தேடினான். இவன் அஃதுணர்ந்தோடிக் காடு பற்றியிருந்தான். புலவர்கள் அங்குமிவனைத் தேடிப்போய்க் கண்டு வருவாராயினர். பெருந்தலைச் சாத்தனார் இவனிடம் தாம் முன்பெற்ற நன்றியை மறவாத வராய் இவனைக் காட்டிடைச் சென்று கண்டு, நீ நாடிழந்து காடு கொண்டபின் நான் அனுபவிக்குந் துன்பங்களைக் கேளெனத் தமது துன்பங்க ளை மேல்வரும் பாவாற் கூறினர் ஆடுநனிமறந்து கோடுயரடுப்பினாம்பிபூப்பதி தேம்பசியுழவாப் பாஅலின்மையிற் றோலொடுதிரங்கி யில்லிதூர்ந்த பொல்லாவறுமுலை சுவைத்தொற ழூஉந்தன் மகத்துமுகநோக்கி நீரொடு நிறைந்து வீரிதழ்மழைக்கணென் மனை யோளெவ்வநோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்ப்போர்க்குண வென்னிலை யறிந்தனையாயினிந் நிலைத் தொடுத்து ங்கொள்ளாதமையலெனடுக்கிய பண் மைநரம்பின் பச்சைநல்யாழ் மண்ணார் முழுவின்வயிரிய ரின்மை தீர்க்குங் குடி ப்பிறந்தோயே இப்பாடலை கேட்ட குமணன் மனமுருகி, புலவரே, இவ்வாளைக்கைக் கொள்ளுமென்று கூறிக்கொடுத்து, என் தலையைக் கொய்து சென்று கொடுப்போர்க்கு பெருநிதி வழங்குவேனென என் தம்பி முரசறைவித்திருத்தலின், இவ்வாட் படையாலே என் தலையைக் கொய்து சென்று, அவன் பாற்கொடுத்து உமது வறுமையைத் தீர்த்துக் கொள்வீராகவென்று தலையுங் குனிந்தான். சாத்தனார், அம்மம்மவென்று இருசெவிகளையும் புதைத்துக்கொண்டு வாட்படையைக் கையிற்பிடித்தபடியே அவ்விடத்தை விட்டுப்போய் இளங்குமணனையடைந்து, இச்சமாசாரத்தை மன்னாவுலகத்து மன்னுதல் குறித்தோர் என்னுஞ் செய்யுளாற் கூறிக் குமணன் வண்மையையும் பெருமையுமெடுத்துப் புகழ்ந்து அவனுக்கு நன்மதிப்புகாட்டினர். அதுவயிலாக இளங்குமணனும் பகைமை தீர்த்தான் |
குமரகுருபரசுவாமிகள் | பத்து வயதாங்காறு மூமைப்பிள்ளையாயிருந்து திருச்செந்தூர்ச் சுப்பிரமணியக்கடவுள் ஆலயத்திலே தந்தையாராற் கொண்டுபோய் விடப்பட்டபோது ஊமைத்தன்மை நீங்கி, அற்புத கவிப்பிரபந்தங்கள் பாடுஞ் சக்தி பெற்று விளங்கின புலவர். இவரிடத்திலே புலமையோடு அற்புதங்களும் விளங்கின. இவர் காசியாத்திரைக்கெழுந்து சென்ற போது வேங்கடகரிக்குச் சமீபத்திலே வழியருகேயிருந்து துன்பஞ்செய்து வந்த புலியை அழைத்து அதனை வாகனமாகக்கொண்டு சென்று காசியையடைந்தனர். அது கேட்ட ஆக்பர் என்னுந் துருக்க சக்கரவர்த்தி இவரைச் சென்று கண்டு உபசரித்துத் துறவியாதலின் என் மாளிகையிலும் வந்து விருந்துகொண்டருள வேண்டுமென்னுறு விண்ணப்பஞ் செய்தான். சுவாமிகள் கொள்வேமென்ன, சக்கரவர்த்தி அதற்குவேண்டுவனவெல்லாம் அமைத்துத் தன்மதாசாரியார் ஒருமருங்கிருக்கச் சுவாமிகளைத் தன்னருகே தலைப்பந்தியிலிருந்தினான். மாமிசபதார்த்தங்க ளோடு கூடிய உணவே யாவர்க்கும் படைக்கப்பட்டன. சுவாமிகள் தமக்கு அசமாமிசமும் பன்றிமாமிசமும் சமமேயென்று கூற, சக்கரவர்த்தி முதலியோர் யாவரும் பன்றியென்னுஞ் சொற்கேட்ட மாத்திரத்திலே நிஷேதமென்று கூறி யெழுந்தார்கள். அதுகண்ட சுவாமிகள் அவர்களையிருக்கும்படி கையமர்த்தி உங்கள் கலங்களிலேயிருந்த அன்னங்கறிக ளெல்லாம் போய் அதிரம்மியமான தீங்கனி வகைகளேயிருப்பக்கண்டு அதிசயித்துச் சுவாமிகளோடு தாமும் வயிறாரவுண்டார்கள். அவ்வற்புதத்தைக்கண்ட சக்கரவர்த்தி சுவாமிகளிடத் தில் மிக்க பக்தியும் அபிமானமுடையராகி, அவர்கள் கேள்விப்படி சைவசமயிக ளுடையனவாயிருந்து பின்னர்த் துருக்கராற் கவரப்பட்ட கங்கைக்கரையின் கணுள்ள தீர்த்தத் துறைகளையும், விசுவநாத சுவாமி கோயிலுக்கும் அம்மையார் கோயிலுக்கும் அநேகமானியங்களையும், சைவத்துறவிகளுக்காக அநேக மடாலயங்களையும் கொடுத்தான் சுவாமிகளுடை ய புலமை ஒப்புயர்வில்லதென்பது அவரியற்றிய நூல்களால் நிச்சயிக்கப்படும் இவர்காலம் இருநூற் றெழுபத்தைந்து வருஷங்களுக்கு முன்னுள்ளது |
குமரன் | குமாரதெய்வம். கபிலபு ரத்தரசன் |
குமரி, குமரியாறு | இஃது ஆரியதேசமாகிய பரதகண்டத்திலே தென்பாற்கண்ணதாகிய ஓராறு. இதனையுள்ளிட்ட நாற்பத்தொன்பது நாமுகள் கடையூழியிறு திக்காலத்திலே கடல்கொண்டழிந்து போயின. அதன் வடபால் நாடு பின்னர்க் குமரிநாடு என்றும், அக்கடல் குமரிப் பௌவமென்றும் வழங்கப்படுவனவாயின் |
குமரிக்கோடு | கடல்கொண்டழிந்த குமரி நாட்டுமலை |
