அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
கௌசலை, கௌசல்லியை

தசரதன் பாரி. ராமன் தாய். யயாதிபுத்திர னாகிய பூரு பாரி. வசுதேவன் பாரியாகிய பத்திரை

கௌசாம்பி

குசாம்பன் நிருமித்த நகரம்

கௌசிகதேவி

கௌரிசும் பநிசும்பரைக் கொல்லுமாறு கொண்ட வடிவம். இத்தே விசண்டமுண்டரைக் கொன்று சாமுண்டியெனப் பெயர்புனைந்தாள்

கௌசிகன்

தர்மவியாதனாலே தர்ம விசேஷங்களைத் தெரிந்துகொண்ட ஒரு பிராமணன். பிரதிஷ்டானபுரத்திலிருந்த ஒரு விப்பிரன். இவன் குஷ்டரோகத்தால் தேகமெங்கும் சீநீர் பெருகப்பெற்றவனாயிருந்தும் அவன் பாரி அருவருப்பற்றவளாய் அவனைப் பரிபாலித்துவந்தாள். ஒருநாள் அக்குஷ்டரோகி ஒரு வேசியைக்கண்டு மோகித்து அவளைச் சேரவிரும்பித் தனது அவிப்பிராயத்தைத் தனது பாரிக்குச் சொல்ல, அவள் அதற்கு வேண்டிய திரவியங்களை எடுத்துக்கொண்டு அவனையுங் கட்டி முதிகின்மேற் சுமந்து கொண்டு அவ்விரவிலே தானே அவ்வேசிவீடு தேடிச்சென்றாள். செல்லும் போது கோடிய அந்தகாரமூடிற்று. அதனையும் பொருட்படுத்தாது செல்லும் போது வழியருகேயிருந்து தவஞ்செய்து கொண்டிருந்த மாண்டவ்விய இருஷி தலையிலே குஷ்டரோகிகால்தட்டியது. அதனால் மாண்டவ்வியர் சினந்து தமது தலையிலே காலாலே தாக்கியவன் விடியற்காலத்திலே இறக்கக்கடவனென்று சபித்தார். அது கேட்ட கௌசிகன் பாரி நடுக்கமுற்று எனது பதிவிரதமுண்மையானால் பொழுது விடியாதெழிகவென்று பிரதி சாபமிட்டுப் போயினாள். அதனால் பொழுது விடியாதாயிற்று. இது கண்ட தேவர்கள் விஷ்ணுவை வினவ, விஷ்ணு அவர்களை அத்திரி பத்தினியாகிய அநசூயையிடத்தேவ, அவர்கள் பத்தினையைச் சாப விமோசனஞ் செய்கவென்றாள். அவள் என் நாயகன் இறந்திடுவானேயென்ன, அநசூயை அஞ்சாதே கௌசிகன் எவ்வன புருஷனாவானென்ன, அவள் விமோசனஞ் செய்ய பொழுதும் விடிந்தது. கௌசிகனுமிறந்து எவ்வன புருஷனாயெழுந்தான். ஒரு முனி. இவர் தமது தேகத்தை ஓரிடத்தில் வைத்துவிட்டு மற்றொரு தேகத்திற் புகுந்து சஞ்சரிப்பாராயினார். விட்ட தேகம் ஜீரணமாகி அஸ்தி மாத்திரங்கிடந்தபோது அம்மார்க்கமாக ஆகாயத்திலே சென்ற கந்தருவன் அதற்கு நேரே வந்த போது கீழே விழுந்தான். அது கண்டபால கல்லியமுனி அவனை நோக்கி, நீ இவ்வ ஸ்தியைக் கொண்டுபோய்ச் சரசுவதி நதியிலிட்டு ஆடிப்போவையேல் அந்தரஞ் செல்லாமென்ன, அவ்வாறு அவனுஞ்செய்து அந்தரஞ் சென்றான். வற்சபாலகன் என்னும் வற்சவந்தன். வளர்த்த புத்திரன். வசுதேவன் மகன். விசுவாமித்திரன். அதி ரகசியதத்துவங்களை யெல்லாம் ஆராய்ந்த பேரறிவுடையோன் என்பது பதப்பொருள். ஜராசந்தன் தோழனாகிய அம்சன்

கௌசிகம்

உபபுராணங்களுள் ஒன்று

கௌசிகி

ஒரு நதி. காதி புத்திரி. இருசிகன் பாரி. ஜமதக்கினி தாய். விசுவாமித்திரன் கோதரி. சத்தியவதியெனவும் படுவாள்

கௌடபாதாசாரியர்

ஸ்ரீசுகர்சீஷர். யதி கோவிந்தபகவற்பாதருக்குக் குரு. இவர் உத்தரகீதைக்குப் பாஷியஞ்செய்தவர்

கௌடபுரி

லக்ஷூமணபதி. வங்கதேசத்து முக்கியபட்டணம். ஜன்னுமகா விருஷியடைய ஆச்சிரமமிருந்தவிடம். இங்குள்ள பிராமணர் கௌடரெனப்படுவர்

