ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ஆகமங்கள் | ஈசுரனாலருளிச் செய்யப்பட்ட தந்திரசாஸ்திரங்கள். அவை சைவ வைஷ்ணவ ஆகமங்களென இருவகைப்படும். வைஷ்ணவாகமங்கள் பாஞ்சாரத்திரம், வைகானசம் என இரண்டு. சோமகசுரன் வேதங்களைச் சமுத்திர நடுவிற்கொண்டு போய் மறைத்தபோது, விஷ்ணு தன்னுடைய பூசார்ததமாகப் பூசாவிதையைச் சாண்டில்லியவிரஷிக்கு ஐந்து ராத்திரியில் உபதேசித்தமையால் பாஞ்சராத்திரமெனப் பெயர்பெற்றது. வைகானசம் துறவற முதலியவொழுக்கங்களும் யோக ஞானசித்திகளுங் கூறுவது |
ஆகா | ஹாஹாகாண்க |
ஆகாசகங்கை | தேவருலகத்திலுள்ள கங்கை |
ஆகாசம் | சிவன் அஷ்டமூர்த்தங்களு யொன்று. அஷ்டமூர்த்திகாண்க |
ஆகாசவாணி | அசரீரி, கர்மசாக்ஷியாக அந்தர லோகத்திலே நிற்கின்ற ஒரு சக்தி. ஒலிவடிவாயிருந்த ஆபத்துவேளையிலே சான்றுரை பகர்வது. திருவள்ளுவரது நூலையரங்கேற்றிய காலத்தம் சீதையினது கற்பை இராமர் ஐயுற்ற போதும் பிறவமையங்களிலும் இவ்வசரீரி வாக்குயாவராலுங் கேட்கப்பட்டது |
ஆகுகன் | தேவகன் தந்தை |
ஆகுகி | தேவகன் மாதுலி |
ஆகுவானன் | விநாயகக் கடவுள். ஓரசுரன் இவரோடு பொருதாற்றாதோடி ஆகு ரூபங்கொண்டு மறைய அவ்வாகுவைப்பற்றித் தமக்கு என்றும் வாகனமாகக் கொண்டனர். ஆகு பெருச்சாளி |
ஆகூதி | சர்வதேஜசன் பாரி. சட்சுர் மனுதாய். சுவயாம்புவமனுவுக்குச் சதரூபையிடத்திற் பிறந்த புத்திரி. இவள் தமக்கையர் பிரசூதி, தேவகூதி |
ஆக்கினீத்தரன் | பிரிய விரதனுக்குச் சுகன்னியகையிடத்திற் பிறந்த பதினெருவர் புத்திரருள்ளே மூத்தவன். இவன் பாரி பூர்வசித்தை. பிரியவிரதன் இவனுக்குச் சம்புத்தீவைக் கொடுத்தான். அதை இவன் தனது புத்திரரான நாபி, கிம்புருஷன், அரி, இலரவிருதன், ரம்மியன், இரணவந்தன், குரு, பத்திராகவன், கேது மாலன் என ஒன்பதின்மருக்கும் பிரித்துக் கொடுத்தான் பிரித்தவகை ~ நாபிக்கு இமயத்தின்றெற்கினுள்ள பரதகண்டமும், கிம்புருஷனுக்குப் பரதகண்டத்துக்கு உத்தரத்திலுள்ள ஏம கூடபர்வதத்தின் றெற்கிலுள்ள கண்டமும், அரிக்ககு ஏமகூட்டத்தின் வடக்கிலுள்ள நிஷத பர்வதத்துக்குத் தெற்கிலுள்ள நைஷதமும், இலாவிருதனுக்கு நிஷத பர்வதத்துக்கு வடக்கே மேருவை நடுவே கொண்ட இலாவிருதகண்டமும், ரம்மியனுக்கு, இலாவிருதத்துக்கும் நீலா சலத்துக்கும் நடுவேயுள்ள கண்டமும் இரணவந்தனுக்கு ரம்மியகண்டத்துக்கு வடக்கே சுவேத பர்வதத்க்கு இப்பாலுள்ள கண்டமும், குருவுக்குச் சுவேதபர்வதத்துக்கு வடக்கே சிருங்கவந்தத்தாலே சூழப்பட்ட கண்டமும், பத்திராசுவனுக்கு மேருவுக்கு கீழ்த்திசையிலுள்ள கண்டமும், கேதுமாலனுக்கு மேருவுக்கு மேற்கிலுள்ள கண்டமும் கொடுக்கப்பட்டன. இவை நவ கண்டமெனப்படும் |
