அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
கேகடன்

சங்கடன் புத்திரன்

கேகயன்

சிபிச்சக்கரவர்த்தி புத்திரர் நால்வருளொருவன். பரதக் தாயாகிய கைகேகி தந்தை

கேகயம்

கேகயதேசம். சிபி புத்திரனாகிய கேகயனது தேசதமாதலின் கேகய மெனப்பட்டது. இது விபாசநதிக்கு வாயுதிக்கிலுள்ளது. கிரிவிரசம் இதன் ராசதானி

கேசரி

ஒரு வாநரன். பிரபாசதீரத்திலே இருக்ஷூகளுக்குத் துன்பஞ் செய்துவந்த யானையைக்கொன்றவன். இவன்பாரி அஞ்சனை. மகன் அநுமந்தன்

கேசவன்

விஷ்ணு

கேசி

ஒரு தானவன். இவன் தேவசேனையைப் பிடித்துச் சென்றபோது தேவேந்திரனால் ஜயிக்கப்பட்டவன். அயரூபதரனாய்ச் சென்று கிருஷ்ணனை யெதிர்த்துயுத்தஞ் செய்தபோது மாண்ட அரசன். வசுதேவனுக்குப் பத்திரையிடத்துப் பிறந்த மகன்

கேசித்துவஜன்

நிமி வமிசத்தனாகிய ஒரரசன்

கேசினி

தமயந்தி பாங்கி

கேதனன்

அபிரவதண்டி யென்னும் பட்டம்பெற்ற ஆந்தரகவி

கேதாரம்

இமாலய பர்வதத்திலுள்ள சிவக்ஷேத்திரம்

கேதாரேசுவரர்

திருக்கேதாரத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்

கேதாரேசுவரவிரதம்

இஃது ஐப்பசிமாதத்துக் கிருஷ்ணபக்ஷத்துச் சதுர்த்தசியில் சுமங்கலிகளால் அநுஷ்டிக்கத்தக்க விரதம்

கேது

விப்பிரசித்திக்குச் சிங்கிகையிடத்துப் பிறந்த புத்திரன். இவன் அக்கினிக்கு விகேசியிடத்துப் பிறந்தவன் எனறுஞ் சொல்லப்படுவன், இராகு காண்க

கேதுமதி

ஒரு கந்தருவஸ்திரி. சுமாலி யென்னுமிராக்ஷசன் மனைவி

கேதுமந்தன்

லோகபாலகர் நால்வருள் ஒருவன். கலிங்கதேசத்தரசன். சுருதாயு மகன். தந்வந்திரி மகன். கேதுரதன் தந்தை

கேதுமாலம்

நவவருஷத்தொன்று

கேதுரதன்

கேதுமந்தன் மகன். பகீரதன் தந்தை

கேரளன்

துஷ்யந்தன் தம்பியாகிய திஷ்யந்தன் பௌத்திரன். ஆசிரிதன் மகன்

கேரளம்

கேரளனது தேசம். இது தக்ஷீண மலையாளம்