ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
எச்சதத்தன் | தண்டீசர் தந்தை |
எதிர்கொள்பாடி | சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம் |
எயிலூர், எயில் | பாண்டிய நாட்டகத்ததோரூர் |
எறிச்சலூர்மலாடனார் | இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர் |
எறிபத்தநாயனார் | இவர் சிவகாமியாண்டார் சுவாமிக்குச் சாத்தக் கொண்டு சென்ற புஷ்பங்களைப் புகழ்ச்சோழநாயனாருடைய யானையானது பறித்துச் சிந்தியது கண்டு ஓடிச்சென்று அதன் துதிக்கையை வாளினால் வீசினவர். அதுகண்ட புகழ்ச்சோழநாயனார் தமது யானைசெய்த குற்றத்துக்காகத் தம்மையும் வெட்டுகவென்று தமது வாளைக் கொடுக்க எறிபத்தர்வாங்கித் தமதூட்டியை அரிய எத்தனித்தார். அப்பொழுது பரமசிவனது திரு வருளாலோர் அசரீரி உண்டாக யானையு முயிர்பெற்ழெற இருவரும் சுவாமியைத் துதித்துப் போயினர். இவர்க்கு ஊர் கருவூர் |
எல்லன் | குன்றத்தூரிலிருந்த ஆற்றூர்ப் பரமேசுரன் என்போன் மகன். இவன் தமிழ் வல்லோர்க்குப் பெருநிதி வழங்கியும் தன் மீது பட்சமுடையனாயிருந்த பாணன் இறந்தபோது அவனுடலைச் சுமக்கப் புகுந்தும் பெரும் புகழ் படைத்துத் தொண்டைநாட்டில் விளங்கிய ஒரு பிரபு. இவன் பெருமை தொண்டை மண்டலசதகத்தாற் புலப்படும் |
எல்லப்பநாவலன் | தமிழிற் சௌந்திரியலகரி செய்தவன் |
எழித்தறிந்தநாதர் | திரு இன்னம்பரிலே கோயில் கொண்டிருக்குந் சுவாமி பெயர் |
எழினி அதிகமான் | குதிரைமலையைத் தன்னத்தேயுடைய ஒரு சிறுநாட்டுக்கதிபனாயிருந்த ஒரு வள்ளல். ஊராதேந்திய குதிரைக்கூர்வேற் கூவிளங் கண்ணிக் கொடும்பூணெழினியும் எனச் சித்திரனாற் பாடப்பட்டவன் |