அபிதான கோசம்


351

81

107

5

84

10

9

17

9

8

7

1
க்
15

163
கா
88
கி
58
கீ
5
கு
101
கூ
8
கெ கே
19
கை
4
கொ
10
கோ
37
கௌ
21
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
216
சா
78
சி
114
சீ
5
சு
142
சூ
23
செ
12
சே
38
சை
12
சொ
4
சோ
40
சௌ
16
ஞ் ஞா
5
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி
1
டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
69
தா
32
தி
494
தீ
10
து
45
தூ
7
தெ
5
தே
40
தை
4
தொ
7
தோ
3
தௌ
2
ந்
61
நா
23
நி
25
நீ
16
நு நூ
1
நெ
11
நே
3
நை
4
நொ
1
நோ
1
நௌ
ப்
132
பா
80
பி
129
பீ
7
பு
62
பூ
17
பெ
23
பே
7
பை
3
பொ
11
போ
10
பௌ
8
ம்
163
மா
76
மி
17
மீ
6
மு
30
மூ
9
மெ
3
மே
11
மை
5
மொ மோ
6
மௌ
5
ய்
21
யா
16
யி யீ யு
7
யூ
1
யெ யே யை யொ யோ
6
யௌ
2
ர்
25
ரா
23
ரி
2
ரீ ரு
18
ரூ
3
ரெ ரே
4
ரை
3
ரொ ரோ
9
ரௌ
3
ல்
12
லா
3
லி
1
லீ
1
லு லூ லெ லே லை
1
லொ லோ
7
லௌ
வ்
90
வா
29
வி
128
வீ
19
வு வூ வெ
13
வே
36
வை
19
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ஏகசக்கரன்

தனு புத்திரருளொருவன்

ஏகசக்கரபுரம்

இது பாண்டவர்களும் குந்தியும் அரக்குமாளிகை ஆபத்துக்குத் தப்பி பிராமண வேஷம் பூண்டு போய்ச் சேர்ந்த அக்கிரகாரம். இங்கிருக்கையில் பகாசுரன் வீமனால் கொல்லப்பட்டான். இப்பிராமண வேஷத்தோடேயே துருபதபுரஞ்சென்று பாண்டவர்கள் திரளெபதியை விவாகஞ்செய்தார்கள்

ஏகதந்தன்

விநாயகக்கடவுள்

ஏகதன்

பிரமமானச புத்திரருளொருவன்

ஏகன்

ஏகம்பவாணனை அளவிறந்த திரவியத்தோடு தன்னிடத்து ஒப்பித்திறந்த ஏகமபவாணன் தந்தைசொல்லை அற்பமேனும் வழுவாமற் காத்த சிறுவனை முற்ப்படவைத்த பண்ணையாள். இவன் சாதியிலேபறையனாயினும் எசமான் பக்திற் சிறந்தவன்

ஏகபாதன்

அஷ்ட வக்கிரன் மகன்

ஏகபிங்கன், ஏகபிங்களன்

குபேரன்

ஏகம்பவாணன்

ஆற்றூரில் விளங்கிய ஒருவேளாண் பிரபு. சிறுவயசிலே தந்தை தாய் இறந்து போக ஏகனென்னும் பண்ணையாளால் பாதுகாக்கப்பட்டு வளர்ந்து கம்பரிடம் கல்வி கற்று கல்விச் செல்வங்களால் ஒப்பாரின்றிச் சேரசோழபாண்டியர்களுக்கு மிக்க நண்பினனாய்த் தமிழ்வித் வான்களுக்கும் யாசகருக்கும் கற்பகதருவைப் போல விளங்கினவன்

ஏகலன்

வசுதேவன் தம்பி. தேவசிரவன் மகன்

ஏகலவ்வியன், ஏகலவன்

துரோணாசாரியரிடம் போய் த்தனக்கு வில்வித்தை கற்ப்பிக்குமாறு வேண்ட, நீசனாதலின் கற்ப்பித்தல் கூடாதென்று மறுத்தபோது அவரைப்போலவோரோவியந் தீட்டி அதைக்குருவாக வைத்துத் தானேகற்றுத் தேர்ந்த ஒரு கிராதன். அவன் அவ்வித்தையைத் தேர்ந்து கொண்டபின்னர்த் துரோணாசாரியரிடஞ் சென்று தான் கற்றவரலாற்றைச் சொல்ல அவர் அதற்காகத் தக்ஷீணைதருகவென்றார். அவன் என்ன வேண் டுமென்ன, துரோணர் வலக்கைப் பெருவிரல் தருகவென்றலும் அஃது ஈந்து போயினான்

ஏகாம்பரநாதர்

திருவேகம்பத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்

ஏனாதி

முன்னுள்ள தமிழ்நாட்டரசர் தம்மாலபிமானிக்கப்பட்டுத் தங்கீழ் வாழும் பிரபுக்களுக்குச் சூட்டும் பட்டங்களுளொன்று

ஏனாதிதிருக்கிள்ளி

ஏனாதிப் பட்டம் பெற்றுவிளங்கிய ஒரு வள்ளல். இவன் சிறப்புப் புறநானூற்றிற் கூறப்பட்டுள்ளது

ஏனாதிநாயனார்

எயினனூரிலே சான்றார் மரபிலே பிறந்த ஒரு சிவபத்தர். நீறு பூசியவர்களைக் கண்டால் அவர்களைச் சிவனென மதிக்குமியல்பினர். படைத்தொழிலிற் பேராண்மை யுடையவராயிருந்தும் தம்மை எதிர்த்த வதிசூரனென்பவன் விபூதிதரித்துவந்து சமர் புரிய அவனைக் கொல்ல மனம் பொருந்தாது அவன்கை யாலேதாமிறந்தவர்

ஏமாங்கதம்

சீவகன் தேசம்

ஏயர்கோன் கலிக்காமநாயனார்

திருப்பெருமங்கலத்திலே பிறந்த வேளாளராகிய இவர் சூலைநோயால் வருந்துகையில் பரமசிவன் அவருக்கு கனவிலே தோன்றி, இது சுந்தரமூர்த்தியாற்றீருமெனறருளிச் சுந்தரரையும் மேவிப்போக சுவாமியைப் பரைவையிடத்துத் தூதுசெல்லக் கேட்ட சுந்தரனால் இந்நோயைப் போக்குவதிலும் நானே அந்நோயைப் போக்கு வேன் எனச்சொல்லி வாளையெடுத்து வயிற்றைப் போழ்ந்துயிர் துறந்த வைராக்கியபத்தர். பின்னர்ச் சுவாமியருளாலுயிர் பெற்றுச் சுந்தரோடு நட்பு கொண்டவர்

ஏலவார் குழலியம்மை

திரு இரும்பூளையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்