அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
காக்கைபாடினியார் நச்சென்னையார்

நாடுகோட்பாடு சேரலாதனைப்பாடி ஒன்பது காப்பென்னும் நூறாயிரங் காணமும் பரிசாகப்பெற்ற புலவர்

காசன்

இவன் சுகோத்திரன் மகன்

காசி

இந்நகர் கங்காதீரத்திலுள்ள திவ்வியஸ்தலம். இது சப்தபுரிகளுளொன்று. சமஸ்கிருத சங்ககமிருந்தவிடமுமிவே. பண்டுதொட்டுள்ள வைதிகராஜாதானி இதுவே. இந்நகரத்தையெடுத்துக் கூறதா புராணேதிகாசங்களில்லை. வாரணாசியெனவும் படும்

காசிபன்

கசியபன் காண்க

காசியன்

சேனசித்துமகன். ஆயு பௌத்திரனாகிய சுகோத்திரன் மகன்

காசியபன்

பாம்பு மந்திரம் வல்ல ஒரு பிராமணன். இவன் பரீக்ஷீத்து மகாராஜன் விஷத்தினாலிறப்பானென்பதுணர்ந்து அவனிடஞ் சென்றபோது வழியிலே தக்ஷசன் கண்டு வேண்டியதிரவியங்களைக் கொடுத்து அங்குச் செல்லாமல் தடுத்தான்

காசியாரண்ணியேசுவரர்

திருஇரும்பூளையிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்

காசிராசா

அம்பிகை, அம்பாலிகை என்போர் தந்தை

காஞ்சனன்

புரூரவன் புத்திரனாகிய அமவசுவினது பௌத்திரன். உதயகுமாரனை வாளாற் கொன்றவன்

காஞ்சனமாலை

மலையத்துவச பாண்டி யன் மனைவி

காஞ்சி, காஞ்சீபுரம்

தொண்டைமண்டலத்தின் கண்ணுள்ள ஒரு திவ்விய ஸ்தலம். இது சோழருக்கு ராசதானியாகவுமிருந்தது. இங்கே கோயில் கொண்டருளியிருக்கும் சிவபெருமான் ஏகாமிரேசுரரென்றும் அம்மையார் காமாக்ஷீயென்றும் பெயர் பெறுவர். விஷ்ணு ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சுவாமி பெயர் வரதராஜர். காஞ்சிபுரம் காஞ்சி எனவும்படும். திருக் குறளுக்குச் சிறந்தவுரை செய்த பரிமேலழகருக்கும். கந்தபுராணம் தமிழிலே பாடியருளிய கச்சியப்பருக்கும் இதுவேஜன்மஸ் தானம். சங்கராசாரியர், ராமாநுஜாசாரியர் முதலியபாஷியகாரரும் வித்தியாவாதங்கள் புரிந்ததுமிவ்விடமே

காண்டவம்

இந்திரனது வனம் அருச்சுனனால் தீயூட்டப்பட்டது

காண்டிக்கியன்

நிமி வமிசோற்பவனாகிய தருமத்துவஜன். ஜனக மகாராஜன் பௌத்திரன். மிதத்துவசன் புத்திரன். இவன் தன் சிறிய தந்தையாகிய கிருத்து வாசனது புத்திரனாகிய கேசித்துவசனேடு முரணிக் காடுசென்றவன்

காண்டீபம்

அருச்சுனனுக்கு அக்கினி தேவன் காண்டவதகனத்துக்குப் போகும் போது கொடுத்த வில்

காதம்பரி

காதம்பரியைக் கதநாயகனாக வைத்து பாணகவி செய்த சமஸ்கிருத நாடகம்

காதி

குசாம்பன் மகன். விஸ்வாமித்திரன் தந்தை

காத்தஈசுவரர்

திரு ஆமாத்தூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்

காத்தியயாயனி

பார்வதி

காத்தியாயனன்

பாணினி வியாகரணத்துக்கு வார்த்திகஞ் செய்தவரருசி. யாஞ்ஞவற்கிய முனிவர்

காந்தாரன்

யயாதி மகன். துருகியனுடைய பௌத்திர பௌத்திரன். இவனே காந்தாரதேசஸ்தாபகன். அந்தக் குலத்தவர்கள் குதிரையேற்றத்தில் மகாசதுரர்

காந்தாரம்

காந்தாரனது தேசம். இஃது ஆரியவர்த்தத்துக்கு மேற்றிசையில் சிந்து தீரத்திலுள்ளது

காந்தாரி

திருதராஷ்டிரன் பாரி. காந்தார தேசத்தரசனாகிய சபலன் மகள். மகாபதி விரதை. நாயகன் அந்தகனாக இருந்தமையால் தானம் கண்ணைக்கட்டிக் கொண்டு சஞ்சரித்தவள். இவள் புத்திரருள் மூத்தவனாகிய துரியோதனன் யுத்தத்துக் குபோகும்போது தனக்குச் சயமுண்டாகுமாறு வரந்தருகவென்று தாயைவேண்ட அவள் யதோதர்மஸ்ததோஜிய என்று சொன்னவள். தருமம் எப்படியோ அப்படி சயம்