குமாரசுவாமி | சிவபெருமானது திருக்குமாரருள் ஒருவர். தேவர்கள் சேனாதிபதி. வாகனம் மயில். ஆயுதம் வேல். பாரிகள் வள்ளிநாயகியும் தெய்வயானையும். சூரபன்மன் முதலிய அசுரர்களை நாசஞ்செய்தவர். சிவபெருமானது நெற்றிக்கண்களினின்று வீழ்ந்த அக்கினிபகவானேற்றுக் கொண்டுபோய்ச் சரவணப்பொய்கையில் விட, அப்பொறிகள் ஆறு பிள்ளைகளாயின அது கண்டு உமாதேவியார் அவைகளை எடுத்துத்தழுவ ஆறும் ஏகரூபமாகி ஆறுமுகங்களும் பன்னிரண்டு புஜங்களும் இருபதங்களுமுள்ள திருமேனியாக விளங்கின |
குமாரி | இருக்ஷ பர்வதத்திலுற்பத்தியாகும் ஒரு நதி |
குமுதன் | விஷ்ணு பரிசாரகன். ராமருடைய வாசரவீரருளொருவன் |
குமுதம் | நிருதிதிக்குயானை |
குமுதவதி | விந்திய பர்வத்திலுற்பத்தியாகும் நதி |
குமுதாக்ஷன் | விஷ்ணு பரிவாரகர்களுளொருவன் |
கும்பகன் | விதேகதேசத்திலிருந்த வோரிடையன். தாரகயுத்தத்தில் மடிந்துபோன காலநேமிபுத்திரர் எழுவரும் இவன் வீட்டு பசுவினிடத்திலே காளை மாடுகளாகப் பிறந்திருந்தனர். இக்கன்றுகளை கிருஷ்ணன் கொன்று கும்பகன் மகளாகிய நீலையை மணம் புரிந்தான் |
கும்பகர்ணன் | ராவணாசுரன் தம்பி. இவன் மகாகோரமான தவஞ் செய்து வரங்கேட்டசமயத்தில் தனது அபீஷ்டத்தை மறந்து நித்திரை வேண்டுமென்று வேண்டி நித்திரையைப்பெற்றவன். அதனால் நித்தி ராபங்கம் வந்தகாலத்திறக்கவென்றும் வரம்பெற்றவன். இவன் ராவண யுத்தத்தில் ராவணனாலெழுப்பப்பட்டு ராமரை எதிர்தது போராடியபோது அவரால் மடிந்தவன் |
கும்பன் | கும்பகர்ணன் மகன். சக்கிரீவனாற் கொல்லப்பட்டவன் |
கும்பாண்டன் | வரணாசுரன் மந்திரி. கவந்தனெசும்படுவன் |
கும்பி | சம்பாதி மகனாகிய சுபார்சுவன் புத்திரன், கருடவமிசம் |
கும்பீநசை | சுமாலி மகள். கரதுஷணாதியர் தாய். அங்காரவர்ணன் பாரி |
கும்பேசுரர் | திருக்குடமூக்கிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
குயின்மொழியம்பிகை | திருச்சாய்க் காட்டிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
குயின்மொழியம்மை | திருஇருமாகாளத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
குயிலமுதநாயகி | திருகொடுங்குன்றத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
குயிலாலுவம் | இமயத்தின் பக்கத்திலுள்ள சிவாலயம் |
குரு | உருசிரவன். பிருகஸ்பதி. புஷ்யநக்ஷத்திரம். துரோணன். பிரபாகரன்: இவன் ஒரு மீமாம்சகன் |
குரு | அஜமீடன் மூன்றாம் புத்திரனாகிய இருக்ஷன் பௌத்திரன். சம்வருண் புத்திரன். இவன் வசித்தமையால் சமந்த பஞ்சகமென்னுமிடம் குருக்ஷேத்திரமெனப் படுவதாயிற்று. கௌரவ பாண்டவர்களுக்குப் பாட்டனாகிய விசித்திரவீரியன் இவன் வமிசத்தில் வந்தவன் |
குருகு | இடைச்சங்கத்து நூல்களுளொன்று |
குருக்ஷேத்திரம் | சமந்தபஞ்சகமென்றும் ஸ்தானேசுவரம் என்றும் வழங்கப்படுவதாகிய இடம். இது பிரமாவினது உத்தரவேதி. இது சமஸ்த தேவர்களுக்கும் ஆசிரயஸ்தானமெனப்படும். பாரதயுத்தம் நடந்த இடமும் இதுவேயாம் |
குருஜாங்கலம் | அஸ்தினாபுரிக்கு வாயுதிக்கிலும் பஞ்சாலதேசத்துக்குத் தெற்கிலும் உள்ளதேசம் |
குருஜித்து | அஞ்சகன் மகன் |
குருதாமன் | திஷ்யந்தன் மகன் |
குருதேசம் | அஸ்தினாபுரியைத் தனக்கு ராஜதானியாகவுடைய தேசம் |
குருவசன் | இரண்டாம் மது மகன் |
குரோதவசை | தக்ஷப்பிரசாபதி புத்திரிகளுள் ஒருத்தி. கசியபன் பாரி |
குரோஷ்டு | யதுபுத்திரருள் ஒருவன் விருசினவத்தன் தந்தை |
குறள் | திருக்குறள் |
குறுந்தொகை | பாரதம் பாடிய பெருந்தேவனார் முதலிய இருநூற்றுவரால் பாடப்பட்ட அகப்பொருட்பகுதியைப் பொருளாகவுடைய ஒரு நூல். இதற்குரை செய்தவர்கள் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் |
குறும்பலாநாதர் | திருக்குற்றாலத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
குற்றம்பொறுத்தநாதர் | திருக்கருப்பறியலூரிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
குலசூடாமணி | சோம சூடாமணி பாண்டியனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன் |
