அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
கைகசி

சுமாலி மகள். விச்சிரவசுவின் இரண்டாம்பாரி. இவள் ராவணன் கும்பகர்ணன் சூர்ப்பநகை என்னும் மூவரையும் பெற்றவள்

கைகேயி

கேகயதேச ராஜபுத்திரி. தசரதன் மூன்றாம் பாரி. பரதன் தாய். தசரதன் ராமருக்குப்பட்டாபிஷேகத்துக்கு முகூர்த்தம் வைத்து அதற்கு வேண்டுவன வெல்லாம் செய்து எத்தனப்பட்டிருக்கும் போது, மந்தரையென்னுங் கொடிய கிழப்பாங்கியினது ஏவலால் இக்கைகேகி தனக்குத் தசரதன் முன்னோரு நாளீந்த வரங்களிரண்டையும் தருமாறு அவனைக் கேட்க, அவன் இவளுடைய துரோக சிந்தையையெண்ணாது தந்தேன். என்ன, இவள் தன்மகன் பரதன் பட்டம் பெறவும் ராமர் பதினான்கு வருஷம் காடுகொள்ளவும் அருளுவென்றாள். கொடுத்ததை மறுத்தல் அரசர்க்கியல் பன்றாதலின் அவன் மறுக்க வியலாதுடன்பட்டு மனக்கவற்சி காரணமாகச் சிலநாளில் உயிர்விட்டான்

கைடவன்

கற்பாந்தத்தில் விஷ்ணுயோகநித்திரையிலிருந்த போது விஷ்ணுவின து இரு செவித்துவாரங்களினின்றும் மதுவென்றும் கைடவன் என்றும் ஈரசுரர் பிறந்தார்கள். அவர்களுக்குப் அப்போதுண்டாயிருந்த மகாப்பிரளயம் முழந்தாள்வரைச் சலமாயிருந்ததென்றால் அவர்கள் உயரஞ் சொல்ல வேண்டியதன்று. இச்சமயம் பிரமாவும் விஷ்ணு நாபிக்கடலத்திற் பிறந்தார். அவரைக் கண்டு அவ்வசுரர் கொல்லவெழுந்தார்கள். விஷ்ணு அவர்களைச் சமாதானஞ்செய்து உங்களுக்கு வேண்டிய வரங்களைக் கேளுகளென்ன, உன்னிடத்தில்யாம் பெறக்கிடக்கும் வரம் யாதுமில்லை. உனக்கு வேண்டியதைக் கேள் யாம் தருவோம் என்றவசுரரைப்பார்த்து என் கையால் நீங்கள் மடியும் வரந்தரல் வேண்டுமென்று கூறி இருவரையுங் கொள்கிறார். அது காரணமாக விஷ்ணுவுக்குக் கைடபாரி மதுவைரி என்னும் பெயர்கள் பலித்தன

கைலாசபர்வதம்

இமயத்தின் பின்பாகத்துள்ள வெள்ளிமயமானமலை. இது சிவன் விரும்பியுறையும் ஸ்தலம். கைலாசப திநாமம் சிவனுக்கு இது பற்றி வந்தது. நவரத்தினங்களாற் புனையப்பட்ட நானாவித சிகரங்களையுடைய இம்மலை நடுவேயுள்ள செம்பொற்கோயிலிலே இருஷி கனங்களுந் தேவகணங்களும் சூழ்ந்து துதிக்கச் சிவன் வீற்றிருப்பார்