ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
இக்ஷூமதி | ஒருநதி. குசத்துவஜன் ராஜ தானியாகிய சாங்காசியபுரி இதன்தீரத்திலுள்ளது. கபிலருடைய ஆச்சிரமம் இதன் கரைக்கண்ணது |
இக்ஷூவாகு | வைவசுவதமநு புத்திரன். விகுக்ஷி, நிமி, தண்டகன், முதலியயோர் இவன் புத்திரர். இவன் பெரிய வமிசத்தலைவன். அஜன், ரகு, ராமன் முதலியோர் இவன் வழிவந்தோர் |
இசைஞானியர் | சடைய நாயனார் மனைவியார். இவரே சுந்தரமூர்த்தி நாயனாரை ஈன்றருளிய பாக்கியவதியார் |
இசைநுணுக்கம் | சாரகுமாரன் பொருட்டு சிகண்டி செய்த இசைத்தமிழ் நூல் |
இடங்கழிநாயனார் | கொடும்பாளூரிலே சிவனடியார்க் கன்பராயிருந் தரசியற்றிய ஓரரசர் |
இடும்பில் | ஓரூர் |
இடைக்காடனார் | இவரை ஒளவை சகோதரரென்று சொல்லுவர். இடைக்காடென்னு மூரிலிருந்தவர். கடைச்சங்கப் புலவர்களு ளொருவர். கிள்ளிவளவன் சிறம்பைப் பாடினார் |
இடைக்குன்றூர்கிழார் | நெடுஞ்செழியன் போர்த்திறம் பாடிய புலவர், புறநானூறு |
இடைச்சங்கம் | இது கபாடபுரத்திலே சித்திரராத பாண்டியென்னும் வெண்டேர்ச் செழியனாலே தாபனஞ்செய்யப்பட்டு முடத்திருமாறன் காலம்வரையும் நடைபெற்று வந்த கடைச்சங்கம். இதன்வரலாற்றை மேல்வரும் ஆசிரியப்பாக் கூற்றானுணர்க வடுவறுகாட்சி நடுவட் சங்கத்தகத்தியர் தொல்காப்பியத்தமிழ் முனிவ ரிருந்தையூரிற் கருங்கோழிமோசியா ~ ரெளாப் புலமைவெள்ளூர்க் காப்பிய னிறவா விசையிற் சிறுபாண்டரங்கன் ~ றேசிகமது ரையாசிரியன் மாறவன் ~ றவரொ ப்பாய துவரைக்கோமான் ~ றேருங்கவி புனை கீரந்தை யரிவ ~ ரோன்பதோடடுத்த வைம்பதின்மராகுந் ~ தவலருங்கேள்வித் தன்மையருள்ளிட் ~ டிவர் மூவாயிரத் தெழுநூற்றுவரே வைய கம்பரவச்செய்த செய்யுளு ~ மிருங்கலிகடிந் தபெருங்கலித் தொகையொடு ~ குருகு வெண்டாளி தெருள்வியாழமாலை ~ யந்நாளிலக்கண மத்தி யமதனொடு ~ பின்னாட்செய்த பிறங்கு தொல்காப்பிய ~ மதிநலங்கவின்ற மாபுராணம் ~புதுநலங் கனிந்த பூதபுராணம். வல்லிதினுணர்ந்த நல்லிசை அணுக்க முந் ~ தாவாக்லந் தமிழ்பயின்றதுவு ~ மூவாயிரத்தோடெழுநூற்றியாண்டு ~ பரீஇயசங்கமிரீ இய பாண்டியர்கள் ~ வெண்டேர்ச்செழியன் முதலாவிறல்கெழு ~ திண்டேர்க்கொற்ற முடத்திருமாறன் ~ முரசுடைத்தானை மூவாவந்த ~ மரசுநிலையிட்டோரைம்பத் தொன்பதின்ம ~ ரிவ்வகையரசரிற்கலிய ரங்கேறின. ~ ரைவகையரசராயிடைச் சங்கம் ~ விண்ணகம்பரவு மேதகுகீர்த்திக் ~ கண்ணகன்பரப்பிற்கபாட புரமென்ப |
இடைச்சுரநாதர் | திரு இடைச்சுரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
இட்டசித்தி | அழகர் மலையின் கண்ணதொருபொய்கை விரும்பியதெல் லாங்கொடுப்பது என்பது அதன் பொருள் |