ஆக்கினேயபுராணம் | உபபுராணங்களுள் ஒன்று. இது பிருகுப்புரோக்தம். இஃது எக்கியாதி அக்கினி காரியங்கள் கூறும். இது பதினையாயிரம் கிரந்தமுடையது. இப்பெயர் அக்கினிபுராணத்துக்குமாம் |
ஆங்கிரசன் | பிரகஸ்பதி |
ஆசவபாண்டேசுவரன் | காசியிலிருக்கும் ஓர் அற்பதேவதை. இத்தேவதையை உபாசித்து வந்த சான்றானுக்கும் அவன் மனைவிக்கும் அது கட்குடத்திலே தோன்றி அநுக்கிரகஞ் செய்ததென்பது ஓரைதிகம் |
ஆசாரகாண்டம் | இது விஞ்ஞானேசுவரியம் என்னும் தருமசாஸ்திரத்தில் ஓருகாண்டம். இதில் நான்கு வருணத்தாருக்கு முரிய தருமங்களும் பிற ஆசாரங்களும் சொல்லப் பட்டிருக்கின்றன |
ஆசிரிதன் | திஷ்யந்தன் பௌத்திரன். இவனுக்கு பாண்டியன், சோழன், கேரளன் என மூவர் புத்திரர். இவர்மூவரும் தனித்தனி வமிசகர்த்தராய்ப் பின்னர் பிரகாசிக்குமாறு தத்தம் பெயரால் ஜனபதங்களை யுண்டாக்கினர் |
ஆசிரியர்நல்லந்துவனார் | இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர். கலித் தொகை செய்தவர் |
ஆசுவலாயனன் | ஒரு மகாவிருஷி. இருக்குவேதலிகித கருமங்களைக் குறித்துச் சூத்திரஞ் செய்தவர். அது ஆசுவலாயன சூத்திரமெனப்படும் |
ஆசௌசம் | ஜனனாசௌசம், மிருதாசௌமம் என இருவகைப்படும். அவற்றுள் ஜனனாசௌசம் விருத்தி ஆசௌசமெனப்படும், பிராமணர்களிலே பித்திராசிதபிண்டர் இறந்தால் ஆசௌசதினம் பத்தாம், க்ஷத்திரியாருக்கு பன்னிரண்டு, வைசிகருக்குப் பதினைந்து, சூத்திரருக்கு முப்பது. குடுமிவைக்க முன்னிறக்கும் சிசுக்களுக்கு ஒருதினமும் வைத்த பின்னிறந்தால் மூன்று தினமுமாம். சனனாசௌசமும் மேற்சொன்ன முறையேயாம். இன்னும் பிறவுள |
ஆச்சிரமங்கள் | வருணாச்சிரமங்கள் |
ஆஞ்சனேயன் | அநுமான் |
ஆடகமாடம் | இரவிபுரம். திருவநந்தபுரம் |
ஆடகேசுரர் | பாதாலத்தைக் காக்கின்ற கோடியுருத்திரருக்குத் தலைவர் |
ஆணிமாண்டவியன் | மாண்டவியன் |
ஆதிதேயர் | அதிதிவமிசத்தர். அவர்கள் தேவர்கள் |
ஆதித்ததேவர் | திருவிசைப்பாப்பாடிய கண்டராதித்தர் |
ஆதித்தன் | சேரநாட்டிலிருந்த ஓரரசன். இவன் சிதப்பரத்துக் கனகசபை யின் முகட்டைக்கொங்கிற் செம்பென்னினால் வேய்ந்தான். சூரியன் |
ஆதித்தியன் | சூரியன் |