காந்தினி

அக்குரூரன் தாய். சுவபற்கன் மனைவி

காந்திமதியம்மை

திருமூக்கிச்சரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். திருநெல்வேலியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர்

கானக்காளை

திருக்காப்பேரூரிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்

கானப்பேரெயில்

வேங்கை மார்பனுக் குரியதாகவிருந்த ஒரு பேரரண். இவ்வரண் கடைச்சங்கத்து கடையரசனாகிய உக்கிரப்பெருவழுதியாற் போரிற்கைக் கொள்ளப் பட்டது

கானார்குழலம்மை

திருகானாட்டு முள்ளூரிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்

காபாலிகம்

அதிமார்க்க மூன்றனுளொன்று. மூன்றாவன, பாசுபதம், மகாவிரதம், காபாலிகம் எனபன. காபாலிகம் காபாலத்திற் பிக்ஷையேற் றுண்ணலைக் கைக்கொண்டொழுகுந் துறவினை வற்ப்புறுத்தும். இம்மதத்திற்குக் கடவுள் காலவுருத்திரர். இம்மதம் நெடுங்காலத்திற்கு முன்னர் அருகிவிட்டது

காபிலம்

கபிலமதம். அது கபிலரால் செய்யப்பட்ட காபிலசூத்திரத்தை ஆதாரமாகவுடையது

காப்பியக்குடி

சோழநாட்டிலே சீர்காழிக்கு வடபாலிலேயுள்ள ஒரூர். இங்கேயே தேவந்தியின் கணவனாகிய சாத்தன் வளர்ந்தது

காமதேனு

சுரபி. அது பாற்கடலில் பிறந்தது. இச்சித்தவெல்லாங் கொடுக்குந் தெய்வப்பசு

காமந்தகம்

ராஜநீதியைக் குறித்துக் கூறும் ஒரு நூல்

காமன்

மன்மதன்

காமபாலன்

பலராமன்

காமாக்ஷீ

காஞ்சிபுரத்திலே கோயில் கொண்டிருக்குந் உமாதேவியார்

காமாக்ஷீயம்மை

திருவனேகதங்காவதத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்

காமிகம்

சிவகாமமிருபத்தெட்டனு ளொன்று. இதிலே சிவதத்துவ ரூபங்களெல்லாம் விரிவாகக் கூறப்பட்டுள்ளன

காமியகம்

இது பாண்டவர்கள் ஆரணியவாசகாலத்து வசித்த ஒரு வனம் இது குருஜாங்காலத்தைச் சார்ந்துள்ளது

காம்பன்னதோளி

திருப்பந்தனநல்லூரிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர்

காம்பிலியன்

பர்மியாசுவன் மகன்

காம்பிலியம்

பாஞ்சால தேசத்தொரு பாகம். துருபதன் தேசம்

காம்போஜம்

பரத கண்டத்துத்துக்கு வாயு திக்கிலுள்ள ஒரு தேசம்

காயாரோகணேசவரர்

திருநாகைக்காரோணத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயார்

காய்சினவழுதி

இவனே உக்கிரபாண்டியனெனப்படுவன். தலைச்சங்கம் தாபித்துத் தமிழாராய்ந்த முதற்பாண்டியன் இவனே. இவனுக்கு இராஜதானி, தலைச்சங்கமிருந்து பின் கடல்கொண்ட தென்மதுரை குமரியாற்றினருகேயிருந்தது

காரி

இவர் ஒளவையார் காலத்திலே மலைநாட்டிலே பழையனூரிலேயிருந்த மகௌதாரியப்பிரபு. இவர் ஒளவைப்பாடல் கொண்டு அதற்குப் பரிசாகச் சிறந்ததொரு கழைக்கோடு கொடுத்தவர். இவர் ஒரு குறுநில மன்னர். ராஜதானி கோவலூரென்றும் பழையனூரென்றுஞ் சொல்லப்படும். இவர் கடைச்சங்கப் புலவருளொருவராகிய கபிலராலே புகழ்ந்துபாடப்பட்டவர். தமமோடொத்த கொடைவள்ளலாகிய ஓரியைப்போரில்வென்று அவன் நாட்டைச் சோழனுக்குக் கட்டிக்கொடுத்தவர். தாமும் துடிமன்னராதல் வேண்டுமெனச் செருக்குற்று முடிதரித்துத் திருமுடிக்காரியென்னும் பட்டங்கொண்டவர். அது கண்டு சோழன் இவரைப் போரில்வென்று விண்புகுவித் தான். இவர் மலையமான் என்னும் பெயரும்பெறுவர்

காரிகிழார்

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய புலவர். இவர் புறநானூறு பாடிய புலவருள்ளுமொருவர்