இதிகாசம் | இராமயணமும் பாரதமும். இவைசரித்திர முகத்தாற் புருஷார்த்தங்களை யுபதேசிப்பன |
இத்துமவாகன் | அகஸ்தியன் பௌத்திரன் |
இந்திரகாளியம் | யாமளேந்திரன்செய்த இசைநூல் |
இந்திரசேனன் | நளன் மகன். தருமன் சாரதி. சூரியன் மகன் |
இந்திரசேனை | மௌத்கல்லிய மகாவிருஷிபாரி. துரோபதை. நளன் மகள் |
இந்திரஜித்து, இந்திரசித்தன் | ராவணன் மகன். இவன் இந்திரனைச் சிறை செய்து இலங்கைக்குக் கொணர்ந்தானாதலின் இந்திரஜித்து என்னும் பெயர்படைத்தான். இவன் பூர்வநாமம் மேகநாதன். அதிமாயாவி. பதினான்னு வருஷம் நித்திராகார மில்லாதவன் யாவன். அவனால் இறத்தல் வேண்டுமென்று வரம்பெற்றவன். அப்படியே லக்ஷுமணனாற் கொல்லப்பட்டவன், மோகநாதன் காண்க |
இந்திரத்துயுமனன் | இருஷபன் பௌத்திரன். பரதன் புத்திரன். தாய் சுமதி. இவன் ஒரு நாள் ஆழ்ந்த நிட்டையிலிருக்கும் போது அங்கே அகத்தியர் வந்தார். அவருக்கு இவன் உபசாரஞ்செய்யாமையால் அவரால் மத யானையாக வென்று சபிக்கப்பட்டான். அதனால் யானையாகிச் சஞ்சரித்து வரும் போது தாகந்தணிக்கும் பொருட்டு ஒருதடாகத்திலிறங்க, ஒரு முதலை அதனைப்பிடித்திழுத்துப் போக, ஆதிமூலமே யென்று கூவி நாராயணனை தோத்தரித்த மாத்திரத்தில் அவருடைய சக்கராயுதம் அம்முதலையை கொண்று யானைரூபம் தவிர்த்து ரக்ஷிக்கப்பெற்றவன். இக்கதை கஜேந்திரமோக்ஷமெனப்படும் |
இந்திரத்துயுமனம் | ஒருவாபி. இஃது இந்திரத்துயமனன் என்னுமரசன் தானஞ் செய்த ஆடுமாடு நின்று பள்ளமாகியதால் வாவியாயிற்று. இவன் இந்திரசதனத்தில் நெடுங்காலம் போயிருந்து விட்டமையால் அவன் கீர்த்தி உலகத்தில் இல்லாது போயிற்று. அவன் தேவர்களால் தேவலோகம் விட்டு ஓட்டப்பட்டு பூலோகம் வந்து பார்த்தபோது, தன்னையுலகத்தறி வாரெவரையுங் காணாது ஈற்றில்யுகாந்தரன் என்னுங் கச்சுப மாத்திரம். தன்னை யறிவதாகச் சொல்லக்கேட்டான். ஆகவே இவன் போனதற்கும், மீண்டதற்கும் இடையே அநேகசந்ததிகளாயின. இவ்வாவி ஜகநாதத்திலுள்ளது |
இந்திரன் | தேவராசன். கிழக்குத்திக்கு பாலகன். கசியப்பிசாபதிக்கு அதிதியிடத்திற் பிறந்த புத்திரன். இவன் ராசதானி அமராவதி. ஆயுதம் வச்சிரம். பாரி சசிதேவி. வாகனம் ஜராவதம். சபை சுதர்மம். குதிரை உச்சை சிரவம். சாரதி மாதலி. உத்தியாவனம் நந்தனம். மகன் ஜயந்தன். இந்திரன் துவட்டப்பிரமாவினது புத்திரன். விசுபரூபனையும், விருத்திராசுரனையும் கொன்ற தோஷமாகிய பிரமகத்திகாரணமாகத் தேவேந்திரபதத்தை இழந்தான். அப்போது நகுஷன் தனது தபோபலத்தால் இந்திரனாயினான். அது கண்டு இந்திரன் அசுவமேதயாகஞ் செய்து மீண்டம் இந்திரனாயினான். இவ்விந்திரபதம் நூறு