குலசேகரபாண்டியன் | இவன் சோழவமிச சேகரபாண்டியனெனவும் படுவன். இவன் கலியுயுகம் நாலாயிரத்து முன்னூற்றெண்பதளவில் மதுரையிரசு செய்தவன். இப்பாண்டியன் அநுலோமபாண்டியருள் ஒருவன் |
குலசேகரபாண்டியன் | இவன் கடம்பவனத்தை மதுரையாக்கினவன் |
குலசேகராழ்வார் | இவர் கலியுகாரம்பத்திலே திருடவிரதராஜனுக்குப் புத்திரராகப் பிறந்தவர் |
குலத்துவசபாண்டியன் | பாண்டீசுவரனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன் |
குலபதிநாயனார் | இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர் |
குலபர்வதம் | மகேந்தரம், கந்தமாதனம், மலயம், சகியம், சுத்திமந்தம், விந்தியம், பாரிஜாதமென்னுமேழுமிப் பெயர்பெறும் |
குலபூஷணபாண்டியன் | அனந்தகுண பாண்டியனுக்குப் பின் முடிதரித்தவன். இவனே மெய்ப்பாப்பிட்டது முதல் வளையல் லிற்றதீறாயுள்ள திருவிளையாடல் மூன்றுங்கண்டவன் |
குலேசபாண்டியன் | அரிமர்த்தன பாண்டியனுக்குத் தந்தை. இவன் இடைக்காடர் காலத்தவன் |
குலைச்சிறைநாயனார், பெருநம்பி | மணமேற் குடியிலே பிறந்து நெடுமாறன் என்னும் பாண்டியனுக்கு முதன் மந்திரியாராகித் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைக் கொண்டு சமண்மதத்தை நிலைகெட்டோடச் செய்வித்தவர் |
குலோத்துங்கபாண்டியன் | இவன் புதல்வர் அறுபதினாயிரவர். இவனே மாபாதகந் தீர்த்த திருவிளையாடல்கண்ட பாண்டியன் |
குல்லூகபட்டர் | ஒரு வியாக்கியான கர்த்தா |
குல்லூகபட்டியம் | மனு ஸ்மிருதிக்குக் குல்லூகபட்டர் செய்த வியாக்கியானம் |
குழல்வாய்மொழியம்மை | திருக்குற்றாளத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
குவலயநாயகி | திருக்குரங்காடு துறையிற் கோயில்கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
குவலயாசுவன் | இருதத்துவஜன். சத்துருஜித்துமகன். இவனுக்குக் காலமுனிஜலத்தினும், மலையினும், காட்டினும், நினைத்தபடி சஞ்சரிக்கின்ற ஒரு குதிரையைக் கொடுத்தார். அது காரணமாகக் குவலயாசுவன் எனப்பெயர் பெற்றான். பிருகதசுவன் மகன். இவன் துந்து என்னும் அசுரனைக் கொன்றவனாகலின் துந்துமாரன் எனவும் பெயர் பெறுவான். வற்சன் மகன். அலர்கன் தந்தை, தாளகேதன் காண்க |
குவலயாநந்தம் | இஃது அப்பைய தீக்ஷீதர் சம்ஸ்கிருதத்திற் செய்த அலங்கார சாஸ்திரம். தமிழிலுள்ளதுமிப் பெயரே பெறும் |
குவலயாபீடம் | கம்சன் யானை. எத்துணைப் பலவானையும் கொல்லும் வலிமையுடையது. கம்சன் கிருஷ்ணனைக் கொல்லும் பொருட்டு அதனை ஏவ அது கிருஷ்ணானற் கொன்றொழிக்கப்பட்டது |
குஹியகர் | குகியர், குபேரனது நவநிதிகளைக் காப்பவர்களாகிய மாணிபத்திரன் முதலியோர் |
கூத்தநூல் | ஒரு நாடகத் தமிழ் நூல் |
கூனி | மாதவி தோழி. இவள் வசந்தமாலையெனவும்படுவாள். மந்தாரை |
கூன்பாண்டியன் | சத்துருசாதன பாண்டியன் மகன். இவன் சமணசமயப் பிரவேசஞ்செய்து அச்சமயத்தை வளர்த்து வரு நாளில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அங்கெழுந்தருள, அங்கிருந்த சமணாசாரியர்கள் அவர்மேலசூயை யடையவர்களாகி அலரெழுந்தருளியிருந்த மடத்தில் நெருப்பிட, நாயனார் அத்தீயை அரசன் மேலேவிட, அது கொடிய சுரமாகிச்சென்று அவன் தேகத்தை வருத்திற்று. சமணாசாரியார்கள் தமறிந்த மந்திர சாமர்த்தியத்க்கொண்டு அந்நோயைத் தீர்க்க வெத்தனித்தபோது அது தணியாது மேன்மேலோங்கி அதிகரித்தது. அது கண்ட பாண்டியன் நாயனாரை அழைத்து, அவரால் தன் நோய் தீரப்பெற்றுச் சைவசமயப் பிரவேசஞ் செய்தான். இப்பாண்டியன் காலத்திலேயே சமண சமயம் பாண்டிநாட்டை விட்டுக் குடிபோயது. இரண்டாயிரத்துதெண்ணூறு வருஷங்களுக்குப் முன்னிருந்த சங்காராச்சாரியார் திருஞானசம்பந்த மூர்த்திநாயனாரைத் துதித்தலால் இவன் காலம் ஏறக்குறைய நலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளதாதல் வேண்டும் |
கூர்ச்சரர் | பஞ்சதிராவிடருளொருவர் |
கூர்மபுராணம் | கூர்பரூபம்பெற்ற இந்திராதீசன் இந்திரத்துயமனனுக்குச் சொன்ன புராணம். இஃது ஆறாயிரங்கிரந்தமுடையது. வர்ணாச்சிரம தர்மங்கள் சிவமாகத்மியம் முதலியன விரிந்துரைப்பது |
கூர்மாவதாரம் | அமிர்தமதனத்தின் பொருட்டு மந்தரமலையைத் தாங்குமாறு விஷ்ணுவெடுத்த ஆமை வடிவு |