ஆதித்தியர் | அதிதியிடத்திலே கசியபப் பிரஜாயதிக்கு பிறந்த புத்திரர் பன்னிருவர் தாதா, மித்திரன், அரியமன், இந்திரன், வருணன், அமிசுமந்தன், பகன், விசுவந்தன், பூஷன், சவிதா, துவஷ்டா, விஷ்ணு என்னும் இவருள்ளே விஷ்ணு, இந்திரன் என இருவரும் வைவசுவதமனுவந்தரத்தில் ஆதித்தியராகவிருந்து சட்சர்மனுவந் தரத்திலே துஷிதராயினார். கற்பாரம்பத்திலே பிரமாவினாற் சிருஷ்டிக்கப்பட்ட ஜயரென்றும் இவரைச் சொல்வார்கள். இப்பனினிருவரும் சிருஷ்டியில் இச்சையில்லாதவராய்ப் பிரமாவினது ஆஞ்ஞைக் குட்படாராயினார். அதனால் மநுவந்தரங்கடோறும் பிறப்பிக்குமாறு சபிக்கப்பட்டார்கள் ஆதித்தியர் அதிதி புத்திரரெனப் பொருள்படும். இருக்கு வேதத்திலே அதிதி எண்மர் புத்திரரையீன்றா ளென்றும் அவருள்ளே யொருவனைப் புறத்தேதள்ளி விட்டு மற்றை யெழுவரையுமுடன் கொண்டு தேவர்கள் பாற் சென்றானென்றுங் கூறப்பட்டிருத்தலை நோக்குமிடத்து, புறத்தே தள்ளப் பட்டவனாகிய விசுவதன் என்னும் புத்திரனே இப்பூலோகத்துக்கு ஒளி தரு பவனாயினான். எனக்கொள்ளல் வேண்டும் மற்றைய யெழுவரும் மேன்மேலுள்ள வுலகங்களுக்குக் கதிரவர்களாயினார்கள். ஆதித்தியர் பன்னிருவர் பெயரும் வேதத்திலுள்ளனவேயாம். ஆயினும் ஆதித்தியர் பன்னிருவரும் வேறு. உலகத்துக்குப் பிரத்தியக்ஷமாகவுள்ள சூரியனும் வேறு. ஆதித்தியர்சோதிரூபர். சூரியன் அக்கினி ரூபன் |
ஆதித்தியஹிருதயம் | ஒரு தோத்திரம். இதனை ஓதிவந்தால் சூரியாநுக்கிரக முண்டாம். இது ராவணனைக் கொல்லச் சென்ற ராமருக்கு அகஸ்தியரால் உபதேசிக்கப் பட்டது |
ஆதிநாதன் | ஒரு சைன குரு |
ஆதிஷேன் | கசியபப் பிரசாபதிக்குக் கத்துருவையிடத்திற் பிறந்த மூத்த புத்திரன். இவன் தாய் கத்துருவை அவள் சக்காளத்தி விநதைக்கு செய்த அக்கிரமத்தைச் சகிக்காதவனாய்த் திருக்கோகர்ணம், கந்தமாதனம், முதலிய திவ்விய க்ஷேத்திரங்களிற் சென்று மகாதவங்களைச் செய்திருந்தான். பிரமா அவன் தவத்தை மெச்சி பூபாரத்தைத் தாங்கும்பலத்தை அவனுக்கு அநுகிரகித்தார். பின்னரும் ஈசுவரப் பிரசாதத்தால் விஷ்ணுவுக்கு ஆயிரம் பணா முடியுடைய சர்ப்பசயனமும் சர்பங்களுக்கு ராசாவுமாயினான். இவன் பிருகுவினால் சபிக்கப்பட்டுப் பலராமாவதாரம் பெற்றான் |
ஆதூர்த்தரஜன் | கசன் மூன்றாம் புத்திரன். தர்மராணியத்தை யுண்டாக்கியவன். இவன் மகன் ராஜரிஷியாகியகயன் |
ஆத்திரேயன் | சந்திரன் |
ஆத்திரையன் | ஒரு தமிழ்ப்பேர் ஆசிரியன் |
ஆநந்தகிரி | சாலிவாகனசகம் எண்ணூற்றின் மேலிருந்த ஒரு சமஸ்கிருத வித்துவான். இவரைச் சங்கரதிக்கு விஜயம் என்னும் நூல்செய்தவர் என்றொரு சாரரும், சங்கராசாரியாருக்குச் சீடராக ஆவர்காலத்திருந்தவரேயன்றி சங்கரதிக்கு விசயஞ் செய்தவரல்ல ரென்றும் மற்றொருசாராருங் கூறுவர் |