அசுவமேதஞ்செய்தான். யாவன் அவனுக்குரியது. ஆகவே மனுஷராற் பெறத்தக்கது. இதுவரையும் இறந்துபோன இந்திரர்க்குக் கணக்கில்லை. இப்போதிருப்பவன் புரந்திரன். இந்திரன் கௌதமபத்தினியை இச்சித்த காரணத்தாலக் கௌதமராலுடம் பெங்கும் யோனிமயமாகச் சபிக்கப்பெற்றுப் பின் கௌதமரை பன்முறைவேண்டி உடம்பெங்கும் கண்ணாகுமாறு பெற்றான். அதனால் ஆயிரங்கண்ணன், சகஸ்திராக்ஷன் என்னும் பெயர்கள் பெற்றான். பூர்வத்திலே சிறகுடையனவாயிருந்தமையாற் பறந்து பறந்து வீழ்ந்த நகரங்களை அழித்து வந்த மலைகளைச் சிறகரிந்து அவற்றது கருவத்தை அடக்கினமையால் கோத்திர பித்து எனவும் பெயர் பெற்றான். ஒரு காலம், சியவன விருஷி யாகஞ் செய்த போது அசுவினி தேவருக்கு பங்கீந்தான். அது கண்ட இந்திரன் சினந்து அவ்விருஷிமேலே தன் வச்சிராயுதத்தை ஓங்க, இருஷி அதனை ஸ்தம்பனம்பண்ணினர். அது காரணமாகத் துச்சியவனன் எனவும் பெயர் பெற்றான். இந்திரன் மேகங்களை வாகனமாக வுடையவன். இந்திரனே மழையைக் காலந்தோறும் பெய்விப்பவன். இந்திரனை மகிழ்விக்கும் பொருட்டு ஆரியர் வருஷந்தோறும் பொங்கலிடுவதும். விழாவெடுப்பதும் பண்டைக்காலந்தொட்டின்று முள்ள வழக்கம். மகரசங்கிராந்திக்கு முதனாளிலேயே இப்போதிப்பொங்கலிட்ப்படு கின்றது. அதனைப் போகிபொங்கலென்று வழங்குவர். போகி இந்திரன், கிருஷணன் யாதவர்களிடத்திலிருக்கும் போது இப்பொங்கல் வந்தது. யாதவரெல்லோருந் திரண்டு இந்திரனுக்கு வேள்விசெய்தார்கள். அவ்வேள்வியை இந்திரன் கொள்ளாவ கைதடுத்தக் கிருஷ்ணன் தான் கொண் டான். அது பொறாதிந்திரன் சினந்து மேகத்தை ஏவியாதவர்களுடைய பசுநி ரையைக் கொல்லும்பொருட்டுக் கன்மழை பொழிவித்தான். கிருஷ்ணன் ஒரு மலையையிடந்து குடையாகப்பிடித்து அப்பசுநிரைகளையும் யாதவர்களை யுங் காத்தான். சூரபன்மன் தேவர்களை யெல்லாந் சிறைசெய்து மீன் சுமக்க வைத்தபோது. இந்திரன் அக்கொடுமைக் காற்றாதோடிச் சீர்காழியில் மறைந்திருந்து குமாரக்கடவுள் சூரனைக் கொன்றருளிய பின்னர் அமராவதி சென்றான். இவன்மகள் தெய்வயானை |
இந்திரப்பிரமிதி | வியாசீஷனாகிய பயிலவன் சீஷன். இவன் இருக்குவேத சங்கிதையை நான்கு பாகமாக்கிப் பாஷ்கலன், போத்தியன், யாஞ்ஞவற்கியன், பராசுரன், மாண்டுகேயன், அக்கினிமதி என்பவர்களுக்குபதேசம் பண்ணியவன் |
இந்திரப்பிரஸ்தம் | பாண்டவர்களுக்கு ராஜதானி. டில்லிக்கு சமீபத்திலேயுள்ளது. காண்டவப்பிரஸ்தமெனவும் பெயர்பெறும் |
இந்திரவதி | கோதாவிரியுடன் கலக்கு மோருபநதி |
இந்திரவாகனன் | ககுத்தன் |
இந்திராவரஜன் | உபேந்திரன், இந்திர அவரஜன்: அவரஜன் ~ தம்பி |