கௌடம்

வங்கதேசம். இது பஞ்ச கௌடத்தொன்று

கௌடர்

கௌடபுரிப் பிராமணர். இவர்கள் கல்வி கேள்விகளாலும், ஒழுங்கத்தாலுஞ் சிறந்தவர்கள். மிக்க நாகரிகம் வாய்ந்தவர்கள்

கௌடில்யன்

சாணக்கியன்

கௌதமகோ, கௌதமன்பசு

கௌதம இருஷி. ராஜ மகேந்திரத்துக்குச் சமீபத்திற் கோதாவிரிதீரத்துக்குச் தெற்கேயுள்ள கோவூரிலிருந்து தவஞ் செய்யும் போது பன்னீராட்டைப் பஞ்சம்வந்தடுக்க அதற்கஞ்சி அநேக இருஷிகள் கௌதமரைய டைந்தார்கள். அது கண்ட கௌதமர் ஒரு பிடி நெல்லையெடுத்துத் தமதருகிலிலுள்ள மணல்மேட்டில் விதைத்து விட்டு அநுஷ்டானஞ்செய்தார். அநுட்டானஞ்செய்து எழுந்தபோது நெல்லெல்லாம் முளைத்து வளர்ந்து கதிரீன்று விளைந்திருப்பதைக் கண்டு அவற்றையெல்லாம் அறுத்தடிசிலாக்கி உண்ணுமாறு இருஷிளை ஏவினார். அவ்வாறே தினந்தோறுஞ் செய்துவர பன்னீராண்டு கழிந்து நாடு மலிந்தது. மலிதலும் இருஷிகளைநோக்கி இனிதும் வாசஸ்தானம் போமின் என, அவர்கள் கௌதமரைநோக்கி நீர் எம்மோடு வருதல் வேண்டுமென்று பிரார்த்திக்க, அவர் மறுத்தார். அதனால் இருஷிகள் பொறாமையுற்று ஒரு மாயப்பசுவையுண்டாக்கி அவர் விதைக்கும் பயிரை மேய்ந்தழிக்குமாறு செய்தனர். அது கண்ட கௌதமர் தருப்பைப் புல்லால் அப்பசுவையோச்ச, பசு வீழ்ந்திறந்தது. இருஷிகள் கௌதமரை நோக்கிக் கோஹத்தி செய்தீர். அதற்காகச் சாந்திராயன விரதமநுட்டிக் கடவீரென்று சபித்துப்போயினார். நன்றி மறந்து இருஷிகள் செய்த செய்கையை உலகத்தார் உபமானமாகப் பேசும்போது இது கௌதமன் பசு நியாயமென்று வழங்குவர்

கௌதமன்

பாரத்துவாஜமுனி. கோதமர். சதாநந்தன். கிருபன். கிருபன்பட்டன். புத்தன். கணாதன். கோதமர் எனப்படும் கௌதமர் மனைவி. அகலியை. அகலியையை வஞ்சித்துக்கூடிய இந்திரனை ஆயிரங்கண்ணாகச் சபித்தவர் இக்கௌதமரே. இவன் சதாநந்தன். இவர் இராமன் காலத்தில் விளங்கினவர். பதிற்றுப்பத்துள் மூன்றாம்பத்துப் பாடிய புலவர். தருமபுத்திரன் இவராற்பாடப்பட்டோன், புறநானூறு

கௌதமாச்சிரமம்

இது விசாலபுரதத்திலிருந்து மிதிலாபுரத்துக்குப் போகிற மார்க்கத்திலுள்ளது. ஜயந்தபுரம் இதற்குச் சமீபத்திலுள்ளது

கௌதமி

கோதாவிரி

கௌரமுகன்

சமீகன் மகன்

கௌரி

பொன்மயமான திருமேனியோடு கூடிய பார்வதிதேவியார் கௌரி எனப்படுவர். ஒரு காலத்தில் இத்திருமேனியோடு ஒரு வைஷ்ணவன் வீட்டிலே திருவவதாரஞ்செய்து எட்டாண்டு நிரம்பியிருந்த கௌரியைச் சிவன் தமக்கு சக்தி யாக்கிக்கொண்டனர். வருணன் பாரி

கௌரிகங்கை

கைலாச பர்வதத்திலுள்ள ஒரு நதி

கௌரிகாந்த சார்வபௌம பட்டாசாரியர்

ஆனந்தலகரிக்கு வியாக்கியானஞ் செய்த முப்பதின்மருளொருவர். இவர் பிற்காலத்தவர்

கௌளர்

கௌடர். சக்தியை வாமதந்திரப்படி பூசித்து வழிபடுஞ் சமயத்தோர்

கௌஸ்துபம்

அமிர்தமதனகாலத்திலே திருப்பாற்கடலிலே வெழுந்த திவ்விய வஸ்துகளுளொன்றாகிய வோராற்புதமணி. அதனை விஷ்ணு தமக்கு ஆபரணமாகக் கொண்டருளினார்