காரிநாயனார்

திருக்கடவூரிலே தமிழ் மொழியிலே மிக வல்லவராய் விளங்கித் தம்பெயரினாலே தமிழ்க்கோவையொன்று, சொல்விளங்கிப் பொருள் மறைந்து கிடக்கும்படி பாடித் தமிழ்நாட்டு மூவேந்தரிடஞ் சென்று, பொருளெடுத்து பிரசங்கித்து அவர்கள் கொடுத்த பெருந்திரவியங்களைக்கொண்டு திருப்பணிகள் பல செய்து உடம்போடு கைலாசஞ் சென்ற பக்தர்

காரியாறு

நெடுங்கிள்ளியென்னும் சோழன் போரில் மடிந்த இடம்

காருடம்

கருடோற்பவம் முதலிய விஷயங்களைக் கூறும் புராணம். 19000 கிரகந்தமுடையது

காருண்ணியபாண்டியன்

கற்பூரபாண்டியனுக்குப்பின் முடிதரித்தவன். இவனுக்கும் கூன்பாண்டியனுக்குமிடையில் இருவர் அரசுபுரிந்தனர்

காரைக்காலம்மையார் புனிதவதியார்

காரைக்காலிலே தனத்தனென்னும் வைசியனுக்குப் புனிதவதியாரென்னும் பெயருடைய புத்திரியாராகப் பிறந்து இல்லறம் புகுந்தபோது, ஒருவன் அவர் நாயகனிடங் கொடுக்கவென்று கொடத்த மாங்கனிகளிரண்டில் ஒன்றை ஒரு சிவனடியார்க்குக் கொடுத்துவிட்டு, ஒன்றைத் தமது நாயகனுக்குக் கொடுக்க, அவன் அதை வாங்கியுண்டு மற்றதையுந் தருகவென்ன, உள்ளே சென்று சிவனை நினைந்து வேண்டியொரு மாங்கனியைப் பெற்றுப் போய்க் கொடுத்து நடந்ததையுஞ் சொல்ல, அஃதுண்மையாயின் இன்னுமொன்று பெற்றுத் தருவாயென்னப் பெற்றுக் கொடுத்த பெரும்பக்தியுடையவர். நாயகன் பரமத்தன். இவன் இரண்டாம் மனைவி வயிற்றிற் பிறந்த புத்திரியும் புனிதவதி யெனப்படுவள். இக்காரைக்காலம்மையாரே அற்புதத் திருவந்தாதியும் திருவிரட்டை மணிமாலையும் பாடி தலையால் நடந்து கைலாசஞ் சென்று அங்கே சிவபிரானால் அம்மையேயென்று அழைக்கப் பெற்றவர்

காரைத்திருநாதர்

திருநெறிக்காரைக் காட்டிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்

கார்க்கியன்

சினிமகன். பாஷ்கலன் சீஷன். இருக்குவேதத்தில் வல்லவன். இவன் வமிசத்தர் பிராமணர்

கார்க்கோடகன்

கத்துருவை புத்திரருளொருவன். வாசுகி தம்பி

கார்த்தவீரியார்ச்சுனன்

ஹைஹைய வமிசத்தரசனாகிய கிருதவீரியன் புத்திரனாதலின் கார்த்தவீரியயார்ச்சுனனெனப் பட்டான். இவன் பெயர் அர்ச்சுனன். பாண்டவஅர்ச்சுனனோடு மயங்காதுணருமாறு தந்தைபெயர் கூட்டிக்கார்த்த வீரியார்ச்சுனன் எனப்பட்டான். இவன் பதினாயிரம்யாகங் கள் செய்து இமயமலைநாட்டைச் செவ்வே ஆண்டவன்

கார்த்திகேயன்

குமாரசுவாமி. கிருத்திகை காண்க

கார்த்திகை

வார்த்திகனென்னும் அந்தணன் மனைவி. தக்ஷீணாமூர்த்தியென்பவனது தாய். ஒரு நக்ஷத்திரம்

காலகண்டன்

சிவன்

காலகர்முகன்

சுமாலி மகன்

காலகவுட்சேயன்

க்ஷேமதரிசியென்னும் கோசலதேச ராஜாவுடையமந்திரி. இவன் ராஜகருமத்தை நன்குணர்ந்தவனென்பது பிரசித்து

காலகூடம்

பாரதயுத்தத்தில் சேனைகள் தங்கியவிடம். விஷம்

காலகேயர்கள்

கசியப்பபிரஜாபதிக்குக் காலையிடதிலுற்ப்பத்தியானவர்கள். இவர்கள் மிகக்கொடிய பாதகர்கள். இவர்களால் மிகவருந்திய தேவர்கள் அகஸ்தியர்க்குத் தங்குறையைக்கூற, அவர், இவர்களுக்குறைவிடாமாயிருந்த சமுத்திர நீரையெல்லாம் ஆசமனஞ் செய்து வற்றுவித்தனர். அது காரணமாக நிலைதளர்ந் து வலியிழந்தார்கள். இவர்களுடைய சந்ததி அர்ச்சுனனால் நிர்மூலமாக்கப்பட்டது