இந்தீவராசன் | நளநாபன் என்னும் கந்தர்வராஜன் மகன். வரூதினி தம்பி. இவன் கபடோயாயத்தினால் ஒரிருஷியையடைந்து ஆயுள் வேதத்தை முற்றக்கற்ற பின்னர் அக்குருவை இகழ்ந்தமையால் இராக்ஷச ரூபம் பெறுமாறு சபிக்கப் பட்டவன். பின்னர்ச் சுவாரோசியினால் அச்சாபம் விமோசனமாயிற்று |
இந்து | சந்திரன். அதிசாந்திரன். சாசுவதன் மகன் |
இந்துமதி | விதர்ப்பராஜன் மகள் அஜன் பாரி. தசரதன் தாய் |
இனன் | சூரியன் |
இமயமடக்கொடி | திரு இடைச்சுரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
இமயம் | ஹிமாலய மலை. பாரத வருஷத்துக்கு வடக்கெல்லையாகவுள்ளது. பூவுலகத்துள்ள மலைகளு ளுயர்ந்தது வளஞ்சிறந்ததாதலின் இம்மலை பர்வதராஜாவெனவும் பெயர் பெறும். இம்மலையரசன் இமவானெனப்படுவன். இங்கேமகாவிருஷிகளும் யோகிகளும் சித்தரும் வசிப்பார்கள் |
இயக்கன் | பூதப்பாண்டியன் தோழன் |
இயக்கர் | யக்ஷர் காண்க |
இயற்பகைநாயனார் | காவிரிப்பூம்பட்டினத்திலே வணிகர் குலத்திலே பிறந்தவர். இவர் சிவனடியார்களைச் சிவனெனப் பூசிக்கும் பக்தசிரோ மணழயாயொழுகி வருநாளிலே, சிவன் ஒரு பிராமண வேடங்கொண்டு அவர்பாற் சென்று, ஒன்று வேண்டிவந்தேன் என்றுகூற, இயற்பகையார் அவரை நோக்கி, நம்மிடத்திலுள்ள பொருள் எல்லாம் சிவனடியார் பெருளே யாம். கூசரது கேட்கவென்ன, ஐயர் தமது மனைவியைத்தரல் வேண்டுமென்ன, இயற் பகையார் நம்மிடத்துள்ள பொருளைக் கேட்டீர் என்று கூறி முகமலர்ந்து தமது மனைவியை உடன்படுத்தி சுற்றத்தார் தடுக்கவுங் கேளாது கொடுத்துக்கொண்டு செல்லும் என்றார். ஐயர் தமது மெய்வடி வைக்காட்டி அவருடைய பக்தித்திடத்தை வியந்து அருள்புரிந்து போயினர் |
இரகுநாதசேதுபதி | இவர் இருநூற்றுமுப்பது வருஷங்களுக்கு முன்னர் இராமநாதபுரத்தில் அரசுபுரிந்தவர். இவர் தமிழ் வித்துவான்களைச் சன்மாத்துத் தமிழை வளர்த்த மகௌதாரிய சீலர், ஒரு துறைக்கோவை என்னும் அற்புதப் பிரபந்தத்திலே அமிர்தகவிராயராலே புகழ்ந்து பாடப்பட்ட சேதுபதி இவரே. இவர் முன்னோரும் இவர் பரம்பரையில் வந்தோரும் இவரைப்போலத் தமிழ்க்கரா வினோதரே |
இரகுவமிசம் | காளிதாசன் வடமொழியிற் செய்த ஒரு காவியம். இதனைத் தமிழிலே மொழிபெயர்த்தவர் அரசகேசரி |
இரட்டையர் | ஒருவர் அந்தகராகவும் மற்றவர் முடவராகவும் பிறந்த சகோதரராகிய புலவர் இருவர் இப்பெயர் பெறுவர். இவர்கள் காஞ்சிபுரத்திற் பிறந்து தமிழ்க் கல்வியில் மிக்க வல்லவராகிய முடவரை அந்தகர் தோள்மேல் ஏற்றிக்கொண்டு முடவர் வழிகாட்ட ஊர்கடோறுஞ் சென்று கவிபாடிப் பெருங் கீர்த்தி பெற்றவர்கள். இவர்கள் செய்த நூல்கள் தைவீகவுலா முதலியன. இப்புலவர்களே நானுமறியேன். அவளும் பொய்சொல்லாள் என் னும் பழமொழியை வெளிப்படுத்தித் தாமாராயாத விஷயங்களையும் சரஸ்வதி அருளால் செய்யுள் வாயிலாக ஆங்கரங்கும் வெளியிட்டு வந்தவர்கள் |