கூற்றுவநாயனார் | களந்தையென்னுமூரிலே குறுநில மன்னர் குலத்தில் விளங்கிய ஒரு சிவபக்தர் இவர் பஞ்சாக்ஷரத்தை வித்திப்படி செபித்துப் பெருஞ் செல்வமு ம் பராக்கிரமமும் பெற்றவர் |
கூவத்துநாரணன் | தொண்டைநாட்டிலுள்ள கூவமென்னுமூரில் விளங்கிய ஒரு தட்டான். இவன் பெருங்கொடையாளனாதலின் அவனூராகிய கூவமும் தியாகசமுத்திரமெனப் பெயர்பெற்றது. ஒரு ஏழை வலைறுன் அவ்வூர் சிற்றேரியில் தூண்டிலிட்டு மீன்பிடித்துக் காலக்கழிவு செய்து வந்தான். அவன் வறுமைநோயைத் தீர்க்கவெண்ணிய நாரணன் பொன்னினாலொரு மீன் செய்து அதகை, கொண்டுபோய் அவ்வேரியிலிட்டு வலைஞன் தூண்டலிலகப்படும்படி செய்தான். இவன் தமிழ்ப்புலவர்களுக்குஞ் சலியாது கொடுத்த பிரபு, தொண்டைமண்டலசதகம் |
கேகடன் | சங்கடன் புத்திரன் |
கேகயன் | சிபிச்சக்கரவர்த்தி புத்திரர் நால்வருளொருவன். பரதக் தாயாகிய கைகேகி தந்தை |
கேகயம் | கேகயதேசம். சிபி புத்திரனாகிய கேகயனது தேசதமாதலின் கேகய மெனப்பட்டது. இது விபாசநதிக்கு வாயுதிக்கிலுள்ளது. கிரிவிரசம் இதன் ராசதானி |
கேசரி | ஒரு வாநரன். பிரபாசதீரத்திலே இருக்ஷூகளுக்குத் துன்பஞ் செய்துவந்த யானையைக்கொன்றவன். இவன்பாரி அஞ்சனை. மகன் அநுமந்தன் |
கேசவன் | விஷ்ணு |
கேசி | ஒரு தானவன். இவன் தேவசேனையைப் பிடித்துச் சென்றபோது தேவேந்திரனால் ஜயிக்கப்பட்டவன். அயரூபதரனாய்ச் சென்று கிருஷ்ணனை யெதிர்த்துயுத்தஞ் செய்தபோது மாண்ட அரசன். வசுதேவனுக்குப் பத்திரையிடத்துப் பிறந்த மகன் |
கேசித்துவஜன் | நிமி வமிசத்தனாகிய ஒரரசன் |
கேசினி | தமயந்தி பாங்கி |
கேதனன் | அபிரவதண்டி யென்னும் பட்டம்பெற்ற ஆந்தரகவி |
கேதாரம் | இமாலய பர்வதத்திலுள்ள சிவக்ஷேத்திரம் |
கேதாரேசுவரர் | திருக்கேதாரத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
கேதாரேசுவரவிரதம் | இஃது ஐப்பசிமாதத்துக் கிருஷ்ணபக்ஷத்துச் சதுர்த்தசியில் சுமங்கலிகளால் அநுஷ்டிக்கத்தக்க விரதம் |
கேது | விப்பிரசித்திக்குச் சிங்கிகையிடத்துப் பிறந்த புத்திரன். இவன் அக்கினிக்கு விகேசியிடத்துப் பிறந்தவன் எனறுஞ் சொல்லப்படுவன், இராகு காண்க |
கேதுமதி | ஒரு கந்தருவஸ்திரி. சுமாலி யென்னுமிராக்ஷசன் மனைவி |
கேதுமந்தன் | லோகபாலகர் நால்வருள் ஒருவன். கலிங்கதேசத்தரசன். சுருதாயு மகன். தந்வந்திரி மகன். கேதுரதன் தந்தை |
கேதுமாலம் | நவவருஷத்தொன்று |
கேதுரதன் | கேதுமந்தன் மகன். பகீரதன் தந்தை |
கேரளன் | துஷ்யந்தன் தம்பியாகிய திஷ்யந்தன் பௌத்திரன். ஆசிரிதன் மகன் |
கேரளம் | கேரளனது தேசம். இது தக்ஷீண மலையாளம் |
கைகசி | சுமாலி மகள். விச்சிரவசுவின் இரண்டாம்பாரி. இவள் ராவணன் கும்பகர்ணன் சூர்ப்பநகை என்னும் மூவரையும் பெற்றவள் |
கைகேயி | கேகயதேச ராஜபுத்திரி. தசரதன் மூன்றாம் பாரி. பரதன் தாய். தசரதன் ராமருக்குப்பட்டாபிஷேகத்துக்கு முகூர்த்தம் வைத்து அதற்கு வேண்டுவன வெல்லாம் செய்து எத்தனப்பட்டிருக்கும் போது, மந்தரையென்னுங் கொடிய கிழப்பாங்கியினது ஏவலால் இக்கைகேகி தனக்குத் தசரதன் முன்னோரு நாளீந்த வரங்களிரண்டையும் தருமாறு அவனைக் கேட்க, அவன் இவளுடைய துரோக சிந்தையையெண்ணாது தந்தேன். என்ன, இவள் தன்மகன் பரதன் பட்டம் பெறவும் ராமர் பதினான்கு வருஷம் காடுகொள்ளவும் அருளுவென்றாள். கொடுத்ததை மறுத்தல் அரசர்க்கியல் பன்றாதலின் அவன் மறுக்க வியலாதுடன்பட்டு மனக்கவற்சி காரணமாகச் சிலநாளில் உயிர்விட்டான் |
கைடவன் | கற்பாந்தத்தில் விஷ்ணுயோகநித்திரையிலிருந்த போது விஷ்ணுவின து இரு செவித்துவாரங்களினின்றும் மதுவென்றும் கைடவன் என்றும் ஈரசுரர் பிறந்தார்கள். அவர்களுக்குப் அப்போதுண்டாயிருந்த மகாப்பிரளயம் முழந்தாள்வரைச் சலமாயிருந்ததென்றால் அவர்கள் உயரஞ் சொல்ல வேண்டியதன்று. இச்சமயம் பிரமாவும் விஷ்ணு நாபிக்கடலத்திற் பிறந்தார். அவரைக் கண்டு அவ்வசுரர் கொல்லவெழுந்தார்கள். விஷ்ணு அவர்களைச் சமாதானஞ்செய்து உங்களுக்கு வேண்டிய வரங்களைக் கேளுகளென்ன, உன்னிடத்தில்யாம் பெறக்கிடக்கும் வரம் யாதுமில்லை. உனக்கு வேண்டியதைக் கேள் யாம் தருவோம் என்றவசுரரைப்பார்த்து என் கையால் நீங்கள் மடியும் வரந்தரல் வேண்டுமென்று கூறி இருவரையுங் கொள்கிறார். அது காரணமாக விஷ்ணுவுக்குக் கைடபாரி மதுவைரி என்னும் பெயர்கள் பலித்தன |