காலகௌசிகன்

காசியிருந்த ஒரு பிராமணன். அரிச்சந்திரனுடைய மனைவியை விலைக்குக் கொள்ளும்பொருட்டுக் கலிபகவான் விசுவாதித்திரருடைய ஏவலலால் இப்பிராமணனாகக் காசியிலே பிறந் திருந்தாரென்பது புராணசம்மதம்

காலசவி

விரோசனன் மகன். பலிக்குச் சகோதரன். இவன் துவாபரந்தத்தில் தானவர்கள் சகாயார்த்தம் விஷகபித்த ரூபமாக ரேபல்லையில் உற்பத்தியாய் அந்தக்கிராமத்திற் கோபாலர்களுக்கு குரோதத்தை யுண்டாக்குகிறபோது அச்செய்தியைச் சங்ககர்ணனென்கிற பூதம் ஒரு பிராமணனிடத்திலே ஆவேசித்து ஸ்ரீ கிருஷ்ணபலராமர்களுக்கு அறிவித்தது. அப்பொழுது அவர்கள் அந்தக் கபித்தவிருக்ஷத்தை நிர்மூலஞ்செய்து கோபாலர்களுக்கும் பசுக்களுக்கும் சுகத்தையுண்டாக்கினார்கள். கபித்தம் ~ விளாமரம்

காலநாபன்

இரணியாக்ஷன் மகனாகிய தாரகன்

காலநேமி

தாரக யுத்தத்தில் விஷ்ணுவினால் கொல்லப்பட்ட ஒரு தானவன். ராவணன் மாதுலன்

காலயவன்

இவன் நாரதன் உபதேசத்தால் மதுராபுரியைப் படைகொண்டு வளைந்தபோது, அதனை முன்னரே உணர்ந்த கிருஷ்ணன் சமுத்திரமத்தியிலே ஒரு பட்டணத்தை விசுவகர்மாவினாலே யுண்டாக்கி, அங்கேதமது ஜனங்களையெல்லாம் போக்கி விட்டுத் தாமமாத்திரம் நிராயு தராக இவன் முன்னே வெளிப்பட்டு நடந்தார். அதுகண்ட காலயவன் அவரைத் தொடர, அவர் முசுகுந்தன் நித்திரை செய்த மலைக்குகையினுள்ளே சென்றார். அவனும் அங்கே நுழைந்து கிருஷ்ணனென்று நினைத்து முசுகுந்தனையுதைத் தான். முசுகுந்தன் பெற்றிருந்த வரப்பிரசாத மகத்துவத்தால் விழித்துப்பார்க்க காலயவன் பஸ்மமானான், சாளுவன் கார்க்கி யனைப் பார்த்து நபுஞ்சகாவென்று விளித்தபோது யாதவர்கள் சிரித்தார்கள். அது காரணமாகக் கார்க்கியன் லோகபஸ்மம் புசித்துப் பன்னீராண்டு கொடுந்தவமிருந்து காலயவனைப் பெற்றான். காலயவன் காலயவனனெனவும்படுவன்

காலவைரவன், காலபைரவன்

காசியிலுள்ள பைரவமூர்த்தி. யமன் இவ்வைர வருக்கஞ்சிக் காசியிலுள்ளாரை வருத்தாது கொண்டேகுவனென்பது ஜதிகம்

காலா, காலை

வைசுவநாரன் என்கிற தானவனுடைய மகள். கசியப்பனுடைய பாரி. இவளுடைய மக்கள் காலகேயர்கள்

காலாநலன்

அனு பௌத்திரன். சபாநலன் புத்திரன்

காலேசுவரர்

திருவனேகதங்காவதத்திலே கோயில் கொண்டிருங்குஞ் சுவாமி பெயர்

காளஞ்சனம்

ஒரு தீர்த்தம்

காளத்தி, காளஹஸ்தி

திருக்காளத்தி

காளத்தியப்பன்

தொண்டை நாட்டிலே வல்லமென்னுமூரிலே விளங்கியவனாகி இப்பிரபு தன்மீது ஒரு பிரபந்தம் பாடிப் பாற்பசு கேட்ட ஒரு புலவனுக்கு ஒவ்வொருகவிக்கு மொவ்வொரு பசுவும் அப்பசுவுக்கு மேய்ப்பவனும் கறவையாளும் பால் காய்ச்சுபவனுமாக மூம்மூன்றாளும் உடன் கொடுத்துப் பொன்மாரியும் வழங்கியவன்