இரணியகசிபன் | கசியபனுக்குத் திதிவயிற்றிலே பிறந்த புத்திரிரு வருளொருவன். மற்றவன் இரணியாக்ஷன். இரணியகசிபன் கொடிய தவழுஞற்றிப் பிரமாவிடம் தன்னைத் தேவரும் மனிதரும் விலங்கினங்களும் அசரருங் கொல்லாதிருக்க வரம்பெற்று, அதனால் மிக்க கருவமுடையனாகித் தன்னையே யுலகங் கடவுளாகக்கொண்டு வழிபடல் வேண்டுமென்று வகுத்து, அதுசெய்தாரை யொறுத்துப் பெருங்கொடுமை செய்துவந்தான். அவன் மகன் பிரகலாதன் தந்தையை பொருட்படுத்தாது விஷ்ணுவை வழிபட்டு வந்தான். அவனைப் பலவாறு துன்பஞ்செய்த அவன் மதியாமைகண்டு இரணியகசிபன் தன்கையிலே வாளையெடுத்துக் கொண்டு பிரகலாதனைப் பார்த்து, இவ்வாளை நீ வழிபடும் விஷ்ணு தடுக்கவல்லானோ வென்றேங்கி அவனை வெட்ட வெத்தனித்தான். உடனே விஷ்ணுமூர்த்தி ஒரு தூணிடமாக நரசிங்க ரூபத்தோடு தோன்றி அவனைக் கொண்று பிரகலாதனை காத்தருளினார் |
இரணியநாபன் | இவன் யாஞ்ஞவற்கிய முனிவரிடத்து யோகம் பெற்றவன் |
இரணியன் | இரணியகசிபன். சூரபன்மன் புத்திரருள் ஒருவன் |
இரணியாக்ஷன் | திதியிடத்திற் கசியப்பனுக்குப் புத்திரனாகப் பிறந்து பூமியைப் பாயாகச் சமத்திரத்தி லொளித்தபோது வராகமாகிய விஷ்ணுவாற் கொல்லப்பட்டவன் |
இரவிபுரம் | மலைநாட்டின் கண்ணதோரூர் |
இராகவன் | ராகவன் |
இராசமன்னார்கோவில் | காவிரியின் தெற்கேயுள்ள ஒரு வைஷ்ணவ ஸ்தலம் |
இராசமாபுரம் | ஜீவகன் இராசதானி. இஃது ஏமாங்கத தேசத்திலுள்ளது |
இராஜகுஞ்சரன் | பரராஜகுஞ்சர பாண்டியன் |
இராஜகெம்பீரபாண்டியன் | இராச சூடாமணிக்குப்பின் அரசுசெய்த பாண்டியன் |
இராஜசூடாமணி | இராசமார்தாண்டனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன் |
இராஜசேகரபாண்டியன் | இவன் கரிகாற் சோழன் காலத்தவன் |
இராஜதிராஜபாண்டியன் | வரகுணபாண்டியனுக்குப் பின் அரசு செய்தவன் |
இராஜபயங்கரன் | பரராஜகுஞ்சரனுக்குப் பின் அரசுசெய்த பாண்டியன் |
இராஜமார்த்தாண்டன் | சித்திரவிக்கிரம பாண்டியனுக்குப்பின் அரசுசெய்த பாண்டியன் |
இராஜராஜபாண்டியன் | பன்றிக்குட்டி களை மந்திரிகளாக்கிய திருவிளையாடல் கண்டவன் |
இராஜேந்திரபாண்டியன் | இரசவாதஞ் செய்த திருவிளையாடல் கண்ட பாண்டியன் |
இராதாகிருஷ்ணன் | ராதா கிருஷ்ணன் |
இராதை | ராதை காண்க |
இராமநாதர் | இராமேச்சரத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமியர் பெயர். இவ்விலிங்கம் ராமர் தாபித்தது |
இராமன் | இராமன் காண்க |
இராவணன் | ராவணன் காண்க |