கைலாசபர்வதம் | இமயத்தின் பின்பாகத்துள்ள வெள்ளிமயமானமலை. இது சிவன் விரும்பியுறையும் ஸ்தலம். கைலாசப திநாமம் சிவனுக்கு இது பற்றி வந்தது. நவரத்தினங்களாற் புனையப்பட்ட நானாவித சிகரங்களையுடைய இம்மலை நடுவேயுள்ள செம்பொற்கோயிலிலே இருஷி கனங்களுந் தேவகணங்களும் சூழ்ந்து துதிக்கச் சிவன் வீற்றிருப்பார் |
கொங்கணம் | மேலைச் சமுத்திரதீரத்திலே கேரள தேசத்துக்குத் தரத்திலேயுள்ள தேசம் |
கொங்கர் | கொங்கு மண்டிலத்தரசர் |
கொங்கு | குடநாடு |
கொடிஞாழன்மணிப்பூதனார் | இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர் |
கொடியிடையம்மை | திருமுல்லைவாயிலிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
கொடுங்குன்றேசுரர் | திருக்கொடுங்குன்றத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
கொடுங்கோளூர் | சேரநாட்டுள்ளதோரூர். திருவஞ்சைக்களம் |
கொடுமுடிநாதர் | திருப்பாண்டிக் கொடுமுடியிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
கொல்லி | ஒருமலை |
கொல்லிமழவன் | சம்பந்தரால் முயலகன் என்னும் நோய்தீரப்பெற்ற கன்னிகையினது தந்தை |
கோகர்ணநாயகி | திருக்கோகர்ணத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
கோகர்ணம் | கேரள தேசத்திலிருக்கும் ஓர் பெரிய சிவக்ஷேத்திரம். ராவணன் தபசுசெய்து பிரமாவிடத்திலே வரம்வாங்கின விடம் |
கோகுலம் | யமுனாநதி தீரத்திலே விருந்தாவனத்துக்குச் சமீபத்திலுள்ள இடைச்சேரி. கிருஷ்ணன் வளர்ந்தவிடம் |
கோகுலேசர் | திருக்கோடம்பக்கத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமிபெயர் |
கோசர் | கொங்குண்மண்டலத்தரசர். இவர் தங்கள் நாட்டில் கண்ணகிக்கத் திருவிழாச் செய்தவர் |
கோசலம் | சரயுநதிப் பிராந்த்திலுள்ள தேசம். அயோத்தி இதற்கு ராஜதானி. இத்தேசம் இக்ஷூவாகு வமிசத்தரசர்க்குரியது. இது ராமருக்குப் பின்னுள்ள காலத்திலே விந்திய பருவத்துக்குச் சமீபத்தில் இன்னுமொரு கோசல முண்டாயினமையின் உத்தரகோசலமெனப்படுவதாயிற்று. பின்னைய கோசலத்துக்கு ராஜதானியாக ராமர் மகன் குசன் குசஸ்தலியென ஒரு பட்டணத்தை நிருமித்தான். பிள்ளையது தக்ஷீணகோசலம் |
கோசலை | கௌசல்லியை. ராமன் தாய் |
கோச்செங்கட்சோமன் | இவர் சுபதேவன் என்னும் சோழராஜன் கமலவதியிடத்துப் பெற்ற புத்திரனார். கமலவதி இவரைப் பிரசவிக்கும் சமயத்தில் அங்கே சென்று கூடியிருந்த சோதிடர்கள் இப்பிள்ளை ஒரு நாழிகைகழித்துப் பிறக்குமாயில் முப்புவனங்களையுமரசாளும் என்று சொல்லக் கேட்டு அப்பிள்ளையை அச்சமயம் பிறக்கவொட்டாமல் அடக்கியிருந்து ஒரு நாழிகை கழிந்தபின் பெற்றாள். உரியகாலத்திற்பிறவாது உதரத்திற் கிடந்தமையால் அப்பிள்ளையினது கண்கள் வெந்திருந்தன. கமலவதி அப்பிள்ளையை நோக்கி என் கோச்செங்கண்ணனோ என்று சொல்லிக் கொண்டு உடனே இறந்து விட்டாள். அது காரணமாகவே கோச்செங்கட்சோழனெப் பெயர் கொண்டார். இவர் பூர்வஜன்மத்திலே ஜம்புகேஸ்வரத்திலிருக்கும் சிவலிங்கத்துக்கு மேற்கட்டியிட்ட சிலந்தியெனப் பெரியபுராணங் கூறும். இவர் சோழநாட்டிலே அநேக சிவாலயத் திருப்பணிகளும் சிதம்பரத்திலே தில்லை வாழந்தணர்களுக்குத் திருமாளிகைகளும் அமைப்பித்த சிவபக்தர். இவர் கோச்செங்கட்சோழநாயனார் எனப்படுவர். இவர் பாரதயுத்தம் முடியும்வரையும் பாண்டவர்களுக்குத் துணையாயிருந்த தென்னாட்டரசர்க ளுள்ளேயொருவனாகிய சோழனுக்குப் பின்னே சமீபகாலத்திலே முடிசூடியரசு புரிந்தவரென்பது கலிங்கத்துப்பரணியால் திருஞானசம்பந்த மூர்த்திநாயனாரது தேவாரத்திலே இவர் எடுத்துக் கூறப்படுதலாலும் இவர் காலம் நலாயிரத்தைஞ்நூறு வருஷங்களுக்கு முன்னுள்ளதாதல் வேண்டும். களவழி நாற்பதிலே பொய்கையாராற் பாடப்பட்டவருமிவரே |
கோடிசூரேசுவரர் | திருக்கோடிகாவிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
கோடேந்துமுலையம்மை | திரு இலம்பயங்கோட்டூரிலே கோயில் கொண்டிருக்குஞ் தேவியார் பெயர் |