காளத்தீசுவரர்

திருக்காளத்தியிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமி பெயர்

காளமேககவி

ஸ்ரீரங்கத்திலே வைஷ்ணவப் பிராமணராக அவதரித்த இவர், சம்பு கேசுரத்திலே ஒரு தாசிவலையிலகப்பட்டு, அவள் பொருட்டாக அங்குசென்று கோயிலுனுட் பிரகாரத்திலே அவள் வரவை எதிர்நோக்கி இருக்கையில் நித்திரைவர அங்கேபடுத்து நித்திரைபோயினார். தாசி இவரைத் தேடிப்பார்த்துங் காணாமையால் தன்வீடு போய்ச்சேர்ந்தாள். அதன் பின்னர்க் கோயிலும் திருக்காப்பிடப்பட்டது. அப்பொழுது அந்தப்பிரகாரத்திலொ ருபக்கத்தில் சரஸ்வதியை நோக்கி ஓரந்தணன் தவங்கிடந்தான். சரஸ்வதி அதற்கிரங்கிப்பிரசன்னராகித் தமது தம்பலத்தை அந்தணன் வாயிலுமிழப்போக அவன் அதை அநுசிதமென்று வாங்காது மறுத்தான். அது கண்ட வைஷ்ணவர் கிடந்தவிடத்தையடைந்து அவரையொழுப்பித் தம்பலத்தை நாவினாற் கொடுக்க வைஷ்ணவர் தம்தாசியே தம்பலங் கொணர்ந்தாளென்றென்னி அதனை நாவினாலேற்றார். அவ்வளவில் சரஸ்வதி மறைந்து போக, வைஷ்ணவர் அதனை யேற்றமாத்திரத்தில் சகலகலைகளும்வல்ல பண்டிதராகிச் சூற்கொண்டகாளமேகம்போலத் தமிழ் கவிமாரி பொழியத்தொடங்கினார். அன்று முதல் அவருக்குக்காளமேகமென்னும் பெயருண்டாவதாயிற்று. இவர் திருமலைராயனென்னும் அரசன் சமஸ்தான வித்துவானாகிய அதிமதுரகவிராயனுக்குமாறாகி அவ்வரசன் சபையிலே இருந்த புலவர்களெல்லோரும் பிரமிக்கும்படியாக யமகண்ட விதானப்படி ஆசுகவிகள் பொழிந்தவர். இவர் காலம் சாலிவாகனவருஷம் ஆயிரத்திருநூறு

காளாமுகன்

சிவனைப் படிகமும் புத்திர தீபமணியும் தரித்தமூர்த்தியாகத் தியானிக்குஞ்சமயி. இவன் அகப்புறச் சமயிகளுளொருவன்

காளி

காலவுருத்திரருடைய சக்தி. அஃதாவது அழிவுக்குக் காரணமாகிய காலத்தை நடாத்தும் உருத்திரர் அவ்வழிவையாது சக்தியாற் செய்துமுடிப்பர். அச்சக்தியே காளியெனப்படும். உருத்திரபேதம் பலவாதல் போல அச்சத்திபேதமும் பலவாம். காலத்துவம் கருமையாற் குறிக்கொள்ளப்படுவது போலக் காளியும் கருநிறமுடையளாயினாள். காலத்திரர் சங்காரத் தொழிலைத் தமது சக்தியாகிய இக்காளியைக்கொண்டே நடாத்துவர். ஆக்கம் உயிர்களுக்கு எப்பொழுதும் இன்பம் தருவது. அழிவு எப்பொழுதும் பயங்கரம் பயப்பது. அது பற்றியே அவ்வழிவைப் புரிவதாகிய சக்தியும் பயங்கர ரூபமுடைதாக ரூபாகாரம் பண்ணப்பட்டது. காலபதமும் காளியும் கருமைபடபொருட் சொல்லடியாகப் பிறந்தனவேயாம். காளி கரிய மேனியும், சதுர்ப்புஜமும், கபால மாலையும் சிவந்த கண்ணும் நான்ற நாவுமுடைய தேவியாக வுபாசிக்கப்படவள். யுத்தவீரர் தமக்கு வெற்றியுண்டாம்படி காளியையுபாசித்துப் பூசிப்பர். கோபம் செந்நிறச் சம்மந்தமுடையது. அது பற்றி வாமார்க்கத்தினர் அதன் உண்மையுணராது இரத்தப் பலியிட்டுப் பூசிப்பர். இரத்தப்பிரியையென்பதற்கு சிவந்த நிறத்திற் பிரியமுடைளெனப் பொருள் கொள்ளாது உதிரப் பொருள் கொண்டேதே இத்தடுமாற்றத்துக்கு ஏதுவாம். செந்நிறமாகிய புஷ்பங்களே அப்பூசைக்கு போதியவாம். அவற்றை விடுத்து இரத்தப்பலியிடுதல் அத்துணைச் சிறந்ததன்று. அதற்கீடாக கோபம்முதலிய துர்க்குணங்களைப் பலியிடுதல் அத்தேவிக்கு உவந்ததாகம். சில புராணங்கள் காளிக்கு எண்கரங்கூறும். காளி சண்டமுண் டர்களாகிய அசுரரைக் கொன்று சாமுண்டியென்னும்பெயரும், தாரகனைக் கொன்று தாரகமர்த்தனியென்னும் பெயருங் கொண்டாள். வியாசகர் தாயாகிய சத்தியவதி