ஆநந்ததீர்த்தர் | மத்துவாவாரியர்கள் |
ஆநந்தநாயகி | திருநெல்வாயிலிற் கோ யில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
ஆந்தரதேசம் | கோதாவிரி கிருஷணா நதிகளுக்கு மத்தியிலுள்ள தேசம். இது தெலுங்க தேசசமெனப்படும். திரிலிங்கதேசமென்பது வடமொழி வழக்கு |
ஆந்தரபிருத்தியர் | சூத்திரகன் வமிசத்தரான மகததேசவரசர். இவர்கள் சாலிவாகனசகரரம்ப முதல் 400 வருஷம் ராச்சியம் புரிந்தோர் |
ஆந்தரம் | ஆந்தரதேச பாஷை. இதுவே தெலுங்கு என்னும், தெலிங்கு என்றும் வழங்குவது. இது கண்ணுவ மகாவிருஷியால் பிரவிருத்தி செய்யப்பட்ட தென்பர் |
ஆந்தரர் | ஆந்தரதேசத்தார். பஞ்சதிராவிடருள் ஒருவகையர் |
ஆனகதுந்துபி | வசுதேவன் |
ஆனகன் | வாசுதேவன் தம்பி |
ஆனகொந்தி | இருஷியமூகபர்வத சமீபத்திலுள்ள ஒரு நகர் |
ஆனர்த்தன் | சரியாதிமகன். இவன் மகன் ரைவதன் |
ஆனர்த்தம் | இது யவன சமுத்திரத்திலே துவாரகைக்குச் சமீபத்திலுள்ள நாடு. இதிற் சரியாதிமகன் ஆனர்த்தன் குசஸ்தலியென்னும் நகரத்தை நிருமித்தான். அதனால் அதனையுள்ளிட்ட நாடெல்லாம் அவன் பெயர்பெற்றது |
ஆனாயநாயனார் | மழநாட்டிலே மங்கல மென்னுமூரிலே பிறந்து, பசுக்களை மேய்த்து அவைகளைக்காத்தலையே தமக்கு வந்த தொழிலாகக் கொண்டு, வேய்ங்குழலிலே சிவஸ்தோத்திரங்களைப் பொருத்திக்கல்லு முருகப்பாடிச் சிவனை அக்கீதத்தோடு கூடிய பத்திவலையிலே சிக்குவித்து அருள் பெற்றவர் |
ஆனிகன் | வசுதேவன் தம்பி. இவன் இரண்டாம் மைந்தனும் ஆனீகன் எனப் பெயர் பெறுவன் |
ஆபத்சகாயர் | திருப்பழனத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
ஆபத்சகாயேசுவரர் | குரங்காடு துறையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
ஆபத்தம்பன், ஆபஸ்தமபன் | ஒரு மகாவிருஷி யசுர்வேத விகித சர்மங் களைக் குறித்துச் சூத்திரங்கள் செய்தவர். அஃது ஆபஸ்தம் பசூத்திர மெனப்படும் |
ஆபன் | வசுக்களுளொருவன் |
ஆபீரம் | சிந்துநதிக்கு மேற்கிலே ஆரியாவர்த்தத்தோடு சேர்ந்த ஒருதேசம் |
ஆப்பனூர்க்காரணர் | திரு ஆப்பனூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
ஆமூர் | தொண்டைநாட்டின் கண்ண தோரூர் |
ஆம்பிகேயன் | திருதராஷ்டிரன் |
ஆம்பிரவனேசர் | திருமாந்துறையிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமியர் பெயர் |
ஆயதி | மேருபுத்திரி. தாதா மனைவி. மிருகண்டன் தாய் |