கோட்புலிநாயனார் | சோழநாட்டிலே நாட்டியத்தான் குடியிலே வேளாளர் குலத்திலே திருவவதாரஞ் செய்து சேனாதிபதியாகி, அரசன் கொடுக்கும் வேதனத்தைக் கொண்டு சிவாலய பூஷைக்கு நெல்லு வாங்கிக் கட்டிவைத்துவிட்டு அரசனேவலினாற் போர்முனையிற் சென்றிருந்த போது அந்த நெல்லை ஆணை கடந்து எடுத்துண்ட சுற்றத்தரையெல்லாம் மீண்டுவந்து தமது வாளினாலே துணித்துத் திடபக்தியை நாட்டிச் சிவானுக்கிரகம் பெற்றசிவபக்தர் |
கோணீசுவரர் | திருக்கோணமாமலையிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
கோணேசுவரர் | திருக்குடவாயிலிற் கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர் |
கோதமனார் | இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர் |
கோதமன் | சதானந்தன் தந்தையாகிய ஒரு முனிவர். அக்கிரசவமிசத்தவர் |
கோத்திரங்கள் | இவைகள் அநேகம். அவற்றுட் சில சீஷ பரம்பரையும் சிவ புத்திரபரம்பரையும் தெரிவிக்கும், இவைகளை இவ்வளவென்று கணிக்க முடியாது. ஆயினுமவற்றுள் முக்கியமாகியவை ஐம்பது. அவையாவன காசிப, பாரத்துவாஜ, அரித, கவுண்டினிய, கவுசிக, வசிஷ்ட, கவுதம, கார்கேய, ஸ்ரீவத்ச, ஆத்திரேய, முத்கல, சடமருஷணாதிகள். அவற்றுள் ஒவ்வொன்றில் உட்பிரிவு அநேகம். இன்னுமவைகள் ஏகாரிஷேயம், துவாயரிஷேயம். திராயரிஷேயம், பஞ்சாரிஷேய மாகவுமிருக்கும் |
கோபதி | அங்கிரசன் வமிச்தனாகிய ஓரக்கினி |
கோபராஷ்டிரம் | கொங்கணத்துக்குத் தெற்கிலுள்ள தேசம் |
கோபர், கோபாலர் | கிருஷ்ணன் வளர்ந்த சேரியிலுள்ள இடையர்கள் |
கோபானன் | யயாதி புத்திரனாகிய துருவசன் பௌத்திரன் கோபிகள், கோபிகைகள், கோபிகாஸ்திரிகள் |
கோப்பெருஞ்சோழன் | உறையூரிலிருந்தரசியற்றிய சோழருள் ஒருவன். மிக்க புலமையுடையவன். பிசிராந்தையார்க்கு உயிர்த்தோழன். தன்னோடு முரணிய புத்திரர் மீது போர்க்கெழுந்தபோது புல்லாற்றூர் உயிற்றியனாராற் பாடிக்கோபந் தணிக்கப்பட்டவன். சிலகாலஞ் சென்றபின்னர்த் துறவுபூண்டு உத்தரநாட்டிலிருந்து பிசிராந்தையாரோடு சுவர்க்கம் புகுந்தவன், புறநானூறு |
கோப்பெருந்தேவி | நெடுஞ்செழியன் மனைவி. தன் கணவன் கண்ணகிக்கு வழக்கில்தோற்று இறந்தமைதெரிந்து உடனே உணிர்விட்டவள். இவளை அறக்கற்புடையாளென்பர், சிலப்பதிகாரம் |
கோமதி | ஒரு நதி. இது இமயத்திலுற்பத்தியாகிக் கோசல தேசவழியாய் ஒழுகிக் கங்கையிற்கலப்பது |
கோமுகன் | சகால்லியன் சீஷன் |
கோம்பிவிளங்கோதை நாதர் | திருவைகல் மாடத்திற் கோயில் கொண்டிருக்குஞ் சுவாமியர் பெயர் |
கோற்கை | பாண்டியர்களின் பழைய இராசதானிகளுளொன்று. சிலப்பதிகார கதாநாயகன் காலத்திலே இந்நகரத்திருந்த அரசன். வெற்றிவேற் செழியனென்பவன். இஃது இப்பொழுது மிகச்சிறிய ஊராகவிருக்கின்றது. இச்செழியனே வெற்றிவேற்கையென்னும் அற நூலியற்றினோன். இவன் நல்லொழுக்கஞ் சிறந்தவன் |
கோலாகலன் | இமவந்தன் புத்திரன். மைநாகன் தம்பி. இவர்கள் முறையே கோலாகலம், இமயம், மைநாகம் என்னும் மலைக்கரசர்கள். சுத்திமதிநதி இக்கோலமலையிலுற்பத்தியாவது |
கோல்வளைநாயகி | திருக்கருப்பறியலூரிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
கோளகன் | சாகல்லியன் சீஷன் |
கோளிலியப்பர் | திருக்கோனிலியிலே கோயில் கொண்டிருக்குந் சுவாமி பெயர் |
கோழி | உறையூர், முற்காலத்தில் இதிலிருந்த ஒரு கோழி யானையைப் போரில் வென்றமையால் இதற்கு இப்பெயர்வந்தது |
கோவர்த்தனம் | மதுராபுரத்துக்குச் சமீபத்திலுள்ள மலை. இந்திரயாகஞ் செய்து கொண்டிருந்த கோபாலர்கள் மேல் இந்திரனால் வருஷிக்கப்பட்டகன் மழையைத் தடுக்கக் கிருஷ்ணன் குடையாகப்பிடித்த மலை |
கோவலன் | சிலப்பதிகார கதாநாயகனான ஒரு வைசியன். இப்பெயர் கோபாலனென்பதன் மரூஉ. குபேரனையொத்த செல்வனாகிய இவன் ஒருகணிகையின் பொருட்டுத் தன் பொருளெலாமிழந்து தனது கற்புடைத்தேவி கண்ணகியோடு காவிரிப்பூம்பட்டினத்தைவிட்டுப் பொருளீட்டு நோக்கமாக மதுரையையடைந்தங்கே கண்ணகியின் காற்சிலம்பொன்றை விற்க வேண்டி ஒரு பொற்கொல்லன் வீட்டை, அடைந்தபோது, அக்கொல்லன் செய்த வஞ்சனையால் அரண்மனைச் சிலம்புதிருடிய கள்வவனெனப் பாண்டிளாற் கொல்லப்பட்டவன். இவன் காலம் ஆயிரத்தெண்ணூறு வருஷங்களுக்கு முன்னுள்ளது |
கோவிந்தன் | கிருஷ்ணன் பசுவைக் காப்போன் என்பது பதப்பொருள். பிருகஸ்பதி |