இராவணீயம் | இராகங்களை சாமவேதத்திற் பொருத்திப்பாடும் முறையை அறிவிக்கும் நூல். அஃது இராவணனாற் செய்யப்பட்டது |
இரு | அதிதி |
இருகன் | விஜயன் புத்திரன், விருகன் தந்தை |
இருக்ஷன் | அசமீடன் மூன்றாம் மகன். இவன் பௌத்திரன் குரு,. புருஜன் மகன். பருமியாசுவன் தந்தை. தேவாதிதி மகன் |
இருக்ஷம் | மாளவ தேசத்தருகேயுள்ள ஒரு மலை |
இருசங்கன் | பேருசங்கன் |
இருசிகன் | ஒளவர் மகன். விசுவாமித்திரன் தங்கை. சத்தியவதி கணவன். ஜமதக்கினி தந்தை |
இருசுவரோமா | சவர்ணரோமா மகன் |
இருததாமன் | வசுதேவன் தம்பி. ஆனகன் மகன் |
இருதத்துவஜன் | பிரதர்த்தன் |
இருதன் | விஜயன் மகன் |
இருதவாக்கு | இவன் தனக்கு வேதநக்ஷத்திரத்து நாலாம் பாதத்திற் பிறந்த புத்திரன். துஷ்டனாகியநிமிந்தம் ரேவதியைப் பூமியில் வீழுமாறு சபித்தவன் |
இருதுபர்ணன் | அயுதாயுவன் மகன். சர்வகாமன் தந்தை. இவனுக்கு நளன் அசுவஹிருதயத்தை உபதேசித்து அவனிடத்தில் அக்ஷயஹிருதயத்தைத் தான் பெற்றான் |
இருநிதிதக்கிழவன் | கோவலன் தந்தை. இறந்ததாற்றாது துறவு பூண்டவன் |
இருபன் | பிரமமானச புத்திரருளொருவன். சனகசநந்தன சனற்சுஜாதசனற் குமாரரோடு பிறந்தவன். அவர்கள் ஐவரும் சிருஷ்டி செய்யவுடன்படாது மறுத்தமையால், பிரமா மீண்டும் மரீசியாதியர் ஒன்பதின்மரைப் பெற்றான். இவனை இருஷபன் என்றுஞ் சொல்வர் |
இருபுக்ஷன் | இந்திரன் |
இருமலர்க்கண்ணம்மை | திருச்சாத்தமங்கையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
இரும்பிடர்த்தலையார் | கரிகாற்சோழன் மாதுலனார். இவர் அச்சோழனுக்கு மந்திரியாவும் புலவராகவுமிருந்தவர் |
இருஷகிரி | மகத தேசத்தில் வராக பருவதத்துக் கெதிரிலுள்ள மலை |
இருஷபன் | நாபிமகன். இவனுக்குப் பரதன் முதலிய நூறுபுத்திரருளர். உபரிசரவசு வமிசத்தன். சுக்கிரிவன் சேனையில் ஒரு வாநரன். இந்திரனுக்கச் சசிதேவியிடம் பிறந்த இளையமகன். சயந்தன் தம்பி. இருபன் |
இருஷபம், இடபம் | சிவன் வாகனம். நந்திதேவர். ஒரிராசி |
இருஷிகள் | இருஷி என்பதன் பொருள் சத்தியதரிசி, இருஷிகள் பிரமவிருஷி, தேவவிருஷி, மகாவிருஷி, பரமவிருஷி, காண்டவிருஷி, சுருதவிருஷி, இராஜவிருஷி எனவெழுவகையர். அவருள்ளே பிரமவிருஷி களாவார் நிர்க்குணப்பிரமோபா சனையையே சாதித்து நிற்போர். இவர்கள் இருஷிகளுள்ளே அக்கிரபதமுடையர் வசிஷ்டர் முதலியோர் இக்கணத்தினர். தேவவிருஷிகளாவர். உலகத்துக்கு ஆன் மஞானோபதேசஞ் செய்து காக்கும் பொருட்டு இருஷிகளாக அவதரித்த தேவர்கள். நாரதன் கபிலன் முதலியோர் இக்கணத்தர். மகாவிஷிகள் புத்தி தத்துவங்கடந்து மகத்துவம் வரையுஞ்சென்றோர். வியாசகர் முதலியோர் இக்கணத்தர். பரம விருஷிகள் ஆன்ம பலத்தை