ஆயாதி | உத்தானபர்கி |
ஆயு | புரூரவன் மகன். இவன் நகுஷன், க்ஷத்திரவிருத்தன். ரஜி, ரம்பன், அநேநசு என ஐவர் புத்திரரைப் பெற்றவன் |
ஆயுஷ்மந்தன் | பிரகலாதன் புத்திர ருளொருவன் |
ஆயோதனபபிரவீணன் | இவன் துவிசார குலோத்துங்கனுக்குப் பின் அரசுசெய்த பாண்டியன். இவன்காலம் துவாபரயுகத்து அந்தியகாலம் |
ஆய் | இவன் அரசரால் வேளென்னும் பட்டஞ்சூட்டப்பட்ட ஒரு வேளாளன். பொதிகைமலை சார்ந்த ஆய்நாடுடையவன். பெருங்கொடையாளன். இவன் குட்டுவன் கீரனார் முதலியோராற் பாடப்பட்டவன். பயன்கருதிக் கொடுக்கு மீகையாளனல்லனென்பது, இம்மை செய்தது மறுமைக் காமெனு ~மறவிலை வாணிகனா அயல்லன் என்னும் புறநானூற்றுச் செய்யுட் கூற்றால் விளங்கும். தனக்குப்பாம்பு கொடுத்த நீலாம்பரத்தை ஆலின்கீழிருந்த இறைவனுக்குக் கொடுத்தவனுமிவனே |
ஆரஞ்சோதி | அருந்ததி |
ஆராத்தியர் | பிராமணருள்ளே லிங்காதாரிகள். இவர்கள் வீரபத்திரோபாசர்கள் |
ஆரியசித்தாந்தம் | இஃது எழுநூறு வருஷங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட சோதிட நூல் |
ஆரியப்பட்டன், ஆரியபடன் | சாலிவாகன சகாப்தம் இருநூற்றின் மேலிருந்த ஒரு மகா சோதிஷன். இவர் செய்த சோதிட சித்தாந்தத்தில் பூமி கோளவடிவி னதென்றும் பூமி தன் நாராசத்திலே தினந்தோறும் சுழன்று வருகின்றதென்றுங் கூறப்பட்டிருக்கிறது |
ஆரியர் | வேதவிதிகளைக் கைக்கொண் டொழுகுபவர்களாய்ச் சதாசார சீலர்களாயுள்ளவர்கள். சரஸ்வதி, திருஷத்வதி நதிகளுக்கு மத்திய தேசத்தி லிருந்து பின்னர் ஆரியாவர்த்தமெங்கும் வியாபித்தவர்கள் |
ஆரியாங்கனை | ஓர் இயக்கி |
ஆரியாவர்த்தம் | இமயத்திற்கும் விந்தியத்திற்கும் மத்தியிலுள்ள தேசம். ஆரியர்கள் தேசம். பூர்வம் பரதகண்ட ராஜாக்கள் யாவரும் இங்கேயே வசித்தார்கள் |
ஆரியை | பார்வதி |
ஆருகதன் | ஞானவர்ணியம் முதலிய பதினெண்குணத்தையும் அரசிகம் முதலிய ஆறு குணத்தையும் விடுத்து முன்னைக்கன்மம் புசித்துத் தொலைந்த விடமே வீட்டின்பமென்பவன் |
ஆருணி | அயோதன் |
ஆறுமுகநாவலர் | யாழ்ப்பாணத்திலே நல்லூரிலே, வேளாளர் குலத்திலே, சாரலிவாகனசகனம் ஆயிரத்தெழுநூற்று நாற்பத்தைந்தாம் வருஷத்திலே, கந்தப்பிள்ளை யென்பவருக்குப் புத்திரராக அவதரித்தவர். இவர், தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என்னும் முப்பாஷைகளையுங்கற்று, அப்பாஷைகளிலே வியவகாரசத்திவந்த பின்னர், தமிழையே முற்றக்கற்கும் பேரவா வுடையராயினார். அதனால், இவர் அக்காலத்திலே