கோவிந்தயோகி | சங்கராசாரிய சுவாமிகளுக்குக்குரு. இவர் நருமதாநதிதீரத்திலே எழுந்தருளியிருந்தவர் |
கோவூர்க்கிழார் | இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர் |
கோஷமணி | நகுலன் சங்கு |
கௌசலை, கௌசல்லியை | தசரதன் பாரி. ராமன் தாய். யயாதிபுத்திர னாகிய பூரு பாரி. வசுதேவன் பாரியாகிய பத்திரை |
கௌசாம்பி | குசாம்பன் நிருமித்த நகரம் |
கௌசிகதேவி | கௌரிசும் பநிசும்பரைக் கொல்லுமாறு கொண்ட வடிவம். இத்தே விசண்டமுண்டரைக் கொன்று சாமுண்டியெனப் பெயர்புனைந்தாள் |
கௌசிகன் | தர்மவியாதனாலே தர்ம விசேஷங்களைத் தெரிந்துகொண்ட ஒரு பிராமணன். பிரதிஷ்டானபுரத்திலிருந்த ஒரு விப்பிரன். இவன் குஷ்டரோகத்தால் தேகமெங்கும் சீநீர் பெருகப்பெற்றவனாயிருந்தும் அவன் பாரி அருவருப்பற்றவளாய் அவனைப் பரிபாலித்துவந்தாள். ஒருநாள் அக்குஷ்டரோகி ஒரு வேசியைக்கண்டு மோகித்து அவளைச் சேரவிரும்பித் தனது அவிப்பிராயத்தைத் தனது பாரிக்குச் சொல்ல, அவள் அதற்கு வேண்டிய திரவியங்களை எடுத்துக்கொண்டு அவனையுங் கட்டி முதிகின்மேற் சுமந்து கொண்டு அவ்விரவிலே தானே அவ்வேசிவீடு தேடிச்சென்றாள். செல்லும் போது கோடிய அந்தகாரமூடிற்று. அதனையும் பொருட்படுத்தாது செல்லும் போது வழியருகேயிருந்து தவஞ்செய்து கொண்டிருந்த மாண்டவ்விய இருஷி தலையிலே குஷ்டரோகிகால்தட்டியது. அதனால் மாண்டவ்வியர் சினந்து தமது தலையிலே காலாலே தாக்கியவன் விடியற்காலத்திலே இறக்கக்கடவனென்று சபித்தார். அது கேட்ட கௌசிகன் பாரி நடுக்கமுற்று எனது பதிவிரதமுண்மையானால் பொழுது விடியாதெழிகவென்று பிரதி சாபமிட்டுப் போயினாள். அதனால் பொழுது விடியாதாயிற்று. இது கண்ட தேவர்கள் விஷ்ணுவை வினவ, விஷ்ணு அவர்களை அத்திரி பத்தினியாகிய அநசூயையிடத்தேவ, அவர்கள் பத்தினையைச் சாப விமோசனஞ் செய்கவென்றாள். அவள் என் நாயகன் இறந்திடுவானேயென்ன, அநசூயை அஞ்சாதே கௌசிகன் எவ்வன புருஷனாவானென்ன, அவள் விமோசனஞ் செய்ய பொழுதும் விடிந்தது. கௌசிகனுமிறந்து எவ்வன புருஷனாயெழுந்தான். ஒரு முனி. இவர் தமது தேகத்தை ஓரிடத்தில் வைத்துவிட்டு மற்றொரு தேகத்திற் புகுந்து சஞ்சரிப்பாராயினார். விட்ட தேகம் ஜீரணமாகி அஸ்தி மாத்திரங்கிடந்தபோது அம்மார்க்கமாக ஆகாயத்திலே சென்ற கந்தருவன் அதற்கு நேரே வந்த போது கீழே விழுந்தான். அது கண்டபால கல்லியமுனி அவனை நோக்கி, நீ இவ்வ ஸ்தியைக் கொண்டுபோய்ச் சரசுவதி நதியிலிட்டு ஆடிப்போவையேல் அந்தரஞ் செல்லாமென்ன, அவ்வாறு அவனுஞ்செய்து அந்தரஞ் சென்றான். வற்சபாலகன் என்னும் வற்சவந்தன். வளர்த்த புத்திரன். வசுதேவன் மகன். விசுவாமித்திரன். அதி ரகசியதத்துவங்களை யெல்லாம் ஆராய்ந்த பேரறிவுடையோன் என்பது பதப்பொருள். ஜராசந்தன் தோழனாகிய அம்சன் |
கௌசிகம் | உபபுராணங்களுள் ஒன்று |
கௌசிகி | ஒரு நதி. காதி புத்திரி. இருசிகன் பாரி. ஜமதக்கினி தாய். விசுவாமித்திரன் கோதரி. சத்தியவதியெனவும் படுவாள் |
கௌடபாதாசாரியர் | ஸ்ரீசுகர்சீஷர். யதி கோவிந்தபகவற்பாதருக்குக் குரு. இவர் உத்தரகீதைக்குப் பாஷியஞ்செய்தவர் |
கௌடபுரி | லக்ஷூமணபதி. வங்கதேசத்து முக்கியபட்டணம். ஜன்னுமகா விருஷியடைய ஆச்சிரமமிருந்தவிடம். இங்குள்ள பிராமணர் கௌடரெனப்படுவர் |
கௌடம் | வங்கதேசம். இது பஞ்ச கௌடத்தொன்று |
கௌடர் | கௌடபுரிப் பிராமணர். இவர்கள் கல்வி கேள்விகளாலும், ஒழுங்கத்தாலுஞ் சிறந்தவர்கள். மிக்க நாகரிகம் வாய்ந்தவர்கள் |
கௌடில்யன் | சாணக்கியன் |
கௌதமகோ, கௌதமன்பசு | கௌதம இருஷி. ராஜ மகேந்திரத்துக்குச் சமீபத்திற் கோதாவிரிதீரத்துக்குச் தெற்கேயுள்ள கோவூரிலிருந்து தவஞ் செய்யும் போது பன்னீராட்டைப் பஞ்சம்வந்தடுக்க அதற்கஞ்சி அநேக இருஷிகள் கௌதமரைய டைந்தார்கள். அது கண்ட கௌதமர் ஒரு பிடி நெல்லையெடுத்துத் தமதருகிலிலுள்ள மணல்மேட்டில் விதைத்து விட்டு அநுஷ்டானஞ்செய்தார். அநுட்டானஞ்செய்து எழுந்தபோது நெல்லெல்லாம் முளைத்து வளர்ந்து கதிரீன்று விளைந்திருப்பதைக் கண்டு அவற்றையெல்லாம் அறுத்தடிசிலாக்கி உண்ணுமாறு இருஷிளை ஏவினார். அவ்வாறே தினந்தோறுஞ் செய்துவர பன்னீராண்டு கழிந்து