நாடி உலக வின்பத்தை முற்றத்துறந்தோர். பேலர் முதலியோர் இக்கணத்தினர். காண்டவிருஷிகள் வேதத்தில் ஒவ்வொருகாண்டத்தில் வல்லுநராய்ச் சாமானிய சனங்களுக்கதனைப் போதிப்போர். ஜைமினி முதலி யோர் இக்கணத்தினர். சுருதவிருஷிகள் வேதங்களைச் சிரவணஞ்செய்து ஒவ் வொரு சாஸ்திரத்தை எடுத்துப் பிரசுரஞ் செய்தவர். வைத்திய சாஸ்திரத்தை எடுத்துப் பிரசுரஞ்செய்தவர். வைத்திய சாஸ்திரஞ்செய்த சுசுருதர் போல்பவர். இராஜவிருஷிகள் இராச்சிய முறைகாட்டி உலகியல் நிலைநாட்ட அவதரிப்போர். மரந்தாதா ஜனகன் முதலியோர் இக்கணத்தினர். எக்கருவி கொண்டும் எத்தனைச்சிறந்த மதியூகிகளுக்கும் காண்டற்கும் உணர்தற்கும் அளவிடற்கும் அரியனவாய் மாயாசொரூமாய்த் தூலாநிலை முதற் சூக்குமநிலைவரையும் விரிந்து கிடக்கும். சராசரங்களினதும் அண்டகோடிகளினதும் தத்துவ சொரூபங்களை யெல்லாமுள்ளவாறு கண்டவர்களும் அவை களையுலகுக்கு வெளியிட்டவர்களும் இம்மகா விருஷிகளேயாவர். இருஷிகள் வாக்கு வெளியிட்டவர்களும் இம்மகா விருஷிகளேயாவர். இருஷிகள் வாக்கு ஆரிஷமெனப்படும். யாவருரை பொய்க்கினுமாரிஷம் பொய்த்தலில்லை |
இருஷிகுலியை | இருக்ஷ பர்வத்தினின்று பெருமொரு நதி |
இருஷிகை, இருஷீகை | மகேந்திர பருவத்திலிருந்து யாய்வதொரு நதி |
இருஷியசிருங்கன் | விபண்டபவிருஷிமனார். கலைக்கோட்டு, மகாவிருஷி என்று தமிழில் வழங்பப்படுவர். அங்கதேசத்தரசன் தனது நாட்டில் நெடுங்காலம் மழையில்லாமையால் வருந்தும் போது இவ்விருஷி கால் பட்டால் தனது நாட்டில் மழையுண்டாமெனச்சிலர் சொல்லக்கேட்டுச் சில பெண்களை அவரிடம் அனுப்ப, அவர் இதற்கு முன்னொரு காலத்தும் பெண்களை கண்டிலாதவராவராதலால் இவர்கள் இரண்டு கொம்புடையவர்களென அதிசயித்துப் பார்த்தார். அப்பெண்கள் அவரையுபசரித்து எங்களாச்சிரமத்துக்கு வரவேண்டுமென்று பிரார்த்திக்க, எங்குளது உமதாச் சிரமம் என்றவர் கேட்ப, இவர்கள் இதோ விதோவென வஞ்சித்து அங்கநாடு கொண்டுபோயினர். உடனே நாடு மலிய மழை பொழிந்தது. அவ்வரசன் தனது புத்திரியை மணம்புரியும்படி வேண்ட அவருமிசைந்து மணம் புரிந்தார் |
இருஷியமூகம் | சுக்கிரீவன் வாலிக்கஞ்சி மறைந்திருந்த மலை. இது கிஷ்கிந்தைக்கு சமீபத்திலுள்ளது. வாலி ஒரு சாப காரணமாக அம்மலைக்குப் போவதில்லை |
இறையனார் | அகப்பொருள் செய்த கடைச்சங்கப் புலவர் |
இறையார்வளையம்மை | குரங்கனின் மாடத்திலே கோயில் கொண்டிருக்குந் தேவியர் பெயர் |
இலக்ஷூமணன், இலக்குமணன் | லக்ஷூமணன் காண்க |
இலக்ஷூமி, இலக்குமி | லக்ஷூமி காண்க |
இலங்கை | லங்காபுரி காண்க |
இலஞ்சிமன்றம் | காவிரிப்பூம்பட்டினத்து ஐம்மன்றங்களுள் ஒன்று. எந்நோயையும் நீக்குமியல்புடையது |