காளிதாசன்

இவன் விக்கிரமார்க்கன் வமிசத்தானாகிய போஜராஜன் சமஸ்தானத்துச் சமஸ்கிருத வித்துவான்கள் ஒன்பதின்மருள் சிரேஷ்டன். சமஸ்கிருதத்திலேயுள்ள ஸ்ரீங்காரரச சுலோகங்களுள் இவன் செய்த சுலோகங்கள் அதிமாதுரியமானவை. இவன் சரஸ்வதியினது அமிசாவதாரம். இவன் செய்த நூல்களும் தனிச்சுலோகங்களும் எண்ணில. ரகுவம்சம் குமாரசம்பவ முதலிய காவியங்கள் இவன் செய்தவை. காளி உபாசகனாதலின் காளிதாசனெப்பட்டான். ஜாதியில் அந்தணன். இவன் வரலாறு விரிப்பிற் பெருகும். இவன் தண்டி மகாகவியேடு இகலிச் சரசுவதியைப் பிரார்த்தித்து தம்முள் மிக்கார் யாரென்ன, தண்டி மகாகவிதான், நீயோ வென்றால் நானே நீ என்று சரஸ்வதியா ற் புகழப்பட்டவன். புலகேசியினது கல்வெட்டிலே கூறப்படலால் அவன்காலம் இற்றைக்க ஆயிரத்துநானூறு வருஷங்களுக்கு முன்னுள்ளதாக நிச்சயிக்கப்படும்

காளிந்தி

யமுனாநதி. களிந்தபர்வ தத்தினின்றிழியுநதி. சுமதி பாரி. கிருஷ்ணன் அஷ்டபாரிகளிளொருத்தி. சூரியன் மகள்

காளிம்பன்

திருவேங்கடப்பதியிலிருந்து தமிழ்நாவலர்களுக்குப் பெருநிதி வழங்கிய ஒருபிரபு

காளியன்

யமுனையிலிருந்து கொடிய விஷநாகம் அது கிருஷ்ணனாற் கொல்லப்பட்டது

காளேஸ்வரம்

பயோஷணி கோதாவரி நதிகள் சங்கமிக்மிடத்துள்ள திவ்விய க்ஷேத்திரம்

காவியன்

கவிபுத்திரனாகிய சுக்கிரன்

காவிரி

இஃது அகஸ்தியரால் சையகிரியினின்று முற்ப்பத்திபண்ணப்பட்ட புண்ணியநதி. தக்ஷீணத்திலுள்ளது. இந்நதிநீர் மிக்க சுவையுடையது. இதுபோலப் பயன் படுநதி உலகத்திலே மற்றில்லையெனினும் இழுக்காகாது. இந்நதியே சோழநாட்டைப் புனனாடாக்கியது. இந்நதியினிரு கரையிலும் சமீபத்திலும் சற்றே தூரத்திலுமாக அநேக சிவாலயங்களும் விஷ்ணு வாலயங்களுமுள

காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக் கண்ணனார்

இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். பெருந்திருமாவளவன். வெள்ளியம் பலத்துத்துஞ்சிய பெருவழுதி, பிட்டங்கொற்றன் முதலியோர் இவராற் பாடப்பட்டோர். இவர் சாதியில் வணிகர். முதற்கூறிய இருவர் பாண்டியரையும் ஒருங்கேகண்ட பொழுது, இவர், இன்னுங்கேண்மினும் மிசை வாழியவே யொரு வீரொருவீர்கள் காற்றுத்திரிருவீரு முடனிலை திரியீராயி னிமிழ்திரைப் பௌவ மூடுத்தலிப்பயங் கொழுமாநிலம். கையகப்படுவது பொய்யாகாதே அதனால், நல்லபோலவுந் தொல்லோர்சென்று நெறியபொலவும் காதனெஞ்சினும் மிடைபுற்கலமரு மேதின்மாக்கள் பொதுமொழிகொள்ளா தின் றேபோல்கநும்புணர்ச்சி என இவரையு மொற்றுமையுடையராக வொழுகும்படி அவர்க்கு ஒற்றுமைப்பயனெடுத்துக் கூறி வாழ்த்தினவர்