பிரபலவித்துவான் களாய்விளங்கிய சரவணமுத்துப்புலவர் முதலியோரிடத்துச்சில இலக்கண விலக்கியங்களைப் பாடங்கேட்டுத், தமக்குப்பாடஞ் சொன்ன ஆசிரியர்களும் நாணத்தக்க நுண்ணியபுலமையும், கூர்,ந்த விவேகமும், வாக்குவன்மையும், ஒப்பற்ற ஞாபகசத்தியும், ஆசாரசீலங்களும், நற்குணநற்செய்கைகளும், சிவபக்தியும், சமயாபிமானமும், சபையங்சா ஆண்மையும் பெரிதுமுடையராய் விளங்கினார். அக்காலத்திலே, இவர் ஆங்கிலக்கல்வியினாலே தமிழ்க் கல்வி அபிவிருத்தியடையாது குன்றிப் போவதை நோக்கிகப்பரிதபித்து வண்ணார் பண்ணையிலே ஒருதருமத் தமிழ்ப் பாடசாலை தாமும் இடையிடையே உபாத்தியாயராகவிருந்து கல்வி கற்பிப்பாராயினர். அதுகண்டு, நாற்றிசை யினின்றும் சைவப்பிள்ளைகள் அங்கே சென்று தமிழ்கற்கத் தொடங்கினார்கள். அதனால் அப்பாடசாலை ஓங்கி வளர்வதாயிற்று. அதுகாறும் பனையேட்டி லெழுதி வழுக்களோடு கற்றும் கற்பித்தும்வந்த நிகண்டு முதலிய நூல்களை வழுக்களைந்து சுத்த பாடஞ் செய்து காகித புஸ்தகமாக அச்சிடுவித்துத், தம்பாடசாலை மாணாக்கருக்கும் மற்றோர்க்கும் உபயோகமாகும் படி செய்தனர். காகிதபுஸ்தகங்கள் வரவே, தமிழ்க் கல்வியபிமானம் வரவர ஓங்குவதாயிற்று. இப்புஸ்தகங் களினாலே அவருடைய பெயர் தமிழ்நாடெங்கும் வியாபித்து விளங்கிற்று பாடசாலைகளுக்கு உபயோகமாகும்படி வசனநடையிலே பாலபாடங்களெழுதி அச்சிடுவித்தார். எவருக்கும் உபயோகமாகும்படி பெரியபுராண முதலிய நூல்களை வசனமாக்கினார். கந்தபுராணம், வில்லிபுத்தூரர்பாரதம், திருக்குறள் பரிமேலழகருரை, திருக்கோவையாருரை முதலிய அரும்பெரும் நூல்களை யெல்லாம் வழுக்களைந்து சுத்தபாடமாக்கி அச்சிட்டு லகத்துக்கு பகரித்தார். அவற்றுள், திருக்குறள் பரிமேலழகருரையும், திருக்கோவையாரையும், இராமநாதபுரத்து மகாராசாவினது மந்திரியாகிய பொன்னுச்சாமித்தேவர் இவரை தமது நாட்டிற் சந்தித்த இவரை தமது நாட்டிற் சந்தித்த பொழுது, இந்நூல்களை ஆராய்ச்சிசெய்து சுத்தபாடமாக்கி அச்சிடவல்லார் தங்களையன்றி,ப் பிறறொருவரையுங் காண்கிலோம் என்று கூறி, அதற்கு வேண்டும் பொருள் கொடுத்து இவரைக் கொண்டு திருத்தி அச்சிடுவிக்கப்பட்டன. திருக்குறள், திருக்கோவையார், நன்னூல் விருத்தியுரை, தொல்காப்பியச் சொல்லதிகாரம், சேனாவரையருரை முதலிய நூல்கள் இவராற்றிருததி, அச்சிடப்படாதிருக்குமாயின், இந்நாளிலும் அவற்றை நாம் ஓலைப் புத்தகங்களிலேயே படித்துச் சங்கடப்பட்டு மலையவேண்டியவர்களாவோம். இந்நூல்களைச் சுத்தபாடமாக்கித் தரும்பொருட்டு