இலவணன் | லவணன் காண்க |
இலாவந்தன் | அருச்சுனனுக்கு உலூபியிடம் பிறந்த புத்திரன் |
இலிங்கபுராணம் | அக்கினி கற்பத்திறுதியிலே ஜீவர்கள் அடையும் சீலம், ஜசுவரியம், இன்பம், மோக்ஷம் என்பவகைளையும், அதி இரகசிய ஞானமாகிய சிவலிங்கங்களையும் விரித்துணர்துவது. பதினோராயிரங் கிரந்தமுடையது |
இல்லவன் | விப்பிரசித்திக்குச் சிங்கிகையிடம் பிறந்த தானவன். வாதாபி தம்பி. அகஸ்தியரால் பஸ்மமாக்கப்பட்டவன். கந்தபுராணம் இவ்வில்லவனை அசமுகியிடத்துத் துருவாசருக்குப் பிறந்த புத்திரரெனக் கூறும். இவன் தன் தம்பி வாதாவியை ஆட்டுருக்கொள்ளும்படி செய்து முனிவர்களைக் காணுந்தோறும் அவனைக்கறிசெய்து அவர்க்கமுதூட்டி உண்ட பின் அவனைக் கூவி அழைக்க அவன் அம்முனிவரை உடல்கிழித்துக் கொண்டு வெளியே வரும்படி செய்பவன் |
இளங்குமணன் | குமணன் தம்பி |
இளங்கொம்பை | திருப்பறியலூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். திருக்கருப்பறியலூரிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
இளங்கோசர் | கொங்கு மண்டலத்தரசர் |
இளங்கோவடினள் | துறவுபூண்டிருந்த ஒரு சேர ராஜா. சிலப்பதிகார நூலாசிரியர் |
இளஞ்செழியன் | கொற்கைநகரத்திருந்த வெற்றிவேற் செழியன் |
இளமூலையம்மை | திருவொத்தூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமியர் பெயர் |
இளாலிருதவருஷம் | சுமேருவை சூழ்ந்திருக்கும் வருஷம். இது நவ வருஷங்களுள் ஒன்று. இது நன்னீர்ச்சமுத்திரஞ் சூழ்ந்தது |
இளாவிளை, இலாவிலை | திரண விந்துவுக்கு அலம்யையிடம் பிறந்த புத்திரி. விச்சிரவசன் பாரி. குபேரன் தாய் |
இளிபிளி | தசரதன் மகன் |
இளை | தக்கன் மகள். கசியப்பன் பாரி. வைவசுவதமநு புத்திரி. புதன் பாரி, புரூரவன் தாய்: இவள் வசிட்டருடைய பிரயத்தனத்தாணுலும், விஷ்ணு அணுகிரகத்தினாலும் புருஷரூபம் பெற்றுச் சுத்தியுமனனாயினாள். வசுதேவன் பாரி |
இளையான் குடிமாறநாயனார் | இளையான்குடியென்னுமூரிலே வேளாளர் குலத்துதித்த இச்சிவபக்தர் வறுமையாலுணவின்றி வருந்தியிருந்த ஒரு மழைக்காரிரவிலே, சிவன் ஓரடியவரைப்போல் அவர் வீட்டிற்சென்று அன்னம்வேண்ட, அவர் அடியவரையுபசரித்து இருக்கச் செய்து விட்டுத் தமது வயலிற்சென்று வித்திட்டிருந்த நெல்லை வாரிக்கொண்டு வந்து மனைவியாரிடங் கொடுத்துச் சோறாக்கி அடியவர் கன்னமிடுவித்த பெருந்தகமை யைக்கண்ட அவ்வடியவர் தமது மெய்வடிவைக் காட்டி நாயனார் வறுமை நோயையும் நீக்கியருளிப் போயினார் |
இழிகட்பெருங்கண்ணனார் | இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர் |