காவிரிப்பூம்பட்டினம்

சோழமண்டலத்திலே கீழ்க்கடற்கரையிலே காவிரிநதி சங்கமிக்குந்துறையருகிலேயிருந்த சோழ ராஜதானி. இந்நகரம் புகாரெனவும்படும். தமிழ் நூல்களிலே பெரிதும் பாரட்டப்படும் பழைமையுடைய நகரங்களுள் இதுவுமென்று. இதன் துறை பொன்னித்துறையெனப்படும். இத்துறையிலே சீன முதலிய அந்நிய தேசங்களிலிருந்தும், வங்கம் குடகம் கொல்லம் தென்மதுரை ஈழம் முதலிய அயல்நாடுகளிலிருந்தும் வந்து கொள்ளலும், விற்றலும் செய்கிற மரக்கலங்கள் மலிந்து பொலிந்து விளங்கும். தென்னாட்டிலே இது போல வளஞ்சிறந்தும், சித்திராலங்காரம் பொருந்திய மாடகூட கோபுரங்களையுடையதும், நாகரிகம் வாய்ந்த நன்மக்களைத் தன்னகத்தேயுடையதும், சித்திரப்பொறிகளையுடைய மதில்சூழ்ந்ததும், பல்வகை நீர்ப்பூக்களும் நீர்ப்பக்ஷீகணங்களும் நிறைந்து விளங்கும் அகழியினையுடையதுமாகிய நகர் பிறிதில்லை. அழகிய சோலைகளும், கண்ணையும் மூக்கையும் ஒருங்கே கவருமியல்பினவாகிய நந்தவனங்களும் இந்நகருக்கு அணி செய்வன. இந்நகரின் கண்ணே ஐந்து மன்றங்களுள. அவை, மற்றெங்குமில்லாதன: இந்நகருக்கேயுரிய விசேடமாகவுள்ளன. அவை, வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கன் மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம் என்பன. இந்நகரத்திலே கள்வர் புகுந்து பொருள் கவர்வாராயின் அவரை மயக்கிக் கால் கடுக்க இடையறாமல் ஊரைவலம்வரச் செய்யும் இயல்பினது வெள்ளடை மன்றம் எனவே இம்மன்றம் கள்வரை நெஞ்சங் கலங்கி நடுங்கச் செய்வதொன்றாதலால் இந்நகரிலே களவென்பது கனவிலுமில்ல தோர்செயலாம். இலஞ்சி மன்றம், தன்னிடத்திலேயுள்ள பொய்கையிலே நீராடியெழும் கூனர், முடவர், ஊமர், செவிடர், தொழுநோயாளர் முதலியோரை அக்குற்றங்களைந்து நல்லுடம்பு பெறுவிக்குமியல்பினது. நெடுங்கல் மன்றம், மருத்தூட்டி னாற்பித்தரானோரும், நஞ்சுண்டோரும், நாகத்தாற் கடியுண்டோரும், பேய்கோட்பட்டோரும் என்றிவர்கள் அந்நெடுங்கல்லை வலஞ்செய்ய அவர்க்கு அத்துன்பங்களை யெல்லாம் போக்கியருளுமியல்பினது. இராசத்துரோகியையும், கற்புநிறை தவறிய மனைவியரையும், போலித் துறவிகளையும், பிறன் மனைவியைப் புணரும் துச்சாரியையும் சத்தியஞ் செய்ய தன் முன்னே கொண்டுவருமிடத்து அவரையறைந்து கொல்லும் பூதமொன்று வசிக்கும் ஸ்தலமே பூதசதுக்கம். தருமாசனத்தாரும் அரசனும் தமது நீதி தவறுங்கால் அது குறித்துக் கண்ணீர்சொரிந்து வாய் பேசா தழும்பாவையொன்றுடையது. பாவை மன்றம். இங்கனம் அற்புதகரமான ஜந்துமன்றங்களையுந் தன்னகத்தேயடையதாய் விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்துச் சிறப்பை முற்றாயிங்கெடுத்துக் கூறலமையாதாயினும் இற்றைக்கு ஆயிரத்தெழுநூறு வருஷங்களுக்கு முன்னதாகி அக்காலத்திலிந் நகரடைந்திருந்த பெருக்கத்தை யொருவாறு புலப்படுத்துவாம். வானளாவிய கோபுரங்களும் நிலாமுற்றங்களும், அணிகலமாடங்களும், ஆனகட்சாளரங்க ளையுடைய மாளிகைகளும், காண்போர் கண்ணைப் புறஞ்சொல்லவிடாத மிலேச்சர்வாசங்களும், மரக்கலவணிகராகிய பரதேசிகளுறைகின்ற அலை வாய்க்கரையிருப்பம், தொய்யிற்குழம்பு, வாசச்சுண்ணம், சந்தனக்கூட்டு, மூவகைப்பூ, புகைத்திரவியம், கோட்டமுதலியவிரை என இவைகளை விற்போர் திரியும் நகர வீதியும், பட்டினாலும் எலிமயிரினாலும் பருத்தியா லும் சித்திர வஸ்திரங்நெய்கின்ற சாலியர் வீதியும், சந்தனம், அகில், பட்டு, பவளம், முத்து, இரத்தினம், பொன், ஆபரணம் என