ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ஒட்டக்கூத்தர் | ஆயிரத்திருபது வருஷங்களுக்கு முன்னே சமஸ்தானத்திலே விளங்கிய ஒரு தமிழ்ப் புலவர். இவர் பாடிய ராமாயணத்தில் உத்தரகாண்டம் மாத்திரமே சர்வாங்கீகாரமாகிக் சேர்க்கப்பட்டது. இவர் ஜாதியிற் கைக்கோளர் |
ஒப்பிலாநாயகி | திருநெடுக்களத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
ஒப்பிலாமுலையம்மை | திருஆவடுதுறையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
ஒல்லையூர்கிழான் | தொடித்தலை விழுந்தண்டினாராற் பாடப்பட்ட பெருஞ்சாத்தன் தந்தை |
ஒளசனசம் | உப புராணங்களுள் ஒன்று |
ஒளதேயர் | உசீநரன் மகனாகிய நிருகன் வமிசத்தர் |
ஒளர்வன் | ஊர்வன் மகன். சியவனன் மநுகன்னிகையிடத்து பெற்ற இருஷி. இவனுக்கு நூற்றுவர் புத்திரர். அவருள் இருஷிகள் மூத்தோன் |
ஒளவையார் | சோழியப் பிராமணராகிய பகவனாரென்பவருக்கு ஆதியென்பவள் வயிற்றிலே பிறந்து, காவிரிப்பூம்பட்டினத்திலே பாணர் சேரியிலே வளர்ந்து தமிழ்ப் புலமையுடையராய் விளங்கிய மாதுசிரோ மணியார். பகவனாரும் ஆதியும் தம்முள் செய்துகொண்ட சங்கேதப்படி, பிறக்கும் பிள்ளைகளையெல்லாம் அஃதது பிறக்குமிடத்திலே வைத்துவிட்டுச் செல்வாராயினர். ஒளவையைப் பெற்றவுடனும் தாய் இச்சிசுவை யெவ்வாறு விடுத்துப்போவேன்என்றிரங்கிநின்றாள். அப்பொழுது ஒளவையாராகிய அச்சிசு தாய்முகத்தை நோக்கி எவ்வுயிருங்காப்பதற்கோ ரீசனுண்டோ வில்லையோ ~ அவ்வுயிரில் யானுமொன் றிங்கல்லேனே ~ வவ்வி ~ அருகு கொண்டிங்கலைவனேன்னாய் ~ வருகுவது தானேவரும் என்னும் பாடலை அற்புதமகாக் கூறத் தாய் அதுகேட்டு அவ்விடத்தினின்றும் நீங்கினாள். ஒளவையாருக்கு அதிகமான், திருவள்ளுவர், கபிலர் என மூவர். சகோதரரும் உறுவை, உப்பை, வள்ளி என மூவர் சகோதரிகளுமுளர். ஒளவையார் தமிழ்ப்புலமையோடு மதிநுட்பமுடையவர். இல்லறவொழுக்கத்தை விரும்பாதுதவத்தையே பாரமார்த்திகமாகக் கொண்டொழுகினவர். சிறிது காலம் மதுரையிலும், சிலகாலம் சோழநாட்டிலும், சிறிது காலம் சேரநாட்டிலும், நெடுங்காலம் அதிகனிடத்திலும், எஞ்சியகாலம் முனிவர் வாசகங்களிலும் வசித்தவர். அரசரையும் பிரபுக்களையும் பாடி அவர் கொடுக்கும் பரிசுகளைப் பெற்றுக் காலங் கழித்தவர். இவராற் பாடப்பட்டோர் அதிகன், சேரமான் வெண்கோ, தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், உக்கிரப்பெருவழுதி, இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி முதலியோர். தமது தேகமெலிவைக் கண்டிரங்கி அதிகன் கொடுத்த நெல்லிக் கனியை வாங்கியுண்டவர். இக்கருநெல்லிக்கனியாவர்க்கும் எளிதிற்கிடைப்பதொன்றன்று. உண்டவர்க்கு திடகாத்திரமும், தீர்காயுளுந் தருமியல்பினது. அத்தகைய அற்புத நெல்லிக்கனியை தாணுண்டு நலம்பெறாது