நாடு மலிந்தது. மலிதலும் இருஷிகளைநோக்கி இனிதும் வாசஸ்தானம் போமின் என, அவர்கள் கௌதமரைநோக்கி நீர் எம்மோடு வருதல் வேண்டுமென்று பிரார்த்திக்க, அவர் மறுத்தார். அதனால் இருஷிகள் பொறாமையுற்று ஒரு மாயப்பசுவையுண்டாக்கி அவர் விதைக்கும் பயிரை மேய்ந்தழிக்குமாறு செய்தனர். அது கண்ட கௌதமர் தருப்பைப் புல்லால் அப்பசுவையோச்ச, பசு வீழ்ந்திறந்தது. இருஷிகள் கௌதமரை நோக்கிக் கோஹத்தி செய்தீர். அதற்காகச் சாந்திராயன விரதமநுட்டிக் கடவீரென்று சபித்துப்போயினார். நன்றி மறந்து இருஷிகள் செய்த செய்கையை உலகத்தார் உபமானமாகப் பேசும்போது இது கௌதமன் பசு நியாயமென்று வழங்குவர் |
கௌதமன் | பாரத்துவாஜமுனி. கோதமர். சதாநந்தன். கிருபன். கிருபன்பட்டன். புத்தன். கணாதன். கோதமர் எனப்படும் கௌதமர் மனைவி. அகலியை. அகலியையை வஞ்சித்துக்கூடிய இந்திரனை ஆயிரங்கண்ணாகச் சபித்தவர் இக்கௌதமரே. இவன் சதாநந்தன். இவர் இராமன் காலத்தில் விளங்கினவர். பதிற்றுப்பத்துள் மூன்றாம்பத்துப் பாடிய புலவர். தருமபுத்திரன் இவராற்பாடப்பட்டோன், புறநானூறு |
கௌதமாச்சிரமம் | இது விசாலபுரதத்திலிருந்து மிதிலாபுரத்துக்குப் போகிற மார்க்கத்திலுள்ளது. ஜயந்தபுரம் இதற்குச் சமீபத்திலுள்ளது |
கௌதமி | கோதாவிரி |
கௌரமுகன் | சமீகன் மகன் |
கௌரி | பொன்மயமான திருமேனியோடு கூடிய பார்வதிதேவியார் கௌரி எனப்படுவர். ஒரு காலத்தில் இத்திருமேனியோடு ஒரு வைஷ்ணவன் வீட்டிலே திருவவதாரஞ்செய்து எட்டாண்டு நிரம்பியிருந்த கௌரியைச் சிவன் தமக்கு சக்தி யாக்கிக்கொண்டனர். வருணன் பாரி |
கௌரிகங்கை | கைலாச பர்வதத்திலுள்ள ஒரு நதி |
கௌரிகாந்த சார்வபௌம பட்டாசாரியர் | ஆனந்தலகரிக்கு வியாக்கியானஞ் செய்த முப்பதின்மருளொருவர். இவர் பிற்காலத்தவர் |
கௌளர் | கௌடர். சக்தியை வாமதந்திரப்படி பூசித்து வழிபடுஞ் சமயத்தோர் |
கௌஸ்துபம் | அமிர்தமதனகாலத்திலே திருப்பாற்கடலிலே வெழுந்த திவ்விய வஸ்துகளுளொன்றாகிய வோராற்புதமணி. அதனை விஷ்ணு தமக்கு ஆபரணமாகக் கொண்டருளினார் |
க்ஷணவித்துவம்சி | உலகம் கணந்தோறுமழிந்து சிருஷ்டியெய்துமியல் பினதென்று வாதிக்குமொரு சார்நாஸ்திகன் |
க்ஷத்திரதருமன் | புரூரவன் மகனாகிய க்ஷத்திரவிருத்தன் வமிசத்திலே பிறந்தவன் |
க்ஷத்திரியர் | இரண்டாம் வருணத்தோர். இவர்கள் பிரமாவினது புயத்திற் பிறந்தோ ரெனப்படுவர். இவர்களுக்கு அரசுபுரிதலும் போர்செய்தலும் படைபயிற்றலும் சிறப்புத் தொழில்களாம். வேதம்ஓதல், வேட்டல், ஈதல் மூன்றும் பொதுத்தொழில்கள். இவர்கள் ஏற்றல் செய்வராயிற் பிரஷ்டராவார் கள். இவர்கள் தம் வருணத்திலும் பொண்கோடற்குரியவர். பூர்வகாலத்திற் சிறந்து விறங்கிய மகாரிஷிகள் உலகியலை நெறிப்படுத்தும் பொருட்டு மக்கட்பரப்பை நான்குபாற்படுத்தி, அறிவை வளர்ப்போரைப் பிரவருணமென்றும் புஜபலத்துக்குரியோரைச் க்ஷத்திரிய வருணமென்றும், காருகத் துக்குரியோரைச் சூத்திர வருணமென்று முறைப்படுத்திக் கருமவிபாகஞ்செய்து வைத்துப்போயினர். இக்கருமவிபாகத்தை ஊன்றி நோக்குமிடத்தில் எத்தேசத்திலும் இந்நான்கு வருணங்களு மியல்பாகவே யுள்ளனவும் இன்றியமையாதன வுமாகவே இருக்கின்றன. ஹூணதேசத்திலும், Europe, சமயப்பிரசாரகரே முற்படியிலுள்ளவர்கள் அரசரே அடுத்தபடியிலுள்ளவர்கள காருகரே நான்காம்படியிலுள்ளவர்கள். வர்மன் என்பது க்ஷத்திரியருக்குச் சாதிப்பெயர் |
க்ஷத்திரோபேக்ஷன் | அக்குரூரன் தம்பி |
க்ஷபணன் | பௌத்தமுனிவன். ஜைன வமுனிவன், ஆருகதன் |
க்ஷமை | தக்ஷப்பிரசாபதி புத்திரி. புலகன் பாரி. துர்க்கை. பூமிதேவி |
க்ஷரத்திரவிருத்தன் | புரூரவன் இரண்டாம் புத்திரன். நகுஷன் தம்பி |
க்ஷீதீரம் | ஸ்ரீசைலம். கிருஷ்ணாநதி உற்ப்பத்தி ஸ்தானத்துக்குச் சமீபத்திலுள்ளது இதனைச் சூழ்ந்தவனம் மகாரண்ணியம் |
க்ஷூபன் | முதற்கனிந்திரன் மகன் |
க்ஷேத்திரபாலன் | வைரவக் கடவுள். சிவன் |
க்ஷேமகன் | அபிமன்னியன் வமிசத்தரசர்களுட் கடையரசன். இவனோடு பரதவமிச மொழிந்தது |
க்ஷேமதன்னுவா | புண்டரீகன் மகன் |
க்ஷேமன் | சுநீதன் மகன். சுகேதன் தந்தை |
க்ஷேமாவி | சிருஞ்சயன் மகன் |
க்ஷேமியன் | உக்கிராயுதன் மகன் |