இவற்றை அளவின்றி விலைக்குக் குவித்திருக்கும் வணிக வீதியும், பலசரக்குக் குவிந்துகிடக்கும் வீதியும், உப்புவிற் போர், இலைவணிகர், தக்கோல முதலிய வெற்றிலை வாசம் விற்போர், எண்ணெய் வாணிகர், வெண்கலக்கன்னார், செம்பு செய்வோர், மரவினைத்தச்சர், இரும்புக் சொல்லர் சிற்பாசாரியர், பொற்பணித்தட்டார், இரத்தினப்பணித்தட்டார், கஞ்சுகி செய்யுஞ் சிப்பியர், தோற்றுன்னர், வஸ்திரத்தினாலும், கிடேச்சையாலும் வாடாமாலைகளும், புஷ்பங்களும், பொய்க்கொண்டைகளும், பல்வகைப் பிரதிமைகளும், செய்தலால் தம் கைத்தொழிற்றிறமை காட்டும் வல்லோர், துளைக்கருவியாலும், யாழினாலும், ஏழிசையும் ஏழெழுத்தையும், மூவகை வங்கியதினும், நால்வகை யாழினும் பிறக்கும் பண்களுக்கின்றியமையாத மூவேழுதிறத்தையும் குற்றமற்ற இசைத்துக்காட்டவல்ல பாணர்கள் என இம்மக்களிருக்கின்ற வீதிகளும், குற்றேவல் செய்கின்ற சிறுதொழிலாளர் வசிக்கும் பாக்கமும், இராசவீதியும், கடைவீதியும், பெருங்குடிவணிகர் வசிக்கின்ற மாடமாளிகைவீதியும், வேளாளர்வீதியும், ஆயுள்வேதியர் வீதியும், சோதிடர்வீதியும், முத்துக்கோப்பாரும், சங்கறுத்து வளையல் செய்வோரும், வாழ்கின்றவீதியும், சூதர், மாகதர், நாழிக்கைகணக்கர், விகடககூத்தர், காவற்கணிகையர், ஆடற்கூத்தியர், பூவிலைமடந்தையர், ஏவற்பெண்கள், பேரிகை முதலியதோற் கருவியாளர், கழைக்கூத்தர், என இவர்களிருக்கின்ற வேறுவேறு வீதிகளும், குதிரைப்பாகர், யானைப்பாகர், தேர்ப்பாகர் போர்வீரர் என்றிவர்களிருக்கின்ற வீதிகளும். வேதியர் வசிக்கின்ற அக்கிரகாரங்களும் என எண்ணில்லாத வீதிகளையும், எண்ணில்லாத தொழிற்சாலைகளையும், உடையதாய் இந்நகர் விளங்கியது என்பது சிலப்பதிகாரத்தாற் பெறப்படும் கல்வியாரச்சியிற் பொழுது போக்குவார்க்குப் பட்டிமண்டபமெனப்படும் வித்தியா மண்டபங்களும், நோயாருக்கு மருத்துவசாலைகளும், இளங்காளையர்க்கு விளையாட்டிடங்களும், அகதிகளுக்கு அன்னசாலைகளும், தவஞ்செய்வார்க்குத் தவச்சாலைக ளும் என்றின்னோரன்ன அநேக பொதுக்களங்களுமிங்குள வாயிருந்தன. ஆதலால் இந்நகரம் பலவகைப்போகங்களுக்கும், இடமாயிருந்ததென நிச்சயிக்கப்படும். இந்நகரம் மருவூர்ப்பாக்கத்திலே பெரும்பாலும் தொழிலாளரும், பட்டினப்பாக்கத்திலே பெரும்பாலும் மேன்மக்களும், பிரபுக்களுமே குடிகொண்டிருந்தார்கள். இருபக்கத்தினுமாகவிங் கேயிருந்து வாழ்ந்த குடித்தொகை அறுபதினாயிரம் என்பது. பாலைபாடிய பரிசிலன் றெடுத்த, மாலைத் தாகியவறங்கெழுசெல்வத், தாறைந்திரட்டி யாயிரங் குடிகளும், வீறுசான்ஞாலத்து வியலணியாகி, யுயர்ந்தோருலகிற் பயந்தரு தான, மில்லதுமிரப்புநல்லோர்குழுவுந், தெய்வத்தானமுந் திருந்தியபூமியு, மையருறையுளுமற்வோர் பள்ளியும் என்னுஞ் செய்யுட் கூற்றாற்பெறப்படும். அநேக புலவரையும் கரிகாற்சோழன் போலும் பராக்ககிரமமாதலும், கொடையாலும் ஒரு சிறிதும் திறம்பாத செவ்வியநெறி முறையாலும், சிறந்தோங்கிய அநேக ராஜாக்களையும் பட்டினத்தடிகளையொத்த அநேக மெய்த் துறவிகளையும் தந்தருளிப் புகழ்படைத்ததும் இந்நகரமேயாம். இங்ஙனம் சிறந்து விளங்கிய இந்நகரம் பின்னர்நாளிலே அழிந்தொழிந்து போக இப்பொழுது அவ்விடத்திலேயுள்ளது. அப்பெயரையுடை யவொருகுக் கிராமமே

காவேரி

காவிரி காண்க. இந்நதிகவேரனாலே திருத்தப்பட்டமையின் காவேரியெனப்படுவதாயிற்று. கவேரன் புத்திரியென்பதுபசாரம்