இவர் அவதாரஞ் செய்தாரென்றே நாம் கொள்ளுதல் வேண்டும். இவர் அவதாரஞ் செய்திலரேல், அவற்றை நாம் இக்காலத்திற் காண்பது மில்லையாம். இவர், யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்று, சிதம்பரத்திலும் ஒரு வித்தியாசாலை ஸ்தாபித்து, அதுவுந்தளராமல் நடைபெறும் பொருட்டு அதற்கும் முதனிதியமைத்து வைத்தார். அவ்வித்தியாசாலையைப் போலவே, தளராமல் நடைபெற்று வருகின்றது. இவர் தமிழபிவிருத்தியின் பொருட்டும், சைவசமயாபி விருத்தியின் பொருட்டும் தம்மாயுட்கால முழுவதையும் போக்கியவர். இவர் தாமீட்டிய செல்வத்தையெல்லாம் ஒருசிறிதும் புறத்தே போகாவண்ணம் இவ்விரண்டிற்குமே ஆக்கிவைத்தார். இவ்விரண்டையும் பரிபாலிக்கும் பொருட்டே தஞ்சுற்றத்தாருடைய தொடர்பை முற்றத்துறந்தார். ஏனைய கல்விமான்களைப் போலச் சைவசீலங்களைப் போச்சளவிற் காட்டாமல், தம்மொழுக்கத் தாலும் எடுத்து நாட்டினவர். இறக்கும்போது இவருக்கு வயசு 57. இவர் எவ்விஷயங்களையும் ஐயந்திரிபற வெடுத்து மாணவர்க்குப் போதிப்பதிலும், சமயவிஷயமே யாயினும் பொதுவிஷயமேயாயினும் ஒன்றை யெடுத்துத் தீரவிசாரித்துத் தர்க்க முறையாகப் பிரமாணத்தோடு எப்பெருஞ் சபையிலும் எத்துணைப் பெருமாற்ற லுடையோரும் மற்றெத்திறத்தினரும் அங்கீகரிக்கும் வண்ணம் நாட்டிப் பிரசங்கிக்கும் சாதுரியத்திலும், கேட்போருள்ளத்தைப் புறஞ் செல்ல விடாது தம்மாட்டுக்கவரும் வாக்கு வன்னையிலும், கடன்மடைதிறந்தா லொப்பச் சொற்பஞ்சமின்றி வாக்குமழை பொழியும் அற்புத ஆற்றலிலும், இவர்க்கிணையாவா ரொருவரை நாம் இன்னுங் காண்கிலேம் |
ஆலங்குடிவங்கனார் | இவர் கடைச்சங்கப் புலவர்களுளொருவர் |
ஆலந்தரித்தஈசுவரர் | திருபுன்னமங்கையிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
ஆலவாய் | மதுரையிலே சோமசுந்தரக் கடவுள் எழுந்தருளியிருக்கும் ஆலயம் |
ஆலாலசுந்தரர் | ஆதி காலத்திலே சிவன் தமது திருவுருவத்தை கண்ணாடி யிலே பார்த்தருளலும் அத்திருப்பிரதிவிம்பம் அதி சுந்தரவடிவு கொண்டொரு மூர்த்தியாயிற்று அம்மூர்த்தியே இவர். இவர் பின்னர் ஒரு சாபத்தாற் சுந்தர மூர்த்திநாயனாராக அவதாரஞ் செய்தவர் |
ஆளவந்தார் | இவர் வீரைமா நகரத்திலே விளங்கிய புலவர். ஞானவாசிட்டத்தைத் தமிழிலே ஈராயிரம் விருத்தங்களாற் பாடிய புலவர் |
ஆளுடையநாயகியம்மை | திருப்பரங் கன்றத்திலே கோயில் கொண்டிருங்குஞ் தேவியார் பெயர் |
ஆவுடையநாயகர் | திருமுருகன் பூண்டியிலே கோயில் கொண்டிருக்குஞ் தேவியார் பெயர் |