இவர்ககுக் கொடுத்த அதிகன் வண்மையன்றோ வண்மை பெருமலைவிடரகத் தருமிசைக்கொண்ட ~ சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா தாதனின்னகத்தடக்கிச் சாதனீங்கவெமக் கீத்தனையே எனப்புறநானூற்றில் வரும் ஒளவையார் பாடலால் இவ்வுண்மை புலப்படும். இது ஒளவையார் பாடியதென்பது. அமிழ்துவிளை தீங்கனியௌவைக் கீந்த ~ வுரவுச் சினங்கனலு மொளிதிகழ்நெடுவே ~ லரவக்கடற்றானை யதிகன் எனச் சிறு பாணாற்றுப்படையில் வருவதாற் பெறப்படும். அவ்வதிகன்மாட்டுத் தாங்கொண்ட பேரன்பினால் அவனுடைய தூதாகத் தொண்டமானிடஞ் சென்றவர். தனது வலியையுணர்த்தும் பொருட்டுத் தன் ஆயுதசாலையைத் திறந்து காட்ட இவ்வாயுதங்களொல்லாம் நெய்யிட்டு மாலை சாத்திப் பூசிக்கப்படுவனவாயக் கதிர்கான்றுவிளங்குகின்றன. அதிகனுடைய ஆயு தங்களோ பகைவரைக்குத்தித் தினந்தோறும் பிடியும் நுதியுந்திசைந்து கொல்லனு டையகம்மியசாலையின் கண்ணவாம் என்னுங்கருத்துற்ற பாடலைக் கூறித் தொண்டைமானை தலைகுனிவித்த மதிநுட்பமுடையவர். இவர் உக்கிரப்பெருவழுதி காலமுதல் கம்பர் காலம்வரையும் சீவித் தரெனப்படுதலால் அவர்க்கு வயசு எண்ணூற்றின் மேற்ப்பட்டதாதல் வேண்டும். கருநெல்லிக்கனியுண்டு காயசித்தி செய்துகொண்டமையே இவ்வாயுள் நீட்டத்துக்கேதுவாம். திருமூலர் தினமொன்றுக்கு இயல்பாகவெழுகின்ற 21,600 சுவாசங்களையும் 730 ஆகவடக்கி மூவாயிரம் வருஷ முயிரோடிருந்தாரன்றோ. இவ்விஷயம் யோகசாஸ்திரம் வல்லார்க்கன்றி மற்றோர்க்கு எளிதிலுண்மையாகமாட்டாது. அதுவுமன்றி மாந்தர்க்கு வயது நூறல்ல தில்லையென்று. வரையறுக்குந் தமிழ்ப் புலவர்கள் தாமே சிறிதும் கூசாது எதுவுங்கூறிச் சங்ககாலத்திருந்த ஒளவையார் கம்பர்காலத்துமிருந்தாரெனக் கூறுந் துணிவொன்றே இதற்குப் போதிய சான்றாம். எங்கனங் கொள்ளினும் திருவள்ளுவர் சகோதரியாராகிய ஒளவையார் கடைச்சங்ககாலத்தில் விளங்கினவர் என்பது கபில பாணர்களது பாடல்களால் நன்கு நிச்சயிக்கப்படும். ஆத்திசூடி, வாக்குண்டாம், நல் வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலிய திவ்விய அறநூல்களும் இவர் செய் தனவேயாம். இவரைப்பற்றிய சிறுகதைகள் அநேகமுள. ஒளவையாரென்னும் பெயர் இவர்க்கு இயற்பெயயரன்றிக் காரணத்தாலிடப்பட்டதன்று. பாரதம் பாடிய வில்லிபுத்தூராழ்வாரும் ஒளவை பாடலுக்கு நறுநெய்பால் என்னுஞ் செய்யுளிலே இவருடையவாக்குபலிதத்தை வியந்துபோயினர். இவருடைய வாக்குகள் சாபாநுக்கிர முடையனவாயிருந்தமை பற்றியே இவர் தமிழ் நாடெங்கும்வியாபித்து புகழும் நன்கு மதிப்புமுடையராயினார். ஆயிரத்தெண்ணூறு வருஷங்கள் கடந்தும் இன்றும் ஒளவையாரென்றால் சிறுவரும் பெருமதிப்புக் காட்டுவர். பண்டைக் காலத்துப் புலவ்களுள்ளே இவர் ஒருவர் பெயரேகல்லியறிவில்லாத சாமானியர் வாயிலுங் கேட்கப்படுவதாயிற்று |